இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label பறவைகள். Show all posts
Showing posts with label பறவைகள். Show all posts

Saturday, November 2, 2013

விவசாயிகளின் நண்பன் ஆந்தை!



கோவை அருகே சரவணம்பட்டியில் பிடிக்கப்பட்ட 2 ஆந்தை மற்றும் தனியார் கல்லூரியில் பிடிக்கப்பட்ட ஒன்று என மூன்று ஆந்தைகள் கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவில் கொடுத்துச் சென்றுள்ளனர். இதில் இரண்டு ஆந்தைகளின் கால்கள் அடிபட்டுள்ளதால் அவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பூங்கா இயக்குநர் அசோகன் கூறியது: சரவணம்பட்டி பகுதியில் பிடிக்கப்பட்ட ஆந்த வெண்ணாந்தை வகையையும், தனியார் கல்லூரியில் பிடிக்கப்பட்டது மரஆந்தை வகையையும் சார்ந்தது. இந்த ஆந்தை உலகிலேயே மிகவும் சிறிய வகையைச் சேர்ந்தது என்பது சிறப்பு அம்சம்.
அபசகுணமாகவும், அச்சத்தின் அடையாளமாகவும், மரணத்தின் குறியீடாகவும் நகர்ப்புறம் சார்ந்த மக்களால் கருதப்படும் ஆந்தைகள் வேளாண் தொழிலின் உற்ற நண்பன். உலகெங்கும் 132 ஆந்தை வகைகள் உள்ளன. நாம் வசிக்கும் இடங்களில் மூன்று வகை ஆந்தைகள்  உள்ளன.புள்ளி ஆந்தை, கூகை என்ற வெண்ணாந்தை, கொம்பன் ஆந்தை.
வெண்ணாந்தை ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தது என்ற தவறான கருத்து உள்ளது.
இது நம் நாட்டுக்கே உரித்தான அழகான பறவை. அவற்றின் முகம் ஆப்பிள் அல்லது இதய வடிவில் இருக்கும். பழைய கோட்டைகள், பாழடைந்த வீடுகள், கிணறுகளில் வாழும். வட்ட வடிவமான வெள்ளை முகம் தட்டுப் போலவும், உடலின் முன்பகுதி வெண்மையாகவும், பின்பகுதி மஞ்சள் நிறத்தில் சிறுசிறு கறுப்புப் புள்ளிகளுடனும் காணப்படும். கரகரப்பான குரலில் கிறீச்சிடும். அந்தி சாய்ந்த நேரத்தில் கூட்டை விட்டு
வேட்டைக்கு புறப்படும். இரவில் இதனுடைய தோற்றம் அச்சமூட்டக் கூடிய விதத்தில் இருப்பதாகக் கருதப்பட்டதால், சாக்குருவி என்றும் அழைக்கப்படுகிறது.
இரவு முழுவதும் தங்கள் மென்மையான சிறகுகளால் துளி கூட சப்தமின்றிப் பறந்து திரியும். வயல் வெளிகளில் திரியும் எலி,சுண்டெலிகளை அலகால் பிடித்து தூக்கிச் செல்லும். ஒரே இரவில் மூன்று முதல் நான்கு எலிகளை விழுங்கி விடும்.
சிறிது நேரத்தில் கடுந்திறன் கொண்ட ஜீரண உறுப்புகளால் சத்துப் பொருட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது போக, எலும்புத் துண்டுகள், முடி, நகம் போன்றவற்றை சிறு உருண்டைகளாகக் கக்கிவிடும்.
இதன் இனப்பெருக்கக் காலம் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை. மரப் பொந்துகள், பாழடைந்த கட்டடங்களில் நான்கு முதல் ஏழு முட்டைகளை இடும்.
மனிதர்களுக்கு நோய் பரப்பும், அழிவு சக்தியாக இருக்கும் எலிகள், ஆந்தைகளின் உடலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருப்பது இயற்கையின் விந்தைகளில் ஒன்று. மூடநம்பிக்கையாலும் அச்சத்தின் காரணமாகவும் ஆந்தைகள் கொன்று அழிக்கப்படுகின்றன.
வேளாண்மைக்குத் தீங்கு செய்யும் எலி, வெட்டுக்கிளி, புழு பூச்சிகளை உணவாக்கிக் கொண்டு விவசாயிகளுக்கு உற்ற நண்பனாகத் திகழ்கிறது.
கூகைகளை பாதுகாப்பது வேளாண் தொழிலுக்கு பெரும் நன்மை புரியும்.
தற்போது கோவை சுற்றுப் புறப்பகுதிகளில் வயல் வெளிகள் அழிக்கப்பட்டு வானுயர்ந்த கட்டடங்கள் கட்டப்படுவதால் இவைகள் உணவுக்காக வெகுதூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு செல்லும் போது பொதுமக்களால் தாக்குவதால் இவைகள் அழிந்து வருகின்றன.
- See more at: http://vavuniyavision.com/news_detail/96/26#sthash.YoyRQQzp.dpuf

Sunday, April 1, 2012

மரங்கொத்தி

மரங்கொத்திப் பறவையின் காலில் இரண்டு விரல்கள் முன்புறமாகவும், இரண்டு விரல்கள் பின்புறமாகவும் நீண்டிருக்கும். கால் விரல்களின் இந்த அமைப்பு, மரத்தைப் பற்றி ஏறுவதற்கும் மரத்தை இறுகப் பற்றிப் பிடித்துக்கொண்டு நிற்பதற்கும் பெரிதும் உதவுகிறது. மரத்தில் பொந்து உருவாக்கி அதில் முட்டையிடுவதற்காக மரங்கொத்திகள் மரங்களைக் கொத்திப் பொந்துகள் அமைக்கின்றன. மர இடுக்குகளிலும், துளைகளிலும் வாழும் புழு பூச்சிகளையும் அவற்றின் முட்டைகளையும் தின்பதற்காகவும் மரங்கொத்திகள் மரத்தைக் கொத்துகின்றன.

மரங்கொத்தியின் மொத்த உடல் பருமனோடு ஒப்பிடும்போது, அதன் தலை பெரிதாக இருக்கும். அதன் கழுத்து சிறிதாக இருந்தாலும் மிகவும் வலுவாக இருக்கும். அலகால் மரத்தில் பலமாகக் கொத்துவதற்கு இந்தக் கழுத்துதான் உதவுகிறது. மரங்கொத்தியின் அலகின் முனை உளியைப்போன்று கூர்மையாக இருக்கும். இந்த அலகின் வடிவமும் உறுதியும் மரத்தில் துளையிடுவதற்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கின்றன. மரங்களின் தண்டுப் பகுதியில் உள்ள புழு பூச்சிகள் முழுவதையும் தங்கள் அலகால் பற்றி எடுப்பதற்கு இயலாமல்போனால் மரங்கொத்திகள் தங்கள் நாக்கைப் பயன்படுத்துகின்றன.

ஒரு மரத்தின் துளைக்குள் இருக்கும் பூச்சியைப் பிடிப்பதற்கு மரங்கொத்தி தன் அலகை உள்ளே நீட்டுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அலகு எட்டாத தொலைவில் இருக்கிறது அந்தப் பூச்சி. அப்போது மரங்கொத்தி தன் வாய்க்குள் மடித்து வைத்திருக்கிற நாக்கை நீட்டி அந்தப் பூச்சியைப் பிடித்துவிடும். மடக்கி வைத்திருந்த நாக்கை நீட்டும்போது அந்த நாக்கு மெல்லியதாக, அலகைவிட ஏறத்தாழ நான்கு மடங்கு நீளமாக இருக்கும். நாக்கின் முனை கூர்மையாகவும், முட்கள்போன்ற அமைப்புக்கொண்டதாகவும் இருக்கும். பெரிய மரங்களின் பொந்துகளில் மிகவும் பாதுகாப்பாக ஒளிந்திருக்கும் பூச்சிகளையும்கூட இந்த நீளமான நாக்கால் பிடித்துவிட முடியும். நாக்கின் முனையில் உள்ள முட்களும், பசைபோன்ற திரவமும் பூச்சிகளை மிக எளிதில் பிடிப்பதற்கு வசதியாக அமைந்திருக்கின்றன.

மரங்கொத்திகளில் "ஃபின்ச் மரங்கொத்தி' எனும் ஒரு இனம் உண்டு. சில சமயம் மரத் துளைகளில் உள்ள பூச்சி புழுக்கள், மரங்கொத்தியின் அலகிற்கு எட்டாதபடி மரத்தின் மிக உள்ளே இருக்கும். அவற்றை வெளியே கொண்டுவர இந்த வகை மரங்கொத்திகள் என்ன செய்யும் தெரியுமா? இதுபோன்ற அவசியங்களுக்காகத்தான் எப்போதும் அலகில் ஒரு கம்பையோ முள் குச்சியையோ வைத்திருக்கும். அந்தக் கம்பைக்கொண்டு குத்தி புழு பூச்சிகளை வெளியே வரச் செய்துவிடும்.

வடக்கு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் ஒரு வகைப்பட்ட மரங்கொத்திகள் வசிக்கின்றன. அவற்றிற்கு ஓக் மரத்தின் காய்கள்தான் மிகவும் விருப்பமான உணவு. ஓக் மரத்தின் காய்கள் நிறையக் கிடைக்கின்ற காலத்தில் அவை அந்தக் காய்களை சேகரித்து வைக்கும்.

உணவு கிடைக்காத காலத்தில், சேர்த்து வைத்ததைப் பயன்படுத்திக்கொள்ளும். அந்தக் காய்களை அவை எங்கே சேகரித்து வைக்கும்? தொலைவில் உள்ள ஏதாவது ஒரு பெரிய ஓக் மரத்தில் நூற்றுக்கணக்கான பொந்துகள் அமைக்கும். ஒவ்வொரு மரங்கொத்தியும் உருவாக்குகிற பொந்தில் அந்தந்த மரங்கொத்தியே மரக்கொட்டையைக்கொண்டு வந்து பாதுகாக்கும். இடையிடையே இந்த மரங்கொத்திகள் வந்து, தங்களுடைய உணவுச் சேகரம் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டுப்போகும். மற்ற பிராணிகள் தங்கள் உணவைக் கொண்டுபோய்விடாமல் இருப்பதற்காக இவை சில சமயம், மரத்தின் இலைகளாலும், உலர்ந்த மரக் கிளைகளாலும் அந்தப் பொந்துகளை மறைத்து வைக்கும். இங்குள்ள மரங்கொத்திகளும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் உணவை மரப் பொந்துகளில் சேகரித்து வைப்பது உண்டு.

Tuesday, March 6, 2012

வேகமாக அழிந்து வரும் அவுஸ்திரேலிய பறவைகள்

விலங்குகள், பறவைகள் குறித்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளில் புதிய இனங்கள் கண்டறியப்படுவதுடன் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களும் சுட்டி காட்டப்படுகின்றன.
இந்தியாவில் குருவி இனம் அதற்கு மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது. ஆங்காங்கே பரவலாக இருந்த குருவிகள் இப்போது பெருமளவில் குறைந்துவிட்டன. இந்த இனத்தை பாதுகாக்க தற்போது விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேபோல், ரீஜன்ட் ஹனிஈட்டர் உள்ளிட்ட அவுஸ்திரேலிய பறவைகள் அழிவில் உள்ளதை அவுஸ்திரேலிய இயற்கை மற்றும் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சி கழகம் சுட்டிக் காட்டி எச்சரித்துள்ளது.
இந்த இனங்கள் முற்றிலும் அழியும் முன்பு அவசர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
கடந்த 1990ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வுகளும் இதனை சுட்டிக் காட்டியுள்ளதை நினைவுகூரும் ஆராய்ச்சியாளர்கள் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது அழிந்து வரும் அவுஸ்திரேலிய பறவைகளின் எண்ணிக்கை மிக வேகமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Monday, November 28, 2011

வெளவால் தலைக் கீழாகத் தொங்குவது ஏன்?



தன்மையைப் பெற்ற ஒரே பாலூட்டி



வெளவால் தலைக் கீழாகத் தொங்குவது ஏன்?


வெளவால்களின் இறக்கைகள் 6 அங்குலம் முதல் 6 அடி வரை நீண்டிருக்கும். அவற்றின் கால்களுக்கு போதிய வலிமைக் கிடையாது. அதனால்இ வெளவால்களால் நீண்ட நேரம் நிற்கவோ ந

டக்கவோ முடியாது. மற்ற பறவைகளைப் போல் இவற்றால் பூமியில் இருந்து மேலெழும்பி பறக்க முடியாது. அதற்க்கு அவற்றின் போதிய வளர்ச்சியற்ற கால்களும்இ அதிக கனமான இறக்கைகளும்தான் காரணம். தலைக் கீழாகத் தொங்குவது வெளவால்களுக்கு செளகரியமாக இருக்கிறது. ஆபத்தில் இருந்து தப்பிக்க உதவுகிறது. இவ்வாறு தொங்கும் போது வெளவால்களுக்கு அதிக அளவு சக்தி தேவைப்படுவதில்லை. உடனடியாகப் பறப்பதும் எளிதான விஷயமாக உள்ளது.

'பறக்கக்கூடிய' தன்மையைப் பெற்ற ஒரே பாலூட்டி வவ்வால் ஒன்றுதான்

குட்டிப்போட்டு பறக்கக்கூடியத் தன்மையைக்கொண்ட இந்தப்பாலூட்டி பல அதிசியத்தக்க தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. கீழ் காணும் படம் வவ்வால் தன் சிறகை(கையை) விரித்து பறக்கக்கூடிய காட்சி.


மேலும் தலைக்கீழாக தொங்குவதற்கு எந்தவிதமான சக்தி இழப்பும் இவைகளுக்கு ஏற்படுவதில்லை. இதுவும் ஒரு ஆச்சர்யமான நிகழ்வாகும். மனிதர்களைப்பொருத்த வரை இரண்டு நிமிடங்கள் கைகளை ஒரே நிலையில் தூக்கி வைக்க இயலாது என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இவைகள் தலைகீழாக தொங்கும் போது இவற்றின் உடல் எடையின் காரணமாக பின்புற கால்களின் தசை நார்கள் ஒன்றுடன் ஒன்று தன்னிச்சையாக கோர்த்து இணைந்துக்கொள்வதன் மூலம் இவற்றின் விரல் நகங்கள் தொங்கும் மேற்புறத்தை இறுகப் பற்றிப்பிடித்துக்கொள்ளுகின்றன. இதனால் எந்த விதமான சிரமமுமின்றி இவை உறக்கத்தில் ஈடுபடுகின்றன.

உலகில் உள்ள உயிரினங்களில் ஆண் இனத்தின் மார்பில் பால் சுரக்கும் சம்பவம் தயாக் (Dayak)) வவ்வால்களில் மட்டுமே காணக்கூடிய அதிசயம்


நாம் பொதுவாக அறிந்திருப்பது என்னவென்றால் முட்டையிடுதல் கர்பமடைதல் பாலூட்டுதல் போன்ற பண்புகளை பெண் உயிரினங்கள்தான் பெற்றிருக்கின்றன. 1994 ஆம் ஆண்டு விஞ்ஞானிகள் ஓர் உண்மையினை கண்டறிந்தார்கள். மலேசியாவில் வசிக்கக்கூடிய தயாக்(Dayak) பழந்தின்னி வவ்வால்களில் 10 ஆண் வவ்வால்களை ஆராய்ச்சி செய்து ஓரு அதிசியத்தக்க முடிவினை வெளியிட்டார்கள். நம் கற்பனையிலும் உதிக்காத ஒன்று ஆண் வவ்வால்களின் மார்பகங்களில் பால் சுரந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பாலூட்டிகளில் ஆண் உயிரினத்தின் மார்பில் பால் சுரக்கக்கூடியது இது ஒன்றாகத்தான் இருக்கும்.

தூரப்பிரதேசத்தின் தட்பவெப்ப நிலைகளை துல்லியமாக அறிந்து 1600 மைல்களைக் கடந்து செல்லும் அதிசய ஆற்றல்

வவ்வால்கள் சராசரியாக மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றலுடையவை. சில வகை வவ்வால்கள் வருடம் முழுதும் ஒரே மரத்தில் தங்கிவிடுகின்றன. ஆனால் சிலவகை வ

வ்வால்கள் உதாரணமாக மெக்ஸிகன் பிரிடெய்ல் வவ்வால்கள் குளிர் காலங்களில் தங்கள் இருப்பிடத்தை மாற்றி வெப்பப் பிரதேசங்களுக்கு பெரும் தூரத்திற்க்கு புலம்பெயர்ந்து செல்லுகின்றன. அமெரிக்காவிலிருந்து 1600 மைல்களைக் கடந்து மெக்ஸிகோவை வந்தடைகின்றன. இவைகள் எப்படி இவ்வளவு தூரப்பிரதேசத்தின் கால தட்ப வெப்பநிலையை துல்லியமாக அறிகின்றன என்பதை விஞ்ஞானிகளால் திட்டவட்டமாகக் கூறமுடியவில்லை. இவைகளின் மூளைப்பகுதியில் பூமியின் காந்த மண்டலங்களை அறியக்கூடிய அமைப்பு எதுவும் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் அபிப்பிராயப்படுகின்றார்கள்.

அடர்ந்த இருளிலும் பார்க்கக்கூடிய கண் அமைப்பு


வவ்வால்கள் பகல் பொழுதை ஒய்விற்கும் இரவு பொழுதை தங்கள் வாழ்க்கைத் தேவைக்கும் பயன்படுத்துகின்றன. இவைகள் அந்திப்பொழுது முதல் வைகறைப்பொழுது வரை மிகச்சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவை. இரவில் இயங்கக்கூடிய சில உயிரினங்களில் வவ்வாலும் ஒன்றாகும். இரவில் நன்குப்பார்க்கக்கூடிய கண் அமைப்பைப் பெற்றிருக்கின்றன.அடர்ந்த இருளிலும் குறைந்க வெளிச்சத்திலும் நன்கு பார்க்கக்கூடிய கண் அமைப்பினை பெற்றுள்ளன.

(mastiff) ) வவ்வால்கள் காலனியாக(கூட்டமாக) வாழக்கூடியது. இந்த வவ்வால்களின் ஒரு காலனி(கூட்டம்) ஒரு இரவில் 250 டன் (இரண்டு லச்சத்தி ஐம்பது ஆயிரம் கிலோ) எடையுடைய பூச்சி வண்டு மற்றும் கொசுக்களை தங்கள் உணவாக உண்ணுகின்றன
பொதுவாக வவ்வால்கள் கதைகளிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் தீய சக்திக்கும் சாத்தானிய சக்திகளுக்கும் உதாரணமாகக் கூறப்படுகின்றது. ஆனால் இன்றைய விஞ்ஞானிகள் இவைகளின் அளவற்ற பயன்பாடுகளைப்பற்றி சிலாகித்து கூறுகின்றனர். இவை முக்கியமாக மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய பூச்சிஇ கொசுஇ வண்டு மற்றும் ஈக்களை தங்கள் முக்கிய உணவாக உட்கொள்கின்றன. மெக்ஸிகோவில் வாழக்கூடிய மஸ்டிப்(



'எதிரொலியின் மூலம் இரையை பிடிக்கும் அதிசியமான ஆற்றல்' ECHO LOCATION

'ரேடாரின் இயக்கத்தை ஒத்த ஒலி அலை அமைப்பு'
(1) முதல் படம் மாறுப்பட்ட அலை வரிசைகளைக்கொண்ட ஒலியை வவ்வால் அனுப்புகின்றது
(2) இரண்டாவது படம் அதனால் அனுப்பப்பட்ட ஒலிஅலையின் பாதையில் தடங்கள் ஏற்பட்டு அது எதிரொலியாக திரும்பி வருதல்.
(3) ஒலிப்பாதையில் தடங்கள் ஏற்பட்ட இடத்தை நோக்கி துல்லியமாக இரையின் அளவையும் தொலைவையும் அறிய அனுப்பும் ஒலி.
(4) இரையை விரைந்துச்சென்று பிடித்தல்.

இன்றைய நவீன அறிவியல் கண்டுபிடிப்புக்களில் ஒன்றான ரேடாரின் இயக்கத்தை ஒத்த ஒரு இயக்கம்தான் வவ்வால் தனது இரையை அடைய மேற்கொள்ளும் உத்தியாகும்.


'சுயம்வரம் நடத்தி ஆண் வவ்வால்களைத் தேர்வு செய்யும் பெண் வவ்வால்களின் வியப்பூட்டும் ஓர் அம்சம்'

'ஆயிரக்கணக்கான குட்டிகளிடையே தன் குட்டியை மிகச்சரியாக அறியக்கூடிய நினைவாற்றல்'

வவ்வால்களின் இனப்பெருக்கத்தை பொறுத்தவரை இனங்களுக்கு இனம் வேறுப்பட்டு காணப்படுகின்றது. பொதுவாக ஒரு முறைக்கு ஒரு குட்டிகளை மட்டும் ஈன்றெடுக்கின்றது. இவைகளின் கர்ப காலம் 40 நாட்கள் முதல் 8 மாதங்கள் வரை இனத்திற்கு இனம் வேறுபட்டுக் காணப்படுகின்றது. ஹாமர் ஹெட் வவ்வால்களின் இனப்பெருக்க முறை மிக வித்தியாசமானதாகும். இவ்வினத்தின் ஆண் வவ்வால்கள் நூற்றுக்கணக்கில் ஒரு மரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும். இவைகள் பெண் வவ்வால்களைக் கவர வித்தியாசமான சப்தங்களை எழுப்புகின்றன. இதனால் கவரப்பட்ட பெண் வவ்வால்கள் அங்கு வருகைத்தருகின்றன. ஒவ்வொரு ஆண் வவ்வாலும் தான் தேர்வு செய்யபட முயற்ச்சிகளை மேற்கொள்ளுகின்றன. இருப்பினும் கூட அந்த நூற்றுக்கணக்கான வவ்வால்களில் ஒன்றினை மட்டும் தேர்வு செய்து இனப்பெருக்கத்தில் ஈடுபடும் இந்த நிகழ்ச்சி பழங்கால இளவரசிகள் சுயம்வரம் நடத்தி தங்களுக்கு பிடித்த ஆண்களை தேர்வு செய்த சம்பவத்தைதான் நமக்கு நினைவுபடுத்துகின்றது. இனப்பெருக்கத்தின் மூலம் கர்பமடையும் பெண் வவ்வால் குட்டிகளை ஈன்றெடுக்க இடம் பெயர்ந்து இதைவிட வெப்பமான இடத்தில் சென்று மற்ற கர்பமுள்ள வவ்வால்களுடன் சேர்ந்துக்கொள்ளுகின்றன. ஆயிரக்கணக்கான வவ்வால்களின் குட்டிகளுக்கிடையே இவை தங்கள் குட்டியை மிக சரியாக அடையாலம் கண்டுகொள்ளும் இந்த ஆற்றல் மனித இனம் கூட அடையாத ஒன்றாகும். மருத்துவ மனைகளில் குழந்தை பிறந்தவுடன் அடையால அட்டை கட்டாவிட்டால் எந்த தாயும் தன் குழந்தையை அறிய முடியாது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.

அழிவின் விளிம்பை நோக்கிச் செல்லும் வவ்வால்கள். ஓர் அதிர்ச்சி தகவல்

வவ்வால்களில் சில வகைகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக உயிர் வாழுகின்றன. இன்றைய சூழ்நிலையில் காடுகள் பெருவாரியாக அழிக்கப்படுவதாலும் உலக அளவில் தற்போது ஏற்பட்டுள்ள (Elnino) பருவநிலைக்கோளாறுகளினால் கோடிக்கணக்கான ஹெக்டேர்களில் ஏறபடும் காட்டுத்தீயினாலும் மிக வேகமாக வவ்வால் இனங்கள் அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றன. மெக்ஸிகோவில் ஏற்ப்பட்ட காட்டுத்தீயின் காரணமாக சில வவ்வால் இனங்கள் 99.99 சதவிகிதம் அழிந்துவிட்டதாக கருதப்படுகின்றது. மனிதர்களினால் வவ்வால்களுக்கு பெரிய அளவில் எந்த பிரச்சனையும் ஏற்படாவிட்டாலும் கூட சில வேளைகளில் உண்பதற்காகவும் சோதனைச்சாலைகளில் ஆராயச்சி செய்வதற்காகவும் இவை வேட்டையாடப்படுகின்றன.

நன்றி இணையம்

மரங்கொத்திப்பறவையின் நாக்கு மிகவும் நீளமாக இருப்பது ஏன் தெரியுமா?


என் மனதை
கொத்திவிட்டு
கூடுகட்டி
குடியும் ஏறிவிட்ட
மரங்கொத்தி
பறவை நீ...
என் மனதை
கொத்தி விடு
போகாதே...

அவுஸ்திரேலியா நியூசிலாந்து மடகாஸ்கர் மற்றும் தென் - வட முனைப்பகுதிகளைத் தவிர்த்து உலகெங்கும் காணப்படும் பறவையாகும். பெரும்பாலான சிற்றினங்கள் காடுகளிலும் மரங்கள் உள்ள பகுதிகளிலும் காணப்படுகின்றன. எனினும் சில இனங்கள் மரங்களற்ற பாறைப்பகுதிகளிலும் பாலைநிலங்களிலும் வாழ்கின்றன. மரங்கொத்திகளில் சுமார் 200 சிற்றினங்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மரங்களிலும் வாழும் பூச்சிகளே இவற்றின் முக்கிய உணவு.

மரங்கொத்தி பறவைகள் வனம் மற்றும் தோட்டங்களில் உள்ள மரங்களில் கூடு அமைத்து வசித்து வருகின்றன. மரங்கொத்திக்கு சிறந்த செவிப்புலன் உண்டு . அது மரத்தில் தொத்திகொண்டவுடன் காதைவைத்துக் கேட்கும் . உள்ளே பூச்சிகள் நடமாட்டம் காதில் விழுந்தவுடன் உடனே மூக்கால் மரத்தை துளைத்து நீண்ட நாக்கால் பூச்சிகள் லபக்!. மரப் பட்டைகளின் இடுக்குகளில் காணப்படும் புழு வண்டு மற்றும் பூச்சிகளை உண்பதற்காக மரங்களை கொத்துகின்றன; தவிர மரங்களில் ஓட்டை அமைத்து அதில் தங்களுக்கான குடியிருப்புகளையும் ஏற்படுத்திக் கொள்கின்றன.

மரங்கொத்தி தனது அலகு மூலம் மரத்தை கொத்தும் போது அதன் மூளையில் அதிர்வு ஏற்படாமல் இருக்க இயற்கையாகவே அதன் நாக்கு நீளமாக படைக்கப் பட்டுள்ளது. மரங்கொத்தி யின் நீளமான நாக்கு அதன் மூளையைச் சுற்றி பாதுகாப்பு வளையம் போல இருக்கும். இதனால் அதிர்வில் இருந்து மூளை பாதுகாக்கப்படுகிறது.

மரங்கொத்தி பறவைகளின் கண்கள் எலும்பு திசுக்களால் அழுத்தமாக சூழப்பட்டுள்ளதால் அவற்றுக்கு எவ்வித அதிர்வுகளோ பாதிப்புகளோ ஏற்படுவதில்லை என வன உயிரின ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனிதர்கள் மரங்களை முட்டி மோதும் போது மூளை கலங்கவோ உள் மண்டை ஓட்டுடன் முட்டி மோதும் வாய்ப்புள்ளது. அளவில் மரங்கொத்தி பறவைகளின் மண்டை ஓட்டுடன் மூளை முட்டி மோதும் வாய்ப்பில்லை; இதன் நாக்கு மண்டை ஓட்டை சுற்றியே வளைந்திருக்கும்.பறவை கண் விழிகளின் மேல் ஒரு ஜவ்வு போன்ற படலம் இமையை மூடித்திறக்கும் வகையில் அமைந்திருப்பதால் மரங்களை கொத்தும் போது தெளிக்கும் மரச்சிராய்மரத்துகள்களில் இருந்து கண்கள் பாதுகாக்கப்படுகின்றன. அற்புதமான உடலமைப்பு மற்றும் பாதுகாப்பு கவசங்களை இயற்கை அளித்துள்ளதால் மரங்கொத்தி பறவைகள் எவ்வித வலி வேதனை பாதிப்பு இல்லாமல் மரங்களை கொத்தி தங்கள் உணவுத் தேவையை நிறைவு செய்துக் கொள்கின்றன

மஞ்சக் கழுத்து டூக்கான் பறவைக்கு

இவ்வளவு பெரிய அலகு எதற்கு டூக்கான் பறவைக்கு


மஞ்சக் கழுத்து டூக்கான்


டூக்கான் அல்லது 'பேரலகுப் பறவை' என்பது கண்ணைக் கவரும் அழகிய நிறங்களைக் கொண்ட மிகப்பெரிய அலகுடன் இருக்கும் வெப்ப மண்டல அமெரிக்கப் பறவை இனம். இது நடு அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்காவின் வடபுறம் வெப்ப மண்டல அமெரிக்கா எனப்படும் பகுதியில் வாழ்கின்றது. பல நூற்றாண்டுகளாக ஏன் இப் பறவைக்கு இவ்வளவு பெரிய அலகு உள்ளது என்று வியந்து வந்தனர். இப்பொழுது இதற்கு ஒரு விடை கிடைத்துள்ளது.

கனடாவில் உள்ள புராக் பல்கலைக்கழகத்தைச்(Brock University) சேர்ந்த முனைவர் கிளென் டாட்டர்சால்(Glenn Tattersall) பிரேசிலில் உள்ள ஆய்வாளர்களுடன் சேர்ந்து அகச்சிவப்புக் கதிர்களைப் படம் பிடிக்கும் கருவி ஒன்றைக்கொண்டு டூக்கான் பறவையைப் படம் பிடித்தார். டூக்கான் பறவைகளிலேயே மிகப்பெரிய அலகு கொண்ட ராம்ப்பாசுட்டோசு டோக்கோ(Ramphastos toco) என்னும் பறவையை அகச்சிவப்பு ஒளிப்படம் எடுத்தார். இக்கருவியின் துணையால் அலகின் வெப்பநிலையையும் உடலின் வெப்பநிலையையும் துல்லியமாகப் படம் எடுக்க முடிந்தது. அவர் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இப்பறவையின் உடலின் வெப்பத்தை அலகு வழியாக வெளியேற்றுகின்றது என்று கண்டுபிடித்தார். இக் கண்டுபிடிப்பை அமெரிக்க அறிவியல் ஆய்விதழ் சயன்சு என்பதில் வெளியிட்டுள்ளார்.

இப்பறவைகளுக்கு வியர்வை வழியாக்க வெப்பத்தை வெளியேற்றும் இயக்கம் இல்லாதாதால் வெப்பம் கூடும் பொழுது அலகுப்பகுதிக்கு குருதி ஓட்டத்தைக் கூட்டுவதால் வெப்பத்தை திறம்பட வெளியேற்றுகின்றது.

சூழ் வெப்பநிலையைப் பொருத்தும் பறவையின் நடவடிக்கையையும் பொருத்தும் இப்பறவை தன் அலகு வழியாக 5% முதல் 100% நெருக்கமாக வெப்பத்தை வெளியேற்ற வல்லது. டூக்கான் அலகுகளில் உள்ள குருதிக்குழாய்கள் அதன் வெப்பத்தைத் திறம்பட வெளியேற்ற அமைந்துள்ளது போல ஆய்வு செய்த வேறு எந்தப் பறவைவைக்கும் இல்லை.

டூக்கான் பறவை பற்றிய பார்வை

இப் பேரலகுப் பறவையின் உடல் 18 முதல் 63 செ.மீ நீளம் கொண்டிருக்கும். இப்பறவையின் மிகப்பெரிய அலகு கறுப்பு, நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள், பழுப்பு ஆகிய நிறங்களில் இருக்கலாம். அலகு பார்ப்பதற்குப் மிகப்பெரிதாக இருந்தாலும், அதிக கனம் கொண்டதல்ல. ஏனெனில், அதில் நிறைய காற்றறைகள் உள்ளன. இப்பறவையின் கழுத்து சிறியதாகவும், மிகப்பெரிய அலகுக்கு ஏற்றார்போல தலையின் அலுகுப்புறம் பெரியதாகவும் இருக்கும். இதன் கால்கள் குட்டையாகவும் வலிமை உடையதாகவும் இருக்கும். இப்பறவையின் நாக்கு குறுகிய அகலம் உடையதாகவும் நீளமாகவும் இருக்கும். ஆண்பறவையும் பெண் பறவையும் ஒரே நிறம் கொண்டதாக இருக்கும்.

மரக்கிளைகளிலும் மரப்பொந்துகளிலும் கூடுகட்டி வாழ்கின்றன. இப்பறவைகள் அதிகம் இரைச்சல் எழுப்புகின்றன. உறங்கும் பொழுது தன் தலையை முதுகுப்புறம் திருப்பி தன் பெரிய அலகை தன் முதுகின் நடுவில் வைத்து உறங்குகின்றன. ஆண்டிற்கு ஒருமுறைதான் ஆணும் பெண்ணும் சேர்கின்றன. முட்டையிடும் பொழுது பெரும்பாலும் 2-4 முட்டைகள்தான் இடுகின்றன. முட்டையில் இருந்து சுமார் 15 நாட்களில் குஞ்சு பொரித்தவுடன் அக்குஞ்சுகள் உடலில் தூவி ஏதும் இல்லாமல் இருக்கின்றன. பேரலகுப் பறவையின் குஞ்சுகள் சுமார் 8 கிழமைகள் (வாரங்கள்) கூட்டில் இருக்கின்றன. ஆண்பறவையும் பெண்பறவையும் குஞ்சு வளர்ப்பில் பங்கு கொள்ளுகின்றன. பேரலகுப் பறவைகள் பிறந்த நிலப்பகுதியிலேயே தம் வாழ்நாளைக் கழிக்கின்றன. சிறு கூட்டமாக வாழ்கின்றன.

அல்பட்ரோஸ் பறவைகள்



உறங்குகின்ற அல்பட்ரோஸ் பறவைகள்


அல்பட்ரோஸ் (ஆல்பட்ரோஸ்) பறவைகள் மிகத் திறனுடன் காற்றோட்ட வேறுபாடுகளைப் பயன்படுத்தி அதிக அலுப்பின்றி வெகு தொலைவு பறக்க வல்லவை. இவை நீரில் வாழும் கணவாய் (squid) மீன குறில் (krill) முதலியவற்றை உணவாக உட்கொள்ளுகின்றன. ஆல்பட்ரோஸ் பறவைகள் கடலிடையே உள்ள சிறு தீவுகளில் பெருங்கூட்டமாக வாழ்கின்றன. ஆல்பட்ரோஸ் பறவைகள இணையாக வாள்ணாள் முழுவதும் ஒன்றாகவே (இணை பிரியாமல்) வாழ்கின்றன. இனப்பெருக்கக் காலங்களில் ஒரு முறைக்கு ஒரு முட்டைதான் இடுகின்றன.அல்பட்ரோஸ் (ஆல்பட்ரோஸ்) தென்முனைப் பெருங்கடலிலும் வட பசிபிக் பெருங்கடலிலும் காணப்படும் கடற் பறவையினமாகும். இவை பெரும்பாலும் வெண்ணிறக் கழுத்தும் பெரிய அலகும் மிகப்பெரிய இறக்கை விரிப்பளவும் கொண்டவை.




சதை இணைப்புள்ள கால் அடிகள் (கொய்யடிகள்) கொண்டவை. இப் பறவையினம் இன்று உயிர் வாழும் பறவையினங்களிலேயே மிகப் பெரியவைகளின் ஒன்றாகும். இவ்வினத்தின் உயிரியல் வகைப்பாட்டுப் பெயர் டியோமெடைடிடே (Diomedeidae)என்பதாகும். இவ்வினத்தில் 21 வகையான உள்ளினங்கள் உள்ளன ஆனால் அவற்றுள் 19 இனங்கள் மிக அருகிய உயிரினப்பட்டியலில் உள்ளன. பெரும் வெண் ஆல்பட்ரோஸ் என்னும் பறவையின் இறக்கை விரிப்பளவு இன்றுள்ள பறவைகள் யாவற்றினும் மிக நீளமானது.





இவை கடல் பறவைகள். பூமியின் தெற்குப் பகுதியில் உள்ள கடல் பகுதிகளில்தான் ஆல்பட்ரோஸ்கள் வசிக்கின்றன. முட்டையைவிட்டு வெளிவந்து பறக்கத் தொடங்கிவிட்டால் பிறகு, இந்தக் கடற் பறவைகள் கரையில் இறங்குவதில்லை. கீழே இறங்காமல் ஏறத்தாழ ஐந்து வருடங்கள் தொடர்ந்து பறப்பதற்கு இவற்றால் முடியும். பறப்பதற்கிடையில்தான் இவை உண்கின்றன, உறங்குகின்றன.

இந்தப் பறவைகள் பெரிய இறக்கைகளைக் கொண்டிருக்கின்றன. ஒரு பகுதி இறக்கை, ஏறத்தாழ மூன்று மீட்டர் நீளமுடையதாயிருக்கும். இந்த இறக்கைகளை இருபுறமும் விரித்தால், மணிக்கணக்காகவோ அல்லது நாட்கணக்காகவோ இவற்றால் ஆகாயத்தில் அப்படியே பறக்க முடியும். கடலில் உள்ள மீன்களும், சிறிய பிராணிகளும்தான் இவற்றின் உணவு. நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 640 கிலோ மீட்டர் தூரம் இவை பறப்பதுண்டு. மிக விரைவாகப் பறக்கும் திறமை உள்ள "ஸ்விப்ட்' எனும் கடற் பறவையும் பறக்கும்போதுதான் உறங்கும்.

கிவி பறவை-KIWI

      கிவி பறவை (Kiwi) இது ஒரு கோழி இனம் இது பல வித்தியாசமான பன்புகள் கொண்டது. இதன் இறக்கைகள் மென்மையான சாம்பல்-பழுப்பு நிறத்தில் சிறிய மற்றும் மறைக்கப்பட்டதாக இருக்கும். மற்றும் மூக்கு நீளமானது வளைந்து இருக்கும். கால்களில் நான்கு விரல்களில் ஒரு பெரிய தடித்த மற்றும் தசை உள்ளன. கிவி தனித்து இரவு நேரங்களில் நடமாடும், இவை பகல் முழுவதும் பொந்துகளில் தூங்கும் மற்றும் புழுக்கள், பூச்சிகள், மற்றும் பழங்களை உண்ணும் இவை நியூசிலாந்து அதை சுற்றி உள்ள சிறிய நாடுகளின் காடுகளில் வாழ்கின்றனர்.
     கிவியின் முட்டைகள் தாயின் அளவை பொருத்து பெரிதாக உள்ளன, பெண் கிவி தனது உடல் நிறையில் 15-20 சதவிதத்திற்கு சமமான ஒரு முட்டையை இடும். தீக்கோழி முட்டைகள் பெண்தீக்கோழி தான் எடையில் வெறும் 2 சதவீதமாகவும், மனிதன் அதன் தாயின் எடையில் வெறும் 5 சதவீத எடையுடையது.
     கிவி அனைத்தும் ஐந்து அங்கீகரிக்கப்பட்ட இனங்கள் உள்ளன, அனைத்து இனங்களும் மோசமான வரலாற்று காடு அழித்தலால் பாதிக்கப்பட்டது. ஆனால் அவைகள் காட்டுவசிப்பிடங்களை தற்போது பெரிய பகுதிகள் மற்றும் தேசிய பூங்காக்களில் பாதுகாக்கப்படுகின்றன. தற்போது அவைகளின் உயிர் பிழைத்தலுக்கு மிக பெரிய அச்சுருத்தல், பாலூட்டி கொன்றுண்ணுகள் வேட்டையாடிகளைல் உள்ளது.
    கிவி  நியூசிலாந்தின் தேசிய அடையாளமாக உள்ளது. ஒரு சின்னமாக கிவி முதல் நியூசிலாந்து பிரிவுகளின் முத்திரைகள்  19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளிவந்தது. இது பின்னர் 1886 இல் தென் சென்டர்பரி பட்டாலியன் மற்றும் 1887 இல் ஹேஸ்டிங்ஸ் துப்பாக்கி தன்னார்வலர்களின் முத்திரைகள் இடம்பெற்றது. பிறகு விரைவில், கிவி பல இராணுவ முத்திரைகளில் வெளிவந்தது, மற்றும் 1906 இல் கிவி, ஷூ பாலிஷ்க்கு  இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
   முதல் உலக போரின் போது, நியூசிலாந்து வீரர்கள் பெயர் கிவி "kiwi" பொது பயன்பாட்டிற்கு வந்தது, மற்றும் ஒரு மாபெரும் கிவி (இப்போது Bulford Kiwi அறியப்படுகிறது),
    கிவி Kiwi நியூசிலாந்தில் மிகவும் நன்கு அறியப்பட்ட தேசிய சின்னமாக மாறிவிட்டது, மற்றும் பறவை பல நியூசிலாந்து நகரங்களில், கிளப் மற்றும் அமைப்புக்களின் ஆயுத, மற்றும் முத்திரைகள் கோட் முக்கியமாக உள்ளது. நியூசிலாந்து டாலரில் பெரும்பாலும் கிவி "kiwi டாலர்" என குறிப்பிடப்படுகிறது.

வனவிலங்குகள், பறவைகள் காத்து இயற்கையை காப்போம்...

Wednesday, November 23, 2011

நம் வீட்டின் மேல் “ஆந்தைகளின் அலறல் ஒலி” மரணத்தை ஏற்படுத்தும்


அகில உலகமெங்கும் ஆந்தைகளின் இரவு நேர அலறல் பாரபட்சமின்றி விரிந்துள்ளதுஆனால் அண்டார்டிகா பகுதியில் மட்டும் இவைகளுக்கு அனுமதி இல்லைபழங்காலம் முதலே ஒரு துஷ்டப் பறவையாகவே ஆந்தை கருதப்படுவது அதன் துரதிருஷ்டம்யார்வீட்டு மீதாவது ஆந்தை அமர்ந்து கத்தினால்அந்த வீட்டில் மரணம் சம்பவிக்கும் என்ற நம்பிக்கை இன்றும் பரவலாக இருக்கிறதுஇதனால்தான் ஆந்தையின்  அலறல் ஒலிக்கு கூட பஞ்சாங்கத்தில் பலன் பார்க்கும் வழக்கும் இருந்து வருகிறதுஎத்தனை பெரியார் வந்தாலும் மாற்றமுடியாத மூடநம்பிக்கையாக உள்ளது.

“ ஸ்ட்ரிகிடே” (Strigidae) என்ற குடும்பத்தைச் சேர்ந்த ஆந்தைகளில் 200வகைகள் இருக்கின்றனஇதில் பெரிய ஆந்தைசின்ன ஆந்தைபுல் ஆந்தை,உமட்டன்சாவுக்  கருவி என 15 வகை இனங்கள் நமது இந்தியப் பிரஜைகள்ஒவ்வொரு வகை ஆந்தைகளும் தனிப்பட்ட ஒலிகளை ஒலிக்கும்அவைகள் யாவும் தன்னுடைய இணைக்கு மேற்படி விஷயத்திற்கு அழைக்கும் ஒலிதான்மரண அறிவிப்பு இல்லை!!

ஆந்தைகளிலியே கழுகு ஆந்தைகள் தான் மெகா சைஸ்Eurasian Eagle Owl (Bubo bubo) Blakiston's Fish Owl (Bubo blakistoniஇரண்டரை அடிக்கும் மேல் நீளம்இரக்கையை விரித்தால் 6.6 அடிக்கு மேல்எடையோ 4.5  கிலோ இருக்கும்.கழுகாந்தையார் தாக்கினால் குள்ளநரி சைஸ் விலங்குக்கூட இன்டென்சிவ் கேர்யூனிட்டில் அட்மிட் ஆக வேண்டியதுதான்மிகவும் சிறிய சைஸ் ஆந்தையும் இருக்கிறது.Elf Owl (Micrathene whitneyi)  ஒன்லி  30 கிராம் எடைதான்!
ஆந்தைகள் தங்களை அடையாளம் காட்ட,, குரங்குமூஞ்சிசிறுகுக் கொம்பு,நீளக்காது, ஷட்ரைப்டு சிறகுகள் என்று உறுப்புக்களை வைத்து  பல்வேறு பர்சனாலிடிகள் உண்டுபெரும்பாலனான ஆந்தைகள்  வட்ட முகம்அதில் முரட்டுச் சிறகுகளாலான இதய வடிவ விசித்திர அலங்காரம், கழுகு போன்ற மூக்கு,, “சந்திரமுகி ஜோதிகா” போன்ற பெரிய கண்களும் ஆந்தைகளுக்கு திகில் தோற்றத்தைத் தருகின்றன.
மங்கலான வெளிச்சத்திலும்இரவிலும் இருட்டிலும் ஆந்தைகள் பிரகாசமாக பார்க்கும்ஆனால் பைனாகுளர் பார்வைதான்பகலில் சூரியப் பிரகாசம் இதன்  கண்களை கூசச் செய்யும்அப்படியொரு இயற்கை செட்டப் இதற்குதூரத்தில் உள்ளவைகளை தெளிவாக பார்க்கும் ஆந்தைகள் மிகவும் அருகில் உள்ளவைகளை பார்க்க இயலாது.

பகல் முழுவதும் தன் கூட்டிலோமரக்கிளையிலோ உட்கார்ந்து பாதிக்கண்களை மூடியபடி அரைத்தூக்கத்தில் கழிக்கும்இரவு வந்து விட்டால் புத்துணர்ச்சி பெற்றுசீவி சிங்காரித்து தொழிலுக்குக் கிளம்பி  விடும்சகட்டு மேனிக்கு இரை தேடுவது தான் ஆந்தையின் முக்கிய தொழில்! சில வகை ஆந்தைகள் பகலிலும் வேட்டைக்கு கிளம்பிவிடும் Burrowing Owl (Speotyto cunicularia), Short-eared Owl (Asio flammeus). தன்னுடைய நாசர்” அலகால் கொத்திகத்திரிக்கோல் அசைவு போல் இரண்டு அலகுகளையும் அசைத்து ஸ்வாக செய்துவிடும் தன் இரையைஆந்தையால் விழுங்கப்படும் ஜீவராசிகளின் முடிசிறகுஎலும்பு,மண்டை ஓடு எதுவும் ஜீரணிக்கப்படுவதில்லைவயிற்றுக்குள்ளேயே சின்ன உருண்டைகளாக்கி நாசூக்காக வெளியே தள்ளி விடும்ஆந்தையின் வசிப்பிடத்தில் இந்த ஜட்டங்களைக் கொண்ட உருண்டைகளை நிறைய பார்க்கலாம்.
மற்ற பறவைகள் போல் தன் கூட்டைக் கூட கலைநயத்துடன் அமைக்க ஆந்தைகள் ஆர்வம் கொள்வதில்லைஅவ்வளவு சோம்பேறித்தனம்!  பாழடைந்த  மண்டபம்கோபுரம்இடிப்பட்ட வீடுகுகை,மனித நடமாட்டம் இல்லாத பகுதியில் மரங்களின் பொந்துகள் என அரைகுறை வீட்டை வசந்தமாளிகையாக நினைத்து வாழும்.

இவற்றின் மெனு கார்டில் தவளைவவ்வால்குருவிநத்தைபூச்சிகள் என பல ஐட்டங்கள் உண்டு.இதைவிட ஆந்தையின் ஆசை உணவுஅதன் நாக்கில் எச்சில் ஊறச் செய்யும் விருந்து எலிதான்இரண்டும் இரவுவாசி என்பதால் அப்படியொரு ஏழாம் பொருத்தம்ரொம்ப உயரத்திலிருந்தே  சின்ன சுண்டெலியின் நடமாட்டத்தைக் கூட ஆந்தையார் கண்காணித்து விடுவார்

ரோமம் போன்ற சிறகுள் மிருதுவாக இருப்பதால் சத்தம்மில்லாமல் பறந்து வந்து உணவின் மீதே லேண்டிங் ஆவார்மீன் பிடித்து சாப்பிடும் ஆந்தைகளும் உண்டுவெளிச்சத்தால் கவரப்படும் விதவிதமான பூச்சிகள்ஆந்தையின் டிபன்.இதற்காகவே லைட் கம்பத்தில் வெயிட் செய்து கண்ணில் படுகிற பூச்சிகளை எல்லாம் டேஸ்ட் பார்த்துவிடும்உட்கார்ந்த பொசிஷனிலேயே நாலா பக்கமும் தலையைத் திருப்பி நாட்டு நடப்புகளை கவனிப்பதில் கில்லாடி  “ ஜூனியர் விகடன்” ? 270 டிகிரி கோண இதன் தலையசைப்பை சில நிமிடம் பார்த்துகொண்டிருந்தால் ஹிப்னாடிசம் செய்தது போல நமக்கே தலை சுற்றும்.
ஆந்தைகள்  தம் காதல்களை பிறந்த மாதத்திலேயே ஆரம்பித்துவிடுகின்றன்பகலில் விழித்துவேலை பார்த்துக் களைக்கும் மனிதன் உட்பட எல்லா ஜீவன்களுக்கு இரவில் தாம்பத்தியக் கொண்டாட்டம் வழக்கம்.ஆனால்இரவில் பிசியாக இருக்கும் ஆந்தைகள்இனப்பெருக்கத்தை பகலில் வைத்துக் கொள்வதில்லைவேலையோடு வேலையாக இரவில்தான்ஆண் ஆந்தை உயரமான இடத்தில் அமர்ந்து கொண்டு எங்கோ இருக்கும் வித்தியாச கிறக்கத்தில் இந்த அழைப்பு இருப்பதால் காதலியும் புரிந்து கொள்வாள்ஏக்கத்தோடு பதில் கானம் புறப்படும்முடிவில் “ டூயட்” தான்.
இரண்டு நிமிட  டூயட்டுக்குப் பின் கதகதப்பாய் அருகருகே உரசியபடி அமர்ந்து கொண்டிருக்கும்இதில் காதல் நெருப்பு வேகமாகப் பற்றிக் கொள்ள,கூச்சத்துக்கும் குறைவிருக்காதுஅதே நேரம்கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல்,அலகால் செல்லாமாய் உடம்பு முழுவதும் முத்த மழை பொழியும்சட்டென்று சிறுகுகளை சிலுப்பி தோற்றத்தில் அழகைக் கூட்டும்சில அடி உயரம் எம்பி எம்பிப் பறந்தபடி பாட்டு பாடிக் கொண்டு பின் இணை சேரும்ஆந்தை தன் கூட்டில் மூன்று நாட்களுக்கு ஒரு முட்டை வீதம் ஏழு முட்டைகள் போடும்ஐந்து வாரங்களில் முட்டைகள் பொறித்து வெளிப்படும் குஞ்சுகள் வெவ்வேறு தினுசுகளில் இருக்கும்

ஒரு ஆந்தை ஜோடி நீண்ட காலம் ஆளை மாற்றாமல் இருப்பதால் குஞ்சுகளை மூன்று மாதங்கள் பாசமாமாக வளர்க்கும் என்கிறார் சென்னிமலை டாக்டர்.ஆர்.கோவிந்தராஜூ.

Tuesday, November 1, 2011

இறைவனின் பாடைப்புகள் இயற்கையின் எழிலில்



 

ஆண் குயில்
குயில் என்றதும் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது அதன் குரல்தான். ஆனால் அந்தக் குயிலுக்குள் ஒரு குள்ள நரித் தனம் ஒளிந்திருப்பது எவ்வளவு பேருக்குத் தெரியும் ?
மற்ற பறவைகளைப் போல குயிலுக்கு கூடு கட்டிக் குடும்பம் நடத்தத் தெரியாது. அது இனப் பெருக்கம் செய்ய வேண்டிய நாட்களில் பெரும்பாலும் ஒரு காகத்தின் கூட்டினைத் தேடிச் சென்று அக்கூட்டிலிருந்து ஆண் குயில் ஒரு முட்டையினைத் திருடிச் செல்லும். காகம் ஆண் பறவையினைத் துரத்திச் செல்லும் போது பெண் குயில் காகத்தின் கூட்டில் தன் முட்டையினை இட்டுவிடும்.
பெண் குயில்
சில சமயம் காகத்தின் கூடு கிடைக்காத போது சிறு பறவைகளின் கூடு கிடைத்தால் அதில் கூட முட்டை இட்டு விடும்.
சூதறியாத காகம் குயிலின் முட்டையயும் சேர்த்து அடைகாத்துப் பின் குஞ்சுகள் வெளி வந்ததும் குயிலின் குஞ்சுக்கும் சேர்த்து இரை கொடுக்கும். நன்கு வளர்ந்த குயிலின் குஞ்சு சில நாட்கள் வளர்ப்புத் தாய் தந்தைகளிடம் இருந்தே உணவு உண்ணும். அப்பொதெல்லாம் குயில் குஞ்சு காகத்தின் குஞ்சுபோலத்தன் கத்தும் கட்டைக் குரலில். கொஞ்சம் கொஞ்சமாக அதன் குரல் தேறி சில நாட்களில் குரலுக்கே இலக்கணமான குயிலின் குரலைப் பெற்று விடும்.
ஓன்று கவனித்திருக்கிறீர்களா? குயில் சாதாரணமாக அதிகாலையிலும் மாலையிலும் கூவும். அப்போது முதலில் ஒரு குயில் கூவும். அதைக் கேட்டு மற்றொரு குயில் சற்று தூரத்தில் இருந்து தன் குரல் எழுப்பும். இதைக் கேட்ட மூன்றாவது குயில் இன்னும் கொஞ்ச தூரத்திலிருந்து பாட ஆரம்பிக்கும். பின் முதல் குயில் மீண்டும் தன் குரலை எழுப்பும். இப்படியே பந்தயங்களில் - ரிலே ரேஸ் என்பார்களே - அதுபோல பல குயில்கள் சேர்ந்து தங்களது இசைக் கச்சேரியை நடத்தும்.
செவிலித் தாய் தந்தை காகமல்லாது வேறு ஏதாவது சிறு பறவையாக இருந்தால் குயில் குஞ்சு வளர வளர செவிலிகளின் உண்மைக் குழந்தைகள் நசுங்கியே இறந்துவிடும். சிலசமயம் உணவளிக்கும் சிறு பறவை குயில் குஞ்சின் மீதே வந்திறங்கி உணவளிக்கும்.
தாய் சிறிது சேய் பெரிது

குயில்களில் பல வகை உண்டு. குரல் கேட்டு நாம் மகிழும் குயில் ஒன்று. இது கொஞ்சும் குயில் என்றால் ற்றொரு குயிலின் பெயர் கெஞ்சும் குயில் (Plaintive cuckoo).
அக்கூ ... அக்கூ ...” என்று கூவும் இப்பறவையை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தன் அக்காவை நினைத்து அழுவதாக நம்பும் நம் மக்கள் இதனை அக்கூ பக்ஷி என்றழைப்பார்கள்.




அக்கூ பக்ஷி

கொண்டைக் குயில்


பைடு க்ரெஸ்டெட் குக்கூஎன்றொரு குயில் உண்டு. இது கருப்பு வெள்ளை நிறத்தில் இருக்கும். தலையில் கொண்டை போன்று சில சிறகுகள் இருக்கும் இப் பறவைக்கு.

மரங்கள் அடர்ந்த கிராமப் புறங்களில் வேறு ஒரு குயிலினைக் காணலாம். அதன் பெயர் என்ன தெரியுமா ?

(மூளைக் காய்ச்சல் பறவை )
அதன் பெயர் வேட்டையாடும் குயில் அல்லது மூளைக் காய்ச்சல் பறவை (Hawk cuckoo or the Brain fever bird). இதற்கு இப்பெயர் வரக் காரணம் இது எழுப்பும் ஒலிதான். இது கத்தும் போது, ப்ரெய்ன் ஃபீவர்.... ப்ரெய்ன் ஃபீவர்.... ப்ரெய்ன் ஃபீவர்.... என்பது போலக் கத்தும். அவ்வாறு கத்தும்போது இப்பறவை தன் ஒலி அளவு, ஸ்தாயி (volume and pitch) இரண்டையும் உயர்த்திக் கொண்டே போகும். பிறகு சட்டென்று நிறுத்தி விட்டு சில நிமிஷ இடைவெளிக்குப் பின் மறுபடி முதலிலிருந்து தொடங்கும்.
சாதாரணமாக ரோமம் அடர்ந்த ( Hairy caterpillars ) கம்பளிப் பூச்சியை பறவைகள் உண்ணாது. காரணம் உங்களுக்கே தெரியும். தப்பித் தவறி நம்மேல் பட்டு விட்டால் எப்படி அரிக்கும் உடல் பூராவும் ? ஆனால் இந்தப் பறவையோ கம்பளிப் பூச்சியயை சர்வ சுதந்திர மாக உண்ணும். (இதை நேரில் பார்த்து ஆச்சரியப்படும் சந்தர்ப்பம் எனக்கு ஒரு முறை கிட்டியது.)


குரல் இனிமை படைத்த இசை பாடும் குயில். இந்தக் குயிலில் தான் எத்தனை விந்தைகளை வைத்திருக்கிறான் இறைவன் !

(வண்ணப் படங்கள் கூகிள் மற்றும் விகிபீடியா இணய தளங்களிலிருந்து)
  
தூக்கணங்குருவி பற்றி எழுதிய போது அதன் துர் குணம் பற்றியும் சொல்லியிருந்தேன்ஆண் பறவை ஒரு கூடு கட்டி பின் ஒரு பெண் பறவை ஜோடி சேர்ந்தவுடன் மேலும் ஒன்று இரண்டு என பல கூடுகள் கட்டி ஜோடிகள் சேர்த்துக் கொள்ளும் என்று.
அதற்கு நேர் எதிர் ஆங்கிலத்தில் Sarus crane  என்று அழைக்கப் படும் கிரௌன்ச பக்ஷி.
கொக்கு இனத்திலேயே மிக உயரமானது கிரௌன்ச பக்ஷிஇந்தப் பறவையை தென் இந்தியாவில் காண முடியாதுவட இந்தியாவில் ஹரியானா, டில்லி, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வயல் வெளிகளிலும் தரிசு நிலங்களிலும் இப் பறவைகளைக் காண முடியும்.
வால்மீகி ராமாயணம் பிறக்கக் காரண கர்த்தா என நமது புராண இதிகாசங்களிலும் சமிஸ்கிருத கவிதைகளிலும் இடம் பெற்றுள்ள                  இப்பறவையின் ஓர் அபூர்வ குணம், ஒரு முறை ஜோடி சேர்ந்த பறவைகள் ஆயுள் பூராவும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாதுஒரு பறவை இறந்து விட்டால் மற்றொன்று பிரிவாற்றாமையில் துணை பிரிந்த இடத்திலேயே சில நாட்கள் சுற்றிச் சுற்றி வந்து உணவு கூட உட்கொள்ளாமல் தன் உயிரை விட்டு விடும்கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உச்ச கட்ட உதாரணம் இப்பறவை.
கிரௌன்ச பக்ஷி கூடு அமைத்து முட்டை இட்டு குஞ்சு பொரித்து குஞ்சுகளை வளர்ப்பது ஜூலை மாதம் முதல் டிசம்பர் வரையில் ஆன நாட்களில்இது தன் கூட்டினை நீர் தங்கிய நெல் வயல்களின் நடுவே அமைக்கும்கூடு சுமார் மூன்றடி விட்டத்தில் வைக்கோல், நாணல் இவற்றால் அமைக்கப் பட்டு இருக்கும்இப்பறவை இடும் இரண்டு முட்டையினை அடை காப்பது அனேகமாக பெண் பறவைதான்குஞ்சுகள் வெளியே வந்தவுடன் அவற்றுக்கு உணவு அளிப்பது இரு பறவைகளுமே.
கிரௌன்ச பக்ஷி பறக்க ஆரம்பிப்பதோ, பறப்பதோ பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும்போர் விமானங்கள் சுமார் முன்னூறு அடி நீளமுள்ள விமானம் தாங்கிக் கப்பல்களிலிருந்து ஆகாயத்தில் எழும்பும்போது, ஜம்போ ஜெட் விமானங்கள் சில கிலோ மீட்டர் தூரம் தரையில் ஓடிப் பின்னரே ஆகாயத்தில் எழும்புகிறதல்லவா ?  அதுபோலத்தான் கனமான இந்தக் கிரௌன்ச பக்ஷிகளும் இறககைகளை அடித்துக்கொண்டு பல அடி தூரம் தரையில் ஓடிப் பின்னரே ஆகாயத்தில் எழும்பும்அதன் பின்னரும் அதிக உயரத்தில் பறக்காது.
பல மாநிலங்களில் மக்கள் இப்பறவைகளைக் கொல்வதில்லை என்பதால் மனிதர்களைக் கண்டு இவை பயந்து ஓடுவதில்லை. நிலங்களில் வேலை ஆட்கள் வேலை செய்துகொண்டிருக்கும் போது அவர்களருகிலேயே பயமின்றி இவை இரை தேடிக் கொண்டு இருக்கும்.                                       

வெவ்வேறு திசையில் நோக்கினாலும் என்றுமே நாங்கள் இருவர்தான் ஜோடி

இறைவன் படைத்த இயற்கையில் தான் எத்தனை வினோதங்கள் எத்தனை காட்சிகள் !!!
                                          
                        (வண்ணப் படங்கள் கூகிள் இணய தளத்தில் இருந்து)

 

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்: தூக்கணாங் குருவி
            
    மேலே:  தூக்கணாங் குருவி – பெண் பறவை 
கீழே: தூக்கணாங் குருவி - ஆண் பறவை
பறவைகளில் தையல்காரர் இருந்தால் அவர் தைப்பதற்குத் துணி வேண்டாமா? துணி என்றால் அதை நெய்வதற்கு நெசவாளர் ஒருவர் வேண்டுமே. அவர்தான் ஆங்கிலத்தில் Weaver Bird என்று அழைக்கப்படும் தூக்கணாங் குருவி. இந்தக் குருவி ஏன் வீவர் பேர்ட் என்று அழைக்கப் படுகிறது தெரியுமா? இது தன் கூட்டை நெற்பயிரின் இலைகளை நார் நாராகக் கீழித்து எடுத்துக் கொண்டு வந்து பின்னித் தயார் செய்யும். கிராமப் புறங்களிலும் இருப்புப் பாதை அருகிலும் உள்ள நீர் நிலைகளுக்கு மேலாக உள்ள கிளைகளிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் இக்கூடுகள்.
ஆரம்பத்தில் சுண்டு விரல் பருமனில் இருக்கும் இக்கூடுகள் நடுவில் ஒரு பந்து போன்று விரிந்து பின் அதன் ஒரு பக்கத்திலிருந்து ஒரு குழாயாக மாறும். கீழ் நோக்கி இருக்கும் இக்குழாய்தான் கூட்டிற்குள் செல்லும் வழி.
கூட்டினைப் பின்னுவது ஆண் பறவை. பின்னி முடியும் தருவாயில் ஆண் பறவை கூட்டின் மீது அமர்ந்து இறக்கைகளை வேகமாக அடித்தபடி “கிச் கிச் கிச் கிச்......சீ..........”. என தன் குரலை எழுப்பும். துணை தேடி. ஒரு பெண் பறவை கூட்டைப் பார்த்து ஒப்புதல் அளித்து, பின் கூட்டின் உட்புறத்தை பஞ்சு, மெல்லிய காய்ந்த வேர், சருகு இவற்றைக் கொண்டு, முட்டையிட்டு குஞ்சு பொரிக்க லாயக்காக இடம் தயார் செய்யும். மனைவி கிடைத்த ஆண் பறவை பக்கத்திலேயே மேலும் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ என்று கூடுகளைத் தயார் செய்து மேலும் மேலும் துணைகளைத் தேடிக்கொள்ளும்! பொல்லாத பறவை!
(பாதி கட்டப் பட்ட கூண்டினைப் பார்வையிடுகிறது பெண் பறவை. ஓலையில் உட்கார்ந்திருப்பது ஆண் பறவை.)
தூக்கணாங் குருவிகளில் திருடர்களும் உண்டு. ஒரு குருவி கஷ்டப் பட்டு நார் கிழித்துக்கொண்டு வந்து கூட்டினைப் பின்னும்போது மற்றொரு குருவி கடைசியாகப் பின்னப்பட்ட நாரினைத் திருடிச் சென்று தனது கூட்டைப் பின்னும். (இதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.)
உருவத்திலும் பருமனிலும் சிட்டுக் குருவி போன்று இருக்கும் இப்பறவை உண்பதிலும் சிட்டுக் குருவி போன்றே தானியங்களைத் தின்னும். நெற் கதிர்கள் முற்றி இருக்கும் தருவாயில் கூட்டம் கூட்டமாக வந்து அவற்றைத் தின்று நஷ்டம் விளைவிக்கும்.
தூக்கணாங் குருவிக்கு முக்கிய எதிரி பாம்பு. மரத்தின் வழியே வந்து கூட்டிற்குள் சென்று குஞ்சுகளைத் தின்றுவிடும். சில சமயம் பளு தாங்க முடியாமல்கூடும் குஞ்சுகளும் பாம்புமாகத் தண்ணீரில் விழுந்து பாம்பு குஞ்சுகளைத் தின்று விழுங்கியபின் கரை ஏறிவிடும். அதனால் தானோ என்னவோ ஒரே சமயத்தில் பல குடும்பங்களைத் தயார் செய்கிறது இப்பறவை.

தூக்கணங் குருவிக்கு மற்றொரு பெயர் பாயாஎன்பது. ஒருக்கால் ஹிந்தி பெயரோ என்னவோ!
தூக்கணாங் குருவிக்கு நேர் எதிர் Sarus Crane என்று ஆங்கிலத்தில் அழைக்கப் படும் நாரை இனத்தைச் சேர்ந்த கிரவுன்ச பக்ஷி. இப்பறவை பற்றிப் பின்னர்பார்ப்போம்.
இறைவன் படைத்துள்ள இயற்கையில் தான் எத்தனை எத்தனை விநோதங்கள்!
                                                                      - நடராஜன் கல்பட்டு
                    (வண்ணப் படங்கள் மட்டும் விகிபீடியா இணய தளத்திலிருந்து)

  1. வண்ணாத்திக் குருவி
ஆங்கிலத்தில் 'Magpie Robin' என்றழைக்கப் படும் குருவியின் தமிழ்ப் பெயர் தான் வண்ணாத்திக் குருவி.  வண்ணாத்திக்கும் இந்தக் குருவிக்கும் என்ன சம்பந்தம்வண்ணாத்தியிடம் வெளுத்து இஸ்திரி செய்து வாங்கிய வெள்ளை கருப்பு உடையினை தரித்துள்ளார்ப் போன்ற நிறம் உடையதால் தான் இக்குருவிக்கு இப்பெயரோஅல்லது வண்ணத்துக் குருவி என்ற பெயர் நாளடைவில் வண்ணாத்திக் குருவி ஆயிற்றோ?
           
வண்ணாத்திக் குருவி நாம் வாழும் இடங்களில் காணப் படும் ஒரு பறவை. பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை இதைக் காண முடியும்.  மற்ற மாதங்களில் இது மரங்கள் அடர்ந்த இடங்களுக்குச் சென்றுவிடும்.  பிப்ரவரி மாதம் ப்ரகாசமான கருப்பு வெள்ளை உடை தரித்த ஆண் பறவை திடீரெனத் தோன்றி இலை உதிர்ந்த மரங்களின் உச்சாணிக்கிளைகளிலோ அல்லது மின் கம்பங்களிலோ அமர்ந்து தனது இசைப் பயிற்சியை ஆரம்பிக்கும்.  முதலில் ஸ்ருதி சுத்தமற்று நாராசமாகக் கிளம்பும் ஸ்வரங்கள் போகப் போக காதுக்கினிய கீதங்களாக மாறும்.  ஸ்ருதி சுத்தமான கீதம் கிளம்பிய சில நாட்களுக்குள் இசையில் மயங்கிய ராதையும் தோன்றுவாள்.  ராதை வேறு யாரும் இல்லை.  சற்றே பழுப்பேறிய கருப்பு வெள்ளை உடை அணிந்த பெண் வண்ணாத்திக் குருவி   தான்.  இரு குருவிகளும் ஒன்றை ஒன்று துரத்திப் பிடித்து விளையாடும். 
   
                                       ( என் குரல் புடிச்சிருக்கா ? )
இருவர் சந்தோஷமாக இருந்தால் வில்லனுக்குப் பிடிக்காது அல்லவாஎங்கிருந்தோ மற்றொரு ஆண் பறவை இவர்கள் விளையாட்டில் குறுக்கிடும்.  இரு ஆண்களுக்கு இடையே சண்டை நடக்கும்.  வில்லன் தோற்று ஓட இரு பறவைகளும் தங்களது குடும்ப வேலையைக் கவனிக்க ஆரம்பிக்கும், அதாவது வீடு, இல்லை இல்லை, கூடு கட்ட ஆரம்பிக்கும்.
வில்லன் மற்றொரு வண்ணாத்திக் குருவியாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை.  நீங்களாகக் கூட இருக்கலாம்.  ஆண் குருவி இசை மழை எழுப்பிக்கொண்டு இருக்கும் பொது நீங்கள் அதைப் போலவே சீட்டி அடித்துப் பாருங்கள்.  அது உங்களையும் தாக்கும்

ாம் எழுப்பிய இசை அதன் காதுகளுக்கு நாராசமாக இருந்ததாலா அல்லது நம்மையும் ஒரு வில்லனாக நினைத்துவிட்டதாலா என்பது அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும். சொந்த அனுபவத்தில்
தான் இதைச்சொல்கிறேன்.
வண்ணாத்திக் குருவி தன் கூட்டினை மரப் பொந்துகளிலோ அல்லது வீட்டுச் சுவற்றில் உள்ள பொந்துகளிலோ அமைக்கும்.  கூடு காய்ந்த வேர்கள்,புல் மற்றும் மயிர்களால் ஆன ஒரு தட்டை மேடை (pad) ஆகும்.  செம்புள்ளிகள் கொண்ட வெளிர் நீல நிறத்திலான மூன்று முதல் ஆறு வரையிலான முட்டைகளை இப்பறவை இடும்.  குஞ்சுகள் வெளிவந்தபின் தாய் தந்தை இரு பறவைகளுமே புழு பூச்சிகளைக் கொண்டுவந்து அவற்றுக்கு அளிக்கும்.
வண்ணாத்திக் குருவியை 1965 ல் படம் பிடித்தபோது ஏற்பட்ட ஒரு சுவையான அனுபவம் இதோ.
பங்களூரில் விதான சௌதா அருகே ஜன நடமாட்டம் நிறைந்த தெரு ஒன்றில் ஒரு மரப் பொந்தில் வண்ணாத்திக் குருவி ஒன்றின் கூட்டினைக் கண்டு  நானும் எனது இரண்டு சகாக்களுமாக படம் பிடிக்க  ஆரம்பித்தோம்.  அலுவகங்களுக்கு நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் எங்களைக் கன்னடத்தில், "என்னங்க, என்ன செஞ்சிகிட்டு இருக்கீங்க?" என்று கேட்டனர்.  நாங்களும் பொறுமையாக பதில் அளித்து வந்தோம்.  மூன்றாவது நாள் ஒருவர் அதே கேள்வியைக் கேட்க மற்றொருவர், "விடுப்பா.  அவங்க பயித்தியம்னு நினைக்கிறேன்.  அந்த மரப் பொந்தயே நாள் பூரா பாத்துகிட்டு நிக்கறாங்க" என்றாரே பார்க்க வேண்டும்!
வண்ணாத்திக் குருவியைக் கண்டால் கவனமாகப் பாருங்கள்.  அதன் ஆடை அழகிலும், குரலிலும் நீங்களும் மயங்கிப் போய் இவற்றை அளித்த ஆண்டவனைக் கட்டாயம் காண்பீர்கள்.
                                                                                 நடராஜன் கல்பட்டு

தையல்காரக்குருவி

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்:
2   தையல்காரக்குருவி
தையல்காரக்குருவி (Orthotomus sutorious) ஆண் பறவை (http://en.wikipedia.org/wiki/Image:Orthotomus_sutorius.jpg)
மனிதர்களில்மட்டும் தானா தையல்காரர்கள்பறவைகளில் இல்லையாஏன் இல்லை.  ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உங்கள் தோட்டத்தில் "கிவீ...கிவீ..." என்று கணீரென  ஒரு குருவியின் குரல் கேட்கிறதாசற்று கூர்ந்து கவனியுங்கள்.  பறவையின தையல்காரரை உங்களால் பார்க்க முடியும்.  அதுதான் 'Tailor bird' என்று ஆங்கிலத்தில் அழைக்கப் படும் தையல்காரக்   குருவி. 
குடும்பம் பெருக்கும் காலத்தில் ஆண் தையல்காரக் குருவியின் வால் இறகுகளில் நடு இரண்டு இறகுகள் நீண்டு வளரும், கிட்டத் தட்ட இரு மடங்காக.  (வண்ணப் படத்தில் உள்ள ஆண் குருவியின் வால் இறகுகளைப் பாருங்கள்)
இந்தக் குருவி தன் கூட்டினை எப்படி அமைக்கும் தெரியுமா?
சற்றே அகலமான இலயினைத் தேர்ந்தெடுத்து அதனை பறந்து கொண்டிருக்கும் போதே வளைத்துப் பிடித்துக் கொண்டு சிலந்தி வலையினைக் கொண்டு சுற்றி ஒட்டும்.  பின் அவ்வாறு தயார் செய்த ஃபனல் போன்ற குழாய் உள்ளே பஞ்சினைக் கொண்டு வந்து வைக்கும்.  தனது கூறிய அலகினைக் கொண்டு இலயின் விளிபில் சிறு துவாரங்கள் செய்து அத்துவாரங்களின் வழியே பஞ்சினை வெளியே இழுத்து அதை பின் தட்டையாக்கும்.  இவ்வாறு செய்வதால் 'ரிவெட்' அடித்தாற் போல கூடு தயார் ஆகிவிடும்.  ஃபனலின் அடிப் பாகத்தில் பஞ்சினாலும்காய்ந்த மெல்லிய வேர்கள் நுனிப்புல் இவற்றாலும் குழிவாக மெத்தை  தயார் செய்யும். (குருவிக்கு பஞ்சு எங்கிருந்து கிடைக்கும் என்று யோசிக்கிரீர்களாகுப்பை மேட்டிலிருந்துதான்) 
இவ்வாறு தயார் செய்த மெத்தையில் 2 முதல் 6 வரை வெளிர் நீலக்கலரிலான முட்டைகளை இடும். தாய் தந்தை இரண்டுமே மாறி மாறி அடை காப்பதிலும் பின்னர் குஞ்சுகள் வெளிவந்தவுடன் அவற்றுக்கு உணவு அளிப்பதிலும் ஈடு படும்.
 
(குஞ்சுகளுக்கு ஆகாரம் இதோ அலகின் நுனியில்)
தையல்காரக் குருவிகள் பறக்கும் போது வலுவு அற்றவைகக் காணப்படும். ஆனால் குரல் எழுப்பும்போதோ வலுவு எங்கிருந்து வருமோ, அதனைப் படைத்த ஆண்டவனுக்குத்தான் தெரியும் அந்த ரகசியம்.
தையல்காரக் குருவிகள் தூங்கும் போது பார்பதற்கு வெகு அழகாக இருக்கும்.  இரு பறவைகளும் அருகருகே ஒரு கிளையில் உட்கார்ந்து கொண்டு உடலில் உள்ள அத்தனை இறகுகளையும் வெளித் தள்ளிக் கொண்டு (puffing up the feathers) ஒரு பூப்பந்துபோல செய்துகொண்டு தூங்கும்.  இது எதற்காக என்று தெரியுமா? குளிரின் தாக்கத்திலிருந்து தப்பிக்கத் தான்.
(எங்களுக்குத் தூக்கமா வருது)
நாம் தூங்க ஆரம்பிக்கும் போது நம் கைகளிலே ஏதாவது ஒரு பொருளை வைத்துக் கொண்டு இருந்தால் சற்று நேரத்திற்கெல்லாம் நமது கை தானாக விரிந்து கொண்டு கையில் உள்ள பொருள் கீழே விழுந்துவிடும்.  சிறு குழந்தைகள் தூங்கச் செல்லும் போது மிகவும் பிடித்த பொருளை கையில் வைத்துக் கொண்டிருக்கும்.  ஆனால் தூக்கம் வந்த சற்று  நேரத்திற்கெல்லாம் அப்பொருள் கையிலிருந்து விடுபட்டு படுக்கையில் விழுந்துவிடும். இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் பறவைகள் தூங்கும் போதோ அவற்றின் விரல்கள் இறுகிக் கொண்டே போகும்.  அதனால் அவை ஒரு போதும் கீழே விழாது. 
இயற்கையில் இறைவன் காட்டும் விந்தைகள் தான் எத்தனை!

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites