ஆண்களின் சிந்தனை ஓட்டம் பொதுவாக இருக்கிறதாம். இதில் தவறாமல் இடம் பெறுகிறது செக்ஸ் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
அதேசமயம், ஆண்களின் மூளை ஒவ்வொரு 7 விநாடிக்கும் ஒருமுறை செக்ஸ் குறித்த சிந்தனையில் மூழ்குவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. அப்படிப் பார்த்தால், ஒரு ஆண், சராசரியாக ஒரு நாளைக்கு 16 மணி நேரம் விழித்திருப்பதாக எடுத்துக் கொண்டால், ஒரு நாளைக்கு 8000 முறை அவன் செக்ஸ் குறித்த சிந்தனையில் மூழ்கியிருக்க வேண்டும். ஆனால் இது சாத்தியமா, 7 விநாடிகளுக்கு ஒருமுறை ஆண்கள் செக்ஸ் நினைப்பில் மூழ்குகிறார்களா என்று செக்ஸாலஜிஸ்ட்டுகளிடம் கேட்டால், கண்டிப்பாக வாய்ப்பே இல்லை என்று மறுக்கிறார்கள்.
இதுகுறித்து டாக்டர் சீமா என்பவர் கூறுகையில், இதற்கு வாய்ப்பு மிக மிகக் குறைவு. ஒரு வேளை யாருக்காவது அப்படி இருந்தால் நிச்சயம் அவர் மன நல மருத்துவரைப் போய்ப் பார்ப்பது நல்லது. காரணம், செக்ஸ் ரீதியான கோளாறு இருந்தால்தான் இப்படிப்பட்ட எண்ணம் தோன்றும். அதற்கு சிகிச்சை தேவை என்கிறார்.
32 வயதான மல்லிகா என்ற உளவியல் துறை சார்ந்த பெண் கூறுகையில், இது நிச்சயமாக உண்மை இல்லை என்றே நான் நினைக்கிறேன். சில ஆண்களுக்கு செக்ஸ் நினைப்பு அதிகம் இருப்பது உண்மைதான். ஆனால் ஒட்டுமொத்த ஆண்களையும் இதில் சேர்த்து விட முடியாது. செக்ஸைப் பற்றியே எப்போதும் ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பொதுவாக கூறுவது தவறு என்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், பள்ளிகளில், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு செக்ஸ் குறித்த ஆர்வமும், ஈர்ப்பும் சற்றுஅதிகமாக இருக்கும். இது இயற்கையானதே. அவர்களது ஹார்மோன் வளர்ச்சிதான் அதற்குக் காரணம். ஆனால் 26 வயதைத் தாண்டி விட்ட ஆண்களுக்கு 7 விநாடிகளுக்கு ஒரு முறை செக்ஸ் நினைப்பு வரும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களது மனதில் செக்ஸை விட மற்ற விஷயங்கள் நிச்சயமாக அதீதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் பல்வேறு வகையான பொறுப்புகள் மனதில் வந்து உட்கார்ந்து விடும். அதுகுறித்த சிந்தனையில்தான் அவர்கள் அதிகம் மூழ்கியிருப்பார்களே தவிர செக்ஸ் அவர்களை ஆக்கிரமிக்கும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார்.
28 வயதான நம்ரதா என்பவர் கூறுகையில், நான் எனது ஆண் நண்பர்களை அவ்வப்போது சீண்டிப் பார்ப்பேன். அவர்களில் பெரும்பாலானோரும் செக்ஸ் குறித்து அதிகம் சிந்திப்பதில்லை என்பதை புரிந்து கொள்வேன். தங்களது வேலையில் முன்னேறுவது, குடும்பப் பொறுப்புகள், மனைவி, குழந்தை குறித்த அக்கறை உள்ளிட்டவைதான் அவர்களிடம் அதிகமாக இருக்கும். செக்ஸ் குறித்த சிந்தனை அவர்களிடம் அதீதமாக இருப்பதில்லை என்றார்.
சரி மருத்துவ ரீதியாக ஒரு ஆணின் மனது செக்ஸ் குறித்து எந்தவகையான சிந்தனையைக் கொண்டிருக்கும் என்று டாக்டர் சீமாவிடம் கேட்டால், பெண்களை விட ஆண்கள் வெளிப்படையாக செக்ஸ் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள். இது பொதுவானது. மேலும் செக்ஸை ஒரு மனப் பளுவை நீக்கும் மருந்தாக ஆண்கள் கருதுகிறார்கள். பெண்களைப் பொறுத்தவரை அப்படியில்லை.
ஆண்கள் செக்ஸ் சிந்தனையில் மூழ்குவது என்பது பெண்களை விட அதிகம் நடக்கும் ஒன்றுதான் என்றாலும் கூட 7 விநாடிகளுக்கு ஒருமுறை சத்தியமாக நடப்பதில்லை என்பதே உண்மை என்றார்.
இதற்கிடையே, ஆண்களின் செக்ஸ் குணாதிசியங்கள் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் வித்தியாசமான முடிவுகள் வந்துள்ளன.
அதில், 54 சதவீத ஆண்கள் தினசரி செக்ஸ் குறித்த சிந்தனையில் மூழ்குவதாகவும், ஒரு நாளைக்கு பலமுறை செக்ஸ் சிந்தனை அவர்களுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 43 சதவீதம் பேருக்கு வாரத்திற்கு சில முறையும், சிலருக்கு மாதம் சில முறையும் செக்ஸ் சிந்தனை ஏற்படுகிறதாம். 4 சதவீதம் பேருக்கு மாதத்திற்கு ஒருமுறைதான் செக்ஸ் சிந்தனை வருகிறதாம்.
இதிலிருந்து பார்த்தால், சராசரியாக ஆண்களில் பாதிப் பேருக்கு ஒரு நாளைக்கு ஒருமுறை கூட செக்ஸ் சிந்தனை வருவதில்லை என்பதை உணரலாம்.
உண்மையில், செக்ஸ் சிந்தனை அதிகம் இருப்பவர்களை விட இவர்கள்தான் கவலைக்குரியவர்கள்...!
0 comments:
Post a Comment