இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label தெரிந்து கொள்ளுங்கள் உடல் கட்டுப்பாடு. Show all posts
Showing posts with label தெரிந்து கொள்ளுங்கள் உடல் கட்டுப்பாடு. Show all posts

Tuesday, January 29, 2013

உடலின் பாத்ரூம் ஒழுங்கா இருக்கா?


ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்பறையைப் பார்த்தால் தெரிந்துவிடும். அதுபோலத்தான் நம் உடலும்... நாம் முழுமையான ஆரோக்கியத்தோடு இருக்கிறோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத்துச் சொல்லிவிடலாம்...�� என்று எளிமையான உதாரணத்தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன்.


சிறுநீரகத் துறையில் உலகின் மிக முக்கியமான மருத்துவரான டாக்டர் சௌந்தரராஜன் சிறுநீரகம் தொடர்பான நம் ட்வென்டி 20க்கு பளிச் பதில்கள் அளித்தார். இதோ அந்த டிவென்டி 20.

யாருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும்?

சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உப்புநீர் வியாதி, சிறுநீர் அழற்சி, சிறுநீரகக் கற்கள், சிறுநீர் அடைப்பு மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக எடுத்துக்கொள்பவர்களுக்கு சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழப்பு ஏற்படும்.

பாதிப்பு உண்டாக்கும் காரணங்கள் வேறென்ன?


வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியால் உடலில் நீர் வற்றிப்போவதாலும், பாம்புக்கடி, விஷப் பூச்சிக் கடி, எலி ஜுரம் மற்றும் வலி நிவாரணிகளால் ஏற்படும் ஒவ்வாமையாலும் சிறுநீரகம் தற்காலிகச் செயலிழப்பு ஏற்படும்.

சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படாமல் தடுக்க முடியுமா?

முடியும். எடுத்த எடுப்பிலேயே ஒருவருக்கு நிரந்தரச் செயலிழப்பு ஏற்படாது. படிப்படியாகத்தான் பாதிக்கப்படும். அதனால், ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் நிரந்தர செயலிழப்பிலிருந்து தப்ப முடியும்.

அதை எப்படி கண்டுபிடிப்பது..?

வருடத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளும்போது சிறுநீரகத்தையும் சோதித்துக்கொள்வது நல்லது. பிரச்னை இருந்தால், இந்த சோதனையில் தெரிந்துவிடும். ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், பின்னால் அவஸ்தை இருக்காது. அவசியமாக சிறுநீர், ரத்தம், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் இணைந்த விளக்கமான சிறுநீரக இயக்கச் சோதனை செய்துகொள்வது நல்லது.

அறிகுறிகள் இருக்குமா..?

இருக்கும். கை&கால்களில் வீக்கம் ஏற்படும். ஆனால், எல்லா வீக்கமும் சிறுநீரக பாதிப்பால் மட்டுமே ஏற்படுவது இல்லை. ஆனால், சிறுநீரக பாதிப்பால்தான் ஏற்படுகிறது என்பதை கண்டறிந்துவிட்டால் அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்துவது, உப்பு சேர்த்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். பொதுவாக எந்த வீக்கமாக இருந்தாலும் தண்ணீரையும் உப்பையும் குறைப்பதன் மூலம் வீக்கத்தை குறிக்க முடியும்.

எதனால் கை&கால் வீக்கம் ஏற்படுகிறது..?

தண்ணீரை வெளியேற்ற முடியாமல் சீறுநீரகம் தவிக்கிறது என்பதற்கான அறிகுறிதான் கை&கால் வீக்கம்.

தற்காப்பு நடவடிக்கைகள் என்ன?

அசைவ உணவுகளைத் தவிர்த்துவிட்டு சைவத்துக்கு மாறவேண்டும். போதுமான அளவு நீர் அருந்தவேண்டும், சிறுநீரை அடக்கிக் கொள்வதை தவிர்க்க வேண்டும், சுய வைத்தியம், வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்ப்பது, காலாவதியான மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பது, பிறருக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாலும், அதிக உடற்பருமன் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாலும், புகை மற்றும் மதுப் பொருட்கள் உபயோகிப்பதை தவிர்ப்பதாலும் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுவதை தடுக்கமுடியும்.

உணவு முறைகள் என்ன?

பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வரை எல்லா உணவுகளையும் உட்கொள்ளலாம். ஆனால், எதையும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவுகளை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளும் கூடாது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உணவில் உப்பு, பொட்டாஷியம் நிறைந்த உணவுகளையும் சுத்தமாக தவிர்க்க வேண்டும். ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல் இருப்பவர்கள் பொட்டாஷியம் சேர்த்துக்கொள்ளலாம்.

எந்தெந்த உணவுகளில் பொட்டாஷியம் அதிகமாக இருக்கிறது..?

வாழைப்பழம், இன்ஸ்ட்டன்ட் காஃபி, டீ, செயற்கை பானங்கள் (கூல்டிரிங்ஸ்), பேரீச்சம் பழம், இளநீர், ஆரஞ்சு இவற்றிலெல்லாம் பொட்டாஷியம் அதிகமாக இருக்கிறது.

சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லாருமே பொட்டாஷியம் சாப்பிடக்கூடாதா..?

அப்படியில்லை. டயாலிஸிஸ் செய்துகொள்ளும் நிலை வரைக்கும் போனவர்கள் பொட்டாஷியத்தை முழுமையாக தவிர்க்கவேண்டும். ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்ளவேண்டும்.

வாழைத்தண்டு சாறு, முள்ளங்கிச் சாறு இரண்டும் சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் என்கிறார்களே...

வாழைத்தண்டு, முள்ளங்கி இரண்டும் சிறுநீர்ப் பெருக்கிகள். அவற்றை உட்கொள்வதால் சிறுநீர் பெருக்கம் ஏற்பட்டு சிறுநீரகத்தில் அடைத்து இருக்கும் கல் சிறுநீரில் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க முடியுமா?

முடியும். தவறான உணவுப் பழக்கவழக்கம், தேவைக்கு ஏற்ற நீர் அருந்தாமல் இருப்பது, அதிகமான அளவில் அசைவ உணவுகளை உட்கொள்வது, கால்சியம் மற்றும் வைட்டமின் டி உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால் சிறுநீரகக் கற்கள் ஏற்படுகின்றன. எனவே, இவற்றைத் தவிர்ப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதை தடுக்க முடியும்.

சிகிச்சை முறைகள் பற்றி சொல்லுங்கள்...

நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் டயாலிஸிஸ், கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் போன்ற எல்லை வரை போகாமல் தவிர்க்கலாம். அல்லது தள்ளிப்போடலாம்.

இல்லாவிட்டால்...

நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டுவிட்டது என்பது உறுதியாகிவிட்டால், வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை டயாலிஸிஸ் செய்துகொள்ள வேண்டும். வீட்டிலேயே செல்ஃப் டயாலிஸிஸ் செய்துகொள்வதென்றால், தினமும் மூன்று முறையாவது டயாலிஸிஸ்கொள்வது நல்லது.

அப்புறம்..
இளைய வயதினராக இருந்து நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு இருந்தால், அவர்கள் டயாலிஸிஸ் செய்துகொண்டு காலத்தைக் கழிப்பதைவிட சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்வதுதான் நல்லது. அதற்கு ஆகும் செலவையும் அவர்களால் எளிதில் ஈடுசெய்ய முடியும்.

இளைஞர்கள் மட்டும்தான் செய்துகொள்ள முடியுமா..?

அப்படி இல்லை. கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்வதற்கு பல லட்சம் செலவாகும். அதேநேரத்தில் இளைஞர்களாக இருப்பவர்களுக்கு புதிய கிட்னி பொருந்திப் போகவும், சிறப்பாக வேலைபார்க்கவும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால், வயதானவர்களுக்கு செய்யும்போது கிட்னி பொருந்திப் போவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதனால், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வது உசிதம் இல்லை. அப்படிச் செய்வதால், எதிர்பாராத வகையில் மாரடைப்பு வரவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், தொடர்ந்து டயாலிஸிஸ் செய்துகொள்வதன் மூலமாகவும் ஆயுளை நீட்டிக்கலாம்.

கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்வதால் என்ன பயன்..?

என்னுடைய அனுபவத்தில் கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்தவர்களின் ஆயுள் கூடியிருக்கிறது. டிரான்ஸ்பரன்ஷன் செய்யாதவர்களைவிட செய்தவர்கள் 20லிருந்து 30 ஆண்டுகளுக்குக் கூடுதலாக வாழ்ந்து இருக்கிறார்கள்.

நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லோருக்கும் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்ய முடியுமா?

முடியாது. தற்சமயம் இந்தியாவில் 100 பேரில் 5 பேருக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்கிறது. அதிலும் நெருங்கிய உறவினர்கள் தானம் செய்வதன் மூலமாகத்தான் கிடைக்கிறது. காரணம், பொருத்தமான சிறுநீரகம் பலருக்குக் கிடைப்பதில்லை. அதுவும் இல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வதற்கான வசதி வாய்ப்புகள் என்பதே இல்லை. அப்படியே இருந்தாலும் பெருநகரங்களில் மட்டுமே இருக்கும். இந்தத் துறையில் நிபுணர்களும் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களும் குறைவு. அதனால், எல்லோருக்கும் சாத்தியமாவதற்கு இன்னும் சில காலம் ஆகலாம். சிறுநீரகத்துக்கு இவ்வளவு தட்டுப்பாடு இருப்பதால்தான், மூளை மரணம் அடைந்தவர்களின் உடலில் இருந்து சிறுநீரகத்தை எடுத்து தேவைப்படுபவர்களுக்கு அளிக்கலாம். இது அவருடைய நெருங்கிய உறவினரின் சம்மதத்தோடு மட்டுமே செய்யமுடியும். அதுவும் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே செய்ய முடியும்.

நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உடலுறவு கொள்ள முடியுமா..?


முடியாது. அவர்களுடைய பாலினத்துக்கேற்ப ஆண்மைக்குறைவு, பெண்மைக்குறைவு, குழந்தை பிறப்பதில் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் சாத்தியம் இல்லை. ஆனால், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்குப் பிறகு எல்லோரையும் போல் அவர்களும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.

நிரந்தர செயலிழப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?


நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள் மாரடைப்பு ஏற்படுவதாலேயே இறந்துபோகிறார்கள். அதேபோல இதயநோயாளிகளுக்கு நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். அதனால், சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழந்தவர்கள் இதயத்தையும், இதயநோயாளிகள் சிறுநீரகத்தையும் அடிக்கடி முழுமையான பரிசோதனை செய்துகொள்வதால் மரணத்தை தள்ளிப்போட முடியும்.

Saturday, January 28, 2012

எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி

தேர்வு பயத்தினால் ஹார்மோன்க ளின் திண்டாட்டம் டென்ஷனை உண்டாக்கும். அந்த டென்ஷன்  பல வழிகளில் வெளிப்படும். மறதி, சோர்வு, மன அழுத்தம், படபடப்பு என பல வடிவங்களில் பாடாய் படுத்தும். தேர்வுக்காக விடிய விடிய தூக்கம் கெட்டுப் படித்தல் மற்றும் போதுமான சத்துணவு எடுத்துக் கொள்ளாமல் விடுவது போன்ற காரணங்களால் படித்ததையெல்லாம் மறக்கும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர். இதுபோன்ற எக்ஸாம் டென்ஷனில் இருந்து விடுபடுவதற்கான வழிகள் குறித்து விளக்குகிறார் உளவியல் நிபுணர் தேவிப்பிரியா. தேர்வு பயம் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. அதிக  மதிப்பெண் பெற வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் நம்மால் முடியுமா என்ற சந்தேகத்தால் எதிர்மறை எண்ணங்கள், தன்னம்பிக்கை இழத்தல் போன்ற மனச்சிக்கலுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர். பெற்றோரின் அதீத எதிர்பார்ப்புகள் குழந்தைகள் மீது திணிக்கப்பட்டு மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இதுபோன்ற தொந்தரவுகளால் குழந்தைகள் எதையும் முழுமையான ஈடுபாட்டுடன் படிக்க முடியாமல் போகிறது. கஷ்டப்பட்டு படித்திருந்தாலும் எழுத முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பெற்றோர் குழந்தைகளிடம் தன்னம்பிக்கை ஏற்படும் வகையில் பேச வேண்டும். நம்பிக்கையான சூழலை உருவாக்க வேண்டும். ஆசிரியர் மற்றும் மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவதுடன் எதிர்கால லட்சியம் பற்றியும் கோடிட்டுக் காட்டிவிட்டால் குழந்தைகள் இது போன்ற குழப்பங்கள் எதுவும் இன்றி தேர்வுக்கு தயாராக முடியும்.ர்வு பயத்தை கண்டுகொள்ளாமல் விட்டால் குழந்தைகள் மனச்சோர்வு மற்றும் எரிச்சலை வெளிப்படுத்துவார்கள். சாப்பிடுவது உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகளில் அக்கறையின்றி இருப் பது, தூக்கமின்மை, முதுகுவலி, தலை வலி உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தசை இறுக்கம், கவனக்குறைவு, படபடப்பு, வயிற்று போக்கு, படிப்பில் ஈடுபாடு குறைதல் போன்ற தொல்லைகளும் உண்டாகும். இதனால் சத்துள்ள ஆகாரம் இல்லாமல் உடல் பலவீனம் அடையும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். குழந்தைகள் குறித்த நேரத்துக்கு தூங்கி, சத்தான உணவுகள் எடுத்துக் கொள்ள பெற்றோர் உதவ வேண்டும். தேர்வு பயம் குழந்தைகளுக்கு அதிகரிக்கும் பட்சத்தில் உளவியல் நிபுணரிடம் ஆலோசனை பெறுவதன் மூலம் தீர்வு காணலாம். மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சி, தியானம் மற்றும் சரியான உணவு முறையை கடைபிடிப்பதன் மூலம் படிப்பின் மீது கவனத்தைத் திருப்பலாம். தேர்வு நேரத்தில் உண்டாகும் உடல் பிரச்னைகளுக்கு உடனடியாக சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். நேரம் கிடைக்கும் போது மனதுக்குப் பிடித்த விளையாட்டுகளில் ஈடுபடலாம். தொடர்ந்து பல மணி நேரம் படிப்பதற்கு பதிலாக இடையில் ரிலாக்ஸ் செய்யலாம்.

பாதுகாப்பு முறை: கடினமான பாடங்களை முதலில் படித்தல், மனதில் பதியும்படி குறிப்பெடுத்தல், கேள்விகளை வரைபடம் வரைந்து நினைவில் வைத்துக் கொள்ளுதல் போன்ற யுக்திகள் உதவும். படித்தவற்றை நண்பர்களிடம் சொல்லிப் பார்த்து தவறைத் திருத்தலாம். நேரத்தை திட்டமிட்டுப் பயன்படுத்தினால் டென்ஷனை பெரிதளவில் குறைக்க முடியும். முக்கிய கேள்விகளை முதலில் படித்து முடிக்கலாம்.  படம் மற்றும் பாடங்களை கற்பனை மூலம் மனதில் நிறுத்துதல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம். படித்த விஷயங்களை குழுவாக விவாதிக்கும் போது அந்த கருத்துகள் மறக்காத வண்ணம் மனதில் பதிந்து விடும். சோர்வை நீக்கி மனதை உற்சாகமாக வைத்திருக்க சிறிய உடற்பயிற்சிகள் செய்யலாம். படிக்க நேரம் ஒதுக்குதல், எளிய யுக்திகள் மூலம் படித்தவற்றை மனதில் வைத்துக் கொள்வது மற்றும் முழுமையாக வெளிப்படுத்துவது போன்ற பயிற்சிகளை தொடர்ந்து செய்வதால் தேர்வை எந்த பயமும் இன்றி எதிர்கொள்ள முடியும். சத்தான உணவும், தன்னம்பிக்கையும் சாதனைக்கான சாவிகள். - ஸ்ரீதேவி


ரெசிபி

பிரட் புதினா சாலட்: புதினா ஒரு கப், பச்சை மிளகாய் 2, வெங்காயம் - கால் கப், கொப்பரைத் தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன் மற்றும் தேவையான உப்பு சேர்த்து சட்னி அரைத்துக் கொள்ளவும். பிரட் துண்டின் மீது புதினா சட்னி தடவி அதன் மீது வெண்ணெய் தடவிய பிரட் துண்டு வைத்து அடுத்த லேயருக்கு டொமேட்டோ கெச்சப் தடவவும். அதன் மீது வெண்ணெய் தடவிய பிரட் துண்டு வைத்து சாப்பிடலாம். இதில் உடலுக்குத் தேவையான புரதம் மற்றும் இரும்புச் சத்து கிடைக்கிறது.

முளைப்பயறு துவையல்: ஏதாவது ஒரு முளை கட்டிய பயறு அரை கப், புதினா ஒரு கட்டு, மிளகு ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுக்கவும். முளை கட்டிய பயிறை எண்ணெய்யில் வறுத்து புதினா, மிளகு, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதில் கடைசியாக ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

சோயாவடை: ஒரு கப் மைதாவை வெண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். 200 கிராம் பனீரை பொடியாக நறுக்கி வைக்கவும். உதிர்த்த ஒரு கப் பேபி கார்ன், நறுக்கிய 4 பச்சை மிளகாய், 2 டீஸ்பூன் கொத்தமல்லித் தழை, துருவிய சீஸ் 4 டீஸ்பூன், மசித்த உருளைக்கிழங்கு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். மைதாவை தனியாக கரைத்துக் வைத்துக் கொள்ளவும். உருண்டையை மைதாவில் நனைத்து பிரட் தூளில் ஒற்றி எடுத்து, எண்ணெய்யில் பொரிக்கவும். இதில் புரோட்டீன் மற்றும் தாது சத்துக்கள் உள்ளது.

டயட்

தேர்வு பயத்தால் ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றத்தால் நடத்தை மாற்றம் மற்றும் மனச்சிக்கல் உண்டாகிறது. எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பதால் சத்தான உணவையும் மாணவர்கள் தவிர்க்கின்றனர். சத்துக் குறைபாட்டின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியால் உடல்நலக் குறைபாடுகள் உண்டாகிறது. எண்ணெய்யில் பொரித்த கொழுப்பு உணவுகளை தவிர்க்கவும். காலை உணவை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். புரோட்டின் மற்றும் தாது சத்து அதிகம் உள்ள உணவுகளால் புத்திக் கூர்மை அதிகரிக்கும். காபியில் உள்ள காபின் என்ற பொருள் சிந்திக்கும் திறனைக் குறைக்கும்.  எனவே காபியை தவிர்க்கலாம். சுண்டல் வகைகள் மற்றும் முளைக்கட்டிய பயறு வகைகள் சாப்பிடலாம். தண்டுக் கீரையை சாப்பிடுவதன் மூலம் போலிக் ஆசிட் கிடைக்கிறது. இதனால் சோர்வு நீங்கி உற்சாகத்துடன் படிக்க முடியும். ஆட்டு இறைச்சி சாப்பிடலாம். இதில் இரும்பு, ஜிங்க் மற்றும் பி வைட்டமின் கிடைக்கும். மன அழுத்தம் குறையும். சுண்டக்காய்ச்சிய பாலில் புரதம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. எனவே தினமும் ஒரு கிளாஸ் பால் அருந்தலாம். வைட்டமின் பி-2 மற்றும் பி-12 சத்து கிடைக்கிறது. பாலாடைக்கட்டி மற்றும் பாதாம் ஆகியவற்றில் இருந்து பி-2 வைட்டமின், வைட்டமின் ஈ, மெக்னீசியம், ஜிங்க் ஆகிய சத்துகள் கிடைக்கிறது. செர்ரிபழம் சாப்பிடும் போது மனதுக்கு உற்சாகம் கிடைக்கிறது. எனவே மனச்சோர்வை நீக்கும் சத்தான உணவுகள் மூலம் தேர்வு பயத்தை விரட்ட முடியும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

*  கீழாநெல்லி, கரிசாலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் 10 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகும்.
*  சிறு கீரையுடன் மிளகுத்தூள், உப்பு போட்டு சமைத்து நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
*  செலரிக் கீரையுடன் திப்பிலி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
*   தக்காளி, உருளைக் கிழங்கு, வெண்டைக்காய், பாதாம் பருப்பு ஆகியவற்றை தின மும் உணவில் சேர்த்துக் கொண்டால் ஞாபகசக்தி அதிகரிக்கும்.
*  திப்பிலியை வல்லாரை சாறில் ஊற வைத்து காய வைத்து பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
*  பப்பாளிப் பழம் தினமும் சாப்பிட்டால் மறதி குறையும்.
*  புளியாரை கீரையுடன் வேப்பந்துளிர், மிளகு 3, மஞ்சள் தூள் 2 சிட்டிகை, ஆகியவற்றை சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் ரத்தம் தூய்மை அடைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* பொன்னாவரைக் கீரையின் விதையை அரைத்து சாப்பிட்டு குளிர்ந்த தண்ணீர் குடித்தால் உடல் அசதி மறைந்து புத்துணர்ச்சி கிடைக்கும்.
thnxs:http://www.dinakaran.com/tamilmurasu/Inner_Tamil_News.asp?Nid=20242

தோல் தொற்று நோய்களை தடுக்க

மனித உடலின் தோல் பகுதி ஆரோக்யத்தின் கண்ணாடி. தோலில் பிரச்னை ஏற்பட்டால் உடலில் ஏதோ தொந்தரவு உள்ளது என்று அர்த்தம். தவறான உணவு முறை, அலர்ஜி, சுகாதாரத்தில் கவனம் இல்லாமை, சத்துக் குறைபாடு போன்ற காரணங்களால் தோல் நோய்கள் ஏற்படுகிறது. தோல் நோய்களை கண்டு கொள்ளாமல் விடுவதால் அது பல்வேறு மனஉளைச்சல்களை ஏற்படுத்துகிறது. எனவே தோல் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த வேண்டும் என்கிறார் காஸ்மெடிக் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் டாக்டர் விக்னேஷ்வரி.

தோலின் தன்மைக்கு ஏற்றாற்போல பனிக் காலங்களில் தோல் வறட்சி, தோல் சுருக்கம் மற்றும் பரு போன்ற பிரச்னைகள் தோன்றும். தோல் பகுதி பளபளப்பாக சுருக்கம் ஏற்படாமல் இருக்க பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். சத்தான உணவுப்பழக்கத்தை கடை பிடிப்பதன் மூலம் தொல்லைகள் ஏற்படாமல் தடுக்கலாம். வெயில் மற்றும் பனியில் செல்லும் போது சன்ஸ்கிரீன் மற்றும் வின்டர் கேர் கிரீம்களை பயன்படுத்தலாம். தேமல் பிரச்னைகள் இருந்தால் கட்டாயமாக மருத்துவரின் ஆலோசனையை நாட வேண்டும். தோல் பிரச்னை உள்ளவர்கள் தனியாக துண்டு, சீப்பு பயன்படுத்துவதன் மூலம் மற்றவருக்குப் பரவாமல் தடுக்கலாம். மஞ்சள் பூசிக் குளிக்கும் பழக்கம் இல்லாத காரணத்தால் இன்றைய டீன் ஏஜ் பெண்களில் பலருக்கு முகத்தில் ரோமம் வளரும் பிரச்னை உள்ளது.

தைராய்டு ஹார்மோன் பிரச்னை, கருப்பையில் நீர்க்கட்டி இருத்தல், மாதவிலக்கு கோளாறு, ஆண் தன்மைக்கான ஹார்மோன் அதிகமாக இருக்கும் போதும் பெண்களுக்கு முகத்தில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது போல் முடி வளரும் போது அதை கண்டு கொள்ளாமல் விடுவது பெண்களுக்கு மனதளவில் மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு பெண்கள் பிளக்கர், திரட்டிங், ஷேவிங் மற்றும் வேக்சிங் போன்ற முறைகளில் முடிகளை நீக்குகின்றனர். இது போன்ற முறைகளில் முடிவளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மேலும் முடி இருக்கும் தோல் பகுதி தடிமனாக மாறும். வேக்சிங் முறையில் முடியை நீக்கினால் தோல் பாதிப்படையும். பெண்களின் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை லேசர் சிகிச்சை மூலம்  பாதிப்புகள் இன்றி நீக்க முடியும். இதே போல் பருக்களால் முகத்தில் ஏற்படும் தழும்பு, வளரும் தன்மையுள்ள மரு, டாட்டூஸ், பச்சை குத்தியதை நீக்குவதற்கும் நவீன சிகிச்சை முறைகள் உள்ளன. அனைத்து விதமான தோல் பிரச்னைகளுக்கும் அழகு கிரீம்களைக் கொண்டு குணப்படுத்த முடியாது. தோலின் தன்மைக்கும், தோல் பிரச்னைக்கும் தகுந்த சிகிச்சை முறையை தேர்வு செய்வதன் மூலம் வாழ்நாள் முழுவதும் தொடரும் சங்கடங்களைத் தவிர்க்க முடியும். காஸ்மெடிக் சர்ஜரியில் இதற்கு எளிய தீர்வுகள் உள்ளன.

பாதுகாப்பு முறை: புற ஊதாக் கதிர்களின் தாக்கம் இல்லாமல் காப்பதன் மூலம் தோல் நோய் மற்றும் தோல் புற்றுநோயைத் தவிர்க்க முடியும். தோல் பகுதி யை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். வெளியில் சென்று வந்ததும், இளம் சுடுநீரால் முகத்தை கழுவி பஞ்சு அல்லது துண்டால் முகத்தை அழுத்தி துடைத்து, இறந்த செல்களை நீக்கலாம். காய்ந்த மற்றும் வறண்ட சருமத்துக்கு கொழுப்பு உள்ள சோப்புகளை பயன்படுத்தலாம். எண்ணெய் பசை சருமத்தை தினமும் மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும். ஆண்கள் ஷேவிங் செய்யும் முன்பு சூடான தண்ணீரில் நனைக்கப்பட்ட துண்டால் முடியைத் துடைக்கவும். முகத்தில் உள்ள சுரப்பிகள் அடைத்துக் கொள்வது மற்றும் பாக்டீரியா தொற்றின் காரணமாக முகத்தில் பருக்கள் தோன்றுகிறது. தைராய்டு சுரப்பியின் மாறுபாட்டால் பருக்கள், முடி வளர்வது போன்ற தொல்லைகள் ஏற்படுகிறது. தோல் பிரச்னைகளுக்கு தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி கிரீம்களை பயன்படுத்தி நிவாரணம் பெறலாம்.

அரைக்கீரை கூட்டு: ஒரு கட்டு அரைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும், 3 பச்சை மிளகாய் நறுக்கியது, 4 தக்காளி 5 பல் பூண்டு, சின்ன வெங்காயம் 5 சேர்த்து லேசாக வதக்கிய பின்னர் வேகவைத்த துவரம்பருப்பு 1 கப் சேர்த்து இறுதியில் அரைக்கீரை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு ஒரு கொதி விட்டால் அரைக் கீரை கூட்டு ரெடி. இதில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.

ரெசிபி

பிரெட் சப்பாத்தி: பத்து ஸ்லைஸ் பிரெட் எடுத்து மிக்சியில் அடித்துக் கொள்ளவும். 150 கிராம் மைதாவுடன், பிரெட் தூள், 2 டீஸ்பூன் வெண்ணெய், 100 மிலி பால், 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து மாவாக பிசைந்து கொள்ளவும். இதனை சப்பாத்தியாக சுட்டுக் கொள்ளலாம். புரோட்டீன் மற்றும் வைட்டமின் சத்துகள் இதில் உள்ளன.

புரூட் கேசரி: பப்பாளி, வாழைப்பழம், ஆப்பிள், சப்போட்டா, மாதுளை ஆகிய அனைத்தும் சேர்த்து இரண்டு கப் அளவுக்கு எடுத்து மிக்சியில் அடித்து ஜூஸ் எடுக்கவும். வாணலியில் 3 டீஸ்பூன் வெண்ணெய் விட்டு பழச்சாறு சேர்த்து கிளறவும். இத்துடன் கால் கப் பால் பவுடர், குளுக்கோஸ் பவுடர் 3 டீஸ்பூன், சேர்த்து கிளறவும். கெட்டியான பின் இறுதியில் பாதாம், பிஸ்தா சேர்த்து கிளறி இறக்கவும். இந்த புரூட் கேசரியில் பி காம்ப்ளக்ஸ் மற்றும் பி12 சத்துகள் அதிகம் உள்ளன.

டயட்

சத்துக்குறைபாடுகள், சுத்தமின்மை, மற்றும் பரம்பரைக் காரணங்களால் தோல் நோய் ஏற்படலாம். தேமல் போன்ற பிரச்னைகளுக்கு வைட்டமின் குறைபாடே காரணம். ஆரஞ்சுத் தோல், வெள்ளரி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை தடவிக் கொள்வதன் மூலம் தோல் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். எலுமிச்சை சாறு, முட்டைக்கோஸ் இலை, கோசா பழச்சாறு, ஆரஞ்சு, தக்காளி, வெள்ளரி, ஆப்பிள் சாறு, அரைக்கீரை சாறு ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தோல் பகுதியிலும் தடவலாம். வைட்டமின் பி2 குறைபாட்டின் காரணமாக தோலில் கரும்புள்ளிகள் தோன்றும். வைட்டமின் பி6 குறைபாட்டால் தேமல், அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும். நைசின் சத்துக் குறைபாட்டினால் முகப்பருக்கள் ஏற்படும். அயோடின், கோபால்ட், பி 12 குறைபாட்டால் தோலில் பல பிரச்னைகள் உண்டாகிறது. உணவில் ரவை , சர்க்கரை அதிகம் சேர்த்துக் கொள்பவர்களையும் அதிகளவில் பாதிக்கிறது. ரத்த ஓட்டம் குறைந்தால் தோல் வறட்சி உண்டாகும். இது போன்ற பிரச்னைகளைத் தடுக்க முழு தானியங்கள், உலர்ந்த பருப்புகள், பழங்கள் மற்றும் காய்கள், பாலுடன் சத்துமாவு சேர்த்துக் கொள்ளலாம். வெஜிடபிள் ஆயில் மற்றும் கடலை எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்க்கலாம். வைட்டமின் பி12 அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் தோல் பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

*அகத்தி கீரைச்சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்கள் மீது தடவினால் விரைவில் உதிர்ந்து விடும்.
*அருகம்புல் வேர், சிறியாநங்கை வேர் இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து சாப்பிட்டால் தோல் நோய்கள் குணமாகும்.
*எலுமிச்சை பழச்சாற்றில் தேன் கலந்து முகத்தில் பூசி வந்தால் தோல் சுருக்கம் மறையும்.
*எலுமிச்சம்பழச்சாறு, பாதாம் பருப்பு, தயிர் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பருக்கள் மறையும்.
*எலுமிச்சம்பழச் சாற்றில் லவங்கப் பொடியைக் கலந்து முகத்தில் பூசி வந்தால் கரும்புள்ளிகள் மறையும்.
*நல்லெண்ணெய்யை கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் கலந்து பருக்கள் மீது பூசி வந்தால் விரைவில் மறையும்.
*குப்பை மேனி கீரையை பொடி செய்து தினமும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் இளமையில் ஏற்படும் தோல் சுருக்கத்தை தவிர்க்கலாம்.
*கொத்தமல்லியை அரைத்து 2 நாள்களுக்கு ஒரு முறை முகத்தில் தடவினால் பருக்கள் மறையும்.
*சோற்றுக் கற்றாழையின் சாறை பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் உதிர்ந்து தோல் மென்மை அடையும்.
*முகத்தில் தேவையற்ற முடி
வளர்வதைத் தடுக்க கஸ்தூரி மஞ்சள் பயன்படுத்திக் குளிக்கலாம்

Tuesday, January 10, 2012

அல்சர் நோயை தடுக்க வழிகள்

இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற்பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குடல் புல் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டும்.
 
இதை அமில குடல் புண் நோய் என்றும் அழைக்கிறோம். குடல் புண் தோன்றுவதற்கு பல்வேறு  காரணங்கள் உள்ளன. புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன. சாலிசிலேட் மருந்துகள், ஆஸ்பிரின் முதலான வலி நிவாரண மருந்துகள், காயங்களுக்காகவும் மூட்டு வலிகளுக்காகவும் சாப்பிடும் மருந்துகள், வீக்கத்தைக் குறைக்கச் சாப்பிடும் மருந்துகள் போன்ற மருந்துகளின் காரணமாகவும் குடல் புண் வருகிறது.
 
தூக்கமின்மை.......  
 
தூக்கமின்மை காரணமாக அல்சர் வரக்கூடும். அலுவலகங்களில் ஷிப்ட் முறையில் இரவு நேரங்களில் பணி புரிவது இரவு முழுவதிலும் விருந்துகளில் கலந்து கொண்டு கண் விழிப்பது, நீண்டதூரம் பயணம் செல்வது, தூக்கமின்மை போன்றவை அல்சர் நோய்க்கு வழி வகுக்கும் என பிரிட்டன் மருத்து வர்கள் கூறியுள்ளனர். வயிற்றில் சுரக்கும் அமிலங்களும், திசுக்களை வளரச் செய்யும் அமிலங்களும் சிறு குடலில் பெரும்பாலும் இரவு நேரத்தில்தான் உற்பத்தியாகின்றன.
 
தூக்கமின்மை காரணமாக அல்சர் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாகும். டி.எப்.எப்.2 புரோட்டினின் உற்பத்தி தூங்கும்போது 340  மடங்கு அதிகமாகிறது. இது குறைபாடுகளை சரி செய்து அல்சர் வருவதையும் தடுக்கும். அல்லது செரிமானபாதையில் ஆறாமல் இருக்கும் புண்ணையும் ஆறச் செய்யும்.
 
குடல்புண்ணை  அறிவது எப்படி?
 
காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாக அர்த்தம். இந்தப் பகுதியில் ஏற்படும் அசவுகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன.
 
இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடு நிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம். சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்கமாக வலி ஏற்படும். இவ்வலியானது காலை சிற்றுண்டிக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாக காணப்படுகிறது.
 
நெஞ்சு எரிச்சல்......
 
சிலநேரங்களில் அமில நீரானது, வாந்தியாவதும் உண்டு. குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை. வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம். வலி அதிகம் ஏற்படுவதே இல்லை. ஆனால் உடல் நலக்கேடு அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும்.
 
இந்த மாதிரியான அசவுகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம். ஒரு நபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார் என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும். சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு.
 
பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், மேல் வயிறு வலி போன்றவை அடிக்கடி வந்தால் அல்சர் இருப்பது நிச்சயம். எனவே இந்த அறிகுறி இருந்தால் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. வயிற்றில் சில அமிலங்கள் அதிகமாக சுரந்தாலும் அல்சர் ஏற்படும் என்கிறார் டாக்டர் திருத்தணிகாசலம்.
 
அமிலத்தால் இரைப்பை பாதிப்பு........
 
சிலருக்கு வயிற்று வலி குறிப்பிட்ட இடைவெளி விட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின், அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாக கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம். ரத்தக் கசிவின் காரணமாக அரைத்த காபிக் கொட்டை போன்று கருஞ் சிவப்பு நிறத்தில் ரத்த வாந்தி எடுப்பார்.
 
வலி நிவாரணியான ஆஸ்பரின் போன்றவற்றை சாப்பிட்டால் மிக மோசமான ரத்தப் போக்கு ஏற்படும். அதிகமான ரத்தப் போக்கோ அல்லது ரத்தக் கசிவோ மிகவும் அபாயகரமானதாகும். இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடிபடுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
 
அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புகள் அனைத்தும் நனைந்து விடுகின்றன. ஆகவே, வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படுகிறது. அதனால் வயிற்றை அறை தோல்களில் வீக்கம் ஏற்படுகிறது.சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம்.
 
இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது. இதுவும் அறுவைச் சிகிச்சையால் தான் குணப்படுத்த முடியும். ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். புகை பிடிக்கக் கூடாது, மது, காபி பானங்கள் குடிக்க கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக் கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது. அதிகமாகச் சாப்பிடக் கூடாது. பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.
 
காரணங்கள்.........
 
மன அழுத்தம், தவறான உணவு பழக்கம், வறுத்த உணவுகள், இரவில் தாமதமாக சாப்பிடுவது, இறைச்சி, கோழி உணவுகள், கார உணவுகள் போன்றவை அல்சருக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.
 
அல்சர் நோயாளிகள் அதிகரிப்பு........
 
சமீப காலமாக பரபரப்பான வாழ்க்கை, சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருத்தல், காரவகை உணவுகளை சாப்பிடுதல், புகை, மது பழக்கம் போëன்றவற்றால் அல்சர் நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துள்ளது. இந்திய அளவில் 40 சதவீதம் பேரும், தமிழகத்தில் 45 சதவீதம் பேரும் அல்சர் நோயாளிகளாக உள்ளனர். பலர் அல்சரை குணப்படுத்தாமல் கடைசி வரை வயிற்று வலி வேதனையுடன் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். அல்சரை குணமாக்காவிட்டால் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்பட்டு விடும் அபாயம் உள்ளது.
 
செய்ய வேண்டியவை.......
 
குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும், தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும், அதிக  தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவைïட்டிய லஸ்சி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும். மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண் டும். இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும். இறுக்கமாக உடை அணியக் கூடாது. மருத்துவரின் ஆலோசனைப் படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்தி கொள்ளலாம்.
 
யோகாசனம், தியானம் முதலியவற்றை பயில வேண்டும். எப்போதும் ஜாலியாக இருக்க வேண்டும். அலுவலக வேலைகளை அங்கேயே விட்டு விட வேண்டும். முறையாக, இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும். சுகாதாரத்தை பின்பற்றி குடல் புண் வருவதை தவிர்க்க வேண்டும். வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும்.  மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது.
 
குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.  பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.  வலியோ அல்லது அசவுகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்ட வுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது என்கிறார் சென்னை அரும்பாக்கம் ரத்னா சித்த மருத்துவமனை இயக்குனர் டாக்டர் திருத்தணிகாசலம்.
Thnxs:http://www.maalaimalar.com/2011/12/28090239/prevent-ulcer-disease.html

Thursday, November 10, 2011

இயற்கை தேவையை தள்ளிப்போடுபவரா நீங்கள்


பைல்ஸ்(Piles)’ என்றழைக்கப்படும் மூலநோயைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்.
 
இந்த பிரச்சனையை மருத்துவ உலகில் ‘ஹெமராயிட்ஸ்’ (Haemorhoids) என்றுழைக்கப்படும் நம்முள் பலருக்கு இந்த உபாதை இருந்தாலும் மருத்தவரிடம் செல்லவோ அதைப்பற்றி சொல்லவோ ஏனோ கூச்சப்படுகிறார்கள்! இதில் கூச்சப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. தொண்டையில் சதை வளர்வதுப்போல்(Tonsils) இதுவும் ஒருவகை, அவ்வளவு தான்.

மலம் வெளியே வரும் பாதையில்(Anus) உள்ள இரத்தக் குழாய்கள் வீங்கி புடைப்பதால் வலி, சொறி எடுத்தல், சில நேரங்களில் இரத்தம் வடிதல் போன்றவை ஏற்படுகின்றன.

இதில் மூன்று வகை உள்ளன.

1.1st degree- உள்மூலம் – இதில் இரத்தம் வடிதல் மட்டும் இருக்கும் வலி இருக்காது.

2.2nd degree- வெளிமூலம் – சிறிது வெளியே புடைத்திருக்கும்(கோலிக்காய் போன்று) இதில் இரத்தம் வடிதலுடன் வலியும் சேர்ந்து இருக்கும்.

3.3rd degree- பாதையின் கடைசிப் பகுதி(Anus) வெளியே வந்து  துருத்திக் கொண்டிருக்கும். வலி, இரத்தம் வடிதல் சொறி எடுத்தல் எல்லாமே இருக்கும்.

இவை ஏன் ஏற்படுகின்றன?

1. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்தால்

2. வயதாவதால்(இரத்தக் குழாய்கள் வலுவிழந்து விடுகின்றன)

3. கர்ப்பக் காலங்களில் கர்ப்பப்பை மூலத்திலுள்ள இரத்தக் குழாய்களின் மேல் அழுத்துவதால்.

4. மலம் இருக்க வேண்டும் எனத்தோன்றும் போது(Natures Call) சில பல காரணங்களால் அதைத் தவிர்த்து விட்டு நேரத்தையும் நளையும் கடத்துவதால்.

5. இயற்கையிலேயே (Hereditary) அந்த இடத்திலுள்ள இரத்தக் குழாய்கள் பலகீனமாக இருப்பதால் (weak and fragile veins)

மலம் கழிப்பதை தள்ளிப் போடுவதால் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்வோமா?

தினமும் கழிவுப் பொருட்கள் மலக்குடலை வந்தடையும் போது அது சற்றே இனக்கமாக நீர்ப்பதத்துடன் இருக்கும். குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை வெளியேற்றாவிட்டால் அதிலுள்ள நீரை மலக்குடல் திரும்ப உறிஞ்சி கொள்ளும் (Reabsorption)

அதனால் மலம் இறுகி கட்டியாகி விடுகிறது (Rock Like Mass) பின்பு அதை வெளியேற்ற நாம் கொஞ்சமாகவோ, அதிகமாகவோ சிரமப்பட வேண்டியிருக்கும் (Straining at stools)அதனால் மலத்துவாரம் வழுவழுப்புத் தன்மையை சிறிது சிறிதாக இழந்து அந்தஇடத்திலுள்ள இரத்தக் குழாய்கள் சேதமடைந்து புடைக்க ஆரம்பிக்கின்றன விளைவு?  ‘மூலம்-Piles’

நிவாரணம்

1. “Sitz bath” எனும் ஒன்று Surgical Supplies கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி அதில் சுடு நீர்(warm water) நிரப்பி அதில் நமது அடிப்பாகம் படுமாறு ஓர் அரைமணிநேரம் அமரலாம் Epsom Salt எனும் உப்பை வாங்கி அதில் ஓர்கை அளவு எடுத்து சுடுநீரில் கலந்தும் உட்காரலாம். இவை வலி இருக்கும்(Anus) பகுதியில் இரத்த ஓட்டத்தை கூட்டும்;அதே வேளையில் புடைத்துள்ள ‘மூலம்-பைல்ஸ்’ சுருங்கி வலியும் குறையும்.

2.அதேபோன்று, ஓர் பிளாஸ்ட்டிக் பையில் ஐஸ் கட்டிகளை நிரப்பி, அதை ஒரு தலையனை உறைக்குள் வைத்து அதன் மேலும் அரைமணி நேரம் உட்காரலாம்.

3. அல்லது சுடுநீரில் சிறிது நேரம், ஐஸ்கட்டிகளின் மேல் சிறிது நேரம் என மாறி மாறி உட்காரலாம்.

4. விக்ஸ் வேப்போரப் (Vicks Vaporub) எனும் மருந்தை வாங்கி வலிக்கும் இடத்தைச் சுற்றி (Around the anus not into the anus)தடவலாம்.

5. மாம்பழ சீசனில் மாங்கொட்டைகளைச் சேகரித்து நிழலில் நன்றாக காயவைத்து பொடியாக்கி வைத்துக் கொண்டால் மூல வலி அதிகமாக இருக்கும் போது, 2 கிராம் பொடியை தேனில் குழைத்து காலையும் மாலையும் சாப்பிடலாம்.

6. வலி அதிகமாக இருக்கும் போது ஓரிரு நாட்கள் வழக்கமான உணவுகளைத் தவிர்த்து விட்டு, பழங்களாக உண்ணலாம்.

7. பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது(Piles)  வந்துவிட்டால் வலி இருக்கும் போது இடது பக்கமாக ஒருக்களித்து படுக்க வேண்டும் . இவ்வாரு நான்கு மணிநேரத்துக்கு ஒரு முறை ஓர் அரைமணி நேரத்துக்கு ஒரு முறை ஓர் அரைமணி நேரம் படுக்கலாம். அவ்வாறு செய்தால் பெருத்துவிட்டு கர்ப்பப்பை இரத்தக் குழாய்களின் மேல் அழுத்திக் கொண்டிருப்பது குறையும், அதனால் வலியும் குறையும்.

8. அதிகமாக வலி இருக்கும் போது அதிக காரம், போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

9. இறுதியாக நமது சொந்த முயர்சிகளினால் வலியோ இரத்தம் வடிதலோ நிற்காவிட்டால் மருத்துவரிடம் செல்வதே நல்லது ஏனென்றால் உங்களுக்கு வந்திருப்பது மூலவியாதியா(Piles) அல்லது மூல வெடிப்பா(Fissures) அல்லது மலக்குடலில் உள்ள வேறு எதாவது கோளாறா (புற்று நோயாகக்கூட இருக்கலாம்) எனத் தெரிந்து கொள்ளலாம்.

மருத்துவரால் என்னவெல்லாம் செய்ய இயலும்

1. உள் மூலமாக(internal piles) இருந்தால் இரத்தக் குழாய்கள் சுருங்குவதற்கும், மூலவாயின் வழுவழுப்புத் தன்மையை அதிகரிப்பதறகும், இரத்தக் குழாய்கள் வலிமையைக் கூட்டுவதற்கும் மருந்துகள் தரலாம்.

2. வெளி மூலமாக (External piles)  இருந்தால் வெளியே துருத்திக் கொண்டிருக்கும். இரத்தக் குழாய்களை சுற்றி ஒருவித நூலால் இறுக்கிக் கட்டி (Tie off) அது தானாகவே சுருங்கி கிழே விழும் படி செய்யலாம்.

3.லேசர்(Laser) எனும் ஒளிக்கற்றையால் அந்த இடத்தை கருக்கி (Burn away) விடலாம்.

4.இறுதியாக ஒரு சிறிய ஆபரேஷன் மூலம் நீக்கிவிடலாம்.

மூலம் (Piles)வராமல் அல்லது குறைந்தது அடிகடி வராமல் தடுக்க இயலுமா?
முயன்று பார்க்கலாமே! அதில் தவறில்லையே

1. முதலில் மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எப்படி? எவ்வளவு தலை போகிற வேலை இருந்தாலும் கழிவறை செல்லும் உணர்வு தோன்றி விட்டால் அதை புறக்கணிக்காது உடனே சென்று மலம் கழித்து விட வேண்டும்.

2.அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தம் உள்ளவர்கள் அதை ஈடுகட்டும் வகையில் சிறிது நேரம் நிற்கவோ அல்லது சற்று நடக்கவோ வேண்டும் ஒரு மணிநேரத்திற்கு  ஒருமுறை ஐந்து நிமிடங்கள் நடந்தாலே போதுமானது மலப்பாதையின் அழுத்தம் குறையும்.

3.உங்கள் சக்திக்கு மீறிய பொருட்களை தூக்குவதை தவிர்க்க வேண்டும்; கெளரவம் பார்க்காது (Ego உள்ளவர்கள் கவனிக்க) பக்கத்தில் இருப்பவரின் உதவியை நாடுவதில் தவறில்லை.

ஒரே இடத்தில் நின்று சைக்கிள் மிதிக்கும் ஒருவித உடற்பயிற்சியைத் தவிர்க்க வேண்டும்(cycling on excersise bike)

4.உங்கள் சிறுநீர் மஞ்சள் கலரில்(Dark yellow) இல்லாமல் வெளிறிய மஞ்சள் கலரில்(Pale Yellow) இருக்குமாறு தண்ணீர் நிறைய பருக வேண்டும்.

5. உங்கள் உணவில் நார்ச்சத்து அதிகம் இருக்கும் வகையில் தானிய உணவுகள்,காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள்

6. இறுதியாக, மலத்துவாரத்தைச் சுற்றியுள்ள தசைகளும்(A ring of muscles) இரத்தக் குழாய்களும் (viens) பலம் பெறும் வகையில் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தொடர்ந்து செய்து வரலாம்.
நன்றி தூதுஆன்லைன்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites