இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, November 23, 2011

பென்குயின் ஒரு காதல் குயின்


ஏறக்குறைய ஒரு அரிசி மூட்டையை நிறுத்திவைத்தாற்போல் இருக்கும் வெயிட்டானபறவை பென்குயின்இந்த வெயிட்டானபார்ட்டி இறக்கை இருந்தும் அதை அசைக்கமுடிந்தும் பறக்க இயலாத பரிதாபமானபறவைஆனால் அதிக குளிரை அனாயசமாகதாக்குப்பிடிக்கும் இந்த கடல் பறவை!
ஆஸ்திரேலியாஆப்பிக்காதென் அமெரிக்கா,பெருநியூசிலாந்து நாடுகளின் கடற்கரைகள்,தெற்கு அட்லாண்டிக்பசிபிக்கடற்கரைகள்தான் பென்குயின்கள் ஜாகைகள்.
ஸ்பெனிஸிடே என்ற குடும்பத்தைச் சார்ந்தபென்குயின்களில் 6 குரூப்புகள் இதில்சக்ரவர்த்திராஜாநீலம்பாறைபெரிசுகள்என 17 இனங்கள்எல்லா இனத்துக்கும்மேல்புறம் மிட்நைட் ப்ளூவும்அடிப்புறம்வெள்ளை நிறமாகவும் இருக்கும்தலை,கழுத்தில் உள்ள வித்தியாச நிறங்கள்தான் பென்குயின்களை ஜாதிவாரியாகபிரிக்கிறதுநீலப் பென்குயின்கள்தான் இருப்பதிலேயே குட்டி ரகம்ஒரு அடிதான்அதிகப்பட்சம்சக்ரவர்த்திப் பென்குயின்கள் ஒரு மீட்டர் உயரம் இருக்கும்!
கடற்கரையில் உட்கார்ந்திருக்கும் போது பெரிய படுதாவைப் போர்த்தியிருக்கும்முகமூடி மனிதன் போல பென்குயின் இருக்கும்குட்டை கழுத்துகனத்த சரீரம்,வால் கூட ஃபார்மாலிட்டிக்கு கொஞ்சுண்டுதான்கால்கள் சிறிதாகசற்றுப்பின்தள்ளி இருப்பதால் சவ்வோடு கூடிய பாதத்தை ஜிக்ஜாக்கா நடக்கும் போதுகொள்ளை அழகாக இருக்கும்பார்க்க ஆந்தைத் தோற்றம் தரும் பென்குயின்புறாகுரலில் கத்தும்.
உடல் முழுவதும் வாட்டர் புரூப் சிறகுதான்.கடும் குளிரையும்மழையையும்சமாளிக்க மூன்று லேயர்கள் இதில் இருக்கும்தினசரி 150 கிராம் சிறகுகள்உதிர்த்து, 12 நாட்களில் புதுப்பிக்கப்பட்டுவிடும்உடலில் மொத்தம் 2 கிலோசிறகுகளை போர்த்திக்கொண்டு கடும் குளிரை இதமாக சமாளித்துவிடும்பென்குயின்!
பிடித்த உணவு எது என்று பென்குயினை கேட்டால் சிறிதும் தாமதம் இல்லாமல்சட்டென கடல்மீன்கள்தான் என கூறிவிடும்இதற்காக கடலில் டைவ் அடித்துவெகு ழத்துக்குச் சென்று வெரைட்டியான மீன்களை ஆசை தீர துரத்திப் பிடித்துலபக்கும். 200 மீட்டருக்குக் கீழ் சர்வசாதாரணமாக பென்குயின்கள் நீச்சல் அடிக்கும்.ஐஸ் பாறைகளைக் கண்டு விட்டால்காலால் இவை நடக்காது.வயிற்றால்வழுக்கியபடி படுவேகத்தில் ஸ்கேட்டிங்தான்பென்குயின்கள் கரையில் எதையும்சாப்பிடாதுபிரேக்பாஸ்ட்லன்ச்டின்னர் எல்லாம் கடலில்தான்சில நேரங்களில்இரை தேடிக் கடலில் குதிக்கும் பென்குயின்கள் வாரக்கணக்கில் கூட கரைக்குத்திரும்பாமல் நீந்துவதுண்டு.
அதிகம் நேரம் நீரிலேயே இருப்பதால் பென்குயின்கள் உடலில் சிறு அழுக்குகூடஇருக்காதுஎப்பொழுதும் மேக்கப்பில் இருக்கும் கவர்ச்சி நடிகை போல கிளாமராகஇருக்கும்இந்த பிரெஷ் தோற்றத்தாலேயே அடிக்கடி காதலால் கவரப்பட்டு,நினைத்த போதெல்லாம் ஜோடி சேர்ந்து கொள்ளும்காதல் மனைவியைத் தவிரபிற அழகிகளை ஒரு போதும் ஆண் பென்குயின்களை நாடுவதில்லை!
மாலை நேரம் வந்துவிட்டால் குஷி பிறந்துவிடும் பென்குயின்களுக்கு!கடற்கரையில் காலார நடக்கும்போதே காதல் பிறந்துவிடும்காதலனும்,காதலியும்எதிரெதிரே பார்த்தபடி நின்று கொள்ளும்நீண்ட நேர முத்த மழை நடக்கும்.முத்தத்துக்குப் பின் வரும் வெட்கம்,அதன் பின் இறக்கைகள் படபடவென்றுஅடித்து சிக்னல் காட்டும்.பிறகு காதலியின் தலையை தன் சிறகுக்குள் மறைத்துஇரண்டறக் கலப்பான் பென்குயின் காதலன்.
காதல் முடியும்வரை டிரெம்பெட் வாசிப்பது பேன்ற இசையை இரண்டும் எழுப்பிக்கொண்டேயிருக்கும்அதை கேட்டு இணை நிகழ்வு நடக்கிறது என்று உணர்ந்துமற்ற பென்குயின்கள் வேறு பக்கம் திரும்பிக்கொள்ளும்ஒரு பக்கம் டிரெம்பெட்இசைமறுப்பக்கம் இறக்கைகளின் விளாசல் இரண்டும் முடிந்துவிட்டால் அதுமுடிந்துவிட்டது என அர்த்தம்வயிற்றில் ஜனனம் நடந்துசீசன் வந்ததும்,புதர்களும் மரங்களும் மண்டிய ஏரியாவில் பெண்குயின்கள் மாநாடு கூடும்.முட்டையிடுவதற்குதான்இளம் பச்சை அல்லது வெள்ளை நிற ஜதைமுட்டைகள்.30 முதல் 60 நாட்கள் வரை அடைகாப்பு நடக்கும்கணவனுக்கும்இதில் பங்குண்டுஇருவரும் பாதி பாதி நாட்கள் ஷிப்ட் முறையில் அடைகாக்கவேண்டியதுதான்.அடை காக்கும் நாட்கள் முழுவதும் அன்னா ஹசாரேயாக மாறிஅன்ன ஆகாரத்திற்கு நோ சொல்லி விடும்பாதுகாப்பான இடத்திற்கு செல்லவேண்டியிருந்தால் தனது பாதச் சவ்வுகளுக்கு இடையில் முட்டையைவைத்தபடிதான் அன்ன நடை போடும் பென்குயின்களை பார்க்கஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் ஏகத்துக்கு டூரிஸ்ட்கள்!
ஒரு கொசுரு செய்தி! குட்டி பென்குயின் இறந்துவிட்டால் அடுத்தவரின் குட்டியை அபேஷ் செய்து தன்னுடன் ரகசியமாக சேர்த்துக்கொள்ளுமாம்! அரசு மருத்துவமனையில் நடப்பதுபோல்? இதை தடுப்பதற்கென்றே சிறப்பு தனி பாதுகாப்புப்படையும் பென்குயின்கள் ராஜ்யத்தில் உண்டாம்!

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites