இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label மர பொருள் எப்படி செய்ய வேண்டும் விளக்கம். Show all posts
Showing posts with label மர பொருள் எப்படி செய்ய வேண்டும் விளக்கம். Show all posts

Friday, June 15, 2012

கிரிக்கெட் பேட்

கிரிக்கெட் பேட் தயாரிப்பதற்கு தேக்கு ,பரக் ,பர்மா மரங்கள் பயன் படுத்த படுகிறது .இந்த மரம் நல்ல பதபடுத்தி அதன் பின்னர்(28-அங்குலம் ) 71cm செண்டி அளவு வைத்து வெட்டி கொள்ளவும் .நாம் வெட்டும் போது கத்தி முனை போன்று இருக்க வேண்டும் .மரத்தில் எந்த விதமான ஓட்டை ,குருத்து இல்லாமல் பார்த்து கொள்ளவும் .மழை காலங்களில் மரத்தின் அளவு சற்று கூடுதலாக வெட்டவும் .

இதன் கை பிடி உருண்டையாக கிரைண்டிங் செய்யவும் .பின்னர் நறுக்கிய பட்டையும் உருண்டையாக உள்ள கை பிடியை V வடிவவில் வெட்டி சேர்க்கவும் .இந்த இடத்தில பசை தடவவும் .இழக்கவும் அடி பட்டம் சற்று வளைவாக இருத்தல் வேண்டும் .இந்த வளைவு .இணக்க பட்ட படதில் உள்ளவாறு நெருப்பில் சூடு கட்டி வளைக்கவும் .பேட்டின் அடி பாகம் கிரைண்டிங் செய்யவும் மேல் பரப்பில் சைனிங் வரும் வரை நல்லக இழக்கவும் .கடைசியாக கை பிடியில் துணி சுற்றினால் முழு கிரிப் கிடைக்கும்.

இதன் அளவு மாற்று முழு விபரம் தொடரும்

Wednesday, February 1, 2012

மர பொருள் எப்படி செய்ய வேண்டும் விளக்கம்

.விளக்கம்
இது மைக்க அல்லது  காட் போர்டில் கட்டிங் செய்து பின்னர் அணைத்து சைடும்(வலுவலுபுக்காக) சிலிக்கான் தடவ வேண்டும் .தேவையான மர வார்னிஸ் அடிக்க வேண்டும்  இது முழுக்க முழுக்க மரத்தால் அனது சிறு துண்டுகளாக நறுக்கி , கிரைண்டிங் செய்ய வேண்டும். வெளி புறம் ,உள் புறம் இது மிக கவனமாக கிரைண்டிங் செய்யவேண்டும் .எதேனும் ஓட்டை மற்றும் பொருசல் இருந்தால் அரக்கு தடவ வேண்டும்.தேவையான மர வார்னிஸ் அடிக்க வேண்டும்.
இது போன்ற தொழில் அனைத்தும் வீட்டில் இருந்தே செய்யலாம் .குறைந்த முதலீடு .அதிக லாபம் .

வீட்டில் இருந்தே செய்யும் போது தனி வயரிங் செய்யவேண்டும்.தனி சர்விஸ் வாங்க வேண்டும். இதற்க்கு தேவையான எலக்ட்ரிகல்  செலவு RS.10000 to 20000 வரை இருக்கும்

இதற்க்கு தேவையான மூலப்பொருள் எல்லா மர அறுவை மில்களில் கிடைக்கும்.பழைய பொருள் விற்பனை செய்பவர்களிடம் கிடைக்கும்.
இதற்க்கு தேவையான மூலப்பொருள் பழைய மரமாக இருந்தால் நல்லது இது விரியது ,வளையாது,விலை மலிவாக கிடைக்கும்.இதன் முலம் நல்ல தரமாக கொடுக்க முடியும். 

இதற்க்கு தேவையான கட்டிங் மெசின்  முதல் RS.10000 to 100000வரை இயந்திரம் கிடைகிறது

பெண்கள் தயாரிக்கின்றனர்! ஆண்கள் விற்கின்றனர்!

Thnxs:பி.ஜெயச்சந்திரன்

தச்சுப் பணியில் பெண்கள்
உலகில் கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட தொழிற் பிரிவுகள் எல்லாம் ஆண்களை மையப்படுத்தித்தான் இருந்தன. இப்போது ஆண்ககளுக்கு நிகராகப் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துவருகின்றனர். கடினமான துறைகளையும்கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை.

மரச் சாமான்கள் தயாரிக்கும் தச்சுத் தொழிலிலும் பெண்கள் ஈடுபட்டுவருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தச்சுத் தொழிலில் மரம் அறுக்கும் தச்சர், தளப்பாடங்கள் செய்யும் தச்சர், தளப்பாடங்களை அழகுபடுத்தும் தச்சர் எனப் பல பிரிவுகள் உள்ளன. தச்சு வேலை என்பது ஒரு கலை சார்ந்த தொழிலாகவும் பார்க்கப்படுகின்றது. கலைநயம் மிக்க தளப்பாடங்கள் மிகவும் அதிக விலைக்கும் விற்பனையாகின்றன.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த முனியந்தாங்கல், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் தச்சுத் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். இப்பகுதிகளில் உள்ள தெருக்களின் வழியாகச் சென்றால், பெண்கள் உளியைக் கையில் எடுத்துக் கொண்டு சுத்தியால் சட்டத்தை அடித்துக் கொண்டு இருக்கும் சத்தம் மட்டுமே கேட்கிறது.
பெண்கள் தயாரிக்கும் நாற்காலி, மேஜை, பெஞ்ச் போன்ற பொருள்களின் விற்பனையை ஆண்கள் மேற்கொள்கின்றனர். இதுகுறித்து தச்சுத் தொழிலாளி சின்னபாப்பாவிடம் கேட்டபோது:

""நாங்கள் பரம்பரை பரம்பரையாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். ஆகையால், தச்சுத் தொழிலில் ஈடுபடுவது எங்களுக்கு கடினமாகத் தெரியவில்லை.
மாதம் ஒருநாள் நாங்கள் தயாரிக்கும் பொருள்களை கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரியில் ஏற்றிச் சென்று ஆண்கள் விற்பனை செய்கின்றனர். சிலர் சைக்கிளிலேயே எடுத்துச் சென்று ஆரணியிலும் விற்பனை செய்து வருகின்றனர். பெண்களுக்கு இயற்கையாகவே கலை நுட்பமான வேலைகளில் ஆர்வம் இருக்கும். அதனால் ஆர்வத்துடன் இத் தொழிலில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. 

எல்லா கலைக்கும் ஏற்படும் முட்டுக் கட்டைதான் இதிலும் இருக்கிறது. பணம்தான் வேறு என்ன?
மூலப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதால், குறைந்த வருவாயே கிடைக்கிறது. அதிக உழைப்பைச் செலுத்தி குறைந்த அளவுக்கே லாபம் ஈட்ட முடிகிறது. வருமானமும் போதவில்லை. அரசு எங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும்'' என்றார்.

பெண் தச்சுத் தொழிலாளி வசந்தி கூறுகையில், ""10ஆம் வகுப்பு முடித்த நான் மேற்கொண்டு படிக்க ஆவலாக இருந்தேன். வசதி இல்லாததால் தச்சுத் தொழிலில் ஈடுபட்டுவருகிறேன். படித்துவிட்டு ஏதாவது தொழில் செய்வதற்குப் பதில் பயிற்சியால் உருவாக்கிக் கொண்ட இதிலேயே பணம் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

அதிக உற்பத்திதான் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும். ஒவ்வொரு பொருளாகத் தயாரித்து அதை சைக்கிளில் கொண்டு சென்று விற்று காலம் தள்ள வேண்டியிருக்கிறது. வங்கிகள் எங்களுக்குக் கடன் உதவி செய்தால் நன்றாக இருக்கும்'' என்றார்.

இதுகுறித்து பெண்கள் மேம்பாட்டு நிறுவன செயலர் மோசஸ் ,""தச்சுத் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு வங்கிக் கடனுதவி அளிக்கலாம். தனிநபர்களிடம் அதிக வட்டிக்குப் பணம் பெற்று தச்சுத் தொழிலில் முதலீடு செய்வதால், இவர்களின் வருமானம் குறைகிறது. இவர்களை மகளிர் குழுக்களில் உறுப்பினர்களாக்கி, பர்னிச்சர் மார்ட் போன்ற கடைகளை ஏற்படுத்தித் தர அரசு முயற்சிக்க வேண்டும்'' என்றார்.

மர பொருள் எப்படி செய்ய வேண்டும் விளக்கம்

.விளக்கம்
இது மைக்க அல்லது  காட் போர்டில் கட்டிங் செய்து பின்னர் அணைத்து சைடும்(வலுவலுபுக்காக) சிலிக்கான் தடவ வேண்டும் .தேவையான மர வார்னிஸ் அடிக்க வேண்டும்  இது முழுக்க முழுக்க மரத்தால் அனது சிறு துண்டுகளாக நறுக்கி , கிரைண்டிங் செய்ய வேண்டும். வெளி புறம் ,உள் புறம் இது மிக கவனமாக கிரைண்டிங் செய்யவேண்டும் .எதேனும் ஓட்டை மற்றும் பொருசல் இருந்தால் அரக்கு தடவ வேண்டும்.தேவையான மர வார்னிஸ் அடிக்க வேண்டும்.
இது போன்ற தொழில் அனைத்தும் வீட்டில் இருந்தே செய்யலாம் .குறைந்த முதலீடு .அதிக லாபம் .

வீட்டில் இருந்தே செய்யும் போது தனி வயரிங் செய்யவேண்டும்.தனி சர்விஸ் வாங்க வேண்டும். இதற்க்கு தேவையான எலக்ட்ரிகல்  செலவு RS.10000 to 20000 வரை இருக்கும்

இதற்க்கு தேவையான மூலப்பொருள் எல்லா மர அறுவை மில்களில் கிடைக்கும்.பழைய பொருள் விற்பனை செய்பவர்களிடம் கிடைக்கும்.
இதற்க்கு தேவையான மூலப்பொருள் பழைய மரமாக இருந்தால் நல்லது இது விரியது ,வளையாது,விலை மலிவாக கிடைக்கும்.இதன் முலம் நல்ல தரமாக கொடுக்க முடியும். 

இதற்க்கு தேவையான கட்டிங் மெசின்  முதல் RS.10000 to 100000வரை இயந்திரம் கிடைகிறது

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites