ஜேர்மனியில் பெர்லின் நகரத்தில் ஆறு கிலோ எடையுள்ள இராட்சதக் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. . இக்குழந்தையின் தாய் ஒரு சர்க்கரை நோயாளி. இதனால் கருவறையில் இருந்த போதே குழந்தையும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. ருத்துவமனையின் பேறுகாலப் பிரிவின் சிறப்பு மருத்துவர் உல்ப் காங் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தையை வெளியே எடுக்கலாம் என்று கூறிய போது அதனை இந்த தாய் கேட்க மறுத்து விட்டார். இது இக்குழந்தைக்கு 14வது குழந்தையாகும். ஏற்கனவே ஒன்பது ஆண் குழந்தைகளும், ஐந்து பெண் குழந்தைகளும் இவருக்கு உண்டு. இவர்களில் ஐந்து பேர் பிறக்கும் போதே ஐந்து கிலோவுக்கு மேற்பட்ட எடையுடன் பிறந்தவர்கள் பிறக்கும் போது ஒரு குழந்தையின் எடை சராசரியாக மூன்றரை கிலோ இருக்கும். பத்தில் ஒரு குழந்தை நான்கு கிலோவுக்கும் அதிகமாக எடை இருப்பதுண்டு. இந்த குழந்தை போல் இதற்கு முன்பு எந்தக் குழந்தையும் ஜேர்மனியில் பிறந்ததில்லை. இந்தோனேஷியாவில் 2009ம் ஆண்டில் 8.7 கிலோ எடையில் ஒரு குழந்தை பிறந்தது. கனடாவில் 1879ல் 10.8 கிலோ எடையில் ஒரு குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்து ஒரு சில மணி நேரத்திலேயே இறந்து விட்டது. இப்போது ஜேர்மனியில் பிறந்திருக்கும் இந்த 6 கிலோ எடையுள்ள குழந்தைக்கு அதன் பெற்றோர் ஜிகாத் எனப் பெயரிட்டுள்ளனர் |
0 comments:
Post a Comment