இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, February 27, 2012

பூசு மஞ்சள் தயாரிப்பது எப்படி

பருவ வயதில் அடியெடுத்து வைக்கும்போதே பரு...
முகம், கை, கால் என உடலெங்கும் தேவையற்ற ரோம வளர்ச்சி...
பொலிவோ, பள பளப்போ இல்லாத சருமம்...
இன்றைய தலை முறைப் பெண்கள் பலருக்கும் இருக்கும் இந்தப் பிரச்னைகள், அந்தக் காலத்துப் பெண்களுக்கு இருந்ததில்லை. காரணம், தினசரி வாழ்க்கையில் அவர்கள் பின்பற்றிய மஞ்சள் பூசிக் குளிக்கிற பழக்கம். காணாமல் போன பல பாரம்பரியங்களில் மஞ்சள் தேய்த்துக் குளிப்பதும் ஒன்றாகி விட்டது. மஞ்சள் மிகச்சிறந்த கிருமி நாசினி எனத் தெரிந்தாலும், அதைத் தொடத் தயாராக இல்லை இன்றைய இளம் பெண்கள்.
‘‘இளம் பெண்கள் மஞ்சளைத் தவிர்க்கக் காரணம், பளீர்னு தெரியற அந்த கலர். பார்க்கிறவங்க கிண்டல் பண்ணுவாங்களேங்கிற தயக்கம்தான் அவங்களைத் தடுக்குது. கஸ்தூரி மஞ்சள் தடவினா, மஞ்சள் பூசினதே தெரியாது. சரும நோய்களும் அண்டாது. இதை எடுத்துச் சொல்லி, பலரை பூசிக்க வச்சேன். இப்ப வாடிக்கையாளர்கள் லிஸ்ட்ல எனக்கு இளம்பெண்கள் அதிகம்’’ என்கிறார் கண்ணம்மா. குழந்தைகளுக்கும் இளம் பெண்களுக்குமானது, கொஞ்சம் வயதான பெண்களுக்கானது என இரண்டு வித பூசு மஞ்சள் தூள் தயாரிக்கிறார் இவர். விருப்பமுள்ளோருக்குக் கற்றுக் கொடுத்து, தொழில் தொடங்க வழிகளையும் காட்டுகிறார்.

எப்படி ஆரம்பம்?
‘‘பூர்வீகம் மதுரை. வீட்லயே உலக்கைல மஞ்சள் இடிச்சுதான் உபயோகிச்சு பழக்கம். சென்னைக்கு வந்தும்கூட அங்கருந்து மஞ்சள் தூள் இடிச்சு கொண்டு வந்துதான் யூஸ் பண்ணிட்டிருந்தேன். கடைகள்ல வாங்கற மஞ்சள் தூள் சருமத்துல எரிச்சலை உண்டாக்கறதாகவும், வெள்ளைப்புள்ளிகளை ஏற்படுத்தறதாகவும் நிறைய பேர் சொல்லக் கேட்டிருக்கேன். அப்ப நாங்க தயார் பண்ணினதை சாம்பிள் கொடுத்துப் பார்த்ததுல, எல்லாருக்கும் திருப்தி. அப்படியே ஆளாளுக்கு ஆர்டர் கொடுக்க, அதையே பிசினஸா ஆரம்பிச்சாச்சு.’’
என்ன ஸ்பெஷல்?
‘‘பிறந்த குழந்தை நிறம் கம்மியா இருந்தாகூட, கஸ்தூரி மஞ்சள் தேய்ச்சுக் குளிப்பாட்டுவாங்க கிராமங்கள்ல. தேமலைப் போக்கி, கரும்புள்ளி, வெண்புள்ளிகளை நீக்கி, சரும நோய்கள் வராமத் தடுக்கிற குணம் அதுக்கு உண்டு. ‘மஞ்சள் பூசணும்... ஆனா, அது தெரியக்கூடாது’னு நினைக்கிற இளம் பெண்களுக்கு ஏற்றது. கூடவே வெட்டிவேர், பூலாங்கிழங்கு சேர்த்து அரைக்கிறதால, ரோம வளர்ச்சியும் இருக்காது.’’
பிசினஸ் வாய்ப்பு, லாபம் மற்றும் பயிற்சி?
‘‘ஒரு நாள் பயிற்சில நல்ல மஞ்சளைத் தரம் பிரிச்சுக் கண்டுபிடிக்கிறது, பதப்படுத்தி, என்னென்ன சேர்த்து அரைக்கிறது, எப்படி மார்க்கெட் பண்றதுங்கிற விவரங்களைக் கத்துக்கலாம். கட்டணம் 150 ரூபாய். 100 கிராம் 22 ரூபாய் வரைக்கும் விற்கலாம். ஒரு கிலோவுக்கு 70 ரூபாய் வரைக்கும் லாபம் நிச்சயம். 1 ரூபாய் பாக்கெட்டா போட்டு கடைகள், கோயில்கள்ல கொடுத்தாலும் லாபம் அதிகம் பார்க்கலாம்.’’

-கண்ணம்மா

Contact: 91-44-42209191 Extn:2234

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites