இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label கிரிஸ்டல் நகை தயாரிப்பு. Show all posts
Showing posts with label கிரிஸ்டல் நகை தயாரிப்பு. Show all posts

Thursday, September 3, 2015

நகைகள்

நகைகள் எப்படி இருக்க வேண்டும்? உடைக்கு மேட்ச்சாக இருக்க வேண்டும்... உடையின் டிசைனிலேயே கிடைத்தால் இன்னும்  சிறப்பு... உறுத்தவோ, கனமாகவோ இல்லாமல் அணிய சுலபமாக இருக்க வேண்டும். எல்லாவற்றையும்விட முக்கியமாக  பட்ஜெட் இடிக்கக்கூடாது. கவரிங் நகைகளில் ஆரம்பித்து, டெரகோட்டா, குவில்லிங் நகைகள் வரை எதிலும் இத்தனை  விஷயங்களைப் பார்க்க முடியாது.பாலிமர் கிளேவில் உருவாக்கப்படுகிற நகைகள் உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தையும்  நிறைவேற்றுபவை.சென்னை, புரசைவாக்கத்தைச் சேர்ந்த செல்வி திலீப்  பாலிமர் கிளேயில் நகைகள் செய்வதில் நிபுணி!Polymer Clay Jewellry
எம்.காம் படிச்சிருக்கேன். 60 வகையான கைவினைக் கலைகள் செய்யத் தெரியும். டெரகோட்டா  உள்பட நிறைய வகையான  நகைகளையும் செய்வேன். மூணு வருஷத்துக்கு முன்னாடி பாலிமர் கிளேவுல நகைகள் செய்யக் கத்துக்கிட்டேன். பார்க்கிறதுக்கு  டெரகோட்டா நகைகள் மாதிரியே இருக்கும். ஆனா, லேசா இருக்கும். கீழே விழுந்தா உடையாது. டெரகோட்டா நகைகள்னா நாம  கலர் பண்ணணும். ஆனா, பாலிமர் கிளே, விதம் விதமான கலர்கள்ல கிடைக்கிறதால அந்த வேலையும் மிச்சம்...’’ என்கிற  செல்வி, ஆயிரம் ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிலில் துணிந்து இறங்க நம்பிக்கை அளிக்கிறார்.

பாலிமர் கிளே, மோல்டு, கயிறு, கியர் ஒயர், வளையல், மோதிரம், காதணி செய்யறதுக்கான பேஸ், கொக்கி, டூல்ஸ் எல்லாம்  தேவை. மோல்டு இல்லாமலும் செய்யலாம். ரெண்டு, மூணு கலர் காம்பினேஷன்ல செய்ய முடியும். பட்டுப்புடவையில உள்ள  மயில் டிசைன் அப்படியே நகையில வேணும்னாலும் கொண்டு வர முடியும். பாரம்பரிய டிசைன்களையும் பண்ணலாம். 

காலேஜ்  பொண்ணுங்களுக்குப் பிடிச்ச மாதிரி புது டிசைன்களையும் பண்ணலாம். நகைகள் செய்ததும் மைக்ரோவேவ் அவன்ல வச்சு பேக்  பண்ணி எடுத்துட்டா காலத்துக்கும் அப்படியே இருக்கும். ஒருமணி நேரத்துல5 செட் பண்ணலாம். 150 ரூபாய்லேருந்து விற்க ஆரம்பிக்கலாம். ஆடம்பரமான நெக்லஸ் செட்டை 600 ரூபாய் வரை விற்கலாம்’’ என்கிற செல்வியிடம் ஒரே நாள் பயிற்சியில்  தேவையான பொருட்களுடன் 5 வகையான பாலிமர் கிளே நகைகள் செய்யக் கற்றுக் கொள்ள கட்டணம் 750 ரூபாய்.


நன்றி குங்குமம் தோழி

Saturday, May 3, 2014

பஞ்சலோக நகைகளில் பிசியாகலாமா

busy in Panchaloha  jewelry



பெண்களின் விருப்பப் பட்டியலில் தங்கம், வெள்ளி நகைகளுக்கு அடுத்த இடம் பஞ்சலோக நகைகளுக்குத்தான். கவரிங் நகைகளைப்  போல பத்தே  நாட்களில் பல் இளிக்காது. பளீரென மின்னி, தன்னைப் போலி எனக் காட்டிக் கொள்ளாது. தங்கத்தோடு தங்கமாக  சமர்த்தாகப் பொருந்திப்  போவதுதான் பஞ்சலோக நகைகளின் சிறப்பம்சமே. ஐம்பொன் என்றும் அழைக்கப்படுகிற இந்த பஞ்சலோக  நகை விற்பனையில் பிசியாக  இருக்கிறார்  சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்த காந்திமதி!

‘‘என்னோட சொந்த உபயோகத்துக்காக வாங்கின பஞ்சலோக நகைகளைப் பார்த்துட்டு, நிறைய பேர் அவங்களுக்கும் அதே மாதிரி  வேணும்னு  கேட்டாங்க. அப்ப அந்த நகைகளை வாங்கி, வீட்லயே வச்சு விற்பனை பண்ணிட்டிருந்தேன். நல்ல வரவேற்பு இருக்கிறது  தெரிஞ்சதும், நாமே ஏன்  செய்து விற்கக் கூடாதுனு தோணினது. முறைப்படி பயிற்சி எடுத்துக்கிட்டு, இப்ப தனியா கடையே வச்சு  விற்பனை பண்ற அளவுக்கு  வளர்ந்திருக்கேன். தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, இரும்புனு அஞ்சு விதமான உலோகங்கள் கலந்து  செய்யறதாலதான் இது பஞ்சலோக நகை.

உடம்புல உள்ள சூட்டைக் குறைச்சு, டென்ஷன் இல்லாம வைக்கும். மோதிரம், தோடு, வளையல், சங்கிலி, கொலுசு, ஆரம், அட்டி கைனு எல்லா  அயிட்டங்களும் உண்டு. சிலது சுத்தமான ஐம்பொன்லயும், சிலது கவரிங் கலந்தும் வரும். தங்க நகைகளுக்கு  இணையா கல், நவரத்தினம் பதிக்கிறது  வரைக்கும் எல்லாம் இதுலயும் பண்ண முடியும்’’ என்கிறார் காந்திமதி. ‘‘ஐம்பொன் நகை களுக்கான மெட்டீரியல் முழுமை செய்யப்படாத  வடிவத்துலதான் கிடைக்கும். அதை வாங்கி, பஃப்பிங் மெஷின்ல ஃபைல் பண்ணி,  பாலீஷ் ஏத்தி, சரியான வடிவத்துக்குக் கொண்டு வரணும்.

முழுமை செய்யப்படாத நகைகள், பஃப்பிங் மெஷின், மோட்டார், பிரஷ், புஷ்... எல்லாத்துக்கும் சேர்த்து ரூ.7,500 முதல் 10 ஆயிரம்  வரை முதலீடு  தேவை...’’‘‘ஒரு நாளைக்கு ஒரே ஆளா வேலை பார்த்தா, 25 முதல் 50 பீஸ் வரைக்கும் பண்ணலாம். உதவிக்கு ஆள்  இருந்தா 200-300 பீஸ்  வரைக்கும் பண்ண முடியும். குறைந்தது 25 ரூபாய்லேருந்து ஆயிரம் ரூபாய் வரைக்கும் அயிட்டங்கள் இருக்கு.  30 சதவிகித லாபம் பார்க்கலாம்’’  என்கிறவரிடம் 2 நாள் பயிற்சியில் இந்தத் தொழிலின் நுணுக்கங்களை 750 ரூபாய் கட்டணத்தில் கற்றுக் கொள்ளலாம். (98404 30258)

Thursday, February 20, 2014

திருச்சி பொண்ணுங்க ரொம்ப லக்கி!''




''மாடர்ன் டிரெஸ்ஸா இருந்தாலும் சரி, சேலையாக இருந்தாலும் சரி அதுக்கு உரிய நகைகள் போடும்போதுதான்  மதிப்புகூடும். தங்கம், பேப்பர், குந்தன், கிரிஸ்டல் நகைகளைவிட இந்த ஜங்கிள் நகையைப் போடும்போது எல்லோர் பார்வையும் உங்க மேலதான் இருக்கும். வயசைக் குறைச்சு அழகு கூட்டுற ரகசியம் இதுல இருக்கு'' என்கிறார் திருச்சியில் ஜங்கிள் ஜுவல்ஸ் செய்யும் பாலமுரளி.
நெல், கல் வாழை, யானை குண்டுமணி, மயில் கொன்றை போன்ற 15 வகையான மூலிகைப் பொருட்களைக் கொண்டு  200-க்கும் மேலான டிசைன்களில் நகை செய்கிறார்கள். '' இந்த ஜங்கிள் நகைகள் மாடல், பாரம்பரியம் என எல்லா ஆடைகளுக்கும் மேட்ச் ஆகிறதால, போற இடத்துல ஒரு கூட்டத்தைக் கூட்டிடலாம்'' என்கிறார் பாலமுரளி.
இரண்டு குழுவாகப் பிரிந்து, மிகவும் பொறுமையாகச் செய்யவேண்டிய வேலை இது. வேலை செய்பவர்கள் கைகளை உற்றுக் கவனித்தால் நம் தலை 'கிர்ர்ர்...' என சுற்றும் அளவுக்கு செம ஸ்பீடாக இருக்கிறது. ''பாசிமணி, கிரிஸ்டல், முத்து மணி, பவள மணி இல்லாமல் மூலிகை விதைகளில் இருந்து நகைசெய்ய ஐடியா கொடுத்தது பாலா சார்தான்'' என்கிறார்கள் எக்ஸ்பிரஸ் டீம் தோழிகள்.
''எங்க தாத்தா, அப்பா காலத்துல இருந்தே மூலிகைத் தோட்டம் வெச்சிருக்கோம்.  முன்னாடி, காய்ச்சல்னா வீட்டுலேயே மூலிகை கஷாயம் போட்டுத்தருவாங்க.  இப்போ சின்னதா ஒரு எறும்பு கடிச்சாலும் டாக்டர்கிட்ட ஓடுறாங்க. இப்ப உள்ள மக்களுக்கு மூலிகைகளின் பயனை எப்படிக்கொண்டு சேர்க்கலாம்னு நானும் என் நண்பன் வினோத்தும் சேர்ந்து யோசிச்சோம். இதுல இருந்து கலைப்பொருள், பெண்கள் பயன்படுத்துற நகை பண்ணலாம்னு ப்ளான் பண்ணினோம்.
ஆரம்பத்துல நாங்களே சில மாடல்ஸ் கிரியேட் பண்ணி, அதை ஆர்வமுள்ள பெண்களுக்கும் சொல்லிக்கொடுத்தோம். அதே குழு பெண்களை வெச்சே பெரிய அளவுல நகை பிசினஸ் ஆரம்பிக்க நினைச்சோம். ஆனா, எனக்கு உறுதுணையா இருந்த நண்பன் வினோத், பிசினஸ் ஆரம்பிச்ச அன்னைக்கே விபத்துல இறந்துட்டான். 'அவனே போய்ட்டான்... இனிமே இது எதுக்கு’னு இருந்தேன். ஆனா, ஒரே ஒரு நாள் மட்டுமே பயிற்சிக்குவந்த பெண்கள் யாரும் என்னைவிடலை. அவங்களோட ஆர்வம் காரணமாக நானும் இதுல இறங்கினேன்.
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாடல்ல கிரியேஷன் பண்ணுவாங்க. இங்கே வேலைசெய்ற எல்லோரும் நிறைய படிக்கலைனாலும் திருச்சியைத்தாண்டி சென்னை, கோவைவரைக்கும் ஸ்டால் போட்டு விற்பனை செய்றாங்க. வாங்குகிற எல்லோருமே கேட்கும் முதல் கேள்வி, ' இது எதுல செஞ்சது?’ என்பதுதான். விதைனு சொன்னா நம்பமாட்டாங்க. 25 ரூபாய்ல இருந்து 750 ரூபாய் வரைக்கும் விலையில் இருந்தாலும், யாரும் விலையைப் பார்க்காம டிசைனை மட்டுமே பார்த்து வாங்குறாங்க
.
இந்த நகைகளை பாம்பே, டெல்லி, ஜெய்ப்பூர், பெங்களூரு, அமெரிக்காவரைக்கும் ஏற்றுமதி பண்றோம். அதிலும் வெப்சைட் மூலமா ஆன்லைன்ல நிறைய சேல்ஸ் ஆகுது. நம்ம சைடுல சாதாரண நெல்லுதானேனு அலட்சியப்படுத்துறாங்க. ஆனா, நெல்லுனா என்னன்னே தெரியாத மக்கள் இதை ரொம்ப விரும்புறாங்க.
திருச்சியில உள்ள பொண்ணுங்க ரொம்பக் கொடுத்து வெச்சவங்க. ஏன்னா... அவங்க டிரெஸ்ஸுக்கு மேட்ச்சா, பிடித்த  டிசைன்ல செய்யச்சொல்லி வாங்கிட்டுப் போகமுடியுது. அதிலும் பொண்ணுங்களைவிட அதிகமா பசங்கதான், அவங்க லவ்வரை இம்ப்ரஸ் பண்றதுக்காக வாங்கிட்டுப் போறாங்க. அதனால, திருச்சி பொண்ணுங்க டபுள், டிரிபிள் லக்கிதான்''  சிரிக்கிறார் பாலமுரளி!
- மா.நந்தினி

Monday, January 13, 2014

லாபம் அள்ளும் கிரிஸ்டல் கொலுசு!


மாதம், 10 ஆயிரம் லாபமீட்டும், 'கிரிஸ்டல்' கொலுசு தயாரிக்கும் தொழில் பற்றி கூறும், காமாட்சி: நான், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவள். திருமணம் ஆனதும், சென்னை, வேளச்சேரியில் செட்டில் ஆனேன். பட்டதாரியான 
என்னால், வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை.கணவரும், 'ஓய்வு நேரத்தில் ஏதேனும் கற்றுக்கொள்' என, ஊக்கமளித்தார். அதனால், எனக்கு விருப்பமான ஆர்ட் அண்ட் கிராப்ட் கற்றேன். மேலும், வீட்டில் இருந்தபடியே சிறு சிறு கைவினை பொருட்களை செய்து வந்தேன்.பெண்கள் விரும்பி அணியும் நகைகளில், கொலுசும் ஒன்று. ஆனால், அவைகள் பெரும்பாலும் வௌ்ளி கொலுசாகவே கிடைக்கின்றன. குறைந்த விலையில், பல வித வண்ண ஆடைகளுக்கு ஏற்ப, கிரிஸ்டல் கொலுசுகளாக செய்தால், நல்ல லாபம் கிடைக்கும் என்ற எண்ணத்தில், கிரிஸ்டல் கொலுசு செய்ய 
ஆரம்பித்தேன். பெண்களிடம், இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், பல டிசைன்களில் கிரிஸ்டல் கொலுசு செய்து, வாடிக்கையாளர்களை கவர்ந்தேன். மிக எளிமையான முறையில், கிரிஸ்டல் கொலுசு செய்யலாம்.கொலுசின் அளவிற்கு ஏற்ப, 'கியர் ஒயரை' வெட்டி, இணைப்பு கொக்கியில் கோர்த்து, கியர் லாக்கை கொண்டு, 'லாக்' செய்ய வேண்டும். பின், கலர் மற்றும் டிசைன்களுக்கு ஏற்ப, அதற்கு தேவைப்படும் கிரிஸ்டல் மணிகளை ஒயரில் கோர்க்க 
வேண்டும்.முழுவதும் கோர்த்து முடித்த பின், இணைப்பு கொக்கியையும், கியர் லாக்கையும் ஒன்றாக சேர்த்த பின், மீதி இருக்கும் ஒயரை வெட்டி விட்டால், விற்பனைக்கு தேவையான கிரிஸ்டல் கொலுசு கிடைக்கும். இதற்கான மூலப்பொருட்கள், பல பேன்சி கடைகளில் கிடைக்கின்றன.ஒரு ஜோடி கொலுசின் ஆரம்ப விலை, 150 ரூபாய். நம் கற்பனை திறனுக்கு ஏற்ப குந்தன் கற்கள், சக்ரி, முத்துக்கள் என, பலவற்றையும் பயன்படுத்தி, அதிக விலைக்கு விற்று லாபமீட்டலாம்.மேலும், வளமான வாடிக்கையாளர் வட்டம் கிடைத்தால், குறைந்தபட்சம் மாதம், 5,000 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை சாதாரணமாக சம்பாதிக்கலாம். முழுநேரமாக செய்யத் துவங்கினால், இன்னும் அதிக வருமானம் கிடைக்கும். 
தொடர்புக்கு: 99402 67779.

Sunday, December 15, 2013

பாட்டியான பிறகும் படைப்பாளியாகலாம்


கடமைகளை எல்லாம் ஒருவழியாக முடித்துவிட்டு அப்பாடா என்று ஓய்ந்து உட்காருகிற வயதில் கலைகளின் பின்னால் செல்கிறார் சேலம், அழகாபுரம் சிவாய நகரைச் சேர்ந்த கெஜலஷ்மி. பறந்துகொண்டே இருக்கிற பட்டாம்பூச்சி போல எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கிறார். சோர்ந்து உட்கார்ந்துவிட்டால் உடல், மனம் இரண்டுமே துருப்பிடித்துப் போய்விடும் என்று சொல்கிற இவர், கலைகளின் மூலம் தன்னை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொள்கிறார்.

“நானும் உங்களில் ஒருத்திதான். என் கணவருக்குச் சுயதொழில். அதனால் திருமணமான புதிதில் அவரது வியாபாரம் தொடர்பான கணக்கு வழக்குகளில் உதவுவேன். அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள். வீடு, வேலை, குழந்தைகள் என ஒவ்வொரு நாளும் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு பறக்கும். இரண்டு பெண்களையும் திருமணம் செய்துகொடுத்து, பேரன், பேத்திகளையும் பார்த்தாகிவிட்டது. இப்போது கிடைத்திருக்கும் இந்த ஆசுவாசம், எனக்குள் வேரூன்றி இருந்த கலையார்வத்தை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்தது. என் அக்கா மகள், ஃபேஷன் நகைகள் செய்வதில் வல்லவள். அவளைப் பார்த்து எனக்கும் ஆர்வம் வந்துவிட்டது. அடிப்படை செய்முறையுடன் என் கைத்திறனையும் சேர்த்துப் புதுப்புது மாடல்களை நானே உருவாக்கினேன். என் வீட்டில் பெண்கள் அதிகம் என்பதால் நான் எத்தனை வகையான நகைகள் செய்தாலும் உடனே அவற்றுக்குக் கழுத்தோ, காதோ கிடைத்துவிடும்” என்று புன்னகையுடன் பேசுகிற கெஜலஷ்மி, பயன்படாத பொருட்களைக்கூடப் பளபளக்கும் கலைப்பொருள்களாக மாற்றிவிடுகிறார்.
கல்லையும் சிற்பமாக்கலாம்
எண்ணெய் கவர்கள், பால் கவர்களை முக்கோணமாக வெட்டி, சுருட்டி இவர் தொடுக்கும் மாலைகள் கொள்ளை அழகு. இளநீர் குடித்துவிட்டு நாம் ஸ்ட்ராவைத் தூக்கி போட்டுவிடுவோம். ஆனால் கெஜலஷ்மியோ அவற்றை வைத்து அலங்காரக் குடைகளை உருவாக்கி விடுகிறார். ஆம்லெட் போட்டுவிட்டு நாம் தூக்கியெறியும் முட்டை ஓடுகளில் கண்கவர் ஓவியங்கள் தீட்டுகிறார். அச்சுக் கலையையும் ஒரு கை பார்க்கிறார். புடவைகள், குழந்தைகளின் ஆடைகளில் விதவிதமான அச்சுகளைப் பதிக்கிறார். தையல் எந்திரத்தை நம்பாமல், கைகளிலேயே விதவிதமான எம்ப்ராய்டரி வடிவங்களைச் செய்கிறார். முகப்புவைத்த முத்துச்சரமும், பதக்கம் பதித்த சங்கிலியும் இவரது சிறப்புத் தயாரிப்புகள்.
“நான் இவ்வளவு பொருட்களைச் செய்தும் எதையும் விற்பனை செய்ததில்லை. என் மனத் திருப்திக்கும், என் குடும்ப உறுப்பினர்களுக்குமே இவை போதுமானதாக இருக்கின்றன. ஆயிரம் ஆயிரமாகக் கொடுத்துக் கடைகளில் வாங்குவதைவிட என் மனதுக்கு நெருக்கமானவர்களுக்கு என் கையால் செய்த பொருட்களைக் கொடுக்கும்போது தோன்றுகிற மகிழ்ச்சிதான் என் வருமானம்!” என்று சொல்லும் கெஜலஷ்மி, இதுவரை யாரிடமும் இந்தக் கலைகளைப் பயின்றதில்லை.
நீங்களும் பங்கேற்கலாம்
பார்த்ததுமே உங்களுக்குள் இருக்கும் கலை உணர்வு மெல்லத் தலைகாட்டுகிறதா? உடனே அதை வெளிப்படுத்துங்கள். அது புகைப்படமோ, ஓவியமோ, ஆடைகளில் வரையும் அலங்கார டிசைனோ எதுவாக இருந்தாலும் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள், உலகறியச் செய்கிறோம். penindru@kslmedia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.

Wednesday, June 5, 2013

கிரிஸ்டல் கொலுசு.


*தரமான வெள்ளிக்கொலுசு வாங்க குறைந்தது ரூ.2 ஆயிரம் தேவைப்படுகிறது. மார்டன் பெண்களுக்கு பாரம்பரிய வெள்ளி கொலுசுகளில் மனம் அவ்வளவாய் லயிப்பதில்லை. குறைந்த விலையில், புதுப்புது டிசைன்களில், கலர்கலராய்  கொலுசுகள் கிடைத்தால் சும்மா விடுவார்களா? வாங்கி குவித்து விடுவார்கள். விலை குறைவாக, அதே நேரத்தில் டிரஸ்சுக்கு மேட்ச்சாக கலர்கலராய் கிடைப்பதால் கிரிஸ்டல் கொலுசுகளுக்கு இளம்பெண்கள் மத்தியில் நல்ல கிராக்கி இருக்கிறது.  


*கொலுசு விலையைக் குறைக்க அதில் சேர்க்கப்படும் வெள்ளியைக் குறைக்க வேண்டும். சராசரியாக 20 கிராமுக்கு குறையாமல் வெள்ளிக் கொலுசு தயாரிக்கும் நிலையில் அதை 2 கிராம், 3 கிராம் வெள்ளியில் சரம், சரமாக பல வண்ணங்களில் டிசைன்களில் கிரிஸ்டல் கற்களை இணைத்து தயாரிலாம். 

*நாம் தயாரித்த கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசுகளை பள்ளி, கல்லூரி மாணவிகள் விரும்பி வாங்கலாம்.
இத்தொழிலே தெரியாத பெண்களுக்கு கிரிஸ்டல் கொலுசு தயாரிப்பதை ஒரு வாரத்தில் கற்றுக் கொடுகலாம்.


*ஒரு கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசு தயாரிக்க 3 கிராம் வெள்ளி ரூ.150, 20 கிரிஸ்டல் கற்களுக்கு ரூ.100, உருக்க, கம்பியாக்க, கப் செய்ய கூலி ரூ.20, செய்கூலி ரூ.50 என அதிகபட்சமாக ரூ.320 ஆகும். இதை கிரிஸ்டல் கற்களின் விலைக்கேற்ப ரூ.300க்குள்ளும் தயாரிக்க முடியும். ரூ.400க்கு குறையாமல் விலை போகும். 

*ஒரு கொலுசுக்கு லாபமாக ரூ.100 நிச்சயம். ஒருவர் ஒரு நாளைக்கு 5 கொலுசுக்கு குறையாமல் தயாரிக்க முடியும். மாதம் ரூ.15 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். உறவினர்கள், நண்பர்கள், சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள், பள்ளி, கல்லூரி பெண்களை நேரடி வாடிக்கையாளர்களாகக் கொண்டால் குழுவாகச் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.  

*பெண்கள் படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசுகளை கண்காட்சியாக வைத்து வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினால் வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள்.  இது தவிர குறைந்த லாபத்தில் நகைக் கடைகளில் மொத்தமாக விற்கலாம்.


தங்க முலாம் பூச்சு

*வீட்டில் 5க்கு 5 அடி இடம் இருந்தால் போதும். சின்ன நகைப்பட்டறை போல் வீட்டளவில் ஒரு மண் தொட்டி, அதில் உமி, கரித்துண்டுகள் போட்டு, நெருப்பு ஊதி, சின்ன மண் செப்புகளில் தங்கத்தை வெள்ளியை உருக்க வேண்டும். பேசினில் 3 டம்ளர் தண்ணீரில் பொட்டாசியம் சயனைடு, அவல் அரக்கு, ரோசனம் ஆகியவற்றை தலா 5 கிராம் கலந்து, அதில் உருக்கிய தங்கம் அல்லது வெள்ளியை ஊற்றி, அதில் முலாம் பூச வேண்டிய ஆபரணத்திற்கு தங்கம், வெள்ளி கோட்டிங் அளவை சேர்க்க, ரேடியேட்டர் மீட்டர் மூலம் இணைத்து பழைய கவரிங், தங்க, வெள்ளி நகைகளுக்கு முலாம் பூசலாம். 

*ஒரு மக்கில் வைக்கப்பட்டுள்ள காஸ்டிக் சோடாவில் ஆபரணத்தை முக்கி எடுத்தால் புதிது போல ஆகிவிடும். ஒரு பேசின், குட்டி கம்ப்ரசர் மோட்டார் வைத்து சுழலும் பிரஷ்சில் நகையைக் கழுவினாலும் புதுசாகும். இதை பாலிஷ் போடுவது, மெருகு போடுவது என்பார்கள். தங்க முலாம் பூசுவது, மெருகு போடுவது கூடுதல் வருமானம் தரும்.

தயாரிக்கும் முறை

*வெள்ளியை வாங்கி, அதன் திடத்தன்மைக்கு செம்பு சேர்த்து உருக்க வேண்டும். உருக்கி கொடுக்கவும், அதை மெல்லிய கம்பியாக்கவும், கிரிஸ்டலில் பொருத்தக்கூடிய சின்ன கப்களை தயாரிக்கவும் ஜாப் ஒர்க் கடைகள் உள்ளன. அங்கு செய்து வாங்கிக் கொள்ளலாம். நூலில் பாசி கோர்ப்பதுபோல், வெள்ளிக் கம்பியில் கிரிஸ்டல் கற்கள் கோர்ப்பதுதான் கிரிஸ்டல் வெள்ளிக்கொலுசின் பார்முலா. 

*கிரிஸ்டல் கற்களை துளை போட்டு, அதன் வழியாக வெள்ளிக் கம்பியை நுழைத்து, கிரிஸ்டல் கற்களின் இருபுறமும் குடையைப் போன்ற சிறு கப்களை ஒட்டவைத்து, குடை வழியாக வெளிவரும் கம்பியை வளையமாக்கி, அந்த வளையத்துக்குள் மற்றொரு வளையத்தைப் பொருத்த வேண்டும். கப், கிரிஸ்டல் என்று தொடர்ந்து சரமாக்குவது தான் கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசு. 

*இதைச் செய்ய நகைத்தொழில் தெரிய வேண்டியதில்லை. சிறிய ‘சவனம்Õ (கட்டிங் பிளேயர்), இருந்தால் போதும். கைவேலையில் கொலுசு தயாராகி விடும். நகைக்கடைகளில் அன்றைய விலை நிலவரப்படி வெள்ளியை வாங்கலாம். கிரிஸ்டல் கற்கள் நகைத்தொழிலுக்குரிய பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும்.

டிரஸ்சுக்கு மேட்ச்சா கொலுசு

கிரிஸ்டல் கொலுசுகள் கலர்கலராய் கிடைப்பதால், உடுத்தும் சுடிதார், சேலையின் நிறத்திற்கு மேட்சிங்காக அணிய முடியும். கருக்காத வெள்ளியில் பளீரென மின்னும் வண்ண கிரிஸ்டல் கற்கள் கொலுசுக்கு அழகையும், காலுக்கு கவர்ச்சியையும் கொடுக்கிறது. விலையும் குறைவு. பேஷனாக உள்ளதால் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. சில பெண்கள் இதை கையில் பிரேஸ்லெட்டாக கட்டி புது பேஷனை உருவாக்கி வருகிறார்கள்.

Thursday, January 24, 2013

தோடு தோடு தோடு









.





Hope you enjoyed this tutorial!

Happy Making! 

ஊசி பாசி யோ மாமி ஊசி பாசி யோ....









Happy Making!

Thursday, December 13, 2012

ஃபேன்ஸி பெல்ட்


��யூனிஃபார்முக்கு மட்டும்தான் பெல்ட் போடணுமா? ஸ்கர்ட், ஜீன்ஸுக்கும் போடலாம்.. அதுவும் கண்ணைப் பறிக்கிற ரெயின்போ கலர்களில் ஃபேன்ஸி பெல்ட் போட்டால், அதன் மதிப்பே தனிதான்!�� & பளிச்சென்று ஆரம்பிக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீப்ரியா. இவரது கைவண்ணத்தில் மிளிரும் ஃபேன்ஸி பெல்ட்டுகளுக்கு அவரது ஏரியாவில் ஏக வரவேற்பு. கிராஃப்ட் அயிட்டங்கள் செய்வதில் கைதேர்ந்த இவர், நம் தோழிகளுக்கும் அந்த வித்தையைக் கற்றுத் தருகிறார்.

��ஃபேன்ஸி பெல்ட் செய்வதற்கு பெரிய பயிற்சியெல்லாம் தேவையில்லை. தலைக்கு பின்னல் போடத் தெரிந்தால் போதும். அதே கான்செப்ட்தான் இதற்கும். இந்த பெல்ட் செய்ய மேக்ரமே திரெட் மற்றும் ஃபேன்ஸி மணிகள் வேண்டும். இவை ஃபேன்ஸி ஸ்டோர்களில் கிடைக்கும்.

உங்களுக்குப் பிடித்த கலரில் திரெட் வாங்கி அதை யாருக்கு பெல்ட் செய்யப்போகிறீர்களோ அவரது இடுப்பு அளவை விட நாலு இஞ்ச் அதிகம் விட்டு வெட்டவும். இதே அளவில் 7 துண்டுகள் வெட்டி, அவற்றை ஒன்றாக வைத்து ஒரு நுனியில் முடிச்சு போடவும் (படம் 1). இப்போது முதலில் இருக்கும் நூலுக்கு அடியில் இரண்டாவது நூலை விடவும் (படம் 2). மூன்றாவது நூலை இரண்டாவது நூலுக்கு மேலே விடவும் (படம் 3). இதேபோல எல்லா நூலையும் ஒன்று மேலே, ஒன்று கீழே என மாற்றி மாற்றிப் பின்னவும் (படம் 4). ஒரு வரிசை முடிந்ததும், கடைசியாக அடியில் வரும் நூலை தனியாகப் பிடித்துக்கொண்டு (படம் 5), மறுபடியும் பழையபடி பின்ன வேண்டும். முதல் வரிசையில் மேலே போன நூல், அடுத்த வரிசையில் கீழே போகும். கீழே போன நூலை மேலே வைத்துப் பின்ன வேண்டும் (படங்கள் 7, 8).  முன்பு போலவே கடைசி நூலை விட்டுவிட்டு பின்னலைத் தொடர வேண்டும் (படம் 9). ஐந்து வரிசை பின்னி முடித்ததும் மணிகளைக் கோர்க்க வேண்டும் (படம் 10). ஒரு நூலில் கோர்த்துவிட்டு நடுவில் ஒரு நூலை விட்டு அடுத்த நூலில் மணியைக் கோர்த்துப் பின்ன வேண்டும் (படம் 11). அப்போதுதான் பார்க்க அழகாக இருக்கும். இதேபோல மொத்த நீளத்துக்கும் இடைவெளிவிட்டு மணிகளைக் கோர்த்துப் பின்னினால் ஃபேன்ஸி பெல்ட் உருவாகிவிடும்.

மேக்ரமே திரெட் அரை கிலோ 90 முதல் நூறு ரூபாய்க்குள் கிடைக்கும். அரை கிலோவில் ஏழு பெல்ட்டுகள் வரை செய்யலாம். ஒரு பெல்ட்டை குறைந்தது 150 ரூபாய்க்கு விற்கலாம்.   வேலைப்பாட்டைப் பொருத்து விலையைக் கூட்டலாம்.��

- சூர்யா,
படங்கள்: கமல்

கிராஃப்ட்- முத்துமணி மாலை!



``இந்தப் பூமி இருக்கிறவரை, அதில் பெண்கள் இருக்கிற வரை ஃபேஷன் ஜுவல்லரியும் இருக்கும். ஆனால் ஒவ்வொரு சீஸனிலும் வித்தியாசமாக விதவிதமாக தன்னைப் புதுப்பித்துக்கொண்டு, அணிந்திருக்கிறவர்களையும் ஜொலிக்க வைக்கும்`` என்று வார்த்தைக்கு வார்த்தை ஃபேஷன் ஜுவல்லரியின் பெருமை பேசுகிறார் சென்னை, நங்கநல்லூரைச் சேர்ந்த சாய்நாமகிரி. பாராதியார் பணிபுரிந்த மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் டிராயிங் டீச்சராக அறியப்பட்டவர், தன் கலைத்திறமையால் கிராஃப்ட் டீச்சராகவும் பெயர் வாங்கியிருக்கிறார். மகளிர் தின கொண்டாட்டத்துக்கு மேலும் சுவைகூட்டும் வகையில் இந்த இதழில் ஃபேஷன் நகைகள் செய்யக் கற்றுத்தருகிறார். ஆன்ட்டிக் அழகுட மிளிரும் முத்துமணி மாலையும் அதற்கு மேட்ச்சிங்கான கம்மலும் செய்யக் கற்றுத்தருகிறார் சாய்நாமகிரி! 

தேவையான பொருட்கள்
கட்டர், டைட்டர், கியர் ஒயர், கியர் லாக், க்ளோஸ்டு ரிங், செயின் ஹூக், இரண்டு நிறங்களில் முத்து மணிகள், தங்க நிற மணிகள், ஸ்பிரிங் ரிங், டாலர்.

 
 
 
செய்முறை:
  • ந்த முத்து மாலையை கழுத்துக்கு நெருக்கமாகப் போட்டால்தான் அழகாக இருக்கும். அதனால் அந்த அளவுக்கு ஏற்ப கியர் ஒயரை 24 இன்ச் அளவுக்கு கட் செய்யவும். அதன் ஒரு முனையில் க்ளோஸ்டு ரிங் வைத்து முடிக்கவும். பின்பு கியர் லாக்கை வைத்து பிளேயரால் இறுக்கவும் (படம் 1). 
  • கியர் ஒயரில் 15 மெரூன் நிற மணிகளைக் கோர்க்கவும் (படம் 2). 
  • அதைத் தொடர்ந்து 3 பச்சை நிற மணி, 1 தங்க நிற மணி, 3 பச்சை நிற மணி, 1 தங்க மணி என வரிசையாகக் கோர்க்கவும் (படங்கள் 3, 4). 
  • இப்போது இதேபோல மெரூன் மணிகளைக் கோர்க்கவும் (படம் 5). 
  • மெரூன் மணிகளைத் தொடர்ந்து ஆறு பச்சை நிற மணி, மூன்று மெரூன் மணிகளைக் கோர்த்ததும் டாலரைக் கோர்க்கவும் (படம் 6). 
  • ஒரு பக்கம் முடிந்தது. இதேபோல டாலருக்கு அடுத்த பக்கமும் வரிசையாக மெரூன், பச்சை மற்றும் தங்கநிற மணிகளை மாற்றி மாற்றி கோர்க்கவும். முடிவில் க்ளோஸ்டு ரிங்கை நுழைத்து முடிச்சு போடவும் (படம் 7). 
  • பிறகு கியர் லாக்கை நுழைத்து லாக் செய்து, மீதியுள்ள ஒயரை வெட்டவும் (படங்கள் 8, 9). 
  • செயினின் இருபுறம் இருக்கும் க்ளோஸ்டு ரிங்கில் ஒருபுறம் ஸ்பிரிங்கையும் இன்னொரு புறம் செயின் ஹூக்கையும் கோர்த்து விட்டால் கழுத்துக்குக் கச்சிதமான மணிமாலை தயார் (படம் 10).
  • கோல்டன் ஊசியில் மெரூன் நிற மணி, தங்க நிற மணி, பச்சை நிற மணியை வரிசையாகக் கோர்க்கவும் (படம் 11). 
  • மணிகளைக் கோர்த்ததும் டைட்டர் வைத்து கம்பியை ரிங் வடிவில் வளைக்கவும் (படங்கள் 12, 13). 
  • இந்த வளையத்தினுள் கம்மல் ஹூக்குடன் இணைத்துவிட்டால் கம்மல் தயார் (படம் 14). 

இதேபோல இன்னொரு கம்மலையும் செய்யவும்.
 
புடவைக்கு மட்டுமல்லாமல், மாடர்ன் உடைகளுக்கும் பொருந்திப்போவதுதான் இந்த மணிமாலையின் சிறப்பு. இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் எல்லாம் மைக்ரோ ரகம் என்பதால் ஒரு செட் செய்ய குறைந்தபட்சம் 60 ரூபாய் செலவாகும். மொத்தமாகப் பொருட்களை வாங்கிவைத்து செய்தால் ஐம்பது ரூபாய்க்குள் முடித்துவிடலாம். இந்த செயின் - கம்மல் செட்டை அதிகபட்சம் 120 ரூபாய்க்கு விற்கலாம். டாலர் மற்றும் செயினின் நேர்த்தியைப் பொருத்து விலையைச் சற்றே கூட்டலாம்.
-பிருந்தா கோபாலன்,
படங்கள்: துரை. மாரியப்பன்.
  

கம்மல்
தேவையான பொருட்கள்
மணிகள், கோல்டன் ஊசி, தங்கநிற மணிகள், கம்மல் ஹூக், ஸ்பிரிங், டைட்டர்.
 
கிராஃப்ட் வொர்க் ஷாப்

மணிமேகலை, அடையாறு:
மண்ணைக்கிளறி விளையாடுகிற குழந்தைப் பருவத்திலேயே அந்த மண்ணை விதவிதமான உருவங்களாகப் பிடித்ததன் மூலம் தனக்குள் இருக்கும் கலையார்வத்தை வெளிப்படுத்தியவர் மணிமேகலை. ஆரம்பத்தில் பூக்கள், பொம்மைகள் என செய்தவர், அவற்றுக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து, பல கலைகளை முறைப்படி கற்றுத் தேர்ந்திருக்கிறார். தானறிந்த கலைகளை கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கும் மேலாக மற்றவர்களுக்குக் கற்றுத்தந்து கலைசேவையும் புரிந்து வருகிறார். பூமிக்குக் கேடு விளைவிக்காத ஈகோ ஃப்ரெண்ட்லி கிராஃப்டை செய்வது இவரது இன்னொரு சிறப்பு. பள்ளி, கல்லூரிகளிலும் வொர்க்ஷாப் நடத்தியிருக்கிறார். பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பெண்களுக்கு இலவச கிராஃப்ட் வகுப்பும் எடுத்திருக்கிறார். கலையோடு கருணையும் கலந்த இவரது அணுகுமுறைக்கு, பெண்கள் மத்தியில் ஏக வரவேற்பு!

சுதா செல்வகுமார், போரூர்:
வீடு முழுக்க வியாபித்திருக்கிற அற்புதமான கலைப்படைப்புகளே சுதா செல்வகுமாரின் கலைத்திறமைக்கு சாட்சி. கடந்த 10 ஆண்டுகளாக கிராஃப்ட் வகுப்புகள் எடுத்து வருகிறார். பெயின்டிங், ஃபேன்ஸி பில்லோ, மெகந்தி, ஃபேன்ஸி பைகள், தோரணம், கீ ஹோல்டர், வுட் மியூரல், வாஸ்து மியூரல், கேண்டில் மேக்கிங், சாம்பிராணி தயாரிப்பு, ஃபிளவர் மேக்கிங், சாக்லெட் தயாரிப்பு, கிளே மோல்டிங், டெக்ஸ்டைல் பிரின்ட்டிங், கிரீட்டிங் கார்டு, மணி வேலைப்பாடு என இவருக்குத் தெரிந்த கலைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அடிப்படை கலையுடன் தன் கற்பனையையும் சேர்த்து செய்வதால், சுதாவின் கலைப்படைப்புகள் அற்புத அழகோடு இருக்கின்றன. தொலைக்காட்சிகளில் கிராஃப்ட் நிகழ்ச்சி நடத்திய அனுபவமும் இவருக்கு உண்டு.

மகாலட்சுமி, மேடவாக்கம்:
ஃபேஷன் டிசைனிங் படித்திருப்பதாலோ என்னவோ, தனது கிராஃப்ட் அனைத்திலும் புதுமையைப் புகுத்திவிடுகிறார் மகாலட்சுமி. எளிமையும் நவீனமும் நிறைந்த இவரது கலைப்படைப்புகள் அத்தனையும் அதிசயிக்க வைக்கிற ரகம்!
 

Thursday, December 6, 2012

பாசி மணி


Tilas சரியான ஆங்கிள் பின்னுகிறது:

1. நூல் ஓரம் மடிக்கும் ஒரு வசதியான நீளம் ஒரு வால் குறிக்க மணி முற்றுப்புள்ளி பயன்படுத்த. வால் நீளம் நீங்கள் உங்கள் வேலையை செய்து முடிக்க வேண்டும் என்பதை பொறுத்து மாறுபடும். பத்து அங்குல தொடங்க ஒரு நல்ல நீளம்.Basic Right Angle Weave Tutorial
2. 2 விதை மணிகள், 1 Tila, மற்றும் 15 விதை மணிகள் (2 + 3 + 7 +3) அழைத்து. முதல் இரண்டு விதை மணிகள் கடந்து, மீண்டும் Tila மணி.

இந்த முதல் அலகு 3 மணி, 7 மணி, 3 மணி, மற்றும் 2 விதை மணிகள், ஒரு Tila, மற்றும் 2 விதை மணிகள் ஒரு பக்க பக்கங்களில் ஒரு செவ்வகத்தின் செய்கிறது. எந்த மாறுபாடு ofright கோணம் நெசவு போன்ற, ஒவ்வொரு புதிய கொத்து பக்கங்களிலும் பகிர்ந்து கொண்ட இந்த முதல் யூனிட் ஆஃப் உருவாக்கும், மற்றும் அதே அடிப்படை கட்டமைப்பு வேண்டும்.

3. Tila ஓட்டைகள் மற்ற தொகுப்பு அடைய, நாம் உச்சரிப்புகள் சேர்ப்பதன் மூலம் ஒரு முறை செய்ய வேண்டும். ஒரு 11 / o அல்லது 8 / o அளவிலான கண்ணாடியில் அழைத்து, உங்கள் நூல் வெளியேறும் என்று அதே பக்கத்தில் Tila மணி அடுத்த துளை, கடந்து. கதகதப்பான இழுக்க

Openwork Right Angle Weave with Tila Beads Tila Bead Right Angle Weave Tutorial RAW Beadwork with Tilas

4. இந்த பக்கத்தில் எதிர் Tila துளை வழியாக ஒரு உச்சரிப்பு, மற்றும் பாஸ் அழைத்து. மேல் வைக்க, கண்ணாடியில் மீண்டும் சேர்க்க முதல் உச்சரிப்பு வழியாக, மற்றும் Tila மூலம்.

5. 7 விதை மணிகள், 1 Tila, மற்றும் 7 விதை மணிகள் அழைத்து (2 + 3 + 2 + Tila + 2 + 3 + 2). உங்கள் வேலை நூல் துரத்தி, எதிர் பக்கத்தில் இருந்து முந்தைய Tila வழியாக. முதல் மற்றும் கடைசி 2 விதை மணிகள் புதிய செவ்வக பிரிவு Tila பக்கம் முடிக்க எவ்வளவு குறிப்பு.

6. எடுத்துக்கொள்ளப்பட்டது முதல் 7 மணி கடந்து, மற்றும் Tila மூலம். அடுத்த யூனிட் அமைக்க கதகதப்பான இழுக்க.

7. இரண்டு மொழியிலும் மணிகள் சேர்க்க மற்றும் படி. இந்த நடவடிக்கை எப்போதும் beadwork முழுவதும் ஒரே இருக்கும், ஆனால் நீங்கள் வேறு வடிவங்களை உருவாக்க உச்சரிப்பு மணிகள் வரை மாற்ற முடியும்.

How To Use Tilas with Right Angle Weave Tila Beadwork Project Tila Right Angle Weave Tutorial

8. ஒவ்வொரு இடையே ஒரு படி உடன், மேலும் ரா அலகுகள் சேர்க்க நடவடிக்கை 5 மற்றும் 6 மீண்டும், விரும்பிய அகலம் எங்களுக்கு ஒரு குறுகிய உங்கள் bead work வரை.

9. 17 விதை மணிகள் அழைத்து (2 + 3 + 7 + 3 + 2). மீண்டும் முந்தைய Tila வழியாக, மற்றும் இறுதி யூனிட் அமைக்க கதகதப்பான இழுக்க. மீண்டும் முதல் 15 மணி கடந்து. குறிப்பு எப்படி நூல் ஒரு 3 மணி பக்க, மற்றும் ஒரு Tila பக்க இடையே வெளியேறுகிறது.

10. அடுத்த வரிசையில் தொடங்க, 2 விதை மணிகள், 1 Tila, மற்றும் 12 விதை மணிகள் அழைத்து (2 + Tila + 2 + 3 + 7). நூல் வெளியேறும் அமைந்துள்ள இருந்து மீண்டும் 3 மணி - முந்தைய அலகு குறுகிய பக்க வழியாக. புதிய யூனிட் அமைக்க கதகதப்பான இழுக்க.

11. முதல் 2 விதை மணிகள் மற்றும் Tila வழியாக. 2 உச்சரிப்பு மணிகள் சேர்க்க மற்றும் படி.

Openwork Right Angle Weave with Tilas Right Angle Weave Tila Tutorial RAW Tila Bead Project

12. 2 விதை மணிகள் அழைத்து, முந்தைய வரிசையில் அடுத்த பிரிவு நடுத்தர 3 மணிகள் வழியாக.

13. 2 விதை மணிகள், 1 Tila, மற்றும் 7 விதை மணிகள் (2 + 3 + 2) எடுங்கள். முந்தைய Tila வழியாக, மற்றும் பின்வரும் 7 விதை மணிகள் (2 + 3 +2) மூலம் தொடர்ந்து, மற்றும் Tila தான் சேர்க்க.

14. இரண்டு மொழியிலும் மணிகள் சேர்க்க மற்றும் படி.


Tila Bead RAW How-to DIY Right Angle Weave with Tilas Tila Bead Project

15. ஒவ்வொரு இடையே ஒரு படி உடன், வழிமுறைகளை ஒவ்வொரு புதிய பிரிவு 12 மற்றும் 13 செய்யவும். வரிசையில் இறுதியில், 2 விதை மணிகள் அழைத்து, மற்றும் குறைந்த பிரிவு 3 பக்க மணிகள் வழியாக.

16. 12 விதை மணிகள் அழைத்து, முந்தைய Tila வழியாக. வரிசையில் இறுதி யூனிட் அமைக்க கதகதப்பான இழுக்க.

17. அலகு முதல் 15 விதை மணிகள் கடந்து, அடுத்த வரிசை தொடங்க குறுகிய பகுதியில் இருந்து வெளியேற.

How To Use Tilas with Right Angle Weave Right Angle Weave Tila Tutorial Tila Beadweaving Project

அது தான்! வெறுமனே விரும்பியபடி கூடுதல் வரிசைகளை சேர்க்க, இந்த படிகளை மீண்டும். நீங்கள் ஏற்கனவே openwork சரியான கோணத்தில் நெசவு தெரிந்திருந்தால் என்றால், அது ஒரு விஷயம் அல்லது Tilas செய்ய உச்சரிப்புகள் சேர்க்க, மற்றும் தனி 'சுவர்களை' அல்லது பக்கங்களிலும் உங்கள் சேர்த்தல் எண்ணிக்கை நினைவு. மேலும் நீங்கள் அதை அவ்வளவு எளிதாக கிடைக்கிறது.

ஒரு மாறுபாடு, நீங்கள் முதல் வரிசையில் உங்கள் beadwork நீண்ட பக்க செய்யலாம், அது மீது மேலும் ஒரு சில வரிசைகளை உருவாக்க, Tilas மற்றும் விதை மணி வரிசைகள் செங்குத்து பதிலாக கிடைமட்ட இருக்கும்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites