இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, November 12, 2011

கருப்பட்டி தயாரிப்பது எப்படி

கிராமங்களில் இன்றும் ‘கருப்பட்டி’ காபி என்றால் ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம், மருத்துவ குணம்  அதிகம் இருக்கிறது. பனங்கருப்பட்டியில் சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து தின்பண்டமாகவும் தயாரிக்கப்பட்டு வருகிறது. உடல்நலனுக்கு உகந்தது என்பதால்  இப்போது நகர மக்களிடையேயும் கிராக்கி அதிகரித்து வருகிறது. பனங்கருப்பட்டி உற்பத்தியில் ஈடுபடுவோர் மிக சிலரே என்பதால், அதை தயாரிக்க கற்றுக்  கொண்டால் லாபத்தை  அள்ளிக்கொடுக்கும் என்கிறார் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குளத்தூரில் ‘கவித்தமிழ்Õ என்ற பெயரில் பனங்கருப்பட்டி  தயாரிக்கும் முருகேசன். அவர் கூறியதாவது: 10 ஆண்டுக்கு முன்பு, பாத்திரக்கடையில் வேலை பார்த்தேன். கள் இறக்க அனுமதி இல்லாததால், இங்குள்ள பனை மரங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருந் தன. விவசாயிகளிடம் கேட்டு, மரம் ஏற ஆட்களை ஏற்பாடு செய்து பதநீர் இறக்கினேன். அதைக் காய்ச்சி கருப்பட்டியாக விற்றால் நல்ல லாபம்  சம்பாதிக்கலாம் என நினைத்து அத்தொழிலில் இறங்கினேன்.

துவக்கத்தில் குறைந்த அளவு பதநீர் கிடைத்தது. புட்டுக் கருப்பட்டி என்ற சின்ன சின்ன கருப்பட்டிகளை வீட்டிலேயே தயாரித்து கிராமங்களில் தெரு தெரு வாக கூவி நானே விற்றேன். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஒருநாள் தெருவில் விற்றுக் கொண்டிருந்தேன்.அப்போது தலையில் இருந்த கூடையை கீழே இறக்க குனிந்தபோது  வேட்டி கிழிந்தது. மானத்தை காக்க வேட்டி தேவை. கருப்பட்டி விற்காததால் புதுவேட்டி வாங்க கையில் காசும் இல்லை. அருகிலுள்ள சர்வோதயா சங்கத் தில் 2 கிலோ கருப்பட்டியைக் கொடுத்து வேட்டி வாங்கினேன். பணத்தைக் கொடுத்துவிட்டு கருப்பட்டியை வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி, மீதமுள்ள  கருப்பட்டியை விற்பதற்காக சென்றேன்.

பின்னர், சர்வோதயா சங்கத்தில் பணத்தை கொடுத்து கருப்பட்டியைக் கேட்டபோது, ‘நீங்கள் கொடுத்த கருப்பட்டி விற்று விட்டதுÕ என்றனர். அடுத்து வ ரும்போது மொத்தமாக சப்ளை செய்யும்படி கூறினர். அடுத்த முறை கொடுத்தேன். கருப்பட்டியை பிளாஸ்டிக் கவரில் போட்டு, லேபிள் வைத்து மாவட்டத் திலுள்ள அனைத்து சர்வோதயா கடைகளுக்கும் சப்ளை செய்யும்படி கூறினார்கள். தினசரி 10 கிலோ அளவு தயாரித்த எனக்கு, தற்போது 500 கிலோ அளவுக்கு ஆர்டர் கிடைக்கிறது. ஆனால், 100 கிலோவுக்கு மேல் உற்பத்தி செய்யும் அளவு  பதநீர் கிடைப்பதில்லை. ஆள் பற்றாக்குறையும் உள்ளது. இவ்வாறு முருகேசன் கூறினார்.

முதலீடு எவ்வளவு?

மூலப்பொருட்கள்:

பனை பதநீர், சுக்கு, மிளகு, திப்பிலி.

கட்டமைப்பு:

பதநீர் காய்ச்ச, கருப்பட்டி பாகு அச்சில் ஊற்ற ஒரு அறை. உலர வைக்க, பேக்கிங் செய்ய மற்றொரு அறை. மூலதனச் செலவு: கட்டிட அட்வான்ஸ் ரூ.20 ஆயிரம். கொப்பரை அல்லது அலுமினிய பாத்திரம் 4 கிலோ அளவுள்ளது ணீ600, அச்சுப்பலகை 6 அடி நீளம்  ரூ2000, உலர வைக்க 20 தட்டுக்கூடை ரூ1500, துடுப்பு, கரண்டி ரூ200, பேக்கிங் செய்ய எடை மெஷின் ரூ500 என கட்டமைப்புக்கு ரூ24,800 தேவை.

உற்பத்தி செலவு:

தினசரி 100 கிலோ சுக்கு கருப்பட்டி தயாரிக்க 750 லிட்டர் பதநீர் வீதம், மாதம் 26  நாளில் 2,600 கிலோ பனை சுக்கு கருப்பட்டி தயாரிக்க  19,500 லிட்டர் பதநீர் தேவை. லிட்டர் ரூ10 வீதம் பதநீருக்கு மட்டும் மாதம் ரூ1.95 லட்சம், பிளாஸ்டிக் கவர் ரூ110, லேபிள் ரூ25, செலோ டேப், பார்சல்  பெட்டி, பேக்கிங் கயிறு உட்பட ரூ50. உற்பத்திக் கூலி தினசரி 5 பேருக்கு தலா ரூ150 வீதம், மாதம் ரூ19,500. இட வாடகை ரூ2,000 என உற்பத்திச் செலவுக்கு ரூ2.16 லட்சம் தேவை.

பதநீர் எங்கு வாங்கலாம்?

ஒரு லிட்டர் பதநீர் தோட்டங்களில் ரூ.10க்கு கிடைக்கும். மொத்த வியாபார கடைகளில் சுக்கு கிலோ ரூ255, மிளகு ரூ260, திப்பிலி ரூ650க்கு கிடைக்கும்.  பதநீர் போதிய அளவு கிடைக்காவிட்டால் கருப்பட்டி தயாரிக்கும் குன்னத்தூர், வேம்பாரை, தூத்துக்குடி, உடன்குடி, நாகர்கோவில், சிறுவலூர், வேலூர்  மாவட்டம் ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் தயாரிக்கும் கருப்பட்டியை வாங்கி வந்து, நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கும் பதநீரை ஊற்றி மீண்டும்  காய்ச்சி அதில் சுக்கு, மிளகு, திப்பிலி போட்டு சுக்கு கருப்பட்டியாக தயாரிக்கலாம்.

தயாரிக்கும் முறை

கருப்பட்டி: அலுமினிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து 70 அல்லது 80 லிட்டர் பதநீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பாகு ஆனவுடன் அடுப்பில்  இருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும். கொஞ்சம் ஆறிய பின்பு அச்சுப்பலகையில் ஊற்றினால், அரை மணி நேரத்தில் கட்டியாக மாறியிருக்கும். அச்சுக்கு ழியில் உள்ளவற்றை குச்சியால் நெம்பி எடுத்து, நன்கு ஆற வைக்க வேண்டும். 10 கிலோ கருப்பட்டி கிடைக்கும். பின்னர் பேக்கிங் செய்து விற்கலாம். சுக்கு கருப்பட்டி: பனங்கருப்பட்டி தயாரிப்பு முறையில் 70 அல்லது 80 லிட்டர் பதநீர் கொதிக்கும்போது 200 கிராம் சுக்கு, 75 கிராம் மிளகு, 50 கிராம்  திப்பிலி ஆகியபொடி கலவையை போட்டுக் கலக்கி கொதிக்க வைக்க வேண்டும். மற்றவை பனங்கருப்பட்டி தயாரிப்பு போலவே.

மாத லாபம் ரூ31 ஆயிரம்

தினமும் 100 கிலோ கருப்பட்டி வீதம் உற்பத்தி செய்து மாதம் சுமார் 2600 கிலோ தயாரிக்க முடியும். கருப்பட்டி ஒரு கிலோ ரூ90க்கும், பனம் சுக்கு கருப்ப ட்டி ரூ100க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. மாத உற்பத்திச் செலவு ரூ2.16 லட்சம். விற்பனை வருவாய் சராசரியாக கிலோவுக்கு ரூ95 வீதம், மாத லாபம்  ரூ31 ஆயிரம்.

பனங்கற்கண்டு தயாரிக்கலாம்

100 லிட்டர் பனை பதநீரை கொப்பரையில் ஊற்றி 110 டிகிரி வெப்பத்தில் கொதிக்க வைக்க வேண்டும். அடுப்பிலிருந்து இறக்கிய கொப்பரையை மூடி நிலத் துக்கடியில் புதைக்க வேண்டும். 40 நாள் கழித்து கொப்பரையை வெளியே எடுத்தால் உள்ளே பதநீர் பனங்கற்கண்டாக மாறியிருக்கும். 100 லிட்டர் பதநீருக்கு  5 கிலோ பனங்கற்கண்டு கிடைக்கும். கிலோ ரூ300 முதல் ரூ500 வரை விற்கலாம்.

விற்பனை வாய்ப்பு

புட்டு கருப்பட்டி, சுக்கு கருப்பட்டி தயாரிப்பு தேதியில் இருந்து ஒரு ஆண்டுக்கு கெடாது. சுக்கு கருப்பட்டிக்கு அதிக வரவேற்பு உள்ளது. 100 கிராம், 200  கிராம் பாக்கெட்களில் தின்பண்டமாக விற்கலாம். தமிழகத்திலுள்ள சர்வோதய சங்கங்கள், கடலூர் பனை பொருள் தயாரிப்பு நிலையம் மற்றும் தமிழகம்  உள்ளிட்ட கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட்கள், முக்கிய விற்பனை நிலையங்களில் நல்ல வரவேற்பு உள்ளது.  வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப சப்ளை குறைவாக இருப்பதால் கிராக்கி உள்ளது.

மருத்துவ குணம்

சீரகத்தை வறுத்து சுக்கு கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஓமத்தைச் சேர்த்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும்.
25 கிராம் குப்பைமேனி கீரையுடன் 25 கிராம் கருப்பட்டி எடுத்து வாணலியில் வதக்கி சிறு துண்டுகளாக சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளி  குணமாகும். இஞ்சி டீயிலும் இதைக் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites