உலகில் அதிகமாகக் காணப்படும் உயிரினம் பூச்சிகள் தான். 20 லட்சத்திலிருந்து 40 லட்சம் பூச்சி இனங்கள் வரை இருக்கக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதுவரை ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட பூச்சிகளை விஞ்ஞான ரீதியாக வகைப்படுத்தி உள்ளனர். பெரும்பாலானப் பூச்சிகளைக் கண்களால் பார்க்க முடியாது. நுண்ணோக்கியின் உதவியோடு தான் பார்க்க முடியும். பல லட்சக்கணக்கான பூச்சிகள் இருந்தாலும், சில ஆயிரம் பூச்சிகளே மனிதனுக்குத் தீங்கு செய்யக் கூடியவை. பூச்சிகளே இல்லாதே இடங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லா இடத்திலும் பூச்சிகள் நிறைந்துள்ளன. உலகில் காணப்படும் சில பூச்சிகளையும், புழுக்களையும் இங்கு படத்தில் காணலாம். |
0 comments:
Post a Comment