இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label தென்னை மற்றும் அதை சார்ந்த தொழில். Show all posts
Showing posts with label தென்னை மற்றும் அதை சார்ந்த தொழில். Show all posts

Wednesday, December 3, 2014

ஏற்றுமதியாகும் இளநீர்

சைக்கிளின் இரண்டு பக்கமும் இளநீர் குலைகளை மாட்டிக் கொண்டு கால்கடுக்க நின்று கூவி கூவி விற்பனை செய்து வந்த இளநீர் வியாபாரி ஒருவர், தனது தொழிலை கொஞ்சம் மாத்தியோசித்ததால் இன்று அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.  இளநீர் விற்பதில் என்ன புதுமை என்கிறீர்களா? அதை அவரிடமே கேட்கலாம்.
திருச்சியில் வசிக்கும் இளநீர் வியாபாரி காஜாமுகமது தான் அந்தப் புதுமை மனிதர்.  சாதா இளநீரை, கார்விங் (செதுக்குதல்) செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்துவருகிறார். இந்த யோசனை எப்படி வந்தது?
“திருநெல்வேலி மேலப்பாளையம்தான் என் சொந்த ஊர். 1979-ல் பிழைப்புதேடி குடும்பத்தோட திருச்சிக்கு எங்கப்பா அப்துல்காதர் வந்தார். எனக்கு படிப்பு ஏறவில்லை. கொஞ்சம் பணம் சேர்த்து லாட்டரி  சீட்டு விற்கும் கடை வச்சேன்.  என் கடைக்குப் பக்கத்திலேயே இளநீர் கடை வைத்திருந்தார் ஒரு நண்பர். அவர் சாப்பிடப் போகும் நேரத்தில் நான்தான் அந்தக் கடையைப் பார்த்துக்கொள்வேன். அந்த நேரங்களில் இளநீர் கேட்டு வருகிறவர்களுக்கு சீவி கொடுப்பேன். அப்படியே மெள்ள மெள்ள இளநீரை லாவகமாக வெட்டிக் கொடுக்க கற்றுக்கொண்டேன். பிறகு  முழுநேரமாக இளநீர் விற்பனையில் இறங்கி விட்டேன்.
ஆரம்பத்தில் சிறிய முதலீட்டில்தான் தொடங்கினேன். சைக்கிளில் இளநீர்களைக் கட்டிக்கொண்டு ஊரெல்லாம் சுற்றி வந்துதான் வியாபாரம் செய்தேன். பிறகு நேரடியாக இளநீர்களை கொள்முதல் செய்ய ஆரம்பித்தேன்.
இப்போ இருக்கும் இளந்தலைமுறையினர் இளநீர் வாங்கிக் குடிப்பதை கவுரவக் குறைவா பார்க்கிறாங்க. இளநீர் இயற்கையானது, உடம்புக்கு நல்லது என்று தெரிந்தாலும் மரத்தடியிலும் தள்ளுவண்டியிலும் நின்று இளநீர் குடிக்க மறுக்கிறார்கள். அதனால் எல்லோருக்கும் உகந்த வகையில் பெட்டிக்கடையில் இருந்து பெரிய மால் வரை இளநீர் விற்க என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்தேன்.
அந்த நேரத்துலதான் ஆஸ்திரேலியாவில் இருக்கும் என் நண்பர் நெல்லையப்பன், எனக்கு இளநீர் வேணும், நீ அதை மட்டையில்லாமல் சீவி ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்ய முடியுமான்னு கேட்டார். அதற்கு ஒப்புக் கொண்டேன். அவர் அங்கிருந்து இரண்டு சாம்பிள் இளநீர் அனுப்பினார்.  அந்த இளநீர்  காய்கள், பச்சைமட்டை நீக்கப்பட்டு, சின்னப் பந்துபோல உருண்டையாக இருந்தது. அந்த இளநீர் காய்களைப்போல நமது இளநீர் காய்களை உருமாற்ற என்ன செய்ய வேண்டும் என யோசித்தேன். என் மகன் சதாம் உசேன் உதவியுடன் இணையதளத்தில் அதற்கான வழிகளைத் தேடினேன். அதற்கான  கருவிகளை உலகம் முழுவதும் தேடி அலைந்தோம், அது கோவை யிலேயே கிடைக்கிறது என்று தெரியாமல்.
இளநீரை கார்விங் செய்து மட்டையை நீக்கும் இயந்திரங்களை கோவையில் வாங்கினேன். இந்த இயந்திரங்களின் நடுவில் இளநீரை வைத்து, சுழலவிட்டுக்கொண்டே இருந்தால் மேலிருக்கும் மட்டை சீவப்படும். பிறகு அதன் அடிப்பகுதி மற்றும் தலை பகுதிகளைத் தனியாக இன்னொரு இயந்திரத்தின் உதவியுடன் நறுக்கிவிடுகிறோம். மட்டை நீக்கப்பட்ட இளநீரை சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவி, உலரவைத்து மெல்லிய பாலித்தீன் கிங்க் ராப் மூலம் பேக்கிங் செய்கிறோம்.
மட்டை நீக்கப்படாத இளநீர் 2 கிலோ வரை இருக்கும். கார்விங் முறையில் மட்டை நீக்கப்படும்  இளநீரின் எடை அளவு 800 கிராம் அளவுக்குக் குறைந்துவிடும். ஆரம்பத்தில் காய்களை மட்டை நீக்க, ரம்பம் மூலம் அறுக்கும் இயந்திரத்தில் அதிகம் சிரமப்பட்டோம். அதிக காய் சேதாரமானது. தவிர, மட்டை நீக்கப்பட்ட இளநீரில் கை பட்டுவிட்டால் அதன் தன்மை மாறிவிடும். இப்படியான நடைமுறை சிக்கல்கள் எல்லாம் இருந்தன. அதையெல்லாம் தாண்டித்தான் சரியான தரத்துக்கு வர முடிந்தது.
இளநீர் ஏற்றுமதியைப் பொறுத்தவரை தாய்லாந்துதான் முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டு இளநீர் பஞ்சுபோல இருக்கும். இளநீரில் 200 மில்லி தண்ணீர்தான் இருக்கும். நம்ம ஊர் இளநீர் கெட்டியாக இருக்கும். 400 - 600 மில்லி வரை தண்ணீரும் இருக்கும். தாய்லாந்து இளநீரைவிட கூடுதல் சுவையுடனும் இருக்கும். இந்த இளநீர் 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். ஃபிரிட்ஜ்-ல் பாதுகாத்து வைத்தால், 30 நாளுக்கு மேல் வைத்திருக்கலாம். நாங்கள் ரெடி செய்த இளநீரை முதற்கட்டமாக எங்களிடம் இளநீர் வாங்கும் சில்லறை வியாபாரிகளிடம் கொடுத்து விற்கச் சொன்னேன். சாதாரண இளநீருடன், ஒரு பக்கெட்டில் பேக்கிங் செய்யப்பட்ட 20 இளநீரையும் சேர்த்து வாங்கிச் சென்று விற்கிறார்கள்.
இந்த இளநீரை வெட்டுவதற்கு வீட்டில் இருக்கும் கரண்டி போதுமானது. இதனால் திருச்சியில் பரவலாக இந்த இளநீர்  அறிமுக மாகி வருகிறது. அதிக இடத்தை அடைக்காது என்பதால் இந்த இளநீரை கூல்டிரிங்ஸ் விற்கும் இடம், ஷாப்பிங் மால் என எளிதாக விற்கலாம்.
என் தொடர்முயற்சியின் பலனாய், முதற் கட்டமாக ஆஸ்திரேலியாவுக்கு 6 ஆயிரம் இளநீர் ஏற்றுமதி செய்யும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஓர் இளநீரை மொத்த விலையில் ரூ.20-க்கு விற்கிறேன். 
சில்லறைக் கடைகளில் இதை 25-க்கு விற்கிறார்கள். கூலி வேலை செய்யத் தொடங்கிய நான் இன்று  பத்து பேருக்கு வேலை தரும் அளவுக்கு  வளர்ந்திருக்கேன் என்று நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது” என்றார்.
தொழில் பழையது என்றாலும், புதிய கோணத்தில் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு அதை மாத்தியோசித்த காஜாமுகமது  பாராட்டப்பட வேண்டியவர்!

Sunday, March 9, 2014

தர்மபுரி தென்னை நார் கயிறு சீனாவுக்கு ஏற்றுமதி

தர்மபுரி : தர்மபுரி அருகே தேங்காய் மட்டையிலிருந்து தயாரிக்கப்படும் நார் கயிறு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் சீனாவிற்கு அதிகளவில் ஏற்றுமதியாகிறது. 

தமிழகத்தில் தேங்காய் நார் கயிறு தயாரிப்பில் பொள்ளாட்சி முதலிடத்தில் உள்ளது. திண்டுக்கல், திருநெல்வேலி, பட்டுக்கோட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் அதிகளவில் தேங்காய் நார் கயிறு தயாரிக்கப்படுகிறது. இதில், தர்மபுரி மாவட்டம் 4வது இடத்தில் உள்ளது. 

தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் டவுன், அனுமந்தபுரம், கெரகோடஅள்ளி, கள்ளம்பட்டி, மண்ணாடிப்பட்டி, பாளையம்புதூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், அரசம்பட்டி ஆகிய இடங்களில் தேங்காய் நார் கயிறு மற்றும் அதிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் கயிறு, மெத்தை விரிப்பு, மிதியடி மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் பெங்களூர், ஹைதராபாத், தமிழகத்தில் சென்னை, ஓசூருக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. சமீபகாலமாக சீனாவுக்கும் ஏற்றுமதி செய்வது அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட தென்னை நார் தொழிற்சங்க செயலாளர் முனிராஜ் கூறியதாவது: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் தென்னை மரங்கள் அதிகம் உள்ளன. அதிலிருந்து கிடைக்கும் தேங்காய் மட்டையிலிருந்து அதிகளவில் கயிறு தயாரிக்கப்படுகிறது. 35 கிலோ எடையுள்ள ஒரு பண்டல் தேங்காய் நார் ரூ.350 முதல் ரூ.560 வரை விற்பனை செய்யப்படுகிறது. 

தேங்காய்நார் கயிறு கட்டுமான பணிகளுக்கு அதிகமாக விற்பனை செய்கிறோம். ஒரு பண்டல் ரூ.900 முதல் ரூ.1200க்கு விற்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் ஆண்டுக்கு சுமார் ரூ.10 கோடி அளவிற்கு கயிறு ஏற்றுமதி நடக்கிறது. கடந்த ஓராண்டுக்கு மேலாக இங்கிருந்து சீனாவுக்கும் ஏற்றுமதி அதிகரிக்க தொடங்கியுள்ளது. மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சில சிறு மற்றும் குறு நிறுவனங்கள் நேரடி ஏற்றுமதியை தொடங்கியுள்ளன. இதனால் தென்னை நார் வர்த்தகம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

எக்ஸ்ட்ரா தகவல்

தமிழகத்தில் 13 லட்சம் ஏக்கரில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. அதிலிருந்து ஆண்டுக்கு 1.30 லட்சம் டன் தேங்காய் மட்டை கிடைக்கிறது. பஞ்சு நூல் தயாரிப்பது போன்றே தேங்காய் நார் கயிறுகளும் தயார் செய்யப்படுகிறது. - See more at: http://dnk.dinakaran.com/News_Detail.asp?Nid=59124#sthash.xSpFgrXD.dpuf

Thursday, September 5, 2013

தேங்காய் நார் கயிறு தயாரிப்பு லாபகரமான தொழிலா?



''நான் அம்பானி ஆகணும், நான் அம்பானி ஆகணும்!''
- அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் நடிகர் கருணாஸ் ஒற்றைக் காலில் நின்று கொண்டு சொல்லும் வசனம் இது. அதுபோல நானும் ஒரு பெரிய தொழிலதிபர் ஆகவேண்டும் என்கிற கனவு கண்டு வருகிறவர்கள் பலர். உங்கள் கனவை நிஜமாக்க இதோ வந்துவிட்டது சூப்பர் பிஸினஸ் ஐடியாக்கள்.

ஒரு தொழிலைத் தொடங்க முதலீடு முதல் மூலப்பொருள் வரை, உற்பத்தி முதல் விநியோகம் வரை, கடன் முதல் ரிஸ்க் வரை அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்து தரவே இந்த பகுதி. வாரம் ஒரு தொழில் வீதம் இதில் சொல்லப்படும் பல்வேறு தொழில்களைப் படித்து, உங்களுக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுத்து, பயனடைந்து வருங்கால அம்பானிகளாக வாழ்த்துகள். இந்த வாரம், உங்களுக் காக தேங்காய் நாரிலிருந்து கயிறு தயார் செய்யும் பிஸினஸ்!
இந்தியாவில் தயார் செய்யப்படும் தேங்காய் நார் கயிறுகளுக்கு வெளிநாடுகளில் ஏக டிமாண்ட். நம் நாட்டில் தென்னை மரங்கள் அதிக அளவில் இருப்பதால் இந்த தொழிலுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே உலகள வில் இத்தொழிலில் இருக்கும் பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகள் நமக்கு போட்டியாக வர இப்போதைக்கு வாய்ப்பில்லை என்பதும் இன்னொரு பிளஸ் பாயின்ட்.
தென்னை மரங்கள் அதிகம் இருக்கும் இடங்களிலும், அதற்குப் பக்கத்து ஊர்களிலும் உள்ளவர்கள் இந்தத் தொழிலை உடனடியாகத் தொடங்கலாம்.

தேங்காய் நார் கயிறுகள் கட்டடங்களுக்கு சாரம் அமைக்கவும் கிணறுகளிலிருந்து தண்ணீர் இறைக்கவும் மட்டுமே முதலில் பயன்படுத்தப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கட்டடங்களுக்கு சாரம் அமைக்க கயிறுகள் பயன்படுத்தப்படும் வழக்கம் குறைந்ததாலும், கிணறுகள் இல்லாத நிலை உருவானதாலும் இந்தத் தொழிலில் சிறிது சுணக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு தேங்காய் நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றப்பட்டு ஜியோ டெக்ஸ்டைல்ஸ், மேட்கள் போன்றவை தயார் செய்யப்பட, இந்தத் தொழிலுக்கான எதிர்காலம் பிரகாசமானதாக மாறிவிட்டது.  

Description: http://www.vikatan.com/nanayam/2011/04/zjexod/images/1redwright.gifயூனிட் அமைப்பு!
இந்தத் தொழிலை தொடங்க நான்கு மாதங்கள் ஆகும். ஆண்டுக்கு சுமார் 140 டன் தேங்காய் நார் கயிறு யூனிட் தொடங்க 20 சென்ட் நிலம் தேவை. சொந்தமாக இடமிருந்தால் நல்லது. அது இல்லாதவர்கள் குத்தகைக்கோ அல்லது வாடகைக்கோ எடுத்துக் கொள்ளலாம். தொழிற்சாலை, அலுவலகம், ஸ்டோர் ரூம் போன்றவைகளுக்காக 1,200 சதுர அடி ஷெட் தேவைப்படும்.  

Description: http://www.vikatan.com/nanayam/2011/04/zjexod/images/1redwright.gif
தயாரிக்கும் முறை!
காட்டன் நூல் தயாரிப்பு போன்றே தேங்காய் நார் கயிறுகளும் தயார் செய்யப் படுகிறது. முதலில் தேங்காய் மட்டைகளை தண்ணீர்விட்டு ஊறவைத்து. இரண்டு, மூன்று மணி நேரம் கழித்து  'வில்லோயிங்எனப்படும் மரத்தினாலான இயந்திரத்தில் இட்டால் கழிவுகள் அகன்று நார் கிடைக்கும். அதன் பிறகு அந்த நாரை 'சில்வரிங்  மற்றும் ஸ்பின்னிங் இயந்திரத்தில் கொடுத்து கயிறாகத் திரித்தால், விற்பனைக்கு ரெடி!
Description: http://www.vikatan.com/nanayam/2011/04/zjexod/images/1redwright.gifஇயந்திரங்கள்!
வில்லோயிங், சில்வரிங், ஸ்பின்னிங் மற்றும் உலர வைக்கும் இயந்திரம் போன்றவை தேவைப்படும். இந்தத் தொழிலுக்குத் தேவையான அனைத்து இயந்திரங்களும் தமிழகத்திலேயே, குறிப்பாக பட்டுக்கோட்டையிலேயே கிடைக்கிறது.
Description: http://www.vikatan.com/nanayam/2011/04/zjexod/images/1redwright.gifமூலப்பொருள்!
தேங்காய் நார்தான் இதன் முக்கிய மூலப்பொருள். மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், கோவை  மாவட்டங்களில் தென்னை மரங்கள் அதிகளவில் இருப்பதால் அங்கிருந்து தேங்காய் மட்டையை வாங்கிக் கொள்ளலாம். தமிழகத்தில் மட்டும் 1.30 லட்சம் மெட்ரிக் டன் தேங்காய் மட்டை ஓர் ஆண்டுக்கு கிடைக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் 1.90 லட்சம் மெட்ரிக் டன் தேங்காய் மட்டை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எனவே மூலப்பொருள் கிடைப் பதில் தட்டுப்பாடு இருக்காது.  
புதிதாக யூனிட் வைக்க நினைப்பவர்களுக்கு ஓர் ஆண்டுக்கு சுமார் 130 டன் தேங்காய் மட்டை வரை தேவைப்படும்.

Description: http://www.vikatan.com/nanayam/2011/04/zjexod/images/1redwright.gif
மின்சாரம்!
இந்த தொழிலுக்கு 6.50 ஹெச்.பி(hp) மின்சாரம் தேவைப்படும். தேங்காய் நார் கயிறு தயாரிப்பு குடிசைத் தொழிலின் கீழ் வருவதால் மின்சாரத்தை அரசு சலுகைக் கட்டணத்தில் வழங்குகிறது.
Description: http://www.vikatan.com/nanayam/2011/04/zjexod/images/1redwright.gifவேலையாட்கள்!
ஒரு ஷிப்ட் வேலை பார்க்க ஒன்பது திறமையான தொழிலாளர்கள் தேவை. இரண்டு ஷிப்ட் என்று வரும்போது 18 வேலையாட்கள் தேவை. மேலும் உற்பத்தி மற்றும் பராமரிப்பு வேலைகளுக்கு ஒரு சூப்பர்வைசர் தேவை. இதில் 90 சதவிகித வேலைகள் பெண் தொழிலாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயக் கூலித் தொழிலா ளர்களை இந்தத் தொழிலில் பயன்படுத்திக் கொள்ளலாம். இயந்திரங்களை எப்படி இயக்குவது என்பதை இயந்திரங் களை சப்ளை செய்யும்      நிறுவனமே தொழிலாளர்களுக்கு ஒரு வார காலத்தில் கற்றுத் தந்துவிடும்.  
Description: http://www.vikatan.com/nanayam/2011/04/zjexod/images/1redwright.gifதண்ணீர்!
தினமும் 1,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். அதற்கான தண்ணீரை ஆழ்குழாய் கிணற்றின் மூலம் எடுத்துக் கொள்வது நல்லது. எனவே, நல்ல தண்ணீர் வசதி இருக்கும் இடமாகப் பார்த்து யூனிட்டை தொடங்குவது அவசியம். இந்தத் தொழில் மூலம் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆகையால் தயாரித்த பொருளை எவ்வித பிரச்னையும் இல்லாமல் சப்ளை செய்யலாம்.

Description: http://www.vikatan.com/nanayam/2011/04/zjexod/images/1redwright.gif
மூலதனம்
முதல் வருட செயல்பாட்டு மூலதனமாக  1.71 லட்ச ரூபாய் தேவைப்படும். இது 15 நாட்களுக்கான மூலப் பொருட்கள், ஏழு நாட்களுக்கான முடிக்கப்பட்ட ஸ்டாக்குகள் மற்றும் 15 நாட்கள் விற்ற சரக்குக் கான வரவேண்டிய தொகை ஆகியவற்றை உள்ளடக்கிய தொகையாகும்.
Description: http://www.vikatan.com/nanayam/2011/04/zjexod/images/1redwright.gifஎதிர்பாராத செலவுகள்!
எவ்வளவுதான் பட்ஜெட் போட்டு செலவு செய்தாலும் துண்டு விழவே செய்யும். அதுபோல இந்த பிஸினஸில் திடீர்  செலவுகளும் வரும். கட்டட வேலைகள், இயந்திரங்கள், மின்சாரம், அலுவலக உபகரணங்கள் மற்றும் ஃபர்னிச்சர் போன்ற விதங்களில் 5 சதவிகிதம் அதாவது சுமார் 39 ஆயிரம் ரூபாய் வரை ஏற்படக்கூடும்.    

Description: http://www.vikatan.com/nanayam/2011/04/zjexod/images/1redwright.gif
ஆரம்ப கட்ட செலவுகள்!
மின் இணைப்பிற்கான டெபாசிட் தொகை, போக்கு வரத்து, கடன் வாங்குவதற்கு என ஆகும் செலவுகள் போன்ற வகையில் ஆறாயிரம் ரூபாய் வரை செலவாகும்.  
Description: http://www.vikatan.com/nanayam/2011/04/zjexod/images/1redwright.gifபிரேக் ஈவன்!
மொத்த உற்பத்தி திறனில் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது வருடங்களில் முறையே 36%, 34% 31%  என இருந்தால் இத்தொழிலில் பிரேக் ஈவன் ஏற்படும். அதற்கான உற்பத்தித்திறன் 35 டன், 34 டன் மற்றும் 33 டன் என்று இருக்க வேண்டும்.
Description: http://www.vikatan.com/nanayam/2011/04/zjexod/images/1redwright.gifரிஸ்க்!
இத்தொழிலுக்குத் தேவையான மூலப்பொருளான தேங்காய் மட்டை கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படலாம். அப்போது அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை வரும். அதனால் நம் லாபம் குறையலாம். போட்டி அதிகரித்து வருவதால், பொருட்களின் விலை குறையவும் வாய்ப்புண்டு.
Description: http://www.vikatan.com/nanayam/2011/04/zjexod/images/1redwright.gifமார்க்கெட்டிங்!
நாம் தயார் செய்யும் தேங்காய் நார் கயிறை கேரளாவில் இருக்கும் தேங்காய் நார் பொருட்கள் தயாரிப்பு யூனிட்களுக்கு விற்பனை செய்யலாம். தவிர, தமிழ்நாட்டில் சேலம், பொள்ளாச்சி, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் தேங்காய் நார் கயிறுகளை வாங்க நிறைய வியாபாரிகள் இருக்கின்றனர்.
Description: http://www.vikatan.com/nanayam/2011/04/zjexod/images/1redwright.gifஏற்றுமதியிலும் கலக்கலாம்!
மண் அரிப்பைத் தடுக்கும் வலைகள் மற்றும் பழத் தோட்டங்களில் கொடிகள் படர்வதற்கும் பயன்படுகிறது. இந்த தயாரிப்புகள் அனைத்தும் ஏற்றுமதி சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. உலகளவில் 3,50,000 டன்கள் ஜியோ- டெக்ஸ்டைலுக்கான சந்தை இருக்கிறது. ஜியோ டெக்ஸ்டைல்ஸ் தயாரிப்பில் 98% சிந்தெடிக் மெட்டீரியல் மூலம் தயாரித்த பொருட்களுக்கு பதில் தேங்காய் நார் மூலம் தயாரிப்பது தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் உலகளவில் இந்த பொருளுக்கான தேவை கணிசமாக அதிகரித்திருக்கிறது.
பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் இந்தத் தொழில் கிடையாது என்பதோடு அங்கு ஆரம்பித்தால் அதிக செலவு ஏற்படும் என்பது நமக்கிருக்கும் கூடுதல் பலம். எதிர்காலத்தில் பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா நாடுகளில் இந்தத் தொழில் தொடங்கப்பட்டாலும் நமக்கு அதிகம் பாதிப்பிருக்காது.  
Description: http://www.vikatan.com/nanayam/2011/04/zjexod/images/1redwright.gifஃபைனான்ஸ்!
மொத்த மூலதனத்தில் 5 சதவிகிதத்தை கையிலிருந்து போட வேண்டும். அந்த வகையில் இந்தத் தொழில் தொடங்குபவர் சுமார் 58,000 ரூபாய்வரை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். மூன்று லட்ச ரூபாய், அதாவது 30% வரை காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் (ரிக்ஷிமிசி) மூலம் மானியம் கிடைக்கும். 10 லட்சத்துக்கு மேல் 25 லட்சத்துக்குள் எனில் 10% மானியம் கிடைக்கும். இந்த மானியத் தொகையானது வங்கியில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும். இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்த மானியத் தொகை வங்கியில் வாங்கிய கடனுக்கு வரவாக டெபாசிட் செய்யப்படும். மானியத்தை வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் காலகட்டத்தில் அதற்கு நிகரான கடன் தொகைக்கு வட்டி பிடிக்கப்பட மாட்டாது. 65% வரை அதாவது 6.50 லட்சத்துக்கு மட்டும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்க வேண்டியதிருக்கும்.
Description: http://www.vikatan.com/nanayam/2011/04/zjexod/images/1redwright.gifநிகர லாபம்
மொத்த விற்பனையில் 15-20% வரை லாபம் கிடைக்கும்.

தென்னைநார் கயிறு பிரித்தெடுப்பது, கயிறாக திரிப்பது சார்ந்து பல விதமான பயிற்சிகளை மத்திய அரசு நிறுவனமான Coir Board பல்வேறு இடங்களில் வழங்கி வருகிறது. இந்த மையத்தின் மண்டல கிளை அலுவலகம் தஞ்சாவூர் மாவட்டத்தில் வல்லம் அருகில் மண்டல விரிவாக்க மையம், கயிறு போர்டு, வல்லம் சாலை, பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர் – 613403. தொலைபேசி எண் : 04362 – 264655. என்ற முகவரியில் இயங்கி வருகின்றது. இந்த மையத்தில் நீங்கள் தொடர்பு கொண்டு பேசினால், எப்போது பயிற்சி வழங்குகிறார்கள் என்ற தகவல் கிடைக்கும். பயிற்சியில் கலந்துக் கொண்டு பல்வேறு விதமான பொருட்களை தயாரித்து விற்பனை செய்யலாம்.  கயிறு —தொழிற்சாலை ஆரம்பிக்க நிதி நிறுவனங்களில் கடன் பெறவும் வாய்ப்புள்ளது.




Saturday, August 31, 2013

தேங்காய் எண்ணெய்

வறுவல், பொரியல் என எண்ணெய்யில் செய்யும் உணவு அயிட்டங்கள் அனைத்திற்கும் நம்மவர்கள் அடிமை. நம்முடைய தினசரி சமையலில் எண்ணெய் கலக்காத உணவு என்று எதுவுமில்லை. தோசையில் ஆரம்பித்து பூரி, சப்பாத்தி வரை அனைத்தையும் ஏதாவது ஒரு எண்ணெய்யில் செய்து சாப்பிட்டால் மட்டுமே நம்மவர்களுக்கு திருப்தி. தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், பாமாயில் என பலவகையான எண்ணெய் அயிட்டங்கள் நம்மூரில் இருக்கிறது. நிலக் கடலை, சோயா பீன்ஸ், தேங்காய், எள் போன்ற மூலப் பொருட்களிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.
சந்தை வாய்ப்பு!

உணவுப் பொருட்களுக்கான தேவை இருக்கும் வரை எண்ணெய்க்கான தேவையும் இருக்கும். வீடுகள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்களில் எண்ணெய் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பிரியாணி, பஜ்ஜி, வடைகள், நான்-வெஜ் அயிட்டங்கள்  தயார் செய்வதற்கு அதிக அளவில் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. தவிர, ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு குறைந்தது மூன்று லிட்டர் எண்ணெய் தேவைப்படுகிறது. தேசிய அளவில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி என்பது எந்த சூழ்நிலையிலும் சரிந்து போகாத தொழில். தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் தேங்காய் எண்ணெய் தேவை பெரிய அளவில் உள்ளதால், என்றுமே இதன் மார்க்கெட் களைகட்டியிருக்கும்.
முதலீடு!
எண்ணெய் உற்பத்தி செய்யத் தேவைப்படும் முக்கியமான முதலீடு என்றால் கட்டடமும், இயந்திரமும்தான். ஆண்டுக்கு 12,000 லிட்டர் எண்ணெய் உற்பத்தி செய்யும் மில் ஒன்றைத் தொடங்க சுமார் 15 லட்ச ரூபாய் தேவைப்படும். இந்த தொழிலைத் தொடங்கும் நிறுவனர் 15%, மீதமுள்ள 85% கடன் மற்றும் மானியம் மூலம் பெற்றுக் கொண்டு தொழிலைத் தொடங்கலாம்.




கட்டடம்!
ஆயில் மில் தொடங்க குறைந்தபட்சம் 30 சென்ட், அதிகபட்சமாக ஒரு ஏக்கர் வரை இடம் தேவைப்படும். தேவையான இடம் சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ எடுத்துக் கொள்ளலாம். எண்ணெய் உற்பத்திக்குத் தகுந்தாற்போல் கட்டடங்களை அமைப்பது அவசியம்.  
வேலையாட்கள்!
இத்தொழிலில் வேலையாட் களின் பங்கு மிகவும் அவசியம். ஒரு நாளைக்கு 32 லிட்டர் உற்பத்தி செய்வதற்கு திறமையான வேலையாள் ஒருவர், ஒரு சூப்பர்வைஸர் என இரண்டு நபர்கள் தேவை.



மூலப் பொருட்கள்!
நிலக் கடலை, எள், தேங்காய், சோயா பீன்ஸ் போன்ற பொருட்கள்தான் முக்கிய மூலப் பொருட்கள். இதில் எது உங்களுக்கு சுலபமாகக் கிடைக்குமோ அதைக் கொண்டு எண்ணெய் உற்பத்தி செய்யலாம். சில இடங்களில் மேற்சொன்ன எல்லா மூலப் பொருட்களும் எளிதாகக் கிடைக்கும்பட்சத்தில், எல்லாவிதமான எண்ணெய்களையும் உற்பத்தி செய்யலாம். ஆனால், ஒவ்வொன்றுக்கும் தனித் தனி இயந்திரங்கள் தேவைப்படும். காரணம், ஒரு இயந்திரத்தில் ஒரு வகையான எண்ணெய் மட்டுமே தயார் செய்ய முடியும். தேங்காய் கிடைக்கும்போது தேங்காய் எண்ணெய், எள் கிடைக்கும் போது நல்லெண்ணெய் என மாதத்திற்கு ஒரு எண்ணெய்யை நம்மால் தயார் செய்ய முடியாது. இங்கு நாம் தேங்காய் எண்ணெய் தயாரிப்பு மட்டுமே பார்க்க இருக்கிறோம்.
தேங்காய் எண்ணெய் தயார் செய்ய தேங்காய்தான் முக்கிய மூலப் பொருள். நூறு கிலோ தேங்காய் பருப்பிலிருந்து 63 கிலோ எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும்.

இயந்திரம்!
எக்ஸ்பெல்லர் (ணிஜ்ஜீமீறீறீமீக்ஷீ), வடிகட்டும் இயந்திரம், பாய்லர், அளவிடும் இயந்திரங்கள் என மொத்தம் 90,000 ரூபாய் வரை இயந்திரத்திற்குச் செலவாகும். பெரும்பாலும் இந்த இயந்திரங்கள் அனைத்தும் தமிழகத்திலேயே கிடைக்கிறது.
தயாரிப்பு முறை!
தேங்காய் பருப்பு தனியாகவும் கிடைக்கும், அல்லது தேங்காயிலிருந்தும் பருப்பை நாமே எடுத்து கொள்ளலாம். இப்படி தனியே எடுத்த  தேங்காய் பருப்பில் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பதால் எண்ணெய் எடுப்பது கடினம். எனவே அதை பாய்லர் வெப்பத்தின் மூலம் ஈரத்தை உறிஞ்சி, உலர வைக்கிறார்கள். பின்னர் கட்டர் இயந்திரத்தின் மூலம் தேங்காயைத் துண்டு துண்டாக்கி கிரஷிங் மெஷினில் போட்டு அரைக்கிறார்கள். இதிலிருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கப்பட்டவுடன் அதன் சக்கைகள் வெளியே தள்ளப்படுகிறது. இந்த தேங்காய் எண்ணெய் இதன்பிறகு ஃபில்டர் இயந்திரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கசடுகள் வடிகட்டப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், 'ஆயில் ஃபில்லிங்’ இயந்திரம் மூலம் பாக்கெட்டுகளிலும், சிறிய டின்களிலும் அடைக்கப்பட்டு விற்பனைக்கு செல்கிறது.

பிளஸ்!
தேங்காய் எண்ணெய் முக்கியமான சமையல் எண்ணெய் என்பதால், எளிதில் சந்தைப்படுத்த முடியும். தலை முடியில் தேய்த்துக் கொள்வதற்கு பெரும்பாலும் தேங்காய் எண்ணெய்யையே பலரும் பயன்படுத்துவதால் கூடுதல் வாய்ப்பு கிடைக்கிறது.
மைனஸ்!
மூலப் பொருளான தேங்காய் விலையைப் பொறுத்தே இதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தேங்காய் விலை அதிகரிக்கும்போது, மூலப் பொருள் கொள்முதல் விலையும் அதிகரிக்கும். இதனால் தேங்காய் எண்ணெய் விலை உயரும்போது விற்பனை பாதிப்படையும்.
இந்த தொழிலின் சூட்சுமங்களை அனுபவ ரீதியாகப் பெற்ற பிறகு தனியாகத் தொடங்கி நடத்தினால் நிச்சயம் வெற்றிதான்!


Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites