இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label மெழுகு தொழில். Show all posts
Showing posts with label மெழுகு தொழில். Show all posts

Saturday, May 3, 2014

மெழுகு விளக்கு மேஜிக்!


மாற Wax Magic Lantern!EPP Group Urges Governments to Use ...

தீபாவளியைத் தொடர்ந்து, கார்த்திகை தீபம், புத்தாண்டு என வெளிச்சத் திருவிழாக்கள் வரிசை கட்டி நிற்கும் நேரமிது. விதம் விதமாக விளக்கேற்றி  ஒளிரச் செய்வதன் மூலம் வீடே சுபிட்சமாகப் பிரகாசிக்கும். சென்னை பெரம்பூரைச் சேர்ந்த சாந்தி ரவீந்திரன் செய்கிற மிதக்கும் மெழுகு விளக்குகள்  புதுமையானவை... அழகானவை!

‘‘நிறைய கைவினைக் கலைகள் தெரியும். அதுல மெழுகு உருவங்கள் செய்யறதும் ஒண்ணு. மெழுகுல பொம்மைகள் செய்திட்டிருந்த நான், அதோட  அடுத்தகட்டமா, விளக்குகள் செய்ய ஆரம்பிச்சேன். ரோஜா, செம்பருத்தி, சூரியகாந்தின்னு பூக்கள் வடிவ விளக்குகளுக்கு நிறைய வரவேற்பு இருக்கு.  அடுத்து பந்து வடிவ மெழுகுகளையும், ஜெல் கேண்டில்களையும் அதிகம் விரும்பறாங்க.  ஜெல் கேண்டில்கள் பார்க்க ரொம்ப அழகா இருக்கும். குட்டிக்  குட்டி கண்ணாடி டம்ளர்ல ஜெல் மெழுகை நிரப்பி, அப்படியே ஏத்தி வைக்கலாம். இந்த எல்லாமே எல்லா விசேஷங்களுக்கும் அன்பளிப்பா கொடுக்க  ஏற்றவை. இதையே இன்னும் கொஞ்சம் கிராண்டா கொடுக்கணும்னு விரும்பறவங்க, இதுலயே சென்ட் கலந்து செய்யப்படற மெழுகுவர்த்திகளை  விரும்பறாங்க. ஆப்பிள், கிரேப், லெமன், ஆரஞ்சுன்னு நிறைய வாசனைகள் கிடைக்குது’’ என்கிறார் சாந்தி.

வெறும் 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிலைத் தொடங்கலாமாம். ‘‘மோல்டுக்கான முதலீடுதான் அதிகம். மெட்டல் மோல்டுன்னா 2  ஆயிரத்துக்கும், சிலிக்கான் மோல்டை 500 ரூபாய்க்குள்ளேயும் வாங்கலாம். மெட்டல் மோல்டு எத்தனை வருஷங்கள் ஆனாலும் அப்படியே இருக்கும்.  ஒருமுறை பண்ற முதலீடுதான்... மத்தபடி மெழுகு சிப்ஸ் ஒரு கிலோ 120 ரூபாய்க்கு கிடைக்கும். அதுல 25 முதல் 30 விளக்குகள் பண்ணலாம்.

திரி, வாக்ஸ் கலர், சென்ட்டை எல்லாம் தேவைக்கேற்ப அப்பப்ப வாங்கிக்கலாம். 10 விளக்குகள் 50 ரூபாய்க்கும், சூரியகாந்தி, ரோஜா மாதிரியான  விளக்குகளை ஒன்று 10 ரூபாய்க்கும், பந்து வடிவ விளக்கை 25 ரூபாய்க்கும் கொடுக்கலாம். இதுல வேஸ்ட்டேஜ் கிடையாது. உடலை வருத்தற  உழைப்பு கிடையாது. 50 சதவிகித லாபம் நிச்சயம்’’ என்கிறவரிடம் ஒரே நாளில் 12 விதமான மெழுகு விளக்குகளை தேவையான பொருட்களுடன்  1,500 ரூபாய்  கட்டணத்தில் கற்றுக் கொள்ளலாம்.  (99414 46275)

Monday, February 27, 2012

மெழுகு பொம்மை தயாரிப்பது எப்படி

பார்த்த நொடியில் கவனம் ஈர்க்கின்றன சாந்தி செய்கிற மெழுகு பொம்மைகள். பரிசளிக்கவும் அலங்காரமாக வைக்கவும் ஏற்ற வகையில் மிக்கி மவுஸ், பிள்ளையார் என விதம்விதமான உருவங்களில் அசத்துகின்றன அத்தனையும். குறைந்த முதலீடும் குறைந்த நேர உழைப்பும் தேவைப்படுகிற மெழுகு பொம்மை தயாரிப்பு, வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருக்கும் பெண்களுக்குக் கணிசமான லாபம் தரும் என்கிறார் சாந்தி.

‘‘ஒரு எக்சிபிஷன்ல இதே மாதிரி பொம்மைகளைப் பார்த்தேன். அதைப் பண்றவங்களைத் தேடிக் கண்டுபிடிச்சுக் கத்துக்கிட்டேன். வீட்டுக்கு வர்றவங்களுக்கு அதை அன்பளிப்பா கொடுக்க ஆரம்பிச்சேன். அதைப் பார்த்துட்டு பிறந்த நாள் பார்ட்டில கொடுக்கிறதுக்கும், கொலுவுக்கும் மொத்தமா ஆர்டர் வர ஆரம்பிச்சது. அப்படியே வளர்ந்து, இன்னிக்கு கடைகளுக்கும் சப்ளை பண்றேன். இதைச் செய்யறது ரொம்ப சிம்பிள். பெரிய உடலுழைப்பு தேவையில்லை. ஆனா, திருப்தியான லாபம் நிச்சயம்’’ என்கிறவர், இந்த பிசினஸில் இறங்க நினைப்போருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை?
முதலீடு?
‘‘பாரஃபின் வாக்ஸ் சிப்ஸ்
(1 கிலோ & 70 ரூபாய்), மெட்டல் மோல்டு (ஆயிரம் ரூபாய்), பொம்மையை அலங்கரிக்க கண், மூக்கு (1 பாக்கெட் & 5 ரூபாய்), வாக்ஸ் கலர் (1 பாக்ஸ் & 10 ரூபாய்). பேக்கிங் செய்ய பிளாஸ்டிக் ஷீட் (ஒன்று & 1 ரூபாய்).
மோல்டுக்கான செலவுதான் கொஞ்சம் அதிகம். ஆனா, அது ஒரே முறை முதலீடுதான். முதல் முறை தொழில் தொடங்கறப்ப 1,500 ரூபாய் முதலீடு போட்டா போதும்.’’

லாபம்? விற்பனை வாய்ப்பு?
‘‘ஒரு கிலோ மெழுகில் 100 பொம்மைகள் செய்யலாம். 2 மணி நேரத்தில் இதைச் செய்து விடலாம். ஒரு பொம்மையை 10 ரூபாய்க்கு விற்கலாம். கடைகளில் அதை 20 ரூபாய்க்கு விற்கிறார்கள்.’’

பயிற்சி?
‘‘ஒரே நாள் பயிற்சி. கட்டணம் 300 ரூபாய்.’’

-சாந்தி

Contact: 91-44-42209191 Extn:2234

Saturday, November 12, 2011

மெழுகுவர்த்தி தயாரிப்பில் ஜொலிக்குது லாபம்


மெழுகுவர்த்தி தயாரிக்கும் கலை பழமையானது. அன்று தொடங்கி இன்று வரை மெழுகுவர்த்திக்கு மக்கள் மத்தியில் நல்ல கிராக்கி உள்ளது. வழிபாடு, மின்தடை நேரங்களில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது மெழுகுவர்த்தியை தான். எனவே இதை தயாரிக்கும் தொழிலை மேற்கொண்டால் வாழ்வே வெளிச்சமாகும்‘ என்று கூறுகிறார் ஈரோடு ‘அம்மன் கேண்டில் ஒர்க்ஸ்‘ உரிமையாளர் மகேஸ்வரி. அவர் கூறியதாவது: குறைந்த முதலீட்டில் எளிதாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தேன். மெழுகுவர்த்தி தயாரித்து விற்கலாம் என முடிவு செய்து 10 நாட்களில் தொழிலை கற்றுக்கொண்டேன்.

படிப்படியாக தொழிலில் உள்ள நுணுக்கங்களை தெரிந்து கொண்டேன். முதலில் வீட்டுக்கு அருகில் உள்ள மளிகை கடைகளில் ஆர்டர்கள் பெற்று அதற்கேற்ப தயாரித்து விற்றேன். படிப்படியாக டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் உள்பட பல்வேறு இடங்களில் விற்க துவங்கினேன். தொழில் விரிவடைந்ததோடு நல்ல வருமானமும் கிடைத்தது. பிறகு மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்க தொடங்கினேன். தற்போது பல பெண்கள் என்னிடம் பயிற்சி பெறுகிறார்கள். வீட்டில் உள்ள பெண்கள் இத்தொழில் மூலம் தங்கள் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.

இதில், வேலைப்பளு குறைவு. குறைந்த முதலீடு, இட வசதி போதுமானது. ஒருவர் மட்டும் உழைத்தாலே போதும். வீட்டிலேயே இதை நல்ல முறையில் நடத்த முடியும். தினமும் குறைந்தது 5 கிலோ, அதிகபட்சம் 25 கிலோ மெழுகுவர்த்தி தயாரிக்க முடியும். இதற்கு ஹேண்ட் மெஷின், செமிஆட்டோமெடிக் என்ற இரு வகை மெஷின்கள் உள்ளது.  ஹேண்ட் மெஷின் ரூ.500 முதல் விற்பனை செய்யப்படுகிறது. செமி ஆட்டோமெடிக் மெஷின் வாங்க ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. செமி ஆட்டோமெடிக் மூலம் நாள் ஒன்றுக்கு 75 கிலோ வரை உற்பத்தி செய்ய முடியும். தொழில் தொடங்க, வங்கிகளில் எளிதாக கடன் பெற முடியும்.

பிரதமர் சுயவேலைவாய்ப்பு திட்டம், கதர் கிராம தொழில் வாரியம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ போன்றவற்றில் 35 சதவீத மானியத்தில் வங்கி கடன் எளிதாக பெற முடியும். கிராமமாக இருப்பின் கடன் தொகையில் 35 சதவீதமும், நகர்ப்புறமாக இருப்பின் 25 சதவீதமும், பெண்களுக்கு 35 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. ரூ.1 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை கடன் கிடைக்கிறது. ரூ.2 லட்சம் வரை வங்கிகளில் எந்தவித கேரண்டியும் கேட்பதில்லை. இவ்வாறு மகேஸ்வரி கூறினார்.

என்னென்ன தேவை?

பெட்ரோல் கழிவில் இருந்து கிடைக்கும் மெழுகு, காட்டன்நூல், அச்சு, அலுமினிய டிரே, மெழுகு ஊற்றுவதற்கான கோப்பை, கட் செய்ய சிறிய கத்தி, மெழுகு உருக்க அடுப்பு, அச்சில் மெழுகு ஒட்டாமல் இருக்க தேங்காய் எண்ணெய், கலர் வருவதற்கு புளோரிசன் கெமிக்கல், தண்ணீர் ஊற்றுவதற்கான பக்கெட், பேக்கிங் செய்வதற்கான பாலிதீன் கவர்கள்.

தயாரிக்கும் முறை

கடைகளில் கிடைக்கும் மெழுகை வாங்கி வந்து ஒரு அலுமினிய பாத்திரத்தில் போட்டு சூடேற்ற வேண்டும். அச்சில் மெழுகு ஒட்டாமல் வருவதற்கு தேங்காய் எண்ணெயை லேசாக தடவவேண்டும். சூடேற்றிய மெழுகை அச்சில் ஊற்ற வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து மெழுகு ஊற்றப்பட்ட அச்சை வாளி தண்ணீரில் போட வேண்டும். சூடாக இருந்த மெழுகு மற்றும் அச்சு குளிர் நிலைக்கு வந்ததும், அச்சில் இருந்து மெழுகுவர்த்திகளை ஒவ்வொன்றாக எடுக்க வேண்டும். மெழுகுவர்த்தியை நீளமாக தான் உருவாக்க வேண்டும் என்று இல்லை. எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம்.

வெள்ளை கலரில் மட்டுமல்ல; எந்த வண்ணத்தில் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். என்ன வண்ணம் தேவைப்படுகின்றதோ அதற்கு ஏற்ற கலர் கெமிக்கல்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம். இவற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து மெழுகில் சேர்த்தால் வண்ண மெழுகுவர்த்தி கிடைக்கும்.

ரகங்கள்

லோக்கல், வெள்ளை, கலர், கப், சிலை, ஜெல் என ஏராளமான வகைகளில் மெழுகுவர்த்திகள் உள்ளன. லோக்கல் என்பது நீளமாக இருக்கும் மெழுகுவர்த்தியை குறிக்கிறது. ஒவ்வொரு வகைக்கும் அச்சுகள் உள்ளது. அவற்றின் மூலம் பல்வேறு வகைகளில் தயாரிக்கலாம்.

முதலீடு

1 கிலோ மெழுகு தற்போது கடைகளில் ரூ.95க்கு விற்கப்படுகிறது. அச்சு வாங்க ரூ.500, டிரே ரூ.100, தேவையான எரிபொருள், பக்கெட் ரூ.50, காட்டன் நூல் (திரி) ஒரு கிலோ ரூ.120, கை மெஷின் ரூ.300. எடை போடுவதற்கான எலக்ட்ரானிக்ஸ் தராசு ரூ.400 என மொத்தம் ரூ.1,600 இருந்தால் போதுமானது.

வர்த்தக வாய்ப்பு

உற்பத்தி செய்த மெழுகுவர்த்திகளை மளிகை கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்களை அணுகி ஆர்டர்கள் பெற்று விற்கலாம். மெழுகுவர்த்திகளை வாங்கி விற்பனை செய்வதற்காக தனியே கடைகளும் உள்ளன. சர்ச்களிலும் ஆர்டர்கள் பெற முடியும்.

வருமானம்

ஒரு கிலோ மெழுகு ரூ.95க்கு கடைகளில் கிடைக்கிறது. இதை மெழுகுவர்த்தியாக தயாரித்து ஒரு கிலோ ரூ.120க்கு விற்கலாம். பெரும்பாலும் கடைகளுக்கு கிலோ கணக்கில் மட்டுமே விற்கப்படுவதால் ஒரு கிலோ விற்றால் ரூ.25 லாபம் கிடைக்கிறது. திரி தயாரிக்க பயன்படும் காட்டன்நூல், பேக்கிங் செய்வதற்கான பாலிதீன் கவர்கள் ஆகியவற்றுக்கு ஆகும் செலவும் குறைவு. ஒரு நாளைக்கு சாதாரணமாக 20 கிலோ வரை மெழுகுவர்த்திகள் தயாரிக்கலாம். ஒரு கிலோவுக்கு ரூ.25 லாபம் கிடைக்கிற நிலையில் 20 கிலோவுக்கு ரூ.500 வரை வருமானம் கிடைக்கிறது. பேக்கிங் செலவு, பாலிதீன் கவர்கள், காட்டன் நூல் செலவு உள்ளிட்டவற்றை கழித்தால் ரூ.450 வரை உறுதியாக லாபம் ஈட்ட முடியும். ஆர்டர்கள் தொடர்ந்து கிடைத்தால் மாதம் ரூ.13,500 வரை லாபம் ஈட்ட முடியும்.

டிப்ஸ்: திரி மூழ்காதவாறு தண்ணீரில் வைத்தால், 2 மணி நேரம் எரியும் மெழுகுவர்த்தி 3 மணி நேரம் எரியும்.























உதரனம்மாக குறும் படம் பார்க்கவும்


Tuesday, October 11, 2011

மெழுகு வர்த்தி தயாரிக்கும்

மெழுகு வர்த்தி தயாரிக்கும் முறை

தேவையான பொருள்கள்

வெள்ளை மெழுகு - 5 கிலோ
ஸ்டெரிக் ஆசிட்- 1.5 கிலோ
ஸின்க் ஆக்சைட் - 200 கிராம்

தேவையான அகல நீளத்தில் மோல்டுகள் (தகரக் குழாய்களில்) தயார் செய்து கொள்ள வேண்டும்.அது மாதிரி மோல்டு செய்யும் போது அடிபாகம் மூடப்படாமலும் ,நுனிபாகம் முக்கோண வடிவிலும் இருக்க வேண்டும்.இரண்டு பாகங்களும் பிரித்து எடுக்கும் போது தனி தனியாக வருவது போல் இருப்பது நலம்.அப்ப தான் மெழுகு வர்த்தி செய்த பின் அதை மோல்டு வில் இருந்து பிரிப்பது எளிது.

இது மாதிரி பல மோல்டுகள் செய்து ஒரு stand ல் தயாராக வைத்து இருக்க வேண்டும்.அவ்வாறு நிறுத்தி வைக்கும் மோல்டுகளில் மெழுகு வர்த்தி எரிவதற்கு நாடா அதாங்க திரி யை சிறிய கம்பியின் உதவியுடன் நிறுத்தி வைக்க வேண்டும்.



அப்புறம் வெள்ளை மெழுகுவை விட்டு இளஞ் சூட்டில் உருக்கி கொள்ளவும்.அதன் பின் அதில் ஸ்டெரிக் ஆசிடைச் சேர்க்கவும்.கடைசியாய் ஸின்க் ஆசிடைச் சேர்க்கவும்.இவ்வாறு
தயாரான திரவத்தை ஓர் கரண்டியால் அள்ளி வரிசையாய் நிறுத்தியுள்ள குழாய்களில் ஊற்றவும்.(விருப்பம் உள்ளவர்களுக்கு தொழில் நுட்ப விபரங்கள் கேட்டால் அது தனியா தருகிறேன்) 

ஊற்றிய திரவம் ஆறிய பின் , மோல்டை பத்திரமாக பிரித்து எடுக்க வேண்டும்.அவ்வளவு தான்.

மெழுகு வர்த்திகளைப் பல வர்ணங்களில் தயாரிக்க விரும்புவோர் oil Red,oil Green,oil yellow ,oil Blue போன்ற எண்ணை வகைகளில் சேர்த்தால் சிவப்பு,பச்சை,மஞ்சள் , நீளம் மெழுகுவர்த்திகளை பெறலாம்.மெழுகு உருகிக் கொண்டிருக்கும் போது கலர் பவுடரைக் கலக்க வேண்டும். 

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites