இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label பாம்புகள் பற்றிய தகவல்கள். Show all posts
Showing posts with label பாம்புகள் பற்றிய தகவல்கள். Show all posts

Tuesday, January 17, 2012

பாம்பும் அமெரிக்காவும்

எங்க நண்பர் ஒருவர், வேடிக்கையாக  கேட்டார்: 
"இந்தியர்களுக்கும் சீன மக்களுக்கும்   என்ன வித்தியாசம் தெரியுமா?" 
"உருவத்தில் இருந்து எத்தனையோ வித்தியாசங்கள் உண்டு. எதுன்னு நீங்களே சொல்லுங்க."
" இந்திய மக்கள், பாம்புக்கு படையல் வைப்பாங்க.... சீன மக்கள், பாம்பையே படையல் ஆக்கிடுவாங்க."


காரணம்:   வித்தியாசமாக இருக்கும் இடங்கள், விழாக்கள் தேடி பிடித்து சென்று பார்க்கும் பழக்கம் உள்ள நானும் என் கணவரும்,  Texas மாநிலத்தில் இருந்த பொழுது,   தெரியாத்தனமாக ஒரு பாம்பு திருவிழாவுக்கு  சென்று விட்டு வந்த அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவில்லை.  அங்கே சென்ற பின் தான் கவனித்தேன். எத்தனையோ இந்தியர்கள் வாழும் அந்த மாநிலத்தில்,  எங்கள் இருவரைத் தவிர வேறு எந்த இந்தியரையும் அந்த திருவிழாவில் நான் பார்க்கவே இல்லை.  எல்லோரும் விவரமாக எஸ்கேப் ஆகிட்டாங்க போல... 

கொஞ்சம் வீக் இதயம் உள்ளவர்கள், இத்துடன் அபௌட் டர்ன், ப்ளீஸ்.... அப்புறம் கம்பெனி எதற்கும் பொறுப்பு எடுக்காது. 

வருடந்தோறும்,  Sweetwater என்ற சின்ன ஊரில்,  மார்ச் மாதத்தில் இரண்டாம்  வார இறுதியில் (வியாழன் முதல் ஞாயிறு வரை) நடக்கும் இந்த திருவிழாவுக்கு  அந்த ஏரியா மக்களிடம் வரவேற்பு அதிகம்.  Rotary Club - Lions Club மாதிரி உள்ள ஒரு சமூக அமைப்பான Jaycees குழுவினர்,  "World's Largest Rattlesnake Round-up" என்று நம்ம பக்கம் உள்ள ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி மாதிரி,  பாம்பு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துறாங்க. 


வரலாறு:  

ஒரு காலத்தில்,  அந்த பகுதிகளில்  விஷப்பாம்பு வகைகளில் ஒன்றான Diamondback  Rattlesnakes  அதிகமாக இருந்து இருக்கின்றன.  (இந்த பாம்புகளின் வால் பகுதிகளை, அந்த பாம்புகள்   கிலுகிலுப்பை - rattle - மாதிரி   ஆட்டி சத்தம் உண்டாக்கி எச்சரிக்கை செய்வதால், இந்த பெயர்.)   அதனால் கால்நடைகளும் பாதிக்கப் பட்டு வந்து இருக்கின்றன.  அந்த பாம்புகளின் வளர்ச்சியை குறைத்து, பாதுகாப்பு உள்ள இடமாக மாற்ற எண்ணி,   மக்களையே அந்த பாம்புகளை பிடித்து வரச் செய்து அழிக்க வகை செய்து இருக்கிறார்கள்.  
Diamondback Rattlesnake: 


வாலில் உள்ள கிலுகிலுப்பை (rattle) பகுதி:  


மக்களை உற்சாகப் படுத்தும் விதமாக,   "இருப்பதிலேயே அதிக நீள பாம்பை பிடித்து வந்தவர்" - அதிக எடை உள்ள பாம்பை பிடித்து வந்தவர்" என்று இன்னும் சில வகைகளாக பிரித்து பரிசுகள் வழங்கி இருக்கிறார்கள்.   ஆனால், இப்பொழுது அந்த அளவுக்கு பாம்புகள் தொல்லை  இல்லை என்றாலும் பழக்க தோஷம் யாரை விட்டது.   மக்களும் "ருசி" கண்ட பூனைகள் மாதிரி, பாம்பு பிடிக்க கை துருதுரு என இருக்குதுன்னு தொடர்ந்து சொல்ல,  52 வருடங்களாக தொடர்ந்து இந்த பாம்பு விழா நடக்குது.  

இதற்கெனவே பாம்பு பண்ணைகள் மூலமாக இந்த rattlesnakes வளர்க்கிறார்கள்.  விழா ஆரம்பிக்கும் நாட்களில் குறிப்பிட்ட இடங்களில் அந்த பாம்புகளை விட்டு விடுகிறார்கள்.  மக்கள் பாம்புகளை பிடித்து வர போட்டா போட்டி தான்.....  பரிசுகள் தொடர்ந்து கொடுக்கப்படுகின்றன. 



பாம்புகளை எப்படி பிடிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் மற்றும் டிப்ஸ் கொடுக்கிறார்கள். 


இந்த விழா மூலமாக கிடைக்கும் நிறைய பணத்தில் தான்,  இந்த ஊரின் பல நல்வாழ்வு திட்டங்களுக்கு பயன் படுத்தப்படுகிறது.   அதை குறித்த விவரங்களுக்கு: 


விழா சிறப்பு நிகழ்ச்சிகள்:  
வியாழன் அன்று மதியம்,  அரை மணி நேர Parade ஒன்று ஊரின் முக்கிய பகுதியில் நடக்கும். 

வியாழன் மாலை,  Miss Snake Charmer Scholarship Beauty Pageant  நடைபெறுகிறது. தங்கள் கல்லூரி படிப்புக்காக, Jaycees  வழங்கும் Scholarship (கல்வி உதவி தொகை) க்காக அழகி போட்டிகள் நடக்கும்.  அதில் வெற்றி பெறும் அழகிக்குத்தான், Miss Snake Charmer என்ற பட்டம் வழங்கப் படுகிறது. 

2009 Miss Snake Charmer அழகியாக தேர்ந்து எடுக்கப்பட்டவர்: 

வியாழன் முதல் ஞாயிறு வரை,  இசை - நடனம் என்ற கலை நிகழ்ச்சிகளும் உண்டு. 
இப்படி எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு.... அப்புறம் தான்  விஷமே ...சாரி, விஷயமே  என்னை கொட்டுச்சு..... சாரி, திக்கு முக்காட வச்சுது.....  ம் ..... ம்.......ம்...... ஸ் ...ஸ்......ஸ்.....

பிடிச்சுட்டு வந்த பாம்புகளை எல்லாம் என்ன  பண்றாங்க என்பதில் தான் விஷயமே அடங்கி இருக்குது.... 

 அந்த ஊரில் உள்ள பெரிய அரங்கில் உள்ளும் நடக்கும் நிகழ்ச்சிகளை காண நுழைந்தோம்.   ஒரே பேடு ஸ்மெல்லு ..... ஆமாம்ப்பா ..... துர் நாத்தம்  தாங்கல ..... ஒரு பெரிய குழிக்குள் பிடித்து வரப்பட்ட எல்லா பாம்புகளும் போட்டு வைத்து இருந்தார்கள்.  அந்த பாம்புகள்,  தங்கள் பாதுகாப்புக்காக, எச்சரிக்கை கொடுக்கும் வண்ணம்  இப்படி ஒரு ஸ்ட்ராங் வாடையை - ஒரு மஞ்சள் திரவம் போல வெளிப்படுத்தி விடுமாம்.   ஆனால், அங்கே மக்கள் ஏதோ ரோசாப்பூ வாசனையில் அன்ன நடை போட்டுக்கிட்டு போற மாதிரி நடந்தாங்க.... நான் விடுவிடுவென அந்த இடத்தை கடந்து போய் விட்டேன். 



 அந்த பாம்புகளிடம் இருந்து விஷம் எப்படி எடுக்கப்படுகிறது - அதை எப்படி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன என்று மூன்று பேர்கள் விளக்கிக் கொண்டு இருந்தார்கள்.  


அடுத்து பார்த்த காட்சியில், எனக்கு குடலை பிரட்டி, அதுவே பாம்பு மாதிரி வெளியே வந்துடும் போல இருந்துச்சு.... இரண்டு பேர்கள் ,  சில பாம்புகளை ஒரு பெரிய பெட்டிக்குள் வைத்து இருந்தார்கள். ஒவ்வொன்றாக வெளியில் எடுத்து,  கசாப்பு கடைக்காரர் போல, பாம்பு தலையை வெட்டி கொண்டு இருந்தார்கள்.  நம்ம ஊர் பக்கம்,  ஆடுகள் பலி கொடுத்துட்டு போற மாதிரி, இங்கே சர்வ சாதாரணமாக பாம்புகளை பலி கொடுத்த மாதிரி சிரச் சேதம் செய்தாங்க...  அந்த தலைகளை ஒன்று விடாமல் சுத்தம் செய்து ஒரு வாளியில் சேகரித்துக் கொண்டார்கள். 



அப்புறம்,    டீன் வயதில் உள்ள சின்ன பெண்களும் ஆண் பிள்ளைகளும்,  தலைகள் இல்லாத பாம்புகளை ஒரு பெரிய கொடியில், ஏதோ துணி காயப் போடுற மாதிரி காயப் போட்டு விட்டு,  கிளிப் மாட்டி,  அதன் தோலை, ஒரு வீச்சாக பிய்ந்து விடாமல், ஒரே பீசாக உரித்து கொண்டு இருந்தார்கள். யம்மா..... என்று ஓடி போய்ட்டேன்.  



அடுத்த பகுதியில் அப்படி உரிக்கப்படும் தோல்களை, எப்படி பதப்படுத்துகிறார்கள் (how to make them into snake skin  leather ) என்று ஒரு குட்டி வகுப்பு நடக்குது.   

அடுத்து ஒரு திருவிழா கடைகள்/சந்தை பரப்பி அந்த அரங்குக்குள்ளேயே வைத்து இருந்தார்கள்.   அந்த பாம்பின் தோல் மற்றும் பதப்படுத்தப்பட்ட தலைகள் வைத்து - குட்டி பாம்பு முதல் பெருசுகள் வரை - செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான பொருட்கள் விற்கப்பட்டுக் கொண்டு இருந்தன. 

கைத்தடி, கம்மல்கள்,  வளையல்கள்,  பெல்ட், ஜாக்கெட்,  பூட்ஸ், கைப்பைகள்,  பர்சுகள்,  மோதிரங்கள், வீட்டு அலங்கார பொருட்கள் என்று வகை வகையாக இருந்தன. ஏதோ கண்காட்சியகம் போல பார்த்து கொண்டு இருந்தேன்.  அந்த பாம்பு கொத்துனா,  மனுஷனுக்கு சங்குதான்.  அந்த பாம்பை,  இந்த மனுஷம் கொத்துனா - சங்கு மட்டும் அல்ல - இத்தனை பொருட்களா? என்று அதிசயமாக இருந்துச்சு.... விற்பனை கோலகாலமாக நடந்து கொண்டு இருந்துச்சு.  
rattlesnake belt, purse, money-clip: 

 rattlesnake pen: 

 rattlesnake கத்தி உறை:

அந்த பையன் போட்டு இருக்கிற செயின் பாருங்க: 

 Rattlesnake Boots:  (most popular items) 

rattlesnake rattle ear rings:

rattlesnake real  bones necklace: 

நான் என் கணவரின் கையை பிடித்து கொண்டு, போதுண்டா சாமி..... என்னை பலி/பழி வாங்கியது போதும் ....வாங்க போகலாம் என்று இழுத்து கொண்டு வந்தால்,  அரங்கின் வெளியேறும் வாசல் பக்கம் - கூட்டம் அலைமோதிக் கொண்டு இருந்துச்சு... வெளியே வர முடியல.  அப்புறம், மெல்ல வெளியே வந்தால் அந்த வாசல் பக்கம் தான் ஒரு கடை போட்டு,    french fries  உடன்  பாம்பு வறுவல் விற்றுக் கொண்டு இருந்தார்கள்.  ஏதோ மீன் வறுவல் மாதிரி மக்கள், என்ஜாய் பண்ணி சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள்.  வயதானவர்கள் - சிறுவ சிறுமியர் - ஆண் பெண் - என்று எல்லோரும் ஜாலியா சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள்.  

 corn dog என்பது நாய் கறி அல்ல,  சோள மாவில் முக்கி எடுத்து பொரிக்கப்பட்ட ஒரு வகை sausage ஆகும். 
Rattlesnake fry with french fries: 

நான் அங்கே பிடிச்ச ஓட்டத்தில் எங்க கார் பக்கம் வந்துதான் நிறுத்தினேன்.  நாங்க அப்போ இருந்த லபக் ஊருக்கு பத்திரமாக வந்து சேர்ந்திட்டோம்.  பசித்தாலும்,  ஏனோ எதையுமே சாப்பிடத் தோணல .....ரெண்டு நாளைக்கு.......  அப்புறம் தான் சகஜ நிலைமைக்குத் திரும்பினேன். 

படங்கள்:  நன்றி கூகிள் அக்கா (எனக்கு இருந்த பதட்டத்தில், நிறைய படங்கள் எடுக்கல.  நின்னு நிதானமாக எடுத்து கொண்டு இருந்தால்,  என்னையே படமா மாட்டி இருப்பாங்க.... என் நிலைமை நிச்சயமா அப்படி ஆகி இருந்து இருக்கும்.  அவ்வ்வ்வ்....) 

பதிவை  வாசிச்சிட்டு  உங்களுக்கே ஒரு மாதிரியா இருந்துச்சுனா,  நேரில் இதையெல்லாம் எடிட் பண்ணாமல் பார்த்த என் நிலைமையை யோசிச்சு பாருங்க....
நாட்டுக்கு நாடு நஞ்சுபுர சம்பவங்கள் உண்டு போல.... அதற்கு அமெரிக்கர்களும் விதிவிலக்கு அல்ல. நேரில் பார்த்திரா விட்டால், நான் கூட நம்பி இருந்து இருக்க மாட்டேன்
Thnxs:http://konjamvettipechu.blogspot.com/2011_04_01_archive.html

Wednesday, December 21, 2011

பாம்புகள் பல விதம்

ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் காணப்படும் பாம்பு தைப்பான் (inland taipan) ஆகும். நச்சுப்பாம்புகளுள் மிகக் கொடியது இது. இந்தப் பாம்பின் நச்சுச் சுரப்பியில் எப்போதும் மிகக் குறைந்த அளவு நஞ்சுதான் (0.1 g) இருக்கும். ஆனால் இந்தக் குறைந்த அளவு நஞ்சு மனிதர்கள் ஐம்பது பேரைக் கொல்லப் போதுமானது ஆகும். (இரண்டு நூறாயிரம் எலிகளைக் கொல்ல வல்லது இந்த அளவு நஞ்சு.)
ஆப்பிரிக்கப் புல்வெளிகளில் வாழும் கறுப்பு மம்பா (black mamba) உலகின் மிக விரைவான பாம்பு. இந்தப் பாம்பின் விரைவு மணிக்குப் பன்னிரண்டு கல் (12 mph; 19 km/h) ஆகும். இது 11 அடி நீளம் வளரும்.
மலைப்பாம்புதான் (Asian reticulated python) உலகின் மிக நீளமான பாம்பு. இந்தோனேசியாவின் சுலாவெசித் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மலைப்பாம்பின் நீளம் முப்பத்து மூன்று அடி (10 m) ஆகும்.
அமேசன் ஆற்றுப்பகுதியில் உள்ள சதுப்புநிலத்தில் உயிர்வாழும் பாம்பு அனாகொண்டா (anaconda). பாம்புகளுள் மிகுந்த எடைகொண்டது இது. பிடிபட்ட 27 அடி 9 அங்குலம் நீளமுள்ள ஓர் அனாகொண்டாவின் எடை ஏறத்தாழ 227 கிலோகிராம் (500 பவுண்டு) இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நச்சுப் பாம்புகளுள் மிகச் சிறியது தெற்கு ஆப்பிரிக்காவில் நமிபியா நாட்டில் காணப்படும் நமாகுவா குறும்பாம்பு (Namaqua dwarf adder) ஆகும். முழு வளர்ச்சி அடைந்த பாம்பு எட்டு அங்குல (20 cm) நீளம் மட்டுமே இருக்கும்.
மூன்று கரீபியன் தீவுகளில் மட்டும் காணப்படும் இந்தப் பாம்பு நூல் பாம்பு (thread snake) எனப்படுகிறது. பாம்புகளுள் மிகச் சிறியது இது. இந்தப் பாம்பினத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகச் சிறிய பாம்பின் நீளம் நாலேகால் அங்குலம் (10.8 cm) ஆகும்.
மேலும் ஒரு செய்தி:
மேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒருவகை விரியன் பாம்புதான் ( Gaboon viper) பாம்புகளுள் மிக நீளமான நச்சுப் பற்களைக் கொண்டது. இதன் நச்சுப் பற்களின் நீளம் இரண்டு அங்குலம் (5 cm) ஆகும்.
நன்றி:  அ. நம்பி – நனவுகள்

Wednesday, November 23, 2011

மலைப் பாம்பின் இறைச்சி இனிப்பாக இருக்குமாமே?


ஆணைத் தேடிச் செல்லும் பெண் மலைப்பாம்பு 

மூவாயிரத்துக்கும் மேல் உள்ள பாம்பு வகைகளில் மலைப் பாம்புதான் அரதப் பழசுரகம்! 13 கோடியே 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது! முதன் முதலில் தோன்றிய மூதாதையர்!!  விஷம் இல்லாத பாம்புகள்!
ஸ்குவாமேட்டா ( Squamata) ஆர்டரைச் சார்ந்த பைத்தோனிடே(Pythonidae)குடும்பத்தை சார்ந்த இந்திய வகை பாம்பு 19 அடி நீளத்துக்கு இருக்குமாம்.ஆஸ்திரேலியாவில் 20 அடியும் தென் அமெரிக்காவின் அனகோன்டா 25 அடிக்கும் மிகாமலும் இருக்கின்றன! ஆனால் ரெட்டிகுலேட்டட் பைத்தான் (Reticulated Pythons,)என்னும் மலைப் பாம்புதான் வாழும் பாம்புகளில் பெரியது இது 35 அடி நீளம் கூட ஒய்யாரமாக வளர்ந்துத் தள்ளும்! எடை 350 பவுண்டைத் தாண்டும் வயிற்றுப் பகுதியின் குறுக்கு வெட்டுத் தோற்றம் மட்டும் 3.5 அடிஇருக்கும்!

பைத்தான் மொலூராஸ் (Python molurus) எனப்படும் நம்ம ரெகுலர் மலைப்பாம்பு வெள்ளையும் மஞ்சளும் கலந்த மண் நிறத்தில் இருக்கும் உடலின் மேற்புறத்தில் சதுரத் திட்டுக்கள் தலை முதல் வால் வரை வரிசையாக அமைந்திருக்கும்.இதிலும் இரண்டு பிரிவு. 1. கருப்பு தலை மலை பாம்பு 2.இந்திய பாறை மலைப்பாம்பு





பர்மீஸ் (Burmese Python (Python molurus bivittatus) ) மலை பாம்பு ரகங்கள் செல்ல பிராணிகளாக வளர்க்கப்படுகிறதாம்! அதில் கேரமல்பர்மீஸ் ரகம் பார்க்க கொள்ளை அழகு!
 ‘மோல்டிங்’ எனப்படும் தோலுரித்தல் ஆண்டுக்கு ஐந்தாறு தடவை நடக்கிறது. உடலைப் போர்த்தியிருக்கும் பாலிதீன் உறை போன்ற தோலை இளம் பெண் தன் டைட்டான ஜீன்ஸ் பேண்ட்யை கழட்டுவது போல இவை கழட்டித் தள்ளுகின்றன. முதலில் மூக்குப் பகுதியில் தோன்றும் உறை நெகிழ்வை ஏதேனுவோரு கல்லிடுக்கில் அல்லது முள்ளில் சிக்க வைத்து பொலபொலவெனத் தோலுரித்து விட்டு நிர்வாணமாய்? ப்யூட்டி பார்லரில் இருந்து மேக்கப் முடித்து வெளியே வரும் பிகர் கணக்காய் ‘ரம்பாவின் தொடை’ மினுமினுப்புடன் வெளிப்படும் அப்புறம் சுமார் இரண்டரை மாதங்களுக்கு இந்தப் பளிச் அலங்காரம்தான்!தோலுரித்த மலைப் பாம்பு தன் மேல் “டேட்டூ “ செய்த டிசைன் ஆக நல்ல வெளிச்சத்தில் பார்த்தால் பல நிறங்களோடு அதன் மேனி 

பளப் பளப்பாய் ஒளிரும்! என்கிறார் டாக்டர். “ மன்மதன்” சந்திரசேகரன் ( இந்தஇடத்தில் ரம்பாவின் படத்தை போடவேண்டும் அடம்பிடித்தார்! பாம்புகோபித்துக்கொள்ளும் என மறுத்துவிட்டேன்.ஆகையால் மலைப் பாம்பின் படம் மட்டும் கீழே)
மலைப்பாம்பின் தோல்! அருகாமையில்!!
 அடர்ந்த காடு பகுதிகளும் ஆற்றோரப் படுகைகளும் இவைகளுக்கு பிடித்தமான வாழும் பகுதி. இவற்றில் காட்டுவாசி மலைப் பாம்புகள் ஜாலியாக மரங்களில் உயரமாக ஏறி கிளையோடு கிளையாக தொங்கி கொண்டே தூங்குவது வாடிக்கை!ஆற்றோரவாசிகள் கரையோரத்தில் மூக்கை மட்டும் வெளியே விட்டு நீருக்குள் அமிழ்ந்து கிடப்பது பழக்கம்.



தேவைப்பட்டால் தண்ணீரில் அட்டகாசமாய் நீச்சலடிக்கும். மேலும் தண்ணீருக்குள் மூச்சைப்பிடித்து அரைமணி நேரம் கூட தம் புடிக்குமாம்!!
மலைப் பாம்புகள் மகா சோம்பேறிகள் ஆபத்து காலத்தில் கூட அப்படியொன்றும் வேகமாகத் தப்பிக்கமுடியாது. இரையை கண்டால் மட்டும் கொஞ்சம் வேகமாக இயக்கம் இருக்கும். 

மேக்ஸிமம் அளவிற்கும் விரிக்ககூடிய தன்மையை கொண்ட தாடை எலும்புகள்

இணைக்கப்படாத  வாயை பிளந்து கொண்டு தன்னுடைய பிளவு நாக்கின்

 (Vomeronasal organ) உணர் சக்தி, மற்றும் மோப்ப சக்தி மூலம் இரையை நோக்கி

வேகமாக முன்னேறும் போது விலா எலும்புகளின் அலைஅலையான 

இயக்கத்தை பயன்படுத்தி ஒரே நேர்கோட்டில் செல்லும். அப்பொழுது துளி கூட

உடலை நெளிக்காது. இரையை நெருங்கியவுடன் தன் வால் பகுதியை வீசி 

இரையின் உடலை ஒன்றிரண்டு சுற்றுகள் சுற்றி இறுக்கிப் பிடித்துக் கொள்ளும்.பிடியை மென்மேலும் இறுக்குவதால் இரை சுவாசத்துக்கு ஏங்கி உயரிழக்கும்.
இறந்த இரையின்  உடல் முழுவதையும் ஒரு முறை நாக்கால் முகர்ந்து பார்த்து விட்டு (ஆம் பாம்புக்கு நாக்குதான் மூக்கு) படிபடிப்படியாக விழுங்கத் தொடங்கும்.முன் ஜாக்கிரதையாக தலையைத்தான் முதலில் விழுங்கும். அதன் பின் அளவற்றுச் சுரக்கும் உமிழிநீரின் உதவியோடு கொஞ்ச கொஞ்சமாக ஸ்லோமோஷனில் டைட்டானிக் கப்பல் போல இரை உள்ளே போய்க் கொண்டிருக்கும். உள்ளே விழுங்கப்படும் இரை தப்பி  வெளியே வராமல் இருக்க மலைபாம்பின் பல் அமைப்பு உள்ளே வளைந்து சிறப்பு ஒன்வே லாக்காக இருக்கும்.இப்படியொரு  நல்ல விருந்தை முடித்துக் கொண்ட மலைப்பாம்பு இடத்தை விட்டு நகர முடியாமல் அசைவற்றுக்கிடக்கும் வலுக்கட்டாயமாக நகர வைத்தால் விழுங்கிய இரையின் கொம்புகள், நகங்கள், பற்கள் போன்ற கூரிய பகுதிகள் பாம்பின் உடலைக் கிழித்துவிடக்கூடும். அதனால் தான் இரைக்குபின் அசைவற்று படுத்து கிடக்கும்.மனிதர்களின் தோள்பட்டை விரிந்துள்ளதால் மலைப்பாம்புக்கு மனிதன் வேண்டாத இரை! இருப்பினும் குழந்தைகள் கிடைத்தால் இரையாக்கிவிடும். ஒரு பெண்ணை மலைபாம்பு தாக்கி விழுங்க முயற்சி செய்துள்ளது. ஏன் விஷம் உள்ள நாகபாம்புடன் கூட மலைபாம்பு மோதியுள்ளது.
மற்ற விலங்குகளை போல மலைப்பாம்புகள் தினசரி சாப்பிட்டு ஏப்பம் விட்டு அதை அன்றே ஜீரணித்து மறுபடியும் விருந்துக்கு தயாராவதில்லை. உட் கொண்ட இரையின் பருமனையும் சீசனையும் பொறுத்தே ஜீரணம் ஆகும்.கோடைக்காலத்தில்  எலி, கோழி, வாத்து போன்றவை ஒரு வாரத்திலும், முயல்,பெருச்சாளி, முள்ளம்பன்றி போன்றவை இரண்டு வாரத்திலும் ஆடு, மான், நரி போன்றவை மூன்று வாரத்திலும் என ஜீரணமாக மலைபாம்புகள் சார்ட் வைத்துள்ளது. அதுவரை இவைகள்
நான்‘டயட்’என்று அருகில் வரும் இரைகளிடம் கூறிவிடும். இரை எதுவும் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் கூட ஒரு மலைப்பாம்பு உயிருடன் இருக்கும்.  அந்த சமயங்களில் தன்னுடைய வயிறு, இதயம், அகியவற்றின் அளவு  மற்றும் ஜீரண அமிலத்தை சுருக்கி கொள்ளும் சிறப்பு வசதியை கொண்டிருக்கிறது. இரை உள்ளே நுழைந்தவுடன் மேஜிக் போல் எல்லாமே அதிகம் ஆகிவிடும்
ஒரு ஆட்டை முழுமையாக  விழுங்கும் மலைப் பாம்பு


5 முதல் 6 வயது முடிந்து விட்ட மலைப் பாம்புகளில்  இனச்சேர்க்கை டிசம்பர்,ஜனவரி, பிப்ரவரி, மாதங்களில் மட்டுமே. இந்தச் சீசனில்“ஈஸ்ட்ரோஜன்”ஆதிக்கத்தில் இருக்கும். (இதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே இனச்சேர்க்கைக்கான முன் ஏற்பாடாக புதரில் அல்லது மரபொந்துகளில் புரூமேஷன் (Brumation ) தயாரிப்பு பணியை செய்யும்.) இந்த தருணத்தில்  பெண் மலைப் பாம்புக்கு துணை தேவைப்படும். இதற்காக கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் ஆண் மலைப் பாம்பின் இருப்பிடம் தேடிச் செல்லும் ஆனால் அருகில்  வந்தவுடன் பெண்மைக்கே உரிய இலக்கணத்துடன் மிக அருகில் செல்லாமல் தூரத்திலிருந்தே சமிக்கை தரும்.. அந்த நேரம் ஆணுக்குத் தோதாக இருந்தால் மட்டுமே  காதல் விளையாட்டு! இல்லையென்றால் உதட்டைப் பிதுக்கி நோ சொல்லிவிடும். கனமான இரை வயிற்றுக்குள் இல்லாதவரையில் ஆண் மலைப் பாம்புகள் தன் சோம்பேறித்தனத்தை தூர வைத்துவிட்டு போனால் போகிறது என்பது போல் இணைக்கு இணங்கிவிடும்!

காதல் விளையாட்டின் போது ஒன்றோடொன்று  சுற்றி பின்னிப் பிணைந்து கொள்ளும். உடலை இறுக்கி அந்த இறுக்கத்தையும் ரசித்தபடி உடலின் ஒவ்வொரு மில்லி மீட்டரும் ஸ்பரிசிக்கும் வகையில் நீண்ட நேரம் ஆலாபணை நடத்தும்.மலைப்பாம்பின் வால் பகுதியில்தான் “மேற்படி” சமாச்சாரங்கள் உள்ளன. ஆண் மலைபாம்புக்கு வலது புறம் ஒன்று இடது புறம் ஒன்று என இரண்டு ஆண் குறிகள் உள்ளது. (Hemipenes)  சூழ்நிலைக்கு ஏற்ப ஏதேனும் ஒரு விஷயத்தை இனவிருத்திக்குபயன்படுத்தும். அந்த  “வால்”சண்டையில் வால்கள் சரியாக இணையும் பொழுது வெற்றிகரமான சேர்க்கை நடந்து முடியும்..பிறகு இரண்டும் மங்களம் பாடி இனிதே பிரிந்துவிடும்.

வாலோடு வால் – முக்கிய நிகழ்வு


சினைமுட்டைகளை வயிற்றில் உள்ளடக்கிய மலைப் பாம்பு

மூன்று மாதங்களில் பெண் மலைப்பாம்பு 12 முதல் 36 முட்டைகள் இடும். உடலை ஸ்பிரிங் போல் சுற்றி முட்டைகள் 58 நாட்கள் தன்னுடைய உடலில் அதிக அளவில் உஷ்ணத்தை உருவாக்கி  அடை காக்கும்.


பிறக்கும் குஞ்சுகள் 2.5 அடி நீளத்திலிருக்கும். முதல் தோலை உரிக்கும் வரை முட்டைக்குள்ளேயே இருந்துவிட்டுதான் பின் வெளியில் வரும். வெளியேவந்தவுடன்  தன் முதல் வேட்டையை ஆரம்பிக்கும். அத்துடன்  பெண் மலைப்பாம்பின் தாயின் பராமரிப்பும் முடிந்துவிடும்.
பிறந்த குட்டி மலைப்பாம்புகள் காட்டுப் பூனை முதல் நரி வரை பல எதிரிகளிடம் தப்பினால் 4 ஆண்டுகளில் நன்றாக வளர்ந்த  மலைப் பாம்பு ஆகிவிடும். வளர்நத பாம்புகளுக்கும் சிங்கம், புலி, மனிதன் என பல எதிரிகள் இருப்பதால் இதனுடைய எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. மலைப் பாம்பு தன் எதிரிகளிடமிருந்து தப்பிவிட்டால் தனது ஆயுள் காலம் 20 ஆண்டுகள் வரை வாழ்ந்துவிடும்!
மனிதர்களின் மலைப்பாம்பு பயன்பாடு மலைக்க வைக்கிறது. மலைபாம்பின் இரத்தம் தாய்லாந்தில் மார்க்கட்டில் ஏக கிராக்கி! வீரியத்தை அதிகப்படுத்துகிறதாம்!!
இந்தியாவில் மலைப்பாம்பின் கொழுப்பு முக்கியமாக கேரளா பகுதியில் மருந்து பொருளாக பயன்படுகிறது. எதற்கு என்று சொன்னால் ஆஸ்துமா நோயாளிகள் கேரளா ஆயுர்வேதிக் மருந்துகளை சாப்பிட தயங்குவார்கள்.
மேலை நாடுகளில் மலைப்பாம்பின் தோலில் செய்த அலங்கார  பொருள்கள்,பர்ஸ், கை பை விற்பனை சக்கைப்போடுபோடுகிறது.
சீனாவின் சிலப் பகுதிகளில்  மலைபாம்பின் இறைச்சி உணவாகிறது! அவர்களின் கூற்றுப்படி மலைப் பாம்பின் இறைச்சி சர்க்கரை போல் இனிக்கிறதாம்! யாரேனும் முயற்சித்து உண்மையா என  கூறுங்களேன்!!


Thursday, November 10, 2011

பாம்புகள் பற்றிய தகவல்கள்



சென்னை மற்றும் புறநகரில் கடந்த சில ஆண்டுகளாக பாம்புகள் அதிகளவில் காணப்படுகின்றன. இதனால், மக்களுக்கு பாம்புகள் குறித்து பய உணர்ச்சி அதிகரித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை ஆண்டிற்கு 300 நல்லப்பாம்புகள், 500 சாரைப் பாம்புகள் மற்றும் இதர பாம்புகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை வனத்துறையினரால் பிடித்து அடர்ந்து காப்புக் காடுகளில் விடப்படுகின்றன. இருப்பினும் பாம்புகள் பற்றிய அச்சம் மக்களிடம் குறையவில்லை.
உலகளவில் 2,968 வகையான பாம்புகள் உள்ளன. இதில்,இந்தியாவில் மட்டும் 276 வகை பாம்புகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள பாம்பு வகையில் நான்கு மட்டுமே விஷமுள்ளது. மற்றவை விஷமற்றது.

அவைகள் நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன் மற்றும்சுருட்டை விரியன்.

Description: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihKKWxHe6B80_Fa9FuigdgnaUtp7xcSgbV1YJGNvjy3VIGXbxR4zBBn9xydzWGfJ5ceOh0qr9IlzkQMZTAp6kozEOs3eb3RDVc42Mfpv1Mv7z-if-lIzIkwRedNCB1j-Nj9RkGiOn_6p0/s200/nallap.jpg
நல்லபாம்பு: பழுப்பு, மஞ்சள் அல்லது கறுப்பு நிறங்களை கொண்ட நல்ல பாம்புபடம் எடுக்கும் தன்மை கொண்டது. ஒரு மீட்டர் நீளத்தில் பருவமடையும் இந்த பாம்பு 2.2 மீட்டர் நீளம் வரை வளரும். இவைகள் எலி வலை மற்றும் கரையான் புற்றுகளில் வாழும். நல்ல பாம்பின் விஷம் நரம்பு மண்டலத்தையும், சுவாச மண்டலத்தையும் தாக்கி மரணம் விளைவிக்கக் கூடியது. சென்னை மற்றும் புறநகரில் இவைகள் பரவலாக காணப்படுகின்றன.

Description: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtsuRVAbl851I1_V-lsbbtX1gbucX88wblsMLyCGLMRO792My56_GTEii12gBoHDMsyMLoe1eHEasLCHI0jgdSOQJtvYQ-gmXEDfKEnZ-swqL_4zEvRbhSuWE8cbEY-ZlKXJUUTsaHpwY/s200/katu+p.jpg
கட்டுவிரியன்: இரவு நேரங்களில் மட்டுமே இரை தேடி செல்லும் இந்த வகை பாம்பு மேல்புறம் பளபளக்கும் கறுமை நிறத்துடன் வால் வரை தொடரும் மெல்லிய வெள்ளைக் குறுக்கு கோடுகளும் காணப்படும். பாம்பின் கீழ்புறம் வெள்ளை அல்லது மஞ்சள் நிறம் கொண்டதாக காணப்படும். இதன் நாக்கு வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். இது1.75 மீட்டர் நீளம் வரை வளரும். கரையான் புற்று, எலி வலை,கற்குவியலில் இவைகள் வாழ்ந்தாலும் நிலத்தில் வாழும் பாம்புகளுக்கு மட்டுமே வீரியம் அதிகம். இந்த பாம்பின் விஷம் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது. சென்னை மற்றும் புறநகரில் குறைந்த அளவே காணப்படுகிறது.

Description: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEik9vpnBfofUF1x7WSsPLxf2SMyJqa-kNlX_Ca4xTR1ew3pmtdV-QLjl-Ni7_zTZMVVjQfRhyphenhyphenlLfs01iopUtoz5pBBNgiX7HClf7l5QPk6Loooy9GHKyOk6LUu4Wq_MaVvwBP93ydoFygQ/s200/kka+v.jpg
கண்ணாடி விரியன்: இரவு நேரத்தில் காணப்படக்கூடிய இந்த பாம்பின் தலைமுக்கோண வடிவில் இருக்கும். கண்ணின் பாவை நெடு நீள வடிவத்திலிருக்கும். பழுப்பு அல்லது மஞ்சளம் கலந்த பழுப்பு நிறத்தில் உள்ள இந்த பாம்புகளின் மேல்புறம் பழுப்பு அல்லது மஞ்சள் நிற வட்ட வடிவம் காணப்படும். இது 1.80 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. முட்புதர் மற்றும் மலைப் பகுதிகளில் அதிகம் காணப்படும். மிக நீளமான விஷப் பற்களை கொண்ட இந்த பாம்பிம் விஷம் இதயத் திசுக்களையும்,ரத்த ஓட்ட அமைப்பினையும் தாக்கி மரணம் விளைவிக்க கூடியது. இந்த வகை பாம்பும் சென்னை புறநகரில் மிகக்குறைந்த அளவே காணப்படுகின்றன.

Description: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieYOu1ICLKIdgWiztAnawUipqeHR5x2X6at1azZGQ4tv0j6ul1iMallOKpX9nnkMv2bZmEXGu8No_XtS9IyMeDRZb8mgPoFzncaYCGHczA2CuKDtiV0GkfazMNpAf3Fz2LrfmGBaBJ5qw/s200/kannadi.jpg
சுருட்டை விரியன்: இந்த பாம்பின் கண்கள் மிகப்பெரியதாக காணப்படும். வெளிர் மற்றும் அடர் பழுப்பு செந்நிறம், சாம்பல் அல்லது மணல் நிறத்துடன் உடலின்மேற்புறத்தில் வளைவு வடிவங்களை கொண்டு காணப்படும். இதன் தலையின் மேற்புறம் அம்பு வடிவம் காணப்படும். 50செ.மீ., நீளத்தில் பருவமடையும் இந்த பாம்பு 80 செ.மீ., நீளம் வரை வளரக் கூடியது. வறண்ட பரந்த நிலப்பரப்புகள் மற்றும் அதிக மழை பெய்யும் மலைப் பகுதிகளில் அதிகம் காணப்படும். பகல் நேரத்தில் இந்த பாம்புகள் மரப்பட்டைகள், கற்களுக்கு இடையிலும் கற்றாழை போன்ற செடிகள் அடியிலும் காணப்படும். இந்த பாம்பின் விஷம் ரத்த மண்டலத்தை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. தென்சென்னை கடற்கரை பகுதிகளில் இந்த வகை பாம்புகள் ஓரளவு காணப்படுகின்றன.

தங்கத்தை விட மதிப்பானது விஷம்: வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் படி பாம்புகள் அனைத்தும் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்டுள்ளன. அரசின் அனுமதி மற்றும் உரிமம் இல்லாமல் அவற்றை பிடித்தலோ, அடித்து கொன்றாலோ அல்லது ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு சென்றாலோ அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 25ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஏனெனில் பாம்புகள் தங்கத்தை விட விலை மதிப்பு மிக்கது. அவைகள் மனிதர்களுக்கு பெரும் உதவிகளை செய்து வருகின்றன. பாம்பு விஷம் மருத்துவ துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு கிராம் நல்லபாம்பு விஷம் 28 ஆயிரம் ரூபாய்; கட்டுவிரியன் விஷம் 30 ஆயிரம் ரூபாய்;கண்ணாடி விரியன் விஷம் 40 ஆயிரம் ரூபாய், சுருட்டை விரியன் 45ஆயிரம் ரூபாய் என விற்பனை செய்யப்படுகின்றன.

விஷமற்ற பாம்புகள்: சென்னை மற்றும் புறநகரில் விஷமற்ற பாம்புகளான சாரைப்பாம்பு, நீர்சாரை அதிகம் காணப்படுகின்றன. இது தவிர வெள்ளிக்கோல் வரையன், பச்சை பாம்பு, கொம்பேறி மூக்கன், மண்ணுளி பாம்பு, பவழப்பாம்பு, அழகு பாம்பு, பிரைடல் பாம்பு, நீர்காத்தான்குட்டி, பசுஞ்சாம்பல் நிற தண்ணீர் பாம்பு, சிறு பாம்பு போன்றவை சென்னை நகரில் சிறிதளவே காணப்படுகின்றன.

பாம்புகள் பற்றிய தகவல்கள்: மனித இனத்திற்கு முன்பே தோன்றியவை பாம்புகள். இவைகள் பெரும்பாலும் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். ஆனால், கண்ணாடிவிரியன், பச்சை பாம்பு போன்ற சில வகைகள் குட்டி போடும். நல்ல பாம்பு முட்டையிட்டு குட்டிகள் வெளி வரும் வரை பாதுகாக்கிறது. பாம்புகள் சுற்றுப்புறத்தில் உள்ள வாசனைகளை உணரவே நாக்கை அடிக்கடி வெளியில் நீட்டும். பாம்புகளால் ஒலி அலை உணர இயலாது. அதற்கு வெளிக்காது மற்றும் நடுக்காது அமைப்புகள் இல்லை. அதன் உடல் வளர்ச்சி காரணமாகவே அதன் மேற்தோல்களை உரித்துக் கொள்கின்றன.

பாம்பு கடி முதலுதவி: பாம்புகளில் நச்சு சுரப்பி, உமிழ்நீர்சுரப்பியிலிருந்து தோன்றியதாகும். விஷமுள்ள பாம்புகளின் கடி அனைத்துமே உயிரிழக்க செய்வதில்லை. விஷப் பாம்பு கடியின் பாதிப்பு உடலில் செல்லும் விஷத்தின் அளவைப் பொருத்தே அமையும். பாம்புக் கடியால் ஏற்படும் பல மரணங்கள் விஷத்தினால் ஏற்படுவதில்லை. அதிர்ச்சியினால் ஏற்படுவதாகும். எனவே, பாம்பு கடி பட்டவரை அதிர்ச்சியடையாமல் பார்த்து கொள்ள வேண்டும். கடிபட்ட இடத்திற்கு மேல் ரத்த ஓட்டம்தடைபடாத வகையில் கட்டு போட வேண்டும். பாம்பு கடிபட்டவரை விஷமுறிவு சிகிச்சையளிக்கு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும்.

விஷமுள்ள, விஷமற்ற பாம்புகள் கண்டறிவது எப்படி:

* பாம்பின் வால் குறுக்கு வாக்கில் தட்டையாக அமைந்து இறுதியில் அகன்று இருந்தால் அது விஷமுள்ள கடற்பாம்பு வகையாகும்.

* பாம்பின் வால் பகுதி உருளை வடிவில் அமைந்து, வயிற்று புற செதில்கள் விரிந்து காணப்பட்டு, தலையில் சிறு சிறு செதில்கள் இருந்தால் அது விஷமுள்ள விரியன் பாம்பு வகைகள்.

* கண்ணுக்கும், மூக்கு துவாரத்திற்கும் இடையே சிறு குழி காணப்பட்டால் அது விஷமுள்ள குழிவிரியன் வகையாகும்.

* பாம்பின் முதுகின் நடுவில் உள்ள செதில்கள் அறுங்கோண வடிவில் அமைந்து, பிற செதில்களை விட பெரியதாக இருந்து, கீழ் உதட்டு செதில் பெரியதாக இருந்தால் விஷமுள்ள கட்டுவிரியன் வகையை சேர்ந்ததாகும்.

* வயிற்றுபுறம் விரிந்து காணப்படாமல் இருந்தால் அது விஷமற்றபாம்புகளாகும்.

* தலைப் பகுதியில் பெரிய கவசத்தால் தகடுகள் அமைந்து சாதாரணமாக காணப்பட்டால் அவைகள் விஷமற்றவைகள்.



Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites