இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, November 28, 2011

அல்பட்ரோஸ் பறவைகள்



உறங்குகின்ற அல்பட்ரோஸ் பறவைகள்


அல்பட்ரோஸ் (ஆல்பட்ரோஸ்) பறவைகள் மிகத் திறனுடன் காற்றோட்ட வேறுபாடுகளைப் பயன்படுத்தி அதிக அலுப்பின்றி வெகு தொலைவு பறக்க வல்லவை. இவை நீரில் வாழும் கணவாய் (squid) மீன குறில் (krill) முதலியவற்றை உணவாக உட்கொள்ளுகின்றன. ஆல்பட்ரோஸ் பறவைகள் கடலிடையே உள்ள சிறு தீவுகளில் பெருங்கூட்டமாக வாழ்கின்றன. ஆல்பட்ரோஸ் பறவைகள இணையாக வாள்ணாள் முழுவதும் ஒன்றாகவே (இணை பிரியாமல்) வாழ்கின்றன. இனப்பெருக்கக் காலங்களில் ஒரு முறைக்கு ஒரு முட்டைதான் இடுகின்றன.அல்பட்ரோஸ் (ஆல்பட்ரோஸ்) தென்முனைப் பெருங்கடலிலும் வட பசிபிக் பெருங்கடலிலும் காணப்படும் கடற் பறவையினமாகும். இவை பெரும்பாலும் வெண்ணிறக் கழுத்தும் பெரிய அலகும் மிகப்பெரிய இறக்கை விரிப்பளவும் கொண்டவை.




சதை இணைப்புள்ள கால் அடிகள் (கொய்யடிகள்) கொண்டவை. இப் பறவையினம் இன்று உயிர் வாழும் பறவையினங்களிலேயே மிகப் பெரியவைகளின் ஒன்றாகும். இவ்வினத்தின் உயிரியல் வகைப்பாட்டுப் பெயர் டியோமெடைடிடே (Diomedeidae)என்பதாகும். இவ்வினத்தில் 21 வகையான உள்ளினங்கள் உள்ளன ஆனால் அவற்றுள் 19 இனங்கள் மிக அருகிய உயிரினப்பட்டியலில் உள்ளன. பெரும் வெண் ஆல்பட்ரோஸ் என்னும் பறவையின் இறக்கை விரிப்பளவு இன்றுள்ள பறவைகள் யாவற்றினும் மிக நீளமானது.





இவை கடல் பறவைகள். பூமியின் தெற்குப் பகுதியில் உள்ள கடல் பகுதிகளில்தான் ஆல்பட்ரோஸ்கள் வசிக்கின்றன. முட்டையைவிட்டு வெளிவந்து பறக்கத் தொடங்கிவிட்டால் பிறகு, இந்தக் கடற் பறவைகள் கரையில் இறங்குவதில்லை. கீழே இறங்காமல் ஏறத்தாழ ஐந்து வருடங்கள் தொடர்ந்து பறப்பதற்கு இவற்றால் முடியும். பறப்பதற்கிடையில்தான் இவை உண்கின்றன, உறங்குகின்றன.

இந்தப் பறவைகள் பெரிய இறக்கைகளைக் கொண்டிருக்கின்றன. ஒரு பகுதி இறக்கை, ஏறத்தாழ மூன்று மீட்டர் நீளமுடையதாயிருக்கும். இந்த இறக்கைகளை இருபுறமும் விரித்தால், மணிக்கணக்காகவோ அல்லது நாட்கணக்காகவோ இவற்றால் ஆகாயத்தில் அப்படியே பறக்க முடியும். கடலில் உள்ள மீன்களும், சிறிய பிராணிகளும்தான் இவற்றின் உணவு. நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 640 கிலோ மீட்டர் தூரம் இவை பறப்பதுண்டு. மிக விரைவாகப் பறக்கும் திறமை உள்ள "ஸ்விப்ட்' எனும் கடற் பறவையும் பறக்கும்போதுதான் உறங்கும்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites