இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label இஸ்லாம் சிந்தனை. Show all posts
Showing posts with label இஸ்லாம் சிந்தனை. Show all posts

Monday, January 16, 2012

உலகின் மிகப்பெரிய திருக்குர்ஆன் புத்தகம்

ஆப்கானிஸ்தானில் உலகின் மிகப்பெரிய குர்ஆன் உருவாக்கப்பட்டுள்ளது. 7 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்ட இப்புனித நூல் 218 பக்கங்கள் கொண்டதாகவும், 30 வகையான எழுத்துவடிவங்களையும் கொண்டுள்ளது.
மேலும் இந்நூலை உருவாக்குவதற்கு 5 வருடங்கள் தேவைப்பட்டுள்ளன. மொஹமட் சபீர் யாகோட்டிஹுஸைனி கேத்ரி என்பவர் தலைமையிலான குழுவினர் இந்நூலை உருவாக்கியுள்ளனர்.
இந்நூல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் முக்கிய மதப் பிரமுகர்கள் முன்னிலையில் திறந்துவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.







Saturday, January 14, 2012

இந்தியாவின்மிகப்பெரிய மஸ்ஜித் மிக விரைவில் இன்ஷா அல்லாஹ்.....


 நமது அருகில் உள்ள கேரளா மாநிலத்தில் கோழிகோடு என்ற   மாவட்டத்தில் கரந்தூர் என்ற ஊரில் செயல் பட்டுவரும்    அரபி கல்லூரியான மார்கஸ் சக்கபாத்தி  என்ற   கல்லூரியின் நிறுவுனர் கமருல் உலமா, அபுல் ஆய்தாம்,  A.P.அபூபக்கர் முஸ்லியார் (பாகவி) (DUBAI  AWQAF  DIECTER SHEIK  HAZRAJI) அவர்கள்   இந்தியாவில் மிக   பெரிய மசூதியை   ருபாய் 40 கோடி செலவில் கேரளா மாநிலத்தில்   கோழிகோடு மாவட்டத்தில் மிக விரைவில் கட்ட உள்ளார்கள்.


அதன்  அடிக்கல் நாட்டு  விழாவும் .இன்ஷா அல்லாஹ்  வருகின்ற ஜனவரி 30 ம்  தேதி நடைபெற உள்ளது. அது சமயம் அனைவரும் தவறாது  கலந்து கொண்டு சிறப்பிக்குமாறும் அன்புடன் அழைகின்றோம்
:

ஆமீன்!
ஆமீன்!!!
யா ரப்பல் ஆலமீன்.!!!!!
Revd by :mail............Thnxs:samsudeen

Sunday, January 1, 2012

யா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா

அஸ்ஸலாமு அலைக்கும். அல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூளிள்ளஹி (ஸல்). மற்றும் அல்லாஹின் சாந்தியும் சமாதானமும் சஹாபாஹ் (ரலி) பெரு மக்கள் மீதும், தாபியீன்கள், தப’அ THAABIYEENGALUKKUM (ரஹ்), மற்றும் இமாம்கள் (ரஹ்), எனது உஸ்தாது, ஷைகுமார்களின் (ரஹ்) மீதும் உண்டாவதாக.

யா ரசூலுல்லாஹ் (ஸல்) என அழைக்கலாம் என்பதை திரு குரான் மூலமும், அமரர்கள் (அலை), சங்கை மிகு சஹாபாக்கள் (ரலி) இன் செயல்கள் மூலமும், சமுதாய கண்மணிகளின் வழக்காறு மூலமும் ஊர்ஜிதமாகி உள்ளது.

வான் மறையாம் திரு குரானில் அநேகமான இடங்களில் ” யா அய்யு ஹன்னபிய்யு – நபி அவர்களே! யா அய்யு ஹர் ரசூலு- இறைதூதரே! யா அய்யுகள் முததிரு – போர்வை போர்த்தியவரே !” போன்ற அழகிய ஆடை மொழி பெயர்களை கொண்டு பெருமான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

முந்தய நமார்கள் யா மூசா, யா ஈசா, யா யஹ்யா, யா இப்ர்ஹாஹீம், யா ஆதம் போன்று நேரடி பெயர்களை கொண்டு அழைக்கப்பட்டு உள்ளனர்.

பாமர முஸ்லிம்கள் கூட யா அய்யுகல்லதீன ஆமனூ – விசுவாசம் கொண்டவர்களே! என்று அழைக்கப்பட்டு உள்ளார்கள்.

(பிறரை “யா” என்று பதம் கொண்டு அழைக்கலாம் என்பது இவைகள் மூலம் ஊர்கிதப்படுத்த படுஹிறது. எனினும் ஒவ்வொருவரையும் அழைப்பதற்கு வழக்காற்றில் வெவ்வேறு விதம் இருக்கின்றது. அதன் அடிப்படையில் முந்தய நபிமார்களை எல்லாம் பெயர்கள் சொல்லி அழைத்த இறைவன், மரியாதைக்காக பெருமான் நபி (ஸல்) அவர்களின் பெயர் சொல்லி அழைக்காது ஒரு தனி வழியை வகுத்துள்ளான்).

இதை போன்று நாம் பெருமானாரை அழைப்பதற்கான வழியை இறைவன் அவனது திரு மறையில் எடுத்து இயம்புகிறான். “லாதஜ்- அலூ – து’ஆ அர்ரசூலி – பிணக்கும் ……… – உங்களில் சிலர் சிலரை அழைப்பதை மாதிரி ரசூல் (ஸல்) அவர்களை அழைப்பதையும் உங்களுக்கு மத்தியில் ஆக்கிவிடாதீர்கள்”. (அல் குரான் 24:63)

ரசூல் (ஸல்) அவர்களை முற்றிலும் அழைக்கக்கூடாது என்று இவ்வசனம் தடை செய்யவில்லை. அடுத்தவர்களை (பெயர் சொல்லியோ, மரியாதை குறைவாகவோ) அழைப்பதை போல் பெருமானாரை (ஸல்) அழைக்காதீர்கள் என்று தான் தடை வித்துள்ளது.

“உத்வூஹும்- லி ஆபாயிஹும் ….. அவர்களை அவ்வார்களது தகப்பங்களுடன் (இணைத்து இன்னாரின் மகனே! என்று) அழையுங்கள். (அல் குரான் 33:5)

பெருமானார் (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாக வளர்ந்து வந்த ஜைதுப்னு ஹாரிதா (ரலி) அவர்களை பெருமானாரின் மகனே! என்று அழைக்காமல் ஹாரிதாவின் மகன் ஜெய்தே! என்று அழையுங்கள் என்று இவ்வசனம் அறிவுறுத்துவதால் (தேவைக்கு) பிறரை அலைகாலாமேன்பது இவ்வசனம் மூலம் தெளிவாகின்றது.

இது போன்றே, காபிர்களுக்கும் கூட அவர்களது சுவாமிகளை உதவிக்கு அழைக்க திரு குரான் அனுமதி அளிக்கின்றது. “வத்வூ – ஷுஹதா அக்கும் – மின்தூநிள்ளஹி. – (உங்களது வாதத்தில் ) நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் அல்லாஹ் அல்லாத உதவியாளர்களை அழைத்துக் கொள்ளுங்கள்” (அல் குரான் – 2:23)

பெருமான் நபியின் (ஸல்) அவர்களின் பொன்மொழிகள் திரட்டான “மிஷ்காத் ஷரீப்” எனும் நூலின் முதல் ஹதீதில் கூட – யா முஹம்மத் (ஸல்) அக்பிர்ணீ அனில் இஸ்லாம் – முஹம்மத் (ஸல்) அவர்களே இஸ்லாத்தை பற்றி அறிவிப்பீராக!” என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் வினவியதாக வந்துள்ளது.

பெருமானார் (ஸல்) அவர்கள் வபாத்தாகும் சமயம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் “யா முஹம்மது! உங்களை மேன்மையாகவும் கண்ணியப்படுத்தவும் என்னை உங்கள் பால் அல்லாஹ் அனுப்பியுள்ளான்” என்று கூறிய நீண்ட தொரு ஹதீத் மிஷ்காத் ஷரீப் 549 ஆம் பக்கத்தில் காணக்கிடைக்கிறது.

உத்மான் இப்ன் ஹனீப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றாகள்: ஓர் கபோதி பெருமானாரின் சமூகம் வந்து (குருட்டு தன்மை நீங்க) து’ஆ – பிரார்த்தனை கற்று தரும்படி வேண்டினர். அது பொழுது பெருமானார் (ஸல்) அவர்கள், கீழ் காணும் து’ஆ வை அவருக்கு கற்று கொடுத்தார்கள். (அதன் பின் அவருக்கு கண் குருடு நீங்கியதாகவும், அதன் படி து’ஆ கெட்ட பலருக்கு குருடு சுகமானதாகவும் அறிவுப்புகள் அனந்தம் வந்து உள்ளன).

இறைவா! ரஹ்மதுடைய நபியான முஹம்மத் (ஸல்) அவர்கள் பொருட்டை கொண்டு உன்னளவில் முன்னோகுஹிறேன். முஹம்மேதுவே! எனது இந்த ஹாசத்-தேவையை நீங்கள் நிறைவு படுத்த எனது இரட்சகநிடத்தில் உங்களை கொண்டு முன்னோகுஹிறேன்.

இறைவா! என்னில் அவர்களது ஷபா அத்தை ஏற்று கொள்வாயாக! (ஆதாரம் : இப்னு மாஜா)

இந்த ஹதீத் சஹீஹான ஹதீத் ஆகும். என அபூ இஷாக் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இந்த அபூர்வமான து’ஆ, கியாமத் நாள் வரையிலான அணைத்து முஸ்லிம்களுக்கும் கற்றுதரப்பட்டுள்ளது. அதில் “யா முஹம்மது” என்ற அழைப்பும், (அவர்களிடம்) உதவி தேடுதலும் அமைந்துள்ளன.

பெருமானார் (ஸல்) அவர்களை ஜியாரத் செய்யும் பொழுது “அஸ்ஸலாமு அழைக்க – யா நபியால்லாஹ் – அஷ்ஹது அன்னக – ரசூலுல்லாஹ் – இறை தூதரே! உங்களின் மீது சாந்தி நிலவுக! நீங்கள் இறைதூதர் என நான் சாட்சி பகிர்ஹின்றேன்” என்றும் ,

அபூபக்கர் (ரலி) அவர்களை ஜியாரத் செய்யும் பொழுது, அஸ்ஸலாமு அலைக்க யா கலீபத்த ரசூலுல்லாஹ் – அஸ்ஸலாமு அலைக்க யா சாஹிப ரசூலுல்லாஹ்- இறை தூதரின் பிரதி நிதி ஆனவர்களே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!, (குகையில் இறைத்தூதருடன்) தோழராக இருந்தவர்களே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக! என்றும்,

உமர் (ரலி) அவர்களை ஜியாரத் செய்யும் பொழுது, அஸ்ஸலாமு அலைக்க – யா அமீருல் முமிநீன், அஸ்ஸலாமு அலைக்க யா முழ்கிறல் இஸ்லாம், அஸ்ஸலாமு அலைக்க யா முகச்சிரல் அச்னாம் – விசுவாசிகளுக்கு தலைவரானவர்களே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக! இஸ்லாத்தை பிரகனபடுதியவர்களே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!. கற்சிலைகளை உடைதெறிந்தவர்களே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!. என்றும் கூற வேண்டும் என்று பதாவா ஆழம் கீரி, மற்றும் எல்லா பிகுஹு கிரந்தகளிலும் ஹஜ் உடைய பாடத்தில் காண கிடைக்கின்றது.

இதில் பெருமானாரை (ஸல்) அழைப்பதும், அவர் அண்மையில் துயில் கொள்ளும் அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர்களை அழைப்பதும் இருக்கின்றன.

உதாரணமாக யா அகராமல் கல்கி …………. படைபினங்களில் மிக சங்கை குரியவரே! பொது பீடைகள் வந்து விடயம் பொழுது உங்களை தவிர்த்து வேறு யாரிடம் ஒதுகுவேன்? என்று இமாம் பூசாரி (ரஹ்) அவர்கள் புர்தா ஷரீபில் வரைந்துள்ளார்கள்.

மேலும் உலக முஸ்லிம்கள் அனைவரும் தொழுகையில் “அஸ்ஸலாமு அழைக்க ஆயுகன்னபிய்யு வரமதுல்லாஹி வபரகாதுஹு – நபி அவர்களே! உங்கள் மீது சாந்தி நிலவுக! அல்லாஹ்வின் அருளும் பாக்கியமும் உண்டாவதாக! என்று பெருமானார் (ஸல்) அவர்களை அழைத்து வருகின்றனர். இவ்வாறு அழைத்து சலாம் சொல்லுவது ஒவ்வாரு தொழுகையிலும் வாஜிப் கடமை ஆகும்.

இதுவரை கூறி வந்த ஆதாரங்களை உற்று நோக்குங்கால் தனி நபர்கள் “யா ரசூலுல்லாஹ்” என்று அழைப்பது ஆகுமானது தான் என்றாகி விட்டது. அது போல பலர் கூடி சப்தமிட்டு அழைப்பது ஆகுமென்பது ஊர்கிதமானதகும்.

பெருமானார் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்தை மேற்கொண்டு மதீனா மாநகருக்குள் புகும் பொழுது, ஆண்களும், பெண்களும் மாடிகள் மீது ஏறிக்கொண்டு ஏலம் சிறார்கள், பணியாட்கள் வீதியில் நின்று கொண்டு “யா முஹம்மது- யா ரசூலுல்லாஹ்” என்று வரவேற்ப்பு கொடுத்தனர் என ஹஜ்ரத் BARAG (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம்)

இதன் படி “யா ரசூலுல்லாஹ்” என்று கூவி அழைப்பது ஆகும் என்பது தெளிவு. எல்லா சஹாபாக்களும் (ரலி) இதை செய்துள்ளனர் என்பதும் தெளிவு.

மேன்மை மிகு சஹாபா (ரலி) பெருமக்கள், பெருமானார் (ஸல்) அவர்களின் வருகையை முன்னிட்டு வரவேற்பு விழா கொண்டாடிய விபரம் ஹிஜ்ரத்தின் இதே ஹதீதில் வந்துள்ளது.

பெருமானார் (ஸல்) வெளியூருக்கு விஜயம் செய்து விட்டோ அல்லது போர்களத்திற்கு போய்விட்டோ மதீனா நன்னகருக்கு வருகை தந்தருளும் போதெல்லாம் வழி நெடுக நின்று ஆரவாரமாக வரவேற்பார்கள். அதை அன்று பெரும் குதூகலமாகவும் கொண்டாடி மகிழ்வார்கள். (நூல்: புகாரி, மிஷ்காத்)

தொழுகை என்பது, இறைதியான கொண்டாட்டம், ஒரே இடத்தில் நடை பெறுகின்றது. ஹஜ்ஜும் இறைதியான கொண்டாட்டம் ஒரே இடத்தில் நடை பெறுகின்றது. இங்கும் அங்கும் போவதும் வருவதும், சுற்றுவதும், தொங்கோட்டமாகவும் நடைபெறுகிறது.

அமைதியை விளைவித்திடும் “தாபூத்” எனும் பெட்டகத்தை அமரர்கள் (மூசா நபி (அலை) அவர்களின் கூட்டத்தினருக்கு) கூட்டம் கூட்டமாக இறக்கி பெரும் விழாவை கொண்டாடியது குரான் மூலம் தரிபட்டுள்ளது.

பெருமானார் (ஸல்) அவர்கள் அகிலத்திற்கு அவதாரமாகும் பொழுதும், விண்ணுலக பயணத்தின் பொழுதும் அமரர்கள் பெரும் திரளாக விஜயம் செய்து விழா கோலம் பூண்டுள்ளார்கள்.

நல்லவற்றை எடுதோதுவது நன்மையை பயக்கும். ஆகவே இப்படி மீலாது விழாக்கள் நடத்துவது, அதிலும் பெருமானார் (ஸல்) அவர்களை அழைப்பதும், வாழ்த்துவதும் நன்மையை நல்கும்.

யா ரசூலுல்லாஹ் என்று அழைப்பது பற்றி பிரதிவாதிகளால் தொடுக்கப்படும் ஆட்சேபனைகளும், அதற்கான தக்க பதில்களும்.:

கேள்வி: “உமக்கு பயனோ, இடரோ அளிக்க முடியாத அல்லாஹ் அல்லாத வற்றை அழைக்காதீர்” (அல் குரான் 10:106) என்று திரு குரான் அல்லாஹ் அல்லாத வற்றை அழைப்பதை தடுத்துள்ளது.

“அல்லாஹ் அல்லாதவர்களில் நின்றும் அவர்களுக்கு பயனோ இடரோ கொடுக்க முடியாதவற்றை அவர்கள் அழைகின்றனர்” என்று அல் குரான் கூறுவதால் அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பது விக்ரக ஆராதனை காரர்களின் வேலை ஆகும் என்பது ஊர்கிதமாகிறது அல்லவா?

பதில்: எவ்விடத்திலும் இவை, இவை போன்ற வசனங்கள் வந்தாலும் அவைகளில் வரும் “து’ஆ” என்பதற்கு “அழைத்தல்” என்று பொருள் கொள்ளக்கூடாது. (சில ஷைத்தான் தௌஹீத் மௌலவிகள் தங்களுடைய ஷைத்தான் கொள்கையை நிலை நாட்ட இப்பொருளை கையாண்டு உள்ளனர்) வணங்குதல் என்ற பொருளை தான் கொள்ள வேண்டும். (ஆதாரம்: தப்சீர் ஜலாலைன்)

அது மட்டுமல்ல, “வணக்கம்” என்ற பொருள் தான் (அவைகளின் பின் தொடர் வசனங்களும்) 23:117 ஆம் வசனமும் இதர வசனங்களும் உறுதுணையாக அமைந்திருக்கின்றன.

“வணக்கம்” என்ற பொருள் கொள்ளாவிடின் நாம் மேலே எடுத்து காட்டிய, அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்கப்பட்டுள்ள திரு குரான் வசனங்கள், ஹதீதுகள், உலமா பெருமக்களின் சொற்கள் எல்லாம் ஷிர்க்காக ஆகிவிடும். உயிருள்ளவர்களை அழைப்பது, அருகிலுள்ளவர்களை அழைப்பது, தொலைவிலுள்ளவர்களை அழைப்பது எல்லாம் ஷிர்க்காக ஆகிவிடும்?

அன்றாடம் ஒவ்வொருவரும் தத்தமது சகோதர சகோதரிகளை, அன்பர்களை, உயிர் நேசர்களை அழைத்த வண்ணமாக இருக்கின்றனரே! அப்படியானால் உலகில் எவரும் ஷிர்க்கை விட்டும் தப்பி வாழ முடியாதே!

அல்லாஹுடைய தாத்தை (தத்சொரூபதை) போன்று அல்லது சிபத் (இலட்சணத்தை) போன்று வேறு ஒரு பொருள் இருக்கின்றது என்று (மனத்தால்) நிர்ணயம் கொள்வதற்கு தான் “ஷிர்க்” என்று சொல்கின்றனர்.

அல்லாஹ் அல்லாதவற்றை அழைக்கின்ற பொழுது மேற்கண்ட நிர்ணயம் வருவதில்லையே! பின்னர் ஷிர்க் எப்படி வரும்?

கேள்வி: “நின்றவர்களாகவும், உட்காந்தவர்கலாகவும், விழாவின் மீது (படுதவர்கலாகவும்) அல்லாஹ்வை (திக்ரு) நினையுங்கள் (அல் குரான் 4:102 ) என்று அல் குரான் கூருன்கின்ற பொழுது,

எழுந்திருக்கும் பொழுதும், உட்காரும் பொழுதும் அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர் கூறுதல் ஷிர்க்காகும். எனவே, அல்லாஹ்வின் பெயரைத்தானே நினைக்க வேண்டும்?

பதில்: ரசூல் (ஸல்) அவர்களை நினைப்பது ஹராம் என்றோ அல்லது ஷிர்க் என்றோ இவசனத்தில் இருந்து விளங்குவது அறியாமை ஆகும்.

“நீங்கள் தொழுகையை நிறைவேற்றி முடித்து விடுவீர்களாயின் எந்த நிலையிலும் எவ்விதத்திலும் இறைவனை நினைதிடலாம்” என்பதை தான் இவ்வசனம் சொல்லுகிறது. அதாவது “ஒழு” இன்றி தொழுக முடியாது. தொழுகையில் ருகூவு, சுஜூது, இருப்புகளில் குரானை ஓத முடியாது. தொழுகையில் (சங்கடம் இருந்தால் தவிர) விலாபுரம், முதுகுபுறம் படுத்துக்கொள்ள முடியாது என்பது போன்ற விதி முறைகள் தொழுகையில் இருக்கின்றன.

ஆனால் தொழுகையை முடித்துவிட்டால் இவ்வித முறைகள் எல்லாம் போய்விடும். இது பொழுது, நின்ற வண்ணம், படுத்த வண்ணம், உட்கார்ந்த வண்ணம் எந்த நிலையிலும், எவ்விதத்திலும் இறைவனை நினைக்க முடியும் என்பதைத்தான் இவ்வசனம் அறிவிக்கின்றது.

சிந்தனைகோர் விருந்து
மேற்சொன்ன இவ்வசனத்தில் சிந்திப்பதற்குரிய விஷயங்கள் உண்டு

1. பத்குருல்லாஹ்….. என்ற ஏவல் வாஜிபு – கட்டாயம் என்பதற்கு இல்லை. ஜாயிஸ் – ஆகுமென்பதற்குதான். நினைத்தால் அல்லாஹ்வை நினையுங்கள் அல்லது அல்லாஹ் அல்லாதவர்களை நினையுங்கள் அல்லது மெளனமாக இருங்கள். எது வேண்டுமானாலும் செய்யலாமென்பதை காட்டுகின்ற ஏவல் வினை ஆகும்.

2. அப்படியே வாஜிபு என்ற ஏவல் வினைதான் என்று வைத்து கொண்டாலும் “திக்ருல்லாஹ் – அல்லாஹ்வை நினைத்தல் என்பதரிக்கு “திக்ரு கைரில்லாஹ் (GAIRILLAH) – அல்லாஹ் அல்லாதவர்களை நினைத்தல்” என்பது நகீழ் – எதிர்பதமானது, ஏனெனில், அல்லாஹ்வை நினைத்தல் வஜீபாகுமானால் அல்லாஹ் அல்லாதவர்களை நினைப்பது ஹராம் என்றாகிவிடும்.(எவரும் இதை சொல்ல வில்லை).

எனவே, “திக்ருல்லாஹ் – அல்லாஹ்வை நினைத்தல் என்பதற்கு “அதமு திக்ரில்லாஹ்- அல்லாஹ்வை நினைக்காமல் இருத்தல் என்பது தான் சரியான நகீழ் – எதிர்பதமாகும்.

3. அல்லாஹ்வை நினைத்தல் (திக்ருல்லாஹ்) என்பதற்கு எதிர்பதம், அல்லாஹ் அல்லாதவர்களை நினைத்தல் (திக்ரு கைரில்லாஹ்) என்பதை ஒப்புக்கொண்டாலும் ஒரு எதிரிடை வாஜிபாகுவதினால் மற்றது ஹராம் ஆகலாம், ஷிர்க் ஆகாது.

ஹராம், வாஜிபு, பர்ளு என்பதெல்லாம் (உறுப்புகளினால் செய்யப்படும்) சிபதுல் பி’அல் – தொழில் பண்புகளாகும். தொழிலில்லாத – அதமு பி’அலியின் பண்புகளில்லை என்பதையும் சிந்தையுள் வைக்க வேண்டும்.

4. பெருமானார் (ஸல்) அவர்களை நினைப்பது எதார்த்தத்தில் இறைவனை நினைப்பது தான். “எவர் ரசூலுக்கு (ஸல்) வலிபடுஹின்றாரோ, அவர் அல்லாஹ்வுக்கு நிச்சயம் வலிப்பட்டுவிட்டார்.

கலிமா, தொழுகை, ஹஜ், குத்பா – பிரசங்கம், பாங்கு உட்பட எல்லா வணக்கங்களிலும் பெருமானார் (ஸல்) அவர்களை நினைவு கூர்வது பின்னிபினைந்தும் , அத்தியாவசியமாகவும் இருக்கும் பொழுது தொழுகைக்கு வெளியில் எழுந்திருக்கும் பொழுதும் உட்காரும் பொழுதும் நினைவு கூர்வது எப்படி ஹராமாகும்?

குனிந்தாலும், நிமிர்ந்தாலும் எந்த நிலையிலும் எந்த நேரமும் பெருமானார் (ஸல்) அவர்கள் மீது சலவாத்து ஓதி கொண்டே இருக்கிறான் ஒருவன் அல்லது “லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி” என்ற கலிமா ஓதிக்கொண்டே இருக்கிறான் என்றால் இது நன்மையான காரியம் தானே.

5. தப்பத் யதா – அபீலஹபின் ……………. அபூலஹபின் இரு கரமும் நாசமாகுக!” என்பதையும் (முனாபிகீங்களின் வரலாறு நிறைந்திருக்கும்) முனாபிகீன் சூராவையும், இன்னும் எவ்வசனங்களில் காபிர்களின் கற்சிலைகளின் கூற்று வந்துள்ளதோ அவ்வசனங்களையும் ஓதுவது அல்லாஹ்வை திக்ரு நினைப்பதாக ஆகுமா? இல்லையா?
இவை அனைத்தும் இறையோனின் திவ்விய வாக்கியமாகும் அல்லவா? வாக்கியங்களுக்குரிய நற்கூலி ஓதுபவர்களுக்கு கிடையாதா? இறையோனின் திருவாகியங்களை – வசனங்களை ஓதுவது, நினைப்பது இறையோனை நினைப்பது ஆகாதா?

இறையோனின் பேரருளை, அவனது பேரொளியை – முஹம்மது (ஸல்) அவர்களை நினைப்பது இறைவனை நினைப்பது ஆகாதா?.

“காலபிர் அவனு – பிர் அவ்னு சொன்னான்” என்பது குரானில் இடம் பெற்றுள்ள திருவசனம் ஆனதினால் “கால” என்று ஓதினால் மூன்று எழுத்து இருப்பதினால் முப்பது தவாபும், “பிற அவ்ன்” என்று ஓதினால் ஐந்து எழுத்து இருப்பதினால் ஐம்பது தவாபும் கிடைக்கும். இது பொழுது, “முஹம்மதுர்ரசூலுல்லாஹ்” என்றால் முஷரிக்காகி விடுவானா? என்னே! விந்தையான ஆராய்ச்சி? ஹஜ்ரத் யாகூப் (அலை) நிலையிலும், இருப்பிலும் எந்த நிலையிலும் எந்த நேரமும் “யூசுப் யூசுப்” என்று சொல்லி கொண்டே இருந்தார்கள் (தல்லாஹி – தப்தவு – தத்குரு – யூசுப் – யூசுபை நினைத்துகொண்டே யாகூப் இருந்தார்கள் (அல் குரான் 12:85) என்று இறைவன் கூறியுள்ளான்) யூசுப் (அலை) நபியின் நினைவால் அழுது அழுது கண்கள் கூட வெண்ணிரமாகிவிட்டன.

அவ்விதமாக ஹஜ்ரத் ஹவ்வா (அலை) அவர்களது பிரிவால் ஹஜ்ரத் ஆதம் (அலை) அவர்கள் “ஹவ்வா ஹவ்வா” என்றும், இமாம் ஹுசைன் (ரலி) அவர்களது இழப்பால் இமாம் ஜைனுல் ஆபிதீன் (ரலி) அவர்கள் “ஹுசைன் ஹுசைன்” என்றும் ஜெபித்து கொண்டும் நினைத்துக்கொண்டும் இருந்திருக்கிறார்கள். “தந்தையை இழந்து பரிதவிக்கும் என்னிலை யாகூப் (அலை) அவர்களது நிலையை காண குறைந்ததில்லை. அவர்களோ செல்வா மகனை இழந்தார்கள், நானோ பெற்ற தந்தையை இழந்திருக்கிறேன்” எனும் பாடல் ஜைனுல் ஆபிதீன் அவர்களது சோக காட்சியை பிரதிபலித்து கொண்டு இருக்கிறது.

சொல்லுங்கள்! பார்ப்போம், இவர்கள் எல்லாம் இணைவைத்த, முஸ்ரிகுகளா என்ன? இல்லையெனில், ஆஷிக் – அன்பன் தன் (உயிருக்கும் மேலான) நபியை நினைத்தால் முஸ்ரிக்காகி விடுவது ஏன்? வியாபாரி இரவு பகலாக தன் வியாபார நினைவில் கிடப்பான், மாணவன் இரவு பகலாக எந்த நேரமும் பாட நினைவில் இருப்பான். இன்னவர்களும் அல்லாஹ் அல்லாதவற்றை அல்லவா நினைத்து கொண்டு இருக்கிறார்கள், இவர்கள் முஷ்ரிக்குகள் ஆவதில்லையே?

குறிப்பு: பஞ்சாப் தேனா நகரில் நமக்கும், மௌலவி தனாவுல்லாஹ் அமிர்தசரீ அவர்களுக்கும் “யா ரசூலுல்லாஹ் என அழைப்பது” சம்பந்தமாக ஓர் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தனாவுல்லாஹ் சாஹிபு அவர்கள் இதே திரு குரான் (4:102) வசனத்தை முன் வைத்தார்கள்.

மூன்று கேள்விகள் மட்டுமே நாம் அவரிடம் வினவினோம்.

1. திரு குரானில் – அம்ரு – ஏவல் வினை எத்தனை அர்த்தத்திற்கு வருகிறது? இவ்வசனத்தில் என்ன அர்த்தத்திற்கு உபயோகிக்கப்பட்டுள்ளது?

2. ஒரு நகீழ் – எதிரிடை வாஜிபாகுவதால் மாற்று நகீழும் ஹராமாகுமா? அல்லவா?

3. திக்ருல்லாஹ் – அல்லாஹ்வை நினைப்பதற்கு எதிர் பதம் என்ன? திக்ருகைரில்லாஹ்- அல்லாஹ் அல்லாதவற்றை நினைப்பது” எதிர்பதமா? அல்லது அதமு திக்ரில்லாஹ் – அல்லாஹ்வை நினைக்காமல் இருப்பது” எதிர்பதமா? எது?

அவர் சொன்ன பதில் இதோ!

தாங்கள் கேள்விகளில் உசூலுல் பிக்ஹு – பிக்ஹு மூலாதார விஷயத்தையும், மன்திக் இல்மையும் புகுத்தி விட்டீர்கள். இந்த இரண்டு கல்வியுமே “பித்’அத” ஆனவை. அதாவது – இவ்விரண்டு கல்வியை கற்று கொள்ளாது மடையனாக இருப்பது சுன்னத் என்பது அவர் கருத்து.

அதன் பின் அப்படியானால், ” மீலாது ஷரீப் கொண்டாடுவது” ஹராம் என்றும், ஹதீத்கலை வல்லுனர்கள் ஹதீதுகளை (சேகரித்து) எடுப்பது சுன்னது என்றும் வர வேண்டுமே, அதஹையதொரு விளக்கம் பொதிந்து இருக்கும் படியான சரியான த’ரீபை (THA’REEF) – வரை இலக்கணத்தை “பித்’அத்” என்பதற்கு கூறுங்கள் பார்க்கலாம் என்று அவரிடம் வினா தொடுத்தோம். இவ்வினா இன்று வரை அவர் முன் வைக்கப்பட்டே இருக்கிறது. அவரும் மரணித்து விட்டார். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹீ ராஜிஊன்” அவரது அபிமாநிகலாவது அல்லது அவரது கொள்கை வேந்தர்கலாவது பதில் அளித்து பார்க்கலாமே!

கேள்வி: எங்களுக்கு “அதஹிய்யத்” தை அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு-வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ – என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்று தந்தார்கள்.

பெருமானார் (ஸல்) அவர்கள் மௌதானபொழுது “அஸ்ஸலாமு – அலன்னபியு” என்று சொன்னோம் ” என்ற ஹதீத் புகாரி ஷரீப் இரண்டாம் பாகம், கிதாபுல் இஸ்தி’தான் பாபுல் அகதி பில்யதைன் எனும் பாடத்தில் ஹஜ்ரத் இப்ன் மஸ்வூத் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

“முன்னிலைகுரிய – காபை” வைத்து அஸ்ஸலாமு அலைக்க என்று பெருமானாரின் ஜீவிய காலத்தில் அவர்கள் (சஹாபாக்கள்) சொன்னார்கள். (பெருமானார் (ஸல்) அவர்கள் மறைந்ததும் முன்னிலையை விட்டு விட்டார்கள்” படர்கையின் வார்த்தையை கொண்டு “அஸ்ஸலாமு அளன்னவியி” என்று புகாரி ஷரீபின் விரிவுரையான ஐனியில் கூறப்பட்டு உள்ளது. எனவே பெருமானாரின் (ஸல்) அவர்களின் ஜீவிய காலத்தில் “அஸ்ஸலாமு அலைக்க” என்று சொல்வது இருந்தது. அவர்களது வபாதிர்க்கு பிறகு அதஹிய்யாதில் கூட அழைக்க படுவதை விட்டு விட பட்டுள்ளது என்று இந்த ஹதீதின் மூலமும் விரிவுரையின் வாசகங்கள் மூலமும் தெரிய வருகிறது. சஹாபாக்கள் (ரலி) அதஹிய்யாதில் கூட இவ்வாறு அழைப்பதை அகற்றிவிட்டு இருக்கும் பொழுது , எவன் தொழுகைக்கு அப்பால் “யா ரசூலுல்லாஹ்” (ஸல்) என்பது போன்றவற்றை கூறுவானாயின் அவன் முற்றிலும் முஷரிக்காகி விடுவானே?

பதில்: புனித புகாரி ஷரீப், அதன் விரிவுரையான ஐனி எனும் நூற்களின் வாசகங்கள் (வினா தொடுத்த) உங்களுக்கு கூட எதிராக வந்துள்ளது ஏன்? என்று எந்த முஜ்தஹிதான இமாமும் அதஹிய்யாதை மாற்ற உத்திரவிடவில்லையே!

இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் ஹஜ்ரத் இப்ன் மஸ்வூத் (ரலி) அவர்களுடையவும், இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் ஹஜ்ரத் இப்ன் அப்பாஸ் (ரலி) அவர்களுடையவும் அதஹிய்யாதை தெரிவு செய்து இருக்கிறார்கள். அவர்களது இரு அதஹிய்யாதிலும் “அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு” என்று தான் இருக்கிறது.

கைறு முகல்லிது – இமாம்களை பின் தொடராதவர்கள் தனாவி கூட்டதினர்களானாலும் – கஜ்னவி குழுவினர்களானாலும் இதே முன்னிளையுள்ள அதஹிய்யாதை தான் ஓதி வருகின்றனர்.

எனவே, சில சஹாபாக்கள் (ரலி) தங்களது இஜ்திஹாதினால் அதஹிய்யாதை மாற்றியுள்ளார்கள். மர்பூஆனா பெருமானனரின் (ஸல்) அவர்களின் பக்கம் சேர்பிக்கப்பட்ட ஹதீதுக்கு எதிராக இந்த இஜ்திஹாதை அமல் படுத்த முடியாது.

மாற்றி அமைத்த இந்த சில சஹாபாக்கள் (ரலி) கூட, மறைவாக இருக்கும் பொழுது முன்னிலையாக அழைப்பது ஹராம் என்ற தோரணையில் மாற்றிவிடவில்லை. காரணம், பெருமான் நபியின் ஜீவிய காலத்திலும் வெகு தொலைவில் வசித்து வந்த சஹாபாக்கள் கூட, இதே முன்னிலையான அதஹிய்யாதை ஓதி வந்தனர்.

இறுதியாக, எமன், கைபர், மக்கா முகர்ரமா, நஜ்த், இராக் போன்ற எல்லா இடங்களிலும் தொழுகை நடை பெறும் பொழுதும் அதே அதஹிய்யாதை ஓதி வந்துள்ளார்கள். அதஹிய்யதில் அழைப்பவர் எங்கோ ஒரு தொலைவில் இருந்து கொண்டு அழைக்கிறார். பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனா நன்னகரில் உறைவிடம் கொண்டுள்ளார்கள். இப்படி அழைப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுக்கவும் இல்லை, இப்படியானதொரு சந்தேகமும் சஹாபாகளுக்கு (ரலி) எழவும் இல்லை.

பெருமானார் (ஸல்) அவர்கள் அதஹிய்யாதை கற்று கொடுக்கும் பொழுது எனது ஜீவிய காலம் மட்டும் ஓத வேண்டிய அத்தஹிய்யாது, எனது வபாதிர்க்கு பின் ஓத பட வேண்டிய அத்தஹிய்யாது வேறு இருக்கிறது என்றும் சொல்லவில்லை.

“இதனால் முன்னிலையான அதஹிய்யாத்தை மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை, எனவே, அச்சில சஹாபாக்களை (ரலி) இதில் பின் தொடர வேண்டியது இல்லை.

அப்படி இல்லையாயின் பெருமானார் (ஸல்) அவர்களே எனது வபாதிர்க்கு பின் என்னை முன்னிலை ஆக்காதீர்கள் என்று சொல்லி இருப்பார்கள். எனவே இது பொழுது, முன்னிலையானதை வைப்பதுவே மிக எட்ட்ரமானது. அஸல் தலீமில் (THA’LEEM) இவ்வாறு தான் உள்ளது.” என்று தப்லீக் ஜமாஅத் தலைவர்களில் ஒருவரான ரஷீத் அஹ்மத் கங்கோகி – பதாவா ராஷிதிய்யாவில் முதல் பாகம் 17 ஆம் பக்கத்தில் எழுதி உள்ளார்.

பதிலின் சுருக்கம்: சஹாபாக்கள் (ரலி) சிலரின் இச்செயல் ஆதாரமாக அமையாது. இல்லையெனில் நாயகம் (ஸல்) அவர்களின் பரிசுத்தமான ஜீவிய காலத்திலும் கூட (சஹாபாக்கள் இடையே) “ஷிர்க்” நடந்து இருக்கிறது. அதை அவர்கள் தடுக்காது விட்டு வைத்து இருக்கிறார்கள் என்று வந்து விடும். அப்படி மாற்றிய சஹாபாக்கள் (ரலி) சிலர் தான். பலர் அல்லர், என்றாலும்,

“இப்ன் மஸ்வூத் (ரலி) அவர்களது சொல்” அபூ அவானா (ரலி) அவர்களுடைய அறிவிப்பாகும். ஆனால் புகாரி நாயகத்தின் (ரஹ்) அறிவிப்பு மிக சரியானது. அதில் அது இப்ன் மஸ்வூத் (ரலி) அவர்களது சொல் அல்ல என்று விபரிக்கப் பட்டுள்ளது. அது அந்த அறிவிப்பாளரின் உரை ஆகும். அதன் எதார்த்தமானது “ஸலாமுன் ய’னீ அலன் நபிய்யி” என்பது தான். பெருமானார் (ஸல்) அவர்களது ஜீவிய காலத்தில் எந்த சலாம் இருந்ததோ அதே சலாம் தான் அவர்களது (ஸல்) வபாதிர்க்கு பின்பும் நீடித்து இருந்தது என்ற கருத்து கொள்ளவும் முடியும் என்ற அறிய தொரு விளக்கத்தை “மிர்காத்” எனும் நூலில் அல்லாமா முல்லா அலி காரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஆகவே, அதஹிய்யாத்தை சஹாபாக்கள் (ரலி) ஒரு பொழுதும் மாற்ற வில்லை என்றும், இது அறிவிப்பாளரின் விளக்கத்தில் ஏற்பட்ட விளைவு என்றும், அஸல் சம்பவத்தில் இது இல்லை என்றும் தெரிய வருகிறது. எனவே மேற்கண்ட வினாவிற்கு அடிப்படை இல்லாமல் போய் விடுஹிறது.

கேள்வி: தொலைவில் இருந்து நபியையோ, வலியையோ அலைக்கும் போது, நமது இச்சப்ததை அவர்கள் கேட்கின்றனர் என்று எண்ணம் கொண்டு அழைக்கக்கூடாது. அதனால் ஷிர்க் வந்து விடும், காரணம் தொலைவிலுள்ள சப்தத்தை கேட்பது இறைவனின் ஸிபாத் – இலட்சணமாகும். அல்லாஹ் அல்லாதவர்க்கு இத்திறன் உண்டு என்று நம்புவது ஷிர்க்காகும்.

இந்த நிர்ணயமின்றி “யா ரசூலுல்லாஹ்” “யா கௌத்” போன்றவட்ட்ரை கொண்டு அழைப்பது ஆகுமாகும் உதாரனத்திற்க்கு “தென்றல் காற்றே கேள்! என்று சொல்லும் போது தென்றல் காற்று நமது இவ்வழைப்பை கேட்கிறது என்ற நினைப்பு வருவதில்லை தானே, அது போன்று தான் என சில வஹ்ஹாபிகள் கூறுகின்றனர். இன்றைய போது வஹ்ஹாபிகளும் (ஷைத்தான் தொவ்ஹீத்வாதிகளும், மற்றும் அவர்களது கொள்கையை சேர்ந்தவர்களும்) இதையே காரணமாக காட்டுகின்றனர். தப்லீக் தலைவர்களில் ஒருவரான் ரஷீத் அஹ்மத் கங்கோஹியும் தமது பாதாவா ரஷீய்யவிலும் இதர நூற்களிலும் இதற்கு ஊக்கம் அளித்து இருக்கின்றனர்.

பதில்: தொலைவில் உள்ள சப்தத்தை கேட்பது அல்லாஹ்வின் ஸிபத்- இலட்சணம் என்பது அறவே இல்லை, தொலைவில் இருந்து அழைப்பவனுக்கு தூரமாக தெரிந்தாலும் அல்லாஹ்வுக்கு தொலை தூரம் என்பது இல்லை. உயிர் நரம்பை விட சமீபமாக இருக்கிறான். “நஹ்னு அக்ரபு – இலைஹீ- மின் ஹப்லில் வரீதி- நாம் அவனளவில் அவனுடைய பிராண நரம்பை விடவும் அதிகமாக நெருங்கி இருக்கிறோம்” என்றும்,
“வ இதா ஸ அலக இபாதி அன்னி – என்னை குறித்து என்னுடைய அடியான் (நபியே) உம்மை கேட்பார்களானால் நான் சமீபமாக இருக்கிறேன் (என்று நீர் சொல்லும்) என்றும்,
“வ நஹ்னு அக்ரபு இலைஹீ ……………. (மரண தருவாயில் இருக்கிற) அவரிடம் நாம் உங்களை காண அதிக முடுகுதலாக இருக்கிறோம், ஆனால் நீங்கள் அதை பார்ப்பதில்லை என்றும் இறைவனே சொல்லுஹிறான். எனவே, அவனே சமீபமாக இருப்பதினால் எல்லா சப்தங்களும் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றன. அவன் சமீபமாகவே கேட்கிறான்.

வாதத்துக்காக, தொலைவிலுள்ள சப்தத்தை கேட்பது இறைவனது இலட்சணம் என்று ஒப்புக்கொண்ட போதிலும் சமீபத்திலுள்ள சப்தத்தை கேட்பதும் அவனது இலட்சணம் தானே! ஆகவே, அருகாமையில் உள்ளவர்களையும், இந்த நமது அழைப்பை- சப்தத்தை கேட்கின்றனர் என்று விளங்கி, அழைக்காதீர்கள். ஷிர்க்கு வந்து விடும் என்று சொல்லி (தொலைவில் உள்ளவர்கள், அருகாமையில் உள்ளவர்கள்) எல்லோருக்கும் (எதையும்) கேட்க வைக்காதீர்கள்.

எவ்விதம் தொலைவில் உள்ள சப்தத்தை கேட்பது இறைவனின் இலட்சனமோ (உங்கள் சொல்படி) இருக்கின்றதோ அவ்விதமே தொலைவிலுள்ளவற்றை பார்ப்பதும் தொலைவிலுள்ள மனத்தை நுகர்வதும் இறைவனின் இலட்சணங்கள் தானே.

” இறை நேசச் செல்வர்களான அவ்லியாக்களுக்கு தொலை தூரம், சமீபம் இரண்டுமே ஒன்றுதான்” என்று இல்முல் கைபு, ஹாளிர், நாளிற் பற்றி பேசும் போது ஊர்ஜிதப் படுத்தி இருக்கும் போது, தொலைவு சமீபத்தில் உள்ளவற்றை எப்படி ஒரே விதமாக பார்த்து கொண்டு இருக்கிறார்களோ அவ்விதமே தொலைவு, சமீபத்திலுள்ள சப்தத்தை – அழைப்பை அவர்கள் காதுகள் கேட்கின்றன என்றால் எங்கனம் ஷிர்க் ஆகும்?

இத்தன்மைகள் அவர்களுக்கு அல்லாஹ்வினால் அருளப்பட்டவைகள் (அல்லாஹ்வுக்கு இவைகள் சுயமாக உள்ளவை, கொடுக்கப்பட்டவையும் (அதாயீஉம் ) சுயமாக உள்ளவை. (தாதியும்) எங்கனம் ஒன்று போல் ஆகும்? ஒன்றானால் அல்லவா ஷிர்க் ஆகும்?.

தொலைவான சப்தங்களை நபிமார்கள், வலிமார்கள் கேட்கின்றனர் என்பது பற்றி இதோ (சிலவற்றை) எடுத்து கட்டுகிறோம்! பாரீர்!

ஹஜ்ரத் யாகூப் (அலை) அவர்கள் “கண் ஆன் ” என்னும் ஊரில் இருந்து கொண்டு (மிக தொலைவில் உள்ள மிஸ்ரு நாட்டில் இருந்து கொண்டு வரப்படும்) யூசுப் (அலை) அவர்களது சட்டையின் மணத்தை நுகர்ந்தார்கள்.

“யூசுபின் மணத்தை நான் நிச்சயம் பெறுகிறேன் (அல் குரான் 12:94) என்றும், யாகூப் (அலை) சொன்னார்கள். சொல்லுங்கள் இதுவும் ஷிர்க்கா?

ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் மதீனா நன்னகரிளிருந்து கொண்டே “நிஹாவந்து” என்னும் இடத்தில் போர் செய்து கொண்டு இருந்த படை தளபதி சாரியா (ரலி) அவர்களுக்கு (யா சாரியா அல் ஜபல் என) எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்” (நூல் மிஷ்காத் 546)

உமர் (ரலி) அவர்களது கண் தொலைவில் உள்ள காட்சியை கண்டது என்றும், சாரியா (ரலி) அவர்களது காது தொலைவிலுள்ள சப்தத்தை கேட்டது என்றும் இந்த நிகழ்ச்சி உறுதி செய்கிறது.

ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்கள் இறை இல்லமாம் க’பதுல்லாஹ்வை கட்டியதும் (அபூகுபைஸ்) மலையின் மீது ஏறி, எல்லா ஆன்மாக்களையும் முன்னோக்கி, அல்லாஹ்வின் அடியார்களே! (அல்லாஹ் ஹஜ்ஜை கடமை ஆக்கி உள்ளான், ஹஜ் செய்யுங்கள்) என்று கூவி அழைத்தார்கள். கியாமத் நாள் வரையிலும் படைக்கப் படுகின்றவர்கள் அனைவரும் அவ்வழைப்பை கேட்டனர். எவர்கள் “லெப்பைக்” என்று சொல்லி பதில் அளித்தார்களோ அவர்கள் நிச்சயமாக ஹஜ் செய்தே தீருவார்கள். எவர்கள் மெளனமாக இருந்தார்களோ அவர்களுக்கு ஹஜ் செய்ய ஒரு போதும் முடியாது போய்விடும்.. என்று தப்சீகளில் 22:27 வசனத்தின் கீழ் விவரிக்கப்பட்டு உள்ளது.

தொலைவில் இருந்து கேட்டனர் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், படைக்கபடுவதர்க்கு முன்னரே அனைவரும் ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்களது அழைப்பை கேட்டுள்ளனரே! அப்படியானால் இதுவும் ஷிர்க்கா? சொல்லுங்கள்!

இவ்வாறே இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவன் சமூகத்தில், இரட்சகனே! மரணித்தவர்களை எப்படி நீ உயிர் ஆக்குவாய் ? என்பதை எனக்கு காட்டுவாயாக! என வினவினார்கள். அது பொழுது நான்கு பறவைகளை அறுத்து அவைகளின் கறியை நான்கு மலைகளின் மீது வைத்து ” தும்மத் ஊஹுன்ன ய’தீனக ஸ’யன் – பின் அவைகளை அலையும், அவைகள் (உயிர் பெற்று) விரைந்து உம்மிடம் வரும்” என்று கட்டளை இட்டான். (அவ்வாறே அறுத்தார்கள், பின் அழைத்தார்கள்). அறுக்கப்பட்ட – உயிரற்ற பறவைகள் அழைக்கப் படுஹின்றன, அப்போது அவைகளும் ஓடி வருகின்றன, என்று இருக்கும் போது, அவ்லியாக்கள் இந்த பறவைகளை விடவும் அற்பமானவர்களா என்ன?

இன்று கூட நடை முறையில் ஒருவன் இந்தியாவில் இருந்து கொண்டு தொலை பேசி மூலமாக லண்டனில் உள்ளவனோடு உரை ஆடுஹிறான், நமது இப்பேச்சை லண்டனில் உள்ளவன் தொலை பேசி மூலம் கேட்கிறான் என்று விளங்கி தான் – அறிந்து தான் அழைக்கிறான். இவ்வழைப்பு ஷிர்க் இல்லை என்று இருக்கும் போது, ஒரு முஸ்லிம் தொலை பேசியின் திறனை விட நுபுவத்தின் திறன் பன்மடங்கு வலுவானதினால் – நபிமார்கள் அல்லாஹ்வினால் கொடுக்கப்பட்ட இந்த வல்லமையால் எல்லா அழைப்பின் சப்தத்தையும் கேட்கின்றனர் என்று நிர்ணயம் கொண்டு “யா ரசூலுல்லாஹ் – அல் யாத்” – இறை தூதரே இரட்சிப்பு” என்று அழைத்தால் எங்கனம் ஷிர்க் ஆகும்?

“ஒரு நாள் இரவு வேளையில் வீட்டில் மைமூனா (ரலி) அவர்களுடன் ரசூல் (ஸல்) அவர்கள் இருக்கும் போது “உதவி உதவி என்று அபயக் குரல் கேட்டு, நான் இங்கு இருக்கிறேன், நான் இங்கு இருக்கிறேன், நான் இங்கு இருக்கிறேன் என்றும், உங்களுக்கு உதவி கிடைத்து விட்டது என்றும் மூன்று தடவை ரசூல் (ஸல்) அவர்கள் வீட்டில் இருந்தவாறு சொல்ல, மைமூனா (ரலி) அவர்கள், இங்கு யாரும் இல்லாமல் இருக்கும் போது, நீங்கள் யாருடன் பேசிக் கொண்டு இருந்தீர்கள் யா ரசூலுல்லாஹ் (ஸல்). அதற்க்கு ரசூல் (ஸல்) அவர்கள் நான் பனி க’அப் கோத்திரத்தை சார்ந்த ராஜிஜ் என்ற மனிதருடன் பேசி கொண்டு இருந்தேன். அவர் என்னிடம் குரைஷ்களுக்கு எதிராக என்னிடம் உதவி நாடினார். மைமூனா (ரலி) அவர்கள் சுபுஹு தொழுகையை அடுத்த நாள் காலையில் முடித்தவுடன், மைமூனா (ரலி) அவர்கள் ராஜிஜ் அவர்கள் ரசூல் (ஸல்) அவர்களை அழைத்து உதவி தேடியதை “யா ரசூலுல்லாஹ் (ஸல்) உதவி செய்யுங்கள் & அல்லாஹ்வின் அடியார்களை எங்களுக்கு உதவி செய்ய கூப்பிடுங்கள்” என்று அழைத்ததை கேட்டான் என்று கூறினார்கள் ( ஆதாரம் முக்தசர் சிராத்துல் ரசூல் – பாடம் மக்காஹ்வின் வெற்றி)

ஹஜ்ரத் சுலைமான் நபி (அலை) அவர்கள் ஒரு காட்டின் பிரயாணம் செய்து கொண்டு இருக்கும் போது சிற்றெறும்பின் சப்தத்தை தொலைவில் இருந்து கொண்டே கேட்டுள்ளார்கள் அந்த (தலைமை) சிற்றெறும்பு சொல்லுகிறது. ” யா அய்யுகள் நாமளு……………… எறும்புகளே! உங்களது குடி இருப்புக்குள் நுழைந்து கொள்ளுங்கள், சுலைமானும் அவரது படையினரும் அவர்கள் அறியா வண்ணம் உங்களை மிதித்து விட வேண்டாம் (அல் குரான் 27:18)

“சிற்றெறும்பின் இக்கூற்றை மூன்று மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு சுலைமான் நபி (அலை) கேட்டார்கள் என்று இவ்வசனத்தின் கீழ் தப்சீர் ரூஹுள் பயானில், மற்றும் இதர தப்சீர்களிலும் எழுதப் பட்டுள்ளது. சின்னஞ் சிறு எறும்பின் உரையாடல் சப்தத்தை மூன்று மைல்களுக்கு அப்பால் கேட்க முடிகிறது. இதனை ஷிர்க் என்று சொல்லுவார்களா?

மரணித்தவர்களை அடக்கம் செய்த பின் வெளி ஜனங்களின் காலோசையை மரணித்தவர்கள் கேட்கின்றனர், ஜியாரத் செய்பவர்களை பார்கின்றனர், அவர்கள் இனம் தெரிந்து கொள்கின்றனர். இதனால் மண்ணறைகளுக்கு சென்று மரணித்தவர்களுக்கு சலாம் சொல்லுவது வேண்டர்பாளது என்று “மிஷ்காத்” எனும் நூலில் “கப்ரின் வேதனையை தரிபடுதுதல்” எனும் பாடத்தில் கூறப்பட்டு உள்ளது.

மண்ணறைக்குள் இருந்து கொண்டு இவ்வளவு மெல்லிய (நடப்பவர்களது கால்) ஒலியை கேட்பதானது எவ்வளவு தூரத்தில் இருந்து கேட்பதாகும். சொல்லுங்கள் இதுவும் ஷிர்க்கா?

“இறை நேச செல்வர்கள் இறையோனின் வல்லமையால் பார்கின்றனர், கேட்கின்றனர், நுகர்கின்றனர், இவ்வளமைகளை அல்லாஹ் அவர்களுக்கு நல்கியிருக்கின்றான் என்று “மிஷ்காத்” – கிதாபு த’வத் என்பதில் இருந்து ஒரு ஹதீதை மேற்கோள் காட்டி நாம் இறை அன்பர்களுக்கு மறைவானவற்றை பற்றிய அறிவு இருக்கிறது என்பது பற்றி பேசும் போது வரைந்து இருக்கிறோம். அது போது அவர்கள் தொலைவில் இருந்து கொண்டு கேட்பது ஷிர்காகுமா?

“எப்பென்னாவது தன் கணவனுடன் சண்டை இட்டு கொண்டால், சொர்க்கத்தில் இருந்து கொண்டு ஹூருல் ஈன எனும் சுந்தரிகள் அப்பெண்ணை சபிக்கின்றார்கள் என்று திவ்விய ஹதீதில் வந்து இருக்கின்றது. வீட்டின் அடிக்குள் நடக்கும் சண்டையை கூட இவ்வளவு தொலைவில் இருந்து கொண்டு ஹூருல் ஈன்கள் பார்கின்றனர், கேட்கின்றனர்.

மனிதன் முடிவு நல்ல முடிவாகுமா? (அல்லவா) என்பது பற்றிய மறைவான சங்கதிகளையும் அறிகின்றனர். ரேடியோ, டெலிவிஷன் மூலம் தொலைவில் உள்ள வற்றை கேட்கின்றனர், பார்கின்றனர் என்று இருக்கும் போது?

நூருன்னுபுவத் – வல்விலாயத் – நபித்துவ, வலித்துவ அருள் ஜோதி இந்த மின் இயக்க சக்தியை விடவும் குறைவானதா என்ன?

பெருமானார் (ஸல்) அவர்கள் மி’ராஜ் – விண்ணுலக பயணத்தின் போது, சொர்க்கத்தில் ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்களின் காலடி ஓசையை கேட்டார்கள். அது பொழுது ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்கள் விண்ணுலக பயணத்தை மேற் கொண்டு இருக்கவில்லை. மண்ணுலக வீட்டில் இருந்தார்கள். தஹஜ்ஜுத் தொழுகைக்காக அங்கும் இங்கும் சுற்றி கொண்டு இருந்திருப்பார்கள். இங்கு இருக்கும் பிலால் (ரலி) அவர்களின் காலடி ஓசை அங்கு சொர்க்கத்தில் கேட்கின்றது. ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்கள் சூக்கும உடல் எடுத்து அங்கு சென்று இருந்தார்கள் என்றால், (நாம் கூறி வருகின்ற) “ஹாளிர், நாளிற்” என்பது ஊர்ஜிதமாகி விட்டது. இவைகள் அனைத்தையும் நம் பிரதிவாதிகள் “அல்லாஹ் கேட்க வைத்தான், அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்” என்று சொல்லுவார்கள்.

ஆம்! நாமும் இதையே தான் சொல்லுகின்றோம். நபிமார்கள் , வலிமார்களுக்கு தொலைவிலுள்ள சப்தங்களை அல்லாஹ் கேட்க வைக்கும் போது இவர்கள் கேட்கின்றனர். இறைவனுக்கு இத்தன்மை தாதி – சுயமானது. அவர்களுக்கு அதாயி -அல்லாஹ்வினால் கொடுக்கப்பட்டது. இறைவனுக்கு அது கதீம்-பூர்விகமானது, இவர்களுக்கோ இது ஹாதிது – புதிதானது.

இறைவனுடைய இத்தன்மை எவருடைய கரதுக்குள்ளும் அடங்கியதில்லை! ஆனால் இவர்களுக்கான் இத் தன்மையோ அல்லாஹ்வின் கைப்பிடியினுள் அடங்கியது. காது மற்ற உருப்புகளின்றி அல்லாஹ் கேட்கிறான், இவர்கள் காதினால் கேட்கின்றனர். இந்த அளவுக்கு பாகுபாடு இருக்கும் போது – ஷிர்க் – இணை வைத்தல் எப்படி ஏற்படும்?

“யா ரசூலுல்லாஹ்? என அழைப்பது பற்றி இன்னும் அதிகம் சொல்லலாம், எனினும் இதோடு முடித்துக் கொள்கிறோம். நம் முடிவையும் நல் முடிவாக அமைய அல்லாஹ் த’ஆலா அருள் புரிவானாக! இறைவா! உண்மையை உண்மையாக எங்களுக்கு காட்டி, அதை பின் பற்றி நடப்பதற்கும், அசத்தியத்தை அசத்தியமாகக் காட்டி, அதை தவிர்த்து நடப்பதற்கும் அருள் புரிவாயாக ! ஆமீன். அற்ஹமர் ராஹிமீனே! யா ரப்பல் ஆலமீனே!

குறிப்பு: மேற்கூறப்பட்ட “யா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா” எனது உச்தாதும் , ஷைகும் எழுதியது. காப்பி எடுத்து எழுதி இருக்கிறோம்.___

Wednesday, December 28, 2011

இறந்தவர் விட்டுச் சென்ற பொருள், கொஞ்சமோ கூடுதலோ அனைத்திலும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பங்குண்டு.


"பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்." (அல் குர்ஆன் 4 : 7)
மேற்குறிப்பிட்ட வசனம் இறங்கக் காரணம்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழும் காலத்திலேயே ஹளரத் அவ்ஸ் இப்னு ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இறந்து விட்டார்கள். இரண்டு மகள்கள், ஒரு பருவமடையாத மகன், மனைவி.
இறந்த செய்தி கேட்டு அவரின் அண்ணன் மகன்கள் இரண்டு பேர் வந்து, விட்டுச்சென்ற அனைத்தையும் எடுத்துச் சென்றனர். காரணம், பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது (அறிவீனர்களின் காலத்தில்). பையன் இன்னும் பருவமடையவில்லை. எனவே அவனுக்கும் சொத்து கிடையாது என்றனர்.
உடனே இறந்த ஸஹாபியின் மனைவி சொன்னார்கள்: ‘சொத்துக்களை எடுத்துக் கொண்டது போல் என் இரு மகள்களையும் நிகாஹ் செய்து கொண்டால் நான் அந்த கவலையின்றி இருப்பேனே!’ என்றார்கள்.
அதுவும் முடியாது என்ற அவர்கள் சொன்னபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அவ்ஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவி மறையிட்டார்கள்
அவர்கள் அநீதம் செய்யப்பட்ட நிலையை எண்ணி தீர்வை எதிர்பார்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருக்கும் பொழுது மேற்குறிப்பிடப்பட்ட இறைவசனம் இறங்கியது.
இறந்தவர் விட்டுச் சென்ற பொருள், கொஞ்சமோ கூடுதலோ அனைத்திலும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பங்குண்டு.
பங்கு விகிதத்தில் வித்தியாசம் இருப்பினும் அவசியம் பெண்ணுக்கும், பருவமடையாத ஆணுக்கும் கூட நிச்சயம் பங்குண்டு என்பதை இந்த வசனம் வலியுறுத்துகிறது.
இறந்தவர் உடுத்தியிருக்கம் உடை, அணிகலன்கள் இதுவும் பொதுச் சொத்தில் சேர்க்கப்பட்டு முறைப்படி பங்க வைக்கப்பட் வேண்டம். தர்மம் செய்துவிடக்; கூடாது. அதுபோன்றே அலுமினிய, பித்தளை, தட்டு முட்டு சாமான்கள் கூட பங்க வைக்கப்பட வேண்டும். பங்கை பெற்றுக் கொண்ட பங்பதாரிகள் தன் விருப்பப்படி தர்மம் செய்யலாம்.
சில இடங்களில் இறந்தவரை குளிப்பாட்ட புதிய வாளி, துடைக்க புதிய துண்டு போன்றவை வாங்கப்பட்டு பின்பு அதை உடைத்து விடுகிறார்கள். துணியை தூர எறிகிறார்கள். இதுவும் கூடாது.
எவரும் தான் உயிருடன் இருக்கும்போதே தன் சொத்துக்கள் அனைத்தையுமோ அல்லது அதில் பாதியையோ தர்மம் செய்வதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்கள். மூன்றில் ஒரு பாகம் தர்மம் செய்யலாம். இரண்டு பகுதி குடும்பத்தார்களுக்காக வைக்க வேண்டும் என்றார்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
இறந்தவரின் சொத்தில் பங்குபெறும் எவருக்கும் - தனிப்பட்ட முறையில் இறந்தவர் ஏ
Nதுனும் ஒரு சொத்தை எழுதி விட்டுச் சென்றாலோ, சொல்லி விட்டுச் சென்றாலோ அது செல்லாது. வல்ல ரஹ்மான் அவரவர்களுக்குரிய பாகங்களை ஒழுங்காக ஒப்படைக்கும் பேற்றினை தந்தருள்புரிவானாக! ஆமீன்.
thnxs:
மவ்லவி, பி.இஸட். பரகத் அலீ பாகவி

Wednesday, December 21, 2011

அதிசயத்தின் உச்சம் திமிங்கிலங்கள்

உலகத்தில் வினோதங்கள் பல வகைகளில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதில் உயிரில்லா வினோதங்கள் அல்லது உயிர் உள்ள வினோதங்கள் என இருவகை பெரும் பிரிவுகளும் உண்டு. இதில் இன்று உயிர் உள்ள வினோதங்களில் ஒன்றான கடல் உயிரினங்களிலே மிகவும் வியப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தக் கூடிய திமிங்கிலங்கள் பற்றி நாம் சில வினோத தகவல்களை தெரிந்துகொள்வோம்.
திமிங்கலம் நீரில் வாழும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இதன் ஒரு வகையான நீலத்திமிங்கலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டி என்று கருதப்படுகிறது. திமிங்கலங்கள் வெப்ப இரத்தப் பிராணிகளாகும். திமிங்கிலத்தில் 75-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் தனித்தனி குணாதிசியங்களைப் பெற்று விளங்குகின்றன. கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் பல வண்ணங்களிலும் 24 மீட்டர் நீளம் முதல் 1.25 மீட்டருக்குக் குறைவான நீளம் வரையும் உப்பு நீர் மற்றும் நன்னீரிலும் வாழக்கூடியதாகவும் உலகில் உள்ள எல்லா கடல்களிலும் மற்றும் சில வகைகள் அமேசான், சீனாவின் மிகப் பெரிய ஆறான யாங்ட்ஜிலும் மற்றும் இந்தியாவின் கங்கை ஆற்றிலும் வாழக்கூடியதாகவும் காணப்படுகின்றன.
10 முதல் 16 மாத கால அளவில் வித்தியாசமான கர்ப்ப காலங்களை உள்ளடக்கியதாகவும் விளங்குகின்றது. மனிதனின் மூளையைக் காட்டிலும் அளவில் நிறையில் பெரிய மூளையுடைய பாலூட்டிகள் இரண்டே இரண்டுதான். ஒன்று யானை மற்றது திமிங்கிலத்தினுடைய மூளையாகும். உலகில் உள்ள பாலூட்டிகளில் (அல்லது உயிரினங்களில்) மிகப் பெரிய மூளையுடையது என்ற சிறப்பும் இதற்கு உண்டு. திமிங்கில வகைகளில் மிக அதிக கர்ப்பக் காலமான 16 மாத கர்ப்ப காலம் இதனுடையதாகும். இவை 60 முதல் 70 வருடம் உயிர் வாழக்கூடியது.
திமிங்கிலம் என்று சொன்னவுடன் நாம் எல்லோரும் உணரக்கூடிய ஒன்று மிகப் பெரிய மீனாகத்தான் இருக்கும் என்பதாகும். இவைகள் பல வகையிலும் மீன்களை ஒத்திருப்பினும் கூட இது மீன் இனத்தைச் சாராத பாலூட்டி ஆகும். பொதுவாக கடல் வாழ் உயிரினங்களின் ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த வகை மீன்களை திமிங்கிலங்களை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றார்கள். ஒன்று பற்கள் உள்ளவை. வாயின் இரு புறங்களிலும் வலிமையான தாடைகளுடன் கூடிய பற்களுடையவை. மற்றது பற்கள் அற்றவை அல்லது baleen என்ற அமைப்பைப் பெற்ற baleen திமிங்கிலங்கள். பற்கள் உள்ள வகைகளில் Sperm whale, Beaked, Narwhals, Beluga, Dolphin மற்றும் Porpoises போன்ற வகைகளும் பற்கள் அற்றவைகளில் Rorquals, Gray whales, Right whales என்ற மூன்று வகைகளும் இருக்கின்றன.
பொதுவாக எல்லா பாலூட்டிகளுக்கும் இருக்கக் கூடிய பித்தப் பை (gall bladder) மற்றும் குடல் வால்வு (appendix) போன்ற உள் உறுப்புக்கள் இல்லாத அமைப்புகள் விதிவிலக்கான அம்சமாக திகழ்கின்றது. இந்த உலகில் வாழக்கூடிய உயிரினங்களில் மிகப் பெரியதும் இதுவரை கண்டெடுக்கப்பட்ட டைனோசர்களின் எலும்புக் கூடுகளில் மிகப் பெரிய அளவினை ஒத்த உடல் அளவையும் பெற்று பல சிறப்பு அம்சங்களுடன் இந்த வகை திமிங்கல மீன்கள் விளங்குகின்றன.
உலகிலேயே அதிக சத்தம் போடக் கூடிய உயிரினம் திமிங்கலம்தான். Blue Whale-களுக்கு உள்ள மற்றுமொரு தனிச்சிறப்பு என்னவென்றால் இவை தண்ணீருக்கு அடியில் எழுப்பும் 150-க்கும் மேலான டெசிபலைக் கொண்ட (எந்த ஒரு உயிரினங்களையும் மிகைத்த) ஒலி ஒரு ஜெட் விமானம் கிளம்பும் போது ஏற்படுத்தும் சத்தத்தைக் காட்டிலும் கூடுதலாகும். இந்த ஒலி தண்ணீரின் அடியில் கடக்கும் தொலைவு 1000 கிலோ மீட்டருக்கும் மேலாகும். இவைகள் அவ்வப்போது பாடவும் செய்கின்றன. கிட்டத்தட்ட அரை மணி நேரம் திமிங்கலம் தொடர்ந்து பாடுவதை பதிவு செய்திருக்கிறார்கள். “சில திமிங்கலங்கள் தொடர்ந்து மணிக்கணக்கில் பாடும்,” என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இவை தங்கள் தலையின் மேற்பரப்பில் அமைந்த சுவாசக் குழாய் (Blow hole) மூலம் தண்ணீரை 9 மீட்டர் உயரம் வரை நீர் கம்பம் (Water Spout) போல பீய்ச்சி அடிக்கின்றன. இவ்வாறு மிகுந்த சப்தத்துடன் கூடிய இந்த நிகழ்ச்சியும் திமிங்கிலங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும் சாதனமாக பயன்படுத்துவதாக விஞ்ஞானிகளால் நம்பப் படுகின்றது. ஏனென்று சொன்னால் இவை சத்தம் எழுப்பும் போது அதற்குப் பதில் அளிக்கும் விதமாக தொலைதூரக் கூட்டத்தின் திமிங்கிலங்கள் சப்தம் இடுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள்.
நாம் எல்லோருக்கும் இதுநாள் வரை மீன்கள் என்றால் நீரில் மட்டும்தான் வாழும் என்று தெரியும். அதிலும் இந்த திமிங்கிலங்கள் போன்ற மிகப்பெரிய மீன்கள் என்றாலே கடலைத் தவிர வேறு எங்கும் வாழாது என்பது மட்டுமே நாம் அனைவரின் ஒட்டுமொத்த கருத்தாகும். ஆனால் இந்த மீன்கள் ஒரு காலத்தில் தரைகளிலும் வாழ்ந்திருக்கின்றன என்றால் நம்புவீர்களா?
உலகத்திலேயே எந்த ஒரு உயிருக்கும் இல்லாத வினோத சுவச அமைப்பை கொண்டு இருக்கின்றன திமிங்கலங்கள். இவைகள் தண்ணீருக்கடியில் தங்கள் செவுள்கள் மூலம் ஆக்ஸிஜனை கிரகிக்கும் அமைப்பைப் பெற்றுள்ளவை. ஆனால் திமிங்கிலங்கள் வெப்ப இரத்த பிராணி ஆகும். இவைகளின் உடல் வெப்ப நிலை மனிதனைப் போன்றே 37 டிகிரி செல்சியஸ் ஆகும். இவைகள் மற்ற பாலூட்டிகளைப் போன்றே நுரையீரல் அமைப்பைப் பெற்று விளங்குவதால் தங்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனை தண்ணீரின் மேற்பரப்பில் வந்துதான் பெற்றுக் கொள்ள இயலும். திமிங்கிலம் மிக வித்தியாசமான சில தகவமைப்புகளைப் பெற்று விளங்குகின்றது. தன் வாழ்நாள் முழுதும் தண்ணீரிலேயே கழிக்கக் கூடிய ஒரே பாலூட்டி திமிங்கிலம் ஒன்றுதான். மேலும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பாலூட்டி இனங்களில் மீன்களை ஒத்த உடல் அமையப் பெற்று நடக்கக் கூடிய வகையில் கால்கள் அமைப்பைப் பெறாத ஒரே உயிரினமும் திமிங்கிலம் ஒன்றுதான். இதுவும் விதிவிலக்கான அம்சமாகும். மேலும் இவைகளின் தலையின் மேற்பரப்பில் அமைந்துள்ள Blow hole என்ற சுவாசக் குழாய் அமைப்பு நுரையீரலுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதாலும் மற்ற பாலுட்டிகளைப் போன்று தொண்டையின் மூலம் சுவாசம் செல்ல வேண்டிய அமைப்பு இல்லாததனாலும் ஒரே நேரத்தில் இவைகளினால் உண்ணவும் சுவாசிக்கவும் இயலுகின்றது.
இதுவரை நாம் அறிந்த உயிரினங்கள் எல்லாம் அதிகபட்சமாக ஒரு முறை சுவாசித்தால் பத்து நிமிடம் முதல் பதினைந்து நிமிடம் வரை சுவாசிக்காமல் இருக்க முடியும். அதிலும் மனிதர்களை சொல்லவே வேண்டாம். மிகவும் குறைவான சுவாசம் தாங்கும் திறமை உடையவர்கள். ஆனால் ஒரு முறை சுவாசித்து 80 நிமிடங்கள்வரை சுவாசிக்காமல் இருக்கும் ஒரு உயிரினத்தைப் பார்த்து இருக்கிறீர்களா? திமிங்கிலங்களின் அறியத் திறமைகளில் அதுவும் ஒன்றாம்!.
இவை ஒரு முறை சுவாசித்த பின்னர் 8 0நிமிடங்கள் வரை தண்ணீரின் அடியில் இவைகளினால் தாக்குப் பிடிக்க இயலுகின்றது. இவற்றின் உடல் அளவிடற்கரிய கடல் நீரின் அழுத்தத்தைத் தாங்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இவை தங்கள் இரையைத் தேடி கடலின் ஆழத்திற்குச் செல்லும் தூரம் எந்த பாலூட்டிகளாலும் அடைய முடியாத ஓர் இலக்காகும். 1000 மீட்டர் (1 கிலோ மீட்டர்) முதல் 2000 மீட்டர் (இரண்டு கிலோ மீட்டர்) ஆழம் வரை செல்லக் கூடிய ஆற்றல் பெற்றது. ஆழக் கடலின் வெளிச்சம் அறவே இல்லாத அடர்ந்த இருளில் இரையைப் பிடிக்க பயன்படுத்தும் உத்தி எதிரொலி (echo location) மூலம் இரையின் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து கொள்ளும் முறையாகும்.
இவைகள் சராசரியாக ஒரு நாளைக்கு 1500 கிலோ வரை உணவை உட்கொள்ளுகின்றன. இதன் முக்கிய உணவான 10 மீட்டர் நீளமுள்ள Gaint squid. பிடித்து உண்ணும்போது சில சமயம் இவைகளுக்கிடையே சண்டை ஏற்பட்டு Sperm Whale உடலில் மிக ஆழமான வெட்டுக் காயத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இருப்பினும் கூட முடிவில் அவற்றை கபளீபரம் செய்யத் இவை தவறுவதில்லை. இவை தங்களின் உணவைப் பிடித்து உண்டதன் பின்னர் தண்ணீரின் மேற்பரப்பிற்கு வந்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை காற்றை நன்கு சுவாசித்து ஆக்ஸிஜனை சேமித்து மீண்டும் ஆழ் கடலை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடர்கின்றன.
பாலூட்டிகளின் சாம்ராஜ்ஜியத்தில் மிக மிக அதிக தூர பயணத்தை மேற்கொள்ளக் கூடிய உயிரினம் என்ற சிறப்பம்சமும் திமிங்கிலங்களுக்கு உண்டு. Killer Whale மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் வரைச் செல்லக் கூடிய ஆற்றல் பெற்றவை. திமிங்கிலங்கள் தங்கள் இனப்பெருக்கத்திற்காக குளிர்ப் பிரதேசங்களையும் குட்டிகளை ஈன்றெடுக்க வெப்ப பிரதேசங்களையும் தேர்ந்தெடுத்து மிக நீண்ட தூரப் பயணத்தை மேற்கொள்ளுகின்றன. Gray Whale என்ற திமிங்கில வகை தங்கள் குட்டிகளைப் பெற்றெடுக்க அலாஸ்காவிற்கு அப்பாலிருந்து மெக்ஸிகோ கடற்கரைப் பகுதி வரை கடந்து வரக் கூடிய தொலைவு 10,000 கிலோ மீட்டரை விட அதிகமாகும். இவைகளின் பயணம் சிறிய அல்லது பெரிய கூட்டமாகவோ அல்லது தனித்தோ அல்லது ஆண்கள் மட்டுமோ அல்லது ஆண், பெண் இரண்டும் கலந்தோ மேற்கொள்ளுகின்றது.
மொத்தம் கடல்வாழ் உயிரினங்கள் பற்றிய ஆயிரத்திற்கும் அதிகமான இறுதி ஆய்வுகளின் முடிவில் ‘சயின்ஸ்’ இதழுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுத்தாள் மிகத்தெளிவாக தனது முடிவினை கூறியது: மனிதர்களின் மூளையைக் காட்டிலும் பெரிய மூளை திமிங்கிலங்களுடையதாகும். மூளையின் அளவிற்கும் அறிவுத் திறனுக்கும் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகளினால் நம்பப்படுகின்றது.
1970 ஆண்டு வாக்கில்தான் திமிங்கிலங்களின் புத்திக் கூர்மையான செயல்பாடுகள் முதல் முதலாக அறியப்பட்டது. விஞ்ஞானிகள் திமிங்கிலங்களை புத்திசாலி உயிரினமாகவே கருதுகின்றார்கள். ஏனென்று சொன்னால் மூளையின் முன்புறமாக அமைந்த cerebral cortex என்ற அடுக்கு யானை, நாய் மற்றும் மனிதர்கள் போன்ற புத்திசாலி உயிரினங்களுக்கு இருப்பது போல – ஏன் மனிதர்களுக்கு இருப்பதை விட அதிகமாகவே இவற்றிற்கு இருக்கின்றது. ஆராய்ச்சியின் முடிவுகள் கூட இவற்றை நிரூபிக்கும் வண்ணமாகவே உள்ளன. சில வகை டால்பின்கள் சுயமாக சிந்தித்து சாமர்த்தியமாக செயல்படுவதை ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளார்கள்.
பாகிஸீட்டஸ் ஆய்வுத்தாள் கூறுவதாவது: “படிப்படியான பரிணாம மாற்றம் அடைந்து நிலத்திலிருந்து நீருக்கு வந்த திமிங்கில பரிணாம வளர்ச்சியில் பாகிஸீட்டஸ¤ம் தொடக்க ஈயோஸீன் காலத்தினைச் சார்ந்த இதர திமிங்கிலங்களும் நீர்-நிலம் இரண்டும் சார்ந்த வாழ்க்கையினை வாழ்ந்த நிலையை பிரதிநிதித்துவப்படுத்துவதாக சான்றுகள் கூறுகின்றன.” அடுத்த முக்கியமான தொல்லெச்சம் ஆம்புலோஸீட்டஸ் நடன்ஸ் (Ambulocetus natans) என்பதாகும். நடமாடும் நீந்தும் திமிங்கிலம் என்பது இந்த தொல்லெச்சத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பெயரின் பொருளாகும். ‘பரிணாமவாதிகளின் பாதிப்பான பார்வைக்கு அப்பால் இது நீந்தியது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை’ (Darwinism Refuted’ பக்.125) என்பது யாகியாவின் வாதம். ஆனால் பரிணாம அறிவியலாளர்கள் முன்வைக்கும் வாதங்களை அவர் ஏறெடுத்தும் பார்க்காமல் அம்புலோஸீட்டஸ் நிலத்தில் வாழும் பிராணி என்பதற்கான ஆதாரங்களை அடுக்குகிறார். ஆனால் பரிணாம அறிவியலாளர்கள் இதனை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அம்புலோஸீட்டஸ் நிலத்திலும் நீரிலுமாக வாழ்ந்த பிராணி என்பது பரிணாம அறிவியலாளர்கள் ஒத்துக்கொள்ளும் ஒரு வினோத சான்றிதழ் ஆகும்.
உலகில் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் திமிங்கிலமும் ஒன்றாகும். இவை இவற்றிலிருந்து கிடைக்கும் எண்ணெய் மற்றும் இறைச்சிக்காகவும் அவற்றின் பலீன் தகடுகளுக்காகவும் பெருமளவு வேட்டையாடப்படுகின்றது. இவற்றின் எலும்புகளிலிருந்து 1600க்கு மேற்பட்ட கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. 1849ம் ஆண்டு பெட்ரோலியத்திலிருந்து கெரசின் என்ற மண்ணெண்ணெய் கண்டுப்பிடிப்பதற்கு முன்பு விளக்கெரிக்க பெருவாரியாக உலக மக்களால் திமிங்கில எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்காகவே பெருமளவு சென்ற காலங்களில் வேட்டையாடப்பட்டும் வந்தது. தற்போது திமிங்கிலங்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றமாகும்.
இந்த இனங்களை அழிவிலிருந்து காப்பாற்ற சர்வதேச அளவில் அமைக்கப்பட்ட IWC (INTERNATIONAL WHALING COMMISSION) என்ற அமைப்பு திமிங்கிலங்களைப் பிடிக்க பல நிபந்தனைகளை விதித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் பிரான்ஸிலும் இவ்வாறாக திமிங்கிலங்கள் கடல் கரையில் உள்ள சதுப்பு நிலங்களில் வந்து காணப்பட்டது. அவற்றில் பல இறந்தும் போய் விட்டது என்பது அனைவரும் அறிந்ததே. ஏன் இவ்வாறு திமிங்கிலங்கள் கரைக்கு வருகின்றது என்பதினை அறிய ஆராச்சிகளை செய்து வருகின்றார்கள் பிரான்ஸ் ஆராச்சியாளர்கள்.
பனித்துளி சங்கர்

குர்ஆனில் சிலந்தியின் வீடு


குர்ஆன் கூறும் சிலந்தியின் வீடு ஓர் அறிவியல் அற்புதம்
அய்னுஷ்-ஷம்ஸு பல்கலைக்கழகத்தின் விவசாயக்கல்லூரியில் பணியாற்றும் பூச்சிகள் தாவரவியல் துறைப் பேராசிரியர் டாக்டர் அல்யம்மீ பின்வரும் தகவலைக் கூறுகிறார்:-
குர்ஆனில் அல்லாஹ் சிலந்தியை உதாரணமாகக் கூறுகிறான்.

مَثَلُ ٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ أَوْلِيَآءَ كَمَثَلِ ٱلْعَنكَبُوتِ ٱتَّخَذَتْ بَيْتاً وَإِنَّ أَوْهَنَ ٱلْبُيُوتِ لَبَيْتُ ٱلْعَنكَبُوتِ لَوْ كَانُواْ يَعْلَمُونَ

அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது; அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது; ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் – இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்).
இந்த வசனத்தில் இத்தகதத் பைத்தன் (اتخذت بيتا ) ‘ அது வீட்டைக் கட்டியது’ என்று இறைவன் ஆண்பாலில் துவங்கி ‘கட்டியது’ என்ற வினைச்சொல்லை பெண்பாலில் கூறியுள்ளான். இலக்கண மரபுப்படி ஆண்பாலுக்குப்பிறகு பயனிலையை ஆண்பாலாகத்தான்; கூறவேண்டும். ஆனால் இங்கே பெண்பாலாகக் கூறியதைப் பார்க்கும் போது இலக்கணப்பிழையாகத் தோன்றலாம்.
இது மனிதன் இயற்றிய சொல்லாக இருந்தால் இலக்கணத்தில் தவறு நிகழ்ந்ததாக நினைத்து விட்டுவிடலாம். ஆனால் உலகின் அனைத்து உயிரினங்களையும் படைத்த இறைவன் அன்கபூத்தைப் பற்றிக் கூறும்போது அவனது சொல்லில் இலக்கணத்தவறு நிகழமுடியாது. அவ்வாறு அவன் கூறியிருந்தால் ஏற்கத்தக்க காரணங்கள் நிச்சயம் இருக்கவேண்டும் என ஆய்வு தொடர்ந்தது.
அவை என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.
1. அன்கபூத் என்ற சொல் இலக்கண மேதைகளால் ஆண்பாலிலும் பெண்பாலிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஆண்பால் அன்கப் என்பதாகும். அன்கபூத் என்பது ஆண், பெண் இனத்தையே குறிக்கும் பொதுவான சொல்லாகும். ஆகவே இதில் இலக்கணத் தவறு நிகழவில்லை.
2. அன்கபூத்: ஆண் பெண் சிலந்தியில் ஆண் சிலந்தி வலை பின்னாது. பெண் சிலந்தி மட்டும் தான் அதன் வலையைப் பின்னமுடியும்; என்று இன்றைய விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறியுள்ளனர். காரணம் அதன் உடல் அவ்வாறு படைக்கப்பட்டுள்ளது.அதன் அடிவயிற்றில் பசைபோன்ற திரவம் வெளியாகிறது. மாததந்திர ருது போன்ற ஒரு செயல் அதில் நிகழ்கிறது.
3. பெண்சிலந்தி பருவ வயதை அடையும் போது தனது உறவுக்காக இவ்வாறு வீட்டை எழுப்புகிறது. ஆண் சிலந்தி வலிமை பெற்றிருந்தும்; அதனால் வீடு கட்ட முடியாது.
4. பெண் சிலந்தியின் வயிற்றில் உற்பத்தியாகும் நூலில் பசை இருக்கும். ஏதிரிப் பூச்சிகள் அதன் மீது வந்தமர்ந்தால்; அதில் அவை ஒட்டிக் கொள்ளும். அவை அதற்கு உணவாக ஆகிவிடுகிறது.
எனவே வலைபின்னும் இச்செயல் பெண் இனத்தில் தான் நிகழ முடீயும் என்பதால் தான் அல்லாஹ் பெண்பாலில் கூறியுள்ளான்.
1400 ஆண்டுகளுக்கு முன் பெண் இனம் தான் வலை பின்னும் என்பது எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு எவ்வாறு தெரிந்திருக்க முடியும்? ஆகவே சிலந்தியைப் படைத்த இறைவன் தான் இந்த பேருண்மையை உலகுக்குக் கூற முடியும்.ஆகவே இறைவனின் வேதமான அல்-குர்ஆன் அல்லாஹ்வின் அருள்மறை என்பது இ;தன் மூலம் நிரூபணமாகிறது.
நன்றி: அல்பாகவி.காம்

Wednesday, November 23, 2011

ஓர் ஈமானிய‌ப் ப‌ய‌ண‌ம்‏


ஓர் ஈமானிய‌ப் ப‌ய‌ண‌ம்‏

وَأَنفِقُوا مِن مَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ

உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள், (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்); "என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே" என்று கூறுவான்.



உங்க‌ள் க‌ண்க‌ளை மூடிக்கொண்டு, இத‌ய‌த்தை ச‌ற்றுதிற‌ந்து வைத்துக் கொள்ளுங்க‌ள்.....

இப்போது க‌ற்ப‌னையில் உங்க‌ள் முன்னால்.... ஓருஜ‌னாஸா,
நான்கு பேர் நான்கு மூலைக‌ளையும் சும‌ந்த‌வ‌ண்ண‌ம் உங்க‌ளை நெருங்கி வ‌ருகின்ற‌ன‌ர்.

உங்க‌ள் முன்னிலையில் ஜ‌னாஸா வைக்க‌ப்ப‌டுகின்ற‌து.
அத‌ற்கான‌ தொழுகையை நிறைவேற்றுவ‌த‌ற்காக‌ அனைவ‌ரும் அணிவகுத்து நிற்கின்ற‌ன‌ர்..

நான்கு த‌க்பீர்க‌ள் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌ன‌. க‌டைசி த்த‌க்பீருட‌ன் தொழுகை முடிகின்ற‌து.

இப்போது உங்க‌ள் ம‌ன‌தில் ஒரு நெருட‌ல்....
அந்த‌ மையித் யாருடைய‌து என்ப‌தை பார்க்க‌வேண்டும் போல் ஓர் உண‌ர்வு.
அடிமேல் அடி எடுத்து நெருங்குகின்றீர்க‌ள். அத‌ன் முக‌த்தை மூடியிருக்கும் அத‌ன் திறையை மெதுவாக‌ அக‌ற்றுகின்றீர்க‌ள்.?????????????????????????


இப்போது ...!

இப்போது ...!
நீங்க‌ள் பார்த்த‌து யாரையோ அல்ல உங்க‌ள் சொந்த‌ முக‌த்தைதான்!!!!!!!!!!
நீங்க‌ள்தான் அங்கே மையித்தாக‌ வைக்க‌ப்ப‌ட்டுள்ளீர்க‌ள்.


ஆசைப்ப‌ட்டு உங்க‌ளை மாய்த்துக்கொண்டு உழைத்துத் திரிந்த‌ உங்க‌ள் வாழ்க்கை முடிந்துவிட்ட‌து.


மாடிக்க‌ட்ட‌ட‌ங்க‌ள் க‌ட்டுவ‌த‌ற்காக‌ ஹ‌ஜ் போகாது சேர்த்த‌ உங்க‌ள் ப‌ண‌ம் பிர‌யோச‌ன‌ம‌ற்ற‌தாகிவிட்ட‌து.


தொழும் நேர‌ங்க‌ளை ம‌ற‌ந்த்து நீங்க‌ள் க‌ல‌ந்துகொண்ட கூட்ட‌ங்க‌ள் வீணாகிவிட்ட‌து..


உங்க‌ள் ஆட‌ம்ப‌ர‌வாக‌ன‌ங்க‌ள்,
குழ‌ந்தைச் செல்வ‌ங்க‌ள்,
அன்பும‌னைவி..........எல்லாமே முடிந்துவிட்ட‌து.


இப்போது உங்க‌ளுக்காக எஞ்சி இருப்ப‌து நீங்க‌ள் உடுத்தி இருக்கும் உங்க‌ள் க‌ப‌ன் பிட‌வைம‌ட்டுமே!!


உங்க‌ள் உற்றார் உற‌வின‌ர்க‌ள் உங்க‌ளை சும‌ந்து உங்க‌ள் நிர‌ந்த‌தர வீட்டில் வைத்துவிட்டார்க‌ள்.


ஒரு பிடி ம‌ண் உங்க‌ள் மேல் விழுகிற‌து.


உல‌க‌மே இடிந்து விழுந்துவிட்ட‌து போல் உண‌ர்கிறீர்க‌ள்.
கொஞ்ச‌மாக‌த் தெரிந்து கொண்டிருந்த‌ வெளிச்ச‌ம் இப்போது அடியோடு இல்லாம‌ல் போய்விட்ட‌து.


இந்த‌நிமிட‌ம் .... காரிருளில் நீங்க‌ள் ம‌ட்டுமாக‌
த‌னித்துவிட‌ப்ப‌ட்டுவிட்டீர்க‌ள்.


எல்லோரும் ந‌ட‌ந்துசொல்லும் நில‌ம‌ட்ட‌த்திற்கு கீழால் ஆர‌டி நில‌த்தில் நீங்க‌ள் ம‌ட்டும் .


நீங்க‌ள் ம‌ட்டும் த‌னித்துவிட‌ப்ப‌ட்டுவிட்டீர்க‌ள்.. !!
காசோ ப‌ண‌மோ,
குழ‌ந்தைக‌ளோ, ம‌னைவியோ இல்லாதத‌னிமை .


குற‌ந்த‌ப‌ட்ச‌ம் ஓர்கைய‌ட‌க்க‌த் தொலைபேசியாவ‌து, இல்லாதத‌னிமை.
இர‌ண்டு ம‌ல‌க்குமார் உங்க‌ளை நோக்கிவ‌ந்து கொண்டிருக்கிறார்க‌ள்..
இப்போது நீங்க‌ள் என்ன‌ப‌தில் கூற‌த்தயாராகி இருக்கின்றீர்க‌ள்.
அந்த‌ நிமிட‌த்தை கொஞ்ச‌ம் க‌ற்ப‌னையில் கொண்டுவந்து, (இந்த‌க்கேள்விக‌ளை கொஞ்ச‌ம் கேட்டுப்பாருங்க‌ள்..)


நான் உண்மையான‌ ஒருமுஃமீனா??
குரானின் ஒளியில் வாழ்கிறேனா??

தொழுகையை விடாது தொழுகிறேனா??
வ‌ருட‌ம் ஒரு முறை வ‌ரும் ர‌ம‌லானில் அல்லாஹ்வுக்காக‌ நோன்பு நோற்கின்றேனா??
க‌ட‌மையான ஹ‌ஜ்ஜை உரிய‌முறையில் நிறைவேற்றுகின்றேனா?
போன்ற இன்னோர‌ன்ன‌ கேள்விக‌ளுக்கு ஆம் என்ற‌ விடையை தைரிய‌மாக‌ கூற‌ப்போகின்றீர்க‌ளா?


கால‌த்தை வீணாக‌க் க‌ட‌த்திவிட்டேனே.
ஒரு முறையாவாது அல்ல‌ஹ்வின் திருப்பொருத்த‌த்திற்காக‌ ஹ‌ஜ் செய்திருக்க‌லாமே,
500/= நோட்டுக்க‌ளை விள‌ம்ப‌ர‌த்துட‌ன் கொடுத்த‌த‌ற்குப்ப‌திலாக, யாருக்கும் தெரியாம‌ல் ந‌ன்மைக‌ளை கொள்ளை அடித்திருக்க‌ளாமே.


என்நோயை சாட்டுவைத்து நோன்புக‌ளை விட்டுவிட்டேனே, கொஞ்ச‌ம் ம‌ன‌ச்சாட்சிக்கு பொருத்த‌மாக‌ ந‌ட‌ந்து கொண்டிருக்க‌ளாமே.


வ‌ட்டி எடுக்காம‌ல் லாபமோ ந‌ட்ட‌மோ வியாபார‌த்தையே முழும‌ன‌தாக‌ செய்திருக்க‌ளாமே.


குரான் கூறிய‌ ஹிஜாபின் வாழ்க்கையை வாழ்ந்திருக்களாமே
அன்னிய‌ ஆட‌வ‌ர்க‌ளின் முன்னால் என் அழ‌ங்கார‌த்தை ம‌றைத்து க‌ண‌வ‌னுக்கு ம‌ட்டும் காட்டி இருக்க‌லாமே.


குழ‌ந்தைக‌ளை சிற‌ந்த‌முறையில் வ‌ள‌ர்த்திருக்க‌லாமே..
தொலைக்காட்சியின் முன்ம‌ண்டியிட்ட‌த‌ற்குப்ப‌திலாக‌ சுஜூதில் இறைவ‌னை நெருங்கி இருக்க‌லாமே.


தொலைபேசியில் அர‌ட்டை அடித்த‌த‌ற்குப்ப‌திலாக‌ குரானுட‌ன் உரையாடி இருக்க‌ளாமே, இல்லைஏதாவ‌துப‌ய‌னுள்ளபுத்த்க‌த்தைவாசித்துஇருக்க‌ளாமே..
என கைசேத‌ப்ப‌ட‌ப் போகின்றீர்க‌ளா??????

சிந்தியுங்க‌ள்!!


உல‌க‌ வாழ்க்கை என்ப‌து ஒரு முறைதான், அதுகாத்திருக்கும் ஒரு இட‌ம‌ல்ல‌.. காத்திருந்தாலும் இழ‌ந்தால் மீண்டும் கிடைப்ப‌தில்லை. இம்மை என்ப‌து ஒரு ப‌ய‌ண‌ம் தாம‌திக்காம‌ல் எம்மை ம‌றுமையின் வாச‌லில்கொண்டு சேர்த்திடும்.. அந்த‌ப் ப‌ய‌ண‌த்தில் க‌ண் மூடித்த‌ன‌மாய் கால‌த்தை க‌ழிக்காம‌ல் திட்ட‌மிட்டு எம்மை நாம் வ‌ள‌ப்ப‌டுத்திக்கொள்ள‌ வேண்டும்.


இல்லையேல்.. எம்வாழ்வும்இவ்விறைவாக்குக‌ளின்பிர‌திப‌ளிப்பாகிவிடும்.
நஊதுபில்லாஹிமின்ஹா...
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَن ذِكْرِ اللَّهِ وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُوْلَئِكَ هُمُ الْخَاسِرُونَ ﴿9﴾ ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் - எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.


وَأَنفِقُوا مِن مَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ ﴿10﴾ உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள், (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்); "என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே" என்று கூறுவான்.
وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاء أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ ﴿11﴾
ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கு தெரிந்தே இருக்கின்றான்.
க‌டைசித் தருண‌த்தில் இறைவ‌னிட‌ம் கெஞ்சும் துர‌திஷ்டவாளிக‌ளாய் நாம் இருக்காது, எம்மை இறைவ‌னின் பாதையில் திசை திருப்பிக் கொள்ள‌வேண்டும்.


ஏனெனில் இறைவ‌ன் த‌ன் அருள்ம‌றையில்
لاَ يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُواْ مَا بِأَنْفُسِهِمْஎந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை. (சூரார‌ஃத் 11)என‌க்கூறுகிறான்.

Saturday, October 22, 2011

இஸ்லாமியப் பார்வையில் பெண் சிசுக் கொலைகள்

embryo1

பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்பது காலங்காலமாக இருந்து வருகின்றது என்பதை நாம் வரலாறுகளின் மூலம் அறிகிறோம். அந்தக் கொடுமைகளின் உச்சக்கட்டமாக பெண் குழந்தைகளைப் பெற்றெடுப்பதையே கேவலமாகக் கருதி பிறந்த குழந்தைப் பெண்ணாகயிருப்பின் அதற்கு உயிருடனே சமாதிகட்டும் கொடுமைகள் நடந்திருக்கின்றது; ஏன் இன்றும் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன. அதனால் தான் இன்றளவும் தொட்டில் குழந்தைகள் போன்ற திட்டம் போன்றவற்றை செயல்படுத்தி பெண் குழந்தைகள் காப்பகங்களை அரசாங்கமே நடத்த வேண்டிய இழி நிலைக்கு நாம் ஆளாகியிருக்கிறோம்.
அரசாங்கம் மற்றும் சமூக சேவகர்களால் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகம் பல இருந்தாலும் அவ்வப்போது ‘பச்சிளம் பெண் குழந்தை கிணற்றில் மிதந்தது’, ‘குப்பைத் தொட்டியில் கிடந்த பெண் சிசுவின் உடலை தெரு நாய்கள் குதறி தின்றன’ போன்ற செய்திகளை அன்றாடம் நாம் நாள் இதழ்களில் கான்கிறோம்.
இவைகள் அனைத்துதும், உலகம் எவ்வளவு தான் விஞ்ஞானத்தில் முன்னேறியிருந்தாலும் பெண்களுக்கான வன்கொடுமைகள் முற்றுப் பெறவில்லையென்பதையும் இன்னும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதையும் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.
கல்வியறிவில்லாத கிரமத்திலிலுள்ள மூடர்கள் தான் பெண் குழந்தைகளைப் பளுவாகக் கருதி அவர்களை பிறந்த உடனேயே கொன்று விடுகின்றார்கள் எனில் பட்டணத்திலுள்ள படித்த மேதைகளோ அந்தப் பெண் சிசுக்கள் இந்த உலகைப் பார்ப்பதற்கு முன்னரே பெண் குழந்தை என்பதையறிந்து கருவிலேயே அதை கொலை செய்து விடுவதைப் பார்க்கிறோம். கருவிலேயே செய்யப்படும் கொலைக்கு புதிய பெயர் சூட்டி ‘கருக் கலைப்பு’ என்று என்று வேறு அழைக்கின்றனர்.
பெண் குழந்தைகளை அற்பமாகக் கருதி அதைக் கொலை செய்பவர்களை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. அறியாமைக் காலத்தில் வாழ்ந்த மக்கள் பெண் குழந்தைகள் பிறந்ததும் அதைக் கேவலமாகக் கருதி முகம் சுளித்தவர்களாக மக்களின் முகத்தில் கூடி விழிக்க திராணியற்றவர்களாக இருந்தனர்.மேலும் அந்தக் குழந்தைகளை கொன்றுவிடலாமா அல்லது இழிவுடன் இந்தக் குழந்தையை வளர்க்கலாமா என்றும் குழம்பி வந்தனர்.இதைக் கண்டிக்கும் விதமாக அகில உலக மனிதர்களுக்கும் சத்திய நேர்வழி காட்ட தன் இறுதி தீர்க்கதரிசி மூலம் இறைவன் அனுப்பிய திருவேதத்தில் கூறுகிறான்: -
“அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது – அவன் கோபமுடையவனாகிறான். எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் – அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?” (அல்-குர்ஆன் 16:58-59)
வேறு சில மூடர்களோ ஈவு இரக்கம் என்பது சிறிதுமின்றி பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக அந்தப் பச்சிளம் குழந்தையை துடிதுடிக்க உயிரோடு புதைத்து வந்தனர். நமதூர்களில் கள்ளிப்பால், அரளிவிதை, நெல் மணிகள் கொடுத்து பெண் குழந்தைகளைக் கொல்வது போல! இஸ்லாம் இவற்றை வன்மையாக கண்டிப்பதுடன், இவ்வாறு கொலை செய்யப்பட்ட அந்த பெண் சிசுக்கள், நியாயத் தீர்ப்பு நாளில் அவைகள் எதற்காக கொலை செய்யப்பட்டது என்று விசாரணை செய்யப்பட்டு கொலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டணையளிக்கப்படும் என்று கூறுகிறது.
நியாயத் தீர்ப்பு நாளின் ஒரே அதிபதியாகிய ஏக இறைவன் கூறுகிறான்: -
‘உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது- எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?’ என்று- (அல்-குர்ஆன் 81:8-9)
இன்னும் சிலர் எங்கே நிறைய குழந்தைகள் பெற்றால் அவர்களை வளர்த்து ஆளாக்குவதற்கு நிறைய செல்வம் தேவைப்படுமே! அதனால் நம் செல்வம் எல்லாம் தீர்ந்து நாம் ஏழையாகி விடுவோமே என்று வறுமைக்கு பயந்து ஓரிரு குழந்தைகளுக்கு மேல் கருவுற்றால் அதைக் கருகலைப்பு என்ற பெயரில் கருவில் வைத்தே கொலை செய்கின்றனர். ஆனால் இஸ்லாமோ இதையும் கண்டிப்பதுடன் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் இறைவனே உணவளிக்கிறான்! அதனால் வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளை கொலை செய்யாதீர்கள் என்று ஆணையிடுகிறது.
‘நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்’ (அல்-குர்ஆன் 17:31)
‘வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து ;உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் – ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் – கொலை செய்யாதீர்கள் – இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்’ (அல்-குர்ஆன் 6:151)
இஸ்லாம் ஒரு மதமல்ல! மாறாக அகில உலக மாந்தர்களுக்கும் ஏற்ற இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் உன்னத வாழ்வியல் நெறிமுறையாகும். இது ஒரு மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரையிலான அவனது அனைத்து வாழ்வியல் அம்சங்கங்களையும் உள்ளடக்கிய வாழ்க்கைத் தத்துவமாகும். இதை முறையாகப் பின்பற்றுபவர்கள் இத்தகைய சிசுக்கொலைகளை ஒருபோதும் செய்யமாட்டார்கள். இதைச் செய்பவர்கள் எல்லாம் இஸ்லாம் என்னும் அழகிய வாழ்க்கை முறையை விட்டுவிட்டு ஒரே இறைவனல்லாத பிற இணை தெய்வங்களை வணங்குபவர்களும் இஸ்லாம் என்னும் நேரிய வழிமுறையை விட்டும் தவறியவர்களும் தான் என்று இஸ்லாம் கூறுகிறது.
இறைவன் கூறுகிறான்: -
‘இவ்வாறே இணை வைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளையே கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கி வைத்துள்ளன; அவர்களை நாசப்படுத்தி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பத்திலாக்கிவிட்டன’ (அல்-குர்ஆன் 6:137)
‘எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ; இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை’ (அல்-குர்ஆன் 6:140)
எனவே, என தருமை சகோதர, சகோதரிகளே! நாம் சிந்தித்து செயலபட்டு சிசுக்கொலைகள் எந்த வகையில் நடைபெற்றாலும் அவற்றைத் தடுத்து நிறுத்தப் பாடுபடுவோமாக! இறைவன் காட்டும் நேர்வழியில் நடந்திட முயற்சிப்போமாக!

Tuesday, October 18, 2011

பெண்களே! சிந்தியுங்கள்!




(ஒரு நீளமான ஹதீதில்…… நபி (ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகையை முடித்த பின், அங்கிருந்த நபித்தோழர்கள்) அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தொழுமிடத்தில் ஏதோ ஒரு பொருளை பிடித்தது போன்று நாங்கள் பார்த்தோம் பின்பு (அவ்விடத்திலிருந்து) பின் வந்ததையும் நாங்கள் பார்த்தோம் என்றார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், நான் சுவர்க்கத்தை பார்த்தேன், (அங்கிருந்து) திராட்சைப் பழக்குலையை பிடித்தேன், அதை நான் எடுத்திருந்தால் இவ்வுலகம் இருக்கும் வரை நீங்கள் அதை உண்ணக்கூடியவர்களாக இருந்திருப்பீர்கள், இன்னும் நரகத்தையும் காட்டப்பட்டேன், அன்றைய நாளின் அவலத்தைப் போல் நான் என்றும் பார்த்ததில்லை, அதில் அதிகம் பெண்கள் இருப்பதைக் கண்டேன், அல்லாஹ்வின் தூதரே! (அது) எதனால் என்றார்கள், அவர்கள் நிராகரிப்பதின் காரணமாக என்றார்கள், அல்லாஹ்வையா நிராகரிக்கின்றார்கள்? என கேட்கப்பட்டது, கணவனை நிராகரிக்கின்றார்கள், அவர்களுக்கு செய்யப்படும் உபகாரத்தை நிராகரிக்கின்றார்கள், அந்தப்பெண்களின் ஒருத்திக்கு காலம் முழுக்க உபகாரம் செய்து, பின்பு உங்களில் ஒரு தவறை அவள் கண்டுகொண்டால், நான் உன்னிடத்தில் எந்த நலவையும் கண்டதில்லை என்று கூறிவிடுவாள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
சுவர்க்கத்தை நோட்டமிட்டேன், அதில் அதிகமானவர்களை ஏழைகளாக பார்த்தேன், இன்னும் நரகத்தை நோட்டமிட்டேன், அதில் அதிகமானவர்களை பெண்களாக பார்த்தேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
நோன்புப் பெருநாள் அல்லது ஹஜ்ஜுப் பெருநாளில் நபி(ஸல்) அவர்கள் தொழுமிடத்துக்கு வெளியாகிச் சென்றார்கள், (தொழுகையை முடித்துவிட்டு) திரும்பி மக்களுக்கு உபதேசம் செய்தார்கள். தருமம் செய்யும்படி அவர்களுக்கு ஏவினார்கள், கூறினார்கள், மனிதர்களே! தர்மம் செய்யுங்கள், பெண்களின் பக்கமும் சென்றார்கள்,பெண்கள் கூட்டமே! தர்மம் செய்யுங்கள், உங்களை நரகவாதிகளில் அதிகமாகவர்களாக நிச்சசயமாக நான் பார்த்தேன் என்றார்கள், எதனால் அது அல்லாஹ்வின் தூதரே! என (அங்கிருந்த) பெண்கள் கேட்டனர், அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்கள் அதிகம் சாபம் இடுகின்றீர்கள், கணவர்மாரின் உபகாரத்தை மறுக்கின்றீர்கள், அறிவிலும் மார்க்கத்திலும் குறைவுள்ள உங்களைவிட மிகவும் அறிவுள்ள ஒரு ஆணிண் சிந்தனையை போக்கக்கூடியவர்களாக வேறு யாரையும் நான் பார்க்கவில்லை என்றார்கள்…. (புகாரி)

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites