இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, November 28, 2011

உறவு யுத்தத்தின் தொடக்கம் முத்தம்


அறிந்து கொள்ள விரும்புபவர்கள் தொடர்ந்து படியுங்கள்

முத்தமும் நம்பிக்கையும்

முத்தம் குறித்த பல்வேறு நம்பிக்கைகளும் உலக மக்களிடம் உலவி வருகின்றன. முத்தம் கொடுப்பதன் மூலம் நமது உடலில் கலோரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைகிறதாம். எவ்வளவு குறைகிறது என்பதை அறுதியிட்டுக் கூற முடியாவிட்டாலும் கூட, முத்தம் கொடுக்கப்படுவதைப் பொறுத்து நிமிடத்திற்கு 4 முதல் 6 கலோரி வரை குறையுமாம். அதேசமயம், விநாடிக்கு 12 கலோரி வரை குறைகிறது என்று இன்னொரு சாரார் கூறுகின்றனர்.

ரோமானிய முத்தம்

முத்தத்திற்கு வரலாறுகளில் ஒவ்வொரு விதமான அர்த்தம் கூறியுள்ளனர். ரோமானியர்கள், கல்யாண நிகழ்ச்சிகளின் முடிவில் ஒருவருக்கொருவர் முத்தத்தை அன்புப் பரிமாற்றமாக பகிர்ந்து கொள்வார்களாம்.

ஆன்மாக்கள் சங்கமிக்கும் பிரெஞ்ச் கிஸ்

ப்ரெஞ்ச் கிஸ் உலகப் புகழ் பெற்றது. இந்த முத்தத்திற்கு ஆன்மாவின் முத்தம் என்று பிரெஞ்சுக்காரர்கள் பெயர் வைத்துள்ளனர். இரு நாவுகள் சம்பந்தப்பட்டது இது. இந்த முத்தத்தின் மூலம் இருவரின் ஆன்மாவும் ஒன்றாக சங்கமிப்பதாக பிரெஞ்சுக்காரர்கள் நம்புகிறார்கள். இதற்குப் பிரெஞ்சு முத்தம் என்று பெயர் இருந்தாலும் கூட பிரான்ஸில் இதை ‘இங்கிலீஷ் கிஸ்’ என்றுதான் அழைக்கிறார்களாம்.

உணர்ச்சியை தூண்டும் முத்தம்

முத்தம் கொடுப்பதற்கு முன்பு உங்களது துணையின் உதடை, மெதுவாக உங்களது உதட்டால் தடவிக் கொடுங்கள். உணர்ச்சிகள் தூண்டப்படுவதை அனுபவிப்பீர்கள். பிறகு முத்தத்திற்குப் போகலாம்.

நெக் கிஸ்

இது கழுத்தை கவரும் முத்தம். உதடுகளில் முத்தமிடுவதற்கு முன்பு உங்களது துணையின் கழுத்தை மென்மையான முத்தத்தால் ஒரு ‘சுற்று சுற்றி’ விட்டு பின்னர் உதடுகளுக்கு போங்கள். உற்சாகம் கொப்பளிக்கும்

ஜில்லென்ற முத்தம்

சின்ன ஐஸ் கியூபை எடுத்து உங்களது வாய்க்குள் போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் வாயைத் திறந்து, உங்களது பார்ட்னரை நெருங்கி அந்த ஐஸ் கியூபை அவரது வாய்க்குள் பாஸ் செய்யுங்கள். உங்களது நாவால்தான் பாஸ் செய்ய வேண்டும், அப்படியே துப்பக் கூடாது. பிறகு முத்தமிடுங்கள். ஜில்லென்றிருக்கும்.

பழங்களினால் முத்தம்

ஸ்டிராபெர்ரி, திராட்சை அல்லது நறுக்கிய சின்ன மாம்பழத் துண்டு ஒன்றை எடுத்து அதை உதடுகளுக்கு நடுவில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் உங்களது துணையின் உதட்டுடன் வைத்து அழுத்துங்கள். அது நசுங்கி வழியும்போது இருவரும் இணைந்து அதைப் பருகி இந்த ப்ரூட்டி கிஸ்ஸை அனுபவிக்கலாம்.

பபுள் பாத் கிஸ்

பாத் டப்பில் நுரை நிரப்பிய நீரில் இருவரும் இணைந்து குளித்துக்கொண்டே முத்தமிடுவது இந்த வகை. இது குளியலுக்கு குளியல், முத்தத்திற்கு முத்தம் டூஇன்ஒன்.

பபுள்கம் கிஸ்

உங்களுடைய பேவரைட் சுயிங்கம், பபுள்கம்மினை வாயில் போட்டு சுவைத்து முத்தத்தை தொடங்கலாம். அந்த வாசனை முத்தமிடுபவரையும், பெறுபவரையும் உற்சாகப்படுத்தும்.

கொஞ்சம் சூடு கொஞ்சம் குளுமை

முதலில் உங்களது துணையின் உதடுகளை சிறிது நேரம் மென்மையாக சுவையுங்கள். அதன் பின்னர் சற்று பலமாக ஊதுங்கள். முதலில் குளிர்ந்து போயிருக்கும் உதடுகள், நீங்கள் ஊதுவதன் திடீர் வெப்பத்தை சந்திப்பார் உங்களது பார்ட்னர். கூடவே இன்னொன்னும் கிடைக்குமா என்று கோரிக்கையும் வைப்பார்.

பேச்சும் முத்தமும்

இது படு ஜாலியானது, கூடவே உணர்வுகளைத் தூண்டக்கூடியது. இருவரும் நேருக்கு நேர் முகத்தை வைத்துக் கொள்ளுங்கள். இருவரது உதடுகளும் நெருக்கமாக இருக்க வேண்டும். உதட்டோடு உதடு உரச, ஆனால் முத்தம் தரக் கூடாது, எதையாவது சிறிதுநேரம் ஜாலியாக பேசிக் கொண்டிருங்கள். உதடுகள் உரசும், உணர்வுகள் தூண்டப்படும், உள்ளங்கள் நெருங்கி வரும், பின் தொடர்ந்து வரும் உறவு வலுப்படும்.

எஸ்கிமோ முத்தம்

அதேபோல மிகவும் பிரபலமானது எஸ்கிமோ முத்தம். பனிப் பிரதேசங்களில் வசிக்கும் இனுயுட் இன மக்கள் ஒருவர் மீது கொண்ட பாசத்தை வெளிப்படுத்த மூக்கோடு மூக்கு உரச நெற்றி அல்லது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிடுவது வழக்கம். இதை அவர்கள் கலாச்சாரமாகவே பின்பற்றி வருகின்றனர். உடல்கள் இணைவது மட்டும் உறவுகள் அல்ல, அன்பும் பரிமாறிக் கொள்ளப்பட வேண்டும். அதற்கு முத்தம் ஒரு நல்ல கருவி என்பதால் முத்தத்தில் ஆரம்பியுங்கள் உங்கள் இனிய உறவுகளை.

முத்தம் ஒரு எச்சரிக்கை

உதடோடு உதடு பொருத்தி முத்தமிடும்போது இருவரது வாய்க்குள்ளும் கிட்டத்தட்ட 10லட்சம் பாக்டீரியாக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன என்பது எச்சரிக்கைச் செய்தி. முத்தமிடுவதன் மூலம் சில வகை நோய்களும் கூட உடல் விட்டு உடல் மாறும் வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம், முத்தமிடுவதால் எச்ஐவி பரவுவதில்லை என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று எனவே ஜாக்கிரதை

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites