இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Thursday, February 21, 2013

படிப்பறிவு இல்லை.. கைகொடுத்தது பால்பண்ணை: ரூ.1 கோடி சம்பாதிக்கும் கிராமத்து பெண்

வதோதரா: கடந்த 12 ஆண்டுக்கு முன்னர்.. அந்த பெண் சாதாரண கிராமத்துவாசி. இப்போது மிகப்பெரிய கம்பெனியின் தலைமை நிர்வாகி வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக சம்பாதிக்கிறார். நாட்டை திரும்பி பார்க்க வைத்துள்ள அந்த கிராமத்து பெண் துளியும் படிப்பறிவு இல்லாதவர். இப்போது 40 பேருக்கு வேலை கொடுத்து சம்பளமும் வழங்கி வருகிறார்.
நாட்டில் வெண்மை புரட்சிக்கு வித்திட்ட மாநிலம் குஜராத். இங்குள்ள சபர்கந்தா மாவட்டம் பென்தர்புரா கிராமத்தை சேர்ந்தவர் ரமிலாபென்(43). இவரது கணவர் கோவிந்த்பாய். எழுத படிக்க தெரியாது. விவசாய வேலையும் சரிப்பட்டு வரவில்லை. சொந்தமாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ரமிலா மனதில் தொடர்ந்து உறுத்தி கொண்டிருந்தது. குஜராத் மாநிலம் பால் உற்பத்தியில் தன்னிகரற்று திகழ்கிறது. நாட்டில் வெண்மை புரட்சிக்கு காரணமாக இருந்த பால் உற்பத்தி இயக்கம், அவருக்கு நம்பிக்கையை கொடுத்தது. 

மாடுகள் வளர்த்து நாமும் பால் உற்பத்தி செய்தால் என்ன என்று நினைத்தார். அந்த நினைப்பு வந்தவுடன் செயலில் இறங்கிவிட்டார். கடந்த 2000ம் ஆண்டு கிராம அளவில் இயங்கும் பென்தர்புரா பால் சங்கத்தில் பால் உற்பத்தியாளராக பதிவு செய்து கொண்டார். வங்கி மூலம் கஷ்டப்பட்டு கடன் வாங்கினார். அந்த பணத்தில் 5 கலப்பின பசுக்களை வாங்கி வீட்டில் சிறிதாக கொட்டகை அமைத்து பராமரிக்க தொடங்கினார். பசுக்களிடம் பால் கறந்து சங்கத்துக்கு வழங்கினார். கடின உழைப்பு, நேர்மையால் மாடுகளின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரித்தார்.

அதற்கு நல்ல பலன் கிடைத்தது. தற்போது, ஜெய் ரான்சோத் தூத் உட்பதன் கேந்திரா என்ற பெயரில் 5 ஏக்கரில் பெரிய பால் பண்ணையின் உரிமையாளர் என்ற அளவுக்கு ரமிலா உயர்ந்துவிட்டார். தனது பண்ணையில் இப்போது 280 பசுக்கள் வைத்திருக்கிறார். பால் கறக்கும் நவீன இயந்திரமும் நிறுவி இருக்கிறார். பண்ணையில் 40 தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்து கை நிறைய சம்பளமும் வழங்கி வருகிறார்.

பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளின் தலைமை அதிகாரிகள் சம்பாதிக்கும் தொகையைவிட மிக அதிகமாக சம்பாதிக்கிறார் ரமிலா. இவரது கடந்த ஆண்டு வருமானம் 1 கோடி 10 லட்சம் ரூபாயை தாண்டி உள்ளது. கடந்த ஆண்டு ரமிலாபென் தனது கணவருடன் இஸ்ரேல் சென்றார். அந்நாட்டு உதவியுடன் தனது பால் பண்ணையை கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்துடன் இயங்க கூடிய பண்ணையாக மாற்றினார். ‘தற்போது இந்த பண்ணை 24 மணி நேரம் தண்ணீர் வசதி, குளிரூட்டும் வசதி உள்ளிட்ட நவீன பண்ணையாக மாற்றப்பட்டிருக்கிறது. இஸ்ரேல் தொழில்நுட்பத்தை கொண்டு ரூ.1 கோடி செலவில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறதுÕ என்று பெருமையுடன் கூறுகி£ர் ரமிலா. இவரது சாதனையை பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குஜராத்தில் உள்ள மற்ற பெண்களுக்கு வழிகாட்டியாக ரமிலா இருக்கிறார். மாநிலத்தில் உள்ள 16, 117 பண்ணைகளில் ரமிலா மட்டும் 2,124 பண்ணைகள் இயக்கி வருகிறார். 15 மாவட்டங்களிலும் சேர்த்து 31 லட்சம் பேர் பால் பண்ணை தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதில் பெண்கள் மட்டும் 8.2 லட்சம்பேர். ‘எங்கள் கூட்டுறவு பால் பண்ணையில் மொத்த ஊழியர்களில் கால்வாசிதான் பெண்கள். ஆனால் அவர்களின் பங்களிப்பு மிக அதிகம்Õ என்கிறார் குஜராத் கூட்டுறவு பால் வர்த்தக சம்மேளன நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.சோதி.

சுயதொழில் தொடங்க ரூ.25 லட்சம் கடனுதவி

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுயதொழில் செய்வதற்கு வங்கிமூலம் ரூ.25 லட்சம் கடனுதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய சிறுதொழில் துறை இணையமைச்சர் கே.எச்.முனியப்பா தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: வேலையில்லாமல் திண்டாடிவரும் இளைஞர்கள், இளம்பெண்கள் சுயதொழில் செய்வதற்கு பிரதமரின் சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கி மூலம் ரூ.25 லட்சம் வரை கடனுதவி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டில் சிறுதொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு உறுதி பூண்டுள்ளது. ரூ.25 லட்சம் கடனுதவிக்கு மறு உத்தரவாதம் அளிக்கவும் அரசு தயாராக உள்ளது. 630 மாவட்டங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.
தொழில் செய்ய முன்வரும் இளைஞர்களுக்கு தேவையான கடன் உள்ளிட்ட உதவிகளை 3 மாதங்களில் செய்து தரவும் அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது 3 மாதங்களில் திட்டம் தொடங்கி, முடிக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் கடன்பெறும் இளம்தொழில் முனைவோர்களுக்கு கிராமப்புறங்களில் 35 சதம் மற்றும் நகர்ப்புறங்களில் 25 சதம் மானியம் அளிக்கப்படும். அதாவது ரூ.25 லட்சம் கடன் பெற்றால், அதில் ரூ.7 லட்சத்தை திரும்பச் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்றார்.
Thnxs:http://dinamani.com/india/article1423461.ece

சுயதொழில் வாய்ப்பு என்றால் என்ன


அதன்பொருள், நீங்களே உங்கள் முதலாளி/எஜமான் அல்லது உங்கள் சொந்த வியாபாரத்தை நீங்களே நடாத்துபவர் என்பதாகும். அவற்றில் பின்வருவன உள்ளடங்கும்:
  • உங்கள்செயன்முறைகளை மேற்கொள்ளும் முறை, இடம்.நேரம் ஆகியவற்றை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றீர்கள்.
  • உங்களுக்குச் சொந்தமான கருவிகள், உபகரணங்களயே நீங்கள் பாவிக்கின்றீர்கள்.
  • எல்லா நடைமுறைச்செலவுகளும் உள்வாங்கப்படுகிறது.
  • (சம்பளம் எடுக்காமலேயே) சுதந்திரமாக ஆதாயத்தை ஏற்படுத்துதல் அல்லது நஷ்டத்தை அனுபவித்தல்
  • சுதந்திரமான ஒப்பந்தக்காரர்களாக வேலை செய்பவர்கள்(freelancing - சுதந்திரமாக தொழில்செய்பவர் என அழைக்கப்படுவர்)
  • வியாபாரச்சொந்தக்காரர்கள்
  • தரகுக்கூலி அடிப்படையில் வேலைசெய்யும் விற்பனையாளர்
  • விவசாயிகளும் மீனவர்களும்
சாதகங்களும் பாதகங்களும்
அது உங்களுக்குப்பொருத்தமாக அமைகிறதா எனப் பாருங்கள்
  • தான்கொண்ட கருத்தில் நம்பிக்கை இருக்கவேண்டும். மேலும், வெற்றிக்கு மிக அவசியமான கடும் உழைப்பு, நீண்ட நேரம் வேலை செய்தல் போன்றவற்றை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
  • விரிவான ஆராய்ச்சியும் தகவல் திரட்டலும்.
மேலதிக தகவலுக்கு:
http://findlink.at/medt

சுயதொழிலில் ஈடுபடும் பெரும்பாலானோர் பின்வருவனவற்றில் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களாவர்:
சுயதொழில்செய்யும் உங்கள் தீர்மானம், பல வழிகளில் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிக்கிறது. உங்கள் குணாம்சங்கள்,ஆளுமை,வாழ்க்கை முறை, என்பன சுயதொழில் செய்வது தொடர்பாக, பொருத்தமாக அமைகிறதா என ஆறுதலாகச் சிந்தியுங்கள். உங்கள் சொந்த வியாபாரத்தை ஆரம்பிப்பது போன்ற ஆபத்தான அமைப்பிலான சுயதொழிலைத் தெரிவுசெய்யும்போது குறிப்பாக சுயமதிப்பீடு செய்வது மிகவும் முக்கியமானதாகும்.
சாதகங்களைப் பொறுத்தவரை சுயதொழிலில் ஈடுபடுவது, சுதந்திரம், வழமையான நடைமுறைகளின் கட்டுப்பாடுகள் அற்ற மற்றும் தன்னிச்சையாக நடத்தும் சுதந்திரம், உங்கள் வியாபாரம் மிகவும் இலாபமாக அமைந்தால் பணவெகுமதிகள் கிடைக்கும் சாத்தியம்.
சுயதொழிலின் பாதகங்ளைப்பொறுத்தவரை,தொழிலில் குறைந்த பாதுகாப்பு, இலவச (பல்,சுகயீன, EI )போன்ற நன்மைகள் கிடைக்காது. வரிகளை செலுத்தவேண்டியிருக்கும். அதுதொடர்பான ஆவணங்களுக்கும் நீங்களே முழுப்பொறுப்பு.
சுயதொழில்செய்யும் உங்கள் தீர்மானம், பல வழிகளில் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிக்கிறது. உங்கள் குணாம்சங்கள்,ஆளுமை> வாழ்க்கை முறை, என்பன சுயதொழில் செய்வது தொடர்பாக பொருத்தமாக அமைகிறதா என ஆறுதலாகச் சிந்தியுங்கள்.
பொருளாதார ஸ்திரத்தன்மை பாதிக்கப்படக்கூடிய அல்லது உத்தரவாதம் இல்லாத வியாபாரம் போன்ற ஆபத்தான அமைப்பிலான சுயதொழிலைத் தெரிவுசெய்யும்போது குறிப்பாக சுயமதிப்பீடு மிகவும் முக்கியமானதாகும்.
புதிய வியாபாரத்தை ஆரம்பிக்கும்போது மிக முக்கியமான இரு ஆக்கக் கூறுகளில் கவனம் செலுத்தவேண்டும்:
மேலதிக தகவல்களுக்கு அல்லது ஒரு வியாபாரத்தைப் பதிவு செய்ய (Ministry of Economic Development and Trade (1))பொருளாதார அவிபிருத்தி வர்த்தக அமைச்சின் (1) இணையத்தளத்துக்குச் செல்லவும் அல்லது அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்:
இலவசத்தொலைபேசி இலக்கம்: 1-800-361-3223 (ஒன்ராரியோவில்)
டொரன்ரோ : 416-314-8880 (TTY)டிடிவை: 416-212-1476
(1) Ministry of Economic Development and Trade:

Wednesday, February 13, 2013

கைப்பெட்டி இல்லாத வீடும் உண்டா?

கைப்பெட்டி இல்லாத வீடும் உண்டா? தங்கமோ, வைரமோ இல்லாவிட்டாலும், கவரிங் நகைகளைப் பத்திரப்படுத்தவும் நகைப்பெட்டியின் உபயோகம் தவிர்க்க முடியாது. நகை வாங்கும்போது கடைகளில் கொடுக்கிற ஒரே மாதிரியான பெட்டிகள் இன்று அவுட் ஆஃப் ஃபேஷன். விதம்விதமான மாடல்களில், வித்தியாசமான பொருட்களில் செய்யப்படுகிற நகைப்பெட்டிகளுக்கு மவுசு அதிகம்.என்னென்ன தேவை? முதலீடு?

‘‘மர ஷீட்டுகள், அலங்கரிக்க கற்கள் மற்றும் லேஸ், பசை, வேஸ்ட் துணி, கொக்கிகள்... ஒரு மர ஷீட் 600 ரூபாய்க்கு வாங்கினா, அதுல 30 பெட்டிகள் வரை செய்யலாம். ஒரு பெட்டிக்கான மர ஷீட், மற்ற பொருள்கள் மற்றும் மர ஷீட்டை கார்பென்டர்கிட்ட கொடுத்து வெட்டி வாங்கற கட்டணம் உள்பட மொத்த முதலீடு 200 ரூபாய்.’’

எத்தனை மாடல்? என்ன ஸ்பெஷல்?

‘‘வெல்வெட் துணில பண்றது, ஃபெல்ட் துணில பண்றது, பெயின்ட் மாடல், கல்லோ, கண்ணாடியோ ஒட்டி பண்றதுனு 15க்கும் அதிக மாடல்கள் பண்ணலாம். சதுரம், செவ்வகம், இதய வடிவம், பூ டிசைன், ஓவல்னு விரும்பின டிசைன்ல பண்ண முடியும். வெறுமனே ஒரு செட் தோடு வைக்கிற அளவுக்கு சின்ன சைஸ்லேருந்து, மொத்த நகைகளையும் வைக்கிற மல்ட்டி பர்ப்பஸ் பெட்டி வரைக்கும் எந்த அளவுல வேணாலும், எந்த பட்ஜெட்ல வேணாலும் பண்ண முடியும்ங்கிறதுதான் ஸ்பெஷல்.’’

ஒரு நாளைக்கு எத்தனை? விற்பனை வாய்ப்பு? லாபம்?

‘‘ஒரு பெட்டியை முழுக்க முடிக்க 2 மணி நேரமாகும். உதவிக்கு ஆளிருந்தா ஒரு நாளைக்கு 10&12 பெட்டிகள் வரைக்கும் பண்ணலாம். நண்பர்கள், அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க, வீட்டுக்குப் பக்கத்துல உள்ள சின்ன ஃபேன்சி கடைகள், நகைக்கடைகள்னு விற்பனையை சின்ன அளவுலேருந்து ஆரம்பிக்கலாம். ஒரு பெட்டிக்கான அடக்கவிலை 150 ரூபாய்னா, 100 ரூபாய் லாபம் வச்சு விற்கலாம்.’’பட்டுப்புழு வளர்ப்பில் அதிக லாபம் !

பட்டுப்புழு வளர்ப்பில் அதிக லாபம் பெற இளம்புழு வளர்ப்பை வணிகரீதியில் கையாளும் நடைமுறை உதவுகிறது. பட்டுக்கூடு அறுவடை வெற்றிகரமானதாக அமைவதற்கு ஆரோக்கியமான மற்றும் திடகாத்திரமான இளம்புழுக்களே முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. சரியான முறையில் அட்டை அடைகாப்பு, புழு வளர்ப்பு மனை மற்றும் சுற்றுப்புறங்களை கிருமிநீக்கம் செய்தல், இணக்கமான சுற்றுச்சூழல் மற்றும் சத்தான இலைகள் ஆகியவை ஆரோக்கியமான இளம்புழு வளர்ப்புக்கு அடிப்படைக் காரணிகளாகும். இளம்புழு வளர்ப்பு மையங்களில் விஞ்ஞான ரீதியில் இளம்புழுக்கள் வளர்க்கப்படுவதால், பட்டு விவசாயிகளுக்கு நல்ல அறுவடையைத் தரக்கூடிய ஆரோக்கியமான மற்றும் வலிமையான புழுக்களை வினியோகம் செய்ய முடிகிறது. மாதிரி இளம்புழு வளர்ப்பு மையம்: பட்டுக்கூடு விளைச்சலின் வெற்றி இளம்புழு வளர்ப்பில் அடிப்படையிலேயே தீர்மானிக்கப் படுகிறது. அதனால் இளம்புழு வளர்ப்பை பிரத்யேக புழு வளர்ப்பு மனையில் உகந்த சூழ்நிலையில் ஊட்டச்சத்து மிக்க மல்பெரி இலைகளை அளித்து திறமையான வேலை ஆட்களைக் கொண்டு செய்ய வேண்டும். விஞ்ஞான முறையில் இளம்புழு வளர்ப்பதால் கிடைக்கும் ஆரோக்கியமான இளம்புழுக்கள் பிறகு நல்ல கூடு விளைச்சலுக்கு வழிவகுக்கும். வாணிப இளம்புழு வளர்ப்பு மையங்கள் ஆரோக்கியமான இளம்புழுக்களை விவசாயிகளுக்கு வினியோகிக்கின்றன.

மாதிரி வாணிப இளம்புழு வளர்ப்பு மையத்திற்கு பிரத்யேக சாக்கி மல்பெரி தோட்டம், இளம்புழு வளர்ப்பு மனை மற்றும் புழு வளர்ப்பு உபகரணங்கள் தேவை. புழு வளர்ப்பில் அனுபவம் உடைய திறமையான வேலையாட்கள் தேவை. இத்தகைய புழு வளர்ப்பு மையத்திலிருந்து புழுக்களை வாங்குவதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக கூடு மகசூலும், ஆதாயமும் கிட்டுகிறது. இளம்புழுக்களை வாங்கி முதிர்புழு வளர்ப்பு மட்டும் மேற்கொள்வதால் விவசாயிகளுக்கு 8 முதல் 10 நாட்கள் வேலை நேரம் மற்றும் பணம் மிச்சம் ஆகிறது. இதனால் உற்பத்தி செலவும் குறைகிறது. வெற்றிகரமான இளம்புழு வளர்ப்புக்கு, பட்டு முட்டைகளை முட்டை வித்தகத்திலிருந்து கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் 120 முதல் 150 ஏக்கர் மல்பெரி தோட்டமும் 80-100 பட்டு விவசாயிகளும் இளம்புழு வளர்ப்பு மையத்தைச் சுற்றிலும் இருப்பது மிகவும் அவசியம். 

மாதிரி இளம்புழு வளர்ப்பு மனை: இளம்புழு வளர்ப்பு மனையை, முதிர்புழு வளர்ப்பு மனை மற்றும் கூடு கட்டவிடும் அறையிலிருந்து தூரமாக கட்டவேண்டும். ஜன்னல் மற்றும் வென்டி லேட்டர்கள் அதிகம் இருக்கக்கூடாது. அப்போதுதான் புழு வளர்ப்பு மனையின் உள்ளே தேவையான சூழ்நிலையைப் பராமரிக்க முடியும். அறையின் உட்புறச் சுவரைச் சுற்றிலும் சிறிய கால்வாய் இருக்க வேண்டும். இது எறும்புகள் தாங்கியில் ஏறாமல் தடுப்பதோடு, அறை மற்றும் தளவாடங்களை கழுவும்போது நீரை வெளி யேற்ற உதவுகிறது. அறையின் தரை, உட்புற மற்றும் வெளிப்புற சுவர்களுக்கும் சிமென்ட் பூசவேண்டும். மாதிரி இளம்புழு வளர்ப்பு மையத்தில் மூன்று அறைகள் முறையே முக்கிய புழு வளர்ப்பு அறை, இலை பாதுகாப்பு அறை மற்றும் தடுப்பு அறை இருக்க வேண்டும். தடுப்பு அறை ஊசி ஈ நுழைவதை தடுப்பதுடன், புழு வளர்ப்பிற்கு தேவையான பொருட்களை சேமித்து வைக்கவும் பயன்படுகிறது. மனையின் மூன்று புறமும் தாழ்வாரம் கட்டப்பட வேண்டும். ஊசி ஈ நுழைவதைத் தடுக்க கதவு மற்றும் ஜன்னல்களுக்கு கம்பிவலை பொருத்த வேண்டும். 

தொடர்பு: நா.தாஹிரா பீவி, விஞ்ஞானி-சி, ஆராய்ச்சி விரிவாக்க மையம், கோபி. 04285-228 171. -கே.சத்தியபிரபா, உடுமலை

Saturday, February 9, 2013

படித்ததில் பிடித்தது


மதுரை மாவட்டம் அய்யப்பன் நாயக்கன் பட்டியில் உள்ள அரசு துவக்கப்பள்ளி வழக்கமாய் காலை 9.30 மணிக்கு துவங்கும், ஆனால் 8 மணிக்கே ஒருவரை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
அவர்தான் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கில்பர்ட்(47).
மதுரையில் உள்ள தனது வீட்டில் இருந்து கொண்டுவந்த பாடபுத்தக குறிப்புகள் மற்றும் மதிய உணவு ஆகியவற்றை கொண்டு போய் தனது மேஜையில் வைத்துவிட்டு வெளியே வருகிறார்.
அடுத்த ஒரு மணி நேரம் அதாவது பள்ளி திறப்பதற்கு (காலை 9.30) அரை மணி நேரம் முன்புவரை, அவர் பம்பரமாக சுழன்று செய்யும் வேலைகள்தான் அவர் பற்றி இந்த கட்டுரை எழுத தூண்டுகோள்.
ஆமாம், கையில் ஒரு விளக்குமாறும், வாளி நிறைய தண்ணீரும் எடுத்துக் கொண்டு மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையை சுத்தம் செய்கிறார், பின்னர் வகுப்பறைகளில் குப்பை கூளங்கள் இல்லாமல் பெருக்கி எடுக்கிறார், பள்ளி வளாகத்தில் பேப்பர் எதுவும் இல்லாமல் சுத்தம் செய்கிறார். இவற்றை எல்லாம் செய்து முடித்ததும், பள்ளியின் கழிப்பறை முதல் வகுப்பறை வரை பளீச்சென சுத்தமாக இருக்கிறது.
கை,கால் முகம் கழுவி தன்னை தலைமையாசிரியர் இருக்கையில் அமர்வதற்கும் பள்ளியின் இதர ஆசிரியர்கள், மாணவர்கள் வருவதற்கும் நேரம் சரியாக இருக்கிறது.
சுத்தம் சிறிதுமின்றி பல அரசு பள்ளிகள் இருக்கும் போது, இவரது பள்ளி மட்டும் எப்படி இவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பது பலருக்கு ஆச்சர்யம், இதற்கு காரணம் தலைமை ஆசிரியரான கில்பர்ட்தான் என்பதே பலருக்கும் தெரியாது, அது தெரியவும் வேண்டாம் என்கிறார் கில்பர்ட்.
மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்தவரான கில்பர்ட், என்ன படிப்பது, எப்படி வாழ்க்கையை கொண்டு செல்வது என்பது தெரியாமல் இருந்தபோது முன்பின் தெரியாத பாதர் லூர்துசாமி என்பவர் எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் இவருக்கு செய்திட்ட உதவியே இவரை ஆசிரியராக்கியது.
எப்போது ஆசிரியரானாரோ அப்போதே கில்பர்ட் ஒரு முடிவு செய்தார்.
முன்பின் தெரியாத தனக்கு எப்படி ஒருவர் உதவினாரோ, அதே போல நாமும் பலரது முன்னேற்றத்திற்கு காரணமாக இருக்கவேண்டும் என்று. ஆசிரியராக இருந்து கொண்டு என்ன செய்யமுடியுமோ அதைச் செய்வது என்றும் முடிவு செய்தார்.
தனது சம்பளத்தில் ஒரு பங்கை ஒதுக்கி பொருளாதாரம் காரணமாக பள்ளியில் படிக்க முடியாமல் நின்ற குழந்தைகளை தேடிக் கண்டுபிடித்து அவர்களை செலவு செய்து படிக்க வைக்கிறார்.
பள்ளி வளாகத்தில் மிட்டாய் விற்கும் மூதாட்டியின் குழந்தைகள் உள்பட்ட வறுமையான குடும்பத்து குழந்தைகளின் மொத்த படிப்பு செலவை ஏற்றுக் கொண்டு படிக்க வைக்கிறார்.
இவரைப் பொறுத்தவரை எந்த குழந்தையுமே படிக்காமல் இருக்கக்கூடாது. தொடர்ந்து மூன்று நாள் ஒரு மாணவன் வகுப்பிற்கு வராவிட்டால், என்னாச்சோ என்று அந்த மாணவனது வீட்டிற்கு தேடிப்போய் பார்த்து, சம்பந்தபட்ட மாணவன் பிரச்னையை தீர்த்து , வகுப்பிற்கு தொடர்ந்து வரும்படி பார்த்துக் கொள்வார்.
எப்போதுமே வீட்டில் இருந்து தனக்கு போக மேலும் இரண்டு பேருக்கு சாப்பாடு கொண்டு வருவார், அவசரத்தில் சாப்பாடு கொண்டு வராமல் வந்துவிடும் பிள்ளைகளுக்கு கொண்டுவந்த கூடுதல் சாப்பாடை கொடுத்துவிடுவார். தன்னிடம் கூடுதலாக ஒரு நூறு ரூபாய் இருந்தால் கூட போதும் உடனே அந்த நூறு ரூபாய்க்கு மிக்சர் போன்ற நொறுக்குத்தீனி வாங்கிவரச் செய்து , குழந்தைகளிடம் வழங்கி மகிழ்ச்சியடைவார். இவரது வீட்டிற்கு உறவினர்கள் வாங்கிவரும் இனிப்பு, காரத்தைக் கூட பள்ளிக்கு கொண்டுவந்து பகிர்ந்து கொள்வார். விசேஷ நாட்களில் வீட்டில் செய்யும் விசேஷ உணவுகளும் பள்ளி குழந்தைகளுக்குதான்.
வெறும் உணவு மட்டுமின்றி அவ்வப்போது ஜாமெண்ட்ரி பாக்ஸ், பேனா, ஸ்கூல் பேக் போன்றவைகளையும் வாங்கி கொடுத்து மாணவர்களை உற்சாகப்படுத்துவார். மாணவர்களிடம் சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கியுள்ளார்.
இவருக்கு ஆசிரியர் வேலை கிடைத்த போது, இவரே வலிய போய் தனக்கு ஏதாவது ஒரு சின்ன கிராமத்தில் வேலை போட்டு கொடுங்கள் என்று கேட்டு அதன்படி கம்மாளபட்டி என்ற கிராம பள்ளிக்குதான் வேலை வாங்கிச் சென்றார். அதே போல பணிமாறுதல் வரும்போதும் ஏதாவது கிராமத்தில் உள்ள பள்ளிக்கே மாற்றிக்கொடுங்கள் என்று கேட்டு வாங்கிச் செல்வார். அந்த வகையில் இப்போது சோழவந்தானை அடுத்துள்ள அய்யப்பநாயக்கன்பட்டியில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார்.
பள்ளிக்கூடத்திற்கு வந்துட்டா அவங்கெல்லாம் நம்ம பிள்ளைங்க, நம்ம பிள்ளைங்க இருக்கிற இந்த இடத்தை கோயில் மாதிரி வைச்சுக்கணும்னு சக ஆசிரியர்களிடம் சொல்லி அவர்களது ஒத்துழைப்போடு பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொள்கிறார்.
எல்லாம் சரி கழிப்பறையை சுத்தம் செய்வது என்பதை ஒரு சிலர் கேலியாக நினைப்பார்களே என்றதும், "யார் கேலியாக நினைத்தால் எனக்கென்ன, என் மனசு சொல்கிறது, நான் செய்வது சரிதான் என்று. அது போதும் பிறகு ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் என்னுடைய பள்ளி என்று இல்லை எந்த அரசு ஆரம்பபள்ளியிலும் கழிப்பறையை சுத்தம் செய்வதற்கு என்று தனி சுகாதார பணியாளர் கிடையாது, ஒன்று மாணவர்கள் சுத்தம் செய்யவேண்டும், அல்லது ஆசிரியர்கள் சுத்தம் செய்யவேண்டும், பெரும்பாலான பள்ளியில் மாணவர்களை வைத்து சுத்தம் செய்வார்கள் எனக்கு அதில் உடன்பாடு இல்லை, சக ஆசிரியர்களை, மற்ற வேலைகள் சொல்லலாம் கழிப்பறை சுத்தம் செய்யுங்கள் என்று சொல்லமுடியாது ஆகவே நானே கழிப்பறை சுத்தம் செய்யும் பணியில் இறங்கிவிட்டேன், எனக்கு இதில் எந்த தயக்கமும் கிடையாது. மாறாக நிறைய மனத் திருப்திதான் உண்டாகிறது.' என்கிறார் சாந்தமாக.
பள்ளிக்குழந்தைகள் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறீர்களே ஏதாவது விசேஷ காரணம் உண்டா? என்றபோது ,"எனக்கு ஒரு முறை உடல் நிலை மோசமானபோது பள்ளி குழந்தைகள்தான் கண்ணீர்விட்டு அழுது பிரார்த்தனை செய்தனர், அவர்களது பிரார்த்தனையால்தான் நான் இன்று உயிருடன் இருப்பதாக எண்ணுகிறேன். இப்படி உயிர் கொடுத்த குழந்தைகளுக்கு நான் ஒன்றும் அதிகமாக செய்யவில்லை, என் கடமையையையும், கூடுதலாக என் நன்றிக்கடனையும் செலுத்துகிறேன்'' அவ்வளவுதான் என்ற தலைமை ஆசிரியர் கில்பர்ட் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவரும்கூட, எவ்வளவோ வற்புறுத்தி கேட்டு கொண்டும் கூட கழிப்பறையை சுத்தம் செய்வது போன்ற போட்டோ எடுக்க ஒத்துக் கொள்ளவில்லை, மேலும் இது எனக்கான மனதிருப்திக்காக செய்கிறேன், ஆகவே பிறர் வாழ்த்த வேண்டும், பாராட்ட வேண்டும் என்று ஒரு போதும் நினைப்பது கிடையாது, எப்போதுமே மற்றவர்களை முன்விட்டு கடைசி ஆளாக நிற்பவன் நான் ஆகவே எனது போன் நம்பரும் வேண்டாம் என்று கூறிவிட்டார். உங்களுக்கு பின்னால் இருக்கும் உண்மையை உங்களுக்கு முன்னால் போக விடுங்கள் அது போதும் உலகம் அன்பு மயமாகும் என்பதை தனது வேண்டுகோளாக குறிப்பிடும்படி மெத்த பணிவுடன் கூறிவிடைகொடுத்தார்.

மாடியில் காய்கறி தோட்டம்!


அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு, மாடியில் காய்கறி தோட்டம் அமைக்கும், என்.மாதவன்: நான், சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில், வெங்கடேஸ்வரா நர்சரி எனும், நாற்றங்கால் பண்ணை வைத்திருக்கிறேன்.அடுக்கு மாடி குடியிருப்புகளில், பூமியில் பயிரிடும் வாய்ப்பில்லை. ரோஜா, சாமந்தி, செம்பருத்தி என, பூச்செடியையும், சிலர் துளசி செடியை மட்டுமே, மண் தொட்டியில் செடிகளாக வளர்ப்பர்.வீட்டின் மொட்டை மாடியில், 200 சதுர அடி இடம் இருந்தால், பூமியில் விவசாயம் செய்வதை போல், காய்கறி தோட்டம் அமைத்து, நன்கு அறுவடை செய்யலாம். செடிகளுக்கு ஊற்றும் தண்ணீர் தேங்கி, மாடியின் உறுதி குறைவதை தடுக்க, மாடியில், "வாட்டர் புரூப் ஷீட்' ஒட்டி, காய்கறி தோட்டம் அமைப்பது அவசியம்.கூழாங்கற்களை, மூன்றங்குல உயரத்திற்கு பரப்ப வேண்டும். அதன் மேல் தேங்காய் நாரை பரப்பி, செம்மண், எரு உரம், ஆற்று மண் கலந்த, தோட்ட மண் கலவையை பரப்பி, எல்லாம் சேர்த்து, 1 அடி உயரம் வரை இருக்க வேண்டும். அரசாங்கம் மற்றும் தனியார் பண்ணைகளில் கிடைக்கும், அனைத்து காய்கறி விதைகளையும் பயிரிடலாம்.விதையூன்றிய மூன்று வாரங்களில், பயிரிட்டவை பிஞ்சு விடத் துவங்கி விடும். கீரை வகைகளையும், மிளகாய், பூசணி, புடலங்காய் என, அனைத்தையும் பயிரிடலாம். வீட்டின் மாடி, "கான்கிரீட்' என்பதால், வெயிலின் வெப்பத்தை குறைக்க, காலையில், 8:00 மணிக்கு முன்னும், மாலையில், 6:00 மணிக்கு முன்னும், தண்ணீர் ஊற்ற வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை என, மூன்று தடவை, "ரோகர்' பூச்சி மருந்துகள் தெளிக்க வேண்டும்.மா, மாதுளை, கொய்யா, எலுமிச்சை என, மரங்களையும் வளர்க்கலாம். 1 அடி என்பதை விட, கூடுதலாக அரை அடி தோட்ட மண் இருந்தால் போதுமானது.
thnxs:http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

Friday, February 8, 2013

பீனிக்ஸ் பறவையாக எழுந்தோம்


''நாங்கள் சொந்த வீடு, கார், பைக், ஸ்கூட்டர் என சகல வசதிகளுடன்  சந்தோஷமாகத்தான் இருந்தோம். என் கணவர் லெதர் பொருட்கள் தயாரிப்பதற்கான ஜிப், எலாஸ்டிக், பட்டன் போன்ற உபரிப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருந்தார். டெல்லி, மும்பை என இந்தியா முழுக்க சென்று பிஸினஸ் செய்து வந்தார்.  நல்ல லாபகரமாகத்தான் இருந்தது. எந்தச் சிக்கலும் இல்லாமல் போய்க் கொண்டிருந்த எங்கள் வாழ்க்கையில் மிக மோசமான காலகட்டமும் வந்தது.
பிஸினஸை இன்னும் பெரிய அளவில் செய்ய ஆசைப்பட்டார் என் கணவர். அதற்காக எட்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். அவரது பிஸினஸ் நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி இலங்கை, மலேசியா என சென்று, பல கம்பெனிகளில் பொருட்கள் ஆர்டர் செய்துவிட்டு அட்வான்ஸ் தொகையையும் செலுத்திவிட்டு வந்தார். ஆனால், பொருட்களும் வந்துசேரவில்லை; செலுத்திய பணமும் திரும்ப வரவில்லை. பல லட்சங்கள் நஷ்டம் உண்டாகி, கடனுக்கு மாதா மாதம் பல ஆயிரங்களை வட்டியாகக் கட்ட வேண்டிய கஷ்டமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம். வருமானம் முழுவதும் வட்டிக்கே சரியாகப் போனது. ஸ்கூட்டர் தவிர கார், பைக் என எல்லாவற்றையும் வட்டிக்காகவே இழந்தோம். கூடவே குழந்தைகளுடைய சந்தோஷத்தையும்தான் இழந்தோம். ஆனால், எப்படியோ வீட்டை மட்டும் இழக்காமல் சமாளித்தோம்.
வசதியாக வாழ்ந்து, காரில் சென்றுவந்த நாங்கள் பஸ்ஸில் செல்லக்கூடிய சூழ்நிலையிலும் அதற்காக மனம் ஒடிந்து போகவில்லை. சொகுசான வாழ்க்கையைத் தியாகம் செய்தோம். வட்டி கட்ட கடையையும் விற்றுவிட்டபிறகு, குடும்பச் செலவுக்கும், குழந்தைகளின் படிப்புச் செலவுக்கும் வீட்டில் இருந்த நகைகளை விற்க ஆரம்பித்தோம். என் கணவருக்கு வெறும் 100 ரூபாய்தான் பெட்ரோல் காசு கொடுப்பேன்.

இந்தச் சிக்கலான சூழ்நிலையில் இதற்காக  சண்டை போட்டுக்கொண்டால், இருக்கும் நிம்மதியும் தொலைந்து போகுமே. சாமர்த்தியமாகத்தான் இந்த இக்கட்டை கடந்து வரவேண்டும் என்று முடிவெடுத்தேன்.
கடனை அடைக்க உதவி செய்யுங்கள் என உறவினர்களிடம் கேட்கத் தயக்கமாக இருந்தது. மாடியில் வீட்டைக் கட்டி, அதை லீசுக்கு விடுவதன் மூலம் கடனை அடைத்துவிடலாம் எனத் தோன்றியது. ஆனால் வீடு கட்ட பணம்..? உறவினர்களைத்தான் நாடினோம். ஆனால், எங்களின் சூழ்நிலை அறிந்த சிலர் பணம் இருந்தும் உதவ மறுத்துவிட்டார்கள்.
ஆனாலும் தயங்காமல் தெரிந்தவர்கள், குடும்ப நண்பர்கள், சொந்தபந்தங்கள் என எல்லோரிடமும் கேட்டோம். பலர் அவரவர் வசதிக்கேற்ப கொடுத்து உதவினார்கள். மூன்று லட்சம் ரூபாயில் வீட்டை சிரமப்பட்டு கட்டினோம். ஆனால், ஏதாவது ஒரு குறை சொல்லி லீசுக்கு யாரும் வரவில்லை.  எங்கள் நிலைமை இன்னும் மோசமானது. பிறகு  குறைகளை சரிசெய்தபிறகு, ஒருவழியாக லீசுக்கு ஆள் வந்துவிடவே, சில லட்ச ரூபாய் கடனை அடைத்தோம். ஆனால், சொந்தபந்தங்களிடம் வாங்கிய கடன் நின்றுவிட்டது. அவர்களிடம் கால தவணைப் பெற்றோம். பரந்த மனம்கொண்ட சிலர் எங்கள் கஷ்டத்தைப் புரிந்து, பணத்தை திரும்பக் கேட்கவில்லை. கடைசியாக என் அண்ணன் தந்த பணத்தை முதலீடாக வைத்து  வியாபாரத்திற்கு திரும்பவும் உயிர் கொடுத்தோம். அகல கால் வைக்காமல் நிதானமாக பிஸினஸை நடத்தினோம். கொஞ்சம் கொஞ்சமாக கடனை அடைத்தோம். இழந்த நிம்மதியையும் சந்தோஷத்தையும் மீட்டெடுத்தோம்.
நன்றி ஈமெயில் வந்த செய்தி 

Wednesday, February 6, 2013

ரோஜா செடிகளை பராமரிப்பது எப்படி

பூச்செடிகள் வளர்ப்பது மற்றும் அலங்கார மலர் தோட்டங்கள் அமைப்பது போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர்களின் முக்கியமான கவலை - பல வண்ணங்களில் பூக்கும் வித விதமான ரோஜா செடிகளை எப்படி வளர்த்து பராமரிப்பது என்பதுதான். மனம் மயக்கும் வாசனையுடன் விதவிதமான வண்ணங்களில் மலர்ந்து சிரிக்கும் ரோஜா செடிகளை விரும்பாதவரில்லை. இருப்பினும் முட்கள் நிறைந்த ரோஜா செடியை நல்ல முறையில் வளர்த்து பராமரிப்பது சாதாரண விஷயமில்லை. எல்லா தோட்டக்கலை ஆர்வலர்களுமே ரோஜா செடியை வளர்ப்பு என்பது சிரமமான ஒன்று என்பதை ஒப்புக்கொள்கின்றனர். ஒல்லியான பலவீனமான தோற்றத்தை கொண்டுள்ள இந்த செடிக்கு தேவைப்படும் உபசரிப்பு கொஞ்ச நஞ்சமில்லை. இருப்பினும் சிரமம் பார்க்காமல் விசேஷமாக கவனித்து கொள்ளும் பட்சத்தில் நமது தோட்டத்திலோ வாசலிலோ பல வண்ணங்களில் மலர்ந்து சிரிக்கும் ரோஜா செடிகளுக்கு நாம் சொந்தக்காரர்கள் ஆகிவிடலாம். அதிலும் "தோட்டத்தை நல்லா வச்சிருக்கீங்க" என்று யாராவது உங்களை பாராட்டினால் அது உண்மையில் ரோஜா மலர்களை பார்த்து சொல்லப்படுவதாகத்தான் இருக்கும். எல்லாம் சரிதான், பார்த்தவுடனேயே நம் மனதை கொள்ளும் இந்த அற்புத ரோஜா செடிகளை செழிப்பாக மலர்ந்து சிரிக்கும்படி வளர்ப்பது அவ்வளவு சுலபமான காரியமில்லையே. தொட்டியில் வளர்த்தாலும் சரி, தோட்டத்தில் வளர்த்தாலும் சரி, ரோஜாச்செடிகள் பளிச்சென்று பூத்து ஜொலிக்கும்படி வளர்த்தெடுப்பது உண்மையிலேயே ஒரு பெரிய சவால் இல்லையா? நர்சரியிலிருந்து ஆசை ஆசையாக வாங்கி வந்து அவசர அவரசரமாக தொட்டியில் வைத்து தினமும் நீருற்றி - பதினைந்து நாள் கழித்து வறண்டுபோன இலைகளுடன் அது பரிதாபமாக காட்சியளிப்பதை பார்த்தால் எப்படியிருக்கும்? சிலருக்கு கோபம் வரும்; சிலருக்கு அழுகை வரும். அது போகட்டும், அந்த மாதிரியான ஏமாற்றங்களை தவிர்க்கவும், ரோஜாச்செடிகளை திட்டமிட்டு செழிப்புடன் வளர்த்து பூப்பூக்க வைப்பதற்கும் இதோ சில எளிய குறிப்புகள்: • செடியின் உயரத்திற்கு ஒன்றரை பங்கு ஆழமும், அதன் அகலத்தை விட இரண்டு பங்கு அகலமும் கொண்ட குழியை வெட்டிக்கொள்ளுங்கள். அடியில் ரோஜா உரத்தை இட்டு அதன் மேல் இயற்கை எரு மற்றும் செம்மண் கலவையை ஒரு அடுக்குக்கு நிரப்புங்கள். சிறிதளவு உரத்தை மண்ணின் மேற்பகுதியிலும் தெளிக்க வேண்டும். • இப்போது ரோஜாச்செடியை அதன் பை அல்லது தொட்டியிலிருந்து மென்மையாக எடுத்து குழியில் வையுங்கள். செடியின் மண் விளிம்பு புதிதான குழியின் விளிம்பை ஒட்டியிருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். செடியில் வேர்களை ஜாக்கிரதையாக சுத்தம் செய்து விடுங்கள். இதனால் வேர் புதிய மண்ணை ஏற்றுக்கொள்வதற்கும், வேர் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். • அடுத்து குழியை மண், இயற்கை எரு, சிறிது உரத்தெளிப்பு என்று மாற்றி மாற்றி நிரப்பி மூடுங்கள். நன்கு நீர் ஊற்றி திரும்பவும் ஒரு அடுக்கு மண்-எரு-உரத்தெளிப்பு என்று நிரப்புங்கள். நீர் நன்கு உறிஞ்சப்பட்டபிறகு திரும்பவும் மண் இயற்கை எருக்கலவையால் நிரப்புங்கள். கடைசியாக ஈரம் காயாமல் இருக்க சிறிது செத்தைகளை லேசாக புதிய மண்பரப்பின் மீது பரப்பி விடுங்கள். • பூச்சிகள் மற்றும் இலைப்புழுக்கள் ரோஜா செடியை தாக்காமல் இருக்க வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய எளிய பூச்சிக்கொல்லி கலவையாக அரை ஸ்பூன் ‘விம்' வாஷிங் திரவத்தை (அல்லது வேறு பிராண்ட் சோப்புத்தண்ணீர்)கால் லிட்டர் தண்ணீரில் கலந்து ரோஜாச்செடியில் நன்கு தெளியுங்கள். இது இலைப்புழுக்கள் மற்றும் கம்பளிப் பூச்சிகள் போன்றவற்றை அழித்து விடும். • பழுத்த இலைகள் தானே விழும் என்று காத்திருக்க வேண்டாம். அழுகும் நிலையில் இலைகள் தெரிந்தால் உடனே அவற்றை அகற்றிவிடுங்கள். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இலைகள் காட்சியளித்தல் அது இரும்புச்சத்து அல்லது நைட்ரஜன் சத்துக்குறைபாடு என்று அர்த்தம். • செடியை சீக்கிரம் வளர்க்கிறேன் என்ற ஆர்வக்கோளாறில் அதிகம் நீர்வார்த்துக்கொண்டே இருக்காதீர்கள். தொட்டியில் அல்லது செடிக்குழியின் மேல்பாகத்தில் 3 அல்லது 4 அங்குல ஆழ மண் வறட்சியடையும்போது நீர் ஊற்றினால் போதும். கொஞ்சம் செடியின் மீதும் நீரை தெளிக்கலாம். தினமும் ரோஜாச்செடிகளுக்கு நீர் ஊற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. குறிப்பு: • ரோஜா செடிகளுக்கு சூரிய வெளிச்சம் மிக அவசியம். எனவே ஒவ்வொரு நாளும் 6 மணி நேரமாவது செடியில் வெயில் விழுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அதே சமயம் ஈரப்பதம் அதிகம் இல்லாத இடத்தை பார்த்து வைப்பதும் முக்கியம். • ரோஜா செடிகளுக்கு நல்ல காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் தவறக்கூடாது. செடிகள் நன்கு வளர்ந்த நிலையில் எவ்வளவு பெரிதாக வருமோ அந்த அளவுக்கு இடைவெளி விட்டு நட வேண்டும். (தொட்டிகளில் என்றால் பயமில்லை அவ்வப்போது நகர்த்திக்கொள்ளலாம்) • ரோஜா செடிகளை மண்ணில் நடுவதற்கு முன்பு மண் அமிலப்பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மண் அமிலத்தன்மை எனப்படும் pH விகிதாச்சாரம் 5.5 முதல் 6.6 வரை இருப்பது ரோஜாச்செடிகள் செழிப்புடன் வளர மிகவும் அவசியம். • கோடைக்காலத்தின் போது ரோஜாச்செடிகளுக்கு காலையிலேயே நீர் ஊற்றுவது சிறந்தது. அப்போதுதான் இரவு வருவதற்குள் மண் உலர்ந்த நிலைக்கு வர வசதியாக இருக்கும். குளிர்காலம் அல்லது வெப்பநிலை குறைவாக இருக்கும் காலங்களில் 3 முதல் 5 நாட்களுக்கு ஒரு முறை நீர் ஊற்றினாலே போதுமானது.

மலட்டுத்தன்மை பிரச்னைக்கான தீர்வுகள்

மலட்டுத்தன்மை... பூதாகரமாக பயமுறுத்திக் கொண்டிருக்கிற இந்தப் பிரச்னைக்கான தீர்வுகள், அன்றாட வாழ்க்கையில் நாம் அலட்சியம் செய்கிற, அவமதிக்கிறசின்னச் சின்ன விஷயங்களில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

உடல் சூடு அதிகமாக இருப்பதே கருத்தரிக்காமைக்கான முதல் காரணம். பெண் உடலில் காரத்தன்மை குறைந்து, அமிலத்தன்மை அதிகமானால், ஆணிடமிருந்து பெற்ற உயிரணு, அந்த அமில உடலில் வாழ முடியாமல் போகிறது. அதாவது அதிகமான அமிலத்தன்மையால் கர்ப்பப்பையானது கொதிகலனாக மாறுகிறது. கொதிக்கிற தண்ணீரில் ஓர் உயிர் எப்படி வாழும்? உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளத்தான் அந்தக் காலத்தில் எண்ணெய் குளியல் பின்பற்றப்பட்டது. இன்றோ... அதெல்லாம் பட்டிக்காட்டுத்தனம்! 

நாகரிக மோகத்தில் நாம் கைவிட்ட நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று. எண்ணெய் குளியல் என்றால் அதற்கென ஒரு முறை உண்டு. 1 குழிக்கரண்டி நல்லெண்ணெயில் 1 டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் புழுங்கலரிசி, 2 பல் பூண்டு சேர்த்துக் காய்ச்சி, வடிகட்டவும். அதைத் தலை, தொப்புள், அடி வயிறு, கால் கட்டை விரல் என உச்சி முதல் பாதம் வரை தடவி, அரை மணி நேரம் ஊறவும். பிறகு ஷாம்பு குளியல் எல்லாம் வேலைக்கு ஆகாது. பஞ்சகற்பம் (கடுக்காய் தோல், நெல்லி வற்றல், வேப்பம் விதை, வெள்ளை மிளகு, கஸ்தூரி மஞ்சள் ஆகிய ஐந்தும் சேர்த்தரைத்த பொடி) சிறிது எடுத்து, பசும்பால் விட்டுக் கலந்து, தலைக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

கர்ப்பப்பை என்பது மண் என்றால், விந்து என்கிற விதை அதில் விழுந்து, வளர மண் வளமாக இருக்க வேண்டுமில்லையா? மண் உவர்ப்புத்தன்மையுடன் இருந்தால், விதை, துளிர்க்காது. உடலை சுத்தமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க இன்னொரு அவசிய சிகிச்சை உண்டு. 50 மி.லி. விளக்கெண்ணெயை, 25 மி.லி. நீராகாரத்துடன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது இயற்கையான பேதி மருந்து. 6 மாதங்களுக்கொரு முறை இப்படிச் செய்தால், ஒட்டுமொத்த உடலும் சீராகும்.

நீங்கள் அணிகிற உடைக்கும், உங்கள் கர்ப்பம் தரிக்கிற தன்மைக்கும் தொடர்புண்டு என்றால் நம்புவீர்களா? ‘கூபகப் பகுதி’ எனப்படுகிற இடுப்பெலும்புப் பகுதி இடர் இல்லாமலும், காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும் என்றுதான், அந்தக் காலத்தில் பாவாடை, புடவை போன்ற உடைகள் பெண்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டன. பாவாடையின் மடிப்பும், புடவையின் கொசுவமும், கூபக அறைக்கு, திரைச்சீலை மாதிரி பாதுகாப்பு தரும்படி வடிவமைக்கப்பட்டவை. கர்ப்பப்பை மற்றும் பெண் உறுப்பின் இயற்கைத்தன்மையை பாதிப்பதுடன், கருத்தரிக்காமல் செய்வதற்கும், ஜீன்ஸ் பேன்ட், டிரவுசர் போன்ற  நவீன உடைகள் காரணம் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி.
 
அடுத்ததாக குதிகால் உயர்ந்த காலணிகள். குதிகாலை உயர்த்தி, விரல் பகுதியை அழுத்தியபடி நடக்க வைக்கிற அந்தக் காலணிகளைத் தொடர்ந்து அணிவதால், கர்ப்பப்பையானது, கருவாயின் வழியே கீழ்நோக்கி சரியத் தொடங்கும். விந்து தங்காதபடியான ஒரு வடிவமைப்பை தானே ஏற்படுத்தி விடும். ஆரம்பத்தில் குழந்தையின்மைக்குக் காரணமாகிற இந்தச் சின்ன விஷயம், பிற்காலத்தில், கர்ப்பப்பை அடித்தள்ளல் பிரச்னை வரை கொண்டு போய் விடும். இன்றைய பெண்களில் எத்தனை பேருக்கு மஞ்சள் பூசிக் குளிப்பது தெரியும்? ஹார்மோன் இம்பேலன்ஸ் எனப்படுகிற கோளாறுகளை ஓட ஓட விரட்ட வைப்பதில், மஞ்சளின் மகிமை பற்றி அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. 

தோலில் தடவும் மஞ்சள்தான். குறிப்பாக, உள் உறுப்புகளில் தடவுவதன் மூலம், ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடிய தொற்றுக்கிருமிகள் தவிர்க்கப்படும். ஹார்மோன் கோளாறுகள் சரியாகும். அதன் காரணமாக தடைப்பட்டுப்போன கர்ப்பம் கை கூடும். களிங்காதி எண்ணெய், ஆற்றுத்தும்மட்டி எண்ணெய் என சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும். மாதவிடாயின் முதல் 3 நாள்கள், மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த எண்ணெயை சாப்பிட்டால், கரு தங்கி நல்ல முறையில் வளரும். 

விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், சின்ன வெங்காயச் சாறு, மலை வேப்பிலைச் சாறு, ஆற்றுத்தும்மட்டிக்காய் சாறு - எல்லாவற்றையும் சம அளவு எடுத்துக் காய்ச்சி, மாதவிடாயின் 3 நாள்களிலும் எடுத்துக் கொண்டால், கர்ப்பப்பை பலம் பெறும். பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்கட்டிகளும், சாக்லெட் சிஸ்ட் பிரச்னையும் தன்னால் நீங்கி, கர்ப்பம் தங்கும். சினைப்பையில் இருந்து சினைமுட்டையானது, கர்ப்பப்பைக்கு முதிர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லவும் உதவும். மழலையை ‘செல்வம்’ என்றுதான் சொல்கிறோம். மெனக்கெடாமல் எந்தச் செல்வமும் சும்மா வந்துவிடுமா? மெனக்கெட்டுத்தான் பாருங்களேன்!

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites