இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Friday, March 30, 2012

விழிப்புணர்வு

Pedophilia (ஃபிடோஃபிலியா) இந்த சொல்லை பலரும் அறிந்திருக்க மாட்டீர்கள், எனினும் இந்த சொல்லின் தன்மையை பற்றிய சம்பவங்களை அடிக்கடி சமூகத்தில் சம்பவங்கள் மூலம் அறிந்திருப்பீர்கள். இன்று நாம் Pedophilia என்றால் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
Pedophilia இச் சொல் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியிலேயே புழக்கத்தில் வந்ததுடன் மக்கள் மத்தியில் விளிப்புணர்வாக பேசப்பட்டது.Pedophilia என்றால் வயதுவந்தோருக்கு, சிறுவர்கள் மீது இருக்கும் பாலியல் அவா என்பது பொருளாகும்.

அதாவது, 16 வயதிற்கு மேற்பட்ட ஒரு நபர் (வயது வந்தவராக கருதப்படும் வயதெல்லை) 13 வயதிற்கும் உட்பட்ட சிறிவர்களின் மீது தனது பாலியல் இச்சைகளை தீர்த்துக்கொள்வார் எனின் அவர் Pedophilia என இனங்கானப்படுவார்.
பொதுவாக இவ்வாறான நபர்கள் தமது ஆரம்ப உறவை தன்னைவிட 16 வயதில் மேற்கொள்ள ஆரம்பிக்கின்றார்கள். தன்னைவிட 5 வயதேனும் குறைந்த பிள்ளைகளிடம் தான் தனது முதலாவது உறவை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இங்கு நாம் ஒரு விடையக் கருத வேண்டும், தன்னைவிட 5 வயதேனும் குறைந்தவர் என்றால் 5 வயது குறைவானவருடன் தான் உடலுறவு கொள்வார் என நினைப்பது தவறாகும். 50 வயதுள்ள Pedophilia நபர் 5 வயது குழந்தையுடன் கூட உடலுறவு கொள்ளும் ஆர்வத்தை கொண்டிருக்கக்கூடும்!
உண்மையில் இந்த Pedophilia என்பது ஒரு மன நோயாக கருதப்படுகிறது. எனினும் மருத்துவத்தின் இன்னோர் ரீதியாக மாற்று பாலியல் இன்பமாக கருதப்படுகிறது. Pedophilia நோயாளிகள் கண்டிப்பாக மருத்துவரை நாடி மனோரீதியான மேம்பாட்டை பெறுதல் அவசியம். Pedophilia மன நோயாளியாக இருந்தாலும், சிறுவர்களை பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்துவது உலக அளவில் பாரிய தண்டனைக்குரிய குற்றமாகும்.
இவ் Pedophilia நோய்த்தாக்கம் பொதுவாக ஆண்களிடையே காணப்படும், எனினும் பெண்களிடையேயும் கணிசமான அளவில் காணப்படுகின்றது.
அவர்களின் பொதுவான நடவடிக்கைககள் :
  • சிறிவர், சிறுமியருக்கு பாலியல் படங்களை காண்பித்தல்.
  • தமது உறுப்புக்களை காண்பித்தல் / உணரச்செய்தல்.
  • தமது அண்டைவீடு, அல்லது உறவினர்களின் குழந்தைகளையே பொதுவாக தமக்கு இரையாக்குவார்கள்.
சம்பந்தப்பட்டவர்களை நீங்கள் இனங்காண்பீர்களானால், உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச்செல்லுங்கள். நட்பு, உறவு, முகம் கருதி தட்டிக்கழித்தீர்களானால், அவரின் எதிர்காலத்திற்கும் பல குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் பாரிய தாக்கமாக அமையும்.

அரிய மண் வர்த்தகத்தில் சீனாவின் ஆதிக்கம்

மிக அருமையாகக் கிடைப்பதால் சில தனிமங்களும் (Elements)உலோகங்களும் (Metals) அரிய மண் (Rare Earth) என்ற சொற்கள் மூலம் குறிப்பிடப்படுகின்றன. Rare என்றால் அரிய. Earth என்றால் மண் என்று பொருள்.
அரிய மண் தனிமங்களும் உலோகங்களும் எண்ணிக்கையில் பதினேழாக (17)இருக்கின்றன. இவற்றுள் ஸ்கன்டியம்(Scandium) இற்றியம் (Yttrium) என்பனவும் அடங்கும். சுவீடன் நாட்டின் இற்றார்பி (Ytterby) என்ற கிராமத்தில் இவை முதன் முதலாக நிலத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டன.
இதன் காரணமாக இந்தப் பதினேழு தனிமங்கள் உலோகங்கள் ஆகியவற்றின் பெயர்கள் இந்தக் கிராமத்தோடு தொடர்புடையவையாக இருக்கின்றன. 1948ம் ஆண்டு வரை உலகின் அரிய மண் தேவையை இந்தியாவும் பிறேசிலும் பூர்த்தி செய்தன. 1950களில் தென்னாபிரிக்கச் சுரங்கங்களில் இருந்து அவை பெறப்பட்டன.
1980களில் அமெரிக்க மாநிலம் கலிபோர்னியா மவுன்ரின் பாஸ் (Mountain Pass) அரிய மண் சுரங்கங்கள் உலகின் அரிய மண் தேவையைப் பூர்த்தி செய்தன. இன்று நிலவரம் மாறிவிட்டது. உலகின் முழு அரிய மண் தேவையில் 97 விழுக்காட்டை சீனா வழங்குகிறது.
நவீன தொழில் நுட்பத்தில் என்றும் இல்லாதவாறு அரிய மண் தேவைப்படுகிறது. இதன் காரணமாகச் சீனா ஒரு ஆதிக்க நிலையில் இருக்கிறது. அரிய மண் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தும் சீனா தனக்குச் சாதகமான அரசியல் இராசதந்திர, வர்த்தக முன்னெடுப்புக்களை எளிதாக நிறைவேற்றுகிறது.

விண்வெளித் துறையில் (Aerospace) செய்மதிகள், ஒடங்கள், கட்டுமானங்கள், ஆய்வுகூடங்களுக்கு அரிய மண் அவசியம் தேவைப்படுகிறது. லேசர் கருவிகள், நுண் அலைக் கதிர் வடிகட்டிகள் (Micro wave Filters) படப்பிடிப்புக் கருவி ஆடிகள், அதியுயர் பிரதிபலிப்பு ஆடிகள் (High refraction Glasses), ஜபொட் போன்ற நவீன தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றின் தயாரிப்பிற்கு அரிய மண் மூலப் பொருளாக அமைகிறது. ஸ்மாட்போன்கள் (Smartphones) அரிய மண் இல்லாமல் தயாரிக்க முடியாது.
அதியுயர் தொழில் நுட்பக் கருவிகளான சுப்பர் கடத்திகள் (Super conducters), எக்ஸ் கதிர் குழாய்கள் (X ray Tubes),நெடுந்தூர ஏவுகணைப் பாகங்கள், ஸ்கான் கருவிகள், காற்றாடி மின்சாரம் தயாரிக்கும் எந்திரங்கள் போன்றவற்றின் தயாரிப்பிற்கும் அரிய மண் உலோகங்களும் தனிமங்களும் தேவைப்படுகின்றன.
புதிய தலைமுறை மோட்டார் வாகனங்கள் மின்கல மின்சாரத்திலும் எரிபொருளிலில் இயங்கும் எந்திரத்திலும் மாற்றி மாற்றி ஓடுகின்றன. இவை ஹைபிறிட் (Hybrid) வாகனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஜப்பான் நிறுவனங்கள் தொயோட்டா (Toyota) ஹொன்டா (Honda) இந்த ரகக் கார்களைத் தயாரிக்கின்றன.
எரிபொருள் சேமிப்பு, சுற்று சூழல் பாதுகாப்பு ஆகிய காரணங்களுக்காக இந்த ரக வாகனங்கள் பெரும் சந்தை வாய்ப்பை பெற்றுள்ளன. அவற்றின் தயாரிப்பிற்கு அரிய மண் உலோகங்களும் தனிமங்களும் அவசியம் தேவைப்படுவதால் எதிர்வரும் காலத் தரை வாகனங்களின் வடிவமைப்பில் சீனாவின் கையோங்கும் நிலை இருக்கிறது.
இன்று அரிய மண் உலோகங்களையும் தனிமங்களையும் பெருமளவில் பாவிக்கும் நாடாக ஜப்பான் இடம் பெறுகிறது. ஜப்பான் இந்த அடிப்படையில் சீனாவில் தங்கி வாழும் நாடாக இருக்கிறது. சென்ற வருடம் தனது கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்த சீன மீன் பிடிக் கப்பலை ஜப்பான் தடுத்து வைத்தது.
ஜப்பானுக்கான அரிய மண் ஏற்றுமதியை சீனா இதற்குப் பதிலடியாக நிறுத்தியது. உடனடியாக சீனக் கப்பலை ஜப்பான் விடுவித்தது. உலகின் அரிய மண் தேவை உயர்வதால் அவற்றின் ஏற்றுமதியை சீனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு விலையையும் உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக அரிய மண் உற்பத்தியை வேகமாக தொடங்க வேண்டிய நிலையில் தொழில் நுட்ப நாடுகள் இருக்கின்றன.
மத்திய அவுஸ்திரேலியா, தெற்கு கனடா, வியற்நாம், மலேசியா போன்ற நாடுகளில் அரிய மண் வகைகள் இருக்கின்றன. உடனடியாக உற்பத்தியைத் தொடங்க முடியாத காரணத்தால் தொடர்ந்து சீனாவில் தங்கியிருக்க வேண்டியுள்ளது. அரிய மண் வகைகள் சிலவற்றில் றேடியம் (Radium) மற்றும் தோறியம் (Thorium) இருக்கும் காரணத்தால் மக்கள் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச் சுழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
அரிய மண் கதிர் வீச்சினால் பாதிக்கப்பட்டோர் புற்று நோய் தாக்கத்துக்கு உட்படுகின்றனர். குழந்தைகள் உடற் குறைபாடுகளுடன் பிறக்கின்றன. தயாரிப்பின் போதும் கழிவுகளை கொட்டும் போதும் மேற்கூறிய ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றியம் ஆகியவை மிகவும் இறுக்கமான உற்பத்தி விதிமுறைகளை அமுல் படுத்துகின்றன. சீனாமீது அந்த வகைக் கட்டுப்பாடுகளை நடைமுறைப் படுத்துவது கடினம் மாத்திரமல்ல இயலாததும் கூட.
பாவித்த அரிய மண் மறுசுழற்சியை ஜப்பான் அண்மையில் தொடங்கியுள்ளது. செலவு மிக அதிகம் என்றாலும் ஜப்பான் மறுசுழற்சிக்கு முன்னுரிமை கொடுத்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மேற்கு நாடுகள் சீனா மீது சில பாரிய குற்றச்சாட்டுக்களைச் சுமத்தின.
இதற்குப் பதிலடியாகச் சீனா அரிய மண் ஏற்றுமதியை மட்டுப் படுத்தியது. அமெரிக்காவும் ஜரோப்பிய ஒன்றியமும் குற்றச் சாட்டுக்களை மீளப் பெற்றுள்ளன. மிகவும் விலை உயர்ந்த பொருளாக அரிய மண் இடம் பெறுகிறது நவீன தொழில் நுட்பத்தின் மூலப் பொருளாக இருப்பதால் சீனாவுக்கு அதியுயர் செல்வாக்கு இருக்கிறது.

மங்குஸ்தான் பழம்

ரொம்ப நாளா அங்கு அடிப்பட்டு இப்போ புதுசான பழம்தான் இந்த மங்குஸ்தான் (தீன்) பழம். மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப் பயிராக இதனை வளர்க்கின்றனர். தென் அமெரிக்க நாடுகள், பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கிடைக்கிறது.மங்குஸ்தான் பழம் மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை. இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிமனாக இருக்கும்.இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும்.

இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு

Tamil - Mangosthan
English - Mangosteen
Malayalam - Mangusta
Telugu - Maugusta
Botanical Name - Garcinia mangostanaஇதை தென்கிழக்கு ஆசியநாடுகளில் பழங்காலத்தில் தோல், பற்களின் ஈறு நோய்களுக்கும், பல்வலி, தொற்நோய் கிருமிகளையும்(Infection), காளான்களையும்(Fungus) அழிக்க பயன்படுத்தினர். அதே போல் காயங்கள், நாட்பட்ட புண்கள், காய்சல், இரத்தம் கலந்த வயிற்று போக்கு, உடல் மற்றும் மன சோர்வு, மன அழுத்தம், கவலை போன்றவற்றிக்கு குணமாக்க பயன் படுத்தி வந்தனர்.

சமீபத்தில் வீக்கம் குறைக்கவும், புற்று நோய் எதிர்ப்பு சக்தி, வயதாவதை நிதானப்படுத்தவும், தோல்களின் சுருக்கத்தை குறைக்கவும், பாக்டீரியா & வைரஸுக்கு எதிர்ப்பாகவும் பயன் படுகிறது.

சீதபேதி இரத்தக் கழிச்சல் உள்ளவர்களுக்கு மங்குஸ்தான் பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி உடனே குணமாகும். உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும். வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.கண் எரிச்சலைப் போக்க கம்பியூட்டரில் வேலை செய்பவருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும். இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும். வாய் துர்நாற்றம் நீங்க, வயிற்றில் புண் இருந்தால் வாயில் புண் ஏற்படும். இதனால் வாய் துர்நாற்றம் வீசும், மேலும் உண்ணும் உணவுப் பொருட்கள் பல் இடுக்குகளில் தங்கி விடுகின்றன. இதனால் உண்டாகும் கிருமிகளால் வாய் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு, அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.மூலநோயை குணப்படுத்த. நாம் உண்ணும் உணவானது செரிமானம் ஆகாமல் அசீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு சீற்றமாகி கீழ் நோக்கி மூலப் பகுதியை பாதிக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்படுகிறது. மூலநோய் விரைவில் குணமாக எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளை உண்பது நல்லது. அதோடு மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

பெண்களுக்கு

மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது. கிடைக்கும் காலங்களில் மங்குஸ்தான் பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது. அல்லது மங்குஸ்தான் பழத்தின் தோலை காய வைத்து பொடிசெய்து பாலில் கலந்து ரீ செய்து சாப்பிட்டு வந்தால் அதிக இரத்தப் போக்கு குறையும். சிறுநீர் நன்கு வெளியேறினால் தான் உடலில் தங்கியுள்ள தேவையற்ற அசுத்த நீர் வெளியேறும். சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும்.

அதுமட்டுமல்லாமல் இருமலை தடுக்கும்,சூதக வலியை குணமாக்கும், தலைவலியை போக்கும்,நாவறட்சியை தணிக்கும்.

மங்குஸ்தான் பழத்தில்

நீர் (ஈரப்பதம்) - 83.9 கிராம்
கொழுப்பு - 0.1 கிராம்
புரதம் - 0.4 கிராம்
மாவுப் பொருள் - 14.8 கிராம்
பாஸ்பரஸ் - 15 மி.கி.
இரும்புச் சத்து - 0.2 மி.கிமங்குஸ்தீன் ரீ: இதன் தோல் பாகத்தை இயற்கையான முறையில் காயவைத்து செய்யப்படுவதுதான் இந்த மங்குஸ்தீன் ரீ. இந்த ரீ குடிப்பதனால் 35-40 வயதுக்கு மேல் முகத்தில் விழும் சுருக்கம் தவிர்க்கப்படும் :)

உழைப்பு... உழைப்பு... உழைப்பு மட்டும்தான்!''

''புயல், வெள்ளம், பூகம்பம்னு இயற்கை சீற்றங்களால மக்கள் பாதிக்கப்படறப்போ, பணம், பழைய ஆடைகள்னு கொடுத்து உங்கள்ல பெரும்பாலானவங்க உதவி செஞ்சிருப்பீங்க. அப்படி ஒரு பேரிடியால அத்தனையையும் இழந்து, ஒரு காலத்துல அந்த உதவியை எதிர்பார்த்து கை நீட்டி நின்ன நாங்க, இன்னிக்கு ஐந்து பணியாளர்கள், ஆயிரத்தி ஐந்நூறு கஸ்டமர்கள்னு வளர்ந்து நிக்கறோம் எங்க கார்மென்ட்ஸ் தொழில்ல. இந்த முன்னேற்றத்துல எந்த மேஜிக்கும் இல்ல. உழைப்பு... உழைப்பு... உழைப்பு மட்டும்தான்!''
- நிதானமான பேச்சு சுப்புலட்சுமி கமலேஷுக்கு.


சுப்புலட்சுமியும் கமலேஷும் காதல் தம்பதி. இந்தத் திருநெல்வேலிப் பெண், குஜராத்காரரான கமலேஷை திருமணம் செய்து, பல தடுமாற்றங்களுக்குப் பின் வாழ்க்கையில் காலூன்றியபோது... குஜராத்தில் நிகழ்ந்த அந்த மாபெரும் பூகம்பம் சில நொடிகளில் அவர்களின் உயிரை மட்டும் விட்டுவிட்டு... வீடு, கார், தொழில், சேமிப்பு என அவர்களின் அத்தனை வருட உழைப்பின் பலனையும் சிதைத்துவிட்டது. அதிலிருந்து மீண்டு, இன்று பெரம்பூரில் 'கல்கி பொட்டீக்' என்ற கடைக்கு அவர்கள் முதலாளி ஆகியிருக்கும் கதை, இன்னுமோர் தன்னம்பிக்கை அத்தியாயம் நமக்கு!

''சென்னை எத்திராஜ் காலேஜ்ல நான் பி.ஏ. படிச்சிட்டிருந்தப்போ, கமலேஷ் ஏ.எம். ஜெயின் காலேஜ்ல பி.காம். படிச்சிட்டிருந்தாரு. ஒரே ஏரியாவுல வீடுங்கறதால... நட்பு, காதல்னு முன்னேறி, கல்யாணம் முடிச்சோம். சின்னதா ஒரு வாடகை வீட்டுக்குக் குடி போனோம். எங்களோட பி.ஏ., பி.காம் இதுக்கெல்லாம் சொல்லிக்கற மாதிரி எந்த வேலையும் கிடைக்காததால, சொந்தமா தொழில் செய்ய முடிவெடுத்தோம்.

மாமியார் வீடும் சென்னையிலதான். அவங்க வீட்டுக்குப் போகும்போதெல்லாம் நான் கத்துக்கிட்ட நார்த் இண்டியன் உணவு அயிட்டங்கள செஞ்சு, வீடு வீடா சப்ளை செய்ய ஆரம்பிச்சோம். நான் ஒரு சப்பாத்தி தேய்க்கறதுக்குள்ள... இவரு நாலு சப்பாத்தி தேய்ச்சுக் கொடுக்கற ஸ்பீடும் சப்போர்ட்டும் கைகொடுக்க,

அந்த கேட்டரிங் பிஸினஸ் நல்லாவே பிக்-அப் ஆச்சு. முதல் குழந்தை சிராஜ் பிறந்தான். இவரோட ஃப்ரெண்ட்ஸ§ங்க நிறைய பேர் குஜராத்துல இருந்ததால, 'இங்க வந்து சவுத் இண்டியன் உணவுகள் செஞ்சா தடதடனு முன்னேற்றம் இருக்கும்டா'னு கூப்பிட, நாங்களும் குடும்பத்தோட குஜராத்துக்கு ஷிஃப்ட் ஆனோம்!'' என்ற சுப்புலட்சுமி, கமலேஷைப் பார்க்க, அவர் தொடர்ந்தார்...

'ராத்திரிலதான் அங்க சௌத் இண்டியன் சாப்பாட்டுக்கு வரவேற்பு. இரவு எட்டு மணிக்குள்ள எல்லா வீட்டுக்கும் சப்ளை பண்ணிடுவோம். பகல்ல நிறைய நேரம் இருந்ததால, மார்க்கெட்ல புதுசா வர்ற புராடக்ட் பத்தி சர்வே எடுத்துக் கொடுக்கற வேலையையும் ஆரம்பிச்சோம். ரெண்டு பிஸினஸ§ம் மளமளனு பிக்-அப் ஆச்சு. கீழ் தளத்துல ஆபீஸ், மேல் தளத்துல வீடு. 45 பேரை வேலைக்கு வெச்சிருக்கற அளவுக்கு லட்சங்கள்ல கொழிச்சது எங்க வருமானம். மகிழ்ச்சியோட உச்சத்துல நாங்க இருக்க, அடுத்ததா எங்க பொண்ணு ருஷாலி பிறந்தா...'' என்றவர், அதன் பிறகு தங்கள் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றிப்போட்ட அந்த துயர சம்பவத்தைச் சொல்லத் தொடங்கும்போது அவரின் குரல் பதற்றமாகிறது...

''2001 ஜனவரி 26-ம் தேதி காலையில குடியரசு தின விழாவுக்காக எங்க பையனோட ஸ்கூலுக்கு குடும்பத்தோட போயிட்டிருந்தப்போ, கார்ல ஒருவித நடுக்கத்தை உணர்ந்தோம். சில நிமிஷங்கள்ல ஊரே சுடுகாடாகிப்போய்க் கிடக்க, ஓடிப்போய் எங்க வீட்டைப் பார்த்தா... செங்கல் குவியல்தான் மிஞ்சியிருந்துச்சு. உயிருக்கு உயிரா பழகின பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் மண்ணோட மண்ணா புதைஞ்சிருந்தாங்க. சாப்பாடில்ல, தூக்கமில்ல, அழக்கூட திராணியில்ல. நாலு நாள் நடு ரோட்டுல புழுதிலயே கிடந்தோம். 'முறைப்படி கட்டப்படாத பில்டிங்'னு சொல்லி எந்த நஷ்டஈடும் எங்களுக்கு கிடைக்கல. நிவாரணப் பொருட்களை வாங்கி பசியாத்திக்கிட்ட எங்க கையில அப்ப இருந்தது அஞ்சு ரூபாய் மட்டும்தான்!''
- குரல் கரகரக்கிறது கமலேஷுக்கு.
மறுபடியும் சென்னை... உறவுகள், நண்பர்கள் அடைக்கலப்படுத்த, மீண்டும் ஆதியிலிருந்து தொடங்க முடிவெடுத்திருக்கிறார்கள் இந்தத் தம்பதி.

''அதே கேட்டரிங் பிஸினஸ்தான். என் கணவோரட சகோதரர், நண்பர்கள் கொடுத்து உதவின பணம்தான் மளிகை வாங்க மூலதனம். 'எப்படியெல்லாம் இருந்தோம்'ங்கற சுயபச்சாதாபத்தை தூக்கிப் போட்டுட்டு, 'எப்படியும் எழுந்துடுவோம்'ங்கற நம்பிக்கையோட உழைச்சோம். முதல்ல டிபன் மட்டும்தான் போட்டோம். ஒரே மாசத்துக்குள்ள 50 ரெகுலர் கஸ்டர்மர்ஸ் கிடைக்க, மூணுவேளை சாப்பாடுனு முன்னேறினோம். ஒரு நிமிஷம்கூட நாங்க ரெண்டு பேரும் 'ஹப்பா'னு அலுப்பா உட்கார மாட்டோம். நண்பர் ஒருத்தர் எங்களுக்காக லோக்கல் சேனல்ல விளம்பரம் செஞ்சார். இப்படி எங்கள சுத்தி இருந்த நல்ல உள்ளங்கள் கை கொடுக்க, நாலஞ்சு வருஷத்துல பிஸினஸ் ஸ்திரமாகியிருந்தது'' எனும் சுப்புலட்சுமிக்கு, அடுத்து காத்திருந்திருக்கிறது ஒரு ஸ்பீட் பிரேக்கர்.

''யூட்ரஸ் பிரச்னையால எனக்கு உடம்புக்கு சரியில்லாமப் போக, முன்ன மாதிரி வேலைகள் பார்க்க முடியாமப் போயிடுச்சு. என்னோட கைப் பக்குவமும், அவரோட கூட்டு உழைப்பும்தான் எங்க வெற்றிக்கு காரணங்கறதால, அவரால தனியா சமையலை கவனிக்க முடியாம, ரொம்பச் சிரமப்பட்டார். 'இனி இந்த பிஸினஸ் சரிப்பட்டு வராது'ங்கற நிலமை வந்தப்போ, 'டெய்லரிங் யூனிட் வைக்கலாம்'னு முடிவு பண்ணினோம். ஆனா, எங்க ரெண்டு பேருக்குமே தையல் தெரியாது'' என்ற சுப்புலட்சுமியை நாம் ஆச்சர்யமாகப் பார்த்தோம். கமலேஷ் பேசினார்...

''நான் ஒரு பஞ்சாபி லேடிகிட்ட டெய்லரிங் கத்துக்கிட்டேன். குஜராத், பாம்பேனு போய் வெரைட்டியா, சீப்பா மெட்டீரியல் வாங்கிட்டு வந்து தைக்க ஆரம்பிச்சேன். சுடிதார், பிளவுஸ்னு டிரெண்டியா, அளவு கச்சிதமா இருந்த அந்த ஆடைகளுக்கு பெண்கள்கிட்ட ரொம்பவே வரவேற்பு. கஸ்டமர்கள் குவிஞ்சாங்க. சுப்புலட்சுமி கடையையும் கஸ்டமர்களையும் பார்த்துக்கிட்டாங்க. நான் டெய்லரிங் யூனிட்டை கவனிச்சுட்டேன். நம்பிக்கை தர்ற மாதிரி வருமானம் வர, பேங்க்ல 5 லட்சம் லோன் வாங்கி, 5 டெய்லர்களை வெச்சு கடையை விரிவுபடுத்தினோம்.

என் மனைவி புதுப் புது ஐடியா சொல்ல, நானும் அதைக் கிரியேட்டிவ்வா தைச்சேன். இப்ப 1,500 ரெகுலர் கஸ்டமர்கள் இருக்காங்க எங்ககிட்ட!'' என்று சந்தோஷப்படும் கமலேஷின் மகன் தற்போது பி.டெக் படிக்க, மகள் எட்டாவது படிக்கிறார்.
''கீழ விழுந்தப்போவெல்லாம்... 'இதுவும் கடந்து போகும்'னு நாங்க எழுந்தது, அயராது உழைப்பு, நல்ல நட்புகள்ங்கற காரணங்களோட... ஒவ்வொரு முறையும் நான் சோர்ந்து போனா இவரும், இவர் துவண்டு போறப்போ நானும் ஆத்மார்த்த ஆறுதலா இருந்ததும் முக்கிய காரணம்!''
- தொழிலிலும் அவர்களை ஜெயிக்க வைத்திருக்கிறது சுப்புலட்சுமி சொன்ன இந்த இல்லற சூத்திரம்!
நன்றி : அவள் விகடன்


Thursday, March 29, 2012

ஆயத்த ஆடை ஏற்றுமதி உயர்வு

புதுடில்லி:நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, சென்ற பிப்ரவரி மாதத்தில், 128 கோடி டாலராக (6,400 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 1.5 சதவீதம் அதிகம் என, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து, அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு ஆயத்த ஆடைகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சர்வதேச பொருளாதார மந்த நிலையால், இந்திய ஆயத்த ஆடை இறக்குமதியில், 80 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், இதன் தேவை வெகுவாகக் குறைந்துள்ளது.
தற்போது, பொருளாதார மந்த நிலையிலிருந்து அமெரிக்கா, இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது. இதனால், வரும் மாதங்களில், இந்தியாவிலிருந்து, ஆயத்த ஆடைகளை அமெரிக்கா அதிக அளவில் இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.பாரம்பரிய சந்தைகளில் ஏற்றுமதி பாதிக்கப்பட்ட நிலையிலும், புதிய சந்தைகளாக கண்டறியப்பட்டுள்ள ஜப்பான், மேற்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்றவற்றுக்கு ஆயத்த ஆடைகள் அதிக அளவில் ஏற்றுமதியாகிறது.
நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, 1,210 கோடி டாலராக (60 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 19 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு 2011-12ம் நிதி ஆண்டில் ரூ.1,000 கோடிக்கு கயிறு பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு

கொச்சி:நடப்பு 2011-12ம் நிதியாண்டில், 1,000 கோடி ரூபாய் மதிப்பிற்கு, கயிறு மற்றும் கயிறு பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக கயிறு வாரியம் தெரிவித்துள்ளது.ஐரோப்பிய நாடுகள்: நம் நாட்டிலிருந்து அமெரிக்கா, ஐரோப்பா, சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு கயிறு மற்றும் கயிறு பொருட்கள் அதிகளவில் ஏற்றுமதியாகின்றன. இவ்வகையில், கடந்த 2010-11ம் நிதியாண்டில், 2 லட்சத்து 94 ஆயிரத்து 508 டன் கயிறு மற்றும் கயிறு பொருட்கள் ஏற்றுமதியாகி உள்ளது. இதன் மதிப்பு, 804 கோடி ரூபாயாகும். இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, அளவின் அடிப்படையில், 47.31 சதவீதம் மற்றும் மதிப்பின் அடிப்படையில், 25.64 சதவீதம் அதிகமாகும்.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், இதன் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டின் இதே காலத்தை விட அளவின் அடிப்படையில், 20.13 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில், 8.82 சதவீதமும் அதிகரித்துள்ளது.ரூபாய்மதிப்பு: கடந்த ஒரு சில வாரங்களாக, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு சரிவடைந்து வரு கிறது. இது, ஏற்றுமதியாளர் களுக்கு சாதகமான அம்சம் என்றாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய இறக்குமதி யாளர்களுக்கு, அதிக செலவினத்தை ஏற்படுத்துவதால், கயிறு மற்றும் கயிறு பொருட்கள் ஏற்றுமதியில் சுணக்க நிலை ஏற்பட்டுள்ளதாக, ஆலப்புழாவைச் சேர்ந்த ஏற்றுமதியாளர் ஒருவர் தெரிவித்தார்.கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப் பட்ட, மொத்த கயிறு மற்றும் கயிறு பொருட்கள் ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்களிப்பு முறையே, 25.46 சதவீதம் மற்றும் 15.82 சதவீதம் என்றளவில் இருந்தது. இதே ஆண்டில், சீனாவிற்கான ஏற்றுமதி முறையே, 26.26 சதவீதம் மற்றும் 15.40 சதவீதம் என்றஅளவில் இருந்தது.போட்டி: முன்பு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், இந்தியா விலிருந்து அதிகளவில் கயிறு மற்றும் கயிறு பொருட் களை வாங்கி வந்தன. ஆனால், தற்போது சீனாவின் போட்டியால், இந்நாடுகள் நம் நாட்டிலிருந்து, மேற்கொள்ளும் இறக்குமதி சற்று குறைந்துள்ளது என, கயிறு வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.சீனா, சிறப்பு வகை புற்களிலிருந்து, தரை விரிப்புகள் மற்றும் மிதியடிகள் போன்ற வற்றை குறைந்த விலையில் ஏற்றுமதி செய்து வருகிறது. இது, இந்திய கயிறு பொருட்களின் விலையை விட குறைவாக உள்ளது. இதனால், நம் நாட்டின் ஏற்றுமதியாளர்கள், சீனாவின் கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.நடப்பு நிதியாண்டில், கயிறு வகைகள், தேங்காய் நார், தேங்காய் நூலிழைகள், மண் அரிமானத்தை தடுக்க கூடிய பெரிய விரிப்புகள் போன்றவை மிக அதிகளவில் ஏற்றுமதியாகிறது. இருப்பினும், கைத்தறி மிதியடிகள், விசைத்தறி தரை விரிப் புகள், ரப்பரில் பதிக்கப்பட்ட தேங்காய் நார் மிதியடிகள் போன்றவற்றின் ஏற்றுமதி, மதிப்பு மற்றும் அளவின் அடிப் படையில் குறைந்து போயுள்ளது.மூலப்பொருட்கள்: இந்நிலையில், தேங்காய் நார், கயிறு போன்றவற்றின் ஏற்றுமதி அதிகரிப்பால், உள்நாட்டு நிறுவனங் களுக்கு போதிய அளவிற்கு மூலப் பொருட்கள் கிடைக்காத நிலையும் உள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், கயிறு ஏற்றுமதி,கடந்த ஆண்டின்,இதே காலாண்டை விட அளவின் அடிப்படையில்,470 சதவீதம் என்றளவிலும், மதிப்பின் அடிப்படையில், 756 சதவீத அளவிற்கும் ஏற்றுமதியாகி உள்ளது. உள் நாட்டில், கேரளா மற்றும் தமி ழகத்தில் இருந்து தான் மிக அதிகளவில் கயிறு மற்றும் கயிறு பொருட்கள் ஏற்றுமதியாகிறது என, கயிறு வாரியம் மேலும் தெரிவித் துள்ளது.

தேங்காய் நார் விற்பனையில் கயிறு வாரியம்

பொள்ளாச்சி : தேங்காய் நார் விலை சரியும் போது, அவற்றை கொள்முதல் செய்து விற்பனை செய்ய மத்திய கயிறு வாரியம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து இவ்வாரியத்தின் தலைவர் பாலசந்திரன் கூறியதாவது: இந்தியாவில், தென்மாநிலத்தில் மட்டும் நார் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. இருப்பினும், கேரளாவிலிருந்து அதிக அளவில் நார் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பொள்ளாச்சியில் உற்பத்தியாகும் தென்னை நாரை கயிறு, தரைவிரிப்பு, மெத்தை, அலங்கார பொருட்கள் என மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்தால், மூன்று மடங்கு லாபம் கிடைக்கும்.
நார் பொருட்களின் விலை குறையும் போது, அதிக அளவு தேக்கமடைகிறது. அந்த சமயத்தை பயன்படுத்திக்கொண்டு, அதிக அளவு நாரை, மத்திய கயிறு வாரியம் கொள்முதல் செய்து இருப்பு வைத்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. கொப்பரைக்கு மத்திய அரசு ஆதரவு விலை நிர்ணயம் செய்துள்ளதை போன்று, கயிறு வாரியம் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தின் நார் ஏற்றுமதியில், பொள்ளாச்சி 90 சதவீதம் பங்கு வகிக்கிறது. பொள்ளாச்சியில் இருந்து ஆண்டுக்கு, 250 கோடி ரூபாய்க்கு மேல் நார் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதனால், பொள்ளாச்சிக்கு சிறந்த ஏற்றுமதி நகருக்கான அந்தஸ்து கிடைக்கவுள்ளது. இதன் வாயிலாக ஏற்றுமதிக்கான வாய்ப்பு அதிகரிக்கும்; மத்திய அரசு பல திட்டங்களை பொள்ளாச்சிக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.
இந்தியாவில் மொத்தம், 23 காயர் கிளஸ்டர்கள் வர உள்ளன. இதில், தமிழகத்தில், மூன்று கிளஸ்டர்கள் வர உள்ளன. கேரளாவில், 1,000 ரூபாய்க்கு குறைவான ஜனதா மெத்தை, தலையணையுடன் விற்பனை செய்யப்படுகிறது. இத்திட்டத்தை நாடு முழுக்க பரவலாக்க வேண்டும். நாரால் தயாரிக்கப்படும் தரை விரிப்புகள், மலைப் பிரதேசங்களில் மண் அரிப்பை தடுக்கவும், ரோடு அமைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. காகித கவர் தயாரிப்புக்கும் நார் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நார் தொழிற்சாலைக்கான மூலப்பொருளான தென்னை மட்டையை எரியூட்டுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு பாலசந்திரன் கூறினார்.
..................................................................................................................................................

Sunday, March 25, 2012

அம்மா............................


எழுத வார்த்தைகள் இல்லாமல்
தொடங்குகி...றேன்...!!
பருவம் வரை பக்குவமாய்
வளர்த்து விட்டாயே
ஊர் சண்டை இழுத்து வந்தாலும்
உத்தமன் என் பிள்ளை என்று
விட்டு கொடுக்காமல் பேசுவாயே
அம்மா..!!

நீ சொன்ன வேலைகளை விளையாட்டாய்
தட்டி சென்ற நாட்கள்..!!
செல்லம், தங்கம், "மள்ளிகை கடைக்கு "
போய்வாட என நீ சொல்ல
இந்த வயதில் கடைக்கு போவதா?..
என நான் சொன்னேன்..!!

இன்றோ..
இங்கே கண்ணுக்கு தெரியாத
யாரோ ஒருவருக்காக ஓயாமல்
வேலை செய்கிறேன் அம்மா..!!
நெற்றி வியர்வை சிந்த பரிமாறும்
உந்தன் கை பக்குவ உணவு
நான் அறிந்த அமுதத்தின் அசல்தான்.
இருந்தும் தவறவிட்ட பல நாட்கள்..!!
கண்ணு "பத்து நிமிஷம்" பொறுத்துக்கோடா
சூடா சாப்பிட்டுட்டு போய்டுவ என நீ சொல்ல
பத்து நிமிஷமா..!, நான் வெளியல
சாப்பிட்டு கொள்கிறேன் என நான் சொல்லி
கிளம்பிய தருணங்கள்..!!

இன்றோ..
இங்கே உப்பு.,சப்பில்லா சாப்பாடு
சாப்பிடும் போதே கண்கள் களங்க
இன்று காரம் கொஞ்சம் அதிகம்
போய்விட்டது என கடைக்காரர்
சொல்ல..!!
எனக்கு மட்டும் தெரிந்த
உண்மை..!!
பாசமுடன் நீ அளித்த உந்தன்
ஒற்றை பிடி சோற்றுக்காக இப்போது
ஏங்குகிறேன் அம்மா..!!

அன்றைய பொழுதில் சுற்றி திரிந்த நாட்கள்
வரண்ட தலை முடியில் வலுக்கட்டாயமாய்
தடவி விடும் எண்ணெய் துளிகள்
வேண்டா வெறுப்பாய் நிற்கும்
நான்..!!

இன்றும்
என் தலை முடி சகாராதான் அம்மா
உந்தன் கை ஒற்றை எண்ணெய்
துளிக்காக ஏங்கி நிற்கிறது..!!
ஆசையால்..

மழையில் நனைந்து வர
முனுமுனுத்தபடி துடைப்பாய்
உந்தன் முந்தானையில்
இப்போது நனைகிறேன்
ஆசையால் அல்ல, ஏக்கத்தால்..,

அத்தி பூக்கும் தருணமாய்..!
என்றாவது ஒருநாள் என்னை
திட்டும் நீ..! அந்த நொடியில்
எதிர்த்து பேசினேனே அம்மா..!!
இன்றோ..
இங்கே உயர் அதிகாரி திட்ட
சுரணை இல்லாத கல்லாய் நிற்கிறேனே
அம்மா..!!

என்னை மன்னித்துவிடேன் அம்மா..!!
உனக்காக, தேடி திரிந்து பார்த்து,
பார்த்து வாங்கிய புடைவையை பற்றி
சொல்வதற்கு முன் உன் வார்த்தைகள்
வருமே..! கண்ணு உனக்காக
ஒரு சட்டை வாங்கிருக்கேன் வரும்போது
எடுத்துகிட்டு போடா என்று..!!

எப்படி அம்மா சொல்வேன் எந்தன்
அன்பையும் , எண்ணத்தையும்
என் ஏக்கங்களை சொல்ல துடிக்க...
கைபேசியை எடுத்து , அம்மா....என்று
சொல்லும் நொடிகனத்தில் மாறுகின்றது
எந்தன் வார்த்தைகள்., நான் இங்கு
நலமாய் இருக்கேன்..!நீ எப்படியம்மா
இருக்க..!!!

என் அன்னை ஆயிற்றே...
எந்தன் ஒற்றை வார்த்தையில்
புரிந்து கொள்வாய் எந்தன்
மனதை..!!
நான் சொல்ல மறந்த வார்த்தைகளை
பக்குவமாய் பட்டியளிடுவாய்..,
"வேளைக்கு ஒழுங்கா சாப்டு கண்ணு "
"மறக்காம எண்ண தேச்சி குளிடா"
"ரோட்ல பத்திரமா பாத்து போடா"
" உடம்ப பாத்துக்கோடா தங்கம் "
என் கண்கள் கட்டுபடுத்திக் கொண்டாலும்
என் இதையம் மட்டும் கதறி அழுகிறதே
அம்மா..!!

உன்னை என்னிடம் இருந்து பிரித்த
இந்த வாழ்க்கையை திட்டுவதா..?
இல்லை..
உந்தன் மேல் நான் வைத்திருக்கும்
பாசத்தை காட்டியதற்கு நன்றி சொல்வதா.?
தெரியவில்லையே அம்மா..!!
உனக்காக உயிரற்ற பொருட்களால்
அன்பு சின்னம் அமைத்து என்ன
பயன்..!!
உதிரம் என்னும் பசை தடவி
எலும்பு என்னும் கற்கள் அடுக்கி
உன் அன்பின் சின்னமாய் இருப்பேன்

ஆரோக்கிய வாழ்வுக்கு இஞ்சி அவசியம்

இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்துகிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும்.

இரத்தநாளங்களில் இரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின் அதை சரிசெய்வது அவ்வளவு எளிதன்று. இதற்குக் கைகண்ட மருந்தாக இஞ்சி விளங்குகின்றது. இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கின்றது.

ஆரோக்கியமான 30 நபர்களிடம் இஞ்சியின் மருத்துவகுணத்தைக் குறித்து அறிய சோதனை நடத்தப்பட்டது. முதல் வாரத்தில் 50 கிராம் வெண்ணையும், 4 ரொட்டித்துண்டுகளும் அவர்களுக்குக் கொடுக்கபட்டன. அடுத்த வாரம் அதனுடன் ஐந்து கிராம் இஞ்சி சேர்த்து கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த வாரம் அவர்களின் இரத்தம் சோதிக்கப்பட்டது.

அவர்களின் இரத்த நாளத்தின் முதல் வார இயக்கம் 18.8 சதவிகிதம் குறைந்து இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த வாரம் 6.7 சதவிகிதம் அதிகரித்து இருந்தது. இதன் மூலம் இரத்தநாளங்களின் செயல்பாட்டிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சியின் பயன்பாடு தெளிவாக நிரூபிக்கப்பட்டது. மாரடைப்பு ஏற்படுவதற்கு, இரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பும், அவற்றில் ஏற்படும் இரத்தக் கட்டும் மிக முக்கிய காரணம் ஆகும்.

கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவுகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். இதற்கு இரத்தநாளங்களின் சுவர்களில் கொழுப்பு படிந்து இரத்த நாளங்களை வலுவிழக்கச் செய்வதும், இரத்த ஓட்டத்தின் வேகத்தை அது பாதிப்பதும் காரணமாகும். மேற்கண்ட ஆய்வின் மூலம் இரத்தநாளங்களின் வலுவிற்கும், சரியான இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சி வெகுவாக உதவுகிறது என்பது நிரூபணமாகியுள்ளது.

பல நோய்களுக்கு அருமருந்தாக

சளிப்பிடித்தல் ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது. இரத்தஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது; மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி

இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது. மகளிரின் கருப்பைவலிக்கும் மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.

தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும். மூட்டுவலிக்கும் இது நன்மருந்தாக இருப்பதால் ஆஸ்பிரின் ஒவ்வாதவர்களுக்கு இது நல்லதொரு அருட்கொடையாகும். எனவே ஒவ்வொரு நாள் உணவிலும் இஞ்சியை சேர்த்துக்கொள்வது உடலுக்கு பாதுகாப்பானது என மருத்துவ ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்

உன்னோடு

உன்  தோளோடு
என்  தலைசரித்து
சின்ன கதைகள் பேசியபடி
நீ  ரசித்த எல்லாவற்றையும்
உன்னோடு   நான் ரசிக்கவேண்டும்

உன் காதலால்
உன் நினைவுகளால்
மட்டுமே
என் கவிதைப் பக்கங்கள்
நிரப்பி வழியவேண்டும்

என் ஒவ்வொரு ஜென்மங்களிலும்
என் காதலாய்
என் இதய துடிப்பாய்
நீ வர வேண்டும்

என் நெற்றி வகிட்டில்
நீ ஆசையாய் தரும்
முத்தங்களின் சப்தங்கள்
மட்டும்
என் சொப்பனங்களிலும்
கேட்க வேண்டும்

உன்
இதய துடிப்பின்
 சப்தத்தில்
என் சப்தநாடிகளும்
சர்வமாய் அடங்க வேண்டும்

என் உதடுகள் உறைய
இமைகள் தட்டாமல்
உன் கண்களோடு
ஆசையாய்
நான் பேச வேண்டும்

உனக்குள்
உன் கண்களுக்குள்
நீ ஆசையாய்  சொல்லும்
பொண்டாட்டி
என்ற அழைப்பில்
என் ஆயுள் முழுதும்
நான் தொலைய வேண்டும்

எதுக்குமே லாயக்கில்லை என்று கணவரிடம் சொல்லாதீர்கள்

குடும்பத்தில் கணவன் மனைவியரிடையே ஒரு சில விசயங்களில் விட்டுக்கொடுத்தல் இருந்தால்தான் இல்லறத்தில் இனிமை கூடும். ஆனால் எதற்கெடுத்தாலும் கேள்விகள்கேட்டு கணவரை எரிச்சல் படுத்தும் மனைவிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். ஒரு சில கேள்விகளை கேட்பதினால் கணவர் வெறுப்பின் உச்சக்கட்டத்திற்கே செல்கின்றனராம். கணவரிடம் எந்த மாதிரி நடந்து கொள்ளக்கூடாது என்று உளவியல் எழுத்தாளர் ‘ஜூடி போர்ட்’தனது ‘எவ்ரிடே லவ்’ என்னும் நூலில் என்ற எழுதியுள்ளார். கணவரை காயப்படுத்தும் விசயங்கள் எவை எவை என்று பட்டியல் இட்டுள்ளார் உளவியல் நிபுணர் படித்துப் பாருங்களேன்.

பொய்யான ஆர்கஸம்

தாம்பத்ய உறவின் போது சரியாக செயல்படவில்லை என்று பொய் சொல்வது ஆண்களை எரிச்சல் படுத்தும்.

உங்க அப்பாவைப் போல அதே குணம் உங்களுக்கு இருக்கு என்று மட்டம் தட்டுவது ஆண்களுக்கு பிடிக்காது

எப்ப புதுவேலை தேடப்போறீங்க?

இது எல்லா மனைவிகளும் கேட்கும் கேள்விதான் என்றாலும் எரிச்சலான கேள்வி. இந்த வேலையை விட நல்ல வேலை எப்ப கண்டுபிடிக்கப் போறீங்க? என்பதுதான் அது.

உங்களோட நடவடிக்கைகளை கண்காணிக்கச் சொல்லி எங்கம்மா எனக்கு எச்சரிக்கை செய்திருக்காங்க என்று கணவரிடம் கூறுவது அவரை காயப்படுத்திவிடும்.

எல்லாம் எனக்குத் தெரியும்

கணவர் ஏதாவது ஒரு விசயத்தில் மனைவிக்கு உதவி செய்ய வரும் பட்சத்தில் எல்லாம் எனக்குத் தெரியும். நீங்க அதை விட்டுடுங்க. நான் பாத்துக்கிறேன் என்று கூறுவது தவறானது.

இதயத்தை நொறுக்கிவிடும்

ஏதாவது ஒரு செயலை செய்வதில் சிறு தவறு நேரும் பட்சத்தில் நீங்க எதுக்குமே லாயக்கில்லை, பைசாவுக்கு பிரயோசனமில்லை என்று கூறுவது கணவரின் இதயத்தை நொறுக்கிவிடுமாம்.

கணவரின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்கிறேன் என்ற எண்ணத்தில் அவரது உடை அணியும் விதத்தை விமர்சனம் செய்யக்கூடாது.

நண்பர்களை இழிவுபடுத்துவது

உங்கள் கணவரின் நண்பர்களை மதிக்காமல் இருப்பதும். அவர்களின் முன்னிலையிலேயே கணவரை அவமானப்படுத்துவதும் அவருக்கு மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்துமாம்.

இறுதியாக ஆனால் இதுவே கடைசியானதில்லை. தயவு செய்து குழந்தைகளை பாத்துக்கிறீங்களா? அவர்களை பத்திரமா பாத்துக்கங்க அப்படியே

அப்பனை உரிச்சி வச்சிருக்காங்க என்று கூறக்கூடாதாம். இதுபோன்ற நடவடிக்கைகளினால் இல்லற வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் என்கின்றார் உளவியல் நிபுணர்.

என்ன பெண்மணிகளே உங்கள் கணவரின் மனதை காயப்படுத்தும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டீர்கள்தானே?

ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்க மலிவான வயாக்கரா

ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம்
இது ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்கும் மலிவான வயாக்கரா என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விந்தணு குறைபாட்டினால் புதிய சந்ததியை உருவாக்க முடியாத நிலை. அதனால் ஏற்படும் மனச்சோர்வு ஆண்களை பாதிப்பிற்குள்ளாக்குகிறது. இந்த குறைபாட்டை நீங்க மருத்துவமனைகளுக்கு சென்று பல ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கும் ஆளாகின்றனர்.
ஆண்மைக் குறைபாடுள்ள ஆண்கள் இனி கவலைப்பட வேண்டாம் தக்காளி சூப் அவர்களுக்கு நிவாரணம் தருகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். தினம் ஒரு கப் தக்காளி சூப் குடிப்பது விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.
லைகோபின் சக்தி
போர்ட்ஸ் மௌத் பல்கலைக்கழக த்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். நாற்பத்து இரண்டு வயதுக்கு மேல் இருக்கும் நபர்களை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு தினம் ஒரு கப் தக்காளி சூப் இரண்டு வாரங்களுக்கு கொடுக்கப்பட்டது. சோதனையின் முடிவில் ஆய்விற்குட் படுத்தப்பட்டவர்களுக்கு இரண்டு வாரங்களிலேயே பன்னிரண்டு சதவீதம் வரை விந்தணு வீரியம் அதிகரித்திருந்தது இது ஆராய்ச்சியாளர்களையே வியக்க வைத்தது.
தினம் ஒரு கப் சூப்
தக்காளியில் இருக்கும் லைக்கோப்பின் எனும் பொருள் தான் தக்காளிக்கு அடர் சிவப்பு நிறத்தைத் தருகிறது. அந்த மூலக்கூறு தான் ஆண்களின் விந்தணு வீரியத்திற்கு காரணமாய் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். லைக்கோப்பின் ஆனது புற்று நோயை தடுக்கும் சக்தி உடையதாக இருப்பதால் தக்காளி உட்கொள்வது புற்றுநோய் செல்களை அழிக்கும் என்பது பல காலமாக பேசப்பட்டு வரும் தகவல். இப்போது “இந்த” புதிய பயனும் அதனுடன் இணைந்திருக்கிறது..
சும்மாவே தக்காளி விலை உச்சத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. இந்த ஆராய்ச்சி முடிவை படித்தவுடன் தினம் வீட்டில் தக்காளி சூப் வைக்க சொல்லி நச்சரிக்கப் போகிறார்கள் ஆண்கள் – அதுக்காக ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் மட்டும்தான் சூப் குடிக்கணும் என்றில்லை. இல்லாதவங்களும் கூட குடிக்கலாம் – வராம தவிர்க்கலாம்ல..
தேவையான பொருட்கள்
நன்கு பழுத்த தக்காளி – 5
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 6 பல்
சோள மாவு – 1 மேஜைக் கரண்டி
வெண்ணெய் – 2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் – 2 மேஜைக் கரண்டி
மிளகுத்தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
1. வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. வெண்ணெயை உருக்கி, அதில் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் வதங்கியதும், தக்காளி, தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து வதக்கவும்.
4. தக்காளி பச்சை வாசனை போக வதங்கியபின், 300 மில்லி தண்ணீர் (அல்லது கால் லிட்டர்) தண்ணீர் சேர்க்கவும்.
5. சிறு தீயில் 10 நிமிடம் கொதித்த பிறகு, கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டிக் கொள்ளவும்.
6. வடிகட்டிய தண்ணீரில் தக்காளி சாஸ் கலந்து, பிறகு அதில் தனியே தண்ணீரில் கரைத்த சோள மாவைச் சேர்க்கவும்.
7. பின்னர் 5 நிமிடம் கொதிக்கவிட்ட இறக்கி வைத்து, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்

தொழில் வாய்ப்பு

நம் மத்திய அரசாங்கத்தின் புதிய பொருளாதார தாராள மயமாக்கப்பட்ட கொள்கைகளினால் எண்ணற்ற கம்பெனிகள் நம் நாட்டில் தொழிற்சாலைகள் அமைத்து வருவதாலும், நம் இந்திய மக்கள் தொகை பெருக்கத்தினால் நகரங்கள் அனைத்தும் விரிவடைந்து வீடுகள், கடைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தொழிற்சாலைகள், நான்கு வழி / ஆறுவழி சாலைகள் அமைப்பதற்கான பல்வேறு விரிவாக்கங்களால் பெரும்பாலான விவசாய நிலங்கள் தற்போது விவசாயம் செய்ய வாய்ப்பு இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.உழவர்கள் எப்பொழுதும் மின்சாரத்தை நம்பி விவசாயத்தை முறைப்படி செய்ய இயலாமல் பலர் தவிக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு புதிய வரப்பிரசாதமாக சென்னை சௌத் இநதியன் கேஸ் ஏஜன்சியின்  திரு.இராஜேந்திரன் புதிய கியாஸ் அறிமுகம் செய்துள்ளார். அவரை கேட்டபோது…
தற்போது நம் மத்திய அரசாங்கத்தின் புதிய பொருளாதார தாராளமயமாக்கப்பட்ட கொள்கைகளினால் எண்ணற்ற கம்பெனிகள் நம் நாட்டில் தொழிற்சாலைகள் அமைத்து வருவதாலும், நம் இந்திய மக்கள் தொகை பெருக்கத்தினால் நகரங்கள் அனைத்தும் விரிவடைந்து வீடுகள், கடைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தொழிற்சாலைகள், நான்கு வழி / ஆறுவழி சாலைகள் அமைப்பதற்கான பல்வேறு விரிவாக்கங்களால் பெரும்பாலான விவசாய நிலங்கள் தற்போது விவசாயம் செய்ய வாய்ப்பு இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. மேலும் நம் நாட்டு விவசாயிகள் தம்முடைய விவசாய பொருட்களை விளைவிக்க முக்கியமாக தண்ணீர் தேவைப்படுகிறது. அவைகள் முறையே ஆறு, குளம், குட்டைகள், ஏரிகள், கிணறு, போர்வெல், கிணறு ஆகிய இவைகள் மூலம் தண்ணீர் பெற்று விவசாயம் நடைபெறுகிறது. இவற்றில் கிணறு மற்றும் போர்வெல் கிணற்றில் இருந்து மின்சாரத்தின் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் பெறப்படுகிறது. தொழிற்சாலைகள் மற்றும் வீடுகள் பெருக்கத்தினால் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு போதிய அளவில் விவசாயம் செய்ய முடியவில்லை. விளைநிலங்கள் வெறும் நிலங்களாக உள்ளன. மேலும் தற்போதெல்லாம் பருவநிலை மாறியுள்ளது. இதனால் ஏற்ற காலத்தில் மழை பெய்வதில்லை,
இதனாலும் தண்ணீர் இல்லாததால் விவசாயி தொழில் செய்ய முடியவில்லை. இதற்கெல்லாம் முக்கிய காரணம் என்ன தெரியுமா?
நாம் அனைவரும் உயிர் வாழ உணவு மிகவும் அவசியம். அந்த உணவு தயார் செய்வதற்கு நம் நாட்டு¢ மக்கள் 75% பேர் விறகுகளையே பயன்படுத்தி வருகின்றனர். வீடு, டீக்கடைகள், ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், பள்ளி / கல்லூரிகள் / பல்கலைக்கழங்களில் உள்ள விடுதிகள், ஆண்டுகள் / பெண்கள் விடுதிகள், சில தொழிற்சாலைகள் என யாவரும் விறகுகளை பயன்படுத்துகின்றனர். இதனால் தினந்தோறும் நம் இந்திய தேசமெங்கும் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படுகின்றன. இந்த இழப்பீட்னால் நம் தேசத்தில் சீதோஷண நிலை மாறுபடுகிறது. எனவே மழை பெய்வது பொய்த்து விடுகிறது. தற்போதைய சூழ்நிலையில் மக்கள் 120 கோடி பேருக்கு உணவு சமைகக (75%) 1 நாளைக்கு லட்சக்கணக்கான டன் மரங்கள் (விறகுகள்) தேவையெனல் 1 மாதம் / 1 வருடம் என கணக்கு போட்டால் பல கோடி டன் மரங்கள் வெட்டப்படுகின்றன. இதே நிலை நீடித்தால் கூடிய விரைவில் இந்திய தேசத்தில் உள்ள மரங்கள் பூராவும் வெட்டப்பட்டு, இதனால் மழை பெய்யாமல் காடுகள் அனைத்தும் அழிந்து பாலைவனம் ஆகிவிடும் என்ற சூழ்நிலைக்கு  மாறிவிடும். எனவே தான் நான் சொல்கிறேன் நம் மக்கள் உண்ணும் உணவு தயார் செய்வதற்கு 100க்கு 100% விறகுகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்று ஏற்பாடாக சமையல் எரிவாயு (லி.றி. நிணீs) தான் சிறந்த வழி. சமையலுக்கு என்று அனைத்து மக்களும் லிறி நிணீsஐ பயன்படுத்துவதால, மரங்கள் (விறகு) எரிப்பது குறைகிறது. இதனால் மரங்கள் வெட்டப்படுவது குறைகிறது.
நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த சமயத்தில் ஒரு மோட்டாரை தயார் செய்துள்ளேன். இதனை இயக்க போதுமானது. இந்த மோட்டாரை கொண்டு இயக்குவதால் மின்சாரம் உற்பத்தியாகிறது என்பதை கண்டறிந்தேன். இவ்வகையான மோட்டர்களையும் எமது கேஸ் சிலிண்டர்களையும் கொண்டு மின்சாரம் தயார் செய்வதை நான் விவசாயத்திற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளேன். நம் நாட்டில் 75% விளைநிலங்கள் வானம் பார்த்த பூமியாக உள்ளது. வருடத்திற்கு 1 முறை மட்டுமே இவ்வகையான மேட்டுக்காட்டு நிலங்களில் மானாவாரிப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
இவைகள் 3 மாதத்திற்கு பிறகு அறுவடை செய்தபின், மற்ற எஞ்சிய 9 மாதங்கள் எந்தவிட பயனுமின்றி வெறுமனே கிடக்கின்றன. இவ்வகையான நிலங்களில் நீரோட்டம் பார்த்து, போர்வெல் அமைத்து எமது மோட்டார் மற்றும் சிலிண்டர் கொண்டு மின்சாரம் எடுத்து நிலத்தடி நீரை வெளிக்கொண்டு வந்து விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்.
இவ்வகையான செயல்பாட்டிற்கு போர்வெல் அமைப்பது மோட்டார், கேஸ் சிலிண்டர் ரெகுலேட்டர் அடாப்டர் கிட் பைப்புகள் மற்ற இதர பொருட்கள் ஆகியவற்றின் ரூபாய் ஒன்றரை லட்சம் முதல் 2 லட்சம் வரை தேவைப்படும். இந்த தொகை ஒரு முறை மட்டும் முதலீடு செய்தால் போதும். மாதா மாதம் சிலிண்டருக்கான கேஸ் தொகை செலுத்தினால் போதும். இந்த விவசாயிகள் மிகவும் பின்தங்கிய ஏழை விவசாயிகள். இவர்களால் லட்சக்கணக்கில் செலவு செய்து கிணறு வெட்டவோ அல்லது போர்வெல் அமைக்கவோ மற்றும் மின்சார வாரியத்திற்கு மின்சாரத்திற்காக ஒரு குறிப்பிட்ட தொகை டெபாசிட் செய்யவோ மேலும் மின்கம்பம் வயர் அமைத்து கொடுக்க செலவுகளையோ ஈடுகட்ட முடியாது.
எமது திட்டத்தின்படி எங்களது வாடிக்கையாளராக விரும்பும் விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ரூ.4 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மிகக்குறைந்த வட்டியில் கடன் ஏற்பாடு செய கொடுக்கப்படும். இந்த திட்டத்தில் சேர குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலம் சொந்தமாக வைத்திருக்க வேண்டும். இந்த திட்டத்திற்கு நாங்கள் 33 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்த உள்ளோம்.
மத்திய, மாநில அரசுகள் இந்த திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் ஒரு விவசாயி தமது நிலத்திற்கான தண்ணீரை இறைத்துக் கொள்ளலாம். போர்வெல் பக்கத்தில் ஒரு ஷெட் (கொட்டகை) அமைத்துக் கொண்டால் அதில் சமையல் செய்து கொள்ளலாம். இரவில் லைட் எரித்துக் கொள்ளலாம். ஆக 3 காரியங்களில் எமது திட்டத்தால் விவசாயிகள் பயன்பெறலாம். 33 கிலோ கேஸ் எடையுள்ள சிலிண்டர் 2 முதல் 3 சிலிண்டர்கள் போதும். 5 ஏக்கர் நிலம் பயிர் செய்வதற்கு 3 மாதத்தில் பயிர் அறுவடை செய்து விடலாம்.
மாநில அரசு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குகிறது. எமது திட்டம் பரவலாக்கப்படும் போது இந்த இலவச மின்சாரம் தேவையில்லை. இந்த இலவச மின்சாரத்தை கொண்டு மற்ற நல்ல திட்டங்களுக்கு அரசாங்கங்கள் செயல்படுத்த முடியும். தற்போதுள்ள மின்சார பற்றாக்குறைக்கு இந்த எமது திட்டம் மிகவும் ஏற்றது. எமது திட்டத்தினால் சுற்றுப்புறச் சூழல் மாசுபடாமல் காக்கப்படுகிறது. கிராமத்திலுள்ள விவசாய தொழில் செய்யும் பாட்டாளி மக்களுக்கு வருடம் முழுவதும் வேலைவாய்ப்பு கிடைக்கும். தத்தம் வாழ்வாதாரம் பெருகி மகிழ்ச்சியுடன் வாழ்வர். இந்த திட்டத்திற்கு நான் (கிரீக்ஷீவீநீuறீtuக்ஷீணீறீ நிணீs) விவசாய எரிவாயு என்று வைத்துள்ளேன். இது மட்டுமா!
பவதலூம் விசைத்தறி (நெசவுத் தொழில்)க்கும் எமது மோட்டார் + கேஸ் சிலிண்டர் கொண்டு மின்சாரம் பெற்று செயல்படுத்த முடியும். ஒரு விசைத்தறி இயக்க ஆகும் மின்சார செலவில், மீதப்படுத்தலாம். மேலும் 3 ஷிப்டுக்கு தொடர்ந்து விசைத்தறிகளை இயக்கலாம். சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்படும். மின்சாரம் இல்லை என்ற கவலை வேண்டாம். விசைத்தறி உரிமையாளர்கள் இது சம்பந்தப்பட்ட அனைத்து சுயதொழில் முதலாளிகள், அனைத்து வகையான தொழிலாளர்கள் அனைவருக்கும் தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்கும். தொழில் தொடர்ந்து நடைபெற புதிய புதிய ரகங்கள், புதிய தொழில் நுணுக்கங்கள் புகுத்தி இந்த இந்திய ஜவுளித்துறையை உலகத்தில் நெ.1 ஆக கொண்டு செல்ல முடியும், இது மட்டுமா!
மீன்பிடித் தொழிலில் நம் நாடு விளங்குகிறது. ஏனெனில் 3 பக்கமும் கடல் எல்லைகளை கொண்ட நாடு நமது இந்திய நாடு. எனவே லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பிடிக்கும் மீன்கள் டன் கணக்கில் கடல் அன்னை நம் மக்கள் வயிற்றுப் பசியை தணிக்கிறது. நம் தேவைப்போக அரிய வகை மீன்கள் மருத்துவ குணமுள்ள மீன்கள் வெளிநாட்டிற்கு அன்னிய செலாவணியை ஈட்டுகிறது.
எனவே இந்த மீன்பிடித் தொழிலுக்கும் மத்திய மாநில அரசுகள் மானிய விலையில் டீசல் சப்ளை செய்கிறது. இதனை சில சமூக விரோத செயல்பாடுகளில் ஈடுபடும் குறுகிய எண்ணம் கொண்ட வியாபாரிகள் இந்த டீசலில் கலப்படம் செய்து மீன்பிடி மோட்டார்களுக்கு சப்ளை செய்கிறார்கள். இதனால் மோட்டார் பழுதடைந்து மோட்டார் இயங்காமல் காற்றடித்த பக்கம் விசைப்படகுகள் போய்விடக்கின்றன.
மழைக்காலங்களில் இவ்வகை படகுகளில் உள்ள மோட்டார்கள் பழுதடைந்து இயங்காததாலும், புயல் காற்றாலும் விசைப்படகுகள் நம் கடல் எல்லையை தாண்டி பிற நாட்டு கடல் எல்லைக்குள் செல்வதினால் நம் மதிப்பிற்குரிய மீனவ தொழிலாளர்கள் சொல்ல முயாத துன்பத்திற்கு உட்பட்டு பலபேர் உயிரிழக்கின்றனர்.
எனவே இதனை களையும் பொருட்டு, எமது திட்டத்தின்படி இவ்வகையான விசைப்படகுகள் இயங்கும்போது கடல் சூழ்நிலையில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்படுகிறது. மீனவர்கள் விசைப்படகை இயக்கவும், இரவில் தேவைப்படும் லைட் எரிக்கவும், மேலும் சமைத்து சாப்பிடவும், ஆக 3 காரியங்களை செய்து கொள்ளலாம். ஒரு விசைப் படகுக்கு 17 கிலோ கமர்ஷியல் சிலிண்டர்கள் இரண்டு + மோட்டார் + உதிரி பாகங்கள் என ரூ. 30,000 முதல் ரூ. 50,000 ஒரு முறை செலவு செய்து அமைத்துக் கொண்டால் போதும், சிலிண்டர்களை தீரத்தீர மாற்றி சிலிண்டர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
இது மட்டுமா 1991, 92ல் சொன்னேன். இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங்களும் கேஸால் ஓடப்போகிறது. பெட்ரோல் பங்க் போல் கேஸ் பங்கும் வரப்போகிறது என்று. எமது திட்டத்தின்படி பஸ், லாரி, வேன், மோட்டார் சைக்கிள் ஆக பெட்ரோல், டீசலில் இயங்கக்கூடிய அனைத்து வாகனங்களும் கேஸால் இயங்க முடியும். இதனால் சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்படுகிறது. கேஸ் பயன்பாட்டினால வாகனத்தில் உள்ள இன்ஜின்கள் ஆயுள் கூடி ஓர் சுகமான பிரயாணத்தை நமக்கு வழங்குகிறது.
ஆக எமது நிறுவனத்தின் மூலம் இந்தியா முழுவதும் கீழ்க்கண்ட வியாபாரத் திட்டங்கள் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
1, Domestic Gas உபயோகத்திற்கு (12 Kg, 15 Kg
LPG) சிலிண்டர்கள்
2, Commercial Industrial Gas (17 Kg, 33 Kg, LPG சிலிண்டர்கள்)
3 , Automobile Gas (Auto Gas)
4, Agricultural Gas ( 33 Kg LPG) சிலிண்டர்கள்
மேற்கூறியுள்ள அளவு சிலிண்டர்களுடன் ரெகுலேட்டர்கள், ரப்பர் டியூப், லைட்டர், அடுப்புகள் சம்பந்தப்பட்ட பொருட்கள் விநியோகிக்கப்படும். இதற்கென தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களுக்கு மாவட்ட விநியோகஸ்தர்கள் (District Distributors) ஏரியா / யூனியன் வாரியாக டீலர்களை நியமித்துக் கொண்டு வருகிறோம். தமிழகத்தில் சுமார் 500 முதல் 600 டீலர்கள் நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் தமிழகம் முழுவதும் தங்கு தடையின்றி சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் வியாபாரிகள் படித்து வேலையற்ற பட்டதாரிகள், ஓய்வு பெற்றவர்கள் என பல்வேறு பிரிவினர் முதலாளிகளாகவும், ஆயிரக்கணக்கான பேர்கள் வேலை வாய்ப்பும் பெறுவார்கள். வீட்டு உபயோகத்திற்கு வழங்கப்படும் சிலிண்டர்களான 12 கிலோ, 15 கிலோ சிலிண்டர்களில் ஏதேனும் ஒரு சிலிண்டர் வாடிக்கையாளருக்கு வழங்க உள்ளோம். அடுப்பு வாங்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. அரசாங்க நிறுவனமான இண்டேன் கேஸ் (மிளிசி) பாரத் கேஸ் (ஙிறிசி) எச்பி. கேஸ் (பிறி நிணீs) ஆகிய நிறுவனங்களில் சமையல் கேஸ் இணைப்பு பெற்றுள்ள யாவரும் எமது ஜி.எல்.ஓ.ஏ. ராஜம் கேஸ் சிலிண்டர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
இவர்கள் எங்களது சிலிண்டர்களுடன் 22 எம்.எம். ரெகுலேட்டர்களையும் வாங்கி கொள்ள வேண்டும். அரசாங்க நிறுவனத்தின் ரெகுலேட்டர்கள் எமது சிலிண்டருக்கு பொருந்தாது. மேலும் எமது அங்கீகாரம் பெற்ற டீலர்களிடம் கேஸ் இணைப்பு பெறும்போது எந்தவித ஐ.டி. புரூப், அட்ரஸ் புரூப் தேவையில்லை. குடும்பத்திற்கோ, ஹோட்டல், டீக்கடை, விடுதி, தொழிற்சாலைக்கோ எவ்வளவு வேண்டுமானாலும் தங்கு தடையின்றி சிலிண்டர்கள் சப்ளை செய்யப்படும்.
நவம்பர் / டிசம்பர் மாதம் முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த வகையில் தொழில்முனைவோர்கள் உடனே அணுகி தொழில்வாய்ப்புப் பெற்று கை நியை சம்பாதிக்கலாம் என்கிறார்,
மேலும் விபரம் பெற 9381212777 /
044-2122779

Thnxs:http://thozhilathibar.com

Thursday, March 22, 2012

சூரிய காந்தி விவசாயம்

இது பற்றி தெரிந்தால்தான் சூரிய காந்தி ஆயில் தயாரிக்க முடியும்
பருவம் மற்றும் இரகங்கள்
அ.மானாவாரி
1.ஆடிப்பட்டம் (ஜீன்-ஜீலை)இரகங்கள் மார்டன், கோ 4
கோயமுத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல்,
திருநெல்வேலி, திண்டுக்கல், தர்மபுரி,
திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர்
வீரிய ஒட்டு டி.சி.எஸ்.எச்.1 கே.பி.எஸ்.எச்1, கே.பி.எஸ்.எச் 44, பி.ஏ.சி. 1091, எம்.எஸ்.எப்.எச்.17
2.கார்த்திகைப்பட்டம் (அக்டோபர்-நவம்பர்)இரகங்கள் மார்டன், கோ 4
கடலூர், விழுப்புரம், விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை. திண்டுக்கல், தேனீ, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூார், கரூர், திருநெல்வேலிவீரிய ஒட்டு டி.சி.எஸ்.எச்.1.கே.பி.எஸ்.எச்1, கே.பி.எஸ்.எச்.44, பி.ஏ.பி.1091, எம்.எஸ்.எப்.எச்.17

ஆ. இறவை
1.மார்கழிப்பட்டம் (டிசம்பர்-ஜனவரி)இரகங்கள் மார்டன், கோ 4
சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல், தேனீ, திருநெல்வேலி, தூத்துக்குடிகே.பி.எஸ்.எச்1, கே.பி.எஸ்.எச் 44, பி.ஏ.சி. 1091, எம்.எஸ்.எப்.எச்.17
2.சித்திரைப்பட்டம் (ஏப்ரல்-மே)இரகங்கள் மார்டன், கோ 4
கோயம்புத்தூர், ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர்வீரிய ஒட்டு .சி.எஸ்.எச்.1.
கே.பி.எஸ்.எச்1, கே.பி.எஸ்.எச்.44, பி.ஏ.பி.1091, எம்.எஸ்.எப்.எச்.17
சூரியகாந்தி இரகங்கள்
பண்புகள்மார்டன்கோ 4டி.சி.எஸ்.எச்.1
பெற்றோர்செர்னியன்கா 66-ல் இருந்து தேர்வுகுட்டை ஓ சூரியா வழித் தோன்றல்234 ஏ ஒ ஆர் 272
வயது (நாள்)7580-8585
விளைச்சல் (கி.ஹெ.)
மானாவாரி
90015001800
இறவை100017502500
எண்ணெய் சத்து()3639.741
உயரம் (செ.மீ.)90145 175160
பூவிதழின் நிறம்வெளிரிய மஞ்சள்வெளிரிய மஞ்சள்வெளிரிய மஞ்சள்
விதையின் அளவுநடுத்தரமானதுநடுத்தரமானதுநடுத்தரமானது
விதையின் நிறம்கருப்புகருப்புகருப்பு, சில விதைகளில் கோடுகள் இருக்கும்
1000 விதைகளின் எடை(கி)445660
மண்வகை
நல்ல வடிகால் வசதியுள்ள எல்லா மண் வகையும் சூரியகாந்தி சாகுபடிக்கு ஏற்றது. கரிசல் பூமியில் நன்றாக வளர்ந்து அதிக மகசூல் கொடுக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள எல்லா மண் வகையிலும், எல்லா மாவட்டங்களிலும் சாகுபடி செய்யலாம்.
sunflower0001
sunflower0002
நிலம் தயாரித்தல்
நிலத்தில் 12.5 டன் மக்கிய தொழு உம் அல்லது தன்னை நார்க் கழிவு இட்டு நன்றாக உழுது பண்படுத்தி மண்ணை நன்றாகப் புழுதியாக்க வேண்டும்
விதை அளவு
மானாவாரி
இறவை
இரகங்கள்
7 கி.எக்டர்
6 கி.எக்டர்
ஒட்டு இரகங்கள்
6 கி.எக்டர்
4 கி.எக்டர்
sunflower0004
விதை நேர்த்தி
மானாவாரியில் விதைக்கும் முன் விதையை சிங்க் சல்பேட் 2 கரைசலில் 12 மணிநேரம் ஊறவைத்து. நிழலில் உலர்த்திய பின்னர் விதைப்பு செய்யலாம், கார்பென்டாசிம் 2 கிராம், கிலோ விதையுடன் கலந்து 24 மணி நேரம், கழித்து விதைப்பு செய்ய வேண்டும். அல்லது டிரைகோடர்மா 4 கிராம், கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்யலாம். சோஸ்பைரில்லம் 3 பாக அசோஸ்பைரில்லம் (600 கிராம், ஹெ) மற்றும் 3 பாக் (600 கிராம், ஹெ) பாஸ்போபாக்ஏரியா அல்லது 6 பாக் அசோபாஸ் கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும் விதைநேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 15 நி உலர்த்தி, உடனடியாக விதைக்க வேண்டும்
விதைப்பு
ஒரு குழிக்கு இரண்டு விதை என்ற அளவில் பாரின் பக்கவாட்டில் 3 செ.மீ. ஆழத்தில் விதைக்கவும், நடவு செய்த 10-15வது நாளில் வளர்ச்சி இல்லாத செடிகளை களைந்து குழிக்கு ஒர் நல்ல செடி இருக்கும்படி பராமரிக்க வேண்டும்.
பயிர் இடைவெளி
ஒட்டு இரகங்கள் 60 ஒ 30 செ.மீ
இரகங்கள் 45 ஒ 30 செ.மீ
sunflower0005
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
பருவம்ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள் (கிலோ)
வீரிய ஒட்டு இரகம்இறவைதழைமணிசாம்பல்
மானாவாரி609060
இரகம்இறவை405040
மானாவாரி506040
இறவை405040

நுண்ணுயிர் உரம்
உயிர் உரம் மண்ணில் இடுதல் 10 பாக் (2000 கிராம், ஹெ) அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பாக் (2000 கிராம், ஹெ) பாஸ்போபாக்டீரியம் அல்லது 20 பாக் அசோபாஸ் (4000 கிராம், ஹெ) உடன் 25 கி.தொழுஉரம் மற்றும்
25 கிலோ மணலுடன் கலந்து, விதைப்பதற்கு முன்னால் இட வேண்டும்.
நுண்ணூட்டம் இடுதல்
12.5 கிலோ நுண்ணூட்டக் கலவையை 40 கிலோ மணலுடன் கலந்து விதைக்கு முன் சாலில் இட்டு பின்னர் விதைப்பு செய்ய வேண்டும். மாங்கனீசு பற்றாக்குறை உள்ள நிலத்திற்கு 0.5 கரைசலை விதைத்த 30, 40 மற்றும் 50ஆம் நாட்களில் தெளிக்க வேண்டும்.
நீர் நிர்வாகம்
கீழ்க்கண்டவாறு நீர்ப் பாய்ச்ச வேண்டும்
முதல் தண்ணீர் : விதைத்தவுடன்
2ம்தண்ணீர் : உயிர்த தண்ணீராக 7ம்நாள்
3-ம் தண்ணீர் : விதைத்த 20ம் நாள்
4-ம் தண்ணீர் : மொட்டு பிடிக்கும் பருவம்
5,6-ம் தண்ணீர் : பூ பிடிக்கும் தருணத்தில் (இரண்டு முறை)
7,8-ம் தண்ணீர் : விதைப் பிடிக்கும் தருணத்தில் (இரண்டு முறை)
களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி
ப்ளுக்ளோரலின் அல்லது பென்டிமெத்தலின் 2 லிட்டர் எக்டருக்கு தெளித்த பின் நீர்ப்பாய்ச்சுதல் வேண்டும். களைக் கொல்லி இட்டபின் 30 35 நாளில் ஒரு கைக்களை எடுப்பது அவசியம். விதைத்தபின் 15 30ம் நாளில் களைக்கொத்தி கொண்டு களை எடுக்க வேண்டும்.
போரான் தெளிப்பு
பூக்கொண்டைகளில் வெளிவட்ட மஞ்சள் பூக்கள் மலர ஆரம்பிக்கும் சமயத்தில் வெண்காரத்தை (போரான்) 0.2 (2கி.லிட்.தண்ணீர்) கலந்து பூக்கொண்டைகள் நனையுமாறு தெளிக்கவும், இது மணிகள் நன்றாக பிடிக்க உதவும்.
மணிகள் அதிகம் பிடிக்க
மகரந்தச் சேர்க்கை ஏற்படும் தருணமான காலை 9 மணி முதல் 11 மணிக்குள் மெல்லிய துணி கொண்டு பூவின் மேல்பாகத்தை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மெதுவாக ஒவ்வொரு பூக்கொண்டையையும் தேய்க்க வேண்டும். எட்டியிலிருந்து பத்து நாட்களுக்கு 5 முறை இப்படி ஒவ்வொரு பூவிலும் செய்யவேண்டும். அத்துடன் பூக்கள் மலரும் தருணத்தில் எக்டருக்கு மூன்று பெட்டி வீதம் தேனீ வளர்த்தல் நல்ல பலன் தரும். அருகருகே உள்ள பூக்கொண்டையினை ஒன்றோடொன்று முகம் சேர்ந்து இலேசாகத் தேய்த்துவிட்டாலும் சிறந்த பலன்
தரும்.
அறுவடை
sunflower0013
sunflower0014
பூவின் அடிப்பாகத்திலுள்ள இதழ்கள் மற்றும் பின்புறம் மஞ்சள் நிறமடைந்து பூக்கொண்டையிலுள்ள விதைகள் கடினத்தன்மை அடைந்திருப்பது முதிர்ச்சிடைந்தமைக்கு அறிகுறியாகும். உலர்ந்த பூக்கொண்டைகளைப் பறித்து
உலர்த்திய பின் விதைகளைத் தனியே பிரித்தெடுத்து சுத்தம் செய்யவேண்டும். அறுவடைக்குப் பின்செய் நேர்த்தி அறுவடைக்குப்பின் விதைகளை 8 முதல் 9 சத ஈரப்பதம் வரும் வரை நன்கு உலர வைக்க வேண்டும்.

வாய்ப்புண்ணுக்கு மருந்தாகும் வாழைப்பூ சூப்

கோடை காலம் வந்தாலே பெரும்பாலோனோருக்கு வாய்ப்புண் தொந்தரவு ஏற்படும். வாய்ப்புண்ணுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் ஜீரணக்கோளாறு, உடல்சூடு, மனஅழுத்தம் போன்றவைகளினால் அதிக அளவில் வாய்ப்புண் ஏற்படுகிறது. இதனால் பேசவும், உணவு உட்கொள்ளவும் சிரமம் ஏற்படுகிறது. வாய்ப்புண்ணுக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிதாக குணப்படுத்தலாம் என்று நம் முன்னோர்கள் கண்டறிந்துள்ளனர். அவர்கள் கூறியதை நீங்களும் பின்பற்றிப் பாருங்களேன்.

தேங்காய் பால்

வாய்ப்புண் ஏற்பட்டிருந்தால் தேங்காயை அரைத்து பால் எடுத்து ஒருநாளைக்கு மூன்று முறை கொப்பளிக்க வேண்டும். இதனால் வாய்ப்புண் சரியாகும்.

இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவைக்க வைத்து அதில் வெந்தய செடியின் இலைகளை போட்டு ஊறவைக்கவேண்டும். 10 நிமிடம் கழித்து வெந்தைய இலைகளை எடுத்து போட்டுவிட்டு அந்த தண்ணீரில் வாய்க்கொப்பளிக்க வேண்டும். தினசரி சாப்பிட்ட உடன் இதை செய்து வர வாய்ப்புண் குணமாகும்.

துளசி இலை

ஒரு சில துளசி இலைகளை பறித்து கழுவிய பின் வாயில் போட்டு நன்கு மெல்லவும். அதன் சாறு வாய்ப்புண் உள்ள பகுதிகளில் படவேண்டும். துளசி இலைகளை முழுவதுமாக மென்று அப்படி விழுங்கிவிடவேண்டும். சில நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்கலாம். வாய்ப்புண் எரிச்சல் குணமாகும்.

கொய்யா இலையை பறித்து மென்று சாற்றினை விழுங்கவேண்டும். தினசரி மூன்று முறை இதுபோல செய்ய சில தினங்களில் வாய்ப்புண் குணமாகும்.

மஞ்சள் மருந்து

அனைத்துவகை புண்களையும் குணமாக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. காலையில் வெறும் வயிற்றில் சிறு துண்டு மஞ்சள் சாப்பிடலாம். வாய்ப்புண், வயிற்றுப் புண் இருந்தால் குணமடையும். ஏற்பட வாய்ப்பே இல்லை என்கின்றனர்.

தக்காளியை கூழாக்கி அதை தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளிக்கலாம் அல்லது வெறும் தக்காளியை நன்றாக மென்று சாப்பிடலாம்.

நெல்லிக்காயை விதை நீக்கிவிட்டு பேஸ்ட் போல அரைக்கவும். அதை வாய்ப்புண் உள்ள இடத்தில் அப்ளை செய்ய வாய்ப்புண் குணமாகும்.

புதினா இலை

புதினா இலைச் சாற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் அப்ளை செய்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். எரிச்சல், வலி குணமாகும்.

எலுமிச்சை தோலை நன்கு அரைத்து வாய்ப்புண் உள்ள இடத்தில் பூசலாம் நிவாரணம் கிடைக்கும்.

வாழைப்பூ, வாழைப்பழம்

துவர்ப்பு தன்மை கொண்ட வாழைப்பூ வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும். வாழைப்பூவை வேக வைத்து சூப் வைத்து குடிக்கலாம். இதனால் வாய்ப்புண் சரியாகும். வயிற்றில் ஜீரணக் கோளாறு ஏற்பட்டாலும் நிவாரணம் கிடைக்கும். வாழைப்பழத்தை தேனுடன் கலந்து சாப்பிடலாம் இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும்.

வாய்ப்புண்ணுக்கு மருந்து மாத்திரை சாப்பிட்டால் அப்போதைக்கு மட்டுமே வலி குணமாகும். அதேசமயம் பாட்டி வைத்தியத்தை பின்பற்றினால் எந்த வித பக்கவிளைவுகளும் இல்லாமல் நிரந்தர குணம் கிடைக்கும் என்பதே உண்மை.

ஜாதிக்காயின் பயன்பாடு

பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயகராவாக பயன்படுத்தப் பட்டுள்ளது.
இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம்.
செயல்திறன் மிக்க வேதிப்பொருள்:
ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் 15 சதவிகிதம் உள்ளது. அல்பா பைனென், பீட்டர் பைனென், அல்பா-டெர்பைனென், பீட்டா – டெர்பைனென், மிர்ட்டிசின், எலின்சின், செப்ரோல்.
ஜாதிக்காய் வெண்ணெயில் புட்டிரின் மற்றும் மிர்ஸ்டைன், ஆகிய எண்ணெய் காணப்படுகிறது. ஜாதிபத்ரியிலும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன.
இவை ஜாதிக்காயில் காணப்படும் அதே எண்ணெய் வகைகள் என்றாலும் இவற்றில் மிர்ட்டிசின் அதிக அடர்த்தியாக உள்ளது.
உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்:
ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும்.
5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
தாம்பத்தியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் உபயோகித்தாலே போதும்

காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்

காலையில் சாப்பிடும் உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது; எட்டு அல்லது பத்து மணி நேரம் இடைவெளிக்கு பின், நம் வண்டியை ஓட்ட "பெட்ரோலாக" தேவைப்படும் உணவு அது.

காலை உணவு முறையை "பிரேக் பாஸ்ட்" என்று கூறுவர். "பாஸ்ட்" டை (உண்ணாதிருத்தலை) "பிரேக்" (துண்டிப்பது) பண்ணுவது என்று அர்த்தம். முதல் நாள் இரவு சாப்பிட்டபின், தூங்கி எழுந்திருக்கும் போது, பல மணி நேரம், சாப்பிடாமல் உடல் இயங்குகிறது. அதனால் அதற்கு, சத்துக்கள் தேவைப்படுகிறது. காலையில் சாப்பிடாமல், மதிய உணவு சாப்பிடலாம் என்று எண்ணுவது சரியல்ல. பத்து மணி நேரத்தையும் தாண்டி பட்டினி போடுவது, உடலில் உள்ள முக்கிய சத்துக்கள் குறைபாடு ஏற்படக் காரணமாகி விடும்.

என்ன சாப்பிடணும்

கலையில் எழுந்தவுடன் காபி, பால் போன்ற பானங்கள் சாப்பிட்டு விட்டு, உணவு அல்லது சிற்றுண்டி சாப்பிடுவோர் பலர் உள்ளனர். சிலர், காலையில், முழு உணவு சாப்பிட்டு விட்டு, மதியம் சாதாரண அளவில் சாப்பிட்டு, இரவு டிபன் சாப்படுகின்றனர்.
ஆனால், காலை உணவை தவிர்ப்போரும் உண்டு. இவர்களுக்கு தான் பாதிப்பு வரும். குறிப்பாக, வீட்டு, ஆபிஸ் வேலை பார்க்கும் பெண்களுக்கு காலை உணவு மிக முக்கியம். அதை தவிர்த்தால், அவர்களுக்கு பல கோளாறுகள் வர வாய்ப்பு அதிகம்.
உணவு என்றால்......

உடலுக்கு தேவைப்படும் சத்துக்களை தருவது தான் உணவு. கார் போன்றது உடல். கார் ஓட பெட்ரோல் தேவைப்படுவது போல, உடல் சிறப்பாக இயங்க எரிசக்தி தேவை. அந்த எரிசக்தியை தருவது சத்துக்கள் தான். அந்த சத்துக்களை நாம் உணவில் இருந்து தான் பெற வேண்டும். காலை உணவு சாப்பிட்டால், அது சிற்றுண்டியாக இருந்தாலும், உணவாக இருந்தாலும், உடலுக்கு முழு எரிபொருளை தருகிறது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், மயக்கம், சோர்வு, தலைவலி, மூட்டு பாதிப்பு வராமல் இருக்கவும், காலை உணவு மிக முக்கியம்.

இரும்புச் சத்து

பெண்களுக்கு இரும்புச் சத்து மிக முக்கியம், நாம் சாப்பிடும் உணவு மூலம் அது கிடைத்தால், மனது மற்றும் உடல் ரீதியாக திடத்தன்மை ஏற்படுகிறது. காலை உணவில், மக்காச்சோள உணவை சேர்த்துக்கொள்ளலாம். "கார்ன்பிளேக்ஸ்" போன்ற பாக்கெட் உணவுகளை பின்பற்றினால், இரும்புச் சத்து கிடைக்கும். இந்தியாவில், 90 சதவீத பெண்கள், இரும்புச் சத்து குறைபாடுடன் உள்ளனர். அவர்களுக்கு காலை உணவு கை கொடுக்கும் மக்காச்சோளம் உட்பட தானிய வகை உணவுகள் மிக நல்லது. உடலுக்கும், மூளைக்கும் வலுவை தரும்.

சுய தொழில் தொடங்குவோம் வாருங்கள்


பத்தும் பத்தாமல் மாத சம்பளம் வாங்கும் தொழிலாளியிலிருந்து, கைக்கும் வாய்க்குமே சம்பளம் சரியாக இருக்கிறது என அங்கலாய்க்கும் குமாஸ்தா முதற்கொண்டு, மாதம் லட்சக்கணக்கில் சம்பளம் (அல்லது கிம்பளமாக) வாங்கும் கணவான்கள் வரை எல்லோருக்குமே, எந்தவொரு  தொழில்முனைவோரைப் பார்த்தாலும் சிறு சபலம் ஏற்படத்தான் செய்யும்!  

அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், எல்லோருக்குமே போதை உண்டாக்கக் கூடிய காரணம் என்றால் அது 'முதலாளி' என்ற அந்த ஒற்றைவார்த்தைதான். எத்தனை லட்சங்களை மாத சம்பளமாக வாங்கினாலும் தொழிலாளிதான், ஆனால் மாதம் ரூபாய் பத்தாயிரம் நிகர லாபமாகசம்பாதிக்கக் கூடிய ஒரு தொழில் முனைவர் கூட 'முதலாளிதான்! குறைந்தது இரண்டு, மூன்று பேருக்காவது சம்பளம் கொடுப்பார், அவர் லீவ்போட்டால் யாரும் அவரை கேள்வி கேட்க முடியாது... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம், ஒரு மாத சம்பளக்காரர், தொழில் முனைவோர்ஆக ஆசைப்படுவதற்கான காரணங்களை. 

உண்மை தான், ஆனால் வெளியில் பார்ப்பதற்கு முதலாளிப் பட்டம், சமூகத்தில் தொழிலதிபர் அந்தஸ்து, வங்கிகள் முதற்கொண்டு பல பொதுநிறுவனங்களிலும், மற்ற பொதுமக்களுக்கு இல்லாத முன்னுரிமை மற்றும் மரியாதை. அந்தந்த ஊர் பொது காரியங்களில் கௌரவம் மற்றும்தலைமை பொருப்பு... இப்படி பொதுமக்கள் பலரும் பொறாமைப்படக் கூடிய பல காரணிகளை தன்வசம் வைத்திருந்தாலும், சாதாரண சிறுவியாபாரியிலிருந்து, பெரிய குழுமங்களின் தலைவர்கள் வரையிலான பெரும்பான்மையான தொழில் முனைவோர்களுக்கு, ஒவ்வொரு நாளுமே சிவ ராத்திரி தான். 

அன்றைய பொழுதின் கடமைகளை எல்லாம் ஒருவாறாக முடித்து விட்டு, இரவு உறக்கத்திற்காக படுத்தவுடன் தான் அடுத்த நாள் அஜெண்டாவெல்லாம் பட்டியலாக கண்முன்னே நிற்கும். அனேகமாக எல்லா தொழில் முனைவோருக்குமே அப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பது, மறுநாள் தேதியில் கொடுக்கப் பட்டிருக்கும் வங்கிக் காசோலைகளாகத் தான் இருக்கும்! அடுத்ததாக இருப்பது ஒரு மாதமாகியும் நிலுவை பாக்கியை தராமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் சில வாடிக்கையாளர்கள். இவர்கள் மட்டும் சரியான தேதிக்கு செட்டில் செய்திருந்தால்நாளை வரும் காசோலைகளைப் பற்றி என்ன கவலை?... என்று கேள்வி மனதில் எழும்போதே தூக்கம் கண்ணுக்கெட்டா தூரத்திற்கு சென்றிருக்கும். பட்டியலின் முதல் விஷயத்திற்கே இப்படி என்றால்
என்ன தொழில், எந்த மாதிரியான தொழில் என்பதை தேர்வு செய்ய வேண்டியது தான். என்ன தொழில்? - சரி, அது என்ன - எந்த மாதிரியான தொழில்? என்ன தொழில் என்பதை அவரவருக்கு உள்ள அனுபவத்தையோ அல்லது அத்தொழில் பற்றிய அறிவையோ அல்லது விருப்பத்தை பொருத்தது . அதைப் பின்னால் பார்ப்போம்

அதற்கு முன் எந்த மாதிரியான தொழில் என்பதைப் பார்ப்போம். தொழிலை உட்பிரிவுகளைத் தவிர்த்து பெறும் பிரிவுகளாகப் பிரித்தால் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். 1. உற்பத்தி (Production), 2. சந்தைப்படுத்துதல் (Marketting), 3. வணிகம் அல்லது வியாபாரம் (Trading). 
இதில் வணிகம் அல்லது வியாபாரம் என்பது சந்தைப்படுத்துதலின் ஒரு உட்பிரிவாகத் தான் வரும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் டிரேடிங் என்பது மிகப் பெரும்பான்மையானவர்களால் நடத்தப்படும் தனி தொழிலாக இருப்பதால் அதையும் ஒரு தனிப் பிரிவாக வைத்துவிட்டேன். இந்தப் பிரிவில் நம் தெரு முனையில் இருக்கும் சாதாரண சிறிய பெட்டிக் கடையிலிருந்து, போத்தீஸ், ஜோஸ் ஆலுக்காஸ் வரையிலும் அடைத்து விடலாம்.  

இந்த மூன்று பிரிவுகளையும், அதில் உள்ள கஷ்ட - நஷ்டங்களையும், அதை வெற்றி கொள்ளும் வழிமுறைகளையும் அடுத்தடுத்த பாகங்களில் விரிவாகப் பார்த்துவிட்டு, பிறகு என்னென்ன தொழில் செய்யலாம், அதற்கான வாய்ப்புகள எப்படி என்பதைப் பற்றியெல்லாம் விரிவாக அலசுவோம்.முப்பெரும் தொழில் பிரிவுகளில் முதலில் வணிகம் அதாவது டிரேடிங் பற்றி இப்பொழுது பார்ப்போம். 

'கல் தோன்றி மண் தோன்றா காலத்து... மூத்த குடி' என்ற வரையறைக்குள் கட்டுப்படுத்த இயலாத நீ...ண்ட வரலாற்றுப் பின்னனிக்கு சொந்தக்காரர்களான நம் தமிழ் இனம், கிடைக்கப் பெற்றுள்ள வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தாலே, சற்றேறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, வாணிபத்தில்... அதிலும் கடல் கடந்த அண்டை நாடுகளிடையேயான வர்த்தகத்தில் சீனர்களுக்கு நிகராக ஈடுபட்டுக் கொண்டிருந்தது என்பது உலகம் அறிந்த உண்மை. 

அதனால் இயற்கையாகவே நம் தமிழர்களுக்கு பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வர்த்தகம், வணிகம் அல்லது டிரேடிங் (பங்குச் சந்தையில் உள்ள டிரேடிங் அல்ல) என்று அழைக்கப்படும் வினியோகத் தொழில் ரத்தத்திலேயே ஊறிப்போன ஒரு பாரம்பரியமிக்க தொழில் வகையாகும். 

வணிகம் என்பதை ஒரு பொருளை எடுத்துக் கொண்டு, இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக பார்ப்போம். உதாரணத்திற்கு கடலை மிட்டாய் என்ற அனைவருக்கும் சுலபமாக புரிந்து கொள்ளும் வாய்ப்பிருக்கும் பொருளை எடுத்துக் கொள்ளலாம்.  

இந்த கடலை மிட்டாயை உருண்டைகளாகவோ, சதுர அல்லது வட்ட வடிவ கேக்குகலாகவோ, ஏலக்காய் அல்லது நறுமணமூட்டப்பட்ட வகையினதாகவோ, சாதாரணமான ஜவ்வுதாள் என்று அழைக்கப்படும் பாலிதீன் பேக்கிங்கிலோ அல்லது கிரேவியர் பிரிண்ட் செய்யப்பட்ட லேமினேடட் பவுச் பேக்கிங்கிலோ... இப்படியாக நிறைய வகைகளில் அல்லது ஏதாவது ஒரு வகையில் உற்பத்தி செய்வது என்பது முதல் கட்டம். 

அடுத்து, இந்த கடலை மிட்டாய் என்பது 100 சதவிகித மக்களுக்கும் நன்கு அறிமுகமான ஒரு உணவுப் பொருள். அதனால் பொருளைப் பற்றிய அறிமுகம் மக்களுக்கு தேவையில்லை. ஆனால் சந்தையில் ஏற்கனவே நிறைய போட்டியாளர்கள் இப்பிரிவில் களத்தில் இருக்கும் நிலையில், நம்முடைய நிறுவனம் தயாரிக்கும் கடலை மிட்டாய் வகைகளை ஒரு நாமகரணம் சூட்டி சந்தையில் ஒரு பங்களிப்பை (சதவிகிதத்தை) நமக்கென உருவாக்கிக் கொள்ள வேண்டும். இது இரண்டாம் கட்டம்.  

இறுதியாக, சந்தைப்படுத்தப்பட்டு, ஒரு குறிப்பிட்ட சதவிகித சந்தைப் பங்களிப்பைப் பெற்று, மக்களுக்கும் பரிச்சயமாகியிருக்கும் நம்முடைய நிறுவன கடலை மிட்டாய்களை ஒரு நாட்டில் ஆரம்பித்து, அதிலுள்ள மாநிலங்கள், மாவட்டங்கள், தாலுக்காக்கள், நகரங்கள், கிராமங்கள், குக்கிராமங்கள் வரை கொண்டு சேர்க்கும் வேலை இருக்கிறதே அதுதான் வர்த்தகம் எனப்படும் வணிகம் அல்லது டிரேடிங் வகையைச் சார்ந்த மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டமாகும். 

இப்பொழுது வர்த்தகம், வணிகம் அல்லது டிரேடிங் என்று அழைக்கப்படும் தொழில் வகை என்பது என்ன? அதில் உள்ள வாய்ப்பு என்பது எவ்வளவு நீ..ண்டது என்பது ஓரளவிற்கு புரிய ஆரம்பித்திருக்கும் என்று நினைக்கிறேன். 

இந்த வர்த்தகப் பிரிவு தொழில் முறையை இன்னும் கொஞ்சம் உள்ளே நுழைந்து பார்ப்போம். உலகலாவிய நிலையில் இயங்கும் ஒரு நிறுவனம் ஒரு பொருளை (உதாரணத்திற்கு பிஸ்கட் என்று வைத்துக் கொள்வோம்) உற்பத்தி செய்கிறது. சந்தைப்படுத்துதல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மற்றொரு நிறுவனம் அந்த பிஸ்கட்டை உலக அளவில் சந்தைப்படுத்தி இந்தியாவிலும் பட்டி தொட்டி வரை கொண்டு சேர்க்க களம் இறங்குகிறது என்று வைத்துக் கொள்வோம். 

இந்த இடத்திலிருந்து தான் ஆரம்பிக்கிறது வர்த்தகத் துறையில் ஈடுபட நினைக்கும் ஒரு நிறுவனம் அல்லது தனிநபரின் வேலை. 

அந்தப் பொருள், இந்திய மக்களிடம் ஓரளவிற்கு விளம்பரம் மற்றும் பல வழிகளில் பரிச்சயமாக்கப் பட்டிருக்கிறது, அது சந்தைக்கு வந்து, தமக்கு அருகே உள்ள கடைகளில் கிடைக்குமாயின் ஒருமுறை வாங்கி உபயோகிக்கலாம், பிடித்திருந்தால் தொடர்வதைப் பற்றி யோசிப்போம் என்ற மனநிலைக்கு, ஒரு குறிப்பிட்ட சதவிகித மக்கள், அதாவது ஐந்திலிருந்து பத்து சதவிகிதம் பேர் வந்திருந்தாலே..., அப்பொருளை விநியோகம் செய்யும் நீநீநீ....ண்ட வாய்ப்புகளில் நம்முடைய கையிலிருக்கும் முதலீட்டிற்கு தகுந்தாற்போல் அதற்குண்டான இடத்தில் நம்மையும் இணைத்துக் கொண்டு ஒரு சுய தொழில் முனைவோராக மாறலாம்

அது என்ன நீநீநீ...ண்ட வாய்ப்புகள்? அதிலும் நம் கையிருப்பிற்கு தகுந்தாற் போன்ற இடத்தில் சேர்வது...? என்பதெல்லம் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதா? அதையும் பார்த்து விடுவோம். 

அந்த உலகலாவிய சந்தைப்படுத்துதல் (Marketting Company) நிறுவனம், இந்தியாவில் நுழைய முடிவெடுத்த உடனேயே, இந்திய அளவில் அந்த பிஸ்கட்டை விநியோகம் செய்ய தகுதி வாய்ந்த ஒரு நிறுவனத்தை தேர்ந்தெடுத்து, தங்கள் நிறுவனத்திற்கான, இந்தியாவின் C & F ஏஜெண்டாக அதாவதுClearing & Forwarding Agent ஆக நியமிப்பார்கள்.

இதில் எதிர்பார்க்கப்படும் வியாபாரம் அதிகம் என்றால், இந்தியச் சந்தையை இரண்டு அல்லது மூன்று மண்டலங்களாகப் பிரித்து தனித்தனியாகக் கூட நியமிப்பார்கள்.  இதுதான் முதல் வாய்ப்பு. இதிலிருந்து ஆரம்பமாகின்றன அடுத்தடுத்த எண்ணிலடங்கா வாய்ப்புகள். 

இதில் நம் கையிருப்புக்கு, அதாவது முதலீட்டிற்கு தகுந்தாற் போன்ற இடத்தில் இணைவது என்றால் என்ன?

உதாரணத்திற்கு இந்த பிஸ்கட் கம்பெனியின் ஆண்டு விற்பனை அளவு, இந்தியாவில் 100 கோடி ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அதாவது சராசரியாக மாதம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 9 கோடி ரூபாய் வருகிறது. அந்த ஒரு மாத சரக்கிற்கான தொகை மற்றும் மேலும் இரண்டு மாதங்களுக்கான முன்பணத்திற்கு பதிலாக வங்கி உத்திரவாதம் (Bank Guaranty) கொடுக்க வேண்டும். அதாவது 9 கோடி ரூபாய் ரொக்கமும், 18 கோடி ரூபாய்க்கான சொத்துப் பிணையமோ அல்லது ரொக்கமோ வங்கியில் வைத்திருக்க வேண்டும். சில சந்தைப் படுத்தும் நிறுவனங்கள் வைப்புத் தொகை கேட்பார்கள்
ஆனால் அதற்கு ஈடாக சரக்கை கடனாகப் பெற்றுக் கொள்ளும் வசதியும் இருப்பதால் நாம் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. 

மேலே கூறிய 27 கோடியும் முதல் நிலை முதலீடு. இதற்கும் மேல் ஒரு மாத சரக்கை எப்பொழுதும் பாதுகாப்பாக வைத்திருக்கும் அளவிற்கான குடோன், மற்றும் நாடு முழுக்க அனுப்பும் பணிகளை நிர்வகிக்க குறைந்த பட்சம் 10 லிருந்து 20 பணியாளர்கள் வேலை பார்க்கக்கூடிய அளவிலான அலுவலகம் மற்றும் உபகரணங்கள், கட்டிட வாடகை, டெலிபோன், மின் கட்டணங்கள், ஊழியர் சம்பளம் இவையெல்லாம் போக, கட்டிடங்களுக்கான முன்பணம், தொழிலை சம்பந்தப் பட்ட அரசுத் துறைகளில் பதிவு செய்து கொள்வதற்கான கட்டணங்கள் மற்றும் ஃபார்மாலிட்டிகள்,  இத்தியாதிகள் என்று உத்தேசமாக இரண்டு கோடி ரூபாயும், மூன்று மாத செலவினங்களுக்கான  கையிருப்பாக ஒரு கோடி ரூபாயையும் சேர்த்து மொத்தமாக 30 கோடி ரூபாயில் வந்து நிற்கிறது இந்த முதல் வாய்ப்பில் நம்மை இணைத்துக் கொள்வதற்குத் தேவையான நமது முதலீடு! 

நம் கையில் 30 கோடி ரூபாய் இருக்கிறது என்றால், நாம் சுய தொழிலில் இறங்க இந்த முதல் வாய்ப்பிலேயே இணைந்து கொள்ள முயற்சிக்கலாம். இது படிப்படியாக பல நிலைகளைக் கடந்து, நம் கையில் வெறும் 25,000/- ரூபாய் மட்டுமே இருப்பதாக வைத்துக் கொண்டால் கூட, இதே விநியோக சங்கிலியின் கடைசி வளையமாகக் கூட நம்மை இணைத்துக் கொண்டு, "நானும் தொழில் முனைவோர் தான்" என்று கூறி நம்முடைய வளர்ச்சியின் முதல் படியில் காலை ஊன்றிவிடலாம்!


இந்த விநியோக சங்கிலி எப்படி ஒவ்வொரு நிலையாக இறங்கி நூற்றுக் கணக்கான புது தொழில் முனைவோருக்கு வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கின்றது
அது முடியும் தருவாயில், கோடிக்கணகில் பணம் வைத்திருப்பவர்கள் தான் இந்த டிரேடிங்வகையில் தொழில்முனைவோராக முடியுமா? என்ற ஐயம் வந்திருக்கும். அந்த ஐயம் படிப்பவர்களுக்கு (குறிப்பாக தொழில்முனைவோராகும்விருப்பத்துடன் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு) ஒருவித மனச்சோர்வை ஏற்படுத்திவிடும் என்பதால் தான் வெறும் 25,000/- ரூபாய் முதலீடாகவைத்திருப்பவர்கள் கூட இந்த விநியோகச் சங்கிலியின் கடைசி வளையமாக தன்னை இணைத்துக் கொள்ளலாம் என்று ஒரு வரியில்எழுதியிருந்தேன். 

அது எந்தளவுக்கு சாத்தியம் என்று கூட சிலருக்கு சந்தேகம் வந்திருக்கலாம். ஆனால் இக்கட்டுரையை தொடர்ந்து வாசிக்கும் பொழுது, இந்தசந்தேகத்திற்கான விடை கிடைத்துவிடும். சரி இந்த விநியோகச் சங்கிலியின் முதல் வாய்ப்பில் இணைந்து கொள்ள் 30 கோடி ரூபாய் தேவைஎன்று பார்த்தோம். இதன் அடுத்தடுத்த நிலைகளையும் அதற்கு தேவைப்படும் முதலீடுகளையும் தொடர்ந்து பார்ப்போம்.

இந்த கிளியரிங் & ஃபார்வேர்டிங் நிலைக்கு அடுத்த படியாக இருக்கும் நிலை இதான் சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் எனப்படும், கிட்டத்தட்ட நேரடியாக,விற்பனைக் களத்தில் இறங்கும் தொழில் வாய்ப்பு. இப்பொழுது மார்கெட்டிங் துறையில் இருக்கும் நிறுவனங்கள் அனைத்துமே, இந்தியசந்தையைப் பொருத்தவரை ஒவ்வொரு மாநிலத்திற்கும் (யூனியன் பிரதேசங்கள் தவிர்த்து) குறைந்தபட்சம் ஒரு சூப்பர் ஸ்டாக்கிஸ்டையாவதுநியமித்து விடுகிறார்கள். முன்பெல்லாம் இது மூன்று அல்லது நான்கு மாநிலங்களுக்கு ஒன்று என்ற நிலையில் தான் இருந்தது. ஆனால்இப்பொழுது சந்தை விரிவடைந்திருப்பதால், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாகவோ, அல்லது சில கம்பெனிகள் ஒரே மாத்நிலத்திற்குமூன்று எஸ்.எஸ் கள் வரையிலோ நியமித்து பொருள் விநியோக நடைமுறையை மிகவும் விரைவாகச் செய்கிறார்கள்.  


ஆக இந்த பிஸ்கட் கம்பெனிக்கு இந்தியாவைப் பொருத்தவரை குறைந்தது முப்பது முதல் தொண்ணூறு வரையிலும் சூப்பர் ஸ்டாக்கிஸ்டுகள்நியமிக்கப் படுகிறார்கள். நாம் தமிழகத்தில் இருக்கிறோம். இங்கு இந்த கம்பெனிக்கு இரண்டு எஸ்.எஸ். தேவைப்படுவாதாக் வைத்துக்கொள்வோம், அப்படியென்றால் ஒன்று சென்னையிலும் மற்றொன்றை மதுரை, திருச்சி அல்லது கோவையில் தான் அந்த கம்பெனி நியமிக்கும்.  

இந்த வரிசையில், தமிழகத்திற்கு கிடைக்கும் முதல் தொழில் வாய்ப்பு இந்த இரண்டு சூப்பர் ஸ்டாக்கிஸ்டுகளும் தான். இதன் பிறகு தான்எண்ணிலடங்கா வாய்ப்புகள் வரவிருக்கின்றன. அதாவது இவர்களுக்கு கீழே, தமிழகம் முழுவதும் இந்த பொருளை விநியோகம் செய்யஒவ்வொரு நகரங்கள் வாயிலாக தனித்தனியாகவும், மாநகராட்சிகளைப் பொருத்தவரை நான்கிலிருந்து இருபது வரையிலும்டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் எனப்படும் விநியோகஸ்தர்கள் நியமிக்கப்படுகின்றனர். அப்படிப் பார்த்தால் தமிழகம் முழுமைக்கும் இந்த கம்பெனிக்குகிட்டத்தட்ட 300 விநியோகஸ்தர்கள் நியமிக்கப்படுவார்கள்.  


இந்த 300 பேரையும் தூரத்திற்கு தகுந்தாற்போல் இரண்டாகப் பிரித்து, இரண்டு சூப்பர் ஸ்டாக்கிஸ்டுகளும் இவர்களுக்குப் பொருட்களை சப்ளைசெய்யும் பொருப்பை ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் செய்ய வேண்டிய வேலை என்ன? அதையும் கொஞ்சம் தெளிவாகப்பார்த்துவிடுவோம். 

இந்த டிஸ்ட்ரிபியூட்டர்கள் தான் ஒரு சந்தைப்படுத்தும் நிறுவனத்தின் முதுகெலும்பே. அந்த நிறுவனத்தின் சி & எஃப் மற்றும் சூப்பர்ஸ்டாக்கிஸ்டுகள் எல்லோருடைய பணியும் பொருட்களை அடுத்தடுத்த நிலையிலுள்ளவர்களிடம் கொண்டு சேர்ப்பதோடு நின்று விடுகின்றது.ஆர்டர் எடுப்பது, பேமெண்ட் பற்றிய கவலை இதுவெல்லாம் இவர்களுக்குக் கிடையாது. ஆனால் ஒரு டிஸ்ட்ரிபியூட்டரோட வேலைஅப்படிப்பட்டதல்ல. கிட்டத்தட்ட End Users எனப்படும் உபயோகிப்பாளருக்கு முந்திய நிலையிலுள்ள கடைக்காரர்களிடம் பொருளைக் கொண்டுசேர்ப்பது என்ற மிக முக்கியமான பணி அவர்களுடையது. 


உதாரணத்திற்கு, விழுப்புரம் என்ற தமிழ்நாட்டின் ஒரு டிபிகல் நகரத்தை எடுத்துக் கொள்வோம். இந்த விழுப்புரத்திற்கு ஒரு டிஸ்ட்ரிபியூட்டர்நியமிக்கப்படுகிறார் என்றால், அவர் விழுப்புரம் நகரம் மற்றும் அதைச் சுற்றி பதினைந்திலிருந்து இருபது கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ளகிராமங்களிலும் உள்ள பிஸ்கட் வைத்து விற்பனை செய்யக்கூடிய அனைத்து கடைகளுக்கும் இந்த பொருளை விற்பனை செய்து வசூல்செய்துகொள்ள வேண்டியது இவருடைய பொருப்பு. இவருக்கான இந்த ஏரியாவில் பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் முதல், சிறிய பெட்டிக்கடைவரையிலான, ஏ, பி, சி, டி எனற நான்கு வகையான கடைகளையும் மொத்தமாகச் சேர்த்து 300 கடைகள் வரை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த 300 கடைகளுக்கும் இவர் தான் சப்ளை செய்ய வேண்டும்.


இதில் என்ன சிரமம் இருக்கிறது? எப்படி அந்த விநியோகஸ்தர் இந்த மார்க்கெட்டிங் கம்பெனியின் முதுகெலும்பாகப் பார்க்கப் படுகிறார்? என்பதுதானே உங்கள் சந்தேகம். ஒரு மார்க்கெட்டிங் கம்பெனியின் சி & எஃப் சப்ளை செய்யும் எஸ்.எஸ் ஆகட்டும், அல்லது அந்த எஸ்.எஸ் கள் சப்ளைசெய்யும் நம் டிஸ்ட்ரிபியூட்டர்களாகட்டும், அனைவருமே, இந்த மார்க்கெட்டிங் கம்பெனியால் நியமிக்கப் பட்டிருப்பவர்கள். இந்தப் பொருளின்(பிஸ்கட்) விற்பனையை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்த, முதலீடு செய்து உழைத்துக் கொண்டிருப்பவர்கள். இவர்களுக்குள்ளே ஆர்டர் எடுப்பது,சப்ளை செய்வது, பணம் வாங்குவது எல்லாம் ஒரு கட்டுப்பாட்டுடன் வரைமுறையோடு செயல்படும். அதில் ஓரிருவர் சரியில்லை என்றால்,அந்த மார்க்கெட்டிங் கம்பெனி அவர்களை நெறிப்படுத்திவிடும் அல்லது அவர்களை தூக்கியெரிந்துவிட்டு வேறொருவரை அந்த இடத்தில்நியமித்துவிடும். 


ஆனால் நம்முடைய விநியோகஸ்தர்கள் சப்ளை செய்யும் கடைக்காரர்கள் அதாவது அவர்களுடைய கஸ்டமர்கள் அப்படியல்ல. அவர்கள் இந்தநிறுவனம் தயார் செய்யும் பிஸ்கட்டை தன் கடையில் வைக்க வேண்டாம் என்று நினைத்தால், இதை வாங்க மாட்டார்கள். மற்ற பிராண்டுகளில்உள்ளதை வைத்துக் கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தி விடுவார்கள். இதில் கடைக்காரர்களை கட்டுப்படுத்தவும்வழியிருக்கிறது, அதை சந்தைப்படுத்துதல் (Marketting) பற்றி எழுதும் போது விரிவாக அலசலாம். ஆனாலும் வாடிக்கையாளர்கள் தவிர்த்து,சப்ளையர்கள் அனைவருமே கடைக்காரர்களிடம் அனுசரித்துப் போக வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்று தான். 


எனவே நமது விநியோகஸ்தர், தங்களது பிராண்ட் பிஸ்கட்டுகளை இந்த 300 கடைகளிலும் வைப்பதற்குள் (Placement) தாவு தீர்ந்துவிடும்.முதலில் இரண்டு மூன்று முறை அலையவிட்டு, அதன் பிறகும் விடாது கருப்பாக தொடர்ந்து வந்தால், சரி.. வைத்து விட்டுப் போங்கள்,விற்றால் காசு இல்லையென்றால் சரக்கை திரும்ப எடுத்துக்கனும் ஓக்கேவா? என்று ஒற்றை வரியில் கேள்வி வரும். இதற்காகவே தவம்கிடந்தது போன்று நம் 'விநி' யும் சரிங்ணா..! என்று பவ்யம் காட்டி சரக்கை அந்தக் கடையில் அடுக்கிவிடுவார். இப்படியே தொடர்ந்து சென்று ஒரு150 கடைகளில் பிளேஸ்மெண்ட் வாங்கிவிட்டாலே, ஓரளவிற்கு இந்த துறையில் அவர் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுவிட்டார் என்று தான்அர்த்தம். 


நாம் ஏற்கனவே கூறியிருந்த படி இந்த மார்க்கெட்டிங் கம்பெனி நம் பிஸ்கட்டை ஓரளவிற்கு விளம்பரங்களின் மூலம் பிரபலமாக்கி,உபயோகிப்பாளர்களில் சிலரை ஒரு முறையேனும் வாங்கி உபயோகிக்கும் மனநிலைக்கு கொண்டு வந்திருந்தும், கடைகளில் பிளேஸ்மெண்ட்வாங்க, மார்க்கெட்டிங் கம்பெனியின் விற்பனை பிரதிநிதிகளும், நம் விநியோகஸ்தரும், தலையால் தண்ணீர் குடிக்க வேண்டும்.  


இந்த விற்பனை செய்வதின் சிரமங்களைக் கூட, அந்த மார்க்கெட்டிங் கம்பெனியும் அதன் விற்பனை பிரதிநிதிகளும் பொறுப்பெடுத்துக் கொண்டுசெய்து கொடுப்பார்கள். அது அவர்களுடைய கடமையும் கூட. ஆனால் பொருட்களை கடைகளுக்கு கொடுத்து, அதற்கான பணத்தை வசூல்செய்து, 300 கடைகளுக்கும் தேவையான சரக்குகளை எப்பொழுதும் கைவசம் வைத்திருந்து... இந்த சுழற்சி விட்டுப் போகாமல் சுழலச் செய்வதுதான் நம்முடைய விநியோகஸ்தர் என்ற தொழில் முனைவோருக்கான பொருப்பு. 


ஒரு பெட்டிக் கடையில் 50 ரூபாய்க்கு பொருளை சப்ளை செய்துவிட்டு, அதை பத்து பத்து ரூபாயாக வசூல் செய்வதற்குள்.... அடுத்த 50 ரூபாய்க்கு அந்த கடைக்காரர் ஆர்டர் கொடுத்து விடுவார். சரி இவ்வளவு மோசமாக பேமெண்ட் செய்யும் இந்த கடையை விட்டு விடலாம் என்றால், அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு இந்த பிஸ்கட் கிடைக்காமல் போய்விடும். மேலும் இதேப்போன்று பிரச்சினைகள் உள்ள கடைகளை எல்லாம் தவிர்த்துவிட்டால், சேல்ஸ் பாதித்துவிடும். இப்படி பல சங்கடங்களை சமாளித்து தொழில் செய்யும் நம் விநியோகஸ்தருக்கு முதுகெலும்பு பட்டம் சரி தானே? 


தற்பொழுது நாம் பார்த்துக் கொண்டிருக்கும், இந்திய சந்தையில் வருடத்திற்கு 100 கோடி ரூபாய் விற்றுமுதல் ஆகும் ஒரு பிஸ்கட் கம்பெனிக்கு, தமிழ் நாட்டில் சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் ஆக வேண்டும் என்றால் 50 லட்சமும், அல்லது ஏதாவது ஒரு தமிழக நகரத்திற்கான விநியோக உரிமை பெற்று தொழில்முனைவோராக வேண்டும் என்றால் ரூபாய் பதினைந்தாயிரம் ரூபாய் முதலீடு செய்தாலே போதும், அவர் தன்னுடைய வீட்டிலேயே ஒரு அறையை மட்டும் இதற்காக ஒதுக்கிக் கொண்டு தொழில்முனைவோராகிவிடலாம்! 

ஒரே குழப்பமாக இருக்கிறதே? இவ்வளவு குறைந்த முதலீடு தானா? அதுவும் நம்ப முடியவில்லையே?

சரி இவ்வளவு குறைவான முதலீடு என்றால் லாபம் எவ்வளவு கிடைக்கும்? அந்த லாபத்தில் குறைந்த பட்சம் ஒருவரின் மூன்று வேளை சாப்பாட்டிற்காவது மிஞ்சுமா? என்றெல்லாம் நிறைய கேள்விகளும், சந்தேகங்களும் இதைப் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஏற்பட்டிருக்கும்.!... நியாயம்தான். ஆனால் இந்த குழப்பங்களும், சந்தேகங்களும் தவிடுபொடியாகி, உற்சாகத்துடன் இந்தத் தொழிலையே செய்யலாமே என்ற மனநிலைக்கு வந்துவிடுவீர்கள் அடுத்த பாகத்தை படித்து முடித்தவுடன்! 


 அது வரை கொஞ்சம் பொருத்திருங்கள். சில உள் விவகாரங்களைப் பற்றி அலசியதால், இந்த பாகம் சிலருக்கு விறுவிறுப்பாக கூட இல்லாமல் போயிருந்திருக்கலாம். ஆனால் ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோராவதற்கான சவாலில் இதெல்லாம் சாதாரணமப்பா...!

Rcvd by mail thnxs brother

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites