இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, November 12, 2011

வாழைத் தண்டு வடகம் அலேக்

வடகம் தயாரிப்பது எளிதான வேலை. விதவிதமான சுவை மற்றும் வடிவங்களில் தயாரிக்க கற்றுக்கொண்டால் வடகம் தொழிலில் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை கவுண்டம்பாளையம் ஜெய் நகரை சேர்ந்த ரம்யா. அவர் கூறியதாவது: எனக்கு திருமணமாகி 5 ஆண்டு ஆகிறது. எனது தந்தை 20 ஆண்டுகளாக வடகம் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். திருமணமான பின்னர், நான் இந்த தொழிலை புகுந்த வீட்டில் செய்யத் தொடங்கினேன். முதலில் வாரத்தில் 2 நாள் மட்டும் வடகம் தயாரித்து வந்தேன். இப்போது, 5 நாள் தயாரிக்கிறேன். வடகத்தை எனது கணவர் கடைகளுக்கு சப்ளை செய்கிறார். வீட்டு வேலையோடு இதை செய்வதால் கஷ்டமாக இல்லை. தளவாட சாமானுக்கு ]2 ஆயிரம், உற்பத்தி பொருட்களுக்கு ]8 ஆயிரம் என ]10 ஆயிரத்தில் தொழிலை துவக்கினேன். உற்பத்தியில் பாதியை தெரிந்தவர்களுக்கும், மீதமுள்ளவற்றை கடைகளுக்கும் விற்பதால் மாதம் ]5 ஆயிரம் லாபம் கிடைக்கிறது.

வடகத்தை வெயிலில் காய வைக்கும் போது தண்ணீரோ, மழைத் துளியோ பட்டால் பூஞ்சை பிடித்து விடும். மழைக் காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். வடக தட்டில் ஊற்றப்பட்ட மாவை எடுக்க எண்ணெய் தடவிய கையை பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு தயாரித்தால் ஒரு ஆண்டுக்கு வடகம் கெடாது. வடகத்தை எந்த எண்ணெயிலும் பொரிக்கலாம். அதை காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைத்தால் ஒரு வாரம் நமத்து போகாமல் மொறுமொறுவென இருக்கும்.
இவ்வாறு ரம்யா கூறினார்.

மார்க்கெட்டிங்

காய்கறி விலை உயர்வு, பரபரப்பான வாழ்க்கை முறையில் சமைக்க நேரமின்மை ஆகிய காரணங்களால் வடகம் வீட்டு உணவில் அதிகம் இடம் பிடிக்கிறது. பாரம்பரிய வடகத்தில் மாற்றங்களை புகுத்தி தயாரிப்பதால், அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதனால் வடகத்துக்கு நிரந்தர விற்பனை வாய்ப்பு உள்ளது. அக்கம்பக்கம் இருக்கும் வீடுகளுக்கு வாடிக்கையாக விற்கலாம். கடைகளுக்கும் சப்ளை செய்யலாம்.

மாதம் 18 ஆயிரம்

வீட்டில் பகுதி நேர தொழிலாக மேற்கொள்ள இலை வடக ஸ்டீல் தட்டு மற்றும் ஸ்டாண்ட் செட் ஒன்று ]300 வீதம் 6 ஸ்டாண்ட்டுக்கு]1800 (மரத்தால் செய்த ஸ்டாண்ட் என்றால் ]600 செலவாகும்). முறுக்கு பிழியும் அச்சு ]150, அலுமினிய குண்டா ]1000 என தளவாட சாமான்களுக்கு அதிகபட்சம் ]3000 ஆகிறது. முழு நேரத் தொழிலாக மேற்கொள்ள கூடுதலாக ]9 ஆயிரம் முதலீடு வேண்டும். வீட்டில் இருந்தபடி தொழிலை மேற்கொண்டால் தினசரி 4 கிலோ வடகம் உற்பத்தி செய்யலாம். முழு நேர தொழிலாக செய்தால் 12 கிலோ வடகம் உற்பத்தி செய்யலாம். ஒரு கிலோ வடகம் உற்பத்தி செய்ய உற்பத்தி பொருட்கள் உள்பட ]70 செலவாகும். ஒரு மாதத்துக்கு ]9 ஆயிரம் உற்பத்தி செலவாகிறது. முழு நேர தொழிலாக செய்ய ]27 ஆயிரம். 100 கிராம் வீதம் பாக்கெட் போட்டு வீடுகளுக்கு விற்றால் கிலோவுக்கு ]120 கிடைக்கும். கடைகளுக்கு சப்ளை செய்தால் ]100 முதல் ]110 வரை விற்கலாம். கிலோவுக்கு அதிகபட்ச லாபம் ]50, குறைந்தபட்சம் ]25. பகுதி நேர தொழிலில் மாதம் அதிகபட்ச லாபம் ]6 ஆயிரம். குறைந்தபட்சம் ]3 ஆயிரம் வரை கிடைக்கும். முழு நேர தொழிலாக மேற்கொண்டால் அதிகபட்சம் ]18 ஆயிரம், குறைந்தபட்சம் ]9 ஆயிரம்.

கட்டமைப்பு தேவைகள்

சமையல் அறை, திறந்தவெளி அல்லது மொட்டை மாடி போதும். அடுப்பு, கிரைண்டர், வடக தட்டு, வடக தட்டு ஸ்டாண்ட், முறுக்கு அச்சு, குச்சி வடக அச்சு, குண்டா ஆகியவை தளவாட சாமான்கள். பச்சரிசி, பச்சரிசி மாவு, ஜவ்வரிசி, ஜவ்வரிசி மாவு, உப்பு, சீரகம், பெருங்காயம், வர மிளகாய், வடகத்தில் விதவிதமான வகைகளை உருவாக்க வாழைத் தண்டு, சின்னவெங்காயம், பூண்டு, தக்காளி, புதினா, கொத்துமல்லி போன்ற உற்பத்தி பொருட்கள்.


தயாரிப்பது எப்படி?

இலை, ஜவ்வரிசி, முறுக்கு, குச்சி என வடகத்தில் பல வகைகள். இலை வடகம் மற்றும் ஜவ்வரிசி வடகத்தில் காரம், பூண்டு, தக்காளி, புதினா, மல்லி, வெங்காயம் கலந்து சுவையாய் வடகங்கள் தயாரிக்க முடியும்.

இலை வடகம்

4 கிலோ பச்சரிசியை ஊற வைத்து நைசாக அரைக்க வேண்டும். உப்பு 150 கிராம், தூளாக்கப்பட்ட  சீரகம், பெருங்காயம் தலா 25 கிராம், காரம் தேவைப்பட்டால் அரைத்த மிளகாய் 50 கிராம் ஆகியவற்றை மாவில் கலக்க வேண்டும். பின்னர் இலை வடக தட்டில் தோசை போல் ஊற்றி, ஸ்டாண்டில் பொருத்தி, குண்டாவில் ஆவியில் வேக வைக்க வேண்டும். வெயிலில் 7 மணி நேரம் காய வைத்தால் இலை வடகம் ரெடி.

ஜவ்வரிசி வடகம்

தண்ணீரை கொதிக்க வைத்து 4 கிலோ ஜவ்வரிசியை அதில் கொட்ட வேண்டும். முக்கால் மணி நேரம் கிளற வேண்டும். உப்பு 150 கிராம், அரைத்த 150 கிராம் பச்சை மிளகாய் அல்லது 150 கிராம் காய்ந்த மிளகாய் போட்டு கிளற வேண்டும். 15 நிமிடம் மூடி, பின்னர் வெயிலில் மூன்று நாள் காய வைத்தால் வடகம் தயார்.

வாழைத்தண்டு வடகம்

ஒரு அடி நீளம் கொண்ட 4 வாழைத் துண்டுகளை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். மோர் கலந்த தண்ணீரில் ஊற வைத்து, அதில் குச்சியை விட்டு கிளறி நாரை அகற்ற வேண்டும். கொதிக்கும் நீரில் நன்றாக அரைத்த காய்ந்த மிளகாய் 150 கிராம், உப்பு 150 கிராம் மற்றும் வாழைத் தண்டு போட்டு வேக வைக்க வேண்டும். வாழைத் தண்டு நன்றாக வெந்தவுடன் 4 கிலோ பச்சரிசி மாவை சிறிது சிறிதாக தூவ வேண்டும். பேஸ்ட் பதத்துக்கு வந்தவுடன் தீயை அணைத்து 8 மணி நேரம் ஆற வேண்டும். பின்னர் வெயிலில் காயவைக்க வேண்டும்.

வெங்காய வடகம்

வாழைத்தண்டு வடக செய்முறையில் வாழைத் தண்டுக்கு பதிலாக இரண்டு கிலோ சின்னவெங்காயம் பயன்படுத்த வேண்டும்.

முறுக்கு வடகம்

கொதிக்கும் நீரில் நான்கு கிலோ பச்சரிசி மாவு, அரைத்த மிளகாய் 150 கிராம், உப்பு 150 கிராம் சேர்த்து கெட்டியாக கிளற வேண்டும். அவற்றை முறுக்கு பிடியில் (அச்சு) போட்டு பிழிந்து, காய வைத்தால் முறுக்கு வடகம் ரெடியாகி விடும். குச்சி வடகத்திற்கும் இதே பக்குவம். அச்சு மட்டும் வேறு.

3 comments:

அம்மா நன்றி சாம்பார் பொடி ரசப்பொடி போன்றவை ,மேலும் ஊறுகாய் வகைகள் தெரிவிக்க வேண்டுகின்றேன் வாழ்க வளமுடன் என் கண்கள்

நீரின் அளவு தெரிவிக்க வேண்டுகின்றேன் நன்றி

தாங்கள் வருகைக்கு நன்றி .

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites