இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label பயிற்சி வகுப்புக்களின் முகவரி. Show all posts
Showing posts with label பயிற்சி வகுப்புக்களின் முகவரி. Show all posts

Wednesday, December 18, 2013

உணவு தயாரிப்பு குறித்த பயிற்சி முகாம்


தூத்துக்குடியில் மீன் உணவுகள் தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் மற்றும் செயல்விளக்கம் ஜனவரி 8-ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மீன்வளக் கல்லூரி முதல்வர் சுகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லுரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வளர்ப்பு மீன்களின் உணவு மற்றும் மேலாண்மை பற்றிய பயிற்சி முகாம் ஜனவரி 8-ம் தேதி நடைபெறுகிறது.
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இயங்கும் மீன் உணவு தரக்கண்காணிப்பு ஆய்வகம் அமைத்தல் என்ற ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த பயிற்ச்சியில் மீன்களுக்கான செயற்கை உணவு தயாரிப்பது மற்றும் உணவு மேலாண்மை பற்றிய விளக்கவுரைகளும், செயல் முறை விளக்கமும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பயிற்சி முகாமில் கெண்டை மீன் வளர்ப்போர், அலங்கார மீன் வளர்ப்போர், இறால் வளர்ப்போர் மற்றும் மீன்களுக்கான உணவு தயாரிப்பில் விருப்பமுள்ளவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
 பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஜனவரி 31-ம் தேதிக்குள் 9443002467 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டுத ங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கூடுதல் விவரங்கள் அறிய
பன்ணை சார்ந்த மீன் உணவு தயாரிப்பு குறித்த விவரங்களை அறிய “பேராசிரியர் மற்றும் தலைவர், கடல் சார் நீர்வாழ் உயிரின வளர்ப்புத்துறை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தருவைக்குளம், தூத்துக்குடி என்ற முகவரியிலும், 0461–2910336, 2340554, 94422 88850 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம் என்று பயிற்சி மைய தலைவர் சா.ஆதித்தன் தெரிவித்தார்.
Thanks:http://www.dailythanthi.com/Tuticorin,%20instead%20of%20marine%20aquatic%2

Monday, October 7, 2013

தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
தகுதிகள்:
1. வயது 18லிருந்து 30க்குள் இருக்க வேண்டும்.
2. ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
3. கை, கால் மற்றும் காது குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வியடைந்தவர்கள்.
பயிற்சிக்காலம் : மூன்று மாதங்கள்.
பயிற்சி நடைபெறும் இடம் : அரசு தொழில் பயிற்சி மையம், புதுக்கோட்டை.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியவைகள் :
1. கல்வித்தகுதி சான்று நகல்.
2. ஜாதிச் சான்று நகல்,
3. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல்.
4. குடும்ப அட்டை நகல்.
5. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 1.
குறிப்பு: “பயிற்சி காலத்தின் போது இலவச தங்குமிடம் மற்றும் உணவு வசதிகள் செய்து தரப்படும். விடுதியில் தங்காத தினசரி பயிற்சிக்கு வந்து செல்லும் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை பெற்றுத் தரப்படும்.
மேலும் பயிற்சி பற்றிய விபரங்களுக்கும் மற்றும் விண்ணப்பங்களை பெற அணுக வேண்டிய முகவரி
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்
புதிய பேருந்து நிலையம் அருகில் – புதுக்கோட்டை, தொலைபேசி எண்:04322-223 678.
தகவல்: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், புதுக்கோட்டை
தகவல் சேகரிப்பு: எஸ். முருகேசன், கிராம வள மையம், புதுக்கோட்டை.

தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
தகுதிகள்:

1. வயது 18லிருந்து 30க்குள் இருக்க வேண்டும்.
2. ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
3. கை, கால் மற்றும் காது குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வியடைந்தவர்கள்.
பயிற்சிக்காலம் : மூன்று மாதங்கள்.
பயிற்சி நடைபெறும் இடம் : அரசு தொழில் பயிற்சி மையம், புதுக்கோட்டை.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியவைகள் :
1. கல்வித்தகுதி சான்று நகல்.
2. ஜாதிச் சான்று நகல்,
3. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல்.
4. குடும்ப அட்டை நகல்.
5. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 1.
குறிப்பு: “பயிற்சி காலத்தின் போது இலவச தங்குமிடம் மற்றும் உணவு வசதிகள் செய்து தரப்படும். விடுதியில் தங்காத தினசரி பயிற்சிக்கு வந்து செல்லும் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை பெற்றுத் தரப்படும்.
மேலும் பயிற்சி பற்றிய விபரங்களுக்கும் மற்றும் விண்ணப்பங்களை பெற அணுக வேண்டிய முகவரி
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்
புதிய பேருந்து நிலையம் அருகில் – புதுக்கோட்டை, தொலைபேசி எண்:04322-223 678.
தகவல்: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், புதுக்கோட்டை
தகவல் சேகரிப்பு: எஸ். முருகேசன், கிராம வள மையம், புதுக்கோட்டை.

Thanks:http://www.mssrf-nva

Thursday, May 9, 2013

சுய தொழில் தொடங்க முறையான பயிற்சி


தொழில் முனைவதன் மேலாண்மைபற்றி சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தின் (institute for entrepreneurship and career development). 

''சுய தொழில் தொடங்க முடிவு செய்பவர்கள், இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். முதலில், சிறப்பான முறையில் திட்டமிட வேண்டும். அடுத்து, அந்தத் துறை சம்பந்தப்பட்ட நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள முறையான பயிற்சி எடுக்க வேண்டும். திட்டமிடுதலில் சிறந்து விளங்கும் நம் இளைஞர்கள், அதை மேலாண்மை செய்வதில் தான் திணறி, நடைமுறைப்படுத்த முடியாமல் சோர்ந்துவிடுகின்றனர். அனுபவசாலிகளின் வழி காட்டுதல்களைக் கேட்டுத் தெரிந்து, தெளிவு பெற்ற பின்னரே, திட்டமிட்ட தொழிலில் இறங்க வேண்டும். இவ்வாறு சிறப்பான திட்டமிடுதலுடன் முழுத் தெளிவு உள்ள ஒருவருக்கு வங்கிக் கடனுதவி பெறுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது.

இன்றைய இளைஞர்கள் சுய தொழில் தொடங்கத் தடையாக இருப்பவை மூன்று விஷயங்கள்தான். முதலில் பெற்றோர்கள். தங்களின் பிள்ளைகள் வேலைக்குச் செல்வதை ஊக்குவிக்கும் அளவு, அவர் கள் சுய தொழில் ஆரம்பிப்பதை ஆதரிப்பது இல்லை தமிழக பெற்றோர்கள். 'முதலீடு வேண்டுமோ? தன் பிள்ளையால் சமாளிக்க முடியுமோ?’ போன்ற அச்சம் தான் காரணம். அடுத்து, நமது பாடத் திட்டத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு குறித்த பாடங்கள் இருப்பது இல்லை. மேலை நாடுகள்போல, பள்ளி பாடத் திட்டத்திலேயே சுய தொழில் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். இறுதியாக, நமது இளைஞர்களின் குறுகிய மனப்பான்மை.ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து, மற்றவரிடம் கை கட்டி நிற்கத் துணியும் இளைஞர்கள், தொழில் துவங்கி நாமே வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று விரும்புவது இல்லை.

தொழில் முனைவர் ஆக எந்தத் தகுதியும் தேவை இல்லை. பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டவர் முதல், படித்து முடித்த முதுநிலை பட்டதாரி வரை எவரும் தொழில் முனைவர் ஆகலாம். கல்வித் தகுதியைவிட ஆர்வம், தன்னம்பிக்கை, நேர்மறை எண்ணம், எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ளும் துணிவு, ரிஸ்க் எடுக்கும் துணிச்சல் ஆகியவைதான் முக்கியம். பணம்கூடக் கையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பத்தாம் வகுப்பைப் பாதியில் நிறுத்திய திருபாய் அம்பானியைத் தொழில் ஆரம்பிக்கவைத்தது மேற்சொன்ன ஐந்து குணங்கள்தான்!'' என்கிறார் பாஸிட்டிவ் பார்வையுடன்!

இந்த வார்த்தைகள் எல்லாம் உங்களுக்குள் தொழில் முனையும் உந்துதலை ஏற்படுத்தியிருந்தால்... அப்புறம்என்ன... அடுத்த 'பிஸினஸ் மேக்னட்’ நீங்கதாங்க!

புதிதாகத் தொழில் துவங்குவோர்களுக்கு மத்திய அரசு வழங்கும் சேவை மற்றும் பயிற்சிகள்!

தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டங்கள்

வர்த்தகத் திறன் மேம்பாட்டுத் திட்டம்

திட்ட அறிக்கை

தொழில் சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரித்தல்

சந்தை வாய்ப்பு பற்றிய ஆய்வறிக்கை தயாரித்தல்

நேரடி கணினி வழி குறு மற்றும் சிறு தொழில்களுக்கான பதிவுகள்

மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் சலுகைகள் குறித்த தகவல்கள்

திறன் மேம்பாட்டுப் பயிற்சி

உங்களுக்காக இவை... 

நாடு முழுவதும் மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வணிகக் காப்பகங்கள் மற்றும் தொழில் முனைவோர் பூங்காக்கள் ஆகியவற்றை நாடினால், புதுமையான ஐடியாக்களுக்குப் பயிற்சி முதல் கடனுதவி வரை அனைத்தும் ஏற்பாடு செய்து தருகிறார்கள். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, சத்தியமங்கலம், திருச்சி மற்றும் தஞ்சாவூர் நகரங்களில் அமைந்துள்ள இது போன்ற அமைப்புகளின் முகவரி மற்றும் தொடர்பு எண்களுக்கு www.nstedb.com என்னும் வலைதளத்தைப் பார்க்கவும்!

அரசு கடனுதவித் திட்டங்கள் 
மத்திய அரசு 

பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக் கும் திட்டம் (PMEGP)-இந்தத் திட்டத்தின் கீழ் சேவை மற்றும் உற்பத்தித் தொழில்களுக்கு 25 லட்சம் வரை பிணையம் இல்லாமல் வங்கிகள் மூலம் கடனுதவி கிடைக்கும். 35 சதவிகிதம் மானியம் கிடைக்கும். இந்த வரம்புத் தொகைக்கு மேல் கடன் பெற விரும்புவோர் மட்டும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்!

மாநில அரசு 

வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம்-இதன் கீழ் பயன்பெற விரும்புவோரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 1.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். உற்பத்தித் தொழில்களுக்கு 5 லட்சம் வரையிலும், சேவை சார்ந்த தொழில்களுக்கு 3 லட்சம் வரையிலும், வியாபாரத் தொழில்களுக்கு ஒரு லட்சம் வரையிலும் வங்கிகளின் மூலம் கடன் பெறலாம். இந்த இரு திட்டங்களிலுமே அரசு சார்பில் மானியம் உண்டு. தொழில் தொடங்க உதவும் பிற நிறுவனங்கள் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO), இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி, (SIDBI) மைய அரசின் கதர் கிராமத் தொழில் நிறுவனம் (KVIC), தேசிய சிறுதொழில் நிறுவனம் (NSIC), தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC). மேலும், இது பற்றி தகவல் அறிய, விண்ணப்பிக்க அந்தந்த மாவட்டத் தலைநகரங் களில் உள்ள மாவட்டத் தொழில் மையத்தை அணுகலாம்!

Wednesday, March 6, 2013

இலவச பயிற்சிக்கு அழைப்பு


ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் வரும் 11ம் தேதியில் இருந்து, மென் பொம்மைகள் தயாரிக்கும் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
நிலைய இயக்குநர் நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஊட்டி சேரிங்கிராஸ் கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில், வரும் 11ம் தேதியில் இருந்து 15 நாட்களுக்கு, இலவச மென் பொம்மைகள் தயாரித்தல் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 6ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்; 18 முதல் 45 வயதிற்குள் இருத்தல் வேண்டும்; பயிற்சி காலத்தில் உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்பும் நபர்கள் தங்களது பெயர், முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை வெள்ளைதாளில் எழுதி, "கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், 8/10 யு.எஸ்.எஸ்.எஸ்., வளாகம், சேரிங்கிராஸ், ஊட்டி' என்ற முகவரிக்கு தபாலிலோ, நேரிலோ அனுப்ப வேண்டும். பயிற்சி விபரங்களுக்கு 9894025993 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு, நடராஜன் கூறியுள்ளார்.

Friday, January 4, 2013

சுயதொழில் பயிற்சிகள்


ரூட்செட் நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவு மேம்பாட்டு பயிற்சிகளை வெவ்வேறு இடங்களில் வழங்கி வருகிறது.

ஒவ்வொரு பயிற்சிக்கும் குறைந்தபட்சம் ஒன்று அல்லது ஆறு வார கால அளவு ஆகும். இந்த பயிற்சி சுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு டெய்லரிங் தொடங்கி உணவு பதப்படுத்துதல் வரை நூற்றுக்கணக்கான சுயதொழில் பயிற்சிகள் நடத்தப்படுகிறது. இந்நிறுவனத்தில் வழங்கப்படும் பயிற்சிகள் முற்றிலும் இலவசம். பயிற்சி பெறுபவர்களுக்கு தங்கும் வசதியும் உள்ளது.
இந்நிறுவனத்தில் கற்பிக்கப்படாத பயிற்சிகளே இல்லை எனலாம். செயற்கை வைரம் பட்டை தீட்டுதல் முதல் ஆடை வடிவமைப்பு, மோட்டர் ரீவைண்டிங், தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிகள் வரை 100 வகைப் பயிற்சிகள் இலவசமாக நடத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு: http://www.rudsetitraining.org/pages/training.html
ரூட்செட் நிறுவனம்,விமான நிலைய சாலை, காவல்நிலையம் அருகே, பெருங்குடி, மதுரை -12,
தொலைபேசி: 0452 269069, 9486369825

Saturday, November 24, 2012

டான்ஸ்டியா தரும் சுயதொழில் பயிற்சிகள்

Monday, April 16, 2012

 

http://www.tanstiafnf.com/

தமிழ்நாட்டில் உள்ள தொழில் முனைவர் அனைவருக்கும் டான்ஸ்டியா பற்றி தெரிந்திருக்கும். இது தமிழ்நாட்டில் உள்ள தொழில் முனைவர்களுக்கும், வங்கிகளுக்கும் மற்றும் அரசுக்கும் பாலமாக விளங்குகின்றது. தமிழகம் முழுவதும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தி வருகின்றது.

ரூபாய் 100 கட்டணத்தில், திட்ட அறிக்கை கொடுக்கும் இந்த நிறுவனம் பல லாபகரமான துறைகளை தேர்ந்தெடுத்து ( தையல், தோல் பொருள்கள், தகவல் தொழில் நுட்பம் மற்றும் பல) பயிற்சி அளித்து தொழில் முனைவர்களை ஊக்குவித்து வருகின்றது.

டான்ஸ்டியாவின் இணையதளம் :
http://www.tanstiafnf.com

Friday, June 1, 2012

பாக்கு மட்டை தயாரிப்பு பயிற்சி

அன்னவாசல்: தொழில்முனைவோருக்கு பாக்கு மட்டை தயாரிப்பு பயிற்சிக்குஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் மகளிர் தொழில் முனை வோர் சங்க தலைவிஜெயந்தி நிருபர்களிடம் கூறுகையில், புதிய தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்குகீழ்க்கண்ட தொழில்களுக்கு சங்கத்தின்மூலம் புதுக்கோட்டையில் பயிற்சி அளிக்கப்படும். பாக்குமட்டை தட்டு தயாரித்தல், பயிற்சி மிக குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படும். பயிற்சிமுடித்தவுடன் வங்கி கடன் பெறவும், தொழிலினை தொடர்ந்து நடத்த ஆலோசனைகள்வழங்கப்படும். மேலும் இப்பயிற்சி பற்றிய விவரங்களை அறிய தொலை பேசி எண்04322227222, கைபேசி எண் 8870041656, 9659558222, 9659558333.ஆகியவற்றில்தொடர்பு கொள்ளலாம் என்றார்.

Sunday, April 29, 2012

இலவச ஆலோசனை

"இலவச வேளாண் வணிகப் பயிற்சி"
மத்திய அரசின் வேளாண்மை அமைச்சகம் சார்பில் வேளாண் மருத்துவ மையம் மற்றும் வேளாண் விற்பனைத் தொழில் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு இலவச தங்குமிடம், சாப்பாடு, பயிற்சி ஏடுகள், நிர்வாகம் மற்றும் திட்டமிடும் பயிற்சிகள் ஆகியவை வழங்கப்படும்.விவசாயிகள் அனைவரும் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள வேளாண் மருத்துவ மையம் மற்றும் வேளாண் விற்பனைத் தொழில் பயிற்சி மையத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

இலவச ஆலோசனை

விவசாயிகள் தங்களின் கேள்விகளுக்கு இலவசமாக பதில் பெற ""கிஸான் கால் சென்டர்'' மையத்தை கட்டணமில்லாத எண்ணை 1800 - 180 - 1551 தொடர்பு கொள்ளவும்.
இலவச வானிலை தகவல்

தமிழகத்தின் எந்தப் பகுதியில் உள்ள வானிலை நிலவரங்களையும் அறிய ' 1800 180 1717 ' அழைக்கவும்

Wednesday, April 18, 2012

காளான் வளர்ப்புப் பயிற்சி

பயிற்சியில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ளவர்கள், பயிற்சி பற்றிய தகவல்கள் மற்றும் பயிற்சி கட்டணத்தை கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவும்.
For contact:
The Professor and Head,
Urban Horticulture Development Centre,
Tamil Nadu Agricultural University,
New No. P-44, (Old No. P-37), 6th Avenue, (Behind K- 4 police station),
Anna Nagar, Chennai-40.
Phone: 044 -2626 3484 / 044 – 42170506.
Training Programme on “Mushroom Cultivation”

Monday, April 16, 2012

பயிற்சி வகுப்புக்கள்

கிராம வாழ்வாதாரம் சுத்தமான நிலம், நீர் காற்று. உலகமயம், தாராளமயம், லாபம் மட்டும் என்ற மாய பொருளாதார கோட்பாட்டில் அடிப்படை வாழ்வாதாரங்களை பன்னாட்டு நிறுவனங்களும், நம் நாட்டு நிறுவனங்களும் போட்டிபோட்டு அழிப்பதோடு பெரிய மலைகளையே கூட விழுங்குகின்றனர். விளைவு கிராம மக்கள் வேலை தேடி நகரை நோக்கி வருகிறார்கள், பழங்குடியினர் நகரத்திற்கு வருவதை தவிர்த்து கடவுளாக வணங்கும் மலைக்கும் மண்ணுக்கும் போராடி உயிரை இழக்கிறார்கள். இது போன்ற நிறுவனங்களிடம் சமூக பொறுப்புக்களை காண முடியாது.

ஆனால் அத்தி பூத்தாற் போன்று சில நிறுவனங்கள் உண்மையிலேயே கிராம பொருளாதாரத்தை மேம்படுத்துகின்றன. அந்த வகையில் கனரா வங்கியின் சேவை பாராட்டுதலுக்குரியது.

இலவசமாக கிராம வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்களை கனராவங்கி நூற்றாண்டு கிராம வளர்ச்சி டிரஸ்ட் மூலம் 26 இடங்களில் நாடு முழுவதும், தமிழகத்தில் 5 இடங்களிலும் நடத்துகின்றனர். தையல்பயிற்சி முதல் புகைப்பட கலை, கம்யூட்டர் என நிறைய பயிற்சிகள் உண்டு.

பயிற்சியின் சிறப்பம்சங்கள்.
தங்குமிடம், உணவு, பயிற்சி இலவசம்
வங்கிக்கடன், அரசு மானியதிற்கு உதவுதல்
வியாபாரம் / விற்பனைக்கு வழிகாட்டுதல்.
பயிற்சிக்குப் பிறகு 2 - 3 ஆண்டுகளுக்கு தொடர்பு மற்றம் ஆலோசனை

வயது வரம்பு : 18 முதல் 35 வரை இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : குறைந்தபட்ச கல்வித் தகுதி 8 ம் வகுப்பு
முன்னுரிமை : அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ளலாம்
.
தாழ்த்தபட்டவர்கள்,/ பழங்குடியினர் / மிகவும் பிற்பட்ட / பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை இளைஞர்கள்/பெண்கள் பயிற்சியில் சேர முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை : வெள்ளைத்தாளில் பெயர், முகவரி, கல்வித்தகுதி,இனம், தேவையான பயிற்சி போன்றவற்றை எழுதி கல்வி இருப்பிடச் சான்றிதழ் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.


==============================
திரு. K. மோகன் (இயக்குனர்)
Dr. அம்பேத்கார் சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்
புதுப்புதூர்
பெரியநாயக்கன்பாளயம் (வழி)
கோவை 641 020
தொலைபேசி எண் : 0422-2692080 .
அலைபேசி எண் : 98651 02185
===============================
திரு.R. கல்யாணகிருஷ்ணன் (இயக்குனர்)
கனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்
ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளி வளாகம்
அசோகபுரம்
ஈரோடு.- 638 004
தொலைபேசி எண் : 0424- 2290338
அலைபேசி எண் : 98404 95745

==============================
திரு.B.M. கிருஷ்ணன் (இயக்குனர்)
கனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்
8/10, USSS அனிமேசன் சென்டர்
சேரிங் கிராஸ்
உதகமண்டலம்.- 643 001
தொலைபேசி எண் : 0423-2446559
அலைபேசி எண் : 94442 59125
===========================
திரு. கௌரிசங்கர் (இயக்குனர்)
கனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்
83A, ஜான் பால் காம்பெளக்ஸ்
DMSSS பில்டிங்
நேருஜி நகர்
திண்டுக்கல் -624 001
தொலைபேசி எண் : ---
அலைபேசி எண் : 94441 89677
===========================
திரு. தர்மசீலன் (இயக்குனர்)
கனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்
15, பூமாலை வணிக வளாகம் ,
உழவர் சந்தை எதிர்புறம்
தேனி -
தொலைபேசி எண் :
அலைபேசி எண் ; 94420 21363
===========================
வலைப்பதிவர்களுக்கும் இப்பதிவைப் படிக்கும் அன்பர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்
இச்செய்தினை உங்கள் வலைப்பூவில் இடுங்கள் அல்லது படிக்க வசதியின்றி இருக்கும் ஆர்வமிக்கவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் குறிப்பாக கிராமங்களில் இருக்கும் தன்னார்வ தொண்டு நிறவனங்கள் மற்றும் சுயஉதவி குழுக்கள்.

தன்னிறைவான கிராமங்களே நாட்டின் முதுகெலும்பு

மரம் வளர்ப்பு பயிற்சி வகுப்புக்கள்

முன்பதிவிற்கு :

முனைவர். N.S. வசந்தி
பேராசிரியர் மற்றும் தலைவர்
பயோடெக்னாலஜி துறை
பண்ணாரி அம்மன் தொழில் நுட்ப கல்லூரி
சத்தியமங்கலம்.- 638 401
தொலைபேசி :04295-221289 Extn 580
அலைபேசி : 94437 74447, 97506 21289

முனைவர். G.S. முருகேசன்
உதவிப் பேராசிரியர்
பயோடெக்னாலஜி துறை
பண்ணாரி அம்மன் தொழில் நுட்ப கல்லூரி
சத்தியமங்கலம்.- 638 401
தொலைபேசி :04295-221289 Extn 580
அலைபேசி : 97151 18120

திரு. சண்முகம்
தலைவர் (சுற்றுச் சுழல் )
சேசாயி காகித ஆலை
ஈரோடு
அலைபேசி : 94433 40236

ஓர் வேண்டுகோள் : உங்களுக்கு தெரிந்தவர்களுடன் இச் செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தோட்டம் வளர்ப்பு பயிற்சி வகுப்புக்கள்

காளான் வளர்ப்பு ,விட்டு தோட்டம் ,மாடி தோட்டம் ,மண் புழு வளர்ப்பு ,மண் புழு உரம் ,மற்றும் பல சிறு தொழில் பயிற்சி வகுப்புக்கள் உள்ளன
 
 
 
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்,
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்,
P. 44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.

தொலைபேசி 044 - 2626 3484; 044 - 4217 0506

போன்சாய் மரம் வளர்ப்பு பயிற்சி வகுப்புக்கள்


இந்திய பொருளாதார வளர்ச்சியில் பல புதிய பொழுதுபோக்குகள் நடுத்தர, மேல்நடுத்தர மக்களிடம் தற்சமயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அவற்றுள் ஒன்று போன்சாய் வளர்ப்பு. சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இவை மிக பிரபலம். இந்தியாவில் வீடுகளில் பூஜை அறை போன்று  ஜப்பான் வீடுகளில்  “டோகோனோமா” (Tokonoma) என்றழைக்கப்படும் வழிபடும் இடங்களில் போன்சாய் மரங்கள் வளர்க்கப்பட்டு அவர்களது இறைவழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்த அளவிற்கு அங்கு போன்சாய் பிரபலம் பெறுகிறது.

இக்கலைக்குத் தேவையான   தாவர வகை, தேவையான மண்வகை, ஊட்டசத்து, நோய், பல்வேறு வகையான வளர்ப்பு முறைகள் (Different styles of bonsai ) போன்றவைகளை தெரிந்து கொண்டால்  சிறப்பாக நாமே போன்சாய் மரங்களை வளர்க்கலாம். இதற்கான ஒருநாள் பயிற்சியை நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம் வழங்குகிறார்கள். பங்கேற்று பயன் பெறுவீர்.
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்,
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்,
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.

தொலைபேசி 044 - 2626 3484; 044 - 4217 0506

மசாலா பொடி தயாரிப்பு பயிற்சி வகுப்புக்கள்

மிக வேகமான நகர வாழ்கையில் முன்பு போன்று மசாலா பொருட்களை வறுத்து அரைத்த காலம் முடிந்துவிட்டது. இன்று எல்லாவற்றிற்கும் பொடி என்ற நிலைமை பொதுவாக எல்லா தென்னிந்திய சமயலைறகளிலும் காணமுடிகிறது. ஒரு சில நிறுவனங்களின் தயாரிப்புகள் தரமாக இருந்தாலும் பல தயாரிப்புக்கள் அவ்வாறு இருப்பதில்லை. பருவங்களில் குறைந்த விலையில் கிடைக்கும் தரமான மசாலா மூலப்பொருட்களை வாங்கி அதனை பொடிகளாக மதிப்பைக் கூட்டி நமது உபயோகத்திற்கும், வியாபார ரீதியிலும் விற்பனை செய்து வருவாய் ஈட்ட இயலும். சாம்பார் பொடி, ரசப் பொடி, கரம் மசாலாப் பொடி, எள்ளுப் பொடி, தேங்காய்ப் பொடி, கறிவேப்பிலைப் பொடி, சிக்கன் மசாலா, சில்லி சிக்கன் மசாலா, மீன் மசாலா, போன்ற பல பொடிகளை தயாரிக்கவும் பின் அதனை தரம் காண “அக்மாரக் கிரேடிங்” கற்றுத் தரப்படும். வீட்டிலிருக்கும் பெண்கள், மாணவர்கள், சுய உதவி குழுக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு பயன் தரும். இதற்கான ஒருநாள் பயிற்சியை நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம் வழங்குகிறார்கள். 



தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்,
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்,
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.
தொலைபேசி 044 - 2626 3484; 044 - 4217 0506

கைவினை பொருட்கள்களின் பயிற்சி வகுப்புக்கள்

புதுதில்லி இந்தியஅரசு கைவினைப் பொருட்கள் வளர்ச்சி  ஆணையகமும், பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரியும் இணைந்து டெக்ஸ்டைல் துறையில் கைவினை கலைஞர்களின் திறமையை மேம்படுத்தவும் நவீன இயந்திர தொழில் நுட்பத்தினை அறிமுகப்படுத்தும் நோக்கமாகவும் தொழிலில் ஈடுபட்டுள்ள கைவினை கலைஞர்களுக்கு குறுகிய மற்றும் நீண்ட கால பயிற்சி வகுப்புக்கள் முறையே ஒரு மாதம் மற்றும் நான்கு மாத கால பயிற்சி அளித்து வருகின்றது. இந்த பயற்சியில் டெய்லரிங், எம்ராய்டரி, கம்பியூட்டர் கொண்டு ஆடைகள் வடிவமைக்கும் முறை(CAD) , பிரிண்டிங் என்று பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியின் போது கலைஞர்களுக்கு “கூலி இழப்பு” தொகையாக மாதம் ரூ2000/=  அளிக்கப்படுகிறது. மேலும் கைவினை கலைஞர்களுக்கான அடையாள அட்டை, மருத்துவக் காப்பீடு , மற்றும் பயிற்சிக்கான சான்றிதழும் பயிற்சியின் முடிவில் வழங்கப்படுகிறது.

இப்பயிற்சியானது கடந்த 29-01-2009 முதல் தொடர்ந்து  ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக நடத்தபடுகிறது.

தொடர்பிற்கு
துறைத் தலைவர்,
டெக்ஸ்டைல் டிபார்ட்மெண்ட்
பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி
பீளமேடு
கோவை.641 004.
அலைபேசி எண்: 98654 34528

இப்பதிவை படிக்கும் அன்பான வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள். பிறர்க்கு இச்செய்தியை தெரிவியுங்கள் / பகிர்ந்து கொள்ளுங்கள். குறிப்பாக சுயுதவி குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்

Thursday, February 16, 2012

ஏற்றுமதி தொழில் வாய்பளிக்கிறோம்

ஏற்றுமதித் தொழில் ஒரு நல்லத்தொழில் முன்பெல்லாம் நகரத்துமக்கள் தான் அதில் அதிகம் ஈடுபட்ட போது நல்ல வரவேற்பு இருந்தது அதன்விவரம் கிராமத்து இளைஞர்களுக்குத் தெரியவில்லை.
தற்போது கிராமத்திலும் கூட ஏற்றுமதித் தொழில் முன்னனி நிறுவனமாக செயல்படுகிறார்கள்.நாகைமாவட்டம் வேதரண்யம் அடுத்த தோப்புத்துறையைச் சேர்ந்த திரு. விஜயகுமாரை சந்தித்தோம் அவர் கூறும்போது,
“கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட எங்கள் நிறுவனம், இன்று உலகளவில் நற்பெயரை பெற்றுவருகிறது முதலில் உணவுப்பொருட்கள் தேங்காய் வகைகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி சொய்து வருகிறோம்.
குறிப்பாக வளைகுடா நாடுகள், அபுதாபி, துபாய், சவதிஅரேபியா, போன்ற பல நாடுகளுக்கு அனுப்பிவைக்கிறோம், இதற்கு நமது இந்திய ஏற்றுமதிக் கொள்கைமிக வலிமையான தாக இருப்பது எனக்கு மிக உதவியாக இருந்தது, அதோடு இன்சூரன்ஸ் வசதியும் மிக ஏற்றதாக உள்ளது கடந்த நான்கு வருடங்களாக இத்தொழிலில் உள்ளேன் இறக்குமதி தரமான சிமென்ட்களை இறக்குமதி செய்கிறேம் குறைந்த விலைக்கு விற்பனைக்கு கொடுக்கிறோம்.
மேலும், நல்லதரமான நுகர்வு பொருட்கள் தயாரிப்போர் அனுகினால் ஏற்றுமதி செய்து தரஉள்ளேன்”.என்கிறார்.
அபூர்வா இம்போர்ட் & எக்ஸ்போர்ட்.
17/3 தோப்புத்துறை. வேதாரண்யம் தாலுக்கா.
நாகைமாவட்டம்.
90037 58477,94433 99844, 04369 – 252388.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites