இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, November 12, 2011

கவரிங் செயின் தயாரிப்பது எப்படி

உற்பத்தி செய்யப்படும் கவரிங் செயினை கோல்டு கவரிங் கடைக்காரர்கள் ஆர்டர் கொடுத்து வாங்கிக்கொள்கின்றனர். சாதாரணமாக தாலிக்கயிறு அணியும் பெண்கள்கூட விழாக்களில் பங்கேற்க கவரிங் செயின் அணிகின்றனர். இதனால் பட்டறைக்கே நேரில் வந்து கவரிங் கடைக்காரர்கள் வாங்கிச்செல்கின்றனர்.
அக்டோபர் முதல் ஏப்ரல் வரை சுப காரியங்கள் அதிகளவில் நடைபெறுவதால், இக்காலங்களில் கவரிங் செயின் விற்பனை அதிகம்  இருக்கும். அதை கவனத்தில் கொண்டு உற்பத்தியை அதிகரிப்பது முக்கியம்.
 சில கவரிங் நகை கடைக்காரர்கள், தங்க கலர் பூச்சு போடாத நிலையில் செயினை வாங்கிக்கொண்டு, தாங்களே தங்கள் விருப்பத்திற்கேற்ற கலவையில் தங்க கலர் பூச்சு (மைக்ரோ கலவை) போட்டுக்கொள்கிறார்கள்.

பயிற்சி

கவரிங் நகை தயாரிப்பில் ஈடுபடுவோர், கம்பி முறுக்கு, கலவை பூச்சு, செயின் இணைப்புக்கு என தனி தனியாக பயிற்சி பெற வேண்டும். அனைத்து வேலைகளையும் 6 மாதங்களில் பழகிக்கொள்ளலாம். முழுமையாக கவரிங் நகை தயாரிப்பில் ஈடுபடாவிட்டாலும், குறிப்பிட்ட ஒரு ஜாப் ஒர்க் செய்து கொடுத்தும் சம்பாதிக்கலாம்.

முதலீடு

முதலீட்டு செலவு ரூ.26 ஆயிரம். ஒரு மாத உற்பத்தி செலவு ரூ.80,000. மொத்தம் ரூ.1.06 லட்சம் தேவை.
செலவு: ஒரு கவரிங் செயின் (24 இஞ்ச்) உற்பத்தி செய்ய பொருட்கள் மற்றும் கூலிச்செலவு உள்பட ரூ.52 செலவாகிறது. ஒரு நாளில் 5 பேர் மூலம் 50 செயின் தயாரிக்கலாம். ஒரு நாள் உற்பத்தி செலவு ரூ.2,600. 25 நாளில் 1250 செயின் தயாரிக்கலாம். மொத்த உற்பத்தி செலவு ரூ.65,000.

வருவாய்: ஒரு செயின் ரூ.72 வரை விற்பனையாகிறது. மாதவருவாய் ரூ.90,000. லாபம் ரூ.25 ஆயிரம்.
கிடைக்கும் இடங்கள் : இயந்திரங்களை லேத்களில் ஆர்டர் கொடுத்தால் வடிவமைத்து தருவார்கள். அல்லது ரெடிமேடாக கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கிடைக்கிறது. உற்பத்தி பொருட்கள் பெரும்பாலானவை சிறு நகரங்களில்கூட கிடைக்கிறது. சில பொருட்கள் மட்டும் கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் பெற வேண்டும்.

பாதுகாப்பானது

செயின் பறிப்பு சம்பவங்கள் அன்றாட நிகழ்வாகி விட்டது. 5 பவுனில் ஒரு செயின் பறிபோனால் ரூ.1 லட்சம் வரை இழப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க கவரிங் தாலி செயின்கள் அணியலாம். பறிபோனாலும் அதிகபட்சம் ரூ.500க்கு மேல் இழப்பு வராது. கவரிங் செயின்களை 6 மாதத்திற்கு ஒரு முறை பாலிஷ் போட்டு அணிந்தால், புதுப்பொலிவுடன் தங்கத்தை போல் காட்சியளிக்கும்.
கவரிங் செயின் தயாரிப்பது எப்படி?
நூல்இழை போல உள்ள காப்பர் கம்பியை புளோயிங் மெஷினில் மாட்டி சுற்ற வேண்டும். காப்பர் கம்பி ஸ்பிரிங் (முறுக்கு) போல வரும். அதை பிரஸ் மெஷினில் பொருத்தி, ஸ்பிரிங்கில் உள்ள ஒவ்வொரு வளையத்தையும் தனித்தனியாக துண்டாக்கி எடுக்க வேண்டும். வளையத்தின் துளை வழியாக ‘சென்ட்ரிங் நூலிழை கம்பி’யை கொடுத்து கயிறு போல முறுக்கினால் செயின் வரும். அதை இரும்பு பலகையில் வைத்து தேய்த்தால் இறுக்கமடையும்
பின்னர் அதை தொங்கவிட்டு, ஏற்கனவே கலக்கப்பட்ட வெள்ளி ஈயப் பொடி, பித்தளை பொடி, வெங்கார பொடி  கலவையை செயினில் உள்ள இடைவெளிகளில் பிரஷ் மூலம் தடவ  வேண்டும். கேஸ் வெல்டிங் செய்வது போல் தீயில் பழுக்க வைத்தால் செயின் முழுமையடையும். பின்னர் அதன்மீது தங்கமுலாம் பூசி, கொக்கி மாட்டினால் கவரிங் தாலி செயின் ரெடி.
தேவைப்படும் பொருட்கள் : காப்பர் அல்லது கலாய் கம்பி(ஜிஐ வயரில் உள்ளது), சென்ட்ரிங் கம்பி(சன்னமானது), வெள்ளி ஈய பொடி, பித்தளை மிக்சிங் பொடி , வெங்காரம் பொடி, தங்க முலாம் பூச்சு கலவை. தளவாட பொருட்கள்: வீட்டில் ஒரு சின்ன அறை போதும். புளோயிங் மெஷின் (ரூ.2500), பிரஸ் மெஷின்(ரூ.15 ஆயிரம்.),  இரும்பு பலகை (ரூ.1500), கேஸ் சிலிண்டர் இணைப்பு ரூ.5000. டை, டை கத்தி ரூ.2000.

கவரிங் தாலி செயின்.. கலக்கல் வருமானம்
கு.நடராஜன் : தங்கத்தில் தாலிக்கொடி என்பது ஏழை பெண்களின் கனவு. அது இயலாதபோது கைகொடுக்கிறது கவரிங் தாலி செயின். இதை தயாரித்து விற்றால் லாபமும் உண்டு. மன நிறைவாகவும் இருக்கும் என்கிறார் கோவை நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த சுவாமிநாதன். அவர் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் ஒர்க்ஷாப்பில் பணிபுரிந்தேன். வருமானம் போதவில்லை. கோவையில் எனது அண்ணன் கவரிங் தாலி செயின் தயாரித்து விற்று வந்தார். அவரிடம் வேலைக்கு சேர்ந்தேன். கவரிங் செய்ய கற்றுக்கொண்டேன். பின்னர் தனியாக தொழில் துவங்கினேன். எனது மனைவி, மகள் என குடும்பமே இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோம்.
தாலிக்குகூட தங்கம் வாங்க இயலாத ஏழைகளுக்கு ஆறுதலாக விளங்குவது கவரிங் தாலி செயின்கள். தங்கத்தில் தாலிக்கொடி இருந்தாலும் அவசர செலவுக்காக அடகுவைக்கும்போதும், கவரிங் தாலிக் கொடி நகைகள் கை கொடுக் கின்றன. இவற்றை தயாரிப்பது கோவையில் குடிசை தொழி லாக நடந்து வருகின்றன.

இங்கு 40க்கும் மேற்பட்ட வீடுகளில் இத்தொழில் நடக்கிறது. கவரிங் தாலி செயினில் முறுக்கு மாடலையே அதிகம் அணிகின்றனர். அதை மட்டுமே செய்வதால் நிரந்தர கிராக்கி உள்ளது. இதை தயாரிக்க படிப்படியாக பல்வேறு வேலைகள் உள்ளன. அவற்றை கவனத்துடன் செய்தால் தரமானதாக உருவாக்க முடியும்.  கவரிங் செயின் தயாரிக்க முதல் நிலையில் இருந்து கடைசி நிலை வரை ஒரே இடத்தில் செய்யலாம் அல்லது ஒவ்வொரு நிலைக்கும் ஜாப்ஒர்க் செய்து கொடுக்க தனித்தனி ஆட்கள் இருக்கிறார்கள். அங்கு கொடுத்து, வாங்கியும் முழுமைப்படுத்தலாம். ஒரே இடத்தில் செய்தால் லாபம் அதிகம் கிடைக்கும். இத்தொழிலை செய்ய 6 மாதமாவது கவரிங் நகை பட்டறைகளில் பணிபுரிய வேண்டும். அப்போது தான் கற்றுக்கொள்ள முடியும். பின்னர் தயாரிப்பில் ஈடுபட்டால் லாபகரமாக இருக்கும்.
Thnxs: படங்கள் : வே.பேச்சிக்குமார்

9 comments:

i want training your company Christel only please given your address u ill sent add from email
(advmuthukrishnan@yohoo,com)

i want training your company Christel only please given your address u ill sent add from email
(advmuthukrishnan@yohoo,com)

தாங்கள் வருகைக்கு நன்றி ,

hai....pls ur address and contuct number.....
my num 9962023055...so pls contacut...in cheenai

pls ur details ..and contacut num...my num 99620 23055

i want training your company Christel only please given your address u ill sent add from email
(mydeen222@gmail.com)

தாங்கள் வருகைக்கு நன்றி .இது என்னுடைய கம்பெனி அல்ல இது போன்று பல தொழில் உள்ளது என்று எடுத்து காட்ட இந்த கட்டுரை .

i want training your company Christel only please given your address u ill sent add from email
(mydeen222@gmail.com)pls call from address...9944661741

hi sir :

really very good article this, thanks you very much, but i have one doubt about this, where i will learn this what is course fees,

thanks

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites