இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label பெயிண்ட்டிங் செய்து விற்கலாம். Show all posts
Showing posts with label பெயிண்ட்டிங் செய்து விற்கலாம். Show all posts

Saturday, June 9, 2012

கொஞ்சம் வரைந்துதான் பாருங்களே

                  சாதாரணமாக வரைய தெரிந்திருந்தாலே போதும் உங்கள் வீட்டு வரவேற்பரை சுவரில் நீங்களே வரைந்த படத்தைக்கொண்டு அழகுப் படுத்திட முடியும். இதற்கு நன்றாக வரைய தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.. பொதுவாக எல்லோருக்கும் ஒரு சிறு பூவாவது வரைய தெரிந்து இருக்கும் இல்லையா! அதனால் அதற்கு எப்படி வண்ணங்கள் தீட்டுவது என்று பார்ப்போம்.



அதிக வண்ணங்கள் கூட அவசியமில்லை. தேவையானவை 5 அல்லது 6 நிறங்கள் அது வாட்டர் கலரா அல்லது ஆயில் கலரா என்பது உங்க விருப்பம். (இங்கே நான் பயன்படுத்தி இருப்பது ஆயில் பெயிண்ட்) 50 x 70cm அள‌வில் ஒரு பெரிய தாள் அல்லது கேன்வஸ் போர்ட், இரண்டு பிரஷ், பென்சில் கூடவே கொஞ்சம் பொறுமை நிறைய ஆர்வம்... !

செம்பருத்தியோ ரோஜாவோ அல்லது தாமரையோ முதலில் உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு பூவை ஒன்றின் பக்கம் ஒன்றாக பெரியதும் சிறியதுமாக‌ நான்கைந்து பூக்களை பென்சிலால் வரைந்துக்கொள்ளுங்கள். இலைகள் கூட அவசியமில்லை. இங்கே நான் வரைந்திருப்பது ஐரோப்பிய நாடுகளில் பரவலாக பூக்கும் கொக்லிக்கோ’(Coquelicot(Fre.) - Poppy(Eng.)) மலர்கள்.


எப்போதும் வண்ணங்களை தேர்ந்தெடுப்பதில்தான் அதிக கவனம் தேவை. முதலில் டார்க் கலரை கொண்டு பூக்களற்ற மற்ற பகுதியில் பெயிண்ட் பண்ணுங்க. அது உங்க வீட்டு வரவேற்பரையில் உள்ள கர்ட்டன் கலரிலோ... டேபிள் க்ளாத் கலரிலோ இருந்தால் கூடுதல் அழகை கொடுக்கும்.

வெறும் ஒரே நிறத்தைக்கொண்டு தீட்டாமல் ஓரங்களில் கொஞ்சம் கருப்பு நிறத்தையும் உட்புறமாக கொஞ்சம் வெள்ளையும் கலந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.



அடுத்து பூக்களுக்கான நிறத்தை தேர்வு செய்துக்கொள்ளுங்கள். சிகப்பு, ஆரஞ்சு, பிங்க், நீலம்..... இப்படி எந்த நிறமாக இருந்தாலும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறம் ஏற்கனவே தாளில் கொடுக்கப் பட்டிருக்கும் நிறத்துக்கு கான்ட்ராஸ்ட் ஆக‌ இருந்தால் பார்க்க பளிச்சென்று இருக்கும். பூவிதழ்களின் ஓரங்களில் கொஞ்சம் அழுத்தமாக, டார்காகவோ அல்லது லைட்டாகவோ வண்ணம் தீட்டினால் ஒவ்வொரு இதழ்களும் தனித்தனியாக தெரியும். பூத்தண்டுகளுக்கு பச்சையும் இடையிடையே கொஞ்சம் கருப்பு நிறமும் கலந்து அடித்து விடுங்கள்.






பொருத்தமாக ஃபிரேம் செய்து விட்டால், அவ்வளவுதான்.... ஒரு சிம்பிளான பெயிண்டிங் ரெடி! காசுக் கொடுத்து வாங்கும் பொருளை விட நாமே தீட்டிய ஓவியத்தைக்கொண்டு வீட்டை அழகுப்படுத்துவது சந்தோஷம்தானே! உங்களுக்குள் இருக்கும் வரையும் திறனை வெளிக்கொண்டு வரும் சிறு முயற்சியாக இது இருக்கட்டுமே.. கொஞ்சம் வரைந்துதான் பாருங்களேன்!

போட்டோ ஃபிரேமில்

எந்த வீட்டினுள் நுழைந்தாலும், முதலில் கவனம் ஈர்ப்பது சுவரையோ, அலமாரியையோ அலங்கரிக்கிற புகைப்படங்கள். முன் பெல்லாம் சதுரமான அல்லது செவ்வகமான மரச்சட்டத்துக்குள் மட்டுமே சிரித்துக்கொண்டிருந்த புகைப்படங்களை, இன்று அழகழகான, விதம்விதமான ஃபிரேம்களில் பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட போட்டோ ஃபிரேம் செய்வதே முழுநேரத் தொழில் சென்னையைச் சேர்ந்த தமிழரசிக்கு.

‘‘தூரிகை ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட்ஸ் என்ற பேர்ல 20 வருஷமா கைவினைக்கலைகள் கத்துக் கொடுக்கறேன். தெரியாத கைவினைக்கலையே இல்லைனு சொல்ற அளவுக்கு அத்தனையும் அத்துப்படி. போட்டோ

ஃபிரேம் செய்யறதுல தனி ஆர்வம் உண்டு. எந்த ஷேப்லயும், எந்த மெட்டீரியல்லயும் பண்ணக் கூடியது இது’’ என்கிறவர், கற்றுக்கொண்டு, தொழில் தொடங்க விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?

‘‘மர கட் அவுட்டுகள், மணிகள், அலங்கரிக்கத் தேவையான பொருள்கள், பசை, கலர் பேப்பர்... ஆயிரம் ரூபாய் முதலீடு போதும்.’’

எத்தனை மாடல்கள்? என்ன ஸ்பெஷல்?

‘‘இன்ன மாடல்லதான் பண்ண முடியும்னு இல்லை. அடிப்படையா ஏழெட்டு மாடல்கள் பண்ணக் கத்துக்கிட்டு, பிறகு கற்பனைக்கேத்தபடி டிசைன் பண்ணிக்கலாம். ஒரு போட்டோ வைக்கிறது, ரெண்டு வைக்கிறது, 3 படம் வைக்கிறதுனு நம்ம விருப்பம்தான்... மரத்துல மட்டுமில்லாம, பிளாஸ்டிக், சாப்பிடற மக்ரோனினு எதுல வேணாலும் ஃபிரேம் பண்ண முடியும்ங்கிறதுதான் ஸ்பெஷல்!’’

ஒரு நாளைக்கு எத்தனை?

‘‘முழு ஃபிரேமையும் நாமளே டிசைன் பண்ற மாதிரி, ரெடிமேட் ஃபிரேம்களை வாங்கியும் அலங்கரிச்சு ரெடி பண்ணலாம். ரெடிமேட் ஃபிரேம், ஸ்பெஷல் டிசைன்னா ஒரு நாளைக்கு 20-25 ஃபிரேம் வரைக்கும் பண்ணலாம். முழுசையும் ரெடி பண்றதுனா டிசைனைப் பொறுத்து எண்ணிக்கை கொஞ்சம் குறையும்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?

‘‘அன்பளிப்புப் பொருட்கள் விற்கிற கடைகள், பொட்டிக், கண்காட்சிகள்ல நல்லா விற்பனையாகும். பிறந்த நாள், கல்யாணப் பரிசுகளுக்காக ஸ்பெஷல் ஆர்டர் எடுத்தும் செய்யலாம். குறைஞ்சது 150 ரூபாய்லேர்ந்து விற்கலாம். 50 முதல் 100 ரூபாய் வரைக்கும் லாபம் நிக்கும்.’’
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

 

தட்டில் பெயிண்ட்டிங் செய்து விற்கலாம்



















உடையிலிருந்து வீடு வரை இன்று எல்லாவற்றிலும் டிசைனர் மோகம்! நம்மிடம் இருப்பதைப் போல இன்னொருவரிடம் இருக்கக்கூடாது என்பதுதான் டிசைனர் ஸ்பெஷல்! அன்றாடம் வீட்டில் உபயோகிக்கிற பொருள்கள் வரை அந்த மோகத்தை எல்லாவற்றிலும் பார்க்க முடிகிறது.

ஞானமுத்ரா ராணி, விதம்விதமான டிசைனர் தட்டுகள் செய்வதில் நிபுணி! விருந்தினர்களை உபசரிக்க உதவும் ஜூஸ் தட்டு முதல், விசேஷங்களுக்கு உபயோகிக்கிற அலங்காரத் தட்டு, தாம்பூலத் தட்டு வரை பலவித தட்டுகள் செய்கிற இவர், பி.ஏ. பொருளாதாரம் முடித்துவிட்டு, பள்ளியொன்றில் கைவினைக்கலை ஆசிரியராக இருக்கிறார்.

''எங்கப்பா ஒரு சிற்பி. அவரைப் பார்த்து வளர்ந்ததால நிறைய கைவினைக்கலைகள் செய்யத் தெரியும். வீடுகள்ல தாம்பாளத் தட்டு வச்சிருப்போம். வீட்டுக்கு வர்றவங்களுக்கு காபி, டீ கொடுக்கிறதுலேர்ந்து, பூஜை வரைக்கும் அதையே உபயோகிக்க வேண்டியிருக்கும். எனக்கு ஆரத்தித் தட்டு செய்யத் தெரியும். கல்யாணங்களுக்கு ஆர்டர் எடுக்கிறவங்க, வீடியோல கலர்ஃபுல்லா தெரியற மாதிரி புதுவிதமான தட்டுகள் வேணும்னு கேட்க ஆரம்பிச்சாங்க. அப்பதான் டிசைனர் பிளேட்கள் செய்யறதுல ஆர்வம் அதிகமாச்சு. இப்ப வீட்டு உபயோகத்துக்கே வித்தியாசமான தட்டுகள் கேட்கறாங்க’’ என்கிற ஞானமுத்ரா, டிசைனர் பிளேட்கள் கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?

‘‘பிளைவுட் கட்டிங்ஸ், அக்ரிலிக் கலர்கள், குந்தன் ஸ்டோன், பசை, எம் சீல்... பிளைவுட் கட்டிங்குகளை ஷீட் கணக்குல வாங்கலாம். ஒரு ஷீட் 800 ரூபாய். 6க்கு 8 அளவுள்ள ஷீட்ல 22 தட்டுகள் வரை பண்ணலாம். ஷீட்களை வாங்கி, கார்பென்டர்கிட்ட கொடுத்துதான் வெட்டி வாங்கணும். ஒரு பீஸுக்கான கட்டிங் சார்ஜ், டிசைனை பொறுத்து 30 முதல் 50 ரூபாய் வரை. மொத்த முதலீடு ரூ.3 ஆயிரத்து 500.’’

எத்தனை மாடல்? ஒரு நாளைக்கு எத்தனை?

‘‘ஓவல், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம், மாங்காய் வடிவம்னு கற்பனைக்கு எல்லையே இல்லை. ஒரு நாளைக்கு 8 முதல் 10 தட்டுகள் பண்ணலாம்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?

‘‘ஒரு தட்டுக்கான செலவு 80 ரூபாய்னா, அதை 200 ரூபாய் வரை விற்கலாம். 25 முதல் 75 ரூபாய் வரைக்கும் தின வாடகைக்கும் விடலாம்.’’

Saturday, November 12, 2011

கண்ணாடி ஓவியம்.. கைநிறைய காசு

ஓவியங்கள் வரைவது சிறந்த பொழுதுபோக்காக அமைவதோடு வருமானத்தையும் தருகிறது. 3டி கண்ணாடி ஓவியம் உள்பட புதுமையான ஓவியங்களை கலைநயத்தோடு வரைய கற்றுக் கொண்டால் நல்ல லாபம் பார்க்கலாம்Õ என்கிறார் கோவையை சேர்ந்த அருணா. சாய்பாபா காலனியில் ஆர்ட் காட்டேஜ் பயிற்சி நிலையம் நடத்தி வரும் அவர் கூறியதாவது: சிறுவயது முதலே நன்றாக ஓவியம் வரைவேன். திருமணம் முடிந்த பிறகு ஓய்வு நேரங்களில் பொழுது போவதற்காக ஓவியங்கள் வரைந்தேன். உறவினர்கள் எனது ஓவியங்களை பார்த்து விட்டு தத்ரூபமாக இருப்பதாக பாராட்டினார்கள். இதையே தொழிலாக செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம் என்றும் கூறினர். அப்போதுதான் எனக்கு இந்த ஐடியா வந்தது.

இதையடுத்து விற்பனை நோக்கில் படங்கள் வரையத் தொடங்கினேன். பாரம்பரிய ஓவியங்களுக்கு மாற்றாக எளிய முறையில் வித்தியாசமான ஓவியங்களை வரைந்தேன். வீணாகும் காபித்தூள் டிகாக்ஷனைக் கொண்டு லைட், டார்க் என பல்வேறு ஷேடுகளை மிக்ஸ் செய்து நான் வரைந்த ஓவியங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதையடுத்து துணி, கண்ணாடிகளில் ஓவியங்களை வரைந்தேன். 3 கண்ணாடிகளை கொண்டு நான் உருவாக்கிய 3டி கண்ணாடி ஓவியம் பலரையும் ஈர்த்தது. காபித்தூள் ஓவியம், கண்ணாடி ஓவியம், துணியில் வரையும் படங்கள் தான் எனது ஸ்பெஷல். வீடுகள், அலுவலகங்களில் வைப்பதற்காக எனது ஓவியங்களை பலர் வாங்கினர். ஏற்றுமதி நிறுவனங்களிடமும் படங்களை விற்றேன். இதன் மூலம் எனக்கு மூன்று மடங்கு லாபம் கிடைத்தது. பெண்களுக்கு இயற்கையிலேயே கலைத்திறன் உள்ளது. யார் வேண்டுமானாலும் எளிதில் கற்றுக்கொள்ள முடியும்.

ஓவியம் வரைவது எப்படி?

காபி ஓவியம்: பேப்பர் அல்லது துணியில் வரைய வேண்டிய படத்தின் அவுட் லைன் வரைந்து கொள்ள வேண்டும். காபி பொடியை தண்ணீரில் கலந்து டார்க், மீடியம், லைட் என ஷேடுகளை ஏற்படுத்த வேண்டும். ஓவியத்துக்கு ஏற்ப லைட், டார்க் ஷேடு தீட்ட வேண்டும். ஓவியத்தின் மீது வார்னிஷ் ஸ்பிரே அடித்தால் தூசு படியாது.
துணி ஓவியம்: அனைத்து வகை துணிகளையும் பயன்படுத்தலாம். ஓவியத்துக்கு தேர்ந்தெடுக்கும் துணியை பொருத்து வண்ணங்களையும், பிரஷ்களையும் பயன்படுத்த வேண்டும். ஜெய்ப்பூர் கற்கள், ஜரிகை நூல்கள் போன்றவற்றை ஒட்டியோ, தைத்தோ ஓவியத்துக்கு மேலும் அழகு சேர்க்கலாம். புடவை முந்தானையில் படம் வரைய
குறைந்தபட்சம் 3 மணி நேரம் ஆகும்.

கண்ணாடி ஓவியம்: கண்ணாடி ஓவியத்தில் ஸ்டெய்ன்ட், அகஸ்டல், ரிவர்ஸ், 3டி என வகைகள் உள்ளது. அவற்றுக்கென உள்ள பேனா மூலம் அவுட் லைன் வரைந்து, பின்னர் வண்ணம் தீட்ட வேண்டும். 3டி ஓவியம் வரைய ஒரே அளவிலான 3 கண்ணாடிகள் தேவை. ஓவியத்தின் தொலைவுப்பொருட்களை அடிக் கண்ணாடியிலும், நடுவில் உள்ள காட்சிகளை நடுக்கண்ணாடியிலும், ஓவியத்தின் முன்புறமுள்ள காட்சியை முதல் கண்ணாடியிலும் வரைந்து ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கினால் 3டி கண்ணாடி ஓவியம் தயார்.

எளிதான முதலீடு

வீட்டின் ஒரு பகுதி போதும். ஓவியங்களை பராமரிக்க ஒரு டேபிள், அலமாரி. பல தரப்பட்ட பிரஷ்கள், வண்ணங்கள், காபி பவுடர், தண்ணீர், கண்ணாடி, துணி, அழகுபடுத்தும் கற்கள், கோல்ட் கோட்டிங் தகடுகள், நூல், ஸ்பிரே, கோந்து உள்பட ஓவியங்களை பொருத்து மேலும் சில பொருட்கள் தேவைப்படும். ஓவியம் வரையத் தேவையான பொருட்கள் அனைத்தையும் பேன்சி, ஸ்டேஷனரி மற்றும் ஓவியப்பொருட்கள் விற்கும் கடைகளில் வாங்கலாம். பல ஓவியங்களுக்கு இவற்றை பயன்படுத்த முடியும். இவற்றுக்கு ஆகும் செலவு மிகக் குறைவானது.

மாதம் ரூ.24 ஆயிரம்

ஓய்வு நேரங்களில் வரைவதன் மூலம் ஒரு மாதத்தில் 15 ஓவியங்கள் வரையலாம். குறைந்தபட்சம் 8க்கு 10 செ.மீ. அளவு முதல் தேவைக்கேற்ற அளவுகளில் வரைய முடியும். பொதுவாக ஒரு ஓவியத்துக்கு உழைப்புக்கூலி உள்பட குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.750 வரை செலவாகும். ஓவியத்தின் வகைக்கு ஏற்ப மாதம் குறைந்தபட்சம் ரூ.4000 முதல் ரூ.12 ஆயிரம் வரை செலவாகும். ஒவ்வொரு ஓவியத்தையும் 3 மடங்கு விலைக்கு விற்க முடியும். இதன் மூலம் குறைந்தபட்ச மாத வருவாய் ரூ.12,000, அதிகபட்சம் ரூ.36,000 கிடைக்கும். இதன் மூலம் ரூ.8 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.24 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும்.

சந்தை நிலவரம்

வீடு, அலுவலகங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், கண்காட்சி அமைப்பாளர்கள், இன்டீரியர் டெக்கரேட்டர்கள் என பல்வேறு தரப்பில் இருந்தும் ஓவியங்களுக்கு நல்ல கிராக்கி உள்ளது. ஓவியங்களின் தரத்துக்கு ஏற்ப விலை போவதால் நிச்சயம் நல்ல லாபம் பார்க்க முடியும். கண்ணாடி ஓவியம், துணி ஓவியம், காபி ஓவியத்துக்கு அதிக வரவேற்பு உள்ளது. கண்ணாடி ஓவியங்கள் வெளி மாநிலங்கள், நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பல வகை ஓவியங்கள்

ஆயில், துணி, கண்ணாடி, பானை, காபி, கரித்துண்டு, மரம் என பல்வேறு வகை ஓவியங்கள் உள்ளன. புதிதாக வரைபவர்கள் காபித்தூள், கண்ணாடி, துணி ஓவியங்களை வரைந்து அனுபவம் பெற்ற பின் கலை நுணுக்கம் மிகுந்த பிற ஓவியங்களை வரைந்து பழகலாம். வயது வித்தியாசமின்றி ஆர்வமுள்ளவர்கள் எளிதில் கற்றுக்கொள்ளலாம். புதுப்புது ஓவியங்களை வரைந்தால் நிச்சயம் நல்ல லாபம் பார்க்க முடியும்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites