உணவும், உடையும் ஒன்றானால் எப்படி இருக்கும் என்று பெரும்பாலும் யாரும் சிந்தித்ததில்லை. ஆனால் இவர்களின் சிந்தனைத் திறன் சற்று வித்தியாசமாகவே உள்ளது எனலாம். அண்மையில் பேர்லின் அருங்காட்சியகத்தில் ஒரு புதுமையான உணவுக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. இக்கண்காட்சி கடந்த சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. அதில் பேஷன் உணவுப் பொருட்களின் மொடல்கள் வைக்கப்பட்டுள்ளன. உணவுப் பொருட்களால் முற்றிலும் செய்யப்பட்ட ஆடைகளை பெண்கள் அணிந்துள்ளனர். இந்த ஆடைகள் கடற்பாசி, ஜெல்லி மீன்கள் போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது.
உண்மையான காடை முட்டைகள் மற்றும் குடல்சுற்றுக்கொழுப்பு கழுத்தணிகள் போன்றவையும் ஆடைகளில் காணப்படுகின்றன. உணவுளை ஆடைகளாக அலங்கரித்து அணிவது ஒரு புதுமையான விடயமாகும். இக்கண்காட்சி 2012 ஜனவரி 29 வரை பார்வையில் இருக்கும். |
0 comments:
Post a Comment