இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label சுற்றுலா. Show all posts
Showing posts with label சுற்றுலா. Show all posts

Saturday, February 18, 2012

சித்தன்னவாசல்

சித்தன்னவாசல் பயணம். அரசு விருந்தினருக்கு உள்ள அத்தனை சிறப்புகளுடன் சென்று வந்தோம். சமணர் குடைவரைக் கோயிலில் உள்ள ஊழியர் மூச்சடக்கி பயிற்சி செய்து காண்பித்தார். ஓம் என்ற ஒலி எழும்பியது வியப்பாக இருந்தது. நானும் முயற்சி செய்து பார்த்தேன் ஒலிதான் வர்வில்லை. பண்பாட்டுக் க்ருவூலமான அதை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் நம் கல்லூரி இளைஞர்களிடம் இல்லை என்பது தான் வேதனை. சில படங்களை இங்கே காணலாம்.


சித்தன்ன வாசல் ஓவியத்தை அருங்காட்சி யகத்தில் முழுமையாக நகல் எடுத்து வைத்துள்ளுனர்
குடை வரை கோயில் சுவரில் உள்ள சமணர் உருவம்

ஓவியம் சிதைந்த நிலை
















சித்தன்ன வாசல் ஓவியம் தற்போதைய நிலை

குடை வரை கோயில் பற்றிய அறிவிப்பு
மேலே சென்றால் சமணர் படுக்கைகள் எல்லாம் தற்கால காதலர்களால் சிதைக்கப்பட்டுள்ள நிலை.
சித்தன்னவாசல் சமணர் படுக்கைகள்



படுக்கையின் தோற்றம்


படுக்கையை வேலி அமைத்து பாதுகாக்கும் நிலை

Thursday, February 16, 2012

வண்டலுர் உயிரியல் பூங்கா: பறவைகள்

நல்ல வேளை நம்ம கேமர எதுக்கும் சளைக்காம படம் புடிச்சிட்டுருந்தாரு….

இவுக கண்ணப் பாருங்க…
இராத்திரி எத்தன ரவுண்ட் கட்டுனாருனு தெரியல

போஸ் குடுக்கமாட்டேன் போண்னு முகத்த திருப்பிக்கிட்டாங்க…

நல்லா சாப்டுட்டு ஓரத்தில ஓய்வா இருந்தாங்க விட்டுடுவோமா நாம..
அப்படிடே மடக்கிட்டோமில்ல…

சோடிக்கொக்கெங்கே சொல்லு சொல்லுனு கூப்டுட்டிருந்தாங்கோ…

நாம படம் புடிக்கிறது தெரிஞ்சதும் பாட்ட நிறுத்திட்டு
மூஞ்ச திருப்பிட்டாங்க…

சிறைக்குள்ளருக்கிறது நீயா? நானா?

இதுக்கு முன்னால பாத்தவங்க எல்லாரும்
தனியே… தன்னந்தனியே….
காத்து காத்து இருந்து போஸ் குடுத்தவங்க….
இப்போ பாக்க போறவங்க…
நல்லதொரு குடும்பம்
பல்கலைக் கழகம்னு பாடம் படிச்சவங்க…
பாக்கலாமா?
#1

#2

#3

#4

#5

#6

#7

#8

#9

#10

Saturday, January 28, 2012

கொடைக்கானல் அருவி

மலைகளின் அரசி ஊட்டியைப் பற்றி முன்னரே விளக்கியிருந்தேன். இப்போது மலைகளின் இளவரசியைப் பற்றி பார்க்கலாம். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல்,  தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
Click to enlarge map
கொடைக்கானல் என்னும் சொல், காட்டின் முடிவு, கொடிகளின் காடு, கோடை கால காடு,  காட்டின் அன்பளிப்பு என பல பொருள் தரும். முன்னர் கொடைக்கானலில் மலைவாழ் மக்களே வாழ்ந்து வந்தனர், பின்னர் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது கோடை காலகங்களில் இங்கு தங்கியிருந்தனர். இனி கொடைக்கானலை சுற்றிப் பார்க்கலாம்.


வெள்ளி நீர்வீழ்ச்சி:
கொடைக்கானலில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. கடல் மட்டத்தில் இருந்து 5900 அடி உயரத்தில் இருக்கும் இந்த நீர்விழ்ச்சி பார்ப்பதற்கு வெள்ளியை போன்றே இருக்கும். கொடைக்கானல் ஏரியில் இருந்து வெளிவரும் தண்ணீரே இந்த நீர்வீழ்ச்சியின் பிறப்பிடமாகும். நீர்வீழ்ச்சியின் மொத்த உயரம் 55 மீ.


Silver Falls
கொடைக்கானல் ஏரி:
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரி சுற்றுலாப் பயணிகள் காணவேண்டிய இடங்களில் முக்கியமானதாகும். 1863ஆம் ஆண்டு முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களால் உருவாக்கப்பட்டது இந்த ஏரி. மொத்தம் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியில் பயணிகள் உல்லாசமாக படகுப் பயணம் செய்ய சுற்றுலாத் துறையின் படகுகள் உள்ளன.


இந்த ஏரியின் அருகே மிதிவண்டிகள், குதிரைகள் ஆகியவற்றை சுற்றுலா செல்வோர் வாடகைக்கு எடுத்து ஏரியைச் சுற்றி பயணிக்கலாம்.


Kodaikanal Lake
ப்ரயண்ட் பூங்கா:
பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீ தொலைவில், கொடைக்கானல் ஏரிக்கு கிழக்கே அமைந்துள்ளது இந்த பூங்கா. மொத்தம் 20.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவை உருவாக்கியவர், எச்.டி.ப்ரயண்ட். இதை அவர் 1908 ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்த பூங்காவில் ஏறக்குறைய 325 வகையான மரங்கள், 740 வகையான ரோஜா மலர்கள் உள்ளன.


150 வயதுடைய போதி மரமும், யூகலிப்டஸ் மரமும் இங்கு இருப்பது இந்த பூங்காவின் சிறப்பம்சமாகும். மே மாதம் இங்கு தோட்டக்கலை துறையின் கண்காட்சியும், மலர்க் கண்காட்சியும் நடைபெறும்.
Bryant Park
கோக்கர்ஸ் நடைபாதை:
1872 ஆம் ஆண்டு கோக்கர் என்பவர் உருவாக்கியதுதான் இந்த நடைபாதை. 1 கி.மீ நீளமுடைய இந்த நடைபாதை பேருந்து நிலையத்தில் இருந்து 0.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. வானிலை நன்றாக இருந்தால் இங்கிருந்து பெரியகுளம், மதுரை, டால்பின் மூக்கு, பம்பா ஆறு போன்றவற்றை காணலாம்.  


வான் ஆலன் மருத்துவமனை அருகே தொடங்கும் இந்த நடைபாதை புனித பீட்டர் தேவாலயத்தின் அருகே முடிகிறது. இங்கு சில நேரங்களில் உங்கள் நிழலை மேகங்களின் மீது காணமுடியும்(brocken spectre).


Coaker's walk




டால்பின் மூக்கு:
பாம்பர் பாலத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 8.0 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்கு இருந்து பார்த்தால் பெரியபாறை ஒன்று டால்பின் மீனின் மூக்கு போன்று தெரியும். இந்த பாறையின் கீழே 6600 அடி ஆழமுடைய பள்ளம் இருக்கிறது. 


இதன் அருகே பாம்பர் அருவி உள்ளது. இந்த அருவியில் liril soap விளம்பரம்   எடுக்கப்பட்டது. அதனால் இதனை லிரில் அருவி என்றும் அழைக்கின்றனர்.


Dolphin's nose
பசுமை பள்ளத்தாக்கு(suicide point):
கோல்ப் மைதானத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 5.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பள்ளத்தாக்கு. இந்த பள்ளத்தாக்கின் உயரம் 1500 மீ. வானிலையைப் பொருத்து இங்கிருந்து வைகை அணையை காணலாம்.
Suicide point
தலையர் நீர்வீழ்ச்சி:
      இந்த நீர்வீழ்ச்சி கொடைக்கானல் காட் ரோட்டில் உள்ளது.  இதனை எலி வால் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கின்றனர். இந்தியாவின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. இந்த நீர்வீழ்ச்சியை காட் ரோட்டில் இருந்து காணலாம். அருகில் சென்று காண்பதற்கு வழி கிடையாது.



Thalaiyar falls
குணா குகைகள்:
      கமல் ஹாசன் நடித்து வெளியான குணா படத்தில் இந்த குகை இடம்பெற்றதால் இதனை குணா குகை என்கின்றனர்.  அதற்கு முன்னர் பிசாசின் சமையலறை(Devil's kitchen) என்றழைக்கப்பட்டது இந்த குகை. சில வருடங்களுக்கு முன்னர் குகைக்கு உள்ளே சென்று வர அனுமதி அளிக்கப்பட்டது ஆனால் தற்பொழுது குகையின் உள்ளே செல்ல முடியாது, மிக தூரத்தில் இருந்து பார்க்கலாம். 


Guna caves
Pine forest:
      இந்த ஊசியிலை காட்டை 1906 ஆம் ஆண்டு பிரயண்ட் என்பவர் உருவாக்கினார்.  கொடைக்கானலை பசுமையாக்கும் முயற்சியில் மலைப்பகுதிகளில் பல ஊசியிலை மரங்களை அவர் நட்டு வளர்த்தார். இப்போது இந்த காடு பிரபலமான சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.


Pine forest
பியர் சோழா அருவி(Bear shola Falls):
        கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது இந்த நீர்வீழ்ச்சி. முன்னர் கரடிகள் இங்கு தண்ணீர் குடிக்க வந்ததால் இந்த நீர்வீழ்ச்சிக்கு இந்த பெயர் ஏற்பட்டது.  அடர்ந்த காட்டுப் பகுதியின் உள்ளே இருக்கிறது இந்த நீர்வீழ்ச்சி.


Bear shola falls
Kodaikanal solar observatory:
         கொடைக்கானல் வானிலை ஆய்வுக்கூடம் 1898 ஆம் ஆண்டு இந்திய வான்கோளவியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து 2343 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து வைகை அணை, பெரியகுளம் மற்றும் சோத்துப்பாறை அணை ஆகியவற்றை காணமுடியும். இந்த ஆய்வுக்கூடத்தின் முன்னாள் இயக்குநரான ஜான் எவர்செட், இங்கு இருக்கும்போது எவர்செட் விளைவை கண்டுபிடித்தார். 


Solar observatory
திறந்திருக்கும் நேரம் 


  • காலை 10 மணி - மதியம் 12.30 மணி மற்றும் மாலை 7 மணி - 9 மணி.
  • சீசன் நேரங்களில் வெள்ளிக்கிழமை மட்டும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்.
தூண் பாறைகள்:
        இந்த பாறைகள் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளன. இங்கு மொத்தம் மூன்று பாறைகள் 122 மீ உயரத்தில் தூண் போல காட்சியளிக்கின்றன. பல நேரங்களின் இந்த பாறைகள் மேகங்களால் மூடியே இருக்கும் என்பது கூடுதல் தகவல்.

Pillar rocks

பாம்பர் அருவி:
         இந்த அருவிக்கு grand cascade என்ற பெயரும் உள்ளது. கொடைக்கானலில் இருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த அருவி.
Pambar falls

கொடைக்கானல் என்னும் சொல், காட்டின் முடிவு, கொடிகளின் காடு, கோடை கால காடு, காட்டின் அன்பளிப்பு என பல பொருள் தரும். இயற்கை இன்னும் இயற்கையாகவே இருக்கும் இடம் கொடைக்கானல். மரங்களுக்கு அடைக்கலம் தரும் மலைகள்; இதுவரை பார்த்திராத பறவைகள்; என ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம் தரும் இடம். மேற்குத் தொடர்ச்சி மலையில், கடல்மட்டத்திலிருந்து 22 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 2133 மீட்டர் (6998அடி) உயரத்தில் உள்ளது கொடைக்கானல். மலைகளின் இளவரசி என்றும் இதனை அழைப்பவர்கள் உண்டு.

சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் :
** பிரையண்ட் பார்க்
** தொலைநோக்கிக் காப்பகம் மற்றும் கோக்கர்ஸ் வாக்
** தூண் பாறைகள்
** குணா குகைகள்
** தொப்பித் தூக்கிப் பாறைகள்
** மதி கெட்டான் சோலை
** பேரிஜம் ஏரி (24 ஹெக்டேர் பரப்புள்ள பெரிய அழகான ஏரி)
** குறிஞ்சி ஆண்டவர் கோயில்
** செட்டியார் பூங்கா
** படகுத் துறை
** சில்வர் நீர்வீழ்ச்சி

கொடைக்கானல் ஏரி

ஏரியில் படகில் மிதந்தபடி ஏகாந்தமாய் பயணிப்பதில் கிடைக்கும் ஆனந்தமே தனிதான். இயற்கையின் அழகையெல்லாம் கொட்டி வைத்திருக்கும் ஏரியழகின் ரம்மியம் தனித்துவமானது. கொடைக்கானலின் மையப்பகுதியே இந்த ஏரிதான். இதன் சுற்றுச் சாலை 5 கி.மீ. ஏரியின் அளவு 24 ஹெக்டேர் மதுரை மாவட்டத்தின் ஆட்சியராகப் பணியாற்றிய சர் வேரி ஹென்றி லெவிஞ்சி (1819-1885) என்பவர்தான் இந்த ஏரியை திருத்தி அழகுப்படுத்தினார். அவரது ஆட்சிக் காலத்தில்தான் ஏரியில் மீன்கள் விடப்பட்டன. முதன் முதலில் 1932 இல்தான் சுற்றுலாப் பயணிகளுக்கான சேவை தொடங்கியது. இப்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் படகுக் குழாமும் செயல்படுகிறது.

கரடிச் சோலை அருவி

கரடுமுரடான மலைப்பாதையில் நடந்து சென்று களைத்துப் போய்விட்டீர்களா? அதோ தெரியுது பாருங்கள் அதுதான் கரடிச்சோலை அருவி. இங்கு வந்து கரடிகள் நீர் அருந்தியதால் சோலையுடன் கரடியும ஒட்டிக்கொண்டது. கொடைக்கானல் ஏரியிலிருந்து 2 கி.மீ. தூரமும் பேருந்து நிலையத்திலிருந்து 1.6 கி.மீ தூரத்திலும் கரடிச் சோலை உள்ளது.

ஃபேரி அருவி

மலையில் அருவி இல்லாமலா! இந்த அழகுமிகுந்த அருவி பயணிகளுக்கு உவகைதரும் உல்லாச இடம். கொடைக்கானல் ஏரியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் இந்த நீரருவி அமைந்துள்ளது.

பம்பர் அருவி

பம்பர் அருவியிலிருந்து கீழ்ப்பாய்ந்து வரிசையான பாறைகள் வழியே நெளிந்து பொங்கிப் பெருகும் தண்ணீரின் அழகு வசீகரத்தின் உச்சகட்டம். இந்த அருவிக்கு கிராண்ட் கேஸ்கட் என்றொரு பெயரும் உண்டு. பம்பர் ஹவுஸ் பின்புற வழியில் தொலைவாக உள்ள ஒரு செங்குத்துச் சரிவின் வழியாக இந்த அழகிய அருவியை அடையலாம். கொடைக்கானலிலிருந்து நீங்கள் 4 கி.மீ. பயணிக்கத் துணிந்தவர் என்றால் பம்பர் அருவியை அடையலாம்.

வெள்ளியருவி

கொடைக்கானல் ஏரி வழிந்தால் உருவாகும் அருவி இது. ஆர்வம் உள்ளவர்கள் வெள்ளியருவியில் குளித்து மகிழலாம். இதைக்காண ஏரியிலிருந்து 8 கி.மீ. செல்ல வேண்டும்.

தலையாறு அருவி

கொடைக்கானலுக்குச் செல்லும் மலைத்தொடர் சாலையில் 13 ஆவது கி.மீட்டரில் இந்த அருவி பாய்கிறது. இதற்கு எலிவால் அருவி என்ற பெயரும் உண்டு. இந்தியாவின் உயரமான அருவிகளில் ஒன்றான இதன் உயரம் 975 அடி. அவ்வளவு உயரத்திலிருந்து நீர் கொட்டும் அழகை என்னவென்று சொல்வீர்கள்?

Saturday, December 24, 2011

புதுக்கோட்டை

புதுக்கோட்டை
தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களில் இதுவும் ஒன்று. இன்றும், மன்னராட்சி இருந்ததற்கான சுவடுகளோடு காட்சியளித்துக் கொண்டிருக்கும் புதுக்கோட்டை, தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கொடும்பாளூர், நார்த்தமாலை, குடுமியான் மலை, குன்னாண்டனார் கோயில், சித்தன்ன வாசல், திருமயம், ஆவுடையார் கோயில் போன்ற தொன்மைச் சிறப்பு வாய்ந்த இடங்களைக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டம், சங்கப் பாடலிலும் இடம் பெற்றுள்ளது.
அறந்தாங்கி
புதுக்கோட்டையை அடுத்த பெரிய நகரம். முன்பு தஞ்சை மாவட்டத்தில் இருந்தது. பின்னர் புதுக்கோட்டை மாவட்டத்துக்குள் சேர்ந்தது. இங்குள்ள சிதைந்த கோட்டை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.
ஆவுடையார் கோயில்
புதுக்கோட்டையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள ஆவுடையார் கோயிலில் உள்ள ஆத்மநாத சாமி கோயிலின் ஆளுயரச்சிலை புகழ்பெற்றது. சிதம்பரம் நடராஜர் கோயிலைப் போலவே இக்கோயிலின் சந்நிதிக் கூரை தாமிர ஓடுகளால் வேயப்பட்டது. இங்குள்ள மரவேலைப்பாடுகளும் கருங்கல் கூரையும் கலை நேர்த்தி மிக்கவை.
ஆவூர்
புதுக்கோட்டையிலிருந்து 28 கி.மீ. தூரத்தில் உள்ள இவ்வூரில், கி.பி. 1547 ஆம் ஆண்டு ஃபாதர் ஜான் வெனான்டியஸ் பச்சட் என்பவரால் கட்டப்பட்ட பழம்பெரும் தேவாலயம் அமைந்துள்ளது. மேலை நாட்டு தமிழறிஞரான வீரமா முனிவர் (ஜோசப் பெஸ்கி) இந்தத் தேவாலயத்தில் இறைப்பணி ஆற்றியுள்ளார். கோடை காலத்தில் இங்கு நடக்கும் ஈஸ்டர் பண்டிகையும், தேரோட்டமும் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ளும் பெரு விழாக்களாகும்.
திருக்கோகர்ணேஸ்வரர் பிரகதாம்பாள் கோயில்
திருக்கோகர்கணத்தில் உள்ள கோகர்ணேஸ்வரர், பிரகதாம்பாள் குடைவரைக் குகைக் கோயில், மகேந்திர வர்ம பல்லவன் காலத்தைச் சேர்ந்தது. காந்திநகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம் பஸ் நிலையத்துக்கு அருகே உள்ள ஜியான் ஜூப்ளி, சேக்ரட் ஹார்ட் தேவாலயம், மார்த்தாண்டபுரம், இரண்டாவது தெற்கு வீதியில் உள்ள பெரிய மசூதி ஆகியவை புகழ்பெற்ற இடங்களாகும்.
காட்டுபாவா பள்ளி வாசல்
புதுக்கோட்டையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் திருமயம்-மதுரை நெடுஞ்சாலையில் இந்தப் பள்ளி வாசல் அமைந்துள்ளது. இஸ்லாமியர்களின் புனிதத் தலமென்றாலும் இந்துக்களும் இங்கு சென்று தொழுவது தனிச்சிறப்பு. நபியுல் அகிர் மாதத்தில் இங்கு நடக்கும் உர்ஸ் திருவிழா பிரபலமானது.
அரசு அருங்காட்சி சாலை
புதுக்கோட்டை இரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ளது. இங்கு புவியியல், விலங்கியல், மானுடவியல், கல்வெட்டியல், வரலாற்று ஆவணங்கள், ஓவியங்கள் என்று ஏராளமான சேகரிப்புகள் இடம் பெற்றுள்ளன. வெவ்வேறு காலக்கட்டங்களைச் சேர்ந்த அற்புதமான சிலைகளும் வெண்கலக் கலைப்பொருட்களும் காண்போரை வியப்படையச் செய்யும்.
பார்வை நேரம்- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. அனுமதி இலவசம். வெள்ளி விடுமுறை. தொலைபேசி - 04322-236247.
கொடும்பாளூர்
புதுக்கோட்டையிலிருந்து 36 கி.மீ. தொலைவிலும், திருச்சியிலிருந்து 42 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சோழர்களுடன் உறவாக இருந்த இருக்கு வேளிர் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்த இந்த ஊரில் பூதி விக்கிரமகேசரி 10 ஆம் நூற்றாண்டில் மூன்று கோயில்களைக் கட்டியுள்ளார். இவற்றில் தற்போது இரண்டு கோயில்கள் மட்டுமே உள்ளன. தென்னிந்திய கட்டுமானக் கலைக்கும் சிற்பக் கலைக்கும் இந்தக் கோயில்கள் எடுத்துக் காட்டாக உள்ளன. இவற்றில் அமைந்துள்ள களரி மூர்த்தி, கஜசம்ஹார மூர்த்தி, அர்த்தநாரி, கங்காதர மூர்த்தி ஆகியவை சிற்பக் கலையின் உன்னத சாட்சியங்களாகும். இதன் அருகே சோழர்கால முச்சுகொண்டேஸ்வரர் கோயிலும் உள்ளது. கொடும்பாளூர் என்றாலே மூவர் கோயில்தான் நம் நினைவுக்கு வரும்.
குடுமியான் மலை
இங்குள்ள சிவன் கோயிலில் சிறந்த சிற்பங்களும், பழமையான கல்வெட்டுகளும் உள்ளன. இவற்றில் ஒரு கல்வெட்டு மகேந்திர வர்ம பல்லவனின் இசை ஞானத்தையும் பிரிவதனி என்ற எட்டிழை வாத்தியத்தில் அவர் செய்த பரிசோதனைகளையும் பற்றி விவரிக்கிறது.
நார்த்தா மலை
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடம் முன்பு முத்தரையர் படைத்தலைவர்களின் தலைமையிடமாக இருந்துள்ளது. பழங்கால வட்ட வடிவக் கோயிலை முத்தரையர்கள் கட்டினார்கள் என்றால் விஜயாலய சோழேஸ்வரன் கோயிலை பிற்காலச் சோழர்களின் முதல் அரசனான விஜயாலய சோழன் கட்டியுள்ளான். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்கோயில்கள் பார்க்கப்பட வேண்டியவை. புதுக்கோட்டையில் இருந்து 17 கி.மீ. தொலைவில் நார்த்தா மலை இருக்கிறது.
சித்தன்னவாசல்
உலகப்புகழ் பெற்ற ஓவியர்கள் நிறைந்த குகைக் கோயில் இங்குதான் உள்ளது. இந்தக் குகைக் சுவரில் வரைந்துள்ள அஜந்தா வகை ஓவியங்கள் ஓவியக் கலைஞர்களால் கொண்டாடப்படுபவை. நடுநாயகமாக வரையப்பட்டிருக்கும் ஓவியத்தில் ஒரு தாமரைக் குளம், அங்கு நடனமாடும் இரு கந்தர்வப் பெண்கள், குளத்திலிருக்கும் தாமரை மலரைக் கொய்து கொண்டிருக்கும் சிலர், சுற்றிலும் மீன்கள், அன்னப் பறவைகள் என காவியமாய் விரியும். 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளும் இங்குள்ளன. சித்தன்னவாசல் சுற்றுப்புறத்தில் ஆதிகால இடுகாடுகளும், புதைக்கப்படாத முதுமக்கள் தாழீகளும் உள்ளன.
குமரமலை
புதுக்கோட்டையிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த மலையின் உச்சியில் முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலின் திருக்குள நீர் புனித நீராகக் கருதப்படுகிறது.
திருமயம்
இந்தியாவிலேயே பெருமாள் அனந்தசயனத்திலிருக்கும் மிகப்பெரிய குகைக் கோயில் இங்குதான் உள்ளது. இயற்கையில் அமைந்த குகையே அற்புதமான கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. இந்தக் கோயில் அமைந்துள்ள குன்றைச் சுற்றிலும் கம்பீரமான கோட்டை எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கோட்டை கி.பி. 1687 ஆம் ஆண்டு சேதுபதி விஜயரகுநாத தேவரால் 40 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டுள்ளது. குன்றின் கீழ்ப்புறமாகப் பெருமாள் கோயிலோடு சிவன் கோயிலும் உள்ளது. தொண்டைமான் அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர் காலத்தில் முக்கியப் பங்காற்றியுள்ள இந்தக் கோட்டை, புதுக்கோட்டையிலிருந்து 19 கி.மீ தொலைவில் உள்ளது.
வேடன்பட்டி
புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் 40 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள மீனாட்சி சொக்கேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள நெய் நந்தி மிகப் பிரபலமானது.
விராலிமலை
இந்த மலைக் குன்றின் உச்சியில் முருகன் கோயில் உள்ளது. 15 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே இந்தக் கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள மயில் காப்பகத்தில் முருகன் வள்ளி தெய்வயானையோடு மயில் மீதமர்ந்து காட்சி அளிக்கிறார். திருச்சியிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும் புதுக்கோட்டையிலிருந்து 40 கி.மீ தொலைவிலும் விராலிமலை அமைந்துள்ளது.
அருள்மிகு நாகநாதசாமி திருக்கோயில்
புதுக்கோட்டையில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள சுனையின் சுற்றுச் சுவரில் ஒரு சூலம் வரையப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பங்குனிமாதம் சுனையின் நீர்மட்டம் இந்தச் சூலக் குறியிட்ட இடத்திற்கு வரும் வேளையில் வழிபாட்டின் போது ஒலிக்கப்படும் ஒருவித இசையொலி கேட்பதாக நம்பப்படுகிறது. ஆதிசேஷன் பூமிக்கு அடியிலுள்ள அருள்மிகு நாகநாதரை வழிபடும்போடு ஏற்படும் இசைஒலிதான் அது என்றும் கூறப்படுகிறது. இதை சுனை முழக்கம் என்றும் அழைக்கிறார்கள். ஆடிமாத ஆடிப்பூரத் திருவிழா 9 ஆம் நாள் தேரோட்டம் உள்பட 10 நாட்களும், புரட்டாசி மாதம் நவராத்திரி, விஜயதசமி, அம்புபோடுதல் போன்ற திருவிழாக்களும், ஐப்பசி மாதம் 6 ஆம் நாள் கந்தர்சஷ்டி உற்சவமும், கார்த்திகை மாத தீபத்திருவிழாவும், மார்கழி கந்தர்சஷ்டி உற்சவமும், கார்த்திகை மாத தீபத்திருவிழாவும், மார்கழி மாதம் 10 நாட்கள் ஆருத்ரா தரிசனம் மற்றும் திருவாதிரை உற்சவங்களும் இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களாகும்

Friday, December 16, 2011

தாஜ்மஹால்


அகில உலக புகழ் தாஜ்மஹால் நீண்ட நெடிய வரலாற்றுச் சரித்திரம் கொண்டது. ஆசியாவில் இற்றைக்கு 350 வருடம் முன்பு மிகப்பலமும் செழிப்புமுள்ள சாம்ராஜ்யமுடன் இதன் கதை பின்னியுள்ளது. நினைவு மண்டபத்தின் பிரமாண்ட வரலாற்று பின்னணியும் அற்புதமான கட்டிடக்கலையும் விபரிக்கமுடியாத அழகும் பின்வருமாறு (மிக சுருக்கமாக ) அமைகின்றது.

  • தாஜ் மஹால் முஹல சாம்ராஜ்யத்தின் பேரரசன் "ஷாஜஹான்" (Shāh Jahān) தனது காதலி , மனைவி, அரசி " மும்தாஜ் மஹால " (Mumtaz Mahal) இன் ஞாபகார்த்தமாக நிறுவிய நினைவாலயம்.




  • இது இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றான உத்தர் பிரதேஷ்(Uttar Pradesh) மாநிலத்தின் அக்ரா(Agra) நகரில் அமைந்துள்ளது.




  • தாஜ் மஹால் (Taj Mahal) 42 ஏக்கர் நிலப் பகுதியில் மிகவும் அரிதான வெள்ளை மாஃபிள் கல்களால் 1631 ம்-1653ம் ஆண்டிற்கு இடைப்பட்ட 22 வருட காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது.




  • கட்டிடம் கட்டப்பட்ட காலப்பகுதியில் அதி நுட்பமுடைய சுமைகாவிகள் , பொறிகள் இவற்றுடன் 22,000 வேலையாட்கள் , ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் , பல நிபுணர்களும் இரவுபகலாக பயன்படுத்தப்பட்டார்கள் .




  • இந்த மாபெரும் கட்டிடத்தின் அடித்தளம் 186 அடி சதுரமான பரப்பிலும் நிலத்தில் இருந்து 22 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதன்மையான கோபுரம் 186 அடியும் மற்றய நான்கு மூலைகளிலுமுள்ள கோபுரங்கள் 137 அடி உயரமும் உள்ளது.




  • முதன்மையான மேல் தூபி 10 மாடி கட்டிட உயரத்திற்கு சமமாகவும் பல சிறிய கற்களை கொண்டும் உருவாக்கியுள்ளனர். மேலும் இதன் மொத்த எடை 13,000 தொன் (2,000 யானைகள் எடை) என்பதுடன் எந்தவிதமான தூண் கட்டுமானத்திலும் தாங்கி இல்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும் YT.




  • தாஜ் மஹால் வெளிப்பகுதி முழுமையாக வெள்ளை மாஃபிள் கற்களாலும் உட்பகுதி 30 வித்தியாசமான நிறங்கள் கொண்ட கற்களின் கலை வேலப்பாட்டுடனும் அமைக்கப்பட்டுள்ளது YT.




  • அகில புகழ் பலவற்றிற்கு காரணமான இந்த கட்டிடம் பல ஆச்சரியமான கட்டிட நுணுக்கங்களையும் , கலைகளையும் , வடிவத்தினையும் கொண்டுள்ளது. இஸ்லாமிய மதத்தின் கட்டிட அமைப்புடன் பேரரசன் விருப்பின் படியான சமச்சீர் அமைப்பும் , வெள்ளை மாஃபிள் கட்டிடமும் , நீர்நிலையில் அதன் கறுப்பு வடிவான நிழல் தெறிப்பும் , கட்டிடத்தை சுற்றிவர நந்தவனம் என்பன நேர்த்தியாக கையாளப் பட்டுள்ளது YT.




  • ஆற்றம் கரையோரமாக கட்டப்பட்டுள்ள இந்த மகாகட்டிடம் நிலத்தின் அடியிலான பாதிப்புக்களை எதிர்கொள்ளும் விதத்தில் அபாரமான கட்டிட பொறியியல் நுட்பம் பாவிக்கப் பட்டுள்ளது YT. அத்துடன் ஆரம்பத்தில் இருந்த திட்டவரைவு எந்த ஒரு மாற்றங்களும் செய்யப்படாது முழுமையாக நிறைவு செய்யப்பட்டது என்பது கட்டிடத்தின் முழு திட்டமிடலை நிரூபிக்கின்றது.




  • தாஜ்மஹால் முகப்பில் "குறான்" வரிகள் பொறிக்கப்பட்டுள்ளது. முகப்பில் உள்ள இந்த புனித வரிகள் சாதாரண கண்களுக்கு ஒரே அளவில் (அடியில் இருந்து 30 அடிமேலான உயரத்திலும்) புலனாகும் அற்புத கலை நுணுக்கம் கையாளப்பட்டுள்ளது.




  • ஷாஜஹானுக்கு மூன்று மனைவியர் இருந்தபோதிலும் அதில் இரண்டாவது மனைவியாகிய முதாஜ் மீது அளவற்ற காதல் கொண்டிருந்தார். ஷாஜஹான் 16 பிள்ளைகளுக்கு தந்தையாகவும் அதில் 14 பிள்ளைகளுக்கு தாயாக முதாஜ் இருந்துள்ளார். அத்துடன் மும்தாஜ் தனது 14 வது பிள்ளையை பிரசவிக்கும் வேளையில் மரணத்தை தழுவிக்கொண்டாராம். மும்தாஜ் இறக்கும் முன்பதாக தனது இறுதி ஆசையாக ஷாஜ-ஹானிடம் கேட்டுக் கொண்டதுவே இந்த "தாஜ் மஹால்" YT.




  • அக்காலத்தில் உலகில் மிகப்பெரிய செல்வந்தரும் பேரரசருமான ஷாஜஹான் வரலற்றுடன் இருண்ட கதையும் சொல்லப்படுகிறது. அதாவது தாஜ் மஹால் கட்டி நிறைவு பெற்றதும் அங்கு வேலைசெய்த அனைவர் கைகள் வெட்டப்பட்டதாகவும் முதன்மை கட்டிட கலைஞர் சிரச்சேதம் செய்து கொல்லப் பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. ஏனெனில், இது மாதிரியான ஓர் நினைவாலயம் வேறு யாராலும் கட்டப்படுவதை தடுப்பதற்கு ஷாஜ ஹான் இட்டகட்டளை இது எனவும் சொல்லப்படுகின்றது YT.




  • ஷாஜஹான் கட்டளைப்படி அந்நாட்களில் தாஜ்மஹால் கட்டிட வரைபட உருவாக்கத்திலும் கட்டிட வேலைத்திட்டத்திலும் பல இந்துசமய நிபுணர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தார்கள். அத்துடன் இஸ்லாமிய சாயலும் இந்துக்கள் கைவண்ணமும் ஒன்றுசேர்ந்த இந்த அரிய கலைப்படைபின் பின்னால் பல கலைஞர்களின் பங்கு இருந்துள்ளது.




  • 1983ம் ஆண்டில் இருந்து ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான, கலாச்சார மையம் (UNESCO) இதனை உலக கலாச்சார சின்னமாக அறிவித்துள்ளது.




  • இந்த உலக அதிசையத்தினை பார்வையிட ஒவ்வொரு வருடமும் 3 மில்லியன் மேலான மக்கள் சென்று வருகின்றனர்.



  • மேலும் பலபல பெருமையும், புகழும், கதைகளும் சொல்லும் யமுனை நதிக்கரையோரம் அமைந்துள்ள தாஜ் மஹால் ஒரு உலக அதிசயமாகவும், காதல் சின்னமாகவும் , உலக கலாச்சார சின்னமாகவும் இருந்து வருகின்றது.

    Wednesday, December 7, 2011

    சிங்கப்பூர் சுற்றுலா

    சிறிய நாடானாலும் சீரிய வளர்ச்சியால் பெரிய அளவில் பேசப்படும் நாடு சிங்கப்பூர்.

    # 1. நீல வானைத் தொட நீளும் நீலக் கட்டிடம்




































    # 2. பறவைப் பார்வையில் பாலம்

    “ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் வந்திருந்தால் இந்த சாலைகள், மால்கள் இவை பிரமிப்பைத் தந்திருக்கக் கூடும். பெங்களூரில் மலிந்து விட்ட மால் கலாச்சாரத்தினாலும், பெருகி விட்ட ஜனத்தொகை மற்றும் ஐடி வளர்ச்சியால் ஊரைச் சுற்றி வளைந்தோடும் ரிங் ரோட்களினாலும், குறிப்பாகச் சமீபத்தில் சில்க் போர்ட் ஜங்ஷனிலிருந்து எலக்ட்ரானிக் சிடி ஜங்ஷனுக்கு பத்து நிமிடங்களில் பறக்க வைக்கும் ஃப்ளை ஓவர் போன்றவற்றாலும் அத்தகு ஆச்சரியம் ஏற்படவில்லை” என்ற போது சிங்கப்பூர்வாழ் நண்பர் “ஒரு வாரம் இருந்ததை வைத்தெல்லாம் எடை போடக் முடியாது” என வாதிட ஆரம்பித்து விட்டார்.

    அவர் வாதத்திலும் ஓரளவு நியாயம் இருக்கிறதுதான். ஒரு நாடு எத்தனை வளர்ந்தாலும் விதிமுறைகளை அமல்படுத்துவதில் அரசும் சரி, கடைப்பிடிப்பதில் மக்களும் சரி, காட்டுகிற அலட்சியப் போக்கு ஒன்றே பெரிய பெரிய வித்தியாசங்களை ஏற்படுத்தி விடுகிறதே. அந்த வகையில் நிமிர்ந்துதான் நிற்கிறது தன் கட்டிடங்களைப் போலவே இந்நாடும் எனத் தோன்றியது. இதோ அதோ என இழுத்துக் கொண்டிருந்த பெங்களூர் மெட்ரோ முழுமையாக செயல்பட ஆரம்பித்து விட்டது. இங்குள்ள மாதிரியான பராமரிப்பும் திட்டமிடலும் அரசின் பக்கமிருந்தும், சட்டத்தை மதிப்பதில் மக்கள் பக்கமிருந்தும் ஒத்துழைப்பு எப்படி இருக்குமென்கிற கேள்வி எழவே செய்கிறது.

    அனைவரும் போற்றுவதற்கு ஏற்றாற் போல சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்து வசதி மிக வசதியான ஒன்றாகவே உள்ளது. நகரின் எந்த மூலைக்கும் எளிதாகச் சென்று விடலாம். பிங்க் லைன், க்ரீன் லைன் என இரண்டு பாதைகளில் ஓடும் மெட்ரோக்களில் எங்கே ஏறி எப்படி மாறி செல்ல வேண்டுமென்பதை மிகத் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள் ஒவ்வொரு ஸ்டேஷன்களின் வாசல்களிலிலுமிருக்கும் வரை படத்தில். அதிலும் சென்று பார்க்க விரும்பி மெட்ரோ, மற்றும் பஸ்ஸிலுமாகப் பயணித்தோம் ஜுராங் பறவைகள் பூங்காவிற்கு.

    இரயில் நிலையங்களில் பயணிகள் கடைப்பிடிக்கும் ஒழுங்கு பாராட்ட வேண்டிய ஒன்று. மெட்ரோ பராமரிப்பும் சிறப்பு.


    # 3பயணிகள் முண்டியடிக்காமல் இறங்குபவருக்கு வழிவிட்ட பின்னரே ஏறுகிறார்கள். 20 வருடங்களுக்கு முன்னர் மும்பையில் வசித்த போது சபபர்ன் ரெயில்களில் பயணித்தது. பிறகு இப்போது சிங்கப்பூர் மெட்ரோவில். ஒவ்வொரு ஸ்டேஷன் வரவிருக்கையிலும் அறிவிப்பு செய்கிறார்கள். அதுவும் ஆட்சி மொழிகளான மலாய், மண்டரின்(சீனக் கிளை மொழி), ஆங்கிலம் இவற்றோடு தமிழிலும் அறிவிப்பு வருகையில் மகிழ்ச்சியாகவே இருந்தது. பக்கத்து மாநிலமேயானாலும் கர்நாடகத்தில் தமிழும், தமிழ் படங்களும், தமிழர்களும் சந்திக்கும் பிரச்சனைகள் மனதில் ஒரு கணம் வந்து சென்றது.

    வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்களுக்குத் தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நாலு வயது பொடியர்களிலிருந்து வயதானவர்வரை விதிவிலக்கின்றி அநேகம் பேர் மொபைலில் கேம் விளையாடியபடி இருக்கிறார்கள் பயணிக்கையில். “ஜப்பான் இரயில்களில் அத்தனை பேருமே தத்தமது மொபைலுக்குள் முகம் புதைத்திருப்பர். அதற்கு இங்கே தேவலாம்” என்றார் கணவர். இரயில் நிலையத்திலிருந்து வெளியேறியதும் பேருந்தைப் பிடிக்க வரிசையில் நின்று பொறுமையாகச் செல்லுகிறார்கள். பேருந்து ஓட்டுநருக்கு எழுபது வயதிருக்கலாம் போலிருந்தது (சென்டோஸா தீவிலும் பெரிய பேருந்துகளை சின்னப் பெண்கள் வெகு லாவகமாக ஓட்டினார்கள். அருகிலிருந்து கவனித்ததில் அவை ஆட்டோ கியர் என்பது புரிய வந்துது).

    நம் நாட்டில் வழக்கொழிந்து வரும் சைக்கிள் ரிக்‌ஷா(பெங்களூரில் நான் கண்டதில்லை) அங்கு இன்னும் புழக்கத்தில் இருப்பது ஆச்சரியம் அளித்தது:

    # 4 ‘அந்தக் கடையில ஃப்ரஷ் ஜூஸ் நல்லாருக்கும். குடிக்கிறீங்களா..?’



    உணவைப் பொறுத்தவரை ஷாப்பிங்கிற்கு மக்கள் முற்றுகையிடும் முஸ்தஃபா அருகே அமைந்த முருகன் இட்லி, சரவண பவன், ஆனந்த பவன், கோமளா விலாஸ் ஆகியவற்றில் நல்ல இந்திய சாப்பாடு கிடைக்கின்றன.

    # 5 இந்தக் கடையில சாப்பாடு நல்லாருக்கும்

    சரவண பவன் இருக்கும் அதே வரிசையில் இருப்பதே ஒரிஜனல் ‘முருகன் இட்லி’. (அதற்கு முந்தைய திருப்பத்தில் ‘முருகன் இட்லி’ எனும் போர்டுடன் ஈ ஓட்டிக் கொண்டிருந்த உணவகத்தை சந்தேகத்தின் பேரில் முதல்நாளே தவிர்த்தது நல்லதாயிற்று). ‘சுற்றிப் பார்க்கச் செல்லுமிடங்களில் சைவச் சாப்பாடு கிடைப்பது சிரமம். ஒவ்வொரு இடங்களில் நடக்கவும் பார்க்கவும் நிறைய நேரமெடுக்கும் ஆகையால் பசி தாங்க பழங்கள், பிஸ்கெட், தண்ணீர் இவற்றை பையில் எடுத்துச் செல்வது நல்லது’ என்றார் செல்லும் முன்னரே தோழி ஒருவர். தண்ணீர் மற்றும் எனது கேமரா, லென்ஸுகள் எடையே சில கிலோ எடை வந்து விடுவதால் எடுத்து வருபவர்களுக்கு[:)] மேலும் சுமையாகி விடுமே என நான் அந்த ஆலோசனையை செயல்படுத்தாது விட்டதற்கு ஓரிடத்தில் மட்டும் வருந்த நேரிட்டது. ஜூராங் பார்கில் சுற்றிக் களைத்து அடுத்து நேராக நைட் சஃபாரி செல்ல வேண்டியிருந்த சூழலில் அங்கிருந்த உணவகத்துக்குள் நுழைந்தால் சைவ உணவு எதுவுமே இல்லை. ப்ரெட் பட்டர் ஜாம் மற்றும் பழங்கள் எம் மேல் இரக்கம் காட்டின. சிறுகுழந்தைகளை அழைத்துச் செல்லுபவர்கள் என் தோழி சொன்னதைப் பின்பற்றுவது நலம்.
    ***

    # 6 ஆன்டர்சன் பாலம்
    சிங்கப்பூர் நதியின் அக்கரையிலிருந்த இந்த ஆண்டர்சன் பாலத்தை எஸ்ப்ளனேட் பார்க்கிலிருந்து படமாக்கினேன். எஸ்ப்ளனேட் பூங்காவின் ஒரு மரத்தடியில் கனத்த மெளனத்தைப் போர்த்திக் கொண்டு நிற்கிறது இந்தியன் நேஷனல் ஆர்மி(INA) சிப்பாய்களுக்கான நினைவுச் சின்னம்.

    # 7. நேதாஜி எழுப்பிய அதே இடத்தில்...


    1945-ல் இரண்டாம் உலகப் போரில் உயிர்நீத்த சிப்பாய்களின் நினைவாக ஜூலை எட்டாம் தேதி சுபாஷ் சந்திர போஸ் இங்கு அடிக்கல் நாட்டி நினைவுச்சின்னம் ஒன்றை எழுப்பியிருந்தார். ஒற்றுமை, நம்பிக்கை, தியாகம் எனும் கொள்கைகளும் அதில் பொறிக்கப்பட்டிருந்தன. ஆனால் அப்போது சிங்கப்பூரை ஆக்ரமித்த மவுண்ட்பேட்டனின் படை அவரது உத்திரவின் பேரில் அதைத் தகர்த்து விட்டது. பின்னர் சிங்கப்பூரின் நேஷனல் ஹெரிடேஜ் போர்ட் 1995ஆம் ஆண்டு சிங்கப்பூர்வாழ் இந்தியர் அளித்த நிதியுதவியுடன் இப்போதை நினைவுச் சின்னத்தை எழுப்பியிருக்கிறது.

    எஸ்ப்ளனேட் பார்க்கில் பழைய உச்சிநீதி மன்றம் எதிரே சாலையைப் பார்த்து அமைந்திருக்கிறது முதலாம் உலகப் போரில் உயிர்நீத்த சிப்பாய்களுக்கான நினைவுச்சின்னம். இதையடுத்த படத்தில் இருப்பதன் முன் பக்கமே இது. அகன்ற நினைவாலயத்தை இரண்டு பக்கமும் வாகனங்கள் நின்றிருந்தபடியால் இப்படி எடுக்க வேண்டியதாயிற்று.

    # 8. முதலாம் உலகப்போர் நினைவுச் சின்னம்



    # 9. இரண்டாம் உலகப்போர் நினைவுச் சின்னம்

    # 10. சிவிலியன் வார் மெமோரியல் பார்க்இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய ஆக்ரமிப்பின் போது உயிரிழந்த பொதுஜனங்களின் நினைவாக எழுப்பப்பட்டது.

    இருபத்தியோராம் நூற்றாண்டினுள் நுழைந்த பின்னும் யுத்தம் இல்லாத ஒரு பூமியை நாம் இன்னும் உருவாக்கவில்லை என்பது வேதனையான விஷயம்.

    ***

    # 11. ஆர்மீனியன் சர்ச்

    சிங்கப்பூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் இந்த அமெரிக்க தேவாலயம் இந்நாட்டின் பல முக்கிய கட்டிடங்களை நிர்மாணித்த George Drumgoole Coleman என்பவரின் மாஸ்டர் பீஸ் என்றே கருதப்படுகிறது.1835-ல் கட்டப்பட்ட இதுவே சிங்கப்பூரின் இரண்டாவது தேவாலயம் என்பதும் குறிப்பிடத் தக்கது.

    [படங்கள் 10,11 மற்றும் கீழ்வரும் 12 ஆகியன விரைந்து கொண்டிருந்த வாகனத்திலிருந்து படமாக்கப்பட்டிருப்பதை கூர்ந்து கவனித்தால் புலனாகும். பகிர்ந்திடும் ஆவலில் பதிந்துள்ளேன்.]# 12. கொடி பறக்குதுசிங்கப்பூரின் சுதந்திர தினம் முடிந்த சில தினங்களில் சென்றிருந்தோம். அநேகமாக அத்தனைக் கட்டிடங்கள், குடியிருப்புகளின் மாடிகள் என எங்கும் தேசியக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன, சென்றிருந்த தியான் ஹாக் கெங் சீனக் கோவில் உட்பட.

    # 13. சீனக் கோவில்
    இந்தக் கோவிலிலும் உள்ளே செல்லுகையில் இடது பக்கதிலும் திரும்பி வருகையில் வலது பக்கத்திலும் வாகனம் நின்றபடியால் சாலையின் மறுபுறமிருந்து முழுத்தோற்றத்தை எடுக்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டியதாயிற்று. இதன் வெளிக்கூரை, உட்கூரை மற்றும் உள்ளிருந்த தெய்வங்கள் குறித்துத் தனிப் பதிவாக பிறிதொரு சமயம் பகிர்ந்திடுகிறேன். ஒரு காலத்தில் மீனவக் கிராமமாக இருந்ததை இப்போதும் நன்றியுடன் தங்கள் அடையாளமாகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் சிங்கப்பூரின், மீனவரைக் காக்கும் மாஜூ(mazu) மாதாவே இக்கோவிலில் பிரதான தெய்வம்:

    # 14. கடலன்னை மாஜு


    சீன நம்பிக்கைகள் பல இடங்களில் கடைப்பிடிக்கப் படுவதைக் காணமுடிந்தது. பாம்பினை கழுத்தில் அணிந்து கொண்டால் அதிர்ஷ்டமும் நலமும் பெருகும் என நம்புகிறார்கள். வேறு காரணம் இருப்பின் அறிந்தவர் பகிர்ந்திடுங்கள். பொது இடங்களில் (மெர்லயன் பார்த்து விட்டு வாகனத்துக்குத் திரும்பும் வழியில்) இதற்கென்றேப் பாம்பைக் கொண்டு வருகிறார்கள். கூடவே ராஜயோகம் வருமெனச் சொல்லாமல் சொல்லவோ என்னவோ பளபளவெனத் தொப்பியும் கொடுக்கிறார்கள் இப்படி:

    # 15. “யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே..”



    கீழ் வருவது செண்டோஸா தீவின் அண்டர்வாட்டர் உலகின் வெளிப்புறமிருந்த தோட்டத்தில்:

    # 16. “இளங்கன்றுகள் நாங்க பயமறியோம

    Share

    Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites