பிரெஞ்ச் கிராபிக் கலைஞர் மைக்கல் றெனோட்டினால் இந்த அதிவேகமாக மாறும் கறுப்பு வெள்ளைப் படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த GIF (Graphics Interchange Format) கோப்பு வடிவமானது 1987ஆம் ஆண்டு முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். இக் காணொலி 1.24 நீளமான ஒரு பகுதியாகும். இவை சிறிய சிறிய அனிமேசன்களுக்காகப் பிரபல்யமாகப் பயன்படுத்தப்படுவதாகும். 1983ஆம் ஆண்டு உள்ளூர் தொலைக்காட்சியின் காலநிலை அறிவிப்புச் செய்தியாளர்களிற்காகப் போட்டியிட்டவர்களின் படங்கள் முதலில் கலங்கலாக ஆரம்பித்துத் தொடர்கின்றன. பலதரப்பட்ட மனிதர்கள் இதில் காணப்படுகின்றனர். Morphing என்ற தொடர்ச்சியாக மாறும் முறையை இன்னொரு Morphing செய்யப்பட்ட GIF மாதிரியுடனான படத்திற்குள் புகுத்தி இதனை உருவாக்கியுள்ளார். |
0 comments:
Post a Comment