இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label பட்டு வளர்ப்பு. Show all posts
Showing posts with label பட்டு வளர்ப்பு. Show all posts

Sunday, September 6, 2015

பட்டுப் புழு வளர்ப்பு

பட்டுத் தொழில் நமது நாட்டில் பல மடங்கு உயர்ந்து கொண்டே இருக்கின்றது. வளமான மல்பெரி தோட்டம், பட்டுப் புழு இனங்கள், எளிய, ஆனால் உயரிய முறை பட்டு வளர்ப்புத் தொழில்நுட்பம் ஆகியன பட்டுத் தொழில் வளர்ச்சியின் முக்கிய காரணிகளாகும். விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட பல புதிய பட்டுப்புழுவின் வீரிய இனங்களால் வெவ்வேறு மாநிலங்களில், வெவ்வேறு பருவ காலத்திற்கு ஏற்ப மல்பெரியை உணவாக கொள்ளும் இனத்தின் தரமும்,திறனும் மேம்படுத்தப்பட்டது. இந்த வீரிய இனங்கள் பல சுழற்சி இன பெண் தாய் அந்துப் பூச்சியையும், இரு சுழற்சி இன் ஆண் அந்துப் பூச்சியையும் சேர்த்துக் கலப்பினமாக்கி உருவாக்கப்படுகின்றது.
பட்டு கூடுகளில் மஞ்சள் நிறமும், வெண்மை நிறமும் உடைய இனங்கள் உள்ளன. பல்வேறு வண்ணங்களை உடைய பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்யும் ஆய்வுகள் இன்னமும் தொடர்கின்றது. ஆனாலும், அவை இன்னமும் வர்த்தக ரீதியில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படவில்லை.
பட்டு வளர்ப்பு தொழிலின் அடிப்படை தரமான மல்பெரி தோட்டம். அடுத்து வருவது தரமான பட்டுக் கூடு உற்பத்தி. பட்டுக் கூடு உற்பத்திக்கு பல்வேறு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். முதலாவது திட்டமிடல். புழு வளர்ப்பில் சரியான முறையில் திட்டமிட்டாலே 50% பணி பூர்த்தியாகும். மல்பெரி செடியின் வளர்ச்சி, பட்டுப் புழு வளர்ப்பு, வளர்ப்பிற்ஆன உபகரணங்கள் ஆகியவற்றை அவதானித்து ஒருங்கிணைக்க வேண்டும். ஆண்டு முழுவதும் மல்பெரி வளர்வதால் ஆண்டிற்கு 5 முதல் 6 அறுவடை செய்ய இயலும். தோட்டத்தை இரு பகுதியாக பிரித்து ‘புழு வளர்ப்பினை’ மேற்கொள்ளும்படி திட்டமிட்டால் ஆண்டிற்கு 10 முதல் 12 குலை பட்டுப்புழு வளர்க்க தேவையான இலை அறுவடை செய்யலாம்.

பட்டுப் புழுக்களின் முட்டை பருவம் 10 முதல் 12 நாட்களாகும். பட்டுப் புழு முட்டையிலிருந்து பொரித்து வெளிவந்து 4 வாரங்கள் இலை உட்கொள்கின்றன. இந்த கால இடைவெளியில் நான்கு முறை தோல் உரிப்பு செய்து கொள்கின்றன. இறுதியில் கூடு கட்ட ஆரம்பிக்கின்றன. இந்தப் பட்டு கூடுகளிலிருந்துதான் பட்டுநூல் எடுக்கப்படுகின்றன. கூடு கட்டியதும் கூட்டினுள் இருக்கும் புழு உருமாறி கூட்டுப் புழுக்களாக மாற்றமடைகின்றது. 10 நாட்களுக்கு பின்னர் கூட்டுப் புழுக்கள் முதிர்ச்சியடைந்து பட்டுப் பூச்சிகளாக (அந்துப் பூச்சி) கூடுகளை துளைத்து அதிகாலையில் வெளிவருகின்றன. பிறகு இனப்பெருக்கம் செய்து முட்டைகளிட்டு 4 அல்லது 5 நாட்கள் அதன் வாழ்க்கை பருவம் முடிவடைகின்றன.
பட்டுப் பூச்சிகளின் முட்டைகள் இரண்டு வகைப் படும். முதலாவது முட்டை பருவத்தில் ஒருவருடம் இருந்து பின்னர் வாழ்க்கை சூழற்சிக்கு வருதல். இரண்டாவது முட்டையிட்ட 10 முதல் 15 நாட்களுக்குள் பொரித்து பிறகு வாழ்க்கை சுழற்சி நிலைக்கு வருதல். இவைகளில் முதல் வகையை ஒரு சுழற்சி இனம் எனவும், இரண்டாவதை பல சுழற்சியினம் எனவும் கூறலாம். நூற்புழுக்கான பட்டு கூடுகள் உற்பத்தி செய்ய பல சுழற்சியின புழுக்கள் தான் விவசாயிகளுக்கு ஏற்றது.
பட்டுப்புழு தன்னுடைய 28 நாட்கள் வாழ்நாளில் முட்டை பொரித்த நிலையிலிருந்து கூட்டுப் புழுவாக மாற உள்ள முதிர்வடைந்த புழுவாக மாறுவதற்குள் தனது உடல் எடையை ’10,000’ மடங்கு அதிகரிக்கின்றது. பட்டுப் புழுவின் உடல் வளர்ச்சியில் பட்டுப் புழு உட்கொள்ளும் உணவும், தட்பவெட்ப நிலையும் பெரும்பங்கு வகிக்கின்றன. அதிக வெப்பம் நிலவும் காலங்களில் புழு வளர்ப்பு காலம் குறைகின்றது. குளிர் அதிகமாக உள்ள காலத்தில் புழு வளர்ப்புக் காலம் நீடிக்கின்றது. ஆகவே பட்டுப்புழு வளர்ப்பில் பட்டுப் புழு வளர்ப்பு மனையின் வெப்பம் கவனமாக பராமரிக்கப்பட வேண்டும். புழு வளர்ப்பு மனையில் உள்ள ஈரப்பதமானது இலைகளை நன்கு உட்கொள்ள தூண்டுவதாகவும் இலைகள் வாடிவிடாமல் பாதுகாக்கவும் சரியாக பராமரிப்பு செய்யப்பட வேண்டும். இளம் பட்டுப்புழுக்கள் அதிகமான ஈரப்பதத்தை தாங்கும் சக்தி கொண்டிருப்பினும் தரமற்ற மல்பெரி இலை, நோய்கள், அதிக குளிர் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றன. ஆகவே புழு வளர்ப்பு துவங்கும் முன் புழு வளர்ப்பு மனையில் மருந்தடிப்பு செய்வது மிகவும் முக்கிய வேலையாகும்.

இதற்கு மாறாக முதிர் பருவ புழுக்கள் நோய் மற்றும் சத்துக்குறைபாடு போன்றவற்றை தாங்கி வளரக் கூடியவை. ஆனாலும் அதிக வெப்பம், அதிக குளிர், குறைவான காற்றோட்டம் ஆகியன புழு வளர்ப்பில் கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே வெப்பமான காலத்தில் அறையின் ஈரப்பதத்தினை அதிகரித்து நல்ல காற்றோட்டம் பரவும்படி செய்வது அவசியம்.
பட்டுப்புழுவின் வளர்ச்சி எடையில்
பருவம்           எடை
பொரித்த புழுக்கள் 1
இரண்டாவது நிலை 10 – 15 மடங்கு
மூன்றாவது நிலை 75 – 100 மடங்கு
நான்காவது நிலை 350 – 500 மடங்கு
ஐந்தாவது நிலை 1800 – 2200 மடங்கு
முதிர்வடைந்த புழு 8000 – 10000 மட்டும்
பட்டுப் புழுக்களின் உடல் நீண்டு மெலிந்து 13 கண்டங்களைக் கொண்டது. ஐந்தாம் பருவத்தின் இறுதியில் புழு வேகமாக இலைகளை உட்கொண்டு தனது உச்ச வளர்ச்சியான 5 செ.மீ வரை வளர்ச்சியடைகிறது. புழுவின் கழுத்துப் பகுதியிலுள்ள கால்கள் பிடிப்பிற்கும், வயிற்றுப்பகுதியிலுள்ள கால்கள் புழு நகர்ந்து செல்லவும் பயன்படுகின்றது. பொரித்த பட்டுப்புழுக்களின் கருப்பு நிறத்திலும் உடல் மீது சிறிய மயிரிழைகள் கொண்டும் இருக்கும். புழுவின் வாய்ப் பகுதியில் இரு புறமும் கத்திரிக்கோல் போல பயன்படும் ‘மேன்டிபுல்’ எனும் உறுப்பு அமைந்துள்ளது. இந்த அமைப்பு மல்பெரி இலையினை துண்டித்து உட்கொள்ள உதவி செய்கின்றது.

தனி புழு வளர்ப்பு மனையானது புழு வளர்க்க போதிய இடவசதி, காற்றோட்ட வசதி, சூரிய வெளிச்சம் கொண்ட வளர்ப்பு மனையாக இருத்தல் அவசியம். இந்த அமைப்பு முழுமையாக கிருமி நீக்கம் செய்வதற்கும், தேவையான ஈரப்பதம், வெப்பநிலை மற்றும் சுகாதாரத்தினை பராமரிக்க உதவியாக இருக்க வேண்டும். நல்ல புழு வளர்ப்பு மனை நல்ல பட்டு கூடு அறுவடைக்கு காரணம். புழு வளர்ப்பு மனையானது குடியிருப்பு பகுதிக்கு சற்று தூரமாகவும், தோட்டத்தில் மையப் பகுதியிலமைப்பதால் எளிதாக கண்காணிக்கவும், எளிதாக தீவன இலைகள் கொண்டு செல்லவும், நோய் தொற்றுதலை தவிர்க்கவும் இயலும்.
மனையின் உயரம் 12 அடி இருக்க வேண்டும். இது போதுமான வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தினை பராமரிக்க உதவும். புழு வளர்ப்பு மனையினுள் எலி, அணில், ஊசி ஈ போன்றவை புகாத வண்ணம் கம்பி வலை, கொசுவலை கொண்டு ஜன்னல்கள் மூடப்பட வேண்டும். சுவரானது வழுவழுப்பாகவும், தரைத்தளம் சமமானதாகவும் இருக்க வேண்டும். பெரிய புழுவளர்ப்பு கூடம், இலை சேமிப்பு அறை மற்றும் முகப்பு அறை கொண்டதாகவும் இருக்க வேண்டும். புழு வளர்ப்பு மனை உயரமான பகுதியில் நல்ல காற்றோட்டமும், சுற்றிலும் நிழல் தரும் மரங்கள் உடையதாகவும் இருத்தல் அவசியம்.
புழு வளர்ப்பு மனையில் இட வசதிக்கு ஏற்ப தகுந்த அளவில் ‘ரேக்குகள்’ தயார் செய்து புழு வளர்ப்பு செய்யலாம். 100 முட்டை தொகுதிகள் வளர்க்க பைவோல்டின் இனம் என்றால் 450 சதுர அடியும், மல்டிவோல்டின் கலப்பினம் என்றால் 350 சதுர அடியும் புழு வளர்ப்பு படுக்கை அளவு தேவைப்படும். நமது வளர்ப்பு மனையில் யூகலிப்டஸ், சவுக்கு, மூங்கில் போன்றவற்றை பயன்படுத்தி புழு வளர்ப்பு ரேக்குகளை தயார் செய்து கொள்ளலாம்.
முன்பெல்லாம் இளம் புழு வளர்க்க தனி மனையும், வளர்புழுவிற்கு தனி மனையும் தேவைப்பட்டது. இப்போது ஆங்காங்கே இளம்புழு வளர்ப்பு நிறுவனங்கள் உள்ளன. இவர்கள் இளம் புழு வளர்ப்பை மட்டும் தனி தொழிலாகச் செய்து வருகின்றனர். நமது தேவைக்கு அளவான முட்டை தொகுதியின் எண்ணிக்கையை முன்கூட்டியே சொல்லிவிட்டால் இரண்டாம் தோல் உரிப்பு நிலையில் நமக்கு புழுக்களை கொடுத்து விடுகின்றனர். இந்த பத்து நாட்களும் இளம் புழு வளர்ப்பிற்கு உகந்த சூழ்நிலையினையும், செழுமையான, சத்தான, இதற்கென பிரத்யேகமாக வளர்க்கப்படும் மல்பெரி இலைகளை உணவாக கொடுத்து வளர்க்கும் போது இளம் புழுக்கள் ஆரோக்கியமாக வளர்ச்சியடைந்து முதிர் புழுப்பருவத்தில் நோய் எதிர்ப்பு திறனையும் பெருகின்றது.
பட்டுப் புழு வளர்ப்பு துவங்குவதற்கு முன் புழு வளர்ப்பு மனை அதன் சுற்றுப்புறம், உபகரணங்கள், தளவாடப் பொருட்களை மருந்தடிப்பது நோய் கிருமிகளின் இரண்டாம் நிலை மற்றும் ஆரம்ப நிலை நோய் தாக்குதல்களை அழிக்க மேற்கொள்ளும் நடவடிக்கையாகும். ஏனெனில் நோய் கிருமிகள் இரண்டு வழியாக பட்டுப்புழுக்களை தாக்குகின்றன. தாய்ப்பூச்சி இடும் முட்டை வழியாக பரவும். அல்லது மல்பெரி இலை, புழு வளர்ப்பு மனை தளவாடம், உபகரணங்களிலுள்ள தொற்றின் மூலம் பரவும்.

பட்டுப் புழுக்களின் இளம் பருவத்தில் நன்கு விரிந்துள்ள மல்பெரி இலைகளிலிருந்து 4 மற்றும் 5 இலைகள் வரையிலும், இரண்டாம் பருவத்தில் 6-7 ம் இலைகளும் மூன்றாம் பருவத்தில் 7-8 ம் இலைகளும் தீவனமாக கொடுக்க வேண்டும். நான்காம், ஐந்தாம் பருவப் புழுக்கள் பெருந்தீனி திண்பவைகளாகும். இவை தனக்கு தேவையான மொத்த இலைகளில் 90-94 விழுக்காடு இலைகளை இப்பருவத்தில்தான் உணவாக எடுத்துக் கொள்கின்றன. இலை பறித்தல் முறையில் இலைகளைப் பறித்து ஒவ்வொரு முறையும் உணவளிக்கும் போது வேலைப் பளு அதிகரிப்பதோடு, அதிக பணம் விரயமாகிறது. இந்த பிரச்னையை நிவர்த்தி செய்ய தற்போது இலைகளை தண்டுடன் அறுவடை செய்து முதிர்ந்த புழுக்களுக்கு உணவளிக்கும் தொழில் அறிமுகப்படுத்தப்பட்டு பெருவாரியான பட்டு விவசாயிகளால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
தண்டுடன் இலை அறுவடை செய்து உணவு அளிக்கும் போது புழு வளர்ப்பு மனையின் பரப்பளவு 30% அதிகமாக தேவைப்பட்டாலும் 15-20% இலை மற்றும் 50-60% மனித உழைப்பும் மிச்சப்படுத்தப்படுகின்றது. 15-20% இலைகள் மிச்சப்படுவதால் இலை கூடு விகிதம் குறைகிறது. புழுக்களை கைகளால் கையாள்வது குறைவதால் நோய் தொற்றிலிருந்து புழுக்கள் பாதுகாக்கப்படுகின்றன. இலைகள் நீண்ட நேரம் வாடாமல் பசுமையாக இருப்பதால் புழுக்கள் முழு அளவில் உணவினை உட்கொள்கிறது. படுக்கையில் நல்ல காற்றோட்ட வசதியும் ஏற்படுகின்றது. புழு வளர்ப்புக்கு தேவையான உபகரணங்கள் குறைக்கப்படுகின்றது. புழுக்கள் இலைகளை உண்டபின் மீதியான தண்டுகளை உபயோகித்து எரு தயாரிக்கலாம். பட்டுக் கூடு மகசூலும், கூடுகளின் தன்மையும் அதிகரிக்கின்றன.
கவாத்து செய்த 55-60 நாட்களிலிருந்து தண்டுகளை அறுவடை செய்யலாம். அறுவடைக்கு தயாரான தண்டுகள் சுமார் 3-4 அடி உயரம் உள்ளதாக இருக்கும். தண்டுகள் 2’-3 அங்குலம் விட்டு அறுவடை செய்யவேண்டும். அதிகாலை அல்லது மாலை போன்ற குளிர்ந்த நேரங்களில் தண்டு அறுவடை செய்து இருட்டான, காற்றோட்டம் குறைந்த குளுமையான இடங்களில் அடிப்பகுதியில் 2 அங்குலம் தண்ணீர் நிறுத்தி அதில் வெட்டிய பகுதி இருக்குமாறு தண்டுகளை நேராக வைக்க வேண்டும்.
மூன்றாவது தோலுரிப்பு செய்து புழுக்கள் நான்காம் பருவம் வந்தவுடன் ரேக்குகளுக்கு மாற்றி விடவேண்டும். ரேக்குகளின் மேல் செய்தித் தாள்கள் விரித்து தேவையான அளவு பட்டு மருந்து தூவி தண்டுகளை அகல வரிசையில் தண்டுகளின் அடிபாகம் மற்றும் நுனி பாகம் அடுத்தடுத்து வருமாறு சீராக வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பலதரமான இலைகளை கலந்து புழுக்கள் உண்பதற்கு ஏதுவாகிறது. தண்டு அறுவடை முறையில் குளிர் காலங்களில் இரண்டு முறையும், கோடைக் காலங்களில் மூன்று முறையும் உணவளிக்க வேண்டும்.
நான்காம் பருவத்தில் நான்காவது நாளிற்குப்பின் தீனி எடுப்பது குறைந்து புழுக்கள் தோலுரிப்புக்கு தயாராகும். இந்த சமயங்களில் தண்டுகளை குறைந்த அளவு உணவாக கொடுத்து 90% புழுக்கள் தோலுரிப்பு சென்றுவிட்டால் உணவு கொடுப்பது நிறுத்தி சுண்ணாம்பு தூள் தெளித்து அறையின் ஈரப்பதத்தை குறைத்து நல்ல காற்றோட்ட வசதி இருக்கும்படி செய்ய வேண்டும். 95% புழுக்கள் தோலுரித்துவிட்டு வந்தவுடன் விஜிதா தூவி, 30 நிமிடம் கழித்து புழுக்களுக்கு முதல் தீனி கொடுக்க வேண்டும்.
பட்டுக் கூடுகளின் தரமானது கூடு கட்டத் துவங்கும் முதிர்ந்த புழுக்களின் பராமரிப்பிற்கு எந்த அளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ அதைப் பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது. ஏனெனில் முதிர்ந்த புழுக்கள் நெட்ரிகாவிலோ அல்லது சுழல் சந்திரிகையிலோ கூடுகட்டி முடிக்க 3 முதல் 4 தினங்கள் ஆகிறது. முதிர்ந்த புழுக்கள் கூடுகட்டி முடிக்கும் வரை 23 C முதல் 24 C வரை வெப்பநிலையில் பராமரிக்கப்பட வேண்டும். Rh எனும் காற்றில் ஈரப்பதம் 70% இருக்கவேண்டும். புழுக்கள் கூடுகட்டும் அறை ஈரத்தன்மை இல்லாமல் உலர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.
100 முட்டை தொகுதிக்கான புழுக்களிலிருந்து கூடுகட்டும் சமயத்தில் வெளியேறும் கழிவு நீர்.
கூடுகட்டுதலின் போது படு 40.4 லி
நூலிருந்து வெளியேற்றப்படும் நீர் 19.2 லி
சுவாச துளைகளின் மூலம் 8.0 லி
சிறுநீராக வெளியேற்றப்படுவது 13.8 லி
                                     ------------
மொத்தம்                        81.4 லி
                                     =======
அறுவடை செய்யப்பட்ட பட்டு கூடுகளிலிருந்து தரமான கூடுகளை தேர்வு செய்வது மற்றும் நலிவடைந்த கூடுகளை நீக்குவது மிக முக்கியமானது. சந்தையில் நல்ல விலை பெறுவதற்கு கூடுகளை தரம் பிரித்தல் மிகவும் அவசியம்.
1. மெலிந்த கூடுகள் – இவற்றில் பட்டு நூலிழைகள் குறைவாக இருப்பதோடு மெலிந்த நிலையில் காணப்படும்.குறைந்த அறுவடை ஏற்படும் கூடுகளில் இவை அதிகம் காணப்படும்.
2. நலிந்த முனை கூடுகள் – புழு வளர்ப்பின் போது வெப்பம் மற்றும் ஈரப்பதம் குறைவாக இருப்பதால் நலித்த முனை கூடுகள் உண்டாகிறது.
3. கறைபடிந்த கூடுகள் – பிற பட்டுப்புழுக்களின் சிறுநீர்க் கழிவுகளாலும், இறந்த புழுக்களிலிருந்து கசியும் திரவத்தாலும் இவை ஏற்படுகின்றன.
4. உட்புறம் கறைபடிந்த கூடுகள் – கூட்டுப் புழு உருமாறுவதற்கு முன் அறுவடை செய்வதாலும், உள்ளே இருக்கும் புழுக்கள் இறப்பதாலும் இவ்வகை கூடுகள் உண்டாகிறது.
5. இரட்டை கூடுகள் – பட்டுப்புழுக்கள் அதிக நெருக்கடியாக இருப்பதாலும், அதிக காற்று வீசுவதாலும் மிக அதிகமான முதிர்ச்சி அடைந்த புழுக்களாலும் இதுபோன்ற கூடுகள் ஏற்படுகின்றன.
6. துளையிடப்பட்ட கூடுகள் – பட்டுக் கூடுகளின் முனையில் துளையிடப்பட்டிருக்கும். ஊசி ஈ தாக்குதல்களால் இந்த கூடுகள் ஏற்படுகின்றன.
7. உருமாறி கூடுகள் – ஆரோக்கிய மற்ற புழுக்களினால் கட்டப்படும் கூடுகள் இவை

கூடுகளை கோடை காலத்தில் ஐந்தாவது நாளிலும், குளிர் காலங்களில் ஆறாவது நாளும் அறுவடைச்ய்ய வேண்டும். பட்டுக் கூடுகளை அறுவடை செய்து அதில் ஒட்டியுள்ள இலை துணுக்குகள், புழுக்கைகள், இரட்டை கூடுகள், மெலிந்த இதர வகை தரம் குறைந்த கூடுகளை பிரித்தெடுத்துவிட்டு தரமான கூடுகளை மட்டும் மெல்லிய சணல் கோணிப்பை அல்லது துணிப்பைகளில் தளர்வாக கட்டி குளிர்ந்த நேரங்களில் பட்டுக் கூடு அங்காடிக்கு கொண்டு செல்ல வேண்டும்.
பட்டு வளர்ப்பு தொழில்நுட்பம் மிகவும் பெரியது. ஆழ்ந்த கவனமும், நேரத்தில் செய்வதம் மிகவும் முக்கியமானது. ஆயிரம் படித்தாலும் அனுபவ விவசாயிகளின் வழிநடத்தல், பட்டு வளர்ச்சி துறை அலுவலர்களின் ஒத்துழைப்புடன் மட்டுமே புதியவர்கள் ஈடுபட இயலும். பட்டு வளர்ப்பு தொழிலை குறித்தவரை அனுபவமே சிறந்த ஆசான். கற்றறிவு என்பது ஒரு துணை மட்டுமே.

Saturday, August 31, 2013

அதிக வருமானம் தரும் பட்டு வளர்ப்பு!



ஒரு ஏக்கர்… ஒரு மாதம்…30,000
”விவசாயத்தோடு… அதுசார்ந்த உபதொழில்களையும் சேர்த்து செய்தால், நிச்சயமாகப் பொருளாதார ரீதியில் பெருவெற்றிதான்” என்பது விவசாயப் பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கருத்து! இதைச் சரியாகப் புரிந்து கொண்ட பலரும் ஆடு, மாடு, கோழி, பட்டுப்புழு… என வளர்த்து கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார்கள். ”நானும் அவர்களின் ஒருவன்” என்று இங்கே சந்தோஷம் பகிர்கிறார்… வெண்பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்து சிறந்த வருமானம் பார்த்து வரும், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடம் காசிலிங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து. இதற்காக இவரைப் பாராட்டி, ’2011 மற்றும் 2012-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான சிறந்தப் பட்டுக்கூடு உற்பத்தியாளர்’ என்கிற விருதை கொடுத்திருக்கிறது தமிழக அரசின் பட்டு வளர்ச்சித் துறை!
வழிகாட்டிய மனைவி!
வீடு தேடிச் சென்றபோது, பளீர் வெண்மையில் மின்னிக் கொண்டிருந்த பட்டுக்கூடுகளைச் (கக்கூன்) சேகரித்துக் கொண்டிருந்த செல்லமுத்து, ”வெங்காயம், மிளகாய், மக்காச்சோளம்னு வெள்ளாமை செஞ்சுக்கிட்டு இருந்தேன். அதுல நிரந்தரமான வருமானம் கிடைக்கல. லிட்டர், லிட்டரா பூச்சிக்கொல்லியும் மூட்டை, மூட்டையா உரத்தையும் வாங்கிப் போட்டு, கடனாளி ஆனதுதான் மிச்சம். ஆனா, விவசாயத்தை விட்டா எனக்கு வேற தொழிலும் தெரியாது. இந்த நிலையில எனக்கு கல்யாணமும் ஆயிடுச்சு. மனைவி பாப்பாத்தியோட ஊர் நிறையூர். அங்க, கிட்டத்தட்ட எல்லா விவசாயிகளுமே பட்டுக்கூடு உற்பத்தி பண்ணிக்கிட்டு இருந்தாங்க. என் மனைவி வீட்டுலயும் பட்டுக்கூடு உற்பத்திதான். அதனால, அதைப்பத்தின நெளிவு, சுளிவு அத்தனையும் அவங்களுக்குத் தெரிஞ்சுருந்தது. கல்யாணமாகி வந்ததுமே, பாப்பாத்தியோட சேர்ந்து, நானும் பட்டுப்புழு வளக்க ஆரம்பிச்சுட்டேன்.
செழிப்பு தரும் பட்டுப்புழு!
89-ம் வருஷத்துல இருந்து பட்டுப்புழு வளர்த்துக்கிட்டு இருக்கோம். மல்பெரிச் செடிகளை நடவு செஞ்சுட்டு, வீட்டோட ஒரு பகுதியையே பட்டுப்புழு வளர்ப்பு மனையா மாத்திட்டோம். நான், ரெண்டு தடவை சிறந்த பட்டு விவசாயிக்கான மாநில விருது வாங்கியிருக்கேன்னா… அதுக்கு என் மனைவியோட உழைப்பும், தொழில்நுட்ப அறிவும்தான் காரணம். என்னோட ரெண்டு பசங்களையும் நல்ல இன்ஜினீயரிங் காலேஜ்ல சேத்துருக்கேன். இந்தஅளவுக்கு நான் செழிப்பா இருக்கறதுக்குக் காரணம், பட்டுப்புழு வளர்ப்புதான்” என்று முன்னுரை கொடுத்து நிறுத்த, தொடர்ந்தார் அவருடைய மனைவி பாப்பாத்தி.
சுலபமாக வளர்க்கலாம்!
”ஆரம்பத்துல மஞ்சள் நிறக் கூடுகளைத்தான் உற்பத்தி செஞ்சோம். அதைவிட வெள்ளைக்கூடுகளுக்கு அதிக விலை கிடைக்கறதால… ஆறு வருஷமா வெள்ளைக்கூடுதான் உற்பத்தி பண்றோம். விவசாயம் சார்ந்தத் தொழில்கள்ல கொறஞ்ச நாள்லயே வருமானம் தரக்கூடியது, பட்டுக்கூடு உற்பத்திதாங்க. ஆனா, பட்டு வளர்ச்சித்துறைக்காரங்க சொல்லித் தர்ற தொழில்நுட்பத்தை சரியாக் கடைபிடிச்சு, நல்ல தரமான கூடுகளை உற்பத்தி பண்ணினாத்தான் லாபம் சம்பாதிக்க முடியும். முன்னயெல்லாம்… ஒரு நாளைக்கு அஞ்சு வேளைக்கு இலைகளைப் பொடிப்பொடியா நறுக்கி புழுக்களுக்குக் கொடுக்கணும். அதனால, நாள் முழுக்க வேலை பாக்க வேண்டியிருக்கும். இப்போ, எளிமையான உபகரணங்கள் வந்துட்டதால, வேலை குறைஞ்சுடுச்சு. இப்போ வளர்ப்பு முறைகளும் மாறிடுச்சு. அதனால, வீட்டு வேலை, மத்த விவசாய வேலை எல்லாத்தையும் பாத்துக்கிட்டே பட்டுப்புழுவையும் வளத்துடலாம்” என்று சிறிது இடைவெளிவிட, பட்டுப்புழு வளர்ப்பு பற்றிய விவரங்களைச் சொல்ல ஆரம்பித்தார், செல்லமுத்து.
ஒரு ஏக்கரில் மல்பெரி… 100 கிலோ கூடு உற்பத்தி!
‘ஒரு ஏக்கர் நிலத்துக்கு 10 டிராக்டர் தொழுவுரம், 5 டன் கோழி எரு ஆகியவற்றைக் கொட்டி இறைத்து, நன்றாக உழவு செய்ய வேண்டும். 3 அடி இடைவெளியில் பார் அமைத்து, அதில் 5 அடி இடைவெளியில் மல்பெரிச் செடிகளை நடவு செய்ய வேண்டும். பட்டு வளர்ச்சித்துறை மூலமாக மானிய விலையில் நாற்றுகள் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் 4 ஆயிரத்து 800 செடிகளை நடவு செய்ய முடியும். நடவு செய்த பிறகு சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து, வாரம் ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். சொட்டுநீர் அமைக்கவும் மானியம் உண்டு. களை மற்றும் பயிர் பராமரிப்பு முறைகளை சரியாக மேற்கொண்டு வந்தால், நடவு செய்த 90-ம் நாளில், செடிகள் ஆளுயரத்துக்கு வளர்ந்துவிடும்.
இந்தச் செடிகளில் 20 ஆண்டுகள் வரை தொடர்ந்து மகசூல் எடுக்கலாம். 25 நாட்களுக்கு ஒரு முறை இலைகளைப் பறிக்கலாம். நிலத்தைப் பாதியாகப் பிரித்துக் கொண்டு சுழற்சி முறையில் முறையில் அறுவடை செய்தால், தொடர்ந்து ஆண்டு முழுவதும் இலைகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். பட்டுப்புழுக்களுக்கு முக்கியத் தீவனம் மல்பெரி இலைகள்தான் என்பதால், இவை தரமாக இருந்தால்தான் புழுக்களும் ஊக்கமுடன் வளர்ந்து, அதிக எடையுள்ள கூடுகளை உற்பத்தி செய்யும். 100 முட்டைத் தொகுதிகளில் உருவாகும் புழுக்களுக்கு, மொத்தம் 700 கிலோ அளவுக்கு இலை தேவை. இதற்கு, ஒரு ஏக்கர் நிலத்தில் மல்பெரி வளர்க்க வேண்டும். 100 முட்டைத் தொகுதிகள் மூலம் மாதம் 100 கிலோ பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்ய முடியும்.
தட்பவெப்பம்… கவனம்!
தீவனம் தயாரான பிறகு நமக்குத் தேவையான அளவில் முட்டைத் தொகுதிகளை பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்தில், வாங்கி அடை வைக்க வேண்டும். அடை வைக்கும் இடத்துக்கு ‘இளம் புழு வளர்ப்பு மனை’ என்று பெயர். மனையைச் சுற்றிலும் கொசு வலை அடித்து தென்னங்கீற்று வேய்ந்து, மனைக்குள் தட்பவெட்பம் சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். முட்டை பொரிந்து வெளிவரும் புழுக்களை, 8-ம் நாள் வரை இளம்புழு வளர்ப்பு மனையில் வைத்துப் பராமரிக்க வேண்டும். தினமும் காலையிலும், மாலையிலும் இளம் வயது செடிகளில் உள்ள கொழுந்து இலைகளைப் பறித்து உணவாக வைக்க வேண்டும். முதல் எட்டு நாட்களுக்கு இளம்புழுக்களுக்குத் தனிக்கவனம் தேவை. அவ்வளவு நுணுக்கமாக, பார்க்க ஆள் வசதி இல்லையென்றால், ‘சாக்கி சென்டர்’ என்று அழைக்கப்படும் இளம்புழு வளர்ப்பு மையங்களில் இருந்து எட்டு நாட்கள் வயதுடைய புழுக்களை வாங்கி வந்து வளர்க்கலாம் (இவர், தற்போது இளம்புழுக்களை வாங்கி வந்துதான் வளர்க்கிறார்).
8 நாட்கள் வயதுடைய புழுக்களை அதற்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் புழு வளர்ப்பு தாங்கிகளில்விட வேண்டும். கட்டில் போல இருக்கும் இந்தத் தாங்கிகளில் ‘நெட்ரிக்கா’ எனும் பிளாஸ்டிக் விரிப்பை விரிக்க வேண்டும். இந்த விரிப்பில் நூற்றுக்கணக்கான அறைகள் இருக்கும். அவற்றின் மூலமாகத்தான், பட்டுபுழுக்கள் தன்னைச் சுற்றி கூடுகளைக் கட்டும். வளரும் புழுக்களுக்கு தினமும் காலையிலும், மாலையிலும்… ஒரு மாத வயதுக்கு மேல் உள்ள செடிகளில் இருந்து முற்றிய இலைகளைக் காம்புடன் பறித்து உணவாக வைக்க வேண்டும். புழுக்கள், இலைகளை மட்டும் சாப்பிட்டு விட்டு, காம்புகளை ஒதுக்கி விடும். பிறகு, காம்புகளை அப்புறப்படுத்த வேண்டும். புழுக்கள் 27 நாட்கள் வயதில், கூடுகளை உருவாக்கிக் கொள்ளும். இதுதான் அறுவடை தருணம். அறுவடை முடிந்த பிறகு, வளர்ப்பு மனை மற்றும் தளவாடங்களை சுத்தம் செய்து, பிளீச்சிங் பவுடர் போட்டுக் கழுவி, அடுத்தத் தொகுதியை வளர்க்க ஆரம்பிக்க வேண்டும்.’
வளர்ப்பு முறைகளைச் சொல்லிய செல்லமுத்து நிறைவாக, வருமானம் பற்றிச் சொன்னார்.
“ஒரு ஏக்கர்… இரண்டு ஆட்கள்… மாதம் 30 ஆயிரம்!
”100 கிலோ பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்யறதுக்கு இரண்டு வேலை ஆட்களே போதும். நல்ல தண்ணியோட, ஒரு ஏக்கர் நிலம் இருந்தா… கணவன், மனைவி இரண்டு பேரும் வேலை செஞ்சாலே… மாசம் 100 கிலோ கூடு உற்பத்தி செஞ்சு முப்பதாயிரம் ரூபாய் வரைக்கும் சம்பாதிச்சுட முடியும். நான் ரெண்டு ஏக்கர்ல மல்பெரி சாகுபடி செய்றேன். மாசம் 200 கிலோ கூடு உற்பத்தி செய்யுறதுல, குறைஞ்சபட்சமா 60 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் பாக்குறேன்.
நான் கோயம்புத்தூர்ல இருக்குற பட்டுக்கூடு விற்பனை அங்காடியிலதான் விக்கிறேன். இங்க லீவு நாட்கள் தவிர எல்லா நாட்கள்லயும் ஏலம் நடக்கும். இப்போ ரெண்டு வருஷமா ஒரு கிலோ பட்டுக்கூடு 300 ரூபாய்க்கு குறையாம ஏலம் போயிட்டுருக்கறதால… நல்ல வருமானம் கிடைக்குது” என்று சந்தோஷமாகச் சொல்லி விடைகொடுத்தார், செல்லமுத்து.
தொடர்புக்கு,
செல்லமுத்து, செல்போன்: 96007-95002.
பி. முத்தைய்யா, செல்போன்: 73735-25252.
உதவி இயக்குநர், ஈரோடு,
தொலைபேசி: 0424-2339664
மானியங்களை அள்ளி வழங்குது மத்திய அரசு!
ஈரோடு மண்டல பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பக்கிரிசாமியை சந்தித்தபோது, பட்டுப்புழு வளர்ப்பு பற்றிய சில விவரங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
”இந்தியாவில் பட்டு நூல் தேவை அதிகளவில் உள்ளது. இந்தியாவுக்கு ஆண்டுக்கு 29 ஆயிரம் மெட்ரிக் டன் கச்சாப்பட்டு தேவை. ஆனால், இங்கு 20 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டும்தான் உற்பத்தியாகிறது. அதனால், சீனாவில் இருந்து கச்சா பட்டு இறக்குமதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 3 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்குத் தேவை இருந்தாலும், அதில் பாதியளவுதான் உற்பத்தியாகிறது. அதனால், தமிழகத்தில் பட்டுக்கூடு உற்பத்தி நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலாக இருக்கிறது. இந்திய அளவில், நான்கு ஆண்டுகளாக வெண்பட்டு உற்பத்தியில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது.
இத்தொழிலுக்கு மத்திய-மாநில அரசுகள் மானியத்தை அள்ளி வழங்குகின்றன. நாற்று, நடவு, இலைப்பறிப்புக் கருவி, விசைத்தெளிப்பான், பட்டு வளர்ப்பு மனை, மற்றும் தளவாடங்கள், சொட்டுநீர் அமைப்பு என்று அனைத்துக்கும் 75% வரை மானியம் உண்டு. சிறு-குறு விவசாயிகளுக்கு 100% மானியத்தில் சொட்டுநீர் வசதியும் செய்து தரப்படுகிறது. வங்கிக்கடன் வசதியோடு, இயற்கைச் சீற்றங்கள், நோய்கள் போன்றவற்றில் ஏற்படும் திடீர் இழப்பை ஈடுசெய்ய, காப்பீடு வசதியும் உண்டு. மல்பெரி வயல் வரப்புக்களில் மரக்கன்றுகள் நடவும் மானியம் உண்டு” என்றார், பக்கிரிசாமி.
பட்டு வளர்க்கலாம் வாங்க!
குண்டடம், மானூர்பாளையம், தொட்டியந்துறை உள்ளிட்ட தாராபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில், பட்டு வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளில் பெரும்பாலானோர், தாங்கள் பட்டு வளர்ப்புக்கு வந்ததற்கு காரணமாகக் கைகாட்டும் நபர் முத்தையா. இவர், கடந்த 34 ஆண்டுகளாக பட்டு வளர்ச்சித்துறையில் பணியாற்றி, ஆறு மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றிருக்கிறார். அரசு வேலையை ‘கடனுக்கு’ என்று செய்யாமல், நூற்றுக்கும் மேற்பட்ட சிறு-குறு விவசாயிகளுக்கு பட்டு வளர்ப்பில் ஆர்வத்தை ஊட்டி… அவர்களைப் பொருளாதார ரீதியில் முன்னேற வைத்திருக்கிறார், இவர். பணி ஓய்வு பெற்ற பிறகும் அதேபகுதியில் ஒரு இளம்புழு வளர்ப்பு மையத்தில் பணியாற்றிக் கொண்டு, தேடி வரும் விவசாயிகளுக்கு ஆலோசனைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார், முத்தையா.
அவரிடம் பேசியபோது, ”வித்து நன்றாக இருந்தால்தான், விளைச்சல் நன்றாக இருக்கும். அதேபோல, இளம்புழுக்கள் தரமாக ஊக்கமுடன் வளர்ந்தால்தான் பட்டுக்கூடுகளின் உற்பத்தி நன்றாக இருக்கும். இளம்புழு வளர்ப்பு மிகவும் கடினமான காரியம். எமர்ஜென்ஸி வார்டில் உள்ள குழந்தையைக் கண்காணிப்பது போல மிகத்துல்லியமாகப் பராமரிக்க வேண்டும். இதில் கோட்டை விட்டால், தரமானக் கூடுகள் கிடைக்காது. அதற்குப் பயந்தே பலர் பட்டுப்புழு வளர்ப்புக்கு வருவதில்லை. அதனால், அந்த வேலையை மட்டும் தனியாக கவனம் எடுத்துச் செய்யும் விதத்தில்… ஆர்வமுள்ள சில விவசாயிகளுக்கு இளம்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்களைக் கற்றுத்தந்து, அவர்கள் மூலம் ‘சாக்கி சென்டர்’களை உருவாக்கியிருக்கிறது, பட்டு வளர்ச்சித்துறை. இளம்புழுக்கள் வளர்க்கக் கஷ்டப்படும் விவசாயிகள், இந்த சென்டர்களில் இருந்து, 8 நாள் வயதான புழுக்களை வாங்கி வளர்த்துக் கொள்ள முடியும். இதனால், 20 முதல் 22 நாட்களில் வருமானம் பார்த்துவிட முடியும். ஒரு ஏக்கர் நிலத்தில் மல்பெரி நடவு செய்து, வெண்பட்டுக்கூடு உற்பத்தி செய்தால், எல்லா செலவுகளும் போக, ஆண்டுக்கு 2 லட்ச ரூபாய் முதல் 3 லட்ச ரூபாய் வரை கண்டிப்பாக வருமானம் பார்க்க முடியும்” என்ற முத்தையா,
”ஆண்டுக்கு 10 பேட்ச் மூலம் 1,000 கிலோ கூடு உற்பத்தி என்பதுதான், பட்டு வளர்ச்சித்துறையின் இலக்கு. அதை சர்வசாதாரணமாக முறியடித்து சாதனை புரிந்திருக்கிறார் செல்லமுத்து. இரண்டு ஏக்கர் நிலத்தில் மல்பெரி சாகுபடி செய்து ஆண்டுக்கு 18 பேட்சுக்கள் எடுத்து மாநில அளவில் சாதனை புரிந்துள்ளார். அவர், ஒரு வினாடியைக்கூட வீணாக்க மாட்டார். அர்ப்பணிப்போடு பணியாற்றியதால்தான், அவர் இன்று லட்சாதிபதியாக உயர்ந்துள்ளார். சராசரியாக 20 நாட்களுக்கு ஒரு முறை குறைந்தபட்சம் 60 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார், செல்லமுத்து. இவரால், எங்கள் பட்டுவளர்ச்சித் துறைக்கே பெருமை” என்று சொல்லி புளகாங்கிதப்பட்டார்!

Wednesday, June 5, 2013

பலே வருமானத்துக்கு பட்டு வளர்ப்பு...




ஒரு ஏக்கர்... ஒரு மாதம்...30,000
ஜி.பழனிச்சாமி, படங்கள் : க.ரமேஷ்
''விவசாயத்தோடு... அதுசார்ந்த உபதொழில்களையும் சேர்த்து செய்தால், நிச்சயமாகப் பொருளாதார ரீதியில் பெருவெற்றிதான்'' என்பது விவசாயப் பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கருத்து! இதைச் சரியாகப் புரிந்து கொண்ட பலரும் ஆடு, மாடு, கோழி, பட்டுப்புழு... என வளர்த்து கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார்கள். ''நானும் அவர்களின் ஒருவன்'' என்று இங்கே சந்தோஷம் பகிர்கிறார்...
வெண்பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்து சிறந்த வருமானம் பார்த்து வரும், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடம் காசிலிங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து. இதற்காக இவரைப் பாராட்டி, '2011 மற்றும் 2012-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான சிறந்தப் பட்டுக்கூடு உற்பத்தியாளர்' என்கிற விருதை கொடுத்திருக்கிறது தமிழக அரசின் பட்டு வளர்ச்சித் துறை!
வழிகாட்டிய மனைவி!
வீடு தேடிச் சென்றபோது, பளீர் வெண்மையில் மின்னிக் கொண்டிருந்த பட்டுக்கூடுகளைச் (கக்கூன்) சேகரித்துக் கொண்டிருந்த செல்லமுத்து, ''வெங்காயம், மிளகாய், மக்காச்சோளம்னு வெள்ளாமை செஞ்சுக்கிட்டு இருந்தேன். அதுல நிரந்தரமான வருமானம் கிடைக்கல. லிட்டர், லிட்டரா பூச்சிக்கொல்லியும் மூட்டை, மூட்டையா உரத்தையும் வாங்கிப் போட்டு, கடனாளி ஆனதுதான் மிச்சம். ஆனா, விவசாயத்தை விட்டா எனக்கு வேற தொழிலும் தெரியாது. இந்த நிலையில எனக்கு கல்யாணமும் ஆயிடுச்சு. மனைவி பாப்பாத்தியோட ஊர் நிறையூர். அங்க, கிட்டத்தட்ட எல்லா விவசாயிகளுமே பட்டுக்கூடு உற்பத்தி பண்ணிக்கிட்டு இருந்தாங்க. என் மனைவி வீட்டுலயும் பட்டுக்கூடு உற்பத்திதான். அதனால, அதைப்பத்தின நெளிவு, சுளிவு அத்தனையும் அவங்களுக்குத் தெரிஞ்சுருந்தது. கல்யாணமாகி வந்ததுமே, பாப்பாத்தியோட சேர்ந்து, நானும் பட்டுப்புழு வளக்க ஆரம்பிச்சுட்டேன்.
செழிப்பு தரும் பட்டுப்புழு!
89-ம் வருஷத்துல இருந்து பட்டுப்புழு வளர்த்துக்கிட்டு இருக்கோம். மல்பெரிச் செடிகளை நடவு செஞ்சுட்டு, வீட்டோட ஒரு பகுதியையே பட்டுப்புழு வளர்ப்பு மனையா மாத்திட்டோம். நான், ரெண்டு தடவை சிறந்த பட்டு விவசாயிக்கான மாநில விருது வாங்கியிருக்கேன்னா... அதுக்கு என் மனைவியோட உழைப்பும், தொழில்நுட்ப அறிவும்தான் காரணம். என்னோட ரெண்டு பசங்களையும் நல்ல இன்ஜினீயரிங் காலேஜ்ல சேத்துருக்கேன். இந்தஅளவுக்கு நான் செழிப்பா இருக்கறதுக்குக் காரணம், பட்டுப்புழு வளர்ப்புதான்'' என்று முன்னுரை கொடுத்து நிறுத்த, தொடர்ந்தார் அவருடைய மனைவி பாப்பாத்தி.
சுலபமாக வளர்க்கலாம்!
''ஆரம்பத்துல மஞ்சள் நிறக் கூடுகளைத்தான் உற்பத்தி செஞ்சோம். அதைவிட வெள்ளைக்கூடுகளுக்கு அதிக விலை கிடைக்கறதால... ஆறு வருஷமா வெள்ளைக்கூடுதான் உற்பத்தி பண்றோம். விவசாயம் சார்ந்தத் தொழில்கள்ல கொறஞ்ச நாள்லயே வருமானம் தரக்கூடியது, பட்டுக்கூடு உற்பத்திதாங்க. ஆனா, பட்டு வளர்ச்சித்துறைக்காரங்க சொல்லித் தர்ற தொழில்நுட்பத்தை சரியாக் கடைபிடிச்சு, நல்ல தரமான கூடுகளை உற்பத்தி பண்ணினாத்தான் லாபம் சம்பாதிக்க முடியும். முன்னயெல்லாம்... ஒரு நாளைக்கு அஞ்சு வேளைக்கு இலைகளைப் பொடிப்பொடியா நறுக்கி புழுக்களுக்குக் கொடுக்கணும். அதனால, நாள் முழுக்க வேலை பாக்க வேண்டியிருக்கும். இப்போ, எளிமையான உபகரணங்கள் வந்துட்டதால, வேலை குறைஞ்சுடுச்சு. இப்போ வளர்ப்பு முறைகளும் மாறிடுச்சு. அதனால, வீட்டு வேலை, மத்த விவசாய வேலை எல்லாத்தையும் பாத்துக்கிட்டே பட்டுப்புழுவையும் வளத்துடலாம்'' என்று சிறிது இடைவெளிவிட, பட்டுப்புழு வளர்ப்பு பற்றிய விவரங்களைச் சொல்ல ஆரம்பித்தார், செல்லமுத்து.
ஒரு ஏக்கரில் மல்பெரி... 100 கிலோ கூடு உற்பத்தி!
'ஒரு ஏக்கர் நிலத்துக்கு 10 டிராக்டர் தொழுவுரம், 5 டன் கோழி எரு ஆகியவற்றைக் கொட்டி இறைத்து, நன்றாக உழவு செய்ய வேண்டும். 3 அடி இடைவெளியில் பார் அமைத்து, அதில் 5 அடி இடைவெளியில் மல்பெரிச் செடிகளை நடவு செய்ய வேண்டும். பட்டு வளர்ச்சித்துறை மூலமாக மானிய விலையில் நாற்றுகள் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் 4 ஆயிரத்து 800 செடிகளை நடவு செய்ய முடியும். நடவு செய்த பிறகு சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து, வாரம் ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். சொட்டுநீர் அமைக்கவும் மானியம் உண்டு. களை மற்றும் பயிர் பராமரிப்பு முறைகளை சரியாக மேற்கொண்டு வந்தால், நடவு செய்த 90-ம் நாளில், செடிகள் ஆளுயரத்துக்கு வளர்ந்துவிடும்.
இந்தச் செடிகளில் 20 ஆண்டுகள் வரை தொடர்ந்து மகசூல் எடுக்கலாம். 25 நாட்களுக்கு ஒரு முறை இலைகளைப் பறிக்கலாம். நிலத்தைப் பாதியாகப் பிரித்துக் கொண்டு சுழற்சி முறையில் முறையில் அறுவடை செய்தால், தொடர்ந்து ஆண்டு முழுவதும் இலைகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். பட்டுப்புழுக்களுக்கு முக்கியத் தீவனம் மல்பெரி இலைகள்தான் என்பதால், இவை தரமாக இருந்தால்தான் புழுக்களும் ஊக்கமுடன் வளர்ந்து, அதிக எடையுள்ள கூடுகளை உற்பத்தி செய்யும். 100 முட்டைத் தொகுதிகளில் உருவாகும் புழுக்களுக்கு, மொத்தம் 700 கிலோ அளவுக்கு இலை தேவை. இதற்கு, ஒரு ஏக்கர் நிலத்தில் மல்பெரி வளர்க்க வேண்டும். 100 முட்டைத் தொகுதிகள் மூலம் மாதம் 100 கிலோ பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்ய முடியும்.
தட்பவெப்பம்... கவனம்!
தீவனம் தயாரான பிறகு நமக்குத் தேவையான அளவில் முட்டைத் தொகுதிகளை பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்தில், வாங்கி அடை வைக்க வேண்டும். அடை வைக்கும் இடத்துக்கு 'இளம் புழு வளர்ப்பு மனை’ என்று பெயர். மனையைச் சுற்றிலும் கொசு வலை அடித்து தென்னங்கீற்று வேய்ந்து, மனைக்குள் தட்பவெட்பம் சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். முட்டை பொரிந்து வெளிவரும் புழுக்களை, 8-ம் நாள் வரை இளம்புழு வளர்ப்பு மனையில் வைத்துப் பராமரிக்க வேண்டும். தினமும் காலையிலும், மாலையிலும் இளம் வயது செடிகளில் உள்ள கொழுந்து இலைகளைப் பறித்து உணவாக வைக்க வேண்டும். முதல் எட்டு நாட்களுக்கு இளம்புழுக்களுக்குத் தனிக்கவனம் தேவை. அவ்வளவு நுணுக்கமாக, பார்க்க ஆள் வசதி இல்லையென்றால், 'சாக்கி சென்டர்’ என்று அழைக்கப்படும் இளம்புழு வளர்ப்பு மையங்களில் இருந்து எட்டு நாட்கள் வயதுடைய புழுக்களை வாங்கி வந்து வளர்க்கலாம் (இவர், தற்போது இளம்புழுக்களை வாங்கி வந்துதான் வளர்க்கிறார்).
8 நாட்கள் வயதுடைய புழுக்களை அதற்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் புழு வளர்ப்பு தாங்கிகளில்விட வேண்டும். கட்டில் போல இருக்கும் இந்தத் தாங்கிகளில் 'நெட்ரிக்கா’ எனும் பிளாஸ்டிக் விரிப்பை விரிக்க வேண்டும். இந்த விரிப்பில் நூற்றுக்கணக்கான அறைகள் இருக்கும். அவற்றின் மூலமாகத்தான், பட்டுபுழுக்கள் தன்னைச் சுற்றி கூடுகளைக் கட்டும். வளரும் புழுக்களுக்கு தினமும் காலையிலும், மாலையிலும்... ஒரு மாத வயதுக்கு மேல் உள்ள செடிகளில் இருந்து முற்றிய இலைகளைக் காம்புடன் பறித்து உணவாக வைக்க வேண்டும். புழுக்கள், இலைகளை மட்டும் சாப்பிட்டு விட்டு, காம்புகளை ஒதுக்கி விடும். பிறகு, காம்புகளை அப்புறப்படுத்த வேண்டும். புழுக்கள் 27 நாட்கள் வயதில், கூடுகளை உருவாக்கிக் கொள்ளும். இதுதான் அறுவடை தருணம். அறுவடை முடிந்த பிறகு, வளர்ப்பு மனை மற்றும் தளவாடங்களை சுத்தம் செய்து, பிளீச்சிங் பவுடர் போட்டுக் கழுவி, அடுத்தத் தொகுதியை வளர்க்க ஆரம்பிக்க வேண்டும்.’
வளர்ப்பு முறைகளைச் சொல்லிய செல்லமுத்து நிறைவாக, வருமானம் பற்றிச் சொன்னார்.
ஒரு ஏக்கர்... இரண்டு ஆட்கள்... மாதம் 30 ஆயிரம்!
''100 கிலோ பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்யறதுக்கு இரண்டு வேலை ஆட்களே போதும். நல்ல தண்ணியோட, ஒரு ஏக்கர் நிலம் இருந்தா... கணவன், மனைவி இரண்டு பேரும் வேலை செஞ்சாலே... மாசம் 100 கிலோ கூடு உற்பத்தி செஞ்சு முப்பதாயிரம் ரூபாய் வரைக்கும் சம்பாதிச்சுட முடியும். நான் ரெண்டு ஏக்கர்ல மல்பெரி சாகுபடி செய்றேன். மாசம் 200 கிலோ கூடு உற்பத்தி செய்யுறதுல, குறைஞ்சபட்சமா 60 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் பாக்குறேன்.
நான் கோயம்புத்தூர்ல இருக்குற பட்டுக்கூடு விற்பனை அங்காடியிலதான் விக்கிறேன். இங்க லீவு நாட்கள் தவிர எல்லா நாட்கள்லயும் ஏலம் நடக்கும். இப்போ ரெண்டு வருஷமா ஒரு கிலோ பட்டுக்கூடு 300 ரூபாய்க்கு குறையாம ஏலம் போயிட்டுருக்கறதால... நல்ல வருமானம் கிடைக்குது'' என்று சந்தோஷமாகச் சொல்லி விடைகொடுத்தார், செல்லமுத்து.
தொடர்புக்கு,
செல்லமுத்து, செல்போன்: 96007-95002.
பி. முத்தைய்யா, செல்போன்: 73735-25252.
உதவி இயக்குநர், ஈரோடு,
தொலைபேசி: 0424-2339664

மானியங்களை அள்ளி வழங்குது மத்திய அரசு!
ஈரோடு மண்டல பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பக்கிரிசாமியை சந்தித்தபோது, பட்டுப்புழு வளர்ப்பு பற்றிய சில விவரங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
''இந்தியாவில் பட்டு நூல் தேவை அதிகளவில் உள்ளது. இந்தியாவுக்கு ஆண்டுக்கு 29 ஆயிரம் மெட்ரிக் டன் கச்சாப்பட்டு தேவை. ஆனால், இங்கு 20 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டும்தான் உற்பத்தியாகிறது. அதனால், சீனாவில் இருந்து கச்சா பட்டு இறக்குமதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 3 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்குத் தேவை இருந்தாலும், அதில் பாதியளவுதான் உற்பத்தியாகிறது. அதனால், தமிழகத்தில் பட்டுக்கூடு உற்பத்தி நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலாக இருக்கிறது. இந்திய அளவில், நான்கு ஆண்டுகளாக வெண்பட்டு உற்பத்தியில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது.
இத்தொழிலுக்கு மத்திய-மாநில அரசுகள் மானியத்தை அள்ளி வழங்குகின்றன. நாற்று, நடவு, இலைப்பறிப்புக் கருவி, விசைத்தெளிப்பான், பட்டு வளர்ப்பு மனை, மற்றும் தளவாடங்கள், சொட்டுநீர் அமைப்பு என்று அனைத்துக்கும் 75% வரை மானியம் உண்டு. சிறு-குறு விவசாயிகளுக்கு 100% மானியத்தில் சொட்டுநீர் வசதியும் செய்து தரப்படுகிறது. வங்கிக்கடன் வசதியோடு, இயற்கைச் சீற்றங்கள், நோய்கள் போன்றவற்றில் ஏற்படும் திடீர் இழப்பை ஈடுசெய்ய, காப்பீடு வசதியும் உண்டு. மல்பெரி வயல் வரப்புக்களில் மரக்கன்றுகள் நடவும் மானியம் உண்டு'' என்றார், பக்கிரிசாமி.

பட்டு வளர்க்கலாம் வாங்க!
குண்டடம், மானூர்பாளையம், தொட்டியந்துறை உள்ளிட்ட தாராபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில், பட்டு வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளில் பெரும்பாலானோர், தாங்கள் பட்டு வளர்ப்புக்கு வந்ததற்கு காரணமாகக் கைகாட்டும் நபர் முத்தையா. இவர், கடந்த 34 ஆண்டுகளாக பட்டு வளர்ச்சித்துறையில் பணியாற்றி, ஆறு மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றிருக்கிறார். அரசு வேலையை 'கடனுக்கு’ என்று செய்யாமல், நூற்றுக்கும் மேற்பட்ட சிறு-குறு விவசாயிகளுக்கு பட்டு வளர்ப்பில் ஆர்வத்தை ஊட்டி... அவர்களைப் பொருளாதார ரீதியில் முன்னேற வைத்திருக்கிறார், இவர். பணி ஓய்வு பெற்ற பிறகும் அதேபகுதியில் ஒரு இளம்புழு வளர்ப்பு மையத்தில் பணியாற்றிக் கொண்டு, தேடி வரும் விவசாயிகளுக்கு ஆலோசனைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார், முத்தையா.
அவரிடம் பேசியபோது, ''வித்து நன்றாக இருந்தால்தான், விளைச்சல் நன்றாக இருக்கும். அதேபோல, இளம்புழுக்கள் தரமாக ஊக்கமுடன் வளர்ந்தால்தான் பட்டுக்கூடுகளின் உற்பத்தி நன்றாக இருக்கும். இளம்புழு வளர்ப்பு மிகவும் கடினமான காரியம். எமர்ஜென்ஸி வார்டில் உள்ள குழந்தையைக் கண்காணிப்பது போல மிகத்துல்லியமாகப் பராமரிக்க வேண்டும். இதில் கோட்டை விட்டால், தரமானக் கூடுகள் கிடைக்காது. அதற்குப் பயந்தே பலர் பட்டுப்புழு வளர்ப்புக்கு வருவதில்லை. அதனால், அந்த வேலையை மட்டும் தனியாக கவனம் எடுத்துச் செய்யும் விதத்தில்... ஆர்வமுள்ள சில விவசாயிகளுக்கு இளம்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்களைக் கற்றுத்தந்து, அவர்கள் மூலம் 'சாக்கி சென்டர்’களை உருவாக்கியிருக்கிறது, பட்டு வளர்ச்சித்துறை. இளம்புழுக்கள் வளர்க்கக் கஷ்டப்படும் விவசாயிகள், இந்த சென்டர்களில் இருந்து, 8 நாள் வயதான புழுக்களை வாங்கி வளர்த்துக் கொள்ள முடியும். இதனால், 20 முதல் 22 நாட்களில் வருமானம் பார்த்துவிட முடியும். ஒரு ஏக்கர் நிலத்தில் மல்பெரி நடவு செய்து, வெண்பட்டுக்கூடு உற்பத்தி செய்தால், எல்லா செலவுகளும் போக, ஆண்டுக்கு 2 லட்ச ரூபாய் முதல் 3 லட்ச ரூபாய் வரை கண்டிப்பாக வருமானம் பார்க்க முடியும்'' என்ற முத்தையா,
''ஆண்டுக்கு 10 பேட்ச் மூலம் 1,000 கிலோ கூடு உற்பத்தி என்பதுதான், பட்டு வளர்ச்சித்துறையின் இலக்கு. அதை சர்வசாதாரணமாக முறியடித்து சாதனை புரிந்திருக்கிறார் செல்லமுத்து. இரண்டு ஏக்கர் நிலத்தில் மல்பெரி சாகுபடி செய்து ஆண்டுக்கு 18 பேட்சுக்கள் எடுத்து மாநில அளவில் சாதனை புரிந்துள்ளார். அவர், ஒரு வினாடியைக்கூட வீணாக்க மாட்டார். அர்ப்பணிப்போடு பணியாற்றியதால்தான், அவர் இன்று லட்சாதிபதியாக உயர்ந்துள்ளார். சராசரியாக 20 நாட்களுக்கு ஒரு முறை குறைந்தபட்சம் 60 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார், செல்லமுத்து. இவரால், எங்கள் பட்டுவளர்ச்சித் துறைக்கே பெருமை'' என்று சொல்லி புளகாங்கிதப்பட்டார்!

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites