இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label மண்புழு உரம் தயாரிக்க. Show all posts
Showing posts with label மண்புழு உரம் தயாரிக்க. Show all posts

Saturday, November 8, 2014

பஞ்சகவ்யாவில் பளீரிடும் பன்னீர் திராட்சை...!


'இயற்கை வழி வேளாண்மை மேற்கொள்ளப்படும் நிலங்களில் உள்ள பயிர்களுக்கு, தானாகவே நோய் எதிர்ப்பு ஆற்றல் வந்துவிடும்' என்று இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகச் சொல்லி வருகிறார்கள். இக்கருத்தை 'உண்மை’ என ஆணித்தரமாகச் சொல்கிறார்கள், கோயம்புத்தூர் மாவட்டம் மாதம்பட்டி அடுத்துள்ள குப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயச் சகோதரர்கள் கே.ஆர். சதாசிவம் மற்றும் கே.ஆர். மாறன். இவர்கள், இயற்கை முறை யில் பன்னீர் திராட்சை சாகுபடி செய்து வருகிறார்கள்.
சிறுவாணிக் காற்று சிலுசிலுக்கும் இளமாலைப் பொழுதொன்றில், மேற்குத்தொடர்ச்சிமலைச் சாரலில் இருக்கும் உடன்பிறப்புக்களின் பண்ணையில் நுழைந்தோம். கண் ணுக்கு எட்டிய தூரம் வரை நீண்டு கிடக்கும் கல்பந்தலுக்குள் கருநீல நிறத்தில் குலைகுலையாகத் தொங்கிக்கொண்டிருந்தன, பன்னீர் திராட்சைகள். கைக்கு அடக்கமான கத்தரிக்கோலில் லாகவமாக அறு வடை செய்து கொண்டிருந்தனர் சில பெண்கள். பாங்காய் வெட்டிய பழக்குலைகளை உதிராமல் அட்டைப் பெட்டியில் அடைத்து எடைபோட்டு அடுக்கிக்கொண்டிருந் தனர், சில பணியாளர்கள். இதை யெல்லாம் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த சகோதரர்களைச் சந்தித்தோம்.
சோதனையான சாதனை!
முதலில் பேசியவர், சதாசிவம். ''பரம்பரை விவசாயக் குடும்பம். 60 ஏக்கருக்கு மேல நிலம் இருக்கு. எல்லாமே கிணத்துப்பாசனம்தான். வாழை, தக்காளி, வெங்காயம், திராட்சைனு பணப்பயிர் சாகுபடிதான் அதிகம். இதுல திராட்சைப் பந்தல் மட்டும் 40 ஏக்கர்ல இருக்கு. திராட்சையைப் பொருத்தமட்டில் சுழற்சி முறை விவசாயம்தான். வருஷமெல்லாம் திராட்சை அறுவடை நடக்கிற மாதிரி திட்டம் போட்டு பந்தலைப் படர விட்டிருக்கோம். அதனால, நாள் தவறாம இங்க அறுவடை நடந்துட்டே இருக்கும். பந்தல் வேலைக்கு மட்டும் 50 ஆட்களை நிரந்தரமாக வெச்சிருக்கோம்.
நாங்க திராட்சை விவசாயம் பக்கம் வந்து 30 வருஷமாச்சு. முன்னயெல்லாம் தீவிர ரசாயன விவசாயிங்கதான் நாங்க. பூச்சிக்கொல்லி கம்பெனிக்காரங்க, ரசாயன உர கம்பெனிக்காரங்கஎல்லாருக்கும் பரிசோதனை வயலே எங்க தோட்டம்தான்.
23 வருஷமா திராட்சைக்கு கடுமையான விஷத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகளை லிட்டர் கணக்குல ஊத்தியிருக்கோம். டன் கணக்குல வீரியமான ரசாயன உரங்களைக் கொட்டியிருக்கோம். அந்த சாதனையைப் பாராட்டி பல கம்பெனிக்காரங்க 'சாதனை விவசாயி’ விருதெல்லாம் கொடுத்திருக்காங்க. உண்மையில இதெல்லாம் சாதனையில்ல... வேதனைங்கிறதை நம்மாழ்வார் ஐயா மூலமாவும், 'பசுமை விகடன்’ மூலமாவும் தெரிஞ்சிக்கிட்டோம். பசுமை விகடன்ல வர்ற கட்டுரைளைப் படிச்சுட்டு, சம்பந்தப்பட்ட விவசாயிகளை நேர்ல போய் பார்த்து தெரிஞ்சிட்ட விஷயங்கள் மூலமா, நாங்களும் இயற்கை விவசாயிகளா மாறிட்டோம்.
7 வருஷமா முழுக்க இயற்கை வழியிலதான் திராட்சை சாகுபடி செய்றோம்'' என்ற சதாசிவம், ஒரு கொத்து திராட்சைப் பழங்களைப் பறித்து நம் கையில் திணித்து, ''சாப்பிட்டுப் பாருங்க பஞ்சகவ்யாவில் வெளைஞ்ச பன்னீர் திராட்சை... பஞ்சாமிர்தமாக இனிக்கும்'' என்றார்.
அவர் சொன்னது உண்மை என்பதை, அடுத்த நொடியே நம் நாக்கு ஆமோதித்தது!
அள்ளிக் கொடுக்கும் ஆட்டு எரு!
அண்ணனைத் தொடர்ந்த தம்பி மாறன், ''களிமண், களர்மண் நிலத்தைத் தவிர மத்த எல்லா மண்ணிலும் திராட்சை நல்லா வரும். அதுவும் செம்மண் நிலத்துல பிரமாதமா வரும். எங்க பகுதி முச்சூடும் அருமையான செம்மண்ணுங்க. அதேசமயம் திராட்சை வெள்ளாமைக்குப் பொருத்தமான சீதோஷ்ண நிலையும் இருக்கறதால மத்த பகுதிகளைவிட இங்க கெட்டியான மகசூல்தான். திராட்சையில் பல ரகங்கள் இருந்தாலும், நாங்க போட்டுருக்கிறது, பன்னீர் திராட்சைங்கிற நாட்டு ரகம்தான்.
மாடு, கன்னுக போக 250 செம்மறி ஆடுகளும் வெச்சிருக்கோம். அதுகள தோட்டத்தை ஒட்டி இருக்கிற மலைக்கு பகல்ல மேய்ச்சலுக்கு அனுப்பிடுவோம். ராத்திரியில நிலத்துல கிடை போட்டுடுவோம். மாசக்கணக்கில அதுகளோட புழுக்கை, தோட்டம் முழுக்க மண்டிக் கிடக்கிறதால, கொடிகளுக்கு ஊட்டம் கிடைச்சுட்டே இருக்கும். ஆடுகள் வளர்க்கிறதுக்கான சூழல் எங்களுக்குக் கிடைச்ச வரப்பிரசாதம். அடி உரமா தொழுவுரமும், ஆட்டு எருவும் சேர்ந்து செய்ற மாயாஜாலம்... இடுபொருள் செலவைக் குறைக்கிறதோட, அதிக மகசூலையும் அள்ளிக்கொடுக்குது'' என்றார்.
இயற்கை முறையில் திராட்சை சாகுபடி செய்யும் நுட்பங்கள் பற்றி, சதாசிவம் தந்த தகவல்களை இங்கே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
சொட்டுநீர்ப் பாசனம் சிறந்தது!
'நிலத்தில் சில மாதங்கள் ஆட்டுக்கிடை போட்டு... நன்றாக உழ வேண்டும். பிறகு, வழக்கமான முறையில் பந்தல் அமைத்துக் கொள்ள வேண்டும். வரிசைக்கு வரிசை 14 அடி, செடிக்குச் செடி 4 அடி என்ற இடைவெளியில் ஒன்றரை அடி ஆழத்துக்கு குழியெடுத்து... ஒவ்வொரு குழிக்குள்ளும் வேப்பம் பிண்ணாக்கு 50 கிராம், ஆட்டு எரு 3 கிலோ, கோழி உரம் ஒரு கிலோ ஆகியவற்றைக் கலந்து இட்டு நிரப்ப வேண்டும். திடமான, நன்கு விளைந்த கணுக்கள் உள்ள திராட்சைக்கொடித் தண்டுகளை வெட்டி எடுத்து, பஞ்சகவ்யா மற்றும் சூடோமோனஸ் கரைசலில் நனைத்தெடுத்து, நடவுசெய்து பாசனம் செய்யவேண்டும். தொடர்ந்து, வாரம் ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். திராட்சைக்கு சொட்டுநீர்ப் பாசனம்தான் சிறந்தது. நீர் சிக்கனம், களைக் கட்டுப்பாடு, திரவ உரப் பயன்பாடு போன்ற பல நன்மைகள் சொட்டுநீர்ப் பாசனத்தில் உண்டு.  
15 நாட்களுக்கு ஒருமுறை பஞ்சகவ்யா!
15 நாட்களுக்கு ஒரு முறை செடிக்குச் செடி 750 மில்லி பஞ்சகவ்யா கரைசலை நேரடியாகக் கொடுக்க வேண்டும். நடவு செய்த ஒரு ஆண்டில் வளர்ந்து நிற்கும் கொடிகளை எடுத்து பந்தலில் படரவிட வேண்டும். தொடர்ந்து கிளைகளை கவாத்து செய்து வந்தால், பூ எடுத்து குலைகளில் பிஞ்சு பிடிக்கத் தொடங்கும். இந்த சமயத்தில் பிஞ்சுக்குலைகளை கீழே தொங்கும்படி எடுத்துக் கட்டவேண்டும். இடையில் தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒரு முறை
10 லிட்டர் தண்ணீரில் 150 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து கொடிகள் நனையும்படி கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கவேண்டும். பூக்கள் அனைத்தும் பிஞ்சாக மாற இது அவசியம். பழஅழுகல் சேதாரத்தையும் இது கட்டுப்படுத்தும்.
சாம்பல் நோய்க்கு வேப்பங்கொட்டை, சுண்ணாம்புக் கரைசல்!
திராட்சையை அதிகம் தாக்குவது, சாம்பல் நோய். இதில் அடிச்சாம்பல் நோய், மேல்சாம்பல் நோய் என இரண்டு வகைகள் உண்டு. இந்த வகை சாம்பல் நோய், இலைகள் மற்றும் பழங்களில் படர்ந்து, குலைகளின் வளர்ச்சியைத் தடுத்துவிடும். இதைப்போக்க, ரசாயன விவசாயிகள் அதிக வீரியமுள்ள பூஞ்சணக்கொல்லிகளை அடிக்கடி தெளிப்பார்கள். ஆனால், இயற்கை முறையில் வேப்பங்கொட்டை சுண்ணாம்புக் கரைசல் மூலமாகவும், துத்தநாகம் சுண்ணாம்புக் கரைசல் மூலமாகவும் சாம்பல் நோயைக் கட்டுப்படுத்தலாம். இயற்கை விவசாயத்தில் நோயின் அறிகுறி தெரிந்தால், தேவையான பராமரிப்புச் செய்தால் போதுமானது.
காய்ந்த வேப்பங்கொட்டையை ஒரு கிலோ எடுத்து, அரைத்துப் பொடியாக்கி, 2 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து, 400 கிராம் கிளிஞ்சல் சுண்ணாம்பைக் கலந்து, 24 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். பிறகு, கரைசலை வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி கரைசல் வீதம் கலந்து, கைதெளிப்பான் மூலம் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் இலைகள் மீது புகைபோல் தெளித்தால், சாம்பல் நோய் கட்டுப்படும். பழஈக்கள் மற்றும் பொன்வண்டுகளையும் இது விரட்டிவிடும். இதற்கு, சாம்பல் நோய் முழுமையாகக் கட்டுப்படாவிடில், துத்தநாகக் கரைசலைத் தெளிக்கலாம். ஒரு கிலோ துத்தநாகத்தை துணியில் முடிந்து, 200 லிட்டர் தண்ணிரில் மூழ்குமாறு 24 மணிநேரம் வைக்க வேண்டும். 400 கிராம் கிளிஞ்சல் சுண்ணாம்பை ஊற வைத்து வடிகட்டி, அதை துத்தநாகம் ஊற வைக்கப்பட்ட தண்ணீரில் கலந்து அப்படியே தெளித்தால்... சாம்பல் நோய் முழுமையாகக் கட்டுப்படும்.
90 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை!
நடவு செய்த 16-ம் மாதம் முதல் அறுவடை செய்யலாம். 90 நாட்களுக்கு ஓர் அறுவடை. இரண்டு ஆண்டுகளில் ஐந்து முறை அறுவடை செய்யலாம். முதல் முறை ஏக்கருக்கு 5 டன் அளவுக்கு மகசூல் கிடைக்கும். அறுவடைக்குப் பிறகு, பவர் டில்லர் மூலம் பந்தலுக்குள் களை எடுத்து, ஆட்டுக்கிடை போட வேண்டும். ஒவ்வொரு கொடிக்கும் தலா 5 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரத்தைக் கொட்டவேண்டும். தொடர்ந்து நீர் பாய்ச்சி முறையாகப் பாரமரித்தால், அடுத்த 90-ம் நாளில் இரண்டாவது அறுவடை. இதில் 4 டன் வரை மகசூல் கிடைக்கும். மூன்றாவது அறுவடையில் 4 டன் கிடைக்கும். ஒவ்வொரு அறுவடை முடிந்த பிறகும், தொடர்ந்து ஊட்டம் கொடுத்து வந்தால், 15 ஆண்டுகள் வரை தொடர்ந்து அறுவடை செய்யலாம். அதன் பிறகு, கொடிகளை முழுமையாக அப்புறப்படுத்தி, புதிதாக செடிகளை நடவு செய்யவேண்டும்.'
மனதிருப்திக்கு ஈடே இல்லை!
சாகுபடிப் பாடம் முடித்த சதாசிவம், ''வருஷத்துக்கு ஒரு ஏக்கர்ல சராசரியா 10 டன் மகசூல் கிடைக்கிது. இப்போதைக்கு ரசாயன விவசாயத்துல கிடைக்கிற மகசூலைவிட இது குறைவுதான். இன்னும் ரெண்டு, மூணு வருஷத்துல ரசாயனத்துல கிடைக்கிறதைவிட அதிக மகசூலை எடுத்துக் காட்டுவோம். எங்க தோட்டத்துக்கு அங்ககச் சான்றிதழ் வாங்கிட்டோம். நேரடியா விற்பனை செய்றதால ஒரு கிலோ திராட்சைக்கு 45 ரூபாய் விலை கிடைக்கிது. ஒரு ஏக்கர்ல, ஒரு வருஷத்துல 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம். எல்லா செலவும் சேர்த்து, 2 லட்சம் ரூபாய் போக... 2 லட்சத்து
50 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும். இதைவிட பெரிய லாபம், ரசாயனங்களைக் கொட்டிக்கொட்டி மலடாகிப் போன எங்க மண், மறுபடியும் உயிர்ச்சத்துள்ளதாக மாறியிருக்கிறதுதான். இதையெல்லாத்தையும்விட மக்களுக்கு விஷமில்லாத திராட்சையைக் கொடுக்கிறோம்கிற மனதிருப்திக்கு ஈடே இல்லை'' என்று நெகிழ்ச்சியாக விடைகொடுத்தார்.
தொடர்புக்கு,
கே.ஆர். சதாசிவம், செல்போன்: 97866-44424
கே.ஆர். மாறன், செல்போன்: 97866-22424.

 பந்தல் அமைக்க பட்டியல்!
 ஒரு ஏக்கரில் பந்தல் அமைக்க குறைந்தபட்சம் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஒரு ஏக்கருக்கு 8 அடி உயரத்தில் 280 கல்தூண்கள் தேவைப்படும். ஓரக்கால்களுக்கு முட்டுக்கொடுக்க,
20 தூண்கள் தேவைப்படும். ஆக, ஏக்கருக்கு மொத்தம் 300 கல்தூண்கள் தேவை. தூண்களை நடும்போது மண்ணுக்குள் இரண்டரை அடியும், மேலே ஐந்தரை அடியும் இருக்குமாறு 15 அடி இடைவெளியில் நடவேண்டும். ஒரு ஏக்கர் பந்தலுக்குள் வலை பின்ன 750 கிலோ கம்பி தேவை. பந்தல் கம்பிகளை இறுக்கமாக இழுத்துக்கட்டுவது மிக அவசியம். இந்த வகைப் பந்தல் 25 வருடங்கள் வரை தாங்கி நிற்கும்.
 மதிப்புக்கூட்டல் மந்திரம்!
சதாசிவத்தின் மனைவி ராஜாமணியும், மாறனின் மனைவி துளசிமணியும் திராட்சையில் ஜூஸ், ஜாம் எனத் தயாரிக்கிறார்கள். இதைப்பற்றிப் பேசும் ராஜாமணி, ''பசுமை விகடன்ல் வர்ற தண்டோரா பகுதி தகவலைப் பார்த்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துல நடந்த மதிப்புக்கூட்டுதல் பயிற்சியில கலந்துகிட்டு, திராட்சையை மதிப்புக்கூட்டுறது பத்தி தெரிஞ்சுக்கிட்டோம். இதைத் தொடர்ந்து நாங்க தயாரிக்குற பொருட்களை கோயம்புத்தூர்ல இருக்கிற டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்கள், இயற்கை அங்காடிகளுக்கு அனுப்புறோம். வாரம் 100 பாட்டில் வரைக்கும் விற்பனையாகுது'' என்று குஷி பொங்கச் சொன்னவர்,
''திராட்சை ரசத்தோட, கேரட் சாறு சமஅளவு கலந்து தினமும் ஒரு நேரம் குடிச்சா, சிறுநீரக கல்லெல்லாம் கரைஞ்சுடும். திராட்சைப் பழங்களை விதையோட சேர்த்துச் சாப்பிட்டா, வாதம் மட்டுப்படும். புற்றுநோய் வராது. திராட்சை ரசத்தோடு தேன் கலந்து சாப்பிட்டா, ரத்தம் விருத்தியாகும்'' என்று மருத்துவ ஆலோசனைகளையும் தந்தார்.
இல்லை, இடைத்தரகு!
தோட்டத்தில் விளையும் திராட்சையை நேரடி விற்பனை செய்து வருகிறார், சதாசிவம். இதைப் பற்றிப் பேசியவர், ''இங்க விளையுற திராட்சையை, எங்க பண்ணை பெயர் அச்சடிக்கப்பட்ட 2 கிலோ அட்டைப் பெட்டிகள்ல அடைச்சு சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு பகுதிகள்ல இருக்கிற இயற்கை வேளாண்மை உணவுப்பொருள் விற்பனை அங்காடிகளுக்கு அனுப்புறோம். அதோட சிறுவாணி மெயின்ரோடு பகுதியில் ஏராளமான கல்லூரிகள், பள்ளிகள், நவீன குடியிருப்புக்கள், கோயில், தியான மடங்கள் இருக்கறதால... மக்கள் நடமாட்டம் அதிகமா இருக்கும்.
அதை மனசுல வெச்சு அங்க ஒரு திராட்சை விற்பனை மையம் நடத்துறோம். கோயம்புத்தூர்ல இருக்கற உழவர் சந்தைகளுக்கும் கொண்டுபோய் நேரடியா விற்பனை செய்றோம். அதனால எங்களுக்கு தரகர் கமிஷன் செலவே கிடையாது'' என்றார்.

Wednesday, May 22, 2013

பசுமை நாயகன் கணேஷ்!




கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அரசு தரும் மானியத்தை விடவும், தொலைத்தொடர்பு துறைக்கு அரசு போடும் திட்டங்களை விடவும்,  விவசாயத் துறைக்கு மானியம் கிடைப்பது மிக மிகக் குறைவு. அப்படி அரசு அரிதாகப்போடும் திட்டங்களும், மானியங்களும் விவசாயிகளுக்கு முழுமையாகப் போய்ச்சேருகிறதா என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. அப்படித் தப்பித்தவறி அரசியல்வாதிகளின் கவனக்குறைவால் அவர்களின் பாக்கெட்டுக்குப் போகாமல் விவசாயிகளுக்குப் போகிறது என்றாலும் ஊரில் உள்ள அரசியல் செல்வாக்கு மற்றும் பணம் உள்ள விவசாயிகளுக்குத்தான் போய்ச்சேர்கிறது. இப்படி ஏழை விவசாயிகளுக்கும் அரசுக்கும் உள்ள இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் வேளையில், அந்த இடைவெளியைப் பாலம்போல செயல்பட்டு  இணைத்துக்கொண்டிருக்கிறது புதுவையில் இயங்கிவரும் சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மை அபிவிருத்தி மையம் என்ற தனியார் அமைப்பு. ஏழை விவசாயிகளுக்குக் கடன் வாங்கித்தருவது, புதிய திட்டங்களை அவர்களிடம் அறிமுகப்படுத்துவது என முழுமையாக விவசாயிகளுக்கென இயங்கிக்கொண்டு வருகிறது இந்த மையம்.
ரசாயன உரங்களே போடாமல், இயற்கை உரங்களால் விளையும் கீரைகளைத் தன் தோட்டத்தில் விவசாயிகளிடம் அறிமுகம் செய்துகொண்டிருந்த இந்த மையத்தின் தலைவர் கணேஷைச் சந்தித்தேன்.
''வேளாண்மையில் பட்டபடிப்பை முடித்தபிறகு  அரசு வேலைக்காகக் காத்திருந்தேன். அப்போ நிறைய கிராமங்களில் சுத்தித் திரிஞ்சப்ப, மண்புழு உரம், சொட்டு நீர்ப்பாசனம்னு நிறைய அரசு திட்டங்கள் ஏழை விவசாயிகளிடம் போய்ச் சேராமலே இருப்பது தெரிந்தது. என்னதான் நாம் நிறைய தொழில்நுட்பத்தைக் கண்டு பிடிச்சாலும் அதைப் பயன்படுத்துவது விவசாயிகள்தானே. நம்ம ஊர் விவசாயிகளுக்காக ஏதாவது பண்ணனும்னு தோணுச்சு. சரி... அரசு வேலை எல்லாம் வேணாம்னு இந்த மையத்தைத் தொடங்கிட்டேன்.
இந்த மையத்தோட முக்கிய பணிகள், அரசின் புதிய திட்டங்களை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்துவதுதான். கடன் வேணும்னா நாங்களே கடன் வாங்கித்தர்றோம்; புதுசா அறிமுகப்படுத்துற பயிர்களை எப்படிப் பயிற்றுவிப்பதுனு பயிற்சி தருவது,  விவசாயத்துக்குத் தேவையான எந்திரங்களைத் தருவது என்பதோடு விளைந்த தானியங்களை நாங்களே மார்கெட்டிங்கும் பண்ணித்தர்றோம். இது மட்டும் இல்லாம 20 பேர்கொண்ட விவசாயக் குழுக்களை உருவாக்கி மாதாமாதம் அவங்களே 200, 300 ரூபாய்னு போட்டு சேமிப்பாங்க. இப்படி ஐந்து மாதம் சேமித்த பணத்தைக் குழுவுல இருக்கிறவங்களுக்குக் கடன் தேவை பட்டுச்சுன்னா தருவாங்க. இதனால, கந்து வட்டிக்காரங்ககிட்ட கை ஏந்தவேண்டிய அவசியம் இல்லை பாருங்க.
புதுவை கடலோர கிராமத்தைச் சேர்ந்த 3,000 விவசாயிகள் எங்களிடம் உறுப்பினராக இருக்காங்க. நபார்டு வங்கி மூலமாக விவசாயிகளுக்கு ஏராளமான கடன்கள் கிடைக்குது. ஆனா, விவசாயிகளுக்கு யாரிடம் கடன் கேட்பது, என்ன சொல்வாங்களோனு பயம் இருக்கும் இப்போ யாருக்கும் எந்தப் பயமும் இல்லாம பேசுறாங்க. விவசாயிகளுக்காகவே ஒருங்கிணைந்த பண்ணையை உருவாக்கி இருக்கிறோம். இந்தப் பண்ணையில் மண்புழு உரம் தயாரிப்பு, காளான் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, இயற்கை கீரைகள்னு நிறைய திட்டங்கள் இருக்கு. இங்கே வந்து விவசாயிகள் கற்றுக்கொண்டு அவங்க இடத்துல பயிர் செய்வாங்க. இதுக்கெல்லாம் அதிகச் செலவும் இருக்காது. நெல், கரும்பு போன்ற அதிகச் செலவு செய்யவேண்டிய பயிர்களை வளர்க்கமுடியாத ஏழை விவசாயிகள் இது போன்ற சுயத்தொழிலில் ஈடுபடலாம்.
வேளாண்மை படிச்சிட்டு வேலை இல்லாமல் இருக்கும் மாணவர்களுக்கு எங்கள் மையம் மூலமாக இரண்டு மாதம் வேளாண்மை தொழிற்பயிற்சி தர்றோம். இந்தப் பயிற்சிக்கு அப்புறம் மாணவர்கள் விவசாயிகளுக்கு உதவியாக இருப்பாங்க. மாணவர்களுக்கு ஊதியமும் கிடைக்கும். சுய தொழில் தொடங்குறவங்களும் தொடங்கலாம்'' என்று நம்பிக்கையோடு முடித்தார்.
இவர்போல மனிதர்கள் ஊருக்கு ஒருவர் இருந்துவிட்டால் இந்தியாவே பசுமைக்காடாக மாறி விடும்!
- ஆ.நந்தகுமார்

CONTACT

CENTRE FOR ENVIRONMENT AND AGRICULTURAL DEVELOPMENT(CEAD)
91, NALLAVADU ROAD,
THAVALAKUPPAM,
ABISEGAPAKKAM POST,
PONDICHERRY - 605007

PHONE: 0413 2618713
MOBILE: 9894313435

email: cead03@yahoo.co.in

Wednesday, February 13, 2013

பட்டுப்புழு வளர்ப்பில் அதிக லாபம் !

பட்டுப்புழு வளர்ப்பில் அதிக லாபம் பெற இளம்புழு வளர்ப்பை வணிகரீதியில் கையாளும் நடைமுறை உதவுகிறது. பட்டுக்கூடு அறுவடை வெற்றிகரமானதாக அமைவதற்கு ஆரோக்கியமான மற்றும் திடகாத்திரமான இளம்புழுக்களே முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. சரியான முறையில் அட்டை அடைகாப்பு, புழு வளர்ப்பு மனை மற்றும் சுற்றுப்புறங்களை கிருமிநீக்கம் செய்தல், இணக்கமான சுற்றுச்சூழல் மற்றும் சத்தான இலைகள் ஆகியவை ஆரோக்கியமான இளம்புழு வளர்ப்புக்கு அடிப்படைக் காரணிகளாகும். இளம்புழு வளர்ப்பு மையங்களில் விஞ்ஞான ரீதியில் இளம்புழுக்கள் வளர்க்கப்படுவதால், பட்டு விவசாயிகளுக்கு நல்ல அறுவடையைத் தரக்கூடிய ஆரோக்கியமான மற்றும் வலிமையான புழுக்களை வினியோகம் செய்ய முடிகிறது. மாதிரி இளம்புழு வளர்ப்பு மையம்: பட்டுக்கூடு விளைச்சலின் வெற்றி இளம்புழு வளர்ப்பில் அடிப்படையிலேயே தீர்மானிக்கப் படுகிறது. அதனால் இளம்புழு வளர்ப்பை பிரத்யேக புழு வளர்ப்பு மனையில் உகந்த சூழ்நிலையில் ஊட்டச்சத்து மிக்க மல்பெரி இலைகளை அளித்து திறமையான வேலை ஆட்களைக் கொண்டு செய்ய வேண்டும். விஞ்ஞான முறையில் இளம்புழு வளர்ப்பதால் கிடைக்கும் ஆரோக்கியமான இளம்புழுக்கள் பிறகு நல்ல கூடு விளைச்சலுக்கு வழிவகுக்கும். வாணிப இளம்புழு வளர்ப்பு மையங்கள் ஆரோக்கியமான இளம்புழுக்களை விவசாயிகளுக்கு வினியோகிக்கின்றன.

மாதிரி வாணிப இளம்புழு வளர்ப்பு மையத்திற்கு பிரத்யேக சாக்கி மல்பெரி தோட்டம், இளம்புழு வளர்ப்பு மனை மற்றும் புழு வளர்ப்பு உபகரணங்கள் தேவை. புழு வளர்ப்பில் அனுபவம் உடைய திறமையான வேலையாட்கள் தேவை. இத்தகைய புழு வளர்ப்பு மையத்திலிருந்து புழுக்களை வாங்குவதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக கூடு மகசூலும், ஆதாயமும் கிட்டுகிறது. இளம்புழுக்களை வாங்கி முதிர்புழு வளர்ப்பு மட்டும் மேற்கொள்வதால் விவசாயிகளுக்கு 8 முதல் 10 நாட்கள் வேலை நேரம் மற்றும் பணம் மிச்சம் ஆகிறது. இதனால் உற்பத்தி செலவும் குறைகிறது. வெற்றிகரமான இளம்புழு வளர்ப்புக்கு, பட்டு முட்டைகளை முட்டை வித்தகத்திலிருந்து கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் 120 முதல் 150 ஏக்கர் மல்பெரி தோட்டமும் 80-100 பட்டு விவசாயிகளும் இளம்புழு வளர்ப்பு மையத்தைச் சுற்றிலும் இருப்பது மிகவும் அவசியம். 

மாதிரி இளம்புழு வளர்ப்பு மனை: இளம்புழு வளர்ப்பு மனையை, முதிர்புழு வளர்ப்பு மனை மற்றும் கூடு கட்டவிடும் அறையிலிருந்து தூரமாக கட்டவேண்டும். ஜன்னல் மற்றும் வென்டி லேட்டர்கள் அதிகம் இருக்கக்கூடாது. அப்போதுதான் புழு வளர்ப்பு மனையின் உள்ளே தேவையான சூழ்நிலையைப் பராமரிக்க முடியும். அறையின் உட்புறச் சுவரைச் சுற்றிலும் சிறிய கால்வாய் இருக்க வேண்டும். இது எறும்புகள் தாங்கியில் ஏறாமல் தடுப்பதோடு, அறை மற்றும் தளவாடங்களை கழுவும்போது நீரை வெளி யேற்ற உதவுகிறது. அறையின் தரை, உட்புற மற்றும் வெளிப்புற சுவர்களுக்கும் சிமென்ட் பூசவேண்டும். மாதிரி இளம்புழு வளர்ப்பு மையத்தில் மூன்று அறைகள் முறையே முக்கிய புழு வளர்ப்பு அறை, இலை பாதுகாப்பு அறை மற்றும் தடுப்பு அறை இருக்க வேண்டும். தடுப்பு அறை ஊசி ஈ நுழைவதை தடுப்பதுடன், புழு வளர்ப்பிற்கு தேவையான பொருட்களை சேமித்து வைக்கவும் பயன்படுகிறது. மனையின் மூன்று புறமும் தாழ்வாரம் கட்டப்பட வேண்டும். ஊசி ஈ நுழைவதைத் தடுக்க கதவு மற்றும் ஜன்னல்களுக்கு கம்பிவலை பொருத்த வேண்டும். 

தொடர்பு: நா.தாஹிரா பீவி, விஞ்ஞானி-சி, ஆராய்ச்சி விரிவாக்க மையம், கோபி. 04285-228 171. -கே.சத்தியபிரபா, உடுமலை

Friday, December 14, 2012

இயற்கை விவசாயம்





மாதம் 1 லட்ச ரூபாய் சம்பளம், வருடத்துக்கு 6 மாத விடுமுறை, பைசா செலவில்லாமல் உலகம் சுற்றும் வாய்ப்பு, 3 ஆண்டுகளில் தலைமைப் பொறியாளர் ஆகி மாதம் ரூ.5 லட்சம் சம்பாதிக்கும் நிலை...

இப்படியான ஒரு வேலையை விட்டுவிட்டு வந்து நின்றால்? ரூசோ அப்படித்தான் வந்து நின்றார். அதிர்ந்து போனது குடும்பம். ‘‘இனி என்ன செய்யப்போறே?’’ - கேட்டார் ரூசோவின் அப்பா தைனிஸ். ‘‘விவசாயம் பாக்கப்போறேன்...’’ என்றார் ரூசோ! ‘‘வேலைன்னா ஒரு கிரியேட்டிவிட்டி இருக்கணும். பாதுகாப்பான வாழ்க்கை... கை நிறைய பணம்... இதெல்லாம் ஓகேதான். ஆனா, நம்மை நிரூபிக்கிற அளவுக்கு ஒரு தனித்துவம் இருக்கணுமே. அதுக்காகத்தான் அப்படி ஒரு ரிஸ்க் எடுத்தேன்!’’ - சிரிக்கிறார் ரூசோ.

சிவகங்கை மாவட்டம் கல்லலை ஒட்டியுள்ள முத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ரூசோ. ‘மரைன் டெக்னாலஜி’ படித்துவிட்டு கை நிறைய சம்பாதித்தவர், இயற்கை விவசாயம் செய்வதற்காக வேலையை விட்டுவிட்டு வந்து நின்றார். இன்று சென்னையில் திருவான்மியூர், பெசன்ட் நகர், நீலாங்கரை ஆகிய இடங்களில் ‘தி நேச்சுரல் ஸ்டோர்’ என்ற இயற்கை வேளாண் பொருட்கள் விற்பனை மையத்தை நடத்துகிறார். மாதம் ரூ.15 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை நடக்கும் இவரது கடைகளில் 30க்கும் அதிகமானோர் வேலை செய்கிறார்கள்.

‘‘அப்பாவுக்கு என்னை எஞ்சினியர் ஆக்கிப் பாக்கணும்னு ஆசை. என் கனவு வேற... வித்தியாசமா ஏதாவது பிசினஸ் பண்ணணும். கடைசியில அப்பாதான் ஜெயிச்சார். படிப்பு முடிச்சவுடனே ‘ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா’வில ஜூனியர் எஞ்சினியரா வேலை கிடைச்சுச்சு. 40 ஆயிரம் ரூபா சம்பளம். பாம்பே பறந்துட்டேன். கப்பல்ல ஜெனரேட்டரை இயக்குறது, எஞ்சின் மெயின்டனன்ஸ், பாய்லர், பம்புகளை பராமரிக்கிறது... இதுதான் வேலை. கடலாறு மாதம், நாடாறு மாதம்!’’ - மெல்லிய புன்னகை படர பேசுகிறார் ரூசோ.

இவருக்கு 2 சகோதரிகள். மூத்தவர் ராஜரீஹா, எம்.பி.ஏ படித்தவர். மா, பலா, நெல்லி என 100 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்கிறார். இளையவர் ஜோஸ்பினுக்கு தேனீ வளர்ப்புதான் தொழில். அப்பா ஓய்வுபெற்ற பிறகு, மூத்த அக்காவின் விவசாயத்தைப் பார்த்துக் கொள்கிறார்.

“வேலைக்குச் சேர்ந்து ரெண்டாவது வருஷம் சீனியர் எஞ்சினியரா ஆகிட்டேன். 1 லட்சம் ரூபா சம்பளம். எல்லா வசதிகளும் இருந்தும் மனசு மட்டும் வேலையில ஒட்டலே. எந்த சவாலும் இல்லாத வேலை. தினமும் அதே கடல்... அதே கப்பல்... அதே எஞ்சின்... வெறுப்பாயிடுச்சு. ‘இதில என்ன சாதிக்கப் போறேன்’னு மனசு கேட்குது. இன்னும் மூணு வருஷத்தில தலைமைப் பொறியாளர் ஆகலாம். மாசம் 5 லட்சம் ரூபா சம்பளம் கிடைக்கும். ஆனா, இதே கப்பல்தான்... இதே கடல் தான்... இதே எஞ்சின்தான்... கற்பனை பண்ணவே கஷ்டமா இருந்துச்சு...

ஒருமுறை முத்துப்பட்டிக்கு வந்திருந்தப்போ இயற்கை விவசாயிகள் கூட்டத்துக்கு அக்காகூட போயிருந்தேன். கப்பல் வேலையை விட்டுட்டு விவசாயத்தில இறங்கணும்னு முடிவெடுத்தது அங்கேதான். இன்னைக்கு சந்தைக்கு வர்ற எல்லா உணவுப்பொருளும் ரசாயனத்துல குளிச்சுத்தான் வருது. நிலமும் ரசாயனத்துக்குப் பழகிருச்சு. நிலத்தை மீட்டு இயற்கை விவசாயம் செய்றது சாதாரணமில்லை. ஆனா, அப்படி விளைவிக்கிற பொருட்களுக்கு எங்க பகுதியில மரியாதை கிடைக்கலே. பளபளப்பும் கலரும்தான் மக்களுக்கு பெரிசா தெரியுது. அந்தக் கூட்டத்தில விவசாயிகள் இந்த விஷயங்களை ஆதங்கமா பேசினாங்க. அப்போதான் எனக்குள்ள ஒரு பொறி கிளம்புச்சு. நாம ஏன் இந்தப் பொருட்களை மார்க்கெட் பண்ணக்கூடாது?
செயல்ல இறங்கிட்டேன். முதல்ல ஆர்கானிக் பொருட்களை விற்கறதுல இருக்கற பிரச்னைகளை அலசுனேன். சென்னையில் ஆரம்பிச்ச வேகத்திலேயே நிறைய கடைகளை மூடிட்டாங்க. அதுக்கு சில காரணங்கள் இருந்துச்சு. நாட்டு மருந்துக்கடை மாதிரி இறுக்கமா கடைகளை வச்சிருந்தாங்க. ஏ.சி. போட்டு, ஷோரூம் வச்சு பிரமாண்டமா யாரும் செய்யலே. அதனால நமக்கு தொடர்பில்லாத இடம்னு மக்கள் நினைச்சாங்க.

கடுகுல இருந்து வெங்காயம் வரைக்கும் எல்லாப் பொருளும் அந்தக் கடையில கிடைக்கணும். அப்போதான் தேடி வருவாங்க. ரசாயனத்தில விளையுற பொருட்களைவிட இயற்கைப்பொருட்களோட விலை 20 சதவீதம் அதிகமா இருக்கும். அதனால இதை வாங்கற மக்கள் வசிக்கிற பகுதிகள்லதான் கடை தொடங்கணும். எல்லாத்தையும் அலசி ஒரு புராஜெக்ட் ரெடி பண்ணினேன். கையோட ராஜினாமா லெட்டரையும் அனுப்பிட்டேன்!’’ - விளக்குகிறார் தைரியமான முடிவெடுத்த அந்தத் தருணத்தை.

முதலில் வயலில் இறங்கி இயற்கை விவசாயம் முழுமையாகக் கற்றபிறகே அடுத்த அடி எடுத்து வைத்தார். ‘‘வெளிமாநிலங்களுக்குப் போய் அங்கு இயற்கை விவசாயம் செய்றவங்களைப் பாத்து பிசினஸ் பேசுனேன். தமிழ்நாட்டுலயும் தேடிப் பிடிச்சு ஒப்பந்தம் போட்டேன். சென்னை எனக்குப் புதுசுங்கிறதால கல்லூரி நண்பர்கள் அருள்ராஜ், ஜான் ரெண்டு பேரையும் சேத்துக்கிட்டு, கொட்டிவாக்கத்தில முதல் கடையைத் திறந்தேன். 5 லட்சம் ரூபா முதலீடு.

வெறும் வறட்டு வியாபாரமா இல்லாம நிறைய புதுமைகள் செஞ்சோம். இயற்கை தானியங்கள்ல இனிப்புகள் செஞ்சு வாடிக்கையாளர்களுக்கு இலவசமா கொடுத்தோம். பாரம்பரிய அரிசி ரகங்கள்ல செய்யப்பட்ட உணவுகளை வச்சு ‘ஃபுட் ஃபெஸ்டிவல்’ நடத்துனோம். பீச்ல ஸ்டால் போட்டு சாம்பிள் கொடுத்தோம். கஸ்டமர்கள் மொபைல் நம்பரை வாங்கிவச்சு புதிய பொருட்கள் வரும்போது எஸ்எம்எஸ் அனுப்பினோம். முடக்கத்தான், முள்ளுமுருங்கைன்னு கிடைக்காத பொருளையெல்லாம் கொண்டுவந்து கொடுத்தோம். ஒரே வருஷத்தில நாங்க எதிர்பார்த்ததை விட பெரிய வரவேற்பு!’’ - மகிழ்கிறார் ரூசோ.

இப்போது தனியாக 3 கடைகளை நடத்துகிறார். தமிழ்நாடு முழுவதுமுள்ள கடைகளுக்கு மொத்த சப்ளை செய்கிறார். நகரத்து வெம்மையை போக்கி வீடுகள்தோறும் பசுமை பூக்கச்செய்யும் அரிய பணியையும் செய்கிறார். கான்க்ரீட்டுக்குத் தப்பி மிஞ்சியிருக்கும் இடங்களிலும் மாடியிலும் இயற்கை முறைப்படி தோட்டம் அமைத்துத் தருகிறார். விதைகளும் பயிற்சியும் அளிக்கிறார். ஈகோ டூரிஸம் என்ற பெயரில் பசுமைச்சுற்றுலா அழைத்துச் செல்கிறார்.

‘‘இப்போ நிக்க நேரமில்லாம ஓடிக்கிட்டிருக்கேன். சுதந்திரமா, திருப்தியா வேலை செய்றேன். தலைமைப் பொறியாளரா ஆகியிருந்தா என்ன சம்பாதிப்பேனோ, அதைவிட அதிகமா சம்பாதிக்கிறேன். மனிதர்களுக்கு மட்டுமில்லாம மண்ணுக்கும் சேவை செய்ற திருப்தி இருக்கு...’’

உள்ளுக்குள் உறைந்து கிடக்கும் உற்சாகத்தைக் கிளறிவிட்டு நிறைவுசெய்கிறார் ரூசோ
!

கவுரவத்தை விட்டோம்.... கை நிறைய சம்பாதிக்கிறோம்...



கலக்கும் மகளிர் சுய உதவிக்குழு உழைக்கவேண்டும் என்ற உறுதியும், சாதிக்கவேண்டும் என்ற உணர்வும் இருந்தால் போதும் எந்த தொழிலாக இருந்தாலும் கை நிறைய சம்பாதிக்க முடியும். கவுரவம் பார்க்காமல் வீடு, வீடாக குப்பை சேகரிப்பதில் தொடங்கி அடுத்த கட்டமாக மண்புழு உரம் தயாரித்தல், காளான் வளர்ப்பில் இறங்கி மாதம் தோறும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். இப்போது எங்களில் பலர் கடன் வாங்காமல் குடும்பத்தை நடத்துகிறோம் என பெருமை பொங்க கூறுகின்றனர் கோவை பெரியநாயக்கன் பாளையம் கூடலூர் சுயம் சுத்தா ஸ்ரீசெல்வநாயகி மகளிர் சுய உதவிக்குழுவினர்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கூடலூர் கிராமத்தில் பெரிய அளவிலான தொழில் ஏதும் இல்லை. அருகில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லவேண்டும்; அல்லது நகர்ப்புறங்களில் வேலை தேடி வரவேண்டும். இது தான் 15 ஆண்டுகளுக்கு முன் அந்த கிராமத்தின் எதார்த்த நிலை. குடும்பத்தை நடத்தும் அளவுக்கு வருமானம் ஏதும் பெரிதாக கிடைப்பதில்லை. பல வீடுகளில் மாத தேவைக்கே கடன் வாங்கவேண்டிய நிலை. இந்த சூழலில் மகளிர் சுய உதவிக்குழு தொடங்கினால் கடன் பிரச்னையை தீர்த்துக்கொள்ளலாம் என தன்னார்வ குழு மூலம் தெரியவந்தது. இதையடுத்து ஒரு குழுவை தொடங்கி தலா ரூ.100 முதலீடு செய்தனர். பின்னர் அதையே குறைந்த வட்டிக்கு சுழற்சி முறையில் விட்டனர்.

அப்போது தான் புதிய எண்ணம் இவர்கள் மனதில் பளிச்சிட்டது. மக்கும் குப்பை, மக்காத குப்பையை தனித்தனியாக பிரித்தெடுப்பது குறித்து ஊரெல்லாம் பரவலாக பேசப்பட்டது. இதை சாதகமாக பயன்படுத்திய மகளிர் சுய உதவிக்குழுவினர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தை அணுகினர். சுய உதவி குழுவின் திட்டம் டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்திற்கும் பிடித்து போகவே உடனடியாக பணி ஆரம்பமானது. எப்படி அந்த திட்டம் நிறைவேறியது என்பதை இக்குழுவை சேர்ந்த சரோஜினி தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

‘‘வீடு, வீடாக போய் குப்பை அள்ளுவது தினமும் நடக்கிற காரியமா என ஒரு தயக்கம் இருந்தது. இருந்தாலும் முயற்சி செய்வோம் என்ற நம்பிக்கையில் வீடு, வீடாக துண்டு நோட்டீஸ் கொடுத்தோம். பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைச்சது. டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் வண்டி வசதியை செய்து கொடுத்தனர். ஆரம்பத்தில் ஓரிரு நாள் கஷ்டப்பட்டோம். பின்னர் எல்லா வீடுகளிலும் குப்பையை நாங்கள் போய் கேட்பதற்கு முன்பாகவே எடுத்து தயாராக வைத்தனர். ஆரம்பத்தில் ஒரு நபருக்கு தினமும் 60 ரூபாய் சம்பளமாக பகிர்ந்து கொண்டோம்.

பின்னர் 150 ரூபாய் வரை சம்பளம் அதிகரித்தது. தினமும் 3 டிராக்டர் குப்பை எடுத்து பிரித்தோம். நல்ல வருமானம் கிடைத்தது. அடுத்த கட்டத்திற்கு முன்னேறினோம். குப்பை எடுப்பதோடு நிற்காமல் அதில் இருந்து மண்புழு தயாரிப்பில் இறங்கினோம். தற்போது மாதம் ஆயிரம் கிலோ மண்புழு உரம் தயாரித்து விற்பனையில் ஈடுபடுகிறோம். ஒரு கிலோ உரம் 10 ரூபாய்க்கு  விற்பனை செய்கிறோம். மாதம் குறைந்தபட்சம் 10 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. நாங்கள் சேகரிக்கும் குப்பையை தான் உரத்திற்கு மூலப்பொருளாக பயன்படுத்துகிறோம்.

காளான் வித்து வாங்கி உற்பத்தி செய்கிறோம். தினமும் 5 கிலோ உற்பத்தியாகிறது. அதை கிலோ ரூ.125 வீதம் விற்பனை செய்கிறோம். இதற்கு செலவிடும் நேரம் 4 மணி நேரம் மட்டுமே. இதனால் நாங்கள் வழக்கமாக செய்யும் எந்த வேலையும் கெடுவதில்லை,’’‘ என்றார். கூடலூர் பேரூராட்சிக்குட்பட்ட சாமிசெட்டிபாளையத்தில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இதில் அரை ஏக்கருக்கு காய்கறி பயிரிடுகின்றனர். மண்புழு உரம் தயாரிக்கப்படும் இடத்திலேயே சேகரமாகும் இயற்கை உரத்தை இதற்கு பயன்படுத்துகின்றனர். மீதி இடத்தில் காளான் வளர்க்க தனியாக கூரை அமைத்துள்ளனர்.

ஆரம்பத்தில் வங்கியில் 25 ஆயிரம் கடன் வாங்கினர். கடனை திருப்பி செலுத்தியதில் இவர்களுடைய நேர்மையை அறிந்த வங்கி நிர்வாகம் தற்போது 5 லட்சம் வரை கடன் அளிக்க தயாராக உள்ளது. ‘‘கடன் வாங்கி தொழிலை விரிவு செய்வதை காட்டிலும் எங்களிடம் உள்ள நிதியை மேலும் அதிகரித்து தொழிலை விரிவாக்கம் செய்யவேண்டும் என்பதே எங்ளது அடுத்த இலக்கு என்கின்றனர் சாதனை பெண்கள்.

Thursday, November 15, 2012

இயற்கை உரமான பஞ்சகவ்யா செய்வது பற்றி ஹிந்து நாளிதழ் சிறப்பாக வெளியிட்டு உள்ளது

இதனை, இந்த இணையத்தளத்தில் காணலாம்.
இங்கே, தமிழில்:

பஞ்சகவ்யவின் பார்முலாவும் தயாரிக்கும் வழியும்.

முதலில் 5 கிலோ பிரெஷ் பசுமாடு சாணம் எடுத்து கொள்ளவும்

அதில், 3 லிட்டர் பசு மூத்திரம் சேர்க்கவும்

அதில், 2 லிட்டர் பசும்பால் சேர்க்கவும்

அரை கிலோ பசும் நெய் சேர்க்கவும்

இந்த கூட்டில், மூன்று தேங்காய் இளநீர் சேர்க்கவும்

ஒரு டசன் நல்ல பழுத்த, அல்லது அழுகிய வாழை பழம் சேர்க்கவும்

இரண்டு லிட்டர் புளித்த தயிரை சேர்க்கவும்

சிறிது சுண்ணாம்பை (slacked lime) சேர்க்கவும்

கையளவு உயிர் மண்ணை (living soil) சேர்க்கவும்

கையளவு வெல்லம் சேர்க்கவும்

இந்த திரவத்தை, வேப்பம்குச்சி ஒன்றால் நன்றாக கலக்கவும். தினமும் திறந்து, சில நேரம் கலக்கவும். 20 நாட்களுக்கு பின் பஞ்சகாவ்யா ரெடி. அதன் பின் பஞ்சகவ்யவை உபயோகம் செய்யலாம். 30-50 லிட்டர் நீரில் ஒரு லிட்டர் சேர்க்கலாம்

பஞ்சகாவ்யா பயிர்களுக்கு நல்ல வளர்ச்சி கொடுப்பது மட்டும் இல்லாமல் பூச்சிகளில் இருந்து காப்பற்றவும் செய்கிறது. இதை எப்படி உங்கள் வீட்டிலேயே செய்வது?
முதலில், கோசானம் 7 kg, கோநெய் 1 kg இரண்டையும் ஒரு பிளாஸ்டிக் பாத்ரம், concrete டான்க் அல்லது மண் பானையில் கலக்கவும். இந்த கரைசலை நன்றாக காலையிலும், மாலையிலும் கலக்கவும். மூன்று நாட்கள் ஆன பின், கோமூத்திரம் 10 லிட்டர், நீர் 10 லிட்டர் சேர்க்கவும். இந்த கரைசலை 15 நாட்கள் வெய்திருக்கவும். நன்றாக காலையிலும், மாலையிலும் கலக்கவும். 15 நாட்கள் ஆன பின், பசும்பால் 3 லிட்டர், பசும்தயிர் 2 லிட்டர், இளநீர் 3 லிட்டர், வெல்லம் 3 கிலோ, பழுத்த பூவன் பழம் ஒரு டஜன் போட்டு கலக்கவும்.
இந்த கரைசல், 30 நாட்களுக்கு பின்னர் பஞ்சகாவ்யா ரெடி ஆகி விடும. ஆகா, பஞ்சகாவ்யா செய்ய, கிட்ட தட்ட
ஒரு மாதம் வேண்டும்.
சில டிப்ஸ்:
- தினமும், காலை, மாலை இரு முறை கரைசலை நன்றாக கலக்க வேண்டும்
- அகண்ட வாய் உள்ள பாத்ரம் இருந்தால் நல்லது
- பாத்தரத்தை நிழலில் வையுங்கள்.
- பத்திரத்தின் வாயை ஒரு கொசு வலை வைத்து கட்டவும். கொசு, மற்ற பூசிகள் உள்ளே போகாமல் இருக்க உதவும்

Friday, June 1, 2012

மண் புழு உரம் தயாரிப்பு

கழிவுகள் என்பது நாம் முறையாக பயன்படுத்த தவறிய மூலப்பொருள்கள் ஆகும். பொதுவாக வேளாண் கழிவுகள், கால்நடை கழிவுகள் போன்றவற்றை ஒரே இடத்தில் குவித்து வைக்கும் பொழுது கெட்ட நாற்றம் ஏற்படுகிறது. ஆனால் அவற்றில் இருந்து அதிக அளவிலான இயற்கை எருவை உருவாக்க முடியும். இந்த மதிப்புள்ள மூலப்பொருள்களை முறையாக மட்கவைப்பதின் மூலம் நமக்கு மதிப்பூட்டப்பட்ட எரு கிடைக்கிறது. இவ்வாறு அங்ககக் கழிவுகளை மக்கவைத்து வளம் குன்றிய மண்ணை பேணிக்காப்பதே மண்புழு உரத்தின் முதன்மையான பயனாகும்.

உள்ளுர் இரக மண்புழுக்களைக் கொண்டு மண்புழுஉரம் தயாரித்தல்

உலக அளவில் சுமார் 2500 மண்புழு இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 500வகை இனங்கள் இந்தியாவில் உள்ளன. வெவ்வேறு மண்வகைக்கு ஏற்ப மண்புழு உரங்கள் மாறுபடும். எனவே மண்புழு உரம் தயாரிக்க அந்தந்த மண்ணிற்கு ஏற்ற மண்புழுக்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில் பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேடஸ் மற்றும் லேம்பீட்டோ மெளருட்டி என்ற இரு இனங்களை பயன்படுத்துகிறோம். மண்புழுக்களை வளர்ப்பதற்கு, குழிகளையோ, தொட்டிகளையோ அல்லது வளைவான கட்டமைப்புகளையோ பயன்படுத்தி கொள்ளலாம்.

எவ்வாறு உள்ளூர்ரக மண்புழுக்களை தேர்வு செய்யமுடியும்?

1. மண்ணின் மேற்பரப்பில் தென்படக்கூடிய,புழுக்களின் ஆக்கிரமிப்புள்ள மண்ணை கண்டறிய வேண்டும்.
2. 500 கிராம் வெல்லம் மற்றும் ஒரு கிலோ மாட்டுச்சாணம் ஆகிய இரண்டையும் 2 லிட்டர் தண்ணீரில் கரைத்து 1 மீ x 1 மீ பரப்பளவில் மண்ணின் மேல் தெளிக்க வேண்டும்.
3. வைக்கோல் கொண்டு மூடிவிட்டு பின்பு அதன் மேல் கோணிப்பை வைத்து போர்த்த வேண்டும்.
4. 20-30 நாட்களுக்கு தண்ணீர் தெளிக்க வேண்டும்.
5. அந்த இடத்தில், மண்புழுக்கள் மேற்பரப்பில் அதிக அளவில் வரத்தொடங்கும். அவற்றை சேகரித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
எரு-குழி தயாரித்தல்

எரு-குழி தயாரிப்பதற்கு பல முறைகள் இருந்தாலும், நாம் நம் வசதிக்கேற்ற வடிவமைப்பில், வீட்டின் பின்புறத்திலோ, தோட்டத்திலோ அமைக்கலாம்.செங்கற்கள் கொண்டு ஒரு குழி, இரு குழி அல்லது வசதிக்கேற்ற அளவிளான தொட்டிகள் போன்றவற்றை முறையான நீர் வெளியேற்றக் குழாய்களுடன் அமைக்க வேண்டும். வேளாண் கழிவுகள் மற்றும் இதர பொருட்களின் கொள்ளவைக் கொண்டு தொட்டிகளின் அளவை தீர்மானம் செய்ய வேண்டும். தொட்டிகளின் சுவரின் நடுவில் சிறு குழிகளில் நீர் தேக்கம் செய்வதன் மூலம் புழுக்களை எறும்பு தாக்கத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.

நான்கு அறை தொட்டி / குழி முறை

நான்கு அறை தொட்டிகளின் மூலம் புழுக்கள் ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு எளிதாக செல்கின்றன. இதன் மூலம், புழுக்கள் ஒரு அறையில் உள்ள கழிவுகள் நன்கு மட்கியவுடன், மற்றொரு அறைக்கு சென்று கழிவுகளை மட்கச் செய்கின்றன.

மண்புழு படுக்கைதயாரித்தல்

மண்புழு படுக்கை

அடிப்பாகத்தில் சிறு கல் மற்றும் மணலின் (5 செமீ உயரம்) மேல் சுமார் 15-20செமீ உயரத்திற்கு ஈரப்பதத்துடன் கூடிய வண்டல் மண் பரப்பப்பட்ட படுக்கை அமைக்க வேண்டும்.

வண்டல் மண்ணின் மீது மண்புழுக்களை விட்டவுடன், அவை மண்புழு படுக்கையை தன் சொந்த இருப்பிடம் போல் எண்ணுகின்றன. குழியை 2 மீ x 1 மீ x 0.75 செமீ என்ற அளவிலும், மண்புழு படுக்கை 15 - 20 செமீ என்ற அளவிலும் அமைய வேண்டும்.

· கையளவு மாட்டுச்சாணத்தை படுக்கையின் மீது தூவ வேண்டும். பின்பு 5 செமீ உயரத்திற்கு வெட்டிய வைக்கோலையோ அல்லது இயற்கை கழிவுகளையோ இட வேண்டும். அடுத்த 30 நாட்களுக்கு தேவைப்படும்போதெல்லாம் நீர் தெளித்து ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்.

· படுக்கை வறண்டோ அல்லது சொதசொதப்பாகவோ இருக்கக்கூடாது.பறவைகளிடம் இருந்து காக்க தென்னை அல்லது பனை ஓலைகள் அல்லது கோணிப்பைகள் கொண்டு மூடி வைக்க வேண்டும்.

· வெப்பத்தை இழுக்கும் தன்மையுடையது என்பதால் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்கக் கூடாது. 30 நாட்கள் கழித்து ஈரப்பதமுடைய தாவரம் அல்லது கால்நடைக் கழிவுகளை, சமையலறை, உணவகம், வயல் போன்ற இடங்களில் இருந்து சேகரித்து அவற்றை சீர் செய்து 5 செமீ அளவிற்கு நிரப்ப வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்ய வேண்டும். இயற்கை கழிவுகளை மண்வெட்டி கொண்டு முறையே கலக்கிவிட வேண்டும்.

· சரியான அளவு ஈரப்பதத்தை பராமரிக்க, முறையாக நீர் தெளிக்க வேண்டும்.வானிலை வறட்சியாக இருந்தால் அடிக்கடி நன்றாக நீர் தெளிக்க வேண்டும்.

எப்பொழுது எரு தயாராகும்?

1. அடர்-காப்பி நிறத்தில், பொடியாக, குருணையாக,எடைகுறைவாக, துளைகள் நிரம்பிய மெல்லிய மண் அடுக்கமைப்புடன் இருக்கும் தருணமே தொழுஉரம் தயார் நிலையில் இருக்கும் தருணம் ஆகும்.

2. 60 - 90 நாட்களில் (குழி அல்லது தொட்டியின் அளவை பொருத்து)தொழு எரு தயாராகி விடும். புழுக்களின் கூடுகளைப் பார்த்து, குழியிலிருந்து தொழு எருவை அறுவடை செய்யலாம்.

3. புழுக்களை தொழு எருவிலிருந்து எளிதாகப் பிரித்து எடுக்க,எரு எடுக்கும் 2-3 நாட்களுக்கு முன்பிருந்து நீரிடுவதை நிறுத்த வேண்டும். இதனால் 80 சதவீத புழுக்கள் படுக்கையின் அடிப்பகுதிக்குச் சென்றுவிடும்.

4. மேலும் புழுக்களை சல்லடை அல்லது வலைகள் கொண்டும் பிரித்து எடுக்கலாம். புழுக்களும், தடிமனான பொருட்களும் வலையின் மீது நின்று விடும். இதனை குழியில் கொட்டி திரும்பவும் பயன்படுத்தலாம். மட்கிய உரம் மண்வாசனை போன்ற மணம் உடையது. முழுமையாக மக்காமல் இருந்தால் அதிலிருந்து கெட்ட வாடை வரும். இது நுண்ணுயிரின் செயல்பாடு முடிவடையாமல் நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக்கும். புளித்த வாடை வந்தால், அது பூஞ்சாணம் மற்றும் அதிக வெப்பத்தின் அறிகுறி ஆகும். இதனால் தழைச்சத்து இழப்பு நேரிடும். இவ்வாறு இருப்பின், நல்ல காற்றோட்டம் ஏற்படுத்தி, நாறு போன்ற பொருட்களை சேர்த்து உலர்த்த வேண்டும். பின்பு மட்கிய எருவை சல்லடை கொண்டு சலித்து எடுக்க வேண்டும்.

5. சேகரித்த பொருட்களை சூரிய ஒளியில் குவித்து வைக்க வேண்டும்.இதனால் புழுக்கள் குளிர்ச்சியான அடிப்பகுதிக்கு சென்றுவிடும்.

6. இரு அறை அல்லது நான்கு அறை குழியில் நீரிடும் போது, முதல் அறைக்கு நீரிடுவதை நிறுத்தி விடவேண்டும். இதம் மூலம் புழுக்கள் தானாகவே ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு செல்கின்றன. இவ்வாறு செய்வதால் சுழற்சி முறையில் தொடர்ச்சியாக எருவை அறுவடை செய்ய முடிகிறது.

மண்புழு மட்கு உரத்தின் பயன்கள்
· இயற்கை கழிவுகளை, மண்புழுக்களைக் கொண்டு மட்க வைப்பதன் மூலம், நல்ல கட்டமைப்புடன் கூடிய, நச்சுத்தன்மையற்ற நல்ல மதிப்பூட்டமுள்ள எரு கிடைக்கிறது.

· பயிர் வளர்ச்சிக்கு தேவையான கணிமப்பொருள்களையும்,நுண்ணூட்டங்களையும் பயிர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்து நல்ல கலப்பு உரமாக செயல்படுகிறது.

· தொழுஉரம், மண்ணில் உள்ள நோய் பரப்பக்கூடிய நுண்ணுயிர்களை குறைத்து விடுகிறது.

· பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கும், சமுகத்தின் கீழ்தட்டில் உள்ள மக்களுக்கும், மண்புழுதயாரித்தல் ஒரு சிறந்த குடிசைத் தொழிலாக அமைந்து அவர்களின் வாழ்க்கைக்கு கூடுதல் வருமானத்தை அளிக்கிறது.

· ஒவ்வொரு கிராமத்திலும், வேலையில்லாத இளைஞர்களையும் பெண்களையும் இணைத்து கூட்டுறவு சங்கங்கள்அமைத்து, மண்புழு உரம்தயார்செய்யலாம். மேலும் அவர்களே விலை நிர்ணயம் செய்து கிராம விவசாயிகளுக்கு விற்பனை செய்து ஒரு புதுமை படைக்கலாம். இதன் மூலம் இளைஞர்கள் நல்ல வருமானம் பெறுகின்றனர். அதோடுமட்டுமல்லாமல் நல்ல தரமான தொழுஉரத்தை அளித்து ஒரு நல்ல நீடித்த வேளாண்மை தொழில் செய்ய ஊக்குவிக்கிறது.
நன்றி - ஸ்ரீ ஏ.எம்.எம்.முருகப்ப செட்டியார் ஆராய்ச்சி நிலையம், சென்னை

மண் புழு உரம் தயாரிப்பு

தொழு உரம் தயாரிக்க 15 அடி நீளம், 8 அடி அகலம், 3 அடி ஆழம் என்ற அளவில் குழி வெட்ட வேண்டும்.
குழியில் அடுக்கடுக்காக சாணக்குப்பையை போட வேண்டும்.

முதல் அடுக்கில் முக்கால் அடி உயரத்திற்கு சாணக்குப்பையை போடவேண்டும். அன்றாடம் சேரும் சாணக்குப்பையை கொஞ்சம் கொஞ்சமாக இந்த குழியில் சேகரித்து வரலாம்.

முக்கால் அடி உயரத்திற்கு சாணக்குப்பையை வந்ததும், அதன் மேல் கால் அடி அளவு மண் போட்டு நிரப்ப வேண்டும்.

மண்ண போட்டு முடித்ததும், இரண்டாவ அடுக்கு ஆரம்பிக்க வேண்டும்.

இரண்டாவ அடுக்கில் முக்கால் அடி சாணக்குப்பையை போட்டு அதன் மேல் கால் அடி அளவு மண் போடவேண்டும்.
இரண்டாவ அடுக்க அமத்த பிறகு குழியில்மீதம் ஒரு அடி இருக்கும்.

இதில் மூன்றாவ அடுக்கு சாணக்குப்பையை போட்டு, கால் அடி மண் போடவேண்டும். குழி தரமட்டத்திற்கு நிரம்பிவிடும். குப்பை மக்க ஆரம்பித்தம் அடுக்குகள் இறங்கிவிடும். இதனால் பள்ளம் ஏற்படும். இத தடுக்க மேலும் தரமட்டத்திற்கு மேல் 1 அடி உயரம் மண் போடவேண்டும்.

மண் மேட்டின் மீது தண்ணீர் தெளித்து மெழுகிவிடவேண்டும். இது ஆறு மாதத்தில் நன்றாக மக்கிவிடும்.

வெட்டிப்பார்த்தால் கருகருவென மக்கிய தொழு உரம் காணப்படும்.

தொழு உரத்திலுள்ள சத்துகள் :

0.4-1.5 சதவிகிதம் தழைச்சத்து
0.3-0.9 சதவிகிதம் மணிச்சத்து
0.3௧.9 சதவிகிதம் சாம்பல் சத்து


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


மண் புழு உரம் என்பது, மண் புழுக்கள் வைக்கோல்,சானம் போன்ற இயற்கை இடு பொருட்களை உன்பதனால் வெளியேற்றும் கழிவுகளை மட்க செய்து கிடைக்கும் ஒரு எருவாகும்.

மண்புழுக்களை தேர்வு செய்யம் முறை
  • புழுக்கள் அதிகம் உள்ள மண்ணின் மேற்பரப்பைக் கண்டறிய வேண்டும்.
  • 500 கிராம் வெல்லம் மற்றும் ஒரு கிலோ மாட்டுச்சாணம் ஆகிய இரண்டையும் 2 லிட்டர் தண்ணீரில் கரைத்து 1 மீ x 1 மீ பரப்பளவில் மண்ணின் மேல் தெளிக்க வேண்டும்.
  • வைக்கோல் கொண்டு மூடிவிட்டு பின்பு அதன் மேல் கோணிப்பை வைத்து போர்த்த வேண்டும்.
  • 20-30 நாட்களுக்கு தண்ணீர் தெளிக்க வேண்டும்.
  • அந்த இடத்தில், மண்புழுக்கள் மேற்பரப்பில் அதிக அளவில் வரத்தொடங்கும். அவற்றை சேகரித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
எரு குழி தயாரித்தல்
  1. எரு-குழிகளை நாம் நம் வசதிக்கேற்ப வீட்டின் பின்புறத்திலோ, தோட்டத்திலோ அமைக்கலாம்.
  2. செங்கற்கள் கொண்டு ஒரு குழி, இரு குழி அல்லது வசதிக்கேற்ற அளவிளான தொட்டிகள் அமைக்க வேண்டும்.
  3. தொட்டியினை முறையான நீர் வெளியேற்றக் குழாய்களுடன் அமைக்க வேண்டும்.
  4. வேளாண் கழிவுகள் மற்றும் இதர பொருட்களின் கொள்ளவைக் கொண்டு தொட்டிகளின் அளவை தீர்மானம் செய்ய வேண்டும்.
  5. தொட்டிகளின் சுவரின் நடுவில் சிறு குழிகளில் நீர் தேக்கம் செய்வதன் மூலம் புழுக்களை எறும்பு தாக்கத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.
நான்கு அறை தொட்டி
நான்கு அறை தொட்டிகளின் மூலம் புழுக்கள் ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு எளிதாக செல்கின்றன. இதன் மூலம், புழுக்கள் ஒரு அறையில் உள்ள கழிவுகள் நன்கு மட்கியவுட மண்புழு படுக்கை தயாரித்தல் மண்புழு படுக்கை
  • அடிப்பாகத்தில் சிறு கல் மற்றும் மணலின் (5 செமீ உயரம்) மேல் சுமார் 15-20 செமீ உயரத்திற்கு ஈரப்பதத்துடன் கூடிய வண்டல் மண் பரப்பப்பட்ட படுக்கை அமைக்க வேண்டும்.
  • குழியை 2 மீ x 1 மீ x 0.75 செமீ என்ற அளவிலும், மண்புழு படுக்கை 15 - 20 செமீ என்ற அளவிலும் அமையக்க வேண்டும்.
  • கையளவு மாட்டுச்சாணத்தை படுக்கையின் மீது தூவ வேண்டும். பின்பு 5 செமீ உயரத்திற்கு வெட்டிய வைக்கோலையோ அல்லது இயற்கை கழிவுகளையோ இட வேண்டும். அடுத்த 30 நாட்களுக்கு தேவைப்படும்போதெல்லாம் நீர் தெளித்து ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்.
  • படுக்கை வறண்டோ அல்லது சொதசொதப்பாகவோ இருக்கக்கூடாது. பறவைகளிடம் இருந்து காக்க தென்னை அல்லது பனை ஓலைகள் அல்லது கோணிப்பைகள் கொண்டு மூடி வைக்க வேண்டும்.
  • பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்கக் கூடாது.(வெப்பத்தை இழுக்கும் தன்மையுடையது)
  • 30 நாட்கள் கழித்து ஈரப்பதமுடைய தாவரம் அல்லது கால்நடைக் கழிவுகள், சமையலறை, உணவகம், வயல் போன்ற இடங்களில் இருந்து சேகரித்த கழிவுகள் ஆகியவற்றை சரி செய்து 5 செமீ அளவிற்கு நிரப்ப வேண்டும்.
  • இவ்வாறு வாரம் இருமுறை செய்ய வேண்டும்.
  • இந்த இயற்கை கழிவுகளை மண்வெட்டி கொண்டு கலக்கிவிட வேண்டும்.
  • முறையாக நீர் தெளித்து, சரியான அளவு ஈரப்பதத்தை பராமரிக்க வேண்டும். வானிலை வறட்சியாக இருந்தால் அடிக்கடி நன்றாக நீர் தெளிக்க வேண்டும்.
எரு உருவாதல்
  • அடர்-காப்பி நிறத்தில், பொடியாக, குருணையாக, எடைகுறைவாக, துளைகள் நிரம்பிய மெல்லிய மண் அடுக்கமைப்புடன் இருக்கும் தருணமே தொழுஉரம் தயார் நிலையில் இருக்கும் தருணம் ஆகும்.
  • 60 - 90 நாட்களில் (தொட்டியின் அளவை பொருத்து) தொழு எரு தயாராகி விடும். புழுக்களின் கூடுகளைப் பார்த்து, குழியிலிருந்து தொழு எருவை அறுவடை செய்யலாம்.
  • புழுக்களை தொழு எருவிலிருந்து எளிதாகப் பிரித்து எடுக்க, எரு எடுக்கும் 2-3 நாட்களுக்கு முன்பிருந்து நீரிடுவதை நிறுத்த வேண்டும். இதனால் 80 சதவீத புழுக்கள் படுக்கையின் அடிப்பகுதிக்குச் சென்றுவிடும்.
  • மேலும் புழுக்களை சல்லடை அல்லது வலைகள் கொண்டும் பிரித்து எடுக்கலாம். புழுக்களும், தடிமனான பொருட்களும் வலையின் மீது நின்று விடும். இதனை தொட்டியில் கொட்டி திரும்பவும் பயன்படுத்தலாம்.
  • மட்கிய உரம் மண்வாசனை போன்ற மணம் உடையது. முழுமையாக மக்காமல் இருந்தால் அதிலிருந்து கெட்ட வாடை வரும்.
  • இது நுண்ணுயிரின் செயல்பாடு முடிவடையாமல் நடந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
  • புளித்த வாடை வந்தால், அது பூஞ்சாணம் மற்றும் அதிக வெப்பத்தின் அறிகுறி ஆகும். இதனால் தழைச்சத்து இழப்பு நேரிடும். இவ்வாறு இருப்பின், நல்ல காற்றோட்டம் ஏற்படுத்தி, நாறு போன்ற பொருட்களை சேர்த்து உலர்த்த வேண்டும்.
  • பின்பு மட்கிய எருவை சல்லடை கொண்டு சலித்து எடுக்க வேண்டும்.
  • சேகரித்த பொருட்களை சூரிய ஒளியில் குவித்து வைக்க வேண்டும். இதனால் புழுக்கள் குளிர்ச்சியான அடிப்பகுதிக்கு சென்றுவிடும்.
  • இரு அறை அல்லது நான்கு அறை தொட்டியில் நீரிடும் போது, முதல் அறைக்கு நீரிடுவதை நிறுத்தி விடவேண்டும். இதம் மூலம் புழுக்கள் தானாகவே ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு செல்கின்றன. இவ்வாறு செய்வதால் சுழற்சி முறையில் தொடர்ச்சியாக எருவை அறுவடை செய்ய முடிகிறது.
மண்புழு உரத்தின் பயன்கள்
  1. இயற்கை கழிவுகளை, மண்புழுக்களைக் கொண்டு மட்க வைப்பதன் மூலம், நல்ல தரமுடைய, நச்சுத்தன்மையற்ற எரு கிடைக்கிறது.
  2. பயிர் வளர்ச்சிக்கு தேவையான கணிமப்பொருள்களையும், நுண்ணூட்டங்களையும் பயிர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்து நல்ல கலப்பு உரமாக செயல்படுகிறது.
  3. தொழுஉரம், மண்ணில் உள்ள நோய் பரப்பக்கூடிய நுண்ணுயிர்களை குறைத்து விடுகிறது.
  4. பல மக்களுக்கு, மண்புழு தயாரித்தல் ஒரு சிறந்த குடிசைத் தொழிலாக அமைந்து அவர்களின் வாழ்க்கைக்கு கூடுதல் வருமானத்தை அளிக்கிறது.
  5. இளைஞர்களும், சுய உதவி குழு சார்ந்த பெண்களும் குழுவாக சேர்ந்து இதனை தயார்செய்யது விற்பனை செய்யலாம்.

மண்புழு உயிர் உர தொழில்நுட்பம்

முன்னுரைஇந்த புவியியல் 120 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இருந்தே மண்புழுக்கள் வாழ்ந்து வருகின்றன. இவைகள் அங்கக கழிவுகளை மட்கவைத்து உரமாக்கி மீண்டும் பயிர்கள் கிரகித்துக் கொள்ளும் நிலைக்கு கொண்டு செல்கின்றன. இதனால் மண்ணில் மண்புழுக்களின் செயல்பாடுகள் மிகவும் முக்கியமானது ஆகும். மேலும் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதோடு, நோய் கிருமிகளை இந்த மண்புழுக்கள் அழித்து விடுகின்றன. மண்புழுக்களை சுற்றுப்புற சூழ்நிலை அமைப்பாளர்கள் எனக் கூறலாம். ஏனெனில் அவை மண்ணின் இயற்பியல் சுற்றை மாற்றி அமைக்கிறது.





மண்புழு உரத்தின் தொழில்நுட்பம்

மண்புழு உரத்தின் தொழில் நுட்பமானது, அங்ககக் கழிவுகளை, மண்புழுக்களை கொண்டு மதிப்பூட்டுதல், கழிவுகளை அந்த இடத்திலேயே மேம்படச் செய்தல் மற்றும் கழிவுகளில் உள்ள வேதியியல் மற்றும் உயிரியல் மாசுக்களை அப்புறப்படுத்துதல்.

மண்புழு உரம் தயாரிக்க உகந்த மண்புழுக்களை தேர்வு செய்வதற்கு வேண்டிய குணாதிசயங்கள்

  • அங்ககக் கழிவுகளில் அதிக எண்ணிக்கையில் வளரும் தன்மை உடையனவாக இருக்க வேண்டும்.
  • எல்லாச் சூழ்நிலைகளிலும் வளரும் இரகமாக இருக்க வேண்டும்.
  • அதிக எண்ணிக்கையில் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் இரகமாக இருக்க வேண்டும்.
  • அதிகஅளவில் உணவை உட்கொண்டு செரித்து, வெளியேற்றும தன்மை உடையதாக இருக்க வேண்டும்.

மண்புழு இரகங்கள்

வாழும் இடத்தை பொருத்து மண்புழு இரகங்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றன.

  • மண்ணின் மேற்பரப்பில் அங்ககக் கழிவுகள், மற்றும் கால்நடைக் கழிவுகளில் வளரும் தன்மை உடையது.
  • மண்ணில் சற்று உள்ளே வளரும் தன்மை உடையது.மண்ணின் கீழ்பரப்பில் வளரும் தன்மை உடையது.



மண்ணின் மேற்பரப்பில், அங்ககக் கழிவுகளில், கால்நடைக் கழிவுகளில் வளரும் மண்புழுக்களுக்கு, எப்பிஜிக் (Epigeic) என்று பெயர். இந்த மண்புழுக்கள் நிறமானதாகவும், எல்லா தட்ப வெப்ப சூழ்நிலைகளிலும் வளரும் தன்மை உடையதாக இருக்கும். இதற்கு உதாரணம், லும்பிரிக்கஸ் மற்றும் எஹ்சீனியா மண்புழுக்கள். மண்ணில் சற்று கீழே வளரக் கூடிய மண்புழுக்களை, என்டோஜியிக் (Endogeic) என அழைப்பார்கள். இவைகள் மண்ணில் இருந்து 30 செ.மீ ஆழத்தில் வளரும் தன்மை உடையவை. இவை பொதுவாக மண் மற்றும் அங்கக பொருட்களை சேர்த்து உணவாக எடுத்துக் கொள்ளும். இவை மண்ணில் துளையிட்டு செல்லும் தன்மை உடையவை. இதனால் மேல் பாக மண்ணும் கீழ்பாக மண்ணும் ஒன்றாகக் கலந்துவிடும். மண்புழுக்கள் விட்டுச் செல்லும் துளைகளினால் காற்றும், நீரும், வேர்மண்டலத்தை சென்று அடைகிறது. இவ்வகை மண்புழுக்களுக்கு உதாரணம் அபரேக்டிடா (Aporrectedea) ஆகும்.
மண்ணின் கீழ்பாகத்தில் வசிக்கும் மண்புழுக்கள் அனிசிக் (Anecic) என்று அழைக்கப்படும். இவை மண்ணில் நீண்ட ஆழத்திற்கு (3 மீட்டர்) துவாரம் இட்டு செல்கிறது. இவை மண்ணில உள்ள அங்ககப் பொருட்களை மண்ணின் அடிப்பாகம் வரை எடுத்துச் செல்கிறது. இவ்வகை மண் புழுக்களுக்கு உதாரணம் லும்பரிக்கஸ் டெரஸ்டிரில், அபரோகிடா லாங்கா.
மண்ணின் மேற்பரப்பில் வளரும் மண்புழுக்களான யூட்ரில்லஸ், எய்சீனியா மற்றும் பிரியானிக்ஸ் மண்புழுக்கள் மிகவும் பிரபலமானவை. இவற்றில் ஆப்ரிக்கன் மண்புழு என்று அழைக்கப்படும் யூட்டிரில்லஸ் யூஜினியே அதிக எண்ணிக்கையில் வளர்ந்து, அதிக அளவு கழிவுகளை மக்க வைக்கும் தன்மை கொண்டவை.



2. மண்புழு உரம் தயாரிப்பதற்கான பல்வேறு நிலைகள்

நிலை - 1
மட்கக்கூடிய கழிவுகளை சேகரித்தல், சிறு சிறு துண்டுகளாக மாற்றுதல், உலோகம், கண்ணாடி மற்றும் பீங்கான் பொருட்களை பிரித்து எடுத்தல்.
நிலை - 2
மட்கக்கூடிய கழிவுகளை மூட்டம் போட்டு, அதில் சாணக்கரைசலை தெளித்து, 20 நாட்களுக்கு மக்கவிடுதல். இவ்வாறு 20 நாட்கள் மட்கிய கழிவுகள் மண்புழு சாப்பிடுவதற்கு ஏதுவாக இருக்கும். நன்றாக உலர்ந்த கால்நடை கழிவுகளையும், சாண எரிவாயுக் கழிவுகளையும் மட்டுமே மண்புழு உரம் தயாரிக்க நேரடியாக உபயோகிக்கலாம்.

நிலை - 3
மண்புழு உரப்படுக்கை தயாரித்தல். மண்புழு உரம் தயாரிக்க கடின தரை மிகவும் அவசியம். தரை மிருதுவாக இருந்தால் மண்புழு மண்ணுக்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறது. மேலும் மண்புழு படுக்கையில் தண்ணீர் விடும் பொழுது, கரையக் கூடிய சத்துக்கள் எல்லாம் நீரில் கரைந்து மண்ணுக்குள் சென்றுவிடும்.
நிலை - 4
மண்புழு உரம் தயாரித்த பின்பு மண்புழுக்களை பரித்து எடுத்தல் அவசியமாகும். மண்புழு உரத்தை சல்லடையில் இட்டு சலிக்கும் பொழுது, நன்றாக மக்கிய உரம் மற்றும், மக்காத கழிவுகளை தனித்தனியாக பிரித்து எடுக்கப்படும். மக்காத கழிவுகளை மறுபடியும் மண்புழு படுக்கையில் இடவும்.
நிலை - 5
சேகரித்த மண்புழு உரத்தை அதிக வெயில்படாத காற்றோட்டம் உள்ள இடத்தில் சேமித்து வைக்கவும். இவ்வாறு சேமித்து வைக்கப்பட்டுள்ள மண்புழு உரத்தில் நன்மை தரும் நுண்ணுயிர்கள் அதிக அளவில் வளரும்.

மண்புழு உர உற்பத்தி முறைகள்

உகந்த மண்புழுவை தேர்ந்தெடுத்தல்

மண்புழு உரம் உற்பத்திக்காக நிலப்பரப்பின் மேல் வாழக்கூடிய மண்புழுரகம் மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது. மண்ணின் ஆழத்தில் வாழக்கூடிய மண்புழுவானது, மண்புழு உரத்தின் உற்பத்திக்கு உகந்ததல்ல. ஆப்ரிகன் மண்புழு (யூடிரிலஸ் யுஜினியே), சிவப்பு புழு (எய்சினியா ஃபோய்டிடா), மக்கும் புழு (பெரியானிக்ஸ் எக்ஸ்கவேடஸ்) இவை அனைத்தும் மண்புழு உரத்தின் உற்பத்திக்கான சிறந்த மண்புழுக்களாகும். மூன்று மண்புழுக்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து மண்புழு உரத்தை உற்பத்தி செய்ய முடியும். மற்ற இரண்டை காட்டிலும் ஆப்ரிக்கன் (யூடிரிலஸ் யுஜினியே) புழுவானது மிகவும் சிறந்தது. ஏனெனில் குறைந்த கால இடைவெளியில் அதிகளவு மண்புழு உரம் மற்றும் புழுக்களையும் உற்பத்தி செய்கிறது.

அட்டவணை:1 மண்புழு உரம் தயாரிக்க உகந்த கழிவுகள்

கழிவுகள் கிடைக்கும் இடம்
உபயோகிக்க கூடிய கழிவுகள்
வேளாண் பண்ணைகள்
பயிர் தூர்,களைகள்,வைக்கோல்,உமி,எரு
மலைப் பயிர்கள்
தண்டு,இலைகள்,பழத்தோல்கள்
கால்நடைகள்
சாணம்,மூத்திரம்,சாண எரிவாயு கழிவு
உணவு பதப்படுத்தும் ஆலை
தோல்,ஓடு,உபயோகப்படுத்தாத குழம்பு, காய்கறிகள்
சமையல் எண்ணெய் ஆலை
விதை ஓடு, பிரஸ்மட்
வடிப்பாலை
உபயோகப்படுத்தப்பட்ட கழிவு நீர், பார்லி கழிவுகள்
விதை பதப்படுத்தும் ஆலை
பழங்கள் (மத்திய பகுதி), முளைக்காத விதைகள்
வாசனை திரவியங்கள் ஆலை
தண்டு, இலை, பூக்கள்
தென்னை நார் ஆலை
தென்னை நார்க் கழிவு

மண்புழு உர உற்பத்திக்கான இடம்

மண்புழு உரம் உற்பத்தி செய்ய நிழலுடன், அதிகளவு ஈரப்பதம் மற்றும் குளிர்ச்சியான பகுதியாக இருத்தல் வேண்டும். உபயோகப்படுத்தாத மாட்டுத் தொழுவம், கோழிப்பண்ணை மற்றும் கட்டிடங்களை உபயோகப்படுத்த முடியும். திறந்த வெளியில் உற்பத்தி செய்வதாக இருந்தால், நிழலான இடத்தை தேர்ந்தெடுக்கவும். வெயில் மற்றும் மழையிலிருந்துபாதுகாப்பதற்கு, தென்னைக் கீற்று கூரையை பயன்படுத்தலாம். மண்புழு உர உற்பத்திக்கான குப்பை குவியலை உபயோகமில்லாத ஈரமான சாக்குப்பை கொண்டு மூட வேண்டும்.

மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்புகள்

ஒரு சிமென்ட் தொட்டி கட்டுவதற்கு அதன் உயரம் 2 அடி மற்றும் அகலம் 3 அடி ஆக இருக்கவேண்டும். அந்த அறையின் அளவை பொருத்து நீளமானது எந்த அளவு வேண்டுமானாலும் இருக்கலாம். அடிப்பகுதியான தொட்டியானது சாய்வான வடிவம் போன்று கட்டப்பட வேண்டும். அதிகளவு தண்ணீரை வடிகட்டுவதற்காக மண்புழு உரத்தின் அமைப்பிலிருந்து ஒரு சிறிய சேமிப்பு குழி அவசியம். ஹாலோ ப்ளாக்ஸ், செங்கல் இவற்றை பயன்படுத்தியும் மேலோ சொன்ன முறையில் கட்டமைப்புகளை உருவாக்கலாம். இந்த முறையில் சரியான அளவில் ஈரப்பதத்தை பராமரிக்க முடியும். இதனால் தேவையற்ற நீர் வெளியேறாது.

மண்புழு உர உற்பத்திக்கான படுக்கை

நெல், உமி அல்லது தென்னை நார்கழிவு அல்லது கரும்புத் தோகைகளை மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்பின் அடிப்பாகத்தில் 3 செ.மீ உயரத்திற்கு பரப்பவேண்டும். ஆற்று மணலை இந்த படுக்கையின் மேல் 3 செ.மீ உயரத்திற்கு தூவ வேண்டும். பிறகு 3 செ.மீ. உயரத்திற்கு தோட்டக்கால் மண் பரப்ப வேண்டும். இதற்கு மேல் தண்ணீரைத் தெளிக்க வேண்டும்.

கழிவுகளை படுக்கையில் போடும்முறை

பாதி மக்கிய கழிவுகளை 30 சதவீதம் கால்நடை கழிவுடன் (எடை அல்லது கன அளவின் அடிப்படையில்) கலக்க வேண்டும். இக்கலவையை மண்புழு உர கட்டமைப்பின் விளிம்பு வரை நிரப்ப வேண்டும். ஈரப்பதம் 60 சதம் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மண்புழுவை சமமாக பரப்ப வேண்டும். ஒரு மீட்டர் நீளம்X1மீட்டர் அகலம்X.5 மீட்டர் உயரத்திற்கு இரண்டு கிலோ மண்புழு (2000 மண்புழு) தேவைப்படுகிறது. மண்புழுவினை, கழிவுகளுக்குள்ளே விட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதனை மேலே பரப்பினால் போதுமானது.

தண்ணீர் தெளிக்கும் முறை

தினமும் தண்ணீர் தெளித்தல் அவசியமானது, 60 சதவீதம் ஈரப்பதம இருக்க வேண்டும். தேவையான போது தண்ணீரினைத் தெளிக்க வேண்டும். ஊற்றக் கூடாது. அறுவடைக்கு முன்னதாக தண்ணீர் தெளிப்பதனை நிறுத்தி விடவேண்டும்.

மண்புழு உரத்தினை ஊட்டமேற்றுதல்

அசிட்டோபேக்டர், அஸோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டிரியா,சூடோமோனாஸ், போன்ற உயிர் உரங்கள் மூலம் மண்புழு உரத்தினை ஊட்டமேற்றலாம். ஊட்டமேற்றுதல் மூலம் பயிர்ச்சத்துக்கள் மற்றும் உயிர் சத்துக்கள் அதிகரிக்கின்றன. மேலும் நன்மை தரும் உயிரினங்கள், ஊட்டமேற்றிய மண்புழு உரத்தில் அதிகரிக்கின்றன. ஒரு டன் கழிவிற்கு ஒரு கிலோ அசோபாஸ் (அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ - பேக்டீரியா) என்ற அளவில் இருபது நாட்களுக்கு பின் மண்புழு படுக்கையில் சேர்க்கலாம்.

மண்புழு உர அறுவடை செய்முறை

தொட்டி முறையில், மண்புழு உர படுக்கையின் மேல் உள்ள மண்புழு கழிவினை மட்டும் அறுவடை செய்ய வேண்டும். இந்த அறுவடை வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். கையால் மண் புழு கழிவினை சேகரித்து நிழலில் குவித்து வைக்க வேண்டும். இந்த அறுவடையினை மண்புழு தெரியும் இடம் வரை செய்யவேண்டும். இந்த அறுவடையினை தகுந்த இடைவெளியில் செய்வதன் மூலம் நல்ல தரமான மண்புழு உரத்தினை பெறமுடியும்.



சிறியபடுக்கை முறையில், தகுந்த இடைவெளியில் மண்புழு உர அறுவடை தேவையில்லை. இந்த முறையில் கழிவுகளின் குவிப்பு 1மீட்டர் வரை இருப்பதனால், இந்த கழிவுகள் முழுவதும் மக்கிய பிறகு அறுவடை செய்தால் போதுமானது.

மண்புழு அறுவடை முறை

மண்புழு உரம் தயாரிப்பு முடிந்தவுடன், மண்புழுக்கள் கருவுருதல் முறையில் உரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன. இம்முறையில் சிறிய மாட்டு சாணப்பந்துகள் உரக்குழியில் பல இடங்களில் வைக்கப்பட வேண்டும். இதனால் மண்புழுக்கள் அந்த சாணத்தினால் கவரப்படுகின்றன. பிறகு இதனை தண்ணீரில் போடுவதன் மூலம் சாணம் கரைந்து மண் புழுக்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இந்தப் புழுக்கள், அடுத்த மண்புழ உரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

மண்புழு உர பயிர்ச்சத்துக்களின் அளவு

பயிர்ச்சத்துக்களின் அளவானது, நாம் பயன்படுத்தும் மூலப்பொருட்களுக்கு தகுந்தாற்போல் வேறுபடுகிறது. வெவ்வேறு விதமான கழிவுகளை பயன்படுத்தினால், பலதரப்பட்ட பயிர்ச் சத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கும். ஒரே விதமான கழிவுகளைப் பயன்படுத்தினால் குறிப்பிட்ட சத்துக்கள் மட்டுமே அதிக அளவில் இருக்கும். மண்புழு உரத்தில் காணப்படும் பொதுவான பயிர்ச்சத்துக்களின் அளவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.



கரிமச்சத்து
9.5 - 11.98 சதவீதம்
தழைச்சத்து
0.5 - 1.5 சதவீதம்
மணிச்சத்து
0.1 - 0.3 சதவீதம்
சாம்பல்சத்து
0.15 - 0.56 சதவீதம்
சோடியம்
0.06 - 0.30 சதவீதம்
கால்சியம்+மெக்னீசியம்
22.67 - 47.6 மி.இக்/100 கிராம்
தாமிரச்சத்து
2 - 9.5 மி.கிராம்/கிலோ
இரும்புச்சத்து
2 - 9.3 மி.கிராம்/கிலோ
துத்தநாகச்சத்து
5.7 - 11.55 மி.கிராம்/கிலோ
கந்தகச்சத்து
128 - 5485 மி.கிராம்/கிலோ





மண்புழு உர சேமிப்பு முறை

அறுவடை செய்யப்பட்ட மண் புழு உரத்தை இருட்டான அறையில் 40 சதவிகித ஈரப்பதத்தில், சூரிய ஒளி படாதவாறு வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதால் ஈரப்பதம் வீணாவதைத் தடுக்கலாம். மக்கிய உரத்தை பாக்கெட் செய்வதை விட திறந்த வெளியில் சேமிப்பது சாலச் சிறந்ததாகும். திறந்த வெளியில் மக்கிய உரத்தை சேமிக்கும் பொழுது தண்ணீர் தெளித்து ஈரப்பதத்தை காக்க வேண்டும். இதனால் நுண்ணுயிர்கள் அழிவதை தடுக்கலாம். 40 சதவிகித ஈரப்பதத்துடன் வைப்பதினால் மண்புழு உரத்தின் தரம் குறையாமல் பாதுகாக்கலாம். விற்கும் சமயத்தில் மட்டுமே பைகளில் நிரப்ப வேண்டும்.

மண்புழு உரத்தின் நன்மைகள்

  • மற்ற மக்கு உரங்களை விட மண்புழு உரத்தில் சத்துக்கள் அதிகம்.
  • மண்புழு உரத்தில் நன்மை தரும் நுண்ணுயிர்களான அசட்டோபேக்டர், அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பேக்டீரியாக்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன.
  • இந்த நன்மை தரும் நுண்ணுயிர்கள் காற்றில் இருக்கும் தழைச்சத்தை மண்புழு உரத்தில் நிலைநிறுத்துகிறது. பயிர்களுக்கு வேண்டிய வளர்ச்சி ஊக்கிகளை சுரந்து மண்புழு உரத்தில் நிலை பெறச் செய்கிறது.
  • கரையாமல் இருக்கும் மணிச்சத்தை கரைத்து கொடுக்கிறது.
  • திடக்கழிவுகளில் ஏதேனும் நச்சுத் தன்மை கொண்ட பொருட்கள் இருந்தால் அவை மண்புழு வயிற்றுக்குள் செல்லும் பொழுது அவைகளின் குணங்கள் மாற்றப்படுகின்றன.

மண்புழு உரம் தயாரிக்கும் தொழில்நுட்பம்
மண்புழு உரம் உபயோகப்படுத்துதல்

ஒரு எக்டேர் நிலத்திற்கு 5 டன் மண்புழு உரம் பரிந்துரைக்கப்படுகிறது. தொட்டில்களில் போடப்படும் மண் கலவையில் மண்புழு உரம் 40 சதவிகிதம் கலக்கப்பட்டு பின்பு தொட்டிகளில் இடப்பட்டு நாற்றுகள் நடப்படுகின்றன. வளர்ந்த மரங்களான தென்னை, வாழை போன்ற மரங்களுக்கு ஒரு மரத்திற்கு 5 கிலோ இடவேண்டும். மண்புழு உரத்தை மண்ணில் இடும் பொழுது, மண்ணின் அடிப்பாகத்தில் இடவேண்டும். மண்ணில் மேல் பரப்பில் இடக்கூடாது. மண்ணின் மேல் பரப்பில் இட்டால், மண்புழு உரத்தில் இருக்கும் நன்மைதரும் நுண்ணுயிர்கள் வெயில்படும் பொழுது இறந்து விடும் நிலை உள்ளது.

மண்புழு உரம் தயாரிக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை

  • சரியான இரக மண்புழுவை தேர்ந்து எடுக்க வேண்டும்.
  • எல்லா நிலைகளிலும், மண்புழு வளர்வதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
  • மண்புழுக்கள் தேவைக்கும் அதிகமாக வளர்ந்துவிட்டால், தேவையான அளவுக்கு போக மீதமுள்ள எண்ணிக்கையை அப்புறப்படுத்த வேண்டும். இல்லை எனில் இடவசதி இல்லாததால் மண்புழுக்கள் இறந்துவிடும்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

ஏழை விவசாயிகளுக்கு ஏற்ற சில்பாலின் முறை மண்புழு உரத்தயாரிப்பு



ழவர்களின் நண்பன் என்று அழைக்கப்படும் மண்புழுக்களை கொண்டு உரம் தயாரிக்கும் முறை பரவலாகி வருகிறது. இது நல்ல தொழிலாகவும் விவசாயிகள் சிலரால் தொடங்கப்பட்டு லாபமுள்ள தொழிலாக சிறப்பு பெற்றுள்ளது.
மண்புழு வாழ உதவும் சூழ்நிலை
மண்புழு உரத்தயாரிப்பில் குழி முறை,குவியல் முறைதொட்டி முறை மற்றும் சில்பாலின் முறை என்ற முறைகளில் மண்புழு உரத்தை தயாரிக்கலாம். ஆனால் மிகக்குறைந்த செலவில் மண்புழு உரத்தை தயாரிக்க சில்பாலின் என்ற முறையை கையாளலாம். இந்த முறையானது ஏழை விவசாயிகளும் மண்புழு உரத்தை சொந்தமாக தயாரிக்க ஏற்ற முறையாக இருக்கிறது.
மண்புழுக்கள் அதிக அளவில் பெருகினால் மட்டுமே அதிக அளவு தரமான மண்புழு உரம் கிடைக்கும். இதனை பெற, குவியலில் விடப்படும் மண்புழுக்கள் நல்ல நிலையில் வளர்ச்சியடைந்து, இனப்பெருக்கம் செய்வது முக்கியம். மண்புழுக்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு நல்ல காற்றோட்டம், ஈரப்பதம், உணவு மற்றும் சரியான வெப்பநிலை ஆகியவை இருக்க வேண்டும். மண்புழுக்கள் வசிப்பதற்கான இடத்தில் நிலவும் ஈரப்பதம் எப்போதும் சரியான அளவில் இருப்பது அவசியம். ஈரப்பதம் குறைந்து போனால் புழுக்கள் பாதிக்கப்படும். இதே போல் ஈரப்பதம் அதிகமானால் புழுக்கள் மூச்சு விட முடியாமல் திணறி இறந்து போகும். இதற்கு காரணம், மண்புழுக்கள் அவற்றின் தோல் மூலம் தான் சுவாசிக்கின்றன. ஈரப்பதம் அதிகமாகும் போது இந்த தோலின் வழியாக சுவாசிக்க முடியாமல் அவை மடிகின்றன.
இதே போல் மண்புழுக்களுக்கு உணவாக காய்கறி மற்றும் இயற்கை கழிவுகளை மாட்டுச்சாணத்துடன் கலந்து கொடுக்க வேண்டும். மண்புழுக்கள் இதை உண்டு கழிவுகளை வெளியேற்றுகின்றன. இந்த கழிவுகளில் தான் பயிர்களுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் நிரம்பியிருக்கின்றன. மண்புழு வாழ்வதற்கான வெப்பநிலை என்பது 16 முதல் 28 டிகிரி சென்டிகிரேட் ஆகும். வெப்பநிலை அதிகம் உள்ள இடங்களில் நிழலில் புழுக்களை வளர்த்து நீர் தெளித்து குளிர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.
சில்பாலின் முறை மண்புழு உரத்தயாரிப்பு
மண்புழு உரத்தை தயாரிப்பதற்கு ஏழை விவசாயிகளுக்கான சிறந்த முறையாக சில்பாலின் முறை உதவுகிறது. சில்பாலின் பை என்பது சந்தையில் கிடைக்கக்கூடிய ஒரு வகை செயற்கை பொருளால் ஆன பை ஆகும். சிறிய அளவில் மண்புழு உரத்தயாரிப்பில் இறங்க விரும்பும் விவசாயிகள் 12 அடி நீளம், 4 அடி அகலம் மற்றும் இரண்டரை அடி உயரம் இருக்கும்படியான சில்பாலின் பையை வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த பையை பொருத்துவதற்கு 13 அடி நீளமுள்ள நான்கு சவுக்கு மரங்களை வாங்கிக் கொள்ள வேண்டும். இதே போல் 4 அடி உயரமுள்ள 14 சவுக்கு மரங்களை வாங்கிக் கொள்ள வேண்டும்.
சில்பாலின் பையில் நீர் வெளியேறுவதற்காக துளைகள் உள்ள பகுதி தாழ்வாக இருக்கும்படி சற்று தொய்வாக நிலை நிறுத்த வேண்டும். சவுக்கு மரத்தை சில்பாலின் பையுடன் சேர்த்துக் கட்ட கட்டுக்கம்பியையோ, பிளாஸ்டிகள் கயிற்றையோ பயன்படுத்தலாம். அதிகப்படியான நீர்வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள வடிகால் பகுதியின் வெளியில் 2க்கு2க்கு2 என்ற அளவில் குழி அமைத்து மண்புழு வடிநீரை பெறலாம். சில்பாலின் பையின் கீழ்பகுதியில் ஜல்லிக்கற்களையோ அல்லது தென்னை நார்க்கழிவையோ அல்லது இளநீர் மட்டைகளையோ இட்டு ஒரு படிவம் போன்ற பகுதியை ஏற்படுத்த வேண்டும்.
இந்த படிவ பகுதியின் ஆழமானது 10 முதல் 15 செ.மீட்டர் அளவில் இருந்தால் போதுமானது. இந்த படிவத்தின் மீது மாட்டுச்சாணத்தையும், மற்றக்கழிவுகளையும் கலந்து பாதிமக்கிய கலவையை இடவேண்டும். விவசாயக் கழிவுகளை நன்கு வெட்டி எடுத்து மாட்டுச்சாணத்துடன் கலந்து, 20 முதல் 25 நாட்கள் தண்ணீர் தெளித்து வந்தால் பாதி மக்கிய கழிவு கிடைக்கும். பின்னர் இதன் மீது நீர் தெளித்து அதன் மேல் மண்புழுக்களை இடவேண்டும். மேல் சொன்ன அளவில் அமைக்கப்பட்ட சில்பான் பாய் அமைப்பில் ஒன்றரை டன் அளவுக்கு கழிவுகளை கொட்டி வைக்க முடியும். இந்த அளவு கழிவை மண்புழு உரமாக மாற்ற சுமார் 3 கிலோ என்ற அளவில் மண்புழுக்களை இட வேண்டும்.
செரிமானமாகும் கழிவுகள்
இவ்வாறு கழிவுகளில் விடப்பட்ட மண்புழுக்கள் அந்த இயற்கை கழிவுகளை உண்டு செரித்து எச்சத்தை வெளியேற்றும். இந்த நிலையில் கழிவின் ஈரப்பதமானது மண்புழுக்கள் வாழ ஏற்றதாக இருக்கிறதா என்பதை கவனித்து வர வேண்டும். ஈரப்பதத்தை தக்க வைக்க கழிவுக்குவியலின் மேல், அதாவது சில்பாலின் பாயின் மேல் புறத்தில் வைக்கோல் அல்லது சணல் சாக்குகளை கொண்டு மூடி வைக்கலாம். இவ்வாறு பராமரித்து வரும் போது 50 முதல் 60 நாட்களில் மண்புழு உரம் தயாராகி விடும். மண்புழு வெளியிடும் எச்சத்தைக் கொண்டே மண்புழு உரம் தயாராகி விட்டதை அறிந்து கொள்ள முடியும். மண்புழு உரம் தயாரானதும், பச்சை சாணத்தை கால் பந்து போல் உருண்டை வடிவில் உருட்டி சில்பாலின் பாயில் ஆறு இடங்களில் லேசாக இரண்டு முதல் மூன்று செ.மீட்டர் ஆழத்தில் வைக்க வேண்டும். ஒரு நாள் கழித்து, அந்த மாட்டுச்சாண உருண்டையை எடுத்து மண்புழுக்களை பிரித்துக் கொள்ளலாம். அதாவது, சில்பாலின் பையில் போடப்பட்ட கழிவுகளை எல்லாம் ஏற்கனவே உண்டு செரித்து விட்ட மண்புழுக்கள் சாண உருண்டையை உண்டு செரிக்க ஏதுவாக அதில் வந்து ஒட்டிக் கொள்ளும். அப்போது மண்புழுக்களை சேகரித்து விட முடியும்.
புழுக்கள் பராமரிப்பு
இவ்வாறு மண்புழுக்களை சில்பாலின் பாயில் கழிவுக்குவியலில் இருந்து எடுத்த பின் சில்பாயின் பாயில் குவிந்திருக்கும் மண்புழு உரத்தை சேகரிக்க வேண்டும். இந்த உரத்தை 24 முதல் 36 மணிநேரத்திற்கு நிழலில் உலர்த்த வேண்டும். இது காய்ந்த பின் சல்லடையில் சலித்து எடுத்தால் மிகவும் தரமுள்ள மண்புழு உரம் கிடைக்கும். மண்புழு உரமானது அடர்ந்த டீத்தூளின் நிநத்தில் இருக்க வேண்டும். இந்த உரத்திலிருந்து கெட்ட துர்நாற்றம் எதுவும் வரக்கூடாது. இவ்வாறு கிடைக்கும் மண்புழு உரத்தை சாக்குப் பைகளில் சேமிப்பதை விட திறந்த வெளி நிழலில் சேமிப்பது நல்லது. திறந்த வெளியில் சேமிக்கும் போது லேசாக இதன் மீது நீர் தெளித்து ஈரப்பதத்தை காக்க வேண்டும். இதனால் மண்புழு முட்டைகளையும், நன்மை செய்யும் நுண்ணுயிரிகளும் இந்த உரத்தில் அப்படியே இருந்து பயிர்களுக்கு நன்மை செய்யும்.
இந்த முறையில் ஏழை விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு தேவையான மண்புழு உரத்தை தயார் செய்து கொள்ள முடியும்

Wednesday, April 18, 2012

"மண்புழு உரம் தயாரிக்க

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த கட்டக்குளத்தை சேர்ந்தவர் கார்த்திக்குமார். தோட்டக்கலையில் எம்.எஸ்சி., படித்த இவர், படிப்பு முடிந்ததும் டாடா கம்பெனிக்கு மாலத் தீவில் ஒரு தோட்டம் அமைத்துக் கொடுக்கும் பணியை ஏற்றார். ஓய்வு நேரத்தில் ஏற்றுமதி குறித்த பயிற்சியும் பெற்றார். அதன்பின் இந்தியா திரும்பிய இவர், இங்கிருந்து மாலத்
தீவிற்கு செடிகள் மற்றும் உரம் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்து வந்தார்.

ஒரு ஆண்டிற்கு முன் மதுரையில் மத்திய அரசின் நிதி உதவி பெற்று செயல்படும் "வேப்ஸ்' நிறுவனத்தில் மண்புழு உரம் தயாரிக்கும் தொழில் நுட்பம் குறித்து பயிற்சி பெற்றார். இப்பயிற்சி சான்றிதழை கொண்டு வங்கியில் ஐந்து லட்சம் ரூபாய் கடன் பெற்று மண்புழு உரப் பண்ணையை சொந்தமாக துவக்கினார். இங்கு தயாராகும் மண்புழு உரத்தை மாலத்தீவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்த தொழில் மூலம் கார்த்திக்குமாருக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.

"மண்புழு உரம் தயாரிக்க அமைக்கப்படும் "பெட்' அகலம் ஒரு மீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும். இடவசதிக்கு ஏற்ப நீளம் இருக்கலாம். அரை அடி ஆழத்திற்கு குழி வெட்டி, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். அந்த குழியில் தென்னை நார் கழிவை கொட்டி, அதன் மீது "மொலாசஸ்' கழிவை துõவ வேண்டும். அடுத்ததாக, நன்கு காய்ந்த எரு பொடியை பரப்பி அதன் மீது ஈரமான சாணத்தை கொட்டி அதில் மண் புழுக்களை விடவேண்டும். சாணத்தை உணவாக எடுத்துக் கொண்ட மண்புழுக்கள் வெளியேற்றும் கழிவுகள் உரமாக கிடைக்கும்' என்கிறார் கார்த்திக்குமார்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites