கடல்வாழ் உயிரினங்களில் ஆண் இனத்தில், இனப்பெருக்கம் செய்தல் என்ற சிறப்பு தன்மையைக் கொண்டுள்ளது கடற்குதிரைகள். இவை மீன் இனத்தைச் சேர்ந்த உயிரினம் ஆகும். பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை(200) ஆண் கடற்குதிரைகளின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் முட்டையிடுகின்றன. இந்த முட்டையினை ஆண் கடற்குதிரைகள் ஆறு வாரங்கள் பாதுகாத்து குஞ்சுகளாகப் பொரிக்கின்றன. இந்த குஞ்சுகள் சிறிது காலம் இந்தப் பையில் தான் வளர்கின்றன. இந்த குஞ்சுகளின் எண்ணிக்கை 50 முதல் 100 வரை இருக்கும். இதன் நீளம் ஏறத்தாழ ஒரு செ.மீற்றராக காணப்படுகிறது. உலகில் மொத்தம் 35 வகையான கடல் குதிரைகள் காணப்படுகின்றன. இந்த குதிரைகள் தன்னுடைய வாலைப் புல்களில் கட்டிக்கொண்டு தான் நிற்கும். |
0 comments:
Post a Comment