இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label சூப்பர் டிப்ஸ். Show all posts
Showing posts with label சூப்பர் டிப்ஸ். Show all posts

Sunday, September 1, 2013

எளிய பயிற்சிகள்... எக்கச்சக்க வருமானம்

நிறைய படித்தால்தான் நிறைய சம்பாதிக்க முடியும் என்றில்லை. எளிய பயிற்சிகள் மூலம் எக்கச்சக்கமாக சம்பாதிக்கும் வழிகள் இருக்கவே செய்கின்றன. இந்த வகை பயிற்சிகள் பார்ப்பதற்கு எளிமையானதாக இருப்பதால், நமக்கு அவற்றின் மீது அதிக ஈர்ப்பு இருப்பதில்லை. என்றாலும், இந்தப் பயிற்சிகளை கற்றுக்கொண்டால், சிறிய முதலீட்டில் ஏகப்பட்ட பணம் சம்பாதிக்க முடியும் என்பது உறுதி. அப்படிப்பட்ட ஐந்து பயிற்சிகளை நாணயம் விகடன் வாசகர்களின் பார்வைக்கு முன்வைக்கிறோம். இந்தப் பயிற்சிகளை சென்னையில் உள்ள மைக்ரோ, ஸ்மால் அண்ட் மீடியம் என்டர்பிரைசஸிடம் (MSME) பெறலாம்.



Thanks!!!:vikatan

Thursday, October 4, 2012

செடிகளுக்கான உரங்கள் வீட்டிலேயே இருக்கு


வீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்கள், செடிக்கு தேவையான உரம் மிகவும் விலைமதிப்புள்ளது என்று நினைக்கின்றனர். அதற்காக அவர்கள் கடைகளில் அதிக விலைக் கொடுத்து, உரங்களை வாங்கி செடிகளுக்கு போடுகின்றனர். ஆனால் உண்மையில் செடிகளுக்கான உரத்தை அதிக செலவு செய்து, உரத்தை வாங்கி போடுவதை விட, வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே செடிக்களுக்கு உரத்தை போடலாம். அது என்னவென்று சற்று படித்துத் தெரிந்து கொள்ளுங்களேன்...
வீட்டில் இருக்கும் செடிகளுக்கான உரங்கள்...
மருந்துகள் : நிறைய வீட்டில் முதலுதவிக்காக ஒரு பெரிய பெட்டியில் மாத்திரைகளை வாங்கி வைத்திருப்பார்கள். அவ்வாறு வாங்கி வைத்திருக்கும் மாத்திரைகளில், ஒருசில மாத்திரைகளின் பயன்படுத்தும் தேதி முடிந்திருக்கும். அத்தகைய மாத்திரைகளை தூக்கிப் போடாமல், அவற்றை சேகரித்து, பொடி செய்து செடிகளுக்குப் போட்டால், செடிகள் நன்கு செழிப்பாக வளரும். ஏனெனில் அந்த மாத்திரைகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு ஆரோக்கியத்தை தந்து, செழிப்புடன் வளரச் செய்யும்.
டீ இலைகள் : தினமும் காலையில் மற்றும் மாலையில் தவறாமல் டீ குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும். அவ்வாறு வீட்டில் டீ போட்டால், அதன் இலைகளை குப்பைத் தொட்டியில் தூக்கிப் போட்டுவிடுவோம். ஆனால் அவற்றை தூக்கிப் போடாமல், அதனை செடிகளுக்கு போட்டால், செடிகள் நன்கு வளரும். முக்கியமாக அவ்வாறு தூக்கிப் போடும் போது, அந்த டீ இலைகள் சூடாக இல்லாமல் இருக்க வேண்டும். இல்லையெனில் செடிகள் வாடிவிடும்.
காய்கறிகளின் தோல்கள் : அனைத்து வீடுகளிலும் சமையலில் தினமும் காய்கறிகளைப் பயன்படுத்துவோம். அவ்வாறு பயன்படுத்தும் காய்கறிகளின் தோல்களை கண்டிப்பாக தூக்கிப் போடத்தான் செய்வோம். ஆனால் தற்போது அந்த காய்கறிகளின் தோல்களை தூக்கிப் போடாமல், அவற்றை செடிகளுக்கு போட்டால் செடிகள், அந்த தோலில் இருக்கும் சத்துக்களை உறிஞ்சி ஆரோக்கியமாக வளரும். இந்த காய்கறிகளின் தோல்கள் செடிகளுக்கு சிறந்த ஒரு வகையான கரிம உரமாகும்.
சாதத்தின் தண்ணீர் : சாதம் ஒரு தானிய வகையைச் சேர்ந்தது. இந்த சாதம் அரிசியாக இருக்கும் போது அதில் அளவுக்கு அதிகமான வைட்டமின்கள் இருக்கும். ஆனால் அவற்றை சாதமாக செய்யும் போது, தண்ணீரில் ஊற வைத்து, கழுவும் போது அந்த சத்துக்களை நாம் இழக்கிறோம். அவ்வாறு கழுவும் நீரினை வெளியே ஊற்றிவிடாமல், அவற்றை செடிகளுக்கு ஊற்றினால், அந்த அரிசியில் இருக்கும் சத்துக்கள், செடிகளுக்குச் செல்லும். இதனால் செடிகள் அந்த சத்துக்கைளை உறிஞ்சி, நன்கு வளரும். இதுவும் ஒரு வகையான உரமாகும்.
இத்தகைய பொருட்களே செடிகளுக்கான வீட்டில் இருக்கும் சிறந்த உரங்கள். இத்தகைய உரங்களை உங்கள் வீட்டு செடிகளுக்கு போட்டு, செடிகளை செழிப்பாக வளரச் செய்யுங்கள்.

வீட்டிற்கு வேலி போடலாம்ன்னு இருக்கீங்களா? இதை படிச்சுட்டு போடுங்க


தனியாக இருக்கும் வீட்டிற்கு பாதுகாப்பு என்றால் அது வேலி அமைப்பது தான். ஏனெனில் அதனால் வீட்டிற்கு ஒரு நல்ல பாதுகாப்பு கிடைப்பதோடு, வீட்டிற்கு ஒரு வித அழகும் தருகிறது. ஆகலே அவ்வாறு வீட்டிற்கு வேலி அமைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், செயற்கையாக செய்து கடைகளில் விற்பதை வாங்கி அமைப்பதை விட, அதற்காக இருக்கும் செடிகளை வாங்கி வளர்த்தால், வீட்டிற்கு பாதுகாப்பை தருவதோடு, ஆக்ஸிஜனும் கிடைத்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். இப்போது அத்தகைய வேலியை அமைக்க எந்த மரத்தையெல்லாம் வைத்தால் நல்லது என்பதைப் பார்ப்போமா!!!
Light on

மூங்கில்

வீட்டில் பாதுகாப்பிற்கு வளர்க்கும் செடிகளில் மூங்கில் மிகவும் சிறந்த செடி. இந்த செடியை வீட்டிற்கு உள்ளே குறைந்த சூரிய வெளிச்சத்தில், மண் இல்லாமலும் வளரக்கூடியது. ஆனால் மூங்கில் உள்ள ஒரு வகையான செடிக்கு தண்டு பகுதி மிகவும் தடிமனாக, வேலி அமைக்க ஏற்றதாக உள்ளது. இந்த செடியை எளிதில் உடைக்கவோ, வெட்டவோ முடியாது. மேலும் இந்த மூங்கில் ஆசியாவில் பல முக்கிய இடங்கில் வேலியாக அமைக்கப்பட்டுள்ளது.

மூங்கில்
வீட்டில் பாதுகாப்பிற்கு வளர்க்கும் செடிகளில் மூங்கில் மிகவும் சிறந்த செடி. இந்த செடியை வீட்டிற்கு உள்ளே குறைந்த சூரிய வெளிச்சத்தில், மண் இல்லாமலும் வளரக்கூடியது. ஆனால் மூங்கில் உள்ள ஒரு வகையான செடிக்கு தண்டு பகுதி மிகவும் தடிமனாக, வேலி அமைக்க ஏற்றதாக உள்ளது. இந்த செடியை எளிதில் உடைக்கவோ, வெட்டவோ முடியாது. மேலும் இந்த மூங்கில் ஆசியாவில் பல முக்கிய இடங்கில் வேலியாக அமைக்கப்பட்டுள்ளது.
ஜப்பானீஸ் ஹோலி
ஹோலி மரங்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஜப்பானீஸ் ஹோலி வீட்டிற்கு வேலி அமைக்கப் பயன்படுகிறது. ஏனெனில் இதன் தண்டுகள் மிகவும் நெருக்கமாக இருப்பதால், அது வீட்டிற்கு பாதுகாப்பு தருவதற்கு ஏற்ற ஒரு சிறந்த மரம். இந்த ஹோலி வகைகளில் இந்த வகை மிகவும் உயரமாக வளர்வதால், இது வீட்டில் வேலி அமைப்பதற்கு ஏற்றது.
இங்கிலிஷ் ஐவி (படர்க்கொடி)
இங்கிலிஷ் ஐவி மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது. அது பொதுவாக சுவர்களில் வளரக்கூடியது. இதனை வீட்டைச் சுற்றிக் கட்டப்படும் சுவர்களின் மேல் வளர வைத்தால், சிறந்த பாதுகாப்பானதாக இருக்கும். அதிலும் இங்கிலிஷ் ஐவியில் வீட்டில் வளர்ப்பதற்கு என்று ஒரு வகை உள்ளது. இதில் விஷத்தன்மை இல்லாமல் இருக்கும். ஏனெனில் வீட்டில் குழந்தைகள் இருப்பார்கள், ஆகவே விஷத்தன்மை இருப்பதை வைத்தால், உயிருக்குத் தான் பாதிப்பு ஏற்படும். மேலும் இந்த வீட்டில் வளர்க்கக்கூடிய இங்கிலிஷ் ஐவி, வேகமாக வளரக்கூடியது.
அமெரிக்கன் ஹோலி
இந்த வகையான ஹோலி மரம் மிகவும் உயரமாக வளரக்கூடியது அல்ல. இருப்பினும் ஓரளவு உயரத்திற்கு வளரும் ஒரு குறுந்தாவரம் தான். இந்த செடி தன் நெருக்கமான இலைகளால் பாதுகாப்பைத் தருகிறது. ஆகவே இத்தகைய செடியை வீட்டில் வேலியாக வைத்தால், இதன் இலைகளை அடிக்கடி வெட்ட வேண்டும். இல்லையென்றால் புதர் போன்று வளர்ந்து, பின் விலங்குகள் அனைத்தும் தங்கும் இருப்பிடமாகிவிடும்.
ஃப்ர்ன்ஸ்
ஃப்ர்ன்ஸ் என்னும் செடி அடர்ந்த இலைகளைக் கொண்டு, வேலியாக பயன்படுகிறது. இதிலும் பல வகைகள் உள்ளன. அந்த வகைகளில் மிகவும் உயரமாக வளரக்கூடியதை வீட்டு வேலிக்குப் பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் ஃப்ர்ன்ஸ் வகைகளில் பாஸ்டன் ஃப்ர்ன்ஸ் என்னும் வகையைத் தான் வேலிக்குப் பயன்படுத்துவார்கள். ஏனெனில் இது ஒரு குறுந்தாவரம். இதனையும் வீட்டுச்சுவர்களின் மேல் வளர்த்தால், நன்கு பசுமையாக காட்சியளிப்பதோடு, வீட்டிற்கு பாதுகாப்பாகவும் இருக்கும்.
க்ளிமேடிஸ்
இயற்கை வேலி அமைக்கும் போது பச்சையாக இருந்தால் தான் நன்றாக இருக்கும். ஆனால் அவற்றில் ஒரு சில நிறங்களில் அமைத்தால் கூட நன்றாக கண்ணைப் பறிக்கும் வகையில் அழகாக இருக்கும். கொடிகளில் பூக்கும் பூக்களாலும் வேலிகளை அமைக்கலாம். இவற்றால் சரியான பாதுகாப்பு இல்லாவிட்டாலும், வேலியை மிகவும் அழகுள்ளதாக மாற்றும். அதிலும் இதனை மூங்கிலின் மீது படர விட்டால், மிகவும் அருமையாக இருக்கும். அதற்கு க்ளிமேடிஸ் என்னும் மலர் கொடி தான் சிறந்தது. இந்த கொடி ஊதா நிறத்தில் பூக்களை பூக்கும்.
ஆகவே மேற்கூறிய செடிகளை வைத்து வேலியை அமைத்து, வீட்டை அழகாக்குங்கள். மேலும் உங்களுக்கு வேறு எந்த செடிகளை வைத்து வேலி அமைக்கலாம் என்று தெரிந்தாலும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

புது வீட்டுக்கு போறீங்களா? முதல்ல சுத்தம் பண்ணுங்க..


வீட்டை மாற்றுவது என்பது மிகவும் கடினமாக விஷயம். அதிலும் வீட்டுப் பொருட்களை எடுத்துக் கொண்டு செல்வது என்பது அதைவிட கடினமானது. அதிலும் வீட்டை 2-3 தடவை மாற்றயவர்களுக்குத் தெரியும், அது எவ்வளவு பெரிய விஷயம் என்பது. அவ்வாறு மாறும் போது வீட்டில் உள்ள பொருட்களை முதலில் பேக் செய்து, அதனை புது வீட்டிற்கு கொண்டு செல்வது என்பது மட்டும் தான் என்று தெரியும். ஆனால் அவ்வாறு பொருட்களை புது வீட்டிற்கு கொண்டு செல்லும் முன், அந்த புதுவீட்டை முதலில் சுத்தம் செய்ய வேண்டும். மேலும் இப்போதுஅந்த புது வீட்டில் எந்த இடத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி, வீட்டை மாற்றும் முன் தெரிந்து கொள்ளுங்களேன்...
Light on

கதவுகள் மற்றும் ஜன்னல்கள்

புது வீட்டிற்கு செல்லும் முன் முதலில் கதவுகள் மற்றும் ஜன்னல்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும், ஏனெனில் ஜன்னல் மற்றும் கதவுகளில் சிலந்தி வலைகள் மற்றும் தூசிகள் அதிகம் இருக்கும். அதிலும் புதிய வீடு நிறைய நாட்கள் பூட்டியிருந்தது என்றால், அப்போது சோப்பு நீரை வைத்து கSHARE THIS STORY

கதவுகள் மற்றும் ஜன்னல்கள்: புது வீட்டிற்கு செல்லும் முன் முதலில் கதவுகள் மற்றும் ஜன்னல்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும், ஏனெனில் ஜன்னல் மற்றும் கதவுகளில் சிலந்தி வலைகள் மற்றும் தூசிகள் அதிகம் இருக்கும். அதிலும் புதிய வீடு நிறைய நாட்கள் பூட்டியிருந்தது என்றால், அப்போது சோப்பு நீரை வைத்து கழுவ வேண்டும். கண்ணாடி ஜன்னல்கள் அல்லது கதவுகள் என்றால், அப்போது சோப்பு நீரை வைத்து கழுவியதும், மென்மையான துணியை வைத்து சுத்தமாக துடைத்துவிட வேண்டும்.
அறைகள் மற்றும் ஷெல்ப்கள்: புதிய வீடுகள் மாற்றும் போது சிலவீடுகளில் ஷோபாக்களோடு இருக்கும். அப்போது அந்த ஷோபாக்களை நிறைய பேர் பயன்படுத்தியிருப்பார்கள். எனவே அத்தகையவற்றை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். அதிலும் அந்த ஷோபாக்கள் நகரக்கூடியதாய் இருந்தால், அவற்றை 2-3 மணிநேரம் வெயிலில் வைத்து எடுத்தால், அதில் உள்ள பாக்டீரியா மற்றும் இதர கிருமிகள் இறந்துவிடும். மேலும் ஷெல்ப்களில் பொருட்களை வைக்கும் முன், பேப்பரை வைத்து, அதன் மேல் பொருட்களை வைக்க வேண்டும். வேண்டுமென்றால் சிறிது இரசக் கற்பூரத்தை மூலைகளில் வைத்தால், பூச்சிகள் வராமல் இருக்கும்.
தரைகள்: தரைகளில் உள்ள அழுக்குகளை நீக்க, நீரில் சிறிது எலுமிச்சை சாறு அல்லது பேக்கிங் சோடாவை கலந்து, சுத்தம் செய்ய வேண்டும். முக்கியமாக புது வீட்டிற்கு வந்ததும், அடிக்கடி பேக்கிங் சோடாவை வைத்து சுத்தம் செய்ய வேண்டாம். அதற்கு பதிலாக சிறிது வெள்ளை வினிகரை கலந்து வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்தால் நல்லது.
* குளியலறை: உடல் ஆரோக்கியமாக இருக்க, முதலில் குளியலறை மற்றும் கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு முன்னாடியே சுத்தம் செய்வது நல்லது. அதிலும் கரப்பான் பூச்சி கொல்லி, எறும்புக் கொல்லிகளைப் பயன்படுத்தி சுத்தம் செய்தால், எந்த பூச்சியும் வராமல் தடுக்கலாம். மேலும் சுத்தம் செய்தபின் ரூம் ப்ரஸ்னரைப் பயன்படுத்துவது நல்லது. அவ்வாறு தெளித்தால், மறுநாள் அந்த அறையை திறக்கும் போது, ஒரு நல்ல மணத்தோடு இருக்கும்.
ரூம் ப்ரஸ்னர்: வீட்டை முழுவதும் சத்தம் செய்த பின்னர், வீட்டை மூடும் முன்பு, ஏதேனும் ரூம் ப்ரஸ்னரை தெளிக்க வேண்டும். இதனால் மறுநாள் வீட்டை திறந்தால், நன்கு வாசனையுடன் இருக்கும். இதனால் அந்த வீடு மிகவும் விருப்பமுடையாகிவிடும்.

Sunday, July 1, 2012

பெட்ரூமை ஜில்லுனு டெகரேட் பண்ணுங்க

கோடையில் வீட்டிற்குள் இருக்கவே முடியாது. வியர்வை, கசகசப்பு என வாட்டி எடுக்கும். பகல் முழுவதும் அடித்த வெயில் இரவில் அப்படியே இறங்கும். இதனால் உறங்கவே முடியாமல் அவஸ்தையை ஏற்படுத்திவிடும். படுக்கை அறையை குளுமையாய் அலங்கரித்தால் கோடையிலும் ஆனந்தமாய் உறங்கலாம் என்கின்றனர் உள் அலங்கார நிபுணர்கள்.

பூக்களின் டிசைன்கள்

படுக்கை அறையில் பூக்கள் டிசைன் பிரிண்ட் செய்யப்பட்ட பெட்சீட் உபயோகிக்கலாம். அதேபோல் சுவர்களில் மென்மையான நிறங்களை பூசலாம். இதனால் கோடையில் இதமான சூழ்நிலை ஏற்படும்.

பருத்தி திரை சீலைகள்

கோடை காலத்தில் மாலை நேரத்தில் இதமான தென்றல் காற்று வீசும். பருத்தி துணிகளால் ஆன வர்ணமயமான திரைச்சீலைகளை உபயோகிக்கலாம். காலையில் கொஞ்சம் சூரிய ஒளி படுக்கை அறையில் விழவேண்டும். அப்பொழுதுதான் பாக்டீரியாக்கள் அழியும். ஆனால் மாலையில் குளுமை தரும் வகையில் வெப்பத்தை வடிகட்டும் திரைச்சீலைகளை போடவேண்டும். ஆரஞ்சு, மஞ்சள், எலுமிச்சை நிறங்கள் வெப்பத்தை அதிக வெப்பத்தை வெளியேற்றிவிடும்.
வெளிர் நிற தலையணை உறைகள், படுக்கை உறைகளை உபயோகிக்க வேண்டும். மாலை நேரத்தில் மெல்லிய துணிகளை நனைத்து பெட்ரூம் ஜன்னலில் விரித்து விடலாம். இதனால் குளிர்ந்த காற்று அறைக்குள் ஊடுருவும். படுக்கைக்கு முன்னதாக காட்டன் மேட் போட்டு வைக்கலாம். இதனால் வெப்பத்தை அது உறிஞ்சி கொள்ளும். தரைகளில் காலி இடங்களில் காட்டன் கார்பெட் உபயோகிப்பதும் நல்லது

 

Friday, June 15, 2012

சூப்பர் டிப்ஸ்,

மாதச் சம்பளம் முப்பதாயிரம் ரூபாய் கிடைத்தாலும் பார்ட் டைமாக ஏதாவது ஒரு தொழில் செய்து இன்னும் சில ஆயிரங்களைச் சம்பாதித்தால்தான் குடும்பத்தின் பல்வேறு தேவைகளை நிறைவேற்ற முடியும் என்கிற நிலை இப்போது பலருக்கும்.
ரு நாளைக்கு அதிகபட்சமாக இரண்டு முதல் மூன்று மணி நேர வேலை, பத்தாயிரத்திலிருந்து இருபதாயிரம் ரூபாய்க்குள் முதலீடு, குறைந்தபட்சம் மூவாயிரத்திலிருந்து ஐந்தாயிரம் ரூபாய் வரை வருமானம் தருகிற தொழில்களை செய்வதற்கு இன்றைக்குப் பலரும் தயாராகவே இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட பல நூறு தொழில்களில் எல்லோரும் செய்யும்படியான ஆறு தொழில்களை மட்டும் இங்கே தருகிறோம். நல்ல முறையில் வருமானம் பெற வாசகர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!

எப்படிப்பட்ட தொழில்!
நகர்ப்புறம், கிராமப்புறம் என்கிற பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் தேவையாக இருப்பது துணிகள். தேவை மிகுதியாக இருப்பதால் துணி விற்பனை தொழிலுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு.
நேரம்!
அலுவலக வேலையோ, சுய தொழிலோ எதைச் செய்தாலும் நீங்கள் இந்த தொழிலைச் செய்யலாம். ஒரு நாளைக்கு 3 முதல் 5 மணி நேரம் செலவழித்தால் போதும். அதற்குமேல் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
முதலீடு!
குறைந்தபட்சம் 10,000 ரூபாய் தொடங்கி, உங்கள் முதலீட்டு வசதிக்கேற்ப இத்தொழிலைத் தொடங்கலாம். காலப் போக்கில் தொழில் வளர்ச்சிக்கேற்ப முதலீட்டை அதிகரித்துக் கொள்ளலாம்.
வருமானம்!
எல்லா செலவுகளும் போக 10 முதல் 20 சதவிகித லாபம் கிடைக்க வாய்ப்புண்டு.
கவனம்!
தரமான துணிகளை, குறைந்த விலையில் மொத்தமாக வாங்கி, அதிக விலைக்கு விற்க வேண்டும். கலர், டிசைன் போன்றவற்றை கஸ்டமர்கள் விரும்புகிற மாதிரி தேர்வு செய்ய வேண்டும். கஸ்டமர்கள் தவணை முறையில் கேட்டால், கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.
பாசிட்டிவ்!
அடிப்படைத் தேவை என்பதால் மக்கள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும். கெட்டுப் போகாத சரக்கு என்பதால் சில மாதங்களுக்கு வைத்துகூட விற்கலாம்.

Monday, March 12, 2012

எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி

தேர்வு பயத்தினால் ஹார்மோன்க ளின் திண்டாட்டம் டென்ஷனை உண்டாக்கும். அந்த டென்ஷன்  பல வழிகளில் வெளிப்படும். மறதி, சோர்வு, மன அழுத்தம், படபடப்பு என பல வடிவங்களில் பாடாய் படுத்தும். தேர்வுக்காக விடிய விடிய தூக்கம் கெட்டுப் படித்தல் மற்றும் போதுமான சத்துணவு எடுத்துக் கொள்ளாமல் விடுவது போன்ற காரணங்களால் படித்ததையெல்லாம் மறக்கும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர். இதுபோன்ற எக்ஸாம் டென்ஷனில் இருந்து விடுபடுவதற்கான வழிகள் குறித்து விளக்குகிறார் உளவியல் நிபுணர் தேவிப்பிரியா. தேர்வு பயம் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. அதிக  மதிப்பெண் பெற வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் நம்மால் முடியுமா என்ற சந்தேகத்தால் எதிர்மறை எண்ணங்கள், தன்னம்பிக்கை இழத்தல் போன்ற மனச்சிக்கலுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர். பெற்றோரின் அதீத எதிர்பார்ப்புகள் குழந்தைகள் மீது திணிக்கப்பட்டு மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இதுபோன்ற தொந்தரவுகளால் குழந்தைகள் எதையும் முழுமையான ஈடுபாட்டுடன் படிக்க முடியாமல் போகிறது. கஷ்டப்பட்டு படித்திருந்தாலும் எழுத முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பெற்றோர் குழந்தைகளிடம் தன்னம்பிக்கை ஏற்படும் வகையில் பேச வேண்டும். நம்பிக்கையான சூழலை உருவாக்க வேண்டும். ஆசிரியர் மற்றும் மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவதுடன் எதிர்கால லட்சியம் பற்றியும் கோடிட்டுக் காட்டிவிட்டால் குழந்தைகள் இது போன்ற குழப்பங்கள் எதுவும் இன்றி தேர்வுக்கு தயாராக முடியும்.ர்வு பயத்தை கண்டுகொள்ளாமல் விட்டால் குழந்தைகள் மனச்சோர்வு மற்றும் எரிச்சலை வெளிப்படுத்துவார்கள். சாப்பிடுவது உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகளில் அக்கறையின்றி இருப் பது, தூக்கமின்மை, முதுகுவலி, தலை வலி உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தசை இறுக்கம், கவனக்குறைவு, படபடப்பு, வயிற்று போக்கு, படிப்பில் ஈடுபாடு குறைதல் போன்ற தொல்லைகளும் உண்டாகும். இதனால் சத்துள்ள ஆகாரம் இல்லாமல் உடல் பலவீனம் அடையும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். குழந்தைகள் குறித்த நேரத்துக்கு தூங்கி, சத்தான உணவுகள் எடுத்துக் கொள்ள பெற்றோர் உதவ வேண்டும். தேர்வு பயம் குழந்தைகளுக்கு அதிகரிக்கும் பட்சத்தில் உளவியல் நிபுணரிடம் ஆலோசனை பெறுவதன் மூலம் தீர்வு காணலாம். மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சி, தியானம் மற்றும் சரியான உணவு முறையை கடைபிடிப்பதன் மூலம் படிப்பின் மீது கவனத்தைத் திருப்பலாம். தேர்வு நேரத்தில் உண்டாகும் உடல் பிரச்னைகளுக்கு உடனடியாக சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். நேரம் கிடைக்கும் போது மனதுக்குப் பிடித்த விளையாட்டுகளில் ஈடுபடலாம். தொடர்ந்து பல மணி நேரம் படிப்பதற்கு பதிலாக இடையில் ரிலாக்ஸ் செய்யலாம்.

பாதுகாப்பு முறை: கடினமான பாடங்களை முதலில் படித்தல், மனதில் பதியும்படி குறிப்பெடுத்தல், கேள்விகளை வரைபடம் வரைந்து நினைவில் வைத்துக் கொள்ளுதல் போன்ற யுக்திகள் உதவும். படித்தவற்றை நண்பர்களிடம் சொல்லிப் பார்த்து தவறைத் திருத்தலாம். நேரத்தை திட்டமிட்டுப் பயன்படுத்தினால் டென்ஷனை பெரிதளவில் குறைக்க முடியும். முக்கிய கேள்விகளை முதலில் படித்து முடிக்கலாம்.  படம் மற்றும் பாடங்களை கற்பனை மூலம் மனதில் நிறுத்துதல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம். படித்த விஷயங்களை குழுவாக விவாதிக்கும் போது அந்த கருத்துகள் மறக்காத வண்ணம் மனதில் பதிந்து விடும். சோர்வை நீக்கி மனதை உற்சாகமாக வைத்திருக்க சிறிய உடற்பயிற்சிகள் செய்யலாம். படிக்க நேரம் ஒதுக்குதல், எளிய யுக்திகள் மூலம் படித்தவற்றை மனதில் வைத்துக் கொள்வது மற்றும் முழுமையாக வெளிப்படுத்துவது போன்ற பயிற்சிகளை தொடர்ந்து செய்வதால் தேர்வை எந்த பயமும் இன்றி எதிர்கொள்ள முடியும். சத்தான உணவும், தன்னம்பிக்கையும் சாதனைக்கான சாவிகள். - ஸ்ரீதேவி


ரெசிபி

பிரட் புதினா சாலட்: புதினா ஒரு கப், பச்சை மிளகாய் 2, வெங்காயம் - கால் கப், கொப்பரைத் தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன் மற்றும் தேவையான உப்பு சேர்த்து சட்னி அரைத்துக் கொள்ளவும். பிரட் துண்டின் மீது புதினா சட்னி தடவி அதன் மீது வெண்ணெய் தடவிய பிரட் துண்டு வைத்து அடுத்த லேயருக்கு டொமேட்டோ கெச்சப் தடவவும். அதன் மீது வெண்ணெய் தடவிய பிரட் துண்டு வைத்து சாப்பிடலாம். இதில் உடலுக்குத் தேவையான புரதம் மற்றும் இரும்புச் சத்து கிடைக்கிறது.

முளைப்பயறு துவையல்: ஏதாவது ஒரு முளை கட்டிய பயறு அரை கப், புதினா ஒரு கட்டு, மிளகு ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுக்கவும். முளை கட்டிய பயிறை எண்ணெய்யில் வறுத்து புதினா, மிளகு, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதில் கடைசியாக ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

சோயாவடை: ஒரு கப் மைதாவை வெண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். 200 கிராம் பனீரை பொடியாக நறுக்கி வைக்கவும். உதிர்த்த ஒரு கப் பேபி கார்ன், நறுக்கிய 4 பச்சை மிளகாய், 2 டீஸ்பூன் கொத்தமல்லித் தழை, துருவிய சீஸ் 4 டீஸ்பூன், மசித்த உருளைக்கிழங்கு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். மைதாவை தனியாக கரைத்துக் வைத்துக் கொள்ளவும். உருண்டையை மைதாவில் நனைத்து பிரட் தூளில் ஒற்றி எடுத்து, எண்ணெய்யில் பொரிக்கவும். இதில் புரோட்டீன் மற்றும் தாது சத்துக்கள் உள்ளது.

டயட்

தேர்வு பயத்தால் ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றத்தால் நடத்தை மாற்றம் மற்றும் மனச்சிக்கல் உண்டாகிறது. எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பதால் சத்தான உணவையும் மாணவர்கள் தவிர்க்கின்றனர். சத்துக் குறைபாட்டின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியால் உடல்நலக் குறைபாடுகள் உண்டாகிறது. எண்ணெய்யில் பொரித்த கொழுப்பு உணவுகளை தவிர்க்கவும். காலை உணவை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். புரோட்டின் மற்றும் தாது சத்து அதிகம் உள்ள உணவுகளால் புத்திக் கூர்மை அதிகரிக்கும். காபியில் உள்ள காபின் என்ற பொருள் சிந்திக்கும் திறனைக் குறைக்கும்.  எனவே காபியை தவிர்க்கலாம். சுண்டல் வகைகள் மற்றும் முளைக்கட்டிய பயறு வகைகள் சாப்பிடலாம். தண்டுக் கீரையை சாப்பிடுவதன் மூலம் போலிக் ஆசிட் கிடைக்கிறது. இதனால் சோர்வு நீங்கி உற்சாகத்துடன் படிக்க முடியும். ஆட்டு இறைச்சி சாப்பிடலாம். இதில் இரும்பு, ஜிங்க் மற்றும் பி வைட்டமின் கிடைக்கும். மன அழுத்தம் குறையும். சுண்டக்காய்ச்சிய பாலில் புரதம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. எனவே தினமும் ஒரு கிளாஸ் பால் அருந்தலாம். வைட்டமின் பி-2 மற்றும் பி-12 சத்து கிடைக்கிறது. பாலாடைக்கட்டி மற்றும் பாதாம் ஆகியவற்றில் இருந்து பி-2 வைட்டமின், வைட்டமின் ஈ, மெக்னீசியம், ஜிங்க் ஆகிய சத்துகள் கிடைக்கிறது. செர்ரிபழம் சாப்பிடும் போது மனதுக்கு உற்சாகம் கிடைக்கிறது. எனவே மனச்சோர்வை நீக்கும் சத்தான உணவுகள் மூலம் தேர்வு பயத்தை விரட்ட முடியும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

*  கீழாநெல்லி, கரிசாலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் 10 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகும்.
*  சிறு கீரையுடன் மிளகுத்தூள், உப்பு போட்டு சமைத்து நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
*  செலரிக் கீரையுடன் திப்பிலி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
*   தக்காளி, உருளைக் கிழங்கு, வெண்டைக்காய், பாதாம் பருப்பு ஆகியவற்றை தின மும் உணவில் சேர்த்துக் கொண்டால் ஞாபகசக்தி அதிகரிக்கும்.
*  திப்பிலியை வல்லாரை சாறில் ஊற வைத்து காய வைத்து பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
*  பப்பாளிப் பழம் தினமும் சாப்பிட்டால் மறதி குறையும்.
*  புளியாரை கீரையுடன் வேப்பந்துளிர், மிளகு 3, மஞ்சள் தூள் 2 சிட்டிகை, ஆகியவற்றை சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் ரத்தம் தூய்மை அடைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* பொன்னாவரைக் கீரையின் விதையை அரைத்து சாப்பிட்டு குளிர்ந்த தண்ணீர் குடித்தால் உடல் அசதி மறைந்து புத்துணர்ச்சி கிடைக்கும்.

சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க டிப்ஸ்

பத்து மணிக்கு மேல் வெளியில் தலை காட்டவே மககள் பயப்படுகின்றனர். வெயில் மண்டையைப் பிளக்கிறது. அரை மணி நேரம் வெயிலில் செல்ல நேர்ந்தால் கண் எரிச்சல், தோல் வறட்சி, வியர்வை, உடல் சோர்வு, சிறுநீர் தொற்று என பல பிரச்னைகள் வாட்டுகிறது. இது போன்ற சங்கடங்களில் இருந்து காத்துக் கொள்ள ஆலோசனை சொல்கிறார் தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் விக்னேஷ்வரி.  வெயில் நேரத்தில் எந்தப் பாதுகாப்பும் இன்றி வெளியில் செல்வதால் வியர்வை சங்கடத்தை ஏற்படுத்தும். தோல் வறட்சி காணப்படும். மேலும் வியர்வை அதிகரிப்பால் ஏற்கனவே தோல் பகுதியில் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அரிப்பு அதிகரிக்கும். அக்குள் மற்றும் முதுகுப் பகுதியில் இந்த அரிப்பு காணப்படும். உடல் சூட்டின் காரணமாக வெயில் கொப்புளம் மற்றும் வியர்குரு போன்ற தொல்லைகள் உண்டாகும்.

உடல் இயல்பான தட்பவெப்ப நிலைகளில் தோல் வியர்வை மூலம் இயற்கையாகவே வெப்ப மாறுபாடுகளை சரி செய்து விடும். நீண்ட நேரம் அதிக வெப்பநிலையில் இருக்கும் போது உடல் வெப்பக் கட்டுப்பாட்டு செயலிழக்கிறது. இதுவே பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணம் ஆகும். கடும் வெப்பத்தின் காரணமாக வலியுடன் கூடிய வெப்பத் தசையிழுப்பு ஏற்படலாம். இதன் மூலம் உடல் உழைப்பில் ஈடுபடும் தசைகளும், வயிற்றுத் தசைகளும் பாதிக்கப்படுகின்றன. மேலும் அதிக வெப்பத்தின் காரணமாக சோர்வு அதிகரிக்கும். மயக்கம், இதயத்துடிப்பு அதிகரித்தல், ரத்த அழுத்தம் குறைதல், தோல் குளிர்ந்து சுருங்குதல் போன்ற தொல்லைகள் உண்டாகும்.  வயதானவர்கள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு வெப்பத்தாக்கு ஏற்படலாம். நீரிழப்பு, மதுப்பழக்கம், இதய நோய்கள், கடும் உடற்பயிற்சி மற்றும் சில மருந்துகளை உட்கொள்வதால் வெப்பத்தாக்கு வரும். இயல்பாகவே வியர்வை சுரப்பு குறைவாக உள்ளவர்களை இது விரைவில் தாக்கும். இதயத்துடிப்பு அதிகரித்தல், சுவாசத்தின் வேகம் அதிகரித்தல், மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தப் பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். வெப்பத்தால் ஏற்படும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு போதுமான நீர் ஆகாரம், சரியான உணவு முறை மற்றும் வெயிலில் இருந்து காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். வெயில்கால நோய்களுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

பாதுகாப்பு முறை: வெயில் நேரத்தில் வெளியில் சுற்றுவதைத் தவிர்க்கவும். வெளியில் செல்லும் போது கையில் எப்போதும் தண்ணீர் பாட்டில் இருக்கட்டும். காட்டன் உடைகள் மட்டுமே வெயிலுக்கு ஏற்றவை. குளிர் கண்ணாடிகளைப் பயன்படுத்தி கண் எரிச்சலைத் தடுக்கலாம். மூன்று முறை குளிப்பதன் மூலம் வியர்வை நாற்றத்தில் இருந்து விடுபடலாம். மேலும் பகல் 12 மணியில் இருந்து 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கலாம். காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே கடுமையாக உழைக்கலாம். எடை குறைந்த மெல்லிய உடையை தளர்வாக அணியலாம். மது மற்றும் தேநீர் குடிப்பதைத் தவிர்க்கலாம். சூடான உணவையும் தவிர்ப்பது நல்லது. தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆண்கள் வெளியில் செல்லும் போது முழுக்கை சட்டை, தொப்பி அணியலாம். வெயிலில் இருந்து தப்பிக்க குடை பயன்படுத்தலாம். பெண்கள் வாகனத்தில் செல்லும் போது வெயில்படும் இடங்களை மறைப்பது நல்லது. சன்ஸ்கிரீன் லோஷன் தடவுவதன் மூலம் தோல் கருப்பதைத் தவிர்க்கலாம். வியர்வை உற்பத்தியாகும் பகுதியில் பாக்டீரியாக்கள் செயல்புரிவதால் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மருத்துவரின் ஆலோசனைப்படி சோப் மற்றும் லோஷன் உபயோகித்து துர்நாற்றத்தை விரட்டலாம்.

ரெசிபி

குகும்பர் ரய்தா: வெள்ளரி கால் கிலோ துருவிக் கொள்ளவும். புளிக்காத கெட்டித் தயிர் இரண்டு கப், துருவிய கேரட் அரைக்கப். பொடியாக நறுக்கிய வெங்காயம் கால் கப், எலுமிச்சை ஜூஸ் ஒரு ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் தேவையான அளவு. அனைத்தையும் ஒன்றாக சேர்த்துக் கலக்கி கொத்தமல்லித் தழை தூவி சாப்பிடலாம். உணவுக்குப் பின்னர் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் வெப்ப அதிகரிப்பைத் தடுக்கும். அடிக்கடி தாகம் ஏற்படுவது தடுக்கப்படும். தோல் எரிச்சல் போன்ற வெயில் தொந்தரவுகளில் இருந்து தப்பிக்கலாம்.

சின்ன வெங்காயக் குழம்பு: சின்ன வெங்காயம் கால்கிலோ உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளிக்கரைசல் ஒரு கப். வரமிளகாய் இரண்டு, மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தூள் 1 டீஸ்பூன், வெந்தயம் ஒரு டீஸ்பூன், உப்பு, மஞ்சள் தூள் தேவையான அளவு. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை மற்றும் வறமிளகாய் சேர்த்து தாளித்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிரமாக வதக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் புளிக்கரைசல் சேர்த்து குழம்புபதத்துக்கு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கவும். சின்ன வெங்காயத்தில் ரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உள்ளது. மேலும் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும்.

சிக்கன் ஆம்லெட்: 50 கிராம் சிக்கனை மூழ்கும் அளவுக்கு தண் ணீர் விட்டு வேக வைத்து கறியை மட்டும் தனியா எடுத்து மசித் துக் கொள்ளவும். இரண்டு முட்டையில் அரை டீஸ்பூன் மிளகுத் தூள், அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், கொத்தமல்லித் தழை அரை கப், எலுமிச்சை சாறு ஒரு துளி, வெங்காயம் நறுக்கியது அரை கப், பூண்டுத் துருவல் ஒரு டீஸ்பூன் ஆகியவற்றை எடுத்துக் கொள் ளவும். முட்டையை நன்றாக அடித்த பின்னர் சிக்கன் மற்றும் அனைத்து பொருட்களையும் சேர்த்துக் கலக்கி ஆம்லெட் தயாரிக் கலாம். இப்படி செய்வதன் மூலம் சிக்கனில் இருக்கும் சூடு குறைக் கப்படுகிறது. சத்தான மற்றும் சுவையான உணவாக இருக்கும்.

டயட்
.
“தி னமும் எட்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். பழச்சாறுகள், இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரி, கொய்யா ஆகியவற்றை சாலடாக உணவுக்குப் பின்னர் எடுத்துக் கொள்ளலாம். தண்ணீர்க்காய்கள் புடலங்காய், பீர்க்கன், சுரைக்காய், கீரை வகைகள், பழ வகைகளும் சேர்த்துக் கொள்ள வேண்டும். தயிர், மோர் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். கம்பங்கூழ், கரும்புச் சாறு ஆகியவையும் அருந்தலாம்.

ஊற வைத்த வெந்தயம் அல்லது வெந்தயப் பொடி இதில் ஏதாவது ஒன்றை காலை நேரத்தில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் சூட்டைக் குறைக்கலாம். எலுமிச்சையை சாலட், ரசம் ஆகியவற்றில் பயன்படுத்தலாம். அதிக நார்ச்சத்து மற்றும் கொழுப்பு உணவுகளை தவிர்க்கவும். அதிக மசாலா, அசைவ உணவுகள் மற்றும் எண்ணெய்ப் பதார்த்தங்களைத் தவிர்ப்பது நல்லது. கீரை, வெல்லம், பேரிச்சை, பால், முட்டை, கடலைக்கொட்டை ஆகியவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் வெயிலால் இழந்த சக்தி உடலுக்கு கிடைக்கும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.


பாட்டி வைத்தியம்

*  கருவேப்பிலையைப் பொடி செய்து மிளகு, சீரகம், சுக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து சாப்பிடுவதால் வெயில் காலத்தில் உண்டாகும் மலச்சிக்கல் சரியாகும்.
*  கானாம் வாழைக் கீரையை ஒரு கைப்பிடி அளவுக்கு அரைத்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.
*  ஐந்து கிராம்பு மற்றும் 20  சீரகத்தைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் குடித்தால் உஷ்ணத்தால் ஏற்படும் தலைவலி குறையும்.
*  குப்பைக் கீரையை பருப்பில் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
*  கொத்தமல்லியை நன்றாக அரைத்து உருண்டையாக்கி வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.
*  சர்ப்பகந்தா இலையை வதக் கிச் சாறு எடுத்து காலை, மாலை இரண்டு வேளையும் பாலில் கலந்து குடித்தால் உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
*  சீரகத்தை தண்ணீரில் கொதி க்க விட்டுக் குடித்தால் ரத்த அழுத்த நோய் கட்டுப்படும்.
*  சீரகம், சுக்கு, ஏலம், நெல்லிமுள்ளி  ஆகியவற்றை சம அளவில் எடுத்துப் பொடி செய்து அதற்கு இணையாக சர்க்கரையைப் பொடி செய்து கலந்து கொள்ளவும். தினமும் காலை உணவுக்குப் பின்னர் அரை ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டினால் ஏற்படும் நோய்களைத் தடுக்கலாம்.

Monday, January 2, 2012

சூப்பர் டிப்ஸ்

81. பெயரில்லாத பிள்ளையை எப்படி அழைக்க முடியும்? எனவே, நீங்கள் தயாரிக்கும் பொருளுக்கு முதலில் தகுந்த பெயரை வைத்து விடுங்கள். அந்தப் பெயர் என்ன டிசைனில் வரவேண்டும் என்பதை தீர்மானித்த பிறகு, முறைப்படி பதிவு செய்யுங்கள். பதிவு செய்ய 3,500 ரூபாய் செலவாகும். விஷயம் தெரியாமல் ஏமாற்றுக்கார புரோக்கர்களிடம் சிக்கினால், குறைந்தது பத்தாயிரம் ரூபாய் காலி.

82. '
இந்தியன் கம்பெனீஸ் ஆக்ட்'படி உங்கள் கம்பெனிக்கான பின் நம்பரை வாங்க 
வேண்டும். இதற்காக நீங்கள் அணுகவேண்டியது 'ரிஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனீஸ்' அலுவலகத்தைதான். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் போகிறீர்கள் என்றால், அதே அலுவலகத்தில் .. (இன்டர்நேஷனல் எக்ஸ்போர்ட்) கோட் நம்பர் வாங்க வேண்டும். இது இருந்தால்தான் ஏற்றுமதி செய்ய முடியும்.

83. www.ipindia.nic.in
இந்த இணையதள முகவரி, உங்கள் பொருட்களுக்கான டிரேட்மார்க் பெறுவற்கான அப்ளிகேஷன் பதிவது முதல், சர்வதேச அளவில் விற்பனை செய்வதற்கான இன்டர்நேஷனல் பின்கோடு வாங்குவது வரை அத்தனை வசதிகளையும் அளிக்கிறது.

84.
ஃபேஷன் ஜுவல்லரி, தங்க நகைகள், டயமண்ட், ஆர்டிஃபீஷியல் ஜுவல்லரி உற்பத்தி செய்கிறீர்கள் என்றால் இந்திய அரசின் ஜெம் அண்ட் ஜுவல்லரி எக்ஸ்போர்ட்ஸ் புரமோஷன் கவுன்சிலில் உங்கள் பொருட்களின் பெயர்களைப் பதிந்து கொள்ளுங்கள். அவர்கள் வெளியிடும் புத்தகத்தில் உங்கள் பொருட்கள் பற்றிய தகவலும் இடம்பெறும். வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் நகை வாங்க வேண்டும் என்றால், இந்தக் கவுன்சிலைத்தான் அதிகம் தொடர்பு கொள்வார்கள். அந்த நிறுவனம் உங்கள் பெயர்களை பரிந்துரைக்க நிறையவே வாய்ப்பு இருக்கிறது. இதில் பதிவு செய்வதற்கு குறிப் பிட்ட தொகையைக் கட்டணமாகச் செலுத்தவேண்டும். இணையதளம்: www.gjepc.org
உஷார்... உஷார்!

85.
பக்கத்து வீட்டுக்காரர் சம்பாதிக்கிறார் என்பதற்காக அதேபோன்ற தொழிலில் நீங்களும் இறங்க வேண்டாம். உங்களுக்கு என்று ஒரு தனித்துவத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

86.
உங்கள் பார்டனராக நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர் வெறும் வாய்ச்சொல் வீரராக மட்டுமல்லாமல், பிசினஸில் முதலீடு போடுபவராகவும் இருக்கவேண்டும்.

87.
சிறு தவறுகூட பெரிய நஷ்டத்தில் கொண்டு விடும். ஒரு தவறு நடந்துவிட்டால் உடனே சரி செய்ய முயற்சியுங்கள்.

88.
உங்கள் பொருளுக்கு பெரிய ஆர்டர் கிடைத்திருக்கிறது என்றால், உடனடியாக சம்பந்தப்பட்ட விவரங்களை சரி பார்த்து, கணக்குப் போட்டு சூட்டோடு சூடாக களம்இறங்குங்கள். கொஞ்சம் தாமதித்தாலும் வேறொருவர் கைக்கு ஆர்டர் கைமாறிவிடவும் வாய்ப்பு உண்டு.

89.
நேரடியாக சென்று பொருட்களை விற்கும் தொழிலில் இறங்குகிறீர்களா... ஜாக்கிரதை. குறிப்பாக அதிக கூட்டமற்ற இடங்கள் மற்றும் இரவு, மதியம் போன்ற நேரங்களைத் தவிர்க்க வேண்டும்.

90. '
முன்பணம் அனுப்புங்கள்' என்று வரும் விளம்பரங்களில் 100% எச்சரிக்கை தேவை. நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு பைசாவுக்கும் ஆவணங்களை உருவாக்குவது முக்கியம்.

91.
பொருட்களில் கண்டிப்பாக தரம் வேண்டும். 100 பொருட்களை நன்றாக செய்து, 101-வது பொருள் தரமில்லாததாக இருந்தால் உங்களது பெயர் கெட்டுவிடும்.

92.
பொருட்கள் எவ்வளவு முக்கியமோ... அதே அளவு அதனை 'பேக்' செய்து கொடுக்கும் விதமும் அவசியம். பொருட்களை அழகாக பேக் செய்து கொடுப்பதை மறந்தால் வாய்ப்புகள் மங்கிவிடும்.

93.
ஏற்றுமதி தொழில் என்றால், எதிர்த்தரப்பு நம்பகமானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவது அதி முக்கியம். ஏனெனில், பல சந்தர்ப்பங்களில் பொருள் டெலிவரியான பிறகு, பணம் செட்டில் ஆகாமல் ஏமாற வாய்ப்புள்ளது.

94.
நீங்கள் உற்பத்தி செய்யும் பொருளின் சந்தை வாய்ப்புகளை அவ்வப்போது கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும். கண்மூடித்தனமாக உற்பத்தி செய்துவிட்டு, கடைசியில் மார்க்கெட்டிங் இல்லாமல் திண்டாடக்கூடாது.

95.
ஒரு தொழிலைப் பார்ட்னராக தொடங்கியிருந்தால்... தொழிலாளர் பொதுச் சேமநல நிதித் (பி.பி.எஃப்.) திட்டத்தில் உடனடியாக ஐக்கியமாவது முக்கியம். தொழில் முனைவோரின் நீண்டகால சேமிப்புக்கும், ஓய்வுகால வாழ்க்கைக்கும் மிகவும் அவசியமானது இந்தத் திட்டம்.
இன்முகமே லாபம் தரும்!

96.
பல சந்தர்ப்பங்களில் பேச்சை விட, சிரித்த முகங்களே வெற்றியை தானே வரவழைக்கும். அதனால் எந்த சந்தர்ப்பத்தையும் ஒரு புன்னகையோடு சமாளிக்கும் பாங்கு, எளிதில் யாரோடும் பேசிப் பழகும் தன்மை... இதெல்லாம் உங்களுக்கு முக்கியம்.

97.
தனியார் அலுவலகங்களில் 'பப்ளிக் ரிலேஷன் ஆபீஸர்' என்ற பணிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. இதற்கான குறுகியகால சான்றிதழ் பயிற்சிகள், தனியார் இன்ஸ்டிடியூட்களில் உள்ளன. ஆரம்பத்தில் சிறிய நிறுவனங்களில் சேர்ந்து, படிப்படியாக மிகப்பெரிய நிறுவனங்களில்கூட வேலையில் அமரும் சாத்தியங்கள் உண்டு!

98.
கவுன்சிலிங் வழங்குவது ஒரு நல்ல பணி. குறிப்பாக, அளவுக்கு அதிகமாக மன அழுத்தம் பாதிக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. உளவியல் படித்த இளம் பெண்களுக்கு இது ஒரு அருமையான வேலை. மனநல மருத்துவர், தொண்டு நிறுவனத்தினர் போன்றோரின் தொடர்புகள் மற்றும் தனிப்பட்ட முறையிலும் கவுன்சிலிங் வழங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறலாம். ஆன்லைன் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும்கூட கவுன்சிலிங் கொடுக்க முடியும். பணத்தை வங்கியிலோ... செக் அல்லது மணியார்டர் மூலமாகவோ வாங்கிக் கொள்ளலாம்.

99.
நிகழ்ச்சி மேலாண்மை (event management) இன்னுமொரு சுவாரசிய துறை. ஒரே நேரத்தில் பல வேலைகளை ஒருங்கிணைக்கும் திறன், ஒரு நிகழ்ச்சிக்குத் தேவையான அத்தனையையும் யோசித்து அவற்றைத் தயார் செய்வது போன்ற திறன்களை நம் பெண்கள் தனியே கற்க வேண்டுமா என்ன! நம் வீடுகளில் கல்யாணம், பண்டிகை என்றால் அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவர்களாயிற்றே நாம். நிகழ்ச்சி மேலாண்மையின் முறைமைகளை மட்டும் கொஞ்சம் பழக்கப்படுத்திக் கொண்டால் போதும், ஒவ்வொரு வேலை நாளும் திருவிழாதான்! இத்தொழிலில் ஈடுபடுவோரிடம் முதலில் உதவியாளராக சேர்ந்து பயிற்சி பெறலாம். அல்லது சின்னச் சின்ன கல்லூரி நிகழ்ச்சிகள், போட்டிகள் என பழகிக் கொண்டு, சிறிய மற்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை அணுகி வாய்ப்பு தேடுங்கள்.
பயிற்சி

100.
இந்திய அரசின் 'மைக்ரோ ஸ்மால் அண்ட் மீடியம் என்டர்பிரைசஸ்' டெவலப்மென்ட் நிறுவனம் (MSME Development Institute) பெண்களுக்காக இலவசமாக ஒன்றரை மாத பயிற்சியை அவ்வப்போது நடத்தும். இதில், வாஷிங் பவுடர், சோப், பினாயில் போன்ற கெமிக்கல் பொருட்கள் மற்றும் ஊறுகாய், ஜூஸ், ஜாம், மசாலாத்தூள் போன்ற உணவு சார்ந்த பொருட்களைத் தயாரிக்க பயிற்சி அளிப்பார்கள். இதைத் தொடர்ந்து சான்றிதழ் வழங்குவதோடு தொழில் தொடங்க வழிகாட்டுவார்கள். மார்க்கெட்டிங்குக்கு தனியாக பயிற்சி வகுப்புகளும் உண்டு.
விவரங்களுக்கு:
கே.வி.ராவ், உதவி இயக்குநர்,இந்திய அரசு வளர்ச்சி நிலையம்,
தொகுப்பு: அவள் விகடன் டீம்
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
தமிழகத்தில் மத்திய அரசு சார்பில் சிறுபான்மை மக்களுக்கு பயன்பெறும் வகையில் 
பலவகையான சலுகைகளும்வகுப்புகளும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றனஇது போன்ற 
சலுகைகளை பற்றியும் வகுப்புகளை பற்றியும் நம் முஸ்லீம்சமுதாயத்தின் மத்தியில் 
விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் அவைகளை நமது சமுதாய மக்கள் 
உபயோகபடுத்துவதில்லை.இது போண்ற சலுகைகளை உபயோகபடுத்தாமல் 
8வது முடித்தால் பாஸ்போர்ட் எடுத்து அரபு நாடுகளுக்குசென்று அற்ப்ப ஊதியத்தில்
 குடுப்பத்தை பிரிந்து கஷ்ட்பட்டு கொண்டு இருகின்றனர்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites