இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label பொம்மை தயாரிப்பு. Show all posts
Showing posts with label பொம்மை தயாரிப்பு. Show all posts

Wednesday, November 27, 2013

பழைய பொம்மை... புது மெருகு

படித்தது எம்.பி.ஏ. பிடித்தது பொம்மை சென்னையில் உள்ள ராஜேஸ்வரி மோகனின் வீடு, விதம் விதமான பொம்மைகளால் நிரம்பியிருக்கிறது. ‘‘மத்தவங்களுக்கெல்லாம் வருஷத்துல பத்து நாட்கள் கொலுன்னா, எங்க வீட்டுல 365 நாட்களும் கொலுதான்’’ என்கிற ராஜேஸ்வரி, பழைய பொம்மைகளுக்கு புது பெயின்ட் அடித்து, உடைசல், விரிசல்களை சரிப்படுத்தித் தருகிறார்.Old toy ... New antiquing!

‘‘எம்.பி.ஏ படிச்சிருக்கேன். தனியார் கம்பெனியில வேலை. வருடம் தவறாம கொலு வைக்கிறது எங்க வீட்ல வழக்கம். கல்யாணத்துக்கு முன்னாடியே  எங்கம்மா கொலு வைக்கிறப்ப, அதுல உள்ள பழைய பொம்மைகளை எடுத்து, பெயின்ட் பண்ணிக் காய வச்சுக் கொடுக்கிறது வழக்கம். அந்த வயசுல  விளையாட்டா பண்ணின விஷயம் அது. பெயின்ட், பிரஷ் பத்தி அதிகம் தெரியாது. கல்யாணமாகி மாமியார் வீட்டுக்கு வந்த பிறகும் கொலு வைக்கிறது  தொடர்ந்தது. அம்மா, மாமியார்னு ரெண்டு பேரும் கொடுத்த சில பொம்மைகளுக்கு சென்டிமென்ட்டலான அட்டாச்மென்ட் உண்டு. 

புதுசு மாதிரிக் காட்ட அந்த பொம்மைகளை பெயின்ட் அடிச்சு வைப்பேன். கொலுவுக்கு வர்ற எல்லாரும் பொம்மைகளைப் பத்தி விசாரிக்கத்  தவறினதில்லை. ‘உங்க வீட்டு பொம்மைகள் மட்டும் எப்படி, எப்போதும் புதுசு போலவே இருக்கு’ன்னு ஆச்சரியப்பட்டாங்க. பெயின்ட் பண்ணின  விஷயத்தைச் சொன்னதும், அவங்கவங்க வீட்டு பொம்மைகளையும் அப்படிப் புதுசு போல மாத்திக் கொடுக்கச் சொல்லிக் கேட்டாங்க. 

எந்த மாதிரி பொம்மைகளுக்கு எந்த மாதிரி பெயின்ட் உபயோகிக்கலாம்னு முறைப்படி கத்துக்கிட்டு செய்ய ஆரம்பிச்சேன். பெயின்ட் பண்ணும்போதே,  பொம்மைகளோட சின்னச் சின்ன விரிசல்களையும் சரி செய்யக் கத்துக்கிட்டேன். இப்ப நவராத்திரி ஆரம்பிக்கிறதுக்கு ரெண்டு, மூணு மாசங்களுக்கு  முன்னாடியே நான் பிசி!

இப்படி ரீபெயின்ட் பண்ற பொம்மைகள், ஆறேழு வருஷங்களுக்கு மெருகு குலையாம அப்படியே இருக்கும். இன்னிக்கு புது பொம்மைகளோட விலை  எக்குத் தப்பா எகிறியிருக்கு. விலை ஒரு பக்கம்னா, இன்னிக்கு வர்ற பொம்மைகளோட தரமும் சுமார்தான்.

பெயின்ட், பிரஷ், பசை மாதிரியான சின்னச்சின்ன பொருட்களுக்கான முதலீடா 750 ரூபாய் செலவழிச்சா போதும். பொம்மையோட அளவைப்  பொறுத்து ஒரு பொம்மைக்கு பெயின்ட் பண்ணவும், ஒட்ட வைக்கவும் தனித்தனியா கட்டணம் வைக்கலாம். பகுதி நேரமா ஏதாவது பிசினஸ் பண்ண  நினைக்கிறவங்களுக்கு இது நல்ல சாய்ஸ்’’ என்கிற ராஜேஸ்வரி, ஆர்வமுள்ளோருக்கு 200 ரூபாய் கட்டணத்தில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு எடுக்கவும்  தயாராக இருக்கிறார்.  90032 71427


Thanks!!!:http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=2085&Cat=501

Tuesday, February 7, 2012

பொம்மை செய்வது எப்படி

















Saturday, November 12, 2011

டெரகோட்டா பொம்மையில் பணம் அள்ளலாம்

இயற்கையில் கிடைத்த மண்ணை பிசைந்து பல வடிவங்களில் பாண்டங்கள், சாமி சிலைகள், ஆயுதங்கள் என விருப்பப்பட்டதை படைத்தான் அந்தக்கால மனிதன். பஞ்சபூதங்களும் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) கலந்த ஒரு கலை இந்த மண்பாண்டக்கலை என்கிறார்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள். புதுவை வில்லியனூர் பகுதி மண்பாண்டத்தொழிலுக்கு பெயர் பெற்றது. இப்போது அது புதிய வடிவம் எடுத்து டெரகோட்டா என்ற பெயரில் சக்கை போடு போடுகிறது.

இத்தொழிலில் பிரபலமானவர் கணுவாய்பேட்டையைச்சேர்ந்த வி.கே.முனுசாமி. 43 வயதாகும் இவர் ஏழு வயதில் இருந்தே இத்தொழிலில் இருக்கிறார். இப்போது பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார். யுனெஸ்கோ விருது,தேசிய விருது, மாநில அரசு விருது, கலைமாமணி விருது போன்றவைகளும் இவருக்கு பெருமை சேர்க்கின்றன.

தனது தொழில் அனுபவம் குறித்து வி.கே.முனுசாமி கூறியதாவது: நாங்கள் பரம்பரையாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். எனது தந்தை வி.கிருஷ்ணபத்தர் மண்பாண்டங்கள் செய்வதில் திறமையானவர். சிறு வயதிலேயே மண்பாண்டங்கள், சாமி சிலைகளை விளையாட்டாக செய்து பழகினேன். பின்னர் முறைப்படி என் தந்தையிடம் கற்றுக் கொண்டேன். டெரகோட்டா எனப்படும் சுடுமண் சிற்பங்களுக்கு கிராக்கி அதிகரிக்கவே அவற்றை செய்வதில் ஈடுபாடு காட்டினேன்.

1990ம் ஆண்டு ஓம் சக்தி பைன் ஆர்ட்ஸ் அண்டு டெரகோட்டா ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினேன். மாவட்ட தொழில் மையத்தின் மூலம் ஏராளமானோருக்கு பயிற்சி அளித்துள்ளோம். இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயிற்சி பெற்று தனியாக தொழில் செய்து நல்ல வருமானம் ஈட்டுகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபரணி ஆற்றங்கரையில் கிடைக்கும் ஒருவித களிமண் இந்த டெரகோட்டா பொம்மைகள் செய்ய ஏற்றது. எந்த வடிவத்தை செய்தாலும் அச்சு பிசகாமல் வளைந்து கொடுக்கும். வெடிப்பு வராது, நாம் நினைத்த வடிவம் கிடைக்கும். இந்த மண்ணை வடிகட்டினால் கிடைக்கும் களிமண்ணைக்கொண்டு சிறிய பொம்மைகள், அலங்கார பொருட்கள், மணிகள் போன்றவற்றை செய்யலாம். மீதமுள்ள மண்ணில் வைக்கோல் கூளம், யானை சாணம் போன்றவற்றை கலந்து பிசைந்து ஒரு அடி முதல் 32 அடி உயர சிலை வரை செய்யலாம். மேலும் வில்லியனூர் டெரகோட்டாவுக்கு புவி குறியீடு பெற்றுள்ளோம்.  உலக அளவில் இந்த பொருட்களுக்கு மரியாதை உள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இந்த டெரகோட்டா பொம்மைகள் மிகவும் கவர்ந்திழுக்கின்றன. பெரிய ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், கார்ப்பரேட் அலுவலகங்கள், ரிசார்ட்ஸ் போன்ற இடங்களில் இந்த டெரகோட்டா பொம்மைகளுக்கு நல்ல மவுசு உண்டு. இங்கு வைப்பதற்கென்றே பெரிய ஜாடிகள், உருளிகள் (தண்ணீர் ஊற்றி பூக்களை போட்டு வைப்பது) போன்றவற்றை பல வடிவங்களில் வேலைப்பாடுகளுடன் செய்து தருகிறோம். நமது நாட்டிலும் இப்போது இந்த தொழில் பல ஆயிரம் குடும்பங்களை வாழ வைக்கிறது. மத்திய அரசின் கைவினைப்பொருள் அபிவிருத்தி ஆணையம் ஏராளமானோருக்கு உதவித்தொகையுடன் பயிற்சி அளிக்கிறது. ஏராளமான வெளிநாடுகளுக்கு இந்த பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு அன்னிய செலாவணி அதிகம் கிடைக்கிறது.

தாய்லாந்து, வியட்னாமைப்போல புதுவையிலும் கைவினை கிராமம் கண்டிப்பாக தேவை. இதன்மூலம் ஏராளமான கைவினை கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, சந்தை வாய்ப்பு கிடைக்கும். இங்கு காட்சி மையம் ஒன்றும் வைத்து விட்டால் இத்தொழில் மேலும் பிரபலமடையும்.  இதற்கு மூலதனம் தேவையில்லை, மூளைத்தனம் இருந்தால் போதும். அதே நேரம் பெரிய அளவில் தொழிலாக செய்தால் ஏராளமானோருக்கு வேலை கொடுக்கலாம்.

லட்சக்கணக்கில் வருமானமும் ஈட்டலாம். மாதம் 5 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை வருமானம் பெறமுடியும். மொத்தத்தில் நம் தமிழர்களுக்கே உரிய இந்த கைவினைக்கலையை அழிந்து விடாமல் பாதுகாக்கும் சக்தி இளைய சமுதாயத்திடம் உள்ளது. அதனை பொறுப்புடன் உணர்ந்து செயல்பட்டால் டெரகோட்டா கலை மேலும் பல ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும். இவ்வாறு முனுசாமி கூறினார்.

செய்வது எப்படி?

டெரகோட்டா பொம்மைகள் செய்வதற்கு தேவை நல்ல களிமண். ஆறு, ஏரி, குளக்கரைகளில் இது கிடைக்கும். வில்லியனூரை பொறுத்தவரை சங்கராபரணி ஆற்றங்கரையில் நல்ல களிமண் கிடைக்கிறது. இந்த களிமண்ணை எடுத்து வெயிலில் உலர வைத்து பின்னர் தண்ணீர் ஊற்றி ஒரு நாள் முழுக்க ஊறவைக்க வேண்டும். மறுநாள் அதனை எடுத்து பிசைந்து கையாலும், எந்திரத்தாலும் நாம் விரும்பும் வடிவ பொருட்களை செய்யலாம்.

சிறிய பொருட்களை கையால் செய்யலாம். பெரிய சிலைகள், பொம்மைகள் போன்றவை எந்திரத்தில் செய்யலாம். கிராம தேவதைகள், விலங்குகள், பறவைகள், அய்யனார், குதிரை, யானை போன்றவற்றை தற்போது மிகவும் கலை நுட்பத்துடன் தயாரிக்கின்றன. அரை அங்குலம் முதல் 32 அடி உயரம் வரை  சிற்பங்கள் செய்யப்படுகிறது.

களிமண்ணால் செய்தபின்னர் அவற்றை காயவைத்து பின்னர் சூளையில் வைத்து சுட வேண்டும். நன்றாக வெந்தபிறகு சிலைகள், பொருட்கள் தயாராகி விடும். இவற்றுக்கு இயற்கை வண்ணம் (இளஞ்சிவப்பு நிறம்) பூசி விற்பனைக்கு அனுப்பலாம்.

இன்வெஸ்ட்மென்ட்

இதற்கு பெரிய முதலீடு வேண்டாம். வீட்டிலேயே செய்து கொடுத்து வருமானம் ஈட்டலாம். ரூ.10 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை போட்டு தொழில் தொடங்கலாம்.  20க்கு 40 அடி அளவுள்ள கொட்டகை இருந்தால் சிறிய அளவில் தொழில் தொடங்கலாம். இங்கு களிமண், பதப்படுத்தும் இடம், மோல்டிங், பினிஷிங், பயரிங் (சூளை), பேக்கிங், விற்பனை, காட்சியகம் போன்றவை இருக்க வேண்டும்.

60க்கு 180 அளவு கொண்ட கொட்டகை அமைத்தால் பெரிய அளவில் செய்ய முடியும். தற்போது விறகு சூளைக்கு பதிலாக கேஸ் மூலம் எரியும் அடுப்பும் வந்து விட்டது. மழைக்காலங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரியான பயிற்சி இல்லாதவர்கள் கூட வீட்டுவேலைநேரம் போக மற்ற நேரத்தில் அகல்விளக்கு அச்சு வாங்கி வந்து அகல்விளக்கு செய்து ஒரு நாளைக்கு 500 ரூபாய் வரை வருமானம் பெறலாம். நல்ல கற்பனைத்திறன், பொறுமை, அழகியல் ரசனை இவை இருந்தால் இந்த தொழிலில் நீங்கள்தான் ராஜா

உதவித்தொகையுடன் பயிற்சி

இந்த தொழிலுக்கு மாவட்ட தொழில் மையம் உதவித்தொகையுடன் பயிற்சியும் அளிக்கிறது.8 ம் வகுப்புக்கு மேல் படித்தவர்களுக்கு 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி காலங்களில் மாதம் 1500 ரூபாய் உதவித்தொகையும் உண்டு. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (டிஆர்டிஏ), ஆதிதிராவிடர் நலத்துறை (ஒரு வருடம்), மகளிர் மேம்பாட்டுக்கழகம் (மகளிருக்கு மட்டும்) ஆகியவையும் பயிற்சி அளிக்கின்றன. மகளிர் மேம்பாட்டுக்கழகம் 3 முதல் 6 மாத பயிற்சி அளிக்கிறது.

மத்திய அரசின் கைவினை அபிவிருத்தி ஆணையர் அலுவலகம் 14 வயது நிரம்பியவர்களுக்கு இத்தொழில் குறித்து 1500 ரூபாய் உதவித்தொகையுடன் ஒரு வருட பயிற்சி அளிக்கிறது. பயிற்சி முடித்தவர்களுக்கு அட்வான்ஸ் டிரைனிங் (குரு சிஷ்யா பரம்பரா திட்டம்) 6 மாதம் அளிக்கப்படுகிறது. இதில் மாதாமாதம் 2 ஆயிரம் உதவித்தொகையும் உண்டு.

அடுத்த ஆண்டு 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் 3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கருவிகளும் இலவசம். தனியார் அமைப்புகள், கல்லூரிகள், என்ஜிஓ அமைப்புகள் ஆகியவை இதனை எடுத்துச்செய்யலாம்.

சந்தை வாய்ப்பு

பயிற்சி முடித்தவுடன் நாம் செய்யும் பொருட்களை விற்பனை செய்யவும் மாவட்ட தொழில் மையம் ஏற்பாடு செய்கிறது. மாநில, தேசிய மற்றும் உலக வர்த்தக கண்காட்சி போன்றவற்றுக்கு அழைத்துச்செல்கிறது. போக்குவரத்து செலவும் அளிக்கின்றனர். இதன்மூலம் நாம் தனிப்பட்ட முறையிலும் விற்பனை வாய்ப்பை பெற முடியும்.

மத்திய அரசு கைவினை அபிவிருத்தி ஆணையம் மூலம் கிராப்ட் பஜார், காந்தி சில்ப் பஜார், டெல்லி ஹாட் போன்ற கண்காட்சிகளிலும் பங்கு பெற வாய்ப்பு அளிக்கப்படுகிறது. வெளிநாட்டில் நடக்கும் கண்காட்சிகளிலும் நாம் பங்கு பெற வாய்ப்பு கிடைக்கும். இன்சூரன்ஸ், மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு போன்றவையும் உள்ளது.

சிறப்புகள்

டெரகோட்டா பொம்மைகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இயற்கையோடு ஒன்றிணைந்து இருப்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்த கெடுதலும் ஏற்படாது. உடைந்து போனால் கூட அவற்றை தூர எறிந்து விட்டு புதியதை வைத்துக்கொள்ளலாம். விலையும் குறைவு. மண்பாண்டங்களில் சமைத்தால் உணவு சுவையாக இருக்கும்.

நீண்டநேரமானாலும் கெட்டுப்போகாது. மண்பானை நீரை குடித்தால் உடலுக்கு நல்லது. தற்போது தேனீர் கோப்பைகள், ஐஸ் கிரீம் கப்புகள் கூட மண்பாண்டங்களில் செய்கிறார்கள். டெரகோட்டா பொம்மைகள், அலங்கார பொருட்கள் வீட்டின் வரவேற்பு அறையில் வைத்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வீட்டு வாசல் மற்றும் பூஜை அறைகளில் தண்ணீர் நிரப்பி பூக்களை போட்டு வைக்கும் உருளிகள் வாஸ்து குணம் கொண்டவை. இவ்வாறு பல சிறப்புகள் உள்ளன.

என்னென்ன செய்யலாம்?

டெரகோட்டா பொம்மைகளை பொறுத்தவரை அரை அங்குல விநாயகர் சிலை முதல் 32 அடி உயர சிலை வரை செய்யலாம். சிறிய விநாயகர் பொம்மைகள், குபேரன் சிலை, யானை, குதிரை போன்ற விலங்குகள் சிலைகள், அலங்கார விளக்குகள், உருளிகள், தொங்கும் விளக்குகள், அகல் விளக்குகள், மனித உருவங்கள், சுவற்றில் செய்யும் உருவங்கள், ஆபரணங்கள், டைல்ஸ், டிசைன்கள், தொங்கும் மணிகள், வாஸ்து மணி, அலங்கார மணி, செராமிக் பொம்மைகள் இன்னும் ஏராளமான பொருட்களை நம் கற்பனைத்திறனுக்கேற்ற வகையில் செய்யலாம்.

பொம்மை தயாரிப்பது எப்படி

குழந்தைகளின் விளையாட்டுப் பொருள் என்பதோடு, வீடு, வாகனங்களை அலங்கரிப்பதிலும் பொம்மைகள் முக்கிய இடம் பிடிக்கின்றன. பெரும்பாலான கல் லூரி மாணவிகளின் கைகளில் ‘செல்லÕ பொம்மைகள் தவழ்வதை பார்க்க முடியும். மரம், பிளாஸ்டிக், ரப்பர் போன்றவற்றால் தயாரிக்கப்பட்டு வந்த பொம் மைகள், இப்போது செயற்கை பஞ்சு வைத்து மெத்து, மெத்தென்று பல்வேறு சைஸ்களில் உருவாக்கப்படுகின்றன. குழந்தைகள், இளசுகள், பெண்கள் மத்தியில்  மவுசு ஏற்பட்டிருக்கும் இந்த பஞ்சு பொம்மைகளை பொழுதுபோக்காகவோ, தொழிலாகவோ செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் பொம்மை தயா ரிப்பில் ஈடுபட்டுள்ள கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த கவிதா (27). அவர் கூறியதாவது: எனது கணவர் ஸ்டாலின் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக உள்ளார். எம்.ஏ. முடித்த பிறகு வேலைக்குச் செல்ல ஆசைப்பட்டேன். கணவரோ,  ‘வெளியே எங்கும் வேலைக்கு போக வேண்டாம். வீட்டிலேயே ஏதாவது தொழில் செய்Õ என்றார்.

டிராயிங், எம்ப்ராய்டரி, தையல் ஆகியவற்றில் பயிற்சி இருந்ததால், பொம்மை தயாரிக்கலாம் என்ற ஐடியா தோன்றியது. மகளிர் சுய உதவிக்குழுவை உருவாக்கி,  பொம்மை தயாரிக்க பயிற்சி பெற்றேன். புதிய புதிய பொம்மைகளுக்கான வடிவங்களை எனது கற்பனைத் திறனால் சார்ட் பேப்பரில் வரைந்து பொம்மைகளை  உருவாக்கினேன். வித்தியாசமான தோற்றம் மற்றும் அழகால் உடனடியாக பொம்மைகள் அனைத்தும் விற்றன. நல்ல லாபம் கிடைத்தது. பின்னர் நானே பொம்மை தயாரிப்பது குறித்து பயிற்சியளிக்க தொடங்கினேன். தினமும் 2 மணி நேரம் வீதம் 10 நாளில் கற்றுக் கொடுக்கிறேன். ஒருவருக்கு  ரூ.250 கட்டணம் வசூலிக்கிறேன். அதன் மூலமும் வருமானம் கிடைக்கிறது. விரைவில் கோவையில் பொம்மை கடை வைக்கவுள்ளேன். பொம்மை தயாரிப்பு  என் வாழ்வை உயர்த்தியுள்ளது.


உற்பத்தி செலவு

ஒருவர் ஒரு நாளில் 4  பெரிய அல்லது 6 சிறிய பொம்மைகள் வீதம் மாதம் சராசரியாக 100 பெரிய அல்லது 150 சிறிய பொம்மைகள் தயாரிக்கலாம். ரோமத் திலான துணி (ஃபர் கிளாத்) 10 மீட்டர் ரூ4000, வெல்வெட் கிளாத் 15 மீட்டர் ரூ1000, பைபர் காட்டன் 10 கிலோ ரூ1200, கண், காது, மூக்கு, வாய்  பொருத்த தேவையான பட்டன்கள் ரூ500, ஊசி ரூ10, சார்ட் பேப்பர் 30 ரூ.150, மார்க்கர் பேனா ரூ150, பொம்மையின் மாதிரி சார்ட் ரூ100, கூலி ரூ2600  என மாதத்துக்கு ரூ9,710 செலவு. சிறிய பொம்மையின் சராசரி அடக்கவிலை உழைப்புக்கூலி சேர்த்து ரூ64 ஆகிறது. பெரிய பொம்மைக்கு ரூ97 ஆகிறது.

லாபம் எவ்வளவு?

பேன்சி, டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், கார் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் வாங்கிக் கொள்ள தயாராக இருக்கிறார்கள். சிறிய பொம்மைகள் ரூ100  முதல் ரூ125 வரை, பெரிய பொம்மைகள் ரூ150 முதல் ரூ200 வரை விற்கலாம். இதன் மூலம் சிறிய பொம்மைகள் மூலம் அதிகபட்சம் ரூ19 ஆயிரம் அல் லது பெரிய பொம்மைகள் மூலம் ரூ20 ஆயிரம் வரை கிடைக்கும். மாதம் ரூ10 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். சிறிய பொம்மைக்கு ரூ35 முதல் ரூ65  வரை, பெரிய பொம்மைக்கு ரூ55 முதல் ரூ100 வரை லாபம் கிடைக்கும்.


அரை மணி நேரம் போதும்

பொம்மைகளின் மாதிரி வடிவங்களை உருவாக்கத் தேவையான சார்ட் பேப்பர்களைக் கொண்டு, மாதிரி சார்ட் தயாரித்துக் கொள்ள வேண்டும். அதன் மீது  தயாரிக்கக்கூடிய பொம்மைக்கு தேவையான வெல்வெட் அல்லது ஃபர் துணிகளை வைத்து வரைந்து, வெட்டிக் கொள்ள வேண்டும். அதை உள்புறமாக  கையால் ஊசி கொண்டு தைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தைக்காமல் இடைவெளி விட வேண்டும். அதை வெளிப்புறமாக புர ட்டி, தைக்காமல் விட்ட ஓட்டை வழியாக ஃபைபர் காட்டன் எனப்படும் செயற்கை பஞ்சை உள்ளே திணித்து பொம்மையை திடமாக நிரப்பி உருவமாக்க  வேண்டும்.

செயற்கை பஞ்சை உருவத்தின் சிறிய பாகங்களுக்கும் செல்லும் வகையில் கவனமாகத் திணிக்க வேண்டும். ஒரு இடத்தில் திடமாகவும், மற்ற இடத்தில் லூசாக வும் இல்லாமல் உருவத்தின் எல்லா இடங்களிலும் சீராக பஞ்சை திணிக்க வேண்டும். விடுபட்ட ஓட்டையை வெளிப்புறமாக, தையல் தெரியாத அளவு தைக்க வேண்டும். கண், காது, மூக்கு, வாய்க்கு உரிய பட்டன்களை, கற்களை பொருத்த  வேண்டும்.  பெரிய பொம்மை செய்ய ஒன்றரை மணி நேரமும், சிறிய பொம்மை செய்ய அரை மணி நேரமும் ஆகும்.

மூலப்பொருட்கள்

பொம்மையின் மாதிரி அட்டைகள் (சார்ட் பேப்பர்), பல்வேறு வண்ண வெல்வெட் கிளாத், ஃபர் கிளாத் (ரோமத்திலான துணி), ஊசி, நூல், கத்தரி, மார்க்கர்  பேனா, பைபர் காட்டன், காது, மூக்கு, கண், வாய் ஆகிய உறுப்புகளுக்கான பட்டன்கள், செயற்கை கற்கள். இவை ஸ்டேஷனரி கடைகளில்  கிடைக்கும். வீட் டில் ஒரு ஆள் அமர்ந்து செய்யக்கூடிய இடம் போதுமானது. வெல்வெட் துணியை தரை விரிப்பின் மீதே வெட்டலாம்.


பொம்மை தயாரிப்பு


சந்தோஷமான தருணங்களில், ஒருவருக்கு வழங்கும் பரிசுப்பொருட்கள் அந்த சந்தோஷத்தை இரட்டிப்பாக மாற்றும். பரிசுப்பொருள் விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பெறுபவர் மனதைக் கவர்வதாக இருக்க வேண்டும். விலை குறைந்த, அதே நேரம் பாரம்பரியம், நவீனம் கலந்து  சிறப்பாக வடிவமைக்கப்படும் கூடை பொம்மைகள், பரிசுப்பொருளாக வழங்க நல்ல தேர்வு.  கூடை பொம்மைகள் தயாரித்து விற்றால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காந்திபுரத்தை சேர்ந்த பத்மா. அவர் கூறியதாவது:
15 ஆண்டுகளுக்கு முன்பு கைவினைப்பொருட்கள் செய்வதில் ஆர்வம் ஏற்பட்டது. பரிசு பொருள் விற்கப்படும் பொம்மைகள் செய்து கடைகளுக்கு விற்றேன். படிப்படியாக பல்வேறு வகையான பொம்மைகளை தயாரித்தேன். திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனங்களிடம் வெளிநாட்டு வர்த்தகர்கள் ஆர்கானிக் காட்டன் பொம்மைகள் செய்து தர ஆர்டர் கொடுத்தனர். ஆர்டர் எடுத்த நிறுவனங்கள் என்னிடம் பொம்மைகள் தயாரித்து வாங்கி ஏற்றுமதி செய்தனர். இதன் மூலம் தொழில் பெருகியது.

பொதுவாக பொம்மைகள் செய்வது கை தையல் மூலம் தான். உற்பத்தி அதிகம் செய்ய வேண்டி வந்ததால் பவர் தையல் மெஷின் மூலம் பெரிய பொம்மைகளை தைத்தும், மெஷினில் தைக்க முடியாத சிறிய பொம்மைகளை மட்டும் கை தையல் மூலமும் தயாரித்து வருகிறேன். 4 பேர் பணிபுரிகின்றனர். மாதம் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை மதிப்பிலான பொம்மைகள் உற்பத்தி செய்கிறேன். 25 சதவீத லாபம் உள்ளது.

ஒரே மாதிரியான பொம்மை தயாரிப்பதை விடுத்து புதுமையான வடிவத்தில் தயாரிக்க வேண்டும். பொம்மையை கூடையில் வைத்து கொடுத்தால் புதுமையாக இருக்கும். அதையும் பொக்கே போல் கொடுத்தால் நவீனமாக இருக்கும்.கைப்பிடி உள்ள கூடைக்குள் தலையை மட்டும் காட்டியவாறு இருக்கும் நாய்க்குட்டி பொம்மைகள் வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

கூடை பொம்மைகளை அடிப்படையாக கொண்டு மேலும் பல புதுமைகள் புகுத்தலாம். ஒன்றில் இருந்து இன்னொன்றை உருவாக்கலாம். பரிசு பொருட்களை  பொறுத்தவரை புதிதாக இருந்தால் வரவேற்பு அதிகமாக இருக்கும். இவ்வாறு பத்மா கூறினார்.

முதலீடு:வீட்டின் ஒரு அறை போதுமானது. சார்ட் பேப்பர், வெல்வெட் துணி வெட்ட ஒரு டேபிள் (ரூ.4 ஆயிரம்), மூலப்பொருட்கள் மற்றும் தயாரித்த பொருட்களை வைக்க அலமாரி (5 ஆயிரம்), பெரிய கத்தரி 1, சிறிய கத்தரி 2 (ரூ.400), பிளாஸ்டிக் டிரே 2 (ரூ.100) , செலோ டேப் ஸ்டாண்ட் (ரூ.150). மொத்தம் ரூ.9,650.

உற்பத்தி செலவு:  ஃபர் கிளாத், அதன் திடத்திற்கேற்ப மீட்டர் ரூ.300 முதல் ரூ.350 வரை. செயற்கை பஞ்சு (பைபர் காட்டன்) கிலோ ரூ.100, (ஒரு மீட்டர் ஃபர் கிளாத், ஒரு கிலோ செயற்கை பஞ்சு மூலம் 100 பொம்மைகள் செய்யலாம்.), கூடை விலை அதன் அளவுக்கேற்ப ஒன்று ரூ.5 முதல் ரூ.10 வரை. பொக்கே பேக்கிங் ஷீட் (சலபன் பேப்பர்) ஒன்று ரூ.3, ஒரு பொம்மைக்கான மூக்கு, கண் பட்டன்கள் ரூ.2. ரிப்பன் ரோல் ரூ.1.

சிறிய கூடை பொம்மை செய்ய ரூ.20ம், பெரியவை செய்ய கூடை மற்றும் பொம்மையின் அளவுக்கேற்ப ரூ.40 வரை செலவாகும். ஒரு நாளைக்கு (8 மணி நேரம்) சிறிய பொம்மைகள் 40, பெரியவை 20 தயாரிக்கலாம்.  ஒருநாள் உற்பத்தி செலவு ரூ.800.மாதம் 25 நாளில் ஆயிரம் சிறிய கூடை பொம்மை அல்லது 500 பெரிய கூடை பொம்மை உற்பத்திக்கு ரூ.20 ஆயிரம் தேவை.

வருவாய்: சிறிய கூடை பொம்மை ரூ.30, பெரியது ரூ.60க்கு விற்கலாம். மாத வருவாய் ரூ.30 ஆயிரம். செலவு ரூ.20 ஆயிரம். லாபம் ரூ.10 ஆயிரம். லாபம் உழைப்பு கூலியாக கிடைக்கிறது.

சந்தை வாய்ப்பு:  தற்போது சிறிய ஊர்களில் கூட பரிசு பொருட்கள் கடைகள் வந்து விட்டன. தயாரித்த பொம்மைகளை பேன்சி ஸ்டோர், கிப்ட் கடைகள் ஆகியவற்றுக்கு விற்கலாம். சிறிய கூடை பொம்மையை ரூ.30க்கு வாங்கும் கடைக்காரர்கள் ரூ.50க்கு குறையாமல் விற்கிறார்கள். நேரடியாக விற்றும் லாபம் சம்பாதிக்கலாம்.  கூடை பொம்மை பொக்கே பார்க்க ஆடம்பரமாக இருக்கும். ஆனால் விலை குறைவு என்பதால் நிறைய பேர் விரும்பி வாங்குகின்றனர். இதனால் சந்தை வாய்ப்புகள் நன்றாக உள்ளது. கூடை பொம்மை மட்டுமல்லாமல் பல்வேறு ரகங்களில் பொம்மைகள் தயாரித்து விற்கலாம். இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

பொம்மை தயாரிக்க பயிற்சி : கோவை வேளாண் பல்கலைக்கழகம், கோவை அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகம்  ஆகியவற்றில் பெண்களுக்கு மட்டும் பொம்மை தயாரிப்பு பயிற்சி கற்பிக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் பொம்மை தயாரிக்க பயிற்சி மையங்கள் பல உள்ளன.

தயாரிப்பது எப்படி?

கூடை பொம்மை களை மார்பு வரை தயாரித்தால் போதுமானது. நாய், பூனை, கரடி, குரங்கு குட்டிகள், குழந்தை வடிவங்களில் தேவையான அளவுகளில் பொம்மைகளை தயாரிக்கலாம்.பொம்மையை உருவாக்க, தேவையான தையல் அளவுகளை சார்ட் பேப்பரில் உருவாக்கி கொள்ள வேண்டும். அது கை, உடல், முகம் ஆகிய பாகங்களை கொண்டிருக்கும். அவற்றை கொண்டு தைக்க வேண்டிய ஃபர் துணிகளின் பின்புறம் வைத்து மார்க்கர் பேனாவால் அவுட்லைன் வரைந்து வெட்டி கொள்ள வேண்டும்.

வெட்டியவற்றின் உட்புறமாக கை தையல் போட வேண்டும். அதை கெட்டி தையல் என்பார்கள். தைக்காமல் விட்ட பகுதி வழியாக செயற்கை பஞ்சை சமமாக பரவும்படி திணித்து உள்புறத்தை நிரப்ப வேண்டும். பொம்மைக்கு கண், மூக்கு பட்டன்களை பொருத்த வேண்டும். சில பொம்மைகளுக்கு கூடுதலாக காது, வாய் பட்டன்களையும் பொருத்தலாம். பொம்மையின் கீழ் பகுதி வட்டமாக திறந்திருக்கும், அதை கூடையின் மேல் திறப்பை மூடும் அளவிற்கு வட்டமாக வெட்டிய சார்ட் பேப்பர் துண்டுகளில் வைத்து, விளிம்புகளில் பசை தடவி ஒட்டி மூட வேண்டும். இப்போது பொம்மை தயார்.

பின்னர், ரெடிமேடாக வாங்கிய பிரம்பு கூடையின் கைப்பிடி, மேல், கீழ் புற விளிம்பு ஆகியவற்றில் சன்னமான கலர் ரிப்பன்களை சுற்ற வேண்டும். கூடை மேல் ஏற்கனவே தயாரான பொம்மைகளை வைத்தால் கூடை பொம்மை தயார். கிப்ட் பேக்கிங் ஷீட்டில் கூடை பொம்மையை வைத்து பூக்களை கொண்டு பொக்கே செய்வது போல் பேக்கிங் செய்ய வேண்டும். செலோ டேப் கொண்டு ஒட்டி, பேக்கிங் ஷீட்டில் ரிப்பன் கட்டினால் கூடை பொம்மை பொக்கே தயாராகி விடும்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites