சுமார் 4 அங்குலம் நீளமுள்ள அட்டை பூச்சி, 16 வயது நிறம்பிய சிறுவனின் சுவாசக்குழலில் சுமார் 2 மாத காலமாக உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது. அதனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினர். சுவாசக்குழலில் இருந்து அகற்றப்பட்ட பிறகும் அந்த அட்டைப்பூச்சி உயிரோடு இருந்தது. சீனாவில் டோ ஜியாவான் என்ற 16 வயது நிரம்பிய சிறுவன் இரண்டு மாதங்களாக தொண்டை புண்ணால் அவதியுற்றான். அச்சிறுவனின் பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில் 4 அங்குல நீளமுள்ள அட்டை பூச்சி அவன் தொண்டையில் உயிரோடு இருப்பதாக கண்டறிந்தனர் பின்பு அறுவை சிகிச்சையின் காரணமாக அச்சிறுவனுக்கு அளித்த மயக்க மருந்தின் மூலம் கூட அப்பூச்சி இறக்கவில்லை என்பது மிக ஆச்சரியமான ஒன்று என மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரோடு அந்த பூச்சி அகற்றப்பட்டது. |
0 comments:
Post a Comment