இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label வினோதங்கள். Show all posts
Showing posts with label வினோதங்கள். Show all posts

Friday, January 27, 2012

பூமியின் வடமுனையை தாக்கியது சூரியப் புயல்: வானில் பிரகாசமான ஒளி தோன்றியது

சூரியனில் இருந்து வெடித்து சிதறிய காந்த புயல் பூமியை தாக்க வருகிறது என்று அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
சூரிய புயல் பூமியை நோக்கி பல கோடி மைல் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாகவும், இது செயற்கைகோள்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், இதன் மூலம் கணணி, கைபேசி மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் பாதிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தனர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இந்த தாக்குதல் அச்சம் அதிகம் இருந்தது.

இதனால் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு விமானங்கள் செல்லும் பாதைகளை தற்காலிகமாக மாற்றி அமைத்து இருந்தனர். இந்த காந்த புயல் பூமியை தாக்க தொடங்கி விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியனில் நேற்று முன் தினம் கரோனா பிளாஸ்மா கதிர்வீச்சு உருவாகி அன்றைய தினமே பூமியின் காந்த மண்டலத்திற்குள் வந்து விட்டதாக நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர்
பூமியின் வடமுனையில் உள்ள அயர்லாந்து, இங்கிலாந்தின் வட பகுதியான ஸ்காட்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளை காந்த புயல் தாக்கியது. அப்போது வானில் நீலம்-பச்சை நிறம் கலந்த ஒளி வெள்ளம் காணப்பட்டது. மின்னல் போல் வானில் ஒளி பாய்ச்சுவது போல் காந்தப்புயல் தாக்கியது. இதை விஞ்ஞானிகள் அதிநவீன டெலஸ்கோப் மூலம் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர்.
பூமியின் வடமுனையில் ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மற்றும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் இது போன்ற ஒளிவெள்ளம் தோன்றுவது வழக்கம். என்றாலும் இந்த முறை சூரிய காந்த புயலால் ஜனவரி மாதத்தில் இந்த ஒளி வெள்ளக்காட்சி தோன்றியதாக தேசிய பெருங்கடல் மற்றும் வளி மண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சூரிய காந்த புயல் கதிர் வீச்சால் பூமியின் வடமுனையில் தகவல் தொடர்பு பாதிக்கப்படலாம் என கருதி அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஹாங்காங், ஷாங்காய், சியோல் ஆகிய நகரங்களில் இருந்து வரும் விமானங்களை தென் பகுதி வழியாக வரும்படி பாதைகளை மாற்றியுள்ளது
சூரியப் புயல் குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வரும் டாக்டர் பிஷ்ஷர்(69) கூறுகையில், 22 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் மின் காந்த சக்தி அதிகமாக வெளிப்படுகிறது. சூரியனில் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை மின்காந்த புயல் ஏற்படுகிறது. இது புள்ளிகள் அல்லது சுடரொளி போல் காணப்படுகிறது.
அப்போது சூரியனின் வெப்பம் மிக அதிகமாக 10 ஆயிரம் டிகிரி பாரன்ஹீட்(5,500 டிகிரி செல்சியஸ்) வெப்பம் அடையும். மனிதனின் வாழ்நாளில் இதுபோல் மூன்று, நான்கு முறை சூரியனின் புயல் ஏற்படுவதை அறியலாம். வரும் 2013-ஆம் ஆண்டில் இரண்டு நிகழ்வுகளும் ஒன்று சேர்ந்து வர உள்ளதால் சூரியனில் இருந்து அதிகளவில் கதிரியக்கம் வெளிப்படும் வாய்ப்பு உள்ளது.
இதனால் வட ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் உள்ள மின்சக்தி நிலையங்கள் எளிதாக பாதிக்கப்பட்டு பல மாதங்கள் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியடையும் சூழ்நிலை ஏற்படலாம். எந்த அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் பாதிப்பு எப்படி இருக்கும் என்று தெரியாததால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை இப்போதே கூற முடியாது என்றார்.

மாஸ்கோவில் பயணிகள் தங்கும் வினோத அறைகள்


















ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோவில் ரஷ்ய வடிவமைப்பாளர்களால் பயணிகள் தங்குவதற்காக வித்தியாசமான அறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களில் பயணிகள் வெகுநேரம் காத்திருக்கின்றனர்.
இப்பயணிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள வியக்கத்தக்க அறைகளை மிகவும் வித்தியசமாக அமைத்துள்ளது. இங்கு பயணிகள் சுதந்திரமாகவும், தனிமையாகவும் தங்குவதற்காக இந்த அறைகள் அனைத்து வித வசதிகளையும் கொண்டுள்ளது. மேலும் இதனை அடுக்கு பலகைகளக் கொண்டு வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பி
விரைவில் துபாய்லும் வரும்
டத்தக்கது.

சிகாகோவில் மேகத்தினைப் பிரதிபலிக்கும் அழகிய நுழைவாயில்

சிகாகோவில் உள்ள மில்லினியம் பூங்காவில் அமைந்துள்ளது இந்த மேக நுழைவாயில். இந்நுழைவாயிலை இந்தியாவில் பிறந்த பிரிட்டன் கலைஞர் அனிஷ் கபூர் வடிவமைத்துள்ளார்.
மேகத்தை பிரதிபலிக்கும் இந்நுழைவாயில், கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளதால் இதில் சிகாகோ நகரமே அழகாக காட்சியளிக்கிறது.






















மேலும் அனைவரின் கண்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மேக நுழைவாயிலைப் படங்களில் காணலாம்.

சுரினாம் நாட்டில் காணப்படும் அரியவகை புதிய உயிரினங்கள்

தென் ஆப்பிரிக்காவில் உள்ள சுரினாம் நாட்டில் அடர்ந்த காட்டுப்பகுதிகள் அதிகம் உள்ளன. இங்கு மற்ற நாடுகளில் இல்லாத ஏராளமான உயிரினங்கள் வாழ்கின்றன. இது சம்பந்தமாக சர்வதேச உயிரியல் குழு ஒன்று ஆய்வு நடத்தியது. அப்போது இதுவரை கண்டுபிடிக்கப்படாத 40 விதமான உயிரினங்களை கண்டுபிடித்து உள்ளனர்.
தவளை , மீன், வண்ணத்து பூச்சி போன்றவற்றில் பல புதிய வகை உயரினங்கள் அங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதில் வித்தியாசமான தவளை, பல வண்ணங்களை கொண்ட வெட்டுக்கிளி , கைகள் போன்ற அமைப்பு உள்ள கெழுத்தி மீன் போன்றவை முக்கியமானதாகும்.
மேலும் தொடர்ந்து அங்கு ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதுவரை கண்டுபிடிக்கப்படாத இன்னும் ஏராளமான உயிரினங்கள் அங்கு இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.










Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites