இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Saturday, August 31, 2013

பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு ! விற்பனையில் 10% லாபம்



முன்பெல்லாம் ஓட்டலுக்கு பார்சல் சாப்பாடு வாங்கப் போனால், வீட்டிலிருந்து கேரியர் எடுத்துக் கொண்டு போக வேண்டும். ஆனால், இன்றோ கையை வீசிக் கொண்டு ஓட்டலுக்குப் போனாலும், காசைக் கொடுத்தால் சாம்பார் முதல் ரசம், மோர், பொரியல், பாயசம் என அனைத்து அயிட்டங்களையும் பிளாஸ்டிக் பைகளில் பார்சல் செய்து கொடுத்து விடுகிறார்கள். சாப்பாடு மட்டுமல்ல, பூ முதல் புளி வரை அத்தனையும் இன்று பிளாஸ்டிக் பைகளில் அடக்கம்.
சுற்றுச்சூழல் பிரச்னைகள் காரணமாக குறிப்பிட்ட மைக்ரான் அளவு கொண்ட பிளாஸ்டிக் பைகளை மட்டுமே தயாரிக்க அரசு அனுமதிக்கிறது. நல்ல டிமாண்ட் உள்ள தொழில் செய்ய நினைக்கிறவர்கள் அரசு அனுமதித்துள்ள தரத்தில் பைகளைத் தயாரித்தால் நிச்சயம் நல்ல லாபம் பார்க்கலாம்.
சந்தை வாய்ப்பு:
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை ஒரு வருடத்திற்குச் செலவாகும் பிளாஸ்டிக் பைகளின் எண்ணிக்கை 12 லட்சம் டன். ஆனால், தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பைகளோ ஐந்து லட்சம் டன் மட்டுமே. வழக்கம்போல குஜராத் மாநிலம் பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கிறது.
தமிழ்நாட்டில் ஏற்படும் பற்றாக்குறையை குஜராத்திலிருந்து வாங்கிச் சமாளிக்கின்றனர். எனவே, இப்போது புதிதாகத் தொழில் தொடங்குகிறவர்கள் பாக்கியுள்ள சந்தை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். ஓட்டல்கள், சாலையோர உணவகங்கள், மெடிக்கல் ஷாப்கள், பேக்கரிகள், மளிகைக் கடைகள், பழம், காய்கறிக் கடைகள் என அனைத்து சிறிய மற்றும் பெரிய வியாபாரிகளும் கட்டாயமாகப் பயன்படுத்தப்படும் பொருளாக இருக்கிறது இந்த பிளாஸ்டிக் பைகள். இந்த சிறிய மற்றும் பெரிய வியாபாரிகளுக்கு சப்ளை செய்தாலே போதும். ஒவ்வொரு கடைக்கும் தேவையான அளவில் பைகளுக்கான ஆர்டரை பெற்று தயார் செய்து கொடுக்கலாம். அல்லது பல்வேறு அளவுகளில் நாமே தயார் செய்து அவற்றை கடைகளுக்கு விநியோகிக்கலாம்.  

முதலீடு:
இந்த தொழிலைத் தொடங்க சுமார் 14 லட்சம் ரூபாய் வரை முதலீடு தேவை. இயந்திரங்கள் வாங்க சுமார் நாலே கால் லட்சமும் மீதி செயல்பாட்டு மூலதனத்துக்கும் தேவைப்படும்.
மூலப் பொருள்:
இதன் மூலப் பொருளான ஹெச்.எம்.ஹெச்.டி.பி., குருணை அரிசி போன்று இருக்கும். இதனை கிரான்யூல்ஸ் என்று அழைக்கிறார்கள். இந்த கிரான்யூல்ஸை ரிலையன்ஸ், ஆயில் இந்தியா கார்ப்பரேஷன் போன்ற பெரிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இதற்கான விநியோகஸ்தர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் மூலப் பொருளை வாங்கிக் கொள்ளலாம்.

தயாரிப்பு:

முதலில் மூன்றுவிதமான கிரான்யூல்ஸ்களை சரியான விகிதத்தில் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை  ஒரு இயந்திரத்தில் போட்டு 180-240 சென்டி கிரேட் வெப்பநிலையில் உருக வைக்க வேண்டும். கம்ப்ரசர் மூலம் வாயுவைச் செலுத்தி பிளாஸ்டிக் பேப்பர் போல ரெடி செய்கிறார்கள். பிறகு கட்டிங் மெஷினைக் கொண்டு தேவையான அளவுகளில் கட் செய்து, பஞ்சிங், சீலிங் இயந்திரங்களில் கொடுத்து எடுக்க பிளாஸ்டிக் பை தயாராகி விடுகிறது. இதில், எழுத்துக்கள் அச்சிட வேண்டும் எனில் பிரின்டிங் இயந்திரத்தில் செலுத்தி  பிரின்ட் செய்து கொள்ள வேண்டும், அவ்வளவுதான்!
கட்டடம்:
இந்தத் தொழில் தொடங்க 2,000 சதுர அடியில் இடம் தேவை. இடம் சொந்த மானதாக இருந்தால் செலவில்லை. இல்லையெனில் வாடகைக்கு கணிசமான பணம் செலவாகும்.

இயந்திரம்:
பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கத் தேவைப்படும் இயந்திரங்கள் வாங்க மட்டும் குறைந்தபட்சம் நான்கு லட்ச ரூபாய் செலவாகும். இயந்திரங்களின் விலை அதிகரிக்க அதிகரிக்க பைகளின் தரமும் மேம்பட்டு இருக்கும். எஸ்டுடர், கட்டிங், சீலிங் மெஷின், பிரின்டிங் மற்றும் பஞ்சிங் மெஷின் போன்ற இயந்திரங்களும் தேவைப்படும். இந்த இயந்திரங்கள் தமிழ்நாட்டில் ராஜபாளையம், கோயம்புத்தூர் போன்ற இடங்களில் கிடைக்கிறது. எனினும், குஜராத்தில் கிடைக்கும் இயந்திரங்கள் இன்னும் கூடுதல் தரத்துடன் இருப்பதாக பிளாஸ்டிக் பேக் தயாரிப்பாளர்கள் சொல்கிறார்கள்.
வேலையாட்கள்:
ஆண்டுக்கு இருபது லட்சம் கேரி பைகள் தயாரிக்க மூன்று திறமையான வேலை யாட்களும், இரண்டு சாதாரண வேலையாட்களும், ஒரு மேலாளரும் தேவைப் படுவார்கள்.

பிளஸ்:
எல்லாவிதமான பொருட்களும் பிளாஸ்டிக் பைகளில் கொடுப்பது வழக்கமான விஷயமாகி விட்டது. நாளுக்கு நாள் தேவை அதிகரிக்கிறதே தவிர குறைவதில்லை என்பது கூடுதல் பலன். போட்டிகள் அதிகம் இல்லை.
மைனஸ்:
பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது என பிளாஸ்டிக்கிற்கு எதிராகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடி வருகிறார்கள்.  
தேவையும் அதிகம், வாய்ப்புகளும் கொட்டிக் கிடக்கும் தொழில் என்பதால் புதிதாகத் தொழில் தொடங்க இருக்கும் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
பானுமதி அருணாசலம்,  அ.முகமது சுலைமான்
படங்கள் : ச.இரா.ஸ்ரீதர்

தேங்காய் எண்ணெய்

வறுவல், பொரியல் என எண்ணெய்யில் செய்யும் உணவு அயிட்டங்கள் அனைத்திற்கும் நம்மவர்கள் அடிமை. நம்முடைய தினசரி சமையலில் எண்ணெய் கலக்காத உணவு என்று எதுவுமில்லை. தோசையில் ஆரம்பித்து பூரி, சப்பாத்தி வரை அனைத்தையும் ஏதாவது ஒரு எண்ணெய்யில் செய்து சாப்பிட்டால் மட்டுமே நம்மவர்களுக்கு திருப்தி. தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், பாமாயில் என பலவகையான எண்ணெய் அயிட்டங்கள் நம்மூரில் இருக்கிறது. நிலக் கடலை, சோயா பீன்ஸ், தேங்காய், எள் போன்ற மூலப் பொருட்களிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.
சந்தை வாய்ப்பு!

உணவுப் பொருட்களுக்கான தேவை இருக்கும் வரை எண்ணெய்க்கான தேவையும் இருக்கும். வீடுகள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்களில் எண்ணெய் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பிரியாணி, பஜ்ஜி, வடைகள், நான்-வெஜ் அயிட்டங்கள்  தயார் செய்வதற்கு அதிக அளவில் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. தவிர, ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு குறைந்தது மூன்று லிட்டர் எண்ணெய் தேவைப்படுகிறது. தேசிய அளவில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி என்பது எந்த சூழ்நிலையிலும் சரிந்து போகாத தொழில். தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் தேங்காய் எண்ணெய் தேவை பெரிய அளவில் உள்ளதால், என்றுமே இதன் மார்க்கெட் களைகட்டியிருக்கும்.
முதலீடு!
எண்ணெய் உற்பத்தி செய்யத் தேவைப்படும் முக்கியமான முதலீடு என்றால் கட்டடமும், இயந்திரமும்தான். ஆண்டுக்கு 12,000 லிட்டர் எண்ணெய் உற்பத்தி செய்யும் மில் ஒன்றைத் தொடங்க சுமார் 15 லட்ச ரூபாய் தேவைப்படும். இந்த தொழிலைத் தொடங்கும் நிறுவனர் 15%, மீதமுள்ள 85% கடன் மற்றும் மானியம் மூலம் பெற்றுக் கொண்டு தொழிலைத் தொடங்கலாம்.




கட்டடம்!
ஆயில் மில் தொடங்க குறைந்தபட்சம் 30 சென்ட், அதிகபட்சமாக ஒரு ஏக்கர் வரை இடம் தேவைப்படும். தேவையான இடம் சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ எடுத்துக் கொள்ளலாம். எண்ணெய் உற்பத்திக்குத் தகுந்தாற்போல் கட்டடங்களை அமைப்பது அவசியம்.  
வேலையாட்கள்!
இத்தொழிலில் வேலையாட் களின் பங்கு மிகவும் அவசியம். ஒரு நாளைக்கு 32 லிட்டர் உற்பத்தி செய்வதற்கு திறமையான வேலையாள் ஒருவர், ஒரு சூப்பர்வைஸர் என இரண்டு நபர்கள் தேவை.



மூலப் பொருட்கள்!
நிலக் கடலை, எள், தேங்காய், சோயா பீன்ஸ் போன்ற பொருட்கள்தான் முக்கிய மூலப் பொருட்கள். இதில் எது உங்களுக்கு சுலபமாகக் கிடைக்குமோ அதைக் கொண்டு எண்ணெய் உற்பத்தி செய்யலாம். சில இடங்களில் மேற்சொன்ன எல்லா மூலப் பொருட்களும் எளிதாகக் கிடைக்கும்பட்சத்தில், எல்லாவிதமான எண்ணெய்களையும் உற்பத்தி செய்யலாம். ஆனால், ஒவ்வொன்றுக்கும் தனித் தனி இயந்திரங்கள் தேவைப்படும். காரணம், ஒரு இயந்திரத்தில் ஒரு வகையான எண்ணெய் மட்டுமே தயார் செய்ய முடியும். தேங்காய் கிடைக்கும்போது தேங்காய் எண்ணெய், எள் கிடைக்கும் போது நல்லெண்ணெய் என மாதத்திற்கு ஒரு எண்ணெய்யை நம்மால் தயார் செய்ய முடியாது. இங்கு நாம் தேங்காய் எண்ணெய் தயாரிப்பு மட்டுமே பார்க்க இருக்கிறோம்.
தேங்காய் எண்ணெய் தயார் செய்ய தேங்காய்தான் முக்கிய மூலப் பொருள். நூறு கிலோ தேங்காய் பருப்பிலிருந்து 63 கிலோ எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும்.

இயந்திரம்!
எக்ஸ்பெல்லர் (ணிஜ்ஜீமீறீறீமீக்ஷீ), வடிகட்டும் இயந்திரம், பாய்லர், அளவிடும் இயந்திரங்கள் என மொத்தம் 90,000 ரூபாய் வரை இயந்திரத்திற்குச் செலவாகும். பெரும்பாலும் இந்த இயந்திரங்கள் அனைத்தும் தமிழகத்திலேயே கிடைக்கிறது.
தயாரிப்பு முறை!
தேங்காய் பருப்பு தனியாகவும் கிடைக்கும், அல்லது தேங்காயிலிருந்தும் பருப்பை நாமே எடுத்து கொள்ளலாம். இப்படி தனியே எடுத்த  தேங்காய் பருப்பில் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பதால் எண்ணெய் எடுப்பது கடினம். எனவே அதை பாய்லர் வெப்பத்தின் மூலம் ஈரத்தை உறிஞ்சி, உலர வைக்கிறார்கள். பின்னர் கட்டர் இயந்திரத்தின் மூலம் தேங்காயைத் துண்டு துண்டாக்கி கிரஷிங் மெஷினில் போட்டு அரைக்கிறார்கள். இதிலிருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கப்பட்டவுடன் அதன் சக்கைகள் வெளியே தள்ளப்படுகிறது. இந்த தேங்காய் எண்ணெய் இதன்பிறகு ஃபில்டர் இயந்திரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கசடுகள் வடிகட்டப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், 'ஆயில் ஃபில்லிங்’ இயந்திரம் மூலம் பாக்கெட்டுகளிலும், சிறிய டின்களிலும் அடைக்கப்பட்டு விற்பனைக்கு செல்கிறது.

பிளஸ்!
தேங்காய் எண்ணெய் முக்கியமான சமையல் எண்ணெய் என்பதால், எளிதில் சந்தைப்படுத்த முடியும். தலை முடியில் தேய்த்துக் கொள்வதற்கு பெரும்பாலும் தேங்காய் எண்ணெய்யையே பலரும் பயன்படுத்துவதால் கூடுதல் வாய்ப்பு கிடைக்கிறது.
மைனஸ்!
மூலப் பொருளான தேங்காய் விலையைப் பொறுத்தே இதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தேங்காய் விலை அதிகரிக்கும்போது, மூலப் பொருள் கொள்முதல் விலையும் அதிகரிக்கும். இதனால் தேங்காய் எண்ணெய் விலை உயரும்போது விற்பனை பாதிப்படையும்.
இந்த தொழிலின் சூட்சுமங்களை அனுபவ ரீதியாகப் பெற்ற பிறகு தனியாகத் தொடங்கி நடத்தினால் நிச்சயம் வெற்றிதான்!


செல்லோ டேப்-செல்லோ டேப்


பரிசுப் பொருட்களை அழகாக பேக்கிங் செய்யணுமா? கடித உறைகளை ஒட்டணுமா? படங்களை சுவரில் ஒட்டணுமா? இல்லை, குழந்தைகளின் கிழிந்துபோன நோட்டுப் புத்தகத்தை ஒட்டணுமா? எல்லாவற்றுக்கும் நாம் தேடும் ஒரே ஒரு பொருள் செல்லோ டேப்! அதுமட்டுமல்ல, டெக்ஸ்டைல்ஸ், தோல் பொருட்கள், ஹார்டுவேர் போன்ற பல்வேறு துறைகளிலும் இந்த செல்லோ டேப் மிக முக்கியமான பொருளாகப் பயன்படுகிறது. அவ்வளவு தேவை மிகுந்த பொருளான செல்லோ டேப் தயாரிப்பது குறித்துதான் இந்த வாரம் நாம் பார்க்கப்போகிறோம்...
சந்தை வாய்ப்பு!
ஸ்டேஷனரி கடைகள், ஃபேன்ஸி ஸ்டோர்கள் என சில்லறை கடைகளிலும் பெரிய பெரிய தொழிற்சாலைகளிலும் இந்த செல்லோ டேப்புகளை விற்பனை செய்ய முடியும். செல்லோ டேப் பிஸினஸ் ஒவ்வொரு ஆண்டும் 15% வளர்ச்சி காண்கிறது. தொழிற்துறை வளர்ச்சி காரணமாக இத்தொழிலுக்கு உருவாகி இருக்கும் சந்தை வாய்ப்பும் அதிகம். எனவே, புதிதாக இத்தொழிலில் இறங்குகிறவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.
முதலீடு!
குறைந்தபட்சம் 8 லட்சம் ரூபாய் முதல், கோடிக் கணக்கில் இதில் முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு 2.70 லட்சம் மீட்டர் செல்லோ டேப் தயாரிக்க சுமார் 18 லட்சம் முதலீடு தேவை.  

மூலப் பொருள்!
 
ஃபோர்ம் டேப் கிரேடு ஃபிலிம், அடிசிவ். இந்த இரண்டும்தான் முக்கிய மூலப் பொருட்கள். போட்டோ ஃபிலிம் போல இருக்கிறது இந்த ஃபோர்ம் டேப் கிரேடு ஃபிலிம். அப்படியே ரோல் ரோலாகக் கிடைக்கிறது. இந்த மூலப் பொருள் போபால் மற்றும் சென்னையிலும் கிடைக்கிறது. மேலும், அடிசிவ் என்பது பசை. முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் இதை அப்படியே விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.
கட்டடம்!
இயந்திரங்களைப் பொறுத்து வதற்கு, தயார் செய்த செல்லோ டேப்களை ஸ்டோர் செய்து வைப்பதற்கு என 1,500 முதல் 4,000 சதுரடி வரை இடம் தேவைப்படும். சொந்தமாகவோ, வாடகைக்கோ எடுத்து இந்த பிஸினஸைத் தொடங்கலாம்.

இயந்திரம்!
கோட்டிங் இயந்திரம், ஸ்லைட்டிங் (Slitting) மற்றும் ஸ்லைசிங் (sliving) இயந்திரம். இந்த மூன்றும்தான் முக்கிய இயந்திரங்கள். இவை இருந்தாலே செல்லோ டேப் தயாரிப்பு யூனிட்டை தொடங்கிவிடலாம். மேலும், கூடுதலாக கலர் பிரின்டிங் இயந்திரம் செல்லோ டேப்பில் எழுத்துக்கள் அச்சிட பயன்படுகிறது. கோட்டிங், ஸ்லைட்டிங் மற்றும் ஸ்லைசிங் இயந்திரம் இவை மூன்றும் எட்டு லட்ச ரூபாய்க்குள் வாங்கிவிட முடியும். அதற்கு அதிகமான விலையிலும் இயந்திரங்கள் கிடைக்கின்றன. இயந்திரங்கள் அனைத்தும் சென்னை மற்றும் புதுச்சேரியில் கிடைக்கிறது.

தயாரிப்பு முறை!
மூலப் பொருட்களான அடிசிவ் எனப்படும் பசையை டேப் கிரேடு ஃபிலிம் ரோலில் கோட்டிங் இயந்திரத்தின் மூலம் கோட்டிங் செய்ய வேண்டும். இந்த பசை ஈரப்பதத்துடன் இருப்பதால் அதனை பாய்லரில் 140 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் சூடுபடுத்தினால், செல்லோ டேப்பாக வந்துவிடுகிறது. காட்டன், நைலான், பிளாஸ்டிக் என பல வகையிலும் இந்த செல்லோ டேப்பைத் தயாரிக்கலாம். செல்லோ டேப் தயாரான பிறகு இதனை ஸ்லைசிங் இயந்திரத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் கேட்கும் அளவுகளில் 5, 12, 15 மில்லி மீட்டர் என்கிற அளவுகளில் 'கட்’ செய்து கொடுத்துவிடலாம்.
மேலும், செல்லோ டேப்பில் ஏதேனும் வாசகம் பிரின்ட் செய்ய வேண்டும் எனில் கலர் பிரின்டிங் இயந்திரத்தின் மூலம் பிரின்ட் செய்து கொள்ள முடியும். 12,000 மீட்டர் டேப் கிரேடு ஃபிலிம்மில் 20,000 மீட்டர் செல்லோ டேப் தயாரிக்கலாம்.
வேலையாட்கள்!
திறமையான வேலை யாட்கள்-3, சாதாரண வேலையாட்கள்-5, மேனேஜர்-1, சூப்பர்வைஸர்-1, விற்பனை யாளர்- 2, மற்றவர்கள்-2 என மொத்தம் 14 நபர்கள் தேவைப்படுவார்கள்.

பிளஸ்!
பேக்கிங் செய்வது அனைத்து விதமான தொழில் களுக்கும் இன்றியமையாத விஷயம். எனவே, இதற்கான தேவை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். தவிர, அதிக அளவிலான தயாரிப்பாளர்கள் கிடையாது என்பது கூடுதல் பலன்.
மைனஸ்!
மூலப் பொருட்களின் விலை தினமும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். தவிர, வாங்கும்போது ஒரு விலை, வாங்கிய பிறகு வேறொரு விலை என அதிகரிக்கவும் வாய்ப்புண்டு. இதற்கு தகுந்தாற்போல் விலையை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
பலருக்கும் தெரியவராத தொழில் இது. போட்டிகள் அதிகம் இல்லாத தொழில் என்பது கூடுதல் சிறப்பு. ஆரம்பத்திலேயே இத்தொழிலில் இறங்கினால், நிச்சயம் ஜெயிக்கலாம்.
-பானுமதி அருணாசலம்
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்
''தோதான விலையில் தந்தால் தோல்வி இல்லை!''
''இந்த நிறுவனம் எனது அப்பா ஆரம்பித்தது. எனது படிப்பு முடிந்ததும் நான் இந்த தொழிலைப் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். செல்லோ டேப்பை வெறும் ஒட்ட வைப்பதற்கான ஒரு பொருள் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். இதில் காட்டன், நைலான், லெதர் என பல வகைகளில் தயாரிக்கப்படுகிறது. ஷூ-வில் அடிப்புற லேயராகவும், பைகள் மற்றும் பர்ஸ் வகைகளில் ஃபினிஷிங் வேலைகளைச் செய்யவும் பயன்படுகிறது. குறைந்தபட்ச முதலீடாக எட்டு லட்சம் ரூபாய் இருந்தாலே இந்த தொழிலை ஆரம்பித்துவிடலாம். நாங்கள் ஆண்டுக்கு 60 லட்சம் மீட்டர் செல்லோ டேப் தயாரிக்கிறோம். மூலப் பொருள் விலை மாற்றம் இத்தொழிலில் இருக்கும் பெரிய சிரமம். ஆனால், அதை சரியான முறையில் கணித்து வாடிக்கையாளருக்கு தோதான விலையில் கொடுத்தால், என்றும் நம்மை தேடிதான் வருவார்கள். தயாராகும் பொருட்களை டீலர்கள் மூலம் விற்பனை செய்யலாம். இல்லையெனில் நேரடியாகவும் ஆர்டர் எடுத்து செய்யலாம்.''

Thanks!!! vikatan

அதிக வருமானம் தரும் பட்டு வளர்ப்பு!



ஒரு ஏக்கர்… ஒரு மாதம்…30,000
”விவசாயத்தோடு… அதுசார்ந்த உபதொழில்களையும் சேர்த்து செய்தால், நிச்சயமாகப் பொருளாதார ரீதியில் பெருவெற்றிதான்” என்பது விவசாயப் பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கருத்து! இதைச் சரியாகப் புரிந்து கொண்ட பலரும் ஆடு, மாடு, கோழி, பட்டுப்புழு… என வளர்த்து கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார்கள். ”நானும் அவர்களின் ஒருவன்” என்று இங்கே சந்தோஷம் பகிர்கிறார்… வெண்பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்து சிறந்த வருமானம் பார்த்து வரும், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடம் காசிலிங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து. இதற்காக இவரைப் பாராட்டி, ’2011 மற்றும் 2012-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான சிறந்தப் பட்டுக்கூடு உற்பத்தியாளர்’ என்கிற விருதை கொடுத்திருக்கிறது தமிழக அரசின் பட்டு வளர்ச்சித் துறை!
வழிகாட்டிய மனைவி!
வீடு தேடிச் சென்றபோது, பளீர் வெண்மையில் மின்னிக் கொண்டிருந்த பட்டுக்கூடுகளைச் (கக்கூன்) சேகரித்துக் கொண்டிருந்த செல்லமுத்து, ”வெங்காயம், மிளகாய், மக்காச்சோளம்னு வெள்ளாமை செஞ்சுக்கிட்டு இருந்தேன். அதுல நிரந்தரமான வருமானம் கிடைக்கல. லிட்டர், லிட்டரா பூச்சிக்கொல்லியும் மூட்டை, மூட்டையா உரத்தையும் வாங்கிப் போட்டு, கடனாளி ஆனதுதான் மிச்சம். ஆனா, விவசாயத்தை விட்டா எனக்கு வேற தொழிலும் தெரியாது. இந்த நிலையில எனக்கு கல்யாணமும் ஆயிடுச்சு. மனைவி பாப்பாத்தியோட ஊர் நிறையூர். அங்க, கிட்டத்தட்ட எல்லா விவசாயிகளுமே பட்டுக்கூடு உற்பத்தி பண்ணிக்கிட்டு இருந்தாங்க. என் மனைவி வீட்டுலயும் பட்டுக்கூடு உற்பத்திதான். அதனால, அதைப்பத்தின நெளிவு, சுளிவு அத்தனையும் அவங்களுக்குத் தெரிஞ்சுருந்தது. கல்யாணமாகி வந்ததுமே, பாப்பாத்தியோட சேர்ந்து, நானும் பட்டுப்புழு வளக்க ஆரம்பிச்சுட்டேன்.
செழிப்பு தரும் பட்டுப்புழு!
89-ம் வருஷத்துல இருந்து பட்டுப்புழு வளர்த்துக்கிட்டு இருக்கோம். மல்பெரிச் செடிகளை நடவு செஞ்சுட்டு, வீட்டோட ஒரு பகுதியையே பட்டுப்புழு வளர்ப்பு மனையா மாத்திட்டோம். நான், ரெண்டு தடவை சிறந்த பட்டு விவசாயிக்கான மாநில விருது வாங்கியிருக்கேன்னா… அதுக்கு என் மனைவியோட உழைப்பும், தொழில்நுட்ப அறிவும்தான் காரணம். என்னோட ரெண்டு பசங்களையும் நல்ல இன்ஜினீயரிங் காலேஜ்ல சேத்துருக்கேன். இந்தஅளவுக்கு நான் செழிப்பா இருக்கறதுக்குக் காரணம், பட்டுப்புழு வளர்ப்புதான்” என்று முன்னுரை கொடுத்து நிறுத்த, தொடர்ந்தார் அவருடைய மனைவி பாப்பாத்தி.
சுலபமாக வளர்க்கலாம்!
”ஆரம்பத்துல மஞ்சள் நிறக் கூடுகளைத்தான் உற்பத்தி செஞ்சோம். அதைவிட வெள்ளைக்கூடுகளுக்கு அதிக விலை கிடைக்கறதால… ஆறு வருஷமா வெள்ளைக்கூடுதான் உற்பத்தி பண்றோம். விவசாயம் சார்ந்தத் தொழில்கள்ல கொறஞ்ச நாள்லயே வருமானம் தரக்கூடியது, பட்டுக்கூடு உற்பத்திதாங்க. ஆனா, பட்டு வளர்ச்சித்துறைக்காரங்க சொல்லித் தர்ற தொழில்நுட்பத்தை சரியாக் கடைபிடிச்சு, நல்ல தரமான கூடுகளை உற்பத்தி பண்ணினாத்தான் லாபம் சம்பாதிக்க முடியும். முன்னயெல்லாம்… ஒரு நாளைக்கு அஞ்சு வேளைக்கு இலைகளைப் பொடிப்பொடியா நறுக்கி புழுக்களுக்குக் கொடுக்கணும். அதனால, நாள் முழுக்க வேலை பாக்க வேண்டியிருக்கும். இப்போ, எளிமையான உபகரணங்கள் வந்துட்டதால, வேலை குறைஞ்சுடுச்சு. இப்போ வளர்ப்பு முறைகளும் மாறிடுச்சு. அதனால, வீட்டு வேலை, மத்த விவசாய வேலை எல்லாத்தையும் பாத்துக்கிட்டே பட்டுப்புழுவையும் வளத்துடலாம்” என்று சிறிது இடைவெளிவிட, பட்டுப்புழு வளர்ப்பு பற்றிய விவரங்களைச் சொல்ல ஆரம்பித்தார், செல்லமுத்து.
ஒரு ஏக்கரில் மல்பெரி… 100 கிலோ கூடு உற்பத்தி!
‘ஒரு ஏக்கர் நிலத்துக்கு 10 டிராக்டர் தொழுவுரம், 5 டன் கோழி எரு ஆகியவற்றைக் கொட்டி இறைத்து, நன்றாக உழவு செய்ய வேண்டும். 3 அடி இடைவெளியில் பார் அமைத்து, அதில் 5 அடி இடைவெளியில் மல்பெரிச் செடிகளை நடவு செய்ய வேண்டும். பட்டு வளர்ச்சித்துறை மூலமாக மானிய விலையில் நாற்றுகள் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் 4 ஆயிரத்து 800 செடிகளை நடவு செய்ய முடியும். நடவு செய்த பிறகு சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து, வாரம் ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். சொட்டுநீர் அமைக்கவும் மானியம் உண்டு. களை மற்றும் பயிர் பராமரிப்பு முறைகளை சரியாக மேற்கொண்டு வந்தால், நடவு செய்த 90-ம் நாளில், செடிகள் ஆளுயரத்துக்கு வளர்ந்துவிடும்.
இந்தச் செடிகளில் 20 ஆண்டுகள் வரை தொடர்ந்து மகசூல் எடுக்கலாம். 25 நாட்களுக்கு ஒரு முறை இலைகளைப் பறிக்கலாம். நிலத்தைப் பாதியாகப் பிரித்துக் கொண்டு சுழற்சி முறையில் முறையில் அறுவடை செய்தால், தொடர்ந்து ஆண்டு முழுவதும் இலைகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். பட்டுப்புழுக்களுக்கு முக்கியத் தீவனம் மல்பெரி இலைகள்தான் என்பதால், இவை தரமாக இருந்தால்தான் புழுக்களும் ஊக்கமுடன் வளர்ந்து, அதிக எடையுள்ள கூடுகளை உற்பத்தி செய்யும். 100 முட்டைத் தொகுதிகளில் உருவாகும் புழுக்களுக்கு, மொத்தம் 700 கிலோ அளவுக்கு இலை தேவை. இதற்கு, ஒரு ஏக்கர் நிலத்தில் மல்பெரி வளர்க்க வேண்டும். 100 முட்டைத் தொகுதிகள் மூலம் மாதம் 100 கிலோ பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்ய முடியும்.
தட்பவெப்பம்… கவனம்!
தீவனம் தயாரான பிறகு நமக்குத் தேவையான அளவில் முட்டைத் தொகுதிகளை பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்தில், வாங்கி அடை வைக்க வேண்டும். அடை வைக்கும் இடத்துக்கு ‘இளம் புழு வளர்ப்பு மனை’ என்று பெயர். மனையைச் சுற்றிலும் கொசு வலை அடித்து தென்னங்கீற்று வேய்ந்து, மனைக்குள் தட்பவெட்பம் சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். முட்டை பொரிந்து வெளிவரும் புழுக்களை, 8-ம் நாள் வரை இளம்புழு வளர்ப்பு மனையில் வைத்துப் பராமரிக்க வேண்டும். தினமும் காலையிலும், மாலையிலும் இளம் வயது செடிகளில் உள்ள கொழுந்து இலைகளைப் பறித்து உணவாக வைக்க வேண்டும். முதல் எட்டு நாட்களுக்கு இளம்புழுக்களுக்குத் தனிக்கவனம் தேவை. அவ்வளவு நுணுக்கமாக, பார்க்க ஆள் வசதி இல்லையென்றால், ‘சாக்கி சென்டர்’ என்று அழைக்கப்படும் இளம்புழு வளர்ப்பு மையங்களில் இருந்து எட்டு நாட்கள் வயதுடைய புழுக்களை வாங்கி வந்து வளர்க்கலாம் (இவர், தற்போது இளம்புழுக்களை வாங்கி வந்துதான் வளர்க்கிறார்).
8 நாட்கள் வயதுடைய புழுக்களை அதற்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் புழு வளர்ப்பு தாங்கிகளில்விட வேண்டும். கட்டில் போல இருக்கும் இந்தத் தாங்கிகளில் ‘நெட்ரிக்கா’ எனும் பிளாஸ்டிக் விரிப்பை விரிக்க வேண்டும். இந்த விரிப்பில் நூற்றுக்கணக்கான அறைகள் இருக்கும். அவற்றின் மூலமாகத்தான், பட்டுபுழுக்கள் தன்னைச் சுற்றி கூடுகளைக் கட்டும். வளரும் புழுக்களுக்கு தினமும் காலையிலும், மாலையிலும்… ஒரு மாத வயதுக்கு மேல் உள்ள செடிகளில் இருந்து முற்றிய இலைகளைக் காம்புடன் பறித்து உணவாக வைக்க வேண்டும். புழுக்கள், இலைகளை மட்டும் சாப்பிட்டு விட்டு, காம்புகளை ஒதுக்கி விடும். பிறகு, காம்புகளை அப்புறப்படுத்த வேண்டும். புழுக்கள் 27 நாட்கள் வயதில், கூடுகளை உருவாக்கிக் கொள்ளும். இதுதான் அறுவடை தருணம். அறுவடை முடிந்த பிறகு, வளர்ப்பு மனை மற்றும் தளவாடங்களை சுத்தம் செய்து, பிளீச்சிங் பவுடர் போட்டுக் கழுவி, அடுத்தத் தொகுதியை வளர்க்க ஆரம்பிக்க வேண்டும்.’
வளர்ப்பு முறைகளைச் சொல்லிய செல்லமுத்து நிறைவாக, வருமானம் பற்றிச் சொன்னார்.
“ஒரு ஏக்கர்… இரண்டு ஆட்கள்… மாதம் 30 ஆயிரம்!
”100 கிலோ பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்யறதுக்கு இரண்டு வேலை ஆட்களே போதும். நல்ல தண்ணியோட, ஒரு ஏக்கர் நிலம் இருந்தா… கணவன், மனைவி இரண்டு பேரும் வேலை செஞ்சாலே… மாசம் 100 கிலோ கூடு உற்பத்தி செஞ்சு முப்பதாயிரம் ரூபாய் வரைக்கும் சம்பாதிச்சுட முடியும். நான் ரெண்டு ஏக்கர்ல மல்பெரி சாகுபடி செய்றேன். மாசம் 200 கிலோ கூடு உற்பத்தி செய்யுறதுல, குறைஞ்சபட்சமா 60 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் பாக்குறேன்.
நான் கோயம்புத்தூர்ல இருக்குற பட்டுக்கூடு விற்பனை அங்காடியிலதான் விக்கிறேன். இங்க லீவு நாட்கள் தவிர எல்லா நாட்கள்லயும் ஏலம் நடக்கும். இப்போ ரெண்டு வருஷமா ஒரு கிலோ பட்டுக்கூடு 300 ரூபாய்க்கு குறையாம ஏலம் போயிட்டுருக்கறதால… நல்ல வருமானம் கிடைக்குது” என்று சந்தோஷமாகச் சொல்லி விடைகொடுத்தார், செல்லமுத்து.
தொடர்புக்கு,
செல்லமுத்து, செல்போன்: 96007-95002.
பி. முத்தைய்யா, செல்போன்: 73735-25252.
உதவி இயக்குநர், ஈரோடு,
தொலைபேசி: 0424-2339664
மானியங்களை அள்ளி வழங்குது மத்திய அரசு!
ஈரோடு மண்டல பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பக்கிரிசாமியை சந்தித்தபோது, பட்டுப்புழு வளர்ப்பு பற்றிய சில விவரங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
”இந்தியாவில் பட்டு நூல் தேவை அதிகளவில் உள்ளது. இந்தியாவுக்கு ஆண்டுக்கு 29 ஆயிரம் மெட்ரிக் டன் கச்சாப்பட்டு தேவை. ஆனால், இங்கு 20 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டும்தான் உற்பத்தியாகிறது. அதனால், சீனாவில் இருந்து கச்சா பட்டு இறக்குமதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 3 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்குத் தேவை இருந்தாலும், அதில் பாதியளவுதான் உற்பத்தியாகிறது. அதனால், தமிழகத்தில் பட்டுக்கூடு உற்பத்தி நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலாக இருக்கிறது. இந்திய அளவில், நான்கு ஆண்டுகளாக வெண்பட்டு உற்பத்தியில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது.
இத்தொழிலுக்கு மத்திய-மாநில அரசுகள் மானியத்தை அள்ளி வழங்குகின்றன. நாற்று, நடவு, இலைப்பறிப்புக் கருவி, விசைத்தெளிப்பான், பட்டு வளர்ப்பு மனை, மற்றும் தளவாடங்கள், சொட்டுநீர் அமைப்பு என்று அனைத்துக்கும் 75% வரை மானியம் உண்டு. சிறு-குறு விவசாயிகளுக்கு 100% மானியத்தில் சொட்டுநீர் வசதியும் செய்து தரப்படுகிறது. வங்கிக்கடன் வசதியோடு, இயற்கைச் சீற்றங்கள், நோய்கள் போன்றவற்றில் ஏற்படும் திடீர் இழப்பை ஈடுசெய்ய, காப்பீடு வசதியும் உண்டு. மல்பெரி வயல் வரப்புக்களில் மரக்கன்றுகள் நடவும் மானியம் உண்டு” என்றார், பக்கிரிசாமி.
பட்டு வளர்க்கலாம் வாங்க!
குண்டடம், மானூர்பாளையம், தொட்டியந்துறை உள்ளிட்ட தாராபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில், பட்டு வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளில் பெரும்பாலானோர், தாங்கள் பட்டு வளர்ப்புக்கு வந்ததற்கு காரணமாகக் கைகாட்டும் நபர் முத்தையா. இவர், கடந்த 34 ஆண்டுகளாக பட்டு வளர்ச்சித்துறையில் பணியாற்றி, ஆறு மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றிருக்கிறார். அரசு வேலையை ‘கடனுக்கு’ என்று செய்யாமல், நூற்றுக்கும் மேற்பட்ட சிறு-குறு விவசாயிகளுக்கு பட்டு வளர்ப்பில் ஆர்வத்தை ஊட்டி… அவர்களைப் பொருளாதார ரீதியில் முன்னேற வைத்திருக்கிறார், இவர். பணி ஓய்வு பெற்ற பிறகும் அதேபகுதியில் ஒரு இளம்புழு வளர்ப்பு மையத்தில் பணியாற்றிக் கொண்டு, தேடி வரும் விவசாயிகளுக்கு ஆலோசனைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார், முத்தையா.
அவரிடம் பேசியபோது, ”வித்து நன்றாக இருந்தால்தான், விளைச்சல் நன்றாக இருக்கும். அதேபோல, இளம்புழுக்கள் தரமாக ஊக்கமுடன் வளர்ந்தால்தான் பட்டுக்கூடுகளின் உற்பத்தி நன்றாக இருக்கும். இளம்புழு வளர்ப்பு மிகவும் கடினமான காரியம். எமர்ஜென்ஸி வார்டில் உள்ள குழந்தையைக் கண்காணிப்பது போல மிகத்துல்லியமாகப் பராமரிக்க வேண்டும். இதில் கோட்டை விட்டால், தரமானக் கூடுகள் கிடைக்காது. அதற்குப் பயந்தே பலர் பட்டுப்புழு வளர்ப்புக்கு வருவதில்லை. அதனால், அந்த வேலையை மட்டும் தனியாக கவனம் எடுத்துச் செய்யும் விதத்தில்… ஆர்வமுள்ள சில விவசாயிகளுக்கு இளம்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்களைக் கற்றுத்தந்து, அவர்கள் மூலம் ‘சாக்கி சென்டர்’களை உருவாக்கியிருக்கிறது, பட்டு வளர்ச்சித்துறை. இளம்புழுக்கள் வளர்க்கக் கஷ்டப்படும் விவசாயிகள், இந்த சென்டர்களில் இருந்து, 8 நாள் வயதான புழுக்களை வாங்கி வளர்த்துக் கொள்ள முடியும். இதனால், 20 முதல் 22 நாட்களில் வருமானம் பார்த்துவிட முடியும். ஒரு ஏக்கர் நிலத்தில் மல்பெரி நடவு செய்து, வெண்பட்டுக்கூடு உற்பத்தி செய்தால், எல்லா செலவுகளும் போக, ஆண்டுக்கு 2 லட்ச ரூபாய் முதல் 3 லட்ச ரூபாய் வரை கண்டிப்பாக வருமானம் பார்க்க முடியும்” என்ற முத்தையா,
”ஆண்டுக்கு 10 பேட்ச் மூலம் 1,000 கிலோ கூடு உற்பத்தி என்பதுதான், பட்டு வளர்ச்சித்துறையின் இலக்கு. அதை சர்வசாதாரணமாக முறியடித்து சாதனை புரிந்திருக்கிறார் செல்லமுத்து. இரண்டு ஏக்கர் நிலத்தில் மல்பெரி சாகுபடி செய்து ஆண்டுக்கு 18 பேட்சுக்கள் எடுத்து மாநில அளவில் சாதனை புரிந்துள்ளார். அவர், ஒரு வினாடியைக்கூட வீணாக்க மாட்டார். அர்ப்பணிப்போடு பணியாற்றியதால்தான், அவர் இன்று லட்சாதிபதியாக உயர்ந்துள்ளார். சராசரியாக 20 நாட்களுக்கு ஒரு முறை குறைந்தபட்சம் 60 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார், செல்லமுத்து. இவரால், எங்கள் பட்டுவளர்ச்சித் துறைக்கே பெருமை” என்று சொல்லி புளகாங்கிதப்பட்டார்!

பட்டு என்றால் ஆரணி!

ட்டுச் சேலை என்றாலே பெண்களுக்குப் பரவசம் வருவது இயல்பு தான். ஆரணிப் பட்டு, தமிழகத்தின் அழகு அடை யாளங்களில் ஒன்று.
எப்படித் தயார் ஆகின்றன இந்தப் பட்டுப் புடவைகள்?
”பட்டு என்றாலே, காஞ்சிப் பட்டு என்கிறார்கள். ஆனால், ஆரணி பட்டு காஞ்சிப் பட்டுக்கு கொஞ்சமும் சளைத்தது இல்லை. ஆரணியில் மட்டும் ஐந்து லட்சம் பேர் இந்த பட்டு நெசவுத் தொழிலை நம்பி இருக்கிறார்கள். இங்கு உற்பத்தியாகும் பட்டுப் புடவைகளை வாங்கிச் சென்று காஞ்சி புரம் பட்டு என்று விற்கும் விற்பனையாளர்களும் உண்டு!” என்கிறார்கள் ஆரணி ஸ்ரீ லக்ஷ்மி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர்கள் முருகனும் சிவராமனும்.
”பட்டுப் புடவைக்குத் தேவையான பட்டு நூல், பெங்களூரு மற்றும் சீனாவில் இருந்து வரவழைக்கப்படும். மல்பரி புழுவின் கூட்டில் இருந்து இந்தப் பட்டு நூல் தயாரிக்கப்படுகிறது. பெங்களூரு நூல் விலை கிலோவுக்கு  2,500, சீன நூல் கிலோவுக்கு  2,800. ஒரு சேலைக்கு சுமார் ஒன்றரைக் கிலோ நூல் தேவைப்படும். கச்சா நூலை ட்விஸ்டிங் ஆலையில் கொடுத்துப் பாவு செய்து, அதன் மீது கலர் சாயம் ஏற்றுவோம். நீளம், அகலத்துக்கு ஏற்ப தனித் தனியாகப் பிரித்து நெசவுக்குக் கொடுத்தால், பட்டுச் சேலை ரெடி. கிட்டத்தட்ட ஒரு லட்சம் சேலை டிசைன்கள் உண்டு. டிசை னைப் பொறுத்து, ஒரு சேலைக்கு 60 கிராம் முதல் ஒன்றரைக் கிலோ வரை ஜரிகை தேவைப்படும். தங்கம், வெள்ளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஜரிகை விலையும் கூடுகிறது. இதனால், சேலையின் விலையும் அதிகரித்துவிடுகிறது.
ஒரு பட்டுப் புடவையைச் செய்து முடிக்க, 10 முதல் 15 நாட்கள் ஆகும். இங்கு பட்டுப் பாவாடை, பட்டுப் புடவை, பட்டு சுடிதார் மெட்டீரியல், பட்டு வேட்டி, பட்டு அங்கவஸ்திரம் என்று விதவிதமான பட்டு ஆடைகள் தயாரிக்கிறோம். இங்கு உற்பத்தியாகும் ஆடைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது!” என்று பட்டுப் புராணம் பாடுகிறார்கள் இருவரும்!
ஒரு பட்டுப் புடவையின் விலை அதன் டிசைன், ஜரிகைகளைப் பொறுத்து மாறுபடும். குறைந்தபட்ச விலை ரூ. 3000. அதிகபட்சம் ரூ. 1 லட்சம். பட்டு சுடிதாரின் விலை மீட்டர் ரூ.600 முதல் ரூ. 5000 வரை. பட்டு வேஷ்டிகளின் விலை ரூ. 2000 முதல் ரூ. 8000 வரை. பட்டு சட்டை ரூ. 400 முதல் ரூ. 1000 வரை விற்பனையாகின்றன.
  • விஷேசங்களுக்கு சென்று வந்தவுடன் பட்டு புடவையை களைந்து உடனே மடித்து வைக்க கூடாது. நிழலில் காற்றாட 2 அல்லது 3 மணி நேரம் உலரவிட்டு பின்பு அதனை கைகளால் அழுத்தி தேய்த்து மடித்து எடுத்து வைக்கவேண்டும்.
  • சாதாரண தண்ணீரால் மட்டும் அலசினால் போதுமானது. எக்காணரத்தை கொண்டும் பட்டுப்புடவையை சூரியஒளி படும்படி வைக்க கூடாது.
  • அடித்து துவைக்க கூடாது. பிரஷ் போடக்கூடாது. வாஷிங் மிஷினிலும் போடக்கூடாது.
  • அடிக்கடி அயர்ன் செய்வதை தவிர்க்க வேண்டும், அயர்ன் செய்யும் பொழுதும் ஜரிகையை திருப்பிப்போட்டு அதன் மேல் லேசான துணி விரித்து அதன் பின்பு அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் செய்யக்கூடாது.
  • பட்டுப்புடவைகளை அட்டை பெட்டிகளிலோ, பிளாஸ்டிக் கவர்களிலோ வைப்பதை காட்டிலும் துணிப்பைகளில் வைத்தல் அதன் தன்மையை பாதுகாக்கும்.
  • வருடக்கணக்கில் பட்டுபுடவையை தண்ணீரில் நனைக்காமல் வைக்க கூடாது.  பயன்படுத்தாமல் இருந்தாலும் 3 மாதத்திற்கு ஒரு முறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலரவிட வேண்டும்.
சீனாவில் பண்டைய காலத்தில் ஒரு பேரரசின் இராணி (Si Ling-Chi) , அரண்மனைத் தோட்டத்தில் உலவிக் கொண்டு இருக்கையில், அங்கிருந்த முசுக்கொட்டைச் செடியில் இருந்து ஒரு புழு, நல்ல இளம் மஞ்சள் நிறத்தில் ஒரு கூடு ஒன்றைக் கட்டியதைப் பார்த்து இருக்கிறார். அத‌னைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அரசி, கூட்டின் இழையப் பற்றி இழுக்க, அது நெடிய தூரம் நீண்டதாம். அதிலிருந்து, ஒரு கூடு ஒரே இழையில் ஆனதையும் தெரிந்து கொண்டு, நிறைய கூடுகளைச் சேர்த்து, பின் அதன் இழைகளைக் கொண்டு ஒரு சிறு ஆடை தயாரித்துப் பார்த்து, அதன் அழகில் மயங்கி, இப்படியாகத் துவங்கியதுதான் பட்டு நூலாடைகள். மேலும் இந்த வகை ஆடைகள் இராச குடும்பத்தில், அதுவும் சீனாவில் மட்டுமே ரகசியமாக வைக்கப்பட்டதாம்.
இப்படியாக சுமார் 2500 ஆண்டுகள் கழிந்துவிட, |ரோமானிய மன்னன் எதேச்சையாக சீன இளவரசியைத் திருமணம் செய்ய, முதல் முறையாக பட்டுக் கூடும், புழுவும் எல்லை தாண்டியது. எனினும் அவர்கள் அதனை வளர்க்கத் தெரிந்து இருக்கவில்லை. எனவே பாதிரியார் ஒருவரைச் சீனாவுக்கு அனுப்பி, அவர் மூலமாகத் தெரிந்து கொள்ள முறபட்டும், முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. இப்படியாக, சீனாவின் பட்டு நூலாட்சி கொடி கட்டிப் பறந்தது.
இந்த‌ச் சூழ‌லில், ஜப்பானிய‌ர்க‌ள் வெகு சாம‌ர்த்திய‌மாக‌ ப‌ட்டு நூல் வ‌ள‌ர்க்க‌த் தெரிந்த‌ நான்கு சீன‌ப் பெண்ம‌ணிக‌ளைக் க‌ட‌த்திச் சென்று அல்லது பணிப் பெண் வேலைக்கென அழைத்துச் சென்று, பின் திரும‌ண‌ம் செய்து கொண்டார்க‌ள். அத‌ன் பின் ஜ‌ப்பானிய‌ர்க‌ள் அவ‌ர்க‌ள் மூல‌மாக‌ ப‌ட்டு நூல் வ‌ள‌ர்ப்பைத் துவ‌க்கி, அத‌ன் உற்ப‌த்தியில் மேம்பாடு க‌ண்டு சீனாவின் உற்ப‌த்தியை விடப்‌ ப‌ன்ம‌ட‌ங்கு உற்ப‌த்தி செய்ய‌ ஆர‌ம்பித்து விட்டார்க‌ளாம். ஆனால், சீன‌ர்க‌ளுக்கு அபிவிருத்தி செய்ய‌த் தெரிந்து இருக்க‌வில்லையாம்.
அதன் பின்னர் ஜப்பான் பட்டு நெசவு, வளர்ப்புக்கான காப்புரிமையை மேலை நாடுகளுக்கு தர முன் வந்ததும், இந்தியாவும் சீனாவின் இரகசியத்தைத் தெரிந்து கொண்டதும் உலகளாவிய பட்டு நெசவுக்கு வழி வகுத்தது.

பேன்சி நகைகள் – ஃபேஷன் நகைகள்

துரையின் பெருமைகளைச் சொல்லி மாளாது. மீனாட்சி அம்மன் கோயில், குண்டு மல்லிகை, ஜிகர்தண்டா என பல பெருமைகள். மதுரையில் பெயரெடுத்த எல்லாமே உலகம் முழுவதும் பெயர் வாங்கிவிடுகிறது என்பதும் உண்மை. அந்த வகையில் பரபரப்பான மதுரை நகரில் சத்தமில்லாமல் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது ஃபேன்ஸி நகைகளின் விற்பனை.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் மேற்கு கோபுரத்திற்கு அருகே உள்ளது புது வளையல்காரத் தெரு. இந்த தெருவில் பிரதான தொழிலே ஃபேன்ஸி நகைகள், கோல்டு கவரிங் நகைகள் விற்பனைதான். தமிழகம் முழுவதிலுமிருந்து, குறிப்பாக மத்திய மற்றும் தென் தமிழகத்தில் இருக்கும் சிறுவியாபாரிகள் இந்த தெருவிற்கு படையெடுப்பார்கள். நாமும் படையெடுத்தோம்.
இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள பலரும் வடமாநிலத்தவர்கள்தான். மும்பையிலிருந்து நேரடியாகப் பொருட்களை வாங்கி, இங்கு மொத்த விற்பனை செய்கின்றனர். இங்கிருந்துதான் தென் தமிழகத்தின் பல சில்லறை விற்பனையாளர்கள் நகைகளை வாங்கிச் செல்கின்றனர். இந்த தொழில் மதுரையில் தொடங்கப்பட்டு வளர்ந்த விதம், தொழில் வாய்ப்பு குறித்து நம்மிடம் பேசினார் பரம்பரையாக இந்த தொழிலில் ஈடுபட்டுவரும் ஷேக் அலாவுதீன்.
”கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கும் மேலாக ஃபேன்ஸி நகை விற்பனைத் தொழில் மதுரையில் நடந்து வருகிறது. முதன்முதலில் திண்டுக்கல்லில் செய்யப்பட்ட கம்மல்களின் விற்பனை மட்டுமே நடந்ததாம். பின்பு ஆந்திராவில் பந்தர் என்கிற ஊரில் இருந்து வரவழைக்கப்பட்ட கவரிங் நகைகள் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் பரவலாக கடைகள் ஆரம்பிக்கப்பட்டபிறகு மும்பையில் இருந்து ஃபேன்ஸி நகைகளை வாங்கத் தொடங்கினோம். இப்போது இங்கே சுமார் 230 கடைகள் உள்ளன. எங்களைத் தவிர, இந்த நகைகளை வாங்கிச் சென்று சில்லறை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள், சிறிய அளவில் கடை நடத்தும் பெண்கள் உள்பட பலருக்கும் நல்ல தொழில் வாய்ப்பாக உருவாகி இருக்கிறது. கவரிங் நகைகள் மட்டுமில்லாமல், சைனா கற்கள், ஆஸ்திரேலிய கற்கள் பதிக்கப்பட்ட தரமான ஃபேன்ஸி நகைகள் போன்றவையும் இங்கே கிடைக்கிறது. இங்கு விற்பனை செய்யப்படுகிற நகைகளுக்கு ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை கேரண்டி தரப்படுகிறது” என்றார் அவர்.
அவ்வப்போது மாறிவரும் ஃபேஷனுக்கு ஏற்ப புத்தம் புதிய டிசைன்களில் நகைகள் இங்கே விற்பனை செய்யப்படுவதால், வாடிக்கையாளர்கள் விரும்பும் ஃபேன்ஸி நகைகளை உடனடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறோம் என்கிறார்கள் சிறு வியாபாரிகள். சாதாரண செயின் முதற்கொண்டு மணப் பெண்களுக்கான ஆடம்பர நகைகள் உள்பட அத்தனை வகையான ஃபேன்ஸி நகைகளும் இங்கு கிடைக்கிறது.
ஆறு மாதம் கேரண்டியோடு 110 ரூபாய்க்கு இங்கே கிடைக்கும் ஒரு தரமான செயினை சில்லறை விற்பனையில் 180 ரூபாய் வரைக்கும் விற்கிறோம் என்கிறார்கள் சில்லறை வியாபாரிகள். இங்கு 80 ரூபாய்க்கு வாங்கும் வளையலை 40 ரூபாய் அதிகம் விலை வைத்து 120 வரைக்கும் விற்க முடிகிறது என்கிறார்கள் அவர்கள். மணப் பெண் அலங்கார நகைகள், ஆடம்பர நெக்லஸ், நாட்டிய நிகழ்ச்சிகளுக்குப் புத்தம் புதிய நகைகள் வேண்டும் என்பவர்கள் தாராளமாக இங்கு வந்து வாங்கிச் செல்லலாம். இந்த நகைகள் 750 ரூபாய் முதல் கிடைக்கிறது.
இல்லத்தரசிகளுக்கு, சுயதொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்களுக்கு மதுரை ஃபேன்ஸி நகைகள் சிறந்த தொழில் வாய்ப்பு. கொஞ்சமாக முதலீடு செய்து தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்கள் இப்பவே மதுரைக்குப் புறப்படலாம். மீனாட்சியம்மனை தரிசிக்க மதுரைக்குச் செல்கிறவர்களும் வளையல்கார தெருவுக்குள் ஒரு வலம் வரலாமே!

எந்த ஊரில் என்ன வாங்கலாம் - ஈரோடு



 

இத்தனை சிறப்புகளையும் கொண்ட மஞ்சள் விலையை இந்திய அளவில் தீர்மானிக்கும் ஊர் எது தெரியுமா? நம்ம ஈரோடுதான். ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் அதிக அளவில் விளைவதால் ஈரோட்டிற்கு மஞ்சள் மாநகர் என்றே பெயர். இந்தியாவில் உற்பத்தியாகின்ற மஞ்சளில் 23 சதவிகித மஞ்சள் இங்குதான் உற்பத்தியாகிறதாம். எனவே, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் மொத்த வியாபாரிகள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஈரோடு மார்க்கெட்டைத்தான் நம்பி இருக்கின்றனர். விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்வதற்கு இங்குள்ள வேளாண்மை மையம் உதவி செய்கிறது. இங்கு உற்பத்தியாகின்ற மஞ்சளை விவசாயிகள் ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.
இது குறித்து ஈரோடு மஞ்சள் விவசாயிகள் சிலரிடம் பேசினோம். ''தமிழகத்தைவிட ஆந்திராவில் மஞ்சள் உற்பத்தி அதிக அளவில் இருந்தாலும், ஈரோட்டில்தான் மஞ்சளுக்கான விலை நிர்ணயம் நடக்கிறது. அதற்குக் காரணம் வெளி மாநிலங்களிலிருந்தும் இங்குள்ள மஞ்சள் சந்தைக்கு மஞ்சள் வரத்து இருப்பதுதான். ஈரோட்டைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கோபிசெட்டிபாளையம் சார்ந்த பகுதிகளில் விளையும் மஞ்சளுக்கு நிறம் அடர்த்தியாக இருப்பதால் எப்போதுமே ஈரோட்டு மஞ்சளுக்கு மவுசு அதிகம்'' என்கிறார்கள்.
இங்குள்ள வேளாண் விற்பனை சந்தையில் மட்டும் கடந்த வருடம் 70 லட்சம் மஞ்சள் மூட்டைகள் விற்பனையாகியுள்ளது. பொதுவாக மருந்து தயாரிப்பு மற்றும் கெமிக்கல் நிறுவனங்கள் தங்களது முகவர்கள் மூலம் அதிக அளவில் கொள்முதல் செய்கின்றன. உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களும் இங்குதான் கொள்முதல் செய்கின்றன. விவசாயிகளிடமிருந்து நேரடியாகச் சந்தைக்கு வரும்  மஞ்சளை அப்படியே பயன்படுத்த முடியாது. அதை வாங்கிச்சென்று பதப்படுத்தி, பாலிஷ் செய்துதான் பயன்பாட்டுக்கான மஞ்சளாக மாற்றுகிறார்கள்.
ஈரோட்டிலுள்ள வேளாண் விற்பனை மையத்தில் தினசரி காலை மஞ்சள் விற்பனை ஜரூராக நடக்கிறது. இங்கு 100 கிலோ கொண்ட மூட்டைகள் தர வாரியாக விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரிகள் தங்கள் தேவைக்கேற்ப மூட்டைகளை வாங்கிச் சென்று, பதப்படுத்தி சில்லறை விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
ஈரோடு மையப் பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் வேளாண்மை விற்பனை மையத்தில்தான் மொத்த விற்பனை நடக்கும் என்றாலும், இதற்கு அருகிலேயே மஸ்ஜித் தெரு மற்றும் கந்தசாமி செட்டி தெருக்களில் உள்ள மொத்த வியாபாரக் கடைகளில் சகாய விலைக்கு மஞ்சள் கிழங்கு வாங்கிவிட முடியும். இங்கிருந்துதான் பல்வேறு ஊர்களுக்கும் சிறு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
பொதுவாக, வெளியூர்களில் கிலோ 90 முதல் 120 வரை விற்கும் மஞ்சளை இங்கு 70 ரூபாய்க்கு வாங்கலாம். தரத்தைப் பொறுத்து விலை வித்தியாசம் இருக்கும். அக்கம்பக்கத்தினருக்கும் சேர்த்து வாங்கும்போது 50 கிலோவாக வாங்கினால் இன்னும் குறைவான விலையில் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
ஐம்பது வீடு, நூறு வீடு என வசிக்கும் ஃப்ளாட்வாசிகள், சிறிய குடியிருப்புவாசிகள் கூட்டாகச் சேர்ந்து ஈரோட்டில் மொத்தமாக மஞ்சளை வாங்கினால், கிலோவிற்கு 30 முதல் 40 ரூபாய் வரை குறைவாகக் கிடைக்கும். இனி, ஈரோடு செல்பவர்கள் மறக்காமல்
மஞ்சளை வாங்கி வரலாமே!
- நீரை.மகேந்திரன்,
படங்கள்: க.ரமேஷ்.

எந்த ஊரில் என்ன வாங்கலாம்! - குமாரபாளையம்.


 

ஈரோட்டிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது குமாரபாளையம். இந்த ஊர் ஈரோட்டுக்கு அருகில் இருந்தாலும் நாமக்கல் மாவட்ட எல்லையில் வருகிறது. சின்ன ஊர்தான் என்றாலும், இங்கிருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும் கைலி ஏற்றுமதியாகிறது. காரணம், இங்கு தயாராகும் கைலி தரத்துக்குப் பெயர் போனவை! இதுபற்றி நம்மிடம் பேசினார் குமாரபாளையம் கொங்கு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சேகர்.
''குமாரபாளையமும் அதற்குப் பக்கத்தில் இருக்கிற  பள்ளிப்பாளையமும் விசைத்தறி மூலம் கைலிகள் தயாரிப்பதில் தமிழகத்திலேயே முன்னணியில் உள்ளன. 1975-க்குப் பிறகு தமிழகத்தில் காட்டன் கைலிகள் பரவலாகப் புழக்கத்தில் வர ஆரம்பித்ததிலிருந்தே நாங்கள் உற்பத்தியைத் தொடங்கிவிட்டோம். அதாவது, தமிழக அளவில் காட்டன் கைலிகள் தயாரிப்பதில் தாய் வீடு குமாரபாளையம்தான் என்றே சொல்லலாம்.
இங்கு சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பி உள்ளனர். இங்கு எப்போதும் வேலைவாய்ப்புகளுக்குப் பஞ்சமே இருந்ததில்லை. தற்போதுகூட வேலை செய்வதற்கான ஆட்களுக்குக் கடும் பற்றாக்குறை இருக்கிறது.  
கைலிகள் புழக்கத்தில் வந்த காலகட்டத்தில், கைலியில்       கஞ்சியை ஊற்றி நூலை உறுதியாக்கும் முறையை குமாரபாளையத்தில் உள்ளவர்களே கண்டுபிடித்தனர். நீண்டநாள் உழைக்கிற மாதிரி பல்வேறு புதிய வழிகளையும் எங்கள் ஊர் மக்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
கைலிகளின் தரத்தை நூல், எடையை வைத்து கண்டுபிடிக்க வேண்டும். பொதுவாக, ஒரு மீட்டர் துணியின் எடை 90-120 கிராம் வரை இருக்கும். இதில் ஒரு மீட்டர் 120 கிராம் எடை கொண்ட துணியில் நெய்யப்படுவதுதான் முதல் தரமான கைலி. இதன் விலை குமாரபாளையத்தில் 120 ரூபாய். ஆனால், வெளியூர்களில் இதன் விலை 150 ரூபாய். இரண்டாம் தரமான லுங்கிகள் இங்கு 80 ரூபாய்க்கே வாங்கலாம். இதை வெளியூர்களில் 120 ரூபாய்க்கு விற்கிறார்கள் பலர்'' என்றார் சேகர்.  

கைலிகள் தவிர, தளபதி வேஷ்டி என்று அழைக்கப்படும் வேஷ்டிகளும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த வகை வேஷ்டிகள் கேரளாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், அதை தயாரிப்பதற்கு என்றே பல விசைத்தறிக் கூடங்கள் இருக்கின்றன. அதிலும், குறிப்பாக காவி நிறத்தில் தயாராகும் தளபதி வேஷ்டிகள்தான் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இவை தவிர, டிஸ்கோ துண்டு என்று சொல்லப்படும் துண்டுகளும் இங்கு தயாராகின்றன. இது கிலோ கணக்கில் எடையிட்டு விற்கிறார்கள். இதன் விலை ஒரு கிலோ 70 ரூபாய். இங்கு கிலோ கணக்கில் வாங்கி வருவதை வெளியூர்களில் தனித்தனியாக வெட்டி விற்பனை செய்துவிடுகிறார்கள்.
இனி ஈரோடு பக்கம் செல்பவர்கள் குமாரபாளையத்திற்கும் ஒரு விசிட் அடித்தால் குறைந்த விலையில் தரமான கைலிகளையும், துண்டுகளையும் கொஞ்சம் அள்ளிக்கொண்டு வரலாமே!
- ம.சபரி,
படங்கள்: க.ரமேஷ்

வீட்டில் இருக்கும்போது கைலியைப் போல வசதியான உடை வேறு கிடையாது. வெளியில் அலைந்து திரிந்து வீட்டிற்கு வந்து கைலியை மாட்டிக்கொண்டால்தான் நமக்கு நிம்மதி. ரகம் ரகமாக அனைத்து ஊர்களிலும் கைலிகள் கிடைத்தாலும், உற்பத்தியாகிற இடத்தில் நாமே நேரடியாகப் பார்த்து வாங்கினால் விலை இன்னும் சல்லீசாக கிடைக்கும்தானே! அப்போது ஒரு கைலிக்குப் பதிலாக இரண்டு, மூன்று கைலிகளை வாங்கிக்கொள்ளலாம் இல்லையா? வாங்க குமாரபாளையத்துக்கு ஒரு விசிட் அடிப்போம்.
ஈரோட்டிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது குமாரபாளையம். இந்த ஊர் ஈரோட்டுக்கு அருகில் இருந்தாலும் நாமக்கல் மாவட்ட எல்லையில் வருகிறது. சின்ன ஊர்தான் என்றாலும், இங்கிருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும் கைலி ஏற்றுமதியாகிறது. காரணம், இங்கு தயாராகும் கைலி தரத்துக்குப் பெயர் போனவை! இதுபற்றி நம்மிடம் பேசினார் குமாரபாளையம் கொங்கு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சேகர்.
”குமாரபாளையமும் அதற்குப் பக்கத்தில் இருக்கிற பள்ளிப்பாளையமும் விசைத்தறி மூலம் கைலிகள் தயாரிப்பதில் தமிழகத்திலேயே முன்னணியில் உள்ளன. 1975-க்குப் பிறகு தமிழகத்தில் காட்டன் கைலிகள் பரவலாகப் புழக்கத்தில் வர ஆரம்பித்ததிலிருந்தே நாங்கள் உற்பத்தியைத் தொடங்கிவிட்டோம். அதாவது, தமிழக அளவில் காட்டன் கைலிகள் தயாரிப்பதில் தாய் வீடு குமாரபாளையம்தான் என்றே சொல்லலாம்.
இங்கு சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பி உள்ளனர். இங்கு எப்போதும் வேலைவாய்ப்புகளுக்குப் பஞ்சமே இருந்ததில்லை. தற்போதுகூட வேலை செய்வதற்கான ஆட்களுக்குக் கடும் பற்றாக்குறை இருக்கிறது.
கைலிகள் புழக்கத்தில் வந்த காலகட்டத்தில், கைலியில் கஞ்சியை ஊற்றி நூலை உறுதியாக்கும் முறையை குமாரபாளையத்தில் உள்ளவர்களே கண்டுபிடித்தனர். நீண்டநாள் உழைக்கிற மாதிரி பல்வேறு புதிய வழிகளையும் எங்கள் ஊர் மக்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
கைலிகளின் தரத்தை நூல், எடையை வைத்து கண்டுபிடிக்க வேண்டும். பொதுவாக, ஒரு மீட்டர் துணியின் எடை 90-120 கிராம் வரை இருக்கும். இதில் ஒரு மீட்டர் 120 கிராம் எடை கொண்ட துணியில் நெய்யப்படுவதுதான் முதல் தரமான கைலி. இதன் விலை குமாரபாளையத்தில் 120 ரூபாய். ஆனால், வெளியூர்களில் இதன் விலை 150 ரூபாய். இரண்டாம் தரமான லுங்கிகள் இங்கு 80 ரூபாய்க்கே வாங்கலாம். இதை வெளியூர்களில் 120 ரூபாய்க்கு விற்கிறார்கள் பலர்” என்றார் சேகர்.
கைலிகள் தவிர, தளபதி வேஷ்டி என்று அழைக்கப்படும் வேஷ்டிகளும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த வகை வேஷ்டிகள் கேரளாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், அதை தயாரிப்பதற்கு என்றே பல விசைத்தறிக் கூடங்கள் இருக்கின்றன. அதிலும், குறிப்பாக காவி நிறத்தில் தயாராகும் தளபதி வேஷ்டிகள்தான் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இவை தவிர, டிஸ்கோ துண்டு என்று சொல்லப்படும் துண்டுகளும் இங்கு தயாராகின்றன. இது கிலோ கணக்கில் எடையிட்டு விற்கிறார்கள். இதன் விலை ஒரு கிலோ 70 ரூபாய். இங்கு கிலோ கணக்கில் வாங்கி வருவதை வெளியூர்களில் தனித்தனியாக வெட்டி விற்பனை செய்துவிடுகிறார்கள்.
இனி ஈரோடு பக்கம் செல்பவர்கள் குமாரபாளையத்திற்கும் ஒரு விசிட் அடித்தால் குறைந்த விலையில் தரமான கைலிகளையும், துண்டுகளையும் கொஞ்சம் அள்ளிக்கொண்டு வரலாமே!

எந்த ஊரில் என்ன வாங்கலாம்...


நிச்சயம் அனைவரும் அறிய வேண்டிய விசயம்...
சுற்றுலா செல்லும் போது ரொம்ப உதவியாக இருக்கும்....

கோயமுத்தூர் - மோட்டார் உதிரிப் பாகங்கள், காட்டன்
திருநெல்வேலி - அல்வா
ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா
கோவில்பட்டி - கடலைமிட்டாய்
பண்ருட்டி - பலாப்பழம்
மார்த்தாண்டம் - தேன்
பவானி - ஜமுக்காளம்
உசிலம்பட்டி - ரொட்டி
நாச்சியார் கோவில் - விளக்கு, வெண்கலப் பொருட்கள்
பொள்ளாச்சி - தேங்காய்
ஐதராபாத் - முத்து, வளையல், கழுத்து மணிகள்
வேதாரண்யம் - உப்பு
சேலம் - எவர்சில்வர், மாம்பழம், அலுமினியம், சேமியா
சாத்தூர் - காராசேவு, மிளகாய்
மதுரை - மல்லிகை, மரிக்கொழுந்து
திருப்பதி - லட்டு
மாயவரம் - கருவாடு
திருப்பூர் - பனியன், ஜட்டி
உறையூர் - சுருட்டு
கும்பகோணம் - வெற்றிலை, சீவல்
தர்மபுரி - புளி, தர்பூசணி
ராஜபாளையம் - நாய்
தூத்துக்குடி - உப்பு
ஈரோடு - மஞ்சள், துணி
தஞ்சாவூர் - கதம்பம், தட்டு, தலையாட்டி பொம்மை
பெல்லாரி - வெங்காயம்
நீலகிரி - தைலம்
மங்களூர் - பஜ்ஜி
கொல்கத்தா - ரசகுல்லா
ஊட்டி - உருளைக்கிழங்கு, தேயிலை, வர்க்கி
கல்லிடைக்குறிச்சி - அப்பளம்
காரைக்குடி - ஓலைக்கூடை
செட்டிநாடு - பலகாரம்
திருபுவனம் - பட்டு
குடியாத்தம் - நுங்கு
கொள்ளிடம் - பிரம்பு பொருட்கள்
ஆலங்குடி - நிலக்கடலை
கரூர் - கொசுவலை
திருப்பாச்சி - அரிவாள்
காஞ்சிபுரம் - பட்டு, இட்லி
மைசூர் - சில்க், பத்தி, சந்தனம்
நாகப்பட்டினம் - கோலா மீன்
திண்டுக்கல் - பூட்டு, மலைப்பழம்
பத்தமடை - பாய்
பழனி - பஞ்சாமிர்தம், விபூதி
மணப்பாறை - முறுக்கு, மாடு
உடன்குடி - கருப்பட்டி
கவுந்தாம்பட்டி - வெல்லம்
ஊத்துக்குளி - வெண்ணெய்
கொடைக்கானல் - பேரிக்காய்
குற்றாலம் - நெல்லிக்காய்
செங்கோட்டை பிரானூர் - புரோட்டா, கோழி குருமா
சங்கரன் கோவில் - பிரியாணி
அரியலூர் - கொத்தமல்லி
சிவகாசி - வெடி, தீப்பெட்டி, வாழ்த்து அட்டை
கன்னியாகுமரி - முத்து, பாசி, சங்குப் பொருட்கள்
பாண்டிச்சேரி - ஒயின், மதுபானங்கள்
திருச்செந்தூர் - கருப்பட்டி
குளித்தலை - வாழைப்பழம்
காஷ்மீர் - குங்குமப்பூ
ஆம்பூர் - பிரியாணி
ஒட்டன்சத்திரம் - முருங்கைக்காய், தக்காளி
ஓசூர் - ரோஜா
நாமக்கல் - முட்டை
பல்லடம் - கோழி
உடுப்பி - பொங்கல்
குன்னூர் - கேரட்
பாலக்காடு - பலாப்பழம்...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites