இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, November 24, 2011

விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் வாழ்க்கையில் சிங்கள இராணுவத்தின் தலையீடுகள் – அல்ஜசீரா காணொளி வெளியீடு


விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் வாழ்க்கையில் சிங்கள இராணுவத்தின் தலையீடுகள் – அல்ஜசீரா காணொளி வெளியீடு
[ Wednesday, 23 November 2011, 06:56.30 PM. ]
தமிழர்களை அழித்தும் , ஈழத்தமிழரின் விடுதலை போராட்டத்தை முடக்கியும் சிங்கள பேரினவாதத்தின் யுத்தம் 2009 மே மாதத்துடன் முடிவிற்கு வந்த பின்னரும் தமிழர்களுக்கும் முன்னாள் விடுதலை புலிகளையும் எவ்வளவு துன்பங்களுக்கு சிங்கள அரசு ஆளாக்கி வருகிறது என்பதற்கு சான்றாய் வெளிவந்துள்ளது அல்ஜசீரிவின் செய்தி காணொளி.
ஆனால் இலங்கையின் சமூகங்கள் முன்பைவிடவும் மேலும் பிரிவினையாகியிருப்பது போலத் தோன்றுவதால் இன்னொரு பிரச்சினை தோன்றக் கூடிய அபாயம் ஏற்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
முன்னாள் விடுதலைப் புலிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட புனர்வாழ்வு முகாம்களிலிருந்து வெளியேறி தமது வீடுகளுக்குத் திரும்புகையில் தமது வாழ்க்கையில் இராணுவத்தின் நுழைவு இன்னமும் தொடர்ந்திருப்பதைக் காண்கின்றார்கள் என அல்ஜசீரா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.
இதேவேளை போர்க்குற்றங்களை விசாரணை செய்யும் அதிகாரம் அரசாங்கத்திற்குக்கு கிடையாது என கூறுபவர்களால் போரின் இறுதிக்கால கட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கான அறிக்கையைச் சமர்ப்பிக்க அதிகாரம் கிடையாதென விமர்சிக்கப்பட்டும் வருகின்றது.
இந்த அறிக்கை நேற்று ஆணைக்குழுவின் தலைவரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனால் ‘இலங்கை இணைகின்றது’ போன்ற குழுக்கள் நாட்டிற்கு நல்லதொரு எதிர்காலம் உள்ளதென்றே பார்க்கின்றனர்.
இந்த இளையோர் அமைப்பு இலங்கை முழுவதும் பயணித்து இனக்குழுக்களிடையே ஒற்றுமையையும் சமாதானத்தையும் தூண்டும் நகர்வுகளைச் செய்துவருகின்றன.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் அனேகமானவர்கள் விடுதலை செய்யப்பட்டள்ளனர் என அரசு தெரிவித்து வருகிறது. அவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டு சுமூகமானதொரு வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அல்ஜசீரா, முன்னாள் விடுதலைப் புலிகளின் வாழ்க்கையில் இராணுவத்தினரின் தலையீடுகள் தொடர்பிலான காணொளி ஆவணம் ஒன்றை தயாரித்துள்ளது. அக் காணொளி இங்க பகிரப்பட்டுள்ளது.
இலங்கை போரிற்குப் பின்னதான கசப்பான இனப் பிரிவினையை மாற்ற என்ன தான் வழி ?

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites