இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label தெரிந்து கொள்ளுங்கள் உடல் உறுப்புகள். Show all posts
Showing posts with label தெரிந்து கொள்ளுங்கள் உடல் உறுப்புகள். Show all posts

Tuesday, May 1, 2012

தாகம் வந்தால் குளிர்ந்த தண்ணீரை ஏன் குடிக்கிறோம்

தாகம் வந்தால் குளிர்ந்த தண்ணீரை ஏன் குடிக்கிறோம்மூளையின் அடிப்பகுதியில் நரம்பு உயிரணுக்களாலான வேட்கை மையம் எனும் ஒரு தொகுதி உள்ளது. இரத்தத்தில் நீரின் அளவு குறைந்து போகும்போது அந்த வேட்கை மையத்தால் அது உணரப்பட்டு நமக்கு தண்ணீர் தாகம் உண்டாகிறது. தொண்டை உட்பகுதியின் மென்தோல் வறண்டு போகும்போதும் வேட்கை மையத்தில் தண்ணீரின் வறட்சி உணரப்பெற்று அங்குள்ள நரம்புகளால் அவ்வறட்சி மூளைக்கும் உணர்த்தப்பெறுகிறது. வறட்சியால் கிளர்ச்சியுற்ற மேற்கூறிய நரம்புகள் குளிர்ந்த நீரை அல்லது பானங்களைப் பருகும்போது தடிமனாகி வறட்சி தணிந்து விடுகிறது. இவ்வறட்சித் தணிப்பு சூடான பானங்களை அருந்தும்போது நடைபெறுவதைவிட குளிர்ந்த பானங்களை உட்கொள்ளும்போது விரைந்தும், மிகுதியாகவும் நடைபெறுவதே இதற்கு காரணம்.

Monday, April 9, 2012

பித்தப்பை அலர்ச்சி - அறிகுறிகள் மற்றும் மருத்துவ முறைகள்

பித்தக்கற்கள் பித்தப்பையின் குழாயை அடைப்பதனால் பித்ப்பையிலே விக்கம் /அழற்சி ஏற்படும்.இது பித்தப்பை அழற்சி (Acute chole cystitis ) எனப்படும். பின்வரும் காரணங்களினால் பித்தக் கற்கள் உருவாவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கின்றன.

  • 1.அதிகரித்த உடற்பருமன்.
  • 2.40---50 வயதிற்கும் இடைப்பட்ட பெண்கள்.
  • 3.கருத்தடைமாத்திரைகளைப் பயன்படுத்துதல்.
  • 4.கர்ப்பமாக இருத்தல்..
  • 5.குருதிக் கலங்கள் நீண்ட காலமாக உடைவடைதல் ( Chronic haemolysis ) .உதாரணம் தலைசீமியா  (Thalasaemia)
பித்தப்பை அழற்சியின் நோய்க்குறிகள் :

  • 1. வயிற்றுவலி
    * தொடக்த்தில் மேல்வயிற்றுப் பகுதியில் வலிகாணப்படும் பின்னர் வலதுபக்கமாக மேல்வயிற்றுப் பகுதியில் வலி காணப்படும்.
    * ஆரம்பத்தில் வலி விட்டுவிடடு ஏற்படும் பின்னர் அது தொடர்ச்சியாகக் காணப்படும்.
  • 2. வாந்தி வருவது போன்ற உணர்வு /வாந்தி ஏற்படலாம்.
  • 3. காய்ச்சல் .(38—39 ‘c)
  • 4. அஜீரணத்தன்மை (Dyspepsia)
    உணவு உண்டபின் விசேடமாகக் கொழுப்பு உணவுகளை உண்டபின் சமிபாடடையதாது போன்ற உணர்வு அல்லது வயிறு வீக்கமுற்றது போன்ற அசௌகரியம் ஏற்படலாம்.
  • 5.வயிற்றின் வலது அமற்பகுதியில் ( அதாவது வலது விலாஎன்பு கூட்டிற்குக் கீழ் ) வைத்தியர் அமத்திப்பார்க்கும் போது வலி ஏற்படலாம்.
பரிசோதனைகள் :
  • 1. வயிற்றில் X—  கதிர் பரிசோதனை (Abdominal Xray)—10% பித்தக் கற்கள் X—ray  பரிசோதனையில் அவதானிக்க முடியும்.
  • 2.வயிற்றுப் பகுதியில் செய்யபபடும் ஸ்கான் பரிசோதனை (Abdominal  Ultra sound scan) இதுமிகவும் முக்கியமான பரிசோதனை , இதன்மீலம் பித்தப்பபை பற்றியபல தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். பித்தப்பையினுள் கற்கள் னகாணப்படுகின்றனவா ? பித்தப்பவைக்கமுற்று /அழற்சியுற்றுக் காணப்படுகின்றதா ? பித்தக் குழாயினுள் பித்தம் தேங்கி நிற்கிறதா ? போன்ற பல வினாக்களுக்கான விடையினைப் பெற்றுக் கொள்ள முடியும்.
  • தேவையைப் பொறுத்து வைத்தியர் உங்களை மேலதிக பரிசோதனைக்கு உட்படுத்துவார்.

Saturday, January 28, 2012

மூக்கு பிரச்னைகளை தீர்க்கும் வழிகள்

உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றும் உறுப்புகளில் ஒன்று மூக்கு. மூக்கில் தோன்றும் பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் குறித்து கூறுகிறார் மயிலாப்பூர் ஏவிஎம் ரிசர்ச் பவுண்டேஷனின் இயக்குனர் மற்றும் காது, மூக்கு, தொண்டை நிபுணர் ரவி.கே.விஸ்வநாதன். மூக்கு ஆனது சுவாசம், நுகர்ச்சி ஆகிய செயல்பாடுகளுக்கு மட்டும் உதவக் கூடியது அல்ல. கண்ணீருக்கான கால்வாயாகவும் இருக்கிறது. கண்களில் கண்ணீர் பெருகும்போது, அதில் ஒருபகுதி மூக்கு வழியாக வெளியேறுகிறது. மழை, பனியால் முதலில் பாதிப்புக்கு ஆளாவது மூக்குதான்.

வைரஸ் தொற்று காரணமாக மூக்கில் ரத்த ஓட்டம் அதிகமாகிறது. இதன் காரணமாக மூக்கு தசை வீங்கி திரவத்தை வெளியேற்றுகிறது. இந்த திரவம் உள்ளேயே தேங்கி சளியாக மாறுகிறது. 2 முதல் 3 வாரங்களில் இது குணமாகி விடும். 2 வாரங்களுக்கு பிறகும் சளி குணமாகவில்லை என்றால், சைனஸ் பிரச்னையாக இருக்கலாம். கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். அலர்ஜிக்கான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம். மூக்கில் ஏதாவது பிரச்னை என்றால், மூக்கடைப்புதான் முதலில் தோன்றுகிறது.

மூக்கில் அடிபடுவதால் அதன் நடுச்சுவர் வளைந்து மூக்கடைப்பு உண்டாகலாம். நடுச்சுவரில் சீழ்கட்டி, சதைக் கட்டிகளும் மூக்கடைப்புக்கு காரணங்களாக உள்ளன. மூக்கில் உள்ள ‘செப்டம்’ என்ற எலும்பு, சிலருக்கு வளைந்து இருக்கும். இதனால்கூட சுவாசப் பாதை யில் தடை ஏற்படலாம். இதற்கு அறுவை சிகிச்சை மூலம் தீர்வு காண முடியும். ‘பாலிப்’ என்கிற சதை வளர்ச்சியாலும் மூக்கடைப்பு ஏற்படுகிறது. அலர்ஜி அல்லது பூஞ்சைகள், சதை வளர்ச்சிக்கு காரணமாக உள்ளன. இது ஆஸ்துமாவுக்கும் வழிவகுப்பதால், அறுவை சிகிச்சை மூலம் சதையை வேரோடு அகற்ற வேண்டும். இல்லையென்றால் மீண்டும் மீண்டும் வளர்ந்து தொல்லை கொடுக்கும்.

சில சிறுவர்களுக்கு மூக்கில் இருந்து ரத்தம் தானாக கொட்டும் பிரச்னை இருக்கும். மூக்கினுள் விரலை விட்டு நோண்டுவதால் ரத்தம் வரலாம். தட்பவெப்ப நிலை மாறுபாடு காரணமாகவும், சிலருக்கு மூக்கில் இருந்து ரத்தம் வடியும். தொழுநோய், காசநோய், ரத்தஅழுத்தம், சைனஸ் போன்றவையும் மூக்கில் ரத்தம் வடிவதற்கு காரணங்களாக உள்ளன. பிறந்த 2வது நாளிலேயே குழந்தைகளுக்கு வாசனையை நுகரும் சக்தி வந்துவிடுகிறது. வாசனையை வைத்தே தனது தாயை குழந்தைகள் அடையாளம் கண்டுகொள்கின்றன. நமது மூக்கு 10 ஆயிரம் வகையான வாசனைகளை உணரும் திறன் படைத்தது.

நுகரும் திறன் சிலருக்கு பிறவியில் இருந்தே இல்லாமல் இருக்கும். சளி, சைனஸ் போன்ற காரணங்களாலும், மூக்கு பொடி பழக்கத்தாலும் நுகரும் திறன் படிப்படியாக குறையலாம். அப்படிப்பட்டவர்களுக்கு, ஸ்டீராய்டு நாசல் ஸ்பிரே மூலம் நுகரும் திறனை மீட்டெடுக்க முடியும். சிறுநீரகம், பித்தப்பையில் கல் ஏற்படுவது போல மூக்கிலும் கல் ஏற்படுகிறது. மூக்கில் உறைந்த ரத்தகட்டி அல்லது கெட்டியான சளி இருந்தால், அதன்மீது உடலில் உள்ள கால்சியம், மக்னீசியம் போன்ற தாதுக்கள் படிந்து கல் போல மாறுகிறது. மூக்கு தொடர்பான பிரச்னைகளுக்கு தற்போது நவீன சிகிச்சை முறைகள் உள்ளன. அதிநவீன லேசர் முறையில் எண்டோஸ்கோபி ஆபரேஷன் செய்யப்படுகிறது. இதில் காயமோ, தழும்போ ஏற்படுவதில்லை.

ரெசிபி

கேரட்-ஆப்பிள் சாலட்: 3 ஆப்பிள், 4 கேரட் எடுத்து நன்றாக சீவி வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றுடன் அரை டீஸ்பூன் ஆரஞ்சு சாறு, 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, பொடியாக நறுக்கிய இஞ்சி, சீரகம் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். சிறிது உப்பு மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிடலாம். உடலுக்கு சத்துள்ள உணவு ஆகும்.

தக்காளி-பூண்டு சூப்: தக்காளி (10), பூண்டு (4 பல்), கேரட் (1), வெங்காயம் (1), சர்க்கரை (1 ஸ்பூன்), எண்ணெய் (அரை ஸ்பூன்), வெண்ணெய் (1 ஸ்பூன்), துளசி சிறிது எடுத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம், கேரட்டை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் கறிவேப்பிலை, மிளகு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் தக்காளி, கேரட் துண்டுகள், மல்லி இழை மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு இந்த கலவையை வடிகட்டி, மிக்ஸியில் அடிக்கவும். பிறகு கலவையை சூடாக்கி அதில் சர்க்கரை, உப்பு, மிளகுப்பொடி சேர்த்து பருகலாம்.

பாலக் மசாலா இட்லி: பசலைக்கீரை 1 கட்டு, தக்காளி (1), காய்ந்த மிளகாய் (5), சீரக பொடி (அரை ஸ்பூன்), மிளகாய் சாஸ் (1 ஸ்பூன்), மிளகுத் தூள் (1 ஸ்பூன்), எண்ணெய் (1 ஸ்பூன்), தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், கீரை, தக்காளியை பொடியாக நறுக்க வேண்டும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, அதில் வெங்காயம், கீரை, தக்காளி, மஞ்சள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து வேக விட வேண்டும். நன்றாக வெந்த பிறகு, இந்த கலவையை கடைந்து கொள்ள வேண்டும். அதனுடன் மிளகாய் சாஸ், மிளகுத் தூள் சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, அதில் கீரை கலவையை ஊற்றி அதில் 8 இட்லிகளை போட்டு நன்றாக பிரட்டினால் பாலக் மசாலா இட்லி தயாராகி விடும்.

டயட்

மூக்கு மற்றும் தொண்டை பிரச்னைகள் இருக்கும் போது அதிக திரவம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் பழச்சாறு அருந்துவதும் முக்கியமானது. இதனால் உடலில் நீரின் அளவு பராமரிக்கப்படும். மேலும் தொண்டை, மூச்சுப் பாதை சுத்தமாக இருக்கும். பழச்சாறுகளோடு, சிக்கன் சூப் மற்றும் காய்கறி சூப் அருந்துவதும் நல்லது.

வைட்டமின் சி, ஏ மற்றும் பி உள்ள பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை வைரஸ் மற்றும் பாக்டிரியாக்களுக்கு எதிராக உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன. கீரைகள், கேரட், தக்காளி, ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் காய் மற்றும் பழங்களை சாப்பிடுவதை வாடிக்கையாக்கிக் கொள்ள வேண்டும்.

அதிக கொழுப்புள்ள உணவுகள், மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதுபோல கபீன் உள்ள உணவுகள், அதிக இனிப்புள்ள பதார்த்தங்களையும் தவிர்த்து விட வேண்டும். புகை பிடித்தல், மது அருந்துதல் ஆகிய பழக்கங்களையும் விட்டு விடுவது நல்லது. எதிலும் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும். அதன் மூலம் வைரஸ் உள்ளிட்ட நுண்ணுயிர் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

பாட்டி வைத்தியம்

*சாணி வரட்டியை பற்ற வைத்து அது எரியும் போது மஞ்சள் தூளை தூவி வரும் புகையை நுகர்ந்தால் மூக்கடைப்பு தீரும்.

*தணல் மூட்டி அதில் ஏலக்காய் போட்டு வரும் புகையை நுகரலாம்.

*ஓமத்தை துணியில் கட்டி அடிக்கடி நுகர்ந்தால் மூக்கடைப்பு குணமாகும்.

*ஓமத்தை காட்டன் துணியில் கட்டி தலையணைக்கு அடியில் வைத்து தூங்கலாம்.

*துளசி, பூண்டு, மிளகு, இஞ்சியுடன் தண்ணீர் சேர்த்து, அதை நான்கில் ஒரு பங்காக காய்ச்ச வேண்டும். பின்னர் வடிகட்டி தேன் கலந்து குடித்தால் சளி தீரும்.

*உடல்சூடு காரணமாக சிலருக்கு மூக்கில் ரத்தம் வடியும். அப்போது எலுமிச்சை சாறு சில சொட்டுகளை மூக்கில் விட்டால் நிவாரணம் கிடைக்கும்.

*அதுபோல மல்லி இலைச்சாறு சில சொட்டுகளையும் மூக்கில் விடலாம்.

*மூக்கில் துர்நாற்றத்தை உணர்ந்தால், பரங்கிக்காயை அரைந்து சாறு எடுத்து சில சொட்டுகள் மூக்கில் விடலாம். உணவு செரிமானத்தை சரிபடுத்துவதும் முக்கியம்.

*நெல்லிக்காயை தண்ணீரில் ஊற வைத்து,  வடிகட்டிய தண்ணீரை அருந்தலாம். நீரில் ஊறிய நெல்லிக்காயை அரைத்து நெற்றியில் பற்று போடலாம்.

மனித மூளையும் அதனோடு இணைந்த நரம்புகளும் – அறிவியல்


மூளையானது, நமது உடம்பின் முக்கிய உறுப்பாகவும், நரம்பு மண்டலத்தின் மைய உறுப்பாகவும் திகழ்கிறது. சிந்தனைக்கும் செயலிற்கும் அடிப்படையாக அமைவது மூளையேயாகும். அதன் முக்கியத்துவத்தை கருத்திற் கொண்டு படைத்தவன் அதனை எழிதில் சிதைவுறாவண்ணம் கபாலக் குழியில், மிகப் பாதுகாப்புடன் பத்திரமாக வைத்துள்ளான், 
மனித மூளை, தடிப்பான மண்டை ஓட்டின் எலும்புகளாலும், முதுகுத் தண்டு நீர்மம் (cerebrospinal fluid) என்னும் நீர்மத்தாலும், அதிர்வுகளிலிருந்தும், வெளிச் சேதங்களிலிருந்தும்; குருதி-மூளை வேலி (blood-brain barrier) என்னும் அமைப்பின் மூலம் இரத்த மண்டத்திலிருந்தும், இரத்தம் மூலம் பரவும் நோய்களில் இருந்தும் தீங்குறாமல் பெரிதும் பாதுகாக்கப்படுகின்றது. 
ஆனாலும், அதன் மென்மையான தன்மையால் பல வகை நோய்களும், சேதங்கங்களும் பல தீங்குகளை ஏற்படுத்துவது தவிர்க்க இயலாதது உள்ளது.
பொதுவாக மூளையில் ஏற்படும் சேதங்கள், உள் தலை காயங்கள் (closed head injuries) எனப்படும் வகையை சார்ந்த, தலையில் ஏற்படும் காயம், மூளையில் இரத்த தடை ஏற்படுவதால் ஏற்படும் இரத்தத் தடை (stroke), நரம்பு நச்சுகள் (neurotoxin) எனப்படும் வேதியல் நச்சுப் பொருட்களால் பாதிக்கப்படுதல் ஆகியன குறிப்பிடத் தக்கவை. 
மூளை தொற்று நோய்களால் பாதிக்கப்படுவது மிக அரிதானது. ஏனெனில், இரத்த மண்டலத்தில் கலந்து உடல் உறுப்புகளை தாக்கக் கூடிய பெரும்பாலான பாக்டிரியா கிருமிகளை, மனித மூளையில் குருதி-மூளை வேலி என்ற அமைப்பு வடிகட்டி விடுவதன் மூலம், மூளை தொற்று நோய் நுண்ணுயிரிகளில் இருந்து பெரும்பாலும் பாதுகாக்கப் படுகிறது. 
இருப்பினும், மூளை பாக்டிரியாவால் அரிதாக தாக்கப்படும் போது, எதிர்ப்பொருள் (antibodies) மூலம் சிகிச்சை அளிப்பது மிக கடினமானதாகிறது. ஏனெனில் இதே குருதி-மூளை வேலி அமைப்பு நோய் எதிர்ப்பு மருந்துகளையும் தடுத்து நிறுத்தி விடுவதே இதற்கு காரணமாகும். 
தீநுண்மம் (வைரசு) எளிதாக குருதி-மூளை வேலியை தாண்ட வல்லவை. இவை இரத்தத்தில் உள்ள வெள்ளை உயிர் அணுக்களுடன் சேர்ந்து தாண்டுகின்றன. இவை தவிர பொதுவாகக் காணப்படும் பல மரபியல் நோய்களும் மூளையைத் தாக்க வல்லவை. அவற்றுள், பார்கின்சன் நோய், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமே நரம்பு மண்டலத்தை தாக்கும் மல்டிபிள் சுகுலோரோசிஸ் (multiple sclerosis) ஆகியவை முக்கியமானவை. உளவியல் நோய்களான உளச் சோர்வு, தாழ்வு மனப்பான்மை, மந்த அறிவு ஆகியவையும் மூளையில் ஏற்படும் மாற்றங்களால் தோன்றுகின்றன.
மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் நிகழும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல், சமிபாடு (செரிமானம்),இதயத்துடிப்பு, கொட்டாவி போன்ற செயற்பாடுகளையும், விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மற்ற எல்லா உயிர்களையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது.



மனித மூளையின் எடை சுமார் 1.4 கிலோ. நல்ல அறிவாற்றல் மிகுந்த மேதையின் மூளை எடை சுமார் 2 கிலோவாகவும்இருப்பதாக கணிக்கப்பெற்றுள்ளன. 
மூளையின் பணிகள்
மூளையின் முக்கியமான பணிகளாக நாம் மூன்றைக் கொள்ளலாம்.
1 செய்திகளை மூளை ஏற்றுக் கொள்கிறது.
2 கட்டளைகளை அனுப்புகிறது.
3 செய்திகளை சேகரித்து, வைத்துக்கொண்டு அறிவுப் பணிகளை தொடர்கிறது. 

மூளையின் பாகங்கள்
மூன்று பாகங்களாக, மூளை பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவை முறையே
1 பெரு மூளை
2 சிறு மூளை
3 முகுளம் 

பெரு மூளை
இது மூளையிம் மற்றைய பாகங்ளை விடப்பெரியது. பெரு மூளையானது, கபாலப் பெட்டியின் மேற்புறத்தையும், பின்புறத்தையும் ஒருங்கே அடைத்துக்கொண்டு அமைந்துள்ளது.
இதில் நெளிவுகளும், மடிப்புக்களும் இருப்பதனால், இதன் பரப்பளவு அதிகமாக இருக்கிறது.

மிருகங்ளை விட மனித மூளையில் நெளிவும் மடிப்புக்களும் இருப்பதனால்தான், மனிதன் மிகுந்த அறிவாற்றல் மிகுந்தவனாக விளங்குகின்றான். பெரு மூளையின் பகுதியானது, உட்பகுதியில் வெண்மையாகவும் வெளிப்பகுதியில் சாம்பல் நிறமும் கொண்டதாக தோற்றமளிக்கிறது. 
நம்முடைய சிந்தனை, நினைவுகள், நாம் நினைத்துச் செயற்படக் கூடிய அனைத்திற்கும் பெருமூளையே காரணமாக இருந்து உதவுகிறது. முக்கியமான ஐம்பொறிகளான கண், காது, மூக்கு, வாய், தோல் என்பவற்றிலிருந்து வருகின்ற நரம்புகள் நேரடியகவோ தண்டுவடத்தினூடாகவோ பெருமூளையுடன் இணைக்கப்பட்டுள்ளன. 
பார்வை நரம்புகள் பெருமூளையின் பின்புறத்திலும், சுவை, வாசனை, ஒலி அறியும் நரம்புகள், இதன் பக்கவாட்டிலும் அமைந்திருக்கின்றன. 
சிறு மூளை
முகுளத்திற்குப் பின்புறமாக, பெருமூளைக்குக் கீழே, கபாலத்தின் அடிப்பாகத்தில், சிறுமூளை அமைந்திருக்கிறது. இது மூன்று பிரிவுகளை உடையது. சிறு மூளையின் மேற்பரப்பில், பல மேடுபள்ளங்கள் இருக்கின்றன. மூளையின் மற்றைய பகுதிகளுடன், நரம்பு இழைகள் மூலம் சிறு மூளை தொடர்பு கொண்டுள்ளது. 

உடல் உறுப்புக்களும், தசைகளும், அசைந்து , இயங்குகிற ஒருங்கிணைப்பு, அவற்றின் தெளிவான பண்பு, எளிதான இலகுவான இயக்கம் ஆகியவற்றிற்கு சிறு மூளை பொறுப்பாகும். தேகம் இயங்குகிற சமநிலையைப் பாதுகாக்கிறது. தசைகளின் விறைப்புத் தன்மையை இது கட்டுப்படுத்துகிறது. மது குடிப்பவர்கள், தடுமாறி தள்ளாடி நடப்பதன் காரணம், அந்த மதுவின் போதைத் தன்மையானது சிறு மூளையை தாக்கிவிடுவதாலேயேயாகும். 




முகுளம்
மூளையின் கீழ்ப் பகுதியிலே அமைந்திருக்கும் முகுளம், மூளையின் பகுதிகளிலே, சிறியதாகவு இருக்கிறது. இந்த இடத்தில்தான் தண்டுவடமானது (முண்ணாண்) மூளையுடன் இணைகின்றது. இதிலிருந்து தொடங்குகிற நரம்புகள், இதயம், நுரையீரல், இரைப்பை, குடல் போன்ற முக்கியமான உறுப்புக்களுடன் இணைந்திருக்கின்றன. 

முகுளத்தில் சாம்பல், மற்றும் வெள்ளைப் பொருட்கள் உண்டு. வெள்ளைப்பொருளின் உள்ளேயுள்ள சாம்பல்பொருளில், ஏராளமான கருக்கள் (நூக்கியஸ்கள்) திரண்டுள்ளன. 
தண்டுவடத்திலிருந்து மூளைக்குச் செல்கின்ற நரம்புகள், முகுளத்தின் வழியாகச் செல்வதால், அங்கே ஒரு புதிய விளைவு இடம்பெறுகிறது. அதாவது, வலது புற மூளைப் பகுதியானது தேகத்தின் இடப்புற செயல்பாடுகளையும், இடப்புற மூளைப்பகுதியானது, தேகத்தின் வலப்புறச் செயல்பாடுளையும் கட்டுப்படுத்துகின்றது. 
முகுளத்திற்கு இரண்டு பணிகள் உண்டு.
* அனிச்சைச் செயல்
* நரம்பு உந்துதல்ளை கடத்துதல் 

சுவாச வேலைகள், ஜீரணமாகுதல், இதயத்துடிப்பு போன்ற காரியங்கள் எல்லாம், யாருடைய விருப்பத்திற்கும் இன்றி, தானாகவே இடம்பெறுகின்ற தன்னிச்சைச் செயல்களாகும். இப்படிப்பட்ட தன்னிச்சையாக இயங்குகிற தானியங்கும் தசைகளுக்கு, முகுளத்திலிருந்துதான் கட்டளைகள் கிடைக்கின்றன. 
முகுளமானது, மத்திய நரம்பு மண்டலத்தின் ஜீவாதார முக்கியத்துவம் கொண்ட உறுப்பாகும்.
முகுளத்தில் கோளாறுகள் ஏற்பட்டால், மூச்சு விடலும், இதயத்துடிப்பும் தடைப்பட்டுப்போய், மரணமே நிகழலாம். 

தண்டுவடம்
தண்டுவடமானது, முகுளத்திலிருந்து கிளம்பி, முதுகெலும்பின் நடுவிலுள்ள முள்ளெலும்புக் கால்வாய் வழியாகக் கீழ்நோக்கிச் செல்கிறது. நன்றாக நெகிழக்கூடிய 33 முள்ளெலும்புகளால் தண்டுவடம் காக்கப்படுகிறது. தண்டுவடமானது, ஒரு நீண்ட உருளையைப் போலிருக்கும். அதன் கடைசிப் பகுதியோ, குதிரை வாலைப் போலிருக்கும். 

31 ஜோடி முதுகுத்தண்டு நரம்புகள், தண்டுவடத்திலிருந்து கிளம்பி, தேகத்திலுள்ள தசைகள் மற்றும் தோல் முதலிய எல்லா உறுப்புகளுக்கும் செல்கின்றன. இந்த நரம்புகள், தண்டுவடத்திலிருந்து வெளிவந்த பிறகு, சிற்சில இடங்களில் ஒன்றோடொன்று பின்னிக் கொள்கின்றன. இந்த பின்னல் நிலையே வலை என்று அழைக்கப்படுகிறது. உ-ம் – கழுத்து வலை, இடுப்பு வலை 
ஒவ்வொரு முதுகுத்தண்டு நரம்பிற்கும், இரண்டுவேர்கள் உள்ளன.
I. செய்கை வேர் - முன்புறம் இருக்கும் இந்த செய்கை வேர்கள் வழியாக, மூளையின் உத்தரவுகள் மற்ற உறுப்புக்களுக்கும் தசைப் பகுதிகளுக்கும் செல்கின்றன. 

II. உணர்ச்சி வேர் - பின்புறம் இருக்கிற உணர்ச்சிவேரின் வழியாக, உடலின் பல உறுப்புக்களில் இருந்தும் செய்திகள், மூளையை நோக்கிச் செல்கின்றன. 
தேகத்தின் இடப்புறத்திலிருந்து செல்லும் செய்திகள், மூளையின் வலது பக்கத்திற்குச் செல்கின்றன. தேகத்தின் வலது புறத்திலிருந்து செல்லும் செய்திகள், மூளையின் இடது பக்கத்தை அடைகின்றன. 




தண்டுவடத்தின் பணிகள் இரண்டு வகைப்படும்.
1. உணர்ச்சி நரம்பின் உந்துதல்களால் ஏற்படும் கிளர்த்தல்ளைக் கடத்துதல்
தேகத்தின் பல பாகங்களிலிருந்தும், மூளைக்குச் செல்கின்ற உணர்ச்சி நரம்புகளும், மூளையிலிருந்து தசைகளுக்குச் செல்லும் நரம்புகளும், தண்டுவடத்தின் வழியாகவே செல்கின்றன. 

செய்திகளை நரம்புகள் மூலம் பெற்றுக்கொண்ட மூளையானது, உத்தரவுகளைப் பிறப்பித்துத் தருகின்றது. இதனைத் தாங்கிச் செல்கின்ற ஒரு குழாயாகவே தண்டுவடம் பணியாற்றுகிறது. 
தண்டுவடம், தன்மையோடு செயல்படுகின்ற போதுதான், தகுந்த செயல்களை, உகந்த நேரத்தில் சிறப்பாகச் செய்ய முடிகிறது. தண்டுவடம் சிலசமயங்களில், தானாகவே சில கட்டளைகளைக் கொடுக்கின்ற சந்தர்ப்பங்களுக்கு ஆளாகி விடுகிறது. அதற்கு உணர்ச்சி நரம்புகளும், செய்கை நரம்புகளும் தண்டுவடத்துடன் இணைந்திருப்பதும் ஒரு காரணமாகும். 
உதாரணமாக நாம் தெரியாமல் ஒரு சூடான பொருளின் மீது கையை வைத்தவுடன், நம்மை அறியாமலே வெடுக்கென்று கையை எடுத்துக்கொள்கின்றோம். இவ்வாறு கையை எடுத்துக் கொள்ள உத்தரவு தந்தது மூளையா? இல்லை. தண்டுவடம் தான்.
இவ்விதம் மூளையின் உத்தரவின்றி, தானாகவே தண்டுவடம் உத்தரவைத் தந்து, சூழ்நிலையைச் சமாளித்து விடுகிறது. இந்தச் செயல்களை அனிச்சைச் செயல்கள் எனக் கூறுவர். 

அனிச்சைச் செயல்
தண்டுவடத்தில், தசை நடவடிக்கையை எடுக்கின்ற கேந்திரங்கள் பல உண்டு. ஒவ்வொரு தண்டுவடப் பகுதியும், உடலின் ஒவ்வொரு பாகத்துடன் தொடர்பு கொண்டிருக்கிறது. 

தசைகளில் ஒரு சூடான பொருள் படும்போது, அந்த உணர்ச்சியை, உணர்ச்சி நரம்பு தண்டுவடத்திற்கு எடுத்துச்செல்கிறது. உடனே, அத்துடன் இணைந்திருக்கும் செய்கை நரம்பானது ஒரு தசையைத் தூண்டி, இயங்கும்படி செய்துவிடுகிறது. தண்டுவடத்தில் ஏற்பட்டுள்ள குறுக்கு இணைப்புக்களினால், மேலும் கீழும் இயங்கி, பல்வேறு தசைப் பகுதிகளையும் தூண்டி விடுகிறது. இதனால், பாதிக்கப்படுகிற உறுப்பு, பாதிப்பிலிருந்து வெளியேறுகிறது. இதையே அனிச்சைச்செயல் என்கிறோம். 



அனிச்சைச்செயல் முடிந்த பிறகு, என்ன காரியம் நடந்தது என்பதை மட்டும், மூளை தெரிந்து கொள்கிறது. ஆயினும், தண்டுவடத்தின் பணிகள், மூளையினாலே கட்டுப்படுத்தப்படுகின்றன. 
மூளையின்
வெளிப்புற நரம்பு மண்டலம்
தண்டுவடமும், நரம்பு மண்டலத்தின் மத்திய பகுதியில் இருப்பதால், இதை மத்திய நரம்பு மண்டலம் எனலாம்.
12 ஜோடி கபால நரம்புகள் மூளையிலிருந்தும், 31 ஜோடி தண்டுவட நரம்புகள் தண்டுவடத்திலிருந்தும், வெளியே வருகின்றன. இந்த நரம்புகளிலிருந்து பல்வேறு உறுப்புக்களுக்கும் திசுக்களுக்கும், பலவும் கிளைகளாகப் பிரிந்து செல்கின்றன. அவற்றின் கிளைகளையும் வெளிப்புற நரம்பு மண்டலம் என்று நாம் அழைக்கலாம். 

உள்ளுறுப்புக்கள், சுரப்பிகள், மற்றும் இரத்த நாளங்கள் ஆகியவற்றிற்கு, நரம்பூட்டம் அளிக்கும் பகுதிக்கு, தன்னிச்சை நரம்பு மண்டலம் என்று பெயர். நரம்பு செல்கள், அவற்றின் துணுக்குகள், நரம்பு இழை ஆகியவை தன்னிச்சை நரம்பு மண்டலத்தில் அடங்குகின்றன. தன்னிச்சை நரம்பு மண்டலத்தின் நரம்பு இழைகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை கபால நரம்புகள், மற்றும் தண்டுவட நரம்புகள் ஆகியவற்றின் ஒரு பகுதியாக அமைந்து, தன்னிச்சை நரம்பு முடிச்சு செல்களுக்குள் செல்கின்றன. 
அங்கேயுள்ள நரம்பு முடிச்சு, பின் இழைகளென்று அழைக்கப்படுகின்ற நரம்பு இழைகள், உள்ளுறுப்புகளுக்குச் செல்கின்றன.
இந்த தன்னிச்சை மண்டலத்தில் இரு பிரிவுகள் உள்ளன.
1. பரிவு நரம்புகள்
2. துணைப் பரிவு நரம்புகள் 


பரிவு நரம்புகள்
தண்டுவடத்தின் வெளிக் கொம்புகளில் உள்ள செல் துணுக்குகள், தண்டுவடத்திலிருந்து, அதனதன் தண்டுவட நரம்புகளாக வெளிவந்து, அவற்றிலிருந்து பிரிந்து, பரிவு நரம்புத் தண்டை அடைகின்றன. 

வலது இடது என்றுள்ள 1 ஜோடி பரிவு நரம்புத் தண்டு, முதுகெலும்புத் தண்டின் இரண்டு பக்கத்திலும் அமைந்துள்ளது. அதில் நரம்பு முடிச்சுகளும், அவற்றை இணைக்கும் கிளைகளும் காணப்படுகின்றன. 
பரிவு நரம்புத் தண்டின் பணிகள், கழுத்துப் பகுதியின், மார்புப் பகுதியின் மற்றும் வயிற்றுப் பகுதியின் முக்கிய இயக்கங்களில் பங்கு பெறுவதாக அமைந்துள்ளன. 
பரிவு நரம்புகள் கழுத்துப் பகுதியிலுள்ள கழுத்து, தலைப்பகுதியின் உள்ளுறுப்புக்களும், நரம்பூட்டம் அளிக்கின்றன. அதாவது முன்தொண்டை, உமிழ் நீர்ச் சுரப்பிகள், கண்ணீர்ச் சுரப்பிகள், கண்பார்வையை விரிவடைச் செய்யும் தசைகள் யாவும் ஊட்டம் பெறுகின்றன. 
மார்புப் பகுதிகளுக்கு வருகிற பரிவு நரம்புகள், மார்பு தமணி, உணவுக் குழல், மூச்சுக் கிளைக் குழல், நுரையீரல் ஆகியவற்றிற்கு கிளைகளை அனுப்புகின்றன. 
துணைப்பிரிவு பரிவு நரம்புகள்
மூளைத் தண்டிலும், தண்டுவடத் திரிகப் பிரிவிலும் இவை காணப்படுகின்றன. பரிவு நரம்புகளும், உள்ளுறுப்புக்களில் பலவிதமான ஆதிக்கம் செலுத்திக் கட்டுப்படுத்துகின்றன. இவை இரண்டும் எதிர்மாறான வேலைகளைச் செய்கின்றன. 

உதாரணமாக, பரிவு நரம்புகள் ஏற்படுத்துகிற விளைவுகளைப் பாருங்கள். உமிழ்நீர், கண்ணீர் சுரப்பிகளின் சுரப்பு குறைகிறது. சிறிய தமனிகளும் சிரைகளும் சுருங்குகின்றன. இருதயத் துடிப்பு விகிதம் கூடுகிறது. குடலின் அலைகின்ற அசைவு தாமதமாகின்றது. இரைப்பையின் சுரப்புகள் குறைகின்றன. மூச்சுக் கிளைத் தசைகள் தளர்கின்றன. உடலில் உஷ்ண இழப்பு குறைகிறது. 
ஆனால், துணைப்பிரிவு நரம்புப் பகுதியின் வேலையைப் பாருங்கள். கண்பார்வை சுருங்குகிறது. உமிழ்நீர், மற்றும் கண்ணீர் சுரப்பு ஊக்குவிக்கப்படுகிறது. இதயத் துடிப்பு விகிதம் குறைகிறது. குடலின் அலைகின்ற அசைவு கூடுதலாகிறது. இரைப்பைச் சுரப்பு தூண்டப்படுகிறது. மூச்சுக்கிளைத் தசைகள் சுருங்குகின்றன. உடலில் உஷ்ண இழப்பு அதிகரிக்கிறது. 
இந்த இரு பிரிவு நரம்புகளும் பல்வேறு உறுப்புக்கள்மீது எதிரெதிர் விளைவுகளை ஏற்படுத்தினாலும், எல்லாம் நன்மையாகவே முடிகின்றன. 
அதாவது, உறுப்புக்கள் எல்லாம் ஒருங்கிணைக்கப் பெற்று, ஒரே அமைப்பாக மாறி, ஒழுங்காகவும் சிறப்பாகவும் பணியாற்றும் செழுமை ஏற்பட்டு விடுகிறது. அதாவது, இதயத்தின் வேலை, ஜீரண மண்டல சுரப்பிகள் இயக்கம், செல்களின் வளர்சிதை மாற்ற வேலைகள் எல்லாம் சீராகவும், ஜோராகவும் நடக்க உதவுகின்றன. 




நியூரோன்
நரம்பு மண்டலத்தின், அடிப்படையான ஆதார சக்தியாக விளங்குபவை நியூரோன்களாகும். நியூரோன்கள் என்பது ஒரு நரம்பு செல்லும், அதன் கிளைகளுமாகும்.
நரம்பு செல்கள் எல்லாம் அமைப்பிலும், அளவிலும், வடிவத்திலும் வேறுபட்டவைகளாகவே விளங்குகின்றன. 

ஒரு நியூரோன் மூன்று பாகமாகப் பிரிந்திருக்கிறது.
1. நியூக்கிலியஸ்
2. ஆக்ஸன்
3. டென்ட்ரைட்ஸ் 

ஆக்ஸான்கள் நீளமானதாகவும், மெல்லியதாகவும் உள்ள அமைப்பைப் பெற்று, செல்கள் பகுதியிலிருந்து உணர்வுகளைக் கடத்துகின்றன. டென்ரைட்டுகள் பொதுவாகக் குட்டையாகவும், கிளை விட்டும் இருந்தும், செல்களுக்கு உணர்வுகளைக் கடத்துகின்றன. 
நரம்புத் திசு
நரம்பு செல்களும் அவற்றின் கிளைகளும் சேர்ந்து கொண்டு, நரம்புத் திசுக்கள் என்ற அமைப்பை உண்டாக்கி விடுகின்றன. ஒரு நரம்பு செல்லிருந்து மற்றொரு நரம்பு செல்லுக்கு, இந்த உணர்வுகள் கடத்தப்படுகின்றன. இந்த வேகம் மின்சாரம் செல்கின்ற வேகத்தைக் காட்டிலும், வேகம் குறைவாகவே விளங்குகிறது. 

நரம்புத்திசு வழியாகக் கிளர்த்தல் கடத்தப்படுவதுடன், அதன் வேகம் பற்றி விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கின்றனர். மனிதனில் இந்தக் கிளர்த்தல், நொடிக்கு 90 மீட்டர் வேகம் எனக் கூறுவர். 

நரம்புத் திசுவின் செயல் தன்மையை, கடத்தும் தன்மை என்றும் கூறுவர். உணர்ச்சிகளைக் கடத்துகின்ற ஆற்றல் நிறைவாக இருக்க வேண்டுமென்றால், முழுமையாக செயல்பட வேண்டும். இதன் முழுமை சேதாரமடைந்தால், பாதிக்கப்பட்ட நரம்பு, சரியாகப் பணிபுரிய முடியாது. 
இயக்க நரம்புகள் சேதமடைந்து போனால், இந்த நரம்புகள் இணையப் பெற்றிருக்கும் தசைகளின் பகுதிகள், சக்தியற்றதாகி 


விடுகின்றன. உணர்வு நரம்புகள் சேதமடைந்து போனால் தோல் பாதிக்கப்படுகிறது. தோலின் தொடு உணர்வும் பாதிக்கப்பட்டு, சுரணையற்றுப் போகிறது.  

குங்குமப்பூவில் உள்ள மூலப்பொருள்கள் மூளை உள்பட உடல் உறுப்புகள் அனைத்தையும் சுறுசுறுப்பாக்குவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
குங்குமப்பூவுக்கு பல மருத்துவ குணங்கள் இருப்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கனடாவின் அல்பர்ட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சிரிஸ் போவர் தலைமையில் இதுதொடர்பான ஆய்வு சமீபத்தில் நடந்தது. 


உடல் உறுப்புகள் குறிப்பாக மூளையின் செயல்பாட்டை குங்குமப்பூ துரிதப்படுத்துவது ஆய்வில் தெரியவந்துள்ளது. குங்குமப்பூவில் உள்ள பொருள்கள் மூளையில் உள்ள செல்கள் பாதிப்படையாமல் பாதுகாப்பதால் மூளை செயல்பாடு அதிகரிப்பதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 

இதனால் நரம்பு மண்டலமும் வலுவடையும் என்கின்றனர். இதுபற்றி அவர்கள் மேலும் கூறுகையில், மூளை செல்கள் பாதிப்படைவதால் ஏற்படும் நிலை மைலின் எனப்படுகிறது. இந்த நிலையில் நரம்புகளைச் சுற்றி ஒரு மெல்லிய திரை போன்ற கவசம் உருவாகும். 

இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். குங்குமப்பூவில் உள்ள பொருள்கள் இந்த திரை போன்ற கவசம் உருவாகாமல் தடுக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு குங்குமப்பூ கலந்த மருந்து கொடுக்கும்போது, பாதிப்பில் இருந்து அவர்கள் விடுபட முடிகிறது. மூளை செல்களை குங்குமப்பூ பாதுகாக்கிறது. நரம்பு மண்டலத்துக்கும் வலு சேர்க்கிறது என்றனர்.
நன்றி: பனிப்புலம்.காம்

Tuesday, January 17, 2012

கர்ப்பப் பை

நான்கு கால்களில் நடக்கும் விலங்குகளுக்கு கர்ப்பப் பை மல்லாந்த நிலையில் இருக்கும் . அதனால், புவி ஈர்ப்பு சக்தியின் பாதிப்பு இருக்காது . இப்படிப் படிந்துகிடக்கும் கர்ப்பப் பையினுள் மரபணுக்களைச் செலுத்தினால், அப்படியே பத்திரமாக இருக்கும், வெளியேறாது . ஆனால், மனிதப் பெண்ணோ இரண்டு கால்களில் செங்குத்தாக நிற்கிறாள் . இதனால் அவள் கர்ப்பப் பையும் புவி ஈர்ப்பு சக்திக்கு உட்பட்டு செங்குத்தாகவே இருக்கிறது . இந்த நிலையில், பெண் உடலில் மரபணுக்களை முதலீடு செய்தால், அவை தங்காமல் வெளியேறிவிடும் . அப்புறம் எப்படி இனம் விருத்தியாவது ?
ஆனால், இரண்டு கால்களில் செங்குத்தாக நிற்பதால் மனித குலத்துக்கு ஏகப்பட்ட ஆதாயங்கள் இருந்தன . கைகளை வேறு வேலைகளுக்குப் பயன்படுத்த முடிந்தது . இதனால் மற்ற மிருகங்களைவிட மிக வேகமாக முன்னேற முடிந்தது . ஆனால், கலவியின்போது இப்படி இரண்டு காலில் நிற்பது அனுகூலமாக இல்லை . அந்தச் சமயத்துக்கு மட்டுமாவது பெண் தன் செங்குத்தான நிலையை விட்டுக்கொடுக்க வேண்டி இருந்தது . அதுவும் விந்தணுக்கள் போய் கருமுட்டையோடு கூடும் அந்தப் பல நிமிடங்களுக்கு அவள் அப்படியே கிடந்தாக வேண்டும் . ' அவ்வளவு நேரத்துக்கு எல்லாம் சும்மா படுத்துக்கிடக்க முடியாது .... சுத்த போர் ! ' என்று பெண் முரண்டு பண்ணினால், மொத்த மரபணு ஆட்டமும் குளோஸ் ! ஆக, பெண்ணை எப்படியாவது மதி மயங்கி சும்மாகிடக்கும் நேரத்தை சுவாரஸ்யமாக்கினால் ஒழிய, மனித மரபணுக்கள் பரவ வாய்ப்பு இல்லை .
மனித இனத்துக்கு மட்டும் இப்படி ஒரு விநோதத் தேவை இருந்ததால்தான், இயற்கை மனிதர்களுக்கு மட்டும் சில பிரத்தியேக மாற்றங்களைச் செய்துள்ளது . உதாரணத்துக்கு, உங்களுக்குத் தெரிந்த ஏதாவது ஒரு மிருகத்தை எடுத்துக்கொள்ளுங்களேன் . எலி, பூனை, நாய், சிங்கம், புலி என்று எந்த மிருகமாக இருந்தாலும், அவற்றின் தோலில் இருக்கும் ரோமம் இரண்டு பாலினத்திற்குமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் . ஆண் எலிக்கு எவ்வளவு தோல் ரோமமோ, அதே அளவுதான் பெண் எலிக்கும் . ஆனால், மனிதர்களில் மட்டும் அப்படி இருப்பது இல்லை . பருவம் அடைந்த பிறகு, மனித ஆணுக்கு பெண்ணைக் காட்டிலும் அதிகமான ரோமம் முளைத்துவிடுகிறது . ஆக, மனிதர்களை பொறுத்தவரையில், பெண்ணுக்கு உடம்பில் முடி மிகக் குறைவு . ஏன் இந்த வித்தியாசம் ? நம் நெருங்கிய உறவுக்கார இனமான சிம்பன்சியில்கூட இந்த ரோம வித்தியாசம் கிடையாது . பெண், ஆண் இருவருக்குமே ஒரே மாதிரியான தோல்முடிதான் . மனிதர்களில் மட்டும், அதிலும் பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த வித்தியாசம் ?
ரோமம் அடர்த்தியாக இருந்தால், தொடுதல் உணர்வைத் துல்லியமாகக் கிரகிக்க முடியாது . இதுவே ரோமம் குறைவாக இருந்தால், தொடுகை உணர்வு சுகமாகத் தோன்ற ஆரம்பிக்கும் . ரோமம் குறைவான மனிதப் பெண்ணின் தோலைத் தொட்டுத் தடவி, வருடி, மென்மையாக உரசினால் போதும் . அவளது நரம்புகளில் மின்சாரம் அதிகமாகப் பாய்ந்து, மூளை கிளர்ச்சிக்கு உள்ளாகும் . அவள் மதி மயங்கி நீண்ட நேரத்துக்கு அரைத் தூக்கத்தில் படுத்தேகிடப்பாள் . இந்த அவகாசத்துக்குள் அவளுக்குள் மரபணுக்களை முதலீடு செய்துவிட்டால், நிச்சயம் வம்சம் விருத்தியாகுமே !
---' உயிர்மொழி ' தொடரில் , டாக்டர் ஷாலினி . ஆனந்த விகடன் 1 . 12 . 2010 .

Saturday, November 26, 2011

உடல் உறுப்புகளின் முக்கியத்துவத்தை

கதாநாயகனைப் புரிந்து கொள்ளாமல் இடைவேளை வரை சண்டைப்போட்டுக் கொண்டேயிருந்த கதாநாயகி, அவன் இரத்தானம் செய்திருக்கிறான் என்று கேள்விப்பட்டதும் அப்படியே மனம் கரைந்து அவன்மேல் மையல் கொள்கிறாள். எழுபதுகளில் எடுக்கப்பட்ட பழைய கலர் தமிழ்ப்படத்தில் இப்படி ஒரு காட்சி அமைப்பு. இப்போது பார்த்தபோது எனக்குக் காமெடியாக இருந்தது. இரத்ததானம் செய்வதெல்லாம் இப்போது சர்வசாதாரணம். சிலர் தொழிலாகவே செய்து வருகிறார்கள். சிறுநீரகங்கள் விலைக்கு விற்கப்படும் இந்நாளில் இரத்த தானமெல்லாம் எந்த மூலைக்கு?

விலைக்கு உடலுறுப்புகளை விற்பதை குறைத்து மதிப்பிடுவதாக நினைக்க வேண்டாம். விலைமதிப்பில்லாத உடல் உறுப்புகளின் முக்கியத்துவத்தை, அதைப் பெறத் துடித்துக் கொண்டிருக்கும் நோயரைக் கேட்டால்தான் தெரியும். எவ்வளவு விலையானாலும் பராவாயில்லை உறுப்பு கிடைக்காதா? என்று காத்திருப்போரின் வரிசை மிக நீளமாகிக் கொண்டெ வருகிறது. ஆண்டுதோறும் உலகெங்கிலும் 200 மில்லியன் பேர்களுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்படுகிறது. உறுப்பினை வெட்டி நீக்கிவிட்டு அந்த இடத்தில் தானம் பெற்ற உறுப்பை பொறுத்தும் தொழில்நுட்பம் ஜெட் வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. டயாலிஸிஸ் மூலம் பல உயிர்களை இழுத்துப் பிடித்துக் காப்பாற்றியது ஒரு காலம். அது பூரண சிகிச்சை அல்ல. எந்திரத்தையே நம்பி வாழும் சிறை வாழ்க்கை அது.

Tissuesசெயலிழந்த உறுப்புக்கு பதிலாக அவரவர் உடலிலிருந்தே திசுக்களை எடுத்து அதை செயற்கையாக வெளியே உறுப்பாக வளர்த்து பின் அவருக்கே பொறுத்துவது இன்றைய டெக்னாலஜி. திசு பொறியியல் மருத்துவத்துறையில் இன்று ராஜ நடைபோடுகிறது. அதிக வேலைவாய்ப்பும், லாபமும் உள்ள தொழில்நுட்பமாக இது வளர்ந்து கொண்டிருக்கிறது.

திசுப்பொறியியல்

செயற்கையாக மனிதத் தோலை கண்ணாடித் தட்டுகளில் வளர்க்கிறார்கள், கெட்டித் திசுவாகிய கார்ட்டிலேஜ் எனப்படும் குறுத்தெலும்புகளை வளர்க்கிறார்கள். இதெல்லாம் மிகச் சுலபமான காரியங்களாகிவிட்டன. தீக்காயம் பட்டவர்களுக்குத் தேவையான மேல்தோலை உடலின் மறைவான இடத்திலிருந்து உரித்தெடுத்து பயன்படுத்துவதற்கு பதிலாக விரல்கட்டை அளவு தோலை எடுத்து திரவத் தொட்டியில் வளர்த்து, ஏடு ஏடாக எடுத்து காயங்களின் மேல் போர்த்துகிறார்கள். இதுபோலவே சிறுநீர்ப்பை, கண் கருவிழி (கார்னியா) மூச்சுக் குழல், இரத்தக்குழாய் போன்றவைகளை தொட்டிகளில் வளர்க்கும் தொழில் நுட்பம் முடிவடையும் நிலையிலிருக்கிறது. பிளாடர், கார்னியா, தசைநார், குறுத்தெலும்பு ஆகியவை ஒரேமாதிரி திசுத்தொகுப்பால் ஆகிய எளிய உறுப்புகள். உறுப்பு என்று சொல்வதைக் காட்டிலும் திசுக்கொத்து என்றுதான் சொல்லவேண்டும்.

கொஞ்சம் திசுக்களை சிறுநீரகத்திலிருந்து அல்லது இதயத்திலிருந்து கிள்ளி எடுத்து, அதை முழு இதயம் அல்லது சிறுநீரகமாக உருவாக்க முடியுமா? என்பது உடனடியாக பதில் சொல்ல முடியாத கேள்வி. ஒரு உறுப்பு முழுக்க முழுக்க ஒரே மாதிரியான திசுவால் ஆக்கப்பட்டது என்றால் அதைப்பிசைந்து, மடக்கி, முறுக்கி; காது, மூக்கு போன்ற உறுப்புகளாக செய்து கொள்ளலாம். கல்லீரல், இதயம், கணையம், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் அப்படிப்பட்டவை அல்ல.

கார்ட்டிலேஜ் அல்லது தோல் திசுக்களில் உள்ள செல்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக குடிசைமாற்று வாரியம் கட்டித்தந்த தொகுப்பு மனைகள் போல இருக்கின்றன. சிறுநீரகம் அல்லது கல்லீரல் மிகப்பெரிய மாளிகை அல்லது மருத்துவமனையைக் கட்டுவதுபோன்ற காரியமாகும். அமைப்பும் சிக்கல், கட்டுமான பொருள்களும் வெவ்வேறானவை. எதன் பக்கத்தில் எது இருக்கவேண்டும் என்பது மிகவும் துல்லியமாக இருத்தல் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக திசு முழுவதும் இரத்தக் குழாய்களால் இருந்தாக வேண்டும். எந்தத்திசுவானாலும், அது 100 மைக்ரான் தடிமனை தாண்டிவிட்டால் கட்டாயம் அதனுள் இரத்தக்குழாய்கள் விரவியிருக்க வேண்டும். திசுவைத் தயாரித்து பதியன் செய்த பின்னர் அது உயிருடன் வேலை செய்வதற்குத் தேவையான ஆக்ஸிஜன், குளுக்கோஸ் முதலியவற்றை டெலிவரி செய்ய இரத்தக் குழாய்கள் அவசியமில்லையா?

நிச்சயம் ஒருநாள், முழு உறுப்பையும் திசுப் பொறியியல் செய்தே தீரும். அதற்கு நெடுங்காலம் இல்லை. அதற்குள் வாழத்துடிக்கும் மில்லியன் கணக்கான நோயர்களுக்கு ஏதாவது இப்போது செய்தாகவேண்டுமே, அதற்காக இடைநிலை திசுப்பொறியியல் தொழில்நுட்பம் தயாராகிக் கொண்டிருக்கிறது. உறுப்புகள் முழுமையான வடிவத்துடன் இல்லாவிட்டாலும், என்ன வேலை செய்தாக வேண்டுமோ அந்த வேலையைச் செய்யத்தக்க ஏதாவது ஒரு வடிவில் அமைக்கப்படுகின்றன. இடையிடையே பிளாஸ்ட்டிக், ஹைட்ரோஜெல், சில்க் இழை போன்ற அந்நிய பொருள்களை ஆதாரப் பொருள்களாக, கட்டட சாரங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

ஆறிக்கொண்டிருக்கும் புண்ணில்; தோல், எலும்பு, நரம்பு, இரத்தக்குழாய் ஆகியவை தானாக வரிசைக்கிரமமாக தோன்றுகின்றன பார்த்தீர்களா? வளரும் கருவில் இதயம், மூளை, கல்லீரல் முதலானவை அழகாக தாமாக வளருகின்றன என்பதையும் பாருங்கள். இவற்றைக் கூர்ந்து ஆராய்ந்தால் அதனடிப்படையில் செயற்கையாக உடம்புக்கு வெளியே உறுப்புகளை நம்மாலும் செய்ய முடியும்.

கல்லீரலின் கட்டுமானம்

மனித உடலுறுப்புகள் எந்த அளவுக்குச் சிக்கலானவை என்பதை கொஞ்சம் இங்கே கவனியுங்கள். உறுப்புகளின் வேலைகளுக்கு ஏற்ப அவற்றின் திசுவகைகளும், கட்டமைப்பும் மாறுபடுகின்றன. கல்லீரல்தான் உடம்பிலேயே மிகப்பெரிய உறுப்பு. இதன் வேலை இரத்தத்தை வடிகட்டுவது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், இரத்தத்திலிருக்கும் நச்சுப்பொருள்களை நீக்குவது, ஜீரணமான உணவிலிருந்து ஊட்டப் பொருள்களை மேலும் சிறியதாக பகுப்பது, சுத்தம் செய்த இரத்தத்தை வெளியேற்ற அனுமதிப்பது. இதற்கேற்ப கல்லீரலின் நுண் அமைப்பு உள்ளது. அதன் முப்பரிமாண அமைப்பை படத்தில் பாருங்கள்.

அறுங்கோணவடிவ கற்றைகள் அடுக்கப்பட்டதுபோல கல்லீரல் திசு உள்ளது. ஒவ்வொரு கற்றையின் மையத்திலும் இரத்தக்குழாய் ஓடுகிறது. இதிலிருந்து அனேக இரத்தக்குழாய்கள் கிளைத்து சக்கர ஆரக்கால்கள் போல கற்றையின் விளிம்பு வரை வருகின்றன. இதன் ஊடே இரத்தம் வடிந்து இதயத்துக்குச் செல்லும் பாதையில் போகிறது. அறுங்கோண கற்றையின் ஒவ்வொரு கோணத்திலும் மூன்று குழாய்கள் ஓடுகின்றன. நடுவில் அகலமான சிரை. இடமும் வலமுமாக பித்தக்குழாயும், தமணியும் ஓடுகின்றன. இத்தகைய திட்டமான முப்பரிமாண அமைப்பில் அர்த்தமிருக்கிறது. கல்லீரலின் செயல்களின் வெற்றி இந்த அழகிய அமைப்பியல் அடங்கியிருக்கிறது. இப்படி ஒரு கட்டுமானத்தை மனிதனால் செயற்கையாக செய்ய முடியுமா?

இதயத்தசை

இதயத்தசை முழுவதும் நார் நாராக உள்ள திசுவால் நிரம்பியுள்ளது. நார்களுக்கு இடையே ஏகமாக கொல்லாஜன் என்ற கெட்டிப் பொருள் நிரம்பியுள்ளது. இதயத்தசை செல்நார்கள் சீராக கற்றை கற்றையாக வேய்ந்துள்ளன. நரம்பு செல்களிலிருந்து வெளிப்படும் தூண்டல்கள் கொல்லாஜன் பிடிமானத்தின் ஊடாகப் பரவி, இதயத் தசை நார்களைச் சுருக்கி விரியச் செய்கின்றது. இரத்தத்திலிருந்து ஊட்டமும் இதன் ஊடாகத்தின் கசிந்து பரவவேண்டும். இப்படி எல்லாம் முப்பரிமாண வடிவம் வழங்கா விட்டால் இதயத்தசை ஓய்வு ஓழிசலில்லாமல் 70 ஆண்டுகளுக்கும் மேலாக துடித்துக் கொண்டிருக்க முடியுமா? எல்லா திசுக்களுக்கும் ஓய்வு உண்டு இதயத்துக்கு உண்டா? முப்பரிமான திசுக்கட்டமைப்புகளை ஏற்படுத்தி முழு அங்கங்களை சோதனைச் சாலையில் உருவாக்குவது லேசுப்பட்ட காரியமில்லை. இதற்கு என்னதான் மாற்று வழி என்று இனிப்பார்ப்போம்.

இரத்தக்குழாய்

கட்டைவிரல் கணத்திலிருந்து, மயிரைவிட 1000 மடங்கு மெல்லிய கனம் வரையில் இரத்தக்குழாய்கள் உடலில் பாய்கின்றன. ஒரு மில்லிமீட்டர் இடைவெளிக்குள் 10 இரத்தக் குழாய் தந்துகிகள் இருந்தால்தான் எந்தத் திசுவாலும் உயிர்பிழைக்கமுடியும். எனவே திசுக்கட்டமைப்பில் முதலில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை, எப்படி இரத்தக் குழாய்களை உருவாக்குவது என்பதாகும். ஒருவிதத்தில் திசுக்கட்டமைப்பு, கடிகாரம் செய்வதை விட சுலபம் என்று சொல்லலாம். கேமரா, வாட்ச் போன்ற கருவிகளின் உதிரிபாகங்கள் தானாக ஒன்று சேர்ந்து கருவியாக மாறுவதில்லை. ஆனால் உயிருடைய திசுக்களுக்கு தக்க சூழலை உருவாக்கித் தந்தால் போதும் மற்றதை அவைகளே பார்த்துக் கொள்ளும். மேஸ்த்திரி வேலை பார்க்க யாரும் தேவையில்லை. வரிவரியாக மேடும் பள்ளமும் உள்ள பரப்பில் எப்பித்திலீயல் வகை செல்களை வளரவிட்டால் அவை பள்ளங்களின் அணைப்புக் கேற்ப வரிவரியான இரத்தக்குழாய்களாக வளருகின்றன. இப்படி செய்வதை மைக்ரோ ஃபேப்ரிகேஷன் என்கிறார்கள்.

தக்க பரப்புகளையும், ஆதார அமைப்புகளையும் உருவாக்குவதில் மிகுதியான கவனம் செலுத்தப்படுகிறது. உயிருடைய பொருள் போலவேயுள்ள ஹைட்ரோஜெல் என்ற பொருள் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஹைட்ரோஜெல் குணத்தில் கொல்லாஜன்திசு போலவே இருக்கிறது. சுற்றி வளரும் திசுக்களை பாதிக்காமல் அமைதியாக இருந்து வளர்வதற்கு இடம் தருகிறது. ஒரு ஆய்வகம், எலியின் இதயத்திலுள்ள செல்களை மட்டும் அப்படியே அலுங்காமல் கரைத்து நீக்கிவிட்டு செல்லின் இடையே காணப்படும் திடமான மேட்ரிக்ஸ்ûஸ மட்டும் எஞ்சி நிற்கும்படி செய்தது. எலியின் இதயம் இப்போது சிலந்தி ஒட்டடையால் ஆன கூடு போல மாறிவிட்டிருந்தது. அதன்மீது நோயரின் இதய செல்லை வளர்க்க விட்டதும் அது மேட்ரிக்ஸ் முழுவதும் நிரம்பி வளர்ந்து, "லப் டப்" என்று துடிக்க ஆரம்பித்தது. ஒன்று நிச்சயம், சக்கிதமான மேடரிக்ஸ் ஆதாரம் தயாரித்தவிட்டால் தசைகள் தானாகவே எழும்பிக்கொள்ளும்.

பிரின்ட்டிங் முறை

கம்யூட்டர் பிரின்ட்டரில் ஒரு வகை இங்க் ஜெட் பிரிண்டர் என்பது. அதில் ஊசித்துளை வழியாக இங்க் சிறு சிறு துளிகளாக தூவப்படும். இது தாளில் விழுந்து வடிவங்களாகும். அதே முறையில் திசுக்களுக்கான ஆதார சாரங்களை முப்பரிமானமாக உருவாக்குகிறார்கள். காற்று அல்லது வெளிச்சம் பட்டதும் அவை கெட்டியாகி விடுகின்றன. பின்னர் அதன் மீது செல்களை விதைத்து வளரவிடுகிறார்கள். இப்படி நிறைய உபாயங்களை சொல்லிக் கொண்டே போகலாம். திசு இஞ்சினியர்கள் ரொம்பவும் பிசியாக வேலை செய்கின்றனர். வெற்றி பெறும் தொழில் நுட்பம் உலகில் மிகப்பெரிய இலாபகரமான மருத்துவப் புரட்சியை செய்யும் என்பதில் சந்தேகமேயில்லை.

வேர்செல்கள்

ஒருபக்கம் திசுக்கட்டுமான ஆதாரப் பொருள்களின் கண்டுபிடிப்பு நடந்து கொண்டிருக்கையில், வேறு ஆய்வுக்கூடங்கள் வேகமாகப் பல்கிப் பெருகும் வேர் ùச்லகளைப் பெறுவதில் கவனம் செலுத்துகின்றன. வேர் செல்களும் மனித உடம்பிலிருந்து எடுக்கப்படும் செல்களே. இவற்றிற்கு ஒரு குணம் உண்டு. தக்க தூண்டுதல் கொடுத்தல் இவை இஷ்டப்பட்ட திசுவாக வளரும். ஒரே வேர் செல்லைப் பெருக்கி அதிலிருந்து எல்லாத் திசுக்களையும் உருவாக்க முடியும்.

வேர் செல்களை வளரும் கருவிலிருந்து பெறுவது சிறப்பு. அதற்கு அசாத்திய "வேர்" நிலை உண்டு. வளர்ந்த உடம்பிலிருந்தும் வேர் செல்களைப் பெறலாம். அவை ஏற்கனவே முற்றிய நிலையில் இருப்பதால் அதிலிருந்து "எல்லா" வகை திசுக்களையும் பெறமுடியாது. முற்றிய வேர்செல் சுலபமாகக் கிடைத்துவிடும். கருவிலிருந்து பெறும் வேர்செல்லுக்கு கருவை சிதைக்க வேண்டும். எனவே கரு வேர் செல்களின் திறமையை உடம்பு வேர்செல்லுக்கு வழங்கும் ஆய்வுகள் இன்னொருபக்கம் நடந்தபடியுள்ளது. பல கோணங்களிலிருந்தும் புதுப்புது திட்டங்களும், தீர்வுகளும் வந்தவண்ண முள்ளன. சீக்கிரத்திலேயே அவை ஒரு நிலையில் குவிந்து, ஆர்டரின் பேரில் உடல் உறுப்புகளைத் தயார் செய்து தரும் தொழில் நுட்பமாக மாறும்.

ஏற்கனவே வெற்றிக் கோட்டினை எட்டியவை:

தோல்: நோயரின் தோலிலிருந்தே எடுத்த செல்களைப் பயன்படுத்தி செயற்கையாக எப்பிடெர்மிஸ் என்ற மேல் தோலை "எப்பி செல்" கம்பெனி தயாரித்து விற்கிறது. ஆர்டர் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

கார்ட்டிலேஜ்: குறுத்தெலும்பு என்பார்கள். நோயரின் உடம்பிலிருந்து கான்ட்ரோ சைட்டுகளை எடுத்து குப்பிகளில் ஜெல் மாதிரி வளர்த்து, ஊசி மூலம் தேவைப்பட்ட இடத்தில் இஞ்செக்ஷன் செய்கிறார்கள். உணவு-மருந்து-நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்று கார்ட்டிசெல் என்ற பெயரில் விற்கப்படுகிறது. துண்டுக் குழாய்கள்: வேஸ்க்குஜெல் என்பது சொந்த எப்பித்தீலியத்திலிருந்து உருவாக்கப்பட்ட செயற்கை ரத்தக்குழாய். நைந்து கொண்டிருக்கும் இரத்தக் குழாய்மீது விரித்து விட்டால், இது தானாக செப்பனிட்டு குழாயை உறுதிபடுத்திவிடும்.

இரத்தக்குழாய் செய்தல்

கொஞ்ச நேரம் ஆக்ஸிஜன் சப்ளை இல்லாவிட்டால் எந்தத் திசுவும் உயிருடன் இருக்காது. இரண்டு அடுக்கு மட்டுமே உடைய திசுவாக இருந்தாலும் அதற்கிடையில் இரத்தக்குழாய்கள் இருந்தாக வேண்டும். எனவே திசுப்பொறியியலில் முதலில் செய்ய வேண்டியது வேண்டிய அளவில், வடிவில் இரத்தக்குழாய்களை திசுக்களுக்கிடையில் உருவாக்குவது.

நேனோ பரப்பு

செல்கள் வளர்ந்து கூட்டமாக இருக்கும்போது அக்கம்பக்கத்திலிருந்து வரும் கெமிக்கல் சிக்னல்களின் தூண்டுதல் மற்றும் பக்கத்து செல்லின் செயல் ஆகியவற்றைப் பொருத்து தம் உருவத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்கின்றன. அவை பரவிக் கொண்டிருக்கும் பரப்பின் பள்ளம் மேடுகளுக்கேற்பவும் வடிவத்தை செய்து கொள்கின்றன. வரிவரியாக மேடு பள்ளங்களை 600 நேனோமீட்டர் ஆழமும் 1200 நேனோமீட்டர் இடைவெளியும் உள்ளபடி செய்து அதன்மீது எப்பித்தீலியல் செல்களை வளரவிட்டால், அவை தானாக குழாய் வடிவில் இணைந்து கொள்கின்றன. ஆறு நாட்களில் இரத்தக்குழாய் வலைபின்னலாக மாறிவிடுகின்றன.

மைக்ரோ ஃ பேப்ரிகேஷன்

இது கல்லீரலுக்குள்ளேயே வைத்து பதியன் செய்யக்கூடிய செயற்கை கல்லீரல் திசுக்கட்டுமானம். முழு கல்லீரலையும் மாற்றுவதற்குபதில் உள்ளேயே புதைத்து வைக்கும் கட்டுமானம்.

1. சிலிக்கான் பரப்பில் தேவைக்கேற்ப இரத்தக்குழாய்பாதையை செதுக்கி அதை அச்சாகப் பயன்படுத்துதல்
2. உடல் நட்புடைய பயோபாலிமரில் மாற்றிக் கொள்கிறார்கள். இதில் எப்பித்தீலிய செல்களை விதைத்து வளரவிட்டால் இரத்தக்குழாய் வலை பின்னலாகிவிடுகிறது.
3. இன்னொரு ஆதார பயோபாலிமரில் கல்லீரல் செல்களை வேண்டிய வடிவத்தில் பாத்திக் கட்டி வளர்க்கிறார்கள். முடிவில் குழாய் ஆதாரம், கல்லீரல் ஆதாரம் என மாற்றி மாற்றி ஒன்றன் மீது ஒன்று அடுக்கி செயற்கை கல்லீரல் கட்டமைப்பை செய்து கொள்கிறார்கள்
4. அதை நேரடியாக கல்லீரலில் புதைத்தால் மிக நேர்த்தியாக வேலை செய்ய ஆரம்பித்துவிடுகிறது.

- முனைவர். க. மணி. பேராசிரியர், பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.
Thnxs:http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=2296:2010-01-20-07-14-46&catid=21:technology&Itemid

முளை வளருகிறது நாம் தான் அதை தடுக்கிறோம்

"உனக்கு மூளையே கிடையாதா? என்று யாரையும் திட்டாதீர்கள். எல்லோருக்கும் மூளையிருக்கிறது. அதுமட்டுமின்றி தினமும் மூளை வளருகிறது! ஒவ்வொரு நாளும் புதிதாக குறைந்தது 10,000 நியூரான் செல்கள் (நரம்பு செல்கள்) மூளையில் பிறக்கின்றன. பிறந்த ஒரு சில நாட்களிலேயே அழிந்துவிடுகின்றன. தினமும் புதிதாக நரம்புசெல்கள் பிறந்து உடனே அழிந்து போவதால் என்ன பயன்? மூளை வளருகிறது என்று எப்படி சொல்வது? புதிதாகப் பிறந்த நரம்பு செல்கள் சாகமல் உங்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்களேயானால் அதற்கு தினமும் புதிதாக எதையாவது நீங்கள் கற்றுக் கொள்ளவேண்டும். புதிதாகப் பிறக்கும் மூளை செல்லுக்கு வேலை கொடுக்கவில்லையானால் அது செத்துப்போய்விடும்.
இதுதான் என்றில்லை, எதை வேண்டுமானலும் கற்கலாம்; சீட்டாட்டத்தில் புதிதாக ஒரு டிரிக், செஸ் விளையாட்டில் புதிய மூவ், கித்தார் இசை, புதிதாக ஒரு ராகம், புதிய நாவல், கடினமான ஒரு கணக்கு..... குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் தினமும் ஏதாவதொன்றை முயன்று கற்றுக் கொண்டிருந்தால் தினமும் தோன்றும் 10,000 செல்களில் ஒரு சிலவாவது மூளையில் நிலைத்து நிற்கும்.
பாலூட்டி வகையைச் சேர்ந்த உயிரினங்களுக்குப் பிறந்தபோது எந்த அளவு மூளை இருந்ததோ, பெரியவர்களாகும்போது அதே அளவு, அல்லது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து சிறிதாகி விடும் என்றுதான் இதுநாள் வரை பலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். உடம்பில் வேறு எங்கு வேண்டுமானாலும் புதிதாக திசுக்கள் தோன்றினாலும் தோன்றலாம், மூளையில் மட்டும் அது சாத்தியமில்லை என்று 1990 வரை கருதிவந்தனர்.
ஆய்வுகள் அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டன.லிசபெத் கோல்டு (பெண்மணி) என்பவர் நரம்பு செல்கள் புதிது புதிதாக மூளையில் பிறக்கும் என்பதைக் கண்டுபிடித்தபின் நரம்பியலில் ஏகப்பட்ட மூளை வளரந்து கொண்டேபோனால் கபாலம் வெடித்துவிடுமே என்று பயப்படவேண்டாம். மூளையில் காதுக் கதுப்புக்கு உள்ளே இருபுறமும் உள்ள ஹிப்போக் கேம்பஸ் என்ற உறுப்பில்தான் புதிதாக நரம்புசெல்கள் தினமும் தோன்றுகின்றன. 1998 இல் ஸ்வீடனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து இது எலிகளுக்கு மட்டுமல்ல, மனிதருக்கும் பொருந்தும் என்று தெரிந்தது. gt;
அதெப்படி நரம்பு செல்கள் புதிதாக முளைக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள்? ரொம்ப சிம்ப்பிள். புரோமோ டி ஆக்ஸி யூரிடின் (Bromo deoxy uridine—BrdU)) என்ற கெமிக்கலை இரத்தத்தில் செலுத்தினால் எங்கெல்லாம் உடலில் புதிதாக செல்கள் முளைக்கின்றனவோ அந்த இடமெல்லாம் பளிச்சென்று ஒளி விடும். பச்சை நிற ஒளித்திட்டுகள் செல்கள் புதிதாகத் தோன்றியிருப்பதைக் காட்டிக் கொடுத்தவிடும். எலிகளில் சோதனை செய்தபோது ஹிப்போகேம்பஸ் பகுதியில் தினமும் 5000 முதல் 10,000 செல்கள் புதிதாகத் தோன்றுகின்றன என்பது தெரிந்தது.
Brain
மார ்ரிஸ் வாட்டர் மேஸ் (Morris Water Maze) என்று ஒரு பரிசோதனை. எலியை பால் விட்டு கலக்கிய கலங்கலான தண்ணீர்த் தொட்டியில் தூக்கிப் போட்டுவிடுவார்கள். தொட்டியிலிருந்து வெளியேற அது தத்தளித்து இங்கு மங்கும் நீந்தும். ஓரிடத்தில் பிளாட்பாரம் (மேடை) சட்டென்று புலப்படாமல் மறைந்திருக்கும். ஏதேச்சையாக அதைக் கண்டுபிடித்துவிட்ட எலி அடுத்த இரண்டு மூன்று பரிசோதனையில் அதைக் கற்றுக் கொள்ளும். தொட்டியின் உள்ளே காணப்படும் அடையாளங்களை நினைவில் வைத்துக் கொண்டு ஒரே தாவில் மேடையைக் கண்டுபிடித்துத் தப்பித்தவிடும். எலிகளுக்கு பயம், எச்சரிக்கை, தப்பிக்கும் தந்திரம் போன்ற புதிய அனுபவ அறிவுகளை வழங்கிவிட்டு, மூளையில் ஹிப்போ கேம்ப்பஸில் புதிய நரம்பு செல்களை புதிதாக தோன்றுகின்றனவா என்று எண்ணிப்பார்ப்பார்கள். இதில் பல புதிய தகவல்கள் கிடைத்தன.
தினமும் ஆயிரக்கணக்கான நரம்பு செல்கள் வேர்செல்களிலிருந்து உருவாகி முழுவளர்ச்சியை 14 நாட்களில் அடைகின்றன. இப்படி தினமும் பத்தாயிரம் செல்களாவது முற்றி நினைவுகளைப் பதித்துக்கொள்ள தயாராக நிற்கின்றன. அன்றைய தினம் ஏதாவது நினைவில் பதிய வேண்டியதாக இருந்தால் அதற்காக ஒரு சில செல்கள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு மற்றவை உடனே அழிக்கப்படுகின்றன. மறுநாள் இன்னொரு செட் நியூரான்கள் முற்றி தயார் நிலைக்கு வருகின்றன. எத்தனை செல்கள் தொடர்ந்து நீடிக்கின்றன என்பது கற்றுக் கொள்ளும் அனுபவம், அதன் தீவிரம், அவசரம், அவசியம் ஆகியவை பொறுத்து மாறுகின்றது. அதிக சிக்கலான அனுபவங்களுக்கு அதிக செல்கள் தேவைப்படுகின்றன.
எந்த செல்லை அழிப்பது எந்த செல்லை விடுவது என்பதை நிர்ணயிப்பது அந்தந்த செல்களே. நினைவுப் பதிவில் ஈடுபடும் செல்களைத் தவிர மற்றவை அழிந்துவிடுகின்றன. நினைவு ஆக்கத்தில் சம்மந்தப்பட்ட நரம்புசெல்லில் சில மாறுதல்கள் நடைபெறுகின்றன. நரம்பு செல் எப்படியிருக்கும் என்பதைக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். நரம்பு செல், நீண்ட காம்புடைய மல்லிகை மொட்டுபோல் இருக்கும். காம்பினை ஆக்ஸான் என்பார்கள். மொட்டுப்பகுதிதான் செல். அதிலிருந்து நிறைய தலை முடிபோல் இழைகள் வெளிப்படும்; அவற்றை டென்ட்ரைட் என்பார்கள். நினைவு ஆக்கத்தில் ஈடுபட்ட செல்லின் ஆக்ஸானின் முனை ஹிப்போக்கேம்பஸின் ஒருபகுதியாகிய CA3 என்று இடத்துடன் தொடர்பு கொண்டுவிடும். டென்ட்ரைட்டுகள் வேறு நரம்பு செல்களுடன் தொடர்பு கொண்டுவிடும். இப்படி தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளாத நரம்பு செல்கள் செத்துவிடுகின்றன.
Brain
பரிசோதனையின் மூலம் எலிகளின் மூளையில் நரம்பு செல் உருவாவதைத் தடுத்தால், அவை புதிதாக சொல்லித்தருவதைக் கற்றுக் கொள்வதில்லை. MAM என்று ஒரு கெமிக்கல்; இதை உடலில் செலுத்தினால் புதிய நினைவுகள், அறிவு அனுபவம் எதுவும் பதியாது. இது நேரடியாக நரம்பு செல்கள் வளர்வதைத் தடைசெய்கிறது. எலிகளிடம் சுலபமாக இப்படி சோதனை செய்யயலாம். மனிதர்களிடம் இது சாத்தியமில்லை, இருந்தாலும் எதிர்பாரதவிதமாக சிலவாய்ப்புகள் கிடைப்பதுண்டு, மூளையில் கேன்ஸர் ஏற்பட்டவர்களுக்கு "கீமோதெராப்பி" (Chemotherepy) என்று ஒரு சிகிச்சை செய்வார்கள், வீரியமிக்க கெமிக்கல் கேன்ஸர் செல்கள் வளருவதைத் தடைசெய்யும். ஹிப்போக்கேம்பஸிலும் செல்வளர்ச்சி தடை ஏற்படுவதால், சில பரிசோதனைகளை இந்நோயளிகளிடமும் செய்து பார்க்க முடிகிறது. இதை கீமோபிரெய்ன் (Chemo brain) என்பார்கள். சிலரிடம் அல்ஷெய்மர் என்ற நரம்பு செல் நோய் இருக்கும். ஹிப்போகேம்பஸில் பாதிப்பு ஏற்படும்போது அவர்களுக்கு நினைவுகள் மறப்பதும் புதிதாக எதையும் கற்றுக் கொள்ளமுடியாதிருப்பதும் தெரிகிறது.
முதுமை வரும்போதே கூடவே மறதியும், மந்த புத்தியும் வந்துவிடும். அவை வராமல் தடுக்க வேண்டுமாயின் அன்பர்களே தினமும் எதையாவது படியுங்கள், ஏரோபிக் உடற்பயிற்சி செய்யுங்கள், நண்பர்களுடன் பொழுது போக்குங்கள். செய்யக்கூடாதவை சிகரெட் பிடிப்பது, குடிப்பது, செய்யவேண்டியது உடற்பயிற்சி, பழங்கள் சாப்பிடுவது, புதிதாக கற்பது. ஆன்ட்டி டிப்ரசன்ட் மாத்திரைகள்கூட நரம்புசெல் நிலைப்பாட்டை அதிகரிக்கிறதாம்.
இந்தக் கட்டுரையைப் படித்தீர்கள் அல்லவா. இன்றைக்கு குறைந்தது நூறு நரம்புசெல்களாவது உங்களுக்குப் புதிதாகக் கிடைத்திருக்கும் அதற்கு நான் கியாரண்ட்டி!
- முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்

Sunday, November 20, 2011

கொலஸ்ட்ரால்(Cholestrol) என்றால் என்ன



(Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.
கொலஸ்ட்ராலின் தன்மைகள்
கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு, எல்லா செல்களுக்கும் வடிவம் கொடுத்து, அவைகளுக்குச் சுவராக இருந்து, இயங்கச் செய்கிறது. முக்கியமாக மூளையின் வளர்ச்சிக்கும், செல்களின் செயல் பாட்டிற்கும் இந்த கொலஸ்ட்டிரால் இன்றியமையாததாக இருக்கிறது.
கல்லீரலில் (Liver) இருந்து பித்த நீர் சுரக்க கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு தேவைப் படுகிறது. இந்த பித்த நீர்தான் (bile) உணவிலுள்ள கொழுப்பையும், மற்றும் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A,D,E,K முதலியவற்றையும் குடலில் ஜீரணமாக்கி, இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.
கொலஸ்டிரால், நம் உடம்பிற்குத் தேவையான முக்கியமான ஹார்மோன்களான உடல் வளர்ச்சி ஹார்மோன் (Growth hormone), ஈஸ்ட்ரஜன் (Estrogen) டெஸ்டோஸ்டிரான் (Testosterone) சுரப்பதற்கு தேவைப்படுகிறது.
நம் உடம்பிலேயே தயாராகும் வைட்டமின் ‘ஈ’ க்கு கொலஸ்ட்ரால் மிகவும் தேவைப்படுகிறது.
எது நல்ல கொலஸ்ட்ரால்?
LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால் HDLஎன்பது நல்ல கொலஸ்ட்ரால். ஏனென்றால் LDL ரத்தத்தில் அதிகமாக அளவு இருந்தால் இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்த LDL — இரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் படிகங்களாக படிந்து (Cholesterol plaque) இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடைபடச் செய்கிறது. இதற்கு Atherosclerosis என்று பெயர்.
ஆனால் HDL இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனால் இதனுடைய அளவு ரத்தத்தில் கூடுவது மிகவும் நன்மையானதாக கருதப்படுகிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எப்பொழுதும் புரதச் சத்து துணையுடன் தான் இருக்கும் (Lipoprotein)
கொழுப்புகளின் வகைகளும், அவற்றின் அளவுகளும்.
  • Total Cholesterol <–>200 mgm% மொத்த கொலஸ்ட்டிரால்
  • LDL Cholesterol <–>100 mgm% குறை அடர்த்திக் கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்
  • VLDLCholesterol <–>30 mgm% மிக குறை அடர்த்தி கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்
  • Triglycerides <130 mgm% முக்கிளிசரைடுகள்
  • HDLP Cholesterol <50 mgm % மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்ரால்
மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mgm% க்கு மேலே செல்லச் செல்ல மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகும். 10% அதிகமானால் 30% அதிக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மாரடைப்பு வந்தவர்கள் இதன் அளவை 180 mgm% க்கு குறைவாக வைத்துக்கொள்வது நல்லது.
குறை அடர்த்தி கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 100 mgm% அதிகமானால் 5 மடங்கு அதிகமாக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. இவர்களுக்கு பாரிச வாயு நோய் வர வாய்ப்புகள் அதிகம்.
முக்கிளிசரைடுகள் (TGL) நாம் உண்ணும் கொழுப்பு உணவிலிருந்து கிடைக்கிறது. மேலும், எந்தக் கொழுப்பையும், சர்க்கரையையும் கூட நம் கல்லீரல் முக்கிளிசரைடுகளாக மாற்றும் சக்தி கொண்டுள்ளது. ஆதலால் 150 mgm% அளவுக்கு மேற்பட்டால் பன்மடங்கு அதிக அளவில் மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 35mgm% கீழே இருந்தால் மட்டுமே மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. இதன் அளவு 50 mgm% க்கு மேலே அதிகமாக இருந்தால் மாரடைப்பைத் தடுக்கின்றது. இரத்தக் குழாயில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்டிராலை, அப்புறப்படுத்தி இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கவும் செய்கிறது.
கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகள்
பூரிதக் கொழுப்பு (Saturated fatty acid)
  • எந்த எண்ணெய் குளிர வைக்கும் பொழுது உறைந்து விடுகிறதோ, அவைகளில் மிக அதிக அளவு பூரிதக் கொழுப்பு உள்ளது. உதாரணம், நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய்.
  • ஐஸ்கிரீம், கேக், குக்கீஸ், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள் ஆகியவற்றிலும், முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் உறுப்பு இறைச்சிகளான கல்லீரல், மண்ணீரல், மூளை போன்றவற்றில் பூரிதக் கொழுப்பு அதிகமாக உள்ளது.
  • இந்த உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வதால், இதிலுள்ள கொழுப்பு நம் கல்லீரலில் அதிவேகமாக கொலஸ்ட்ராலாக மாறி, முக்கியமாக கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL-cholesterol BP ஆக இரத்தத்தில் கலந்து 100 mgm% அளவைவிட மிகுதியாகிறது. இதனால் இவைகள் இரத்தக் குழாய்களில் படிந்து (Atherosclerosis) மாரடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட காரணமாகிறது.
  • கொலஸ்ட்டிரால் அசைவ உணவுகளில் மட்டும்தான் உள்ளதே தவிர எந்த தாவர உணவிலும் கிடையாது. அப்படியிருக்க அனைவருக்கும் எழும் சந்தேகம், பாலும், பாலிலிருந்து கிடைக்கும் நெய், வெண்ணெய், பாலாடை போன்ற உணவுப் பதார்த்தங்கள் எந்த பிரிவில் சேர்க்கப்படுகிறது என்பதே.
  • பாலில் பூரித கொழுப்பு இருப்பதால், உடலில் ஜீரணமாகி நேரடியாக ரத்தத்தில் கலந்துவிடுகிறது.
  • ஒற்றை அபூரிதக் கொழுப்பானது (Mono unsaturated fatty acid -MUFA) கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.
  • பன்ம பூரிதக் கொழுப்பு (Poly unsaturated ftty acid -PUFA) சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய், சோளம் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.
  • இந்த உணவுகளை அளவோடு சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL cholesterol) அதிகரிப்பதைத் தவிர்த்து நல்ல கொலஸ்ட்டிரால் (HDL Cholesterol) அளவை அதிகரிக்கும்.
  • அபூரிதக் கொழுப்பு அதிகம் உள்ள எண்ணெயை கொதிக்க வைக்கும்போது, அதிலுள்ள நற்குணங்களை இழந்து, பூரிதக் கொழுப்பாக (Saternated fatty acid) மாறுகிறது. இந்த முறையில் தயாராகும் உணவுகளான அப்பளம், வடை, சிப்ஸ், பிரெஞ்ச் பிரைஸ் முதலியவற்றை அதிக அளவு உண்டால் இரத்ததில் கெட்ட கொரஸ்ட்டிரால் கூடி, நல்ல கொலஸ்ட்ரால் குறைந்து இரத்தக் குழாய்களை அடைக்கும். ஒரே எண்ணெயைப் பல முறை காய்ச்சி உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும்பொழுது இந்த தீமை பலமடங்கு உயர்கிறது.
  • ஒமேகா 3, ஒமேகா 6 என்பவை அதி முக்கிய கொழுப்பு வகைகள் ஆகும் (Essential fatty acid). இவைகளை நம் கல்லீரல் உற்பத்தி செய்ய முடியாது. உணவின் மூலமே இவை நமக்கு கிடைக்கிறது. இவைகள் இரத்தத்தில் உள்ள முக்கிளிசரைடுகள் குறைத்தும், நல்ல கொழுப்பை கூட்டியும், இரத்தம் உறையாமல் தடுத்தும், மாரடைப்பு வரும் வாய்ப்பையும் குறைக்கிறது.
  • இரத்தத்தில் ஒமேகா 3 ஒருபங்கு என்றால், ஒமேகா 6 இரு மடங்காக இருக்கும்.
ஒமேகா 3 உள்ள உணவுகள்
  • மீன், சால்மன் (Essential fatty acid), சுறா, வால்நட், சோயா, பிளாக்ஸ் விதைகள், அரிசி தவிட்டு எண்ணெய்
  • ஒமேகா 6 உள்ள உணவுகள்
  • சோளம், சூரியகாந்தி எண்ணெய், பருத்தி, வேர்க்கடலை, சோயாபீன்ஸ் மற்றும் விதைகளிலும், பருப்புகளிலும் கிடைக்கிறது.
எவ்வாறு நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பது?
நல்ல கொலஸ்ட்ரால் உருவாவதற்கு மூல காரணம் கல்லீரல்தான். அதனால் கல்லீரலை தூண்டக்கூடிய மருந்துகள், உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் நம் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க முடியும்.
கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலம் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க முடியும்:
  • · சீரான உடற்பயிற்சி
  • · உடல் பருமனைக் குறைத்து சீரான எடையில் இருப்பது.
  • · புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பது.
  • · மது அருந்துவதைத் தவிர்ப்பது
  • ·அதிகமான பழ வகைகளையும், நார்ச்சத்துள்ள காய்கறிகளையும் உணவில் சேர்ப்பது.
  • · அசைவ உணவு உண்பவர்கள், மீன் உட்கொள்வது நல்லது.
  • · பிட்ஸா, பர்கர், சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், அப்பளம், வடைபோன்றவற்றை தவிர்ப்பது .
  • · யோகாசன பயிற்சி செய்வது,
  • · தியானப் பயிற்சி செய்வது .

Monday, November 7, 2011

இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது


இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?
ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே ஹீமோகுளோபின்” என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகைரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.
ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள் தொகைக்கு ஏறக்குறைய இணையான அளவுக்கு இருக்கும்.
ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது?
http://www.beltina.org/pics/bone_marrow_transplantation.jpg
எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள்வெள்ளை அணுக்கள்பிளேட்லட்டுகள் உற்பத்தியாகின்றன.
 This is the structure of bone marrow
ரத்த சிவப்பு அணுகளின் ஆயுள் எவ்வளவு?
ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப் பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள்முட்டைக் கோஸ்முட்டைஇறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால் ரத்த சோகை வராது.
ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?
ரத்த வெள்ளை அணுக்களை படைவீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போராடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.
ரத்தத்தில் உள்ள பிளேட்லட்” அணுக்களின் வேலை என்ன?
உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி பிளேட்லட்” அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி கார்க்” போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தக் கசிவை இவை தடுத்துவிடும். டெங்குகடும் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.
பிளாஸ்மா என்றால் என்ன?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcj7EXS1RrOCEOmhFiULK6bLSIIsrBWRn9cfpEK3RpGtk7vCwHCOpisbGYw-iyJOu9oHb3UGa_J39377wZEjpNG5pykqFunghYNqpKwo92h-ZsZrepW6Wq2N9R6zwzVKbSboI0PFbd2AvE/s320/blood+plasma.gif
ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர். வைட்டமின்கள்தாதுப்பொருள்கள்ரத்தத்ததை உறைய வைக்கக்கூடிய காரணிகள்புரதப் பொருள்கள் இருக்கும். தீக்காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.
ரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?

http://thejunction.net/wp-content/uploads/2009/04/bloodcomposition.jpg 
ரத்த சிவப்பு அணுக்கள்ரத்த வெள்ளை அணுக்கள்பிளேட்லட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் பிளாஸ்மா” என்ற பொருளும் உள்ளது.
ரத்த அழுத்தம் என்றால் என்ன?
உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் பம்ப்’ செய்யும் போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப்பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.
உடலில் ரத்த பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெரியுமா?
ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோ மீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செலுத்தும்போதுஅதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! மோட்டார் சைக்கிளின் சராசரி வேகத்தை விட அதிகம்.
மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?
மாத்திரை சாப்பிட்டவுடன்அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
உடலில் ரத்தம் பயணம் செய்யும் போது எடுத்துச் செல்வது என்ன?
எல்லாத் திசுக்களுக்கும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து,மாவுச்சத்துபுரதம்தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.
ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?
நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் - டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்து வந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.
24 மணி நேரத்தில் சிறுநீரகங்கள் வெளியேற்றும் சிறுநீரின் அளவு எவ்வளவு தெரியுமா?
24 மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700 லிட்டர் ரத்தத்தை சிறுநீரகங்கள் சுத்திகரிப்பு செய்கின்றன. இதில் ஒன்றரை லிட்டர் சிறுநீரை அவை வெளியேற்றுகின்றன.
தலசீமியா என்பது தொற்றுநோயா?
இது தொற்று நோய் அல்ல. தந்தைக்கோ அல்லது தாய்க்கோ தலசீமியா நோய் இருந்தால் குழந்தைக்குப் பிறவியிலேயே இந்நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த பிறகு இந்நோய் வரவாய்ப்பில்லை.
மூளையின் செல்களுக்கு ரத்தம் செல்லாவிட்டால் விளைவு என்ன?
மூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லுவது ரத்தம்தான். தொடர்ந்து மூன்று நிமிஷங்களுக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் மூளையின் செல்கள் உயிரிழந்துவிடும். உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும் மூளையில் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
ரத்தம் உறைவதற்கு எது அவசியம்?
ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்ரினோஜன் என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 - 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்ரினோஜன் உள்ளது.
ரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?

http://schools-wikipedia.org/images/594/59443.png
ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. ‘A’, ‘B’, ‘AB’, ‘O’ (ஓ) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர ‘A1’, ‘A2’என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. ‘O’ பிரிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு யுனிவர்சல் டோனர்’ என்று பெயர்.
ரத்தம் எவ்வாறு குரூப் வாரியாக பிரிக்கப்படுகிறது?
ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒருவகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிரிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால், A குரூப் ஆகும். B ஆன்டிஜன் இருந்தால் B குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (ஓ) குரூப் ஆகும்.
ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தைஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா?
செலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்கவேண்டும் அல்லது குழந்தைப்பேறு இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்கவேண்டும். இளம்பெண்களுக்கு மாறுபட்ட ஆர்எச் ரத்தத்தைச் செலுத்தக்கூடாது.
ஆர்எச் ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?
கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே கணவன்-மனைவி இருவரும் ரத்தப்பிரிவை சோதனை செய்வது அவசியம். கணவன்-மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தரித்தவுடனேயே மகப்பேறு மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.
கர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் ரத்தப்பிரிவு இருந்தால் ஏன் உஷார் தேவை?
கணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில்அது தாயின் நெகட்டிவ் ரத்தக் காரணியுடன் கலந்துதாயின் உடலில் எதிர் அணுக்கள் உற்பத்தியாக வழிவகுத்துவிடும்.
ஆர்எச் பாசிட்டிவ்ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிரிக்கப்படுகிறது?
ரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் ரத்தத்தில் இதுபோன்ற ஆர்எச் காரணி இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்இல்லாவிட்டால் ஆர்எச் நெகட்டிவ். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு ஆர்எச் பாசிட்டிவ் வகை ரத்தக் காரணிதான்.
தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணிபிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவு என்ன?
தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின் போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் ரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்துவிடும் அபாயம் உண்டு.
தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்)பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவைத் தடுப்பது எப்படி?
நெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம். குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்கும் நிலையில்கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசிபோட வேண்டும். இந்த ஊசிக்கு “Anti D” என்று பெயர்.
ரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்?
வயது (18-55), எடை (45 கிலோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச்சோதனைகள் அவசியம்.
யார் ரத்த தானம் செய்யக்கூடாது?

http://www.bloodindia.com/image5/Blood_Group_Compatibility.gif
உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள்சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள்எய்ட்ஸ் நோயாளிகள்பால்வினை நோய் உள்ளவர்கள்வலிப்பு நோயாளிகள்நுரையீரல் நோய் உள்ளவர்கள்ஹெபடைடிஸ் பி,சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர்போதைப் பழக்கம் உள்ளவர்கள்உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் ஆகியோர் ரத்ததானம் செய்யக்கூடாது.
மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு ரத்தம் கிடைக்கிறதா?
இல்லை. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்தம் தானம் செய்தாலேரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுத்துவிடலாம்.
தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா?
புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்திரியை நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு, 24மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.
ரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா?
நன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்தம் தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்ப தும் நல்லது. ரத்தம் தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தை விடக் குறைவுதான்.
ரத்த தானம் செய்த பிறகு ஓய்வு அவசியமா?
ரத்த தானம் செய்த பிறகுரத்த வங்கியிலிருந்தோ அல்லது முகாமிலிருந்தோ உடனடியாகச் செல்லக்கூடாது. மாறாக,குளிர்பானம்பிஸ்கட் சாப்பிட்டு 15 நிமிஷம் ஓய்வு எடுக்கவேண்டும். அடுத்த வேளை உணவை நன்றாகச் சாப்பிடுவது நல்லது. உங்களது தினசரி வேலைகளைத் தொடர்ந்து செய்யலாம்.
 

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites