இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label உருவான கதை தெரியுமா. Show all posts
Showing posts with label உருவான கதை தெரியுமா. Show all posts

Monday, June 25, 2012

உழைப்பால் உயர்ந்த நண்பன்

உழைப்பால் உயர்ந்த நண்பன்கல்யாண ராமன் (Kal Raman) – திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மன்னார்கோவில் என்ற கிராமத்தில் பிறந்து சிறுவனாக இருக்கும்போது தந்தையை இழந்து, வறுமையில் வாடி, தெரு விளக்கில் படித்து, கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்து இன்று அமெரிக்காவிலிருக்கும் “GlobalScholar” என்ற கம்பெனியின் CEO.

அமெரிக்காவிலிலுள்ள சியாட்டல் (Seattle) நகரில் வசிக்கும் கல்யாண ராமனுக்கு Bill Gates, Jeff Bezos (Founder and CEO of Amazon.com) போன்றவர்கள் நண்பர்கள். தான் சிறு வயதில் வறுமையில் கஷ்டப்பட்டதை போல் ஏழை மாணவர்கள் கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணத்தில் இன்று கிட்டத்தட்ட 2000 மாணவர்களை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறான். அதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் டாக்டர், எஞ்சீனியர் போன்ற படிப்பு படிப்பவர்கள்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxஎன்னைப் பொறுத்தவரையில்மற்ற தொழிலதிபர்களைப் போல, நீங்கள் வேறு துறையில் முதலீடு செய்திருக்கிறீர்களா?

நான் ஏற்கனவே செய்துகொண்டிருக்கிர ‘காட்டன்’ தொழிலில் இன்னும் சாதிப்பதற்கு நிறைய இருக்கு. நான் நினைத்ததையெல்லாம் செய்து முடித்துவிட்டேன் என்றால், வேறு தொழிலில் முதலீடு செய்யலாம். அல்லது செய்கிற வேலையில் முன்னேற்றம் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம் இருந்தால் வேறு தொழில் செய்யலாம். எனக்கு இரண்டுமே இல்லை. வெள்ளை நிறத்தை அனைத்து தரப்பினரும் உடுத்த வைக்க வேண்டும் என்கிற இலட்சியத்தை அடைய, இந்த ஜென்மம் பத்தாது. கைராட்டையிலிருந்து காற்றாலை வரை வளர முடிந்த ஒரு தொழிலில் சாதிக்க முடியாததையா, வேறு ஒரு புதிய தொழிலில் செய்துவிடமுடியும்?

எல்லாவற்றுக்கும் மேலாக, ‘ராம்ராஜ் காட்டன்’ நிறுவனம் அரசாங்கத்திற்கு வருமான வரியெல்லாம் ஒழுங்காக கட்டிய பிறகு கிடைக்கிற வருமானம் உழைப்புக்கு ஏற்ற ஊதியமாக இருக்கிறது. ரியல் எஸ்டேட். ஷேர் மார்கெட் போன்ற உடனடி லாபம் ஈட்டும் தொழில்களில் ஈடுபடச் சொல்லி நிறையபேர் சொல்லுவார்கள். ஒரு கோடி ரூபாய்க்கு நிலம் வாங்கி போட்டா, அது பல மடங்கு விலையேறி லாபம் தரலாம். அதில் எத்தனை குடும்பங்கள் பிழைக்கிறது? என்கிற கேள்விக்குப் பதில் இருக்காது. அதே பணத்தை வைத்துக்கொண்டு, ‘ஷோரூம்’ திறந்தால் குறைந்தது 50 பேருக்கு வேலை தர முடியும். அந்த 50 குடும்பங்கள் வாழ வழி ஏற்படும்.

இந்தத் தெளிவு எனக்கு இருந்ததால், எப்போதும் இன்னொரு தொழிலில் முதலீடு செய்வதில் ஆர்வம் இல்லாமல் போனது. அது சரியான முடிவு என்றும் நம்புகிறேன்
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
என்னென்ன தேவை?என்னென்ன தேவை?

தோசை மாவு & 1 கப் சின்னவெங்காயம் & ஒரு கைப்பிடி கடுகு, உளுந்து & தலா அரை டீஸ்பூன் பச்சை மிளகாளிணி & 4 கறிவேப்பிலை & 1 ஆர்க்கு எண்ணெளிணி & 2 டேபிஷீமீ ஸ்பூன்

எப்படிச் செய்வது?

தோசை மாவு புளித்துவிட்டாலும், அதைவைத்தே சுவையான இந்த குழியப்பத்தை சமைக்கலாம். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கி, தோசை மாவில் சேர்த்துக் கலக்கவும். இந்த மாவை குழிப்பணியாரச் சட்டியில் ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய்விட்டு திருப்பிப்போட்டு வெந்ததும் எடுக்கவும். தோசைமாவில் உப்பு சேர்க்கவில்லை என்றால்சிறிது உப்பு சேர்க்கவும். இதை சைடு டிஷ் இல்லாமலும் சாப்பிடலாம்.

முப்பருப்பு உருண்டை குழம்பு

என்னென்ன தேவை?

பாசிப்பருப்பு & 1 பிடி கடலை பருப்பு & 2 பிடி துவரம் பருப்பு & 3 படி சீரகம் & 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் & 4 பெருங்காயம் & சிறிதளவு உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி & தேவைக்கு கெட்டியான மோர் & 3 டம்ளர் எண்ணெய் & பொரிக்க

அரைக்க:

தேங்காய் துருவல் & 2 டேபிள் ஸ்பூன்,ஊறவைத்த துவரம் பருப்பு & 1 டேபிள் ஸ்பூன் சீரகம், தனியா & தலா 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் 3 & பெருங்காயம், மஞ்சள் தூள் & சிறிதளவு

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்து மோரில் கலந்து கொதிக்க விடவும். கறிவேப்பிலை, உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். பருப்புகளை அரை மணிநேரம் ஊறவைத்து நீர் வடித்து காய்ந்த மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து வடை பதத்தில் அரைக்கவும். இதனுடன் சிட்டிகை சமையல் சோடா, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு லேசாகக் கிளறி சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இவற்றை இறக்கிவைத்திருக்கும் மோர்க்குழம்பில் போட்டு கடுகு தாளித்துக் கொட்டவும். கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். அரைமணிநேரத்தில் உருண்டைகள் குழம்பில் நன்றாக ஊறி சூப்பர் சுவையுடன் இருக்கும்.

Thnxs;http://tharu.in/Read/250/






Tuesday, April 3, 2012

காலண்டர் தோன்றிய விதம்

நண்பர்களே நாம் அனைவருமே புத்தாண்டை (2012) வரவேற்க ஆவலுடனும் உற்சாகத்தோடும் காத்திருக்கிறோம், புது வருடத்திற்கு விதவிதமான வடிவமைப்புகளில் காலண்டர்கள் வாங்கி மகிழுவோம் காலண்டர்கள் நமது பயன்பாட்டுகளில் மிகவும் முக்கியமான ஒன்று அத்தகைய காலண்டர்கள் எப்படி உருவானது என்று காலண்டர் பிறந்த கதையைத் தெரிந்து கொள்வோம்!

கணக்கு கூட்டுவது எனும் பொருள் தரும் ‘கலண்டே’ எனும் இலத்தீன் உச்சரிப்பிலிருந்து உருவானதுதான் காலண்டர் (Calender) எனும் ஆங்கிலச் சொல். புவியியல் மற்றும் கால நிலைகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களே துவக்ககால காலண்டர்களுக்கு அடிப்படையாக அமைந்தன. நைல் நதியில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கை அடிப்படையாகக் கொண்டு புராதன எகிப்தியர் உருவாக்கிய காலண்டர் இதற்குச் சான்று. இன்று நம் முன்னே இருக்கும் காலண்டரின் அடிப்படை கி.மு. 45 இல் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியன் காலண்டரே.

இன்று உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படும் காலண்டரே முறையே கிரிகோரியன் காலண்டர். பதிமூன்றாம் போப் ஆண்டவராக இருந்த போப் கிரிகோரியின் ஆனைப்படி, அலோயிஷியஸ் ல்லியஸ் என்னும் மருத்துவரே 1582 பிப்ரவரி 24 இல் ஜீலியன் காலண்டரில் காணப்பட்ட குறைபாடுகளைத் திருத்தியமைத்து கிரிகோரியன் காலண்டரை உருவாக்கினார். ஏசு கிருஸ்துவின் பிறந்த தினத்தை அடிப்படையாக கொண்ட இக்காலண்டரின் வருடங்கள் ஒழுங்கமைப்பட்டது.

ஸ்பெயின், போர்ச்சுக்கல்,போலிஷ்லிதுவேனியன் காமன்வெல்த், இத்தாலியின் பெரும்பாலான பகுதிகள் போன்றவையே கிரிகோரியன் காலண்டரை முத்ன் முதலில் ஏற்றுக்கொண்டன. 1582 அக்டோபர் முதல் இவை கிரிகோரியன் காலண்டரைப் பயன்படுத்தத் துவங்கின. இங்கிலாந்தும் அமெரிக்காவும் 1752 ஆண்டிற்கு பின்பே கிரிகோரியன் காலண்டரை அங்கீகரித்தன. 1923 பிப்ரவரி 15 ல் கிரிகோரியன் காலண்டரை அங்கீகரித்த கிரீஸே இந்தப் பட்டியலின் கடைசி நாடு.

மாதங்களின் பெயர் வரலாறு:

ஜனவரி: ரோமன் இதிகாசத்தில் “துவக்கங்களின் கடவுளாக” காணப்பட்ட ஜானஸ்லானுயாரியஸ் கடவுளின் பெயரே கிரிகோரியன் காலண்டரின் முதல் மாதமான ஜனவரிக்கு வழங்கப்பட்டது.

பிப்ரவரி: ஜூலியன் மற்றும் கிரிகோரியன் காலண்டரின் இரண்டாவது மாதம் பிப்ரவரியே “சுத்தப்படுத்தல்” எனும் பொருள் தரும் ஃபெப்ரம் எனும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்ததே பிப்ரவரி. புராதன ரோமர்கள் பிப்ரவரி மாதம் 15 ம் தேதி ஃபெப்ரா எனும் சுத்தப்படுத்தும் செயலைச் செய்வதற்காக சூட்டப்பட்டதே இந்த பிப்ரவரி.

மார்ச்: ரோமர்களின் போர்க்கடவுளான “மார்ஸி: என்பதிலிருந்து உருவானதே மார்ச் கி.மு 700 களில் ரோமாபுரியை ஆண்ட நுமபோம் விலஸ் மன்னர் ஜனவரியையும், பிரபரிவரியையும் ஒன்றினைப்பதற்கு முன்பு வரை மார்ச் மாதமே ரோமக் காலண்டரின் முதல் மாதம்.

ஏப்ரல்: ஏபரல் மாதப் பெயர் பிறந்தது பற்றி பல்வேறு கருத்துக்கள் உள்ளன. ‘திறக்குக’ எனும் பொருள் தரும் ‘அபேரிரே’ எனும் இலத்தீன் சொல்லிலிருந்துதான் ஏப்ரல் மாதத்திற்கு அப்பெயர் கிடைத்தது என்பது ஒரு கருத்து. ரோம ஐதீகப்படி எல்லா மாதங்களின் பெயர்களும் கடவுள் பெயரிலிருந்தே துவங்குகிறது. அதன்படி ஏப்ரல் மாதம் வீனஸ் தேவதையின் மாதமாகக் கருதப்படுகிறது கிரேக்கர்கள் வீனஸை அஃப்ரோடைட் என்றே அழைக்கினறனர் அதன்படி வீனஸ் தேவதையின் மாதம் எனும் பொருள் தரும் ‘அப்லோரிஸ்’ என்னும் சொல்லே ஏப்ரல் மாதத்திற்கு வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

மே: கிரேக்கக் கடவுளான ‘மாயியா’ வின் பெயரே மே மாதத்திற்கு வழங்கப்பட்டுள்ளது

ஜூன்: ஜூபிடர் கடவுளின் மனைவியாக புராதன ரோமர்கள் கருதிய ’ஜூனோ’ என்பதிலிருந்தே ஜூன் மாதம் பிறந்தது

ஜூலை: ரோமக் காலண்டரின் மாதமாக கருதப்பட்ட, இலத்தீன் மொழியின் ‘கவிண்டிலஸ்’ என அழைக்கப்பட்ட இம்மாதத்தில்தான் ஜூலியஸ் சீசர் பிறந்தார். அதையடுத்தே இம்மாதத்திற்கு ஜூலை எனப் புதுப்பெயர் சூட்டப்பட்டது

ஆகஸ்ட்: ஆகஸ்ட் மாதம் புராதன ரோமக் காலண்டரில் ஆறாவது மாதமாகக் கருதப்பட்டது. ஆறாவது எனப் பொருள்படும் ‘ஸெக்டிலஸ்’ எனும் இலத்தீன் சொல்லே துவக்ககால ரோமக் காலண்டரில் இம்மாதத்தின் பெயராக ப் ப்யன்படுத்தப்பட்டிருந்தது. பிற்பாடு கி.மு எட்டாம் நூற்றாண்டில் அலெக்ஸாண்ட்ரியா நகரை வென்ற அகஸ்டஸ் சக்ரவர்த்தியின் சிறப்பை வெளிப்படுத்தும் விதத்தில் இம்மாதத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.

செப்டம்பர்: இலத்தீன் மொழியில் ‘ஏழு ‘ எனப்பொருள் வரும் “செப்டம்” என்ற சொல்லே புராதன ரோமர்களின் காலண்டரில் ஏழாவது மாதத்திற்கு வழங்கப்பட்டது. அதையொட்டி கிரிகோரியக் காலண்டரும் அப்பெயரைப் பின்பற்றியது.

அக்டோபர்: இலத்தீன் மொழியில் ‘எட்டு’ எனப் பொருள் தரும் “அக்டோ” என்ற சொல்லிலிருந்து வந்ததே அப்பெயர்.

நவம்பர்: ஒன்பது எனும் பொருள் தரும் ‘நோவம்’ எனும் இலத்தீன் சொல்லிலிருந்து உருவானதே நவம்பர்.

டிசம்பர்: இலத்தீன் மொழியில் ‘பத்து’ எனும் பொருள் தரும் “டிசம்பர்” ரோமக் காலண்டரில் பத்தாவது மாதமாக இருந்தது.

இந்திய தேசியக் காலண்டர்

கி.பி. 78 இல் துவங்கும் சக காலண்டரே இந்தியாவின் தேசியக் காலண்டராக கருதப்படுகிறது.சாதவாஹன மன்னரான சாலிவாஹன் உஜ்ஜைனி மன்னர் விக்ரமாதித்தனை போரில் வென்றதையடுத்து சக வருடம் துவங்கியது . இந்தியாவில் கிரிகோரியன் காலண்டரும் சக வருடக் காலண்டரும் அதிகாரப் பூர்வமாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. 1957 இன் காலண்டர் மறு சீரமைப்பு கமிட்டியே சக காலண்டரை அதிகாரப் பூர்வ காலண்டராக அங்கீகரிக்கப் பரிந்துரை வழங்கியது. கிரிகோரியன் காலண்டரின் 1957 மார்ச் 22 ஆம் தேதியில்தான் சக வருடத்தின் முதல் மாதமான சைத்ரம் 1 , 1879 இல் அதிகாரப் பூர்வமாகத் துவங்கியது.

தமிழ்க் காலண்டர்:

சூரியனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. கிரிகோரியனைப் போன்றே சித்திரை முதல் பங்குனி வரையிலான 12 மாதங்கள் இதிலும் உண்டு

இஸ்லாமியக் காலண்டர்:

முகமது நபி மெக்காவிலிருந்து மதினாவுக்குச் சென்ற நாளிலிருந்துதான் இஸ்லாமிக் காலண்டரின் வருடம் துவங்குகிறது. கி.பி. 622 இல் நிகழ்ந்தது நபியின் பயணம். சந்திரனை அடிப்படையாக கொண்ட இது 12 மாதங்கள் கொண்டது

ஜூலியன் காலண்டர்

கி.மு.45 இல் பிரபல வானியல் நிபுணராக இருந்த கோஸிஜின்ஸி என்பவரின் அறிவுரைப் படி இக்காலண்டரை நடைமுறைப் படுத்தியவர் ஜூலியஸ் சீசரே. தற்போது பரவலாகப் பயன்படுத்தப் பட்டு வரும் கிரிகோரியன் காலண்டரின் முன்னோடி இது. ஜூலியன் காலண்டரின்படி ஒரு வருடத்திற்கு 365 நாட்கள். “லீப் வருடம்” என்பது ஜூலியன் தந்த கொடையே.

இன்சுலின் தோன்றிய விதம்

தற்போது உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் முக்கியமானது நீரிழிவு.
இன்சுலின் கண்டுபிடிப்புக்கு முன்பு, எந்த மருத்துவ ஆய்வும் நீரிழிவுக்கு தீர்வு சொல்ல முடியாத நிலையில், பிரெட்ரிக் கிராண்ட் பேண்டிங் மற்றும் ஜான் ஜேம்ஸ் ரிச்சர்ட் மேக்லியோட் ஆகிய இருவரும், தங்களது தீவிர முயற்சியால் இன்சுலினைக் கண்டுபிடித்தனர்.
இதில் ஒருவரான பேண்டிங்-ஐ சின்ன வயதிலேயே நீரிழிவு நோய் தாக்கியது. 1916-ம் ஆண்டில் இந்த நோய்க்கு எந்த தீர்வும் கண்டுபிடிக்காத நிலையில் பேண்டிங் திணறினார்.
உடலுக்குள் செலுத்தப்படும் புது கணைய நீரானது நோயாளியின் உடலிலேயே சுரந்து கொண்டிருக்கும் பழைய கணைய நீரோடு இணைந்து செயல் பட்டால் பிரச்சினை இல்லை என்ற தேடுதலோடு பல மருத்துவ ஏடுகளை புரட்டினார்.
பல விஞ்ஞானிகளோடு ஆலோசித்தார். அப்போது பேண்டிங்குக்கு வரப்பிரசாதமாய் ஒரு கட்டுரை கிடைத்தது.
அதில் சில புதிய விஷயங்கள் கிடைத்தன. மேலும் நீரிழிவு நோய் குறித்த ஆழ்ந்த ஆய்வுகளையும், கட்டுரை விளக்கங்களையும் அளித்து வந்த மேக்லியோட்டின் அறிமுகம் கிட்டியது.
இருவரும் இணைந்து தீவிரமான ஆராய்ச்சி மேற்கொண்டனர். பேண்டிங் தடுமாறும்போதெல்லாம் தூக்கிவிட்ட மேக்லியோட்டின் துணையோடு, 1922-ம் ஆண்டில் கற்பனைப் பொருளாக இல்லாது நிஜத்தில் உருவானது இன்சுலின்!
ஆரம்ப காலத்தில் கணைய சுரப்பிகளில் நார் கட்டி செய்யப்படும் சிகிச்சைக்குப் பிறகு வெளியிலிருந்து இன்சுலின் ஏற்றப்பட்டு நீரிழிவு நோய்க்கான சிகிச்சை மேற்கொள்ளப் பட்டாலும் பிற்காலத்தில் மருத்துவ உலகில் நடந்த பெரும் ஆராய்ச்சிகள் நார் கட்டும் சிக்கலிலிருந்து விடுதலை பெற்றுத் தந்துள்ளன.
ஆனால் அதற்கு பின் ஏற்பட்ட அத்தனை முன்னேற்றங்களும் இன்சுலீன் எனும் அஸ்திவாரத்தின் மீது தான் நின்று கொண்டிருக்கின்றன.
இன்சுலின் கண்டுபிடித்திருக்காவிட்டால் நீரிழிவு நோய்க்கான சிகிச்சை முன்னேற்றங்கள் நடந்திருக்காது. இத்தகைய அற்புத கண்டுபிடிப்புக்காக பேண்டிங் மற்றும் மேக்லியோட் இருவருக்கும் 1923-ம் ஆண்டு, மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது

டை தோன்றிய விதம்

ரோமாபுரிப் படை வீரர்கள் தங்கள் கழுத்தைச் சுற்றி ஒரு சிறு துணியை அணிந்தார்கள்.
அது, குளிர் காலத்தில் இதமாக இருக்கும். வெயில் காலத்தில் வியர்வையை உறிஞ்சும்.
காலப்போக்கில் மற்ற படை வீரர்களும் அதைப் பின்பற்றத் தொடங்கினர். பிரெஞ்சுப் புரட்சியின்போது அவரவர் சார்ந்த கட்சியைக் குறிக்கும் விதத்தில் வெவ்வேறு நிறங்களில் `டை’ அணிந்துகொண்டனர்.
குரோஷிய ராணுவத்திடம் இருந்து டையின் அமைப்புகளையும், `க்ரேவட்’ (Cravat) என்ற சொல்லையும் எடுத்துக்கொண்டனர்.
பின்னர் இது நாகரிக உடையின் ஆடையாளம் ஆனது. அலுப்பூட்டும் உடைகள் இடையே, வண்ணத்தை அள்ளித் தெளிப்பதாக டைகள் வடிவமைக்கப்பட்டன

Monday, April 2, 2012

புளுடூத் என பெயர் வரக் காரணம் என்ன

புளுடூத் தொழில்நுட்பம் செயல்படும் விதத்திற்கும், இந்த பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நார்டிக் நாடுகள் என அழைக்கப்படும் டென்மார்க்
, ஸ்வீடன், நோர்வே மற்றும் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கினார்கள்.
இவர்களுக்கு சரித்திரத்தில் புகழ் பெற்ற டென்மார்க் அரசர் மீது அசாத்திய மரியாதையும் பிரியமும் இருந்தது.
அந்த மன்னர் பெயர் ஹெரால்ட் புளுடூத். அவரின் நினைவாகவே இந்த தொழில் நுட்பத்திற்கு புளுடூத் எனப் பெயரிட்டனர்.
இவர் 900 ஆண்டில் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும், நோர்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்தார்.
பின்னர் கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார்.
986ல் தன் மகனுடன் ஏற்பட்ட போரில் மரணமடைந்தார். நாடுகளை இணைத்தது, கிறித்தவ மதத்தினை அறிமுகப்படுத்தியது, நினைவுச் சின்னம் அமைத்தது போன்ற செயல்களால் புகழடைந்தார்

Sunday, February 26, 2012

சாம்பிராணி எப்படி உருவாகிறது தெரியுமா


பண்டைய காலம் முதல் மதவழிபாட்டிற்கும் மருத்துவ பயன்பாட்டிற்கும் சாம்பிராணி பயன்பட்டு வருகிறது . சாம்பிராணி எதில் இருந்து பெறப்படுகிறது  என்று என்றாவது  நீங்கள் யோசித்தது  உண்டா ?

மாவீரன் மகா அலெக்ஸான்டர் சிறு வயதில் தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டில் இடம் கல்வி பயின்று கொண்டு இருக்கும் போது தன்னுடைய ஆசிரியருக்கு சாம்பிராணி தேவைப்பட்டதை உணர்ந்தார் பின்பு மாவீரனாக உலகை வெல்ல ஆரம்பித்த நேரத்தில் மேற்கத்திய நாடுகளின் படையெடுப்பின் போது மூட்டை மூட்டையாக சாம்பிராணியை தன்னுடைய  ஆசிரியர் அரிஸ்ட்டாட்டிலுக்கு அனுப்பி வைத்தார்.

சாம்பிராணி ஆனது பாஸ்வெல்லியா செர்ராட்ட(Boswellia serrata)எனப்படும் தாவரகுடும்பத்தை சேர்ந்த  ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) எனப்படும் மரத்திலிருந்து வடியும் பால் ஆகும் இது மிக மெதுவாக கடினமாகி ஒளிபுகும் தன்மையும் எளிதில் எரியும் தன்மையுடைய சாம்பிராணி ஆக மாறுகிறது. இவையை எரித்தால் மிகுந்த மணத்தை பரப்பும்
ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) மரங்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவில் குஜராத்,அஸ்ஸாம்,ராஜஸ்தான்,பீகார், ஒரிஸா, மற்றும் தமிழ்நாட்டில் அதிமாக காணப்படுகிறது .தமிழ்நாட்டில் குறிப்பாக கல்வராயன், சேர்வராயன் மலைச்சரிவுகளில் 500 மீ – 700 மீ உயரத்தில் காணப்படுகிறது மரமானது உறுதியானது ஆனால் எளிதில் அறுக்கவும் , இழைக்கவும் முடியும் இவ்வகை மரங்கள் தீக்குச்சிகள் தயாரிக்க பெரிதும் பயன்படுகின்றன . நவம்பர் மாதம் முதல் ஜூலை வரையிலான காலங்களில் பால் அதிகமாக வடியும் ஒரு மரத்திலிருந்து ஆண்டு ஒன்றிற்க்கு 1 கி.கி வரையில் சாம்பிராணி பெற முடியும்

சாம்பிராணி மருத்துவ பயன்கள்

ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) மரத்திலிருந்து கோந்தும் பெறப்படுகிறது இவையும் சாம்பிராணி போலத்தான் கோந்தை நீருடன் சேர்த்து பெண்டோஸ் சர்கரைகள் தயாரிக்கப்படுகிறது இது இருமல், காமாலை, நாள்பட்டபுண்கள், சொறி, சிரங்கு ,படர்தாமரை போன்றவற்றிற்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

சாம்பிராணியை ஆவியாக்கி போஸ்வெல்யா எண்ணை , டர்பெண்டைன் எண்ணை போல எண்ணை எடுக்கிறார்கள்  இதிலிருந்து வார்னிஷ் தயாரிக்கப்படுகிறது . சாம்பிராணி எண்ணை ஆனது சோப்பு தயாரித்தலிலும் பயன்படுகிறது
 

ஜெராக்ஸ் உருவான எப்படி

உலகமெங்கும் நகலெடுக்க பயன்படும் ஜெராக்ஸ் இயந்திரம் மனித வாழ்வில் பிரிக்க முடியாதவை ஆகிவிட்டது ஆனால் அந்த ஜெராக்ஸ் இயந்திரத்தை கண்டுபிடிக்க  செஸ்டர் கார்ல்சன் எனும் தனி மனிதனுக்கு முப்பது வருடங்கள் ஆயிற்று இடைப்பட்ட காலத்தில் செஸ்டர் கார்ல்சன் பட்ட அவமானங்களும் துயரங்களும் சொல்லில் அடங்காதவை வருங்கள் நண்பர்களே  நகலெடுக்கும் இயந்திரத்தின் வரலாற்றை புரட்டிப்பார்போம்.

1960 மார்ச் மாதம் “ ஜெராக்ஸ் 914 “ எனும் நகலெடுக்கும் கருவி நடைமுறைக்கு வருவதற்க்கு முன் நகலெடுப்பது என்பது மிகவும் சிக்கலான விஷயமாக இருந்தது அதாவது புகைப்படக்கலையின் நுட்பங்களை பயன்படுத்தி பயிற்ச்சி பெற்ற பணியாளர்கள் பலவிதமான இரசயனங்களில் நனைத்து மணிக்கணக்கில் காயவைத்து  ஒன்றுடன் ஒன்று ஒட்டி கவனமாக நகலெடுத்தனர் கொஞ்சம் கவனம் சிதறினால் நகலெடுக்க வேண்டிய முக்கிய தாள்கள் பாதிப்புக்கு உள்ளாகி விடும் .

ஜீ பூம்பா சிந்தனை

1906 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலாத்தில் ஒரு வறுமைகுடும்பத்தில் பிறந்த செஸ்டர் கார்ல்சன் பகுதி நேரம் உழைத்து இயற்பியலில் பட்டம் பெற்றார் தனது குடும்பத்தின் வறுமையை போக்க பல இடங்களில் பணியாற்றினார் “பேடண்ட்” துறையில் பணியாற்றிய போது கார்ல்சனுக்கு தனது அலுவலகத்தில் நகலெடுக்க பட்ட கஷ்டங்களை பார்த்து நகலெடுக்க வேண்டிய தாளை ஒரு கருவி மேலே வைத்தால்  ஈரம் படாமல் நகல் வந்து விழுந்தால் எப்படி இருக்குமென்று ஜீ பூம்பா கணக்கில் யோசித்தார்  தனது யோசனையை அலுவலக நண்பர்களிடம் சென்னார் ஒட்டுமொத்த அலுவலகமோ கை கொட்டி சிரித்தது தனது யோசனையை நடைமுறைபடுத்தப்போகிறேன் என்று சொன்னதிற்கு  பெரிய பெரிய விஞ்ஞானிகள் எல்லாம் முயற்சித்து தோற்றுவிட்டனர் உனக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா என ஏளனம் செய்தனர் .

முயற்சியே மூலதனம்

கையிலோ காசில்லை ஆனாலும் தனது சிந்தனையின் மேல் அபாரநம்பிக்கை கொண்டு இருந்தார் அவருடைய நல்ல காலம்  ஒளிமின் நிகழ்வு ( photo electricity) அவருடைய கவணத்தை ஈர்த்தது இருட்டாக இருக்கும் போது மின்சாரம் பாயமல் தடுக்கும் இயல்பு கொண்ட சில பொருள்களின் மீது  ஒளிக்கதிர்கள் படும் போது அவைகள் மின்சாரத்தை கடத்தும் இது  ஒளிமின் நிகழ்வு அது போல முடி, பட்டுத்துணி, எண்ணைதோய்த காகிதம் ஆகியவற்றை அழுத்தி தேய்தால் நிலை மின்சாரம் உண்டாகும்  இந்த இரண்டு நிகழ்வுகளையும் இணைத்து நகலெடுக்கும் கருவிக்கு வடிவம் கொடுத்தார் செஸ்டர் கார்ல்சன் . கருவியின் மேற்பரப்பில் தகடு ஒன்றில் ஒளிஉணர் பொருளினால் பூச்சு ஏற்படுத்தி அதில் நிலை மின்சாரத்தை ஏற்படுத்தி அதற்கு மேல் நகலெடுக்க வேண்டிய ஒளி ஊடுருவும் தாளை வைத்து அதன் வழியே ஒளியை பாய்ச்சினார் தாளின் எழுத்துகள் இல்லாத வழியே ஒளி பாய்ந்தது அதற்கு அடியில் உள்ள தகட்டில் ஒளி பட்டதும் நிலைமின்சாரம் அகன்று விட்டது எனவே இந்த அமைப்பை அப்படியே ஒரு தாளில் பதிய வைத்து வெற்றியும் பெற்றார் அக்கருவிக்கு உரிமமும் பெற்றார்

இரண்டாம் உலகப்போரினால் கார்ல்சன் பட்ட கஷ்டம்

தனது கருவியை 1938 இல் சந்தைக்கு அறிமுகம் செய்தார் . பார்பதற்கு காம , சோமா வென்ற கருவி தெளிவில்லாத எழுத்துகள் , ஒளி ஊடுருவும் தாளில் இருந்தால் மட்டுமே நகலெடுக்க முடியும் சாதாரண தாள்களை நகலெக்க முடியாது போன்ற பல காரணங்களால் கருவி தோல்வி அடைந்து விட்டது கருவியில் உரிய மாற்றங்களை செய்ய வேண்டும் அதற்கு பணம் நிறைய வேண்டும் எல்ல நிறுவனங்களும் கார்ல்சனை கிண்டலடித்தார்களே தவிர யாரும் உதவ முன் வரவில்லை இதற்க்கிடையில் இரண்டாம் உலகபோர் தொடங்கி விட்டது தான் பட்ட பாடெல்லாம் வீணாகி விடுமோ என்ற அச்சம் கார்ல்சனுக்கு தோன்றி விட்டது

தோல்வி மேல் தோல்வி

எதிர்பாரத விதமாக நியூயார்க்கை சேர்ந்த ஹோலாய்ட் கார்பரேஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த வில்சன் என்பவர் பண உதவி செய்ய முன் வந்தார் சாதாரண தாளினை நகலெடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடிக்க ஹோலாய்ட் கார்பரேஷன்  பல லட்ச கணக்கான டாலர்களை செலவிட்டதால் பணமின்மையால் நகலெடுக்கும் கருவியை முழுமையடையாமலே 1950 இல் வெளிட்டது  மீண்டும் செஸ்டர் கார்ல்சனுக்கு தோல்வி  இருப்பினும் லித்தோகிராபிக் அச்சுத்துறைக்கும் இராணுவதில் பெரிய வரைபடங்களை நகலெடுக்க உதவியதால் செஸ்டர் கார்ல்சனின் கருவி இந்த முறை தப்பித்தது

சாதித்த ஜெராக்ஸ் 914 

பல வித இடர்பாடுகளுக்கு பின் 1960ஆம் ஆண்டு மார்ச் மாதம் “ ஜெராக்ஸ் 914 “ சந்தைக்கு வந்தது இருப்பினும் பெரிய நிறுவனங்கள் யாரும் ஆதரவு தராததால் ஹோலாய்ட் கார்பரேஷன் வாடிக்கையாளர்களுக்கு  நேரிடையாகவே வாடகைக்கு விட்டது கருவியின் விரைவான நகலெடுக்கும் தன்மையும், நகல் எழுத்துகளின் துல்லியமும் வாடிக்கையாளர்களை கவர்ந்து விடவே ஹோலாய்ட் கார்பரேஷனுக்கு ஆர்டர்கள் குவிந்தன நிறுவனத்தின் பங்கு மதிப்பு எக்கச்சக்கமாக உயர்ந்தது செஸ்டர் கார்ல்சனுக்கு  உரிமைத்தொகையாக மட்டும்  இரண்டரை கோடிக்கும் அதிகமான டாலர்கள் கிடைத்தது கடைசியில் ஜெராக்ஸ் இயந்திரம் மட்டும் ஜெயிக்க வில்லை அதை கண்டுபிடித்த ஒரு சராசரி மனிதன் வரலாற்றின் பக்கங்களில் விஞ்ஞானியாக பதிவு செய்யப்பட்டான் 

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites