இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Thursday, July 5, 2012

பணத்தால் வந்த பிரிவோ? பண்பை மறந்த உறவோ?


ஆதி மனிதன் தொட்டு
அண்மைக்காலம்வரை
அன்பெனும் பிணைப்பால்
பின்னிப்பிணைந்து
வாழ்ந்;த நம் உறவுகள்
ஏன்தான் இன்று இப்படி? ஓலை வீட்டிலும்
ஒட்டிய வயிற்றுடனும் வாழ்தபோது
ஒற்றுமையாய் வாழ்ந்த நம் உறவுகள்
காசைப்பார்த்ததும் மாறியதோ?
கடல் தாண்டி வந்தபின் மாறியதோ?
கருணை மனம் எங்கு ஓடியதோ?
தன்வயிற்றை ஒட்டவைத்து
தன்னுள்  கருவாக்கி
உன்னை ஊர் போற்ற உருவாக்கிய
அன்னைக்கு உதவாமல்?
உலகத்தில் நீ எங்கு வாழ்ந்;தாலும்
உன்னால் யாருக்கென்ன நன்மை?
கண்ணை மறைத்ததோ
காசு வந்து உன்னை?
பின்னால் ஒருகாலம்
உன்னிலை உணரும்போது
மண்ணில் இருக்காளே அன்னை?
அப்போது நீ எண்ணித் தவித்தென்ன நன்மை?

Sunday, March 25, 2012

அம்மா............................


எழுத வார்த்தைகள் இல்லாமல்
தொடங்குகி...றேன்...!!
பருவம் வரை பக்குவமாய்
வளர்த்து விட்டாயே
ஊர் சண்டை இழுத்து வந்தாலும்
உத்தமன் என் பிள்ளை என்று
விட்டு கொடுக்காமல் பேசுவாயே
அம்மா..!!

நீ சொன்ன வேலைகளை விளையாட்டாய்
தட்டி சென்ற நாட்கள்..!!
செல்லம், தங்கம், "மள்ளிகை கடைக்கு "
போய்வாட என நீ சொல்ல
இந்த வயதில் கடைக்கு போவதா?..
என நான் சொன்னேன்..!!

இன்றோ..
இங்கே கண்ணுக்கு தெரியாத
யாரோ ஒருவருக்காக ஓயாமல்
வேலை செய்கிறேன் அம்மா..!!
நெற்றி வியர்வை சிந்த பரிமாறும்
உந்தன் கை பக்குவ உணவு
நான் அறிந்த அமுதத்தின் அசல்தான்.
இருந்தும் தவறவிட்ட பல நாட்கள்..!!
கண்ணு "பத்து நிமிஷம்" பொறுத்துக்கோடா
சூடா சாப்பிட்டுட்டு போய்டுவ என நீ சொல்ல
பத்து நிமிஷமா..!, நான் வெளியல
சாப்பிட்டு கொள்கிறேன் என நான் சொல்லி
கிளம்பிய தருணங்கள்..!!

இன்றோ..
இங்கே உப்பு.,சப்பில்லா சாப்பாடு
சாப்பிடும் போதே கண்கள் களங்க
இன்று காரம் கொஞ்சம் அதிகம்
போய்விட்டது என கடைக்காரர்
சொல்ல..!!
எனக்கு மட்டும் தெரிந்த
உண்மை..!!
பாசமுடன் நீ அளித்த உந்தன்
ஒற்றை பிடி சோற்றுக்காக இப்போது
ஏங்குகிறேன் அம்மா..!!

அன்றைய பொழுதில் சுற்றி திரிந்த நாட்கள்
வரண்ட தலை முடியில் வலுக்கட்டாயமாய்
தடவி விடும் எண்ணெய் துளிகள்
வேண்டா வெறுப்பாய் நிற்கும்
நான்..!!

இன்றும்
என் தலை முடி சகாராதான் அம்மா
உந்தன் கை ஒற்றை எண்ணெய்
துளிக்காக ஏங்கி நிற்கிறது..!!
ஆசையால்..

மழையில் நனைந்து வர
முனுமுனுத்தபடி துடைப்பாய்
உந்தன் முந்தானையில்
இப்போது நனைகிறேன்
ஆசையால் அல்ல, ஏக்கத்தால்..,

அத்தி பூக்கும் தருணமாய்..!
என்றாவது ஒருநாள் என்னை
திட்டும் நீ..! அந்த நொடியில்
எதிர்த்து பேசினேனே அம்மா..!!
இன்றோ..
இங்கே உயர் அதிகாரி திட்ட
சுரணை இல்லாத கல்லாய் நிற்கிறேனே
அம்மா..!!

என்னை மன்னித்துவிடேன் அம்மா..!!
உனக்காக, தேடி திரிந்து பார்த்து,
பார்த்து வாங்கிய புடைவையை பற்றி
சொல்வதற்கு முன் உன் வார்த்தைகள்
வருமே..! கண்ணு உனக்காக
ஒரு சட்டை வாங்கிருக்கேன் வரும்போது
எடுத்துகிட்டு போடா என்று..!!

எப்படி அம்மா சொல்வேன் எந்தன்
அன்பையும் , எண்ணத்தையும்
என் ஏக்கங்களை சொல்ல துடிக்க...
கைபேசியை எடுத்து , அம்மா....என்று
சொல்லும் நொடிகனத்தில் மாறுகின்றது
எந்தன் வார்த்தைகள்., நான் இங்கு
நலமாய் இருக்கேன்..!நீ எப்படியம்மா
இருக்க..!!!

என் அன்னை ஆயிற்றே...
எந்தன் ஒற்றை வார்த்தையில்
புரிந்து கொள்வாய் எந்தன்
மனதை..!!
நான் சொல்ல மறந்த வார்த்தைகளை
பக்குவமாய் பட்டியளிடுவாய்..,
"வேளைக்கு ஒழுங்கா சாப்டு கண்ணு "
"மறக்காம எண்ண தேச்சி குளிடா"
"ரோட்ல பத்திரமா பாத்து போடா"
" உடம்ப பாத்துக்கோடா தங்கம் "
என் கண்கள் கட்டுபடுத்திக் கொண்டாலும்
என் இதையம் மட்டும் கதறி அழுகிறதே
அம்மா..!!

உன்னை என்னிடம் இருந்து பிரித்த
இந்த வாழ்க்கையை திட்டுவதா..?
இல்லை..
உந்தன் மேல் நான் வைத்திருக்கும்
பாசத்தை காட்டியதற்கு நன்றி சொல்வதா.?
தெரியவில்லையே அம்மா..!!
உனக்காக உயிரற்ற பொருட்களால்
அன்பு சின்னம் அமைத்து என்ன
பயன்..!!
உதிரம் என்னும் பசை தடவி
எலும்பு என்னும் கற்கள் அடுக்கி
உன் அன்பின் சின்னமாய் இருப்பேன்

உன்னோடு

உன்  தோளோடு
என்  தலைசரித்து
சின்ன கதைகள் பேசியபடி
நீ  ரசித்த எல்லாவற்றையும்
உன்னோடு   நான் ரசிக்கவேண்டும்

உன் காதலால்
உன் நினைவுகளால்
மட்டுமே
என் கவிதைப் பக்கங்கள்
நிரப்பி வழியவேண்டும்

என் ஒவ்வொரு ஜென்மங்களிலும்
என் காதலாய்
என் இதய துடிப்பாய்
நீ வர வேண்டும்

என் நெற்றி வகிட்டில்
நீ ஆசையாய் தரும்
முத்தங்களின் சப்தங்கள்
மட்டும்
என் சொப்பனங்களிலும்
கேட்க வேண்டும்

உன்
இதய துடிப்பின்
 சப்தத்தில்
என் சப்தநாடிகளும்
சர்வமாய் அடங்க வேண்டும்

என் உதடுகள் உறைய
இமைகள் தட்டாமல்
உன் கண்களோடு
ஆசையாய்
நான் பேச வேண்டும்

உனக்குள்
உன் கண்களுக்குள்
நீ ஆசையாய்  சொல்லும்
பொண்டாட்டி
என்ற அழைப்பில்
என் ஆயுள் முழுதும்
நான் தொலைய வேண்டும்

Monday, February 20, 2012

ஒரு கருவின் மௌன அழைப்பு

ஹலோ! அம்மா...
அஸ்ஸலாமு அலைக்கும்...
நான் சொர்க்கத்திலிருந்து பேசுகிறேம்மா
எப்படி இருக்கீங்கமா?
இங்கே சொர்க்கத்தில்
பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன;
காட்சிகள் வண்ணமயமாக ஜொலிக்கின்றன;
பாலாறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன;
வசந்த காற்று வீசிக்கொண்டிருக்கிறது;
குருவிகள் இசைக்கின்றன,
குயில்கள் பாடுகின்றன,
மயில்கள் ஆடுகின்றன,
மான்கள் துள்ளி ஓடுகின்றன;
இங்கு எப்போதுமே இறைவனின் புகழ்ச்சிதான்,
நான் இங்கு வானத்தில் நடக்கிறேன்
தேவதைகளுடன் விளையாடுகிறேன்
நான் இங்கு சந்தோஷமாக இருக்கிறேன்.
இருந்தாலும்
உங்கள் நினைவு என்னை வாட்டுகிறது.
ஹலோ, ஹலோ, அம்மா
சொல்லுங்க! அப்பா எப்படி இருக்கிறாங்க?

வீட்டில் எல்லோரும் சௌக்யமா?
சொல்லுங்கமா...!
பூமி, வானம், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள்,
உலகம் எப்படியிருக்கிறதுமா?
தூக்கம், விழிப்பு, சிரிப்பு, அழுகை இதெல்லாம் எப்படியிருக்கு?
சொல்லுங்கம்மா!
அண்ணனுடைய கண்களைக் கத்தியால் குத்துவாயா?
அக்காவுடைய தலையைக் கல்லாலே நசுக்குவாயா?
உன்னுடைய உயிரை
உன்னுடைய கைகளாலேயே அழிப்பாயாமா?
இப்படிச் செய்ய மாட்டீங்க இல்ல?
என்கிட்டே மட்டும் ஏன்மா இப்படி நடந்துகிட்டீங்க?
சொல்லுங்கம்மா
நான் வாழ்வதற்குரிய உணவை
என் விதியிலிருந்து
நான்தாமா கொண்டுவரேன்
உங்ககிட்டயிருந்து நான் பங்கு கேட்டேனா?
எந்த இறைவன் உங்களுக்கும் எல்லாருக்கும்
உணவு வழங்கினானோ
அவன்தான் எனக்கும் வழங்கினான்.
நான் உலகத்தில் சில நாட்கள் வாழ்ந்திருந்தால்
எந்த சோதனை உங்களுக்கு வந்திருக்கும்?
அப்பாவுடைய மார்பில் புரண்டிருப்பேன்!

அண்ணனுடைய விரல்களைப்பிடித்து நடந்திருப்பேன்!
அக்காவுடன் சிரித்துப்பேசி விளையாடியிருப்பேன்!
உங்களிடம் கதை கேட்டுக்கொண்டே
உங்கள் மடியில் தூங்கிப்போயிருப்பேன்!
ஆனால்... ஆனால்...
நீங்கள், நான் வாழும் உரிமையைப் பறித்துவிட்டீர்கள்
உங்களுடைய வயிற்றிலேயே என்னை எப்படி
நீங்கள் கொலை செய்யலாம்?
கத்தியும், கத்திரிக்கோலும் என்னுடைய
உடலைக் கீறிச் சிதைத்தன
என்னை நீங்கள் துண்டு துண்டாக்கி விட்டீர்கள்
என்னை யார் குளிப்பாட்டினார்கள்?
குப்பைத்தொட்டியில் அல்லவா வீசிவிட்டார்கள்!
ஹும்... ஹும்...!
அன்பு அன்னையே! பாசத் தாயே!
இதை மட்டும் சொல்லுங்கள்!
உலகம் கூறியதா இங்கு மனிதர்கள் போதுமென்று!
பூனை, நாய்கூட இப்படிச் செய்யறத
நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா?

ஹலோ மா,
நான் சொர்க்கத்திலே சந்தோஷமா இருக்கேன்
ஆனால், இருந்தும்...
அடிக்கடி உங்களை நினைத்துக்கொள்கிறேன்.
இதை மட்டும் சொல்லுங்கமா!
என்னுடைய நினைவு உங்களுக்கு வந்து காயப்படுத்துகிறதா?
எப்போதாவது எனக்கு நீங்கள் பேர் வைச்சிருந்தீங்களா?
என் நினைவு உங்களுக்கு வந்தால்
ஒருநாள் நீங்கள் வந்து என்னைச் சந்திக்கணும்
இந்தச் சொர்க்கத்திற்கு வந்திருணும்.
ஆனால்... ஆனால்...!
என்னுடைய இறைவன், என்னுடைய அதிபதி
அப்போது உங்ககிட்ட கேட்பான்
“என்ன காரணத்தினால் உன் மகளைக்
கருவிலேயே கொலை செய்தாய்?” என்று.
சொல்லுங்கமா,
அப்பொழுது என்ன சொல்வீங்க
படைப்பாளனும், ஆட்சியாளனும் ஆகிய அல்லாஹ்விடம்?
யோசிங்கமா, கொஞ்சமாவது யோசிங்க...!
சீக்கிரமா யோசிங்க!
ஆனா... ஆனா... என்னைச் சந்திக்க
சொர்க்கத்துக்கு ‘எப்படி’மா வருவீங்க?
ஹலோமா, ஹலோ, ஹலோமா, ஹலோ...
ஹலோ...... அம்மா...... அம்ம்மா

Thursday, February 16, 2012

காதல் பறவைகள்


 




ஒன்றை ஒன்று பாராவிட்டால்
உயிர் கூடு துறந்து
போகுமாம்
அன்றில் பறவையின்
உயிர் பறவை..
அன்பே...
ஒவ்வொரு முறை உன்னை பார்க்க வரும் போதெல்லாம்..
ஒரு கவிதையோடு வருவேன்..
உன் கையில் கொடுத்துவிட்டு
உன் முகத்தின் மாற்றங்களை
மௌனமாக ரசிப்பேன்..
எப்போதும் என்னை ஏமாற்றா நீ
எனக்கு மட்டும் காணக் கிடைக்கும்
உன் கன்னத்து சிவப்பை அப்போதும் 
அள்ளித் தருவாய்..
தினம் என்னை பார்க்கிறாய்..
மணிக்கணக்கில் பேசுகிறாய்..
ஆனாலும் உன் கவிதைகள்
தினம் தினம் புதிதாகவே இருக்கிறதே
எப்படி? என்று பொய் சந்தேகப் பார்வை பார்ப்பாய்..
நான் புன்னகைத்தபடியே
உன் இரு விழி நதிகளில்
என் விழி ஓடையைக் கலக்க விடுவேன்..
தினம் கொடுக்கும் ஒரே விளக்கத்தை
வெவ்வேறு உவமைகளில் நான்
சொன்னாலும் அன்றுதான்
கேட்பது போல
வெட்கத்தை மட்டும் 
பரிசாகத் தருவாய்..
இன்றும் ஒரு விளக்கம்...
வழக்கம் போலே
எனக்கு உன் வெட்கம்...
நாளைக்கு...
புது உவமை..
அதே விளக்கம்
ஆனால்
என்றும் புதிதாய்
தெரியும்
உன் 
வெட்கம்

Sunday, February 12, 2012

இரயிலில் செல்லும் போது......









இரயிலில் செல்லும் போது
என்னை உன்னால் எதுவுமே
செய்ய முடியாதே என என்னிடம்
பழிப்பு காட்டுகின்றாயாடி...??இப்படியெல்லாம் தேவை
இல்லாமல் என்னை
சீண்டிவிட்டு....
அப்புறம் என்னைக்
குற்றப்படுத்தாதே...


நீ என்னவோ
நல்ல பிள்ளைபோல்
கைகட்டி என் அருகில்
அமர்ந்து இருக்கிறாய்..
ஆனால் யாருக்குமே தெரியாமல்
உன் விரல்கள் போடும்
கும்மாளம் யாருக்கடா
தெரியும்
என்னைத்தவிர..??!!


உங்களுக்கு எல்லாம்
கோலம் போடவே வராது
என எத்தனை முறை
கேலிசெய்திருக்கிறாய்...
ம்ம்ம்... கொஞ்சம்
பக்கம் வந்து உட்காரேன் செல்லம்...
என் விரல்கள் போடும்
கோலம் காட்டுகிறேனடி...


இரவினில் நன்றாக தூங்கியபடியே
பயணம் செய்யலாம் என்று
சொல்லி என்னை ரயிலில் அழைத்து
வந்து இப்படியெல்லாம் காதுக்குள்
பேசினால் எப்படிடா என்னால்
தனியாகத் தூங்கமுடியும்...?!!


எல்லாருக்கும்
முன்பாக உன்னை
ரகசியமாய் சீண்டிவிட்டு
உன் முகம் படும்
பாடுகளை பார்க்க
பார்க்க எவ்வளவு
அழகாக இருக்கிறது
தெரியுமாடி..?


பார்ப்பவர்கள் எல்லாம்
நீ ஏதோ என்னிடம்
ரகசியம் பேசுவதாக
நினைத்துக்கொள்கிறார்கள்..
திருட்டுப்பயல் உன்னைப்
பற்றி எனக்குத் தெரியதா..?ச்ச்சீய்ய்... போடா....


இப்படிக் கொஞ்சிக் கொஞ்சியே
இன்னும் என்னவெல்லாம்
கொள்ளையடிக்கப்
போகிறாயோ எனக் கேட்கிறாய்...
உன்னிடம் கொள்ளையடிக்க
என்னடி இருக்கிறது உன்
அழகான வெட்கங்களைத்தவிர....?


இனி இரயில் பயணங்களில்
எல்லாம் என் அருகில்
அமராதே... மற்றவர்கள்
முன்பு நான் உன் குறும்பு
விரல்களால் நெளியாமல்
இருக்க படும் பாடு
உனக்கென்னடா தெரியும்...


கையை வைத்துக்கொண்டு
சும்மா இருக்க முடியவில்லையா
என பொய்யான
கோபத்தோடு கேட்கிறாய்..
உன்னை வைத்துக்கொண்டுதான்
சும்மா இருக்க
முடியவில்லை போடி...


இரயில் எல்லாம் இனி
உன்னுடன் பயணம்
செய்யவே மாட்டேன்
ரயில் பெட்டிகளைவிட
உன்னுடைய ஆட்டம்
அதிகமாக இருக்கிறது போடா...


முகம்முழுதும்
வெட்கங்களை பூசிக்கொண்டு
இதழ் முழுதும்
சிணுங்கல்கள் வழிய
யாரும் அறியாமல்
ரயிலில் நீ
என் காதுக்குள் சொல்லும்
வார்த்தைக்கள்
படுத்தும் பாடுகள்
உனக்குத் தெரியுமாடி
கன்னுகுட்டி...?

உன்னைக் கண்டு

உன்னைக் கண்டு
எதையெதையோ
மறைக்கிறேன்
காட்டிக்கொடுத்துவிடுகின்ற

இந்தக் கண்களை மட்டும்

மறைக்க முடியவில்லை..
போடா...


எல்லோரும்
இருக்கும் போதும்

யாருக்கும் தெரியாமல்

ஆட்டம் போடும் உன்

கள்ள விரல்களை

என்ன செய்ய நான்..??


ஹையோ.. இப்பொழுதுதான்
கட்டினேன் ...
அதற்குள்
இப்படிக்
கலைத்துவிட்டாயே

சேலையை..

என்றால் சரி
கட்டிவிடுகிறேன்
என முழுதும்
கலைக்கத்துடிக்கிறாய்
எப்படித்தான் உன்னை

வைத்துக்கொண்டு

சமாளிக்கப் போகிறேனோ...



என் கோபங்களையும்
வெட்கங்களையும்

கன்னா பின்னாவென

தின்றுதீர்க்கும்
உன்
உதடுகளெனும்

முத்தசுரபிகளை

கொஞ்சம் சும்மா

இருக்கச்சொல்லேண்டா..

ப்ளீஸ்...


தூரத்தில் உன்னைக்
கண்டும்
காணாததுபோல்
தான்
நடிக்கிறேன்

இந்தப் பாழாய்போன

கைகள்தான்

உன்னைப் பார்த்தாலே

உடைசரிசெய்யும் சாக்கில்

என்னைக் காட்டிக்
கொடுத்து
விடுகின்றன..



உன் திட்டுகளையும்
தாங்க முடியவில்லை
உன் கொஞ்சல்களையும்
தாங்க முடியவில்லை
ஏணடா என்னை இப்படிக்
காதலித்துக் கொல்கிறாய்...?


நீ என்னவோ
முகம் முழுதும்

முத்தங்களை
கொடுத்துவிட்டுப்
போய்விடுகிறாய்...

அதனால்
வழக்கத்தைவிட
பொலிவாக இருக்கும்
என் முக ரகசியம்
கேட்கும்
தோழியரிடம்
சமாளிப்பதற்குள்
போதும் போதுமென்றாகிவிடுகிறது...




யார் யாரிடமெல்லாமோ
பேசுகிறேன்
சண்டையிடுகிறேன்
வாதம் செய்கிறேன்...
என கோபித்துக்கொள்கிறாயே
மடையா...
நான் உன்னை கண்டு
மட்டும்தான் வெட்கப்படுகிறேன்
தெரியுமா..?


கும்பலில் எல்லாம்
என்னிடம் ரகசியம்
சொல்லும் வேலை யெல்லாம்
வைத்துக்கொள்ளாதே...
நீ சொல்வதைக்
கேட்டுவிட்டு
என் வெட்கங்களை மறைக்க
நான் படும் பாடுகள்
உனக்கு என்னடா தெரியும்..?!


உன்னிடம்
கோபித்துக் கொண்டு
பேசாமல் இருந்தாலும்
என்னைப் பேசவைக்கும்
மந்திரத்தை
எங்கே இருந்து
கற்றுக்கொண்டன
உன் இதழ்கள்...?
ச்ச்சீய்...போடா..
பேசித்தொலைக்கிறேன்...


உன் உதடுகளையாவது
சமாளித்துவிடலாம்..
ஆனால்
அதன் மீதிருக்கும்
உன் மீசையின்
அட்டூழியங்களை
எப்படி சமாளிக்கப் போகிறேனோ...?



இல்லாத நேரங்களில்
உன் நினைவுகளால்
கட்டிக்கொல்கிறாய்..
இருக்கும் நேரங்களில்
இறுகக் கட்டிக்கொள்கிறாய்...
ஏணடா இப்படிப்
படுத்தி எடுக்கிறாய்..?

நீயும் நானும்



கையில் மருதாணி
இட்டிருக்கும் தைரியத்தில்தான்
நான் உன்னிடம் குறும்பு
செய்வதாக குற்றம் சொல்கிறாய்..
அப்படியெல்லாம்இல்லையடி
கையில் நீ இருக்கும் தைரியத்தில்
தான் நான் குறும்பு செய்கிறேன்...


இனி நான் இருக்கும் போது
மருதாணியே வைத்துக்கொள்ள
மாட்டேன் என்கிறாய்...
அப்போ என்னையாவது
வைத்துக்கொள்ளேன்...
மருதாணியை விட
இன்னும் அழகாக
சிவக்க வைப்பேன்
உன்னை...
பார்க்கிறாயா..??


உனக்கு நான் மருதாணி
போட்டுவிடட்டுமா என
சாதாரணமாகத்தானே
கேட்டேன்... உடனே
மாட்டேன் எனக் கைகளைப்
பின்னால் கட்டிக்கொண்டால்
விட்டுவிடுவேன் என நினைத்தாயா..?
கையில் தான் மருதாணி இட
வேண்டுமா என்ன..?


அங்கேயெல்லாம்
தொடாதேடா ப்ளீஸ்...
எனக்குக் கூசும் என ஏண்டி
சொல்கிறாய்..?இப்படி சொன்னால்
எப்படி சும்மா இருக்கும்
என் பிஞ்சுவிரல்கள்... ??


'ஏங்க' என நீ
கூப்பிடும் போதே
ஏங்க ஆரம்பித்துவிடுகிறது
இந்த மனசு...
போய்த்தொலையட்டும்
அதையும் கொஞ்சம்
கொஞ்சிவிட்டுப்போயேன்...


அய்யோ இது சமையல்
அறைங்க...
என சத்தம் போடுகிறாய்
அடிப்பாவி அதற்காக
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு
அறையா வைக்கமுடியும்..??


உன்னைத் தொடக்கூடாது
எனத்தானடி சொன்னாய்...?அப்புறம் இப்படி
காற்றை காதுமடல்களில்
ஊதி கிச்சு கிச்சு
மூட்டுகிறேன் என
எப்படிக்
குற்றப்படுத்தலாம் நீ..?


இனி உனக்கு
கிச்சு கிச்சு மூட்டமாட்டேன் போ...
உன் வெட்கத்தோடு
அழகான கூச்சமும் சேர்ந்து
கொண்டு என்னைக்
கண்டபடி கிறங்கடிக்கிறது..
என்னடி செய்வேன் ...?


எப்பப்பாத்தாலும்
உனக்கு அதே நினைப்புதானா
எனக் கேட்கிறாய்...
அப்படியெல்லாம்
இல்லை செல்லம்
அப்போ அப்போ
உன் நெனப்பும் வரும்
எனச்சொன்னால்
ஏண்டி என்னை
முறைக்கிறாய்..?


அய்யோ சும்மா
இருடா மருதாணி
கலைந்துவிடும்
எனப் புலம்புகிறாய்...
கவலைப்படாதே..
மருதாணியை எல்லாம்
கலைக்க மாட்டேன்
சரியாடி செல்லம்..?


இனி இரண்டு கைகளிலும்
மருதாணி வைத்துக்கொள்ளடி
உன் முந்தானையை
சரி செய்யத்தான் நான்
இருக்கிறேனே..


கல்யாணம் ஆனபின்பு நான்
சேலை மட்டும் தான்
கட்டிக்கொள்ள வேண்டுமா
என் ஏண்டி கேட்கிறாய்...
தேவையில்லை...
என்னையும்
கட்டிக்கொள்ளலாம்..

இரண்டு கைகளிலும்
நான் வைத்திருக்கும்
மருதாணி அழகாக இருக்கிறதாடா
எனக் கேட்கிறாயே
செல்லக்குட்டி
இரண்டு கைகளுக்குள்ளும்
என்னை வைத்துக்கொண்டால்
இன்னும் அழகாக இருப்பாய்
தெரியுமா..?





Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites