இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label தெரிந்து கொள்ளுங்கள். Show all posts
Showing posts with label தெரிந்து கொள்ளுங்கள். Show all posts

Thursday, June 7, 2012

பிளாஸ்டிக்

பிளாஸ்டிக் என்னும் சொல்லுக்கு "எளிதாக அச்சில் வார்க்கக்கூடியது" எனப் பொருள். பிளாஸ்டிக் 1862ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டது. தொடக்கத்தில் இதனை செல்லுலாய்ட் என அழைத்தனர். இப்போதும் சில இடங்களில் இப்பெயரே வழங்கி வருகிறது. செல்லுலாய்ட் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, பல்வேறு வகைப்பட்ட பிளாஸ்டிக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, பல வகைப் பொருட்கள் விற்பனைக்கு வந்து விட்டன. குறைந்த எடை, வளைந்து கொடுக்கும் தன்மை, காற்று, தண்ணீர் ஆகியவற்றால் சிதையாத தன்மை போன்றவற்றால் பிளாஸ்டிக் பெருமளவு வரவேற்பைப் பெற்றுள்ளது. 


பிளாஸ்டிக் பயன்பாடு இன்று உலகில் பல்கிப் பெருகி விட்டதால், இக்காலத்தை பிளாஸ்டிக் ஊழி என்றால் அதில் மிகையேதுமில்லை. சிறு பொம்மைகளிலிருந்து மிகப் பெரிய தொழிலகங்களில் பயன்படும் பொருட்கள் வரை பல்வேறு வகையான பொருட்கள் பிளாஸ்டிக்கைக் கொண்டு செய்யப்படுகின்றன. மருத்துவத் துறையிலும் இதன் பயன்பாடு மிக அதிகம்.

தற்காலத்தில் பிளாஸ்டிக் என்பது, அச்சில் வார்த்து வெப்பம் மற்றும் அழுத்தத்தைக் கொண்டு பல்வகை வடிவங்களிலான பொருட்களைத் தயாரிக்கும் பிசுபிசுப்புத் தன்மையுடைய பொருளைக் குறிக்கிறது. இதற்குச் சாயம் பூசி பல்வேறு நிறங்களையும் அளிக்க முடியும். உலோகத்துடன் ஒப்பிடும் போது பிளாஸ்டிக் குறைந்த எடை கொண்டது; காற்று மற்றும் நீரால் பாழாகாது; துருப்பிடிக்காதது. நெருப்பினால் அழியாத ஒரு வகைப் பிளாஸ்டிக்கும் கூட வந்துவிட்டது. சில பிளாஸ்டிக்குகள் கண்ணாடி போன்று நெகிழ்ச்சியுடையவை; பட்டு போன்று மென்மையானவை; எஃகு போன்று உறுதியானவை. பல்வகைப் பண்புக் கூறுகளைக் கொண்ட பல்வேறு பிளாஸ்டிக்குகள் உள்ளன. இவற்றின் தனிச் சிறப்புகள் காரணமாக மின்சாரத் துறைசார்ந்த பொருட்களிலும் கூடப் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது.

பிளாஸ்டிக் வகைகள்:

அறிவியல் முறையில் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பல்வகைப்படும். சில வகைகள் பின் வருமாறு: பினோலிக், அமினோ, செல்லுலோசிக், 
பாலிமைட், பாலியஸ்டர், ஆல்கைட், புரோட்டின், இன்ன பிற.

பினோலிக் மற்றும் அமினோ பிளாஸ்டிக்குகள் சூடாக்கி வார்ப்படம் செய்யப்படுபவை. வார்ப்படமாக உருவாக்கப்பட்ட பின்னர், இவ்வகைப் பிளாஸ்டிக்குகள் உருக்கப்பட முடியாதனவாகும். வார்ப்படங்களாகவும், அச்சுகளாகவும் உற்பத்தி செய்யப்பட்ட இவற்றிலிருந்து பல பொருட்கள் செய்யப்படுகின்றன. இதில் அடங்கியுள்ள செயல்முறை பின்வருமாறு: முதலில் பிளாஸ்டிக் துகள்கள் ஒரு வார்ப்பட அச்சில் அடைக்கப்படுகின்றன; பின்னர் சூடுபடுத்தப்பட்டு அழுத்தப் பெறும்; குறிபிட்ட நேரத்திற்குப் பின்னர் தேவையான பிளாஸ்டிக் தயாராகி விடும். தற்போது எந்திரங்களைக் கொண்டு இச்செயல் முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பினோலிக் பிளாஸ்டிக்: 

பினோலிக் பிளாஸ்டிக்கைக் கொண்டு மின்சாரச் சுவிட்சுகள், பிளக்குகள், உருக்கிகள், ஹோல்டர்கள், தொலைபேசிக் கருவிகள், வானொலிப் பெட்டிகள் போன்ற பல பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனைக் காகிதம் அல்லது துணி போன்ற நார்ப் பொருட்களுடன் கலந்து, பல்வேறு பயனுள்ள பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. பினோலிக் பிளாஸ்டிக்கின் மெல்லிய படலத்தைப் பரந்த துணி அல்லது காகித்தத்தில் பரப்பி மேசை விரிப்புகள், இருக்கை விரிப்புகள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. மேலும் பிளாஸ்டிக் தாள்களைக் கொண்டு பெட்டிகள், புத்தக அலமாரிகள், விமானம், ரயில் போன்றவற்றின் உட்பகுதிப் பாகங்கள் எனப் பலவகைப் பொருட்களும் செய்யப்படுகின்றன. பொறியியல் பகுதிகளான சக்கரங்கள், பற்சக்கரங்கள் போன்றவையும் பினோலிக் பிளாஸ்டிக்கைக் கொண்டு உற்பத்தி செய்யப் படுகின்றன. சுமார் 15-20% மரத்தூளை பினோலிக் பிளாஸ்டிக்குடன் கலந்து மரப்பலகைகளைப் போன்றே பிளாஸ்டிக் பலகைகளும் தயாரிக்கப்படுகின்றன. பிளைவுட் தொழிற்சாலைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது. 

அமினோ பிளாஸ்டிக்:

அமினோ பிளாஸ்டிக்கில் "யூரியா" மற்றும் "மெலாமைன்" வகைகள் மிக முக்கியமானவை. யூரியா பிளாஸ்டிக் மிகவும் உறுதியானது; தனது வடிவத்தை இழக்காது; இது சுவையற்றது, மணமற்றது, எந்த நிறத்தையும் ஏற்றுக்கொள்ளக்கூடியது. இப்பண்புகள் காரணமாக, வானொலிப் பெட்டிகள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள், சுவர்க் கடிகாரங்கள், பொத்தான்கள், சமையலறைப் பாத்திரங்கள் போன்ற பலவற்றையும்
 செய்வதற்கு இது மிகவும் பயன்படுகிறது. மெலாமைன் பிளாஸ்டிக்கும், யூரியா பிளாஸ்டிக்கின் பண்புகள் பலவற்றைக் கொண்டுள்ளது. இது தண்ணீர், வெப்பம் ஆகியவற்றைத் தாங்கும் வலிமை கொண்டது. எனவே, மின்சாதனங்களின் தயாரிப்புக்கு இது மிகவும் ஏற்றதாக விளங்குகிறது. 

செல்லுலோசிக்:

செல்லுலோசிக் பிளாஸ்டிக் தீயில் உருகிவிடும் தன்மையுடையது. வெப்பத்தில் நீர் போன்று உருகி, ஆறவைத்தால் மீண்டும் உறுதியாகிவிடக் கூடியது. எனவே இதிலிருந்து மீண்டும், மீண்டும் புதிய பொருட்களை உற்பத்தி செய்ய இயலும். விரிப்புகள், உருளைகள், குழாய்கள் வடிவத்தில் செல்லுலோஸ் நைட்ரேட் கிடைக்கிறது; பல வண்ணங்களிலும் இது கிடைக்கிறது. விரிப்பு, உருளை, குழாய்களை வேண்டிய அளவில் துண்டித்து இணைக்கவும் முடியும். பேனா, மூக்குக் கண்ணாடிச் சட்டங்கள் ஆகியன இதிலிருந்து உற்பத்தி செய்யப்படுபவை. ஒளிப்படப் பிலிம்கள், வாகனங்களுக்கான வார்னிஷ், செயற்கைத் தோல் போன்றவையும் செல்லுலோஸ் நைட்ரேட்டில் இருந்து உருவாக்கப்படுகின்றன. 

செல்லுலோஸ் அசிடேட்:

இதுவும் செல்லுலோஸ் நைட்ரேட் போன்றதே எனினும், இது வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் கொண்டதாகும். செல்லுலோஸ் அசிடேட் பிளாஸ்டிக் துகள்களிலிருந்து, படிவ அச்சுகளைப் பயன்படுத்தி, பல்வேறு பொருட்களைத் தயாரிக்க இயலும். தண்டுகள், குழாய்கள், விரிப்புகள் போன்றவற்றைத் தயாரிக்கலாம். மெல்லிய பிலிம்களையும் தயாரிக்கலாம். மெல்லிய பிளாஸ்டிக் பிலிம்களை ட முதல் 1/8000 செ.மீ. தடிமன் அளவுக்கும் கூட தயாரிக்கக்கூடும். எக்ஸ் கதிர் பிலிம்களையும் தயாரிக்க இயலும். அசிட்டேட் ரேயான் இழைகளும் இதைக்கொண்டே உற்பத்தி செய்யப்படுகின்றன. 

எதனாய்ட்:

இந்த வகையில் முக்கியமான பிளாஸ்டிக்குகளாக விளங்குபவை பாலிஸ்டெரின், பாலிவினைல் கலவை, பாலி மீதைல் மெதாக்ரைலேட் மற்றும் பாலிதைலேன் ஆகியனவாகும். பாலிஸ்டெரின் வகை நிறமற்றதும், பளிங்குபோல் காட்சியளிப்பதுமாகும். இதில் தேவையான வண்ணத்தைப் பூசலாம். பலவகைப் பொம்மைகள், மின்கல உறைகள், பெனிசிலின் சிரிஞ்சுகள் போன்றவற்றைத் தயாரிக்க இது உதவுகிறது. இதன் விலையும் குறைவு.

பாலிவினைல் குளோரைட் (பிவிசி):

வினைல் பிளாஸ்டிக்குகள் வகையில் இது மிக முக்கியமான ஒன்றாகும். மின்செப்புக் கம்பிகளைச் சுற்றும் உறையாக இது பயன்படுத்தப்படுகிறது. வாகன இருக்கைகள், மழைக்கால உடைகள், தரை விரிப்புகள் தயாரிக்கவும் இது பயன்படுகிறது. பல வடிவங்களிலும், கவர்ச்சியான வண்ணங்களிலும் இப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. கிராமபோன் இசைத்தட்டுகள் தயாரிக்கவும் இது பயன்படுத்தப்பட்டது.
 இதனைக் கொண்டு உருவாக்கப்பட்ட காலணியின் அடிப்பாகம், தோலால் உருவாக்கப்பட்டதை விட வலிமை வாய்ந்ததாக விளங்குகிறது. வினைல் பிளாஸ்டிக்கைக் கலந்து உருவாக்கப்பட்ட ஆடைகள் தோலால் செய்யப்பட்டவை போல் இருக்கும்; இதனைக் கலந்து உருவாக்கிய காகிதம், அட்டைப் பெட்டி செய்யப் பயன்படுகிறது. எண்ணெய், தண்ணீர் போன்றவற்றால் இது ஈரமாவதில்லை.

செயற்கைப் பற்கள் மற்றும் கண்கள்:

பாலி மீதைல் மெதாக்ரைலேட் எனும் பிளாஸ்டிக் மிகவும் லேசானது; தெள்ளத் தெளிவானது; பிளாஸ்டிக் தடிகள், குழாய்கள், விரிப்புகள் தயாரிக்கப் பயன்படுவது.
 இவ்வகைப் பிளாஸ்டிக்கில் வண்ணங்களைக் கலந்து இருளில் ஒளிரும் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. விமானச் சாளரங்கள், இருக்கைகள், மூக்குக் கண்ணாடி வில்லைகள், மருத்துவக் கருவிகள், செயற்கைப் பற்கள், செயற்கைக் கண்கள் ஆகியன தயாரிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. 

பாலி எதிலின்:

பாலி எதிலின் என்பது பிளாஸ்டிக்கின் அண்மைக்கால வளர்ச்சியாகும். இது பிளாஸ்டிக் துகள்கள், பிலிம்கள், விரிப்புகள், குழாய்கள் ஆகியவற்றைத் தயாரிக்கப் பயன்படுவதாகும். மின் கருவிகள் தயாரிப்பிலும், உணவுப் பொருட்களைப் பொட்டலங்களாகக் கட்டுவதற்கும் இது பயன்படுகிறது. 

நைலான் பொருட்கள்:

நைலான் என்பது பாலிமைட் பிசின் வகையைச்
 சார்ந்தது; இழைகள், துகள்கள், விரிப்புகள், குழாய்கள், கயிறு, நூல் ஆகிய வகைகளில் இது கிடைக்கிறது. நைலான் மிகவும் வலிமையானது; வேதிப் பொருட்கள் சேர்க்கையால் சேதமடையாதது. 

ஆல்கைட்:

ஆல்கைட்கள் வண்ணப் பூச்சு வார்னிஷ்களில் பயன்படுவன; தண்ணீரால் அழியாதவை. பொத்தான்கள், தைக்கும் ஊசிகள், பேனா, நாகரிகப் பொருட்கள் போன்றவற்றின் தயாரிப்பிலும் இவை பயன்படுகின்றன.


Friday, June 1, 2012

சுய உதவி குழுக்கள்


சுய உதவி குழுக்கள் என்றால் என்ன?
  • சுய உதவி குழு என்பது கிராம ஏழை மக்களுக்கான ஒரு சிறிய குழு, உறுப்பினர்களின் சமுதாய மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக தாமாக முன்வந்து அமைக்கப்படும் குழு ஆகும்
  • இது பதிவு செய்யப்படலாம் பதிவு செய்யப்படாமலும் இருக்கலாம்
  • சிக்கனம் கடன் மற்றும் சுய உதவி போன்ற கொள்கைகளை வழியுறுத்துவது
  • சுய உதவி குழு உறுப்பினர்கள் தொடர்ச்சியாக சேமிக்கவும் மற்றும் பொது நிதியில் பங்கு கொள்ளவும் சம்மதிக்க வேண்டும்
  • உறுப்பினர்கள் பொது நிதி மற்றும் இதுபோன்ற இதர நிதிகளையும் (வங்கிகடன்) குழுவின் சார்பாக பெற்று குழுவின் முடிவுகளுக்கு ஏற்ப தேவைப்படும் உறுப்பினர்களுக்கு கடன் அளிப்பது
சுய உதவி குழு உறுப்பினர்கள் சுய விருப்பத்தோடு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சேமிக்குமாறு ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். இதனால் இந்த சேமிப்பு பணமானது அதன் உறுப்பினர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் சுழல் முறையில் அல்லது தேவைப்படுபவர்களுக்கு கடன் கொடுக்கப்படுகிறது. இந்தியாவில் 1991 ம் ஆண்டு நபார்டு வங்கியால் புதிய முயற்சியாக சுய உதவி குழு திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
     
நபார்டு 20 அல்லது அதற்கு குறைவான ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் தாமாக முன் வந்து பொது பிரச்சனைகளுக்காக சேர்ப்பவர்களின் அமைப்பு என வரையறுக்கிறது. பொதுவாக சுய உதவி குழு என்பது 10 முதல் 20 நபர்கள் கொண்ட பதிவு செய்யப்படாத மற்றும் மேம்பாட்டு குழு ஆகும். சில குறிப்பிட்ட பகுதிகளான பின்தங்கிய மற்றும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகள் மற்றும் மலைகள் மற்றும் பாலைவன பகுதிகளில் உறுப்பினர் எண்ணிக்கை 5 - 20 வரையாக கூட இருக்கலாம். இந்த கடினமான பகுதிகளை மாநில அளவிலான குழுமம் கண்டறியும் அந்த பகுதிகளில் மட்டுமே உறுப்பினர் சேர்க்கைக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் குழுவில் ஒரு குடும்பத்திலிருந்து ஒரு உறுப்பினர் மட்டுமே பங்கு கொள்ள முடியும்.
           
சுய உதவி குழுக்களை பற்றிய பொதுவான கருத்து உங்களால் செய்ய முடியும் ஆனால் நீ தனித்து எதுவும் செய்ய முடியாது. சுய உதவி குழு முறையான அரசு சாரா அமைப்புகள் மற்றும் உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. சுய உதவி குழுக்கள் உள்ளூர் அளவில் முக்கியமான அமைப்பாக கருதப்படுகிறது.
சுய உதவி குழுக்களின் வரலாறு
ஒரு அரசு சாரா அமைப்பு மைரடா (MYRADA) ஆனது 1984 மற்றும் 1985 ம் ஆண்டுகளின் இடையில் கர்நாடகாவில் கிராம வளர்ச்சி சார்ந்த திட்டங்களை மேற்கொண்டது. ஏராளமான கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு கடன் வழங்குவதின் மூலம் அவற்றை மேம்படுத்தியது. கர்நாடகாவானது நிதி நிறுவனங்களை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டபொழுது அது மாநிலங்களில் உள்ள சுய உதவி குழுக்களின் எண்ணிக்கையை கண்டறிந்தது. இந்த சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 1991 - 92 ம் ஆண்டுகளில் தேசிய வேளாண் மற்றும் கிராம வளர்ச்சி வங்கி (நபார்டு) சுய உதவி குழு மற்றும் வங்கிகளின் இணைப்பு திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. இதை தொடர்ந்து ஏராளமான கூட்டுறவு சங்கங்கள் சிறிய குழுக்களாக பிரிந்தன. இதுநான் சுய உதவி குழுக்களின் ஆரம்பம். இது இந்த கால கட்டங்களில் கடன் மேலாண்மை குழுவாக கண்டறியப்பட்டது. இது கடன்களை மேலாண்மையை நோக்கி செயல்பட்டது.
           
கூடிய விரைவில் குழுவின் ஒவ்வொரு உறுப்பினர்களும் சேமிப்பு பழக்கத்தை மேற்கொள்ளும் கருத்து உருவானது. இதை தொடர்ந்து ஒரு முறையான செயல்பாடுகளான தொடர்ச்சியான கூட்டங்கள் ஆவணங்கள் மற்றும் ஏடுகள் பராமரிப்பு அனைவரும் இணைந்து முடிவுகளை மேற்கொள்வது ஆகியவை உருவானது. நபார்டினால் 1996 ம் ஆண்டு வங்கிகள் மற்றும் சுய உதவி குழுக்கள் இணைப்பு திட்டத்தை பற்றிய ஒரு நம்பிக்கை அளிக்கும் ஆய்வு (பூசாசண்டி மற்றும் சாய்) மூலம் சராசரியான கடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
           
இதனால் இத்திட்டம் வேகமாக வளர்ந்தது. இது மிக வேகமாக நாடு முழுவதும் பரவியது 2002 ம் ஆண்டு இது உலகிலேயே மிகப்பெரிய சிறு நிதி திட்டமாக அமைந்தது. இதன் முன் சுய உதவி குழுக்களின் வரலாறு அரசு சாரா அமைப்புகளின் முயற்சியால் 1980 ம் ஆண்டுகளில் நடுவில் தொடங்கியது. 1980 களின் இறுதியில் நபார்டின் முயற்சியால் மேம்பட்டது. பின்பு 1991 - 92 ம் ஆண்டுகளில் சுய உதவி குழுக்கள் மற்றும் வங்கிகள் இணைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டில் முதல் முதலில் கர்நாடகாவில் கோலார் மாவட்டத்தில் வைஷ்யா வங்கியில் சுய உதவி குழுக்களுக்கு முதல் கடன் வழங்கப்பட்டது.
சுய உதவி குழுக்கள் எதனால் அமைக்கப்பட்டது?
சுய உதவி குழுக்கள் வறுமையை ஒழிப்பது மக்கள் மேம்பாடு மற்றும் சமுதாய எழுச்சிக்கான மிக சிறந்த யுக்தியாக உள்ளது. சுய உதவி குழுக்களின் நோக்கம் ஏழை மக்களின் செயல் திறனை அதிகரித்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரித்தல் மற்றும் வருமான உற்பத்திக்கான திட்டங்களை உருவாக்குதல் போன்றவையாகும்.
ஒரு குழுவை அமைப்பதன் மூலம்
  • உறுப்பினர்களின் தங்களைப்பற்றிய சிந்தனைகளை மாற்றுதல் மற்றும் அவர்களுக்கு சுதந்திரமாக செயல்படும் சக்தியை வழங்குதல்
  • சமுதாய அங்கீகரிப்பினை வழங்குதல் மற்றும் ஒருங்கிணைந்த முயற்சியின் மூலம் அவர்களுக்கு அளிக்கப்பட்ட குறிக்கோள்களை அடைய செய்தல்
  • ஒற்றுமையை உருவாக்குதல் மற்றும் புதிய சிந்தனைகள் மற்றும் திட்டங்களை ஊக்கப்படுத்தி செயல்படுத்துவதன் மூலம் உறுப்பினர்களின் வாழ்வில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்துதல்
  • தொடர்ச்சியான சேமிப்பு / விரைவான கடன்கள் மூலம் உறுப்பினர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துதல்
  • குழுவை வங்கிகளுடனும் / கடன்களுடனும் இணைக்க ஊக்கப்படுத்துதல்
  • அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளிடம் இருந்தும் தகவல் பெறும் திறனை அதிகரித்தல் மற்றும் பயனளிக்கக்கூடிய திட்டங்கள் / பணிகளை அவைகளிடம் இருந்து பெறுதல்
  • சமூக மற்றும் இதர சிக்கல்களிலிருந்து பாதுகாத்தல்
  • சுய சார்பை தொடர்ச்சியாக மேம்படுத்துவதன் மூலம் அவர்களை வளர்ச்சி பாதையில் முன்னேரச்செய்தல்
சுய உதவி குழுக்களை பராமரித்தல் மற்றும் கண்காணித்தல் பணிகள்
குழுவை அமைத்தல்
குழுக்களை அமைத்தல் பொதுவாக கிராம அளவில் ஆய்வுகளை மேற்கொள்ளுதல் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் அடிப்படையான தகவல்களை பெறமுடியும். இது அரசு சாரா அமைப்புகளின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு பங்கேற்பு கிராம அணுகு முறை (பி.ஆர்.ஏ) வளங்களின் வரிசை மற்றும் சமுதாய வரைபடம் போன்றவை உபயோகப் படுத்த படுகிறது. டாராலின் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் பட்டியலும் உபயோகப்படுத்தப்படுகிறது. ஏழை பெண்களை சுய உதவி குழுக்களில் சேர்ப்பதன் மூலம் அவர்களை வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் பட்டியலிருந்து நீக்க முடியும்.
உறுப்பினர்
  • ஒரு சுய உதவி குழுவில் உறுப்பினர் எண்ணிக்கை 10 நபர்களுக்கு குறையாமலும் 20க்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும்.
  • குழு உறுப்பினர்கள் ஒரு இயக்குபவர் மற்றும் ஒரு பிரதிநிதியை தேர்ந்தெடுக்க வேண்டும். இது குழுவை இயக்குவதற்கு ஏதுவாக அமையும்
  • உறுப்பினர்கள் ஒரே கிராமத்தில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்
  • உறுப்பினர்கள் ஒரே இணத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்
  • ஒரு குழுவில் ஆண் பெண் இரு தரப்பினரும் இடம்பெறலாம்
  • ஒரு குழுவில் குறைந்த வருமானம் கொண்ட உறுப்பினர்கள் இடம் பெறுவது சிறந்தது.
  • ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட குழுவில் உறுப்பினர் ஆக கூடாது
சுய உதவி குழுவின் உறுப்பினர் தகுதியிலப்பு
  • ஒரு உறுப்பினர் தொடர்ந்து 3 முறை சுய உதவி குழுவின் சட்டங்களுக்கு வராமல் இருத்தல்
  • குழுவின் கொள்கைகள் மற்றும் குழுவின் நிர்வாகம் மற்றும் குழுவினால் வகுக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் மற்றும் அதனால் உருவாக்கப்பட்ட சாசன அமைப்பிற்கு எதிராக செயல்படும் உறுப்பினர்.
குழு கூட்டங்கள்

ஒவ்வொரு குழுவும் சேமிப்பு கடன் திரும்ப செலுத்துதல், கடன் பெறுதல் மற்றும் சேமிப்பு மற்றும் திரும்ப செலுத்துதல் போன்ற விஷயங்களை பற்றி விவாதிக்கவும் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள ஏதுவாகவும் வாரம் ஒரு முறை குழு கூட்டங்களை நடத்துவது அமையும். குழுவின் அனைத்து உறுப்பினர்களும் சரிசமமான முறையில் வளர்ச்சி பெரும் வகையில் அரசு சாரா அமைப்புகளின் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு தனி உறுப்பினரோ அல்லது இயக்குபவர்களே அதிகாரம் செலுத்த முடியாது. அப்படி அதிகாரங்களை மேற்கொள்ளுவது ஒரு சிறந்த குழுவின் அடையாளமாக இருக்க முடியாது. சுய உதவி குழுக்களின் செயல்பாடுகள் வெளிப்படையாததாக அமையுமாறு உள்ள பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் பணிகளையும் பொறுப்புகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதை சுய உதவி குழுவின் உறுப்பினர்கள் பரிவர்த்தனைகள் அல்லது நிதி நிலைமையைப் பற்றி கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

வார கட்டத்திற்கான நாள் / நேரம் போன்றவற்றை முடிவு செய்து கொள்வது அவசியமாகும். ஒவ்வொரு கட்டங்களிலும் சேமிப்பு, பெற்ற நிதியின் சுழற்சி முறை, வங்கிகடன் மற்றும் திரும்ப செலுத்துதல் சமூக திட்டங்கள் போன்றவற்றை பற்றி தவறாமல் கலந்து ஆலோசனைகள் செய்ய வேண்டும். மேலும் கடன் பெறுதல் திரும்ப செலுத்துதல் தவணை கடந்த கடன்கள் மற்றும் ஒட்டு மொத்த நிதி நிலைமை பற்றியும் கூட்டங்களின் இறுதியில் சுத்தமாக படிக்க வேண்டும்.
சேமிப்பு மற்றும் சிக்கனம்
  • அனைத்து சுய உதவி குழு உறுப்பினர்களும் தொடர்ந்து சேமிக்க வேண்டும். சேமிக்கும் தொகை சிறியதாக இருக்கலாம். ஆனால் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக சேமிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
  • முதலில் சேமிப்பு பின்பு கடன் என்பது சுய உதவி குழுவின் எயின்மொழியாக உள்ளது.
  • சுய உதவி குழு உறுப்பினர்கள் சேமிப்பு பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் சுய பாதுகாப்பினை பெறுகிறார்கள். சேமிப்பு மற்றும் உள்கடன்களை மேற்கொள்வதன் மூலம் நிதி கட்டுப்பாடுகளை கற்றுக்கொள்கிறார் (நன்மைகள் - இந்த சேமிப்பு வங்கி கடன் பெற உதவுகிறது)
உள் கடன்கள்
  • சுய உதவி குழுக்கள் சேமிப்பு தொகையை உறுப்பினர்களுக்கு கடன் கொடுக்க பயன்படுத்த வேண்டும்
  • இதன் நோக்கம் தொகை வட்டி விகிதம், திரும்ப செலுத்தும் கால அளவு போன்றவற்றை குழுக்கள் தங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும்
  • சுய உதவி குழுக்கள் முறையாக கணக்குகளை பராமரிக்க வேண்டும்
ஆரம்ப வருடங்களில் இந்த கடன் தொகைகள் உறுப்பினர்களின் சிறிய தேவைகள் மற்றும் அவசர தேவைகளை பூர்த்தி செய்வதாக இருந்தது. ஆனால் கடந்த வருடங்களில் இது அதிக உற்பத்தி தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.
குழு ஒதுக்கீட்டு நிதி ஆனது குழுவின் தொடர்ச்சியான செயல்பாட்டிற்கும் அவசிய தேவைகளுக்கும் அவசியம். இது குழுவின் 2வது அல்லது 3வது வருடங்களுக்கு பிறகு ஏற்படுத்தப்படும். குழு ஒதுக்கீட்டு நிதியானது நடைமுறை செலவுகளை சமாளிக்கவும் உறுப்பினர்களின் அவசரத் தேவைகளுக்காகவும் மற்றும் இதர எதிர்பாராத நிகழ்வுகளை சமாளிக்க ஏதுவாக ஏற்படுத்தப்படுகிறது. இது முழுவதும் தேவைகளைப் பெருத்தது. இது பொதுவாக குழு தன்னுடைய தொடர்ச்சியான சேமிப்பில் ஒரு பகுதியை வங்கி கணக்கில் வைத்திருப்பது ஆகும். இது சுய உதவி குழுக்களின் பெயரில் வங்கியில் நிரந்தர வைப்பு தொகையாகவோ அல்லது திரும்ப பெறும் வைப்பு தொகையாகவோ இருக்கலாம். ஆனால் இந்த தொகையை நேர்மையாக மேற்கண்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும்.

அலுவலக பணியாளர்கள்

குழுவை இயக்குபவர் படித்தவராகவும் தலைமை பண்புகளை கொண்வராகவும் இருப்பது அவசியம். குழுவை வழிநடத்தும் பெண்கள் அந்த கிராமம் முழுமைக்கும் முன் உதாரணமாகவும் பிரதிநிதியை மாற்றக்கூட்டியவாராகவும் இருக்க வேண்டியது அவசியம். இயக்குபவர்களுக்கு பணம் கொடுப்பது குழுவின் விருப்பம். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தலைவர்களை மாற்றுவதன் மூலம் இயக்குபவர் அதிகாரம் கொண்வராக உருவாவதை தடுக்க முடியும். மேலும் குழுவின் அமையான செயல்பாடுகளுக்கும் உதவும். இதனால் இயக்குபவர்கள் வருடத்திற்கு ஒரு முறை இடமாற்றம் செய்ய வழியுறுத்தப்படுகிறது. ஒரு குழுவில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் படிக்காதவர்களாக இருந்தாலும் இயக்குபவர்கள் இடம் மாற்றம் செய்யப்படுவார்கள். மேலும் முன்பு இருந்த இயக்குபவர் (படிக்க தெரிந்த நபர்) புத்தக எமுத்தராக தொடர்வர். காசோலையில் கையெப்பமிடும் உரிமை மற்றும் பணத்தை கையாளும் உரிமையும் புதிய இயக்குபவரிடம் மட்டுமே இருக்கும். சுய உதவி குழுக்களின் தொடர்ச்சியான மற்றும் ஜனநாயக வளர்ச்சிக்காக வங்கியும் இயக்குபவர் அல்லது பிரதிநிதியை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மாற்ற உதவி செய்கிறது. வங்கியும் இந்த மாற்றத்தை விரும்புகிறது. புதிய தலைவர் வங்கியின் கணக்கை கையாளும் உரிமையும் பெறுகிறார் இதற்காக சுய உதவி குழுவில் தீர்மானமும் நிறைவேற்றப்படுகிறது.
இயக்குபவரின் பங்கு
  • பெண்களின் குழு கூட்டங்களின் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நடத்துவது
  • தற்பொழுதைய சமுதாய சூழ்நிலைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது திட்டங்களின் நோக்கங்கள் மற்றும் குழு பணிகள் மற்றும் ஒற்றுமையை ஊக்குவிப்பது
  • குழு உறுப்பினர்களின் கல்வியறிவு மற்றும் கணித அறிவுகளை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடுதல்
  • அரசின் நலத்திட்டங்கள் குறிப்பாக ஆரோக்கிய மற்றும் குடும்ப நலத்திட்டங்கள் கல்வி போன்ற திட்டங்களை பற்றிய தகவல்களை உறுப்பினர்களுக்கு தெரிவித்தல்
  • சுய உதவி குழு தொடர்பான நிர்வாகம் பொது பண்புகள், சுற்றுப்புற சூழ்நிலை, பெண்கள் மற்றும் சட்டம் தொடர்பான பயிற்சி திட்டங்கள் பற்றிய விவரங்களை சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு தெரிவித்தல்
  • உறுப்பினர்களின் வருமான உற்பத்தி நடவடிக்கைகளை கண்டறிவதற்காக குழுக்களுக்கு உதவுதல் வங்கிகளுடன் இணைந்து கடன் பெறுதல் மற்றும் திரும்ப செலுத்துதல் போன்றவற்றை உறுதிசெய்தல்
  • வங்கி நடவடிக்கைகள் விதிமுறைகள் பற்றிய பயிற்சியை உறுப்பினர்களுக்கு வழங்குதல்
  • ஒருமித்த கருத்து மற்றும் செயல்பாடுகளுக்காக உறுப்பினர்களை ஊக்கப்படுத்துதல்
  • உறுப்பினர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக பணிகளை மேற்கொள்ளுதல்
  • உறுப்பினர்களின் தொடர்சியான சேமிப்பினை உறுதி செய்தல்
  • குறிப்பு ஏடுகள், கணக்கு பதிவேடுகள், கடன் பதிவேடுகள் சொத்து பதிவேடுகள் போன்றவற்றை பராமரித்தல்
  • கடன் வழங்குவது தொடர்பான குழு கூட்டங்களின் தீர்மானங்கள் போன்றவற்றை பதிவு செய்தல்
  • குழு வங்கி கடன் பெறுவதற்கு உதவி செய்தல் சொத்து உருவாக்கும் மற்றும் திரும்ப செலுத்துவதற்கு ஊக்கம் அளித்தல்
  • குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்பதை உறுதி செய்தல்
  • குழுவின் கூட்டங்களுக்கு வர தவறுபவர்களின் வீடுகளுக்கு சென்று ஊக்கப்படுத்தி தொடர்ந்து குழு கூட்டங்களில் பங்கேற்குமாறு செய்தல்
  • அரசு சாரா அமைப்புகள் / திட்ட அமலாக்கு பிரிவுகள் வழங்கும் பயிற்சிகளில் பங்கெடுத்தல்
  • ஒருங்கிணைப்பு கூட்டங்களில் பங்கேற்பது
  • ஒற்றுமையுடனும் ஒருமைப்பாட்டுடனும் உறுப்பினர்கள் செயல்பட ஊக்கப்படுத்துதல்
  • சுய உதவி குழுக்கள் சுய சார்புடன் தொடர்ச்சியாக 2 மற்றும் 3 ஆண்டுகளை தான்டியும் செயல்படுவதை உறுதி செய்தல்
பிரதி நிதிகளின் பங்கு
  • குழு கூட்டங்களை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொடர்சியாக நடத்துவது
  • திட்டங்களின் நோக்கங்களை இயக்குபவர்கள் அடைய உதவுதல்
  • குழுவினால் அங்கீகரிக்கப்பட்டவர் என்ற முறையில் வங்கி கணக்கை இணைந்து கையாளுவது
  • சுய உதவி குழு தொடர்பான நிர்வாகம் பொது பண்புகள், சுற்றுப் புற சூழ்நிலை, பெண்கள் மற்றும் சட்டம் தொடர்பான பயிற்சி திட்டங்கள் பற்றிய விவரங்களை சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துதல்
  • பணம் மற்றும் வங்கி தொடர்பான நடவடிக்கைகளை கையாளுதல்
  • குழுக்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க உதவுதல்
  • குழுவிற்கும் / கிராமத்திற்கும் பயனாளிக்கும் வகையில் உள்ளூர் வளங்களை கையாளுதல்
  • கடன் தொகை மற்றும் குழுவின் சேமிப்புகளை சிறப்பான உபயோகித்தல் மற்றும் கையாளுதல்
  • குழு உறுப்பினர்கள் தங்களின் வணிக திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் தங்களின் நடவடிக்கைகளை நிர்வாகிக்கவும் மற்றும் வங்கி கடன் நடைமுறைகளை புரிந்து கொள்ளவும் பயிற்சி (உதவி) களை வழங்குதல்
  • குழுவின் முடிவுகளை தெரியப்படுத்துதல்
  • பிற இடங்களுக்கு குழுவின் பிரதிநிதியாக பங்கெடுத்தல்
சுய உதவி குழு உறுப்பினர்களின் பங்கு
  • சுய உதவி குழு கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்வது
  • சுய உதவி குழு கூட்டங்களில் முழுவதுமாக பங்கெடுத்துக் கொள்வது மேலும் சுதந்திரமாகவும் தெளிவாகவும் கருத்துக்களை கூறுதல்
  • சுழற்சி முறையில் வங்கிக்கு செல்வது போன்று சுய உதவி குழுக்களின் பொறுப்புக்களில் அனைவரும் பங்கெடுத்துக் கொள்வது
  • சுய உதவி குழுக்களின் கடன்களை சரியாக முறையில் திரும்ப செலுத்துவது
  • கிராம மற்றும் சமூக நல திட்டங்களில் பங்குகொள்வது
  • அனைத்து உறுப்பினர்களுக்கிடையேயும் நம்பிக்கையும் ஒற்றுமையையும் உறுதிபடுத்துவது மேலும் நோக்கங்களை அடைய கொள்கைகளை வரையறுத்துக் கொள்வது
  • கேள்விகளையும் சந்தேகங்களையும் வெளிப்படையாக கேட்பது மற்றும் சுய உதவி குழுக்களின் பணிகள் வெளிப்படையாக நடப்பதை உறுதிபடுத்துவது
  • குறைந்த பட்சம் பிரதிநிதிகள் மற்றும் இயக்குபவர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆண்டு தேர்தல் நடப்பதை உறுதி செய்தல்
  • பயிற்சி திட்டங்களில் தவறாமல் பங்கெடுப்பது மற்றும் சிறந்த செயல் முறைகளை நடைமுறை படுத்துவதை உறுதி படுத்துதல்
  • சுய உதவி குழு உறுப்பினர்கள் தங்களின் பிரச்சனைகள், அனுபவங்கள், எண்ணங்கள் மற்றும் யோசனைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுதல்
குழு கூட்டங்களின் அமைப்புகள்
பெண்களின் குழு அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு 2 வது அல்லது 3வது வருடத்திற்கு பிறகு கூட்டமைப்புகளாக மாற்றி அமைக்கப்படும். குழுக்கள் நல்ல நிலைக்கு வந்த பிறகு தான் அவை கூட்டமைப்புகளாக மாற்றியமைக்கப்படும். கூட்டமைப்புகள் சமூக பாலமாக செயல்படுகிறது. மேலும் பலவீனமான குழுக்களை வளுப்படுத்துவது மற்றும் தங்களின் வெற்றிகரமான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக போராடுவது போன்ற பணிகளை மேற்கொள்கிறது. அதன் குழுக்களில் ஏதேனும் ஒன்று கடன்களை திருப்பி செலுத்தாமல் இருப்பின் அவைகளிடம் இருந்து கடன்களை திரும்பச் செலுத்துவதற்கு உதவி புரிகிறது. மேலும் குழுக்களின் சிறப்பான செயல்பாடுகளுக்கு உதவுதல் மற்றும் கடினமான பணிகளுக்கு உதவுதல் மற்றும் குறிக்கோள்களை அடைய உதவுதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது. மேலும் அரசு சாரா அமைப்புகளின் சில முக்கியமான நீண்டகால பணிகளை மேற்கொள்கிறது. இவைகளின் தொடர்சியான நடவடிக்கைகளுக்காக வங்கிகளும் இவற்றுடன் வளுவான தொடர்பினை ஏற்படுத்திக் கொள்கின்றன. இருப்பினும் கூட்டமைப்புகளின் ஆரம்ப காலங்களில் சுய உதவி குழுக்களின் கடன் தொகைகள் சுய உதவி குழுக்களின் கூட்டமைப்பின் மூலமாக வழங்கப்படமாட்டாது. இது சுய உதவி குழுக்களின் சுதந்திரமான செயல்பாடுகளை பாதிக்கும். கூட்டமைப்புகள் சில குறிப்பிட்ட வகையான கடன்களை வழங்கலாம். உ-ம்: வீட்டுகடன்கள், கழிப்பாறைகள் கட்டுவது போன்றவைகள் சுய உதவி குழுக்களின் மூலமாக செயல்படுத்த முடியாது. இத்தகைய பணிகளும் சுய உதவி குழுக்களின் கூட்டமைப்புகளின் 4 வது மற்றும் 5 வது வருடங்களில் அவற்றின் சிறப்பான செயல்பாடுகள் மற்றும் நிலையான தன்மை போன்றவைகளின் அடிப்படையில் வழங்கப்படும். சுய உதவி குழுக்களின் கட்டமைப்புகளின் சுதந்திரமான மற்றும் வெளிப்படையான செயல்பாடுகள் போன்றவைகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

இந்திய அறக்கட்டளை சட்டம்


இந்திய அறக்கட்டளை சட்டம்
தனியார் அறக்கட்டளை மற்றும் அறங்காவலர்களை சட்ட தொடர்புக்காக இந்திய அறக்கட்டளை சமயம், 1882 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
அறக்கட்டளை என்றால் யாது ?
அறக்கட்டளை என்பது தொழிலதிபர் ஒருவர் தனது உடமைகள் அனைத்தும் பொறுப்பாக நிர்வகிக்க ஒருவரை நம்பிக்கையுடன் நியமித்து, அவற்றிலிருந்து வரும் லாபம் மற்றும் நன்மைகளைக் கொண்டு பயனடைவதாகும்.
அறங்காவலர்களின் கடமைகள்
  • அறக்கட்டளை உடமையின் நிலைமைப் பற்றிய தகவல்களை தனக்கே கூறுவது.
  • அறக்கட்டளை உடமைகளைப் பாதுகாப்பது
  • நடுநிலையாக இருப்பது
  • கழிவுகளைத் தடுப்பது
  • கணக்கு வழக்குத் தகவல்களை சரிவர பராமரிப்பது
  • அறக்கட்டளை வருமானத்தைக் குறிப்பிட்ட பாதுகாப்பு முறையில் முதலீடு செய்வது.
அறங்காவலர்களின் உரிமை மற்றும் வல்லமைகள்
  • அறக்கட்டளை பெயரை நிர்ணயிக்கும் உரிமை
  • செலவிட்டத் தொகையை திரும்பப் பெறுதலுக்கான உரிமை
  • அறக்கட்டளை உடமைகள் மேம்பாடுகளுக்கான அறிவுரை கிடைக்க நீதி மன்றத்தில விண்ணப்பிக்கும் உரிமை
  • கணக்கு தீர்வுக்கான உரிமை
  • அங்கீகரித்த உடமைகளின் விற்பனைக்கான உரிமை
  • முதலீடுகளை ஓர் பாதுகாப்பு பத்திரத்திலிருந்து மற்றொன்று மாற்றி அமைப்பதற்கான உரிமை.
பயனாளிகளின் உரிமை மற்றும் சுமைகள்
  • வாடகை மற்றும் லாபங்களுக்கான உரிமை
  • அறக்கட்டளையின் ஒப்பந்தம் மற்றும் கணக்குகளை ஆய்வு செய்வதற்கான உரிமை
  • சாதகமான வட்டியை மாற்றம் செய்யும் உரிமை
  • அறக்கட்டளை எதிராக வழக்கு தொடுக்கும் உரிமை
  • அறங்காவலர்களை தேர்வு செய்யும் உரிமை
  • அறக்கட்டளை உடமைகளை மூன்றாம் நபரின் கைகளுக்கு கிடைத்த பிறகு அதிகக் கவனம் கொள்ளவேண்டும்.
  • அறக்கட்டளையில் பிரச்சனை ஏற்படின், பயனாளிகள் அவற்றை பொறுப்பு ஏற்றுக்கொள்ளவேண்டும்.
அறக்கட்டளை திரும்பப் பெறுதல்
அறக்கட்டளை அமைப்பை உரியவர் விருப்பப்பட்டால் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
இந்திய அறக்கட்டளைச் சட்டம்:
        அறக்கட்டளை சட்டம் பற்றிய அறிய இங்கே செடுக்கவும்.
அறக்கட்டளை பத்திரம்
இந்திய அறக்கட்டளைச் சட்டம் 1882 ம் ஆண்டு அறக்கட்டளைகள் மற்றும் அறங்காவலர்களையும் பாதுகாக்கும் பொருட்டு வரையறுக்கப்பட்ட அமல்படுத்தப்பட்டது. அறக்கட்டளை என்பது சட்டபூர்வமான நபர் அல்ல. அறக்கட்டளையின் சொத்துக்கள் நலன்பெறுபவர்களின் நன்மைகளாக தர்மகர்த்தாவின் பெயரில் நிர்வகிக்கப்படும்.
அறக்கட்டளை என்றால் என்ன:
அறக்கட்டளை என்பது சொத்துரிமையோடு இணைந்த கடமை மற்றும் பொறுப்புகளை உரிமையாளரால் ஏற்றுக்கொள்ளப்படுதல் அல்லது அறிவிக்கப்படுதல் மற்றும் மற்றவர்களின் நன்மைக்காக அவரால் ஏற்றுக்கொள்ளப்படுதல் அல்லது அவராலோ அல்லது அவருக்காகவோ ஏற்றுக்கொள்ளுதல். நம்பிக்கை நபராக யார் பெற்றுக்கொள்ள படுகிறார்களோ அவர்கள் அறக்கட்டளையின் அமைப்பாளர் நம்பிக்கைக்கு யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் தர்மகர்த்தா மற்றும் இதனை நம்பி யார் இதன் பயனை ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்கள் பயனாளிகள் எனப் படுகிறார்கள். அறக்கட்டளையின் கருத்துப்பொருள்கள் அறக்கட்டளை சொத்து மற்றும் அறக்கட்டளை பணம் என்றழைக்கப்படுகிறது. பயனாளிகளின் நணமைக்காகவும் அல்லது பயனாளிகளின் விருப்பத்திற்காகவும் தர்மகர்த்தா அறக்கட்டளையின் சொத்துக்களுக்கு உரிமையாளராவார் இந்த உள்ளிடங்களிலின் மூலம் இவை அறக்கட்டளையின் கருப்பொருள்கள் என்று அழைக்கப்படுகிறது.
மேலும் தர்மகர்த்தாவானலர் மற்றவர்களின் நன்மைக்காக சொத்துக்களின் பொறுப்புக்களை கொண்டிருக்கிறார். இது அறக்கட்டளை என அழைக்கப்படுகிறது. அறக்கட்டளைகள் இந்திய அறக்கட்டளை சட்டத்தின் கீழ் வருகிறது. இது மாநில அறசால் மாற்றியமைக்கப்படலாம்
ஒரு அறக்கட்டளையானது எந்த ஒரு சட்டபூர்வமான நோக்கங்களுக்காகவும் உருவாக்கப்படலாம். ஒரு அறக்கட்டளையானது பத்திரங்களின் மூலமாகவோ அல்லது வாய் வார்த்தைகளின் மூலமாகவோ ஆரம்பிக்கப்படலாம். இருப்பினும் அறக்கட்டளையின் அசையா சொத்துக்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக அறக்கட்டளையை தேர்ந்துளப்பவர் ஆவணத்தில் கையெப்பமிட வேண்டும் மற்றும் பதிவு செய்ய வேண்டும். அல்லது உயிலை எழுதுபவர் கையெப்பமிட வேண்டும். இதை பதிவு செய்யப்படுவதற்கு உயில் தேவையில்லை அசைய சொத்துக்களாக இருப்பினும் இது பொருந்தும்.
தர்மகர்த்தாவின் கடமைகள்:
தர்மகர்த்தாவினால் அறக்கடடளையை கட்டுப்படுத்த முடியாது. இருப்பினும் ஒரு முறை பொறுப்புகளை ஏற்றுக்கொண்டால் அதில் இருந்து நீதிமன்ற அனுமதி அல்லது பயனாளிகள் (பதினெட்டு வயது நிரம்பியவராக இருப்பின்) அல்லது அறக்கட்டளையில் கருப்பொருளில் உள்ள விசேஷ அதிகாரத்தை உபயோகப்படுத்துவது போன்ற முறையான அனுமதி இல்லாமல் விலக முடியாது. அறக்கட்டளைக்கு தர்மகர்த்தாவாக இருக்க பொறுப்புகளை ஏற்றுக்கொண்டால் அவர் அந்த அறக்கட்டளையின் குறிக்கோள்களை நிறைவேற்ற வேண்டும். மேலும் அறக்கட்டளையை ஆரம்பிக்கும் பொழுது கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
பயனாளியின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்ற முடியாது.
தர்மகர்த்தாவின் கடமைகள்:
  • அறக்கட்டளை சொத்துக்கள் பற்றிய விபரங்களை அவரே தெரிவிக்க வேண்டும்
  • அறக்கட்டளையின் சொத்துக்களை பாதுகாத்தல்
  • பயனாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது
  • அறக்கட்டளையின் சொத்துக்களை கவனமுடன் தன்னுடைய சொத்துக்களை போன்று பாதுகாத்தல் விரைவில் மதிப்பு இழக்க கூடிய சொத்துக்களை நிரந்திர சொத்துக்களாக மாற்றுதல் மற்றும் விரைவில் லாபம் தரக்கூடிய வகையில் மாற்றியமைத்தல்
  • நடுநிலையாக செயல்படுதல்
  • விரயங்களை தடுத்தல்
  • கணக்கு பதிவு மற்றும் இதர தகவல்களை முறையாக பராமரித்தல்
  • மற்ற வழிகளில் அல்லாமல் பரிந்துரைக்கப்பட்ட முறையான வழிகளில் அறக்கட்டளையின் பணத்தை முதலீடு செய்தல்
                 தர்மகர்த்தா அறக்கட்டளையின் விதிமுறைகளை மீறினால் அதற்கு அவர் பொறுப்பாவர். அறக்கட்டளையின் விதிமுறைகளுக்கு அத்துமீறும் பொழுது தர்மகர்த்தா தன் கடமையில் நேரிடும் பொழுது அறக்கட்டளையின் மீறுதல் நடைபெறுகிறது. இந்த சூழ்நிலைகளில் சட்டம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
தர்மகர்த்தாவின் உரிமைகள் மற்றும் அதிகாரங்கள்:
  • தர்மகர்த்தா கீழ்கண்ட அதிகாரங்களை கொண்டிருக்கிறார்,
  • பத்திரங்களை உருவாக்கும் உரிமை
  • செலவு செய்த பணத்தை பெரும் உரிமை
  • ஒப்பந்த முறிவு ஏற்படுத்துபவரிடமிருந்து நஷ்டஈடு பெறும் உரிமை
  • அறக்கட்டளை சொத்துக்களை நிர்வகிக்கும் பொருட்டு வழக்கு தொடுக்கும் உரிமை
  • கணக்குகளை தீர்வு செய்யும் உரிமை
  • அனைத்து தேவையான நடவடிக்கைகள் மற்றும் பொறுப்புகள் மற்றும் முறையாக பராமரித்தல் மூலம் அறக்கட்டளை சொத்துக்களை பாதுகாத்தல் அல்லது பயனாளிகளை பாதுகாத்தல்
  • சொத்துக்களை விற்கும் உரிமை இருந்தால் அந்த உரிமையை மாற்றிக்கொடுக்கும் உரிமை
  • சொத்துக்கள் மிதமான சிக்கல்கள் வரும்பொழுது அதை பராமரிக்கும் உரிமை
  • ரசீதுகள் வழங்கும் உரிமை
  • ஒருங்கிணைக்கும் அல்லது சமரசம் செய்யும் உரிமை
பயனாளிகளின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள்:
  • வாடகை மற்றும் லாபம் பெறும் உரிமை
  • அறக்கட்டளையின் உருவாக்கியவரின் குறிப்பிட்ட நோக்கங்களை நிறைவேற்றம் உரிமை
  • அறக்கட்டளையின் கருத்துக்கள் மற்றும் கணக்குகளை பிரதி எடுக்கும் மற்றும் பரிசோதனை செய்யும் உரிமை
  • லாபம் பெரும் உரிமையை மற்றும் உரிமை
  • அறக்கட்டளையின் குறிப்பிட்ட விஸயங்களின் மீது வழக்கு தொடுக்கும் உரிமை
  • தர்மகர்த்தா ஆகும் உரிமை
  • தர்மகர்த்தாவை கடமையை சரியாக செய்ய வழியுறுத்தும் உரிமை
  • அறக்கட்டளையின் சொத்துக்களை முன்றாவது நபரிடம் இருக்கும்பொழுது கணிகாணிக்கும் உரிமை மற்றும் அதை மாற்றும் உரிமை
அறக்கட்டளையின் ஒப்பந்த முறிவுக்கு பயனாளியும் பொறுப்பு:
  • அறக்கட்டளையை உருவாக்கியவரின் விருப்பத்தின் பெயரில் இது திரும்ப பெறப்படும். உயில் இல்லாமல் உருவாக்கப்படும் அறக்கட்டளைகள் கீழ்கண்ட காரணங்களால் திரும்ப பெறப்படும்
  • அனைத்து பயனாளிகளின் ஒப்புதலின் பெயரில் திரும்பபெறலாம். ஆனால் அனைவருக்கும் ஒப்பந்தத்தில் ஈடுபெற தகுதியிருக்க வேண்டும்
  • அறக்கட்டளை கருத்துக்களை வெளிப்படுத்தாத தன்மைகளை கொண்டிருப்பின் அல்லது வாய் வார்த்தைகளினாலோ அமைக்கப்பட்டிருக்குமானால் அந்த அறக்கட்டளையை உருவாக்கியவர் வேண்டும் என்றால் தனது அதிகாரத்தை வெளிப்படுத்தி அதனை கலைத்துவிட முடியும்
  • அறக்கட்டளையானது கடன்களை தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பொழுதும் அந்த அறக்கட்டளைதாரர் கடன் கொடுத்தவர்களிடம் தொடர்பு கொள்ளாத நேரங்களிலும் அறக்கட்டளையை உருவாக்கியவரின் விருப்பத்தின் பெயரில் திரும்ப பெற முடியும்.
ஆதாரம்: http://clafevs.com/genero6.HTM
மூலதனம் : http://dateyvs.com/gener06.htm

காப்புரிமை பெறுவது எப்படி


அறிமுகம்
காப்புரிமை என்பது ஒரு கண்டுபிடிப்பிற்கான முழு உரிமையையும் குறிப்பிட்ட காலம் வரை கண்டுபிடிப்பாளருக்கே உரியது என அரசாங்கத்தால் வழங்கப்படுவது ஆகும். இவ்வுரிமை ஒரு நாட்டிற்குள் / குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே வழங்க முடியும். இவ்வுரிமை உரிமையாளரைத் தவிர வேறெவரும் உருவாக்கவோ, உற்பத்தி செய்யவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாதென தடைவிதிக்கிறது. இச்சலுகை / உரிமை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே.
காப்புரிமை பெறத் தகுதிகள்
  • தனித்தன்மை
  • இதுவரை யாரும் அறியாததாக
  • பயன்பாடு உள்ளதாக இருத்தல் அவசியம்
கீழ்கண்ட கருத்துக்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
  1. காப்புரிமை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே (20 ஆண்டுகள்)
  2. குறிப்பிட்ட புவியியல் எல்லைக்குட்பட்டது
  3. விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள உரிமைகளுக்கு கட்டுப்பட்டது
இந்தியாவில் காப்புரிமை
பொருள்1970 ம் ஆண்டுச் சட்டம்2005 ம் ஆண்டு புதிய சட்டம்
மனித ஜீன்கள்காப்புரிமை அற்றவைகாப்புரிமை அற்றவை
தாவரங்கள் / விலங்குகள்காப்புரிமை அற்றவைகாப்புரிமை அற்றவை
நுண்ணயிரிகள்காப்புரிமை அற்றவைகாப்புரிமை பெற்றவை
உயிரற்ற பதப்படுத்தும் முறைகள்காப்புரிமை பெற்றவைகாப்புரிமை பெற்றவை
உயிரற்ற பொருட்கள்காப்புரிமை அற்றவைகாப்புரிமை பெற்றவை
உயிர் இரசாயன மற்றும் உயிர்த் தொழில் நுட்ப பதப்படுத்துதல்காப்புரிமை பெற்றவைகாப்புரிமை பெற்றவை
உயிர்ப் பொருட்கள்காப்புரிமை அற்றவைகாப்புரிமை பெற்றவை
பயிர் இரகங்கள்காப்புரிமை அற்றவைபயிர்க் காப்புரிமை & பாதுகாப்பின் கீழ் காப்புரிமை பெற்றவை
கால்நடை இரகங்கள்குறிப்பிடப்படவில்லைகுறிப்பிடப்படவில்லை
வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்காப்புரிமை அற்றவைபொருட்கள் மற்றும் முறைகள் புதிதாகக் கண்டறியப்பட்டவையாக இருந்தால் காப்புரிமை பெறலாம்.
காப்புரிமை பெறுவதன் பயன்கள்
  1. காப்புரிமை உரிமையாளரின் கண்டுபிடிப்பிற்கு பாதுகாப்பளிக்கிறது.
  2. அதன் பயனை அவர் முழுமையாக அடைய உதவுகிறது.
  3. பிறர் துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்கிறது.
  4. உரிமையாளரின் பொருளாதாரத்தை உயர்த்துகிறது.
காப்புரிமை பெறப்படாத பொருட்களை யார் வேண்டுமானாலும் வணிக ரீதியாக பயன்படுத்த முடியும்.
எடுத்துக்காட்டு:
மஞ்சள்: 1995 ஆம் ஆண்டு இரு அமெரிக்க வாழ் இந்தியர்கள்    (சுமன் K. தாஸ், ஹரிஹர் P. கோலி) மிஸிப்பி மருத்துவ மைய பல்கலைக்கழகத்தில் இருந்து மஞ்சள், காயங்களை ஆற்றும் தன்மை கொண்டதைக் கண்டுபிடித்துள்ளதாக கூறி காப்புரிமை பெற்றனர். (காப்புரிமை எண்: 54015041).
Patents
இதை எதிர்த்து இந்திய தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மருத்துவ கழகம் “பழங்காலக் கலை” என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்தது. இதன் கூற்றுப்படி மஞ்சளின் காயங்களைக் குணப்படுத்தும் திறன் பழங்காலத்திற்கு முன்பே கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஆதாரமாக இந்திய மருத்துவக் கழகம் 1953 – ல் வெளியிட்ட ஒரு சஞ்சிகையையும் சமர்ப்பித்தது. பின்பு அமெரிக்க காப்புரிமை மஞ்சளுக்கான காப்புரிமையை இரத்து செய்தது. ஏனெனில் கண்டுபிடிப்பு என்பது.
  1. தனித்தன்மை
  2. புதியதாக
  3. பயன்படக்கூடியதாகஇருக்க வேண்டும்.
மஞ்சள் வழக்கு தனித்தன்மை மற்றும் புதியதாக இல்லை ஆதலால் இரத்து செய்யப்பட்டது.
வேம்பு:
            வேம்பு மரம் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. இது மருந்துப்பொருள், பூச்சிக் கொல்லி, பூஞ்சாணக் கொல்லி மற்றும் உரமாகவும் பயன்படுவதால் சர்வதேச அளவில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
           
            1994 – ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த WR. கிரேஸ் அன் கோ மற்றும் யு.எஸ். டி. ஏ என்ற உர நிறுவனங்களுக்கு ஐரோப்பிய காப்புரிமை நிறுவனம் வேம்புக் கொட்டையிலிருந்து பூஞ்சாணக் கொல்லி தயாரிக்கும் உரிமையை அளித்தது.
Patents
            இதை எதிர்த்து அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர். வந்தன சிவா என்பவர் இரு ஆதாரங்களைச் சமர்ப்பித்தார். வேம்புக் கொட்டையை இந்திய விவசாயிகள் பூஞ்சான மற்றும் பூச்சிக் கொல்லி மேலாண்மைக்கு பயன்படுத்தியுள்ளதையும், இரு இந்திய அறிவியலாளர்கள் வேம்பின் பூஞ்சானத் தாக்குதல் பற்றி ஆராய்ச்சி செய்த கட்டுரைகளையும் சமர்பித்தார். எனவே ஐரோப்பிய காப்புரிமை நிறுவனம் 2005 – ல் காப்புரிமை இரத்து செய்தது.
பாஸ்மதி:
இந்தியாவின் சிந்து, பஞ்சாப் பகுதிகளில் விளையும் தரமுள்ள நெற்பயிர் பாஸ்மதி. பாஸ்மதி என்ற சொல்லுக்கு ‘மண் வாசனை’ என்று பொருள். இது இதன் மெல்லிய நல்ல வாசனை, நீளமான தன்மை ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. இத்தன்மையினால் இது அதிக ஏற்றுமதி மதிப்பு வாய்ந்தது.
            1997 – ஆம் ஆண்டு அமெரிக்க காப்புரிமை நிறுவனம் ரைஸ் டெக் கோ என்ற நிறுவனத்திற்கு டெக்ஸ்மதி என்னும் நெல்லுக்கு (20 உரிமைகள்) காப்புரிமை (எண்: 5663484) அளித்தது. இந்த டெக்ஸ்மதி எனும் இரகம் 16 உரிமைகளில் இந்திய பாஸ்மதியை ஒத்தது. புவிசார்ந்த காப்புரிமையின் கீழ் பாஸ்மதி இந்திய இரகம் மற்ற நாடுகளில் காப்புரிமை பெறக்கூடாது.
Patents
            இந்த அமெரிக்காவின் காப்புரிமைகளால் இந்திய பாஸ்மதியின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் பல விவசாயிகள் இதனால் பாதிக்கப் பட்டுள்ளனர். நமது பாஸ்மதி என்னும் பிராண்டு பெயரும் குழப்பத்திற்குள்ளாகியுள்ளது. வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள் ஏற்றுமதி நிறுவனம் இக்காப்புரிமையை இரத்து செய்யும்படி வழக்குப் பதிவு செய்தது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்திலிருந்து சான்றுகள் அனுப்பப்பட்டன. இதில் பதிவு செய்யப்பட்ட 20 உரிமைகளில் 16 இந்திய பாஸ்மதியைப் போல் இருப்பதால் அவை தள்ளுபடி செய்யப்பட்டன. எனினும் வெறும் 4 உரிமைகளுடன் டெக்ஸ்மதிக்கு காப்புரிமை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல் பெற:http://www.american.edu/ted/basmathi/html
பொன்னி:
            மலேசியாவில் உள்ள ஒரு அரிசி வியாபாரி பொன்னி அரிசிக்கு வணிகக் குறியீடு பெற்றிருந்தார். பொன்னி என்பது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தால் 1986 – ல் வெளியிடப்பட்ட இரகம் ஆகும். வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள் ஏற்றுமதி நிறுவனம் (அப்பிடா) இதை எதிர்த்து வழக்குப் பதிவு செய்துள்ளது. கூடிய விரைவில் பொன்னி வணிகக் குறியீடு அப்பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டு விடும் என்று அப்பிடா நிறுவன தலைவர் திரு. அசிட் திருப்பதி கூறினார்.
(தி இந்து, பிசினஸ் லைன், ஆகஸ்ட் 7, 2008)
  1. கண்டுபிடிப்பாளர்கள் தமது கண்டுபிடிப்பால் பொருளாதார ரீதியில் பலன் பெறாவிடில், அவர் தமது கண்டுபிடிப்பை பிறர்க்குப் பயன்படும் வகையில் ஏதேனும் தனியார் நிறுவனத்திலோ அல்லது வேறொருவரிடமோ விற்று விட காப்புரிமையில் அனுமதியுண்டு.
  2. காப்புரிமை புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதன் மூலம் தொழில்வளர்ச்சிக்கு அடிகோலுகிறது.
  3. காப்புரிமையில் இடம்பெறும் சிறப்பம்சங்கள் மேலும் பல ஆராய்ச்சிகள் செய்ய அடிப்படையாக அமையும்.
  4. இந்த காப்புரிமையானது மேலும் பல ஆராய்ச்சிகள், முன்னேற்றக் கண்டுபிடிப்புகளை செய்யத் தூண்டுகோலாக அமையும்.
  5. காப்புரிமை வர்த்தகத் தொழில்துறைக்கு ஒரு சொத்தாக அமைகின்றது. அதிகக் காப்புரிமை பெற்ற நிறுவனங்கள் பொருளாதார அளவில் வசதி படைத்ததாக கருதப்படுகிறது.
  6. குறிப்பிட்ட காப்புரிமைக் காலம் முடிந்தஉடன் அக்காப்புரிமை பெற்ற பொருள் அல்லது தொழில் நுட்பம் பொது உபயோகத்திற்கு வந்துவிடுகிறது.
காப்புரிமை பெற விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
Apply Patents
காப்புரிமை பெற கண்டுபிடிப்பைப் பற்றிய இருவகையான குறிப்பேடுகள் வழங்கப்படவேண்டும்.
அவை:
  1. தற்காலிக குறிப்பேடுகள்
  2. முழுமையான குறிப்பேடுகள்
1. தற்காலிக குறிப்பேடுகள்
தற்காலிக குறிப்பேடுகள் என்பது முன்னுரிமைக்காக ஆராய்ச்சியை முடிக்கும் முன்னரே பதிவு செய்து வைப்பதாகும். இந்த ஆய்வு மற்றும் கண்டுபிடிப்பு பற்றி முழுமையாகத் தரவேண்டியதில்லை. எனினும் தற்காலிக குறிப்பேடுகள் காப்புரிமை ஏதும் வழங்காது. இது ஒரு கண்டுபிடிப்புப் பற்றிய முன்னுரிமையைப் பெற மட்டுமே வழிவகுக்கிறது. தற்காலிகக் குறிப்பேடு பதிவு செய்த 12 மாதங்களுக்குள் முழுமையான குறிப்பேடு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இயலாத பட்சத்தில் மேலும் 3 மாதங்கள் கால அவகாசம் நீட்டிக்கப்படும். ஒரு கண்டுபிடிப்பை முடித்து விட்டால் நேரடியாக முழுமையான குறிப்பேட்டிலும் பதிந்து கொள்ளலாம். தற்காலிகக் குறிப்பேடு பெற்றிருத்தல் என்பது கட்டாயம் இல்லை.
2. முழுமையான குறிப்பேடுகள்
காப்புரிமை பெற கண்டுபிடிப்பு அல்லது தொழில்நுட்பம் பற்றிய முழுமையான குறிப்பேடு காப்புரிமை அலுவலகத்தில் சமர்பிக்கப்படுதல் அவசியம். ஒரு முழுமையான குறிப்பேட்டில் கீழ்க்காணும் அம்சங்கள் கட்டாயமாக இருத்தல் வேண்டும்.
  1. கண்டுபிடிப்பின் பெயர் / தலைப்பு
  2. அக்கண்டுபிடிப்பு எந்தத் துறையைச் சேர்ந்தது
  3. அக்கண்டுபிடிப்பு பற்றிய முழு வரலாறு. அத்துறையில் கண்டுபிடிப்புடன் தொடர்புடைய முந்தைய கண்டுபிடிப்புகள் பற்றிய விவரம்.
  4. கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி பற்றிய முழு ஆராய்ச்சி முடிவுகள்.
  5. கண்டுபிடிப்பை புரிந்து கொள்ள படங்கள்
  6. கோரப்படும் உரிமைகள் பற்றிய விவரம் தெளிவாக இருத்தல் அவசியம். என்னென்ன பண்புகளுக்குக் காப்புரிமை தேவைப்படுகிறது, காப்புரிமை விண்ணப்பதாரர் பெயரில் மட்டும் வழங்கப்பட்டால் போதுமா அல்லது வேறு நபருடன் சேர்த்துக் கோருகிறாரா என்பன போன்ற தகவல்கள் சரியாக இருத்தல் வேண்டும்.
காப்புரிமை பெற விண்ணப்பிக்க இந்தியாவில் ஆகும் கட்டணம்
            காப்புரிமைக்கு விண்ணப்பிக்க இந்திய அரசு தனிநபருக்கு ரூ. 700/- , குழுக்கள், நிறுவனங்கள், போன்றவைகளுக்கு ரூ.4000/- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு விண்ணப்பதாரர் விண்ணப்பித்த 48 மாதங்களுக்குள் பரிசோதனைக்கு வருமாறு பரிசோதனைக் குழுவிற்கு வேண்டுகோள் விடுக்கவேண்டும். இதற்கு நபர் ஒருவருக்கு ரூ. 1000/- ம் நிறுவனங்களுக்கு  ரூ. 3000/- ம் செலுத்தப்பட வேண்டும். அதோடு பதிவுசெய்வதற்கென தனிநபர் ரூ. 1500/- ம் நிறுவனங்கள் ரூ. 5000/- ம்  காப்புரிமை பெறும் சமயத்தில் செலுத்த வேண்டும்.
விண்ணப்ப வெளியீடு:
            விண்ணப்பங்கள் விண்ணப்பித்த தேதியிலிருந்து 18 மாதங்கள் கழித்தோ அல்லது முன்னுரிமை கோரப்பட்ட தேதியில் எது முன்னதாக இருக்கிறதோ அந்தத் தேதியில் வெளியிடப்படும். இரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டிய விண்ணப்பங்கள் பிரிவு 35 – ன் கீழ் அலுவலகப் பதிவேட்டில் பதிவு செய்யப்படும். இந்த விண்ணப்பங்கள் மட்டும் பொது அறிக்கைக்கு வெளியிடப்படாது. இவ்வாறு வெளியிடும் போது விண்ணப்ப தேதி, விண்ணப்ப எண், விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி போன்ற தகவல்கள் வெளியிடப்படும்.
            விண்ணப்பித்த 48 மாதங்களுக்குள் விண்ணப்பதாரர் வடிவம் 19-ஐப்
பூர்த்தி செய்து பரிசோதனைக்கு வருமாறு அழைத்தால் ஒழிய பரிசோதனை செய்யப்படமாட்டாது.
பரிசோதனை மற்றும் அறிக்கை:
            எல்லா விண்ணப்பங்களும் அந்தந்த தொழில்நுட்ப வல்லுநர்களால் பரிசோதனை செய்யப்படுகிறது. (படிவம் 19 ஐ பூர்த்தி செய்து அனுப்பிய பிறகு ) கண்டுபிடிக்கப்பட்ட முறை, தொழில்முறைப் பயன்பாடு போன்ற அனைத்து தகவல்களும் அலசி ஆராயப்படுகின்றன.
            மேலும் அத்துறையின் பழைய கண்டுபிடிப்புகள், புதிய கண்டுபிடிப்பின் தன்மை போன்றவற்றையும் காப்புரிமை அலுவலகத்தில் உள்ள தகவல்களைப் பயன்படுத்தி ஆராய்வர். பின்பு அக்கண்டுபிடிப்பு இந்திய அல்லது சர்வதேச தரத்தில் பார்த்துப் பிரிக்கப்படுகிறது.
காப்புரிமை அளிப்பு மற்றும் தெரியப்படுத்துதல்:
            காப்புரிமைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டபின் அதை விண்ணப்பதாரருக்கு கட்டுப்பாட்டு அலுவலர் தெரியப்படுத்துவார். அதோடு முழுமையான குறிப்பேட்டை இந்திய அரசாங்க அறிக்கையில் பகுதி – III , பிரிவு 2 ன் கீழ் வெளியிடுவார். இது ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை வெளியாகிறது.
காப்புரிமை வழங்க எதிர்ப்பு:
            ஒரு காப்புரிமைக்கு யாரேனும் எதிர்ப்புத் தெரிவிக்க விளைந்தால் 4 மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும். ஒரு மாதம் நீட்டிக்கலாம். இவ்வாறு எதிர்ப்புத் தெரிவிப்பவர் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி அதற்குரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் அவர் எதற்காக, என்னென்ன பண்புகளை எதிர்க்கிறார் என்ற முறையான விளக்கங்கள் கொடுக்க வேண்டும். இந்த விளக்கம் எழுத்து வடிவத்தில் என்னென்ன குறிப்புகளை தெரிவிக்கிறார் என ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். கட்டுப்பாட்டு அலுவலர் இவ்விளக்கம் மற்றும் ஆதாரங்களைப் பார்த்துக் காப்புரிமை அளிப்பு பற்றி முடிவு செய்வார்.
காப்புரிமை அளித்தல்:
            எதிர்ப்பாளரின் தரப்பு நிரூபிக்கப்பட்டால் காப்புரிமை இரத்து செய்யப்படும். விண்ணப்பதாரர் தரப்பு கண்டுபிடிப்பு உறுதி செய்யப்பட்டால் காப்புரிமை வழங்கப்படும். இக்காப்புரிமை விண்ணப்பதாரரின் விருப்பப்படி நேரடியாகவோ அல்லது முத்திரையிடப்பட்ட உறையினுள் வைத்தோ வழங்கப்படும். முத்திரையிடப்பட்ட உறையினுள் வைத்து வழங்க தனி கட்டணம் வசூலிக்கப்படும். இக்கட்டணம் முழுமையான குறிப்பேடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்ட 6 மாதங்களுக்குள் செலுத்தப்பட வேண்டும். இக்காலம் 3 மாதங்கள் நீட்டிக்கப்படும். காப்புரிமை உறையிடப்பட்டு ஒப்படைக்கப்பட்டால் தான் காப்புரிமை பெற்றதாக கொள்ளப்படும். வருடத்திற்கு ஒரு முறை காப்புரிமையைப் புதுப்பிக்க சந்தா செலுத்த வேண்டும்.
உலக அளவில் (சர்வதேச தரத்தில்) காப்புரிமை பெறுவது எவ்வாறு?
            இன்றைய நடைமுறை அளவில் உலக அளவில் காப்புரிமை பெற வழியில்லை.  பொதுவாக நாம் எந்த நாட்டில் பயன்படுத்துகிறோமோ அந்நாட்டில் உள்ள வழிமுறைப்படி காப்புரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும். சில நாடுகளில் ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது வட்ட அளவில் காப்புரிமை பெறுவதற்கான ஐரோப்பிய காப்புரிமை அலுவலகம் அல்லது ஆப்ரிக்க வட்டார அறிவு சார்ந்த காப்புரிமை அலுவலகம் என்ற நிறுவனங்கள் ஆங்காங்கு தோன்றியுள்ளன. இவை அக்குறிப்பிட்ட நாடுகள் / பகுதிகளுக்கான காப்புரிமைகளை வழங்குகின்றன. கூட்டுறவுக் காப்புரிமை உடன்பாடு உலக அளவில் (சர்வதேச தரத்தில்) காப்புரிமைகளை வழங்குகிறது. எனினும் அவை ஒரு நாட்டு காப்புரிமை போலவே பயன்பாடு உடையவை.
இந்தியாவில் உள்ள காப்புரிமை அலுவலகங்கள்
            இந்தியக் காப்புரிமை அலுவலகம் தொழில்துறை ஆவணம் மற்றும் மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வருகிறது. வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்துறை வடிவங்கள் போன்றவற்றிற்கு காப்புரிமை வழங்குகின்றது. தலைமை அலுவலகம் கொல்கத்தா, மும்பை, சென்னை மற்றும் புதுதில்லியில் உள்ளது. அந்தந்தப் பகுதிகளின் காப்புரிமை விண்ணப்பங்களை பரிசீலித்து இவை காப்புரிமை அளிக்கின்றன.
தலைமை அலுவலகம்
கட்டுப்பாட்டு அலுவலர் காப்புரிமை, வடிவங்கள் மற்றும் வர்த்தக
குறியீடுகள்,
பழைய CGO கட்டிடம்,
101, M.K.சாலை,
மும்பை – 400 002.
இந்தியா
தொலைபேசி: +91 – 22 – 201 7368
+91 – 22 – 203 9050
தொலைப்பிரதி: +91 – 22 – 205 3372
மின்னஞ்சல்: http://www.patentoffice.nic.in
மண்டல காப்புரிமைக் அலுவலகங்கள்
கட்டுப்பாட்டு அலுவலர் காப்புரிமை, வடிவங்கள் மற்றும் வர்த்தக குறியீடுகள்,
புத்திக் சம்படா பவன்,
ஏன்டாப் மலை அருகில்,
தலைமை அஞ்சல் அலுவலகம்,
S.M.சாலை,
ஏன்டாப் ஹில்,
மும்பை – 400 037
தொலைபேசி:            022 – 241 23311
தொலைப்பிரதி:        022 – 241 23322
வலைதளம்:               http:// www.ipindia.nic.in
காப்புரிமை அலுவலக முகவரிகள்
  1. உதவி / இணை கட்டுப்பாட்டு அலுவலர் காப்புரிமை, வடிவங்கள்
  2. காப்புரிமை அலுவலகம், அறிவுசார்ந்த  உரிமை அலுவலக கட்டிடம், CP – 2 துறை V உப்பு ஏரி நகர், கொல்கத்தா – 700 091 தொலைபேசி :  23671945, 1946, 1987 தொலைப்பிரதி: 033 – 2367 – 1988 மின்னஞ்சல்: kolkatta-patent@nic.in
  3. உதவி / இணை கட்டுப்பாட்டு அலுவலர் காப்புரிமை, வடிவங்கள்
  4. காப்புரிமை அலுவலகம், அறிவுசார்ந்த  உரிமை அலுவலக கட்டிடம், GST சாலை, கிண்டி சென்னை – 600 032 தொலைபேசி :    044 – 22502081 – 84 தொலைப்பிரதி:  044 – 22502066 மின்னஞ்சல்: chennai-patent@nic.in
  5. உதவி / இணை கட்டுப்பாட்டு அலுவலர் காப்புரிமை, வடிவங்கள்
  6. காப்புரிமை அலுவலகம், அறிவுசார்ந்த  உரிமை அலுவலக கட்டிடம், பிளாட் நெ. 32, துறை (பிரிவு) – 14 டுவார்க்கா, புதுதில்லி – 110 075 தொலைபேசி :    011 – 28031032, 28031039, 28031044 தொலைப்பிரதி:  011 – 28031883 மின்னஞ்சல்: delhi-patent@nic.in
  7. உதவி / இணை கட்டுப்பாட்டு அலுவலர் காப்புரிமை, வடிவங்கள்
  8. காப்புரிமை அலுவலகம் (வடிவுப் பிரிவு), அறிவுசார்ந்த  உரிமை அலுவலக கட்டிடம், CP – 2 துறை V உப்பு ஏரி நகர், கொல்கத்தா – 700 091 தொலைபேசி :  23671945 – 46, 1987 தொலைப்பிரதி: 033 – 23671988 மின்னஞ்சல்: kolkatta-patent@nic.in
குறிப்பு:  வடிவத்திற்கான விண்ணப்பப் படிவங்களை சென்னை, மும்பை, புதுதில்லி ஆகிய மூன்றில் எந்த ஒரு அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளப்படும்.
படிவங்கள்:
படிவ எண்பிரிவும் விதிகளும்தலைப்பு
1பிரிவு 5 (2), 7, 54, 135 மற்றும் விதி 39காப்புரிமை வழங்கும் விண்ணப்பம்
1 Aபிரிவு 7 (1 A ) ; விதி 20 (1)கூட்டுறவுக் காப்புரிமை உடன்பாட்டின் கீழ் சர்வதேச காப்புரிமை பெறும் விண்ணப்பப் படிவம்
2பிரிவு 10 ; விதி 13தற்காலிக / முழுமையான குறிப்பேடுகள்
3பிரிவு 18 ;  விதி 12அறிக்கை மற்றும் எடுத்துக் கொள்ளல்
4பிரிவு 8 (2), 9 (1), 25 (1),       28 (4), 43 (3), 53 (3);
விதி  12 (4), 13 (6), 24 (5),
56 (1), 73 (3) அல்லது 130
கால நீட்டிப்பிற்கு விண்ணப்பிக்கும் படிவம்
5பிரிவு 10 (6); விதி 13 (6)கண்டுபிடிப்பை அறிவித்தல்
6பிரிவு 20 (1), 20 (4), 20 (5);
விதி 34 (1), 35 அல்லது 36
விண்ணப்பதாரரின் வாரிசு உரிமையில் ஏதேனும் மாற்றம் இருந்தால் தெரிவித்தல்
7பிரிவு 25; விதி 55காப்புரிமைக்கு எதிர்ப்பு தெரிவித்தல்
8பிரிவு 28 (2), 28 (3) அல்லது
28 (4) மற்றும் 66,67,68
கண்டுபிடிப்பாளரின் பெயரை அப்படியே குறிப்பிட வேண்டுதல்
9பிரிவு 43 மற்றும் விதி 73 (1)காப்புரிமை முத்திரையிட்டு வழங்க கோருதல்
10பிரிவு 44 மற்றும் விதி 75காப்புரிமையில் திருத்தம் கோரும் விண்ணப்பம்



Friday, April 20, 2012

உலகிலேயே பிளாட்டினம் உற்பத்தியில் எந்த நாடு முதலிடம் வகிக்கிறது

பிளாட்டினம் உற்பத்தியில் 80 சதவீதம் தென் ஆப்ரிக்காவிலிருந்து உற்பத்தியாகிறது. ரஷ்யா மற்றும் கனடாவும் பிளாட்டினம் உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கிறது.



பிளாட்டினம் தங்கத்தை விட பலமடங்கு விலை அதிகம். பிளாட்டினம் (Platinum) என்பது Pt என்னும் வேதியியல் குறியீடு கொண்ட ஒரு வேதியியல் தனிமம்.


பிளாட்டினம் தங்கம் போலவே விலை உயர்ந்த நகை அணிகள் செய்யப் பயன்படுகின்றது. மின் கருவிகளில் உறுதியான மின்னிணைப்புதரும் மின் முனைகளாகவும், தானுந்துகளில் இருந்து வெளியேறும் கழிவு வளிமங்களில் உள்ள, சுற்றுச் சூழலுக்குத் தூய்மைக்கேடு விளைவிக்கும் கார்பன் மோனாக்ஸைடு (CO), நைதரசன் ஆக்சைடு போன்ற வளிமங்களை நச்சுத்தனமை குறைந்த வளிமங்களாக மாற்றவும் பிளாட்டினம் பயன்படுகின்றது.


பிளாட்டினம் மிகவும் அரிதாகக் கிடைக்கும் ஒரு தனிமம். நில உருண்டையின் மேல் ஓட்டில் 0.003 ppb (பில்லியன் பகுதியின் பங்குகள்) மட்டுமே உள்ளது. தங்கத்தைக் காட்டிலும் 30 மடங்கு அரிதானது.

தென் ஆப்பிரிக்காதான் உலகின் மிகக் கூடுதலான அளவில் பிளாட்டினம் உற்பத்தி செய்த நாடு. உலக உற்பத்தியில் ஏறத்தாழ 80% தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தது. அடுத்ததாக ரஷ்யாவும் கனடாவும் நிற்கின்றன. ஜூலை 2010 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பிளாட்டினம் இருப்பதாக கண்டரியபட்டது.

இயற்கையில் கிடைக்கும் பிளாட்டினம்மும் பிளாட்டினம்-மிகுந்துள்ள கலவைப்பொருள்கள் பற்றியும் நெடுங்காலமாக மக்கள் அறிந்திருந்தார்கள். கொலம்பசின் காலத்திற்கு முன்னமே ஐக்கிய அமெரிக்க பழங்குடியினர் பிளாட்டினத்தைப் பற்றி அறிந்திருந்தனர்.

ஆனால் ஐரோப்பிய எழுத்துக்களில் 1557 இல்தான் பிளாட்டினத்தைப் பற்றிய செய்தியை இத்தாலியராகிய ஜூலியஸ் சீசர் ஸ்காலிகர் (Julius Caesar Scaliger) (1484–1558) என்பவர்தான் முதன்முதலாக பனாமா, மெக்சிக்கோ ஆகிய இடங்களில் கிடைப்பதைப் பற்றியும் அது எசுப்பானியருடைய தொழிற்கலை அறிவால் உருக்கமுடியாமல் இருந்ததாகக் குறிப்பிடுகின்றார்(up until now impossible to melt by any of the Spanish arts").

Thursday, March 1, 2012

தெரிந்து கொள்ளுங்கள்,

கடப்பைக் கல்

கடப்பை பகுதியில் இயற்கையாகப் பலகை வடிவில் கல் கிடைத்ததால் இதுக்குக் கடப்பைக் கல் என்று பெயர் வந்தது.  

பென்சிலின் 

பென்சிலின் என்பது மருந்து. இது ஜீனல் பென்சிலியம் என்ற காளான் வகையிலிருந்து தயாரிக்கப்படுவதால் பென்சிலின் என்று பெயர் வந்தது.

லவ் ஆல்

டென்னிஸ் விளையாட்டில் 0 என்பதைக் குறிக்க லவ்என்று சொல்வார்கள். பிரெஞ்சு மொழியில்லஃப்என்றால் முட்டை என்று பொருள். முட்டை வடிவில் உள்ள பூஜ்ஜியத்தைக் குறிக்கலஃப்என்று அழைத்து வந்தனர். பின்னர் அதுவே லவ் என்றாகிவிட்டது.
காக்கி

பழுப்புஅடர்த்தியான நிறத்தை காக்கி என்று குறிப்பிடுகிறோம். இந்தச் சொல் உருது மொழியிலிருந்து வந்தது. அந்த மொழியில் காக்கி என்றால் புழுதியடைந்தஎன்று பொருள். காக்கி வண்ணத்திலிருந்த பொருளைக் கண்ட உருதுக்காரர்கள் காக்கிஎன்று அழைக்க, அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கும் அது பரவிவிட்டது.

ரோபோட்

செக் நாட்டு 1923-ல் ரோசம்ஸ் யுனிவர்சல் ரோபோட்ஸ்என்ற நாடகத்தைஎழுத்தாளர் கரேல்சி சேபல் எழுதினார். அதில் வரும் விஞ்ஞானி ஒருவர் மனிதனைப் போல் வேலைகளைச் செய்யும் இயந்திர என்று பொருள்.மனிதனை உருவாக்கினார். செக் மொழியில் ரோபோடாஎன்றால் வேலை செய்பவன் இதிலிருந்துதான் ரோபோட்என்ற ஆங்கிலச் சொல் உருவானது.  

பொது அறிவு

என்சைக்ளோபீடியா என்பது கிரேக்க மொழிச் சொல். என்சைக்ளோபீடியா என்றால் கிரேக்க மொழியில் பொது அறிவு என்று பொருள். 16-ம் நூற்றாண்டு முதல் ஆங்கிலேயர்கள் இந்தச் சொல்லைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். 1751-ம் ஆண்டு உலகப்புகழ் பெற்ற பிரிட்டானிகா என்சைக்ளோபீடியா வெளியானது.

அழகான தவளைகள்!
அமேசான் மழைக்காடுகளில் பல வண்ணத் தவளைகள் வசிக்கின்றன. ஆரஞ்சு, பச்சை, மஞ்சள், சிவப்பு, நீலம், கறுப்பு என்று ஆழ்ந்த நிறங்களில் கண்களைக் கவரக்கூடிய வகையில் காணப்படுகின்றன. இவை பார்க்க அழகாக இருந்தாலும் மிகவும் ஆபத்தானவை. இந்தத் தவளைகளின் முதுகில் ஏராளமான நச்சுப் பைகள் உள்ளன. அருகில் சென்றால் நச்சைப் பீய்ச்சி அடித்துவிடும். அமேசானில் வாழும் பழங்குடி மக்கள் இந்த நச்சில் அம்பைத் தேய்த்து, வேட்டையாடுகிறார்கள்.
 நாற்றமடிக்கும் பறவை

அமேசான் காடுகளில் வாழ்கிறது நாற்றமடிக்கும் பறவை (Stinky Bird). இந்தப் பறவைக்கு அருகில் எந்த விலங்கும் செல்ல முடியாது. அவ்வளவு நாற்றம் அடிக்கும். இதன் மூலம் எதிரிகளிடமிருந்து சுலபமாகத் தப்பி விடுகிறது. எப்பொழுதும் தனியாகவே வாழும். இலைகளை மட்டுமே உணவாக உட்கொள்ளும். 

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites