இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label சுய தொழில். Show all posts
Showing posts with label சுய தொழில். Show all posts

Thursday, December 13, 2012

வாழ்வு தந்த டீ !



ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் பெண் இருக்கிறாள் என்பார்கள். உண்மைதான்... நேருவின் வெற்றிக்குக் காரணமான ஆனந்தி நேருவின் வாகனத்தின் பில்லியனியேலே இருக்கிறார்... அவருடைய உழைப்பின் வடிவத்தில்! வேலை செய்யவேண்டுமென்றால் பெரிதாகப் படித்திருக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை... நமக்குத் தெரிந்த வேலையைச் செய்தே சம்பாதிக்க முடியும் என்பதற்கு ஆனந்தி ஓர் அடையாளம்! டீ வியாபாரம்தான் இவர்களுடைய தொழில்!

 
நாம் அவரைச் சந்திக்கச் சென்ற நேரத்தில் நேரு தன் பைக்கில் டீ பிளாஸ்க்குகளைக் கட்டிக் கொண்டிருந்தார். ஆனந்தி அவருக்கு உதவி செய்துகொண்டிருக்கிறார். `டீ` பிசினஸில் கணவரோடு கைக்கோர்த்து செய்யும் ஆனந்தி ஒரு கோப்பை தேனீரை நமக்கும் கொடுத்துவிட்டுப் பேச ஆரம்பித்தார்.

"எங்களுக்கு சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில இருக்கிற ஊத்தங்கரை கிராமம். நான் எட்டாவது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். அதுக்குமேல வீட்டுல படிக்க வைக்கலை. என் கணவர் நேரு... அவரும் பெரிய படிப்பெல்லாம் படிக்கலை. விவசாயம்தான் எங்களோட தொழில். கணவரும் நானும் பக்கத்து பக்கத்து ஊர்தான். பெத்தவங்க பார்த்து வைத்த திருமணம்தான் எங்களோடது. திருமணமாகி இரண்டு வருடங்கள் எங்க கிராமத்திலதான் இருந்தோம். சென்னை வருவோம்ன்னு நினைச்சுகூட பார்த்ததில்லை.

என்னோட தம்பி ஐ.டி.ஐ. படிச்சுட்டு சென்னையில் வேலை பார்த்துட்டு இருந்தாரு. திடீரென்னு அவருக்கு ஆக்சிடெண்ட் ஆகி கை அடிபட்டதால் அவருன்னால வேலைக்கு போகமுடியலை. அவரை பார்க்கிறதுக்கு நானும் என் கணவரும் சென்னை வந்தோம். அப்பதான் டீத்தூள், காபித்தூள் பாக்கெட் போட்டு வித்துகிட்டு இருந்தாரு. தொழில் எப்படி போகுதுனு கேட்டப்ப நஷ்டமா போறதா சொன்னாரு. அப்ப எங்களால் எதுவுமே செய்ய முடியலை. ஊ_ருக்குப் போயிட்டேன். என் கனவர் இங்கேயே இருந்து வேலை தேடினார். அப்போதான் நாமே ஏதாவது தொழில் செய்யலாமே தம்பிகூடச் சேர்ந்துனு சொன்னார். மறுபடியும் சென்னை வந்தேன். என்ன செய்யலாம்னு யோசிச்சோம்.

அப்போதான், தம்பி செய்யும் தொழிலான டீத்தூள், காபித்தூள் போடுறதுக்கு பதிலாக ஏன் டீ, காபியே போட்டு கொடுக்ககூடாதுன்னு தோணுச்சு. தம்பியும் அதையே பண்ணலாம் எனக்கு தெரிந்த நண்பர்கள் மூலம் ஆபீஸ்களுக்கு போய் கொடுக்கலாம் என்று சொன்னார். ஆரம்பித்தில் ஆபீஸ்களுக்கு போய் குடித்து பார்க்கச் சொல்லி டீ குடுத்தோம். அதன்பின் அவர்கள் கேட்டபிறகு ஆர்டர் எடுத்தோம். இப்படித்தான் இதை ஒரு தொழிலாக தேர்ந்தெடுத்தோம்..." என்றார் ஆனந்தி.

ஆனந்தியின் நாள் அதிகாலையிலேயே தொடங்கிவிடுகிறது.
"காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து வேலை செய்ய ஆரம்பித்திடுவேன். நான் டீ போட்டு தந்துவிடுவேன். கணவரும் தம்பியும் போய் கொடுத்துவிட்டு வருவார்கள். இப்படிதான் படிப்படியாக ஒவ்வொரு ஆபீஸாக கொடுக்க ஆரம்பித்தோம்... இன்று ஒரு நாளைக்கு நான்கு ஷிப்டாக கிட்டத்தட்ட ஏழு அலுவலகங்களுக்கு டீ சப்ளை செய்றோம். இப்பொழுது கணவரும் தம்பியும் வேறுவேறு இடங்களில் ஆர்டர் எடுத்து டீ கொடுத்து கொண்டிருக்கிறார்கள். மற்றபடி எல்லாம் சேர்ந்துதான் செய்கிறோம். ஆரம்பத்தில் நான் ஒருத்தியாகத்தான் எல்லா வேலையும் செய்தேன். காலையில் ஐந்து மணிக்கு எழுந்தால் இரவு தூங்க செல்வதற்கு பனிரெண்டு மணியாகிவிடும். சில சமயங்களில் நைட் ஷிப்டில் இருக்கிறவர்கள் கேட்டால்கூட கொண்டுபோய் கொடுப்போம். ஓய்வில்லாத வேலை என்று மனது ஒரு ஓரமாக நினைத்தாலும். சொந்தத்தொழில் என்கிற சந்தோஷம் இருக்கு..." என்றார்.

ஆனந்தி மனதில் இந்த சந்தோஷம் இருந்தாலும் ஊர் அவர்களை வேறு மாதிரியாகத்தான் பார்த்திருக்கிறது.
"சென்னை வந்ததிலிருந்து இன்றுவரை இந்த தொழிலைத்தான் செய்கிறோம். ஆரம்பத்தில் எங்களைப் பார்த்து சிலர் ரொம்பக் கேவலமாப் பேசுனாங்க...`டீ கிளாஸ் கழுவுற வேலைதானன்னு` சில பேர் திட்டக்கூட செய்தாங்க. ரொம்ப வருத்தமா இருந்தது. ஆனால், நாங்க அப்படி நினைக்கலை. அதையெல்லாம் தாண்டி இன்னைக்கு நாங்க நல்லா வாழ்ந்துட்டு இருக்கோம். ஏன்னா நாங்க யாரையும் ஏமாத்தலை யாரோட உழைப்பிலும் வாழலை. எங்களுக்கு தெரிஞ்சதவைத்து சொந்தகாலில் நிக்கிறோம். அப்படி பேசினவங்க முன்னாடி கடவுள் எங்களை தன்னம்பிக்கையோடதான் வைத்திருக்கிறான். முன்னாடி வீட்டோட கிச்சனில்தான் டீ போடுவோம். இப்பொழுது டீ ரூம் தனியாவே வைச்சுருக்கிறோம். அதுமட்டுமில்லை, இதுநாள்வரை நான் ஒருத்தியாதான் டீ போட்டுகிட்டு இருந்தேன். இப்பொழுது டீ போடுவதற்குன்னு நாலு பேரை வேலைக்கு வைத்திருக்கோம். உழைப்புகேற்ற ஊதியத்தை எங்களுக்கு இறைவன் தந்துக் கொண்டிருக்கிறான். எங்க மேல நம்பிக்கையாலும் உழைப்பாலும் எங்க தொழிலில்ல எந்தக் குறையும் இல்லை" என்ற ஆனந்தியின் முகப் பொலிவில் கோடிகளை வென்ற குதூகலம் தெரிந்தது.

அது உழைப்பில் விளைந்தது... அழகாகவே இருந்தது!

Friday, November 23, 2012

சுத்தகரிப்பு சாதனங்கள்

சுத்தகரிப்பு சாதனங்கள்
    • சுத்திகரிப்பில் மூன்று நிலைகள் உள்ளன.
நிலை 1
    • முன் நிலைப்படுத்துதல் மற்றும் முன் தூய்மைப்படுத்துதல்
முன்நிலைப்படுத்துதல்
    • அறுவடைக்குப் பின் செடியின் மற்ற பாகங்களிலிருந்து விதையைப் பிரித்து எடுத்தல்
எ.கா ஓடு நீக்குதல்
முன்தூய்மைப்படுத்துதல்
    • தேவையற்ற பொருட்களான குப்பை, கல், மண்கட்டி போன்ற எடையுள்ள (அ) எடைக் குறைந்தவாறு பிரித்தெடுத்தல், கை அறுவடையோ (அ) தூற்றி தூய்மைப்படுத்திய விதைகளுக்கு இந்த நிலை அவசியமில்லை.
இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படும் சாதனங்கள்
தூய்மைப்படுத்தும் சல்லடை
    • பெரிய அளவுள்ள தேவையற்ற பொருட்களை இக்கருவி தூய்மைப்படுத்தும். இதனில் ஒரு சல்லடை (அ) இரு சல்லடை இருக்கும். இக்கருவியில் பெரிய துவாரங்களுடன் அதிரக்கூடிய (அ) சுழலக்கூடிய பகுதியில் கரடு முரடான விதைகள் சலித்துத் தூய்மையாகிவிடும்.
முடி உதிர்க்கும் கருவி
    • இக்கருவியின் எஃகுவினால் ஆன பேரிகையினுள் கிடையாது. கிளையுடன் அடிக்கும் பாகம் ஒன்று இருக்கும். விதைகளை இதனுள் செலுத்தும் போது அவை ஒன்றோடு ஒன்று உரசி அவற்றின் மேலுள்ள விதைகளை பிரிப்பது (ஓட்ஸ்), முடியை உதிர வைப்பது (வால் கோதுமை), கதிரடிப்பது (கோதுமை), பூச்செதில் மற்றும் முடியை உதிர வைப்பது, உமி நீக்குதல் மற்றும் விதையை பளபளக்கச் செய்தல் போன்ற செயல்களை செய்கிறது.
உமி நீக்கும் கருவி - மேல் தோல் நீக்கும் கருவி
    • இதனில் விதைகளை உரச வைக்கும் சொரசொரப்பான இரு இரப்பர் பகுதிகள் இருக்கும். உமி நீக்குதல் மற்றும் மேல் தோலைக் கீறி நீக்குதல் போன்ற பணிகள் ஒரே சமயத்தில் (அல்லது) தனியாக செய்ய முடியும்.
மக்காச்சோள உமி நீக்கும் கருவி
1. அதிகத் திறனுள்ள மின் செயல்பாட்டு கருவி - பெரிய அளவிலான விதைகளுக்கு
2. கைகளால் உமி நீக்குதல் - வல்லுநர் (அ) கரு விதை
நிலை 2
தூய்மைப்படுத்துதல்

இந்த நிலையானது காற்றை செலுத்துவது மற்றும் அதிரும் திரைகள் போன்றவற்றால் செயல்படுத்தப்படுகிறது. அனைத்து தரப்பு விதைகளுக்கும் இம்முறை பொருந்தும். தூய்மைப்படுத்தும் சல்லடை போன்ற அமைப்புள்ள இக்கருவி மேலும் நுட்பமானது. காற்றை தடுத்து தூய்மைப்படுத்தி பின்னரே வரையறைக்குட்பட்ட விதிகளின் படி கையாளவேண்டும். கருவியின் அளவு சிறியது, இரு திரைக் கொண்ட பண்ணை வடிவமைப்பு மற்றும் 7-8 திரைகள் கொண்ட பெரிய தொழில்துறை வடிவமை போன்றவை இருக்கும். இரு திரைகள் கொண்ட வடிவமைப்புகள், பண்ணைகள், வல்லுநர் மற்றும் ஆதார விதைகள் உற்பத்தி பணி மற்றும் ஆய்வுக்கூடங்களில் சிறிய அளவு விதைகளைக் கையாள உபயோகிக்கவேண்டும். அதிகபட்டக் கருவிகளில் இயற்பியல் தன்மைகளில் உள்ள வேறுபாடுகளைக் கொண்டே பிரிப்பது மேற்கொள்ளப்படுகிறது. காற்றை தடுக்கும் கருவியில் விதையின் அளவு மற்றும் எடையைக் கொண்டே பிரிப்பது விதையின் அளவு மற்றும் எடையைக் கொண்டே பிரிப்பது செயல்படுகிறது. மூன்று நிலைகளில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறுகிறது.
Air-screen cleaner
crippen cleaner-line full
காற்றை உறிஞ்சியிழுத்தல்
    • இதனில் எடைக்குறைந்த பொருட்கள் விதையிலிருந்து பிரிக்கப்படும்.
உதிர்தல்
    • இதனில் திரை துவாரங்களில் நல்ல விதைகளை உதிர வைத்தும், அதிக எடையுள்ள மற்ற பொருட்களை ஒரு தனித் துவாரம் மூலம் வெளிக்கொணர்தல் செய்யப்படும்.
தரம் பிரித்தல்
    • நல்ல தரமான விதைகள் திரைத் துவாரங்களின் மேல் கடந்து செல்லும் மற்றும் சிறிய பொருட்கள் வெளிக்கொண்டுவிடும்.
நிலை 3
தூய்மைப்படுத்துதல் மற்றும் தரம் பிரித்தல்

பண்ணையிலிருந்து கிடைக்கப்பெற்ற விதைகளில் உள்ள தேவையற்ற பொருட்கள், களை விதை மற்றும் பிற பயிர் விதைகள், பிற இரக விதைகள், வீண் விதைகள், சிதைந்த விதைகள் போன்றவற்றை நீக்கி தூய்மைப்படுத்துவதே தரமான விதை கிடைக்கப்பெறும் வழியாகும். புற அமைப்பின் வேறுபாடுகளைக் கொண்டு பலதரப்பட்ட விதைகளை பிரித்தெடுக்கலாம். புற அமைப்பின் தன்மைகளான விதைகளின் அளவு, எடை, நீளம், அமைப்பு, நிறம், மேல்பரப்பில் நய அமைப்பு, நீர்ம ஈர்ப்பு, மின் கடத்தும் திறன் போன்றவைகளை கருத்தில் கொள்ளலாம். விதையின் எந்தப்புற அமைப்பைக் கொண்டு எந்தவிதமான கருவியை உபயோகிக்கவேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். கீழ்க்கண்ட வரிசையில் தேர்ந்தெடுக்கப்பட்ட புற அமைப்பின் தன்மைகள் எவ்வகை விதைகளுக்கும் அதற்கு ஏற்ற கருவிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
பிரிப்பான் பெயர்பின்பற்றிய தன்மைபயன்பாடு
அதிர்வு பிரிப்பான்வடிவம் மற்றும் மேல்புற இளநயம்களை விதைகள் நீக்குதல்
சுழல் பிரிப்பான்வடிவம் (அ) சுழலும் திறன் அளவுசிதைந்த / பட்டையான மற்றும் சுருங்கிய விதைகளை நல்ல விதைகளில் பிரித்தல், கடுகு, சோயாபீன்ஸ், பட்டாணி போன்றவற்றை கோதுமை, ஆள்விதை, ஓட்ஸ் போன்றவற்றிலிருந்து பிரித்து எடுத்தல்.
தட்டு / பக்க விலக்கு கலன் பிரிப்பான்நீளம்கோதுமை, கம்பு, கடுகு, வால் கோதுமை போன்ற வேறுபட்ட விதைகளை ஓட்ஸ் சில் இருந்து பிரித்து எடுத்தல்
நிலை மின்னோட்ட பிரிப்பான்மின் தன்மைஎள் விதையிலிருந்து ஜான்ஸன் புல் விதை
மின்னணு நிறம் பிரிப்பான்நிறம் / வெளிர்ந்த நிறம்ஒத்த நிறமில்லாத விதைகளை பிரித்து எடுத்தல்.
காந்தப் பிரிப்பான்மேல்புற இனநயம் மற்றும் ஒட்டுதல்குதிரை மசால் மற்றும் Clover ஆகியவற்றிலிருந்து களை விதைகள் பிரித்து எடுத்தல்
உருளை ஆலைவடிவம் மற்றும் மேல்புற இளநயம்மிருதுவான Clover விதைகளை பிரித்தெடுத்தல்
ஒப்பு அடர்த்தி பிரிப்பான் (அ) கல் நீக்குவான்அடர்த்தி (அ) ஒப்பு அடர்த்திமோசமாக சிதைந்த, வீண் போன், பூச்சி தாக்குதலுக்கு உள்ளான பயிர் விதைகள் மற்றும் கற்களை நல்ல விதையிலிருந்து நீக்குதல்.
தரம் மேம்படுத்துதல்

விதைக்குவியலிலிருந்து கலப்படம் மற்றும் தூய விதைகள் போல் அளவு மற்றும் வடிவம் கொண்டுள்ளவற்றை காற்றுத் தடுத்து தூய்மைப்படுத்தும் கருவி மூலம் மேலும் தூய்மைப்படுத்துதல் வேண்டும். தேவைப்படும் அளவிற்கு பெரியதாகவோ (அ) சிறியதாகவோ இருக்கும் விதைகள், உடைந்த, சிதைந்த மற்றும் குறையுள்ள விதைகள் போன்றவற்றை இந்த இறுதி நிலை சுத்திகரிப்பில் நீக்குதல் வேண்டும்.
ஒப்பு அடர்த்தி பிரிப்பான்

இந்த முறை விதைகளின் எடை மற்றும் மேல்ப்புற தன்மை போன்றவற்றை ஒருங்கிணைத்து செயல்படுகிறது. மிதவை என்னும் கோட்பாட்டில் இயங்குகிறது. ஒரு விதைக்கலவையை சாய்வான துளையுள்ள மேஜையின் கீழ் தளத்தில் வைக்கவேண்டும். துளையுள்ள மேஜை பகுதியில் காற்றை செலுத்தும் போது, விதைகள் அடர்த்தியின் படி அடுக்குகளாக அமைந்து, குறைந்த எடையுள்ள விதைகள் மற்றும் தேவையற்ற பொருட்கள் கீழும், அதிக எடையுள்ள விதைகள் மேலும் பிரிந்து செல்லும். மேஜையை ஒரு அலைவு இயக்கம் கொடுத்தால் விதைகள் மிதந்து வேகத்துடன் செல்லும். எடைக் குறைந்த விதைகள் மிதந்து சென்று கீழ் நோக்கியும், எடை அதிகமுள்ள விதைகள் மேஜையில் ஒட்டிக்கொண்டு மேல் நோக்கியும் விடுவிக்கப்படும். இந்தக் கருவி ஒரே அடர்த்தியில் வேறுபட்ட அளவுக் கொண்ட விதைகளையும், ஒரே அளவில் வேறுபட்ட அடர்த்திக் கொண்ட விதைகளையும் பிரிக்கும்.
air-screen cleaner
12_gravitytable
பக்க விலக்கு கலன் பிரிப்பான்

விதைகளின் நீள அளவைக் கொண்டு இக்கருவி செயல்படுகிறது. இக்கருவியில் சற்றே சாய்வான கிடையான சுழலும் கலனும், அசையக்கூடிய பிரிக்கும் தட்டும் அமைந்திருக்கும். உள் பகுதியில் நெருங்கி அமைந்த அரைவட்டத் துளைகள் இருக்கும். சிறிய விதைகள் மையவிலக்கு விசை மூலம் துளைகளுக்குள் சென்று பிரியும். பெரிய விதைகள் கலனின் நடுவில் ஈர்ப்பு சக்தியின் மூலம் ஈர்க்கப்பட்டு பிரிந்து விடும்.
காந்தப் பிரிப்பான்

மேல் புற நய அமைப்பு மற்றும் ஒத்த விதைத் தன்மைகளைக் கொண்டு விதைகளை பிரிக்கும். முதலில் விதைகள் இரும்புத் துகள்களில் கலந்து விடுவதால் சொரசொரப்பான மேற்பகுதியில் படிந்துவிடும். இந்த விதைக்குவியலை காந்தப் பேரிகையில் செலுத்தினால் வழுவழுப்பான மற்றும் துகள் படியாத விதைகள் கலக்கையில், நீரை ஊற்றுவது பயன்தரும். காந்த சக்தியின் மூலம் பிரிப்பது விதைக்குவியலின் இரும்புத் துகள்களின் படிமம் மற்றும் நீர் சேர்த்த செயல்பாடு போன்றவற்றைச் சாரும். மேற்புற நய அமைப்பில் உள்ள வேறுபாடுகள் அதிகமாயின், பிரிக்கும் திறனும் அதிகரிக்கும்.
Magnetic separator
நிறம் பிரிப்பான்

ஒத்த நிறமற்ற தரம் குறைந்த விதைகளை பிரிக்கும் கருவியாகும். இது நிறம் மூலம் பிரிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ஏனெனில், அடர்த்தி மற்றும் பரிமாணங்கள் நல்ல விதைகள் மற்றும் நிறம் மாறிய விதைகளுக்கும் ஏற்றவையாக இருக்கும். ஆதலால் மற்றக் கருவிகள் பயனளிக்காது. இக்கருவியில் உள்ள ஒளி அணுக்கள் நல்ல விதைகள் பிரதிபலிக்கும் ஒளியை பிண்ணனியாகக் கொண்டு இயங்குகிறது. ஒளி அணுக்கள் வேறுபட்ட நிறங்களை பிரதிபலிக்கும் விதைகளை கண்டறிந்து விடும். அப்படிக் கண்டறிந்து விடும். அப்படி பிரதிபலிக்கும் விதைகளைக் கண்டறிந்து விடும். அப்படிக் கண்டறிந்த நிறம் மாறிய விதைகள் மின்தூண்டுதலில் அலையால் நிராகரிக்கப்படும்.
நிறத்தைக் கொண்டு பிரித்தல்
நிறம் பிரிப்பான் ஒரு மின்னோட்ட கண் மூலம் இயங்குகிறது. அக்கருவியில் இயக்கக்கூடிய நிறத்தை அந்த மின்னோட்டக் கண் அறிந்த கொள்ளும். விதைகளை அக்கருவியால் செலுத்தும் போது மின்னோட்ட கண் வழியே செல்லும். விதைகளின் நிறங்களை இது பதிவு செய்யும். மாறுபட்ட நிறமாகக் கண்டறிந்தால் வேகமான காற்றானது அவ்விதையை நிராகரித்து விடும்.
12_colorsorter
உராய்வு தூய்மை
காற்றுத் திரைக் கருவியானது நல்ல விதைகளை போன்றே அளவும், அடர்த்தியும் கொண்ட நிராகரிக்கப்பட்ட விதைகளை பிரிக்க இயலாது. அவைகளின் மேல்புற நய அமைப்பில் வேறுபாடு இருந்தால் உராய்வு தன்மையின் மூலம் பிரிக்கலாம். எந்த ஒரு பொருளும் ஒரு சரிவான பகுதியின் மேல் உருண்டோ (அ) சாய்ந்தோ செல்லும் போது அப்பொருளின் நய அமைப்பைப் பொறுத்து உராய்வு ஏற்படும். விதைகளை ஒரு வெல்வெட் துணியின் மேல் (அ) இரப்பர் வாரின் மேல் வேறுபட்ட சரிவில் செலுத்தும் போது தேவையற்ற குப்பைகள் அதன் மேல் வேறுபட்ட உராய்வுத் தன்மையால் விதைகளில் இருந்து பிரிந்துவிடும். இரப்பர் வார் தொடர்ந்து மேல் நோக்கி செல்வதால் குப்பைகளைப் பிரித்து விடும். அப்பொழுது, விதைகள் சரிவின் கீழ் வந்து சேகரித்துக் கொள்ளும்.
சுழல் பிரிப்பான்
விதைகளை அவற்றின் வடிவம் மற்றும் உருளும் திறனைக் கொண்டு பிரிக்கின்றது. இக்கருவி இதனில் சுழல் வடிவ நடுநிலை அச்சினைச் சுற்றி உலோகத் தாள் கீற்றுகள் பொருத்தப்பட்டிருக்கும். இக்கருவி செங்குத்தாக வைக்கப்பட்டிருக்கும். திறந்த வெளித் திருகு சுமைக் கொண்டு செல்லும் கருவி போல இருக்கும். உள்புற சுழல் வழியே விதைகளை அனுப்பவேண்டும். உருண்ட விதைகள் சரிவின் வேகமாகவும் தட்டையான மற்றும் கோணல் வடிவமுள்ள விதைகள் மெதுவாகவும் சரிந்து செல்லும்.
விதைகளின் வேகத்தைப் பொருத்து அவை உருளும் கோளப்பாதை அதிகரித்து, உள் சுழலில் இருந்து வெளிச் சுழலுக்கு விதைகள் வந்து சேரும். வேகம் குறைந்த விதைகள் உள்புறச் சூழலில் இருந்து வெளிச் சூழலுக்கு விதைகள் வந்து சேரும். வேகம் குறைந்த விதைகள் உள்புறச்சூழலில் சேகரிக்கப்பட்டுவிடும்.
12_spiral
மிதவை பிரிப்பான்
மிதவை தன்மையானது முழுமையடைந்த மற்றும் முழுமையடையாத விதைகளின் அடர்த்திக் கொண்டு மாறுபடும். இவ்விரு விதைகளின் இடைப்பட்ட அடர்த்திக் கொண்ட திரவம் பயன்படுத்தப்படும். அந்தத் திரவத்தின் ஒப்பு அடர்த்தியைக் கொண்டு, முழுமையான விதைகள், மூழ்கிவிடும், ஆனால் முழுமையடையாத விதைகள் மிதக்கும்.

Wednesday, June 20, 2012

பேனா ஸ்டாண்ட் ஸ்பூன் ஸ்டாண்ட் வியாபாரம்

‘‘பேனா ஸ்டாண்டோட உபயோகம் இல்லாத வீடே இருக்காது. குழந்தைங்களுக்கு தனியா பேனா ஸ்டாண்ட் கொடுத்துட்டா, அவங்களோட பென்சில், பேனா உள்ளிட்ட பொருள்களை பத்திரமா வச்சுப்பாங்க. அதுலயும் அவங்களுக்குப் பிடிச்ச கார்ட்டூன் மாடல், போட்டோ வச்ச மாடல்ல பண்ணிக் கொடுத்தா சந்தோஷப்படுவாங்க’’ என்கிற சுதா, கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?

‘‘பிவிசி பைப் (விருப்பமான அளவுகளில்), உபயோக மில்லாத பழைய சிடி, மரத்துண்டுகள், பல் குத்தும் குச்சி வரும் பெட்டி, குட்டிக்குட்டி பானைகள், ஓ.ஹெச்.பி. ஷீட், கண்ணாடி, பேப்பர் கப், ஃபோம் ஷீட், மேக்ரமி ஒயர், பசை, அலங்காரப் பொருள்கள்... 500 ரூபாய் முதலீடு போதுமானது.’’

என்ன ஸ்பெஷல்?

‘‘கடைகள்ல கிடைக்கிற பேனா ஸ்டாண்ட் குறிப்பிட்ட சில மாடல்கள்லதான் இருக்கும். நாமளே நம்ம கைப்பட செய்யறப்ப, என்ன வடிவத்துல, என்ன உருவத்துல வேணாலும் பண்ணலாம். குழந்தைங்களுக்கு பொம்மை வடிவம், இளைஞர்களுக்கு ஆண், பெண் முக வடிவம், பெரியவங்களுக்கு சாமி உருவம்னு விருப்பப்படி பண்ணலாம். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அவங்க கம்பெனி லோகோவோட பண்ணலாம். ஒரு நாளைக்கு 7 முதல் 8 ஸ்டாண்ட் பண்ணலாம்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?

‘‘கடைகள், பள்ளிக்கூடங்கள், ஓட்டல்கள், கம்பெனிகள்ல சுலபமா ஆர்டர் பிடிக்கலாம். 60 ரூபாய்லேருந்து, 750 ரூபாய் வரை மாடலை பொறுத்தது விலை. 50 சதவீத லாபம் நிச்சயம்.’’

அந்திமந்தாரை சுய உதவிக் குழு 15.03.2004 முதல்  15 உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு    மண் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்       
               
                                                     
 
  1. பூச்சாடிகள் தயாரித்தல், சுவர் மாட்டிகள். பேனா ஸ்டாண்டு, கரண்டி ஸ்டாண்டு,
  2. அலங்கார மெழுகுவர்த்தி ஸ்டாண்டு
  3. சேலை. தலையனை உறை மற்றும் கைகுட்டைகள் வர்ணம் தீட்டுதல்




                                                    

                                                               

              
மேற்படி தயாரிப்பு பொருட்கள் சென்னை, மதுரை மற்றும் புதுடில்லி ஆகிய இடங்களில் நடைபெறும் விற்பனை கண்காட்சிகளில் இடம் பெற்று வருகிறது.  சென்னையில் நடைபெறும் வருடாந்திர நவராத்திரி கண்காட்சி தவறாது இடம் பெற்று வருகிறது.  2005 ம் வருடம் செப்டம்ர் மாதம் சென்னையில் நடைபெற்ற கண்காட்சியில் மாநில அளவில் விற்பனையில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

Thursday, May 17, 2012

‘மஸ்கோத் அல்வா’.

வாயில் போட்டதுமே கரைந்து, நம்மை மயக்குவது ‘திருநெல்வேலி அல்வா’. அதே நெல்லைச் சீமையில் கடந்த பத்தாண்டுகளில் வளர்ந்து விரிந்து பட்டையைக் கிளப்பி வருகிறது ‘மஸ்கோத் அல்வா’.


‘இது எங்க ஊரு அல்வா’ன்னு தூத்துக்குடிக்காரங்க பெருமை பேசும் அளவிற்கு பிரபலமாகி இருக்கிறது இந்த மஸ்கோத் அல்வா. நெல்லை மாவட்டம் திசையன்விளையிலும், தூத்துக்குடி மாவட்டம் முதலூரிலும் இந்த அல்வா தயாரிப்புதான் இன்று முக்கிய தொழில்.

மஸ்கோத் அல்வாவில் முதலூர் பெயர் தனியிடம் பெற்று விட, இன்று பல ஊர்க்காரர்களும் இதே பெயரில் இந்தத் தொழிலைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

பெரிய அளவில் கமர்ஷியலாக பணம் போட்டு பல லட்சம் சம்பாதிக்கும் மஸ்கோத் அல்வா தயாரிப்புப் போட்டியில் இன்று இரு மகளிர் சுய உதவிக் குழுக்களும் வெற்றிகரமாக தரமான அல்வாவை உற்பத்தி செய்து சென்னை, மும்பை போன்ற நகரங்களுக்கு அனுப்பி வருகிறார்கள்.

நேற்று வரை அன்றைய பொழுதுக்குத் தேவையான முப்பது ரூபாய்க்குக் கூட வழியில்லாமல் வறுமையில் இருந்த முதலூரைச் சேர்ந்த 30 பெண்கள், ஒன்று சேர்ந்து இந்தத் தொழிலில் இறங்கி மாதம் ஒன்றுக்கு சராசரியாக 60 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் பார்க்கிறார்கள்.

இந்த சாதனை எப்படி சாத்தியமானது?

‘‘நாங்க இரண்டு குழுக்கள் இணைஞ்சு இந்த பிசினஸ் பண்றோம். ஒவ்வொரு குழுவிலும் 15 பேர் வீதம் 30 பேர் உறுப்பினர்களா இருக்கோம். முதல்ல 3 குழுக்களா இணைந்து இந்த தொழிலைத் தொடங்கினோம். அதுல ஒரு குழு பிரிந்து, இப்ப நாங்க இரண்டு குழுவுமா சேர்ந்து இயங்கி வர்றோம். முன்னாடி எல்லாருமே கூலி வேலைக்குத்தான் போயிட்டு இருந்தோம். மகளிர் சுய உதவிக் குழுவைத் தொடங்கினா லோன் கொடுப்பாங்க. ஏதாவது தொழில் செய்யலாம்னு சொன்னாங்க. அப்படித்தான் இதைத் தொடங்கினோம். குழு தொடங்கறதுக்கு ‘வீட்ஸ் தொண்டு நிறுவனம்’ பயிற்சி கொடுத்தாங்க. அரசு அதிகாரிங்க வந்து எப்படிக் குழுவை இயக்கணும்னு சொல்லிக் கொடுத்தாங்க.

அப்போ நாங்க மஸ்கோத் அல்வா தயார் பண்றவங்ககிட்ட தனியா வேலைக்குப் போயிக்கிட்டு இருந்தோம். வேற எதுனா தொழில செய்றத விட இந்த அல்வா பிசினஸையே எடுத்துப் பண்ணலாம்னு முடிவு பண்ணினோம்.. அது இப்போ எங்களுக்கு கைகொடுத்து உதவுது. எங்களோட செயல்பாட்டைப் பார்த்துட்டு பேங்க்ல 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபா லோன் கொடுத்தாங்க.’’ என்றார்கள் தென்றல், வசந்தம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தலைவிகள் பால்கனியும், ஜெயராணியும்.

‘’ஒரு சட்டி அல்வா கிண்டினா 12 கிலோ வரைக்கும் கிடைக்கும். ஒரு சட்டிக்கு எல்லாம் போக கைக்கு 250 ரூபா நிக்கும். ஒரு நாளைக்கு சராசரியா 15 கிலோ வரைக்கும் பேக் பண்ணுவோம். நல்ல ஆர்டர் கிடைச்சா கொஞ்சம் கூடும். தூத்துக்குடி பனிமய மாதா கோயில்ல இருந்து அப்பப்ப எங்ககிட்ட ஆர்டர் கொடுத்து வாங்குவாங்க. குமரி மாவட்டத்தில இருந்து சிலர் விரும்பி வாங்குறாங்க. கோயம்புத்தூர், சென்னை, டில்லி மாதிரி ஊருக்கெல்லாம் எங்க அல்வா போகுது. சில பெரிய கம்பெனிங்க அவங்களுக்கு கூடுதலா ஆர்டர் வந்து குறிப்பிட்ட நேரத்திற்குப் பண்ண முடியாம எங்கிட்ட சப் - காண்ட்ராக்டா கொடுத்து செய்து தரச் சொல்வாங்க. அதையும் நாங்க செய்து கொடுக்கிறோம்’’ என்கிறார் ஜெயராணி.

‘அல்வா பிசினெஸ் தொடங்கிய போது ஏதேனும் சங்கடங்கள் இருந்ததா?’ இதை அவர்களிடமே கேட்டோம்.

‘’கஷ்டம் இல்லாம இருக்குமா...! நல்லா அல்வா செய்யத் தெரிஞ்ச நமக்கு விக்கத் தெரியாது. யாரும் பெருசா வாங்கல. இதனால முதல்ல நஷ்டப்பட்டோம். விட்டுறலாமான்னு கூட நினைச்சோம். சமயத்தில மனசே தளர்ந்து போயிரும். அரசு அதிகாரிகள் வந்து ‘கவலைப்படாதீங்கம்மா முதல்ல அப்படித்தான் இருக்கும்’னு சொல்வாங்க. அப்புறம்த்தான் கொஞ்சம் கொஞ்சமா விற்க ஆரம்பிச்சி இப்ப லாபத்தைப் பார்க்கிறோம். .

பொருட்காட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்காக ஸ்டால் போட வந்து நைட் தங்கக்கூட இடமில்லாம பஸ் ஸ்டாண்ட்ல படுத்துத் தூங்குன அனுபவமெல்லாம் எங்களுக்கு உண்டு.. ஆனா அதையெல்லாம் தாண்டி இப்போ குழு நல்லா இயங்குது. பேங்க்ல கொடுத்த லோன கட்டி முடிச்சிட்டோம்.’’என்று மனநிறைவோடு சொல்கிறார் பால்கனி.

‘‘சராசரியா ஒருத்தருக்கு ஒரு மாசத்துக்கு 1,500 ரூபா முதல் 2,000 ரூபா வரைக்கும் வருமானம் கிடைக்குது. ஒரு நாளைக்கு 30 ரூபாய்க்குக் கூட வழியில்லாம நின்னோம். இப்போ ஒண்ணா சேர்ந்து குழுவா செய்றதலா இந்தப் பணம் எங்களுக்குக் கிடைக்குது. இந்த 2 ஆயிரம் ரூபாயை 20 ஆயிரம் ரூபாயா மாத்தணும்..... இதுதான் எங்களோட ஆசை.....’’ என்கின்றனர் தென்றல் - வசந்தம் மகளிர் சுய உதவிக் குழுவினர்.

‘ஊர் கூடித் தேர் இழுத்தால் ஆதாயம்’ என்பதை முதலூரில் உள்ள இந்தப் பெண்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்.

மஸ்கோத் ஆன மஸ்கட்
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட். அங்கு தேங்காய்ப் பாலில் செய்யும் அல்வா ஃபேமஸ். மஸ்கட்டிலிருந்து இலங்கைக்குச் சென்றவர்கள் இந்த அல்வாவின் மணத்தை இலங்கைக்குப் பரப்ப, அங்கிருந்து புலம் பெயர்ந்த முதலூர்காரர்கள் நெல்லை & தூத்துக்குடி மண்ணில் இந்த அல்வாவை செய்து கொடுக்க, இன்று முதலூர் மண்ணின் முக்கியத் தொழிலாகி விட்டது மஸ்கட்... சாரி.... மஸ்கோத் அல்வா. பொதுவா அல்வான்னா எண்ணெய், வனஸ்பதி அல்லது நெய்யை பயன்படுத்தி செய்றதுதான் வழக்கம். ஆனா மஸ்கோத் அல்வாவோட ஸ்பெஷாலிட்டியே தரமான தேங்காய்ப் பாலில் செய்வதுதான். தேங்காய்ப் பால்தான் இந்த அல்வாவின் முக்கிய மூலப்பொருள்.

- பரணி ஷங்கர் படங்கள்: ம.பிரபு
thanks kumudam + hema LA
Thnxs:http://nermai-endrum.blogspot.com/2012/01/blog-post_8337.html

ஆண்டு முழுவதும் பொங்கல் !அசத்தும் சுங்கான்கடை

பாட் பிரியாணி... ப்ளீஸ்!', 'பாட் ரைஸ் ப்ளீஸ்!', 'பாட் வத்தக் குழம்பு வேணுமா?' - இதுபோன்றக் குரல்களை, ஐந்து நட்சத்திர உணவகங்களில் இப்போது அதிகமாகவே கேட்க முடிகிறது! ஆங்கிலத்தில் 'பாட்' என்றழைக்கப்படும், நம்முடைய பாரம்பரிய மண்பானைகளுக்கு, இப்போது மரியாதை கூடி வருகிறது!ஆம்... இரும்பு, பித்தளை, அலுமினியம், குக்கர், நான்ஸ்டிக், காப்பர் பாட்டம்... இவை எதுவுமே மண்பானைச் சமையலுக்கு ஈடு இணையாகாது! மண்பானைச் சாப்பாட்டை ருசித்தவர்களுக்குத்தான் அந்த உண்மை தெரியும்!
பல்லாயிரம் ஆண்டுகளாக, சமையல் உள்ளிட்ட பலவேறு தேவைகளுக்கும் தமிழர்கள் பயன்படுத்தி வந்த இந்தப் பானைகள்... இந்தப் பதினைந்து, இருபது ஆண்டுகளாகத்தான் திடீர் என காணமால் போக ஆரம்பித்தன. 'மண் பானையில் சமைப்பது கௌரவக் குறைச்சல்' என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நம்மவர்கள் அதைக் கைவிட ஆரம்பித்தனர். என்றாலும், ஆண்டுக்கு ஒரு தடவை, தைப் பொங்கல் திருநாளன்று மண்பானையில் பொங்கல் வைப்பது மட்டும் பெரும்பாலானவர்களால் கைவிடப்படவில்லை. அத்தோடு, கோயில்களில் பொங்கல் வைப்பது, புதுக் கல்யாணத் தம்பதிகளுக்கு பானை தருவது, கும்பாபிஷேக நிகழ்ச்சிகளுக்குக் கலசம் வைப்பது என்பது போன்ற ஒன்றிரண்டு சம்பிரதாயங்களின் புண்ணியத்தால்...இன்றளவும் மண்பானையும் வாழ்கிறது!

தமிழகம் முழுவதுமே பானை செய்யும் தொழில் நடைபெற்றாலும்... சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதி கிராமங்கள்... கன்னியாகுமரி மாவட்டம், சுங்கான்கடை கிராமம்... என மண்பானைக்கெனவே பிரத்யேக ஊர்கள் பல இருக்கின்றன! பொங்கலுக்காக நாம் பயணித்தது... நாகர்கோவிலுக்கு அருகே இருக்கும் சுங்கான்கடை கிராமத்துக்குத்தான்!திரும்பியப் பக்கமெல்லாம் மண்பானைகள்தான் குவித்து வைக்கப்பட்டுள்ளன. புகைந்து கொண்டிருக்கும் சூளைகள்... பிசைந்து வைக்கப்பட்டிருக்கும் மண்குவியல்கள்... பானை உற்பத்தி என... காலைவேளையிலேயே, பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த கிராமம்.
மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளராக இருக்கும் விஸ்வத்திடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும்... ''தாழக்குடி, தளக்குலம், தேரேகால்புதூர்னு ஏகப்பட்ட கிராமங்கள்ல மண்பாண்டம் செய்யுற தொழிலாளர்கள் ஒரு காலத்துல நிறைஞ்சிருந்தாங்க. மண் பொருட்களுக்கு கட்டுப்படியான விலை இல்லாததால, வேற வேலைகளுக்குப் போயிட்டாங்க. எங்க கிராமத்துல மட்டும் இன்னமும் அந்தத்தொழில் நடந்துக்கிட்டிருக்கு. இதை நம்பி, நூத்துக்கணக்கானக் குடும்பங்க இருக்குது.

இங்கிருந்து கேரளாவுக்கு அதிக அளவுல பானைகள் போகுது. திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பொங்கல், சக்களத்துக்காவு பகவதி அம்மன் கோவில் பொங்கல்னு கேரளா கோவில்கள்ல வருஷம் முழுக்கவே பொங்கல் வைக்கிற விழா நடந்துக்கிட்டே இருக்கும். லட்சக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைப்பாங்க. அதனால, வருஷம் முழுக்கவே நாங்க பானைகளை உற்பத்தி பண்ணிக்கிட்டே இருக்கோம். தைப் பொங்கல் வந்துட்டா... தமிழ்நாட்டுல சுங்கான்கடை பானைக்கு மவுசு வந்துடும்.தோவாளை பெரியகுளத்தில் இருந்து களிமண் எடுத்துட்டு வந்துதான் பானை செய்றோம். அந்த மண்ல செஞ்சா... பானை நல்லா உறுதியா இருக்கறதால நல்ல விலையும் கிடைக்குது. கால் கிலோ அளவான பொங்கல் பானை, சாதாரணமா 10 ரூபாய்க்கு விக்கும். பொங்கல் சமயத்துல 14 ரூபாய் வரை விக்கும். ஒரு கிலோ பானை... சாதாரண நேரங்கள்ல 25 ரூபாய்க்கும், பொங்கல் நேரத்துல 30 ரூபாய்க்கும் வித்துக்கிட்டிருக்கு.
இதுபோக மீன் சட்டி, பூந்தொட்டி, தண்ணீர்ப் பானை, கலைப் பொருட்கள்னு நிறைய தயார் பண்றோம். முன்ன, மாட்டு வண்டிச் சக்கரத்தை சுத்தி செய்வோம். இப்போ எல்லாரும் மோட்டாருக்கு மாறிட்டோம். அதனால குறைவான நேரத்துல அதிகமா உற்பத்தி பண்ண முடியுது'' என்று சொன்னார்.     

அடுத்து நம்மிடம் பேசிய வேணு, ''படிக்க வசதியில்லாம, சின்ன வயசுலயே பானை செய்ற வேலைக்கு வந்துட்டேன். இன்னிக்கு என் குடும்ப பாரத்தையே இந்தப் பானைதான் சுமக்குது. எங்க கூட்டுறவுச் சங்கத்து மூலமா, மாசத்துக்கு 50 லாரி லோடு அளவுக்கு பானைகளை அனுப்பிட்டு இருக்கோம்'' என்றபடியே சுற்றிக் கொண்டிருக்கும் சக்கரத்தில் வண்டல் மண், களிமண் சேர்ந்தக் கலவையை வைத்து லாவகமாக கைகளை மேலும் கீழுமாக மாற்றி மாற்றி பிடிக்க... சில வினாடிகளில் உருவாகி நின்றது அழகியப் பானையன்று!
இப்படி உருவாகும் பானைகளை, நான்கு மணி நேரம் வெயிலில் காயவைத்து 'காவி’ அடித்து, மீண்டும் மூன்று நாட்கள் காய வைத்து எடுத்து வைக்கிறார்கள். 35 நாட்கள் கழித்து மொத்தப் பானைகளையும் நான்கு மணி நேரம் சூளையில் வைத்து எடுத்தால்... திடமானப் பானைகள் தயார். 

'பொன்மலை திருமலை மண்பாண்ட கூட்டுறவுச் சங்கம்’ சங்கத்தின் உதவிச் செயலாளர் கிரீனா ராணி, ''82-ம் வருஷம் ஆரம்பிச்சது இந்தச் சங்கம். இப்ப 155 உறுப்பினர்கள் இருக்காங்க. இந்த ஊர்ல சில்லறையாவும் நிறைய பேர் பானை விற்பனை பண்றாங்க. கூட்டுறவுச் சங்கம் மூலமா கொள்முதல் பண்ணியும் விற்பனை பண்றோம். சங்கத்துல உறுப்பினரா இருக்கறவங்களுக்கு விற்பனை வாய்பு உறுதியா இருக்கு. அதனால, எல்லா பகுதிகள்லயும் இதுமாதிரி சங்கம் ஆரம்பிச்சா... இந்தத் தொழில்ல இருக்குறவங்க, பொருளாதார ரீதியா முன்னுக்கு வர்றதுக்கு வாய்ப்பு கிடைக்கும்' என்று சொன்னார்.
தொடர்புக்கு
விஸ்வம், செல்போன்: 90471-92757

Wednesday, April 18, 2012

இளையோர்களின் விருப்பத்தேர்வாக இந்த ஸ்டேக்போர்ட் ஒவ்வொரு வீட்டிலும் இடம்பெறும்.

இங்கே படத்தில் நீங்கள் பார்ப்பது ஸ்டேக்போர்டுகள். அனைத்து வளர்ந்த நாடுகளிலும் ரொம்பவே பேபஸ்.

thruster-skateboards.jpg (438×492)


இளையோர்களின் விருப்பத்தேர்வாக இந்த ஸ்டேக்போர்ட் ஒவ்வொரு வீட்டிலும் இடம்பெறும்.

நம் நாட்டில் ஏன் இது பரவலாக அறிமுகம் ஆகவில்லை, அல்லது அறிமுகமாகி தோல்வியடைந்தது என்று பார்த்தால், நமது முந்தைய குண்டும் குழியுமான சாலைகள் மட்டுமே காரணம்.

இப்போது சாலைகள் அனைத்தும் சீரடைந்துவிட்டன என்று சொல்லமுடியாவிட்டாலும், அப்பார்ட்மெண்ட் கலாச்சாரம் பரந்துவிரிந்துவிட்டது.

ஒவ்வொரு அப்பார்ட்மெண்ட்டும் கொஞ்சமாவது ப்ளே ஏரியா என்று ஒதுக்குகிறார்கள், அல்லது அப்பார்ட்மெண்ட்டுக்குள் தரமான சிமெண்ட் சாலைகளை போட்டுவிடுகிறார்கள்.

ஆகவே இந்த ப்ராடக்டை அறிமுகப்படுத்தினால் உண்மையில் சூப்பர்ஹிட் ஆகும். இதனை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கு பதில், முதலில் குறைந்த அளவில் இறக்குமதி செய்து, ஒரு பத்து பதினைந்து கூட போதும், அதனை நேரடியாகவும், ஷாப்பிங் மால்கள் மூலமும் விற்பனை செய்ய முயற்சி செய்யலாம். அது ஹிட் ஆனால் அதன் பிறகு மேலே சிறப்பாக செய்யலாம்.

girl_riding_long_skateboard_in_school_yard_jyr26016.jpg (434×670)

இதன் முக்கிய அம்சம், இதன் சக்கரங்கள். இவை தரமானதாக இருந்தால் மட்டுமே உழைக்கும். தரம் இல்லையென்றால் கண்டிப்பாக மார்க்கெட்டில் எடுபடாது. ஆகவே இந்தியாவிலேயே தயாரிப்பதாக இருந்தால் இதனை கண்டிப்பாக கவனித்துக்கொள்ளவேண்டும்.

விலை : இங்கே நல்ல தரமான ஸ்டேக்போர்ட் பத்து யூரோ அளவில், அதாவது நம்மூரு காசு ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக மாஸ் ப்ரொடக்ஷன் செய்து விற்கிறார்கள். ஆகவே, இறக்குமதி செய்தாலும் ஆயிரம் ரூபாய்க்கு கண்டிப்பாக செய்யமுடியும். மேலே ஆயிரம் வைத்துக்கூட முதலில் டார்கெட் செய்யலாம்.

இந்த ஸ்டேக் போர்ட்டு போன்ற சமாச்சாரங்கள் மார்க்கெட்டில் வந்தால் உடனே வாங்கும் 10 சதவீத கஸ்டமர்களை முதலில் டார்கெட் செய்து வெற்றியடைந்தாலே நீங்கள் ராஜா.

மேலும் இந்த ஸ்டேக்போர்டு வகை வகையான டிசைன்களில், பெண்களுக்கு தனி, குழந்தைகளுக்கு தனி, கடுமையாக பயன்படுத்தும் இளையோர்களுக்கு தனி என்று வகை வகையாக வருவதால், மிகப்பெரிய மார்க்கெட் கண்டிப்பாக இருக்கிறது...!!!

இடுகையை முடிக்குமுன் வழக்கம்போல சொல்வதை சொல்லிவிடுகிறேன். தமிழக அரசு சுயதொழில் முனைவோருக்காக தனியாக பெரிய தொகையை ஒதுக்கிவருகிறது. மாவட்டந்தோறும் உள்ள மாவட்ட சுயதொழில் மைய அலுவலகத்தில், தனி அலுவலரும் உண்டு. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தோடு அமைந்தது இது. அந்த அலுவலரை சந்தியுங்கள். அவர்கள் வைத்திருக்கும் ப்ராஜெக்ட் லிஸ்டை பாருங்கள். மானியத்தோடு கடன் வசதியும் உண்டு. வாழ்த்துக்கள்..!!

Thursday, February 16, 2012

கோடையில் சம்பாதிக்க பேக்கிங் இயந்திரம்!

தற்போது வாட்டர், குளிர்பானம், மோர், ரஸ்னா, பெப்சி, பாதாம் மில்க் போன்ற குளிர்பானங்களுக்கு நல்ல வரவேற்பு. இவைகளை பேக் செய்யும் நவீன இயந்திரம் தயாரிப்பில் மிகவும் பிரபலமான கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கூறுகையில்
நுகர்வுபொருள் போனற் திடப்பொருள், பவுடர் போன்ற பலதரப்பட்ட நீர்மப் பொருட்களை கடந்த 10 ஆண்டுகளாக தயாரித்து விற்பனை செய்து வரும் நாங்கள் தற்போது தொழில் தொடங்க சிறுதொழில் முனைவோர்க்கு பயிற்சியுடன் பேக் மிஷினையும் தயாரித்துள்ளோம். இதை நவீன மாடலில் வடிவமைத்து மேலும் விலை குறைத்து தொழில் முனைவோரின் நலம் கருதி விற்பனை செய்வதுடன் சர்வீஸ் பணியும் மிகத் தீவிரமாக செய்கிறோம்.
இதையடுத்து நவீன பேக்கிங் இயந்திரங்களை வடிவமைத்து தயாரித்து வருகிறோம். பல மெஷின்கள் செய்யும் அளவுகளை மெஷினில் பல்வேறு அளவுகளில் பேக் செய்யும் வசதியுள்ள மெஷினையும் தயாரித்து சாதனை செய்து இருக்கிறோம். இதன் மூலமாக அனைத்து வகையான மசாலாப் பொருட்கள், பவுடர், தானிய வகைகள், சாக்லேட், கேண்டி, வலி நிவாரணி, அப்‘பளம், சுண்ணாம்பு, ஊறுகாய் ஒரே மெஷினில் பேக் செய்யலாம். மேலும், வெவ்வேறு அளவுகளில் பேக் செய்ய முடியும். இட்லி மாவு மெஷின், ஊறுகாய், பசை, பெவிக்கால் போன்றவற்றை பேக் செய்யும் இயந்திரங்களையும் தயாரித்து விற்பனையுடன் சர்வீசையும் செய்கிறோம். தற்போது எங்களது ஸ்டேண்டர்டு பேக் இஞ்சினியரிங் இயந்திரங்கள் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் மிக நல்லவிதமாக இயங்கி வருகின்றன. இன்றைக்கு பேக்கிங் தொழில் என்பது நிலையான வருமானத்தை ஏற்படுத்தி தரும் தொழிலாகும்.
அதனால் பெண் தொழில் முனைவோர் மற்றும் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்களும் எங்களது இயந்திரங்களை வாங்கிப் பயன்படுத்தி நல்ல லாபம் பெறலாம். எங்களது பேக்கிங் இயந்திரங்களை நேரில் பார்வையிடவும், டெமோ மெஷின்கள் கையில் உள்ளது. இந்த இயந்திரங்களை குறைந்த இடவசதியில் வைத்து தொழில் தொடங்கலாம். வீட்டு மின்சாரத்தில் இயங்கும் திறன் உள்ளதால் அதிக மின்சாரம் கட்டணம் தேவையில்லை.
எங்கள் தயாரிப்பில் ஆட்டோமெடிக் ஃபார்ம் பில் அண்ட சீல் பவுடர் மெஷின், ஆட்டோ மெடிக் ஃபார்ம் பில் லிக்யுடு மெஷின் போன்ற மெஷின்களைத் தயாரிக்கிறோம். எங்களிடம் குறைந்தது 30 ஆயிரத்தில் இருந்து பல லட்சம் ரூபாய் விலை மதிப்புள்ள பேக்கிங் எந்திரம் உள்ளது. தற்போது மினரல் வாட்டர், பெப்சி, ஊறுகாய், சிப்ஸ், கிளினிங் பவுடர் போன்ற பொருட்களை வேகமாக பேக் செய்யும் நவீன பேக்கிங் இயந்திரங்களையும் தயார் செய்து வருகிறோம் என்பதால் தொழில் முனை வோர்கள் பேக்கிங் இயந்திரத் தேவைக்கு எங்களை அணுகலாம்.
மேலும் விவரம் பெற :
ஸ்டேண்டர்டு பேக்  இஞ்சினியரிங் கம்பெனி
3/17 ரெட்டிபாளையம், முகப்பேர் தொழில்பேட்டை, முகப்பேர் (மேற்கு) சென்னை போன் : 044 – 32425505 ஃபேக்ஸ் : 044 – 26256030  மொபைல் : 93810 25505

Thursday, January 19, 2012

சுய தொழில் தொடங்க முறையான பயிற்சி

தொழில் முனைவதன் மேலாண்மைபற்றி சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தின் (institute for entrepreneurship and career development) இயக்குநர் முனைவர் கே.பார்த்த சாரதி.

''சுய தொழில் தொடங்க முடிவு செய்பவர்கள், இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். முதலில், சிறப்பான முறையில் திட்டமிட வேண்டும். அடுத்து, அந்தத் துறை சம்பந்தப்பட்ட நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள முறையான பயிற்சி எடுக்க வேண்டும். திட்டமிடுதலில் சிறந்து விளங்கும் நம் இளைஞர்கள், அதை மேலாண்மை செய்வதில் தான் திணறி, நடைமுறைப்படுத்த முடியாமல் சோர்ந்துவிடுகின்றனர். அனுபவசாலிகளின் வழி காட்டுதல்களைக் கேட்டுத் தெரிந்து, தெளிவு பெற்ற பின்னரே, திட்டமிட்ட தொழிலில் இறங்க வேண்டும். இவ்வாறு சிறப்பான திட்டமிடுதலுடன் முழுத் தெளிவு உள்ள ஒருவருக்கு வங்கிக் கடனுதவி பெறுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது.

இன்றைய இளைஞர்கள் சுய தொழில் தொடங்கத் தடையாக இருப்பவை மூன்று விஷயங்கள்தான். முதலில் பெற்றோர்கள். தங்களின் பிள்ளைகள் வேலைக்குச் செல்வதை ஊக்குவிக்கும் அளவு, அவர் கள் சுய தொழில் ஆரம்பிப்பதை ஆதரிப்பது இல்லை தமிழக பெற்றோர்கள். 'முதலீடு வேண்டுமோ? தன் பிள்ளையால் சமாளிக்க முடியுமோ?’ போன்ற அச்சம் தான் காரணம். அடுத்து, நமது பாடத் திட்டத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு குறித்த பாடங்கள் இருப்பது இல்லை. மேலை நாடுகள்போல, பள்ளி பாடத் திட்டத்திலேயே சுய தொழில் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். இறுதியாக, நமது இளைஞர்களின் குறுகிய மனப்பான்மை.ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து, மற்றவரிடம் கை கட்டி நிற்கத் துணியும் இளைஞர்கள், தொழில் துவங்கி நாமே வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று விரும்புவது இல்லை.

தொழில் முனைவர் ஆக எந்தத் தகுதியும் தேவை இல்லை. பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டவர் முதல், படித்து முடித்த முதுநிலை பட்டதாரி வரை எவரும் தொழில் முனைவர் ஆகலாம். கல்வித் தகுதியைவிட ஆர்வம், தன்னம்பிக்கை, நேர்மறை எண்ணம், எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ளும் துணிவு, ரிஸ்க் எடுக்கும் துணிச்சல் ஆகியவைதான் முக்கியம். பணம்கூடக் கையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பத்தாம் வகுப்பைப் பாதியில் நிறுத்திய திருபாய் அம்பானியைத் தொழில் ஆரம்பிக்கவைத்தது மேற்சொன்ன ஐந்து குணங்கள்தான்!'' என்கிறார் பாஸிட்டிவ் பார்வையுடன்!

இந்த வார்த்தைகள் எல்லாம் உங்களுக்குள் தொழில் முனையும் உந்துதலை ஏற்படுத்தியிருந்தால்... அப்புறம்என்ன... அடுத்த 'பிஸினஸ் மேக்னட்’ நீங்கதாங்க!

புதிதாகத் தொழில் துவங்குவோர்களுக்கு மத்திய அரசு வழங்கும் சேவை மற்றும் பயிற்சிகள்!

தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டங்கள்

வர்த்தகத் திறன் மேம்பாட்டுத் திட்டம்

திட்ட அறிக்கை

தொழில் சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரித்தல்

சந்தை வாய்ப்பு பற்றிய ஆய்வறிக்கை தயாரித்தல்

நேரடி கணினி வழி குறு மற்றும் சிறு தொழில்களுக்கான பதிவுகள்

மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் சலுகைகள் குறித்த தகவல்கள்

திறன் மேம்பாட்டுப் பயிற்சி

உங்களுக்காக இவை...

நாடு முழுவதும் மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வணிகக் காப்பகங்கள் மற்றும் தொழில் முனைவோர் பூங்காக்கள் ஆகியவற்றை நாடினால், புதுமையான ஐடியாக்களுக்குப் பயிற்சி முதல் கடனுதவி வரை அனைத்தும் ஏற்பாடு செய்து தருகிறார்கள். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, சத்தியமங்கலம், திருச்சி மற்றும் தஞ்சாவூர் நகரங்களில் அமைந்துள்ள இது போன்ற அமைப்புகளின் முகவரி மற்றும் தொடர்பு எண்களுக்கு www.nstedb.com என்னும் வலைதளத்தைப் பார்க்கவும்!

அரசு கடனுதவித் திட்டங்கள்

மத்திய அரசு

பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக் கும் திட்டம் (PMEGP)-இந்தத் திட்டத்தின் கீழ் சேவை மற்றும் உற்பத்தித் தொழில்களுக்கு 25 லட்சம் வரை பிணையம் இல்லாமல் வங்கிகள் மூலம் கடனுதவி கிடைக்கும். 35 சதவிகிதம் மானியம் கிடைக்கும். இந்த வரம்புத் தொகைக்கு மேல் கடன் பெற விரும்புவோர் மட்டும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்!

மாநில அரசு

வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம்-இதன் கீழ் பயன்பெற விரும்புவோரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 1.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். உற்பத்தித் தொழில்களுக்கு 5 லட்சம் வரையிலும், சேவை சார்ந்த தொழில்களுக்கு 3 லட்சம் வரையிலும், வியாபாரத் தொழில்களுக்கு ஒரு லட்சம் வரையிலும் வங்கிகளின் மூலம் கடன் பெறலாம். இந்த இரு திட்டங்களிலுமே அரசு சார்பில் மானியம் உண்டு. தொழில் தொடங்க உதவும் பிற நிறுவனங்கள் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO), இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி, (SIDBI) மைய அரசின் கதர் கிராமத் தொழில் நிறுவனம் (KVIC), தேசிய சிறுதொழில் நிறுவனம் (NSIC), தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC). மேலும், இது பற்றி தகவல் அறிய, விண்ணப்பிக்க அந்தந்த மாவட்டத் தலைநகரங் களில் உள்ள மாவட்டத் தொழில் மையத்தை அணுகலாம்!

Wednesday, December 28, 2011

வீட்டில் இருந்து செய்யும் சிறு தொழில்

 

தேவையானப் பொருள்கள்:
புழுங்கல் அரிசி_2 கப்
பொட்டுக்கடலை_1/4 கப்
காய்ந்த மிளகாய்_5 லிருந்து 8 க்குள்
தேங்காய்ப்பால்_ஒரு கப் (விருப்பமானால்)
எள்_கொஞ்சம்
ஓமம்_சிறிது
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவைக்கு
கடலையெண்ணெய்_பொரிக்க‌

செய்முறை:
அரிசியை நீரில் நனைத்து நன்றாக ஊறிய பிறகு கழுவிவிட்டு கிரைண்டரில் போட்டு,அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து, தேங்காய்ப்பால் விட்டு அல்லது தண்ணீர் தெளித்து மைய அரைக்க வேண்டும்.மிகவும் கெட்டியாகவும் இருக்க வேண்டும்.
பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நல்ல‌ மாவாக இடித்துக்கொள்.
இப்போது அரிசி மாவுடன் பொட்டுக்கடலை மாவு,எள்,ஓமம்,பெருங்காயம்,உப்பு   சேர்த்து பிசைந்துகொள்.
மாவு கெட்டியாக இல்லாமல் இருந்தால் பேப்பர் டவலில் அல்லது ஒரு காட்டன் துணியில் சிறிது நேரம் சுருட்டி வைத்தால் ஈரம் போய்விடும்.
இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வை.
எண்ணெய் காய்ந்ததும் விருப்பமான முறுக்கு அச்சைப் பயன்படுத்தி, பிசைந்த மாவில் ஒரு பெரிய எலுமிச்சை அளவு எடுத்து ஒரு பேப்பர் டவலில் முறுக்குகளாக பிழிந்து கொள்ளவும். (அல்லது அப்படியே வாணலியில்கூட பிழிந்துவிடலாம்.)
எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டு(எண்ணெய் கொண்ட மட்டும்) இரு புறமும் சிவக்க விட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும்.இப்போது புழுங்கல‌ரிசி முறுக்கு தயார்.


பச்சரிசி முறுக்கைவிட புழுங்கலரிசி முறுக்குதான் சுவையாக இருக்கும்.என்ன,கொஞ்சம் வேலை வாங்கும்.அவ்வளவுதான்.

ஆப்பம் & தேங்காய்ப்பால்




ஆப்பத்திற்கு தேங்காய்ப்பால்தான் பெஸ்ட் காம்பினேஷன்.ஊரில் என்றால் ஆப்பத்தை செய்து வைத்துவிட்டுக்கூட  தேங்காய் பறித்து அல்லது வாங்கி பால் பிழிந்துவிடலாம்.ஆனால் இங்கு (USA  ) புதிய காய்தானா என்று  உறுதி செய்துகொண்டு முதல் நாளே சிறிது பால் எடுத்து பார்த்துவிட்டுத்தான்  ஆப்பத்திற்கு அரிசி ஊற வைக்க வேண்டும்.
தேவையானப் பொருள்கள்:
பச்சரிசி_2 கப்
புழுங்கல் அரிசி_2 கப்
வெந்தயம்_ஒரு டீஸ்பூன்
பழைய சாதம்_ஒரு கைப்பிடி
உப்பு_தேவைக்கு
ஆப்பம் செய்முறை::
வெந்தயத்தை முதல் நாளிரவே ஊற வை.
அடுத்த நாள் அரிசியை ஊற வை.நன்றாக ஊறியதும் அரிசி,வெந்தயம்,சாதம் மூன்றையும் சேர்த்து நன்றாக நீர் விட்டு மழமழவென அரைக்க வேண்டும்.
பிறகு உப்பு கொஞ்சம் குறைவாக சேர்த்து கரைத்து வை.
இனிப்பான பால் சேர்த்து சாப்பிடும்போது உப்பு கொஞ்சம் குறைவாக இருந்தால்தான் சுவை நன்றாக இருக்கும்.
அடுத்த நாள் பார்த்தால் மாவு புளித்து,நன்றாகப் பொங்கி வந்திருக்கும்.
ஆப்பம் ஊற்றும்போது சிறிய அளவில் மாவை எடுத்து சிறிது தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்.
மீதி மாவை எடுத்து வைத்தால் அடுத்த வேளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இப்போது ஆப்ப சட்டியை அடுப்பில் ஏற்றி சூடாகியதும் லேசாக எண்ணெய் தடவி இரண்டு கரண்டி மாவை விட்டு இரண்டு கைகளாலும் சட்டியின் கைப்பிடியைப் பிடித்து ஒரு சுழற்று சுழற்றிவிட்டு மூடிபோட்டு மிதமானத் தீயில் வேக வை.
ஆப்பம் வெந்ததும் (சிவக்க வேண்டாம்) தோசைத் திருப்பியால் அல்லது கைகளால்கூட எடுத்துவிடலாம்.ஓரங்கள் தானே பெயர்ந்து வந்துவிடும்.
அதன்பிறகு என்ன!ஒரு குழிவானத் தட்டில் ஆப்பத்தை வைத்து தேங்காய்ப்பாலை ஆப்பம் கொஞ்சம் மூழ்கும் அளவுக்கு ஊற்றி சாப்பிட வேண்டியதான்.



தேங்காய்ப் பாலை சட்னி போல் தொட்டு சாப்பிட வேண்டாம்.அது நன்றாக இருக்காது.
இரண்டு ஆப்பம்தான் லிமிட்.அதற்கு மேல் என்றால் திகட்டிவிடும்.
தேங்காய்ப் பால் செய்முறை:

இரண்டு மூன்று பேர் என்றால் ஒரு மூடி தேங்காய் போதும்.
நல்ல சதைப்பற்றுள்ள தேங்காய் மூடி_1
சர்க்கரை_தேவைக்கு (நிறையவே தேவைப்படும்.பால் நல்ல இனிப்பாக இருக்க வேண்டும்)
பசும்பால்_1/2 டம்ளர் (விருப்பமானால்)
ஏலக்காய்_1 (இதுவும் விருப்பமானால்)


ஒரு மூடி தேங்காயைத் துருவியோ அல்லது சிறுசிறு துண்டுகளாக்கியோ மிக்ஸியில் போட்டு  pulse    ல் வைத்து ஒரு சுற்று சுற்றினால் பூ போலாகிவிடும்.
பிறகு சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து இரண்டு டம்ளர் அல்லது தேவையான அளவிற்கு மிதமான‌ சுடு தண்ணீர் விட்டு பாலை வடிகாட்டிப்  பிழிந்துகொள்.
அதனுடன் பசும்பால் 1/2 டம்ளர் அளவிற்கு காய்ச்சி சேர்த்துக்கொள்.(விருப்பமானால்)
தேங்காய்ப்பாலில்  ஏலக்காய்,சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை ஒரு கரண்டியால் கலக்கிவிடு.
இப்போது தேங்காய்ப்பால் தயார்.
குறிப்பு:  
சமயத்தில் ஆப்ப மாவு இல்லாவிட்டால் தோசை மாவைக்கூட ஆப்பத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.



தேவையானப் பொருள்கள்:
உடைத்த கறுப்பு உளுந்து_1 கப்
புழுங்கல் அரிசி_1 கப்
சின்ன வெங்காயம்_5 லிருந்து 10
பச்சை மிளகாய்_2
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பெருஞ்சீரகம்_1/2 டீஸ்பூன்
பெருங்காயம்_ஒரு துளி
கறிவேப்பிலை_5
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவையான அளவு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
உளுந்து,அரிசி இரண்டையும் தனித்தனியாக நீரில் ஊற வை.உளுந்து நன்றாக ஊறியதும்(சுமார் 3 மணி நேரம்) தோலைக் கழுவிக் களைந்து நீரை வடிகட்டி விட்டு ஃபிரிட்ஜில் சுமார் 1/2 மணி நேரத்திற்கு வை. பிறகு வெளியில் எடுத்து கிரைண்டரில் போட்டுத் தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும்.இடையிடையே தண்ணீரைத் தொட்டுத்தொட்டுத் தள்ளி விட வேண்டும்.குறைந்தது 1/2 மணி நேரத்திற்காவது அரைக்க வேண்டும்.கெட்டியாக இருக்க வேண்டும்.நன்றாக அரைத்த பிறகு ஒரு பாத்திரத்தில் வழித்து எடுத்து நன்கு அடித்து கொடப்பி வைக்க வேண்டும்.அப்போதுதான் உளுந்து மாவு அமுங்காமல் இருக்கும்.
அடுத்து  அரிசியைக் கழுவிக் களைந்து  அதே கிரைண்டரில் போட்டு தண்ணீர் நிறைய ஊற்றாமல் கெட்டியாக மைய அரைக்கவும்.அதனுடன் பெருஞ்சீரகம் சேர்த்து அரைக்கவும்.நன்றாக அரைத்த பிறகு வழித்து உளுந்து மாவுடன் சேர்த்து பிசையவும்.
இப்போது வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கி மாவில் கொட்டி,பெருங்காயத்தையும்,தேவையான உப்பையும் சேர்த்து நன்றாகப் பிசையவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும்.ஒரு சிறிய கிண்ணத்தில் புளித்தண்ணீர் (அ) வெல்லம் கலந்த தண்ணீர் எடுத்துக்கொள்.இது வடை நன்கு சிவந்து வருவதற்குத்தான்.
எண்ணெய் சூடானதும் இரண்டு உள்ளங்கைகளிலும் தண்ணீரைத் தொட்டுக்கொண்டு,மாவில் இருந்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து இடது உள்ளங்கையில் வைத்து ஆள்காட்டி விரலைத் தண்ணீரில் நனைத்து மாவின் நடுவில் சிறு ஓட்டைப் போட்டு எண்ணெயில் போடவும்.மாவை மற்ற வடைகள் போல் தட்டியோ அல்லது அமுக்கியோ போடக் கூடாது.எண்ணெய் கொண்ட மட்டும் போடவும்.எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் போடலாம்.ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு மறுபக்கம் வெந்ததும் எடு.இது வெளியில் மொறுமொறுவென்றும் உள்ளே சாஃப்டாகவும் இருக்கும்.
இவ் வடைக்கு தேங்காய் சட்னி,சாம்பார்,பாயசம் இவை பக்க உணவாகப் பரிமாரலாம்.
குறிப்பு:
வீட்டில் சிறு பிள்ளைகள் இருந்தால் இஞ்சி,பச்சை மிளகாயை அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்.அவர்கள் ஒருமுறை வடையில் உள்ள மிளகாயைக் கடித்து விட்டால் மீண்டும் அதைச் சாப்பிடத் தயங்குவார்கள்.எனவே அரிசியுடன் சேர்த்து அரைத்து விடலாம்.
தட்டை (அ) எள்ளடை


தேவையானப் பொருள்கள்:
புழுங்கல் அரிசி_2 கப்புகள்
பொட்டுக்கடலை_1/2 கப்
கடலைப் பருப்பு_1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய்_6(காரத்திற்கேற்ப)
பூண்டு_2 பற்கள்
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவையான அளவு
எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
புழுங்கல் அரிசியை தண்ணீரில் நனைத்து ஊற வை.நன்றாக ஊறிய பிறகு கழுவிக் களைந்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும்.அரைக்கும் போதே அதனுடன் பூண்டு,காய்ந்த மிளகாய் சேர்த்து மைய அரைத்தெடு.மாவு மிகவும் கெட்டியாக இருக்க வேண்டும்.மாவு கெட்டியாக இருந்தால்தான் எண்ணெய்க் குடிக்காமல் இருக்கும்.அதே சமயம் மழமழவென அரைக்க வேண்டும்.அப்பொழுதுதான் எள்ளடை மொறுமொறுப்பாக இருக்கும்.இல்லை எனில் கடினமாக இருக்கும்.
பொட்டுக் கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்து மாவாக்கு.மாவு மழமழவென இருக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு,பொட்டுக்கடலை மாவு,கடலை பருப்பு,பெருங்காயம்,உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும்.பிசைந்த மாவு கைகளில் ஒட்டாமல் இருக்க வேண்டும்.அதுதான் சரியான மாவு பதம்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் ஏற்றி சூடேற்று.மாவில் இருந்து ஒரு கோலி அளவு எடுத்து உருண்டையாக்கி பேப்பர் டவலில் வைத்து வட்டமாகத் தட்டவும்.மாவில் உள்ள கடலைப் பருப்பு வெளியில் தெரிய வேண்டும்.அவ்வளவு மெல்லியதாகத் தட்ட வேண்டும்.
எண்ணெய் சூடேறியதும் நான்கைந்தாகப் போட்டு வேக வை.ஒரு பக்கம் வெந்து சிவந்ததும் திருப்பி விட்டு மறுபக்கம் சிவந்ததும் எடுத்து ஆற வை.இதுபோல் எல்லாவற்றையும் போட்டு ஆற வைத்து ஒரு ப்ளாஸ்டிக் கவரில் எடுத்து வை.இப்போது சுவையான,மொறுமொறுப்பான எள்ளடைத் தயார்.
குறிப்பு:
விருப்பமானால் மாவு பிசையும் போது எள் 1 டீஸ்பூன்,கறிவேப்பிலை கொஞ்சம் கிள்ளிப் போட்டு தட்டலாம்.எள்ளடையை புழுங்கல் அரிசியில் செய்தால்தான் நல்ல சுவையாக,மொறுமொறுப்பாக இருக்கும்.


வடாம் (மற்றொரு வகை)



தேவையான பொருள்கள்
புழுங்கல் அரிசி_2 கப்
பச்சை மிளகாய்_2
சீரகம்_1டீஸ்பூன்
ஜவ்வரிசி_சுமார் 1 கப்
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவையான அளவு
செய்முறை:
அரிசியை கழுவிக் களைந்து ஊற வை.நன்றாக ஊறியதும் கிரைண்டரில் போட்டு மைய அரைத்தெடு.கெட்டியாக இருக்க வேண்டுமென்பதில்லை,நீர்க்க இருக்கலாம்.அதில் ஜவ்வரிசி,உப்பு சேர்த்து கரைத்து வை.ஜவ்வரிசி நன்றாக ஊறுமளவுக்கு சற்று நீர்க்க(ஓரளவுக்கு) இருக்க வேண்டும்.இதை மாலையில் செய்து வைத்து விட வேண்டும்.காலையில் பார்த்தால் ஜவ்வரிசி ஊறி கெட்டியாக, பிசைந்த தட்டை மாவு பதத்தில் இருக்கும். இப்போது அதில் பச்சை மிளகாய்( அரைத்து சேர்க்க வேண்டும்)  ,  சீரகம்,பெருங்காயம் சேர்த்து பிசைந்து கொள்.உப்பு,காரம் சரி பார்த்துக்கொள்.
இப்பொழுது மாவிலிருந்து ஒரு சிறு நெல்லிக்காய் அளவு எடுத்து ஒரு பேப்பர் டவலில்(அ)பிளாஸ்டிக் பேப்பரில் தட்டை போல் தட்டிக்கொள்ளவும்.இதுபோல் எல்லா மாவையும் தட்டி வைத்து இட்லிப் பானையில் இட்லி அவிப்பது போலவே  (ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல்) வேக வைக்க வேண்டும்.வெந்ததும் எடுத்து தட்டில் கொட்டி வெய்யிலில் காய வை.வீட்டிற்குள்ளேயும் வைத்து உலரவிடலாம்.
நன்றாகக் காய்ந்த பிறகு ஒரு பிளாஸ்டிக் கவரில்(அ)கண்ணாடி பாட்டிலில்  எடுத்து வைத்துக் கொண்டால் தேவையானபோது பொரித்து சாப்பிடலாம்.இதைப் பொரிக்கும் போது வெள்ளைப் பூ மாதிரி வரும்.இது அனைத்து வகை சாதத்திற்கும் முக்கியமாக வத்தக்குழம்பிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.
பொரிக்கும் விதம்:
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு வடாமாகப் போட்டு  பொரித்தெடு. இரு பக்கமும் திருப்பி விட வேண்டாம்.சிவக்க வைக்கவும் வேண்டாம்.

முறுக்கு வடாம்



தேவை:
புழுங்கல் அரிசி_2 கப்
பச்சை மிளகாய்_2
சீரகம்_1டீஸ்பூன்
ஜவ்வரிசி_1/2 to  1 கப்
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவையான அளவு
செய்முறை:
அரிசியை ஊற வை.நன்றாக ஊறியதும்(4 அ  5 மணி நேரம்) கழுவிக் களைந்து கிரைண்டரில் மைய அரைத்தெடு.கெட்டியாக இருக்க வேண்டுமென்பதில்லை,நீர்க்க இருக்கலாம்.அதில் ஜவ்வரிசி,உப்பு சேர்த்து கரைத்து வை.ஜவ்வரிசி நன்றாக ஊறுமளவுக்கு சற்று நீர்க்க(ஓரளவுக்கு) இருக்க வேண்டும்.இதை மாலையில் செய்து வைத்து விட வேண்டும்.காலையில் பார்த்தால் ஜவ்வரிசி ஊறி கெட்டியாக முறுக்கு மாவு பதத்தில் இருக்கும். இப்போது அதில் பச்சை மிளகாய்( அரைத்து சேர்க்க வேண்டும்)  ,  சீரகம்,பெருங்காயம் சேர்த்து பிசைந்து கொள்.உப்பு,காரம் சரி பார்த்துக்கொள்.
முறுக்கு அச்சில் கொஞ்சமாக மாவை எடுத்துக்கொள்.அடுத்து  இட்லிப் பானையை அடுப்பில் வைத்து ஒரு இட்லித் தட்டில் ஈரத்துணியைப் போட்டு ஒவ்வொரு குழியிலும் சிறுசிறு முறுக்குகளாக அல்லது தட்டு முழுவதும் ஒரு பெரிய முறுக்காக பிழிந்து விட்டு வேக விடு.நன்றாக வெந்ததும் எடுத்து தனித்தனியாக தட்டில் வைத்து வெய்யிலில் காயவை.வீட்டிற்குள்ளேயும் வைத்து உலர்த்தலாம்.ஏற்கனவே வெந்து இருப்பதால் சீக்கிரமே காய்ந்துவிடும்.
நன்றாகக் காய்ந்த பிறகு ஒரு பிளாஸ்டிக் கவரில்(அ)கண்ணாடி பாட்டிலில்  எடுத்து வைத்துக் கொண்டால் தேவையானபோது பொரித்து சாப்பிடலாம்.வெள்ளை முறுக்கு போலவே இருக்கும்.இது அனைத்து வகை சாதத்திற்கும் முக்கியமாக வத்தக்குழம்பிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.
பொரிக்கும் விதம்:
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு முறுக்காகப் போட்டு இரு புறமும் திருப்பி விட்டு பொரித்தெடு.சிவக்க வைக்க வேண்டாம்.

முறுக்கு மாவு தயாரித்தல்



தேவை:
உளுந்து_ 1 கப்
பச்சைப் பயறு_1/2 கப்
கடலை பருப்பு_1/4 கப்
புழுங்கல் அரிசி_ 1/4 கப்
பொட்டுக் கடலை_ 1/4 கப்
செய்முறை:
மேலே கூறியுள்ள எல்லாவற்றையும் வெறும் வாணலியில் தனித் தனியாக சிவக்க வறுத்து ஆற வைத்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு மழமழவென்று அரைக்க வேண்டும்.(இரண்டு விரல்களுக்கிடையில் மாவை எடுத்து தேய்த்துப் பார்த்தால் மழமழவென்று இருக்க வேண்டும்).இதற்கு நம் ஊர் மிக்ஸி தான் எற்றது.இங்குள்ள மிக்ஸி(USA)சரியாக வராது என்றே நினைக்கிறேன்.மாவை ஆற வைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து மூடி வைத்துக் கொள்.மேலே கூறிய விகிதத்தில் எவ்வளவு வேன்டுமானாலும் அரைத்துக் கொள்ளலாம்.அடுத்த பதிவில் முறுக்கு செய்வதைப் பற்றி பார்க்கலாம்.

இட்லி







தேவையானவை
புழுங்கல் அரிசி – 8 கப்புகள்
உளுந்து – 1/2 கப்
வெந்தயம் – 2 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
செய்முறை
வெந்தயத்தை முதல் நாள் இரவே அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துவிட வேண்டும்.அடுத்த நாள் அரிசியையும் உளுந்தையும் தனித்தனியாக ஊறவிட வேண்டும்.சுமார் ஆறு மணி நேரம் ஊறவிட வேன்டும்.பின் உளுந்தின் தோலியைக் கழுவி விட்டு ஃபிரிட்ஜில் ஒரு அரை மணி நேரத்திற்கு வைத்து விட வேண்டும்.வெந்தயத்தையும் அவ்வாறே ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.பிறகு உளுந்துடன் வெந்தயத்தை சேர்த்து  கிரைண்டரில் போட்டு நீர் விட்டு கொடகொடவென மைய அரைக்க வேண்டும்.ஒரு 1/2  மணி நேரம் ஆன பிறகு(இடை இடையே சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்)  ஒரு பாத்திரத்தில் வழித்து எடுத்து கொடகொடவென கொடப்பி வைக்கவும்.இல்லை எனில் மாவு அமுங்கிவிடும்.பிறகு அரிசியைப்போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து தேவையான உப்பு போட்டு நன்றாகக் கரைத்து வைக்கவும்.அடுத்த நாள் பார்த்தால் மாவு நன்றாக பொங்கி வந்திருக்கும்.இட்லி அவிக்கும் பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் இட்லி தட்டை வைத்து ஈரத்துணியைப் போட்டு ஒவ்வொரு குழியிலும் மாவு ஊற்றி வேகவைக்கவும். வெந்த பிறகு மூடியைத்திறந்து எடுத்துக் கொட்டவும். வெண்மையான பஞ்சு போன்ற இட்லிகளாக வரும்.தோசை வேண்டும் எனில் கொஞ்சம் மாவை தனியாக எடுத்து சிறிது நீர் விட்டு கரைத்து தோசையாக வார்க்கலாம். நமக்கு விருப்பமான சாம்பார் அல்லது சட்னியுடன் சாப்பிடலாம்.

Thanks!!!http://chitrasundar5.wordpress.com

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites