இரவில் மலரும் ஒரே ஒரு வகை ஓக்கிட் மலராக Bulbophyllum என்ற வகை பூ உள்ளதாக தாவரவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகிலுள்ள 25,000 வகை ஓக்கிட் மலர்களில் இந்த இனம் மட்டுமே இரவில் பூக்கின்றது. இந்த மலர் ஏன் இரவில் பூக்கின்றதென்பதற்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை. இந்தப் பூ பப்புவா நியூகினி அருகிலுள்ள நியூ பிரிட்டன் என்ற தீவில் டச்சு ஆய்வாளர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. பூக்கள் இரவில் மலர்வது இல்லையெனினும் ஒரு ஓக்கிட் வகைப் பூ இவ்வாறு மலர்வது அதிசயம் என்றே கூறப்படுகிறது. இரவில் மலரும் பூக்களில் புகழ்பெற்றதாக இரவில் மலரும் நாகதாளிப் பூ உள்ளது. வருடத்தில் ஒருமுறை பூக்கும் இதன் அளவு ஓர் உணவுத்தட்டின் அளவில் காணப்படும். இது வெளவால்களையும் ஈர்க்கும் தன்மைகொண்டது. ஆனால் இந்த ஓக்கிட்டினால் எது ஈர்க்கப்படும் என்பது தெரியவில்லை என்றும் இதனால் இரவில் திரியும் பூச்சிகள் ஈர்க்கப்படலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். |
0 comments:
Post a Comment