நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் - எஜமானை புதைத்த இடத்தில் ஏழுநாட்கள் வரை ஊண் உறக்கமற்றிருந்த நாய் |
[ Thursday, 24 November 2011, 07:27.02 AM. ] |
நாய்கள் தான் இன்றுவரை நன்றிக்கு உதாரணமாக கூறப்படுபவை, ஒரு வேளை உணவிட்டாலும் அதை மட்டும் நினைவில் வைத்து வாங்கும் அடி உதைகளை கூட மறந்துவிடும் பண்பு நாய்க்கு மட்டுமே உள்ளது, சீனாவின் கிராமமொன்றில் வாழ்ந்துவந்த Lao Pan உறவுகளால் விலக்கப்பட்டு தனிமையில் வாழ்ந்துவந்தவர், நாம் இருவர் நமக்கு ஏன் இன்னொருவர் என்பது போல இவருக்கு இந்த நாய் மட்டுமே துணை, இந்த நாய் குட்டியாக இருந்த போதே எடுத்து வளர்த்தவர் 14 வருடங்களை கடந்து தனது 68 ஆவது வயதில் சுகவீனமுற்று உயிரிழந்தார், இவரின் பிரேத உடலுடன் படுத்திருந்த நாய் புதைக்கும் வரை வரை கூடவே இருந்ததாம், மண்ணுக்குள் போன எஜமான் மீண்டு வருவார் என்ற எதிர்பார்ப்புடன் புதைத்த இடத்திற்கு அருகிலேயே இன்னமும் சுற்றி வருகிறது, உலகில் சிறந்தது இரண்டு ஓன்று தாய்ப்பாசம் மற்றையது நாய்ப்பாசம் , இனி யாரையும் நாயென்று திட்டாதீர்கள் , நாய் ஒருவரை திட்டுவதற்கான வார்த்தையல்ல புகழ்வதற்கான வார்த்தை! |
0 comments:
Post a Comment