இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label பானை ஓவியம். Show all posts
Showing posts with label பானை ஓவியம். Show all posts

Sunday, July 15, 2012

பானை ஓவியம்

தேவையான பொருட்கள்:

செராமிக் பவுடர்
ஃபெவிக்கால்
தண்ணீர்
ப்ரஷ்(flat)
plywood
ஸ்ப்ரே (spray color)
தேவையான கலர்பவுடர் (அ) acrylic colors
கார்ன்ஃப்ளோர் க்ளே

செய்முறை:

முதலில் செராமிக் பவுடர், ஃபெவிக்கால், தண்ணீர் சேர்த்து 3:2:1 என்ற விகிதத்தில் கலந்து, ப்ளைளைவுட்டின்மேல் ஆள்காட்டி விரலில் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தடவிக்கொண்டேவரவேண்டும். நன்றாக காய்ந்த‌தும் தேவையான அக்ரிலிக் கலரை தடவி காய விடவேண்டும். நன்றாக காய்ந்த‌தும் கலர் ஸ்ப்ரே ஆங்காங்கே அடிக்க வேண்டும், இதை 8 மணி நேரம் காயவிடவும்.இப்பொழுது க்ளே பூக்கள் மற்றும் இலைகள் செய்து அழகுபடுத்தவும். படத்தில் பார்த்தால் நன்றாக புரியுமென நினைக்கிறேன். dark and light shade வருவதற்கு கொஞ்சம் க்ளேயில் டார்க் பிங்க், அடுத்து light pink அடுத்து அதைவிட லைட்கலரில் கலந்து கொள்ள வேண்டும்.







பானை ஓவியம்

பானைக்கு முதலில் கறுப்பு ஃபேப்ரிக் கலர் கொடுத்து காயவிடவேண்டும்.காய்ந்ததும் பிங்க் பியர்ல் கலர் கொடுத்து(தேவைப்பட்டால் மீடியம் சேர்த்துக்கொள்ளலாம்) ஜாயிண்ட் இடங்களைதவிர மீதி இடங்களில் அடித்து கொள்ளலாம். காயவிட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்பொழுது பானை ரெடி.

மேலும் இது மினியேச்சர் ரோஸ் என்பதால் சிறு விளக்கத்துடன்....
க்ளேவை 5 பாகமாக பிரித்து வைத்துக்கொள்ளவும். மேலும் இந்த 5 பாகத்தை ஒவ்வொரு பாகத்தையும் இரண்டாக பிரித்து சிவப்பு டார்க் மற்றும் லைட் ஷேட் கலர் கொடுத்து பிசைந்து வைத்துக்கொள்ளவும் இவ்வாறு மீதியுள்ள க்ளேவிற்கும் எந்த கலர் தேவையோ இரண்டு ஷேட் கலர் கொடுத்து ஸிப்லாக் கவரில் வைத்துகொள்ள வேண்டும்.
தேவைப்படும் போது எடுத்து ரோஜாப்பூக்கள் செய்துக்கொள்ளலாம்.
முதலில் சிறிது எடுத்து திலகம் போல் உருட்டி கொள்ள வேண்டும்.இன்னொரு சிறு உருண்டை எடுத்து தட்டையாக்கி அந்த திலகத்தின் மேல் ஒட்டினால் இதழ் போல் இருக்கும் இவ்வாறுஒன்ரின் மேல் ஒன்றாக ஒட்டிக்கொண்டே வரவேண்டும்.இப்படியே அனைத்து ரோஜாக்களும் செய்துக்கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒவ்வொரு பானைக்கும் ஒரேகலரில் உள்ள ரோஜாக்களை 4,5 அடுக்கலாம்.
பார்ப்பதற்கு அழகான கண்ணைகவரும் பானை மற்றும் ரோஜாக்கள் ரெடி.





பானை ஓவியம்


தேவையான பொருட்கள்:
  • பானை
  • உப்பு காகிதத் தாள்
  • பிரஷ்
  • fabric கலர்கள் (சிவப்பு, மஞ்சள், பச்சை, கருப்பு, மெட்டல்)
  • எம்சீல்
  • பெவிகால்
  • வார்னிஸ்
செய்முறை:
  • பானையை உப்புத்தாள் கொண்டு நன்கு தேய்க்கவும்.
  • பின்பு நன்றாக தண்ணீரில் 1மணி நேரம் ஊறவைத்து காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பானை முழுவதிற்கும் கருப்பு fabric கலரை அடிக்கவும். 1/2மணி நேரம் காயவிடவும்.
  • பின்பு பாதியளவு மெட்டல் கலரை அடிக்கவும். 1/2மணி நேரம் காயவிடவும்.
  • எம்சீலில் இரண்டு கலர் இருக்கும். அதனை எடுத்து நன்றாக மிக்ஸ் பண்ணி பிசைய வேண்டும்… 5 நிமிடம் ஊறவிடவும்.
  • பின்பு பூ இதழ்களுக்கு சிறிது எம்சீல் கலவையை எடுத்து திலகம் shapeல் உருட்டி ஒரு விரல் கொண்டு அழுத்தினால் மேலே மட்டும் விரியும். மேலே மட்டும் இரண்டு சைடு சுருட்டி விடவும். இப்படி எவ்வளவு தேவையோ எடுத்து காயவைத்துக் கொள்ளவும்.
  • இலைகளுக்கு திலகம் shapeல் உருட்டி ஒரு விரல் கொண்டு அழுத்தினால் இலை shape வந்து விடும். அதில் சிறு குச்சி எடுத்துக் கொண்டு இலைகளில் இருப்பது போல் கோடுகள் வரையவும். எவ்வளவு தேவையோ எடுத்து காயவைத்துக் கொள்ளவும்.
  • கொடிகளுக்கு சிறு உருண்டை எடுத்து நீளமாக மெல்லதாக உருட்டி எடுத்துக்கொள்ளவும். இதனை காயவைக்க தேவையில்லை.
  • பின்பு பானையில் பூவிதழ் கொண்டு பூவையையும் இலையையும் கொடியையும் பசை கொண்டு ஒட்டி காய விடவும்.
  • பூவிற்கு சிவப்பு கலரும், இலை மற்றும் கொடிக்கு பச்சை மஞ்சள் கலரையும் அடிக்கவும்.
  • பின்பு நன்றாக நிழலில் காயவிடவும்.
  • காய்ந்த பின்பு வார்னிஸ் அடித்து காயவிடவும்.
  • அழகான பூந்தொட்டி தயார்.

பானை ஓவியம்

நட்சத்திர ஓட்டல்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள், பிரபலங்களின் வீடுகளில் வரவேற்பறையை அலங்கரிக்கும் அழகழகான பானைகளைப் பார்த்திருப்பீர்கள். வெறும் பானையாகவோ அல்லது பூங்கொத்து அலங்காரங்களுடனோ அழகு சேர்க்கும் அந்தப் பானைகளுக்கு ‘டெரகோட்டா பாட் பெயின்டிங்’ என்று பெயர்! டேபிளின் மேல் வைக்கிற குட்டி பானை முதல், ஆளுயர பானை வரை விதம்விதமான அளவுகளில் டெரகோட்டா பானை ஓவியங்கள் 
என்னென்ன தேவை? முதலீடு?
‘‘டெரகோட்டா பானைகள் (சாதாரண பானைகள் விற்பவர்களிடமே கிடைக்கும்), செராமிக் பவுடர், ஃபேப்ரிக் பெயின்ட், ஆயில் பெயின்ட், வார்னிஷ், பிரஷ், பசை.... பானை 30 ரூபாயிலிருந்து கிடைக்கும். செராமிக் பவுடர் 1 கிலோ 40 ரூபாய். பானைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, மத்த பொருள்களுக்கும் சேர்த்து ஆயிரம் ரூபாய் முதலீடு போதுமானது.’’

எத்தனை மாடல்? என்ன ஸ்பெஷல்?
‘‘பானையின் வடிவத்தைப் பொறுத்தது மாடல்... வட்டம், நீளம், கிண்ண வடிவம், கூஜா வடிவம் என விதம்விதமான வடிவங்கள்ல பானைகள் கிடைக்கும். தேவைக்கும், இட வசதிக்கும் ஏத்தபடி டிசைன் பண்ணிக்கலாம். பூ டிசைன்தான் ரொம்பப் பிரபலம். பழக்கொத்து, மரக்கிளையில பறவைகள் உட்கார்ந்திருக்கிற மாதிரியும் பண்ணலாம். பெயின்ட் பண்ணி, வார்னிஷ் அடிச்சிட்டா, எத்தனை வருஷமானாலும் பானையோட அழகு மாறாம, புதுசாவே இருக்கும்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?
‘‘நட்சத்திர ஓட்டல்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள், பார்ட்டி ஹால், வீடுகள்னு எல்லா இடங்கள்லயும் இதுக்கான தேவை இருக்கு. கிரகப்பிரவேசத்துக்கு பொருத்தமான அன்பளிப்பு. சின்ன சைஸ் பானைக்கான அடக்க விலை 150 ரூபாய் ஆகும். அதை 300 ரூபாய்க்கு விற்கலாம்.’’


தேவையான பொருட்கள்:
மண்பானை 1
சிவப்பு எனாமல் கலர் 50மில்லி
வார்னிஷ்
செராமிக்பவுடர்
ஃபெவிக்கால்
தண்ணீர்
பாலித்தீன் கவர்
கத்தரிக்கோல்
ரங்கோலி கலர் பவுடர்
கண்ணாடி உருண்டை வடிவம்
கோல்டன் கலர் 3டி அவுட்லைனர்.

செய்முறை:

முதலில் பானையை கழுவி காயவிடவும்
காய்ந்ததும் சிவப்பு எனாமல்கலர் அடித்து காய்ந்ததும் மறுபடி இன்னொரு கோட் அடிக்கவும் அப்பொழுதுதான் ஷைனிங்காக இருக்கும்.
பாலித்தீன் கவரை கோன்போல் செய்துக்கொள்ளவும்.
செராமிக்பவுடரில் தேவையான கலர்பவுடரை சேர்த்து ஃபெவிக்கால்விட்டு கலந்துகொள்ளவும் மேலும் பேஸ்ட் போல் வருவதற்கு தண்ணீர் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
இதை கோனுக்கு மாற்றி டேப் போட்டு ஒட்டவும்.
கோனில் சிறு ஓட்டை போட்டு டிசைனை வரையலாம்.இந்த பானையில் முதலில் உருண்டை வடிவம் வரைந்து அதன் மேலும் கீழும் அவுட்லைன் போடவும், மேலும் 
கற்பனைக்கு ஏற்றவாரு டிசைன் செய்து, ரவுன்ட் ஷேப்பில் கண்ணாடி பதித்து சுற்றி கோல்டன் க்ளிட்டர் கலரை அவுட்லைன் கொடுக்கவும்.
முழுவதும் முடிந்து காய்ந்ததும் வார்னிஷ் அடிக்கவும்.இதனால் இன்னும் ஷைனிங்காக இருக்கும்.


பானை ஓவியம்

பானை அலங்காரம் 
தேவையான பொருட்கள்:
மண்பானை 1
ஃபெவிக்கால்
டிஷ்யூ பேப்பர்
தண்ணீர்
கருப்பு(ஃபேப்ரிக் கலர்)
கோல்ட் டஸ்ட்
ப்ரஷ்

செய்முறை:

முதலில் ஃபெவிக்கால், தண்ணீர் (1:3) என்ற விகிதத்தில் கலந்து வைத்துகொள்ளவேண்டும்.
மண்பானையின் மேல் டிஷ்யூ பேப்பர் வைத்து இந்த ஃபெவிக்கால் கலவையை சிறிது சிறிதாக பூச வேண்டும்.
முதலில் பானை முழுவதும் ஒட்டி நன்றாக காய்ந்ததும், அடுத்த லேயரை ஒட்ட வேண்டும்.

இப்பொழுது இந்த லேயரும் காயவைக்க வேண்டும்.
இந்த லேயர் காய்வதற்குள், நம்க்கு தேவையான டிசைனில் பூக்கள் செய்து வைத்துக்கொள்ளலாம்.
எம்சீலை எடுத்து இரண்டு கலவையும் நன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதை திலகம் போல் உருட்டி கத்தியில் நடுவில் கோடு போட்டால் பூக்களுக்கு இதழ்கள் ரெடி. இப்பொழுது சிறிது எடுத்து காம்பு,இலைகள் போண்றவற்றை செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்பொழுது பானையும் காய்ந்துவிட்டிருக்கும். இதன் மேல் செய்து வைத்திருக்கும் பூக்களை ஒட்ட வேண்டும். இவை நன்றாக காய்ந்ததும்,
ஃபேப்ரிக் கருப்பு கலரை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலந்து கலர் அடிக்க வேண்டும். லேசாக கலர் காய்ந்ததும் அங்கங்கே கோல்ட் டஸ்ட் தூவி டிஷ்யூ பேப்பரில் அனைத்து இடங்களுக்கும் ஒற்றி ஒற்றி எடுத்தால் அழகான கண்ணை கவரும் பானை ரெடி.பூக்களுக்கு மட்டும் நான் கோல்ட் கலர் கொடுத்திருக்கேன்.




பானை ஓவியம்


இது நானேயல்ல!….(சுயசரிதை)

20FEB
ஒர் ஆங்கில தம்பதியினர் ஒரு முறை பொருட்க்கள் வாங்க கடைக்கு சென்றார்கள். இவர்களுக்கு பழங்காலத்து அழகிய பொருட்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே மிக அழகாக வண்ணம் தீட்டப்பட்ட ஓர் அழகு தேனீர் குவளை (tea cup) ஒன்றை பார்த்தார்கள்.“ இந்த குவளை மிகவும் அழகாக இருக்கிறதே. இதையே நாம் வாங்கி விடலாமே! இதைப்போன்ற ஓர் அழகான குவளையை நான் இது வரை பார்த்ததில்லை” என்றாள் மனைவி.குவளையை கைகளில் வாங்கிய அந்த மனைவி அதன் அழகை ரசித்துக் கொண்டிருக்கையில் அந்த குவளை பேசத் துவங்கியது:“நான் எப்படி இவ்வளவு அழகான குவளையாக மாறினேன். தெரியுமா?” என்றது.
இப்படி அழகான குவளையாக ஆகும் முன் நான் ஒரு அழுக்கான சிவப்பு நிறம் கொண்ட ஒரு அழுக்கான சிவப்பு நிறம் கொண்ட ஒரு களிமண்ணாயிருந்தேன். என்னுடைய முதலாளியான குயவன் அழுக்கான என்னை எடுத்து என்னை தட்டி ஒரு உருண்டையாக மாற்றினார். அவர் என்னை தட்டி உருண்டையாக அழுத்தியபோது “ஜயா வேண்டாம்.. வேண்டாம்” என்று கதறி அழுதேன்.
“என்னை விட்டுவிடுங்கள்” என்று கெஞ்சினேன். ஆனால் அவரோ “உன்னை விட்டுவிடும் நேரம் இன்னும் வரவில்லை” என்றார்.
அதற்கு பின் உருண்டையான என்னை ஒரு சக்கரத்தின் மீது வைத்தார். திடீரென்று என்னை அவர் சுற்றிவிட நான் சுற்றி சுற்றி வந்தேன். “ஜயோ! நிறுத்துங்கள்! எனக்கு மயக்கமாக வருகிறது. என்னை விட்டுவிடுங்கள். என்று கதறினேன்.
ஆனால் என் குயவனோ “உன்னை விட்டுவிடும் நேரம் இன்னும் வரவில்லை” என்றார். அதற்கு பின் என்னை ஒரு சூளையில் போடட்டார். அப்பப்பா! அதைப் போல் வேதனையை என் வாழ் நாளில் எப்பொழுதும் நான் அனுபவிக்கப்போவதும் கிடையாது. “எதற்க்காக இந்த கொடிய குயவன் இப்படி என்னை வேதனைப்படுத்துகிறான்?” என்று புலம்பினேன்.
கதறினேன்! அழுதேன்! சூளையின் சுவர்களை உதைத்தேன். சூளையின் வாய் வழியாக அவர் முகம் தெரிந்தது. கைகளை கூப்பி “தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்” என்று கெஞ்சினேன்! அதற்கு அவர் உன்னை விட்டுவிட நேரம் இன்னும் வரவில்லை” என்றார்.
ஒரு வழியாக சூளையின் கதவை திறந்தார். அந்த குயவன். என்னை ஒரு பரண் மேல் வைத்து ஆற விட்டார். அப்பா! சொஞ்சம் இன்பமாக இருந்தது. பின்பு தன் கரங்களால் அழகான வர்ணத்தை என் மீது திட்டினார். ஜயா! அந்த வண்ண பிரஷை என் மீது தடவ தடவ எனக்கு மறுபடியும் வெதனை உண்டாயிற்று “நிறுத்து! நிறுத்து” என்றேன்.
நிறுத்தும் நேரம் இன்னும் வரவில்லை” என்றார். தீடிர்ரென்று என்னை மறுபடியும் ஒரு சூழையில் போட்டார். இது இதற்கு முன் இருந்த சூழையைப்போல் இல்லை அதைப்போல் இரண்டு மடங்கு சூடு எனக்கோ முச்சு திணறியது கெஞ்சினேன் மன்றாடினேன்.
கதறினேன். “இதற்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா? உங்களுக்கு மனிதாபிமானமே இல்லையா? என்னுடைய இடத்தில் கொஞ்சம் உங்களை வைத்துப் பாருங்களேன்?” என்றேன். கோபமாக அவரும் தலையசைத்துக்கொண்டே “உன் நேரம் இன்னும் வரவில்லையே” என்றார்.
“இதற்கு மேல் எந்த நம்பிக்கையும் இல்லை” என்ற முடிவிற்க்கு வந்தேன். இவரிடமிருந்து தப்பிக்கவே முடியாது என்று நினைத்தேன். முற்றிலும் சரணடைந்தேன். உடனே தீடிர் என்று கதவுகள் திறந்தன. என்னை அவர் கையில் ஏந்தினார். ஒரு அலங்கார இடத்தில் வைத்தார். சுமார். ஒரு மணிநேரம் அப்படியே நான் நின்ற பின் உள்ளே சென்று ஒரு கண்ணாடியை எடுத்துக்கொண்டு வந்து “இதோ! இதில் பார்” என்றார்.
பார்த்தவுடன் அதிர்சியுற்றேன். “இது நானல்ல!” என்று கதறினேன். நான் அவ்வளவு அழகாக காணப்பட்டேன்.
இப்பொழுது அவர் பேசினார் “மகனே! உன்னை உருட்டி சுற்றுவதால் உனக்கு எவ்வளவு துரம் வேதனையாய் இருக்கும் என்பதை நன்கு அறிவேன். ஆனால் நான் மட்டும் உன்னை எடுக்காமல் அப்படியே விட்டு விட்டிருந்தால் நீ காய்ந்து ஒரு மண்கட்டியாக போயிருப்பாய் நான் உன்னை வனையும் சக்கரத்தின் மீது போட்ட போதும் அந்த சக்கரத்தை சுற்றிவிடும் போதும் அது உனக்கு எவ்வளவு வேதனையை கொடுத்திருக்கும் என்று எனக்கு நன்றாக தெரியும் ஆனால் நான் மட்டும் அப்படி செய்யாதிருந்தால்நீ நொறுங்கி போயிருப்பாய். உன்னை சூளையில் போட்ட போது அது உன்னை சுட்டெரிக்கும் என்று எனக்கு நன்றாக தெரியும் ஆனால் அப்படி நான் செய்யாதிருந்தால் நீ இந்நேரம் வீறல் விட்டிருப்பாய்.
நான் உன்மேல் ஓவியம் தீட்டும்போது உன் கன்னங்கள் வலித்தது எனக்கு தெரியும் நான் அதை அறிவேன். நான் அப்படி செய்யாதிருந்தால் உன் வாழ்க்கையில் வண்ணமயமான அற்புதங்கள் நடந்திருக்காது.
இப்பொழுது என் கைவண்ணம் உன் மேல் பட்டு நீ ஒர் அழகான குவளையாய் மாறியிருக்கிறாய் நீ என்னவாக வேண்டும் என்று நான் என் மனதில் திட்டமிட்டிருந்தேனோ? அதேபொல் மாறியிருக்கிறாய்.
இதை வாசிக்கும் அன்பு நண்பர்களே! உன்னுடைய வாழ்கையிலும் இதையே தான் செய்கிறார். உன்னை வைத்து என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு நன்றாக தெரியும் அவர் குயவன் நீ வெறும் களிமண். உன்னை அநேக வேதனைக்குள் வழிநடத்தக்கூடிய நிர்ப்பந்தங்கள் எற்ப்படலாம்.சுட்டெரிக்கும் தீயினால் உன் விசுவாசம் சோதிக்கப்படலாம் ஆனால் என்னதான் உன் சூழ்நிலைகள் உன் பெலத்தை மிஞ்சி போனாலும் சரி. உன் வாழ்க்கை அவரது கரங்களில் பத்திரமாக இருக்கிறது என்பதை மறவாதே.
நீ காண்கிற உன் சுழ்நிலைகளை வைத்து உன் எதிர்காலத்தையோ கர்த்தரையோ எடைபோட்டுவிடாதே. உன்னை அவரது உள்ளங்கைகளில் வரைந்து வைத்திருக்கிறார். என்பதை மறவாதே. ஆகவே! உன் சூழ்நிலைகளின் மேல் அவரது வல்லமை விளங்கி கொண்டிருக்கிறது என்பதை மறவாதே.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites