இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label செப்பல் (காலணி) தயாரிப்பது எப்படி. Show all posts
Showing posts with label செப்பல் (காலணி) தயாரிப்பது எப்படி. Show all posts

Monday, February 20, 2012

அதிக வரவேற்புள்ள காலணி தொழில்நுட்ப துறை

பொதுவாக தோல் தொழில்நுட்ப பொருட்கள் தயாரிப்புத் தொழிலில் காலணி உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கின்றது.
சர்வதேச அளவில் தோல் தொடர்பான பொருட்கள் தயாரிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த காலணி உற்பத்தி என்பது, தோலை பதப்படுத்துதல், வடிவமைத்தல், நுணுக்கமான வேலைப்பாடுகளை செய்தல், காலணியாக தயாரித்தல் போன்ற எண்ணற்ற தொழில் வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அமோக வரவேற்பு உள்ளது.
தோல் தொழில்நுட்பம் படித்தவர்களை விட பணியாற்றிய அனுபவம் பெற்றவர்கள் அதிகமாக உள்ளனர். நவீன பொருளாதாரச் சூழ்நிலையில் தோல் தொடர்பான படிப்புகளை முறையாக கற்று தொழில் தொடங்குபவர்கள் இந்த துறையில் அதிக இலாபத்தை ஈட்டும் நிலை உள்ளது.   
தோல் தொழில்நுட்பம் பயில விரும்பும் மாணவர்களுக்கு, புட்வேர் டிசைன் அண்ட் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட் (எப்டிடிஐ)ன் ஒருங்கிணைப்புடன், நொய்டா, சென்னை, கொல்கத்தா, ரோடக், ஜோத்பூர், சிந்த்வாரா ஆகிய இடங்களிலுள்ள எப்டிடிஐ பயிற்சி நிறுவனம் முழு நேர பயிற்சி அளிக்கின்றது. 
காலணி வடிவமைப்புத் துறையில் இக்னோ கடந்த ஆண்டு முதல் இளநிலை படிப்பாக பி.எஸ்சி., புட்வேர் டெக்னாலஜி, லெதர் கூட்ஸ் அண்ட் ஆக்ஸசரீஸ் டிசைன் ஆகிய படிப்புகளும் முதுநிலை படிப்பாக எம்.எஸ்சி (பேஷன் மெர்கண்டைசிங் அண்ட் ரீடைல் மேனஜ்மென்ட், புட்வேர் டெக்னாலஜி, கிரியேடிவ் டிசைனிங், லெதர் கூட்ஸ் அண்ட் அக்ஸசரீஸ் டிசைன்) போன்ற பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது.  
இந்த காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு கல்வி நிறுவனத்துடன் (எப்.டி.டி.ஐ) இணைந்து துவக்கப்பட்ட இப்படிப்புகள் ஏற்கனவே இத்துறையில் பணிபுரிபவர்களின் அறிவு மேம்பாடு மற்றும் பாதி திறனுள்ள மற்றும் முழு திறனுள்ள பணியாளர்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படிப்புகள் மாணவர்களுக்கு புதிய வழிகாட்டியாக அமைவதுடன், இத்துறை சார்ந்த ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பயிற்சியளிக்கப்பட்ட மனிதவளத்தை உருவாக்குதில் உதவி செய்கிறது.  
சென்னையில் ஸ்ரீபெரும்புத்தூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில் சிப்காட் தொழில் பூங்காவில் காலணி தொழில் நுட்பக் கல்வியை வழங்கி வருகிறது, இக்கல்வி நிறுவனத்தில் காலணி செய்தல் மற்றும் தோலினால் வடிவமைக்கப்பட்ட இதர பொருட்களை உருவாக்குதல் உள்ளிட்ட நீண்டகால மற்றும் குறுகிய காலப் படிப்புகள் வழங்கப்படுகிறது. 
இளநிலை பட்டப்படிப்பில் பி.எஸ்சி., (புட்வேர் டெக்னாலஜி, பேஷன் மெர்கண்டைசிங் அண்ட் ரீடைல் மேனஜ்மென்ட் போன்ற படிப்புகளும் முதுநிலையில் கிரியேட்டிவ் டிசைன் கேட்/கேம், விசுவல் மர்கண்டைசிங் அண்ட் டிசைனிங் ஆகிய பட்டப்படிப்பும் வழங்கப்படுகிறது.  
இந்த படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இளநிலை படிப்புக்கு +2 படிப்பில் தேர்ச்சியும், முதுநிலை படிப்புக்கு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். 
சிப்காட் தொழில் பூங்காவில் மாணவர்களுக்கு தேவையான சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளான தங்கும் விடுதி ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனியாக அமையப் பெற்றுள்ளது. மேலும் இத்துறை பற்றி விரிவாக கற்றுத்தர ஆய்வுக்கூட வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.  
இங்கு காலணித் தொழில்நுட்ப படிப்புகள் மட்டுமின்றி, நிர்வாக மேலாண்மை பயிற்சியும் கற்றுத்ததப்படுகிறது. எனவே படிப்பு முடித்தவுடன் தோல் தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி இதர நிறுவனங்களான உற்பத்தி மேலாளர், நிர்வாக மேலாளர் மற்றும் கிடங்கு மேலாளர் போன்ற இடங்களில் பணிக்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.  
காலணி தொழில்நுட்ப துறையில் பட்டம் பெறும் மாணவர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம். மேற்கொண்டு இத்துறையில் முதுகலைப் படிப்பையும் படிக்கலாம். தொழில் துவங்க ஆர்வமுள்ளவர்கள், முதலில் காலணி தொழில் நிறுவனங்களில் பணியாற்றி அந்த அனுபவத்தோடு சுயமாக தொழில் துவங்கி சாதனை படைக்கலாம்

Saturday, November 19, 2011

செப்பல் (காலணி) தயாரிப்பது எப்படி



சர்க்கரை, ரத்த அழுத் தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி பலரும் உடல் நலம் பேணும் பிரத்யேக காலணிகளை பயன்படுத்துகி றார்கள். அவற்றை தயாரித்து விற்றால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறுகிறார் கோவை பூ மார்க்கெட்டை சேர்ந்த கர்ணன். அவர் கூறியதாவது: 5ம் வகுப்பு வரை தான் படித்தேன். 15 வயதில் சென்னையில் ஒரு காலணி தயாரிக்கும்  நிறுவனத்தில் சேர்ந்தேன். அங்கு தொழிலை கற்றுக்கொண்டேன். உடல்நலம் பேணும் பிரத்யேக காலணிகளுக்கு கிராக்கி இருப்பதை அறிந்து, அதை தயாரிக்க தொடங்கினேன்.

பல்வேறு மருத்துவமனைகளை அணுகி எனது முகவரியை கொடுத்தேன். அங்கு சிகிச்சைக்கு வருபவர்கள் எனக்கு ஆர்டர் கொடுக்கின்றனர். அதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது. இந்த தொழில் எளிதானது. சிறிய முதலீட்டில் துவங்க ரூ.40 ஆயிரம் போதும். இயந்திரங்கள் பொருத்தி பெரிய அளவில் துவங்க ரூ.3 லட்சம் தேவை. மருத்துவமனைகளில் டிஸ்பிளே செய்து ஆர்டர் பிடிக்கலாம். மருத்துவமனை ஸ்டோர்களுக்கு குறைந்த லாபத்தில் விற்கலாம்.

மருத்துவமனை அனுமதி பெற்று உள் நோயாளிகளிடம் நேரில் விற்கலாம். இந்த செருப்புகளை நோயாளிகள் மட்டுமல்ல; மற்றவர்களும் பயன்படுத்தலாம். செருப்பு கடைகளிலும் விற்கலாம். ஆர்டர் குறைவாக இருக்கும் போது மற்ற செருப்புகளையும் தயாரித்தால் லாபம் பெருகும்.

தேவையான பொருட்கள்

செருப்பின் அடிப்பாகத்துக்கு தேவையான ரப்பர் ஷீட் (ஒரு ஷீட் ரூ.450) அடிப்பாகத்தின் மேல் அடுக்காக பயன்படும் பாலிமர் கவர் ஷீட் (ஒரு ஷீட் ரூ.150), செருப்பின் ஸ்டிராப் செய்ய சிந்தடிக் ஷீட் (ஒரு ஷீட் ரூ.280) ஸ்டிராப்களை இணைக்கும் வெல் க்ரோவ் (மீட்டர் ரூ.30) செருப்பின் முன்பாகத்தில் மட்டும் ஒட்டும் ரப்பர்  பீடிங் பன்வர் (ஒரு ஷீட் 800), பசை, நூல்.

கட்டமைப்பு: 10க்கு 16 அடி நீள, அகலம் கொண்ட இடம் போதுமானது.

கிடைக்கும் இடங்கள்

காலணி தயாரிக்க தேவையான பொருட்கள் பெரிய மற்றும் சிறிய நகரங்களில் கிடைக்கின்றன.

பயன்கள்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டால் சீக்கிரம் ஆறாது. காயம் படாமல் பார்த்து கொள்ள வேண்டும். சர்க்கரை நோயளிகள் காலில் காயம் ஏற்படாமல் இருக்க பீடிங் பன்வர் பொருத்திய காலணிகள் உதவியாக இருக்கின்றன. எதன் மீதாவது மோதினால் காலில் அடிபடாமல் இவை காக்கின்றன.பிஸியோதெரபி, அக்குபஞ்சர் சிகிச்சையில் உள்ளவர்களின் பாதங்களுக்கு அழுத்தம் கொடுக்கவும், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ரத்த ஓட்டத்தை சீராக்கவும் பாலிமர் கவர் ஷீட் பொருந்திய காலணிகள் நல்லது. இதை அணிய டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இவற்றுக்கு கிராக்கி அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப உற்பத்தியாளர்கள் இல்லை. கூலியாட்கள் வைத்து உற்பத்தியை அதிகமாக்கினால் வருவாய் பெருகும்.

முதலீடு

இட வாடகை அட்வான்ஸ்
ரூ.10 ஆயிரம், தையல் மெஷின்
(ரூ.6 ஆயிரம்), அலமாரி 2
(ரூ.8 ஆயிரம்), மரத்தால் ஆன
மாதிரி கால் 12 வகை அளவுகள், கொட்டல் 1, உளி 1,
கத்தரிக்கோல் 3, பல்வேறு
பாத அளவுகளை கொண்ட சார்ட்
ஆகிய மூலதன பொருட்கள் (ரூ.7 ஆயிரம்). மொத்த முதலீடு  ரூ.31 ஆயிரம்.

உற்பத்தி செலவு

அறை வாடகை ரூ.3 ஆயிரம், மின் கட்டணம் ரூ.300, ஒரு நாளில் ஒரு நபர் 4 ஜோடி காலணிகள் தயாரிக்கலாம். மாதம் 25 நாளில் ஆண்களுக்கான காலணி 100 ஜோடி அல்லது பெண்களுக்கான காலணி 150 ஜோடி தயாரிக்கலாம். ஆண்கள் காலணி ஒன்று தயாரிக்க உற்பத்தி பொருள் மற்றும் உழைப்பு கூலி உள்பட ரூ.150 செலவாகும். பெண்கள் காலணி தயாரிக்க ரூ.100 செலவாகும். எந்த செருப்பு தயாரித்தாலும் ரூ.15 ஆயிரம் தேவை. மொத்த மாத செலவு
ரூ.18,300.

வருவாய்

ஆண்கள் காலணி குறைந்தபட்சம் ரூ.250க்கும், பெண்கள் காலணி ரூ.170க்கும் விற்கிறது. மாத வருவாய் ரூ.25 ஆயிரம். செலவு ரூ.18,300.
லாபம் ரூ.6,700. ஓரளவு அனுபவம் கிடைத்த பிறகு தொழிலை விரிவுபடுத்தினால் அதிக லாபம் கிடைக்கும்.

தயாரிப்பது எப்படி?

ரப்பர்ஷீட், பாலிமர் கவர் ஷீட் ஆகியவற்றில் தேவைப்பட்ட அளவில் அடிப்பாகத்தை வரைந்து, வெட்டி எடுக்கவேண்டும். இரண்டையும் ஒன்றின் மீது ஒன்றாக ஒட்ட வேண்டும். இப்போது அடிப்பாகம் தயார். சிந்தடிக் ஷீட்டில் காலணியின் மாடலுக்கேற்ப இருபுற ஸ்டிராப்களை வெட்டி எடுக்க வேண்டும். அதை தையல் மெஷினில் வைத்து தைக்க வேண்டும். இப்போது மேல்பாகம் தயார். இதை அடிப்பாகத்தில் இணைக்க வேண்டும்.

அதற்கு அடிப்பாகத்தின் 2 அடுக்குகளுக்கு இடையில் பிளவு ஏற்படுத்தி உள்ளே பசை தடவி மேல் பாகத்தை திணித்து இறுக்க வேண்டும். பின்னர் காலணியின் முன்பாகத்தில் மட்டும் கீழ்பாகத்தின் 2 அடுக்குகளை இணைக்கும் இடத்தில் பீடிங் பன்வர் ஒட்டவேண்டும். கடைசியாக செருப்பின் மேல்பாகத் தில் வெல்க்ரோவ் ஒட்ட வேண்டும்.

பயிற்சி பெற...

டிப்ளமா இன் லெதர் டெக்னாலஜி படிப்பு உள்ளது. இதன் மூலம் தோல் பதப்படுத்துதல், காலணி தயாரிப்பு ஆகியவற்றை கற்று கொள்ளலாம். அல்லது காலணி உற்பத்தி கூடங்களில் 3 மாதத்தில் அனுபவ ரீதியாக கற்று கொள்ளலாம்.



புதுடில்லி: வரும், 2015ல், உள்நாட்டில், காலணிகள் துறையின் சந்தை மதிப்பு, 38 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது, 22 ஆயிரம் கோடி ரூபாய் என்றளவில் உள்ளது.உயர்தர காலணி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனங்கள், நாட்டின் சிறிய, நடுத்தர நகரங்களை மையமாக வைத்து, விற்பனையில் ஈடுபட்டுள்ளன. நாட்டில், விற்பனையாகும் மொத்த காலணிகளில், இந்நகரங்களின் பங்களிப்பு, 55 சதவீதம் என்றளவில் உள்ளது.மொத்த காலணிகள் சந்தையில், ஆடவர்களுக்கான பிரிவு, 55 சதவீத சந்தை பங்களிப்பை கொண்டு முதலிடத்தில் உள்ளது. இவை தவிர, குழந்தைகள் மற்றும் மகளிருக்கான சந்தை பங்களிப்பு முறையே, 15 மற்றும் 30 சதவீதம் என்ற அளவில் உள்ளது.இந்தியாவில், காலணிகள் தயாரிப்பில், அமைப்பு சாராத நிறுவனங்களின் பங்களிப்பு 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இவற்றில், 15 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அமைப்பு சார்ந்த நிறுவனங்கள், எஞ்சிய 30 சதவீதம் (5 லட்சம் வேலைவாய்ப்பு) பங்களிப்பை கொண்டுள்ளன.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites