தமிழ்நாடு அரசு சின்னமாக கோபுரம் இருக்கிறது. இது எப்படி வந்தது என்று தெரியுமா!! இந்தியா சுதந்திரம் பெற்ற போது தமிழ்நாடு, ஆந்திர மற்றும் கேரளா என்ற தனித்தனி மாநிலங்கள் இல்லை. இவற்றில் சில பகுதிகள் ஒன்று சேர்ந்து சென்னை மாகாணமாக இருந்தது. அப்போது மாகாண முதல்வராக இருந்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள். இவர் அரசு நிர்வாக நோக்கத்திற்க்காக சென்னை மாகாணத்திற்கு என்று தனியாக ஒரு சின்னம் இருக்க வேண்டும் என்று விரும்பினர். கோபுர சின்னத்தை தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பினார். அப்போதைய பிரதமர் நேரு அவர்கள் மத்திய அமைச்சிரவையுடன் ஆலோசித்தார். அவர்கள் மதச்சார்பற்ற நம்நாட்டில் ஒரு மதசின்னத்தை சின்னமாக அனுமதிக்ககூடாது என்றனர். நேருவும் அனுமதி தர மறுத்து விட்டார். உடனே ஒமந்துரார் நேரு அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினர். அதில் கோபுரம் மத சின்னம் அல்ல, தமிழக கட்டிடகலைக்கு உரிய சிறப்பு கோபுரத்திற்கு உண்டு மற்றும் மகாத்மாவின் நண்பரும் கிற்ஸ்துவ பாதிரியரும்மான ஆன்ட்ருஸ் தமிழ்நாட்டில் திருப்பத்தூரில் கட்டிய மாதாகோவில் கூட இந்து மத கோபுர வடிவில் தன் அமைக்கப்பட்டது தான் என்று விளக்கினார். அதன் பிறகே நேருவும் அனுமதி கொடுத்தார்.
0 comments:
Post a Comment