இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Wednesday, October 24, 2012

பாப்-கார்ன் வியாபாரம்


ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் இருந்தால், பாப்-கார்ன் வாங்கி சாப்பிடுங்கள். பாப்-கார்னில் அதிகமான அளவு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏனெனில் பாப்-கார்ன் மக்காசோனத்தினால் செய்யப்படுகிறது. அதனால் அதன் சத்துக்கள் போய்விடுகின்றன என்று நிறைய பேர் நினைக்கின்றனர். ஆனால் அது தான் தவறு, பாப்-கார்னில் இனிப்பு அல்லது உப்பு என்று சுவைக்காக எதை சேர்த்தாலும், அதில் இருக்கும் சத்துக்கள் மாறாமல் இருக்கும். இப்போது அந்த பாப்-கார்னில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்று பார்ப்போமா

தானியங்களில் ஒன்றான மக்காசோளத்தால் செய்யப்படும் பாப்-கார்னில் அதிகமான அளவு நார்ச்சத்துக்கள், மற்ற பழங்கள் மற்றும் காய்களில் இருப்பதைப் போன்று, இதிலும் அடங்கியுள்ளன. ஆகவே ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போது, சிப்ஸ் மற்றும் பர்கர் போன்றவைகளை சாப்பிடுவதை விட, இந்த பாப்-கார்ன் மிகவும் சிறந்தது.

மேலும் பாப்-பார்னில் பாலிஃபினால் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது என்றும் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற சத்துக்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இதில் இருக்கும் பாலிஃபினால் உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், பாப்-கார்னில் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான அளவு சத்துக்களில் 13% சத்துக்கள் கிடைக்கின்றது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பசியின்மை, புற்றுநோய், வயிற்றில் ஏற்படும் பிரச்சனை, இதய நோய் போன்றவை ஏற்படாமல் கட்டுப்படுத்தும். அதிலும் உடலில் செரிமானத் தன்மையை அதிகரிப்பதோடு, அழகான சருமத்தையும் தரும்.

நார்ச்சத்துக்களில் இரு வகைகளான கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் என்று இருக்கின்றன. அதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நீரில் கரையக்கூடியவை, கரையாத நார்ச்சத்துக்கள் நீரில் கரையாமல், அதனை பெருங்குடல் வழியாக உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றிவிடும். அத்தகைய கரையாத நார்ச்சத்துக்கள் பாப்-கார்னில் அதிகம் இருப்பதால், உடலில் செரிமான விரைவில் ஏற்படுவதோடு, மலச்சிக்கலையும் சரிசெய்யும். மேலும் இதனை சாப்பிடுவதால், அடிக்கடி பசிக்காமல் இருக்கும். இதனால் உடல் பருமன் அதிகரிக்காமல் இருக்கும்.

முதலீடு

விட்டில் ஒரு ரூம் போதும்,இதற்க்கு ஒரு பாப்கார்ன்மெஷின் மற்றும் ஒரு இரண்டு சக்கர வாகனம் ,கட்டமைப்பு 10க்கு 10 அடி அறை போதும்,பயன்பாட்டிற்கும் கூடுதலாக ஒரு அறை தேவை.நிரந்தர முதலீடு: பேக்கிங் மெஷின் ரூ.150000 லட்சம் ஆகும் .தற்போது மின்சாரம் தட்டுபாடக உள்ளத்தால் .காஸ் சில் பயன் படக்கூடிய பாப்கார்ன்மெஷின் வந்துவிட்டது .இதையும் பயன் படுத்தலாம்

விற்பனை வாய்ப்பு சுற்றுச் சூழல் அக்கறை காரணங்களால் பெரும்பாலான பொருள்கள் பாலீதின் கவரில் அடைத்து வழங்குவது அதிகரித்துள்ளது. இதனால் சந்தை வாய்ப்பு சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் என பல்வேறு வியாபார நிறுவனங்களில் ஆர்டர்பிடிக்கலாம். நிறுவனங்களின் பெயர்களை அச்சடித்து கொடுத்தால் மதிப்பு கூடும். அதுபோல நாம் உருவாக்கும் டிசைன்களுக்கு ஏற்ப அதிக விலையும் கிடைக்கும்.அல்லது சிறு வியாபாரிகளிடம் கொடுக்கலாம் .சைக்கிள் வியாபாரம் செய்யலாம் .இது மற்றும் பல பொருள் சேர்த்து விற்கும் போது நல்ல லாபம் கிடைக்கும்

தேவையானவை:

50 கிராம் பாப்கார்ன் அதாவது

காய்ந்த சோளம்
1 தேக்கரண்டி எதாவது ஒரு எண்ணெய்
உப்பு கொஞ்சம்

செய்முறை :

7 .5 அல்லாது 10 லிட்டர் குக்கர் அல்லது ஒரு ஆழமான இலுப்ப சட்டி மூடியுடன் எடுத்துக்கொள்ளுங்கள்.
எண்ணெய்
,
உப்பு மற்றும் சோளத்தை அதில் போடுங்கள்.
அடுப்பில் வையுங்கள்
,
சோளம் நன்கு பொரிந்து வெடிக்க ஆரம்பித்ததும் மூடியால் மூடிவிடவும்.
'பட் பட்' என்று வெடிக்கும் சத்தம் கேட்க ஆரம்பித்ததும்,
அடுப்பை சின்னதாக வைக்கவும்.
முழுதாக சத்தம் நின்றதும் அடுப்பை அணைத்து விடவும் .
திறந்து பார்த்தால் அந்த குக்கர் நிறைய பாப்கார்ன் இருக்கும்.
கப்பில் போட்டு சாப்பிட வேண்டியது தான்.

குறிப்பு: தேவையானால் தேங்காய் எண்ணெயில் பொரிக்கலாம். காரம் தேவையானால் எண்ணெய் இல் சோளத்தை போடும் முன் பொடியாக நறுக்கின பச்சை மிளகாய் போட்டு பொறித்து எடுத்து விடவும். பிறகு சோளத்தை போட்டு பொரிக்கவும்.இது எடுத்து கட்டாக 50 கிராம்மிற்கு சொல்லாபட்டது .

இந்த தொழில் பெரிய அளவில் செய்யும் போது ஒரு நாளைக்கு 2௦௦ கிலோ செய்ய முடியும் .


காஸ் சில் பயன் படக்கூடிய பாப்கார்ன்மெஷின் வந்துவிட்டது .
Gas Pop Corn Machine

 

 

 

 

Gas Pop Corn Machine 

Sunday, October 21, 2012

ஊறுகாய் தயாரிப்பு

தயிர் சாதம் ஆனாலும் சரி தக்காளி சாதம் ஆனாலும் சரி தொட்டுக் கொள்ள ஊறுகாய் இருந்தால் போதும் என்று கூறுபவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் நாம் இயல்பாக காண முடியும். ஊறுகாய் இல்லாமல் சாப்பிட்டால் சாப்பிட்டதற்கு அர்த்தமே இல்லை என்று சொல்லுபவர்களும் பலர் உள்ளனர். இந்த ஊறுகாயை தயாரிப்பதையே தனது தொழிலாக கொண்டுள்ளார் தேன் துளி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் மகாலட்சுமி.

பொருளாதார பின்தங்கிய குடும்பத்தை சார்ந்த இவர் தான் இருப்பது வாடகை வீடு என்பதால் தனியார் தொண்டு நல மையத்தின் உதவியுடன் தொழிலை மேற்கொண்டு வருகிறார். நகைப்பட்டறை வைத்திருந்தவர்கள் அந்த தொழில் நலிவடைந்தால் மிகவும் நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வருகின்றனர். அதிகம் கல்வியறிவு இல்லாத இவர் வேலைக்கு சென்று குடும்பத்திற்கு உதவ இயலவில்லையே என்பது இவரது மன வருத்தம். கல்வியில் பெரிதாக சாதிக்காவிட்டாலும் சமையல் கலையில் வல்லவர்.

ஊறுகாய் தயாரிப்பதற்கு பயிற்சி பெற்று தற்போது தயாரித்து சந்தை படுத்தியும் வருகிறார். இவரது வைவண்ணத்தில் எலும்மிச்சை, மாங்காய், நார்த்தங்காய், இஞ்சி, பூண்டு உள்ளிட்ட பல்வேறு வகையான ஊறுகாய் மல்லி தொக்கு, ஜாதிக்காய் தொக்கு, கருவேப்பிள்ளை தொக்கு என 25 வகையான ஊறுகாய், தொக்கு வகைகளை தயாரிக்கிறார்.இது குறித்து மகாலட்சுமி கூறியதாவது:

எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ளேன். கல்வி கற்கவில்லை என்ற வருத்தம் திருமணம் முடிந்து குறிப்பிட்ட சூழல் வரை எனக்கு தெரியவில்லை. ஆனால், என் கணவர் தொழில் நலிவடைந்து செய்வதறியாமல் தவித்த போது தான் கல்வியின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டேன். வேலைக்கு சென்று என் குடும்பத்திற்கு உதவ முடியாமல் இருந்தேன் அதன் பின்புதான் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் ஆலோசனைப்படி ஊறுகாய் தயாரிப்பதற்கு பயிற்சி பெற்று தற்போது தொழில் செய்து வருகிறேன்.

தொண்டு நிறுவனத்தில் நாங்கள் ஊறுகாய்களை தயாரிப்போம்.இரண்டு பேர் சேர்ந்தால் நாள் ஒன்றுக்கு 10 கிலோ வரை தயாரிக்க முடியும். நல்ல பயிற்சி இருந்தால் போதும் இதனை எளிதாக செய்யலாம். ஊறுகாய் என்பது எளிதில் தீரக்கூடிய ஒரு வகையான உணவு பொருள் என்பதால் தரமுடன் தயாரித்தால் தொடர்ந்து விற்பனை இருந்து கொண்டே இருக்கும். நான் தற்போது 225 கிராம் பாட்டிலில் ஊறுகாய் விற்பனை செய்து வருகிறேன். 225 கிராம் பாட்டில் ரூ 35க்கு விற்று விடுவேன். இதில் கிடைக்கும் வருவாய் என் குடும்பத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். என் குடும்பத்திற்கு என்னால் இயன்ற அளவிற்கு உதவுகிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி என்றார்.

தொண்டு நிறுவனத்தில் நாங்கள் ஊறுகாய்களை தயாரிப்போம். 2 பேர் சேர்ந்தால் நாள் ஒன்றுக்கு 10 கிலோ வரை தயாரிக்க முடியும். நல்ல பயிற்சி இருந்தால் போதும் இதனை எளிதாக செய்யலாம். ஊறுகாய் என்பது எளிதில் தீரக்கூடிய உணவு பொருள் என்பதால் தரமுடன் தயாரித்தால் தொடர்ந்து விற்பனை இருந்து கொண்டே இருக்கும். ஊறுகாய் தயாரிப்பது என்பது மிகவும் எளிது. ஒவ்வொரு காய்க்கும் தகுந்தவாறு அதில் சேர்க்கும் பொருட்கள் சிறிது மாறுபடும்.அதை தவிர அனைத்து ஊறுகாயும் தயாரிப்பது என்பது ஒரே மாதிரி தான் இருக்கும். ஊறுகாய் தயாரிக்க எந்த காயானாலும் சரி நல்ல தரமான காயாக ஒட்டு மொத்தமாக கொள்முதல் செய்து கொள்ளவேண்டும். பழங்களில் தரமில்லை என்றால் நாம் எப்படி தயாரித்தாலும் அதில் சுவை இருக்காது.

சுவை முக்கியம்...
நாம் தயாரிக்கும் காய் எதுவாக இருந்தாலும் அதனை நன்கு சுத்தம் செய்து அதில் இருக்கும் காம்பு, விதை, கொட்டை போன்ற தேவையற்ற பாகங்களை நீக்கி விடவேண்டும். அதன் பின்பு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 10 சதவீதம் உப்பு கலந்த தண்ணீரில் 3 மாதங்கள் ஊறவிடவேண்டும். 3 மாதங்கள் ஊறிய துண்டுகளை தண்ணீரில் ஒரு முறை கழுவி எடுத்துக்கொள்ளவேண்டும். இப்போது நன்கு பதமாக காய்கள் நமக்கு கிடைக்கும். இதில் மிளகாய் பொடி, உப்பு, பெருங்காயம், வெந்தய பொடி, போன்றவற்றை தேவையான அளவு சேர்த்து சிறிது நேரம் அப்படியே வைக்கவேண்டும். அதன் பின்பு வழக்கம் போல் எண்ணெய், கடுகு, கருவேப்பிள்ளை, பெருங்காயம் போன்றவற்றை சேர்த்து தாழித்து பின் ஆறவைக்கவேண்டும். நன்கு ஆறிய பின்பு கவர், அல்லது டப்பா போன்றவற்றில் அடைத்து சந்தை படுத்தலாம்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
protective packaging filmpickle packaging film

pickle packaging film


உணவு பதப்படுத்தும் பகுதி:


வேளாண் பொருள் பதப்படுத்துதல்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் அறுவடைக்குப்பின் சார் தொழில் நுட்ப மையத்தின் மூலம் தரப்படும் வசதிகள்: 

அறுவடைக்குபின்சார் தொழில் நுட்ப மையமானது (PHTC), ஏப்ரல் 2004ம் ஆண்டு கோயமுத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கட்டுமானத்தின் கீழ் நிறுவப்பட்டது. இது பல்துறை மூலம் அறுவடைக்கு பின்சார் மற்றும் உணவு பதப்படுத்தும் பொறியியல் நிகழ்வுகள் போன்றவவையையும், அறுவடைக்கு பின்சார் தொழில் நுட்பத்தின் முன்னேற்றமும். தொழில் நுட்பங்களை அதிக அளவில் ஈடுபடுத்துவதாகும். இந்த மையத்தின் செயந்பாடுகள் யாதெனில் பல துறையின் மூலம், குறைபாடுகளை கண்டறிந்து அதற்கான தீர்வினை தருவது மற்றும் இத்துறையின் விஞ்ஞானிகள், வேலையிலீடுபடும் பொறியியாலளர், உணவு தொழில்நுட்ப வல்லுநர், உணவு நுண்ணுயிரி அறிஞர், உயிர்வேதியியலறிஞர் பூச்சியலறிஞர், தோட்டக்கலை அறிஞர். மற்றும் வேளாண்மை பொருளாதார அறிஞர் போன்றோர்களாக ஆராய்ச்சி திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

துறையின் புகழுக்கும், உலக தரத்தின் வசதிகள் போன்றவற்றின், வெற்றிக்கும் இந்த மையமானது முக்கிய பங்கு வகுக்கிறது. அறுவடைக்கு பின்சார் தொழில் நுட்பமானது இந்தியாவின் ஒரு முன்னணி பிரிவு ஆகும். இதன் இடுபொருட்களைக் கொண்டு உணவு தொழில்முனைவோர்களின் பொருட்களில் மிகச்சிறந்த மேம்பாட்டினை அடைகிறது. இந்த மையமானது பலதரப்பட்ட ஆராய்ச்சியிலும், உணவு பதப்படுத்துதல் மற்றும் அறுவடைக்கு பின்சார் செயல்வணிகச்செயலில் ஈடுபாட்டிலம் முக்கிய பங்கு வகுக்கிறது. மேலும் இந்த மையமானது, McGILL பல்கலைக்கழகம், கனடா, உடன் இணைந்து வடக்கு இந்தியாவின் உணவு பாதுகாப்பிற்கு ஒன்று திரட்டுகிறது.

குறிக்கோள்:
 • பழங்கள் மற்றும் காய்கறி போன்ற வர்த்தகம் பொருட்களில் அழுகத்தக்க நிலை வராமல் தடுக்க பதனப்படுத்துதலை மேம்படுத்துவதும் அதற்கு தேவையான கொள்கலனை வடிவமைப்பதும், உலகதரக்கட்டுபாடு மற்றும் நுகர்வோர்களின் தேவையை சந்திப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
 • பயனுள்ள செலவில் தொழில்நுட்ப செயல்முறைகளும், கருவிகளையையும் விளைநிலத்திற்கு தகுந்தாற் போல் மேம்படுத்துவதும் மற்றும் வேளாண்மை கழிவுகள் மற்றும் உபபொருட்களின் பொருளாதார பயன்பாடு.
 • குளிர் பதன சேமிப்பு சிறப்பு அம்சங்களை எடுத்துக்கூறுதல், சேமிப்பு கிடங்கு தொடங்குவதற்கான வழிகள் மற்றும் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு முன் குளிர்வித்தல் வசதிகளை குறைந்த செலவில் தருகிறது.
 • குறைந்த செலவு, சுற்றுச்சூழல் நட்புறவு மற்றும் நுகர்வோர்களை கவரும் தொழில்நுட்பத்தின் பயன்படுத்தும் நிலையை உயர்த்துவதும் மற்றும் உள்நாட்டு மற்றும் உலக விற்பனையை நுகர்வோர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் நடைமறைப்படுத்துதல்.
 • உற்பத்தி மையத்திற்கு அருகாமையில் வேளாண் பதனப்படுத்தும் வளாகத்தை நிர்ணயப்படுத்துதல்.
 • உணவு பாதுகாப்பு, தரம் மற்றும் தொழில் நுட்பம்(தரக கட்டுப்பாடு) போன்றவற்றின் தரத்தினை மேம்படுத்துதல்.
 • தோட்டக்கலை உற்பத்தியின் பதனப்படுத்தும் வசதிகளை மேம்படுத்துவதற்கு விவசாயிகள், தொழில்முனைவோர், முன்னேற்றம் அடையும் துறையின் அலுவலர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
 • தேர்வு செய்யப்பட்ட் இடங்களில் உணவு பதப்படுத்தும் கருவிகளின் மேம்பாடு.
நோக்கம்:
 • பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான பிந்திய உற்பத்தி இயந்திர சாதனம்.
 • தரக்கட்டுப்பாடு, உணவு சோதனை மற்றும் தரக்கட்டுப்பாடு ஆய்வுக்கூடம் போன்றவற்றை நிர்ணயப்படத்துதல்.
 • உணவு பதப்படுத்துதல் தொழில் நுட்பத்தின் புதுமையான ஆராய்ச்சி.
 • அறுவடைக்கு பின் தேசிய மற்றும் சர்வதேச முகாமைத்துவம்.
 • உணவு பதப்படுத்தல் தொழில்நுட்பம், உணவு பாதுகாப்பு, தரம் மற்றும் பொது கொள்கைகள் போன்றவற்றின் இதழ்கள்
 • மாவட்ட அளவில் உற்பத்தி மையத்துடன் உணவு பதப்படுத்தும் தொழில் அடைகாக்கும் கருவியை நிருவுதல்.
 • 2020ல் உணவு பாதுகாப்பு.
ஆராய்ச்சி:
PHTC ஆனது தேசிய மற்றும் சர்வதேச நிறுவனத்துடன் இணைந்து, முதன்மையான பகுதிகளில் ஆராய்ச்சியை நடத்தி, பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. இந்த மையத்தின் பலதுறைப்பட்ட குழுவானது தேவையின் அடிப்படையில் மற்றும் தீர்வுகாணும் நோக்கத்துடன் திட்டங்களை னையாளுகின்றனர். சில பிரதான திட்டங்களை இந்த மையங்கள் பொறுப்பெடுத்துக் கொள்கிறது. அவை பின்வருமாறு.
கணேபியர் சர்வதேச மேம்பாடு முகமை (CIDA):
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின், கோயமுத்தூர், அறுவடைக்கு பின்சார் தொழில் நுட்ப மையம் பொறுப்பெடுக்கும். “தெற்கு இந்திய உணவு பாதுகாப்பு இணைப்பு” என்ற திட்டத்திற்க்கு நிதி உதவியானது டாக்கு G.S.V ராகவன், ஜோம்ஸ் McGILL பேராசிரியர் மூலம் McGILL பல்கலைக்கழகத்தின், கனடா, CIDA மூலம் தரப்படுகிறது. இந்த திட்டமானது 5 ஆண்டுகள் அதாவது 2002 முதல் 2007 வரைக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் குறிக்கோள் யாதெனில் அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்புகளை தடுத்து மதிப்பூட்டுவதாகம். இதுமட்டும் அல்லாமல் நடைமுறைக்கான பாதுகாப்பு மற்றும் மகளிர்க்கு உணவு பாதுகாப்பு மற்றும் இதன் பொருளாதார முன்னேற்றம் அடங்கும். இதன் மூலம் முக்கியமாக விவசாயிகள், கிராமப்புற மகளிர், வேலையில்லா பட்ட்தாரிகள் பயன்பெறுகின்றனர்.

முக்கியமான நடவடிக்கைகள்:
 • தேவையின் அடிப்படியில் அறுவடைக்கு பின் தொழில் நுட்பம், வேளாண்மை வர்த்தகப் பொருட்களின் மதிப்பூட்டல், உணவு பொருட்களின் பதனப்படுத்துதல் போன்றவற்றினை மேம்படுத்துதல்.
 • மகளிர் சுய உதவிக்குழு, விவசாயிகள், வேலையில்லா பட்டதாரி, தொழில் தொடங்கம் முன் வருபவர்க்ள மற்றும் தன்னார்வ அமைப்பு போன்றோர்களுக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சி
 • கிராமப்புறத்தில் வேளாண் பதப்படுத்துதல் வளாகத்தை நிருவுதல்
 • கிராமப்புற மகளிர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உணவு பதப்படுத்துதல் மற்றும் பதனப்படுத்துதல் மற்றும் உணவு உற்பத்தி பதப்படுத்துவதின் ஆதாயச் செலவு பற்றியும் பயிற்சி அளிக்கிறது.
 • சிறு அளவு தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க முன்னோடித் திட்டமுறையை நிருவுதல்
 • செயல்முறையை பொருத்த திட்டத்திற்கு அடிப்படை வசதிகளை உருவாக்குதல்
 • மனித வள மேம்பாட்டிற்காக பணியாட்கள் பரிமாற்றம் நிகழ்ச்சி.
இந்த திட்டமானது அறுவடைக்கு பின்சார் தொழில் நுட்ப மையம், கோயமுத்தூர் மற்றும் மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை போன்றவற்றின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. பழங்கள் மற்றும் காய்கறிகளின் அறுவடைக்கு பின் கையாளப்படும் பழரச பானம், பழச்சத்து, ஊறுகாய், தயார் நிலையில் உள்ள உணவு பானங்கள் போன்ற பதனப்படுத்தலும், பப்பாளி, கோவா, நெல்லி மற்றும் திட்டங்களின் முதலீட்டு முறை போன்றவற்றை பற்றி மகளிர் சுய உதவிக்குழு மற்றும் தன்னார்வ அமைப்பின் நபர்களுக்கு இலவச பயிற்சிகளை தருகிறது.

பயிற்ச்சிக்கு பின் பதப்படுத்தும் பகுதியில் தொழில் தொடங்க விருப்பம் உள்ள மகளிர்களுக்கும் உதவி புரிகிறது. பயிற்சியானது கோயமுத்தூரில் ஒவ்வொரு மாதமும் 10ம் தேதி மற்றும் 25ம் தேதியம், மதுரையில் 19ம் தேதியம் நடத்துகிறது. இந்த பயிற்ச்சிக்கு குறைந்தது 20 நார்கள் தேர்வு செய்கின்றனர்.
சுய வருவாய் திட்டம்:
 • உணவு பதப்படுத்தும் தொழிலின் பாதுகாப்பு கருவி:
இந்த திட்டமானது மார்ச், 2004 முதல் நடைமுறையில் உள்ளது. இதன் முக்கிய நோக்கம் யாதெனின் தொழில் முனைவோர்களை மேம்படுத்துவதும், புதிய உற்பத்தி பொருட்களை உருவாக்குவதாகும்.

தனிப்பட்ட குறிக்கோள்கள்:
 • தொழில் தொடங்குவோர்க்கான உணவு பதப்டுத்தும் தொழில்நுட்பம்
 • வழக்கமான வாடகையின் அடிப்படையில் தனியார் தொழில் முனைவோர்களுக்கு உணவு பதப்படுத்தும் இட வசதிகள்
 • பதப்படுத்தப்பட்ட பொருட்களின் விற்பனை மூலம் வருமானத்தை ஈடுத்துதல்
பயிற்சியில் முக்கியத்துவபகுதி:
 • பழங்கள் மற்றும் காய்கறிகளின் பதப்படுத்துதல்
 • தக்காளி பொருட்களின் உற்பத்தி
 • உடனடி பருவத்திற்கான பானம், பழரசப்பானம் மற்றும் கருப்பு ஜீஸ் தயாரிப்பு
 • மசாலா பொடி தயாரிக்க சிறு அளவு உற்பத்திக் கூடம்.
தொழில்நுட்ப பரிமாற்றம் பயிற்சி(சுயவருவாய் திட்டம் - FSN):
இந்த திட்டமானது ஜீலை, 2008 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

குறிக்கோள்கள்:
 • மகளிர் குழுக்க்ள் மற்றும் தொழில் தொடங்குவோர்களுக்கு வேளர் பதப்டுத்துதல் பற்றிய தொழில் நுட்பங்கள், திறன் போன்றவற்றை தருதல்.
 • உணவு பதப்டுத்துதல் தொழில் தொடங்குவதற்கான தொழில்நட்ப பரிமாற்றது.
செயல்முறைகள்:
 • மகளிர் குழுக்கள் மற்றும் தொழில் தொடங்குவோர்களுக்கு ஊக்க பயிற்சி
 • நுட்பமான திட்ட அறிக்கை, கையேடு, பாட புத்தகம் போன்றவற்றை தயாரிப்பது
முக்கியத்துவ பகுதி:
 • குடிலில் பதனப்படுத்தும் பிரிவு நிருவுதல்
 • குடிலில் ஊறுகாய் தயாரிப்பு பிரிவு நிருவுதல்
 • சிறு அளவு பேக்கரி பிரிவு நிருவுதல்
 • உடனடி உணவு கலவை
 • இனிப்புகள், உணவு மசியல் மற்றம் தின்பண்டங்கள் போன்றவற்றின் வீட்டுத் தயாரிப்பு
 • நெல்லி, காளான், மற்றும் முருங்கை போன்றவற்றின் பதப்டுத்துதல் மற்றும் பதனப்படுத்துதல்.
இந்திய அரசாங்கம் - உணவு பதப்படுத்துதலின் பயிற்சி மையம்:
முக்கிய குறிக்கோள்கள்:
 • பழரசபானம், ஜாம், ஜெல்லி, ஊறுகாய் போன்றவற்றை தயாரிப்பதற்கான பயிற்சியை தொழில் தெரடங்குவோர், மனைவிமார்கள், மகளிர்கள்,போன்றோருக்கு அளிக்கிறது.
 • அறுவடைக்கு பின் செயல்பணிச்செயல், காய்கறி மற்றும் பழங்களின் பதப்டுத்துதல் செயல்களின் ஆராய்ச்சி மற்றும் பயிற்றுவிக்கும் முறையில் விரிவாக்கம்
 • வறட்சியான பகுதியில் வளரும் அந்தி, வெஸ்ட் இந்தியன் செர்ரி, நெல்லி, விளாப்பழம் போன்ற பழங்களின் உநற்பத்தி மேம்பாடு மற்றும் பதனப்படுத்துதளின் செயல்முறைகள் தற்போதய செயல்முறைகள்:
 • பழரச பானம், ஜாம் போன்ற வர்த்தக உற்பத்தி
 • பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றின் பதனப்படுத்தும் பயிற்சி
பயிற்சியில் முக்கியத்துவ பகுதி:
 • பழங்கள் மற்றும் காய்கறிகளின் பதனப்படுத்துதல்
ICAR - ADHOC - ஆராய்ச்சி திட்டம் - ஒட்டுமொத்த கிராமப்புற குடும்பங்களின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை மையத்தின் தாக்கம்:
இத்திட்டத்தின் குறிக்கோள்:
 • கிழக்கு மதுரை மற்றும் மேலூர் பஞ்சாயத்து பகுதியில் உள்ள கிராமத்தின் ஒவ்வொரு குடும்பங்களிலும், அவர்கள் கல்வியறிவு, மனநிலை, பொருளாதாரம்  மற்றும் சமூக பிரச்சனைகளை கண்டறிவதற்கான நடத்தப்படும் கருத்தாய்வு
 • பிரச்சனைகளுக்கான காரணங்களை ஆராய்ந்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் மகளிர் வருவாய் ஈடுவதற்கான செயல்முறைகளை கண்டறிதல்
 • மாளிர்களுக்கு தொழில்நுட்ப திறன் மற்றும் அதனை பற்றிய ஆற்றலை தெரிவிப்பதன் மூலம் அவர்களின் வருவாயை ஈட்டலாம்
 • பயன்பெறுபவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வசதிகள்
 • கொடுக்கப்படும் பயிற்சியின் மூலம் கிராம குடும்பங்கள் மனநிலை சமூக பிரச்சனைகள் தர்க்கப்படுவதின் மதிப்பீடு
 • மதுரையின் மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், ஒருங்கிணைப்பு, வழிகாட்டு மற்றும் ஆராய்ச்சியுடன் பயிற்சி மையத்தை நிருவுதல்
தற்போதைய செயல்முறைகள்:
 • வருவாய் ஈட்டுவதற்கான பயிற்சி
 • பிரச்சனைகள் உள்ள குடும்பங்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை
பயிற்சியில் முக்கியத்துவ பிரிவு:
 • வீட்டில் தயாரிக்கும் பொருட்களான சோப்பு ஆயில், சோப்புத் தூள், கம்ப்யூட்டர் சாம்பிராணி போன்றவை
 • பழங்கள் மற்றும் காய்கறிகள் பதனப்படுத்தும் பொருட்களான ஜாம், பழரச பானம், ஊறுகாய் போன்றவை.
இந்திய அரசாங்கம் - உணவு பதப்படுத்தும் தொழிற்துறையின் அமைச்சவை - சிறு அளவு பேக்கரி பிரிவை நிருவுதல்:
நவம்பர் 2004ல் இந்த திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் குறிக்கோள் யாதெனில் பயிற்றுவிப்பது, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க செயல்களுக்காக சிறு அளவு பேக்கரி பிரிவினை அமைத்தல். பெரும்பாலும் இந்த திட்டமானக மகளிர் சுய உதவிக்குழு மற்றும் சிறு அளவு தொழில் முனைவோர்கள் போன்றோர்க்கு பயிற்சி அளிப்பதாகும்.

கட்டமைப்பு மற்றும் ஆய்வு கூடங்கள்: 
1.உணவு பதப்படுத்தும் பகுதி: 
காய்கறி மற்றும் பழங்கள் போன்றவற்றின் உற்பத்தியில் இருந்து ஜாம், ஜெல்லி, பழரச பானம், உடனடி பருகுவதற்கு ஏற்ற பானம், தக்காளி பொருட்கள், ஊறுகாய், மசாலா பொடி கோன்றவற்றை தயாரிப்பதற்கான இயந்திர சாதனங்களை உள்ளடக்கிய பகுதி.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இயந்திர சாதனங்கள் உணவு பதப்படுத்தம் பகுதியில் உள்ளனவாகும். நீராவி கொதிகலன், பழங்கள் கழுவும் கருவி, காய்கறி வெட்டும் கருவி, பழ கூழாக்கும் கருவி, நிராவி கெண்டி, சுரண்டும் கருவி, நுண்ணுயிர் நீக்கும் கருவி, புட்டியில் அடைத்தல், மூடி இடுதல், பொருளை நிரப்புதல் மற்றும் அடைக்கும் கருவி, மின் அடுப்பு, சிறிய பாக்கெட்டின் நுண்ணுயிர் நீக்கும் கருவி, மசாலா வறுப்பான், ரிப்பன் கலப்பான், கரும்பு பிழிப்பான், புட்டி கலுவுதல் மற்றும் அலசும் பகுதி, பயிர் வகைகளை அரைக்கும் பிரிவுடன் காற்று மூலம் உமி பிரிக்கும் கருவி, டின்னில் அடைத்து வைக்கும் கருவிகள், உரைவு மற்றும் குளிர்விப்பு அறை.

அறுவடைக்கு பின்சார் தொழில்நுட்ப மையத்தில் உள்ள உணவு பதப்படுத்தும் பகுதியானது பயிற்றுவிக்க மற்றும் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பகுதியின் பதப்படுத்தலுக்கு பயன்படுத்துகின்றனர்.

2. பேக்கரி பகுதி:
பேக்கரி பகுதியில் சுழலும் மின்அடுப்பு, நாட்டுமின்னடுப்பு, பிசையும் கருவி, கலக்கும் கருவி, ரொட்டி அச்சுவார்பான், இதழாக பிரிக்கும் கருவி, மற்றும் துண்டுக்களாக்கும் கருவி போன்ற நவீனமயமான கருவிகளை கொண்டது. இதன் உற்பத்தி கொள்ளளவு ஆனது ஒரு நாளைக்கு 6,000 ரொட்டிகள் ஆகும்.

CIDA:
அறுவடைக்கு பின்சார் தொழில் நுட்பமானது, பல்வேறு செயல்முறைகளை நடைமுறைப்படுத்தி, பயன்படுத்துவர்களுக்கு உதவும் வகையில் பொருட்களை தருகிறது. இந்த செயல்முறைகளான ஆய்வு கூடங்களுக்கு அப்பாற்பட்டதாகும்.

இயந்திர சாதனங்களுக்கு அப்பாற்பட்ட செயல்முறைகள்:
 • McGILL பல்கலைக்கழகம், கனடா, கொடுக்கும் விளைநிலங்கள் பயிற்சியானது பழங்கள் மற்றும் காய்கறிகளின் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்புகளை குறைப்பது மற்றும் கீழ்கண்ட பல்வேறு செயல்களை தொடர்ந்து நடத்துவதற்கும் உதவிபுரிகிறது.
 • தொழில் முனைவோர்களின் மே்பாட்டினை பொருத்து பயிற்சியன் பயனை அறிவதற்கான மதிப்பீடு ஆய்வினை நடத்துகிறது.
 • வேளாண் பதப்படுத்தும் வளாகத்தை எற்படுத்துதல், தொழில் நுட்ப பொருளாதாரத்தை மதிப்பீடுதல்.
விரிவாக்க முகமைகளின் கூட்டு:
தான் (Dhan) அறநிறுவனம், மதுரை மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை (DRDA), கோயமுத்தூர்
மாநில வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்.

பயிற்சி: 
உணவு பதப்படுத்துதல் மற்றும் அறுவடைக்கு பின்சார் செயல்பணிச் செயல்களை பற்றி மகளிர் மற்றும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு இந்த மையமானது தொழில் முனைய பயிற்சியை அளிக்கிறது. பயிற்சியை பற்றிய விபரங்கள் பின்வருமாறு.

CIDA பயிற்சி: ஒரு மாதத்திற்கு இரண்டு பயிற்சி (10 - ம் தேதி மற்றும் 12 - ம் தேதி)
GOI பயிற்சி: ஒரு மாதத்திற்கு ஒரு பயிற்சி
ICAR பயிற்சி: ஒரு மாதத்திற்கு ஒரு பயிற்சி
MFPI: ஒரு மாதத்திற்கு இரண்டு பயிற்சி

தொழில்முனைவோர்க்கு பயிற்சி
ஆதாரம்: www.tnau.ac.in

Thursday, October 18, 2012

ஒரு மணி நேர சுடிதார் தையல் கடைக்குச் சென்றோம்


தீப்பெட்டிபோல வரிசையாகக் கடைகள், நெரிசலில் நீந்தும் மக்கள் என தி.நகர் ரெங்கநாதன் தெரு எப்போதும் பரபர பிஸிதான். தெருவுக்குள் நுழைந்ததுமே 'வாங்கம்மா... ஒரு மணி நேரத்தில் சுடிதார், ப்ளவுஸ் தெச்சுடலாம். ஷாப்பிங் போயிட்டு வர்றதுக்குள்ள சுடிதார் ரெடியா இருக்கும்மா!'' என வெரைட்டியான குரல்கள் கேட்க ஆரம்பித்துவிடும். 'மொத்த கடையையே புரட்டிப் போட்டு  துணி எடுக்கும் பெண்கள், ஒரு மணி நேரத்தில் சுடிதார் தைக்க எப்படி ஒப்புக்கொள்கிறார்கள்?’ என்ற கேள்வியுடன் ரெங்கநாதன் தெருவில் விசிட் அடித்தோம். குரல் கம்ம கத்தி கஸ்டமர்களை அழைத்துக்கொண்டு இருந்த மீனா, ''ஏழு வருஷமா இந்த வேலை செய்யுறேன். வீட்டுக்காரருக்குச் சரியான சம்பாத்தியம் இல்லாததால் இப்படி வெயிலில் நின்னு கத்துறேன். ஆனால், உழைச்சுசம்பாதிக்கிறோம்ங்கிற திருப்தி இருக்கு. ஒரு பீஸுக்கு எனக்குப் 10 ரூபாய் கமிஷன். கஸ்டமர்களை எந்தக் கடைக்கு அழைச்சிட்டு போனாலும் கமிஷன் உண்டு. ஒரு நாளைக்கு அதிகபட்சம் 100 கஸ்டமர்கள் வரை பிடிப்போம். தீபாவளி, பொங்கல் நேரத்தில் 150 கஸ்டமர்கள் பிடிச்சிடுவோம். இப்படி நாங்க ஒருமுறை பிடிச்சு கொடுக்குற கஸ்டமர்கள், பிறகு அந்தக் கடையின் ரெகுலர் வாடிக்கையாளர் ஆகிட்டாங்கன்னா எங்களுக்கு கமிஷன் வராது. காலேஜ் பொண்ணுங்கதான் எங்க டார்க்கெட். ஏன்னா, அவங்கதான் நாங்க கத்துறதைப் பார்த்துட்டு, இரக்கப்பட்டு வருவாங்க. 'ச்சீ அந்தப் பக்கமா போ’னு சிலர் எரிச்சலாவும் பேசுவாங்க.  அதை எல்லாம் பார்த்தா பொழப்பு நடத்த முடியுமா?'' என்கிறார்.
அடுத்து 'பிஸ்மி ஸ்டார் டெய்லர்ஸ்’ என்கிற ஒரு மணி நேர சுடிதார் தையல் கடைக்குச் சென்றோம். அதன் உரிமையாளர் ஆசாத், ''இந்தா வந்திர்றோம்னு சொல்லுவாங்க. ஆனா, நம்ம ஊர் லேடீஸ் ஷாப்பிங் போய்ட்டு வர்றதைப் பத்திதான் நமக்குத் தெரியுமே. சில பேர் காலையில் போய்ட்டு சாயங்காலம்தான் வெளியில் வருவாங்க. ஆனா, நாங்க சுடிதாரை ஒரு மணி நேரத்தில் தயார் பண்ணிடுவோம். வர்ற கஸ்டமர்களை அட்டென்ட் பண்ண ஐந்து நிமிஷம், துணியை கட் பண்ண ஐந்து நிமிஷம், தைக்க 20 நிமிஷம்னு ஒரு சுடிதார் தைக்க அதிகபட்சம் அரை மணி நேரம்தான் ஆகும்.
ஒரு கட்டிங் மாஸ்டருக்கு நான்கு டெய்லர் இருப்பாங்க. அவர் கட் செய்து தரும் சுடிதார்களை இவர்கள் தைப்பார்கள். மற்றபடி அயர்னிங், ஓவர்லாக், எக்ஸ்ட்ரா டிசைன்கள்னு கூடுதலா நேரம் ஆகும். அதைக் கஸ்டமர்களிடம் சொல்லிடுவோம். சாதாரண சுடிதாருக்கு 80 ரூபாயும், லைனிங் கிளாத் கொடுத்து தைக்க 140 ரூபாயும் வாங்குறோம். ஒரு நாளைக்கு 50-ல் இருந்து 100 சுடிதார்கள்  வரை வரும். அதில் 20 முதல் 40 பேர் புது கஸ்டமர்களா இருப்பாங்க.
எங்கள் கடைக்கு டெய்லர் வரலைனாலோ, மெஷின் கோளாறுன்னாலோ  பக்கத்து கடை டெய்லரை வெச்சு தைச்சு சமாளிப்போம். 'சரியா தைக்கலை’, 'சொன்ன நேரத்தில் தரலை’னு சமயங்களில் ஒண்ணு ரெண்டு பேர் பிரச்னை பண்ணுவாங்க.ஆனால், அதை எல்லாம் மீறி ஒருமுறை எங்ககிட்டே வந்தவங்க தொடர்ந்து எங்ககிட்டேயே வரணும்ங்கிற எண்ணத்தில் தான் வேலை செய்யுறோம்'' என்கிறார்.
சுடிதார் தைக்கக் கொடுக்க வந்த தேவி, ''துணி எடுக்க, அதைத் தைக்க,  அதை வாங்கனு மூணு நாள் அலையற துக்குப் பதிலா ஒரே நாள்ல வேலை முடிஞ்சுடுது. முதல்ல சுடிதார் மெட்டீரியல் எடுத்துத் தைக்கக் கொடுத்துட்டு ஷாப்பிங் முடிச்சுட்டு வந்தேன்னா சுடிதார் ரெடியா இருக்கும். மறுநாள் புது சுடிதார் போட்டு வேலைக்குப் போனா ஃப்ரெண்ட்ஸ் எல்லாம், 'ரெடிமேடா?’னு விசாரிக்குறாங்க. இந்த சர்ப்ரைஸுக்காகவே இங்க வருவேன்'' என்கிறார்!
- பானுமதி அருணாசலம் படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

வீட்டில் கணினி வைத்திருப்பவர்கள் பகுதி நேரத்தில் பணம் பண்ண பல வழிகள் உள்ளன.


வீட்டில் கணினி வைத்திருப்பவர்கள் பகுதி நேரத்தில் பணம் பண்ண பல வழிகள் உள்ளன. ஆனால் பலர் பலக் sms , MLM என்று ஏதாவது ஒன்றில் ஏமாற்றப்பட்டே வருகின்றனர். சரி நாம் ஒரு ஐடியா  கொடுக்கலாமே என்று யோசித்தபோது என் நினைவுக்கு வந்ததுதான் "ONLINE SERVICE".  இப்போது டிக்கெட் புக்கிங், பில் பேமென்ட், மொபைல் ரீசார்ஜ், DTH ரீசார்ஜ் என அனைத்து  வசதிகளும் வீட்டில் இருந்தபடியே செய்து விடலாம் என்று வந்துவிட்டது ஆனால் இந்த சேவைகளை பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பவர்கள் என்று பார்த்தால் ஏற்க்கனவே தொழிலில் இருப்பவர்கள்தான் அதாவது மேல் வருமானத்திற்காக தான் பயன்படுத்தி வருகின்றனர்.  


இந்த சேவைகளை தனியாக ஒரு கடையை வாடகைக்கு எடுத்து நடத்த வேண்டும் என்றால் கடை வாடகை, கரண்ட் பில், அட்வான்ஸ் என முதலீடு  அதிகருக்கும் அதேவேளையில் நஷ்ட்டம் வரவும் வாய்ப்பு உள்ளது(நம் அணுகுமுறையை பொறுத்து). ஆனால் இந்த சேவைகளை வீட்டில் இருந்தபடியே தொழிலாக  செய்யவேண்டும் என்றால்  கண்டிப்பாக  நஷ்ட்டம் வர வாய்ப்பு இல்லை ஆனால் வீடு இந்த சேவைகளை செய்ய ஏற்றதாக இருக்கவேண்டும், வீட்டின் முன்புறம் கடைபோல் அல்லது ஒரு கணினி வைக்கும் அளவுக்கு அறை இருந்தால் நல்லது. 


சரி இந்த சேவைகளை தொழிலாக செய்ய  விரும்புபவர்கள் தொடர்ந்து படிக்கவும், பிடிக்காதவர்கள் இந்த சேவைகளை தெரிந்து கொள்ள  படிக்கவும்(எப்படியும் படிச்சே ஆகணும் ஹிஹி)

1. TICKET BOOKING 
டிக்கெட் புக்கிங் என்று பார்த்தால் TRAIN, BUS, CINEMA போன்றவைகள் முக்கியமானவைகள்.

TRAIN : ரயில் முன்பதிவு  இப்போது  அதிகரித்துக்கொண்டே வருகிறது ஆனால் இதற்க்கானே சேவை வழங்கும் நிலையங்கள் என்று பார்த்தால் குறைவுதான். தைரியமாக செய்யலாம்.

சேவை தளங்கள்:
1 . IRCTC - www.irctc.co.in
IRCTC என்பது அரசிடம் ரயில் முன்பதிவு செய்ய  அனுமதி வாங்கிய நிறுவனம் மற்ற தனியார் நிறுவனங்கள் இவர்களிடம் உரிமம் வாங்கித்தான் தொழில் நடத்தி வருகின்றனர். ஆனால் IRCTC தளத்தை வீட்டில் மட்டும்தான் பயன்படுத்தவேண்டும் தொழில் ரீதியாக பயன்படுத்த வேண்டும் என்றால் AGENT அனுமதி நிறுவனத்தில் இருந்து வாங்க வேண்டும்.  வீட்டில் இருந்தபடியே நண்பர்கள் உறவினர்களிடம் மட்டும் வீட்டில் இருந்தபடியே சேவை செய்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தளத்தை  பயன்படுத்தலாம். எந்த முன்பணமும் செலுத்தாமல்  நாம் எடுக்கும் டிக்கெட் செலவுக்கு மட்டுமே பணம் செலுத்தினால் போதும் இன்டர்நெட் பேங்கிங் வழியாக.

இல்லை நீங்கள் வீட்டில் இருந்தபடியோ அல்லது கடையில் இருந்தோ தொழில் ரீதியில் பயன்படுத்த நினைத்தால் நிச்சயம் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் தொழில் நடத்தும் உரிமை பெற்றிருக்க வேண்டும். ஆனால் உரிமம் எடுக்கும் தொகையில் வேறு ஒரு  கூட்டு சேவை அளிக்கும் நிருவனமிடம் உரிமம் பெற்றால் உங்களுக்கு பல சேவைகள் கிடைக்கம் அந்த நிறுவனங்கள் பற்றிய விபரம் கீழே.

2. BUS
பேருந்து முன்பதிவு இன்னும் அரசு பேருந்துகளில் அனுமதிக்கவில்லை அதனால் தனியார் பேருந்துகள் மட்டுமே பண்ண முடியும். தனியார் பேருந்துகள் முன்பதிவு செய்ய உதவும் தளங்கள் TICKETGOOSE.COM, REDBUS.IN இந்த இரண்டு தளங்களும் டிக்கெட் முன்பதிவு செய்ய தேவையான முன்னணி இணையத்தளங்கள் ஆகும். இவர்களிடம் முன் பணம் செலுத்தாமல் டிக்கெட் எடுத்தால் வாடிக்கையாளர்களிடம் தான் டிக்கெட்  விலையை விட அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்க முடியும், இவர்களிடம் உரிமம் பெற்றால் டிக்கெட் விலையில் நிறுவனம் நமக்கு கமிஷன் கொடுக்கும்.  ஆனால்  இவர்களிடம் உரிமம் எடுக்கும் தொகையில் வேறு ஒரு  கூட்டு சேவை அளிக்கும்  நிருவனமிடம் உரிமம் பெற்றால் உங்களுக்கு பல சேவைகள் கிடைக்கம் அந்த நிறுவனங்கள் பற்றிய விபரம் கீழே.

3.CINEMA TICKET
சினிமா டிக்கெட்டில் அதிக வருமானம் எதிர்பார்க்க முடியாது ஏன் என்றால் டிக்கெட் விலையை விட இணையத்தள நிறுவனமே 15 முதல் 25 ரூபாய் அதிக விலைக்கு விற்று வருகின்றன. ஏதாவது ஒரு படத்துக்கு அதிக DEMAND இருக்கும்போது பணம் பார்க்கலாம். சினிமா டிக்கெட் சேவை வழங்கும் முன்னணி தளங்கள் 1.WWW.TICKETNEW.COM

2.BILL PAYMENT
இப்போது அனைத்து முன்னணி  நிறுவனங்களும் தங்களுடைய பில் பேமன்ட்களை ஆன்லைன் வழியாக செலுத்தும் வகையில் கொண்டு வந்துவிட்டன. அதனால் இந்த சேவை நிச்சயம் லாபம் கொடுக்கும்.

சேவை துறைகள்:
►INSURANCE
►TELEPHONE BILL
►ELECTRICITY BILL

இவற்றில் இன்சுரன்ஸ் மற்றும் டெலிபோன் பில் சேவைகள் மட்டும் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் உரிமம் பெற்று நடத்தலாம் ஆனால் ELECTRICITY BILL செலுத்தும்படி எந்த நிறுவனமும் இது வரை உரிமம் பெறவில்லை ஆனால் நீங்கள் அரசு இணையத்தளத்திலே பலருக்கு பில் கட்டும் வகையில் சேவைகள் வந்துவிட்டது. அரசு இணையதள  முகவரி  www.tnebnet.org/awp/TNEB/

உங்கள் வீட்டில் இருந்து கரண்ட் பில் கட்டும் இடம் தொலைவில் என்றால் தாராளமாக இதை தொடங்கலாம் ஒரு கார்டுக்கு 15-20 ரூபாய் வாங்கினால் கூட வரும் வருமானத்தில் உங்கள்  வீட்டு கரண்ட் பில் கட்டிவிடலாம்.


அனைத்து சேவைகளையும் தரும் நிறுவனங்கள்:
கீழே உள்ள நிறுவனங்கள் அனைத்து சேவைகளையும்(கூட்டு சேவை) ஒரே  உரிமத்தில் வழங்குகிறார்கள். அதாவது MOBILE RECHARGE, DTH RECHARGE, BUS RESERVATION, TRAIN RESERVATION, FLIGHTS RESERVATION, TELEPHONE BILL  போன்ற சேவைகள் அனைத்தையும் ஒரே உரிமத்தில் குறைந்த விலைக்கு வழங்குபவை

►ONE STOP SHOP - WWW.ONESTOPSHOP.IN
►SUVIDHAA            - WWW.MYSUVIDHAA.COM
►ITZCASH               - WWW.ITZCASH.COM
►ICASHCARD          -WWW.ICASHCARD.IN
►BEAM                    -WWW.BEAM.CO.IN

இன்னும் பல நிறுவனங்கள் உள்ளன  இவைகளில் உரிமம் பெற வேண்டும் என்றால் 1500 ரூபாய் முதல் 10000 ரூபாய் வரை பிடிக்கும்.

பேருந்துக்கு மட்டும் உரிமம் வழங்கும் நிறுவனங்கள்:

►TICKET GOOSE  - WWW.TICKETGOOSE.COM
►REDBUS             - WWW.REDBUS.IN

TRAIN, FLIGHT இருக்கை  போன்றவற்றின் நிலையை உடனுக்குடன் சுலபமாகவும், விரைவாகவும் தெரிந்துக்கொள்ள WWW.CLEARTRIP.COM தளத்தை பயன்படுத்தவும். ஆனால் இவர்கள் தளத்தில் சேவை கட்டணம் அதிகமாக பிடிப்பதால் பார்ப்பதற்கு மட்டும் இந்த தளத்தை பயன்படுத்தவும்.

கவனிக்கவும்:
1:  ஆரம்பத்திலேயே எந்த ஒரு நிறுவனத்திலும்  உரிமம் வாங்கி நஷ்ட்டம் அடைந்து விட வேண்டாம் முதலில் இன்டர்நெட் பேங்கிங் வழியே பயன்படுத்தி பார்த்து லாபம் உறுதி ஆனால் மட்டும் உரிமம் பெறவும்.

2: உரிமம் பெரும்முன் சரியான நிறுவனத்தையும், குறைந்த விலைக்கு உரிமம் கொடுக்கும் நிறுவனத்தையும் தேர்ந்தெடுக்கவும்(நான் நிறுவனத்தை  பரிந்துரைத்தால் பதிவின் நோக்கம் மாறிவிடும்) 
  
3: அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் வீட்டில் இந்த சேவைகளை பயன்படுத்த நினைத்தால் பகுதி நேரமாக செய்யவும்(மாலை இரண்டு மணி நேரங்கள் செய்தாலே போதும் லாபம் பார்க்கலாம்)

4: பாதுகாப்பு இல்லாத வீட்டில் வேளி ஆட்களை வீட்டுக்குள் அனுமதிக்கும் அளவுக்கு  யாரும் இந்த சேவையை வீட்டில் செய்ய முயற்ச்சிக்க வேண்டாம்.

5: வீட்டின் அருகே யாரேனும் இந்த தொழில் செய்பவர்கள் இருந்தால் அவர்களுடன் போட்டி போடுவதை தவிர்க்கவும். வேறு எங்கேயாவது இந்த சேவைகள் இல்லாத இடத்தில் அமைத்துக்கொள்ளவும்.

6:  இனி வரும் காலங்களில் எல்லாம் ஆன்லைன் சேவையாக வர இருப்பதால் நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ள தொழில்தான். நான் மேலே சொன்ன சேவைகள் தவிர்த்து SCHOOL, COLLEGE RESULTS, EMPLOYEMENT REGISTRATION, RENEWEL என பல சேவைகள் உள்ளன திறமையாகவும், சரியான கணிப்பும் இருந்தால் நிச்சயம் இந்த தொழில் மூலமே சரியான எதிர்க்காலத்தை அமைத்துக்கொள்ளலாம். எந்த தொழிலாக இருந்தாலும் நம் வெற்றி நம் அனுகும் முறையிலும், முழு ஈடுபாட்டிலும் தான் உள்ளது.

7: தயவு செய்து யாரும் ஆடம்பர செலவுக்காக இதை பயன்படுத்த வேண்டாம். ஏற்க்கனவே வருமானம் உள்ளவர்கள் உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள ஏழ்மையானவர்களுக்கு பரிந்துரைக்கவும்.

8: எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் கவுரவம் பார்க்காமல்  லட்சியத்தொடு தொடங்கினால்  இலக்கை எட்டிவிடலாம்.

Sunday, October 14, 2012

இந்திய வெட்டி வேர் கைவினைப் பொருட்கள்


கண்காட்சியிலிருந்த இந்திய வெட்டி வேர் கைவினைப் பொருட்களின் தயாரிப்பாளர்கள் விலாசம் கேட்டிருந்தாரகள். அவர்களுக்காக அந்தந்த பொருட்களின் புகைப்படத்தில் தந்திருக்கிறேன் வாங்கி பயன் பெறுங்கள்.


உயர் அழுத்ததில் இலை கொண்டு உருவாக்கப்பட்ட பலகை. (Board)
கண்காட்சியிலிருந்த இந்திய வெட்டி வேர் கைவினை பொருட்களின் காட்சி. முழுவதும் வேரினால் செய்யப்பட்டது. அழகாகவும், மணத்துடனும் நேர்த்தியாகவும் இருந்தது.
நன்றி   நன்றி :http://maravalam.blogspot.com/

கல்யாணச் 'சட்டை'!


ல்யாணத்துக்குச் சட்டை எடுப்பார்கள். ஆனால், கல் யாண அழைப்பிதழையே சட்டையைப் போல் உருவாக்கி இருக்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த அலெக்ஸ் ரவி. தன் மகன் திருமணத்துக்காக கோட் மாதிரி இவர் உருவாக்கி இருக்கும் சட்டைக்கு ஏரியாவில் செம ரெஸ்பான்ஸ்.
 ''நான் பொதுவாகவே எதைச் செஞ்சாலும் வித்தியாசமா செய்யணும்னு நினைப்பேன். டிரெஸ் தைக்கிறதுலகூட வித்தியாசம் காட்டுவேன். என் மகன் இன்ஃபன்ட் கல்யாணப் பத்திரிகை மாடல் பாக்குறதுக்காக சிவகாசி, மதுரை, பாண்டிச்சேரினு பல ஊருங்களுக்குப் போனேன். ஒண்ணுமே எனக்குப் பிடிச்ச மாதிரி இல்லை.  கல்யாணத்துக்கு நாள் வேற நெருங்கிட்டு இருந்தது. அப்பதான் சட்டைமாடல்லேயே பத்திரிகை  அடிச்சா என்னன்னு தோணுச்சு. வேஸ்ட் துணியில  வெட்டி ட்ரையல் பார்த்தேன். ஓரளவு தேறிச்சு. சட்டைக் காலருக்கு கேன்வாஸ் துணியையும், வெல்வெட் துணியையும் வெச்சு அயர்ன் பண்ணிப் பார்த்தேன். கோட் மாதிரி விரைப்பா நின்னுச்சு. என் பையனுக்கு சிவப்பு கலரும், என் மருமகள் தீபாவுக்குப் பச்சை கலரும் பிடிக்கும். அதனால, அந்த ரெண்டு கலர்லேயும் மொத்தம் 650 சட்டைகளை ரெடி பண்ணினேன். சட்டை இன்விடேஷனை சிவகாசிக்கு எடுத்துட்டுப் போய் பிரிண்டிங் பண் ணினோம். சட்டை பார்க்க வெறு மையா இருக்குதுனு என் மகளும் மருமகளும் சேர்ந்து சட்டைக்குப் பொருத்தமா நாலு பட்டன் வெச்சுத் தெச்சாங்க. என் மனைவி சட்டைப் பைக்கு மேல சின்னச் சின்ன பிளாஸ்டிக் ரோஸ் ஒட்டி இன்னமும் அழகாக்கினாங்க. என் பையன் அதை வைக்கிற மாதிரி கவர் தயா ரிச்சான். இப்படி குடும்பமே ஒண்ணுசேர்ந்து கல்யாணப் பத்திரிகையைத் தயாரிச் சோம். இன்விடேஷனை வாங்குன பலபேர் அதைப் பத்து நிமிஷ மாவது ஆச்சர்யமாப் பார்த்திருப்பாங்க. சில பேர் தங்கள் சொந்தக்காரங்களுக்கு கல்யாணம் வருது. இதே மாதிரி பண்ணித் தர முடியுமா?’னு கேட்டு ஆர்டர் கொடுத்தாங்க.
பத்திரிகையில மணமக்கள் பெயர், இடம், நாள், அதோட 'கல்யாணத்துக்கு வாங்க’னு மட் டும் போட்டுட்டேன்.
இப்படி சிம்பிளா அடிச்சதுனால சொந்தக்காரங்க யாரும் 'என் பேரை விட்டுட்டீங்க’னு கோபப்படவே இல்லை. அவங்களும் சட்டையில மயங்கிட்டாங்கன்னு நினைக்கிறேன்!'' பலமாகச் சிரிக்கிறார் அலெக்ஸ் ரவி.
-இ.கார்த்திகேயன்
படங்கள்: ஏ.சிதம்பரம்
மேலும் விபரம் தெரிந்தால் அனுப்பவும் 

சுடிதார் தைக்கும் முறை1. துணியை நான்காக மடித்து போட்டு படம் 1-ல் உள்ள அளவு படி வரைந்து வெட்டவும்.

2. துணியை நான்காக மடித்து போட்டு படம் 2-ல் உள்ள அளவு படி வரைந்து வெட்டவும்.

முன்பக்கம்: (படம் 3)
1. கழுத்திற்கு பீஸ் துணி வைத்து உட்புறம் மடித்து தைக்கவும்.

2. Open/Slit இருபக்கமும் ஓரம் மடித்து தைக்கவும்.

3. கீழே ஓரம் மடித்து தைக்கவும்.

பின்பக்கம்: (படம் 4)

1. முன்பக்கம் போல் பின்பக்கமும் தைக்கவும்.

2. கை ஓரம் மடித்து தைக்கவும்.

3. முன்பக்கம், பின்பக்கம் இரண்டையும் தோள்பட்டையில் சேர்த்து தைக்கவும்.

4. கை பகுதியை armhole உடன் சேர்த்துத் தைக்கவும்.

5. கடைசியில் கை நுனியில் இருந்து Open வரை சேர்த்து இரு பக்கமும் சேர்த்துதைக்கவும் (படம் 5)

Bottom

1. துணியை நான்காக மடித்து போட்டு படம் 6-ல் உள்ளபடி வரைந்து வெட்டவும்.
2. வெட்டிய பின் மீதமுள்ள துணியை இரண்டாக மடித்துப் போட்டு படம் 7-ல் உள்ளபடி வெட்டவும். துணியின் நீளவாக்கில் ஒருபக்கம் நாடா நுழைக்க மடித்துத் தைக்கவும்.
3. படம் 6-ன்படி வெட்டிய துணியின் முன்பக்கமும், பின்பக்கமும் படம் 8-ல் உள்ளபடி fril கொடுத்து தைக்கவும். காலின் கீழ்பகுதியை 1" மடித்து தைக்கவும்.
4. படம் 7-ல் உள்ள துணியின் இரு நுனியையும் சேர்த்துத் தைக்கவும்.
5. படம் 7ஐயும், படம் 6ஐயும் சேர்த்து படம் 8-ல் உள்ளபடி தைக்கவும்.

தையல் டிப்ஸ்

1. சுடிதார் தைக்கும் போது பள்ளிக்கு செல்லும் பிள்ளை களுக்கும் சரி பெரியவர்களுக்கும் சரி லைனிங் கொடுத்து தைக்கவும்.

2. மெல்லியா ஆடையாக இருந்தால் பெண்களுக்கு நெளிந்து கூன் போட்டு நடக்க வேண்டி வரும்.

3. இப்படி தைப்பதால் ரொம்ப பிரியா நடக்கலாம்.

4. வயது வந்த பெண்களுக்கு எப்போதும் இறுக்கமான ஆடைகளை அணிவிக்காதீர்கள்.

5. நான்கு விரல் லூசாகா இருக்கும் அளவிற்கு தையுங்கள்.முக்கியமா கழுத்து சிறிய கழுத்தாக தைக்கவும்.

6. டெய்லரிடம் கொடுக்கும் போது சொல்லி கொடுங்கள்.

7. நெக் பெருசா வைத்தால் தான் நல்ல தைக்கவரும் என்று டெய்லர்கள் அவர்கள் இழ்டத்துக்கு வைப்பார்கள்.

8. விலை உயர்ந்த துணியை தைக்க கொடுக்கும் போது உள்ளே பிரித்து பயன் படுத்துமாறு துணி விட்டு தைக்கவும்.

9. காட்டன் சுடிதார் தைக்க கொடுக்கும் போது ஒரு நாள் முழுதும் தண்ணீரில் நனைத்து பிறகு காய்ந்ததும் அய்ர்ன் செய்து கொடுங்கள்.

10. அப்படியே தைக்க கொடுத்தால் ஒரு முறை போட்டு துவைத்து மறு முறை போடும் போது கை கூட நுழைக்க முடியாது.

11. காசு கரியானது தான் மிச்சம்.அதே போல காட்டன் லைனிங்க் கொடுத்து தைத்த சுடிதாரை அலசி காய வைக்கும் போது லனிங்க் பகுதியை திருப்பி நல்ல உதரி போட வேண்டும்.

12. நல்ல பகுதி பக்கம் காய வைத்தால் உள்ளே உள்ள காட்டன் துணி சுருங்கி நிற்கும் அயர்ன் செய்ய ரொம்ப டைம் எடுக்கும்.


பிளவுஸ் தைக்கும் போது

1. பிளவுஸ் தைக்கும் போது இடுப்பு பட்டிக்கு உள் பக்கம் கேர்ன் வாஸ் துணி கொடுத்து தைத்தால் நல்ல ஸ்டிஃப்பாக இருக்கும் அல்லது பிள்ளைகளின் ஸ்கூல் காட்டன் பேண்ட் துணியும் வைத்து தைக்கலாம்.

2.எப்போதும் கலர் துணியை உள்ளே வைத்து தைக்ககூடாது, அது குண்டாக இருப்பவர்களுக்கு மடங்கும் போது வெளியே தெரியும்.


துணிகளை வெட்டும் போது

துணிகளை வெட்டும் போது கவனமாக உடனே அதை ஒரு துண்டு விடாமல் எடுத்து சுருட்டி ஒரு பையில்வையுங்கள். அங்கு இங்கு சிதர விட்டால் கை, பட்டி, கழுத்து துணி எல்லாம் காணாமல் போய் விடும்.

யாருடனும் சண்டை போட்டு விட்டு, பிள்ளைகளை திட்டி விட்டு துணிகளை வெட்டினால் உஷார் உடனே வெட்டிய துணியை பத்திரப்படுத்தவும்.
இல்லை என்றால் எப்படியும் ஒரு கையோ, பட்டி துணியோ காணாமல் போகும், இல்லை உங்கள் மேல் கோபமாக இருப்பவர்கள் அதை கண்டமட்டுக்கும் எங்காவது வெட்டி விடுவார்கள்.

அடுத்து முன்று வயதுக்குற்பட்ட குழந்தைகளை வைத்து கொண்டு தைக்காதீர்கள்.
நீங்கள் தைக்கும் போது ரொம்ப ஸ்வாரஸியமாக இருக்கும் அந்த நேரம் குழந்தை என்ன ஜோராக ஓடுகிறதே என்று கையை வைப்பார்கள்.
உடனே ஊசியால் குழந்தைகளின் கையை தைக்க வாய்பப்புகள் இருக்கு,
நீங்களும் தைக்கும் போது திரும்பி பார்க்காதீர்கள், பேசி கொண்டே தைக்காதீர்கள். உங்கள் கையே போய் மாட்டிக்கொள்ள வாய்ப்பிருக்கு.

துணி வெட்டும் போது கழுத்து பகுதி பெரியதாகி விட்டதா?

1.பிளவுஸ் மற்றும் சல்வார் வெட்டும் போது கழுத்து பகுதி பெரியதாகி விட்டால் கவலை பட தேவையில்லை, அதே போல் அரை இன்சுக்கு கழுத்து வரைந்து ஒட்டு கொடுத்து விட்டு ஒட்டு தெரியாமல் இருக்க லேஸ், அல்லது மணி, இல்லை ஜரிகை லேஸ் வைத்து தைத்து கொள்ளலாம் என்ன சல்வாரோ அத்ற்கு ஏற்றார் போல்.

2.அதே போல் சாதாரண சல்வார் கம்மீஸ் கூட கழுத்து , சைட் பகுதி, கையில் மணி அல்லது லேஸ் வைத்து தைத்தால் நல்ல ரிச் லுக் கிடைக்கும்.


3.இப்போது யாரும் பட்டு சேலை அவ்வளவாக உடுத்தி கொள்வதில்லை வொர்க் வந்தது தான், மைசூர் சில்க் போன்றவை தான் கட்டு கிறார்கள்.
அப்ப பழைய பட்டு சேலையை கூட சல்வார் கம்மீஸாக தைத்து கொள்ளலாம்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites