இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label தையால் தொழில்லில் நல்ல லாபம். Show all posts
Showing posts with label தையால் தொழில்லில் நல்ல லாபம். Show all posts

Thursday, July 13, 2023

தையால் தொழில்லில் நல்ல லாபம்

 விழுப்புரத்தைச் சேர்ந்த மான்விழி கண்ணன், டெய்லரிங் தொழிலில் 20 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஃபேஷன் தொழிலில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார்.

வர்லாம் வாங்க!

காலங்கள் மாற, மக்கள் தங்கள் உடைகளிலும் புதுமைகளை அதிகம் விரும்புகின்றனர். குறிப்பாக, பெண்களுக்கான ஆடைகள் தயாரிப்பில் இருக்கும் தொழில் வாய்ப்புகள் ஏராளம். அதிலும் மணமகளுக்கான ஆடை, அலங்காரப் பொருள்கள் தயாரிப்பில் பெரிய வியாபார வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. நிச்சயதார்த்தம், திருமணம், வரவேற்பு நிகழ்ச்சி என ஒவ்வொரு தருணத்திலும் ஏராளமான வேலைப்பாடுகளுடன்கூடிய ஆடைகள், அவற்றுக்குப் பொருத்தமான அலங்காரப் பொருள்களைத் தயாரித்து, ஒரு திருமண ஆர்டரிலேயே பல ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டலாம். இதுபோல சுபமுகூர்த்த நிகழ்ச்சிகள் உட்பட வழக்கமான பயன்பாடுகளுக்கான ஆடை களிலும் பல்வேறு டிசைன்களைப் புகுத்தி அட்டகாசமான வருமானம் ஈட்டலாம்.

ஒரு பிளவுஸ்... பல ஆயிரம் வருமானம்!

சாதாரண காட்டன் ஆடைகள் முதல் பட்டுப் புடவைகள் வரை எல்லாவற்றிலும் டிசைனிங் வேலைகளையே பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். இந்த கொரோனா காலத்திலும்கூட, ‘டிசைனர் மாஸ்க்தான் வேண்டும்’ என்போரும் உண்டு. மக்களின் தேவைதான் இந்தத் தொழிலுக்கான பிசினஸ் படிக்கட்டு. உதாரணத்துக்கு டிசைனர் பிளவுஸ் தயாரிப்புக்கான மூலப் பொருள்கள் வாங்க சில நூறு முதல் சில ஆயிரம் ரூபாய்வரைதான் செலவாகும். ஆனால், அதன் பிறகான உழைப்புதான் பெரியது. அதில், ஆரி, எம்ப்ராய்டரிங், ஸ்டோன் வேலைப்பாடுகள் அனைத்தையும் முடிக்கச் சில தினங்கள் வரை ஆகலாம். உழைப்புக்கேற்ப, அந்த டிசைனர் பிளவுஸில் பல ஆயிரம் லாபம் ஈட்டலாம்.

அப்டேட் எப்போதும் அவசியம்!

தற்போது பெண்களுக்கான ஆடைகளில் பெயின்டிங் வேலைப் பாடுகளுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. டெய்லரிங் மட்டும்தான் தெரியும் என்பதைத் தாண்டி, எம்ப்ராய்டரிங், ஆடைகளில் பெயின்டிங் செய்வது உட்பட டிசைனிங் வேலைகளையும் தெரிந்து கொண்டால் வேகமாக முன்னேறலாம். தரம் நன்றாக இருந்தால் நாம் எதிர்பார்த்ததைவிடவும் கூடுதல் வருமானமும் கிடைக்கும்.

கூடுதல் வருமானத்துக்கு உபதொழில்கள்!

ஆடைக்குப் பொருத்தமான ஆபரணங்களைப் பயன்படுத்தவே பலரும் ஆசைப்படுவார்கள். எனவே, டிசைனிங், டெய்லரிங் தொழில்களுடன் சில்க் த்ரெட் வளையல், டிசைனர் ஜிமிக்கி, மணமகள் அலங்காரத்துக்கான அலங்காரப் பூக்கள், ஜடை அலங்காரத்தையும் செய்துகொடுப்பதுடன், மணமகள் அலங்காரம் உள்ளிட்ட வேலைகளும் தெரிந்திருந்தால், எல்லாக் காலத்திலும் நிலையான வேலைவாய்ப்புடன், நிலையான வருமானத்தையும் உறுதி செய்யலாம். தவிர, சுப நிகழ்ச்சிகளுக்கான டிசைனர் ஆரத்தித் தட்டு, சீர்வரிசைத் தட்டு வடிவமைப்பிலும் நல்ல வருமானம்

ஈட்ட முடியும். ஆர்வம், கிரியேட்டிவிட்டி திறன்தான் இந்தத் தொழிலுக்கான அடிப்படை மூலதனம். ஒரு டிசைன் கற்றுக்கொண்டால் அதை வைத்தே புதிய டிசைன்கள் பலவற்றையும் உருவாக்கும் திறன் இருந்தால் இந்தத் தொழிலில் வேகமாக வளரலாம். வெளியிடங்களுக்குப் போகும்போது பலதரப்பட்ட மக்கள் பயன்படுத்தும் ஆடைகள், பத்திரிகைகள், தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் மூலம் ஃபேஷன் விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் நமக்கு அனுபவம் கூடுவதுடன், இந்தத் துறையில் நீண்டகாலம் நிலைத்திருக்கவும் முடியும்.



முதலீடு: டெய்லரிங் தெரிந்தவர்கள், உறவினர் மற்றும் தெரிந்தவர் களுக்கு ஆடைகள் தயாரித்து அனுபவம் பெற்று தொழிலாக மாற்றலாம். இதற்குச் சில ஆயிரம் ரூபாய் முதலீடே போதும்.

மூலப்பொருள்கள்: நூல், ஊசி, கத்தரிக்கோல், டேப், அயர்ன் பாக்ஸ், ஆரி மற்றும் எம்ப்ராய்டரிங் தேவைகளுக்கான பொருள்கள்.

பயிற்சி: தையல் பயிற்சி வகுப்புகள் மற்றும் மகளிர் குழுப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளலாம். டெய்லரிங் தொழில் செய் வோரிடமும் பயிற்சி பெறலாம்.

விற்பனை வாய்ப்பு: ஒரு வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பை மீறி நேர்த்தியாக ஆடைகளைத் தயாரித்துக் கொடுத்தால், அவரால் பல வாடிக்கையாளர்கள் நம்மைத் தேடிவருவார்கள். தயாரிக்கும் ஆடைகளை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டும் புதிய வாடிக்கையாளர்களை ஈட்டலாம். ஃபேஷன், டெய்லரிங் விஷயங்களை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுத்தும், பயிற்சி வகுப்புகள் நடத்தியும் வருமானம் ஈட்டலாம்.

நோட் பண்ணுங்க!

கால மாற்றத்துக்கேற்ப ஃபேஷன் துறையில் அறிமுகமாகும் புதுமைகள் குறித்து உடனுக்குடன் தெரிந்து வைத்திருப்பதும் அவசியம். இது நம் மூலமாக வாடிக்கையாளர்களுக்குத் தெரிந்தால்தான், இந்தத் துறையில் நமக்கு அதிக அனுபவமும் ஆர்வமும் இருப்பது அவர்களுக்குப் புரியும். அதனால், அவர்கள் வேறு ஒரு டிசைனரையோ, டெய்லரையோ நாடிச் செல்ல வாய்ப்பில்லை.

* ஃபேஷன் தொழில் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் பெற, சென்னையிலுள்ள ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தைத் தொடர்புகொள்ளலாம்.

தொடர்புக்கு: 044 - 22500121

பயிற்சி நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.

Thursday, September 3, 2015

பெர்ஃபெக்ட் பிளவுஸ்

Perfect blouse
காஸ்ட்லியான சேலையின் அழகையும் சுமாராக தைக்கப்பட்ட பிளவுஸ் கெடுத்துவிடும். அதுவே கரெக்ட் ஃபிட்டிங்கில்  தைக்கப்பட்ட சாதாரண மெட்டீரியல் பிளவுஸ், சுமாரான சேலையையும் சூப்பராகக் காட்டும். அது மட்டுமல்ல... அதை அணிந்திருப்பவருக்கு ஒரு தன்னம்பிக்கையையும் கொடுக்கும்.

அளவு ஜாக்கெட்டை டெய்லர்கிட்ட கொடுத்து தைக்கிற போது அளவு மாறாம தச்சுக் கொடுப்பாங்களே தவிர, உங்க உடம்பு  வாகுக்கு ஏத்தபடி நிறை, குறைகளைப் பார்த்து கரெக்ட் பண்ணித் தர மாட்டாங்க. ரெடிமேட் பிளவுஸ் வாங்கும்போதும் இதுதான்  பிரச்னை. எல்லாரோட உடல்வாகும் ஒரே மாதிரி இருக்கிறதில்லை. இதையெல்லாம் யோசிச்சுதான் ஒவ்வொருத்தருக்கும்  கரெக்ட் ஃபிட்டிங்ல பிளவுஸ் தச்சுக் கொடுக்கிறதுல ஸ்பெஷலைஸ் பண்ணினேன்’’ என்கிறார் சென்னை, சைதாப்பேட்டையைச்  சேர்ந்த லதா. 

கட்டோரி, பிரின்சஸ், கிராஸ் கட் என இவர் தைக்கிற ஒவ்வொரு மாடல் பிளவுஸும் வேறு வேறு மாதிரியான உடல்வாகு  உடையவர்களுக்கும் கச்சிதமாகப் பொருந்துமாம். குண்டானவங்களுக்கு கட்டோரி மாடல் சரியா இருக்கும். ரொம்ப  குண்டானவங்களுக்கு துணி பத்தாம, முன்பக்கம் இழுக்கிற மாதிரி இருக்கும். அவங்களுக்கு கிராஸ் கட்டிங் மாடல் தைக்கலாம்.  ஃபேன்சி புடவைகளுக்கு பிரின்சஸ் மாடல் போடலாம். 

இப்படி ஒருத்தரோட உடலமைப்பைப் பார்த்துத் தைக்கணும். இது தவிர சாதாரண பிளவுஸ், பேக் ஓப்பன் வச்ச பிளவுஸ்,  லைனிங் பிளவுஸும் தைக்கிறேன்’’ என்கிற லதா, ஒரே ஒரு தையல் மெஷினை மட்டும் மூலதனமாக வைத்து இந்த  பிசினஸில் இறங்க தைரியம் தருகிறார். குறைஞ்சது ஒரு ஜாக்கெட்டுக்கு 80 ரூபாய்லேருந்து, அதிகபட்சமா 200 ரூபாய்  வரைக்கும் கூலி வாங்கலாம். ஒரு நாளைக்கு 3 பிளவுஸ் தைக்கலாம். 50 சதவிகித லாபம் நிச்சயம். ஒருநாள்கூட  தொய்வில்லாம, வருஷம் முழுக்க பிஸியா வச்சிருக்கிற ஒரே பிசினஸும் கூட’’ என்பவரிடம் 2 நாள் பயிற்சியில் 5 மாடல்  பிளவுஸ் தைக்க கற்றுக் கொள்ள கட்டணம் 1,000 ரூபாய்.

நன்றி குங்குமம் தோழி

Saturday, January 31, 2015

குட்டீஸ் குல்லா பூட்டிஸ்!

குட்டீஸ் குல்லா பூட்டிஸ்!பனிக்காலம் பக்கத்தில் இருக்கிறது. சென்ற வருடம் வாங்கிய குழந்தைகளின் குல்லாவும் பூட்டிஸும் சிறியதாகிப் போயிருக்கும். ‘‘அதனால என்ன? நீங்களே உங்க கைப்பட புதுசா பின்னிட்டா போச்சு...’’ என்கிறார் சென்னை, ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த ஜலஜா. ‘குல்லாவும் சாக்ஸும் பின்றதென்ன அவ்ளோ ஈஸியான விஷயமா?’ எனக் கேட்பவர்களுக்கு ஜலஜாவின் பதில் ஆச்சரியம் தரலாம்!

‘‘நிட்டிங்னு சொல்ற அடிப்படை பின்னல் வேலை தெரிஞ்சா போதும். குல்லாவும் பூட்டிஸும் பின்றது ரொம்பவே ஈஸி. நிட்டிங் தெரியணும்னு சொன்னதும் பயப்பட வேண்டியதில்லை. வெறும் அரை மணி நேரத்துலயே அதையும் கத்துக்கலாம்...’’ என்கிறவர், நிட்டிங் தெரிந்தால், உல்லன் நூல் கொண்டு குல்லா, குழந்தைகளுக்கான பூட்டிஸ், ஸ்கார்ப், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான தொப்பி உள்ளிட்ட எல்லாம் பின்னி விடலாம் என 
உத்தரவாதம் தருகிறார்.

‘‘உல்லன் நூல், நிட்டிங் ஊசினு ரெண்டு பொருட்கள்தான் தேவை. இது தவிர, லூம் நிட்டிங்னு ஒண்ணு இருக்கு. வேலையை ரொம்பவே சுலபமாக்கிற இது பார்க்கிறதுக்கு பிளாஸ்டிக்ல, விளையாட்டுப் பொம்மை மாதிரி இருக்கும். இதுல வேற வேற அளவுகள் இருக்கு. இது இல்லாமலும் நிட்டிங் பண்ணலாம். இன்னும் சீக்கிரமா பின்ன நினைக்கிறவங்க நிட்டிங் லூம் வாங்கிக்கலாம். லூம் இல்லாம 500 ரூபாயும் அதோட சேர்த்து 1,000 முதல் 1,500 ரூபாயும் முதலீடு தேவைப்படும். குழந்தைங்களோட குல்லாவை 30 ரூபாய்க்கு விற்கலாம். சைஸையும் டிசைனையும் பொறுத்தது விலை. 50 சதவிகிதத்துக்கு மேலயே லாபம் பார்க்கலாம்...’’ என்கிற ஜலஜாவிடம் 2 நாள் பயிற்சியில் 5 வகையான உல்லன் கிராஃப்ட்டை கற்றுக் கொள்ள (தேவையான பொருட்களுடன் சேர்த்து) கட்டணம் 2 ஆயிரம் ரூபாய் ( 80562 22923).

நைஸ்... நல்ல நைட்டி

வசதியான உடையாக மட்டுமின்றி, அவசிய உடையாகவும் மாறிவிட்டது நைட்டி. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அணிகிற உடையாகவும் மாறிவிட்ட நைட்டியின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது. சல்வாரோ, சேலையோ வாங்கிவிடலாம் என்கிற அளவுக்கு நைட்டியின் விலை அதிகரித்திருக்கிறது. ‘‘தையல் மெஷின் மிதிக்கத் தெரிஞ்சா போதும். நைட்டி தைக்கக் கத்துக்கலாம். அதையே ஒரு பிசினஸாகவும் பண்ணலாம்’’ என்கிறார் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த வித்யா.

‘‘பி.காம் முடிச்சிட்டு, எம்.பி.ஏ. பண்ணியிருக்கேன். வேலைக்குப் போயிட்டிருந்தேன். வீட்ல வயசானவங்களைப் பார்த்துக்கறதுக்காக வேலையை விட வேண்டி வந்தது. டெய்லரிங் தெரியும். எனக்கான பிளவுஸ், சுடிதார், நைட்டியெல்லாம் பல வருஷமா நானாதான் தச்சுப் போடறேன். வேலையை விட்டதும், கிடைக்கிற நேரத்துல வேற ஏதாவது உபயோகமா பண்ணணும்னு யோசிச்ச போது, டெய்லரிங் ஐடியா வந்தது. சுடிதார், பிளவுஸ் தைக்க நிறைய ஆட்கள் இருக்காங்க. 

நைட்டி தைக்கத்தான் சரியான ஆட்கள் இல்லை. கடைகள்ல வாங்கற நைட்டி பெரும்பாலும் சரியான அளவுகள்ல கிடைக்கிறதில்லை. காஸ்ட்லியாவும் இருக்கு. ரெண்டு முறை துவைச்சதுமே தையல் விட்டுப் போகுது. இப்படி எந்தப் பிரச்னைகளும் இல்லாதபடி எல்லாருக்கும் பொருந்தற அளவுகள்ல, தையல் விட்டுப் போகாத நைட்டிகள்தான் என்னோட ஸ்பெஷல்’’ என்கிற வித்யா, காலர் வைத்தது, ஓபன் நெக், ஜிப் வைத்தது, எலாஸ்டிக் வைத்தது, கர்ப்பிணி மற்றும் குழந்தை பெற்ற பெண்களுக்கானது என 5 மாடல்களில் நைட்டி தைக்கிறார்.Nice ... nice nightgown!

‘‘எக்ஸ் எல், டபுள் எக்ஸ் எல், ட்ரிபுள் எக்ஸ் எல்னு மூணு சைஸ்லயும் தைக்கிறேன். தரமான காட்டன் துணியில மட்டும்தான் தைக்கிறேன். அதனால தண்ணியில நனைச்சதும் சுருங்காது. ஓவர்லாக் பண்ணிக் கொடுக்கறேன். மேல் தையல் போட வேண்டிய அவசியமில்லை. கடையைவிட விலையும் கம்மி...’’ என ஏகப்பட்ட நல்ல விஷயங்களை அடுக்குகிற வித்யா, தையல் மெஷினுடன் சேர்த்து 5 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிலில் துணிந்து இறங்கலாம் என்கிறார்.

‘‘ஒரு நாளைக்கு 20 முதல் 25 நைட்டி தைக்கலாம். கடை விலையை விட கம்மியா கொடுத்தா, பெரிய லாபம் பார்க்கலாம்...’’ & நம்பிக்கையாகச் சொல்கிறவரிடம் ஒரே நாள் பயிற்சியில் நைட்டி தைக்கப் பயிற்சி எடுக்கலாம். ஒரு நைட்டிக்கான மெட்டீரியலுடன் சேர்த்துக் கட்டணம் 750 ரூபாய். (99626 44351)

Saturday, December 6, 2014

வீட்டிலிருந்தபடியே சம்பாதிப்பதற்கு எவ்வளவோ வழிகள் இருக்கின்றன.

 அதற்கு நம் திறமை என்ன என்பதையும் அதனை நாம் எப்படி புத்திசாலித்தனமாக பயன்படுத்துகின்றோம் என்பது தான் முக்கியம்.

எல்லாப் பெண்களுக்கும் அவசியம் தேவைப்படுகிற ஒன்று பொருளாதார சுதந்திரம். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான பெண்கள், தமது எல்லாத் தேவைகளுக்காகவும் ஆண்களை சார்ந்தே வாழ வேண்டியிருக்கிறது.பெண்கள் வீட்டு வேலை போக மற்ற நேரங்களில் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க ஏற்ற தொழில் தையல்.

காட்டுவாசிகளாகத் திரிந்த ஆதி மனிதர்கள் தங்களுக்கு உடுத்த உடை வேண்டுமென்று உணர்ந்து, இலைகளை தாவரக் கொடிகளில் சேர்த்து கோர்த்து உடுத்தியபோதே தோன்றியதுதான் இந்த தையல் கலை!அந்தக் காலத்தில் அவர்கள் விலங்குகளின் எலும்பிலிருந்து ஊசிகளை உருவாக்கி ஆடைகளைத் தைத்ததாக, தொல்பொருள் ஆராய்ச்சிகளில் கிடைத்த எலும்பு ஊசிகள் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.அன்று அவர்கள் பயன்படுத்திய ஊசிதான் இன்று மாடர்ன் ஊசியாக பரிணாம வளர்ச்சியடைந்து நிற்கிறது. அதேபோல் அவர்கள் கண்டுபிடித்த தையல்கலை மெதுமெதுவாக உருமாறி இன்று கண்கவர் தையல் கலைகளாக நம்மை அழகுபடுத்திக் கொண்டிருக்கிறது. 

ஜாக்கெட், சுடிதார் போன்ற நுட்பம் நிறைந்த தையல் வேலைகள் மேற்கொள்ள பயிற்சி வேண்டும். அந்தந்த ஊர்களில் பல்வேறு நிறுவனங்கள் வாயிலாக இப்பயிற்சியை முறையாக கற்றுக் கொடுக்கின்றனர்...

நுணுக்கமான தையல் தெரியாதவர்கள் கூட தலையணை உறை, டர்க்கி டவல் மற்றும் சிறிய டவல்களும் தைத்து விற்கலாம்.

ஒருவர் மற்றும் இருவர் பயன்படுத்துவது என பல்வேறு நீள அளவில் தலையணைகள் உள்ளன. அதற்கேற்ற நீளங்களில்துணிகளை வெட்டி கொள்ள வேண்டும். வெட்டிய துணிகளை 3 புறமும் தைத்து கொள்ள வேண்டும். 4வது புறத்தில் தலையணை திணிக்க திறப்பு இருக்கும். தலையணை திணித்தவுடன், அது வெளியேறாமல் இருப்பதற்காக உள்புறமாக துணியை மூடிபோல் மடித்து தைக்க வேண்டும். தைக்கப்பட்ட நூல் பிசிறுகளை நீக்கினால் தலையணை உறை தயார். தலையணை உறையிலும் பெயிண்டால் அழகிய ஓவியங்கள் மற்றும் கருத்துள்ள வாக்கியங்களால் அழகு படுத்துவதன் வாயிலாக வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தலாம்.. உழைப்பும் தொழில் நேர்த்தியும் போதும். நெருக்கமில்லாமல் தைத்தால் பிரிந்து விடும், அடுத்து நம்மிடம் வாங்க மாட்டார்கள். நல்ல நூலில், நெருக்கமாக தைத்தால் பிரியாது. வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள்.

உள்பாவாடை தயாரித்தல்:


பாவாடை தயாரிக்கும் வேலை எளிதானது. கட்டிங், தைப்பது ஈஸி. தைத்த பின் நாடா கோர்க்காமல், தைக்கும்போதே நாடாவுடன் தைத்தால், பாவாடையின் இடுப்பு பகுதி தரம் குறையாமல் இருக்கும். 

குறைந்தபட்ச இன்ச் 36க்கு குறையாமல் இருந்தால் நல்லது. 26 இன்ச் இடுப்புள்ளவர்கள்கூட எளிதில் நாடாவை சுருக்கிக் கட்டிக் கொள்ள முடியும். பெண்களின் இடுப்பு பருமனுக்கேற்ப அதிகபட்சம் 44 இன்ச் வரை தைக்கலாம்.

பாவாடையின் கீழ் பகுதியில் சன்னமாக ஒரு லேஸ் வைத்தால் எடுப்பாக இருக்கும். சின்ன டிசைனில் மெஷின் எம்ப்ராய்டரி செய்தால் மதிப்பு கூடும். அதே போல் பாவாடையின் உள்புறம் இரண்டு தையல்கள் முடிந்தால் ஓவர் லாக் அடித்தால் தரம் நன்றாக இருக்கும்..இன்றைய நவீனக் காலத்தில் பாவடையில் அழகிய எம்ப்ராய்டரிகள் போட்டு உடுத்துவது பேஷன் ஆகி விட்டது..முடிந்தால் அந்த சேலை பார்டர் நிறத்தில் லேஸ் வைத்து தைத்து கொடுத்தால் வாடிக்கையாளர்களின் மனதை கொள்ளை கொள்ளலாம்..

சுடிதார் ஜாக்கெட் தைக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய விசயங்கள்...

என்னதான் அழகாக தைத்தாலும், உள்புறம் கொடுக்கும் லைனிங் துணி தரமில்லாவிட்டால், சுடிதாரின் உழைப்பும், அணியும் சவுகரியமும் குறைந்துவிடும். தரமாக தயாரிப்பது தொழில் வெற்றிக்கு முக்கியமானது. 

சுடிதார் தைப்பதற்கு அடிப்படை கட்டிங் செய்வது தான். தைக்க வேண்டிய துணியோடு தைக்கப்பட்ட சுடிதாரின் புகைப்படம் இணைக்கப்பட்டிருக்கும். அதில், டாப்ஸின் முன்புற மேல்பகுதி டிசைன் மற்றும் சுடிதாரின் மாடல் இடம்பெற்றிருக்கும். அதன்படி வெட்டி தைக்க வேண்டும். இதில் மீடியம்(எம்), லார்ஜ்(எல்), எக்ஸ்ட்ரா லார்ஜ்(எக்ஸ் எல்), டபுள் எக்ஸ்ட்ரா லார்ஜ்(டபுள் எக்ஸ் எல்) என்று தனித்தனி அளவுகள் உள்ளன.

சுடிதாரில் டாப்ஸ், பேன்ட் என்று 2 பாகங்கள் உள்ளன. டாப்ஸில் சோல்டர், உயரம், உடல் சுற்றளவு, இடுப்பு, பாட்டம் அகலம், கை உயரம், கை அகலம், பேன்டில் இடுப்பு சுருக்கு, பெல்ட் பிளிட்ஸ், உயரம், லூஸ், பாட்டம் அகலம் என்று தனித்தனி அளவுகள் உள்ளன. சில டாப்ஸ்கள் கை இல்லாமலும் (ஸ்லீவ்லெஸ்), சில முழுக்கையாகவும்(புல் ஸ்லீவ்ஸ்) இருக்கும். அதற்கு நிலையான அளவுகள் உள்ளன. 

சுடிதாரில் 50க்கும் மேற்பட்ட டிசைன்கள் உள்ளதால், அதற்கேற்ப அளவுகளை அறிந்து கொண்டு, துணிகளை வெட்டி தைத்து, அயர்னிங் செய்தால் சுடிதார் ரெடி.

அடுத்தபடியாக வெவ்வேறு வெரைட்டியில் இருந்து வெவ்வேறு டிசைன்களை எல்லாம் வெட்டி எடுத்து ப்ளைன் சேலையில் ஓட்டினால் டிசைனிங் சேலை ரெடி..இன்று இதுவும் சக்கை போடும் பிஸ்னெஸ் ஆகி விட்டது...

சேலைக்கேற்ப ஜாக்கெட் தேடியது அந்தக் காலம். ஆடம்பரமான ஜாக்கெட், அதற்கு மேட்ச்சாக சேலை தேடுவது இந்தக் காலம்! கழுத்தில், கைகளில், முதுகில் என ஜாக்கெட்டில் ஏதாவதொரு வித்தியாசத்துடன் தைத்து அணிவதையே இன்றைய பெண்கள் விரும்புகிறார்கள். டிசைனர் சேலைகள் எவ்வளவு பிரபலமோ, அதே அளவுக்கு டிசைனர் ஜாக்கெட்டுகளும் பிரபலமாகி வருகின்றன.ரவிக்கையில் ஜர்தோசி வேலைப்பாடுகள் , பூ வேலைப்பாடுகள் , டிசைன்கள் செய்து கொடுத்து ஒரு ரவிக்கைக்கு ரூபாய் 5000/- வரை வாங்குகின்றனர்...இன்றைக்கு இது தான் பேஷன்..

மனிதன் உயிரோடு இருக்கும் வரை உடைகள் அவசியம்...சந்தை வாய்ப்புள்ள இந்த தொழிலை வாடிக்கையாளர்களின் திருப்திக்கேற்ப செய்து கொடுக்கும் பொழுது பணத்தை கொட்டும் தொழில்...

எந்த ஒரு தொழிலும் ஜெயிக்க வேண்டுமென்றால் மனதில் திகுதிகுவென எரியும் ஆர்வமும், ,அதை செயல்ப்படுத்த கடின உழைப்பும், வாடிக்கையாளர்களை திருப்திப் படுத்த , வித்தியாசமான சிந்தனையும் இருந்தால் இந்த தொழில் வெற்றிக்கனியை கொடுக்கும் தொழிலாகும்.

- ரோஸ்லின்

Monday, November 17, 2014

நீங்க தான் முதலாளியம்மா!

‘அதிகம் படிக்கலை. பொழுதுபோக்கா ஆரி ஒர்க் கத்துக்கிட்டேன். 15 வயசுலேருந்து பண்ணிட்டிருக்கேன். பிசினஸா எடுத்துப் பண்ண ஆரம்பிச்ச பிறகு கல்பனாவும் என்கூட சேர்ந்தாங்க. இப்ப எங்க ரெண்டு பேருக்கும் முழு நேரத் தொழிலே இதுதான்’’ என்கிறார் பவானி. ‘‘எம்பிராய்டரில எத்தனையோ வகை உண்டு. அதுல ஆரி ரொம்பவே ஸ்பெஷல். சில்க் காட்டன், சிந்தெடிக், நெட் துணினு எல்லா மெட்டீரியல்லயும் இந்த ஒர்க்கை பண்ண முடியும். பிளவுஸ், சுடிதார், லெஹங்கா, சேலைனு எதுல வேணாலும் போடலாம். இதுல 21 வகை  தையல் இருக்கு. 


அவங்கவங்க தேவைக்கேத்தபடி காம்பினேஷனை மாத்திப் பண்ணலாம். அடிப்படை தையலோ,எம்பிராய்டரியோ தெரிஞ்சிருக்கணும்னு 
அவசியமில்லை. ஆர்வமும் உழைக்கிற தைரியமும் இருந்தால் போதும்...’’ என்கிறவர்கள், இந்தத் தொழிலைத் தொடங்க வெறும் 300 ரூபாய் முதலீடு போதும் என ஆர்வம் கிளப்புகிறார்கள். ‘‘ஆரி ஸ்டாண்டு, துணி, நூல், நாலு வகையான ஊசினு இதுக்குத் தேவையான பொருட்கள் ரொம்பக் கம்மி. ஒரு ஜாக்கெட்டுக்கு ஆரி ஒர்க் பண்ண 1 நாள் போதும். கலர் காம்பினேஷன், கிரியேட்டிவிட்டியை பொறுத்துதான் உங்களுக்கு ஆர்டர் வரும். 

உங்க வீட்டுக்குப் பக்கத்துல உள்ள பொட்டிக், தையல் கடைகளோட பேசி, ஆரி ஒர்க் மட்டும் பண்ணிக் கொடுக்க ஆர்டர் வாங்கலாம். கல்யாணப் பெண்ணுக்கான பிரைடல் பிளவுஸுக்கெல்லாம் 5 ஆயிரம் கூட வாங்கலாம். உழைப்பு எவ்வளவு அதிகமோ, அதே மாதிரி இதுல லாபமும் அதிகம்...’’ என்கிற பவானி மற்றும் கல்பனாவிடம் 2 நாள் பயிற்சியில் ஆரி ஒர்க் செய்வதற்கான பயிற்சி களைக் கற்றுக் கொள்ளலாம். தேவையான பொருட்களுடன் சேர்த்துக் கட்டணம் 2 ஆயிரம் ரூபாய்.( 97898 90446)

Wednesday, June 18, 2014

சமிக்கி வேலை

Jam Jam camikki Job




வேலைக்குச் செல்வதற்கும் சரி, விசேஷங்களுக்கு அணியவும் சரி... இன்றைய பெண்களின் சாய்ஸ் சமிக்கி வேலைப்பாடுகள் செய்த சேலைகள். இவற்றிலேயே தினசரி உபயோகத்துக்கு சிம்பிளாகவும், விசேஷங்களுக்கு அணிய ஆடம்பரமாகவும் எப்படி வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சமிக்கி வேலைப்பாடு செய்த உடைகள் பார்ப்பதற்கு எத்தனை அழகோ, விலையும் அத்தனை அதிகம். ‘வேலை அதிகம், நுணுக்கமா செய்யணும்...’ எனக் கடைக்காரர்கள் அதற்கு பல காரணங்களையும் அடுக்குவார்கள்.

‘‘அதெல்லாம் அந்தக் காலம். இப்ப சமிக்கி வேலை செய்யறது ரொம்ப சிம்பிள்’’ என்கிறார் கல்பனா. சமிக்கி வேலைப்பாடு செய்யப்பட்ட சேலை மற்றும் சல்வாருக்கான பிரத்யேக கடையே வைத்திருக்கிற இவர், விருப்பமுள்ளவர்களுக்கு அதை சுலபமான வழிகளில் கற்றுத் தரவும் தயாராக இருக்கிறார். ‘‘சேலை வாங்க வர்றவங்கள்ல பலரும் சமிக்கி வேலை செய்ததை தேடறதும், அதே நேரம் விலை கம்மியா இருக்கணும்னு நினைக்கிறதையும் பார்க்க முடிஞ்சது.

பொதுவா பெரிய பெரிய துணிக்கடைகள் கூட, சமிக்கி வேலையை வெளியே கொடுத்துதான் செய்து வாங்கறாங்க. அந்தக் கூலியெல்லாம் சேர்த்து வைக்கிறப்ப விலை அதிகமாகிறதைத் தவிர்க்க முடியாது. இதைப் பத்தி யோசிச்சிட்டிருந்தப்பதான், ரெடிமேடா கிடைக்கிற சமிக்கியை அப்படியே சேலை, சுடிதார்ல வச்சுத் தைக்கிறது பத்தித் தெரிய வந்தது. அதைக் கத்துக்கிட்டு, பிசினஸா செய்யறேன்.

முன்னல்லாம் ஒவ்வொரு சமிக்கியா ஒட்டி, தைக்கிறதுனு இது பெரிய வேலை. இப்ப ரெடிமேடா கிடைக்கிற ஸ்டோன்ஸ், சமிக்கி, லேஸ்களை தையலே இல்லாம, உடைகள்ல பொருத்தற சுலபமான முறை இருக்கு. இது தவிர கட் ஒர்க் செய்யறது, சீக்வன்ஸ் செய்யறதுனு பல வேலை களையும் செய்யலாம். டெய்லரிங் தெரியணும்னு அவசிய மில்லை. தையல் மெஷினும் வேண்டாம்.

லேஸ் ரோல், மணிகள், அயர்னிங் ஸ்டோன்ஸ், கோல்டன் திரெட், டிஷ்யூ ஒர்க் செய்யற நூல், ஊசி, அயர்ன் பாக்ஸ்னு இந்தத் தொழிலுக்கான தேவைகளுக்கெல்லாம் சேர்த்து 2 ஆயிரம் முதலீடு போட்டா போதும். சிம்பிளான டிசைனுக்கு 100 ரூபாய்தான் நமக்கு அடக்கமாகும். அதுக்கு 350 ரூபாய் வரைக்கும் வாங்கலாம். மெஷின்ல தச்சதைவிட சிறப்பா, அழகா இருக்கும். ரெண்டு மடங்கு லாபம் பார்க்கலாம்’’ என்கிற கல்பனாவிடம்,  2 நாள் பயிற்சியில் 500 ரூபாய் கட்டணத்தில், சமிக்கி வேலைப்பாடு களைக் கற்றுக் கொள்ளலாம்.(97101 12751)

Saturday, May 3, 2014

விதம் விதமா மிதியடி செய்வோம

Matting will do nicely manner?

வீட்டுக்கு வீடு வாசல்படி...வாசல்படி உள்ள வீடுகள் எல்லாவற்றுக்கும் தேவைப்படுகிற அதி அத்தியாவசியமான ஒன்று மிதியடி. பழைய கோணிகளை மிதியடிகளாக உபயோகித்த காலம் மாறி, இன்று வாசலையே அழகாக்கும் அளவுக்கு விதம் விதமான மாடல்களிலும் மெட்டீரியல்களிலும் மிதியடிகள் வந்து விட்டன. சென்னையைச் சேர்ந்த ஹேமலதாவின் கைவண்ணத்தில் அழகழகான வடிவங்களில் மிதியடிகள் உருவாகின்றன!

‘‘எம்.பி.ஏ. படிச்சிருக்கேன். வேலைக்குப் போக வேண்டிய தேவையில்லைன்னாலும் பொழுது போகணுமேன்னு நிறைய கைவினைக் கலைகளைக் கத்துக்கிட்டேன். அதுல ஒண்ணுதான் மிதியடி பின்றது. சணல் கயிறு, பழைய துணி, புதுசா தைக்கிறதுல வீணாகிற துணிகள்னு எதைக் கொண்டும் மிதியடி பின்னலாம். மிதியடி என்ன கடைகள்ல கிடைக்காத பொருளான்னு கேட்கலாம். கடைகள்ல ரெடிமேடா வாங்கற மிதியடிகள் 3 மாசம் உழைக்கும்னா, நாம கைப்பட பின்ற மிதியடிகள் ஏழெட்டு மாசங்களுக்கு உழைக்கும்” என்கிறார் ஹேமலதா.

‘‘சணல் கயிறு கொண்டு பின்ற மிதியடிக்கு நிறைய வரவேற்பு உண்டு. அதற்கடுத்த இடம் துணிகளால் பின்ற ரகத்துக்கு. கடைசியாதான் பழைய துணிகள்ல செய்யற மிதியடிகளுக்கு. பழைய துணிகள்ல தைக்கிற மிதியடிகளை பெரும்பாலும் நம்ம வீட்டு உபயோகத்துக்குத்தான் வச்சுக்க முடியும். விற்பனை செய்ய முடியாது. விருப்பப் படறவங்க, பழைய துணிகளுக்கு சாயம் போட்டு, புதுசாக்கி, பிறகு மிதியடி செய்ய உபயோகிக்கலாம்.

சணல் கயிறு ஒரு கிலோ 20 ரூபாய்க்குக் கிடைக்கும். அதுல 4 மிதியடி பண்ணலாம். துணிகள்ல பண்ற மிதியடிகளுக்கு செலவு கம்மி. ஒருநாளைக்கு 5 மிதியடிகள் வரைக்கும் பின்னலாம். ஒரு மிதியடியை 40 முதல் 50 ரூபாய் வரைக்கும் விற்கலாம். 50 சதவிகித லாபம் நிச்சயம்” என்கிற ஹேமலதாவிடம் 4 மாடல் மிதியடி வகைகளை தேவையான பொருட்களுடன் 2 நாள் பயிற்சியில் 750 ரூபாய் கட்டணத்தில் கற்றுக் கொள்ளலாம்.(95001 48840)

Wednesday, March 19, 2014

டாபிகல் டாப்ஸ்

கடை கடையாக ஏறி இறங்கி தேடித் தேடி சல்வாரோ, சேலையோ தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை. மேட்ச்சிங் துப்பட்டாவுக்கு தெருத்தெருவாக  அலைய வேண்டியதில்லை. இன்றைய இளம் பெண்களின் ஏகோபித்த வரவேற்பு, ஜீன்ஸ் அல்லது லெக்கிங்ஸ்... அதற்கு மேல் தொடை வரை நீளும்  டாப்ஸ். சிம்பிளாக அதே வேளை அழகாகவும் காட்டக்கூடிய இந்த டாப்ஸ் ஒல்லியோ, குண்டோ, குட்டையோ, நெட்டையோ... எப்படிப்பட்டவர்களுக்கும்  அம்சமாகப் பொருந்தும் என்பதே ஹைலைட்டான விஷயம்.சென்னை, பெருங்களத்தூரைச் சேர்ந்த ராகிலாவுக்கு முழுநேர பிசினஸே டாப்ஸ் தைப்பதுதான்!

‘‘25 வருஷமா தையலைத் தவிர வேற எதுவும் தெரியாது. என் மகள் ஐடி கம்பெனியில வேலை பார்க்கிறா. அவளுக்காக டாப்ஸ் தச்சுக் கொடுப்பேன்.  அவ போட்டுக்கிட்டுப் போறதைப் பார்த்துட்டு நிறைய பேர் கேட்க ஆரம்பிச்சாங்க. அப்படியே டாப்ஸ் தைக்கிறதுல பிசியானேன். கடைகள்ல ரெடிமேட்  டாப்ஸ் கிடைக்குது. அதெல்லாம் ஸ்டாண்டர்டு அளவுகள்ல, ஒரே மாதிரி டிசைன்லதானே கிடைக்கும்? மட்டமான துணியில தச்சிருப்பாங்க. அதைப்  போட்டுக்கிற பொண்ணுங்களுக்கு உள்ளாடையெல்லாம் வெளியில தெரியற அளவுக்கு துணி கண்ணாடி மாதிரி மெலிசா இருக்கும். Topical tops!

அப்படி எந்த தர்மசங்கடமும் இல்லாம இருக்கணும்னு நான் முதல் குவாலிட்டி காட்டன்ல தைக்கிறேன்’’ என்கிற ராகிலா, பெண்களின்  விருப்பத்துக்கேற்ப முழுக்கை வைத்தது, அரைக்கை வைத்தது, கையில்லாதது என 3 மாடல்களில் தைக்கிறார். ‘‘ஐடி மாதிரியான கம்பெனியில  வேலை பார்க்கிறவங்க பெரும்பாலும் காட்டன் மெட்டீரியல்தான் கேட்கறாங்க. சிலர் வேற மெட்டீரியலையும் டிசைனையும் கொடுத்து தச்சுக்  கொடுக்கச் சொல்றதும் உண்டு. கர்ப்பிணிகளுக்கு ஏத்தபடி ஜிப் வச்ச டாப்ஸும் தச்சுக் கொடுக்கறேன். 

ஒரு டெய்லரிங் மெஷின் இருந்தா போதும். மெட்டீரியல், ஊசி, நூல் உள்ளிட்ட மத்த பொருட்களுக்கும் சேர்த்து 5 ஆயிரம் முதலீடு வச்சு துணிஞ்சு  இந்த பிசினஸ்ல இறங்கலாம். ஒரு நாளைக்கு 10 முதல் 15 டாப்ஸ் வரை தைக்கலாம். காலேஜ், ஐடி கம்பெனிகள்ல உள்ள பெண்கள்கிட்ட மாடல்  காட்டி ஆர்டர் வாங்கலாம். சின்னச் சின்ன கடைகளுக்கும் சப்ளை பண்ணலாம். 325 ரூபாய்லேருந்து 400 ரூபாய் வரைக்கும் மாடலை பொறுத்து  விலை வேறுபடும். செலவெல்லாம் போக 50 சதவிகித லாபம் தங்கும்’’ என்கிற ராகிலாவிடம் 2 நாள் பயிற்சியில் 5 மாடல் டாப்ஸ்களை 500 ரூபாய்  முதலீட்டில் கற்றுக் கொள்ளலாம். ( 97104 82119)

Wednesday, January 1, 2014

ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு!


ரெடிமேட் ஆடைகள்!
முன்பெல்லாம்  இரண்டு வேஷ்டி, இரண்டு சட்டை இருந்தாலே போதும், ஒரு வருட காலத்தை தாராளமாக ஓட்டி விடுவார்கள்.  ஆனால், இன்று? பீரோ நிறைந்தாலும்கூட மனது நிறைவதில்லை! பண்டிகை காலத்தில் மட்டுமே துணி எடுப்பது என்பதும் பழங்கதையாகி விட்டது. குடும்பத்தோடு வீட்டை விட்டு கீழே இறங்கினால் திரும்பும்போது இரண்டு டிரஸ்ஸாவது எடுத்துவிட்டுதான் வருவது என்ற நிலை இன்றைக்கு.  மொத்தத்தில் இன்றைக்கு ரெடிமேட் தொழில் உச்சத்தில் இருக்கிறது. 
பல நூற்றாண்டுகளாக ஜவுளித் தொழிலில் கொடிகட்டி பறக்கிறோம் நாம். நம் நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுக்கவும்  நமது ஆயத்த ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை நமது ஆயத்த ஆடைகளை வாங்காத நாடுகளே உலகில் இல்லை. ஆனால், அதிக வாய்ப்புகள் இருக்கும் அதேநேரத்தில் இந்தத் துறையில் அதிகளவில் ரிஸ்க்கும் இருக்கின்றன. அந்த ரிஸ்க்குகளைத் தாண்டி, சமாளித்து நின்றுவிட்டால் போதும், நீங்களும் ஒரு தொழிலதிபராகி விடுவீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.  
சந்தை வாய்ப்பு!

தமிழகத்தில் பல நகரங்களில் ஜவுளித் தொழிலுக்கு நல்ல வாய்ப்பு இருந்தாலும், சென்னை, ஈரோடு, சேலம், கோவை பகுதிகளில்தான் இதற்கான சந்தை வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது. ஆயத்த ஆடைகளை நாமே தயார் செய்து அதை நேரடியாக பெரிய கடைகளில் கொடுக்கலாம். அல்லது மொத்த வியாபாரிகளிடமிருந்து ஜாப் ஆர்டர் வாங்கி, அதை தயார் செய்தும் கொடுக்கலாம். இத்தொழிலுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருப்பதால், இங்கு தயாராகும்  ஆயத்த ஆடைகளை வெளிநாடுகளில் விற்பதற்கும் நல்ல வாய்ப்பு இருக்கிறது. கோயம்புத்தூர், திருப்பூரைச் சுற்றியுள்ள ஊர்களில்தான் இந்த தொழிலை தொடங்க முடியும் என்கிற கருத்து பலரிடம் இருக்கிறது. ஆனால், உண்மை என்னவெனில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த தொழிலைத் தொடங்க நிறையவே வாய்ப்பு இருக்கிறது.  
மூலப் பொருட்கள்!
டையிங், பிளீச்சிங், பிரின்டிங் செய்யப்பட்ட காட்டன், சிந்தெடிக் துணி வகை மற்றும் தைப்பதற்கு நூல் ஆகியவை இத்தொழிலுக்குத் தேவையான முக்கிய மூலப் பொருட்களாகும். டெக்ஸ்டைல்ஸ் துறையில் கொங்கு மண்டலம் சிறந்த மாவட்டம் என்பதால் அங்கிருந்து மூலப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனால், தற்போது திருப்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் சாயப்பட்டறை பிரச்னை காரணமாக மூலப் பொருட்களை பவானி மற்றும் அகமதாபாத் போன்ற பகுதிகளிலிருந்து வாங்கிக் கொள்ளலாம்.

இயந்திரங்கள்!
இத்தொழிலுக்குத் தேவையான இயந்திரங்களை (தையல் மெஷின்கள் மற்றும் கட்டிங் மெஷின்கள்) ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம். இதற்கான டீலர்கள் கோவை, சென்னை நகரங்களில் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் இயந்திரங்களை வாங்கிக் கொள்ளலாம். தனித் தனியாக வரும் இயந்திரத்தின் பாகங்களை டீலர்களே அசெம்பிள் செய்து கொடுத்து விடுகிறார்கள்.
முதலீடு!
இத் தொழிலைச் செய்வதற் கான நிலம் மற்றும் கட்டடத்தை சொந்தமாகவோ அல்லது குத்த கைக்கோ எடுத்துக் கொள்ளலாம். இயந்திரத்திற்கு மூன்று லட்சம் ரூபாயும், செயல்பாட்டு மூலதனத்திற்கு மூன்று லட்சம் ரூபாயும் என மொத்தம் ஆறு லட்சம் ரூபாய் தேவைப்படும்.  
ஃபைனான்ஸ்!
இத்தொழிலைத் தொடங்க நினைக்கிறவர் தனது முதலீடாக 5%, அதாவது 30,000 ரூபாய் வரை போட வேண்டும். மீதியை கடன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
மானியம்!
இந்த தொழிலானது பிரதம மந்திரியின் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வருவதால் 2.10 லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கும். இந்த மானியத் தொகையானது தொழில் தொடங்க வாங்கிய கடனுக்காக மூன்று வருடத்திற்கு பிறகு வரவு வைக்கப்படும்.
வேலையாட்கள்!
நல்ல திறமையான வேலையாட் கள் 20 பேரும், நடுத்தரமாக வேலை செய்யக்கூடிய பெண்கள் நான்கு பேரும், நிர்வாகம் மற்றும் விற்பனையை கவனித்துக் கொள்ள ஒரு நபரும், சூப்பர்வைசர் மற்றும் மெக்கானிக் ஒரு நபரும் தேவைப்படுவார்கள். எனவே மொத்தம் 26 நபர்கள் வரை தேவைப்படுவார்கள்.  

தயாரிக்கும் முன்...
டையிங், பிளீச்சிங், பிரின்டிங் செய்யப்பட்ட காட்டன், சிந்தெடிக் துணிகளை வாங்கிச் சேகரித்துக் கொள்ள வேண்டும். துணிகளின் தரம் சரியாக இருக்கிறதா? கலர் மங்கியிருக்கிறதா? அல்லது வேறு வகையில் சேதம் ஏதும் ஏற்பட்டிருக் கிறதா என்பதைப் பார்த்து ஆய்வு செய்த பின்பே தைப்பதற்கு அனுமதிக்க வேண்டும். காரணம், நமது தயாரிப்பில் டேமேஜ் இருக்கும் பட்சத்தில் அது மீண்டும் நம்மிடமே வந்து சேரும். இந்த இழப்பு வராமல் இருக்க வேண்டுமெனில், தரத்தில் கவனமாக இருப்பது அவசியத்திலும் அவசியம்!
பிளஸ்!
ஏற்றுமதிக்கு அதிகம் வாய்ப்புள்ள தொழில். பெண்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சேர்ந்து செய்வதற்கு ஏதுவானத் தொழில் என்பதால், ஒளிமயமான எதிர்காலம் இத்தொழிலால் உண்டு.  
மைனஸ்!
திருப்பூர் சாயப்பட்டறை தொழில் சார்ந்த பிரச்னைகளும், தேவையான ஆட்கள் கிடைக் காமல் இருப்பதும், பருத்தி நூல் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு களும் இத்தொழிலில் இருக்கும் மிகப் பெரிய சவால்கள்.
ஆனால், இந்தப் பிரச்னைகளை மட்டும் சமாளித்து விட்டால் நிச்சயம் வெற்றி காணலாம்.
-பானுமதி அருணாசலம்
  படங்கள் : வெ. பாலாஜி
வெங்கடேஷ், குளூம் ஓவர்சீஸ், கோவை.
''நான் அடிப்படையில் ஒரு மெக்கானிக்கல் என்ஜினீயர். இத்தொழிலை ஆரம்பித்தபோது அதில் எனக்கு நிறைய அனுபவமில்லை. பிற்பாடு அனுபவத்தில்தான் தெரிந்து கொண்டேன். அதனால், இப்போது இருக்கக்கூடிய போட்டியிலும் சூழ்நிலையிலும் இத்தொழிலைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு அதற்குபிறகு களத்தில் இறங்குவது நல்லது.
இத்தொழிலைத் தொடங்க குறைந்தபட்சம் 2,500 சதுரடி இடம் தேவைப்படும். தொடக்க முதலீடாக ஐந்து லட்சம் ரூபாய் தேவை. புதிதாக தொழில் தொடங்குபவர்கள் ஐந்து தையல் இயந்திரங்கள் போட்டு பெரிய மற்றும் நடுத்தர கம்பெனிகளில் இருந்து ஜாப் ஆர்டர் வாங்கிச் செய்வதில் ஆரம்பித்து, பின்பு மெள்ள விரிவுபடுத்திக் கொள்ளலாம். எடுத்த எடுப்பிலேயே ஏற்றுமதி ஆர்டர் என்று இறங்கத் தேவையில்லை. காரணம் ஏற்றுமதி செய்வதில் ரிஸ்க் அதிகம்.
லோக்கல் மார்க்கெட்டில் ஆண்கள் ஆடைகளில் மட்டுமே பிராண்டுகளின் ஆதிக்கம் இருக்கிறது. தவிர, பெண்கள் அணியும் ஆடைகளிலும், ஆண்களின் இரவு நேர மற்றும் குழந்தைகள் ஆடைகளிலும் இதுவரை பிராண்டுகளின் ஆதிக்கம் பெரிதாக இல்லை. முடிந்தால் நீங்களேகூட ஒரு பிராண்டை புரமோட் செய்யலாம். இதுபோன்ற அறியப்படாத வாய்ப்புகள் இதில் மிக அதிகம்.
இந்த தொழிலில் நமக்கு இப்போது மிகப் பெரிய போட்டியாக இருப்பது சீனாதான். ஆனால், சில விஷயங்களில் நாம் கொடுக்கும் தரத்தை அவர்களால் தர முடிவதில்லை. எனவே, அந்த போட்டியை நினைத்து நாம் பயப்படாமல் தரத்தை இன்னும் உயர்த்தி, விலையைக் குறைத்து கொடுத்தால் நமக்கு எப்போதும் நல்ல எதிர்காலம்தான்!''.
  பா.விஜயசந்தர்

Sunday, November 3, 2013

கத்துக்கலாம் கட்டில் எம்பிராய்டரி!

Building learn embroidery!




சாதாரண சேலையை அல்லது சல்வாரை கூட ஆடம்பரமாக மாற்றக் கூடியது எம்பிராய்டரி வேலைப்பாடு. மாறுகிற ஃபேஷனுக்கு ஏற்றபடி,  எம்பிராய்டரியில் எப்படி வேண்டுமானாலும் மாற்றங்கள் கொண்டு வரலாம். எளிமையான வேலைப்பாடு வேண்டுவோருக்கு, எளிமையாகவும், ஆடம்பர  டிசைன் விரும்புவோருக்கு அதற்கேற்ற படியும் எம்பிராய்டரி செய்யலாம் என்பதே இதில் சிறப்பு. வெறும் தையல் மட்டுமே தெரிந்த பூரணிக்கு, அவர்  ஆர்வத்தின் பெயரில் கற்றுக்கொண்ட எம்பிராய்டரிதான், இன்று தொழிலதிபர் அந்தஸ்தை கொடுத்திருக்கிறது!
‘‘பத்தாவதுதான் படிச்சிருக்கேன். டெய்லரிங்ல டிப்ளமோ முடிச்சேன். கணவருக்கு ஏர்ஃபோர்ஸ் வேலை. ஏர்ஃபோர்ஸ் விமன் அசோசியேஷன்ல தீவிரமா  இயங்கிட்டிருந்தேன். எனக்குத் தெரிஞ்ச தையல் கலையை வச்சு, பழைய, உபயோகமில்லாத சல்வார்ல நான் தச்சுக் கொடுத்த பைகளுக்கு நல்ல  வரவேற்பு இருந்தது. ராஜஸ்தான்ல ரெண்டு வருஷ எம்பிராய்டரிங் பயிற்சி கத்துக்கிட்டு வந்தேன். சின்னச் சின்ன கடைகள், அவங்களோட  சேலைகளை மொத்தமா கொடுத்து எம்பிராய்டரிங் பண்ணித்தரச் சொல்லிக் கேட்டாங்க.

அதுல பெரிய வருமானமில்லை. தெரிஞ்ச பெண்மணி வந்து, தன்னோட பட்டுப் புடவை ரொம்ப ‘டல்’லா இருக்கிறதா சொல்லி, ஏதாவது செய்து தர  முடியுமான்னு கேட்டாங்க. அவங்களுக்கு ஆந்திராவுல பிரபலமான ‘மக்கம்’ ஒர்க் பண்ணி, புடவையை புதுசு மாதிரி அழகாக்கிக் கொடுத்தேன்.  அப்படியே வாய்வழியா என் திறமை பரவ ஆரம்பிச்சது. கல்யாணப் பெண்களுக்கான பட்டுச் சேலையில ஒர்க் பண்ணித்தரச் சொல்லிக் கேட்க  ஆரம்பிச்சாங்க. பட்டுப்புடவைகளோட சேர்த்து வரும் பிளவுஸ் பெரும்பாலும் பிளெயினா, சிம்பிளா இருக்கும். அதை புடவையோட பார்டருக்கு ஏத்தபடி  மேட்ச் பண்ணி, காஸ்ட்லி லுக் வர்ற மாதிரி பண்ணிக் கொடுக்கிறேன்.

வெளிநாடுகள்லேருந்து, லீவுல இந்தியா வர்றவங்கக்கிட்டருந்தும் நிறைய ஆர்டர் வந்தது. ஒரே ஒரு மெஷினோட, நான் ஒரு ஆள் தனியா  ஆரம்பிச்சது, இன்னிக்கு 11 பேர் வேலை பார்க்கிற பெரிய யூனிட்டா வளர்ந்திருக்கு...’’ என்கிற பூரணி, எம்பிராய்டரிங் கற்றுக் கொள்வோருக்கு கை  மேல் காசு நிச்சயம் என நம்பிக்கை தருகிறார். ‘‘பெரிய இட வசதி தேவையில்லை. தையல் மெஷினும் எம்பிராய்டரிங் கட்டிலும் முக்கியம். கட்டிலை,  தச்சுவேலை செய்யறவங்கக்கிட்ட சொல்லியோ, தையல் பொருள்களுக்கான கடைகள்லயோ வாங்கலாம்.

800 ரூபாய் செலவாகும். மத்தபடி ஊசி, நூல் வகையறாக்களுக்கான செலவு மட்டும்தான். மணமகள் ஜாக்கெட்டுக்கு எம்பிராய்டரி பண்ண, டிசைனை  பொறுத்து 800 ரூபாய்லேருந்து 5 ஆயிரம் வரை வாங்கலாம். புடவைக்கு 2 ஆயிரத்துலேருந்து ஆரம்பம். ஒரு நாளைக்கு ஒரு பிளவுசும், ரெண்டு  முதல் 5 நாள்ல ஒரு சேலைக்கும் டிசைன் பண்ணிடலாம். 100 சதவிகித லாபம் பார்க்க முடியும்’’ என்பவரிடம், 10 நாள் பயிற்சியில், 3 ஆயிரம் ரூபாய் கட்டணத்தில், அடிப்படை எம்பிராய்டரி நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளலாம். (96599 42928)
Thanks!!!http://www.dinakaran.com

Tuesday, October 22, 2013

நம் கனவும் ஒரு நாள் நனவாகும்

One day our dreams will come true!அந்தக் காலத்துக் கூட்டுக் குடும்பத்தினுள் நுழைந்த உணர்வை ஏற்படுத்துகிறது ஷெரில் ஹாஃப்டனின் வீடும், ஃபேக்டரியும். எல்லோரும் ஏதோ ஒரு  வேலையில் ஈடுபட்டிருக்க, அத்தனை பேரும் ஷெரிலிடம் வேலை பார்ப்பவர்கள் என்றால் நம்ப முடியவில்லை.  மருத்துவமனைகள், பியூட்டி பார்லர்  மற்றும் ஸ்பா சென்டர்களில் உபயோகப்படுத்துகிற சுற்றுச்சூழலுக்கு உகந்த படுக்கை விரிப்புகள்,  ஏப்ரன், பிரா, பேன்ட்டீஸ், ஃபேஷியல் கவுன், ஹெட்  பேன்ட் உள்ளிட்ட அனைத்தையும் தயாரிக்கிறது ஷெரிலின் ‘ட்ரீம் வீவர்ஸ்‘ நிறு வனம். மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் பாதிக்கப்பட்டு, மற்ற  வேலைகளுக்குச் செல்ல இயலாதவர்கள், ஆதரவில்லாத பெண்கள்  என இவரது நிறுவனத்தில் பணிபுரிகிற ஒவ்வொருவரின் பின்னணியிலும் ஒரு  சோகக் கதை உண்டு. அத்தனை பேரின் வாழ்க்கையி லும் அடுப்பெரிய காரணமான ஷெரில், அமைதியாக, அடக்கமாகப் பேசுகிறார்.

“நானும் கணவரும் ஆசிரியர்களா வேலை பார்த்திட்டிருந்தோம். எங்களோட மகள் டெனிஸ், பிபிஏ முடிச்சிட்டு, ஒரு நிறுவனத்துல  வேலை  பார்த்திட்டிருந்தா. திடீர்னு ஒருநாள், அவ என்கிட்ட வந்து, ‘நீங்க வேலையை விட்ருங்க. நாம ரெண்டு பேரும் சேர்ந்து   டிஸ்போசபிள் மெட்டீரியல்  தயாரிக்கிற ஒரு பிசினஸ் தொடங்கலாம்’னு சொன்னப்ப, எனக்கு பயங்கர அதிர்ச்சி. 16 வருஷமா பார்த் திட்டிருக்கிற வேலையை விடறதாவதுன்னு  நான் மறுத்தேன். 

கிட்டத்தட்ட மூணு மாசம் எங்க வீட்ல இந்தப் பிரச்னையைப் பத்தின வாக்குவாதம் தொடர்ந்தது. ஒருவழியா என்னை சம்மதிக்க  வச்சிட்டா. வேலை  பார்த்த ஸ்கூல்ல போய் ராஜினாமா கடிதம் கொடுத்தப்ப, ‘உனக்கென்ன பைத்தியமா? நல்ல, கவுரவமான  வேலையை விட்டுட்டு, ஜட்டி, பிரா பிசினஸ்  பண்ணப் போறியா’ன்னு கிண்டல் பண்ணினாங்க. என் மகளோட பிடிவாதமும் நம் பிக்கையும் என்னை மாத்திட்டதால என்னால ஒண்ணும் பண்ண  முடியலை. வெறும் 500 ரூபாய்தான் முதலீடா கொடுத்தேன்.

அதை வச்சு என் மகள், ராத்திரி, பகலா கண் விழிச்சு, ஏகப்பட்ட டிசைன்களை உருவாக்கினதைப் பார்த்தப்ப, எனக்குள்ளயும் நம் பிக்கை துளிர்க்க  ஆரம்பிச்சது. எங்க வீட்ல பிரேமான்னு ஒரு அம்மா வேலை பார்த்தாங்க. என் மகளை வளர்த்ததுல அவங்களுக் குப் பெரிய பங்குண்டு. டயப்பட்டீஸ்  அதிகமானதுல அவங்களுக்கு ஒரு காலை எடுக்க வேண்டிய நிலைமை. இனிமே எங்களுக்கு  உங்களால எந்த உதவியும் இல்லைன்னு அவங்க  மருமகன், அவங்களை வீட்டை விட்டுத் துரத்திட்டான். 

‘என்னை ஏதாவது ஒரு ஹோம்ல சேர்த்து விடுங்க’ன்னு வந்து நின்னப்ப என் மகளுக்கு மனசு தாங்கலை. ‘நாம பிசினஸ் ஆரம்பிச்சா,  இவங்களை  மாதிரிப் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து உதவின மாதிரியும் இருக்குமே...’ன்னு சொல்ல, பிரேமாவையே முதல்  ஊழியரா வச்சு, ‘ட்ரீம்  வீவர்ஸ்’ நிறுவனத்தைத் தொடங்கினோம். இப்பவும் அவங்க எங்ககூட இருக்காங்க...’’ - நெகிழ்ச்சியான அறி முகத்துடன் பேசுகிறார் ஷெரில்.

‘‘பிசினஸ் தொடங்கறதுன்னு முடிவெடுத்தாலும், அடுத்தடுத்த நடவடிக்கைகள் ரொம்பவே சவாலா இருந்தது. மிடில் கிளாஸ் குடும்பத் தைச் சேர்ந்த  எங்களால எடுத்த உடனேயே பெரிய முதலீடு போட முடியலை. ஒரே ஒரு தையல் மெஷின், சில மீட்டர் துணியோட தான் துணிஞ்சு இறங்கினோம்.  ஒரு விபத்துல கணவரைப் பறிகொடுத்துட்டு, விவரம் தெரியாத வயசுல ரெண்டு சின்னக் குழந்தைங் களை வச்சுக்கிட்டுத் தவிச்ச ஒரு பெண்  அறிமுகமானாங்க. 

அவங்களுக்கு என் மகள் தையலும் டிசைனிங்கும் கத்துக்கொடுத்து, வேலையும் கொடுத்தா. டிஸ்போசபிள் உடைகளுக்கான சாம் பிளை எடுத்துக்கிட்டு,  நானும் மகளும் சென்னையில உள்ள அத்தனை பியூட்டி பார்லர்களுக்கும் ஏறி இறங்கினோம். பல பேர் எங்க ளையோ, எங்க சாம்பிளையோ  பார்க்கக்கூட தயாரா இல்லை. வேலையை விடறேன்னு சொன்னப்ப, எங்க பள்ளிக்கூடத்துல  சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வரும். மனசு  வலிக்கும். ‘தப்பு பண்ணிட்டோமோ’ன்னு மனசுக்குள்ள அழுதிருக்கேன். 

‘பயப்படாதேம்மா... நிச்சயம் ஜெயிச்சிடுவோம்’னு தைரியம் சொன்னது என் மகள். ரெண்டு வருஷப் போராட்டத்துக்குப் பிறகு முதல்  ஆர்டர்  கிடைச்சது. மறுபடி நம்பிக்கை எட்டிப் பார்த்தது. முதல் ஆர்டர்ல வந்த லாபத்துல இன்னொரு மெஷின் வாங்கினோம்.  மெல்ல மெல்ல பரவலா ஆர்டர்  வர ஆரம்பிச்சது. பாரதிய யுவ சக்தி டிரஸ்ட் அமைப்போட வழிகாட்டுதல் மூலமா, பேங்க் லோன்  கிடைச்சது. பிசினஸை இன்னும் விரிவாக்கினோம். 

இன்னிக்கு சென்னையில உள்ள பெரும்பாலான ஆஸ்பத்திரிகளுக்கும், பியூட்டி பார்லர்களுக்கும், ஸ்பா சென்டர்களுக்கும் நாங்கதான்  டிஸ்போசபிள்  அயிட்டங்களை சப்ளை பண்றோம். ஹிந்துஸ்தான் லீவரோட ஆயுஷ், சஞ்சீவனம், ஆரோக்யா உள்ளிட்ட பெரிய நிறு வனங்களும் அதுல அடக்கம்.  வேற எங்கேயும் வேலை பார்க்க முடியாதவங்களுக்கு எங்க கம்பெனியில வேலை கொடுத்திருக்கோம்.  கை, கால் நல்லா இருக்கிறவங்க, எங்க  வேணா பொழைச்சுக்குவாங்க. 

முடியாதவங்களைத்தான் நாம கைதூக்கி விடணுங்கிறதை ஒரு கொள்கையாவே வச்சிருக்கோம். சென்னையில பிசினஸ் ஓரளவு வள ர்ந்ததும், என்  மகள் துபாய்க்கு போயிட்டா. அங்கேயும் எங்க தயாரிப்புகளுக்கு எக்கச்சக்க வரவேற்பு. சர்வதேச மார்க்கெட்டை  பிடிக்கணுங்கிற அவளோட ஆசையும்  நிறைவேறிடுச்சு. ‘நம்ம கனவு ஒருநாள் நனவாகும்... பாருங்க’ன்னு சொல்லித்தான், எங்க நிறுவ னத்துக்கு ‘ட்ரீம் வீவர்ஸ்’னே பேர் வச்சா என் மகள்.  அது இப்ப நிறைவேறிடுச்சு...’’ - ஷெரிலின் வார்த்தைகளில் அத்தனை பூரிப்பு!

Address:

Bharatiya Yuva Shakti Trust
C/o, Confederation of Indian Industry (CII)
98/1, Velachery Main Road
Guindy
Chennai - 600042
Tel : 044-42444521 (AVK) , 044-42444505 (telefax), 044-42444555 (CII Board Line)
e-mail: byst.chennai@cii.in
Contact Person: Mr. Baskaran

- ஆர்.வைதேகி
நன்றி குங்குமம்தோழி

Thursday, January 24, 2013

சுருக்கு பை சுருக்கு பை




















Hope you enjoyed this tutorial! 
Happy Making!

Friday, January 4, 2013

பெண்களின் கற்பனா சக்தியைத் தூண்டக் கூடிய அழகியல் கலைகளில் தையல் கலை முக்கிய இடம் பிடிக்கின்றது.


தையல் கலையை இன்று அனேகமான பெண்கள் பழகி செய்து வருகின்றனர். தையல் கலையானது ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது என்றால் அது மிகையாகாது. எந்தவொரு மனிதனுக்கும் உணவு உறைவிடத்தைப் போன்று உடையும் அத்தியாவசியமானதாகும். ஆகவே தையல் ஒரு முக்கியத்துவமான தொழிலாகும். ஏனெனில் ஒவ்வொரு ஆடைகளுமே யாரோ ஒருவரால் தைக்கப்பட்டதேயாகும்.
சிறுவர் ஆடைகள் என்று எடுத்துக் கொண்டால் Party Frock முக்கிய இடம் பெறுகின்றது. சிறுமிகளுக்கு ஏற்ற வகையிலும் வித்தியாசமான வடிவங்களிலும் Party Frock ஐப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இன்று எமது நாட்டில் தையல் வளர்ச்சி பெற்றுள்ளது. புதுப்புது டிசைன்களில் Party Frock ஐ எமது நாட்டு தையல் கலைஞர்கள் மிகவும் நுட்பத்துடன் தமது கலையார்வத்தை பயன்படுத்தி பல வடிவங்களில் மிகவும் நுட்பமாக தைத்து வெளியிடுவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
இந்த வகையில் Party Frock குறித்து அறிந்து கொள்வதற்காக தையல் கலைஞர் செல்வி வாகேஸ்வரி சன்னதிநாதனை வெள்ளவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். அவர் எம்மை இன்முகத்தோடு வரவேற்று எமது கேள்விகளுக்கும் செய்முறையாக சலிப்பின்றி விளக்கமளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் வருமாறு,
தங்களுக்கு இந்த துறையில் ஆர்வம் ஏற்படக் காரணம் என்ன? அதற்காக தாங்கள் எடுத்த முயற்சிகள் என்ன? நான் சிறு வயதில் இருந்தே இந்த தையல் கலையில் ஆர்வத்துடன் இருந்து வந்தேன். அத்துடன் எனது சகோதரியும் இக்கலையில் ஈடுபட்டு வந்தமை எனக்கு மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. எனது சகோதரியிடம் சில விடயங்களில் பயிற்சி பெற்ற நான் பின்னர் 1998 ஆம் ஆண்டு சிங்கர் நிலையத்தில் எம்ரொய்டரி மற்றும் தையல் வேலைப்பாட்டையும் ஏனைய தையல் வேலைப்பாடான Party Frock திருமதி சாந்தி என்பவரிடமும் பயின்றேன். பின்னர் மேலதிக மணப் பெண் அலங்காரம், மகிந்தி ஆகியவற்றிற்கான பயிற்சிகளை திருமதி மஞ்சுளா பரசுராமனிடமும் கற்றேன்.
எனது இந்த முயற்சிகளுக்கு எனது குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைத்தமையே எனக்கு பெரும் அனுகூலமாக அமைந்தது. நான் இந்தத் தையல் கலையை முதலில் பொழுது போக்கிற்காகவே கற்க ஆரம்பித்தேன். ஆனால் எனக்கு கற்கும் போது தான் அதன் முக்கியத்துவம் விளங்கியது. இதனால் இதனை மேலும் திறம்பட பயிற்சி பெற்று எனது தொழிலாக மேற்கொள்ள வேண்டும் என்ற ஓர் உத்வேகம் ஏற்பட்டது. அதனால் இதனைத் திறம்படக் கற்றுத் தேர்ச்சி பெற்றேன்.
இந்த தையல் கலையை எனது தொழிலாக கடந்த 5 வருடங்களாக மேற்கொண்டு வருகின்றேன். ஆரம்பத்தில் நான் எனது குருவாகிய திருமதி சாந்தி என்பவருடன் இணைந்து Party Frock ஐ தைத்து வெளிநாடுகளுக்கெல்லாம் அனுப்பி நல்ல வருமானத்தைப் பெற்றுக் கொண்டோம். தற்பொழுது நான் தனியாக எனது வீட்டில் இருந்தபடியே Party Frock உள்ளிட்ட சுடிதார், சாறி பிளவுஸ், நைட்டி என்பவற்றை ஓடர்களுக்காக தைத்துக் கொடுக்கின்றேன். மேலும் தையல் தவிர்ந்த கேக் ஐசிங், றிச் கேக், பெயின்ரிங், சமையல் கலை என்பனவற்றையும் மேற்கொண்டு வருகின்றேன். இவற்றினால் எனக்கு அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ளக் கூடியதாகவுள்ளதுடன் எனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தபடியே தொழிலைச் செய்யக் கூடியதாகவும் உள்ளது.
தையல் கலை குறித்து தங்களின் கருத்து என்ன? இதனால் உங்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன?
தையல் கலை என்பது மிகவும் இலகுவானதும் அதிக பயன் உள்ளதும் ஆகும். தையல் கலையைப் பழகிக் கொள்வதன் மூலம் நாம் ஏராளமான நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். தொழிலாக மேற்கொள்பவர்கள் மட்டும்தான் பழகிக் கொள்ள வேண்டும் என்ற நிலை இல்லை. பெண்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் தையலைப் பழகிக் கொண்டால் தமது தேவைக்கு சாறி பிளவுஸ், சுடிதார், பாவாடை, சட்டை, நைட்டி என தமக்கு தேவையான அனைத்துவிதமான உடைகளையும் தைத்துக் கொள்வதுடன் தமக்கு விரும்பிய டிசைனிலும் விதம் விதமாக தைத்துக் கொள்ள முடியும்.
அதனால் பெரும் தொகைப் பணம் மிச்சப்படுத்தப்படுகின்றது. அதேபோன்று சிறுவர், சிறுமியர் இருப்பின் அவர்கட்கு தேவையான அனைத்து விதமான Party Frock உட்பட பலதரப்பட்ட ஆடைகளைத் தைத்து விரும்பியபடி அணிவித்துக் கொள்ள முடியும். மேலும் இத் தையல் கலையைப் பயன்படுத்தி வீட்டையும் அலங்கரிக்க முடியும். பெண்கள் இக்கலையை வீட்டில் இருந்தபடியே சுலபமாக சம்பாதிக்கலாம். செலவு குறைவானது. ஆனால் வருமானம் அதிகம் பெறக்கூடியது.
கற்பனைத் திறனுக்கு ஏற்ப திறமைகளை அதிகரித்து நுணுக்கமாகவும் அழகாகவும் தைப்பதன் மூலம் பலதரப்பட்ட நன்மைகளை அடையலாம். என்னைப் பொறுத்தமட்டில் தையல் எல்லோருக்குமே முக்கியமாக தெரிந்திருக்க வேண்டியதொன்றாகும். இதனைத் தெரிந்து வைத்திருப்பதன் மூலம் எமது சிறு தேவைகளுக்கெல்லாம் பிறரை நாடாமல் நாமே அதனை நிவர்த்தி செய்ய முடியும். மேலும் நாங்களே எமது உடைகளை தைப்பதால் நவீன வடிவில் விரும்பியவாறு விரும்பும் போது தைத்துக் கொள்ளலாம். இந்த தையல் கலை ஊடாக நான் பலதரப்பட்ட நன்மைகளைப் பெறுகின்றேன். அத்துடன் வீட்டில் இருந்தபடியே அதிக வருமானத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடியதாகவுள்ளது.
Party Frock தைக்கும் முறை குறித்து கூறுங்கள்?
இந்த Party Frock இற்கு லேஸ்துணி, ஒகண்டி, சீக்குயின்ஸ் சேர்க்கப்பட்ட துணி, சாமோஸ் துணி, நெற்துணி எனப் பலதரப்பட்ட துணி வகைகளை பயன்படுத்த முடியும். இதனை அலங்கரிப்பதற்கு கலர் கற்கள், முத்து, பீட்ஸ், லேஸ், சீக்குயின்ஸ், சிறிய பூக்கள், இலைகள், றிபன்கள் எனப் பலதரப்பட்ட பொருட்கள் உண்டு.
எனவே இவற்றில் முதலில் எமக்கு தேவையான பொருட்களைப் பெற்றுக்கொண்டு பற்றனிற்கேற்ப துணிகளை எடுத்துக் கொண்டு வெட்டிக் கொள்வோம். இங்கு தரப்பட்டுள்ள அளவுகள் ஒரு வயதுடைய பிள்ளைக்குரியதாகும். மேல் உடம்பு அளவுகள் (அளவுகள் அங்குலத்தில் உள்ளது)
தோள்:
8 : 2 = 4''
மார்பு
20 : 4 = 5 + 1 (தையல் இடைவெளி) = 6''
தோளிலிருந்து இடுப்புவரை 8'' ஜோக் எனில் 5' முழு நீளம் 16"
இந்த அளவைப் பயன்படுத்தி உங்களுக்கு விரும்பிய வடிவில் மேல் உடம்பை வரைந்து கொள்ளவும். கீழ் உடம்பு
முழு நீளம் 16 : 8 = 11 + 1 (தையல் இடைவெளி) = 12'' மூன்று வகையான துணியை எடுத்துக்கொள்ள வேண்டும். பப்ளின் நீளம் 10'' அகலம் 45'' சட்டின் நீளம் 11'' அகலம் 65'', நெற் துணி நீளம் 12'' அகலம் 65'' இவ் அளவுகளில் கீழ் உடம்பை வெட்டிக்கொள்ள வேண்டும். சட்டையின் விளிம்பைத் தைக்கும் போது விளிம்புகளை உருட்டி தங்கூசியையும் வைத்து உருட்டி தைக்க வேண்டும். அப்போது தான் அது விரிந்து அழகாக இருக்கும்.
மேல் துண்டுகளை கை, கழுத்து எனத் தைத்த பின்னர் கீழ் பகுதிக்காக வெட்டப்பட்ட மூன்று துணியையும் தனித்தனியாக சுருக்கி ஒன்றன் மேல் ஒன்று அடுக்கிய பின் மேல் உடம்புடன் இணைத்துக் கொள்ள வேண்டும். இனி எமக்கு தேவையான இடங்களில் சீக்குயின்ஸ் நெற், கல், பூ என்பவற்றை விரும்பிய இடத்தில் வைத்து தைத்து மேலும் மெருகூட்டிக் கொள்ள முடியும்.
இந்த Party Frock ஐ தைக்க தற்பொழுது அதிக பணம் செலவிடப்படுகின்றது. துணிகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்கள் அதிக விலை ஏற்பட்டுள்ளதால் அனேகர் கடையில் ரெடிமேட்டாகவே புதிய சட்டைகளை வாங்கிக் கொள்கின்றனர். இருப்பினும் திருமண வைபவங்களுக்கு Flower Girls இற்கு ஒரே மாதிரி வித்தியாசமான வடிவில் சட்டைகளைப் பெற விரும்புபவர்கள் எங்களை நாடுகின்றனர்.
இந்த Party Frock ஐ தைக்க எனக்கு ஒரு நாள் தேவைப்படுகின்றது. இருப்பினும் அதிகம் Orders இதற்கு வராததால் செய்யக்கூடியதாக உள்ளது. ஏனெனில் சாறி பிளவுஸ், சல்வார் போன்றவற்றை விரைவில் தைத்து விடுவேன். இதனாலும் இந்த Party Frock இற்கு அதிக பணம் அறவிடப்படுகின்றது. என்னதான் இருப்பினும் எமது தேவைக்கேற்ப அதனை விரும்பிய டிசைனில் அளவாக பெற்றுக் கொள்ளக்கூடியதால் இதனைத் தைத்துப் பெற்றுக்கொள்ள பலர் விருப்பம் தெரிவிக்கின்றனர் என்றார். அவர் வழங்கிய தகவல்களுக்கு நன்றி தெரிவித்து விடை பெற்றோம்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites