இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, January 26, 2012

புறா வளர்ப்பு,நன்றி மக்கள் டிவி

தீவனச் செலவு, பராமரிப்பு இல்லை.குஞ்சுப் புறாக்களுக்குத்தான் கிராக்கி ,பொழுது போக்குடன் கூடிய வருமானம்.விவசாயம் வில்லங்கமாகும் போது, விவசாயிகளுக்குக் கைகொடுத்து கரை சேர்ப்பது.. கால்நடை வளர்ப்புத்தான். ஆனால், அதிலும் முதலீடு, நோய்த் தாக்குதல், தீவனச் செலவு என சிக்கல்கள் இல்லாமல் இல்லை. ஆனால், மிகக்குறைந்த முதலீடு, தீவனச் செலவு, நோய்த் தாக்குதல் என எந்தச் சிக்கலும் இல்லாமல்.. பொழுதுபோக்குடன், வருமானத்திற்கும் வழிவகை செய்கிறது புறா வளர்ப்பு!நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகிலுள்ள குஞ்சாம்பாளையம், சீதாபாரதி, பல ஆண்டுகளாக புறா வளர்ப்பில் ஈடுபட்டு வருபவர். அவரிடம் இதைப் பற்றிக் கேட்ட போது.. கண்களில் உற்சாகம் படபடக்கப் பேசத் தொடங்கினார்.

எங்களுக்குனு இருக்கிற ஒரு ஏக்கர் நிலத்தில், மாட்டுக்குத் தேவையான பயிர், பச்சையை மட்டும் விதைப்போம். மத்தப்படி விவசாயத்துல பெரிதாக வருமானம் இல்லை. ரொம்ப வருடமாக நாங்க செய்துகிட்டு வர்ற புறா வளர்ப்புதான் ஓரளவு கைக்கொடுக்குது. ஆரம்பத்தில் பொழுதுபோக்கா பழைய பெட்டியில் இரண்டு ஜோடியை விட்டு வளர்த்தோம். அது இன்றைக்கு ஒரு தொழிலா வளர்ந்து நிற்கிறதுஎன்ற சீதாபாரதி, புறா வளர்ப்பு தொடர்பான அனைத்து விஷயங்களையும் விவரித்தார்.
கோழி, முயல், காடை வளர்ப்பில் வருமானம் அதிகம். என்றாலும், அதற்கு ஏற்ப கொட்டகை, மின்சாரம், தண்ணீர், தீவனம் என செலவுகளும் அதிகமாகிக் கொண்டே இருக்கும். அதே போல ஒவ்வொரு சீசனுக்கும் ஏதாவது ஒரு நோய் தாக்குதல் இருக்கும். ஆனால், புறா வளர்ப்பில் இது போன்ற எந்தத் தொல்லைகளும் இல்லை. புறாக்கள் தங்குவதற்கு மட்டும் ஒரு கூண்டு ஏற்பாடு செய்தால், போதும். மற்றபடி, எந்தத் தொல்லையும் வைக்காமல் அவை வெளியே சென்று இரையைத் தேடிக்கொண்டு, திரும்பிவிடும்.தீவனச் செலவே இல்லை! சிறிய அளவில் நான்க அல்லது ஐந்து ஜொடிகளை மட்டும் வளர்க்க நினைப்பவர்கள், பழையப் பெட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறைந்தது 50 ஜோடிகளை வளர்க்க நினைப்பவர்கள் 10 அடி நீளம், 6 அடி அகலம், ஆறடி உயரத்தில் ஓர் அறையைக் கட்டிக்கொள்ள வேண்டும். சுக்கான் அல்லது செம்மண்ணைக் குழைத்துதான் எழுப்ப வேண்டும்.மண்ணைக் குழைத்து சுவர் எழுப்பும் போது, இடையில் செங்கல் அல்லது கருங்கல் வைப்பதற்கு பதிலாக மண்பானைகளை நெருக்கமாக வைத்து கட்ட வேண்டும். இந்தப் பானைகளின் வாய்ப்பகுதி, அறைக்கு உள்பக்கமாக இருக்க வேண்டும். இதில்தான் புறாக்கள் வசிக்கும்.வாசலுக்கான இடைவெளியைத் தவிர, வேறு எந்தப் பக்கமும் இடைவெளி இல்லாமல் வெளிப்புறச் சுவற்றை சிமெண்ட் வைத்து வழவழப்பாக பூசிவிட வேண்டும். வெளிச்சுவர் வழவழப்பாக இருந்தால்தான் விஷப்பூச்சிகள் சுற்றின் மீது ஏறி அறைக்குள் வராது. அதே போல அறையின் கீழ்பகுதிகளிலும், விஷப்பூச்சிகள் நுழையாதவாறு இடைவெளி இல்லாமல் அடைத்து விட வேண்டும்.இரை தேடி, வெளியே போய் வருவதற்கு வசதியாக. சுவற்றில் ஐந்தரை அடி உயரத்தில், வீடுகளில் வெண்டிலெட்டர் வைப்பதைப் போல, சிறியதாக சதுர வடிவில் இரண்டு பக்கமும் இடைவெளி விட வேண்டும். கூரைக்கு ஓலை, தகரம், கான்கிரீட் என வசதிக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். புறாக்களை அறைக்குள் விட்டுவிட்டால், ஜோடிஜோடியாக பானைகளுக்குள் சென்று அடைந்து கொள்ளும். மழைக் காலத்தில் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படும் போது, மட்டும் கம்பு, சோளம் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். பருவம் வந்தவுடன் பெண் புறா முட்டையிடும். ஒரு பெண்புறா, இரண்டு முட்டையிட்டவுடன் அடைக்கு உட்கார்ந்து விடும். அருகிலுள்ள மற்றொரு பானையில் ஆண் புறா வசிக்கும்.இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், முட்டையைக் கையால் தொடக் கூடாது, அப்படி தொட்டால் அந்த முட்டை பொறிக்காது. அடை உட்கார்ந்த 28 நாட்களில் குஞ்சு பொறிக்கும். 15 நாட்களில் தாயிடமிருந்து குஞ்சுகளை தனியாகப் பிரித்து விட வேண்டும். அப்போது தான், அடுத்த முப்பது நாட்களில் மறுபடியும் தாய்ப்புறா முட்டை போடத் தொடங்கும். ஒரு பெண்புறா மூலமாக ஓராண்டுக்கு குறைந்தது 10 குஞ்சுகள் வரை கிடைக்கும். ஆண்டுக்கு ரூ 50 ஆயிரம்! வியாபார ரீதியா புறா வளர்க்க நினைப்பவர்கள், குஞ்சு பொறித்த 15 –ம் நாளில் குஞ்சுகளைப் பிரித்து, தனியாக வைத்து தீவனம் கொடுத்து வளர்த்தால்.. கூடுதல் எடை கிடைக்கும். புறா வளர்ப்பைப் பொறுத்தவரை இளம் குஞ்சுகளுக்குத்தான் கிராக்கி. 25 நாள் வயதுள்ள குஞ்சுகள் ஒரு ஜோடி 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. இளம் குஞ்சுகளை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.இளம் குஞ்சுகளின் ரத்தத்தை மூட்டுவலி உள்ள இடத்தில் தடவினால், வலி குணமாகிவிடும் என்று அதற்காகவும் குஞ்சுகளை வாங்கிச் செல்கிறார்கள். அதே போல குஞ்சுகளில்தான் கறி அதிகமாக இருக்கும். பெரிய புறாவில் எலும்பு மட்டும் தான் இருக்கும். 25 நாள் வயதுள்ள குஞ்சு 300 முதல் 400 கிராம் எடை இருக்கும். குஞ்சுகளின் கறியை பக்கவாதம், மூலம் மாதிரியான நோய்களுக்கு மருந்தாக சிபாரிசு செய்கிறார்கள். பெரிய புறா ஜோடி 60 ரூபாய்க்குதான் விற்பனையாகும்.ஒரு குஞ்சு 100 ரூபாய் வீதம் விற்பனை ஆனாலே .. ஒரு ஜோடிப் புறா மூலமாக ஆண்டுக்கு 1,000 ரூபாய் கிடைக்கும். 50 ஜோடிகள் இருந்தால், அதன் மூலமாக 50 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். முதலீட்டைப் பொறுத்தவரை அறை கட்டுவதற்கு அதிகபட்சம் ரூ பத்தாயிரம்
Dove hatching eggs 
நான் வேலை பார்க்கும் ஆபீஸ் இருப்பது ஒரு கட்டிடத்தின் ஒன்பதாவது மாடியில். கான்க்ரீட் காடான சென்னையில் தங்குவதற்கு மரங்கள் இல்லாத புறாக்கள் அவ்வப்போது எங்கள் ஆபிசில் தஞ்சம் புகும். பெரும்பாலும் ஜன்னல் ஓரத்தில் இல்லை என்றால் பால்கனியில் கூட்டமாக அமர்ந்திருக்கும். எங்கள் ஆபீஸ் பால்கனியில், ஏழு ஏசி அவுட் டோர் யூனிட் பொருத்தப்பட்டிருக்கும்.  பிரிடிஷ்காரன் கம்பெனி என்பதால், பறவை காய்ச்சலுக்கு பிறகு நிறைய பாதுகாப்பு வழிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டன. அதில் ஒன்று ஏசி அவுட் டோர் யூனிட் பக்கம் எந்த பறவையையும் அண்ட விடக்கூடாது. அது இடும் எச்சங்கள் ஏசி காற்றில் கலந்து வேலை பார்ப்பவர்களுக்கு கெடுதல் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதும் ஒரு காரணம்.

ஒரு நாள் பால்கனியை திறந்து பார்க்கும் பொழுது, சட சடத்து பறந்தது ஒரு புறா. கூடொன்று கட்டும் முயற்சியில்  இருந்தது அந்த புறா. பெயருக்குத்தான் அது கூடே தவிர, அது சுள்ளிகளின் குவியல் போலிருந்தது. அன்றைய வேலையில், அதை சுத்தம் செய்ய சொல்ல மறந்து போனேன். மறு நாள் பார்கையில் அந்த சுள்ளி குவியலுக்கு மத்தியில் ஒரு முட்டை. ரெண்டு நாள் கழித்து மற்றொரு முட்டை இட்டிருந்தது. பால்கனி கதவை திறக்கும் பொழுது எல்லாம் ஒரு புறா இரு முட்டைகளின் மேல் தவம் செய்வது போல் ஆடாமல் அசையாமல் அமர்ந்திருக்கும். மற்றொரு புறா ஆண் புறாவாக இருக்கும், அதற்கு துணையாக, காதலாக பக்கத்தில் காத்திருக்கும்.


அந்த ஜோடி புறாக்கள் இப்பொழுது எங்கள் அலுவலகத்தின் விருந்தாளிகள். அதை கண்காணிக்க முடிவு செய்து செய்து எங்கள் அலுவலகத்தில் வேறொரு இடத்தில பொருத்தி இருந்த செக்யூரிட்டி காமிராவை பால்கனியில் பொருத்தினோம்(டெக் டீமில் இருந்தால் இது ஒரு வசதி). அது ஒரு மோசன் டிடக்ட் காமிரா, எதவாது அசைந்தால் மட்டும் வீடியோ  எடுக்கும். புறாவின் ஒவ்வொரு அசைவையும் படமெடுத்தது. அலுவலகத்தின் அன்றாட வேலையில் புறா ஜோடியை வேடிக்கை பார்ப்பதும் சேர்ந்து கொண்டது (ஆபீஸ்ல வேலை பார்த்துட்டா மட்டும்). அலவலகத்தில் பெருக்கி துடைக்கும் அம்மா காலையில் வந்தவுடன் இன்னா சார், புறா குஞ்சு பொரிச்சிருச்சா, எதுனா படம் இருந்தா போட்டு காட்டேன் என்று கேட்கும் அளவுக்கு ஆகிவிட்டது.
 அடை காக்கும் புறா எப்படி இரை தேடும், ஆண் புறா கொண்டு வந்து கொடுக்குமா என்ற கேள்விக்கு வீடியோ விடை அளித்தது. புறா ஆணாதிக்கவாதி அல்ல. இரவு முழுதும் அடைக்காக்கும் பெண் புறா காலையில் ஆண் புறாவிடம் அந்த வேலையை கொடுத்துவிட்டு இரை தேட சென்று விடுகிறது. மாலை வரை ஆண்  புறா அடைகாக்கிறது. குஞ்சு பொரிக்க பதினஞ்சிலிரிந்து பதினெட்டு நாட்கள் ஆகிறது. குஞ்சு பொரித்தவுடன் மறுபடியும் தாயும் தந்தை புறாவும் மாற்றி மாற்றி குஞ்சுகளை காக்கின்றன. குஞ்சுகள்  பெற்றோரின் சிறகின் கதகதப்பில் உறங்கும் அழகு அற்புதம்.  இன்னும் ஒரு மாதம் இருக்கிறது அந்த குஞ்சுகள் தன் சிறகை விரித்து பறக்க.


 

மேலும் தகவல்கள்:-
# பெரும்பாலும் நகரங்களில் காணப்படுவது பாறை புறா (Rock dove)
# ஆண் புறாக்கள் கூட்டை கட்டி விட்டு, பெண் புறாவை அழைக்கும்
# பெண் புறா இரண்டிலிருந்து மூன்று முட்டைகள் இடும்.
# இரண்டு புறாக்களும் மாற்றி மாற்றி அடை காக்கின்றன
# குஞ்சு பொரிக்க 15 இல் இருந்து 18 நாட்கள் ஆகின்றன
# பிறக்கும் போது குஞ்சுகள் மஞ்சள் நிறத்தில் சிறகுகள் இன்றி இருக்கும்.
# குஞ்சு பிறந்தவுடன் முட்டை ஓடுகளை தாய்ப்புறா அப்புறப்படுத்தி கூடை சுத்தம் செய்கிறது.
# இந்த நேரத்தில் கண் திறக்காத குஞ்சுகளை தாய் புறாவும் தந்தை புறாவும் மாற்றி மாற்றி அரவணைத்து நிற்கின்றன.
# குஞ்சுகள் நன்கு வளரும் வரை, அவற்றிற்கு  தன் இரைப்பையில் சுரக்கும் பாலை அளிக்கின்றன இரு புறாக்களும்.
# வளரும் குஞ்சுகள் பறப்பதற்கு நான்கில் இருந்து ஆறு வாரம் ஆகிறது.
# குஞ்சுகள் பறக்க ஆரம்பித்தவுடன், சிறிது காலம் உணவு அளிக்கும் புறாக்கள், பின்பு அதனை விட்டு விலகிவிடும்.
# இந்த வகை புறாக்கள் 5 இல் இருந்து 15 வருடம் வரை உயிர் வாழும்.
# அஞ்சு மாதம் ஆகும் குஞ்சுகள் இணையை தேட ஆரம்பித்துவிடும்.
# மறுபடியும் தொடரும் முதலில் இருந்து.


.

மாஸ்கான் சாவடி வளர்ப்பு பிராணிகளின் சந்தை
நம்மில் பலருக்கு நாய், முயல், பூனை, புறா பறவை என வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம் இருக்கும். சிலர் புலிக்குட்டிகளையும், யானைக் குட்டிகளையும், பாம்புகளையும் செல்லமாக வளர்த்து வருவதை கேள்விப் பட்டிருக்ருப்போம். நான் கடற்கரை தோட்டத்தில் வருடக் கணக்கில் ஒரு ஆமையை வளர்த்து வந்தேன். எஸ். முகம்மது ரஃபி அந்தக் கதையை பிறகு சொல்லுறேன். இப்போது மேற்கொண்டு படியுங்கள்.

சிலர் தங்களது ராசிக்காகவும், கௌரவத்திற்காகவும் வளர்ப்பு பிராணிகளை வளர்த்து வருகின்றனர். மனதிற்கு மகிழ்ச்சியையும் பொழுது போக்குக்கு உற்ற துணையாக இருக்கின்ற செல்லப் பிராணிகளுக்கென்றே ஒரு சந்தை கூடுகிறது. அதுவும் நம்ம சென்னையில்....

சென்னை மண்ணடிப் பகுதியில் அமைந்துள்ளது. ‘‘மாஸ்கான் சாவடி’’ இங்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 6 மணியிலிருந்தே சந்தை கூட தொடங்குகிறது. விதவிதமான குருவிகளையும், புறாக்களையும் கொண்டு வருகின்றனர். சிலர் தத்தமது வீடுகளில் வளர்க்கும் நாய், முயல், கோழி போன்ற வளர்ப்பு பிராணிகளை கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ள கூண்டுப் பெட்டிகள், வளர்ப்பு பிராணிகளுக்கு தேவையான உணவு வகைகள் என எல்லாம் ஒரு சேர கிடைப்பதும், விலையும் மலிவாக இருப்பதுமே இங்கு கூட்டம் அதிகமாக வர காரணம் என்கிறார் இப்பகுதிவாசி ஒருவர்.
புறாக்கள் மூலம் தூதுவிட்டது அந்த காலம். இப்போ புறா பந்ததயம் தான் பிரபலம் என்கிறார் கண்ணன். பல நிறங்களிலான   புறாக்கள் தான் பிரபலம் என்கிறார் கண்ணன். பல நிறங்களிலான புறாக்கள் வளர்க்கும் இவர், பந்தயத்திற்கு பயன்படுத்துகிற வகையில் புறாக்களை பழக்கி வருகிறார். நான் 12 வயசிலேயிருந்தே புறா வளர்த்து வர்றேன். என்னோட புறா பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்கியிருக்கு. முதல்ல, வீட்டுல புறா வளர்க்க சம்மதிக்கல, நான் பிடிவாதமாக இருந்ததால பிறகு வழி இல்லாம ஓ.கே சொல்லிட்டாங்க. இப்போ புறா மட்டுமல்ல, சேவலும் வளர்க்கிறேன். நல்ல ரேட் கிடைத்தால் கையில் இருக்கிறதை வித்துட்டு, வேற அயிட்டங்களா வாங்கி வளர்ப்பேன்.

நீண்ட தெருப்பகுதியில், வழி நெடுகிலும் வளர்ப்பு பிராணிகளை கூண்டிகளில் அடைத்தும், கைகளில் தூக்கி காட்டிய படியும், வாடிக்கையாளர்களை கூவி கூவி அழைக்கின்றனர். சிறுவர்கள், இளைஞர்கள் பெண்கள் என செல்லப் பிராணிகளை விற்பனை செய்பவர்கள் தங்களின் பகுதி நேர தொழிலாகவே இதை பார்க்கின்றனர்.
வார வாரம் சந்தையில் ஆஸ்திரேலியா லவ் பேர்ட்ஸ், ஜப்பான் காடை, மைனா, ஈமுக் கோழி என புதுவரவுகள் வந்துக் கொண்டிருக்கின்றன. சென்னை மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் வந்து வளர்ப்பு பிராணிகளை வாங்கி செல்கின்றனர்.

காலையில் கூடி நண்பகல் 12 மணிக்குள் கலைந்து போகிற இந்த சந்தையில் நடக்கும் நில மணி நேரங்களிலான வியாபாரம் சில லட்சங்களை தொட்டுவிடுகிறது. அங்கிருக்ந்த பெரியவர் கோபால் நம்மிடம் இந்த பகுதியில் சந்தை வந்து அறுபது வருஷத்துக்கு மேலாகுது. முன்னெல்லாம் பல வகையான குருவி, பறவைகள் வரும் அதப்பார்க்கவே நல்லா இருக்கும். நானும் கொஞ்ச காலத்திற்கு முன்னாடி ஆசையா ஒரு கிளி வளர்த்தேன். கி.கி.கின்னு கத்திக்கிட்டு என்னையே சுத்தி சுத்தி வரும். ஒரு நாள் அதுக்கு என்ன நோய் வந்ததுன்னு தெரியல. ரெண்டு நாளா எதுவும் சாப்பிடாமல் செத்துப் போச்சு.... இப்பவும் என்னோட செல்லக்கிளி என் கண்ணுக்குள்ளேயே இருக்கு என பிளாஷ்பேக் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
அடுத்து நாம் இந்த சந்தையில் நரிக்குறவரான பிப்ரவரி. ‘சாமி நான், பிப்ரவரி மாசம் பிறந்தேனா... அதனால எனக்கு அந்த பேரை வச்சுட்டாங்க..’ என தன் பெயர் காரணம் கூறியவர், நாங்க மணலி பகுதியில் இருக்கிறோம்ங்க, குடியிருக்க வீடு இல்லீங்க, காட்டுக்கு போயி வேட்டையாடக் கூடாதுன்னு பாரஸ்ட் காரங்க தொந்தரவு பண்றாங்க. முன்பெல்லாம் நெறையா குருவிங்க வரும். ஆனால் இப்போ அது மாதிரி கெடையாது. எங்களையும் பாரஸ்ட்காரங்க காட்டுக்கு விடுறதில்லை.

இப்போ நாங்க கவட்டை, பாசிமணி, பிளாஸ்டிக் பொருள் வியாபாரம் நெஞ்சுதான் பொழப்பு நடத்துறோம். எங்களுக்கு தெரிஞ்சது காட்டுத் தொழில்தான். அதையும் விட்டுட்டு வந்து கஷ்டப்படுகிறோம். அரசு எங்களுக்கு மாற்றுத் தொழிலை நெஞ்சு தந்தா பரவாயில்லை என தனது ஆதங்கத்தை கொட்டினார். இந்த தொழில் செய்பவர்களுக்கு போலீஸ் செய்யுற கொடுமை சொல்லி மாளாது என நம்மிடம் வாய் திறந்து பேசினார் நமச்சியவாயம்.

இங்கு பல பகுதியிலேயிருந்து கோழி, குருவிகளை கொண்டு வந்து விற்கிறாங்க. எல்லாம் வீட்டுலயே வளர்த்து எடுத்து வர்றாங்க. ஆனா போலீஸ் இதையெல்லாம் விற்க கூடாதுன்னு அள்ளிட்டு போயிடுது. காசு கொடுத்தா கண்டுக்கமாட்டாங்க. வியாபாரம் இல்லாம காசு கொடுக்க முடியாட்ட கேஸ் போடுறாங்க. இதை தடுத்து நிறுத்த சொல்லுங்க என வேண்டுகோள் வைத்தார்.

சிறு குருவிகளையும், பறவைகளையும் காண்பதே அரிதாகி வரும் இக்காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் காணப்படும் இப்பிராணிகளை பெருகச் செய்வதும், வளர்ப்பு பிராணிகளை வளர்ப்போருக்கு முறையான அனுமதி வழங்குவதும் அரசின் கடமை

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites