இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Monday, March 25, 2013

புதிய தொழில் முனைவோருக்கு 'டிக்' முன்னுரிமை:



தமிழகத் தொழில் முதலீட்டு கழகம் (டிக்), வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்களுக்கு, நடப்பு 2012-13ம் நிதியாண்டில் 100 கோடி ரூபாய் கடன் வழங்கத் திட்டமிட்டுள்ளது.நிலம், கட்டடம், இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்கு, நீண்ட கால தவணையில் கடன் வழங்கி வரும், தமிழக அரசின், 'டிக்' மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. அரிசி மற்றும் மாவு ஆலைகள், எண்ணெய் உற்பத்தி, கடல் உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் போன்ற 25க்கும் மேற்பட்ட வேளாண் பொருள் மதிப்புக்கூட்டு தொழில் துவங்குவோருக்கு, கடன் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. மாறுபடும் வட்டி விகிதம்: ஒரு தொழில் நிறுவனத்திற்கு, குறைந்தபட்சம் 14.75 சதவீதம், அதிகபட்சம் 16.25 சதவீதம் வட்டியில், இரண்டு லட்சம் ரூபாய் முதல் 20 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் கடன்களுக்கு, மாறுபடும் வட்டி விகித முறை பின்பற்றப்படுகிறது.'டிக்' மூலம் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மொத்த கடனில், 12 சதவீதம் வேளாண் மற்றும் அது சார்ந்த தொழில்களுக்கு அளிக்கப்படுகிறது. மானிய உதவி:தமிழகத்தில் உள்ள 385 ஒன்றியங்களிலும், வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்களைத் துவங்குவோர்களுக்கு, இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்கு அதன் மொத்த முதலீட்டில், குறைந்தபட்சம் 15 சதவீதம், அதிகபட்சம் 30 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.இவை தவிர, மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் துறை சார்பில், இயந்திரம் வாங்குவதற்கும், உற்பத்திக் கூடம் கட்டுவதற்கும் (சாலை, குடிநீர் தொட்டி, சுற்றுச் சுவர் தவிர) மானியம் வழங்கப்படுகிறது. திட்டத்தின் மொத்தச் செலவில், குறைந்தபட்சம் 25 சதவீதம் என்ற அளவில் அதிகபட்சம் 50 லட்சம் ரூபாய் வரை மானியம் அளிக்கப்படுகிறது.மத்திய அரசு, 'கிரெடிட் லிங்க்ட் கேபிடல் சப்சிடி ஸ்கீம்' என்ற திட்டத்தின் கீழ், கரும்பு அறுவடை இயந்திரம் போன்ற குறிப்பிட்ட வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கு, குறைந்தபட்சம் 15 சதவீதம் என்ற அளவில், அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்குகிறது.
மேற்கண்ட மானியங்கள் அனைத்தும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. இந்த மானியங்களை மத்திய, மாநில அரசுகளிடமிருந்து, பெற்றுத் தரும் முகமை அமைப்பாகவும், 'டிக்' செயல்படுகிறது. இது தவிர, மூலப்பொருட்கள், ஊதியம் உள்ளிட்ட செலவினங்களைச் சமாளித்து, தொய்வின்றி தொழிலைத் தொடர உதவும் வகையில், தொழில் முனைவோருக்கு நடைமுறை மூலதனமும் வழங்கப்படுகிறது. மாநிலத்தின் வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், உணவு பதப்படுத்துதல் தொழிலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், நடப்பு 2012-13ம் நிதியாண்டில், 100 கோடி ரூபாய் கடன் வழங்கத் திட்டமிட்டுள்ளது.
சுய தொழில்:இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆண்டுதோறும், பொறியியல் மற்றும் தொழில்கல்வி பயில்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள பன்னாட்டு தொழிற்சாலைகளுக்கு, வேலைக்காக பல மாவட்டங்களிலிருந்து ஏராளமான இளைஞர்கள் வருகின்றனர்.
அப்படி வருபவர்கள், 'டிக்' அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், தாங்கள் சார்ந்த மாவட்டத்திலேயே, மேற்கண்ட தொழில்களைத் துவங்க, கடன் வழங்கப்படும். புதிய தொழில் முனைவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதன் மூலம், படித்த இளைஞர்கள் சுயதொழில் செய்து, சொந்தக் காலில் நிற்க வழி ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- வீ.அரிகரசுதன் -
Thanxs:http://www.dinamalar.com/business/news_details.asp?News_id=20106&cat=1

Wednesday, March 13, 2013

மொய் கவரில் ஒளிந்திருக்கிறது உங்களுக்கான வருமானம்!




xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

































கல்யாணமோ, காதுகுத்தோ... பார்த்துப் பார்த்து அன்பளிப்பு வாங்கித் தருவது சிலரது வழக்கம்; ‘‘அதுக்கெல்லாம் பொறுமையும் இல்லை. நேரமும்  இல்லை. ஒரு கவர்ல பணத்தை வச்சுக் கொடுத்துட்டா, தேவையானதை அவங்களே வாங்கிக்கட்டும்’’ என்கிறவர்கள் இன்னொரு ரகம்.

நீங்கள் இரண்டாவது ரகமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்... அன்பளிப்பு கொடுக்கும்போது, உள்ளே இருக்கிற பொருளின் மதிப்பு தெரியாதபடி  அதை அழகாக ‘கிஃப்ட் பேக்’ செய்து ஆடம்பரமாகத்தானே கொடுப்போம். பணமாகக் கொடுக்கும்போது மட்டும், கையில் கிடைத்த ஏதோ ஒரு கவரில்  ஏன் போட்டுத் தர வேண்டும்?

ஒவ்வொரு விசேஷத்துக்கும் பொருத்தமாக, வித்தியாசமான மொய் கவர்கள் இப்போது பிரபலமாக ஆரம்பித்திருக்கின்றன. டிசைனர் மொய் கவர்  தயாரிப்பதில் வருடம் முழுக்க பிசியாக இருக்கிறார்  ‘‘வட இந்தியாவுல இந்தப் பழக்கம் ரொம்ப காலமாவே  இருக்கு. நம்மூருக்கு இது புதுசு. பிறந்த குழந்தைக்கு பணம் கொடுக்கணும்னா, தொட்டில் அல்லது ஃபீடிங் பாட்டில் ஷேப்; குட்டிப் பசங்களுக்குன்னா  கார்ட்டூன், பென்சில் பாக்ஸ், பேனா, ஐஸ்கிரீம், சாக்லெட் ஷேப்; கிரகப்பிரவேசத்துக்குன்னா வீடு வடிவத்துல...

இன்னும் இப்படி உங்க கற்பனைக்கேத்தபடி எந்த ஷேப்லயும் இந்த கவர்களை பண்ணலாம். ஹேண்ட்மேட் பேப்பர், துணி, கலர் கலரான சார்ட் பேப்பர்,  கிஃப்ட் பேப்பர், சாட்டின் ரிப்பன், குந்தன் கல், கண்ணாடி, 3டி லைனர், ஜரிகை, விதம்விதமான பன்ச்சிங் மெஷின், பசை... இப்படி இதை செய்யத்  தேவையான எல்லாப் பொருள்களுமே சுலபமா கிடைக்கும்.

எல்லா மாடல்களுக்கும் அளவு இருக்கும். அதை வச்சு அதைவிடப் பெரிசாகவோ, சின்னதாகவோ பண்ணிக்கலாம். ஒரு நாளைக்கு 15 முதல் 20  கவர்கள் பண்ணலாம். ஸ்டேஷனரி கடைகள், அன்பளிப்புப் பொருள்கள் விற்கிற கடைகள், கல்யாணப் பத்திரிகை, கல்யாணப் பரிசுகள் விற்கிற  கடைகள்ல ஆர்டர் எடுக்கலாம். மாடல் மற்றும் வேலைப்பாடுகளைப் பொறுத்து, ஒரு கவர் 15 ரூபாய்லேருந்து விற்கலாம். அதிகபட்சமா 50 ரூபாய்,  75 ரூபாய்க்குக் கூட கவர்கள் உண்டு. வருஷத்துல எல்லா நாளும் வாய்ப்பு இருக்கிற பிசினஸ் இது’’  மொய் கவரில்  ஒளிந்திருக்கிறது உங்களுக்கான வருமானம்!



Wednesday, March 6, 2013

இலவச பயிற்சிக்கு அழைப்பு


ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் வரும் 11ம் தேதியில் இருந்து, மென் பொம்மைகள் தயாரிக்கும் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
நிலைய இயக்குநர் நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஊட்டி சேரிங்கிராஸ் கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில், வரும் 11ம் தேதியில் இருந்து 15 நாட்களுக்கு, இலவச மென் பொம்மைகள் தயாரித்தல் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 6ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்; 18 முதல் 45 வயதிற்குள் இருத்தல் வேண்டும்; பயிற்சி காலத்தில் உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்பும் நபர்கள் தங்களது பெயர், முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை வெள்ளைதாளில் எழுதி, "கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், 8/10 யு.எஸ்.எஸ்.எஸ்., வளாகம், சேரிங்கிராஸ், ஊட்டி' என்ற முகவரிக்கு தபாலிலோ, நேரிலோ அனுப்ப வேண்டும். பயிற்சி விபரங்களுக்கு 9894025993 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு, நடராஜன் கூறியுள்ளார்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites