இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label சூரியகாந்தி எண்ணெய் தயாரிக்க வழிகாட்டி. Show all posts
Showing posts with label சூரியகாந்தி எண்ணெய் தயாரிக்க வழிகாட்டி. Show all posts

Sunday, October 2, 2016

கல்செக்கு எண்ணெய் உற்பத்தி.

பேட்டையில் கல்செக்கு எண்ணெய் உற்பத்தி - பாரம்பரிய தொழிலை பாதுகாக்கும் குடும்பம்.


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ 

திருநெல்வேலி சுத்தமல்லி பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை மாடுகளை பயன்படுத்தி கல்செக்குகளை இயக்கி எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்கும் தொழில் பிரதானமாக நடைபெற்று வந்தது. இப்போது மாடுகள் மூலம் செக்குகளை இயக்கி எண்ணெய் உற்பத்தி நடைபெறுகிறது. இத்தொழிலில் தற்போது மிகவும் குறைந்த எண்ணிக்கையிலானோரே ஈடுபட்டு வருகின்றனர்.  ஆனாலும் செக்கு எண்ணெய்க்கான மகிமை குறையவில்லை. அதற்கான தேவை இன்றும் உள்ளது.


தற்போது சுத்தமல்லி பகுதியில் ஓரிருவர் மட்டுமே செக்கு எண்ணெய் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் சீனிவாசன் ஏழாவது தலைமுறையாக இத்தொழிலில் இவர் ஈடுபட்டிருக்கிறார். தற்போது இவர் மாடுகள் மூலம் கல்செக்கை இயக்கி எண்ணெய் உற்பத்தி செய்கிறார்.



இது குறித்து சீனிவாசன் கூறுகையில்... கல்செக்கை மாடுகள் மூலம் சிறிது சிறிதாக இயக்குவதால் எள் சூடாவதில்லை. நல்ல பக்குவத்தில் அதில் உள்ள சத்துகள் சிதையாமல் பாதுகாக்கப்படுகிறது. கல் செக்கில் நல்லெண்ணெயை எடுப்பது லேசான காரியமில்லை. சித்த மருந்து தயாரிப்பதுபோல் சிரத்தையான வேலை. என்றும் தமிழக அரசு இத்தொழிலுக்கு மானிய விலையில் மூலப்பொருட்களை கொடுத்தும், இயற்கை முறையில் உற்பத்தி செய்யும் எண்ணைக்கு  சந்தையில்  வரி விலக்கு அளிக்கவும் வேண்டும் என கூறினார்.




திருநெல்வேலி பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல ஆண்டுகளாக பிரசித்தி பெற்றிருந்த கல்செக்கு எண்ணெய் உற்பத்தி தொழில் வழக்கொழிந்து வருவது குறித்து இத்தொழிலில் பல தலைமுறைகளாக ஈடுபட்டுள்ளவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். இத்தொழிலில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும், உரிய அங்கீகாரம் அளிக்கவும் அரசுத்துறைகள் முன்வர வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
திருநெல்வேலி பேட்டையில் செக்கடித்தெரு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை மாடுகளை பயன்படுத்தி கல்செக்குகளை இயக்கி எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்கும் தொழில் பிரதானமாக நடைபெற்று வந்தது. இப்போது இயந்திரங்கள் மூலம் செக்குகளை இயக்கி எண்ணெய் உற்பத்தி நடைபெறுகிறது. இத்தொழிலில் தற்போது மிகவும் குறைந்த எண்ணிக்கையிலானோரே ஈடுபட்டு வருகின்றனர். இயந்திரமயமான இக்காலத்தில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பல வகை எண்ணெய்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. ஆனாலும் செக்கு எண்ணெய்க்கான மகிமை குறையவில்லை. அதற்கான தேவை இன்றும் உள்ளது. ஆனால், இயற்கை முறையில் எண்ணெயை உற்பத்தி செய்யும் ஆட்கள் குறைந்துவிட்டனர்.
செக்கடித் தெரு
தற்போது பேட்டையில் செக்கடி தெரு பகுதியில் ஓரிருவர் மட்டுமே செக்கு எண்ணெய் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் மாடசாமி என்ற அன்பழகன் (62). ஏழாவது தலைமுறையாக இத்தொழிலில் இவர் ஈடுபட்டிருக்கிறார். தற்போது இவர் மின்மோட்டார் மூலம் கல்செக்கை இயக்கி எண்ணெய் உற்பத்தி செய்கிறார்.
கல்செக்கு எண்ணெய் உற்பத்தி குறித்து மாடசாமி கூறியதாவது: கல்செக்கை மாடுகள் மூலம் சிறிது சிறிதாக இயக்குவதால் எள் சூடாவதில்லை. நல்ல பக்குவத்தில் அதில் உள்ள சத்துகள் சிதையாமல் பாதுகாக்கப்படுகிறது. கல் செக்கில் நல்லெண்ணெயை எடுப்பது லேசான காரியமில்லை. சித்த மருந்து தயாரிப்பதுபோல் சிரத்தையான வேலை.
நூதனமான படைப்பு
கல் செக்கு ஒரு நூதனமான படைப்பு. ஒரே கல்லில் குடைக்கா ளான் வடிவில் குடைந்து அடியில் வட்ட வடிவிலான ஆரக்கற்களை அமைத்திருப்பார்கள். அந்த செக்கின் நடுவில் சுற்றிச்சுழல வாகை மரத்தில் இருந்து செய்யப்பட்ட உலக்கை பொருத்தப்படும். கொக்கி எனப்படும் பெயரில் மரத்தாலான ஒரு ஸ்டே அதை தாங்கி நிற்கும். அதன் கீழ்பகுதி நீண்ட கம்பாலான பலகையால் செக்கின் அடிவாரத்தில் இணைக்கப் பட்டிருக்கும். இந்த பலகையில் அமர்ந்துதான் மாடுகளை பொருத்தி செக்கை ஓட்டுவர்.
எட்டு எள்ளுக்கு ஒரு சொட்டு என்பார்கள். இதை எள்ளிலிருந்து கிடைக்க வேண்டிய எண்ணெயின் அளவாக கொள்ளலாம். இப்போது கல்செக்குகளை இயந்திரங்கள் மூலம் இயக்கும் தொழில்நுட்பத்தை கையாண்டு இத்தொழிலை தொடர்ந்து வருகிறோம்.
கேரளாவில் வரவேற்பு
தற்போது கல்செக்கு மூலம் தயாரிக்கப்படும் நல்லெண்ணெயை ஆயுர்வேத மருத்துவத்துக்காக கேரளத்திலிருந்து வருபவர்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கின் றனர்.

கல்செக்குகளில் எண்ணெய் தயாரிக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் யோசனையை காதி கிராம தொழில்கள் துறை அதிகாரிகளிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தெரிவித் தோம். அது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று கூறி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர். ஆனால், கர்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இத்தகைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இன்னமும் கல்செக்கு எண்ணெய் தயாரிக்கப்படுகிறது என்றார் அவர்.

Sunday, December 6, 2015

சொக்கவைக்கும் சூரியகாந்தி!

90 நாள்.... ரூ.50 ஆயிரம் வருமானம்... 
அது, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒட்டியுள்ள பாரதிபுரம் பகுதி. முழுவதும் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ள சாலையோர நிலம். மஞ்சள் தொப்பி அணிந்த ராணுவ வீரர்கள் போல பிசிறு இல்லாமல் ஒரே சீராக சூரிய நமஸ்காரம் செய்துகொண்டிருக்கின்றன ஆயிரக்கணக்கான சூரிய காந்திப் பூக்கள். அவ்வழியில் செல்லும் அனைவரையும் ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைக்கிறது அவற்றின் வசீகரம். அந்த அழகை ரசித்தபடியே வயலுக்குள் நுழைந்தோம்.
‘‘ஏனுங்க... இந்த சூரியகாந்தி வயலை போட்டோ எடுத்துக்கலாமா?’’ வயலில் வேலையாக இருந்தவரைப் பார்த்துக் கேட்டோம்.
‘‘காசா... பணமா! போதும் போதும்னு நீங்க நெனைக்குற வரை எடுத்துத் தள்ளுங்க’’ ஏக மனதாக அனுமதி கொடுத்தார் வெள்ளந்தி விவசாயி.
பச்சைக்கிளிகள் பூவோடுவரப்பில் நடந்தபடியே தப்பட்டை அடிப்பதுபோல, அலுமினிய வட்டில் ஒன்றின்மீது குச்சி மூலம் தட்டி ஒலி எழுப்பிக்கொண்டே, வட்டில் ஒலியோடு சேர்ந்து, ‘ஆலோலோலோலாங் கூய்... ஆலோலோலோலாங் கூய்’ என்று வாய்குவித்து ஓசை எழுப்பியபடி வயலை வலம் வந்து கொண்டிருந்தார் ஒரு பெண்மணி.
‘‘இது, அறுப்பு நேரம். இந்த விதைங்க ருசியா இருக்கும். இதை கொத்தித் திங்க பச்சைகிளிங்க வரும். அதுவும் சாயங்கால நேரத்துல கூட்டம் கூட்டமா வரும். அதுகளை கவ்வை வில்லுல கல்கொண்டு அடிச்சு விரட்டுறது பாவங்க. அதுக்காக விரட்டாம இருந்தா வெள்ளாமை வீடு வந்து சேராது. அதனாலதான் இப்படி கிளிகளை விரட்டுறாங்க’’ என அந்த விவசாயி நமக்கு விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அந்த பெண்மணியும் வந்து சேர்ந்துகொண்டார்.
வைகாசிப் பட்டம் வளமான மகசூல்!
இருவரும் வரப்பில் உட்கார்ந்துகொண்டு, நம்முடைய புகைப்படக்காரர் படமெடுப்பதை அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களருகில் அமர்ந்து சூரியகாந்தி சாகுபடி பற்றி நாம் கேள்விகளை வீச... மடைதிறந்த வெள்ளமாகப் பேசத் தொடங்கினார் அந்த விவசாயி.
‘‘என்னோட பேரு மூர்த்தி. இது என் மனைவி கருத்தம்மா. எங்க ரெண்டு பேர் உழைப்புதான், இங்க பூப்பூவா பூத்து நிக்குது. இது எங்க சொந்த வயல் கிடையாது. இதுக்கு உரிமைப்பட்டவங்க வெளியூர்ல இருக்காரு. அடிக்கடி இங்கு வந்து அவரால விவசாயம் பார்க்க முடியலை. எங்ககிட்ட பொறுப்பைக் கொடுத்திருக்காங்க. அவங்க அனுமதியோட வெள்ளாமை வெச்சு எடுத்து, வருஷ கடைசியில ஒரு தொகையை அவங்களுக்குக் குத்தகையா கொடுத்திடுவோம்.
எதைப் போட்டாலும் பொன்னா விளையக்கூடிய வளமான வண்டல் மண் பூமி இது. பாசனத்துக்கு ஏத்த நல்ல தண்ணீரும் கிணத்துல கிடைக்கு. இந்தப் பக்கம் செடிமுருங்கை வெள்ளாமைதான் அதிகம். ஆனா, குத்தகை நிலத்துல ரொம்பநாள் வெள்ளாமை வைக்க முடியாது. திடீர்னு கேணியில தண்ணி குறைஞ்சா சிக்கலாகிடும். வெச்ச முருங்கையும் பாதியில கருகிடும். அதை யோசனை பண்ணித்தான் குறுகிய காலப்பயிரான சூரியகாந்தியை விதைச்சு, இயற்கை உரத்தை மட்டும் போட்டு சாகுபடி செஞ்சிருக்கோம்’’ என்று சொன்ன மூர்த்தி, அடுத்து சாகுபடிப்பாடத்தை சொல்லத்தொடங்கினார் (பார்க்க, பெட்டி செய்தி).
‘‘அறுத்து, விதைகளைப் பிரிச்ச பிறகு, விக்க அதிகம் அலைய வேண்டியதில்லை. போன் பண்ணி சொன்னா போதும், களத்துமேட்டுலயே வந்து எடை போட்டு எடுத்துக்கிட்டு காசு கொடுத்துட்டு போயிடுவாங்க யாவாரிங்க. இன்னைய தேதிக்கு கிலோ 30 ரூபாயில இருந்து 35 ரூபாய் வரைக்கும் போகுது. சராசரியா ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் வருமானம் வரும். குத்தகைப் பணம், செலவெல்லாம் போக 30 ஆயிரம் ரூபாய் கையில நிக்கும். 90 நாள்ல இது நல்ல வருமானம்தானே’’ என்று தெம்பாகச் சொன்னார்.
அவரைத் தொடர்ந்த மனைவி கருத்தம்மா, ‘‘அடுத்த போகம் ஐப்பசிப் பட்டத்துல நிலக்கடலை, அதுக்கு அடுத்த போகம் எள் விதைப்போம். கூலி வேலைக்குப் போயிட்டு இருந்த நாங்க, இன்னிக்கு குத்தகை நிலத்துல வெள்ளாமை பண்ணி நாலு காசு கண்ணுல பாக்குறோம். எங்களுக்குக் கைகொடுத்து உதவுறது, நிலக்கடலை, எள், சூரியகாந்தி மூணும்தான். இந்த மூணு பயிருக்கும் ஆட்டு எருதான் போடுறோம்’’ என்றவர், பழையபடி ‘ஆலோலோலோ ஊய்...’ என்று குரல் கொடுத்து, பச்சைக்கிளிகளை விரட்ட போனார்.   
சாகுபடிக் குறிப்பு...அடியுரமா ஆட்டு எரு!
இதன் அதிகபட்ச வயது 100 நாட்கள். இறவையில் சாகுபடி செய்ய பட்டம் தேவையில்லை. இருந்தாலும், அதிக வெயிலும் மழையும் இல்லாத, கார்த்திகை, வைகாசி, ஆடிப் பட்டங்களில் நடவு செய்தால் முழுமையான மகசூலை எடுக்கலாம். முன்னதாக, சித்திரைப் பட்டத்தில் இரண்டு முறை கோடை உழவு செய்து, மண்ணைப் பொலபொலப்பாக்கிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து ஏக்கருக்கு 5 டன் ஆட்டு எருவைக் கொட்டி பரவலாக இறைத்து விடவேண்டும். ஆட்டு எரு நன்றாகக் காய்ந்து ஈரத்தன்மை இல்லாமல் இருக்கவேண்டும். ஆட்டுப் புழுக்கைகளில் சில நோய்க் கிருமிகள் இருக்கும். எனவே அதை நேரடியாக நிலத்தில் போடுவதை விட, புழுக்கைகளைப் பொடியாக்கி போடுவது நல்லது. ஆட்டு எருவைப் பரவலாக இறைத்துவிட்ட பிறகு, ‘பார் முறைப் பாத்தி’ அமைக்க வேண்டும். பாருக்கு பார் 2 அடி இடைவெளியும், செடிக்கு செடி ஒன்றரை அடி இடைவெளியும் இருக்கும்படி பாத்தி எடுத்து, வரப்பில் விதைகளை நடவு செய்யவேண்டும். ஏக்கருக்கு 3 முதல் 4 கிலோ விதைகள் தேவைப்படும்.
ஜி.பழனிச்சாமி
படங்கள்: ரமேஷ் கந்தசாமி க.சத்தியமூர்த்தி

Sunday, May 20, 2012

ஆயில் மில்

வறுவல், பொரியல் என எண்ணெய்யில் செய்யும் உணவு அயிட்டங்கள் அனைத்திற்கும் நம்மவர்கள் அடிமை. நம்முடைய தினசரி சமையலில் எண்ணெய் கலக்காத உணவு என்று எதுவுமில்லை. தோசையில் ஆரம்பித்து பூரி, சப்பாத்தி வரை அனைத்தையும் ஏதாவது ஒரு எண்ணெய்யில் செய்து சாப்பிட்டால் மட்டுமே நம்மவர்களுக்கு திருப்தி. தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், பாமாயில் என பலவகையான எண்ணெய் அயிட்டங்கள் நம்மூரில் இருக்கிறது. நிலக் கடலை, சோயா பீன்ஸ், தேங்காய், எள் போன்ற மூலப் பொருட்களிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

சந்தை வாய்ப்பு!


உணவுப் பொருட்களுக்கான தேவை இருக்கும் வரை எண்ணெய்க்கான தேவையும் இருக்கும். வீடுகள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்களில் எண்ணெய் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பிரியாணி, பஜ்ஜி, வடைகள், நான்-வெஜ் அயிட்டங்கள் தயார் செய்வதற்கு அதிக அளவில் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. தவிர, ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு குறைந்தது மூன்று லிட்டர் எண்ணெய் தேவைப்படுகிறது. தேசிய அளவில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி என்பது எந்த சூழ்நிலையிலும் சரிந்து போகாத தொழில். தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் தேங்காய் எண்ணெய் தேவை பெரிய அளவில் உள்ளதால், என்றுமே இதன் மார்க்கெட் களைகட்டியிருக்கும்.

முதலீடு!

எண்ணெய் உற்பத்தி செய்யத் தேவைப்படும் முக்கியமான முதலீடு என்றால் கட்டடமும், இயந்திரமும்தான். ஆண்டுக்கு 12,000 லிட்டர் எண்ணெய் உற்பத்தி செய்யும் மில் ஒன்றைத் தொடங்க சுமார் 15 லட்ச ரூபாய் தேவைப்படும். இந்த தொழிலைத் தொடங்கும் நிறுவனர் 15%, மீதமுள்ள 85% கடன் மற்றும் மானியம் மூலம் பெற்றுக் கொண்டு தொழிலைத் தொடங்கலாம்.

கட்டடம்!

ஆயில் மில் தொடங்க குறைந்தபட்சம் 30 சென்ட், அதிகபட்சமாக ஒரு ஏக்கர் வரை இடம் தேவைப்படும். தேவையான இடம் சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ எடுத்துக் கொள்ளலாம். எண்ணெய் உற்பத்திக்குத் தகுந்தாற்போல் கட்டடங்களை அமைப்பது அவசியம்.

வேலையாட்கள்!

இத்தொழிலில் வேலையாட் களின் பங்கு மிகவும் அவசியம். ஒரு நாளைக்கு 32 லிட்டர் உற்பத்தி செய்வதற்கு திறமையான வேலையாள் ஒருவர், ஒரு சூப்பர்வைஸர் என இரண்டு நபர்கள் தேவை.

மூலப் பொருட்கள்!

நிலக் கடலை, எள், தேங்காய், சோயா பீன்ஸ் போன்ற பொருட்கள்தான் முக்கிய மூலப் பொருட்கள். இதில் எது உங்களுக்கு சுலபமாகக் கிடைக்குமோ அதைக் கொண்டு எண்ணெய் உற்பத்தி செய்யலாம். சில இடங்களில் மேற்சொன்ன எல்லா மூலப் பொருட்களும் எளிதாகக் கிடைக்கும்பட்சத்தில், எல்லாவிதமான எண்ணெய்களையும் உற்பத்தி செய்யலாம். ஆனால், ஒவ்வொன்றுக்கும் தனித் தனி இயந்திரங்கள் தேவைப்படும். காரணம், ஒரு இயந்திரத்தில் ஒரு வகையான எண்ணெய் மட்டுமே தயார் செய்ய முடியும். தேங்காய் கிடைக்கும்போது தேங்காய் எண்ணெய், எள் கிடைக்கும் போது நல்லெண்ணெய் என மாதத்திற்கு ஒரு எண்ணெய்யை நம்மால் தயார் செய்ய முடியாது. இங்கு நாம் தேங்காய் எண்ணெய் தயாரிப்பு மட்டுமே பார்க்க இருக்கிறோம். தேங்காய் எண்ணெய் தயார் செய்ய தேங்காய்தான் முக்கிய மூலப் பொருள். நூறு கிலோ தேங்காய் பருப்பிலிருந்து 63 கிலோ எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும்.

இயந்திரம்!

எக்ஸ்பெல்லர் (ணிஜ்ஜீமீறீறீமீக்ஷீ), வடிகட்டும் இயந்திரம், பாய்லர், அளவிடும் இயந்திரங்கள் என மொத்தம் 90,000 ரூபாய் வரை இயந்திரத்திற்குச் செலவாகும். பெரும்பாலும் இந்த இயந்திரங்கள் அனைத்தும் தமிழகத்திலேயே கிடைக்கிறது.

தயாரிப்பு முறை!

தேங்காய் பருப்பு தனியாகவும் கிடைக்கும், அல்லது தேங்காயிலிருந்தும் பருப்பை நாமே எடுத்து கொள்ளலாம். இப்படி தனியே எடுத்த தேங்காய் பருப்பில் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பதால் எண்ணெய் எடுப்பது கடினம். எனவே அதை பாய்லர் வெப்பத்தின் மூலம் ஈரத்தை உறிஞ்சி, உலர வைக்கிறார்கள். பின்னர் கட்டர் இயந்திரத்தின் மூலம் தேங்காயைத் துண்டு துண்டாக்கி கிரஷிங் மெஷினில் போட்டு அரைக்கிறார்கள். இதிலிருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கப்பட்டவுடன் அதன் சக்கைகள் வெளியே தள்ளப்படுகிறது. இந்த தேங்காய் எண்ணெய் இதன்பிறகு ஃபில்டர் இயந்திரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கசடுகள் வடிகட்டப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், ஆயில் ஃபில்லிங்’ இயந்திரம் மூலம் பாக்கெட்டுகளிலும், சிறிய டின்களிலும் அடைக்கப்பட்டு விற்பனைக்கு செல்கிறது.

பிளஸ்!

தேங்காய் எண்ணெய் முக்கியமான சமையல் எண்ணெய் என்பதால், எளிதில் சந்தைப்படுத்த முடியும். தலை முடியில் தேய்த்துக் கொள்வதற்கு பெரும்பாலும் தேங்காய் எண்ணெய்யையே பலரும் பயன்படுத்துவதால் கூடுதல் வாய்ப்பு கிடைக்கிறது.

மைனஸ்!

மூலப் பொருளான தேங்காய் விலையைப் பொறுத்தே இதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தேங்காய் விலை அதிகரிக்கும்போது, மூலப் பொருள் கொள்முதல் விலையும் அதிகரிக்கும். இதனால் தேங்காய் எண்ணெய் விலை உயரும்போது விற்பனை பாதிப்படையும். இந்த தொழிலின் சூட்சுமங்களை அனுபவ ரீதியாகப் பெற்ற பிறகு தனியாகத் தொடங்கி நடத்தினால் நிச்சயம் வெற்றிதான்!

Thursday, March 22, 2012

சூரிய காந்தி விவசாயம்

இது பற்றி தெரிந்தால்தான் சூரிய காந்தி ஆயில் தயாரிக்க முடியும்
பருவம் மற்றும் இரகங்கள்
அ.மானாவாரி
1.ஆடிப்பட்டம் (ஜீன்-ஜீலை)இரகங்கள் மார்டன், கோ 4
கோயமுத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல்,
திருநெல்வேலி, திண்டுக்கல், தர்மபுரி,
திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர்
வீரிய ஒட்டு டி.சி.எஸ்.எச்.1 கே.பி.எஸ்.எச்1, கே.பி.எஸ்.எச் 44, பி.ஏ.சி. 1091, எம்.எஸ்.எப்.எச்.17
2.கார்த்திகைப்பட்டம் (அக்டோபர்-நவம்பர்)இரகங்கள் மார்டன், கோ 4
கடலூர், விழுப்புரம், விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை. திண்டுக்கல், தேனீ, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூார், கரூர், திருநெல்வேலிவீரிய ஒட்டு டி.சி.எஸ்.எச்.1.கே.பி.எஸ்.எச்1, கே.பி.எஸ்.எச்.44, பி.ஏ.பி.1091, எம்.எஸ்.எப்.எச்.17

ஆ. இறவை
1.மார்கழிப்பட்டம் (டிசம்பர்-ஜனவரி)இரகங்கள் மார்டன், கோ 4
சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல், தேனீ, திருநெல்வேலி, தூத்துக்குடிகே.பி.எஸ்.எச்1, கே.பி.எஸ்.எச் 44, பி.ஏ.சி. 1091, எம்.எஸ்.எப்.எச்.17
2.சித்திரைப்பட்டம் (ஏப்ரல்-மே)இரகங்கள் மார்டன், கோ 4
கோயம்புத்தூர், ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர்வீரிய ஒட்டு .சி.எஸ்.எச்.1.
கே.பி.எஸ்.எச்1, கே.பி.எஸ்.எச்.44, பி.ஏ.பி.1091, எம்.எஸ்.எப்.எச்.17
சூரியகாந்தி இரகங்கள்
பண்புகள்மார்டன்கோ 4டி.சி.எஸ்.எச்.1
பெற்றோர்செர்னியன்கா 66-ல் இருந்து தேர்வுகுட்டை ஓ சூரியா வழித் தோன்றல்234 ஏ ஒ ஆர் 272
வயது (நாள்)7580-8585
விளைச்சல் (கி.ஹெ.)
மானாவாரி
90015001800
இறவை100017502500
எண்ணெய் சத்து()3639.741
உயரம் (செ.மீ.)90145 175160
பூவிதழின் நிறம்வெளிரிய மஞ்சள்வெளிரிய மஞ்சள்வெளிரிய மஞ்சள்
விதையின் அளவுநடுத்தரமானதுநடுத்தரமானதுநடுத்தரமானது
விதையின் நிறம்கருப்புகருப்புகருப்பு, சில விதைகளில் கோடுகள் இருக்கும்
1000 விதைகளின் எடை(கி)445660
மண்வகை
நல்ல வடிகால் வசதியுள்ள எல்லா மண் வகையும் சூரியகாந்தி சாகுபடிக்கு ஏற்றது. கரிசல் பூமியில் நன்றாக வளர்ந்து அதிக மகசூல் கொடுக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள எல்லா மண் வகையிலும், எல்லா மாவட்டங்களிலும் சாகுபடி செய்யலாம்.
sunflower0001
sunflower0002
நிலம் தயாரித்தல்
நிலத்தில் 12.5 டன் மக்கிய தொழு உம் அல்லது தன்னை நார்க் கழிவு இட்டு நன்றாக உழுது பண்படுத்தி மண்ணை நன்றாகப் புழுதியாக்க வேண்டும்
விதை அளவு
மானாவாரி
இறவை
இரகங்கள்
7 கி.எக்டர்
6 கி.எக்டர்
ஒட்டு இரகங்கள்
6 கி.எக்டர்
4 கி.எக்டர்
sunflower0004
விதை நேர்த்தி
மானாவாரியில் விதைக்கும் முன் விதையை சிங்க் சல்பேட் 2 கரைசலில் 12 மணிநேரம் ஊறவைத்து. நிழலில் உலர்த்திய பின்னர் விதைப்பு செய்யலாம், கார்பென்டாசிம் 2 கிராம், கிலோ விதையுடன் கலந்து 24 மணி நேரம், கழித்து விதைப்பு செய்ய வேண்டும். அல்லது டிரைகோடர்மா 4 கிராம், கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்யலாம். சோஸ்பைரில்லம் 3 பாக அசோஸ்பைரில்லம் (600 கிராம், ஹெ) மற்றும் 3 பாக் (600 கிராம், ஹெ) பாஸ்போபாக்ஏரியா அல்லது 6 பாக் அசோபாஸ் கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும் விதைநேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 15 நி உலர்த்தி, உடனடியாக விதைக்க வேண்டும்
விதைப்பு
ஒரு குழிக்கு இரண்டு விதை என்ற அளவில் பாரின் பக்கவாட்டில் 3 செ.மீ. ஆழத்தில் விதைக்கவும், நடவு செய்த 10-15வது நாளில் வளர்ச்சி இல்லாத செடிகளை களைந்து குழிக்கு ஒர் நல்ல செடி இருக்கும்படி பராமரிக்க வேண்டும்.
பயிர் இடைவெளி
ஒட்டு இரகங்கள் 60 ஒ 30 செ.மீ
இரகங்கள் 45 ஒ 30 செ.மீ
sunflower0005
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
பருவம்ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள் (கிலோ)
வீரிய ஒட்டு இரகம்இறவைதழைமணிசாம்பல்
மானாவாரி609060
இரகம்இறவை405040
மானாவாரி506040
இறவை405040

நுண்ணுயிர் உரம்
உயிர் உரம் மண்ணில் இடுதல் 10 பாக் (2000 கிராம், ஹெ) அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பாக் (2000 கிராம், ஹெ) பாஸ்போபாக்டீரியம் அல்லது 20 பாக் அசோபாஸ் (4000 கிராம், ஹெ) உடன் 25 கி.தொழுஉரம் மற்றும்
25 கிலோ மணலுடன் கலந்து, விதைப்பதற்கு முன்னால் இட வேண்டும்.
நுண்ணூட்டம் இடுதல்
12.5 கிலோ நுண்ணூட்டக் கலவையை 40 கிலோ மணலுடன் கலந்து விதைக்கு முன் சாலில் இட்டு பின்னர் விதைப்பு செய்ய வேண்டும். மாங்கனீசு பற்றாக்குறை உள்ள நிலத்திற்கு 0.5 கரைசலை விதைத்த 30, 40 மற்றும் 50ஆம் நாட்களில் தெளிக்க வேண்டும்.
நீர் நிர்வாகம்
கீழ்க்கண்டவாறு நீர்ப் பாய்ச்ச வேண்டும்
முதல் தண்ணீர் : விதைத்தவுடன்
2ம்தண்ணீர் : உயிர்த தண்ணீராக 7ம்நாள்
3-ம் தண்ணீர் : விதைத்த 20ம் நாள்
4-ம் தண்ணீர் : மொட்டு பிடிக்கும் பருவம்
5,6-ம் தண்ணீர் : பூ பிடிக்கும் தருணத்தில் (இரண்டு முறை)
7,8-ம் தண்ணீர் : விதைப் பிடிக்கும் தருணத்தில் (இரண்டு முறை)
களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி
ப்ளுக்ளோரலின் அல்லது பென்டிமெத்தலின் 2 லிட்டர் எக்டருக்கு தெளித்த பின் நீர்ப்பாய்ச்சுதல் வேண்டும். களைக் கொல்லி இட்டபின் 30 35 நாளில் ஒரு கைக்களை எடுப்பது அவசியம். விதைத்தபின் 15 30ம் நாளில் களைக்கொத்தி கொண்டு களை எடுக்க வேண்டும்.
போரான் தெளிப்பு
பூக்கொண்டைகளில் வெளிவட்ட மஞ்சள் பூக்கள் மலர ஆரம்பிக்கும் சமயத்தில் வெண்காரத்தை (போரான்) 0.2 (2கி.லிட்.தண்ணீர்) கலந்து பூக்கொண்டைகள் நனையுமாறு தெளிக்கவும், இது மணிகள் நன்றாக பிடிக்க உதவும்.
மணிகள் அதிகம் பிடிக்க
மகரந்தச் சேர்க்கை ஏற்படும் தருணமான காலை 9 மணி முதல் 11 மணிக்குள் மெல்லிய துணி கொண்டு பூவின் மேல்பாகத்தை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மெதுவாக ஒவ்வொரு பூக்கொண்டையையும் தேய்க்க வேண்டும். எட்டியிலிருந்து பத்து நாட்களுக்கு 5 முறை இப்படி ஒவ்வொரு பூவிலும் செய்யவேண்டும். அத்துடன் பூக்கள் மலரும் தருணத்தில் எக்டருக்கு மூன்று பெட்டி வீதம் தேனீ வளர்த்தல் நல்ல பலன் தரும். அருகருகே உள்ள பூக்கொண்டையினை ஒன்றோடொன்று முகம் சேர்ந்து இலேசாகத் தேய்த்துவிட்டாலும் சிறந்த பலன்
தரும்.
அறுவடை
sunflower0013
sunflower0014
பூவின் அடிப்பாகத்திலுள்ள இதழ்கள் மற்றும் பின்புறம் மஞ்சள் நிறமடைந்து பூக்கொண்டையிலுள்ள விதைகள் கடினத்தன்மை அடைந்திருப்பது முதிர்ச்சிடைந்தமைக்கு அறிகுறியாகும். உலர்ந்த பூக்கொண்டைகளைப் பறித்து
உலர்த்திய பின் விதைகளைத் தனியே பிரித்தெடுத்து சுத்தம் செய்யவேண்டும். அறுவடைக்குப் பின்செய் நேர்த்தி அறுவடைக்குப்பின் விதைகளை 8 முதல் 9 சத ஈரப்பதம் வரும் வரை நன்கு உலர வைக்க வேண்டும்.

சூரியகாந்தி எண்ணெய் தயாரிக்க வழிகாட்டி

ஒரு சமையல் எண்ணெய் உற்பத்தி யூனிட் தொடங்க உத்தேசித்துள்ள? நீங்கள் இது ஒரு சுலபமான விஷயம் அல்ல என்று மனதில் கொள்ள  வேண்டும், நீங்கள் சிறந்த எண்ணெய் சுத்திகரிப்பு செய்யவேண்டும் .முழு திட்டம் உங்களுக்கு உதவக்கூடிய ஒரு நம்பிக்கையான சமையல் எண்ணெய் உற்பத்தி செய்ய  யூனிட் சப்ளையர் நல்ல அனுபவம் மிக்க வராக இருக்க வேண்டும் .நல்ல கனிவான பேச வேண்டும்  அதே நேரத்தில் எண்ணெய் உற்பத்தி செய்ய நல்ல அனுபவம் மிக்க  மாஸ்டர் வேண்டும்.சூரியகாந்தி எண்ணெய் ஆலை அமைக்கும் போது பருத்திக்கொட்டை மற்றும் சூரியகாந்தி விதை கிடைக்கும் வருவாயை அதிகரிக்க, அது தூசி  தட்டி எண்ணெய் விதைகள்  சிறந்த முறையில்  தேர்ந்தெடுக்க மிகவும் முக்கியம். நாம் எடுத்திருக்கும் இந்த உமி பிரிப்பான் சிறந்த தேர்வாக இருக்கிறது, மற்றும் பல்வேறு எடைகள் மற்றும் சரியான பிரித்தல் ஹல் மற்றும் கர்னல் குறிப்பிட்ட gravities பயன்படுத்தி செய்கிறது


சந்தை வாய்ப்பு!
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்கள் தொழிலுக்கு நல்ல வாய்ப்பு இருந்தாலும், மதுரை திருச்சி திண்டிவனம் விழுப்புரம் , சென்னை, ஈரோடு, சேலம், கோவை பகுதிகளில்தான் இதற்கான சந்தை வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது. நாமே தயார் செய்து அதை நேரடியாக பெரிய கடைகளில் கொடுக்கலாம். அல்லது மொத்த வியாபாரிகளிடம் கொடுக்கலாம். இந்த ஆயில் பேக்கிங் அரை (500 ml)லிட்டர் ஒரு லிட்டர்(1000ml) மற்றும் நூறு மில்லி(100ml) சிறு பேக்கிங் செய்து அனைத்து பெட்டி கடை மற்றும்பெரிய கடைகளில் விற்பனை செய்யலாம் கிராமங்களில் விற்பனை செய்வதன் முலம் ஒரு பொருள் நல்ல வரவேற்ப்பு இருக்கும்.
மூலப் பொருட்கள்!
இத்தொழிலுக்குத் தேவையான முக்கிய மூலப் பொருட்களாகும். அனைத்து மாவட்டம் மூலப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். டெல்லி ,மும்பை  போன்ற பகுதிகளிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். தற்போது அனைத்து ஊர்ரிலும் சூரியகாந்தி பயிர் இடுவதினால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும்.



இயந்திரங்கள்! இத்தொழிலுக்குத் தேவையான இயந்திரங்களை இந்தியாவில் டெல்லி ,மும்பை  மற்றும் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம். இதற்கான டீலர்கள் மதுரை, திருச்சி, கோவை, சென்னை நகரங்களில் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் இயந்திரங்களை வாங்கிக் கொள்ளலாம். தனித் தனியாக வரும் இயந்திரத்தின் பாகங்களை டீலர்களே அசெம்பிள் செய்து கொடுத்து விடுகிறார்கள்,



முதலீடு! இத் தொழிலைச் செய்வதற் கான நிலம் மற்றும் கட்டடத்தை சொந்தமாகவோ அல்லது குத்த கைக்கோ எடுத்துக் கொள்ளலாம். இயந்திரத்திற்கு 3 to 5 லட்சம் ரூபாயும், செயல்பாட்டு மூலதனத்திற்கு மூன்று லட்சம் ரூபாயும் என மொத்தம் ஆறு லட்சம் ரூபாய் தேவைப்படும். இது சிறு தொழில் செய்ய உதவும் , இந்த தொழில் பெரிய அளவில் செய்ய இடம் மற்றும் இயந்திரம் ,பாய்லர்,பில்ட்டர் ,அனைத்தும். ஆயில் பேக்கிங் இயந்திரம்,நல்ல தரம்த்துடன் செய்ய 30 to 50 லட்சம் ரூபாயும், செயல்பாட்டு மூலதனத்திற்கு 15 லட்சம் ரூபாயும் என மொத்தம் 75 லட்சம் ரூபாய் தேவைப்படும்















ஃபைனான்ஸ்!
இத்தொழிலைத் தொடங்க நினைக்கிறவர் தனது முதலீடாக 5%, to 20%அதாவது 30,000 ரூபாய் வரை போட வேண்டும். மீதியை கடன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். அணைத்து வங்கிகளும் கடன் உதவி செய்கிறது

மானியம்!
இந்த தொழிலானது பிரதம மந்திரியின் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வருவதால் 2.10 லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கும். இந்த மானியத் தொகையானது தொழில் தொடங்க வாங்கிய கடனுக்காக மூன்று வருடத்திற்கு பிறகு வரவு வைக்கப்படும். சிறு தொழில் மணியம் உண்டு

வேலையாட்கள்! நல்ல திறமையான வேலையாட் கள் 20 பேரும், நடுத்தரமாக வேலை செய்யக்கூடிய பெண்கள் நான்கு பேரும், நிர்வாகம் மற்றும் விற்பனையை கவனித்துக் கொள்ள 5 நபரும், சூப்பர்வைசர் மற்றும் மெக்கானிக் ஒரு நபரும் தேவைப்படுவார்கள். எனவே மொத்தம் 30 நபர்கள் வரை தேவைப்படுவார்கள்.


தொடரும் >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
The pretreatment for vegetable oil processing or edible oil processing usually means the working procedures of detaching impurities out of the edible or vegetable oil materials. These impurities are generally referred to as organic and inorganic impurities. The organic impurities include the stem leaf, cord, chemical fibers, velveteen and their seeds. The inorganic impurities, however, sometimes mean soil, dinas and metal.The vegetable oil processing industry involves the extraction and processing of oils and fats from vegetable sources. The preparation of raw materials includes husking, cleaning, crushing, and conditioning.

Vegetable and Edible Oil Processing Flow Chart

pretreatment for vegetable oi processing

The Goal for Vegetable and Edible Oil Processing

1. Highlight the quality of the fat and the cake.
2. Enhance the rates of vegetable oil production, and reduces the waste of the vegetable oil content. 
3. Increase the treatment capabilities of vegetable / edible oil equipment. 
4. Lessen the abrade and lengthen the life of these vegetable or edible oil equipment. 
5. Ensure the security of vegetable / edible oil equipment. 
6. Puffing can be used to improve the rate of vegetable oil production and the quality of the meal.



Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites