இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label நாப்கின் தயாரித்தால். Show all posts
Showing posts with label நாப்கின் தயாரித்தால். Show all posts

Sunday, June 22, 2014

உங்களின் முயற்சி மிகவும் பாராட்ட பட வேண்டும் ,வாழ்த்துகள் .

யார் இந்த அருணாசலம் முருகானந்தம் ! 
அட இவரு IITல படிக்கவில்லை ! 
அமெரிக்க போய் ஸ்டாண்ட்போர்ட் உனிவேர்சிட்டி மார்க்கெட்டிங் படிக்கவில்லை !
இயற்கை எரிவாய்வுக்கு ஆசை படவில்லை, கோர்ட்க்கு போகவில்லை ! 
பரம்பரை சொத்து போல, பிரதமர் பதவிக்கு ஆசை கொள்ளவில்லை ! 
அட பாருங்க, அந்த தத்துவா, இந்த தத்துவா பேசவில்லை !
தாத்தா தயவில் வாழும் பேரனும் இல்லை ! 
அட காலேஜ் கூட போகவில்லை !
ஆனா பாருங்க மனுஷன் டைம்ஸ் இதழில் உலகின் சக்தி வாய்ந்த 100 மனிதர்க்களில் அவரும் இடம் பெற்று இருக்கிறார் ! 
ஒரு மனுசனை உழைப்பு எந்த அளவு உயரத்துக்கு கொண்டு செல்லும் என்று அவர் ஒரு சிறந்த உதாரணம் ! 
கோயம்பத்தூர் பக்கத்துல இருக்கற ஒரு ஊராக பகுதியில் பிறந்து, ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்த மனிதன், இந்தியா கொண்டாவில்லை என்றாலும் உலகம் கொண்டாட காரணம் ! 
1. நாமளுக்கு கோடி கோடியாக பணம் சம்பாரிக்கும் எண்ணம் எதுவும் இல்லைங்க, கோயம்புத்தூர்ல ஒரு இன்ஜினியரிங் கம்பெனில ஒரு laborயாக வாழ்க்கையை தொடங்கிய மனிதம், ஒன்பதாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தியவர் ! அது அவருக்கு ராசி நம்பர் இல்லைங்க, காரணம் வறுமை!
2. மனுஷன் , ஏன் எங்க அப்பா சொத்து சேர்த்து வைக்கவில்லை, ஏன் படிக்கலைன்னு யோசிக்கமா, பெண்கள் பிரச்சனை, பெண்கள் பிரச்சனை என்று brand செய்யப்பட்ட "‪#‎மாதவிடாய்‬" ("‪#‎menstruation‬") இயற்கை பிரச்சனையை தான் மாணவி எதிர்கொள்ளும் போது அவர்கள் 
பயன்படுத்தப் பழைய துணித் துண்டுகளைச் சேகரிப்பதை பார்த்த மனுஷன், இதில் மிகப்பெரிய தவறு, சுகாதாரம் சார்ந்த பிரச்னை இருப்தாக நினைத்தார். 
3. இதற்கு ஏன் மாற்று இருக்க கூடாது என்று நினைத்த முருகானந்தம், அதற்குள் ஒளிந்து இருக்கும் உலக வர்த்தகம் மற்றும் அதன் விலை சார்ந்த விசயங்களை உள்வாங்கிய போது அதில் இருக்கும் மார்க்கெட் பற்றி யோசிக்கவில்லை, ஆதனால் காசு இல்லாத நாம கிராமப்புற பெண்கள் எந்த அளவுக்கு கஷ்டபடுவாங்க அப்படின்னு யோசிச்சார் ! நாப்கின் செய்வதற்கான மூலபொருள் விலை ரூபாய் 2 என்றால் அதை 40 மடங்கு அதிகமாக மார்க்கெட் செய்யபடுகிறது யதார்த்த்த்தில் ! கொஞ்சம் யோசிச்சு பார்த்தார் எல்லோராலும் வாங்க முடியுமா என்று ! 
4. பழைய துணித் துண்டுகளுக்கு பதிலாக, அதற்கு மாற்றாக அவர் ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடித்த "நாப்கின்களை" கோடி கோடியாக இன்வெஸ்ட் பண்ணி டெஸ்ட் பண்ண வாய்ப்பு இல்லாத முருகானந்தம், தான் மனைவி, தங்கள் குடுப்பம் சார்ந்த பெண்க்கள் இடம் உதவி கேட்கும் போது அவரை பைத்தியம் என்று நினைத்தார்கள் ! அவர் அறையில் பெண்கள் சார்ந்த பொருள் இருந்த போது அவங்க அம்மா பைத்தியம் என்றே முடிவு செய்துவிட்டார்கள் ! வீட்டை விட்டு வெளியே தள்ளப்பட்ட சூழ்நிலை, மனிதன் அசரவில்லை ! 
5. மெடிக்கல் காலேஜ் பெண்களிடம் உதவி கேக்கலாம் என்றால், மிகுத்த போராட்டத்துக்கு பிறகு அவர்கள் உதவ முன்வந்தார்கள், மனுஷன் ஒரு stageல விலகுகளின் ரத்த்த்தை வைத்து ஒரு bladder மூலம் தனக்கு தானே "‪#‎நாப்கின்‬" மாட்டி சோதனை செய்த சாதனை மனிதன்! இந்த உழைப்பு, இந்த வெறி அவருக்கு ஒரு பெரிய மாற்றத்தை கொடுத்த்து ! 
6. அவர் பட்ட கஷ்டத்துக்கு ஒரு பிரேக் through கிடைத்த்து, 
‪#‎மரச்சக்கை‬ ஒரு மாற்று பொருளாக கண்டுபிடித்தவர், அவர் நினைத்த்தை போலவே, அது ஒரு அற்புதமான மாற்றாக அமைத்த்து/// நாப்கின் செய்ய தேவையான இந்திரங்களை குறைந்த செலவில் கண்டுபிடித்து அதை இப்போது ஜெயஸ்ரீ industries என்ற பெயரில் இலவசமாக, கிராமப்புற பெண்களுக்கு கொடுத்து அவர்களுக்கு வேலைவாய்ப்பும் கொடுக்கும் ஒப்படற மனிதர் ! அவர் தயாரிக்கும் நாப்கிங்களின் அடக்கவிலை ஒரு நாப்கின் ஒரு ரூபாய் !
அருணாசலம் முருகானந்தம் இந்த மனிதனை வளைத்து போட்டு காசு பண்ண நினைக்கும் corporate சக்திகள் அதிகம், ஆனா பாருங்க என் உழைப்பு விற்பனைக்கு இல்லை என்று சொல்லிவிட்டு, மகளிர் தன்னுதவிக் குழுக்களுக்கு வழங்கி வருகிறார்.
இப்போது 21 வெளிநாடுகளுக்கும், இந்தியாவின் பல கிராமங்களும் எந்த வணிக நோக்கமும் இல்லாமல் அடிப்படை 
IIT மெட்ராஸ் இவருக்கு சிறந்த சுமூக கண்டுபிடிப்புக்கான விருதை கொடுத்த்து ! இன்னும் பல விருதுகள் ! 
https://www.youtube.com/watch?v=V4_MeS6SOwk இந்த விடியோவை மறக்காமல் பார்க்கவும் ! யதார்த்தை மொத்தமா குத்தகைக்கு எடுத்த மனிதராக நான் பார்கிறேன் ! 
பணம் வாங்கி கொண்டு விளையாடும் வீர்கள், அரசியல் லாபி மூலம் பத்மாஸ்ரீ, பத்மாவிபூஷன் விருதுகளை வாங்கும் இந்த இந்தியா திருநாட்டில் எங்க ஊரு மனுஷன் செய்த இந்த சாதனைக்கு விருது தர சொல்லி கையேந்தவில்லை, அந்த விருதுக்கு மனசாட்சி இருந்தால் அதுவே தானாக வரும் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன் ! 
அற்புதமான மனிதர்கள் பிறப்பது இல்லை, நம்முடன் நம்மை சுற்றி வாழ்த்து கொன்று இருக்கிறார்கள் ! 
அருணாசலம் முருகானந்தம் அவர்களை பாராட்ட நினைக்கும் அன்பர்கள் இந்த நம்பர்ல தொடர்பு கொள்ளலாம் : 9442224069 ( தமிழ் தினசரி ஒன்றில் வந்தது ! 



"நம்ம நாட்டுல அதிகபட்சமா 20 சதவீத பெண்கள்தான் நாப்கின் பயன்படுத்துறாங்கனு சொல்லுது ஒரு புள்ளி விபரம். இப்போ நாகரீக வளர்ச்சியில குறைவா  இருக்கிற வடமாநிலங்களிலும் என் மிஷின் போய் சேர்ந்திருக்கு. காஷ்மீரில் இருக்கும் பழங்குடியின பெண்கள் சுகாதாரத்துக்கும் இந்த மிஷின் கைகுடுக்குது. பக்கத்து கிராமப் பெண்களை
மனசுல வச்சு எடுத்த இந்த முயற்சி இன்னிக்கு பல இந்திய சகோதரிகளின் சுகாதாரவிதியை  மாத்தியிருக்கு.இதைவிட ஒரு கண்டுபிடிப்புக்கு  என்ன மரியாதை வேணும்?" என்று சந்தோஷ வார்த்தைகளில் தொடங்கும் முருகானந்தம் இந்த இடத்தை அடைவதற்கு தாண்டி வந்தது பல கட்டங்கள்.

                   கைத்தறி தொழிலில் பிசியாக இருந்த முருகானந்தத்தின் அப்பா உயிரை விதிஎடுத்துக்கொள்ள வறுமை அவரது குடும்பத்தை எடுத்துக்கொண்டது. கான்வென்ட் ஸ்கூல் ஸ்டுடன்ட்  கார்பரேஷன் பள்ளி மாணவரானார். அம்மா இட்லி சுட்டு வியாபாரம் செய்து குடும்பத்தைக்கவனித்துக்   கொண்டாலும் பத்தாம் வகுப்பிற்கு மேல் அனுமதிக்கவில்லை
வறுமை.

                 பேக்டரி, ஒர்க் ஷாப்  என வேலைக்குப் போக ஆரம்பித்த போது  இயந்திரங்கள் பழக்கமாயிருக்கின்றன. சில வருடங்களில் திருமணம் ஆக அதற்கடுத்துதான் மாற்றத்திற்கான ஒரு விதை விழுந்திருக்கின்றது.

           "ஒருநாள் டி.வியில நாப்கின் விளம்பரம் வந்தப்போ 'இதெல்லாம் நமக்கு கட்டுபடியாகாது. அதுக்கு ஆகுற செலவுல ஒரு நாள் சாப்பாட்டு செலவையே முடிச்சிடலாம் நமக்கு துணிதான் கதின்னு'என் மனைவி சொன்னப்போ எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு.

                     பொண்ணுக பீரியட்ஸ் அப்போ சுகாதாரமில்லாத துணிகளைப் பயன்படுத்தும் போது பல பிரச்சனைகள் ஏற்படுங்கிறதை   மருத்துவ நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கேன். கோவை மாதிரிபெரு நகரத்துல இருக்கிற படிச்சிருக்கிற என் மனைவிக்கே இப்படி ஒரு பிரச்னை இருக்குனா கிராமத்துல இருக்கிற பெண்களை யோசிச்சப்போ ரொம்ப பரிதாபமாயிருச்சு.

                     இதுக்கு ஏதாவது பண்ணனும்னு யோசிச்சு மெடிக்கல் ஷாப்ல ஒரு நாப்கின் வாங்கிப் பார்த்து இது ஒரு காட்டன் அடைக்கப்பட்ட பாக்கெட்டுன்னு நெனச்சிக்கிட்டு, அதே மாதிரி தயாரிச்சு என் மனைவி, பக்கத்திலுள்ள தோழிகள்னு கொடுத்தேன் எல்லாரும் 'இது வேஸ்ட்னு' சொன்னாங்க. ஆனா காரணம் சொல்லல.

                    பிறகு ஒரு நாப்கினை எடுத்து திரவத்தை  விட்டப்போ அது   திரவத்தை எடுத்துக்கிச்சு ஆனா தக்க வைக்க முடியல உடனே அமெரிக்காவுல உள்ள நாப்கின் கம்பெனியில இருந்து மூலப்பொருளை வரவழைச்சேன். அதை ஆய்வுக்குட்படுத்தினப்போ அது காட்டனில்லை 'பைன் வுட்பைபர்ங்கறது' தெரிஞ்சது. இது திரவத்தை உறிஞ்சுரதோட தேக்கியும் வச்சுக்கிடுது. " என்றவர் மூலப்பொருளின் ரகசியத்தை அறிந்த பின் மிஷினையும் வாங்கி விடலாம் என்று நினைத்து விலைகேட்டவருக்கு தலை  கிர்ர்ர்ர்....  நாலரைக் கோடி ரூபாய்.
                      படுத்தவர் இரண்டு நாள் கழித்து எழுந்து அந்த மெக்கானிசத்தை புத்தகங்கள்,பரிசோதனைகள் மூலம் தெரிந்து கொண்டு தானே அந்த இயந்திரத்தை சின்ன அளவுல 60,000 ரூபாய்   செலவுல 2005 ஆம் ஆண்டுகண்டுபிடித்துள்ளார் . எட்டு மணி நேரத்தில் 1000 நாப்கின்கள்தயாரிக்கும்திறன் கொண்டது இந்த இயந்திரம்.

                   "சொந்தமா தொழில் செஞ்சு உயரனும்னு பல பெண்கள் நெனைக்கிறாங்க. அவங்களுக்குத்தான் என் மிஷினை விற்பனை செய்றேன். நாப்கின் தயாரிக்கிற பயிற்சியையும் நானே வழங்குகிறேன். இந்தியா முழுக்க 18 மாநிலங்களில் 300 மிஷின்களை வித்திருக்கேன். பல பொருட்களின் விலையேற்றம் காரணமா மிஷினோட விலை 85 ஆயிரம் ஆகியிருக்கு" என்றவரிடம்இயந்திரத்தின் தரத்தைப் பார்த்து அதன் காப்புரிமையை உள்,வெளிநாட்டு நிறுவங்கள் பல, விலைபேசியிருக்கின்றன.  ஆனால் முருகானந்தமோ, முழுக்க முழுக்க பெண்கள் சார்ந்த முன்னேற்றத்திற்க்கே இதை  அர்ப்பணித்திருக்கிறார்.

                    "சமுதாய மேம்பாட்டிற்கான  சிறந்த கண்டுபிடிப்பு" என்ற வரிசையில் சென்னையிலுள்ளIIT முருகானந்தத்திற்கு  முதல் பரிசை வழங்கியுள்ளது. ஏராளமான விருதுகளைப் பெற்ற இந்தக் கண்டுபிடிப்பு சமீபத்தில் குடியரசுத் தலைவரின் தேசிய விருதையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Friday, December 14, 2012

நாங்களும் தொழிலதிபர்தான் நாப்கின் தயாரிப்பில் கலக்கும் சகோதரி




சுய உதவிக்குழு ஆரம்பித்தால் பணம் எல்லாம் கொடுப்பாங்க...வட்டிக்கு கொடுத்து பெருக்கலாம். பங்கு போட்டு பிரித்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் தான் 12 பேருடன் இதை துவக்கினோம். இப்போது நாங்கள் 16 பேர் சகோதரிகள்(சுய உதவி குழுவின் பெயரும் சகோதரி தான்). ஆனால் இப்போது எங்களாலும் பெரிய தொழிலதிபராக முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது என்கிறார் ஜெயந்தி. ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த ஜெயந்தி, சுய உதவிக்குழு துவங்குவதற்கு முன் சொந்தமாக தையல் தொழில் செய்து வந்தார்.

சுய உதவிக்குழு தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் சொந்த தொழில் தொடங்கி ஒவ்வொரு உறுப்பினரும் கை நிறைய ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க தொடங்கியுள்ளனர். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சகோதரியை பெரிய நிறுவனமாக மாற்றுவதே எங்கள் லட்சியம் என 16 பேரும் உறுதி பூண்டுள்ளனர். மகளிர் சுய உதவிக்குழுவினர் பெரும்பாலானோர் மெழுகுவர்த்தி உற்பத்தி, மசாலா உற்பத்தி, பொம்மைகள் தயாரிப்பு, கைவினை பொருட்கள் தயாரிப்பு, எம்ப்ராய்டரி டிசைனிங், ஆடை தயாரிப்பு என பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டனர்.

ஆனால் இவர்களது இலக்கு குறைந்த முதலீடு, எளிதான வியாபாரம், கை நிறைய சம்பாத்தியம் என்பது தான். பெண்களை சார்ந்த வர்த்தகமாக இருந்தால், சந்தைப்படுத்துவதற்கும் எளிதாக இருக்கும் என நம்பினர். அதன் வெளிப்பாடு தான் நாப்கின் தயாரிப்பில் இறங்கியது. இதுபற்றி சகோதரி மகளிர் சுய உதவிக்குழு ஊக்குநர் மலர்கொடி, பிரதிநிதிகள் ஜெயந்தி, அமராவதி, உறுப்பினர் இந்திரா ஆகியோர் கூறியதாவது:

புதுக்கோட்டை யில் மகளிர் சுயஉதவிக்குழுவின ருக்கு பல்வேறு தொழி ல்கள் துவங்குவதற்கான பயிற்சியும், அதற் கான இயந்திரங்களையும் மானிய விலையில் வழங்கவும், அதற்கு தேவையான நிதியை வங்கியில் இருந்து கடனாக பெற்று தருவதாகவும் மகளிர் திட்ட அலுவலர் உறுதியளித்தார். அதன்படி எங்களது சுய உதவிக்குழுவில் இருந்து 3 நபர்களை பயிற்சி பெற்று வருவதற்காக அனுப்பி வைத்தோம். சானிடரி நாப்கின்களுக்கு எப்போதும் வரவேற்பு உள்ளதால் அவற்றை உற்பத்தி செய்வது தொடர்பான பயிற்சியை பெறுவது என முடிவு செய்தோம்.

அதன்படி சானிடரி நாப்கின் தயாரிப்பது எப்படி என்பது குறித்து எங்கள் குழுவை சேர்ந்த 3 பெண்களும் பயிற்சி பெற்று வந்தனர். அவர்கள் மூலம் மற்ற உறுப்பினர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடிந்ததும் புதுக்கோட்டையில் இருந்தே சானிடரி நாப்கின் தயாரிப்பதற்கான இயந்திரத்தையும் வழங்கினர். சானிடரி நாப்கின் தயாரிப்பு தொழில் துவங்க ரூ.2.5 லட்சம் வங்கியிலிருந்து மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட்டது. கிடைத்த தொகையில் ரூ.1.98 லட்சம் செலவில் புதிதாக சானிடரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரமும், நாப்கின் தயாரிப்பதற்கான லேசான துணியையும், பஞ்சு போன்ற உபபொருட்களையும் வாங்கினோம்.

இந்த இயந்திரம் மூலம் ஒரே அச்சு மூலமாக 10 நிமிடத்தில் 15 பேடுகளை தயார் செய்ய முடியும். ஒரு மணி நேரத்தில் 100 பேடு வரையிலும் உற்பத்தி செய்ய முடியும். இதற்கு 2 பேர் மட்டுமே போதுமானது. இப்போது அனைவருக்கும் தொழில் தெரியும். உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் போக மீதி 14 பேரும் சந்தைப்படுத்துதலில் ஈடுபடுகிறோம். நாங்களே நேரடியாக சென்று ஆர்டர் பிடிப்பதால் இதில் உள்ள கஷ்ட, நஷ்டங்களை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுகிறோம். நாங்கள் எதிர்பார்த்தபடியே நல்ல வர்த்தக வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

முன்பெல்லாம் வங்கியில் இருந்து வாங்கும் கடனை எப்படி தவணை மாறாமல் கட்டுவது என்ற கவலை எங்களுக்கு இருக்கும். இப்போது நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு தொழிலதிபர்களாக உணர்வதாலும், சொந்த காலில் நிற்பதாலும் தன்னம்பிக்கை அதிகரித்திருக்கிறது. எனவே சானிடரி நாப்கின் தயாரிப்பு தொழிலை விரிவுப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும், ஆர்வமும் அதிகரித்திருக்கிறது. எப்படியும் ஒரு நாள் நாங்களும் இந்த தொழிலில் முத்திரை பதிப்போம். இவ்வாறு நம்பிக்கையுடன் கூறினர்.

இவர்களது இலக்கு குறைந்த முதலீடு, எளிதான வியாபாரம், கை நிறைய சம்பாத்தியம் என்பது தான். பெண்களை சார்ந்த வர்த்தகமாக இருந்தால், சந்தைப்படுத்துவதற்கும் எளிதாக இருக்கும் என நம்பினர். அதன் வெளிப்பாடு தான் நாப்கின் தயாரிப்பில் இறங்கியது.

Saturday, November 12, 2011

நாப்கின் தயாரித்தால் நிரந்தர லாபம்


பீரியட் நாட்களில் பயன்படுத்தும் நாப்கின்கள் தரமானதாகவும், விலை மலிவாவும் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். எனவே இது  போன்று தரமான நாப்கின்கள் தயாரிக்கும் தொழிலை கற்றுக் கொண்டால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை வடவள்ளியில் நாப்கின் தயாரிப்பு  தொழில் செய்து வரும் ஸ்ரீமகாலட்சுமி இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் ராஜேஸ்வரி(61). ராசி என்ற பெயரில் நாப்கின் தயாரித்து வரும் அவர் கூறியதாவது: கென்யாவில் ஒரு பள்ளியில் நான் கணித ஆசிரியராகவும், கணவர் பூபதி ஆங்கில ஆசிரியராகவும் 12 ஆண்டாக பணிபுரிந்துள்ளோம். மகன் அமெரிக்காவில்  இன்ஜினியர்.


திருமணமான மகள், பாங்காக்கில் வேலை பார்க்கிகிறார். எனது ஓய்வுக்காலத்தை சமூக நோக்கில் பணிபுரிய திட்டமிட்டேன். குடிசைத்தொழில்  ஏதாவது செய்யலாம் என நினைத்தேன். கோவையில் முருகானந்தம் என்பவர், பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாமல் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகை யில் குறைந்த செலவில் நாப்கின் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்திருந்தார். இதற்கு, மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்தது. அவரது பார்முலாபடி தொழில்  செய்ய மத்திய, மாநில
அரசுகள் ஒத்துழைப்பு அளித்து வருவதை அறிந்தேன்.

நாப்கின் தயாரிக்கும் தொழில் செய்யலாம் என முடிவெடுத்தேன். கட்டமைப்பு இயந்திரங்கள் மற்றும் 3 மாதத்துக்கு தேவையான மூலப்பொருட்களை முருகா னந்தம் விலைக்கு வழங்கினார். நாப்கின் தயாரிக்க பயிற்சியும் கொடுத்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு மாடியில் உள்ள அறையில் தொழிலை துவக்கி னேன். இப்போது தினசரி ஆயிரம் நாப்கின்கள் தயாரித்து வருகிறேன். நாங்கள் தயாரிக்கும் நாப்கின்களை தீயிட்டு எரித்தால் சாம்பலாகிவிடும். மண்ணில்  போட்டால் மக்கிவிடும். இவை சுற்றுச்சூழலுக்கும், பயன்படுத்துபவர்களுக்கும் எந்தவித கேட்டையும் விளைவிக்காதவை.

கோவையில் முருகானந்தம் தவிர நான்  மட்டுமே இத்தொழிலை செய்து வருகிறேன். அரசு மற்றும் தனியார் மகளிர் கல்லூரி ஸ்டோர், டிபார்ட்மென்டல் ஸ்டோர், தன்னார்வ தொண்டு நிறுவனங் கள், சமூக சேவை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும், வட மாநிலங்களுக்கும் விற்பனை செய்கிறேன். நாப்கின் தயாரிப்பு பயிற்சியும் அளித்து வருகிறேன். ஒரே  நாளில் கற்றுக் கொள்ளலாம்.

தயாரிக்கும் முறை

வெள்ளை நிற மரக்கூழை, 8 கிராம், 10 கிராம், 12 கிராம் என நாப்கின் தேவைப்படும் எடை அளவுகளில் தனித்தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். நீர்  கசியாத பேப்பரின் மேல் தடவிய பசையின் மீது மரக்கூழை வைத்து இறுக்க வேண்டும். அதை மெல்லிய துணியில் சுற்றி, மூட வேண்டும். நீர் கசியாத பேப் பர் அமைந்த

அடிப்பாகத்தின் மேல் இருபுறமும் லேசான பசை தடவிய பேப்பரை ஒட்டினால் நாப்கின் தயார். பேன்டீஸ் அணியாதவர்களுக்கு பெல்டுடன்  கூடிய நாப்கின் தயாரிக்க, பசை

தடவிய பேப்பரை ஒட்டாமல், சன்னமான ரிப்பனில் பெல்ட் பொருத்த வேண்டும். பிரசவமான பெண்களுக்கு அதிக கிராம்  கொண்ட திடமான நாப்கின் தயாரிக்க வேண்டும். அதில் பெல்ட் பொருத்த வேண்டும்.

முதலீடும் லாபமும்

கட்டமைப்பு இயந்திரங்களுக்கு ரூ1.5 லட்சம். ஒரு மாத உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள் மற்றும் உற்பத்திக்கூலி (4 தொழிலாளர்கள்), இட வாடகை,  மின்சாரம் உள்பட ரூ50 ஆயிரம். மாதம் 25 நாளில் 25 ஆயிரம் நாப்கின்கள் தயாரிக்கலாம். ஒரு நாப்கின் தயாரிக்க அதிகபட்ச செலவு ரூ2. மொத்தமாக விற் பனை செய்யும்போது குறைந்தபட்சம் ஒரு நாப்கினுக்கு 50 காசு முதல் அதிகபட்சம் ரூ1.50 என குறைந்தபட்சம் ரூ12,500 முதல் அதிகபட்சம் ரூ37,500 வரை  லாபம் கிடைக்கும். மொத்த ஆர்டர் கிடைத்தால் லாபம் இன்னும் அதிகமாகும்.சுகாதார விழிப்புணர்வு காரணமாக நாப்கின் பயன்பாடு அதிகரித்து வருவதால், இத்தொழிலுக்கு சந்தை வாய்ப்பு அதிகரித்து வருகிறது. அக்கம்பக்கத்தில் உள் ளவர்களுக்கு வாடிக்கையாக விற்க தொடங்கினால் அதிக லாபம் கிடைக்கும்.

நிரந்தர வருவாய்

‘நாட்டில் பெண்கள் சுகாதார நலத்தை மேம்படுத்த மத்திய அரசு கிராமப்புற பெண்களுக்கு இலவசமாக நாப்கின் வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவை யான நாப்கின்களை தனியார் மூலம் தயாரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உள்ள மகளிர் சுய  உதவிக் குழுக்கள் மற்றும் பல்வேறு தொழில்முனைவோர் மூலம் நாப்கின்களை தயாரிக்க ஆலோசித்து வருகிறது.
இத்தொழிலில் ஈடுபட உள்ளவர்களுக்கு நிரந்தர வர்த்தக வாய்ப்பு
உள்ளதால், இத்தொழில் வரும் காலத்தில் செழிக்கும் வாய்ப்புள்ளது’ என்கிறார் ராஜேஸ்வரி.

கட்டமைப்பு தேவைகள்

நாப்கினுக்கு தேவையான மரக்கூழை பஞ்சு போல் ஆக்கும் டீபைப்ரேஷன் மெஷின்.

நாப்கினில் இடம்பெறும் மரக்கூழின் அளவுகளை எடைபோட எலக்ட்ரானிக் எடை மெஷின்.

தேவைப்படும் நீள, அகலத்தை அமைக்க கோர் டை என்ற உலோக சட்டங்கள் 15.

நீர் கசியாத பேப்பரின் மேல் மரக்கூழ் ஒட்டவும், இறுக்கம் கொடுக்கவும் தேவையான கோர் ஃபார்மிங் மெஷின்.

தயாரான நாப்கினை சுத்தம் செய்ய அல்ட்ரா வயலட் எலக்ட்ரிக் டிரே. பேக்கிங் செய்ய சீலிங் மெஷின்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites